ஸ்ரீ அருளிச் செயல்களில் ஆவி பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –(906)-ஆவியே –-என் பிராணனை விட்டு புறம்பே போகவோ –-இவருக்கு ஒரு வாயு விசேஷம் அன்று பிராணன் – என் திருமேகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -என்கிறபடியே ஒரு மிதுனம் காணும் இவருக்கு பிராணன் –

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-என் என்கிற இடம்  திரு மகளில் அந்வயிக்கிறது -மார்பனே என்கிற இடத்தில் அந்வயிக்கிறது அன்று -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே யுடையவனே என்னா நின்றாள் -இவ்வதி பிராவண்யம் பிராட்டி அடியாக வந்தது என்கை ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;-இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் –

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-ஆவியே -ஒரு ஆவி விசேஷம் அன்று இவருக்கு பிராணன் -நாய்ச்சிமாரோடும் விபூதியோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடின சர்வாதிக வஸ்து வாயிற்று இவருக்கு பிராணன் – அமுதே -தாரக மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே நிரதிசய போக்ய பூதன் ஆனவனே-அலை கடல் கடைந்த அப்பனே-நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை அநாதரித்து புறம்பே ஓர் உப்புச்சாறு அமையும் என்று இருப்பார்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுக்கும் உபகாரகனே-காணுமாறு அருளாயே–எனக்கு கடல் கடைய வேண்டா -வடிவைக் காட்ட அமையும் -இவருக்கு பிராப்யம் அம்ருதம் அன்று –காண்கை -உபாயமும் கடல் கடைகை அன்று –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் –பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும்
அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-ஆத்மாவுக்குத் தானே அறிவு-தர்மபூத ஞானத்துக்கும் அறிவு இல்லை-அறிவு வெளிப்படும் த்வாரமே தானே நெஞ்சு-இங்கு ஆவி என்ற சொல்லால் நெஞ்சு-கண் காது எலும்பு எல்லாம் ஜடப்பொருளாக இருந்தாலும் கண்ணால் தெரிவதால் -ஞான இந்திரியம் -ஞானத்துடன் சம்பந்தம் என்பதால் உயர்வாகத் தோன்றும் -அதை விட மனஸ் ஸ்ரேஷ்டம்-ஆகவே அறிவுடைய நெஞ்சு என்கிறார் நெஞ்சும் உடம்பும் பூரிக்கிறதே என்கிறார்-

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசியது கூர
அரவமாவிக்கு மகம் பொழில் தழுவிய அருவரை இமயத்து
பரமனாதி யெம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-8-ஆவிக்கும் -கொட்டாவி இடும்-ஆவிக்கையாவது -பசியாலே கொட்டாவி கொள்ளுகையாகவுமாம் –
அன்றிக்கே-ப்ராணிக்கையாய் -மூச்சு விடுகையாய் -அதாவதுmசோலையின் பரிமளத்தோடு கூடின காற்றை யாஸ்வசித்து தரியா நிற்கும் – வாயுவை இறே அவை பஷிப்பது –நித்ய ஸூரிகள் அன்ன பாநாதிகள் ஒழிய தரிக்கும் அதுவே உத்தேச்யமாய் அவர்கள் தாங்களுக்கும் உத்தேச்யராய் இருக்குமா போலே அந்த சர்ப்பங்களினுடைய பசியும் – திர்யக் ஜாதிக்கும் அவ்வருகாய் இருக்கிற சர்பங்கள் தானும் உத்தேச்யமாய் இருக்கிற தாயிற்று இவருக்கு – ஏதேனுமாக அந் நிலத்தில் உள்ளதாம் இத்தனையே வேண்டுவது இவர்க்கு ஆதரிக்க –

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்-தன் பக்கல் பரிவை உடையார்க்கு தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-(1855)-தன் திருவடிகளில் நல்லார் ஆனவர்களுக்கு ஆத்மாவானவனை-தாரகனாய் தன்னை ஒழிய செல்லாத படி இருக்கும் -என்கை-அன்றிக்கே-ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம் -என்கிறபடியே-ஸ்நேஹிதர்களாய் இருப்பாரை தனக்கு தாரகமாய் உடையவனாய் இருக்கும் -என்னுதல்

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்க்கு
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
–2-1-4-(1051)–ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே-ஜ்ஞாநிகளைத் தனக்கு-ஆத்ம பூதராக உடையவனாய் இருக்கிறவனுக்கு-நீயும் ஆவி ஆனாயோ-( அறிவார் உயிரானாய் )

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-எல்லாரும் கூடி யாகிலும் பேச வல்லி கோளே-என் அம்மானை-தன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை
என்னாவி யாவி தனை-இவ்வாத்மாவுக்கு தாரகன் ஆனவனை-

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2—ஞான நல் ஆவி என்கோ!-நிகழும் ஆகாசம் என்றதன் கார்யம் -ஞானத்துக்கு சாதனமான சப்தம் –ஆவி என்று லக்ஷணையால் சரீரத்தை சொல்லுகிறது-ஞான சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது-குண வாசி சப்த்தத்தாலே குணியை நினைக்கிறது-நல்லாவி என்று இந்திரியங்களை வியாவ்ருத்திக்கிறது

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8–என்னைப் பெறுகைக்கு உண்டான அபி நிவேசத்தால் ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் ஒரூரை வளையுமா போலே சர்வகதன் ஆனான் -என்னுதல்-இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்
இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது–விசத தமமான-ஞான ஸ்வரூபன் ஆனவனே -என்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய்-உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் நான் இட்ட வழக்காம் படி யானோம்-ஸ்வ தந்த்ரன் இட்ட வழக்காவது என் என்னில்-கூடில் கூடுவது அது -இது விசார விஷயம் அன்று -என்று அருளிச் செய்தார் ஆளவந்தார்-பாபம் மேலிட்ட போது அல்லேன் என்னும் இவன் -அவன் தன்னை சிலருக்கு ஆக்குவோம் என்றால் நிவாரகர் இல்லை -நிலை நிற்பது அதுவே –

—

தேனுகனாவி செகுத்துப் பனம் கனி
தான்
எறிந்திட்ட தடம் பெரும் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் -2 10-4 – (216)–கழுதை யான வடிவைக் கொண்டு -தன்னை நலிவதாக வந்து நின்ற தேனுகன் ஆகிற அசுரனனுடைய பிராணனை -ஆகாசத்திலே எடுத்து சுழற்றிய வேகத்தாலே முடித்து – ஆசூரமான பனையினுடைய பழங்களும் உதிரும்படி தான் எறிந்திட்ட மிகவும் பெரிய திருத் தோளாலே-

