திருவவதாரம்
வேதாந்த தேசிகன் திருவவதரித்தவிடம் “காசி முதலாகிய நன்னகரி யெல்லாம் கார்மேனி யருளாளர் கச்சிக்கு ஒவ்வா ” என்றும் “முத்தி தரும் நகரேழில் முக்கியமாங் கச்சி” என்றும் புகழப்பட்ட காஞ்சி க்ஷேத்ரத்தில் திருத் தண்கா என வழங்கப்பெறும் விளக்கொளி யெம்பெருமான் ஸந்நிதியின் பரிஸரமாகிய திவ்ய ஸ்தலம். இவர்க்குத் திருத் தகப்பனார் அநந்த ஸோமயாஜிகள், திருத் தாயார் தோதாத்ரி யம்மை, ஆசாரியர் (மாதுலரான) கிடாம்பி அப்புள்ளார். இராமா னுசப் பிள்ளான் என்பவரும் அவரே. திருவேங்கடமுடையானுடைய திரு மணியே இவ் வாசிரியராய்த் தோன்றினதாகக் கூறுவர். ஸ்வாமி தாமே ஸங்கல்ப ஸுர்யோதய நாடக ப்ரஸ்தாவகையில் தம்மைப் பற்றி அருளிச் செய்யுமிடத்து
வித்ராஸிநீ விபுதவைரி வருதிநீநாம் பத்மாஸநேக பரிசார விதௌ ப்ரயுக்தா, உத் ப்ரேஷ்யதே பதஜ நைருபத்தி பூம்நா கண்டா ஹரேஸ் ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி என்றருளிய ஸ்லோகம் இங்கு அநுஸந்திக்க வுரியது-
திரு நாம கரணம்
இவ்வாசிரியர் திருவேங்கட முடையானுடைய மஹோத்ஸவத்தின் அவப்ருத தினமாகிய புரட்டாசித் திருவோணத்தன்று திருவவதரித்தமை பற்றி ஸ்ரீவேங்கட நாத சர்மா என்று திருநாமம் சாத்தப் பெற்றார். வேதாந்தாசார்யர் என்கிற திருநாமம் பிறகு பட்டப் பெயராகக் கிடைத்தது ஸ்வாமிக்கு.
(கலி 4370, சாலிவாஹாசக 1191, கி. பி. 1268-விபவ ஸம்வத்ஸரத்தில் இவரது திருவவதாரமென்று பெரியார் நிரூபிக்கின்றனர்.] நூறு ஸம்வத்ஸரம் இவ் விபூதியில் எழுந்தருளி யிருந்து திருநாட்டுக் கெழுந்தருளின ராதலால் இற்றைக்கு ஏறக் குறைய 595 ஆண்டுகட்கு முன் இவ்வாசிரியரது ஜீவிதகாலம் என விளங்கா நின்றது. இதில் மதி பேதமோ மத பேதமோ இருப்பதாகத் தெரியவில்லை -நியாயமுமில்லை –
இளமையில் பெற்ற அநுக்ரஹமும் வித்யாப்யாஸமும்
இவ் வாசிரியர் தமது மாதுலராகிய அப்புள்ளாருடைய அதிமாத்ர ப்ரீதிக்குப் பாத்ர பூதரா யிருந்து வந்தார். நடாதூரம்மாளுடைய ஸந்நிதியில் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் செய்து கொண்டிருந்த அவ்வாசிரியர், நாலைந்து பிராயமுள்ள இவ்வாசிரியக் குழந்தையையும் உடன் அழைத்துக் கொண்டு கால ஷேப கோஷ்டிக்குச் செல்ல அம்மாள் இக் குழந்தையின் தேஜோ விசேஷத்தையும்
ப்ரதிபா ப்ரபாவத்தையும் நோக்கி வியந்து ஆம் முதல்வனின்” என்று விசேஷ கடாக்ஷம் செய்தருளினார். இவ் விஷயம் இவ்வாசிரியர் தம்மாலேயே அதிகரண ஸாராவளியின் தொடக்கத்தில் ஸ்ரீமத்ப்யாம் ஸ்யாதஸா வித்யநுபதி வா தாசார்ய ராமாநுஜாப்யாம் ஸம்யக் த்ருஷ்டேந ஸர்வம் ஸஹ நிசிததியா வேங்கடேசேந” என்று பணிக்கப் பட்டது. உரிய காலங்களில் சௌலோபநயாதி ஸ்கல ஸம்ஸ்காரங்களும் அடைவே செய்யப் பெற்ற இவர் வேதங்களை ஒதத் தொடங்கினர். வேத மோதின திறமையைப் பற்றி ஆசார்ய சம்புவில் கூறியுள்ள வொரு ஸ்லோகம் மிக அற்புதமானது-
அஹ்நாய வேதாங்கிலாந் ஆசார்யா தக்ரஹி தஸௌ புநருச் சாரணா காங்ஷி பதாநாம் வேஷ்டநே பரம் என்பதாம். வேதத்தில் வேஷ்டந பதங்கள் என்று சில வுண்டு [ப்ரஜாபதிரிதிப்ரஜா – பதி:: பாகதேயே நேதி பாக – தேயேந; அக்நிஷ்டோம ஸாம மித்யக்திஷ்டோம – ஸாமம்.] என்பவை போன்ற பதங்கள் வேஷ்டா பதங்களாகும். அவை இரட்டித் திரட்டித்தே ஓத வேண்டியவை யாதலால், அத்தகைய வேஷ்டந பதங்களில் மாத்திரம் ஸ்வா மிக்குப் புநருச் சாரணம் ப்ராப்தமா யிற்றே யல்லது மற்றைப் படியுள்ள பதங்களை யெல்லாம் ஸக்ருதுச்சாரண மாத்ரத்தினாலேயே க்ரஹித்தருளினா ரென்று இவருடைய அநிதர ஸாதாரணமான க்ரஹண தாரண படுத்வம் கூறியவாறு-இவ் வண்ணமாகவே வேதாங்கமாக வுள்ள ஸகல சாஸ்த்ரங்களையும் மாதுல ஸகாசத்திலேயே இருபது திரு நக்ஷத்ரத்திற்குள் அதிகரித்து, மந்த்ர விசேஷங்களையும் உபதேசம் பெற்று நிபுணராக விளங்கி வருகையில், ப்ராப்த காலத்திலே
க்ருஹஸ்தாஸ்ரமத்தையும் ஸ்வீகரித்து ஆஹிதாக்நியாய் ஸ்ரீ காஞ்சியிலேயே ஸாமாந்ய விசேஷ சாஸ்த்ர ப்ரவசனங்கள் செய்தருளா நின்றார்-
இடையில் முக்கியமானதொரு விஜ்ஞாபனம்
அறு நூறு ஆண்டுகட்கு முன்பெழுந்தருளி யிருந்த ஸ்வாமியின் சரித்திரத்தை நாம் சிறந்த ஆதாரங் கொண்டே எழுத வேண்டும். இக் காலத்தவர்கள் எழுதிய சரித்திர நூல்கள் நாலைந்து காணப்படுகின்றன. அவை பரஸ்பர விருத்தங்களென்றும் பிராமாணிகமான ஆதாரமுடையனவல்ல வென்றும் எழுபது ஸம்வத்ஸரங்களுக்கு முன்பு ஸ்ரீ காஞ்சீபுரத்தில் வாழ்ந்த ஜகத் விக்க்யாதரான ஸ்ரீமத் திருப்புட்குழியப்பா ஸ்வாமியின் சிஷ்யர்களாலும், திருவயிந்திரபுரம் சேட்லூர் நரஸிம்ஹா சாரியராலும் காரண சேஷ நிரூபணங்களுடன் எழுதி வெளியிடப் பட்டிருப்பதால் விச்வஸநீயமான தேசிக சரித்திர நூல் அரிதாகவே யுள்ளது. கீழே யாம் ப்ரஸ்தாவிந்த ஆசார்ய சம்புவானது மிக வுயர்ந்த நூல். இதற்கு வேதாந்தாசார்ய விஜயமென்னுந் திருநாமம் ப்ரஸித்தமானது. இது ஸம்ஸ்க்ருத நூலாதலால் இதில் ப்ரஷேப சங்கைக்கு அவகாசமில்லை. அதை நாம் இளமையில் பாடமாக வாசித்திருந்தோம். அதில் நமக்கு மஹத்தான கௌரவ ப்ரதிபத்தி யுண்டு, தேசிகனோடு விகல்பிக்கலாம்படியான வாக் வைபவத்தை யுடைய வொரு மஹா வித்வத் கவி வரேண்யரே அந்தக் கிரந்தத்தை இயற்றினர் -அரசாணிபாலாய் வேங்கடாத் வரியின் சம்பூ கிரந்தங்களில் காட்டி லும் மிக வுயர்ந்தது அது -அதில் இதராசார்ய தூஷணமென்பது அடியோடு இடம் பெறாதத்தோடு தேசிகனுக்கு ப்ராமாணிகமாக எவ்வளவு சரித்திர முள்ளதோ அவ்வளவே அதில் நிபந்திக்கப் பட்டுள்ளது. அதில் காவ்ய ஸரணிக் கேற்ப வர்ணகைகளாகவும் உத் ப்ரேக்ஷைகளாகவுமுள்ள பாகங்களைத் தள்ளி சரித்ர பாகமாக வுள்ளதை மாத்திரம் தொகுத்தால் இங்கே நாம் காட்டுகிற அளவு தான் உண்மையான தேசிக சரித்திரம் தேறுகிறது. அதை அந்யூந அநதிரிக்தமாகக் காட்டுகிறோம் காண்மின்-
ஆசார்ய சம்புவில் காணும் தேசிக சரித்திரம்-
அந்த சம்பூ க்ரந்தத்தில் ஆறு ஸ்தபகங்கள் உள்ளன. முதல் ஸ்தபகத்தில் – விபுலமான மங்களா சரணம், வேதாந்த ஸுரி சரித்ரம் சொல்லுகிறேனென்ற ப்ரதிஞை, க்ரந்த கர்த்தாவான தம்முடைய வம்சாவளீ ப்ரசம்ஸை, தேசிகனுடைய அவதார ஸ்தலமான காஞ்சீபுரியின் வர்ணனை, தேசிகனுடைய பிதா மஹரான புண்டரீகாக்ஷ யஜ்வாவின் வர்ணனை ஆக இவ்வளவு உள்ளது.
இரண்டாவது ஸ்தபகத்தில் – அந்த புண்டரீகாக்ஷ யஜ்வாவின் திருக் குமாரரும் தேசிகனுடைய திருத் தகப்பனாருமான அநந்த ஸூரியின் ப்ரசம்ஸை, அவருடைய தேவியார் கர்ப்பவதி யானது, திருமலைமால் திருமணி அந்த கர்ப்பத் திலே வந்து ஆவேசித்தது – ஆக இவ்வளவு சொல்லப்பட்டது. (இனிமேல் தான் திரு வவதாரம் தொடங்கி சரித்திரம் கூறுதல்.)
மூன்றாவது ஸ்தபகத்தில் 1. தேசிகனுடைய திருவவதாரம், 2, பால்ய வர்ணநம், 3- நடாதூரம்மாள் பக்கலிலே ஸ்ரீ பாஷ்ய கால க்ஷேபம் செய்து வரும் தம்முடைய மாதுலரான கிடாம்பி யப்புள்ளரோடு கூட தேசிகனும் அம்மாள் திருமாளிகைக்குச் சென்று அங்கு அம்மாளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றது, 4. காலத்தில் உபநயாதிகள் நடந்து வேதாத்யயநமும் ஸாமாந்ய சாஸ்த்ராத்யயநமும் வெகு விரைவில் செய்தது, 5. விவாஹம் செய்து கொண்டது, 6. ஹயக்ரீவ மந்த்ரத்தை ஜபித்தது, 7. வாதிகளை வென்றது,
8. நியாய ஸித்தாஞ்ஜாம் முதலிய சில க்ரந்தங்கள் ஸாதித்து 9. கவிதார்க்கிக கேஸரி யென்கிற விருது பெற்றது, – ஆக இவ்வளவு சொல்லப்பட்டது.
நான்காவது ஸ்தபகத்தில் 10. தேவப் பெருமாளுடைய வைசாகோத்ஸவ ப்ரசம்ஸை. 11. அவ் வுத்ஸவத்தில் கருடோத்ஸவ தினத்தில் பஹு மானிக்கப் பெற்ற தேசிகன் வரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்ரமருளிச் செய்தது: 12. வைசா கோத்ஸவஸேவார்த்தமாக வந்திருந்த வித்யாரண்யயதி தேசிகனுடைய கவி தார்க்கிக ஸிம்ஹ பிருதத்தைப் பொறாமல் இவரை வாதத்திற்கிழுக்க, ப்ரசண்ட வாதம் நடத்தி அந்த யதியை பங்கப்படுத்தினது. 13. பிறகு புரட்டாசி மாஸம் அணித்தானவாறே திருவேங்கட முடையானுத்ஸவம் ஸேவிக்கக் குதூ ஹலங் கொண்டது ஆக இவை சொல்லிற்று.
ஐந்தாவது ஸ்தபகத்தில் -14. தேசிகனுடைய திருவேங்கட யாத்திரை.-15. திருமலையில் தயா சதகமருளிச் செய்தது. 16. முன்பு காஞ்சீபுரியில் பராஜி தராய்ப் போன வித்யாரண்யர் விஜய நகரத்தரசனிடம் சேர்ந்திருந்து, அந்த ராஜாவுக்கு இவருடைய அப்ரமேயமான வைபவத்தை யெடுத்துரைத்து இவரை அங்கே வரவழைத்து விசேஷ ஸன்மானமளிக்க ராஜாவின் அநுமதியையும் பெற்று அப்போது திருவேங்கட மலையிலே வாழ்கின்றவர்க்குச் செய்தி யனுப்ப, இவர் வைராக்ய பஞ்சகத்தை யெழுதி யனுப்பித் தம்முடைய அப்ரதிமமான வைராக்யத்தைக் காட்டி நின்றது. 17. பிறகு வட திசை நோக்கிச் சென்று கங்கா நதி தீர்த்த யாத்திரை செய்தருளி மீண்டு காஞ்சீபுரி வந்து சேர்ந்து சிலநாள் அவ்விடத்திலேயே வாழ்ந்த செய்தி. 18. விஜய நகரத்தரசனுடைய ஆஸ்தானத்தில் வித்யாரண்யர்க்கும் அக்ஷோப்ய முனிக்கும். த்வைதாத்வைக விவாத கோலாஹலம் நடக்க, அவ்விருவருடைய வாதங்ளில் எவருடைய வாதம் ஸமீசீநமான தென்று முடிவு தெரிந்து கொள்ள விரும்பிய அரசன் இருவருடைய வாதங்களையும் எழுதச் செய்து வாங்கி ஆள்மூலமாக தேசிகனுக் கனுப்பி மத்தியஸ்தாபிப்ராயம் தெரிவிக்க வேணுமென்று வேண்ட, தேசிகன்
“அஸிநா தத்தவமஸிநா பரஜீவ ப்ரபேதிநா, வித்யாரண்ய மஹாரண்ய மஷோப்ய முநிரச்சிநத்.” என்றொரு ஸ்லோகமியற்றி யனுப்ப, அதை ராஜா பெற்று மிக வுகந்து அஷோப்ய முநியை ஸ்லாகித்தா னென்பது. 19. பிறகு ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்க விரும்பிய தேசிகன் ஸ்ரீ காஞ்சியில் நின்றும் புறப்பட்டு வழியடைவில் திருவஹீந்திரபுரம் சென்று சேர்ந்து அங்கு நெடுங் காலம் வளிக்க வேணும் மென விரும்பி ஒளஷதாத்ரியில் ஹயக்ரீவ மந்த்ராவ்ருத்தி பூர்வகமாக ஹயக்ரீவோபாஸநை செய்து வருகையில் ஒரு நாள் ஜப ஸமயத்தில் ஸாக்ஷாத் கரிக்கப் பட்ட பகவானுடைய நியமனத்தினால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம், தேவநாயக பஞ் சாசத், கோபால விம்சதி, மஹாவீர கத்யம், அச்யுத சதகம், பரமத பங்கம், விரோத பரிஹாரம் முதலான க்ரந்தங்களை யியற்றினது. 20. பிறகு ஸ்ரீமுஷ்ணத்திற் கெழுந்தருளி அங்கு நின்றும் ஸ்ரீரங்காபிமுகமாக எழுந்தருளுகையில் ஸ்ரீரங்கத்தில் நின்றும் வந்து கொண்டிருந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அங்கு துர்வாதி விஜயார்த்தமான ஆஹ்வாந பத்ரிகையை சமர்ப்பிக்க விரைந்து சென்று கோயிலே சேர்ந்தார் என்பது சொல்லிற்று –
ஆறாவது ஸ்தபகத்தில்-21.ஸ்வாமி ஸ்ரீரங்கநாதனை ஸேவித்து பசுவத் த்யாந ஸோபாநம் முதலான ஸ்துதிகளருளிச் செய்தது, 2 . அங்குள்ள பாகவதர்களின் வேண்டுகோளுக் கிணங்கி க்ருஷ்ண மிச்ர னென்கிற துர்வாதியோடு பதினெட்டு நாள் வாத யுத்தம் செய்து வெற்றி பெற்றது, 23. வேதாந்தாசார்ய ரென்றும் ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர ரென்றும் விருதுகள் பெற்றது, 24. சததூஷணீ அதிகரண ஸாராவளி தத்வ முக்தா கலாபம் ஸர்வார்த்த ஸிந்தி ஸேச்வர மீமாம்ஸை ஸங்கல்ப ஸுர்யோதயம் யாதவாப்தயம் தாத்பர்ய சந்திரிகை மீமாம்ஸா பாதுகை தத்வ டீகை ஸ்ரீஸ்துதி பூஸ்துதி யதிராஐ ஸப்ததி முதலான பல பல நூல்களை யியற்றினது, 25. கவித்வச் செருக்குடன் வந்த வொரு துர்வாதியின் அவலேபத்தை யகற்ற பாதுகா ஸஹஸ்ர மருளிச் செய்தது, 26. ஸமஸ்யா ஸஹஸ்ர பூரணம் செய்தது, 27. அப்போது அங்கு யவநோபப்லவ முண்டாக, அது தொலைய அபிதி ஸ்தவமருளிச் செய்தது, 28. அங்கு நின்றும் புறப்பட்டுத் திரு வணை யாத்திரை செய்தது, 29. ஆழ்வார் திருநகரி திருநாராயணபுரம் முதலானவை ஸேவித்துக் கொண்டு காஞ்சீபுரம் வந்து சேர்ந்தது, 30. அங்கு ஸ்வாமினுடைய பிருதாவளிகளைப் பொறாத வொரு மாந்த்ரிகன் வந்து பாம்பாட்டப் போராட்டம் செய்ய, கருட தண்டக மருளிச் செய்து அவன் செருக்கை யடக்கினது, 31. பிறகு திருக் குமாரர் அவதரித்தது. 32. ரஹஸ்யத்ரயஸாரமியற் றியது – ஆக இவ்வளவு சொல்லி க்ரந்தம் தலைக்கட்டப் பட்டது.
மேலே விவரித்தபடி தேசிக சரித்திர ஸம்பந்தமாக முப்பத்திரண்டு விஷயங்களே அந்நூலிலுள்ளன. சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பாத ரக்ஷையைக் கட்டி ஸ்வாமி திருமுடியிலே படும்படி தொங்க விட்டார்க ளென்றும், ச்ராத்தத்தில் நிமந்தரணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தவர்கள் வஞ்சித்து விட்டார்களென்றும், ஸந்நிதியில் பெருமாளை ஸேவித்துக் கொண்டிருக்கும் போது ஏகாதசி யன்று பொங்கலைக் கொணர்ந்து கொடுத்தார்களென்றும், திருமாளிகையி லெழுந்தருளி யிருந்து க்ரந்த வலோகநம் செய்து கொண்டிக்கையில் திருவடிகளைப் பிடித் திழுத்துத் தெருவிலே விழ விட்டார்க ளென்றும் இப்படி பலவாறு நவீநர்கள் எழுதி யுள்ள சரித்திரங்களானவை பிறர் மீது அவத்ய மேறிடுவதற்காக நிராதார மாகக் கல்பிக்கப் பட்டவை. இதனால் பிறர் பால் அவத்ய மேறுவது மாத்திர
மன்று. ஸ்வாமி தேசிகனுக்கும் மிகுந்த கெளரவ ஹாநி ஏற்படுகிறதென்பதை விவேகிகள் எளிதாக உணர்வர்கள்.
ராமோ ராமே ராம இதி ப்ரஜாநாம பவந் கதா என்றாப் போலே “வேதாந்த ஸூரிர் நிகமாந்த ஸூரிஸ் த்ரய்யந்த ஸுரி: கவிதார்க்கி தேந்த்ர, இத்யேவ ஸர்வத்ர ஸதைவ ஸர்வே ஜகாஸ் ஸமந்தாத் கதயந்த ஆஸந் ” என்று ஸ்லோக மியற்றிக் குலாவ வேண்டியிருக்க, (அதாவது) உலகமெல்லாம் தம்மையே
வாய் வெருவும் படியாகத் தமது திருக் குணங்களாலே எல்லாரையும் ஆவர்ஜநம் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தாரென்று உள்ளபடி பெருமைகளை ப்ரசாரம் செய்ய வேண்டி யிருக்க. அது செய்யாதே ஸபக்ஷர்களும் விபக்ஷர் களுமான எல்லார்க்கும் வெறுக்கத் தக்கவராக இருந்து வந்தா ரென்று ப்ரசாரம் செய்வதனால் ஸ்வாமிக்கு லாகவமன்றோ உண்டாகிற தென்பதைச் சிறிது மறிய கில்லாதே, வைபவ க்ரந்தமென்று பெயரிட்டு லாகவ மயமாக எழுதி வைப்பவர்களைப் பற்றி மிகவும் சோகிக்க வேண்டியது தவிர வேறுண்டோ?
ச்ராத்கத்தில் நிமந்த்ரணத்திற்காக வரிக்கப்படுமவர்கள் ஆப்த பந்துக்களா யிருப்பர்களே தவிர வழிப் போக்கர்களா யிருக்க மாட்டார்களே. இதி லென்ன ஸம்சயம்? அப்படி ஆப்த பந்துக்களானவர்கள் நிமந்தரணத்திற்கு இசைந்திருந்து ஸமயத்தில் வாராதே வஞ்சித்து விட்டார்களென்று கதை யெழுதினால் இது மஹா வைபவ நிதியான தேசிகன் விஷயத்திலே பொருந்துமாவென்று இது கூட ஆராய்வாரில்லையே. அஸூயுக்களின் கலஹ வார்த்தைக் கிணங்கி ஒருவர் வஞ்சித்து விட்டாலும் மூவருமே வஞ்சித்து விட்டார்களென்று கதை யெழுதுவது வியப்பினும் வியப்பே. அப்பய க்ஷிதருடைய சரித்திரத்தில் காணும் கதை இது, சாஸ்த்ர கர்ஹிதமான பல காரியங்களைச் செய்து பதிதர்களென்று ஒதுக்கப்பட்டவர்கள் சிலர் செய்யும் ச்ராத்தங்களில் இப்படிப்பட்ட ஸம்பவம் விளைவது கேட்டதுண்டு, கண்டதுமுண்டு; பதித பாவநரான ஸ்வாமி திறத்திலா இப்படி ஹேயமான கதையைத் தொடுப்பது? இவர்களது கொள்கையின்படி இக் கதை உண்மையாக நடந்திருக்குமாகில் மேலே என்ன சொல்லுவதென்று தோன்ற வில்லை. தேசிகனுக்குப் பெருமை யென்று நவீநர்கள் நவிநமாகக் கல்பநை செய்து எழுதும் விஷயங்கள் இவ்வளவு ஹேய மாயன்றோ விருக்கின்றன. எந்த ஆசார்யர்களின் திவ்ய ஸுக்திகளை ஸ்வாமி தலையாலே சுமந்து ஸதா ஸர்வதா அவற்றையே அநுஸந்தானம் பண்ணிக் கொண்டும் தம்முடைய க்ரந்தங்களிலும் தழுவிக் கொண்டும் போந்தாரோ அந்த ஆசாரியர்களை ப்ரதி பக்ஷிகளாகக் கொண்டிருந்தாரென்றும், அவர்களு டைய அந்த திவ்ய ஸூக்திகளைக் கண்டிப்பதே காரியமாக இருந்தாரென்றும் இப்படிப் பட்ட அபத்தங்களையே நிரப்பி யன்றோ நவீநர்கள் தேசிக வைபவ மென்றும் தேசிக ப்ரபாவ மென்றும் தேசிக திவ்ய சரித்ர மென்றும் எழுதி வைப்பது. இந்த அபத்தங்களை யெல்லாம் வெகு தூரத்தில் விலக்கி ப்ராமாணிக ஹிருதயங்கமமான சரித்திரங்களை யுணர விரும்ப வேண்டும்.
பக்தி விசேஷத்தினால் ஆசார்யருக்கு அந்யாத்ருசமான வைபவங்களைப் பிரசுரஞ் செய்ய வேணுமென்று குதுஹலங் கொண்டு சில பல கதைகளைக் கற்பனை செய்து சிலர் எழுதி வைத்திட்டால் அதை யநுஸரித்துப் பின்புள்ளவர்கள் எழுதி வந்தால் நாளடைவில் அந்த கல்பித கதைகள் மெய்யென்று நினைக்க நேர்ந்து விடுகிறது. அந்த கல்பித கதைகளில் அநுபபத்தி ஒன்றுமில்லையாகில் பக்திமான்கள் உகந்தே யிருக்கலாம். இதர ஆசாரியர்களுக்குப் பழிப்பாய் ப்ரக்ருத ஆசார்யருக்கும் பழிப்பாய்த் தலைக் கட்டுகின்ற அக் கல்பனைக் கதைகளால் பரிஹாஸ்யதையே தேறுவதனால் விவேகிகளா யுள்ளவர்கள் கல்பனைக் கதைகளை விளக்கியே தொலைக்க வேண்டும். இன்னின்ன கதைகள் கற்னை யென்று நாம் நெடு நாளாகவே தெரிவித்து வருவதால் பிராமாணிகர்களாயுள்ளவர்கள் இவை அசைக்க முடியாத விமர்சங்களை யென்று உகந்து ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இக் காலத்த வித்வான்களில் சிறந்த விவேகியான ஸ்ரீ. உ.வே. உப்பிலியப்பன் ஸன்னி நவநீதம், ஸ்ரீ ராம தேசிகாசார்யரால் பரிசோதித்து ஸமீப காலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தின் முகப்பில் ஸ்ரீதேசிக சரித்திரம் சுருக்கமாக எழுதப் பட்டுள்ளது. அதில் தலை மேல் அவர் எழுதி யிருப்பதாவது,
” ஸ்ரீ தேசிக சரித்திரம் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளது. அவற்றில் நிகழ்ச்சி முறை, நடந்த இடம், காலம் முதலியவற்றில் சிறிது வேறுபாடு காணப்படுவது உண்மையே.” என்று.
இங்ஙனே உள்ளபடி யெழுதி வெளியிட்டுள்ளார். “வேறுபாடு காணப்படுகிறது ” என்றெழுதாமல் ” வேறுபாடு காணப்படுவது உண்மையே” என்றெழுதியிருப்பதை நிரூபகர்கள் விமர்சிக்க வேணும். எதனால் அவர் அப்படி பெழுத நேர்ந்ததென்றால், அவர் 1944 ஆம் வருஷத்தில் வெளியிட்ட தேசிகப் பிரபந்தவுரையில் D. R. அட்வகேட் தேசிக சரித்திரமெழுதுகிற வியாஜமாகப் பூருவாசாரியர்களை தூஷித்திருந்தது காரணமாகவே விவாத நூல்கள் வளரத் தொடங்கின வென்பதை நாம் பலகால் பிரசுரித்திருக்கிறோம். உண்மையில் அந்த அதர்க்கணச் செயல் தான் விவாத வளர்ச்சிக்குக் காரணம். மேலே குறித்த நவநீதம் நண்பர் இதை நன்கு தெரிந்து கொண்டதனால் உண்மையை இசைந்து கொள்வது தான் உரியதென்று கொண்டு அங்ஙனம் எழுதினார். அவ்வளவேயுமன்றிக்கே, மேலே சரித்திரத்தில் பாதுகா ஸஹஸ்ர மவதரித்ததைப் பற்றி யெழுதுகையில் நவீநர்களின் கற்பனைக் கதைகளையும் D. R. கற்பனைக் கதை, யையும் அறவே யொழித்து, நாம் பலகால் தெரிவித்திருந்த உண்மையைத் தழுவி உள்ளவாறெழுதி யுள்ளார். அவரும் ஸங்கேத பீதியினால் சில விஷயங்களை மட்டும் பழையபடி யெழுதி யிருந்தாலும் பெரும்பாலும் பிராமாணிக வழியில் சார்ந்திருப்பது உகக்கத்தக்கது. நிற்க, நாம் தொடங்கிய தேசிக வைபவம் இனி.
தேசிகன் திருவயிந்திரபுர மெழுந்தருளியது
இங்ஙனே நிகழ்ந்து வருகையில் ஒரு நாள் தென் திசைத் திருப்பதிகளை மங்களாசாஸனஞ் செய்யத் திருவுள்ளங் கொண்டு பேரருளாளனது நியமனம் பெற்றுப் புறப்பட்டெழுந் தருளுகையில், பரம பாவனமான கருட நதியின் கரையில் தெய்வ நாயகனுடைய ஸந்நிதாந ஸாரஸ்யத்தையும் ஓஷதாத்திரியின் வாய்ப்பையும் நோக்கி அவ் விடத்திலே சில காலம் வஸிக்கத் திருவுள்ளமாய், அத் திருமலையின் கண் வீற்றிருந்து முன்பு ஸ்வாசார்ய ஸந்நிதியிலே பெற்றிருந்த வைநதேய மந்திரத்தை நியதராய் ஆவ்ருத்தி பண்ணிக் கொண்டிருக்க, ஒரு நாள் ஸுப்ரஸநராய் ஸாக்ஷாத்காரம் தந்தருளின பெரிய திருவடி ஸ்ரீ ஹயக்ரிவ மந்த்ரத்தை யுபதேசித்துச் செல்ல, பிறகு ஆங்கு அழகிய சிங்கர் திரு முன்பே ஹயக்ரீவ மஹாமந்த்ரத்தை நெடு நாள் ஜபித்துக் கொண்டெழுந்தருளி யிருக்க, வெள்ளைப் பரிமுகரும் ஸுப்ரஸந்நராய்க் காட்சி தந்து தம்முடைய வாக்கின் அம்ருதத்தை யூட்டி அநுக்ரஹித்து மறைந்தருள, ஆசிரியர் பரமாநந்த பாராவார நிமக்நராய் க்ருதார்த்தராய் எழுந்து ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாசத் என்ற இரண்டு ஸ்தோத்ரங்களை விண்ணப்பஞ் செய்து, தெய்வ நாயகனை யும் திருவடி தொழுது, தேவநாயக பஞ்சாசத், அச்யுதசதகம் (ப்ராக்ருத பாஷா மயஸ் தோத்திரம்), கோபால விம்சதி, (ரகுவீர கத்ய மென வழங்கப்படுகிற) மஹா வீர வைபவம் என்ற ஸ்தோத்ரங்களைப் பணித்தருளினார்.