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்
வங்கம் விட்டு வுலவும்  கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –(376)–அகன்று -என்னுமது அகற்றி என்று கிடக்கிறது-அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி–பஞ்ச வ்ர்த்தி பிராணன் சரீரத்தை விட்டு அகன்று-ஆவி மூக்கினில் சோதித்த பின்னை –-இவனுக்கு பிராணன் இல்லை என்று அறிந்த பின்பு

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-(551)-குதுகலித்து-தன் தசையைப் பார்த்து வந்தான் என்று எதிர் கொள்ளப் புறப்படுவாரைப் போலே கௌதூஹலம் பண்ணா நின்றதாய்த்து-ஆவியை ஆகுலம் செய்யும் – ஹிருதயத்தை நலிகிறபடி -ஒரு மஹா பாரதத்துக்குப் போரும் –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-(579)—-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே —குணம் பாடி –-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே-அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –-ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே –நீங்கள் முன்னம் அவனைப் போலே யாகாது ஒழியப் பெற்றேன்-அவன் பொகட்டுப் போன சமயத்தில் முகம் காட்டுவதே நீங்கள் –ஆவி காத்து இருப்பேனே—–பிராண நாதன் நானோ-தன்னை அனுபவிக்கும் அது ஒழிய பிராண ரஷணமும் எனக்குப் பணியோ–ஆனைப் பண்ணைக் குதிரை சுமக்க வற்றோ – ஆனைக்கு உரிய அலங்காரங்கள் கட்டுக்கள் இவற்றை குதிரை சுமக்குமா-ஒரு சர்வ சக்தி தொழிலை என்னாலே செய்யலாமோ –

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-ஒரு நாள் தங்கு மாகில் போருமோ பின்னை இப்பாரிப்புக்கு எல்லாம் என்னில்-என்னாவி தங்கும்-போகத்துக்குப் போராது-பிராண ரஷணத்துக்கு போரும்-ஒருநாள் தங்கு மேல் என்னாவி தங்கும்-குண ஜ்ஞானத்தாலே தரியாலோ என்று இருக்க ஒண்ணாது –அணையுமாகில் தரிக்கலாம்-கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -8-3- நிலையையும் தாண்டி விட்டாள்-

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–10-3-(599)–தோல் புரையே நலிந்து விடுகை அன்றிக்கே உயிர் நிலையிலே நலியா நின்றது-கோடலும் மேல் தோன்றியும் அலைத்த  ஆவியை நீ என் செய்யத் தொலைக்கிறாய்-தொலைவியேல்-என்கிறதுக்கு –நான் தொலைகிறது உண்டோ என்ன -அதுக்கு வாயில்லையே -அசேதனத்வாத் –என்னுதல்-பாதகத்வம் உண்டாகையாலே -என்னுதல்-அது அவனுடைய பவளச் செவ்வாயாகவே நினைத்து கூறுகிறாள்-வாய் அழகர் தம்மை அஞ்சுதும்-
கலக்கப் புக்காலும் அஞ்சி நான் கண் செம்பளித்த படியே காண் இருப்பது-முன்பு அஞ்சிக் காண் அதுக்கு இருப்பது -அஞ்சுதும் -என்றால் நீ அஞ்ச வேண்டா காண் –-மாஸூ ச-என்று அஞ்சாதே என்று
என் கண் வட்டத்தின் நின்றும் கடக்க நிற்க விறே அடுப்பது -அது செய்தது இல்லை

களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-(711)–தாய் ஒருத்தியையும் அல்லது வேறு ஒருத்தியையும் அறியாத அதி சைசவமாய் இருக்கிற-பருவத்தை அனுபவிக்கப் பெறாமையாலே-இப்போது கிட்டி அனுபவிக்கச் செய்தேயும் இழவே தலை எடுக்கும் படியான மஹா பாபத்தைப் பண்ணினேன்-எனது ஆவி நில்லாதே–-என் பிராணன் தரிக்கிறது இல்லை

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-(755)எனது காரியங்களை நீயே ஏறிட்டுக் கொண்டு-என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே புகுந்திருப்பது-என்ன நீர்மை!-

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –5-(756)–ஆத்மாவாய் –எதிர்தலையில் ஹேயதையை பாராதே பொருந்தி -சமாப்ய உள் புகுந்து –-ஏக த்ரவ்யம் என்னும்படி கலந்து நிற்கிற -உன்னுடைய ஸ்வபாவம் -அதாகிறது-தத் கத தோஷங்கள் தட்டாதே நிற்கையும் விபுவான தான் இவற்றில் சமாப்ய வ்யாபரிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யம்-

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-(787)–பிள்ளைகள் அனுங்க சஞ்சரிக்கும் புள்ளின் கருத்தை உடையளாய் -அபூர்வை-என்று சங்கித்து விலங்க ஒண்ணாதபடி க்ர்த்ரிமான ஜனநியான பேய்ப் பெண் –

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி –பாலுள் வாங்கினாய் –மண்ணளந்து கொண்ட காலனே – என்று அந்வயம்-காலனே -என்று பிரதிகூலர்க்கு  மர்த்யு யானவனே –

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-(845)–ஊனின் மேய வாவி நீ--சரீரத்தில் தாரகமாக வர்த்திக்கிற பஞ்ச வ்ர்த்தி ப்ராணனும் நீ இட்ட வழக்கு –இத்தால் – சரீர ஸ்திதியும் சரீர விநியோகமும் நீ இட்ட வழக்கு என்கை-

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆகையாலே வந்த நீர்மையை உடைய க்ர்ஷ்ணனே –-பாப ப்ரசுரனாய் அகிஞ்சனான என்னுடைய ஆத்மாவை உன் பக்கலிலே சமர்ப்பித்த என்னை –காலியாய நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை -என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –பூட்டி வைக்கை யாவது – நீ விடக் கருதி -மெய் செய்யாது மிக்கோர் யாசை யாக்கிலும் –நின் அலாலோர் கண் அலேன்–என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119-என்னுடைய ஆத்மாவென்று பேராய் -பாப ராசியான அதின் பக்கலிலே -உன்னைக் குறித்து ஸ்ரத்தையானது உதித்து –-கர்ம யோகத்தாலே விரோதி பாபம் போனால் பிறக்க கடவ ஸ்ரத்தை –-பாப ப்ரசுரான தசையிலும் -தோன்றும்படி இறே தேவரீருடைய சௌந்தர்யத்தின் ஏற்றம் -இருப்பது – ஸ்வ ஸ்வரூபத்தை ஜ்ஞான ஆநந்த லஷணமாக நினைத்து இருக்கை அன்றிக்கே – பாப வச்யராக வாய்த்து இவர் நினைத்து இருப்பது –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-என்னாவி தான் – தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –இயக்கெலா மறுத்து – அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி சம்பந்தங்களை யறுத்து –இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்-அறாத இன்ப வீடு பெற்றதே –யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது–

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –(906)-ஆவியே –-என் பிராணனை விட்டு புறம்பே போகவோ –-இவருக்கு ஒரு வாயு விசேஷம் அன்று பிராணன் – என் திருமேகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -என்கிறபடியே ஒரு மிதுனம் காணும் இவருக்கு பிராணன் –

ஆவியே அமுதே என நினைந்து உருகி யவரவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2..(949)-ஆவியே அமுதே அலை கடல் கடைந்தவனே அப்பனே -எட்டாம் பத்து திருவாய் -என்றும் –-ஆவியே அமுதே என்னை ஆளுடைத் தூவி யம் புள் உடையாய் –திருவாய்-3-8-7–என்றும்-ஸ்ரீ பகவத் விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை யாயிற்று இங்கே சொல்லிற்று –வகுத்த விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை அப்ராப்த விஷயத்தில் சொன்னேன் – தாரகத்வமும் கண் அழிவற்று போக்யதையும் கண் அழிவற்று இருப்பது ஸ்ரீ பகவத் விஷயம் இறே-தாரகம் அன்றிக்கே பாதகமுமாய் -போக்யதை அன்றிக்கே பீபத்ஸ்யமுமாய் இருக்கிற விஷயங்களிலே யாயிற்று வார்த்தை சொல்லிப் போந்தது –(ஆவி -தாரகம்-அமுது -போக்யம்) த்வம் ஜீவிதம் த்வமஸிமே ஹ்ருதயம் மதீயம் – என்று இறே சொல்லிப் போந்தது-என நினைந்து – இப்புடைகளிலே நினைப்பது அநேகத்தை  இறே -என்று ஆயிற்று ஸ்ரீ ஜீயரருளிச் செய்தது
ஸ்ரீ பிள்ளை இங்கன் நினைந்து வாய் விட மாட்டாதே – நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –என்று இங்கனே சொல்லாமோ -என்று ஸ்ரீ ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய
நீர் இவரிலும் பக்தராய் இருந்தீர் -என்று அருளிச் செய்தார்- (ஸ்ரீ நம்பிள்ளை கலிகன்றி தாசர் அன்றோ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து அருளிச் செய்த வார்த்தை )

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசியது கூர
அரவமாவிக்கு மகம் பொழில் தழுவிய அருவரை இமயத்து
பரமனாதி யெம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-8-(965) ஆவிக்கும் -கொட்டாவி இடும்-ஆவிக்கையாவது -பசியாலே கொட்டாவி கொள்ளுகையாகவுமாம் –
அன்றிக்கே-ப்ராணிக்கையாய் -மூச்சு விடுகையாய் -அதாவதுmசோலையின் பரிமளத்தோடு கூடின காற்றை யாஸ்வசித்து தரியா நிற்கும் – வாயுவை இறே அவை பஷிப்பது –நித்ய ஸூரிகள் அன்ன பாநாதிகள் ஒழிய தரிக்கும் அதுவே உத்தேச்யமாய் அவர்கள் தாங்களுக்கும் உத்தேச்யராய் இருக்குமா போலே அந்த சர்ப்பங்களினுடைய பசியும் – திர்யக் ஜாதிக்கும் அவ்வருகாய் இருக்கிற சர்பங்கள் தானும் உத்தேச்யமாய் இருக்கிற தாயிற்று இவருக்கு – ஏதேனுமாக அந் நிலத்தில் உள்ளதாம் இத்தனையே வேண்டுவது இவர்க்கு ஆதரிக்க –

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்க்கு
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
–2-1-4-(1051)–ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே-ஜ்ஞாநிகளைத் தனக்கு-ஆத்ம பூதராக உடையவனாய் இருக்கிறவனுக்கு-நீயும் ஆவி ஆனாயோ-( அறிவார் உயிரானாய் )

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-அவர்கள் பேணிப் போந்த பிராணங்களை கழுகும் பருந்தும் பற்றி முடிக்க -அதாவது என் என்னில் – குற்று உயிராயக் கிடக்கிற சமயத்தில் இவை வந்து மேலிட்ட படியாலே சேஷித்த ப்ராணங்கள் அவற்றோடு போகையைச் சொல்லுகிறது –

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–
2-8-8-(1125) -வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-அட்டபுயகரத்தேன் என்றாரே – சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் -(இது அன்றோ அவன் மதம் )உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-விஷத்தை வாங்குகை அன்றிக்கே அது ஆஸ்ரயமான பிராணனையும் கூட ஒரு காலே அமுது செய்தவன் வர்த்திக்கிற தேசம் –

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5–(1322) -பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்-ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி-ராவணன் எதிர்த்த அன்று-அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –-வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –-அரசன் -நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து-இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-(1638) –பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்-தன் பக்கல் பரிவை உடையார்க்கு தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே —8-5-4-(1691)-ஓர் அளவில் ஸ்திரீ வதம் அன்றோ-இது ஆமோ என்று மீளில்-பாதகரே ரஷகராக வேண்டும் தசை காணும் –

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5-ஆஸ்வாச கரனான அவனை இழந்து-பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற பிராணங்களை முடிப்பதாக அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல்  பாவியேன் ஆவியை யடுகின்றதே —-8-5-9-கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய தர்மி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே —9-3-5-(1772)-இப்படி அவன் பண்ணுகிற விருப்பத்துக்கு நாம் விஷய பூதர் ஆகாத வன்று இரண்டு ஆஸ்ரயமும் அழியும் என்னும் படி யாயிற்று பரிமாறின படி –தணரில் -என்றது –பிரியில் -என்றபடி – தாழ்க்கில் -என்னுதல்-

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-பாவியேன்-
கலந்த போதோடு பிரிந்த போதோடு வாசி அற ஆறி இருக்கலாம்  விஷயம் அன்றிக்கே பிரிந்து ஆற்ற ஒண்ணாத குணாதிக விஷயத்தோடே கலக்கும் படியான மகா பாபத்தைப் பண்ணினேன் –-ஆவியை வாட்டம் செய்யும்- தொட்டார் மேலே தோஷமாய் இருக்கிற பிராணனை முடிக்கப் பாரா நின்றது –