திருக்கோவலூர் மங்களாசாஸனம்
பிறகு தெய்வ நாயகப் பெருமானிடம் நியமம் பெற்றுக் கொண்டு, “பாவரு தமிழால் பேர் பெறு பனுபவற் பாவலர் பாதி நாளிரவில், மூவரு நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு ” என்கிறபடியே பொய்கை பூதம் பேயாழ்வார்கள் கூடிக் குலாவி அநுபவித்து மகிழ்ந்த திருப்பதி யாகிய திருக் கோவலூரில் ஆயனாரைத் திருவடி தொழ விரும்பி அங்கெழுந்தருளிச் சில காலம் வாழ்ந்து அப் பெருமான் விஷயமாக ” தேஹளீச ஸ்துதி” என்கிற ஸ்தோத்ர மருளிச் செய்தார். அதில் 6, 7, ஸ்லோகங்களில் முதலாழ்வார்கட்கும் எம்பெருமானுக்கும் நேர்ந்த பரிமாற்றம் வெகு அழகாகப்
பேசப் பட்டுள்ளது.
1-தீபேதந கேந சிதசீதருசா நிசீதே ஸ்நேஹோபபந்ந பரிசுத்த குணார்ப்
பிதேந , தஹ்ராவகாசநி பிடம் தத்ருசுர் பவந்தம் ஸ்வாத்யாய யோக நயநாச் சுசய:
கவீந்த்ரா ] யோகிகளில் தலைவராகிய முதலாழ்வார்களென்னும் செந்தமிழ்க் கவித் தலைவர்கள் ஒருநாள் நள்ளிரவில் விலக்ஷணமான வொரு விளக்கேற்றி ஹ்ருதயத்தினுள்ளே ஆயனாரைக் கண்டு கொண்டனர் என்பது கருத்து.
(2) [காஸார பூர்வ கவி முக்கிய விமர்த ஜத்மா பண்ணா (புண்யா)தடேஷுஸூ பகஸ்யரஸோ பஹுஸ்தே, த்வத் பாத பத்ம மதுதி வதநந்ய போக்யே நூநம் ஸமாச்ரயதி நூதத சர்க்கராத்வம்] பெண்ணை யாற்றங் கரையில் கரும்பு போல் வளர்ந்திரா நின்ற ஆயனார், பொய்கை யாழ்வார் முதலான மூவரோடும் நெருக்குண்டு பிழியப் பட்டதனால் உண்டான ரஸமானது [விஷ் ணோ : பதே பரமே மத்வ உத்ஸ:) என்ற சுருதியின் படி அவரது திருவடித் தாமரைகளி லுண்டான தேன் பெருக்கில் சர்க்கரை கலந்தது போலும் என்றவாறு. இந்த இரண்டு ஸ்லோக ரத்நங் களும் பக்தர்களுக்கு நித்யாநுஸந்தேயங்கள்.
மீண்டும் கச்சிப் பதி யெழுந்தருளல். இங்ஙனம் திருக் கோவலூரில் சிலகாலம் எழுந்தருளியிருந்து அங்குள்ளாருக்கு வேதாந்த க்ரந்த ப்ரவசநமும் செய்தருளி, பிறகு யாத்திரை யடைவே ஸ்வாவதாரஸ்தலமான பெருமாள் கோவிலுக்கு மீண்டெழுந்தருளி அங்கு விசேஷத: க்ரந்த ப்ரவசநம் செய்தருளுங் காலத்தில், பெருந்தேவித் தாயார் விஷயமாக ஸ்ரீ ஸ்துதியையும், பேரருளாளன் விஷயமாக வரதராஜ பஞ்சாசத் என்னும் ஸ்தோத்ரத்தையும், ஸ்ரீயதோத்தகாரி யெம்பெருமான் விஷயமான வேகா ஸேது ஸ்தோத்ரத்தையும், அட்டபுயகரத் தெம்பெருமான் விஷயமான அஷ்டபுஜாஷ்டகத்தையும், விளக்கொளி யெம்பெருமான் விஷயமான சரணாம் கதி தீபிகை யென்கிற தீப ப்ரகாச ஸ்தோத்ரத்தையும், வேளுக்கை யெம்பெருமான் விஷயமான காமாஸிகாஷ்டகத்தையும், திருப்புட்குழிப் போரேற்றுப் பெருமாள் விஷயமான பரமார்த்த ஸ்துதியையும் அருளிச் செய்தார்.
வைராக்ய பஞ்சகம் அவதரித்த விசேஷம்
விஷ்ணு கண்டாவதார பூதரான நம் வேதாந்த தேசிகன் ஸர்வதோ முகமான ஞானம் படைத்தது போலவே விரக்தியையும் லோக விலக்ஷணமாகப் பெற்றவராதலால் கூரத் தாழ்வானைப் போலவே தாமும் உஞ்ச வ்ருத்தியையே கொண்டு பெருமாள் திருவாராதநத்தைக் குறையற நடத்திக் கொண்டு செந்தமிழும் வடமொழியும் திகழ்ந்த நாவர்க்கு உபய வேதாந்த க்ரந்த ப்ரவசம் செய்தருளா நின்று கொண்டு கார் மேனி யருளாளர் கச்சிப் பதியிலே பேரருளாளனை மங்களா சாஸநஞ் செய்து கொண்டெழுந்தருளி யிருந்தார். அக் காலத்தில் வித்யாரண்ய ரென்பவர் விஜயா நகர மஹாராஜனிடத்தில் மிகுந்த வால்லப்யம் பெற்றுப் பல பல வித்வான்களை ஆதரிப்பதற்குரிய ஸௌகர்யங்களை யுடையரா யிருந்ததனால் நம் ஸ்ரீ தேசிக சிகாமணியை ஸ்மரித்து இவருடைய ஏழைமையைப் போக்கிச் செல்வச் சிறப்பை யுண்டாக்கக் கருதி அந்த விஜய நகராதீசனிடத்திற்கு எழுந்தருளுமாறு ப்ரார்த்தநா பத்திரிகையை அனுப்ப, அதனைக் கடாக்ஷித் தருளின ஸ்வாமி தேசிகன் தம்முடைய நிஷ்டா விசேஷங்களை அந்த வித்யா ரண்ய ஸ்வாமி அறிந்து வைத்தும் வீணாக இப்படி ஆஹ்வாநம் பண்ணுகிறரே!! எனத் திருவுள்ளம் நொந்து , அவருடைய பத்திரிகைக்கு உத்தரமாக
ந மே பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சிதார்ஜிதம் !
அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம்-11-என்கிற ஸ்லோகத்தை யெழுதி யனுப்ப, அவரும் அதைக் கண்டு. தேசிகனிடத்தில் அவர்தாம் வைத்திருந்த ப்ரீத்யதிசயத்தினால் எப்படியாவது இவர்க்கு அபரி மித தரவ்ய லாபம் பண்ணி வைக்க வேணுமென்ற ஆசையினால் மீண்டும் மிக
நிர்ப்பந்தித்துப் பத்திரிகை விடுக்க, [மஹாராஜன் மூலமாகவும் சிறந்த மரியாதை யுடன் ஆஹ்வாநம் பெறுவிக்க] அப்போது ஸ்வாமி அநுக்ரஹித் தருளியனுப்பிய ஸ்லோக ரத்னங்கள் வைராக்ய பஞ்சக மென்று ப்ரஸித்தி பெற்றிருக்கும்
ஸ்வாமியின் ஓர் அத்புத சேஷ்டிதம்
ஒரு மாயாவாதி ஸந்ந்யாஸி கச்சியில் வந்து ஸ்வாமியோடு தர்க்கித்துத் தோல்வி பெற்றதனால் வருந்தி இவர்க்கு ஏதேனும் இன்னல் விளைக்க வேணு மென்றெண்ணித் தனக்குள்ள ஷுத்ர மந்த்ரவாத சக்தியினால் ஸ்வாமி திருமாளிகைக்கு அருகிலுள்ளதொரு குளத்தில் தண்ணீரருந்தி அது ஸ்வாமியின் திருவுதரத்திலே புகுந்து மஹோதர மாகும்படி செய்ய, இந்த மாயச் செய்கையை அறிந்த ஸ்வாமி தம் திருமாளிகை வாசல் தூணை நசகத்தினால் கீறி யருள அதில் நின்றும் தண்ணீர் பெருக,ஸ்வாமியின் திரு வுதரம் பழையபடி யாயிற்று. இது கண்ட அந்த மாயாவாதி, ஸ்வாமியின் சக்தி விசேஷத்திற்கு மிக வியந்து திருவடியில் தொழுது சென்றான்.
கநக தாராஸ்தவ மென்னும் ஸ்ரீஸ்துதியின் பெருமை
ஒரு நாள் ஒரு ப்ரஹ்மசாரி, ஸ்வாமி ஸந்நிதியில் வந்து தெண்டனிட்டு ‘அடியேன் மிகவும் அகிஞ்சநன்; விவாஹம் செய்து கொள்ள விருப்பமுடையேன், ஸ்வாமி த்ரவ்ய ஸஹாயம் செய்தருள வேணும்” என்று பிரார்த்தித்தான்.-அது கேட்டு ஸ்வாமி புன் முறுவல் செய்து “பிள்ளாய்! நானோ உஞ்ச விருத்தி
பண்ணிப் பெருமாள் திருவாராதனம் நடத்துகிறவன் என்பது உனக்கு நேரில் தெரியும்; இப்படி யிருக்க விசேஷ தனிகர்களை விட்டு என்னிடம் வந்து பொருள் யாசிப்பதற்குக் காரணமென்ன? என்று வினவ, “ஸ்வாமி திருவுள்ளம் பற்றினால் அலப்யமான தொன்றுமில்லை யென்றும் வேண்டிய பொருள் கிடைக்கு மென்றும் பல பெரியோர் சொல்லக் கேட்டதனாலே ஸ்வாமியை ப்ரார்த்திக்க லானேன்” என்று அவன் விடை கூற, ஸ்வாமியும் அது கேட்டு ‘அப்படியா? பாகவதர்கள் அங்ஙனம் அருளிய பக்ஷத்தில் தவறாது பொருள் கிடைத்தே தீரும்; இனி விசாரப் படாதே; ஸ்ரீஸ்துதியை அநுந்தானம் செய்து கொண்டு பெருந் தேவித் தாயாரை ப்ரதஷிணம் செய்து வா ; அநுக்ரஹ முண்டாகும்’ என்று கூறி, ஏற்கெனவே பெருந் தேவித் தாயார் விஷயமாக அருளிச் செய்திருந்த ஸ்ரீஸ்துதி என்னும் தோத்திரத்தை அவனுக்குக் கண்டபாடம் செய்வித் தருளினார். அற்றை நாள் முழுதும் அந்த ஸ்துதியையே ஆவ்ருத்தி செய்து கொண்டிருந்து பிற்றை நாள் காலை ஸ்வாமி ஆஹ்நிகங்களை முடித்துக் கொண்டு பேரருளாளன் ஸநிதிக்கு மங்களாசாஸநார்த்தமாக எழுந்தருளும் போது அந்த ப்ரஹ்மசாரியும் ஸ்வாமியைப் பின் சென்று ஸ்ரீஸ்துதியைச் செவிக் கினியதாக அநுஸந்தித்துக் கொண்டே பெருந்தேவித் தாயாரை வலம் வர,
*ஆர்த்த த்ராண வ்ரதி பிரம்ருதாஸார தீலாம்புவாஹை: அம்போஜாநாமுஷஸி மிஷதா மந்தரங்கைரபாங்கை:, யஸ்யாம் யஸ்யாம் திசி விஹரதே தேவி! த்ருஷ்டிஸ் த்வதீயா தஸ்யாம் தஸ்யா மஹ மஹ மிகாம் தந்வதே ஸம்பதோகா: யோகாரம்பத்வரி தமநஸோ யுஷ்மதை
காந்த்ய யுக்தம் தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹ யே தாரயந்தே தநாயாம்! தேஷாம் பூமெள தநபதிக்ருஹா தம்பராத் அம்புதேர் வா தாரா நிர்யந்த் யதிகமதிகம் வாஞ்சி தாநாம் வஸூநாம்” என்கிற ஸ்லோகங்கள் அநுஸந்திக்கப் படுமளவில் தாயார் ஸந்நிதியில் திரு முன்பே ஸ்வர்ண தாரைகளின் வர்ஷம் வாய்த்திட, அனைவருங் கண்டு அதிசயித்தனர். பிரமசாரியும் க்ருதார்த்தனாய் விடை பெற்றுச் சென்றனன்.
திருக் குமாரர் திருவவதரித்தல்
ஸகல வகைகளாலும் ஸ்வாமியை நிகர்த்தவரான ஒரு திருக் குமாரர் நள ஸம்வத்ஸரம் ஆவணி மாதத்து ரோஹிணி நக்ஷத்ரத்தில் திருவவதரிக்க, அவர்க்கு வரதாசாரியர் என்று திருநாமமிடப்பட்டது. இவரும் ப்ராப்த காலங்களில் உபநயநாதி ஸம்ஸ்காரங்களைப் பெற்று ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஸகல சாஸ்த்ரார்த்தங்களையும் அதிகரித்து, விளக்கில் கொளுத்தின தீவட்டி போலே விளங்கி வந்தார் நயனாராசார்யரென்றும் நயன வரதாசார்யரென்றும் குமார வரதாசார்யரென்றும் இவர் வழங்கப் பெறுவர்.
ஸ்வாமி பிருதாவளிகள் பெறுதல்
ஸ்வாமி தேசிகனுக்கு வேதாந்தாசாரியர் என்றும், கவிதார்க்கிக கேஸரி என்றும், ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என்றும், ஸமஸ்யா ஸஹ ஸ்ரீ என்றும் இங்ஙனே பல பிருதுகள் ப்ரஸித்தமாய் நிகழ்ந்தன. இவற்றுள் வேதாந்தாசார்யர் என்கிற பிருது ஸ்ரீரங்கநாதனால் அளிக்கப்பட்ட தென்னுமிடம் ஸ்வாமியின் திவ்ய ஸூக்திகளினாலேயே தெரிய வருகின்றது; ஸங்கல்ப ஸுர்யோதய ப்ரஸ்
தாவநையில் [ஸ்ரீரங்கராஜ திவ்யாஜ்ஞா லப்த வேதாந்தாசார்ய பத :] என்றும், அதி கரண ஸாராவளியின் தொடக்கத்தில் [ஸ்வஸ்தி ஸ்ரீரங்க பர்த்து ] என்னும் ஸ்லோ கத்தில் (தேத தேவேத தத்தாம் வேதாந்தாசார்ய ஸம்ஜ்ஞாம்] என்றும் அருளிச் செய்யப் பட்டுள்ளவை காண்க. ஸ்தோத்ர பாஷ்பத்தின் முடிவில் [ஸ்வகமிதி ஹரி தத் தம் யாமுந ஸ்தோத்ர வ்ருத்த்யா வ்யகுணுத நிகமாந்தாசார்யகம் வேங்கடேஸ :] என்ற ஸ்லோகத்தில் ஹரிதத்தினாலும், தயா சதகத்தின் முடிவில் (வேதாந்த தேசிக பதே விதிவேச்ய பாலம் தேவோ தயா சதக மேததவாதயந்மாம்] என்ற ஸ்லோகத்தில் தேவ பதத்தினாலும் ஸ்ரீரங்கநாதனே விவக்ஷிக்கப் படுகிறானென்றும் கொள்ளக் கடவது. தர்மியைக்யத்தால் ஸமந்வயம் காண்க. ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் முதலிய மற்ற பிருதுகள் வித்வான்களால் அளிக்கப்பட்டன, இதுவும் ஸ்ரீ தேசிக திவ்ய ஸூக்திகளினாலேயே தெரிகின்றது; ஸங்கல்ப ஸுர்யோதயத்தில் மேலே குறித்த விடத்தில் (கவிதார்க்கிக ஸிம்ஹ இதி ப்ரக்யாத குண ஸமாக்ய :] என்றும், ஸ்தோத்ர பாஷ்ய ஸமாப்தியில் [அகணி தைஸிஸத்பிர் யஸ் ஸமஸ்யா ஸஹ ஸ்ரீ கவிகதக ம்ருகேந்த்ரஸ் ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர:] என்றுமுள்ள ஸ்ரீ ஸூக்திகள் காண்க. ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்கிற பிருது ஸ்ரீரங்க நாச்சியாரால் அளிக்கப் பட்டதென்றும் சொல்லுவதுண்டு. ஸமஸ்யா ஸஹஸ்ரீ என்கிற பிருது மற்ற பிருது களைப்போல் ஸுப்ரஸித்தமாக ஸ்வாமிக்கு வழங்குவதில்லை யாயினும், அக் காலத்தில் ஸதஸ்ஸுகளில் வித்வான்களால் வழங்கி வரப்பட்ட தென்று விளங்குகின்றது.ஒரு ஸ்லோகத்தின் ஏக தேசத்திற்கு ” ஸமஸ்யா” என்று பெயர்.
ஸமஸ்யா பூரணம் என்பது மஹா கவிகளின் கோஷ்டிகளில் ப்ரஸித்தம். ஒருவர் ஒரு பாதத்தையோ சில பதங்களையோ கவனஞ்செய்து வெளியிட்டால், மற்றொருவர் அப்போதே பூர்ண ஸ்லோகம்பாடி அதனைப் பூர்த்தி செய்து வெளியிடுதல் ஸமஸ்யா பூரமெனப்படும். கவிகளுக்கு இது வொரு விநோதமான போது போக்கு.-தேசிகன் ஸமஸ்யைகள் கொடுப்பதிலும், பிறர் கொடுக்கும் ஸமஸ்யைகளைப் பூரணம் செய்வதிலும் நிகரற்ற வல்லவர் என்பது விளங்க ” ஸமஸ்யா ஸஹ ஸ்ரீ” என்ற விருது தோன்றிய தென்பர். அங்ஙனே ஸ்வாமி அருளிச்செய்த ஸமஸ்யைகளோ பூரணங்களோ இப்போது ஒன்றும் கிடைக்காததனால் லுப்தங்களாயின வென்று சொல்லக் கேள்வி.-
ஸ்வாமி திருக்கிணறு கட்டினது
ஸ்வாமி ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென்று பிருது வஹித்து விளங்கி வந்ததில் பொறாமை கொண்ட ஒரு கொத்தன் ஸ்வாமி திருவயிந்திரபுரத்தில் எழுந் தருளி யிருக்கும் போது ஒரு நாள் அருகே வந்து, தேவரீர் எல்லாக் காரியங்களும் செய்ய வல்லமை பெற்றிருந்தா லன்றோ ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென்று விருதூதிப் புறப்படலாம்; நான் கிணறு கட்டுவேன்; அது கட்ட உமக்குத் தெரியாதல்லவோ? அப்படி யிருக்க இந்த விருதை நீர் எங்ஙனே வஹிக்கலாம்? என்று க்ஷேபிக்க, ஸ்வாமியும் புன் முறுவல் செய்து கொண்டே அவன் முன்னிலையிலேயே ஒரு கிணறு நிர்மாணஞ் செய்து அவனது செருக்கை யடக்கினர்.இந்தக் கிணறு நாளைக்கும் பக்தர்கள் சேவிக்கத் தக்க நிலைமை யிலுள்ளது என்று சொல்லி வருகிறார்கள். திருவயிந்திரபுரத்தில் காட்டியும் வருகிறார்கள்.
ஸ்வாமி பாம்பாட்டியை வென்றது
மற்றொரு கால் ஒரு பாம்பாட்டி, ஸ்வாமி ஸந்நிதானத்தில் விடை கொண்டு ‘நீர் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரராகில் கொடிய பாம்புகளை ஆணை யிட்டுக் கட்டுந் திறனும் உமக்குத் தெரிந்திருக்க வேண்டுமே; அந்த வல்லமையைக் காட்டுவீராகில் நீர் மெய்யே ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரரே’ என்று சொல்லிக் கொண்டே தான் ஜீவநார்த்தமாக வைத்திருந்த சில பாம்புகளைப் பெட்டியில் நின்றும் திறந்து விட, அவையும் சீறிக் கிளம்ப, அப்போது ஸ்வாமி, இனி நாம் வெறுமனிருக்க லாகாதென்று கருதி வைநதேய மந்த்ர ஜபத்துடனே தம்மைச் சுற்றிச் சில கோடுகள் போட, மிகக் கொடிய ஒரு ஸர்ப்பம் மாத்திரம் கோடு களைக் கடந்து ஸ்வாமியை நெருங்கினவளவிலே, ஸ்வாமி உடனே ஹ்ருதயத் தினால் பக்ஷி ராஜனை ஆஹ்வாநம் செய்தருள, அவனும் சடக்கென வந்து தோன்றி அந்த அரவங்களைக் கவ்விக் கொண்டு, அகலவே பாம்பாட்டி தான் பங்கப்பட்டது மல்லாமல் தனது ஜீவநார்த்தமாக வைத்திருந்த பாம்புகளும் தொலைந்ததனால் பரிதாபம் மிக்கு ஸ்வாமி திருவடிகளிலே விழுந்து வேண்டிக் கொள்ள, ஸ்வாமியும் திருவுள்ள மிரங்கி மீண்டும் அந்தப் பாம்புகள் அவனுக்குக் கிடைக்குமாறு அநுக்கிரஹஞ் செய்தருளினர்.
ஸ்வாமியின் கவிதாசாதுர்யம்
உலகில் கவனம் செய்வதில் மிகவும் குசலர்களான மஹா கவிகள் பலர் இருந்தாலும் ஸ்வாமியினுடைய கவித்வ ஸாமர்த்தியம் பரம விலக்ஷணமா யிருக் கும். 1. ஆசு கவி, 2. மதுர கவி, 3 சித்ர கவி, 4. விஸ்தார கவி என நான்கு வகையாக வகுக்கப்பட்டுள்ள கவிதையிலும் ஸ்வாமி நிகரற்றவர். “ஹடாதா “க்ருஷ்டாநாம் கதிபயபதாநாம் ரசயிதா” என்கிற கணக்கிலே மிகவும் சிரமப்பட்டுப் பதங்களைக் கூட்டிக் கவி பண்ணுகை யன்றிக்கே சொற்களானவை “என்னைக் கொள் என்னைக் கொள்” என்று அஹமஹமிகயா வந்து நெருங்குண்டு கங்கா ப்ரவாஹம் போலே பெருக்கெடுத்து ப்ரவஹிக்கும்படியான ஆற்றல் அநிதர ஸா தாரணமாக இங்குக் காணத் தக்கது. ஒரு க்ஷண மாத்திரத்திலே அநேக ஸ்லோக ராசிகளை அவதரிப்பிக்கும் சக்தியும் அந்த ஸ்லோகங்களெல்லாம் அர்த்த புஷ்டி யோடும் ரஸ புஷ்டியோடும் கூடி யிருக்கப் பெறுகையும், பத்ம பந்தம், சக்ர பந்தம், முரஜ பந்தம் என்றற் போலே பலவகைப் பட்ட பந்தங்களிலே யமைத்து ஸ்லோகங்களை அவதரிப்பிக்க ஸங்கல்பித்த மாத்திரத்திலே அவை அழகாக அமையும் அதிசயமும், அவை தாமும் எண்ணிலா திருக்கப் பெற்ற ஆச்சரியமும் நோக்குமிடத்து, கவிதாவதார பூமியாக ஸ்வாமியை அறுதி யிடலாம்-
ஸ்வாமியின் விநய ஸம்பத்தி
ஸ்வாமியின் பெருமைகளைக் கண்டு பொறத சிலர் தங்கள் பொறாமைக்குப் போக்குவீடாக, ஸ்வாமி திருமாளிகைக்குள்ளே எழுந்தருளி யிருக்கும் போது வெளி வாசற் பட்டையில் பழைய பாத ரக்ஷைகளைக் கட்டித் தொங்க விட்டு வைத்து வேடிக்கை பார்ப்பதற்காக மறைந்து நின்றார்களாம். ஸ்வாமியும் கார்ய வசாத் வெளியே எழுந்தருளும் போது அந்தப் பாத ரக்ஷைகள் தலையில் இடிக்க உடனே நிமிர்ந்து பார்த்து விஷயமறிந்து, “கர்மாவலம்பகா: கேசித் கேசித் ஜ்ஞாநாவலம்பகா;, வயம் து ஹரிதாஸாதாம் பாத ரக்ஷாவலம்பகா: என்று அநுஸந்தித்துக் கொண்டே யெழுந்தருள, இந்த அத்யவஸாய விசேஷத்தைக் கண்டு ஸ்வரூப சிக்ஷை பெற்ற பொறாமைக்காரர்கள் சடக்கெனத் திருவடிகளிலே விழுந்து பொறுப்பித்துக் கொண்டு போனார்கள் என்பதாக ஒரு ஐதிஹ்யம் சொல்லி வருகிறார்கள். கர்மாவலம்பகா: இத்யாதி ஸ்லோகத்தை ஸ்வாமி ஸாதித்திருப்பதுண்டு; அதற்குச் சார்பாக இந்த ஐதிஹ்யம் கல்பிதமா யிருக்கக்கூடும் என்று பல மஹான்கள் திருவுள்ளம் பற்றுகிறார்கள். இதைப் பற்றிக் கீழே பேசினோம்.
ஸ்ராத்த ஸம்ரக்ஷண விநோதம்
ஸ்வாமியினுடைய திருத் தகப்பனாருக்குத் திருவத்யயனம் ப்ராப்தமாக, வழக்கப்படி மூன்று ஸ்வாமிகளை முன்னமே நிமந்த்ரணம் செய்து வைக்க, அவர்களும் இசைந்திருந்து சில பொறாமை யாளர்களின் துர்ப் போதனைக்கு வசப்பட்டுத் தம்தம் க்ருஹங்களிலேயே போஜனம் செய்து விட்டு, ஸமயத்தில் சில வ்யாஜோக்திகளைச் சொல்லி யனுப்பி ஸ்ராத்தத்தைக் கெடுக்கப் பார்த்த வள
விலே ஸ்வாமியும் அந்த காலத்திலே வேறொருவரையும் நிமந்த்ரணம் செய்ய முடியாமல் முசித்திருந்து, பிறகு ஒருவாறு உள்ளம் தேறி ஸ்ரீஹயக்ரீவனையே ஆவாஹனம் செய்தருளி ஹோமம் முதலியவற்றையும் செய்து மூன்று இலைத் தளிகைகளைச் சேர்த்து ப்ரஸாத வ்யஞ்ஜநாதிகளைப் பரிமாறிப் பரிஷேசநாதிகளையும் பண்ணி வைத்துத் திருத் திரை சேர்த்து, திரைக்கு வெளியே தாம் நின்று கொண்டு, யதாஸுகம் ஜுஷத்வம்’ என்று ப்ரார்த்தித்து அபிஸ்ரவணம் ஓதிக் கொண்டிருக்க, ஸ்வாமியின் திருவுள்ளத் தூய்மைக்கு உகந்தருளின ஹயக்ரீவன் தாமே மூன்று இலைகளிலும் எழுந்தருளி யிருந்து அமுது செய்யும் ஓசை அடங்கின வுடனே திரையை யவிழ்த்து மேற் காரியங்களையும் யதாக்ரமமாக நடத்தி இஷ்ட பங்க்தி போஜனத்தில் அமர்ந் தருளினார். அப்போது ஸ்ராத்தத்தைக் கெடுத்து விட்தாக எண்ணி ஆனந்திக்க அவ்விடம் வந்து சேர்ந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்த பாதகிகள், ஸ்ரீ ஸ்வாமியின் திருமாளிகை வாசல் திண்ணையில் மஹாதேஜஸ்விகளாக மூன்று ஸ்வாமிகள் அமுது செய்த திருக் கோலத்துடனே ஸேவை ஸாதிக்கக் கண்டு மிகவும் அதிசயித்து ஸ்வாமி திருவடிகளிலே விழுந்து க்ஷாமணம் செய்து கொண்டு சென்றார்கள். [இவ் வைதிஹ் யத்தைப் பற்றிக் கீழே விரிவாக எழுதி யிருக்கிறோம்.]
ஸ்வாமியினுடைய விரக்தியின் வீறு
ஸ்வாமி உஞ்ச வ்ருத்தியினாலேயே (கூரத்தாழ்வான் போல்) தேஹ யாத்திரையை நடத்திக் கொண்டு வந்தாராதலால் அதை இழிவாக நினைத்த சிஷ்யர்கள் அந்த உஞ்சவ்ருத்தியை நிவர்த்திப்பிக்க வேணு மென்றெண்ணி ஒரு நாள் தண்டுலத்துடன் ஸுவர்ண த்ரவ்யங்களையும் சேர்த்து ஸமர்ப்பித்தார்கள். திருமாளிகைக்கு எழுந்தருளின பின் தேவிகள் அவற்றைக் காண்பிக்க ஸ்வாமி கடாஷித்து அதைக் காஷ்டலோஷ்ட நிர் விசேஷமாக எண்ணி வீதியிலே இறைத்து விட்டார் என்று சொல்லி வருகிறார்கள்-
ஹயக்ரீவ லீலா விசேஷம்
ஸ்வாமி ஒருகால் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு எழுந்தருளா நிற்கையில் வழியிடையே ஒருநாள் பகவதாராதனத்திற்கு ஸௌகரிய மில்லாமற் போக, அன்று வெறும் தீர்த்தத்தையே பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணித் தாமும் ஸ்வீகரித்து மேலே வழி நடந்து இரவில் ஒரு த்ரைவர்ணிகனுடைய மனை யருகில் விஸ்ரமித்திருக்க, அப்போது ஸ்ரீஹயக்ரீவன் நிஜ ரூபத்துடன் வெளியேறி அந்த த்ரைவர்ணிகனுடைய கொல்லையில் தானியங்களை யதேஷ்டமாக புஜித்துக் கொண்டிருக்க, அதனை யறிந்து சென்று அவன் தன்னாலான மட்டும் துரத்திப் பார்த்தும் முடியாமல் இது ஸ்வாமியினுடைய
குதிரையா யிருக்கு மென்று ஊஹித்து உடனே ஸ்வாமியைத் தட்டி யெழுப்பிக் குதிரையைப் பிடித்துக் கட்ட வேணுமென்று வேண்ட, ஸ்வாமியும் திடுக்கிட்டு இது வெள்ளைப் பரிமுகருடைய விளையாடல் போலுமென்று அத்யவஸித்து, பாலமுது வரவழைத்து நிவேதனம் செய்தருளினவாறே குதிரை நம்பிரான் அந்தர் ஹிதரானார். என்று சொல்லி வருகிறார்கள், பரம விரக்தாக்ரேஸரரான தேசிகன் குதிரையில் எழுந்தருளினதாக நினைப்பதற்கு ப்ரஸக்தியே யில்லாமை யினால் இது அதி வாதமான சரித்திரமா யிருக்கலாம். உண்மையானாலும் குறை யில்லை.
ஏகாதசி யைதிஹ்ய விசேஷம்
ஸ்வாமி ஏகாதசி நாளில் ஸ்ரீ ரங்கநாதனை மங்களாசாஸனம் செய்து நிற்கையில் பொறாமைக் காரர்களின் பிரேரணையால் அர்ச்சகர் ஸ்வாமி திருக் கையில் பொங்கல் ப்ரஸாதத்தைக் கொணர்ந்து கொடுக்க, ஸ்வாமியும் அதைத் தமது திருக் கைகளில் வாங்கி வைத்துக் கொண்டு பெரிய பெருமாளை நோக்கி ஸ்வாமிங்! அடியேனை இங்கனே சோதிக்கத் திருவுள்ளம் பற்றலாமோ? உபவாஸ தினமான இன்று இவ் வன்னத்தைப் பாவியேன் என் செய்வேன்? ஒலைப் புறத்து நியமனம் பெரிதோ? இப்போதைய நியமனம் பெரிதோ? நியமித்தருள வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய; ஸ்ரீ ரங்கநாதன் மற்றோர் அர்ச்சக முகேந பிள்ளாய்!-இது நமது ஆஜ்ஞை யன்று; ஏகாதசி யன்று ஒரு நாளும் அன்னம் ஸ்வீகரிக்கத் தக்கதன்றுகாண்’ என்று நியமிக்க, ஸ்வாமியின் ப்ரபாவாதிசயத்தைக் கண்டு அர்ச்சகாதிகள் திருவடி வணங்கி அபராத க்ஷாமணம் செய்து கொண்டார்கள் என்று ஒரு கதை சொல்லி வருகிறார்கள். இது சுவை யற்ற கதையே–
ஸ்வாமி திறத்தில் அஸஹ்யாபசாரம்
ஸ்வாமி நம்பெருமாள் ஸந்நிதியில் உபய வேதாந்த ப்ரவசனம் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்த காலத்தில் ஒரு நாள் திரு மாளிகை வாசல் திண்ணையில் விற்றிருந்து மிகப் பெரிய சாஸ்த்ர விசார மொன்றில் ஆழ்ந்திருக்கையில் கந்தாடை லக்ஷ்மணாசார்யர் ‘ என்கிற ஆசார்ய பீடஸ்தரொருவர் தம்முடைய சிஷ் யர்களுடன் அந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தாராம்; அதை தேசிகன் கணிசியாமல் எழுந்தருளி யிருந்ததற்காக அந்த சிஷ்யர்களிலொருவர் மிகச் சினந்து தேசிகனிடம் ஓடி வந்து நமது மஹாசார்யர் எழுந்தருளா நிற்க நீர் இங்ஙனே அவ மரியாகை காட்டி உட்கார்ந்திருப்பது என்ன பேதைமை ” என்று ஆரவாரித்து ஸ்வாமியின் திருவடிகளைப் பிடித்து இழுத்து விட்டுச் சென்றாராம். ஸ்வாமியும் திடுக்கிட்டெழுந்து இப்படி வீணாக பாகவதாபசாரம் தேர்ந்து விட்டதே! என்று சாலவும் திருவுள்ள முடைகுலைப்பட்டு ஏகாந்த வாஸத்திலே திருவுள்ளம் சென்று கோயிலை விட்டுப் புறப்பட்டு, ஸத்ய மங்கலத்திற் கெழுந்தருளி விட்டாராம். ” சிஷ்ய பாபம் குரோரபி” என்பது சாஸ்த்ர மாகையாலே அந்த சிஷ்யன் செய்த பாபம் அவனது குருவான லஷ்மணாசார்யர் செய்ததாகத் தீர்ந்து அவருடைய மேனியில் ஒரு வைவர்ணியம் உண்டாயிற்றாம். பல சிகித்ஸைகள் செய்தும் “பிணியுமொழிகின்ற தில்லை பெருகுமிது வல்லால்” என்றப் போலே அந்த வியாதி மேன்மேலும் அதிகரித்து வருகிறடியைக் கண்ட அவர் ‘இது தேசிகன் திருவடிகளில் பட்ட அபராதத்தின் பயனே ‘ என்று ஆப்த வசனங் களாலே அறுதியிட்டு ஸ பரிவாரராய் தேசிகனிடத்தேறச் சென்று பொறுமை வேண்டிச் சில காலம் ஸ்வாமி திருவடி வாரத்திலேயே வஸித்திருந்து நித்யம் ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரித்துப் போந்தாராம். அதன் பயனாக அவர் தீராத நோய் தீரப் பெற்றதுமன்றி ஒரு மகப் பேறும் உண்டாகப் பெற்றாராம். தீர்த்த மஹிமை யினாலேயே பிறந்த அந்த மகனுக்கு தீர்த்தப் பிள்ளை யென்றே பெயரிட்டாராம்-அந்தப் பிள்ளை தேசிசன் விஷயமாக ஒரு நூற்றந்தாதி பணித்திருப்பதாகவும்
சொல்லுகிறார்கள். பிறகு அந்த லக்ஷ்மணா சார்யருடைய ப்ரார்த்தனைக் கிணங்கி தேசிகன் திருவரங்கம் பெரிய கோயிலேற மீண்டெழுந் தருளினாராம். இதைப் பற்றியும் கீழே எழுதி யிருக்கிறோம். நிராதாரமான கதைகள் இவை.
அபீதி ஸ்தவமவதரித்த விசேஷம்
இங்ஙனம் கோயிலில் வாழ்ந்தருளும் காலத்தில் ஒரு நாள் துறுக்கர்கள் ஸஹஸா படையெடுத்து வருகையில் அப்போது கோயிலில் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும் ஸதுபாயமாகப் பெருமாளுக்குச் சேமக் காப்புச் செய்து பல திசைகளிலும் பாறியோட நேர்ந்தது. அப்போது ஸ்வாமி தேசிகனும் மேற்கே எழுந்தருளும்படி யாயிற்று. அப்போது கோயிலில் ஸ்ரீ ஸ்ருதப்ரகாஸிகா பட்டர் துருஷ் கயவார்களின் நலிவு பொறுக்க மாட்டாமல் உயிர் துறக்குமளவாக, ஏற்கெனவே தாமருளிச் செய்திருந்த ஸ்ருதப்ரகாசிகா ஸ்ரீகோசத்தை ஸ்வாமி திருக் கையிலே கொடுத்து “இதை ஸத் பாத்ர விநியோகம் செய்து போரீர் ” என்று நியமித்து, தம்முடைய இரண்டு குமாரர்களையும் ஒப்படைத்து திருநாட்டுக் கெழுந்தருளினார். அப்போது ஸத்ய மங்கலம் முதலான மேல் நாட்டு நகரங்களிலே வாழ்ந்து திருநாராயணபுரம் சென்று சேர்ந்த தேசிகன் திருவரங்கம் பெரிய கோயில் நிஷ்கண்டகமாக வேணு மென்றும்,பழையபடியே தாம் கோயிலிலே பரஸ்பர ஹிதைஷிகளான ஸதாசார்யர்களின் திருவடி நிழலிலே வாழப் பெற வேணுமென்றும் கொண்ட மநோ ரதங்களைப் பெய்து அபீதி ஸ்தவ மென்னும் அரிய பெரிய ஸ்தோத்ர மொன்றை யருளிச் செய்து சிஷ்யர்களுடனே நித்யாதுஸந்தானம் செய்து வந்தார்.
கோயிலிற் சேம வாழ்வு
அபிதி ஸ்தவா நுஸந்தானத்தின் பயனாக அடியார்களும் அரங்க நகரும் அவத்யம் நீங்கி அமரிக்கை யடைந்ததாகக் கேள்வி யுற்ற ஸ்வாமி தாமும் போரவு முகந்தருளி நம் பெருமாள் ஸர்நிதிக்கே மீண்டும் வந்து சேர்ந்தார்.-அப்போது கொப்பனார்யன் என்னும் பரம பாகவதோத்தமனான செஞ்சி சிற்றரச னொருவன் துருஷ்கர்களை யெல்லாம் வலி யொழித்து ஆபத்துக்களை அறவே யொழித்து நம் பெருமாளையும் யதாவத்தாகத் திருப் ப்ரதிஷ்டை செய் வித்து நித்யோத்ஸவா திகளை பெல்லாம் நிலைபெறுத்தி யிருந்த சிறப்புக்களைக் கடாக்ஷித்துத் திருவுள்ளம் மகிழ்ந்திருந்தார். வேள்வும் விழவும்
வீதியிலென்று மறாத வூர்களிலே தலையான அந்தத் தென்னரங்கத்திலே மார்கழித் திருநாளான திருவத்யயந மஹோத்ஸவம் ப்ராப்தமான மையத்திலே புறச் சமயிகள் திரண்டு வந்து “தமிழ்ப் பாஷையிலமைந்த பிரபந்தங்களை இங்கே ஓதுவதற்கும் அந்தப் பிரபந்தங்களைப் பகர்ந்த ஆழ்வார்களை இங்கே போற்றுவதற்கும் பிரமாணம் காட்டினால் அல்லது இத்திருநாள் செய்ய வொட்டோம்” என்று தடைசெய்துநிற்க, அப்போது ஸ்வாமி தேசிகன் “தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் ப்ரமாண உபந்யாஸ பூர்வகமாக அவர்களுடைய துர்வாதங்களை நிரஸித்தருளி ஒரு விபவமும் குன்றமே அவ் வுத்ஸவம் முன்னிலும் சீருற நடை பெறுமாறு சேமம் செய்தருளினரென்று எழுதி யுள்ளார்கள். இதற்கு ஆதார மில்லை. ஆனாலும் இதை நாம் மறுக்கவேண்டா. ப்ராப்த கைங்கர்யமே இது.
த்வைதாத்வைத மாத்யஸ்த்யம்
இங்கனம் ஸ்வாமி கோயிலில் சீரும் சிறப்பும் பொலிய வாழ்ந்தருளா நிற் குங் காலத்திலே, அத்வைத மதப்பிரவர்த்தகரா யிருந்த வித்யாரண்பருக்கும் த்வைத மத நிர்வாஹகரா யிருந்த அஷோப்ய முனிவர்க்கும் வேதாத்த வாக்கி யார்த்தம் நடந்து வருகையில் அதில் ஐயாபஜயம் நிஷ்கர்ஷிக்கத் தகுதியான மத்யஸ்தர் நேர்படாமல் அவர்கள் தங்களுடைய வாத விவாதங்களை யெழுதி ஸ்வாமி தேசிகனிடம் அனுப்ப, ஸ்வாமி அவற்றைப் பராமர்சித்து அஷோப்ப முநி பக்ஷத்தில் வெற்றியைத் திருவுள்ளம் பற்றி அஸிநா தத்த்வ மஸிதா பரஜீவ ப்ரபேதிநா, வித்யாரண்ய மஹாரண்யம் அக்ஷோப்ய முதிரச்சிநந் – என்கிற ஸ்லேஷ ஸம்வலி தமான காரிகா ரத்னத்தை அநுக்ரஹித்து அனுப்பி யருளினார்.
ஸங்கல்ப ஸூர்யோதயமவதரித்தல்.
க்ருஷ்ண மிச்சன் என்கிற ஒரு அத்வைத வித்வான் இயற்றி யிருந்த ப்ரபோத சந்த்ரோதய மென்கிற வொரு நாடக க்ரந்தத்தை அவனுடைய அநுபந்திகள் ஸ்ரீரங்கத்திலே கொண்டு வந்து ப்ரசாரம் செய்து கொக்கரித்துக் கொண்டிருந்த வளவில் அதை ஸ்வாமி தேசிகன் திருச் செவி சாத்தி ‘இதற்கெதிராக ஸங்கல்ப ஸூர்யோதய நாடகம் காணலாகாதோ” என்று புன்முறுவலோடே பணித்தாராம்; அப்படியும் ஒரு நாடக முண்டோ?’ என்று ப்ரஸ்தாவமாசு, “நாளை யுதயத்திலே காட்டுகிறேன் காணிர்” என்று ஸாதித்து உடனே அந்த திவ்ய நாடகத்தைத் திருவாய் மலர்ந்தருளித் தோன்றுமித்தருளினார்.அவ் வதிசயத்தைக் கண்டு அனைவரும் அகங் குழைந்தார்கள்.
பாதுகா ஸஹஸ்ர ப்ராதுர்ப்பாவம்,
ஸ்வாமி பணித்த ஸ்தோத்கங்களுக்குள் அற்புதமானது பாதுகா ஸஹஸ்ரம். இது, அழகிய மணவாளனுடைய திருவடி நிலையை ஆயிரம் ஸ்லோகங்களால் ஆச்சரியமாக வருணிக்கும் ஸ்தோத்ரம். இதனை யருளிச் செய்ததற்குக் காரணம் இன்ன தென்பதை ‘ஆசாரிய சம்பூ’ கூறி யுள்ளது; ஸ்வாமியின் பெருமையைப் பொறாதவனும், நாமே ஆசு கவி’ என்று செருக்குற்றவனுமான ஒரு இதர ஸமயக் கவியோடு ஸ்பர்த்தை யுண்டாகி அதனால் ஸ்வாமி இந்த க்ரந்தம் அருளிச் செய்ய லாயிற் றென்கிறார் அந்த சம்பூகாரர். வைபவ ப்ரகாசிகா என்கிற க்ரந்தம் கல்பித்தமே யாயினும் அதில் (ஸ்லோ, 114.) “ஸம்ப்ராத்திதஸ் ஸம்ஸதி ஸூரி வர்யை: பாதாவநீம் ரங்க பதேர் திசாயாம்” என்கிற ஸ்லோகத்தினால், திரு வோலக்கத்தில் சில மஹான்கள் ஸ்லாமியைப் பிரார்த்திக்க அதனால் இந்த ஸ்தோத்ர மருளிச் செய்ததாகச் சொல்லிற்று–
ஸ்வாமி சில்பியை வென்ற சிறப்பு.
ஒரு நாள் சில பொறாமை யாளர்களால் தூண்டப்பட்ட சில்பி யொருவன் ஸ்லாமியின் ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர பிருதை ஆக்ஷேபித்து சில்பத்திலும் ஸ்வாமி யினுடைய அப்ரதிம சாதுர்யத்தை உலகமறிய ப்ரகாசிப்பிக்க வேண்டிக் கொக்கரித்து நிற்க, அப்போது ஸ்வாமியும் தம்முடைய சில்ப சாஸ்த்ர பாண்டி யத்தை நன்கு புலப்படுத்தித் தம்மைப் போல ஒரு விக்ரஹம் ஏறி யருளப் பண்ணிக் காட்ட, ஸுபரீக்ஷிதமான அதன் பொருத்தத்தைக் கண்டு வியந்த அந்த சில்பி தோற்றேனென்று திருவடிகளிலே விழுந்து க்ஷாமணம் வேண்டிச் சென்றன். அந்த திவ்ய மங்கள் விக்ரஹத்தை ஸ்வாமி தாம் ஆர்த்தழுவி யருளித் திருக் குமாரர் பாடே கொடுத்தருளினாரென்று சொல்லிப் போருவர்கள்.
திருவவதார ஸமாப்தி
இங்ஙனேயான அதி மாநுஷ திவ்யப் பிரபாவங்களைப் பன்னி யுரைக்குங்கால்
பாரதமாம். கடளவாய திசை யெட்டினுள்ளும் மிடை தந்த கலி யிருளை உபதேசங்களாலும் அனுட்டானங்களாலும் பல பல திவ்ய க்ரந்த ரசநைகளாலும் போக்கி யருளி பொலிக பொலிக் பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் கலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கியாதொன் றுமில்லை” என்ற ஆழ்வாரருளிச் செயலை அர்த்தவத் தாக்கி யருளினர். எப்படிப்பட்ட அதிசயித ப்ரபாவர்களையும் எம்பெருமான் ஒரு கால் தன்னடிச் சோதிக்கு வரவழைத்துக் கொள்வதென்பது ஒரு நியமமாகக் காணுதலால் ஸ்வாமியையும் சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதி யேற வரவழைத்துக் கொண்டு ஒழிவில் கால மெல்லாம் வழு விலா வடிமை கொண்டருளத் திருவுள்ளம் பற்றின வள விலே, ஸ்வாமியும் சவ்ம்ய ஸம்வத்ஸரத்துக் கார்த்திகைப் பெளர்ணமி நன்னாளில் இருள் தருமா ஞாலத்தை விட்டகன்று தெளி விசும்பு திரு நாடேற வெழுந்தருளினார்.
வேதாந்த தேசிக வைபவத்தில் சரித்திரபரமான முதற்பகுதி முற்றிற்று.
–
வேதாந்த தேசிக வைபவம் – அநுபந்தம் (ஆராய்ச்சிப்பகுதி)-பிறரெழுதியவற்றைப் பராமர்சித்தல்—
வேதாந்தாசார்ய விஜயமென்கிற ஆசார்ய சம்புவில் பேசப்பட்டுள்ள தேசிக சரித்திரத்தை கீழே) ஒன்று விடாமல் நாம் எடுத்துக் காட்டி யுள்ளோம். அந்த நூல் ஒன்றே பிராமாணிகமும் புராதனமுமாகையாலே அதில் சொல்லப்படாத சரித்திரங்களை யாரும் எழுதத் தகாது. சில காரண விசேஷங்களினால் தேசிகனோடு உறவைப் புதிதாக ஏறிட்டுக் கொண்டவர்கள் அந்த ஆசார்ய சம்பூ க்ரந்தத்தை ஸர்வாத்மநா அலக்ஷியஞ் செய்து, அதில் பேசப்பட்ட சரித்திரங்களுக்கு முரணானவற்றையும், அதில் அடியோடு ப்ரஸ்தாவிக்கப் படாதவற்றையும் ஸ்வேச்சையாகச் சேர்த்து தேசிக சரிந்திரமென்றும் தேசிக வை வைமென்றும் சில கற்பனைச் சுவடிகளை வெளியிட்டுள்ளார்கள். கீழே பலகாலும் ப்ரஸ்தாவிக்கப்பட்ட அட்வகேட்டானவர் அன்னவர்களில் ஒருவர், அல்லது தலைவர். அவர் தேசிகனவதரிப்பதற்குக் காரணமெழுதப் புகுந்து “இதர ஆசாரியர்கள் பிராட்டி விஷயமாக அபார்த்தங்களை யெழுதி அவளுடைய பெருமைகளைக் குலைத்து விட்டார்கள்” என்றும் “தேசிகன் அவதரித்து அந்த அபார்த்தங்களை யெல்லாம் களைந்து பிராட்டியின் பெருமைகளை ஆச்சரியமாக ஸ்தாபித்து விட்டார்” என்றும் எழுதி வைத்துள்ளார். எழுதி வைத்தது மன்றி ஸ்வ கோஷ்டிகளில் பெரும்பான்மை யாகப் பேசும் பேச்சும் இதுவேயாம். உண்மையில் பிராட்டியின் பெருமை
எத்தகைத்து? அதை தேசிகன் எவ்வண்ணமாக நிஷ்கர்ஷித்துள்ளார்? இதில் இதர ஆசாரியர்களின் திருவுள்ளத்திற்கும் தேசிகனுடைய திருவுள்ளத்திற்கும் எவ்வகையான வாசி யுள்ளது? என்றிவை முதலான விஷயங்களைச் சிறிதும் அறியகில்லாமலும் ஆராயகில்லாமலும் தாம் மருண்டதோடு நில்லாமல் பிறரையும் மருளச் செய்திருப்பது மிகமிக வருந்தத் தக்கது. தேசிகனுடைய கொள்கைகளைத் தெரிந்து கொள்ள சிரமப்பட வேண்டியதுண்டோ? அவருடைய திவ்ய ஸுக்திகள் லோபித்து விட வில்லையே. பிராட்டி விஷபத்தில் நூல் வரம்பை மீறி தேசிகன் ஓரெழுத்து மெழுதிற்றில்லையே. அவர் தாம் ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்திருப்பவை இங்கு ஸாரமாக நிரூபிக்கப் படுகின்றன–
ஜகத் காரணத்வம் மோஷ ப்ரதத்வம் விபுத்வம் ஆகிய இவற்றைப் பிராட்டி யிடத்தில் தனிப்பட நிரூபிக்கும் விஷயத்தில் தேசிகன் சிறிதும் இறங்க வில்லை-இதை க்ரமேண எளிதாக நெஞ்சில் பதிய வைக்கிறோம் யாதவாப்யுதய மென்னும் மஹாகாவ்யம் ஸ்வாமி தேசிகன் பணித்தது; இதில் பன்னிரண்டாவது ஸர்க்கம் ருக்மிணிப் பிராட்டி விஷயமானது. அதில் 1, 2. ஸ் லோகங்களினால் ஸாக்ஷாத்ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ருக்மிணிப்பிராட்டியாகத் திருவவதரித்ததாய்ச் சொல்லப்பட்டது.
உடனே மூன்றாவது ஸ்லோகம் வருமாறு
“சிகண்டகம் நிஷ்ப்ரதிமம் ச்ருதீநாம் ச்முங்கார லீலோபமவி ச்வக்ருத்யம்,
அதீயதே தந்மிதுநம் ஸ்வபாவாத் அந்யோந்ய ஜீவாது மநந்ய போக்யம்-
என்பதாக வுள்ளது. இதற்கு மேலுள்ள ஸ்லோகங்களெல்லாம் ருக்மிணிப் பிராட்டியை மாத்திரமே நோக்கியவை. முதலிரண்டு ஸ்லோகங்களும் அப்படிப்பட்டவை. இடையில் மூன்றாவதான ஸ்லோக மொன்று மாத்திரம் மிதுநம் என்கிற நிர்தேசத்தை யுட்கொண்டு தோன்றி யுள்ளது. இந்த ஸ்லோகத்தில், ச்ருங்கார லீலோபம விச்வக்ருத்யம்* என்பதற்கு வியாக்கியான மென்ன வென்றால்,
“ ச்ருங்கார லீலாவத் அநாயாஸ ஸரத்ய-விநோத ரூப ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி க்ருத்யம்” என்பதேயாம். இப்படிப்பட்ட க்ருத்யத்தைப் பிராட்டியினிடத்தில் தனியாக இட்டுப் பேசுவதற்குத் திருவுள்ள மில்லாமையினாலேயே தேசிகன் மிதுநம் என்கிற பதத்தை ப்ரயோகித்து இடையிலே இந்த வொரு ஸ்லோகத்தை விலக்ஷணமாக அமைத்தார். முன்னும் பின்னும் பிராட்டியை மாத்திரமே குறித்து ஸ்லோகங்களை யருளிச் செய்து போருகிறவர் இவ்வொரு ஸ்லோகத்தில் மிதுதம் என்று இருவரையும் சேர்த்தருளிச் செய்ததை உற்று நோக்கினால் ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதிகளில் பிராட்டிக்குத் தனிப்பட அந்வய மில்லையென்று தேசிகன் நிச்சயித்திருப்பது திடமாகும்.
ஸ்ரீஸ்துதியிலும், யத் ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹிந்யமீஷாம் ஜந்ம ஸ்தேம ப்ரலய ரசநா ஜங்கமாஜங்க மாதரம்; தத் கல்யாணம் கிமபி யமிநரம் ஏக லக்ஷ்யம்
ஸமாதௌ பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவ பாதலாக்ஷாரஸாங்கம்* என்கிற இவ்வொரு
ஸ்லோகமே போதும் பிராட்டி விஷயத்தில் தேசிகன் திருவுள்ளத்தை உள்ளபடி
யுணர. பிராட்டியை ஸ்துதிக்க இ ந்தவர் பிராட்டியினிடத்துள்ளதையன்றோ பேச வேண்டும். ஜங்கமா ஜங்கமாநாம் ஐந்மஸ்தேமப்ரலயரசதாம் இந்திரே! த்வம் கரோஷிசு என்று ஸ்லோக மியற்ற அருமையில்லைபே. இப்படிச் சொன்னாலன்றோ பிராட்டியின் ஸ்துதியாகும். உண்மையில் இவளிடத்திலில்லாததை இருப்பதாக வைத்து எங்கனே கவிபண்ணுவர்? கூரத்தாழ்வான் முதலான பூர்வாசார்யர்கள் ஆபவர்க்கிகபதம் ஸர்வஞ்ச குர்வத்ஹரி:, யஸ்யா வீஷ்ய முகம் ததிங்கிதபராநீதோ விதத்தே * இத்யாதியாக அருளிச் செய்ததைப் பின்பற்றியேதான் தேசிகனுமருளிச் செய்கிறரென்பது ஸ்பஷ்டம்,
ஸ்ரீமத்ாஹஸ்யத்ரயஸாரத்திலும் பரிபூர்ணப்ரஹ்மாநுபவாதிகாரத்தில் “ஈச் வரனுக்கு ச்சத்ரசாமாரதிகளைப்போலே லக்ஷணமாகச் சொன்ன ஜகத் காரணத்வ- மோக்ஷப்ரதத்வ-ஸர்வாதாரத்வ-ஸர்வரியந்த்ருத்வ-ஸர்வ சேஷித்வ-ஸர்வசரீரித்வ -ஸர்வசப்தவாசபத்வ ஸர்வ வேதவேத்யத்வ – ஸர்வலோகசரண்யத்வ-ஸர்வபலப்ர தத்வ-லக்ஷ்மீஸஹாயத்வாதிகள் ப்ரதி நியதங்கள்” என்றருளிச் செய்யப்பட்டது. இந்த மஹா வாக்கியத்தில் ஜககாரணத்வந்தை முந்துறச் சொல்லி முடிவில் லக்ஷ்மீ ஸஹாயத்வத்தைச் சொல்லி யிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீ ஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதமோ அப்படியே ஜகத்காரணத்வமும் அவ ளுக்கு அஸம்பாவித மென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்து மென்றும் காட்டப்பட்டதாயிற்று. இப்படி யருளிச் செய்ததும் ஸ்ரீ பாஷ்யத்தில் விந்தவிவித பூதவ்ராதரக்ஷைக க்ஷே என்றவிடத்து ச்ருப்ரகாசிகையில் “ஜகத்கார ணத்வ மோக்ஷப்ரதத்வே ஹீ ராஜ் : ச்சத்ரசாமரவத் ப்ரஹ்மண: அஸாதாரண சிஹ்தம்.” என்றருளிச் செய்திருப்பதைப் பின்பற்றியதே. முநி வாஹ போகத்தில் ஆதி யென்றவிடத்தும் இப்படியே தானுள்ளது. யாயஸித்தாஞ் ஜீவபரிச்சேதத் திலுமிப்படியே தான்.
இவ்விஷயத்தில் மிகத் தெளிந்த ஞானமுடையவர் தேசிகன். சில்லரை ரஹஸ்.பங்களென்றும் சில ரஹஸ்யங்கள் தேசிகன்ஸாதித்திருக்கிறார். அவற்றை ஸேவித்தால் இன்னமும் நல்ல தெளிவு உண்டாகும். ரஹஸ்யரத்நாவளி யென்று ஒரு சிறு ரஹஸ்யம். அதில்
“ ஸ்ரீமானை நாராயணனெருவனுமே ஸர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்…… ஸர்வ ஸ்வாமிதியாய் ஸர்வேச்வரனுக்கு சேஷமாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத் தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத் தலையில் வால்லப்யாதி சயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இஜ் ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள் ” என்றருளிச்செய்து, இதை ரஹஸ்பரத்காவளிஹிருதயமென்கிற அடுத்த ரஹஸ்யத் தில் தாமே விவரித்தருளினார் உண்மையில் விவரணாபேசைபே யில்லாத வாக்ய மன்றோவிது. இப்படி நிஸ்ஸந்தேஹமாகவருளிச் செய்த விடங்கள் ஒன்றிரண் டல்ல: பலபல விடங்களுண்டு, சதுச்ச்லோகியில் மூன்றாவது ச்லோகத்தின் பாஷ்யத்தில் ” மோக் ஷப்ரதே பகவதி முமுஷுணாம் கடகதயா ஏஷா திஷ்ட தி ஸர்வ ஸம்மதம்” என்றருளிச் செய்ததொன்று போதுமே + எம்பெருமான் தான் மோக்ஷ மளிப்பவன்: அதனைப் பெறுவிப்பவளாகமாத்திரம் பிராட்டி இரா நின்றாள் “என்பது இந்த ஸம்ஸ்கிருத ஸ்ரீ ஸூக்தியின் கருந்து. அதற்கு மேலுள்ள ஸ்ரீ ஸூக்திகளும் பிராட்டிக்கு உபாயத்வமில்லையென்பதையே நிலைநாட்டுவன.