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும்
அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8–(1795) பிரிவு என்று ஓன்று உண்டு என்றும் இவர்கள் நெஞ்சிலே பட்டு-பிரிந்தால் பதார்த்தங்களும் எல்லாம் பாதகமாம் என்று அறிவார்கள் – என்று இருக்கிறாள்-இடையன் கையில் குழல் ஆனது வந்து என் மர்மத்தளவும் கிட்டி நில்லா நின்றது –

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7–(1824) -தேனுகன் உடைய பிராணன் முடியும்படி அங்கே அடியே பிடித்து தலை அளவும் செல்ல தர்ச நீயமாம் படி பழுத்துக் கிடக்கிற பனம் பழங்கள் உதிரும்படி –

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-(1855)-தன் திருவடிகளில் நல்லார் ஆனவர்களுக்கு ஆத்மாவானவனை-தாரகனாய் தன்னை ஒழிய செல்லாத படி இருக்கும் -என்கை-அன்றிக்கே-ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம் -என்கிறபடியே-ஸ்நேஹிதர்களாய் இருப்பாரை தனக்கு தாரகமாய் உடையவனாய் இருக்கும் -என்னுதல்

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-(1884) தானும் தாய் என்று பிரமியாதே-அவள் அபிசந்தியைப் புத்தி பண்ணிஅப் பருவத்திலே பெரிய ஆண் பிள்ளையாய்
அவள் பிராணன்களை முலை வழியே உண்டு அவளை முடித்து இப்படிப் பட்ட செயல்களாலே
பூரணன் ஆனவனே –

இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகி யவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகி யவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-நெற்றியிலே நடந்து
மழு வாகிற ஆயுதத்திலே முனையின் நடுவே போய் அவர்கள் பிராணன்கள் மறுகும் படி வென்ற மிடுக்கர் –

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9-(1900) முடிய வேணும் என்று நினைத்து உண்ண முலை கொடுத்த வென்னெஞ்சி யான பூதனை உடைய பிராணன் முடியும் படிக்கு ஈடாக யுண்டு வெண்ணெயை ஆசைப் பட்டு –

பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து
ஆவியே இலக்காக எய்வதே
—11-1-7-(1958)-காமன் ஆனவன் தன்னுடைய புஷ்ப பாணங்களாலே
தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது –

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே
-12-(2043)-உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
— என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்–இப்படிப் பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தே னென்கை–

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-உத்தேச்யத்துக்கு போக வழி தேடினவள் அச் சேர்த்தியை அனுசந்தித்த போதே கிட்டாத போதே நெடு மூச்சு எறியா நின்றாள்-

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்ற அவளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—இரண்டாம்–8–(2189)-உண்டு அல்லது நிற்கப் போகாதபடி
ஹிருதயம் குளிரும்படிக்கு ஈடாக சொன்னவளுடைய பிராணனை-அவள் பொய்யே உகந்து முடிக்க நினைத்தாற் போலே நீயும் பொய்யே உகந்து முலை உண்ணுமா போலே முனிந்து முடிக்க நினைத்தாய்

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –நான்முகன்–81-—(2462)–மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்கிறபடியே-விஷயாந்தர பிரவணமான போது அவனை-
காண்கைக்கு கதவு போலே தகைவாய் பிரதிபந்தகமாய் இருக்கும் மனஸ் என்றும்-காண்கை எளிதோ என்றும் துக்கப் படுகிற பொல்லாத சிந்தையைத் தவிர்ந்தேன்-

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
—-4—எம்மதாவி- சென்று அற்று இருக்கிறபடி-பாதகங்களின் கையிலே அகப்பட்டு அவ சேஷித்த பிராணன் –(நெஞ்சு கிடைக்காததால் மீதம் உள்ள பிராணனை திருத்துழாயும் மருதமும் நலிந்த படி )-நெஞ்சு போனால் போலே ஆவியும் அவன் இடம் போய் ஒழியக் கூடாதோ – அவ்வளவு துணிவு இல்லாத பாழும் உயிர் என்கிறாள்-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-(2544)-நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல-இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை -ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல–கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே-உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே

உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர்  மெய்ந்நொந்து  பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே
– – -81–(2558) இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – –
-83-ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை பல ஹானியாலே வருந்தி எடுத்து எடுத்து அக்ரமாகச் சொல்லும்படியான-மெல்லாவியும்-மெலிந்து சென்று அற்ற பிராணனும்-நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்-எல்லாம் தளரிற் கொலோ-ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ–அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே-இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்–

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே
– – -85-அடியாவி –
தலை மகள் வார்த்தை யான போது –உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்ம வஸ்து -என்கை –ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்  மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது –சமர்ப்பித்த வநந்தர ஷணம்  -என்னத்தை எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி தன்னோடு  தான் தொற்று அற்று இறே-இருப்பது-அடியேன் அடி யாவி – பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –என் அடிமையான மகள்-ஆவி -உயிர் போலே அருமையான பெண்-அடியேனுடையாவி -பாட பேதம்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே –
-95-(2572)–மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம்-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு – வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் –பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும்
அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-(2657) ஆத்மாவுக்குத் தானே அறிவு-தர்மபூத ஞானத்துக்கும் அறிவு இல்லை-அறிவு வெளிப்படும் த்வாரமே தானே நெஞ்சு-இங்கு ஆவி என்ற சொல்லால் நெஞ்சு-கண் காது எலும்பு எல்லாம் ஜடப்பொருளாக இருந்தாலும் கண்ணால் தெரிவதால் -ஞான இந்திரியம் -ஞானத்துடன் சம்பந்தம் என்பதால் உயர்வாகத் தோன்றும் -அதை விட மனஸ் ஸ்ரேஷ்டம்-ஆகவே அறிவுடைய நெஞ்சு என்கிறார் நெஞ்சும் உடம்பும் பூரிக்கிறதே என்கிறார்

மற்று எனக்கு இங்கு ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் யுருகும் என்னாவி நெடும் கண்கள்-(2702)-என்னெஞ்சம் எனக்கு உதவாதிருக்க வேறு உதாத்துணையாவாருண்டோ? நெருப்பினருகே வைத்த மெழுகு போலே சிதிலமாக நின்றது ஆத்மவஸ்து,-அக்னி சகாசத்தில் மெழுகு போலே இற்றுப் போகா நின்றது -என்னுடைய ஆத்மவஸ்து –