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் பிராட்டிக்கு உப லக்ஷணத்வமா விசேஷணத்வமா வென்று ஒரு விவாதத்தைக் கிளப்பிக் கொண்டு உபலக்ஷணத்துவமென்று சிலர் சொல்லுவதாக வைத்து, அதைக் கண்டித்து விசேஷணத்வமே யுக்த மென்று ஸ்தாபிக்கப்படுகிறது ரஹஸ்யத்ரயஸாரத்தில்-இது நம்முடைய பூர்வாசார்யர் களின் திருவுள்ளத்தைக் கண்டிப்பதென்று நவீனர்கள் மருண்டிருப்ப துண்டு. இது மிகத் தவறு. இங்கு பிராட்டிக்கு விசேஷணத்வமில்லை யென்று ஒரு ஆசாரியரும் உரைத்ததில்லை; முமுஷுப்படியில் த்வயப் பிரகரணத்தில் ” இப்போது இ வளைச் சொல்லுகிறது புருஷகாரமாக” என்ற குரணையின் வியாக்யானத்திலே மணவாள மாமுனிகள்-” (புருஷகாரமாக) என்கையாலே உபாய வஸ்து விசேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு முபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பக்ஷம் நிரஸ்தம்” என்றருளிச் செய்திருக்குமிடத்து விசேஷணத்வத்தைக் கண்டோக்தியாகவே யருளிச் செய்திருப்பது காண்க. இங்கு உபலக்ஷணத்வம் கொண்டாலும் விசேஷணத்துவம் கொண்டாலும் வாசி சிறிது மில்லை யென்பதை சாஸ்த்ரஜ்ஞர்கள் உணர்வார்கள் பிராட்டிக்குப் புருஷகாரத்வ முண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்தமுமுண்டு என்று வாய் திறக்க வழியே கிடையாது. உபாயத்வமாவது-தானே கொடுக்க சக்தி யுடைத்தாகை. அஃதிருக்குமாகில் புருஷகார க்ருத்யத்தில் நின்று துவள வேண்டிய ப்ரஸக்தியே கிடையாதாகையால் நவீனர்களின் உத்வேல ப்ரஸங்கமெல்லாம் உதறித் தள்ளப்பட்டன.
அட்வகேட்டின் துர்வாதங்களைக் கண்டிக்கும் முக்கியமான-சில ஆராய்ச்சிகள் -தேசிகனுடைய காலத்திலாவது, அவர்க்குப் பின் நூறு இரு நூறு வருஷங்களுக்கு உட்பட்ட காலத்திலாவது ஆசாரியார்களுக்குள் வைஷம்யமோ ஸம்ப்ரதாய வேற்றுமையோ ஏற்பட்டிருந்தது கிடையாது. சில ஆசாரியர்களுக்குச் சில விஷயங்களில் அபிப்ராய பேதம் என்பது மாத்திரமுண்டு, ஸாமாந ஸம்ப்ரதாயஸ்தர்களுக்குள்ளும் உபாகர்ம விசாரம், ஜயந்தி விசாரம், க்ருத்திகா தீப விசாரம் போன்ற சில விஷயங்களில் அபிப்ராய அநுஷ்டாந பேதங்களிருந்து வருவதை இக் காலத்திலும் எங்கும் கண்டு வருகிறோம். எம்பெருமானார் எழுந் தருளி யிருந்த காலத்திலேயே அவர் திருவடிகளில் ஸாக்ஷாத்தாக ஆஸ்ரயித்திருந்தவர் களுக்குள்ளேயே சில அபிப்ராய பேதங்கள் தோன்றியதாகவும் ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. இதை தேசிகனும் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் “இத்தமர்த்தர விசேஷேபி யோ ஜநாபேத மாத்ரத:, ப்ராசாம்விவாதஸ் ஸம்வ்ருத்தோ பாஷ்யகாரை ரவாரித:” என்ற காரிகையினால் காட்டி யுள்ளார்.
ஸோமாசியாண்டானென்பவர் எம்பெருமானார் திருவடியைப் பணிந்தவரா யிருக்கச் செய்தேயும் ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் கிடாம்பியாச்சான் முதலான ஆசாரியர்களோடு ஸர்வாத்மநா ஸம கண்டராயிராமல் சில அபிப்ராய பேதங்களைக் கொண்டிருந்தாரென்பது ஸ்பஷ்டமாகக் காண்கிறது. சாரீரக மீமாம் ஸையில் சதுஸ்ஸுத்ரி சாஸ்த்ராரம்ப ஸமர்த்தன மன்று, முதல் ஸுத்ரம் மாத்திர மேயாம். ப்ரபத்தி ஸர்வாதிகாரமன்று, பக்தி யோகம் போலே இதுவும் அதிக் ருதாதிகாரமே -என்றிப்படிப்பட்ட அபிப்ராய பேதங்கள் எம்பெருமானார் காலத்திலேயே நம் தர்சனத்தில் முளைத்து வளர்ந்து வந்திருக்கின்றனவன்றோ, இந்த ரீதியில் தேசிகனுக்கும் சில அபிப்ராய பேதங்கள் இருந்தனவென்று கொள்ளலாம். அதனால் ஸம்ப்ரதாய பேதமென்று வாய் திறக்க அவகாசமே கிடையாது. அப்படி தேசிகன் கொண்டிருந்த சிற் சில அபிப்ராய பேதங்களும் கடை வரையில் நிலைத் திருந்தன வென்று சொல்வதற்குமில்லை. நிலைத்தே யிருந்தனவென்று கொண்டா லும் குறை யொன்றுமில்லை. நம்பிள்ளை பரம்பரையி லந்வயித்திருந்த வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர்க்கும் சில அபிப்ராய பேதங்களிருந்தன வென்பது அபலபிக்க முடியாமலிருக்கிறதன்றோ. அதைக் கொண்டு ஸம்ப்ரதாய பேதம் சொல்லுவாரில்லையே-இக் காலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குள் இரு பிளவு ஏற்பட்டு ஸம்ப்ரதாய பேதம் கோஷ்டீபேதம் புண்ட்ரபேதம் முதலான பல பேதங்கள் காண நிற்பது போல் தேசிகன் காலத்தில் ஒரு பேதமுமிருந்ததில்லை. இருந்த தென்றே சிலர் வாதித்தாலும் அதைமறுப்போமல்லோம். அந்த பேதங்களில் தேசிகன் கலந்து கொண்டவரல்லர். எம்பெருமானாருடைய சிஷ்ய பரம்பரைகளில் அப்போது. விளங்கி வந்த ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களோடும் ஆசார்யர்களோடும் ஓரு நீராகக் கலந்து பரிமாறினரே யொழிய கைவல்யா நுபவம் போலே வேற்றுமைப் பட்டிருந்தாரல்லர், வேறொரு கோஷ்டியில் சேர்ந்தாரென்னில் இவர் ஏகாகி யாய்த் தனிமைப் பட்டிருந்தாரென்ன வேணுமே யொழிய, வேறொரு கோஷ்டி யென்பதற்கு வேறு நபர் ஒருவரும் கிடையாதென்பது திண்ணம். திவ்ய ப்ரபந்தங்களை நன்கு கற்றுணர்ந்து மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஒரு நீராக கோஷ்டியில் கலந்து ஸேவிப்பது முதலானவற்றில் ஒத்துழைத்திருந்தாரே யல்லது பிறிகதிர்ப் பட்டிருந்தாரல்லர். அக் காலத்தில் மற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவரும் எந்த ஸந்நி வேசமாகத் திருமண் காபபு அணிந்து கொண்டிருந்தார்களோ அந்த ஸந்நிவேச மல்லது வேறொரு ஸந்நிவேசத்தை நெஞ்சாலும் நினைத்த வரல்லர், இவ் விஷயங் களை நாம் தீர விமர்சித்து அப்ரகம்பயமாகத் தெரிவிக்கிறோ மாதலால் இதில் விவாதப்படுவது விபலமேயாகும்.
சிலர் சொல்வது யாதெனில்; தேசிகனிடத்தில் திருக் குமாரரும் ப்ரஹ்ம தந்த்ரஸ்வதந்த்ரஸ்வாமியுந் தவிர வேறொருவரும் ஆஸ்ரயித்ததாகத் தெரியாமை யால் மற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் அஸூயாதிகளாலே தேசிகனை யொதுக்கி வைத்து அணுகாமலே யிருந்து தூஷித்துக் கொண்டுமிருந்தார்களென்று தெரிகிறது; ஹந்த ஹந்த! ராம க்ருஷ்ண தூஷணாபிதாயிநாம் கிம் நு சித்ர மத்ர சைத்ய ராவணா ஸாரிணாம் ‘ இத்யாதி ஸ்லோகங்களிலுைம் இது ஸ்பஷ்டமாகிறது- என்று. இது ஸாத்விகர்கள் செவி யேற்கத் தக்கதே யன்று. ஸங்கல்ப ஸுர்யோதயத்தில் “த்ரிம்சத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்ய:” என்று முப்பது தடவை தாம் ஸ்ரீபாஷ்ய ப்ரவசனம் செய்ததாக அருளிச் செய்திருக்கிறார். திருக் குமாரரும் மற் றொருவருமான இருவர்க்கேயா முப்பது விசை ப்ரவசனம் செய்திருப்பர்: அக் காலத்தில் ஜிஜ்ஞாஸுக்களா யிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும் தேசிகன் திரு வடிகளில் ஆஸ்ரயித்து ஸ்வரூப க்ரந்தங்கள் கேட்டவர்களே.ஆக, தேசிகன் விபவ காலத்தில் ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களோடும் ஒத்தும் வாழ்ந்து ஸகலரோடும் ஒரு நீராகக் கலந்து பரிமாறி வந்தவர் என்பதில் ஒருவர்க்கும் ஒரு ஸந்தேஹமும் வேண்டா –வேதங்கள் வேதாந்தங்கள் ஸ்மிருதிகள் பாஞ்ச ராத்ரங்கள் இதிஹாஸ புராணங்கள் திவ்ய ப்ரபந்தங்கள் இதர சாஸ்த்ரங்கள் ஆகிய எல்லாவற்றிலும் நிகரற்ற பாண்டித்யம் பெற்றிருந்த இப் பேராசிரியர் அக் காலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுள் தலைமையான ஸ்தானம் பெற்றுத் திகழ்ந்தார். பித்ரு ஸ்ராத் தத்தில் நிமந்ரணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்து ஸமயத்தில் வஞ்சித்து விட்டார்க ளென்றும், திரு முடியில் படும்படி திரு மாளிகை வாசலில் பாத ரக்ஷையைக் கட்டி வைத்தார்களென்றும்…….இப்படியாகச் சொல்லி வருகிற பொய்யான ஐதிஹ்யங் களை நம்பி ஸ்வாமி பக்கலில் குறை கருத வேண்டா. தம் மாதா பிதாக்களின் திருவத்யயனத்திற்கு பரமாப்தர்கள் பரம பந்துக்கள் அந்தரங்க சிஷ்யர்கள் என்னும் படியானவர்களில் சிலரை நிமந்த்ரணத்திற்கு ப்ரார்த்தித்திருப்பரே யல்லது வழிப் போக்கர்களைச் சொல்லி யிருக்க மாட்டாரே. அவர்கள் வாக்குத் தவறி ஸமயத்தில் வஞ்சித்து விட்டார்களென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ? இவை யெல்லாம் பிறரை தூஷிப்பதற்காக இடுகிற அவதாரிகையே யொழிய வேறில்லை. ஸ்வாமிக்கு விசேஷமான பெருமை ஏற்பட வேணு மென்று கருதி இங்ஙனே கற்பனை செய்யப்படுகிற பொய்க் கதைகளால் பெருமைக்கு மாறான சிறுமையே ஏற்படும். பலர் இப்படிப்பட்ட ஐதிஹ்யங்களைப் பலகால் சொல்லியும் கேட்டும் பழகிவிட்ட படியால் “துர்வாஸநாத்ரடிம :” என்று ஆழ்வான் ஸாதிக்கிற ரீதியில் இந்தப் பொய்க் கதைகளில் திட நம்பிக்கை யுண்டாகி, மெய்யுரைகளை எவ்வளவு கேட்டாலும் அதைத் திரஸ்கரித்துத் தங்களுடைய மூட நம்பிக்கையையே மேம்படக் கொள்ளும் ஜனங்களிடையே இத்தகைய தத்வ வாதங்கள் பயன்படா வெனினும் விசாலமான நில வுலகத்தில் எங்கேனும் என்றேனும் பயன்பட்டே தீரும். இக் காலத்திலேயே பலரிடத்திலும் பயன்பட்டும் வருகிறது.
தேசிகன் நம்பிள்ளையை நேராக ஸேவிக்கப் பெற்றவரல்லர்; முன்னமே அவர் திருநாட்டுக் கெழுந்தருளி விட்டபடியாலே. ஆனாலும் நம்பிள்ளை திருவாக்கினின்று பெருகின மஹார்த்த தாரைகள் அவருடைய சிஷ்ய ப்ரசிஷ்யர்களின் வியாக்கியான கிரந்தங்களிலே தேங்கி யிருந்த படியாலே அவற்றை ஆராவமுதமாக அநுபவித்துப் பேரின்பமடைந்த பேராசிரியர் தேசிகன். நம்பிள்ளை பக்கலில் நேராகக் கேட்டுப் பட்டோலை கொண்ட வர்கள் பெரிய வாச்சான் பிள்ளையும் வடக்குத் திருவீதிப் பிள்ளையுமான இருவர். இவர்களுள் வடக்குத் திருவீதிப் பிள்ளை யிட்டருளின வியாக்கியானங்கள் தேசிகனுக்குக் கிடைக்க ப்ரஸக்தி யில்லாமலிருந்தது. பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களத்தனையும் தேசிகன் காலத்தில் விசேஷ ப்ரசாரமடைந்திருந்த படியால் அவற்றை ‘அமுதிலுமாற்றவினிது என்கிற ப்ரதிபத்தியுடன் பருகிக் களித்தவர்களில் தலைவராவர் தேசிகன். இதை நாம் பல புத்தகங்களில் பலபல நிதர்சனங்களைக் காட்டி நிரூபித்திருக்கின்றோம்- ஈண்டும் சிறிது நிரூபணம் காண்மின்.
திருவாய் மொழியில் பத்தாம் பத்தில் முதல் திருவாய்மொழி தாள தாமரை யென்பது. இதில் திருமோகூரெம்பெருமானுடைய அனுபவம் நிகழ்கின்றது. இத் திருவாய் மொழிக்கு அவதாரிகையிட்டருளின திருக்குருகைப் பிரான் பிள்ளான் ஆறாயிரப்படியில் திருக் கண்ணபுரத்தி லெம்பெருமானை மநுபவித்து இப்போது திருமோகூரில் எம்பெருமானை யநுபவிக்கிறார்” என்று இவ்வளவே யருளிச் செய்தார் மேற் பாசுரங்களிலும் ஸாதாரணமாகப் பாசுரப் பொருளே பணித்துள்ளார். மற்ற ஆசாரியர்களெல்லாரும் இங்கு ஒரு விசேஷமருளிச் செய்கிறார்கள்: அதாவது-ஆழ்வார், கீழ் மாலை நண்ணித் திருவாய்மொழியில் சரணமாகு மென்கிற பாசுரத்தில் தம்முடைய பரம பத யாத்திரையை நிச்சயித்து அர்ச்சி ராதி மார்க்க கதியை யறுதி யிட்டு அந்த கதிக்குத் திருமோகூர்க் காளமேகப் பெருமாளை வழித் துணையாகப் பற்றுகிறார் இத்திருவாய்மொழியில் -என்பதே.. மணவாளமாமுனிகள் நூற்றந்தாதியில் ‘தாளடைந்தோர் தங்கட்குத் நானே வழித் துணையாம், காள மேகத்தைக் கதியாக்கி” என்றருளிச் செய்தார். ஆசார்ய ஹ்ருதயத்தில் “மார்க்க பந்து சைத்யம் மோஹனத்தே மடு விடும்” என்று பணிக்கப் பட்டது. பெரியவாச்சான்பிள்ளை யிருபத்து நாலாயிரப்படி முதலானவற்றதும் ‘காள மேகப் பெருமாளை வழித் துணையாகப் பற்றுகிறார் என்றுள்ளது. இவ் விதமாக ப்ரமேய சிக்ஷை ஆறாயிரப்படியில் ஸூசனையாகக் கூட கிடையாதென்பது நிர்விவாதம். திருமோகூரப்பனை ஸ்தோத்ரம் பண்ணுகிரென்னுமித்தனையே ஆறாயிரப்படியிலுள்ளது. இனி, தேசிகன் த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்தாவளி யிலும் தரமிடோபநிஷத் ஸாரத்திலும் எவ்விதமாக அருளிச்செய்துள்ளா ரென்று பார்க்க வேணும்.
ரத்நாவளியில் (104) தைத்யாநாமித்யாதி ஸ்லோகத்தில் “ஸ்ராந்தி ஹாரித்வ முக்க்யை ராகாரைஸ் ஸத் கதிஸ் ஸ்யாத் ஜலத தநுருசிச் சேதி தேகாப்யதாயி “ என்கிறார். “ஸத்கதிஸ் ஸ்யாத் என்பதற்கு வியாக்கியான மிட்டவர்கள் “காளமேகப் பெருமாளே வழித் துணை யென்று” என்றெழுதி வைத்தார்கள். த்ரமிடோப நிஷத் ஸாரத்திலும் இப் பதிகத்தில் தேறின குணமாக ” ஸத்பதவ்யாம் ஸஹாயம் ஸ்ரீசம் ப்ராஹ ” என்றருளிச் செய்தார். ஸத் கதிஸ் ஸ்யாத்” என்ற தாத்பர்ய ரத்தாவளிக்கு *ஸத்பதவ்யாம் ஸஹாய மென்றவிது கை விளக்கா யிருக் கின்றது. இப்படி இன்னும் பல விடங்கள் உண்டு; எல்லாவற்றையும் நாம் காட்டியே யிருக்கிறோம் தேசிகனுக்கு ஆறாயிரப்படியில் த்வேஷம் என்றோ வெறுப்பு என்றே சொல்லுகிறோ மல்லோம். அது மிகவும் சுருக்கமான வியாக்கியானமா யிருக்கிற படியாலே அதை ஒரு கால் ஸேவித்து நிறுத்தி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் அதற்கு நான் மடங்கு விரிவாகவும் ரஸ கனமாகவும் இருக்கிற தென்கிற காரணத்தினால் தேசிகன் இது தன்னையே நிதியாகக் கொண்டு இதையே தமக்குக் காலக்ஷேப க்ரந்தமாக ஆதரித்து வந்தாரென்பதே தத்துவம். அவர் ஈடு முப்பத்தாறாயிரப்படியையும் ஸேவிக்க பாக்யம் பெற்றிருந்தால் “தொல்லை யின்பத் நிறுதி கண்டேனே’ என்று சொல்லி மொய்ம் மாம் பூம் பொழிற் படியிலே மது வனத்தில் வானர முதலிகள் பட்டபாடன்றோ பட்டிருப்பர். உண்மை இங்ஙனே யிருக்க, “ஆறாயிரப்படிக்குப் பின்புள்ள வியாக்கியானங்களில் தேசிகன் தோஷங்களைக் கண்டு நிகம பரிமளென்றொரு அழகான வியாக்கியானம் எழு பத்து நாலாயிரப் படியாகத் தாமியற்றி யருளினார்” என்று நிராலம்பமாக எழுதுவது ப்ராமாணிக கோஷ்டிகளில் ஏற்கத் தக்கதன்று.
தேசிகன் திருவாய்மொழிக்கு விரிவான வியாக்கியானமாக நிகம பரிமள மென்றொரு க்ரந்த மிட்டிருந்தாரென்றும், அது அவரால் ஸ்வ சிஷ்யர்களுக்கு ப்ரவசனமும் செய்யப்பட்டிருந்த தென்றும், ஆனால் அது நம்முடைய தௌர்ப் பாக்யத்தினால் இப்போது கிடைக்க வழியில்லாமல் லுப்தமாய் விட்டதென்றும் கூறிக் கண்ணீர் சொரிகிறார்கள். அந்த வியாக்கியானம் எவ்வளவோ அழகாய்
எவ்வளவோ ஆச்சரியமாய் இருந்த தென்றும், நாய்க் குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே பாவிகளான நமக்கு அது ப்ராப்தமாகாமற் போயிற்றே யென்றும் சொல்லிப் புலம்புகிறார்கள். இவ்விடத்திற்குச் சேர ஒரு ரஸிகர் ஒரு கதையை நிதர்சித்திருந்தார்; அதாவது, ஒரு தீர்க்க ப்ரஹ்மசாரியாம்; அவர் தமக்கு விவாஹ மாகாமலே யிருந்த அவமானத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டி உப்பிலியப்பன் ஸன்னிதிக்குச் சென்று தைமீ 5 தனக்கு விவாஹம் நடத்த நிச்சயித்திருப்பதாக ஒரு பெண் பெயரைக் குறிப்பிட்டு சுபமுஹுர்த்தபத்ரிகை யச்சிட்டு பந்து மித்ரர் களுக்கு அது தைமீ 6 தேதிக்குப் பிறகு சேரும்படி யனுப்பி விட்டு அங்குமிங்கும் சில நாள் திரிந்திருந்து பிறகு ஒரு நாளில் அந்தப் பெண் ஆசாரியன் திருவடி யடைந் திட்டதாக அனைவர்க்கும் மரணக் கடிதங்களனுப்பி விட்டு 13 நாள் பொறுத்து வீடு வந்து சேர்ந்து ‘ஐயோ! அவளுடைய முகம் எவ்வளவு அழகு தெரியுமா? கூந்தல் என்ன அழகு தெரியுமா? குரல் என்ன கம்பீரம் தெரியுமா? என்று பலபல வுஞ் சொல்லிப் புராண்டழுது போதைப் போக்கினாராம். இந்த கதைக்கும் நிகம பரிமள கதைக்கும் சிறிதேனும் வாசி யுண்டோ? தேசிகனுக்கு விபுல வியாக்கியான மெழுதத் தெரியாதென்று யாரும் சொல்ல கில்லார், திருவாய்மொழி விஷயத்தில் தாத்பர்ய ரத்நாவளியும் ஸாரமும் அருளிச் செய்து க்ருதக்ருத்யரானார் என்னுமிவ் வளவே உண்மை. ஒரு கால் நிகம பரிமளமருளிச் செய்திருந்தால் அது பெரிய
வாச்சான்பிள்ளை வியாக்யானமாகிற ஸ்ரீபாஷ்யத்திற்கு ஸ்ருத ப்ரகாசிகை போன் றிருக்குமே யொழிய வேறு விதமாக இருக்க ப்ரஸக்தியே கிடையாது. இதனையும் மத்யஸ்தர்களின் மனத்தில் நன்கு நிலை நாட்டுவோம்.
அமலனாதி பிரானுக்கு தேசிகனருளிச் செய்த வியாக்கியானம் முநி வாஹந போக மென்னும் பெயரால் ரஹஸ்யங்களுள் ஒன்றாக விளங்கி வருகின்றது. இதில் பூர்வாசாரிய வியாக்யான கண்டனமாக ஓரக்ஷரமாவது காணக் கிடைக்கிறதோ? இல்லை. இல்லை. யென்பது மாத்திரமன்று: பெரியவாச்சான் பிள்ளை போல்வாருடைய திருவுள்ளத்தை நன்கு ஸ்தாபிக்க வல்ல ஸ்ரீஸுக்திகளையே அருளி யுள்ளார். இதை மறுக்ககிற்பாருளரேல் முன் வருக.
ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே முன்வருவாரில்லை யென்று நாம் நாற்பது வருடமாகச் சபதஞ் செய்து வருகிறேம். இவர்கள் இவற்றில் அத்ருஷ்டி
மபிநீயே வாழ்ந்து வருகிறார்களத்தனை போக்கி வேறொன்றும் செய்ய கில்லார். தங்களுடைய அசட்டு வாதங்களை விட்டிட்டால் இளப்பமாகு மென்னு மித்தனையே கொண்டு அவற்றை விடாமல் மறு பதிப்புகள் செய்து கொண்டு காலங்கழிப்பது ஒன்றே இவர்கள் பணி
D.R. ஐயங்கார் எழுதி மறு பதிப்பும் செய்த பூர்வாசார்ய நிந்தாமயமும் பொய்யுரை மயமுமான தேசிக சரித்திரத்தில் கீழ்க்கண்ட வாக்கியங்கள் காண்மின்:
1-தேசிகனுடைய காலத்தில் ஸ்ரீரங்கந்தில் ஆசார்ய ஸ்தானம் வஹித்திருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்ய ப்ரபந்தத்தை மட்டும் அதிகரித்து ஸ்வ கோஷ் டியில் உபந்யாஸம் செய்ய வல்லவர்களாக மாத்திரம் இருந்தார்களே யன்றி ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களைப் பரிசயம் செய்து பிற மதத்தினரோடு வாதஞ் செய்ய உரியராக இல்லை.
2.” தாம் கற்காத ஸ்ரீபாஷ்யாதிகளை நன்கு கற்றுப் பன் முறை ப்ரவசனஞ்செய்து தாம் கற்ற பிரபந்தங்களிலும் தம்மிலும் தெளிவான ஞானத்துடன் திகழ்ந்து தம்மிலும் மிகுந்த ஆதரத்தை அப் பிரபந்தங்கள் பால் செலுத்திய தேசிகன் விஷயத்தில், அதற்கு முன் ஸ்ரீரங்கத்தில் ஆசார்யகம் செய்து வந்தவர்களும் அவர் சிஷ்யார் களும் பல் வகையான இடையூறுகளையும் ஹிம்ஸைகளையும் புரியத் தலைப்பட்டனர். அவர்களால் ஸ்வாமி யடைந்த கஷ்டங்கள்பல.” என்று.
இந்த வாக்யங்களால் பூர்வாசாரியர்களுக்கு இரண்டு வகையான அவத்யம் தெரி விக்கப் படுகிறது; (i) திவ்ய ப்ரபந்தந் தவிர வேறொன்று மறியாதிருந்தார்க ளென்றும்; ( 2) தேசிகனைப் பல வகையாகப் பரிபவப் படுத்தவும் ஹிம்ஸிக்கவுமே அவ் வாசாரியர்கள் சிஷ்யர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார்களென்றும் இவ் வருமையான விஷயத்தை யோக த்ருஷ்டியாலோ வேறு த்ருஷ்டியாலோ கண்டு பிடித்தவருடைய மேதைக்கு த்ருஷ்டி தோஷம் வாராதிருக்க வேணும்.
“ ஸ்ரீரங்கத்திலிருந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள்” என்று ஸாமான்யமாக எழுதி யிருந்தாலாவது தொலையட்டு மென்றிருக்கலாம். அங்கு ஆசார்ய பீடத்தை அலங் கரித்திருந்த மஹாசார்ய ஸார்வபௌமர்களின் மீதுமன்றோ ஏறிப் பாய்கிறது இவருடைய அஸூயா ப்ரவாஹம்.-அவ் வாசாரியர்கள் என்றைக்கோ திருநாட்டுக் கெழுந்தருளி விட்டாலும், உலகம் நிறைந்த புகழ் வாய்ந்த அவர்களின் திவ்ய ஸ்ரீஸுக்திகள் மறைய வில்லையே. தேசிகனும் சிரஸா வஹிக்கப் பெற்று தம்முடைய க்ரந்த நிர்மாணங் களுக்கும் வழிகாட்டியாகக் கொண்ட அந்த திவ்ய க்ரந்தங்களை ஸேவிக்குமுலக மெல்லாம் “நா ருக் வேத விதேஸ்ய நாயஜுர் வேத தாரிண: நா ஸாம வேத விதுஷச் சக்ய மேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேந பஹுதா ச்ருதம்” என்று சக்ரவர்த்தி திருமகனார் திருவடி திறத்தில் சொன்ன தெல்லாம் இவ் வாசிரியர்களுக்கே யொக்கும் என்று கண்ணுங்கண்ணீருமா யிருந்து கொண்டாடா நின்றது.
நம்பிள்ளையைப் பற்றிப் பெரியவாச்சான் பிள்ளை யெழுதும் போதும் (பெரிய திரு மொழி 5-8-7, வியாக்கியானத்தில்)-“ முற்பட த்வயத்தைக் கேட்டு இதிஹாஸ புராணங்களை யுமதிகரித்து பரபக்ஷ ப்ரதிக்ஷேபத்துக் குடலாக நியாய மீமாம்ஸைகளு மதிகரித்து, போது போக்கும் அருளிச் செயலிலே யாம் நம்பிள்ளையைப் போலே என்றருளியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் ஆசார்ய பதவியை அலங்கரித்த ஒவ்வொரு ஆசிரியரும் இத்தகைய யோக்யதை பெற்றன்றோ விளங்கினர். அப்படிப்பட்ட மஹாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளைக் காதால் கேட்கப் பெறாததோடு கண்ணால் பார்க்கவும் பாக்கிய மற்ற இந்த D. R. ஐயங்கார் தன்னை வறியாமல் அவர்களுடைய யோக்யதையில் குறை கூறப் புகுந்தது மஹத்தான ஸாஹஸம். அவர்களின் ஞான ரத்னத்தை மதிப்பிட இவரா அதிகாரி ?* குழாங்களா யடியிருடன் கூடி நின்றாடுமினே * என்ற விடத்திற்கு வியாக்யான மிட்டருளின அப் பேராசிரியர்கள்,“ அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராயிருக்கிற நீங்கள் நால்வ ரிருவர் இங்கிருக்கும் நாலு நாளும் த்யாஜ்யமான அர்த்த காமங்களைப் பற்றிச் சீறுபாறென்னாதே நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் யநுபவிக்கப் பாருங்கோள்.“என்றருளிச் செய்யா நின்றார்கள். இப்படிப்பட்ட உதார ஹ்ருதயர்களைச் சில அவ்யபதேஸர்கள் கை போன போக்கில் எழுதி வைக்குமளவால் என்னாகும்? “ஸ்வ ஹஸ்தேநோத் க்ஷிப்தைஸ் ஸ கலு நிஜ காத்ரேஷூ பஹுலம் கலத்பிர் ஜம் பாலைர் ககநதல மாலிம்பதிஜட:” என்ற யதிராஜ ஸப்ததி ஸூக்தியே பலிக்கு மத்தனை. அபீதி ஸ்தவத்தில் “க்வசா ரங்க முக்யே விபோ! பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸ்ரேஷுமாம் வர்த்தய.” என்று கதறுகிறார் தேசிகன். ஸ்ரீரங்க வாஸத்தை யிழந்து அந் யத்ர வஸியா நின்ற அவர் “ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்ற பரஸ்பர ஹிதைஷிகளான பரமாசார்யர்களின் திருவடி வாரத்திலே அடியேனை வாழ்விக்கலாகாதா ?” என்று அலற்றுகிறார். அவர் எந்த மஹாசார்யர்களைப்-பரஸ்பர ஹிதைஷிகளென்றும் ஸஹவாஸ யோக்யர்களென்றும் போற்றினாரோ அவர்களையே இந்த D. R. ஐயங்கார் அஸூயாமத மாத்ஸர்ய பூயிஷ்டர்க ளென்று பழிக்கிறார், அந்த மஹாசார்யர்களாலும் தச் சிஷ்யர்களாலும் தேசிகன்பல வகையான இடையூறுகளையும் ஹிம்ஸைகளையும் கஷ்டங்களையும் அடைந்ததாக ஸாக்ஷாக்கரித்து எழுதுகின்றவர் எத்தனை தலை முறையாக தேசிக ப்ராவண்யம் கொண்டவர் என்பதை முக்கியமாக விமர்சிக்க வேணும். இவர்களை நவீனர்களென்றே வ்யபதேசித்து வருகின்ற நாம் விபுலமாக நிரூபணங்கள் செய்திருப்பது ஜகத் ப்ரஸித்தமே யாயினும் இங்கும் விளக்கப்படுகின்றது.