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது —-என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –-சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –-காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -யதிராஜ விம்சதி

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –(2858)–சீர் -நற்குணங்கள்-பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது-ஆவி –ஆத்மா சிந்தை -மனம்-பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .-ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது -சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க
–-சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால் சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-(2937)-அவராவி துவராமுன்-அருளும் போது அவள் முடிவதற்கு அருள வேணும் – ஜீவந்திம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் -தத்த்வயா ஹ நுமன் வாஸ்யோ வாசா தர்ம மவாப் நுஹி-அருளே நிரூபகமான ஸ்வரூபம் உம்மது -நிர்த்தயர்க்கும் ஐயையோ என்ன வேண்டும்படி அவளது தசைஅருளாது ஒழியும் படி எங்கனே –

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–அசன்னேவ ச பவதி-என்கிறபடியே உரு மாய்ந்து போன என் ஆத்மாவை-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-(2973)-இப்படி உபய விபூதி உக்தனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து என் ஆத்மா ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-என்னோடே ஒரு நீராகக் கலந்து-என் ஆத்மாவினுடைய நலத்தை -நற்சீவனைக் கொண்டான்-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-(2994)-ஆவி என்று ஆத்மா -ஆக்கை என்று சரீரம் -அர்த்தத்தையும் சப்தத்தையும் சொல்லுகிறது-ஆக சப் தார்த்த சம்பந்த நியமம் அவன் இட்ட வழக்கு என்றது-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-மெல்லாவி-விளக்கின் பிரக்ருதியின் மார்த்வம் போலே இருக்கும் ஆத்மாவும் என்று இருக்கிறாள்-அதாகிறது -பகவத் குண அனுசந்தானத்தாலே நைந்து இருக்கை-உள்ளளுலர்த்த– தோல் புரை அன்றிக்கே -உள்ளே குருத்து வற்றாக வற்றுவிக்க-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-ஒரு கால் வெந்து சமையக் கடவது அன்றிக்கே –அக்னி நேவாக் நி பர்வத -என்கிறபடியே வெந்த இடமே இந்தநமாக தஹியா நிற்கிற காதல்-அளவில்லாத வேட்க்கை நோய்-மெல்லாவி – பாத்தம் போராத ஆத்மாவை -அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னி யாகில் இறே-யுள்ளுலர்த்த- கூடோ அக்னி ரிவ பாதபம் -கோடாரத்தில் பற்றின அக்னி போலே குருத்து வற்றாக வற்றுவிக்க-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து – அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே- அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்-

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே
–2-3-4–(3034)-எனதாவியுள் கலந்த–அநாதி காலம் சம்சாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னோடே கிடீர் கலந்து-வசிஷ்டன் சண்டாள ச்ரேணியிலே புகுந்தால் போலே தம்மை அனுசந்திக்கிறார்-எனதாவி யாவியும் நீ – எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறாய் நீ -இது உனக்கு அநந்யார்ஹ சேஷம் அன்றோ –எனதாவி யார் யானார்-
எனதாவி என்று பிரதேய வஸ்து வான நான் ஆர்-தந்து ஒழிந்தேன் என்று ப்ரதாதாவான நான் ஆர்-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே
கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-ஆந்தரமான மனஸ் ஸூ க்கு தாயகமான ஆத்மா சருகாய் வருகிறபடி-உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து–அந்தக் கரணத்துக்கும் அவ்வருகான ஆத்மா –
அசோஷ்யம் என்கிறதும் போயிற்று என்கிறாள் –பாவ பந்தம் அடியாக வந்த நோய் ஆகையால் குருத்து வற்றாக உலர்ந்து செல்லா நிற்கை-

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1—பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி -மஞ்சா க்ரோசந்தி இத்வத்-என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–(3057)–நிரதிசய போக்யனாய் வைத்து-அசன்னேவ -என்கிற ஆத்மாவோடு வந்து கலந்தான் –தன்னையும் அறிந்திலேன் -என்னையும் அறிந்திலேன் –-யல்லாவி –அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்த படி -அசித்துக்கு இழவு இல்லை –-சேதனனாய் இருந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அசித்துக்கு அவ்வருகாக நினைத்து இருக்கிறார்-யுள் கலந்த-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ – என்னை ஆராவமுதமாக நினைத்து என் அளவாக தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது-

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-எல்லாரும் கூடி யாகிலும் பேச வல்லி கோளே-என் அம்மானை-தன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை
என்னாவி யாவி தனை-இவ்வாத்மாவுக்கு தாரகன் ஆனவனை-

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2—ஞான நல் ஆவி என்கோ!-நிகழும் ஆகாசம் என்றதன் கார்யம் -ஞானத்துக்கு சாதனமான சப்தம் –ஆவி என்று லக்ஷணையால் சரீரத்தை சொல்லுகிறது-ஞான சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது-குண வாசி சப்த்தத்தாலே குணியை நினைக்கிறது-நல்லாவி என்று இந்திரியங்களை வியாவ்ருத்திக்கிறது-

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-ஆவி சேர் உயிரின் உள்ளால்-ஆவி என்று சரீரம் –அத்தோடு சேர்ந்த ஆத்மாவில் சரீரத்தில் உண்டான பரிணாமித்வாதி தோஷங்கள் தட்டாது என்கிற விவேக அனுசந்தானம் ஆத்மாவின் பக்கலிலே கூடுமாகில் – உள்ளால்-உள்–ஆல்-அசை-உள் -உள்ளே-ஆதும் ஓர் பற்று இலாத-ஏதேனும் ஒரு தொற்று இல்லாத-பாவனை அதனைக் கூடில்,
அதனை -ஆத்மாவை -ஆத்மாவின் பக்கலிலே என்றபடி
–

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7–(3182)–கால தத்வம் உள்ளதனையும் தன் சுவடு அறியாதே இதர விஷய ப்ரவணமான என் நெஞ்சுக்கு பரம போக்யனானவனை-