நவீநர்களின் நவீநத்வ ஸ்தாபனம்
பெரும்பாலும் பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸுக்திகளையே நிதியாகக் கொண்டு அவற்றை யடி யொற்றியே அருளிச் செய்பவர் வேதாந்த வாசிரியர் என்னுமிடத்தை நாம் நமது நூற்களில் முப்பது நாற்பது விஷயங்களை யெடுத்துக் காட்டி விரிவுக்கஞ்சாமல் நிரூபித்திருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிக ஹ்ருதயம் என்றொரு நூலை யெழுதி ஸ்ரீராமாநுஜனில் வெளியிட்டிருக்
கிறோம். அதன் முன்னுரையை மட்டும் இங்கு உதாஹரிக்கிறோம்; (அதாவது)-
“வேதக் கடல் கடைந்த வேதாந்த வாசிரியன்
போதக் கடலாய்ப் புனிதமாய்க் கோதற்ற
தேன்மொழிகள் தந்தருளித் தீய பொருள் திாளைத்
தானொழித்தான் தாளே சரண்.
நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபிருபசிதம் யாமுநேய ப்ரபந்தைஸ்
த்ராதம் ஸம்யக் யதீர்த்ரை ரிதமகிலதம:கர்சநம் தர்சநம் ந:* என்கிறபடியே, நம்மாழ்வார் திருவருளால் ஸகலார்த்த விசேஷங்களையும் நிதி பெற்றாற் போலே பெற்று வாழ்ந்த ஸ்ரீமந் நாத முனிகள் அநுஸந்தித்துக் கொண்டிருந்த ஸத் ஸம்ப்ரதா யார்த்தங்களை மணக்கால் நம்பி வழியாக லபிக்கப் பெற்ற ஆளவந்தார் அவ்வர்த்த விசேஷங்களைத் தம்முடைய திவ்ய கடாக்ஷ மூலமாகவும் பெரிய நம்பி திருமலை நம்பி திருக்கோட்டியூர் நம்பி திருமாலை யாண்டான் முதலான ஸ்வ சிஷ்ய வர்க்க மூலமாகவும் எம்பெருமானார் பக்கலிலே தேக்கி யருள, அவை எம்பார் ஆழ்வான் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை முதலான ஆசாரியர்களின் வழியாகவும், திருக் குருகைப் பிரான் பிள்ளான் கிடாம்பி யாச்சான் எங்களாழ்வான் நடாதூரம்மாள் முதலான ஆசார்யர்களின் வழியாகவும் ப்ரவஹித்து அஸ்மதாதி ஸம்ஸாரி சேதந ஸமுஜ் ஜீவந ஸாதகங்களாய் விளங்கி வாரா நின்றன. மேலே நிர்தேசித்த ஆசார்யவர்யர்கள் பேசிற்றே பேசும் ஏக கண்டர்களாகையாலே இவர்களின் திவ்ய ஸூக்திகளிலே அர்த்த பேதம் காண்கைக்கு அவகாசமில்லை. ஸ்வல்ப யோஜனாபேதம் கண்டால் காணலாமத்தனை’ இவ் வுண்மையை உணராதார் சிலர், வேதாந்த வாசிரியர் தனிப் பட்டிருந்து வேறு பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தா ரென்றும், நம்பிள்ளை பிள்ளை லோகாசாரியர் முதலானார் கொண்டிருந்த கொள்கைகளை அசாஸ்த்ரீயங்களென்று கண்டித்து விட்டாரென்றும் சொல்லிப் போருவது ஆதார மற்ற தென்பதையும், நவீநர்கள் ஆதரித்து வருகிற அர்த்தங்களுக்கும் ஆசரித்துப் போருகிற அனுஷ்டானங்களுக்கும் வேதாந்த தேசிக க்ரந்தங்களில் ஆதார மில்லை யென்பதையும் ஸாரமாகவும் ஸம்க்ஷேபமாகவும் உபபாதிப்போமிதில்-
தென்னாசார்ய ஸம்பிரதாயத்தில் ஆதரிக்கப்படும் அர்த்தங்கள் எவை?வடகலை ஸம்பிரதாயத்தில் ஆதரிக்கப்படும் அர்த்தங்கள் எவை? என்று பலர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் -அவற்றை இன்னவை யின்னவை யென்று தெரிவிப்போமிங்கு-அதற்கு முன்னே ஸாரமாக வொன்று தெரிவிக்கிறேம்; நற்கதி பெறவேணுமென்கிற நசை இரு கலையார்க்கும் துல்யமா யிருக்கச் செய்தேயும் நாம் பேறு பெறுவதற்கு முக்கிய ஸாதனம் பகவத் ப்ரவ்ருத்திபே யல்லது ஸ்வ ப்ரவ்ருத்தியன்று என்பது தேசிகனுட்பட ஸகல தென்னாசாரியர்களின் கொள்கை. நம்முடைய ப்ரவ்ருத்தி யினால் தான் நாம் பேறு பெற முடியுமென்பது மற்றை யோர்களின் கொள்கை. இது தான் இரு கலையார்க்கும் தலையான பேதமென்று ஸாரமாகக் கொள்ளக் கடவது. மற்றைப் படியான பேதங்களாவன :-
தென்கலை ஸம்ப்ரதாயார்த்தங்கள்
1-பகவத் க்ருபை நிர்ஹேதுகம்
2-சேதநனைப் பெறுவது ஈஸ்வரனுக்குப் பேறு
3-பரகத ஸ்வீகாரமே நன்று
4-ப்ரபத்தி அநுபாயம்
5-பிராட்டிக்குப் புருஷகாரத்வ மாத்ரமே யுள்ளது; உபாயத்வமில்லை-
6-பிராட்டிக்கு அணுத்வமேயாம்
7-பிராட்டிக்கு ஜகத் காரணத்வ மில்லை
8-தயை என்பது பர துக்க துக்கித்வம்
9-வாத்ஸல்யம் தோஷ போக்யதா ரூபம்
10-ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்
11-எம்பெருமானுடைய வ்யாப்தி பரிஸமாப்ய வர்த்தகம்
12-ஜாதி நசிக்கும்
13-உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம்
14-கைவல்ய மோக்ஷம் புநரா வ்ருத்தி யற்றது
15-நமஸ்காரத்தில் ஸக்ருதா வ்ருத்தி போதும்
16-அத்ருஷ்டார்த்த அனுஷ்டான மென்று தனியே யில்லை
வடகலை ஸம்ப்ரதாயார்த்தங்கள்
1-பகவத் க்ருபை ஸஹேதுகம்
2-ஈஸ்வரனைப் பெறுவது சேதநனுக்குப் பேறு
3-ஸ்வகத ஸ்வீகாரமே தானுள்ளது.
4-ப்ரபத்தி உபாயம்
5-பிராட்டிக்குப் புருஷகாரத்வத்தோடு மோக்ஷ ப்ரதத்வமு முண்டு
6-பிராட்டிக்கு விபுத்வமே யுள்ளது
7-பிராட்டிக்கு ஜகத் காரணத்வமுண்டு
8-தயை பர துக்க நிராசிகீர்ஷா ரூபம்
9-வாத்ஸல்யம் தோஷா தர்சித்வ ரூபம்
10-விஹித விஷப ப்ரவ்ருத்தி அவர்ஜநீயம் அதை விடக் கூடாது
11-எம்பெருமானுக்கு பரிஸமாப்ய வர்த்தநம் கிடையாது
12-ஜாதி நசிக்க மாட்டாது
13-உபாயாந்தரங்கள் ஸ்வரூபாநு ரூபமே
14-கைவல்ய மோக்ஷத்திற்குப் புநரா வ்ருத்தி யுண்டு
15-அஸக்ருந் நமஸ்காரம் வேண்டும்
16-அத்ருஷ்டார்த்தாநுஷ்டானம் தனிப்பட ஆவஸ்யகம்
இப்படியொரு பதினாறு விஷயங்களை வைத்துக் கொள்வோம். “இப் பதினாறு விஷயங்களில் தானா பேதம் ? வேறு கிடையாதா ?” என்று கேட்க வேண்டாம். மற்றும் சிலவோ பலவோ இருக்கலாம்; அவை முக்கியமானவை யல்ல வென்று விடுக்கத் தக்கன. முக்கியமான விஷயங்களை சர்ச்சிக்கும் போது அவாந்தர விஷயங்களாகக் கிளரும் பேதங்களை இங்கே கொள்ள வில்லை மேலே காட்டிய பேத விஷயங்களில் தென் கலை ஸம்ப்ரதாயார்த்தங்களென்று நாம் காட்டியுள்ள அர்த்தங்களை தென்னாசார்யர்களென்று ப்ரஸித்தர்களான ஸதாசார்யர்களின் ஸ்ரீ ஸூக்திகளிற் போலவே ஸ்ரீமந் நிகமாந்த மஹா குரு திவ்ய ஸுக்தி களிலும் பெரும்பாலும் காண்கிறோம். இதை மட்டும் விளக்கவே தேசிக ஹ்ருதய மென்னு மிச் சிறுநூல் அவதரிக்கின்றது. இதராசார்ய ஸுக்திகளையும் காட்டி விஸ்தரம் செய்யாமல் தேசிக ஸுக்திகளை மட்டுமே காட்டி நிற்போமிதில்.
[இவ்வளவே அந்த தேசிக ஹ்ருதய நூலிலுள்ள அவதாரிகை.]
உபய ஸம்பிரதாயங்களுக்குமுள்ள அர்த்த பேதத்தையும் ஆசார பேதத்தையும் எடுத்துக் காட்டினதோடு நில்லாமல், தேசிக திவ்ய ஸூக்திகள் தென்னாசார்ய ஸம்பிரதாயார்த்தங்களையே தழுவி யவதரித்தவை என்பதை மேலே பரக்க நிரூபித்திருக்கிறோ மென்பது ஜகத் ப்ரஸித்தமாதலால் அதைப் பற்றி இங்கு விரிவு வேண்டாவென்று நிற்கிறோம். மிக நவீந காலத்திலேயே தேசிக ஸம்ப்ரதாய மென்றும் தேசிக தர்சன மென்றும் வ்யபதேச பேதங்களை ஏக தேசிகள் உண்டாக்கி வளரச் செய்து வருகின்றார்கள். அத்வைத மதத்தில் சங்கராசாரியர்க்கு இப் பால் பலபல மஹான்கள் சண்ட ப்ரசண்டர்களாய்த் தோன்றிப் பல பல நூல்களு மிட்டிருக்கிறார்கள். அன்னவர்களில் ஒருவருடைய பெயரை யிட்டும் தர்சந வ்யபதேசம் தோன்றின தில்லை. இதர ஸம்ப்ரதாயங்களைப் பற்றி நமக்கென்ன ? நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் (பகவத் ராமாநுஜ ஸித்தாந்தத்தில்] தர்சந துரந்தரர்களாகப் பல பல ஆசாரியர்கள் விளங்கி யிருந்தார்கள். அவர்களில் ஒரு ஆசாரியருடைய பெயரை யிட்டும் தர்சந வ்யபதேசம் தோன்றிற்றில்லை. கிம் பஹு நா ? தேசிக தர்சநம், தேசிக ஸம்ப்ரதாயம் என்கிற வ்யவஹாரத்தை நாற்பதைம்பது. ஆண்டுகட்கு முன்பு எழுத்திலோ வாய் மொழியிலோ யாரும் கண்டதில்லை, கேட்டதில்லை. தேசிகனிடத்திலே பரம பக்தி யுக்தர்களாய் விளங்கின (திருக்
குமாரரான, நயனாராசார்யர், ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமிகள். சண்ட மாருதம் தொட்டாசார்யர், ஆசார்ய சம்பூ காரர் முதலானாருடைய திரு வாக்குக்களில் ஏதத் ப்ரஸ்தாவ லேசமேனு முண்டோ? அஸம்பாவிதமான விது எப்படி யிருக்க முடியும்? அதி நவீநமாகத் தோன்றின வ்யபதேச மன்றோ விது.
நநு, முற் காலத்தில் இப்படி வ்யபதேசமில்லை யென்பதை ஒப்புக் கொள்வோம்; இது அஸங்கதமான வ்யபதேசமன்றே; தேசிகனுடைய அப்ரதிமமான பெருமைக்குச் சேர நூதனமாகவே இந்த வ்யபதேசத்தை ஸ்ருஷ்டித்தோ மென்றால் என்ன அவத்யம் வந்திடும்? இதில் ஆக்ஷேபமோ வெறுப்போ கொள்பவர்கள் தேசிகனிடத்தில் பக்தி யுக்தர்களாக வல்லாமல் விப்ரதிபநர்களாகத் தானே யிருக்க
வேண்டும். பரம பக்தி கார்யமான விதனை ஏதுக்கு ப்ரஸங்கித்துப் பழிக்க வேண்டும்? என்று பிறர் சொல்லக் கூடும்.
இது அஸமஞ்ஜஸ்மான சொலவே யாகும். கேண்மின்; ஒரு வகுப்பினர் கூரத்தாழ்வானிடத்தில் பரம பக்தி யுக்தர்களாய் கூரேச தர்சநம், கூரேச ஸம்ப்ராமென்பது, மற்றொருவர் பட்டரிடத்தில் பரம பக்தி யுக்தராய் ஸ்ரீபட்டார்ய தர்சநம், ஸ்ரீபட்டார்ய ஸம்ப்ரதாய மென்பது,…… இப்படியாக அவரவர்கள் மனம் போனபடி யெல்லாம் வ்யபதேசிக்க வேண்டி வரும், ஸ்ரீவிஷ்ணு சிந்தார்ய ரென்கிற எங்களாழ்வான், தேசிகனுடைய மாதா மஹரான ஆத்ரேய பத்மநாபார்யர், நடாதூரம்மாள் முதலானாரும் மஹாஜ்ஞாந நிதிகளாக விளங்கி வந்தார்கள்; இவ் வாசார்ய சிகாமணிகளிடத்திலே விசேஷித்து பக்தி யுக்தர்களும் இருந்து வந்தார்கள், இருந்து வருகின்றார்கள் : இவர்களும் இத்தகைய அதி ப்ரவ்ருத்திகளில் இறங்கிற்றிலர். இனி இவர்கள் என்ன சொல்ல வேண்டு மென்றால், தேசிகனுடைய தர்சனம் லோக விலக்ஷணமா யிருந்தபடியால்-இருக்கின்றமையால் தேசிக தர்சன மென்று வ்யாவ்ருத்தமாக வ்யவஹரிக்க வேண்டியது ஆவஸ்யகமும் யுக்தமுமாகு மென்ன வேண்டும். அப்போது இந்த தர்சநம் பகவத் ராமாநுஜ தர்சநத்திற்கு பஹிர்ப் பூதமே யொழிய அதைச் சார்ந்ததன்று என்று கல்வெட்டாகத் தேறி நிற்கும்-உண்மையில் தேசிகன் தம்முடைய ஸித்தாந்தமாகக் கொண்டருளின அர்த்த
விசேஷங்களில் எதையும் ஆதரியாத விவர்கள் தங்களை தேசிக தர்சநஸ்தர்களாகச் சொல்லிக் கொள்வதும் ஸாஹஸம்-இவ் விஷயத்தில் விவேகிகள் அவிவேகிகள் என்னும் வாசியற யாவரும்
ஸம ரூபமாகவே மருண்டு கிடப்பதால் இதைப் பற்றி நாம் ஆர அமர விமர்சித்து வெளியிட்டிருப் பவற்றின் ஸாரத்தைக் கேண்மின்-ஸ்ரீ பாஷ்யகாரர்க்குப் பிறகு எத்தனை ஆசாரியர்கள் திருவவதரித்திருக் கிறார்கள்; அவர்களுடைய ச்ரேணியில் நம்பிள்ளை முதலாக மணவாள
மாமுனிகளீறாக வுள்ள ஆசாரியர்களை இவர்கள் அநாதரித்தாலும் ஏனைய ஆசாரியர்களை அநாதரிக்க ஹேது வில்லை. தேசிகன் ஒருவர் தவிர வேறு எந்த ஆசாரியரை யாவது இவர்கள் ஆதரிப்ப துண்டோ? கூரத்தாழ்வான், பட்டர் போல்வாரை ஆதரியாமை கிடக்கட்டும்; மிகச் சிறந்த க்ரந்தங்களை யருளிச் செய்து வைத்திருப்பவர்களான பிள்ளான் எங்களாழ்வான் நடாதூரம்மாள் ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் ஆகிய இவர்களை யாவது ஆதரிப்பதுண்டோ? “ ஏன் ஆதரிப் பதில்லை? நன்றாக ஆதரித்தே வருகிறோம்” என்று பதில் சொல்லி விடுவர்கள். அதில் யாது பயன்? இவ் விஷயத்தை நாம் சென்ற வருடத்தில் எழுதி வெளி யிட்டிருந்தோம். அதைக் கண்ட மறுநாளே ஒரு குடீரத்தில் திருக் குருகைப் பிரான் பிள்ளானை வைது விட்டோமென்று பறை சாற்றினர்-கூரத்தாழ்வான் எம்பார் முதலியாண்டான் முதலான ஆசாரியர்களுக்கு அவரவர்களின் திருவவதார ஸ்தலங்களில் எப்படிப்பட்ட ஸன்னிதிகள் ! எப்படிப் பட்ட உபலாலனங்கள் ! இவை எத்தனை வருஷ காலமாக நடந்து வருவன்! என்பதை ஆராய்வாரில்லையே. அனந்தாழ்வான் எம்பெருமானாருடைய நியமனத்தினால் திருமலையில் விசேஷ கைங்கரியங்களைச் செய்து கொண்டு வாழ்ந்தார் ; அவருக்குத் திருப்பதியிலும் திருமலையிலும் எவ்வகையான சீரும் சிறப்புகளும் நடந்து வருகின்றன வென்பது தெரியுமோ? அருளாளப் பெருமாளெம் பெருமானாருடைய சிறப்புகளும் திவ்ய தேச விசேஷங்களில் ஸுப்ரஸித்தம்,இவ் வாசார்யர்களுக்கு ஏற்பட்டுள்ள சிறப்புகள் இன்று நேற்றல்ல. நெடு நாளாக நிகழ்ந்து வருவன வென்பது மறக்கற்பாலதன்று. அவ்வாசாரியர்களைப் போற்றும் பரம்பரையிற் சேர்ந்த பரிவர்கள் இடையாமல் அநுஸ்யூதர்களாக வருவதனால் அவ்வவ்வாசாரியர்களுக்கு நெடு நாளாகவே சீரும் சிறப்பும் குறை யற நடந்துவருகின்றன. எதிர்த் தலையான பரம்பரை அநுஸ்யூதமாக வந்த தன்றிக்கே இடையில் தோன்றின தென்கிற காரணத்தினாலேயே அந்த பரம் பரையிற் படிந்தவர்களுக்கு ஒரு ஆசார்யருடையவும் திரு நக்ஷத்திராதி பரிபால னமோ வேறு எவ்விதமான உபலாலனமோ ப்ராப்தமாக வழி யில்லாமற் போயிற்று. வீணான பாத்திரச் சண்டையைக் கிளப்பிக் கலஹம் செய்யவும் பூர்வாசாரியர்களை தூஷிக்கவுமே அமைந்தது. இவர்களது போது போக்கு –
ப்ராஸங்கிகமாகத் தனியனைப் பற்றிப் பேசுவோம் திவ்ப ப்ரபந்தங்களுக்கு ஆரம்பத் தனியனாக ஸ்ரீசைலேச தயா பாத்ரத் தனியனே பகவந் நியமனத்தினால் ப்ராமாணிகமானது. பிறகு 3-4 நூற்றாண்டுகள் கடந்த பின் விவாத நிமித்தம் மற்றைத் தனியனும் அதைச் சேர்ந்த வாழித் திருநாமங்களும் போட்டியாகப் பிறந்தவை. அச்சுக் கூடங்கள் ஏற்பட்ட பின்பு அவரவர்கள் யதேஷ்டமாக எழுதி யச்சிடுமவற்றால் சில சரித்திரங்கள் தலைதடுமாறான நிலைமையில் வந்து விட்டன. இப்படியே சில ஆண்டுகள் கழிந்து விட்டால், பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் ஆகி விடுகின்றது. பாமர ஜனங்களின் ப்ரதிபத்தி எவ்வாறாக இருந்தாலும் விவேகிகளின் உள்ளம் எஞ்ஞான்றும் உண்மையை உள்ளபடி கடைப்பிடித்தே யிருக்கும். எத்தனை யுகமானாலும் உண்மையான செய்தி உலகில் ஒரு புறத்திலாவது உலாவியே நிற்கும். “இது அடியோடு பொருந்தாத விஷயம்” என்று விவேகிகள் உணர்ந்த பின்புங்கூட ஆக்ரஹத்தாலே பற்றினது விடாதொழிய ப்ராப்தமாகி றது. இந்த பிரபல ஆபத்தில் தப்பிப் பிழைப்பார் மிகச் சிலரே. இப்போது நாம் விவேகிகள் உகக்க நிரூபிக்குமிதனைக் கண்டு அவரவர்கள் தம்தம் கொள்கையை மாற்றிக் கொள்ளப் போகிறார்களென்று நமது ப்ரதீக்ஷையல்ல. இன்னமும் அதிகமாகவே பிடிவாதம் கொள்ளவுங் கூடும். ஆனாலும் சில பிராமாணி கர்களுக்காவது பயன்படுமென் றெண்ணியே உண்மையை விளக்குகிறோம். ராமாநுஜ தயா பாத்ரத் தனியன் தோன்றி அறுநூறு வருஷம் பூர்த்தி யானதாக வைத்து, அதற்காகப் பெரியதோருத்ஸவம் நடத்துவதாகச் சில வருஷங்களுக்கு முன்பு பிரபல கோலாஹலம் நடந்தது. அப்போது தான் இந்த பாத்திரத் தனியனைப் பற்றி ஆழ்ந்து பராமர்சிக்கவும் உண்மையான மருமங்களை வெளியிடவும் ஆவஸ்யகதை ஏற்பட்டது. தனியனுக்கு ஒரு மஹோத்ஸவம் கொண்டாட வேணுமென்று ஆசை கொண் டாலும், உண்மையில் எது தனியனோ, எது மிக்க பெரும்புகழ் படைத்ததோ அதற்கன்றோ உத்ஸவம் கொண்டாட வேண்டும். ஸ்ரீமாந் வேங்கட நாத தனியனே உண்மையான பெருமை யுடையது. தேசிகனுக்கு எவ்வளவு பெருமை யுண்டோ அவ்வளவு பெருமை இந்தத் தனியனுக்கு முண்டென்றால் மிகையாகாது. இதுவே ஸகல ஸஜ்ஜந பரிக்ருஹீதம். இதுவே தேசிகனுடைய திருவவதார ஸ்தலத்திலும் ஸமய விசேஷங்களில் மேன்மை பெற்று விளங்குவது. இதுவே ஒரு விதமான பங்கத்தையும் பெறாத்து இதுவே தேசிகன் காலத்தில் அவதரித்தது. இதுவே நாடு நகரமெங்கும் பரவியது. மற்றொரு தனியனும் அப்போதே அவதரித்தது என்பவர்களுங்கூட ஸ்ரீமாந் வேங்கட தனியனே முந்துற முன்னம் அவதரித்த தென்பதை இசைகின்றார்கள். பாத்திரத் தனியன் பிறப்பதற்கு முன் ஒன்பதே கால் வருஷத்திற்கு முன்னமே ஸ்ரீமான் தனியன் அவதரித்ததாக எழுதியுள்ளார்கள். பல சிறப்புக்கள் பெற்ற அந்தத் தனியனை அநாதரித்து, சண்டைத் தனியனுக்குச் சிறப்புச் செய்ய முயன்றவர்களின் கருத்து எதுவா யிருக்க வேணுமென்பதை யார் தாம் அறியார்? ஸ்ரீமான் வேங்கட தனியனுக்காக ஒரு சிறப்பு நடத்துகிறோ மென்றால் இதில் ஸகல ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸமரஸர்களாய்க் கூடி யிருந்து அநுபவித்துக் குளிரக் கூடும். தனியனுக்கு உத்ஸவ மென்பதே வெகு அழகு! இனி இந்த பாத்திரத் தனியன் தேசிகன் காலத்திலேயே ஜனித்ததாகச் சொல்லுவது உண்மை தானா ? என்று பரிசீலிப்போம்.
ஏற்கெனவே ஸ்ரீமான் வேங்கட தனியன் அவதரித்து வீறு பெற்றிருக்கும் போது இந்த பாத்திரத் தனியன் பிறக்க என்ன ப்ரஸக்தி? ஸம்ஸ்க்ருத க்ரந்த கால க்ஷேபத்திற்காக அந்தத் தனியனும், த்ராவிட க்ரந்த கால க்ஷேபத்திற்காக இந்தத் தனியனும் தோன்றினதாகக் கூறுகின்றார்கள். ஸ்ரீமந் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் எம்பார் ஆழ்வான் பட்டர் பிள்ளான் அம்மாள் அப்புள்ளார் முதலான ஸகல ஆசார்யர்களுக்கும் எந்த க்ரந்த கால க்ஷேபத்திலும் ஒரு தனியன் தான் வழங்குவதாக வுள்ளது-ஸமாச்ரயண பரம்பரைக்காக மூன்றாவதொரு தனியன் ஏற்பட வேண்டாவோ? ஒவ்வொரு க்ரந்தத்திற்கும் ஒவ்வொரு தனியன் ஏற்பட வேண்டாவோ? த்ராவிட க்ரந்த கால க்ஷேபத்திற்காகத் தனியே ஒரு தனியன் ஏற்பட்ட தென்றால் அது தமிழ்ப் பாசுரமாக இருந்தாலாவது இசையலாம். ஏற்கெனவே உள்ள தனியனில் என்ன குறை கண்டு புதிய தனியன் இயற்றினார்களென்பது தெரிய வேணும். ஸ்ரீமாந் வேங்கட தனியனில் தேசிகனுடைய ஆசாரியரைப் பற்றி ப்ரஸ்தாவ மில்லாமையாலே ஒரு குறை யிருந்ததென்றும், அக்குறை தீர ராமாநுஜ தயா பாத்ரத் தனியன் ஏற்பட்ட தென்றும் எழுதியுள்ளார்கள். அப்படி யானால் குறையோடு கூடின அந்தத் தனியன் லுப்தமாகி இதுவே யன்றோ ஸர்வஜநமாகப் பரிக்ருஹீதமாக வேணும்.-ஸ்வஸ்வாசார்ய ப்ரஸ்தாவமில்லாத பல ஆசாரியர்களின் தனியன்கள் ஹேய மாக வேணுமே, மாமுனிகளுக்கு ஸ்ரீசைலேச தயா பாத்ரத் தனியன் திருவவ தரிப்பதற்கு முன்னே வேருெரு தனியன் அவசியம் இருந்திருக்க வேணும். ஒரு ஸம்வத்ஸர காலம் மாமுனிகள் திருவடிகளிலே ஈடு ஸேவித்தவர்கள் ஒரு தனியனைச் சொல்லித் தானே ஸேவித்திருக்க வேண்டும். அந்தத் தனியன் இப்போது யாருக்காவது தெரிந்துளதோ? முக்கியமானதொன்று அவதரித்து விட்டால் அமுக்கியமானது அடங்கி விடுமன்றோ. ராமாநுஜ தயா பாத்ரத் தனியன் தேசிகன் காலத்தில் ஜனித்திருந்து உகக்கப் பட்டிருக்குமாகில் பிறகு ஸ்ரீமாந் வேங்கட தனியன் ஜீவித்திருக்க நியாயமுண்டோ? ஸகல ஸந்தர்ப் பங்களிலும் இந்த பாத்திரத் தனியனையே அனுஸந்திக்க என்ன தடை? இதை விவேகிகள் ஆராயலாகாதா? ஏற்கெனவே சிஷ்ட பரிக்ருஹீதமா யிருந்த ஸ்ரீமான் வேங்கட தனியனுக்கு லோபம் செய்யக் கூடாமையாலே அதற்கும் ப்ரசார மிருக்க வேணுமென்று கருதி ஒரு வ்யவஸ்தை பண்ணினார்கள் என்னில்; இங்கே கவனிப்பது:-நம்மாழ்வாருடைய தனியனாக இப்போது உலகில் வழங்கி வருகின்றது-*மாதா பிதா யுவதய: என்கிற (ஆளவந்தாரருளிய) ச்லோகம். .இது அவதரிப்பதற்கு முன்னே பல ஆசாரியர்கள் நம்மாழ்வாருக்குத் தனியன் அநுஸந்தியாம லிருந்திருக்க வில்லை. ஸ்ரீ மதுரகவிகள் ஸ்ரீமந் நாதமுனிகள் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி முதலானவர்கள் பல்லாயிரவர் அநுஸந்தித்த ஆழ்வார் தனியன் எங்கே? என்றால் என்ன பதில் சொல்லுவோம். ஒரு காலத்தில் ஒரு தனியனுக்கு ப்ராபல்யம் ஏற்பட்டால் மற்ற தனியன் தன்னடையே மறைந்து போகு மன்றோ? மறைய வேணு மென்கிற அவசியமில்லை. ப்ரதானத் தனியன் என்கிற பெயர் பெறாமல் அதுவும் ஸாமாயஸ்தோத்ரமாக ஒருபுறமிருக்கலாம். ஸ்துதி ரூபமானவொரு பத்யமோ பாசுரமோ தனியனென்று வழங்கப் படுகிறது. ஒரு ஆசார்யருக்கு இப்படிப்பட்ட ஸ்துதி பத்யங்கள் பலபலவும் இருக்கலாம். ஆளவந்தார்க்கு *ஸ்வாதயந்நிஹ # நமோ நமோ யாமுநாய- இத்யாதிகளான பல ஸ்லோகங்கள் உண்டு. எம்பெருமானார்க்கு வந்தே வேதாந்த கர்ப்பூர” “தஸ்மை ராமாநுஜார்யாய இத்யாதி ஸ்லோகங்கள் பல்லாயிரமுண்டு-இருந்தாலும் ஒரு ஆசார்யருக்கு ஒரு தனியன் தான் அஸாதாரணமாக அமையும். அங்ஙனம் அஸாதாரணமான தனியன் தேசிகனுக்கு எது? என்றால்,ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: என்பதேயாம், இது வன்று’ என்று யாரேனும் சொல்ல வொண்ணுமோ? மிக நவீநமான ராமாநுஜ தயா பாத்ரத் தனியனை ப்ராசீநம் போல் காட்டுவதற்கு இவர்கள் செய்த சூழ்ச்சிகள் இதனுடைய நவீநத்வத்தையே நன்கு ஸ்தாபித்துக் கொடுத்தன வென்பதை யார் தாமறியார் ? இந்தத் தனியன் பிறந்த காலத்தைக் குறிப்பிடுவதாக ஒரு ஸ்லோகம் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள். [கல்யப்தேஷு சகஸ் ஸஹஸ்ர சத பங்க் த்யப் …..””ஸுச்
லோகோவததார திவ்ய மஹிமா ராமாநுஜோக்த்யாதிம:) என்பதே அது.-இதைப் பற்றிப் பல விஷயங்கள்-
சதுஸ் ஸஹஸ்ர சத பங்க்த்யப்தே என்கிற பதம் வ்யுத்பந்நர் பிரயோகிப்பதன்று. அவ்யுத்பங்கரின் கவனம் இது என்பது இதனாலேயே ஸுஸ்பஷ்டம்.-# கலி வருஷம் நாலாயிரத்து நானூற்று நாற்பதாவதில் ” என்னும் விவக்ஷைக்கு இந்தப் பதம் ஒருகாலும் வாசகமாகாது. (சது:) என்பதை மேலுள்ள ஒவ்வொரு லக்கத்தோடும் சேர்த்துக் கொண்டாலும் [4440-வருஷங்கள்] என்று பொருள்
படுமே யல்லது விவக்ஷிதமான ஒரு வருஷத்தை, (அதாவது 4440-ஆவது வரு ஷத்தில் என்கிற பொருளை) ஒரு நாளும் காட்டாது. இந்த மருமத்தை யறிந்து கொள்ள ஸம்ஸ்க்ருத பாஷையில் சிறந்த வியுத்பத்தி வேணும். (அப்தே) என்று ஏக வசன மிருக்கையாலே ஒரு வருஷத்தைத் தான் சொல்லும் என்ன வொண்ணாது: வியாகரணத்தில் ( ஸங்க்யா பூர்வோ த்விகு : * த்விகு ரேக வசநம்) என்கிற அநுசாநத்தினா லன்றோ இந்த ஏக வசநம் ப்ராப்தமாகிறது.-4440 வருஷங்கள் என்று அத்தனை வருஷங்களையும் இச் சொல் காட்டியே தீரும். (ஆங்கிலத்தில் Five o’clock என்பதற்கும் Five Hours என்பதற்கும் உள்ள வாசியை அறியுமவர்கள் இங்கு விவாதப்பட மாட்டார்கள்.) பஞ்ச வர்ஷே என்பதற்கும் ‘பஞ்சம வர்ஷே என்பதற்கும் நெடு வாசி யுண்டு. ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் விம்சத்யப்தே விச்ருத நாநாவித வித்ய: என்று ஸ்வாமி அருளிச் செய்கிறார். விம்சத்யப்தே என்பதற்கு இருபதாவது வயதிலே’ என்று பொருளன்று. மொத்தம் 20 வருஷ காலம் சிரமப்பட்டு என்பதே அங்கு அர்த்தம். அதுபோல் இங்கும் 4440 வருஷ காலம் சிரமப்பட்டு ஒருவர் பாத்திரத் தனியனை இயற்றினார் என்று பொருளாகுமே யன்றி 4440-வது வருஷத்தில் இது பிறந்தது என்பதாகப் பொருள் பட வழியில்லை. பங்க்தி என்பது (தச) என்ப தற்குப் பர்யாயம். அதை எப்படி பிரயோகிக்க வேணு மென்பதை உணராமல் வெகு சிரமப்பட்டு ஸ்லோகமியற்றி விட்டார். இதை ஒரு ஓலைச் சுவடியில் இவர்கள் காட்டமுடியா தென்பதை சபத மிட்டுரைத்தோம். இந்த ஸ்லோகம் மாத்திரமே கல்பித மென்கின்றோ மல்லோம்; இந்த பாத்திரத் தனியன் இன்ன வருஷம் இன்ன மாதம் இன்ன நாளில் அவதரித்த தென்று கூறுகிற வார்த்தை வசன நடையாகவும் ஒரு ஓலை யேட்டில் காட்ட முடியா தென்பதையும் ஸத்தியமாகவும் திடமாகவும் கூறுவோம். அன்றியும், லக்கத்தைத் தெரிவிக்க வேண்டு மிடங்களில் கடபயாதி ஸம்ஜ்ஞா ரீதியில் ஸ்லோக மியற்றுவது தான் பிராசீநர்களின் வழக்கம். இங்கனே ஸங்க்யா வாசக சப்தத்தை நேரே யிட்டு இயற்றப்பட்ட ஸ்லோகம் பாத்திரத் தனியன் போலவே பச்சாத் கல்பித மென்பது எளிதாக நிர்ணயிக்கப் படும்.-ஒரு தனியன் பிறந்ததற்காக அந்தக் காலத்தைத் தெரிவிக்க வேண்டி கல்யப்தம் முதற் கொண்டு திதி வார நக்ஷத்ராதிகளை யெல்லாம் தெரிவித்து ஸ்லோகம் இயற்ற வேண்டிய அவசியம் என்ன ? என்பதை விவேகிகள் விமர்சிப்பது.
ஸ்ரீமாந் வேங்கட தனியன் அவதரித்த காலத்தைப்பற்றி ஒரு ஸ்லோகமும் காணோமே அதை மாத்திரம் வசனமாகவே யெழுதி முடித்திருக்கிறார்களே. தேசிகனுடைய திருவவதாரத்தைப் பற்றி இங்ஙனே ஒரு ஸ்லோகமுண்டோ? தேசிக சரித்ர பரமான எந்த புஸ்தகத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாம் பல நூல்களையும் பரிசீலித்திருக்கிறோம். பாத்ரபதமாஸகத விஷ்ணு விமலர் ஷே ச என்பது போலவே யுள்ள ஸ்லோகங்களினால் புரட்டாசித் திருவோணத்தில் திருவவதரித்தார்” என்றிவ்வளவே கிடைக்கின்றது. விபவ வருஷத்தில் என்பார் சிலரும், சுக்ல வருஷத்தில் என்பார் சிலருமாய் நாளைக்கும் போராடிக் கொண்டிருப்பது அபலபிக்க வொண்ணாதது. இதைப் பற்றின வாதப் போர் வேதாந்த தீபிகையிலே நிகழ்ந்துளது ; நாமும் அதைப் பற்றி ஒரு க்ரந்தம் வட மொழியிலும் தென் மொழியிலும் ப்ரபவ வருஷத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஒன்றான தேசிகனுடைய அவதார கால நிர்ணயத்திற்கே ஒரு ஸ்லோகம் கிடைக்காமலிருக்கும் போது சண்டைத் தனியனுடைய ஜநத்திற்கு ஒரு ஸ்லோகம் காட்டப் படுமே யானால் புதியதைப் பழையதென்று காட்ட எவ்வளவோ பாடுபட் டிருக்கிறார் களென்பது தெரிய வருகிறதன்றோ –
தேசிகன் ஓரிரவில் ஒரு யாமத்தில் அத்யாச்சர்யமான பாதுகா ஸஹஸ்ரத்தை அருளிச் செய்தாரென்று சொல்லப் படுகிறது. இது அவதரித்தது எந்த வருஷத்தில் எந்த மாஸத்தில் எந்த நாளில் என்பதைப் பற்றி ஒருவரும் ஒரு வரியும் எழுதி வைக்க வில்லை. பிறந்த நாள் முதலாக நீதி ஸ்தலங்கள் தோறும் பங்கப்பட்டு வருகிறவொரு தனியனுக்கு கல்யப்தம் முதற் கொண்டு எழுதி வைத்திருக்கிறார் களென்றால் இந்த வேலைத் திறம் மிக மெச்சத் தக்கதன்றோ. ஆக இவ்வளவான நிரூபணங்களினால் பாத்ரத் தனியன் புராதன மன்று என்பதும், புராதன மென்று காட்டிக் கொள்ள மிக மிக ப்ரயாஸப் பட்டிருக்கிறார் களென்பதும் அத்தனையும் பழுதே யென்பதும் தேறிற்று, கண்ணழிவு சொல்ல முடியாத பல ஹேதுக்களினால் இதனை இன்னமும் ஸ்தாபிப்போம்.
ஸம்ஸ்க்ருத க்ரந்த கால க்ஷேபத்திற்கு ஸ்ரீமாந் வேங்கட தனியனும், திராவிட மணி ப்ரவாள க்ரந்த கால ஷேபத்திற்கு பாத்திரத் தனியனுமாக ஸ்வாமி தேசிகனே வ்யவஸ்தை பண்ணி நியமித்தருளினார் என்று இவர்கள் எழுதி யுள்ளார்கள். தேசிக திவ்ய க்ரந்தங்கள் யாவும் ஓலை யேடுகளில் நாளைக்கும் ஸம்ரக்ஷிக்கப் பட்டு வருகின்றன. திரு மாளிகைகளிலும் மடங்களிலும் ஆங்காங்கு ஸுப்ரஸித்தங்களான (கனிமராலைப்ரெரி முதலிய) ராஜகீய புஸ்தகாலயங்களிலும் ப்ராசீந தாள கோசங்கள் பாங்காகப் பரிபாலிக்கப் பட்டு வருகின்றன. 10, 15 இடங்களில் இதம் பரமாக
நாம் சென்று உண்மை தெரிந்து கொள்ளப் பரிசீலித்திருக்கிறோம். தேசிகனுடைய
நூல்கள் எல்லாவற்றிலும் ஸ்ரீமாந் வேங்கட தனியன் ஒன்றே திகழ்கின்றது. பாத்
திரத் தனியன் ஒன்றிலாவது காணக் கிடைக்குமோ என்று பெரு முயற்சிகள்
செய்து பார்த்தும் ஒன்றிலும் கிடைக்க வில்லை. கிடைக்கின்றதென்று கண்டும்
காண்பிக்க வல்ல மஹான்கள் உளரேல் தாராளமாக முன்வரலாம். [இத் தனியன்
ஓலை ஸ்ரீகோசங்களில் காணப்படவில்லை யென்று ப்ராமாணிகரான திருக் கோட்டியூர் ஸௌம்ய நாராயணாசார்யர் ஸாதித்தார். மேலும், ஓலை ஸ்ரீகோசங்கள் வரையில் போக வேண்டிய அவசியமுமில்லை. கோவில் விவாதங்களில் ஸம்பந்தப் படாதவர்களும் ஸாதுக்களுமான பெரியார்கள் அச்சிடு வித்திருக்கின்ற தேசிக ரஹஸ்ய- வ்யாக்யாநாதி க்ரந்தங்களை யெடுத்துப் பார்ப்போம். அவற்றிலும் ஸ்ரீமாந் வேங்கட தனியன் தவிர இந்த பாத்திரத் தனியன் தலை காட்ட வில்லையே ஸந்நிதி விவாதங்களில் கை தேறின ஆக்ரஹிகளான பிற் காலத்தவர்கள் அச்சிடுவித்துவரும் தேசிக க்ரந்தங்களில் இந்த பாத்திரத் தனியனையும் நுழைத்துப் பதிப்பித்து வருகிறார்களென்பது உள்ளது. தேசிக க்ரந்தங்களில் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் மிகவும் முக்கியமென்பது நிர் விவாதம். அதற்கு ஸாராஸ்வாதி வியாக்யானம் ப்ரதாந தமம் என்பதும் பிரஸித்தம். அந்த வியாக்யானத்தின் தொடக்கத்தில் அந்த வ்யாக்யாதாவின் கையினால் எழுதி யிருக்கும் தனியன் ஸ்ரீமாந் வேங்கட தனியனா? பாத்திரத் தனியனா? என்று [திருச்சேறைப் பதிப்பில்] பார்க்கலாம். ஸ்வாமி தேசிகனே ஏதோ தனியன் வ்யவஸ்தை பண்ணினார் என்கிறார்களே; இது ஸாராஸ்வாதி நீகாரடர்க்குத் தெரிந்திருக்க வில்லை போலும்.-இப்போதிப் போது சிலர் சொல்லியும் எழுதியும் வருவ தென்ன வென்றால்,-தேசிக ரஹஸ்யங்கள் தமிழா யிருந்தாலும் அவற்றுக்கு ஸ்ரீமாந் வேங்கட தனியன் தவிர, பாத்திரத் தனியன் கிடையாது: திவ்யப் பிரபந்தங்களுக்கு மட்டுமே பாத்திரத் தனியன் ஏற்பட்டது என்கிறார்கள். இப்படி யொரு வ்யவஸ்தை உண்மையா யிருந்தால், தேசிக ரஹஸ்யங்களிலும் பாத்திரத் தனியனைப் பலர் சேர்த்து அச்சிட் டிருப்பது இந்த ஸ்லோகத்திற்கு ஒரு பெருமையை ஏறிடுவதற்கான அதர்க்கணச் செயல் என்று வெளியிட்டு ஸயூத்த்யர்களை இவர்கள் கண்டிக்க வேண்டும்.[முக்கியமான் வார்த்தை:] மிக மிக ஆசைப்பட்டுப் பண்ணின பாத்திரத் தனியன் தேசிக திவ்ய ஸுத்திகளுக்கு உபயோகப் படாமல் போவது சோசநீயமே. இதெல்லாம் வீணான குஸ்ருஷ்டியே. “வம்பு வீண் சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்படு மிடங்களுக்குத் தான் பாத்திரத் தனியனை வைத்துக் கொள்ள வேண்டியது ” என்று தேசிகனே வ்யவஸ்தை செய்தருளினார் என்று ஒரே வார்த்தையாக முடிக்கலாமிவர்கள்-
மணவாள மா முனிகளின் எந்த க்ரந்தங்களையும் எடுத்துப் பார்க்கலாம்; தாள ஸ்ரீ கோசங்களோடு அச்சுப் புத்தகங்களோடு வாசி யற எல்லாவற்றிலும் ஸ்ரீசைலேச தயா பாத்ரத் தனியன் தான் இருந்து தீரும். ராமாநுஜ தயா பாத்ரத் தனியனுக்கு இங்கனே ஒரு ப்ராமாண்யம் லவ லேசமாகிலும் காட்டக் கூடுமா வென்று கேட்கிறோம். அச்சுக் கூடங்களோடு கூடவே இத் தனியன் ஏற்பட்டதென்பதற்கு,
அசைக்க முடியாத நிரூபகங்கள் கிடைக்கும். இந்தத் தனியன் ஏறிய ஓலையேடு ஒன்று கூட ஒருவரால் காட்ட முடியா தென்று துணிந்து கூறுகின்ற நாம் இவ் விஷயத்தில் எவ்வளவு பாடுபட்டு உண்மையைக் கண்டு பிடித்திருப்போமென்பதை அவரவர்கள் உள்ளத்துள்ளே ஊன்றி யுணரலாம்
ராமாநுஜ தயாபாத்ர தனியன் திகழ்கின்ற ஓலை ஸ்ரீகோசம் இதோ வுள்ளது, காணாய்” என்று கம்பீரமாக கோஷித்து ஒரு ஸ்ரீகோசத்தை யாவது ஸதஸ்ஸில் காட்ட நேருமா? அப்படி ஒருவர் காட்டிவிடுவரேல்,………. என்று நாம் பல பத்திரிகைகளை யச்சிட்டுப் பிரசுரம் செய்தும் ஒருவரும் எடுத்துக் காட்ட முன் வர வில்லை. இல்லாததை எங்ஙனே யெடுத்துக் காட்ட முடியும்? இங்ஙனம் நாம் துணிவுடன் எழுதுவதைக் காணும் சில மஹான்கள் என்ன நினைக்கக் கூடுமென்றால், “உண்மையில் இந்த பாத்திரத் தனியன் ஏற்பட்டு 60)வருஷம் ஆகா விடினும், சில ஸந்நிதிகளில் நேர்ந்துள்ள விவாதங்களை ஆராய்ந்து பார்க்கு மிடத்தில் இந்தத் தனியன் ஏற்பட்டு ஏறக் குறைய இருநூறு வருஷமாவது அவசியம் ஆயிருக்கு மென்று எண்ண வேண்டியதாகுமே. வாஸ்தவத்தில் கி. பி.
பதினெட்டாவது நூற்றாண்டின் முற் பகுதியில் இத் தனியன் ஜனித்ததாகவும் தெரிய வருகிறது. அத் தருணத்திற்குப் பின்பு பல பல ஓலை ஸ்ரீகோசங்கள் ஏறி யருளப் பண்ணப் பட்டிருக்கலாமே; அவற்றில் ஏதாவதொரு ஸ்ரீகோசத்தில் இந்த பாத்ரத் தனியன் சேர்த்து எழுதப் பட்டிருக்கவும் கூடுமே: அப்படிப்பட்ட வொரு சுவடியைக் கொணர்ந்து காட்டி விட முடியாதா ?” என்று நினைக்கக் கூடும்.
ஆரியர்காள்! ஓலை ஸ்ரீகோசங்களை ஆராய்ச்சி செய்வதற்காக நாம் அடிக்கடி
பல தலங்களுக்குச் செல்வதுண்டு. நம்முடைய க்ரந்தங்களை யெல்லாம் ஊன்றி நோக்குமவர்கள் இத்தகைய பரிச்ரமம் நமக்கு நெடு நாளாக வுண்டென்பதை நன்கறிவார்கள். அங்ஙனம் செல்லு மிடங்களில் இந்த ராமாநுஜ தயா பாத்ரத் தனியன் விஷயமான ஆராய்ச்சியையும் நாம் செய்வது வழக்கம். ஏனென்றால்-1- சில திவ்ய தேசங்களில் இத் தனியன் ஸம்பந்தமான சச்சரவே அதிகரித்திருப்பதாலும், 2- இத் தனியனைச் சிலவிடங்களில் வாயால் சொன்னதற்கும் சொல்ல நினைத்த தற்கும் ராஜ தண்டனைகள் ஏற்பட்டிருப்பதாலும், 3-இத் தனியனில் பற்று வைத்தது காரணமாகவே ஸ்ரீ தாதாசார்ய வம்சஸ்தர்கள் பல திவ்ய தேசங்களில் தங்களுடைய சிறந்த மரியாதைகளை அநியாயமாய் இழக்க நேர்ந்து விட்டதென்று ஸ்ரீபெரும்பூ தூர் வியவஹாரத்தில் கனம் ஹைகோர்ட்டு ஜட்ஜ்கள் தெரிந்து பரிதாபத்தோடு எழுதி யிருக்கிற படியாலும், 4-காஞ்சீபுரத்தில் மஹா வ்யாபகராகவும்-ஸ்ரீ தேவராஜ ஸ்வாமி தேவஸ்தான தர்ம கர்த்தாவாகவும் எழுந்தருளி யிருந்த திருப் புட்குழி ஸ்வாமி யென்று ஸுப்ரஸித்தரான உ. வே. ஸ்ரீ க்ருஷ்ணதாதாசார்யர் ஸ்வாமி 1874 த்தில் செங்கற்பட்டு ஜாயிண்டு மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டு 72-நெ. தாவாவில் மிஸ்டர் குருல்துரை முன்னிலையில் பிரதிவாதியாக எழுந்தருளி விளக்கொளி தேசிகன் ஸந்நிதி வாசலில் தென் கலைத் திரு மண் தான் இருந்தது” என்றும், 6, 7 மாதங்களுக்கு முன் நான் வெளியூர் போயிருந்த போது யாரோ வட கலையார் அதை இடித்து விட்டதாகக் கேள்விப்பட்டேன் என்றும், “அந்த தேசிகன் ஸந்நிதியிலுங் கூடத் தென்கலையார்களே தென்கலை மந்திரம் சொல்லியே திவ்ய ப்ரபந்த ஸேவை செய்து வருகிறார்கள்” என்றும் 10-9.1874ல் ஸ்டேட்மெண்டு கொடுத்திருப்பது அப்படியே அச்சாகி வெளிவந்திருப்பதாலும் மற்றும் பல காரணங்களாலும் இத் தனியனைப் பற்றியும் திரு மண் காபபைப் பற்றியும் உண்மையைக் கண்டு பிடிக்க வேணு மென்று அடியேனுக்கு நெடு நாளாகவே ஆவல் இருந்ததனால்
பல ஆராய்ச்சிகள் செய்யலாயின விவாத பாத்ரத் தனியன் ஏறியுள்ள ஓலை ஸ்ரீகோசம் ஓரிடத்திலாவது கிடைக்குமா என்று மிக அலைந்து பார்த்தும் ஓரிடத்திலும் ஒன்று கூட அடியேனுக்குப் புலப்படவில்லை-மைஸூரிலுள்ள ஸ்ரீ பரகால மடத்திற்கே சென்றிருந்தேன். மஹாகவிவரராக எழுந்தருளியிருந்த ஹொஸ துர்க்கம் ஸ்வாமி அடியேன் பால் பரம க்ருபாளு- சென்ற கீலக வருஷத்தில் அங்கு ஸமாகமம் நேர்ந்த போது அந்த மடத்திலுள்ள ஓலை ஸ்ரீ கோசங்களை யெல்லாம் அவிழ்த்து ஸேவிக்க ஸ்வாமி நியமம் பெற்றுக் கொண்டேன். தேசிக கிரந்தங்கள் பலவும் எடுத்து ஸேவித்தேன். ஒவ்வொன்றிலும் ஸ்ரீமாந் வேங்கட தனியன் உள்ளதே யன்றி பாத்ரத் தனியன் ஒன்றிலும் புலப்பட வில்லை. ஆனது பற்றியே நாம் இதனை ஈண்டு நிஸ் ஸங்கோசமாக எழுதலானேம். இவ் விஷயத்தை அப்போதே நாம் ப்ரபஞ்சனம் செய்தோம். அதற்குப் பிறகு யாரேனு மொருவர், விழித்துக் கொண்டு ஓலை யேட்டிலும் இந்தத் தனியனை ஏற்றி வைக்க வேணுமென விரும்பி ஏதாவது வேலைத் திறங்கள் செய்திருக்கலாமோ என்று நமக்கு ஒரு சங்கை யுமுண்டு. ஆனாலும் நமக்குக் கவலை யில்லை. ஸுப்ர ஸித்த ராஜதீய புஸ்தகாலயங்களில் சென்று விபர்யாஸம் விளைக்க முடியாதே.
திருவெவ்வுளூர் முதலான நாலைந்து திவ்விய தேசங்களில் இந்தத் தனியனுக்குச் சிலகாலமாய் ப்ரவேச மிருப்பது கொண்டும் உண்மையை மாற்ற வொண்ணாது. இங்கனே சில திவ்ய தேசங்களை ஸ்தல வாஸிகள் பறி கொடுத்து விட்டாலும் அவ் விடங்களில் இடையில் ஸம்பவித்த கோளாறுகளையும் புராதாஸ்திதியையும் உள்ளபடி காட்ட வல்ல ரிகார்டுகள் அழித்து போக வில்லை. திருவெவ்வுளூரில் ரிகார்டுகள் நீதி மன்றத்து விவாதத்தில் வெற்றி பெறுவிக்க வில்லை யானாலும் அதைப்பற்றி நமக்கு விசாரமில்லை, பராசீன ஸ்திதியைத் தெரிவிக்கின்ற ரிகார்டுகளன்றோ அவை , மா மூலாகச் சொல்லி வந்த ஸ்ரீசைலேசத் தனியனை விட்டுப் புதிய ராமாநுஜ பாத்ரத் தனியனை அஹோபிலம் ஜீயர் ஸ்வாமிகள் சொன்னதற்காக எத்தனை தடவை அவர் ஸன்னிதி கைங்கர்யத்திலிருந்து விலக்கப்பட்டார் ?புதுத் தனியனை இனிச் சொல்லுவதில்லை என்று ஜீயரே எத்தனை தடவை எழுதிக் கொடுத்தார் என்பதெல்லாம் மறைக்கக் கூடியவை யல்லவே.
மணவாளமாமுனிகளைக் காட்டிலும் வேதாந்த தேசிகள் முற்பட்டவராதலால், மாமுனிகளின் தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரத் திற்காட்டிலும் தேசிகனுடைய தனியனே முற்பட்டிருக்கத் தகுந்தது-என்று பொதுவாக அனைவரும் எண்ணக் கூடியது. இதில் நாமும் விப்ரதிபத்தி யுடையோமல்லோம். மாமுனிகளின் தனியனைக் காட்டிலும் தேசிகன் தனியனே முற்பட்டது என்பது மிகவும் யுக்கம். அந்தத் தனியன் ஸ்ரீ மாந் வேங்கட நாதார்ய: என்பதே யல்லது ராமாநுஜ தயா பாத்ரம்’ என்பதல்ல என்று விசதமாக நிரூபித்தாயிற்று.-ஆனால் ‘ராமாநுஜ தயா பாத்ரம்’ எப்போது பிறந்தது? எங்ஙனம் பிரசார மடையத் தொடங்கிற்று? என்னும் விஷயங்கள் விமர்சிக்கப்பட வேண்டும். அருளிச் செயல்களை அதுஸந்திக்கத் தொடங்கும் போதுகளில் உபகார ஸ்மிருதியாக ஆசார்யர்களின் தனியன்கள் அநுஸந்திக்க ப்ராப்தமானால் அவர்களுள் முற்பட்டவர்கள் யாவரோ அவர்களுடைய தனியன்களை அந்த வரிசைக் கிரமமாக அநுஸந்திப்பது முறைமை யாகும். இங்கனே யாமிடத்து ஸ்ரீமந் நாத முனிகள் போல்வாரான பூர்வாசார்யர்களுடைய தனியன் முதன்மை பெற வேண்டும். சடகோப தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய சேவதிம், அகாத பகவத் பக்திம் வந்தே நாதமுனிம் குரும் என்று ஒரு தனியன் இருந்து திவ்ய ப்ரபந்தாரம்பங்களில் அநுஸந்திக்கப்பட்டு வந்திருக்குமாகில் நன்றே. ஆனால் அங்ஙனம் வந்திருக்க வில்லை. உடையவர் காலம் வரையில் அந்தந்த ஆழ்வார்களுடைய தனியன்கள் அநுஸந்திக்கப்பட்டு வந்தன. பிறகு கூரத்தாழ்வான் காலத்தில் லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் தயோ நித்ய மச்யுத மாதா பிதா யுவதயசு என்கிற தனியன்கள் ஸகலப்ரபந்தங்களுக்கும் பொதுத் தனியன்களாக அதுஸந்திக்கப்படுமாறு ஸங்கேதம் ஏற்பட்டது. பட்டர் காலத்தில் பூதம் ஸரச்ச மஹதாஹ்வயா என்கிற தனியனும் அவற்றோடு சேர்க்கப்பட்டது. இவை திவ்யப்ரபந்தா நுஸந்தான ஆரம்பத் திற்கு மாத்திரமே ஏற்பட்டன. அனுஸந்தான முடிவில் ஒரு தனியனுமில்லை. வாழித் திருநாமமுமில்லை. முடிவில் பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கி *அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே’ என்று முடிப்பதுவே வழக்கமாயிருந்தது.
பிறகு மணவாள மாமுனிகளின் காலத்தில் ஏற்பட்ட விஷயங்கள் ஜகத் ப்ரஸித்தமானவை. அவை மாமுனிகளின் காலத்திலேயே அவருடைய சிஷ்யர்களால் சம்பூ ரூபமும் காவ்ய ரூபமும் ஸ்தோத்ர ரூபமுமான க்ரந்தங்களில் வட மொழியிலும் தென்மொழியிலும் அமைக்கப்பட்டு விளங்குகின்றன, அவை புராதன ஒலை ஸ்ரீகோசங்களாக அனேகம் கிடைக்கின்றன. அவை எழுதப்பட்டு எத்தனை நூற்றண்டுகள் ஆகி யிருக்கு மென்பதையும் தடஸ்தர்கள் ஊன்றிப் பார்க்கலாம். மாமுனிகளின் திருவடிகளில் ஒருவரான அப்பிள்ளை யருளிச் செய்த நாள் பாட்டு வாழித் திருநாமத்தில் “இப்புவியிலரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே ” என்றும் “எப்புவியும் சீசைல மேத்தவந்தோன் வாழியே” என்றும் அமைக்கப்பட்டு நித்யா நுஸந்தாகமாக வந்திருக்கிறது.இவ் விஷயங்களெல்லாம் 400 வருஷங்களுக்கு முற்பட்டவையாக மதிக்கக் கூடிய ஒலை ஸ்ரீகோசங்களில் பல ஆசார்ய புருஷர்களின் திரு மாளிகைகளிலும் மடங்களிலும் ராஜகீய புஸ்தகாலயங்களிலும் காணக் கிடைக்கின்றன. கிம் பஹுநா ? ஸ்ரீதேசிகனுடைய திருவதார ஸ்தலமுட்பட ஸகல ஸந்நிதிகளிலும் ஸகல திவ்ய தேசங்களிலும் தொன்று தொட்டு ஏகரூபமாக நடைபெற்றுவருகின்ற ஆசாரம் அபலபிக்க முடியாதது. அத் தலங்களி லெல்லாம் ராமாநுஐ யாபாத்ரமும் அதைச் சேர்ந்த வாழித் திரு நாமம் முதலியறைகளுமே அநு ஸந்தாநத்தில் இருந்து வந்தன வென்றும், இடையில் எப்போதோ மாறி விட்டனவென்றும் இனி இவர்கள் சொல்லத் துணிய வேண்டும். எதுவும் சொல்லி விடலாம் ; உலகம் நம்ப வேணுமே. ஒளசித்யமும் காண வேணுமே. பாத்திரத் தனியன் சண்டை புகுந்த விடங்களில் “நூதனமாக இந்தப் பாத்திரம் தொடங்கினார்கள்’ என்கிற ஹாஹாகாரமும் அதன்மேல் விசாரணை களும் ராஜ கண்டனைகளும் ப்ரஹித்தமல்லவா? ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் நூதனமாகச் சொல்லத் தொடங்கினார்களென்று ஒரு தலத்திலாவது ஒரு பேச்சாகிலும் கிளம்பினதுண்டோ? ஆக்ரமித்தல், இழத்தல் என்று இரண்டு உண்டு; ஆக்ரமிப்பவர்கள் இன்னார் ? இழப்பவர்கள் இன்னார்? என்பதை உலகமறியும்,-1874-ஆம் வருஷத்தில் குருல்துரை முன்னிலையில் நடந்த விவாதமென்று கீழே நாம் எடுத்துக் காட்டினதில் திருப்புட்குழி ஸ்வாமியின் ஸாக்ஷியத்தில்-தேசிகனுடைய திருவவதார ஸ்தல ஸன்னிதியில் தென்கலைத் திருமணும் தென்கலைத் தனியனுதான் புராதனமாக வுள்ளதென்று அந்த மஹான் (ஸாக்ஷக்ஷியம்) சொன்ன போது அதிகாரி கேள்வி கேட்டிருக்கிறார்- வடகலை குருவாக நீங்கள் சொல்லுகிற தேசிகருடைய ஆலயத்தில் தென்கலைத் திருமணும் தென்கலைத் தனியனும் எக் காலத்தில் எவ்விதமாக வந்து புகுந்தது ? என்று கேள்வி கேட்டிருக்கிறார் அதற்கு வடகலையார்கள் கூறின பதிலும் அதன் மேல் அதிகாரியின் சிரிப்பும் மேலே ரிகார்டுகளினால் வெளி வரும்.