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-(3203)-துர்லபம் என்று பாராதே கை புகுரு விஷயத்திலே போலே சாபலம் பண்ணா நின்றது
எனது ஆவியே.– அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது என்கிற ஆவி –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-ஆவியே! -அபி நிவேசம் மிக்காலும் ப்ராப்யன் ஆகிறான் சேஷியானால் வரும் தனையும் பாடாற்ற வேண்டாவோ என்னில் – பிராணனை ஒழிய தரிக்க வல்லோமோ என்கிறார் –-ஆரமுதே;-தாரகமான அளவன்றிக்கே போக்யமுமாய் இருக்கை –என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்! மற்றை அம்ருதத்தை கொண்டு வருமவனே இவ்வம்ருதத்தையும் கொண்டு வருவான் –-பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே – என்னை ஆளுடைத் தூவி அம் புள்-என்று பெரிய திருவடியோடே அன்வயித்துச் சொல்லவுமாம் – சேர்க்குமவர்களுக்கு சேஷம் என்று இறே இவர் இருப்பது

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே!
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-வியதிரேகத்தில் வடிவை மறக்கிலும் பின்பு நின்று பின்னாடி மறக்க ஒண்ணாத படி என் நெஞ்சை ஈரா நின்றுள்ள சீலமே ஸ்வரூபம் ஆனவனே-

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே
.–4-3-3-உன் ஆக முற்றும் அகத்து அடக்கி – இதுக்கு பிரயோஜனம் உன் திருமேனிக்கு வேண்டும் போக உபகரணம் எல்லாம் என்னுள்ளே யாம் படி பண்ணுகை-அத்தைச் செய்து சாந்து பூ மாலை பரிவட்டம் ஆபரணம் இவை எல்லாம் என்னுள்ளே யாம்படி பண்ணி-ஆவி அல்லல் மாய்த்ததே-உன் திரு உள்ளம் நிர்த் துக்கம் யாயிற்றே -ஒரு படி கரை மரம் சேர்க்க வல்லேன் என்று இருந்த உன் திரு உள்ளத்தில் பரகு பரகு கெட்டு க்ருதார்த்தன் ஆனாயே -என்கிறார்-என்னுடைய நெஞ்சில் துக்கம் ஒருபடி போயிற்றே என்றுமாம்-அவன் பிரணயித்தவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையால் அவனுடைய துக்க நிவ்ருத்தியே பொருளாக அமையும் – இத்தை பர வ்யூஹ விபவங்களை சொல்லிற்றாக நிர்வஹிப்பாரும் உண்டு-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே
.–4-3-7-உரை கொள்ளுகையாவது காண ஆசைப்பட்டு அது அது என்று வாய் புலற்றும் படியாய் இருக்கை-ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா –ராம பூதம் ஜகதாபூத் ராமே ராஜ்ஜியம் பிரசாஸதி –-பேச்சுக்கு அவிஷயம் என்றுமாம்
மாற்றும் உரையும் அற்ற திருமேனி என்னவுமாம் –சுட்டுரைத்த நன் பொன் என்ன கடவது இறே
என்னதாவி மேலதே –-உன்னுடைய திரு மேனி என்னுடைய சத்தியின் மேலது-ஸூரி போக்யமான வடிவுக்கு தாரகாதிகள் என் ஆத்ம சத்தை யாவதே –

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8–(3260)–என்னைப் பெறுகைக்கு உண்டான அபி நிவேசத்தால் ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் ஒரூரை வளையுமா போலே சர்வகதன் ஆனான் -என்னுதல்-இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்-இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது–விசத தமமான-ஞான ஸ்வரூபன் ஆனவனே -என்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய்-உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் நான் இட்ட வழக்காம் படி யானோம்-ஸ்வ தந்த்ரன் இட்ட வழக்காவது என் என்னில்-கூடில் கூடுவது அது -இது விசார விஷயம் அன்று -என்று அருளிச் செய்தார் ஆளவந்தார்-பாபம் மேலிட்ட போது அல்லேன் என்னும் இவன் -அவன் தன்னை சிலருக்கு ஆக்குவோம் என்றால் நிவாரகர் இல்லை -நிலை நிற்பது அதுவே –

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-—ஆவி -நிருபாதிகமான சர்வாத்மா –
ஆத்மன ஆகாசஸ் ஸம்பூத–சர்வாத்மா –என் ஆவியை -அத்யந்தம் நிஹீனனான என்னை-செய்த ஆற்றையே.-யான் அறியேன்-விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் –சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறாப் பேறாகத் தலையால் சுமப்பதே-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5–சர்வ காலமும் கண்ணும் கண்ண நீருமாய் கொண்டு கிடைக்கைக்கு சம்பாவனை உள்ள விஷயத்தில் போலே கிலேசப்படுகை-ஆவி துவர்ந்து துவர்ந்து,-பிராணன் ஆனது பசை அற உலர்ந்து-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன்
, ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-(3302)–அடுத்து அடுத்து பார்த்து உன்னைக் காண்பான்,-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-யான்-அதிசபலனான நான்-எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன்,-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-ஞானம் இல்லை;-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ் விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழி கிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழி கிறது அறிவு கேட்டாலோ என்றோ-நாள் தோறும்-சர்வ காலமும் பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-ஆவியுள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-அல்ல புறத்தினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் -பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-நின்னை அறிந்து அறிந்தே.–இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழிகிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே-

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,

பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க-அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-யான்-ஞானம் பிறந்த நான் –-எனது ஆவியுள்ளே-தெளிந்த மனஸிலே-நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-மனசை உன் பக்கலிலே செறியும் படி பண்ணி இதுவும் என்னால் செய்யலாவது ஓன்று அன்று -உன் வடிவைக் காட்டி மனசை உன் பக்கலிலே சேர்த்து கொள்ள வேணும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான வடிவே வேண்டாவோ விஷயங்களில் துவக்கு அறுக்கைக்கும்உன் பக்கல் பிரவணம் ஆக்குகைக்கும் –
எனது ஆவியை நீக்க கில்லேன் -என் சரீரத்தின் நின்றும் என் ஆத்மாவை பிரிக்க மாட்டு கிறி லேன் -ஆன பின்பு நீயே செய்து அருள வேணும்-என் கண் மலினம் அறுத்து-மலினம் -மாலினியம் -அதாவது பிரகிருதி சம்பந்தம் –என்னுடைய பிரகிருதி சம்பந்தத்தை நீயே போக்கி –-என்னைக் கூவி அருளாய் கண்ணனே – அஷமனான என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும்

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-பிரளயத்தின் கையிலே அகப்பட்டாரை போலே இந்த ராத்ரியின் கையிலே அகப்பட்டு கிடக்கிற நான் பிராண ரக்ஷணம் பண்ணவோ -எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ -என்று எனக்கு முன்னே தளருகிற தோழி காக்கவோ -ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ -பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6--இப்படியே முடியாதே நோவு படுத்தா நின்றுள்ள உயிராகிய சத்ருவை போக்குவார் ஆர் -முடியும் அளவிலும் நூறே பிராயமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவைப் போக்கி ரஷிப்பார் ஆர் -அச்சேத்யோயம் அதாஹ் யோயம் -என்கிற வசனத்தைக் கொண்டு தன்னை முடியாதது ஒன்றாக நினைத்து நலியா நின்றது -பிரிவிலும் முடியாத என்னுயிர்ப்பகையை நீக்கி என்னை நோக்குவார் ஆர் -என்று ஒரு தமிழன் இட்டு வைத்தான் –-இவ்விடத்தே -சர்வ ரக்ஷகனும் உதவாத தசையில் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8–பிரசங்கத்தாலே வந்து நலிகை யன்றிக்கே -புத்தி பூர்வமே -முடித்து அல்லது போகேன் என்று ஆக்ரஹம் யுடையாரைப் போலே நின்று -ராவணன் இடம் பார்த்து வந்தால் போலே -விரஹ தசை என்று அறிந்து வந்து நலியா நின்றது –எனதாவி மெலிவிக்கும்–-நலிகைக்கும் ஆஸ்ரயம் இல்லாத படி சென்று அற்ற உயிரை நலியா நின்றது-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-(3389)–தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -உள்ளு வெளிச்சு இருக்கிறாப் போலே புறம்பும் ஆகப் -பெற்றோம் ஆகிறிலோம்-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு
நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-(3416)–இத்தெளிவைப் பிறப்பித்த உனக்கு சத்ருசமான பிரதியுபகாரம் அன்றிக்கே-போலியாய் இருபத்தொரு பிரதியுபகாரமும் அகிஞ்சனான நான் காண்கிறிலேன் -உம்மைத் தந்தாலோ என்ன –என தாவியும் உனதே-ஸ்வரூப ஞானம் இல்லை யாகில் செய்யலாயிற்று -மயர்வற மதி நலம் அருள பெற்றில்லை யாகில் பிரதியுபகாரம் பண்ணினேனாய் நெஞ்சாறல் படாது ஒழியல் யாயிற்று -உதவிக் கைம்மாறு –

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8–சரீரமானது கட்டுக் குலையா என் பிராணனும் சரீரத்தை விட்டுப் பேரக் கடவ போதாயிற்று இப்போது -அங்கணம் அன்றியே அந்திம ஸ்ம்ருதியை அபேக்ஷிக்கிறார் ஆனாலோ என்னில் -அந்திம ஸ்ம்ருதி ஒழிய சித்தி இல்லாத அதிகாரி அல்லாமையாலே அத்தை சொல்லுகிறது அன்று -இவன் பக்கல் இது இல்லாத போது அவன் அஹம் ஸ்மராமி என்கையாலே விஸ்லேஷ வியசனத்தால் சரீரமும் தளர்ந்து பிராணனும் சரீரத்தை விட்டுப் போம் தசையாயிற்று இப்போது என்கை-

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-(3427)-உனக்கு ஸ்வம்மான என் நெஞ்சின் உள்ளே உன் போக்யதையை ஆவிஷ் கரித்து அனுபவிப்பித்தவனே-

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-(3440) தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு –துர்யோதனாதிகள் நசித்துப் போனார்கள் -பாண்டவர்கள் ராஜ்ஜியம் பெற்றுப் போனார்கள் -இவரை அந்த குண சேஷ்டிதங்கள் மர்மத்திலே நலியா நின்றது – விரஹத்தாலே அவசன்னமான என் ஆத்மாவை –எல்லாரும் மஹா பாரதத்தில் கேட்டு தரிக்கிறது இறே-இடை விடாதே நின்று நின்று –உருக்கி உண்கின்ற-சிதிலமாகி முடிகின்ற –முடியவும் மாட்டாதே ஜீவிக்கவும் ஒட்டாதே நலிந்த படி-இச்-சிறந்த வான் சுடரே!-நாட்டுக்கு பரமபதம் ஏறப் போனான் என்ற பேராய் -இவருள்ளே புகுந்தான் –தகுதியாய் அபரிச்சேதயமான அழகை உடையவனே

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-(3521) ஆவிஉள் குளிர-கமர் பிளந்த ஹிருதயம் மறு நனையும் படி-எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–எங்கனே பிரிய படுகிறாளோ -இங்கே இருந்து நினைத்துப் பட்ட கிலேசத்தை கண்ட நான் அந்த அனுபவ ப்ரீதி காணப் பெற்றிலேன் இன்றே -எனக்கு அவளை பிரிந்த சோகமே யாய்ச செல்லுகிறது -அவளுக்கு நல்விதிவாய் ப்ரீதியோடே செல்லுகிறது இறே –

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ
!–6-9-5-(3553)–என்னுடைய ஹ்ருதயத்தில் உள்ளே மிகவும் பிரகாசித்து -என்னுதல் -அந்தர் பஹிச்ச வர்த்தித்து என்னுதல் -பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-(3546)-பேறு அவனாலே யானாள் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்யபிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே-பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–அநந்ய கதியாய் உன் கை பார்த்து இருக்கிற நான் -நெஞ்சு கலங்கும்படியாக –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-ஐவர் குமைக்கும் -பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-

கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-(3579)தொழுத இடத்திலும் முகம் காட்டக் காணாமையாலே அதாஹ்யமான ஆத்மவஸ்து அக்னி மயமாம் படி நெடு மூச்சு எறியா நின்றாள்-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-என் என்கிற இடம்  திரு மகளில் அந்வயிக்கிறது -மார்பனே என்கிற இடத்தில் அந்வயிக்கிறது அன்று -எனக்கு ஸ்வாமி நியான பிராட்டியை திரு மார்பிலே யுடையவனே என்னா நின்றாள் -இவ்வதி பிராவண்யம் பிராட்டி அடியாக வந்தது என்கை ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;-இவளுடைய பிராணன் பஞ்ச வ்ருத்தியாய் அன்று இருப்பது -ஒரு மிதுனமாயிற்று இவளுக்கு பிராணன் –திருமகள் சேர்மார்பனாய்க் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை –

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-(3628) -உருவு வெளிப்பட்டால் வெண்ணெய் நாற்றமும் பிரத்யஷிக்கிற தாயிற்று இவளுக்கு -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால் அல்லது செல்லாத -களவிலே இழிந்து பிடியுண்டால் -அத்தை இல்லை செயகைக்காக முகத்திலே வெண்ணெய் பூசிக் கொள்ளுமே -அவ் வெண்ணெய் நாற்றம் பிரத்யஷிக்கிற படி -நாங்கள் காண்கிறிலோமீ என்ன
எனதாவி யுள்ளே-என் ஹிருதயத்தின் உள்ளே-