மருமமறியாத சிலர்- தேசிகனுக்கு திவ்ய ப்ரபந்தங்களில் ஈடுபாடு இல்லையா? அவற்றை இவர் காப்பாற்ற வில்லையா? வளர்க்க வில்லையா? அவற்றுக்காக இவர் எவ்வளவோ பாடுபட்டிருக்க வில்லையா? இவருடைய தனியனில் எதற்காக விப்ரதிபத்தி கொள்ள வேணும்” என்று வாதிக்கிறார்கள். கேண்மின்; நாத முனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆழ்வான் பட்டர் நம்பிள்ளை பிள்ளை லோகாசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை முதலான ஆசார்யர்களுக்கும் இந்தப் பெருமைகள் பெரும்பாலும் இருந்தாலும் அன்னவர்களில் ஒருவருடைய தனியனும் இத்தகைய கெளரவம் பெறவில்லை யென்பது யாவரும் இசைந்த விஷயம். விலக்ஷ்ண மானவொரு பகவந் நியமக விசேஷத்தினால் ஒரு ஆசார்யருடைய தனியனுக்கும் வாழித் திருநாமத்திற்குமே இத்தகைய பெருமை ஏற்பட்டது அந்த ஆசார்யர் மணவாள மாமுனிகள் ஒருவரே யன்றி மற்றொருவரால்லர் என்னுமிடம் அசைக்க வொண்ணாதது-
ராமநுஜய தயா பாத்ரம் தேசிகன் காலத்திலேயே அவதரித்து அப்போதே ஸந்நிதிகளிலும் க்ருஹாதிகளிலும் பிரசாரமும் பெற்று மேன்மை யடைந்திருக்குமாகில் அந்த அநுஸந்தாந பரம்பரை இடையறாமல் வந்தே யிருக்கும். ஓரிடத்திதும் விச்சேத மடையக் காரணமில்லை. அப்போது ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸந்நிதிகளில் ஆதரித்துப் பரிக்ரஹித்தே யிருப்பர்கள்; அந்த ரீதி மாறுபாட்டையக் காரணமே கிடையாது, தேசிகனிடத்தில் பகையும் பொறாமையும் கொண்டவர்கள் அக்காலத்திலு மிருந்தார்களென்று சொல்லி அதனால் வேறுபாடு உண்டானதாகச் சொல்லித் தீர வேண்டுமிவர்கள். உண்மை அப்படி இருக்குமானால் அந்த ஸமயத்திலேயே பிள்ளை லோகாசார்யர் விஷயமான தனியன் வாழி திருநாமங்கள் அதற்குப் போட்டியாக ஏற்பட்டிருக்கும். 70, 80 வருஷங்கள் பொறுத்து
மணவாள மாமுனிகளின் தனியனும் வாழித் திருநாமமும் போட்டியாக வந்து புகு மாட்டா தென்பது திண்ணம். கலி வருஷம் 4410ல் ராமநுஜ தயா பாத்ரம் ஜனித்து அப்போதே ஸந்நிதிகளிலும் பிரசாரம் அடைந்திருந்ததாகவே வைத்துக் கொள்வோம். அப்போது அந்தத் தனியன் முதலியவற்றை ஸந்நிதிகளில் ஓதி வந்த அத்யாபகர்கள் யாவர்? அவர்களுடைய பரம்பரை இப்போது இருக்கின்றதா இல்லையா? என்று விமர்சிக்க வேண்டும். இவ் வாராய்ச்சிகளை யெல்லாம் நாம் செவ்வனே செய்து பலபல உண்மைகளை உலகமுகக்க வெளியிட வல்லோம். ஒன்றையும் விடாது எல்லாவற்றையும் வெளியிட்டிருக்கிறோம். இதைப் பற்றி தம் முடைய வெளியீடுகளெல்லாம் உலகம் பரவியவையே.
பங்க்தியில் சேரத் தகாதவளென்று ஒதுக்கப் பட்டிருந்த வொருத்தியைப் பங்க்தியில் சேர்த்துக் கொள்ள விரும்புமவர்கள் அவளைத் ததீயாராதன கோஷ்டிகளில் நெய்யும் உப்பும் தயிரும் மோரும் பரிமாறுவதற்கு நியமித்தல்,-அது ஸாத்மித்தவாறே அப்பளம் வடாம் லட்டு வடை பரிமாற நியமித்தல் செய்வர்களாம். “இவை பரிமாறுவதற்குப் பல ஸாத்விகள் இருக்கிறார்களே, இவளிருக்க வேண்டுமிடத்தில் இருக்கட்டுமே”என்று மரும மறிந்த சில பெரியார் பகர்ந்தால் பிடிவாதமாக அவளைக் கொண்டு தளிகையே செய்விக்கத் துணிவர்களாம். இத்தகைய கதைகள் நினைவுக்கு வரும்படி யன்றே இவர்கள் ஆசரித்து வருவது இந்த ஸ்லோகம் நீதிமன்றங்களில் பட்டபாடு என்ன? என்பதைச் சிறிதும்
ஆலோசியாமல் இதற்கொரு விழவு நடத்த ஆசை கிளர்ந்ததே ஆச்சரியமல்லவா? ஈன்றோளி ருக்க மணை நீராட்டி” என்று நம்மாழ்வாரும்,”பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதிரோ மாட்டாத தகவற்றரே” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்த கதை போலல்லவா காண்கிறது. நிற்க.
1-ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஸ்ரீபாஷ்யகாரர்க்கு முன்பு இருந்த ஆசாரியர்கள் ஸ்ரீமந் நாதமுனிகளும் உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியும் ஆளவந்தாரும், ஆளவந்தாருடைய திருவடிகளாய் எம்பெருமானார்க்கு ஆசாரியர்களான ஐவரும், திருக்கச்சி நம்பிகளும் ஆகப் பதின்மரே யாவர். தேசிகன் குரு பரம்பராஸாரத்தில் மற்றும் பல பல ஆசாரியர்களின் திருநாமங்களையும் நிர்தேசத் திருந்தாலும் அவர்களிருக்கட்டும். எம் பெருமானார்க்குப் பிற்பட்ட ஆசாரியர்கள் அபரிமிதர்களாக வுள்ளார்கள். அவர்களைப் பற்றி தேசிகன் குரு பரம்பராஸாரத்தில்
“ எம்பெருமானார் ஸ்ரீபாதத்திலாச்ரயித்த முதலிகளைத் தந்தாம் ஸம்ப்ரதாயப்படி களிலே யறிந்து கொள்வது” என்று ஒரே வரியில் முடித்தருளினார். ரந்தங்களை யருளிச் செய்து உபகாரகர்களான ஆசாரியர்களை யாவரும் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவ்வாசாரியர்களிடத்தில் ஸ்ரீவைஷ்ணவ குலத்திற் பிறந்த யாவரும் விப்ரதிபத்தி லேசமுமின்றிக்கே ஸம் ப்ரதிபத்தி கொண்டிருக்க ப்ராப்தம்.
2-தென்கலை வகுப்பினரான நாம் ஸ்ரீமந் நிகமாந்த மஹா குரு -தத் புத்ர ரத்ந பர்யந்தர்களான ஆசாரியர்களில் எந்த ஆசாரியரிடத்திலும் ஈஷத்தும் விப்ரதி பத்தி கொண்டிருக்க வில்லை. பூர்வாசார்ய் பரம்பரையில் அவஸான ஸ்தானத்தில் நிற்பவர் மணவாளமாமுனிகள். அவர் தாம் செய்தருளின வியாக்கியான நூல்களிலே கூரத்தாழ்வான் பட்டர் நஞ்சீயர் முதலான ஆசாரியர்களின் ஸ்ரீஸூக்திகளைப் போலவே எங்களாழ்வான், நடாதூரம்மாள், ஸ்ருதப்ரசிகா பட்டர், நிகமாந்த
மஹா குரு ஆகிய இவ்வாசிரியர்களின் ஸ்ரீஸுக்திகளையும் பிரமாணமாகக் காட்டி யருளுகிறார். குமார வரதாசார்யரான நயனாராசார்யருடைய ஸ்ரீஸூக்தியையும் எடுத்துக் காட்டி யுள்ளார். இச்சயா யதுபாதேயம் பஸ்யாதிசய ஸித்தயே, உபயாநுபயை கைகஜுஷா தௌ சேஷ சேஷிணௌ.” என்று தத்வ த்ரய வியாக்கியானத்தில் (40ல்) உதாரித்தருளியுள்ள காரிகை நயனாராசார்யருடைய தென்கிறார்கள். அன்றெனில் இதை விட்டிடுதும். தேசிகனுடைய ரஹஸ்ய த்ரய ஸாரத்திலிருந்தும் தத்வ முக்தா கலாபத்திலிருந்தும் ந்யாஸ விம்சதி யிலிருந்தும் வாக்ய ராசிகளையும்
ஸ்லோகங்களையும் மாமுனிகள் மேற்கோள் கொடுத்திருப்பது ப்ரஸித்தம். வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ தீபாதிகளில் தேசிகனுடையபலபல ஸூக்திகளை உதாஹரித்து அர்த்த விவரணமும் செய்திருக்கிறார். அந்தச் சீயர்க்கு இருநூறு வருடங்கள் பிற்பட்டவராய் அந்தத் திருநாமமே உடையராய் ஸ்ரீகாஞ்சீ கீழ கோபுர வாசலிலுள்ள மடத்திற்குத் தலைவரான ஸ்வாமி அருளிச் செய்ததாய் பகவத் விஷய ஸ்ரீகோசங்களில் அச்சிடப்பட்ட தாயுமுள்ள “வேதாந்த சாஸ்த்ர த்ரவிடாகமாத்ய தசக த்வந்த் வைககண்ட்யம் ” என்னும் மஹத்தான க்ரந்தத்தில் ஆசார்ய வந்தனமாகச் செய்துள்ள ஸ்லோகங்களில் நான்காவது-ஸ்லோகம் ஸ்ரீவத்ஸ் சிஸ்தநுஜாகம மௌலி யோகி ஸ்ரீமக் கலிக்ந வர யோகி முகா மஹாந்த:, வ்யாஸார்ய வேத சிகராரிய மஹார்ய முக்கியா வேதாந்த யுக்ம குரவோ ஹ்ருதி ஸந்நிதத்யு:” என்பது. இதில் ஆழ்வான் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை மணவாள மா முனிகள் ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் வேதாந்த மஹா குரு தொட்டயாசார்யர் ஆகிய இவ் வாசாரியர்களைச் சிந்தனை செய்திருக்கிறார்.
3-சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வித்வான்களில் நிகரற்ற வித்வானும் வேதாந்த வாதாவளி ந்யாய பாஸ்கராத்யநேக கிரந்த ப்ரணேதவுமான மைஸூர் (மண்டயம்) அனந்தாழ்வான் தம்முடைய க்ரந்தங்களில் தேசிகனுடைய அனேக ஸூக்திகளை ஆங்காங்கு உதாஹரித்திருக்கிறா ரென்பதும், நிகழும் நூாற்றண்டிலும் காஞ்சீபுரியில் ப்ரஸித்த வித்வத் ஸார்வ பெளமராக விளங்கின குன்றபாக்கம் ஸ்வாமி தாம் பணித்த தத்வ ரத்நா வளியில் “ஜயதி பகவாந் வேதாந்தார்யஸ் ஸ தார்க்கிக கேஸரீ” என்று பணித்திருக்கி ரென்பதும் இங்ஙனே மற்றும் பலவும் குறிக் கொள்ளத் தக்க விஷயம்.
4-இவ்வாறாக தேசிகனுடைய ஸ்ரீஸூக்திகளைக் கையாண்டவர்களும் அவரை உபஸ்லோகித் தவர்களும் தென்னாசார்ய பரம்பரையிலே தேறுகிறப் போலே மற்றொரு பரம்பரையில் தொடர்ச்சியாகத் தேறக் கூடுமோ? திருக் குடந்தை கோபால தேசிகன் என்ற ஓரு மஹநீயர் ஜனித்து அவரிடத்திலே யதிகள் மூவர் ஆச்ரயித்து முநி த்ரய ஸம்பரதாயமென்று ஒன்று ஏற்பட்ட பிறகு தேசிகனைத் தெரிந்து கொண்டவர்களும் அவரை உபஸ்லோகிப்பவர்களும் பலருளரென்பதில் நமக்கு விவாதமில்லை. இதை நாம் நமது பரச்சத க்ரந்தங்களில் எழுதியே யுள்ளோம். இந்த கோபால தேசிகாதிகளை விட்டிட்டு இவர்களுக்கு முன்னே எதிர்த் தலையில் தேசிகனென்று வாய் திறந்த ஒரு வ்யக்தியாவது உண்டா ? உண்டானால் இன்னாரென்று எடுத்துக் காட்டுமின் என்று கூசாமல் கூறுதும்.
5-நம்மாழ்வார் எம்பெருமானுடைய பரத்துவத்தை உபபாதித்தருளின போது பிறருடைய அகமும் முகமும் கறுத்து விட்டதாம் -அதைக் கண்ட ஆழ்வார் “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் கிலேசங் கொள்வதேன் ?” என்று கேட்பவர் போல் “கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை” (திருவாய்மொழி 5-2-7) என்று துணிந்தருளிச் செய்தார். அது போல நாமும் துணிந்து கூறுகின்றேம்: என்ன கூறுகின்றோம்; மறு முறையும் கூறுகின்றோம் கேண்மின்; வாதி கேஸரி ஜீயர் போலவும் மணவாளமாமுனிகள் போலவும் தொட்டயாசாரியர் போலவும் அவருடைய அந்தேவாஸி யான நருஸிம்ஹ ராஜர் போலவும் காஞ்சீ மடாதிபதி யழகிய மணவாளச் சீயர் போலவும் புராதனரென்று மதிக்கக்கூடிய ஒரு வடகலைப் பெரியாராவது தேசிகனைப் புகழ்ந்தவருள
ரேல் (கிம்பஹுாந ?) தேசிக ப்ரஸ்தாவமும் பகவத் ராமாநுஜாதி ப்ரஸ்தாவமும் செய்தவருளரேல் அவரை இன்னாரென்று எடுத்துக் கூறுமின்–
6-இப்படி கேட்கிறானேயிவன்!” என்று கோபமும் தாபமும் மேலிட்டு நம்மைக் கறுக்கச் சிவக்கப் பார்க்கலாம் : துரியோதநாதிகள் கண்ண பிரான் திறத்தில் ஏதேதோ சூழ்ச்சிகள் செய்தது போலவும் செய்யலாம்: இத்தனை போக்கி, நம்முடைய இக் கேள்விக்கு ஆர்ஜவத்துடன் விடையிறுப்பாருளரோ ?இல்லை, இல்லை, இல்லை என்பதில் ஸந்தேஹமேது ? “இரவில் ஸூர்ய ப்ரகாச முண்டோ? பகலில் சந்த்ர ப்ரகாச முண்டோ?” என்று கேட்டால் உண்டு என்று வாய் திறக்க எப்படி வழியில்லையோ, அப்படியே இரண்டு நூற்றாண்டுகட்கு முன்பு தேசிகனைப் போற்றினவர்களும் தேசிக ப்ரஸ்தாவம் செய்தவர்களுமான வடகலைப் பெரியார் இருந்தார்களென்று வாய் திறக்கவும் வழியில்லை. இருந்தால், இன்னாரின்னாரிருந்தார்கள் : இன்னின்ன வடமொழி தென்மொழி நூல்களை அவர்கள் இபற்றி யிருக்கிறார்கள்’ என்று இவ்வளவே காட்டி விட்டால் போதுமே. எதிர் வகுப்பினர் இதைப் பற்றி வீணான நிந்தாத்யாயங்களை வளர்க்க முடியுமே யல்லது வேறென்றும் செய்ய முடியா தென்பதை சிலாசாஸனமாகவன்றோ வெழுதி வைத்திருக்கிறோம் நாம்.
7-இவர்களை நவீனர்களென்று நாம் வ்யதேசித்து வருவதன் பொருத்தத்தை இவ்வளவால் விளக்கினோமாயிற்று. தென்கலை ஸம்ப்ரதாயஸ்தர்கள் மட்டும் இடையறாது அநுஸ்யூதர்களாக வந்து கொண்டிருக்கிறார்களோ வென்று ஸஹஸா ப்ரதி ப்ரச்நம் செய்து விடலாமிவர்கள். ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்திலும் மற்றும் பல தேவஸ்தானங்களிலும் எம்பெருமானார் காலத்திலிருந்து நியதமான மரியாதைகளை அநுபவித்து வருபவர்களும், மணவாள மாமுனிகள் நியமித்தருளின அஷ்ட திக்கஜநா சார்ய பரம்பரையினரும் இடையறது அநுஸ்யூக சிஷ்ப ஸம்பத்துடனும் வந்து கொண்டிருப்பதனால் எதிரிகளின் ப்ரதி ப்ரசனத்திற்கு அவகாசமில்லையே. இனி, கேள்வி யுண்டானால் இதைப் பற்றி வெகு விளக்கமாகத் தெரிவிப்போம்.
8-எதிர் வகுப்பினர் ஈச்வர ஸ்ருஷ்டியில் புதிதாக ஸ்ருஷ்டிக்கப்பட்டார்களென்றோ நாம் சொல்லுகிறேம்? இல்லை. இவர்களுடைய பரம்பரையும் நெடு நாளாகவே யிருந்து வருவது தான். ஆனால் ஆழ்வாராசார்ய பரம்பரையில் படியத் தொடங்கினது புதிது புதிதே. இதை இன்னமும் நன்கு நிரூபிக்கிறோம் காண்மின் அரசாணிபாலை வேங்கடாத்வரி ஸ்லேஷயமக சக்ரவர்த்தி யென்று ப்ரஸித்தரான ப்ரசண்ட பண்டிதர் இவருடைய க்ருதிகளில் லக்ஷ்மீ ஸஹஸ்ரம் மிகவும் ப்ரஸித்தமானது. அதில் அவர் அநேக ஸ்லோகங்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு விபுத்வ முண்டென்றும் அணுத்வ வாதம் அஸங்கதமென்றும் கூறுகிறார். அப்படி அவளுக்கு அணுத்வத்தைச் சொல்லுகிற ஆசாரியர்கள் இன்னாரென்பதை வியாக்கியான கர்த்தா விளக்குகிறார். அதில் ஐச்வர்ய ஸ்தபகத்தில் “ஸ்ரீமத் ராமாவர்ஜ ஸரணிம் ஸ்ரேயஸீ மாஸ்ரிதாநாம் ஆசார்யாணாமபி ச குஹசித் யஸ் தவாணுத்வ வாத:” என்கிற ஸ்லோகத்தின் வியாக்கியானத்தில் “பட்ட பராசராதீநாமபி ச” என்று எழுதி யுள்ளார். இதனால், கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டர் இவர்களுக்குப் பிரதிபக்ஷியென்று ஸ்பஷ்டமாகிறது. தேசிகன் பட்டரை அபர பாஷ்யகாரராக மதித்திருப்பவர் பட்டர் தத்வ ரத்நாகரமென்று ஒரு க்ரந்தமருளிச் செய்திருந்தார்-அது தேசிகன் காலத்திலிருந்தது; பிறகு லுப்தம். அதில் வருத்தி க்ரந்தத்திற்கு விருத்தமாக ஒரு விஷயம் அருளிச் செய்யப்பட்டிருப்பதாக அநுவதித்து, அவருடைய ஸ்ரீஸக்திக்கு நாம் என்ன மறுப்புரைக்க முடியுமென்று கை கூப்புகிறார் தேசிகன் அதிகரண ஸாராவளியில் “வ்ருத்தி க்ரந்தேது” என்ற ஸ்லோகத்தில்
9-இங்ஙனே தேசிகன் மஹாசார்யராக மதித்திருக்கும் பட்டரை ப்ரதி பக்ஷியாகக் கொள்ளுமவர் களுடைய மதம் எதுவாயிருக்க வேணு மென்று ஆராய்மின். எம்முடைய ஆராய்ச்சிக்கு இத்தகைய விஷயங்கள் மிகவும் கை கொடுப்பவை. எதிர் வகுப்பில் மிகப் பெரிய வித்வான்களா யிருந்தவர்களும் ஆழ்வாராசார்ய ஸ்ரீஸூக்திகளுக்கு அத்யந்த வைதேசிகர்களாகவே யிருந்து போந்தார்களென்பதற்கு இது முதன்மையான ஸாக்ஷியாகும். “இன்னின்ன ஆசாரியர்கள் நமக்கு உத்தேச்யர்கள், இன்னின்ன ஆசார்யர்கள் அநுத்தேசியர்கள்’ என்கிற விவேக சக்தியு மற்றவர்களாக வன்றோ எதிர்த் தலைப் புராதன பண்டித மணிகள் விளங்கி யிருந்தார்கள்
10-மேலே நாமெடுத்துக் காட்டின விஷயத்தில் இப்போதுள்ளவர்கள் இருவகையான ஸமாதானம் சொல்லக் கூடும்-1- ஸம்ப்ரதாய ஸரணியில் அடியோடு பிரவேச மில்லாதவரான அவர் எழுதி யிருப்பது அநாதரணீயம்-என்று சொல்லுவது ஒரு வகை-2-பட்டர் எங்களுடைய பரம்பரையிற் சேர்ந்த ஆசார்யரல்லாமையாலே அவரை ப்ரதிபக்ஷியாகக் கொண்டது யுக்தமே என்பது மற்றொரு வகை. மூன்றாவது வகையான ஸமாதானம் எதுவும் சொல்லப் போகாது. இவ் விருவகையான ஸமாதானமும் ஏலாதவையே.
11-முந்தின ஸமாதானத்தில் ஸித்த ஸாதனமே தோஷமாகிறது. இவர்களுடைய வகுப்பில் ஸம்ப்ரதாயாவகாஹனமுள்ள வித்வான்கள் எந்நாளிலும் எவரும் இருந்ததில்லை யென்கிற நம்முடைய வாதமே ஊர்ஜிதமாகிறது. சில வருடங்களுக்கு முன்பு பல வைகாநஸர்கள் கூடிப் பூந்தமல்லியில் ஒரு பரிஷத்து நடத்த முயன்று அதற்காக அச்சிட்ட விளம்பரப் பத்திரிகையில் “நம்முடைய ஸம்பிரதாயத்திற்கு மூலாதார பூதர்களான பராங்குச பரகால யதிவராதிகளான ஆழ்வார்களுக்குள்ளே தலைவரான திருக்கச்சி நம்பிகளின் அவதார ஸ்தலத்திலே …நடக்கப் போகிறது” என்று பிரசுரித்தார்கள். இங்ஙனே பலபல நினைவுக்கு வருகின்றன. இனி இரண்டாவது வகையான ஸமாதானத்தில் நாம் அதிகம் சொல்ல வேண்டிய தொன்றுமில்லை; பட்டரை ப்ரதிபக்ஷியாகக் கொள்பவர்கள் ஆழ்வார் எம்பெருமானார் ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகள் முதலான யாவரையுமே பிரதிபக்ஷிகளாகக் கொள்ளக் குறை யில்லை. இதுவொரு லோக விலக்ஷணமான மதம் என்று தான் தேறி நிற்கும்.
12-ஆக இவ்வளவாலும் என்ன நிர்ணயிக்கப் பட்டதென்றால்; கோபால தேசிகோபஜ்ஞமான இவர்களுடைய ஸம்பிரதாயமானது அந்த கோபாலார்யர்க்கு முந்தி திவ்ய ஸுரி ஸம்பந்தமோ திவ்ய ப்ரபந்த ஸம்பந்தமோ திவ்ய தேச ஸம்பந்தமோ பெற்றிருந்தது கிடையாது. பிள்ளை லோகாசார்யரோ தேசிகனோ மணவாளமாமுனிகளோ மற்று எந்த ஆசார்யரோ ஆக எல்லாரிடத்திலும் இவர்கள் துல்ய ப்ரதிபத்தி கொண்டவர்களாகவே யிருந்து வந்தார்கள். காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை யிருந்து வாழுஞ் சோம்பர் என்று தொண்ட ரடிப் பொடியாழ்வாரால் மங்களாசாஸனம் பெற்றவர்களும், பதியே பரவித் தொழுந்தொண்டரென்றும் உலகமேத்துங் கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்று மண்டினா ரென்றும் கலியன் திருவாக்குக்கு இலக்கானவர்களுமான தென்னாசாரியர்களே ஆங்காங்கு சில திவ்ய தேசங்களில் தேசிக விக்ரஹ ப்ரதிஷ்டையையும் செய்வித்தவர்கள். மற்றையோர் செய்ய ப்ரஸக்தி ஏது?–
13-பெரும்பாலும் திவ்ய தேசங்களிலும் ஆழ்வா ராசார்யர்களின் திரு வவதார ஸ்தலங்களொன்றும் தப்பாமல் எல்லாவற்றிலும் நெடுநாளாக நிராபாதமான கைங்கர்ய ஸாம்ராஜ்ய துரந்தரர்களான தென்னாசார்யர்களைத் தவிர்த்து மற்றையோர்கள் ஆலயங்களில் தேசிகனை ப்ரதிஷ்டை செய்ய ப்ரஸக்தி லேசமும் கிடையாது. கோவில்களில் இவர்கள் வந்து சேர்ந்த நாள் முதல் க்ஷணம் முதல் யுத்த காண்டமே என்பது இவர்களின் சரித்திரங்களினால் ஸுஸ்பஷ்டம்-ஸ்ரீ பெரும்பூதர் எம்பெருமானார் ஸன்னிதியில் சென்ற நூற்றாண்டில் நடந்த தென்கலை வடகலை விவாதங்களைப் பற்றி நாம் நம்முடைய சில நூல்களில் ஒரு முக்கியமான விஷயம் எழுதி யிருந்தோம்; என்ன எழுதியிருந்தோ மென்பதை இங்கு முன்னம் எடுத்துக்காட்டி, அதற்கு ஸமீப காலத்தில் கிடைத்த வெற்றியை அடுத்தபடியாக விளக்கிக் காட்டுகிறோம். முன்பு நாம் எழுதியிருந்த தென்ன வென்றால், 1955 ஜனவரி மாதத்தில் வெளியிட்ட ஸத் ஸம்ப்ரதாய பாஸ்கரனில்”காஞ்சீபுரம் தேவப்பெருமாள் ஸன்னிதியிலும் தீப ப்ரகாச தேசிக ஸன்னிதியலும் நவீநர்கள் விவாதம் பண்ணத் தொடங்கின காலத்தில் திருவள்ளூர் ஸன்னிதியின் அனுஷ்டானம் நிஷ்களங்கமாய் நிஷ்கல்மஷமா யிருந்தது. ஆனது பற்றியே அந்த ஸன்னிதியின் ஆசாரங்ளை யொட்டியே காஞ்சீபுரத்திற்கு பாத்ர ஜட்ஜ் மெண்டுகள் அவதரித்தன. இவ்விஷயம் மூன்று கோர்ட்டு ஜட்ஜ்களாலும் விசதமாக எழுதப்பட்டு விளங்கா நின்றது அப்படிப்பட்ட திருவுள்ளூர் ஸன்னிதி தலைகீழாக மாறி விட்டதனாலே தத்வார்த்தங் கூடவா மாறி விடும்.
இந்த ஸன்னிதியில் அத்யாபகத் தொடக்கமிராசு அஹோபில ஸ்வாமிக்கு அதீநமாயிருந்தது போல, காஞ்சீபுரத்தைச் சேர்ந்த திருப்புட் குழி ஸ்ரீ பெரும் பூதூர் முதலான திவ்யஸ் லங்களில் அந்த மிராசு கோடி கன்னிகாதானம் தாதாசார்ய வம்சஸ்தர்களுக்கு அதீனமா யிருந்தது. அவர்கள் கிரமமான நிலையில் இருந்த வரையில் தங்கள் கைங்கரியத்தைக் குறையறச் செய்து ஒரு கஷ்டமு மநுபவியாமல் ஆச்சரியமான மரியாதைகளையும் பஹு மானங்களையும் அநுபவித்து வந்தார்கள். ஆனால் அவர்கள் விபரீதமான நிலைமையை ஏறிட்டுக் கொண்டது முதல் காஞ்சீபுர திவ்ய தேசங்களிலும் திருப்புட்குழியிலும் ஸ்ரீபெரும்பூதூரிலும் எவ்வளவு கஷ்டங்களை யநுபவிக்கப் ப்ராப் தரானார்க ளென்பதை உலகமுழுது முணருமே. ஸ்ரீ பெரும்பூதூரில் ஒரு விதமான கலஹமுமில்லாமல் நடந்து வந்த விஷயம் விச்வகுணா தர்சத்தில் ஏறிக் கிடக்கிறது. பிறகு வெகுநாள் கழித்து அங்கே வட கலையார் சண்டைகளைக் கிளப்பி அபரிமிதமான வியவஹாரங்கள் நடந்தன. ப்ரஹ்மஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி ஐயர் என்கிறவொரு பிரபல அட்வகேட் அங்கு வடகலையார்களுக்கு வக்கீலாக இருந்தார். அப் போது ஸ்ரீபெரும் பூதர் வியாஜ்ஜியம் கடைசியாக ஹைக்கோர்ட் டில் இருந்தது. அந்த ஸமயத்தில், மேலே சொன்ன உடகலையார் வக்கிலான ஸ்ரீ.கிருஷ்ணஸாமி ஐயரர்கள் ஹைகோர்ட் ஜட்ஜ் ஸ்தானத்தில் அமர்ந்தார். அப்போது ஹைகோர்ட்டி லிருந்த ஸ்ரீ பெரும் பூதூர் ஸன்னிதி யப்பீல் அந்த கிருஷ்ணஸாமி ஐயருடைய பெஞ்சில் வந்தது. ஏற்கெனவே பல வருஷங்கள் வடகலையார்க்கு வக்கீலா யிருந்த இவருடைய பெஞ்சில் இந்த அப்பீல் நடக்கத் தகா தன்றும், இவரிடம் நடந்தால் நியாயம் தேறா தென்றும் தென்கலையார் ஆக்ஷேபிக்கத் தீவிரமான முயற்சி கொண்டும் பலிக்க வில்லை. அவரே விசாரிப்பதாக கேஸை எடுத்துக் கொண்டார். வடகலையார் நமக்கே வெற்றி யென்று நிச்சயித்து ஆனந்தமா யிருக்கிறார்கள்; தென்கலையார் கவிழ் தலை யிட்டு வருந்திக் கிடக்கிறர்கள். ஜட்ஜ் கிருஷ்ணஸாமி ஐய ரவர்கள் கேஸை எடுத்துக் கொண்டு அன்றே அலம்பிக் கவிழ்த்து விட்டார். அவர் நெடுநாள் வடகலையர்களுக்கு வக்கீலாயிருந்த படி யால் எல்லா ரிகார்டுகளையும் ஒன்று விடாமல் முற்றிலும் பார்த்தவ ராகையாலே ப்ராமாணிகராய் மனச் சாட்சியை மீற மாட்டாமல்,“தாதாசார்ய குடும்பஸ்தர்கள் தங்களுக்குக் குல பரம்பரையாக வந்த ஸ்ரீசைலேச மந்த்ரத்தை வட்டு வடகலை மந்த்ரத்தை ஆதரிக்கத் தொடங்கினது தான் இவ்வளவு சண்டைக்கும் காரணம்; அதிலிந்தே தாதா சாரியர்கள் தங்கள் கவுரவங்களை இழக்க நேர்ந்தது” என்றும் சிலாசாஸனமாக எழுதி வைத்தார்.”-இப்படி நாம் எழுதி யிருந்ததைக் கண்ட நவீனர்கள் “ஸ்ரீ பெரும்பூ தூர் வ்யவஹாரத்தில் ஜட்ஜ் இப்படி யெழுதிருப்பதாகச் சொல்வது பொய்” என்று அடாவடி யடித்து வந்தார்கள்.
14-ஸமீப காலத்தில் ஸ்ரீபெரும்பூதூர் வியவஹார மொன்று செங்கற் பட்டு ஸப் கோர்ட்டில் முடிவடைந்தது. அதைப் பற்றி அவ்வூர் ஸ்ரீ உ. வே. பார்த்தஸாரதி ஐயங்காரென்பவர் எழுதி யிருந்த வியாஸமொன்று இருபத்தைந்து வருஷங்களுக்கு மேலாக ஸ்ரீரங்கத்திலிருந்து வெளி வரும் அம்ருத லஹரி என்னும் மாதப் பத்தரிசையில் 217 லக்கமுள்ள நேற்று ஜனவரி மாத ஸஞ்சிகையில் ஸ்ரீபெரும்பூதூர் வ்யவஹாரம் என்னும் தலைப்பின் கீழ் வெளி வந்தது; அந்த வியாஸத்தை முன்னம் ஈண்டு அநுவதிப்போம்.(அதாவது)-“இவ்வூர் ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ பாஷ்பகார ஸ்வாமி தேவ ஸ்தானத்தில் ஸ்ரீ வேதாந்தாசரீரிய விக்ரஹமும் திருவாராதனத்தில் இருந்து வருவது ப்ரஸித்தமானது. அவருக்காக ஏற்பட்டிருக்கிற தஸ்திக்கின்படி [அதாவது வருமானத்திற்குத் தக்கபடி) மாஸ திரு நக்ஷத்ர பரிபாலனமும் வருஷ திரு நக்ஷத்ர பரிபாலனமும் உசிதமாக தேவ ஸ்தானத்தாரால் செய்யப்பட்டு வருகிறது. இவ் விக்ரஹம் இந்த தேவஸ்தானத்தில் ஏற்பட்டது முதல் மற்ற ஆசாரியர்களுக்குப் போலவே இவருக்கும் தென் கலைத் திருமண் காப்பு ஏற்பட்டிருக்கிறது. 70-75 வருஷங்களுக்கு முன்பு இந்த தேவ ஸ்தானத்திலும் வடகலை வகுப்பினர்கள் விஷம புத்தியுடன் கலஹங்களைச் செய்ய ஆரம்பித்ததும், ஸிவில் கோர்ட்டுகளிலும் கிரிமினல் கோர்ட்டுகளிலும் வழக்குகள் ஏறி, இந்த தேவ ஸ்தானத்தில் வடகலை பரர்களுக்கு எவ்விதமான ஹக்குமில்லை யென்று நீதிபதிகளால் முடிக்கப்பட்டுப் போனதும் பிரஸித்தமானதே. வடகலை பரர்கள் வேதாந்தாசாரியரைத் தங்களுக்கு குருவாகக் கொள்ள என்றைக்கு ஆரம்பித்தார்களோ அன்று முதலாகவே சில தேவஸ்தானங்களில் வேதாந்தாசாரியர்க்கு வடகலை நாமம் போட்டு வைக்க வேணு மென்கிற முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் களென்பதை உலக மறியும். வேதாந்தாசாரியர் திரு நாட்டுக் கெழுந்தருளி ஏறக்குறைப 500 வருஷமாகிறது. அந்த காலந் தொட்டே இவர்களுக்கு வேதாந்தாசாரியரோடு தொடர்பு இருந்திருக்குமானால் கோவில்களில் அவரைப் பற்றின விவாதம் நவீன காலத்தில் இந்த விதமாக ஏற்பட்டிருக்க நியாயமே யிராது.””இதை புத்திமான்கள் ஆலோசிக்க வேணும், வடகலை குருவான வேதாந்தாசாரியர் தென்கலை தேவஸ்தானங்களில் எதற்காக ஸ்தாபிக்கப்படுவர் !! என்று
விவேகிகள் விமர்சிக்க வேண்டும். கோவில்களும், கோவில்களில் நடக்கிற ரீதிகளும் அபரிசுத்தங்களென்று தூஷித்துக் கொண்டு வெகு காலமாகவே விலகி யிருந்தவர்கள், கோவில்களை நாம் அநியாயமாக விட்டு விட்டோமே! என்று அநுதாபம் தோன்றப் பெற்ற நாளில் சில கோவில்களில் வந்து புக ஆரம்பித்து, ஆரம்பமே யுத்த காண்டமாகச் செய்த நாளில் வேதாந்தாசாரியர் தங்களுக்கு குரு வென்றும் தாங்கள் தரிக்கும் நாமத்தையே அவருக்கும் போட்டு வைக்க வேணு மென்றும் தீவிரமான கலஹங்களை உண்டு பண்ணத் தொடங்கினார்கள், அதன் பலனை விபரீதமாகவே இவர்கள் கை கண்டார்கள். அதன் மேல் கோவில்களுக்கு வெளிப்பட்ட இடங்களில் வேதாந்தாசாரியருக்கு ஸன்னிதி நிர்மாணங்களைச் செய்து அங்கே தங்களிஷ்டப்படி நடத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். 10,12 திவ்ய தேசங்களில் இந்த நிகழ்ச்சியை யாவரும் காணலாம். இப்படி வெளிக் கோவில்களைக் கட் டிக்கொண்டு குலாவுவது ஏறக்குறைய நூறு வருஷங்களாக. இதே விதமாக ஸ்ரீ பெரும்பூதூரிலும் வேதாந்தாசாரியர்க்கு தனிக் கோயில் கட்டிக் குலாவ ஆரம்பித்தார்கள். இதில் யாரும் தவறு நினைக்க இடமில்லை. புராதனமான தேவஸ்தானங்களில் புகுந்து கலஹங்கள் விளைப்பதை நிறுத்தி ஸ்வ க்ருஹம் போன்ற இடங்களில் இவர்கள் கொண்டாட்டங்களை நிகழ்த்திக் கொள்வதை தப்பென்று யார் சொல்லுவார்கள்? அவ்வளவோடு சாந்தியுடன் நிற்பது அழகு தாங்கள் முதன் முதலாக எந்தெந்த தேவஸ்தானங்களில் வீண் வம்பு விபாஜ்ஜியங்களைக் கிளப்பினார்களோ அதை அநியாயமாக விட்டு விடுவதா? என்று ரோஷ முண்டாகி இப் போதிப்போதாகப் பழைய கலஹங்களைத் திரும்பவும் கிளப்பப் புறப்பட்டிருக்கிறார்கள் ஸ்ரீ பெரும்பூதூர் ஸன்னிதியில் இவர்கள் கலகங்கள் செய்து கொண்டிருந்த காலத்தில் அதிகாரிகளிடஞ் சென்று “எங்கள் குல குருவான தேசிகருக்கு அநியாயமாய் தென்கலை நாமத்தைப் போட்டு வைத்திருக்கிறார்களே? இது நியாயமா?” என்றுமுறை யிடுவர்கள். அவ்வதிகாரிகள் விசாரணை செய்து உண்மையை யறிந்து கொள்ள தேவஸ்தானத்திற்கு வந்து வேதாந்தாசார்ய விக்ரஹத்தைப் பரிசீலனை செய்வர்கள். விக்ரஹத்தின் லலாடத்தில் தென்கலைத் திருமண் ரேகை ஸ்பஷ்டமாக விளங்குவதைக் கண்டு நீங்கள் வீண் கலஹக் காரர்கள்’ என்று சொல்லி மறுத்து விட்டுப் போவர்களதிகாரிகள். அதற்குமேல் ” ரேகை தென்கலை, குழைத்துப் போடுகிற நாமம் வடகலை ஐயா !” என்று மன்றாடுவர்கள். இப்படிப் பட்ட வம்பு வீண் காலம் கழிந்து வெகு நாளாயிற்று. இந்த விவாதத்தை 10, 15 வருஷ காலமாக ஸ்ரீ பெரும்பூதூரில் ஒருவர் கிளப்பி இதை ஜீவனாதாரமாகக் கொண்டிருக்கிறார். சென்னை ஹிண்டு ரிலிஜியஸ் எண்டோமெண்டு போர்டில் “ஸ்ரீ பெரும்பூதூர் தேவஸ்தானத்திலுள்ள தேசிக விக்ரஹத்திற்கு வடகலை நாமம் போட்டு வைக்க வேணும்” என்று எட்டு வருடங்களுக்கு முன்பு வியாஜ்ஜியம் தொடுத்து பங்கமடைந்து கை யொழிந்திருந்தார். ஜீவனதாரத்தை வீட்டுவிடுவதா? என்று செங்கற்பட்டு ஸப் ஜட்ஜ் கோர்ட்டில் அந்த வ்யவஹாரத்தையே மறுபடியும் த்வஜாரோஹணம் செய்து வைத்தார். நேற்று டிசம்பர் மாதத்திடையில் அந்த வியவஹாரத்திலும் கோர்ட்டு காஸ்டுடன் பங்கமடைந்தாயிற்று. மேன் மேலும் கோர்ட்டுகள் இல்லாமற் போக வில்லையே. உயிருள்ளவளவும் விடேனென்று முஷ்டி பிடித்திருக்கிறார். இவர்களுக்கு வேதாந்தாசாரியார் எந்த விதத்தில் குரு? எத்தனை நாளாக குரு? என்பதை நிரூபணம் செய்து விட்டால் உலகத்திலுள்ள ஸகல தேவஸ்தானங்களுக்கும் வடகலை நாமம் போட்டு வைக்கலாம்.ருஜூவான அந்த வழியில் வருவாரில்லையே என்று பல பெரியார்கள் சோகிக்கிறார்கள். “நாங்கள் யாதவ ப்ரகாசருடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “ஸ்வபலாதுத்தருத யாதவ ப்ரகாச:” என்னப்பட்ட ஸ்வாமி ஸன்னிதியிலே அவருடைய விக்ரஹத்தை வைக்க வேணு மென்று வழக்காடினாலாவது இவர்கள் ஒரு கால் வெற்றி பெறக் கூடும். இனியாகிலும் இந்த வழக்குக்கு முன் வருவார்களா?” என்கிற இந்த வியாஸம் வெளி வந்திருக்கின்றது.
இவர் எழுதியது கிடக்கட்டும். இந்த விபவஹாரத்தைப் பரிசீலனை செய்த ஸப்ஜட்ஜ் என்ன எழுதியிருக்கிறாரென்று பார்க்கவேண்டும்.(15-12-1981) செங்கல்பட்டு சப் கோர்ட்டில் முடிந்த ஸ்ரீ பெரும்பூதூர் கேஸ் (O. S. 29/56) தீர்மானத்தின் 15-வது பாபாவின் (Paragraph 15 of the Judgment) Copyயும் அதன் மொழி பெயர்ப்பும்.
Subsequently the Vadagalais filed four suits in the D. M. C. Kancheepuram namely O S 1058 of 1899 O. S. 33 of 1903, O. S. 60 of 1903 and O. S. 61 of .903. Ex.-A 4 is printed copy of judgment of the District Munsif in O. S. 1)58/59. All these suits went up to the High Court in Second Appeal Nos. 952 to 9.5 of 1905. Ex. A-6 in the printed pleadings for S. A. No 952 of 1905 Tne judgment on these appeais is reported in 1 M. L. J. Page 257. At pages 267 and 263, the High Court has stated as follows:-
“The plaintiffs (Vadagalais) ever since 1885 have been altogether excluded from the office of the first Theertaakar by the defendants who successtully prevented them from exercising any of its functions and enjoying its privileges. We may observe here, that the apparent origin of the dispute which led to the dispossession of Thathachariar is that they wrongly insisted on introducing the Vadagala: Mantram into certain rituals instead of the Tengalai Mantram.”-This observation of the High Court would show that the Thathacharis had to lose their position as first Theerthakar because they attempted to introduce Vadagalai form of worship sometime in 1885 contrary to theestablished usage to Tengalai form of worship……”(ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு):பிறகு, காஞ்சீபுரம் டி. மு. கோர்ட்டில் வடகலையார்கள் அசல் நெ. 1058/1899, நெ. 33. 1903,
நெ. 60/03, நெ. 61/03 உள்ள நான்கு வியாஜ்ஜியங்கள் தொடர்ந்தார்கள். பிரக்ருத கேஸில் Exhibit A-4 என்பது டிெ அசல் நெ. 1058 of 1899-ன் தீர்ப்பின் அச்சுக்காபி. இந்த நான்கு வியாஜ்ஜியங்களும் High Courtக்கு இரண்டாவது Appeal ஆக சென்று Appeal Nos. 952 to 955 of 1905ல் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. Exhibit A-6, என்பது Appeal No. 952/05ல் High Courtல் அச்சிடப்பட்ட கீழ்க்கோர்ட்டு தாவாக்களின் விவரங்கள்
(Printed Pleadings) இந்த அப்பீல்களின் தீர்ப்பு (Judgment) 19 M L.J. Page 257ல் ரிபோர்ட்டு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பக்கம் 267, 263ல் கீழ்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
“வாதிகள் (வடகலையார்கள்) தங்களுடைய முதல்தீர்த்த Office களிலிருந்து அடியோடு பிரதிவாதியால் வெற்றிகரமாக விலக்கப்பட்டு அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களையும் அடைய வேண்டிய மரியாதைகளையும் இழக்கும்படி ஆக்கப்பட்டார்கள். இங்கு நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், தாதாசாரியர் இப்படி தம்முடைய பாத்தியதையை இழக்கும்படி தாவா ஏற்பட்டதற்கு மூல காரணம் அவர்கள் அக்ரமமாக கோயில் சடங்குகளில் தென் கலை மந்திரத்திற்குப் பதிலாக வடகலை மந்திரத்தை புகுத்த வற்புறுத்தியதே” High Courtதீர்ப்பில் கண்டுள்ள மேல்கண்ட வாசகத்தினால் தாதாசாரியர்கள் கி.பி. 1885ம்வருஷத்துக்குச் சேர்ந்தாப் போல் ஒரு காலத்தில், அப்போது நிச்சயமாய் ஏற்பட்டிருந்த மாமூல் தென்கலை ஆசாரத்துக்கு மாாக, பூஜையில் வடகலை ஆசாரத்தைப் புகுத்த ப்ரயத்தனப்பட்டதின் காரணத்தினால் தங்களது முதல் தீர்த்த பதவியை இழக்க நேர்ந்தது என்பது விளங்கும்……’ஆக, இந்த ஜட்ஜ்மெண்டினால் ஸத் ஸம்பிரதாய பாஸ்கரனில் நாமெழுதி யிருந்த விஷயம் ஸத்யமென்று ரூபிக்கப்பட்டதாயிற்று. ஜட்ஜின் பெயரில் மட்டும் மாறுபாடு இருக்கலாமத்தனை—
16-தேசிகனுடைய அவதார ஸ்தலத்தைப் பற்றின ரிகார்டுகளில் எதை யெடுத்தாலும் அத் தலத்தில் தென் கலைத் திருமண் காப்புக்கும் ஸ்ரீசைலேச தயா பாத்ரத் தனியனுக்கும் ப்ராபல்யம் காண்கிறதே யொழிய வடகலைத் திருமண் காப்புக்கும் ராமாநுஜ தயா பாத்ரத்திற்கும் எவ் விதமான ஸம்பந்தமும் காணப் படுவதில்லை. அவை யிரண்டில் திருமண் மட்டும் அத் தலத்தில் இடையில் வந்து புகுந்து கொண்டதென்பது ரிகார்டுகளினால் வ்யக்தமாக விளங்குகின்றது: ராமாநுஜ தயா பாத்ரம் வந்து புகுவதற்கு ப்ரஸக்தியோ அவகாசமோ இல்லை யாயிற்று. வடகலை நாமம் மட்டும் எப்படி வந்து புகுந்த தென்பதைப் பற்றி மேலே விவரிப்போம். முன்னம் சில நூற்றாண்டுகளாகத் தென் கலைத் திருமண்காப்பு தானிருந்த தென்பது அசைக்க முடியாதபடி தேறி யிருக்கின்றது. எதிரிகள் தேசிகனோடு உறவு கொண்டாட ஆரம்பிப்பதற்கு முன்பு அவருடைய திவ்ய மங்கள விக்ரஹம் எவ்விதமான திருமண் ஸந்நிவேசத் தோடிருந்ததோ, எந்த வகுப்பினருடைய கைங்கர்ய ஸாம்ராஜ்யம் அங்கு விளங்கி வந்ததோ அதெல்லாம் நிர் விவாதமாகவும் ஒழுங்காகவும் நடை பெற்று வந்தது. இவர்கள் தேசிகனோடு உறவு கொண்டாட ஆரம்பித்த பிறகு மேலே சொன்ன இரண்டு ஆசாரங்களையும் மாற்ற மிகவும் பாடுபட்டார்கள். நூதன பாத்திரத் தனியன் அங்கு ப்ரவேசிக்க வழியே கிடையா தென்று தெளிந்து கொண்டார்கள்.
17-அந்த ஸமயத்தில் என்ன செய்தார்களென்றால், இந்த தென் கலை வேதாந்தாசாரியரை விட்டுத் தொலைத்து வடகலைத் தேசிகனைப் புதிதாகப் பிரதிஷ்டை செய்து கொண்டு அந்தக் கோவிலில் நாம் நமக்கு இஷ்டமானபடி கோஷித்துக் கொள்ளுவோமென்று நிச்சயித்து வேகவதிக் கரையில் ஸ்ரீரங்கராஜ வீதி யென்கிற ஒரு புதுத்தெருவில் ஒரு கோவில் கட்டி அதில் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய் வித்து அவருக்கு உத்ஸவாதிகளும் யதேஷ்டமாக நடத்தி வந்தார்கள். அங்கு விபவ வருஷத்தில் நடந்த விச்வ ப்ரஸித்தமான கஜேந்த்ர கோலாஹல க்ரீடையினால் அங்கும் வைரஸ்ய முண்டாயிற்று. தேசிகன் தீப ப்ரகாச ஸந்நிதி பரிஸரத்தில் திருவவதரித்தவராகையாலே அந்த பரிஸரத்திலேயே புதியதொரு ஸன்னிதியைக் கட்டி அதிலே ஸ்வாமியை சிஷ்யர்களுடனும் ப்ரதிஷ்டை செய்வித்து அங்கே நம்முடைய கோலாஹலங்களை யதேஷ்டமாகச் செய்வோம்” என்று நிச்சயித்து, ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி. (மைஸூர் ஸ்ரீபரகால மடாதிபதி ஸ்வாமிகளை யநுவர்த்தித்து வேண்டி பழைய தேசிக ஸன்னிதி ஸமீபத்திலேயே புது ஸன்னிதி யொன்று கட்டுவித்து அங்கே ஸ்வச் சந்த கோலாஹலங்கள் செய்து வரத் தொடங்கினார்கள். இதில் விவாதத்திற்கு எவ்விதமான ப்ரஸக்தியும் கிடையாதன்றோ -. ஏதோவொரு விவாத மென்றும் சண்டை யென்று மிருந்தால் தானே அதை வியாஜமாக இட்டு ஆங்காங்குப் பொருளீட்டலாம். சண்டையும் விவாத முமின்றிக்கே நடந்து கொண்டு போவதில் திருப்தி யுண்டாகாமையினாலும் பொருளீட்டுவதற்கு வழி யில்லாமையினாலும், கஷ்டப்பட்டுக் கட்டுவித்த ஸ்ரீரங்கராஜவீதி ஸன்னிதியையும் ஸ்ரீபரகால மடத்து ஸன்னிதியையும் விட்டிட்டு, பழைய ஸன்னிதியிலேபே போராட வேண்டிய தென்று துணிந்து சில வாண்டுகளாய் இங்கே விவாதத்தையும் கலஹத்தையும் வளரச் செய்யப் பாரித்து வருகிறார்கள்.
18-அதிகாரிகளிடம் சென்று இவர்கள் முறை யீடுவது என்ன வென்றால்-
“இந்த அநியாயத்தையும் அக்ரமத்தையும் பார்த்தீர்களா? தேசிகன் வடகலை குரு வென்பது உலக மறிந்த விஷயம். எங்கள் குரு விடம் தென் கலையாருக்கு என்ன காரியம் ? வீணாக எங்களுக்கு மன வருத்தத்தை யுண்டு பண்ண வேணுமென்கிற கெட்ட எண்ணங்கொண்டு தானே எங்கள் குருவிடம் வந்து எங்களுக்குக் கர்ண கடூரமான மந்திரப் பிரபந்தங்களைச் சொல்லி எங்களை ஹிம்ஸிக்கிறார்கள். தென்கலை குரு வான மணவாளமாமுனிகள் முதலானாரிடத்தில் நாங்கள் போகிறோமா? அவர்களுக்கு நாங்கள் ஏதாவது மன வருத்தத்தை யுண்டாக்குகிறோமா? இவர்கள் மட்டும் எங்கள் குருவிடம் வந்து எங்களுக்கு மன வருத்தமான காரியங்களை ஏதுக்குச் செய்ய வேணும் ? இது நியாயமா? தாங்களே பாருங்கள். இது மிகவும் அநீதியென்று தர்மப் பிரபுக்களான உங்கள் மனதில் தோன்றவில்லையா? கொஞ்சம் பெரிய மனது பண்ணி இதைக் கவனியுங்கள்.”என்று முறை இடுகிறார்கள். கண்ணீரைப் பெருக்கி அழுதுங் காட்டுகிறார்கள். அழுகைக் கென்றே இட்டுப் பிறந்த வொருவர் இருக்கிறாரே; அவர் விக்கி விக்கி யழுதுங் கூறுவர் இப் பேச்சுக்களை. சில அதிகாரிகள் இவற்றை யெல்லாங் கேட்டு “ஆமாம், ஆமாம், அநீதி தான்” என்று தலையை யாட்டி விட்டுப் போவார்கள். விவேகிகளும் மேதாவிகளுமான சில அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்து, உடனே அவர்களைக் கேட்கிறார்கள்-
19-என்ன கேட்கிறார்கள் என்றால், ஊன்றிக் கேண்மின்
“நீங்கள் தேசிகரை வடகலை குரு வென்கிறீர்கள்; அவர் வடகலை குருவா யிருந்தால் அவருடைய சன்னிதானத்தில் தென் கலையாருக்கு எப்படி மிராசுகள் கிடைத்திருக்கக் கூடும்? மிராசுகள் கிடைப்பதிருக் கட்டும்; தென்கலையான நமக்கு வடகலை குருவினிடத்தில் என்ன காரியம்’ என்று அவர்களே ஒதுங்கி யிருக்க வேண்டாமா? ‘ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்மார்த்த குருவாகிய சங்கராசாரியரைத் தங்கள் கோவில்களில் வைத்து வழிபாடு செய்வதுண்டா? அவருடைய விக்கிரகம் வீதியிலே வந்தால் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுத் தொழுவதுண்டா? ஸ்ரீ வைஷ்ணவர்களிலேயே அஹோபிலம் ஸ்வாமிக்கு ஆங்காங்கு விக்ரஹம் ஏற்பட்டு உத்ஸவாதிகளும் நடக்கிறதே; அவர் விதியிலே விஜயம் செய்தால் தென்கலையார் தொழுகிறார்களோ? எந்த ஊரிலாவது தொழுகிறார்களோ? இல்லையே. வடகலையாருக்கு அடியோடு சம்பந்தமில்லாத தேவஸ்தானங்களிலும் தென்கலையார் தேசிகரை வைத்து வழிபாடு செய்வதும் தவிர தேசிகருடைய கிரமமான தனியனையும் அவர்கள் சொல்லி வருகிறார்களே; தென்கலை குருக்களின் தனியன்களை நீங்கள் சொல்லுவ துண்டோ? அவர்களுடைய கோவிலுக்காவது போவதுண்டோ? இல்லையே.அவர்கள் மட்டும் தேசிகரை வைத்து உத்ஸவாதிகள் நடத்தி வருவதையும் தனியன் சொல்லித் துதித்து வருவதையும், இந்த ஆசாரங்கள் இன்று நேற்று உண்டாகாமல் புராதனமாக இருந்து வருவதையும் கண்டால் தேசிகரை வடகலை குருவென்று நீங்கள் சொல்லுவதற்கு ஒரு விதமான பொருத்தமும் காண வில்லையே. ஸ்ரீரங்கத்தில் தேவஸ்தானத் தைச் சேர்ந்த தேசிகருக்கு நெடுநாளாக இருந்த தென்கலைத் திருமணை அவித்து ஒரு நிமிஷம் வட கலை நாமமிட்டு வெளியில் கொணர்ந்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதென்றால் அவரை வடகலை குரு வாக எப்படி கொள்ள முடியும். அந்த ஸ்ரீரங்கத்தில் தேசிகர் கோவில் வாசலில் காரைக் கட்டிடமான புராதன தென்கலைத் திருமண் நாளைக் கும் விளங்கிக் கொண்டிருக்கிறதே. அவதார ஸ்தலத்திலிருந்த தென் கலைத் திருமண் காரைக் கட்டிடத்தை நீங்கள் இடித்துத் தள்ளினது போல்-அதை ஏன் இடிக்க முடிய வில்லை. தவிர முக்கியமான ஒரு கேள்வி கேட்கிறேன், திருவள்ளூர் முதலான சில தேவஸ்தானங்கள் தென் கலை
யாக இருந்தவை வடகலையாக மாற்றப்பட்ட பின்பு தென்கலை குருவான மணவாளமாமுனிகளை அந்த தேவஸ்தானங்களிலிருந்து நீங்கள் வெளிக் கிளப்பிவிட்டது போல தென்கலை தேவஸ்தானங்களிலிருந்த தேசிகரை ஓரிடத்திலாவது அவர்கள் அப்புறப்படுத்தியிருக்கிறார்களா? ஆழ்வார் திருநகரியில் ஒரு வடகலை கிருஹமாவது உண்டா? இல்லையே: அப்படிப் பட்ட வூரிலும் தேசிகரை அப்புறப்படுத்தாமல் வைத்து ஆராதிப்பது மட்டுமல்லாமல் அவரை ஆழ்வார் ஸன்னிதிக்கு எழுந்தருளப் பண்ணி உத்ஸவாதிகளும் நடத்தி வருகிறார்களே; தென்கலையார் தானே நடத்தி வருகிறார்கள்: தேசிகர் வடகலை குருவாயிருந்தால் அந்த வூரில் இது நடைபெறுமா? இப்படி நடப்பது அந்த ஒரு ஊரில் மட்டுமன்றே. இதையெல்லாம் நன்கு ஆலோசித்தால் தேசிகரை நீங்கள் வடகலை குரு வென்று சொல்லுவதையும், தென்கலையாரை தேசிக த்ரோஹிகளாகச் சொல்லுவதையும் நம்புவதற்கு ஈஷத்தும் இடமில்லையே! ‘இதற்கெல்லாம் பூரண தருப்திகரமாக பதில் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள். யார் கேட்கிறார்கள் ? நடு நிலையிலிருக்கும் அதிகாரிகள்.
20-அப்போது வடகலையார்கள் என்ன பதில் சொல்லுகிறார்களென்றால், அதையும் நாமே தெரிவிக்கிறோம்.(வடகலையார் சொல்லுவது)-தென்கலையாருக்கு தேசிகரிடத்தில் உண்மையான பக்தி இருக்குமே யானால் அவர்கள் தேசிகப் பிரபந்தங்களை ஏன் சொல்லுவதில்லை? தாங்கள் ஆலோசித்து ராமாநுஜ தயா பாத்ரத் தனியனை எதற்கு ஆக்ஷேபிக்க வேண்டும்? இதை பதில் சொல்லுங்கள் என்கிறார்கள். மருமங்களை நன்கறிந்த அதிகாரிகளானால் உடனே பதில் சொல்லிவிடுகிார்கள் : மருமமறியாத வர்களானால் தென்கலைத் தலைவர்களிடம் தத்துவங்களைக் கேட்டுணர்ந்து கொண்டு நல்ல தெளிவுடன் பதில் சொல்லுகிறார்கள். அதாவது,
“ தென் கலையார்கள் தேசிகப் பிரபந்தங்களை ஏன் சொல்லுவதில்லை ? என்கிற கேள்வியானது அசட்டுத் தனமான கேள்வியாகும். தேசிகர் மணி ப்ரவாள பாஷையில் செய்த ரஹஸ்