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-தோன்றி மாயாதே நித்தியமாய் நின்று விளங்கா நிற்பதாய் சிவந்த சுடரை ஈனா நின்ற வெள்ளை மின்னோ -அசிராம்சு -என்னா நிற்பார்கள் இத்தை -என்னை நலிகைக்கு உறுப்பாக நித்யத்வத்தை ஏறட்டுக் கொண்டது -திரு முத்தின் நிரை திரு வதரத்தில் பழுப்பை ஈனுகிறாப் போலே யாயிற்று சேர்த்தி அழகு இருப்பது–அங்கனம் இன்றியே என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்-அணி முத்தம் -அணி வகுத்து ஏறினால் போல் தந்த பங்க்திகள் பாதகமாய் இருக்கிற படி என்னவுமாம் –-கீழில் திரு முத்தும் திரு வதரமும் சேர்ந்த சேர்த்தி பாதகமான படி சொல்லிற்று -அணி முத்தம் என்று திரு முத்துக்கள் அந்யோன்யம் சேர்ந்த சேர்த்தி பாதகமானபடி சொல்லிற்று-குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்-கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-(3633) இங்கு உயிர் -பிராணன் -அழகு பாதகமாம் படி பாபத்தை பண்ணின என் பிராணனை முடிக்கையில் துணிந்து -கொள்கையில் அபி நிவேசித்து பிராணனை முடியா நின்றது -தோல் புரை போகை அன்றிக்கே சத்தையை அழியா நின்றது-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-ஆவியே -ஒரு ஆவி விசேஷம் அன்று இவருக்கு பிராணன் -நாய்ச்சிமாரோடும் விபூதியோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடின சர்வாதிக வஸ்து வாயிற்று இவருக்கு பிராணன் – அமுதே -தாரக மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே நிரதிசய போக்ய பூதன் ஆனவனே-அலை கடல் கடைந்த அப்பனே-நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை அநாதரித்து புறம்பே ஓர் உப்புச்சாறு அமையும் என்று இருப்பார்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுக்கும் உபகாரகனே-காணுமாறு அருளாயே–எனக்கு கடல் கடைய வேண்டா -வடிவைக் காட்ட அமையும் -இவருக்கு பிராப்யம் அம்ருதம் அன்று –காண்கை -உபாயமும் கடல் கடைகை அன்று –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-(3708)-திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை அல்லது என் மனஸ்ஸூ சேர்ந்து அணையாது -திருவடி -பாவோ நான்யத்ர கச்சதி -என்றது பரம பதத்தில் பிராப்தி இல்லாமையோ-ராம அவதாரத்தில் பாவ பந்தத்தாலே இறே -அப்படியே இவரும் -திருச் செங்குன்றூர்–

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-வியசன வாசனையால் தேஹமும் பிராணனும் நடுவே நின்று க்லேசப்படுகிற இத்தனை -பிடித்து விட்ட கொம்பு போலே வாசனையே உள்ளது -நோவு பட வேண்டுவது யுண்டு -உங்களுக்கு நலிகைக்கு ஆஸ்ரயம் இல்லை –

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-(3829)–நம் திரு மார்வன் -பிரணயித்தவத்தால் வந்த ப்ரஸித்தியை எனக்கு காட்டி -பிராட்டியோடு பழகிற்றும் பிரணயியாய் அன்று -அத்தைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக -சில பொய்களைக் காட்டி மஹா பலி பக்கலிலே நின்றும் பூமியைக் கொண்டால் போலே கலந்து பரிமாறுகிறான் என்று தோற்றும் படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் என்றுமாம் -நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–நம்மை முடிக்கைக்கு நல் விரகு தானே பார்த்தான் -உங்களுக்கு இங்கு அவகாசம் இல்லை -சர்வ சக்தியானவன் -உத்தியோகித்த கார்யத்திலே குறை கிடப்பதாய் அதிலே நீங்கள் சஹகரிக்கிறி கோளோ-நம்மை முடிக்க பார்த்த பார்வை அழகிதாக பார்த்தான் என்று தன்னிலே நொந்து சொல்லுகிறாள் -என்றுமாம் –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-(3872) – கலக்கிற போது அவன் பரிமாறின வகைகள் ஆஸ்ரயத்தின் அளவன்று என்னுதல் -பாதக பதார்த்தங்களினுடைய பாதிப்பு ஆத்ம வஸ்துவின் அளவன்று என்னுதல்-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-(3874)-அவன் பிரசாதம் கிட்டும் அளவும் பிராணன் தரிக்கிறது-இல்லை – க்ரம ப்ராப்தியை சஹிப்பதொரு பிராணனை பெற்றோம் ஆகில் ஆறி இருக்கலாம் இறே–பிராட்டியோடு -அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-(3914) ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூகம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூகமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-(3915)-உன் போக்கை நினைத்து வெவ்விதாக நெடு மூச்செறிந்து -அத்தாலே ஹிருதயம் உலர்ந்து -விரஹ அக்னியாலே வேவா நின்றது-

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-தனக்கு ஆஸ்ரயமான பிராணனானது வேவா நின்றது -க்ஷணிக பதார்த்தம் போலே உத்பத்தியும் விநாசமுமாய் செல்லா நிற்கை -அக்னி ஆஸ்ரயாசியாய் இறே இருப்பது –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே –உன்னைப் பிரியாமைக்கு சொல்லுகிற வார்த்தை அல்ல -உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்-இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற வார்த்தை யாகையாலே மெய்-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-உன்னை போக்கன்றே என்னை நலிகிறது -அவனை ஒழியத் திரிகிற இதுவே என் நெஞ்சை மாறுபாடு உருவச் சுடா நின்றது-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-(3992)—என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூ ரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –-எனது ஆவியை-என்னது என்னும் அதுவே ஹேதுவாக காமுகர் அபிமத விஷயத்தில் அழுக்கை விரும்புமா போலே என்னுடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை-அது தன்னை நன்று என்று விரும்புகையாலே அதிலும் தண்ணிதான ஆத்மாவை விரும்பினாய் –இன்னுயிர் என்று செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்னுமா போலே -என்னுதல் -அவன் தலையால் சுமக்கிற படியால் என்னுதல் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்–
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply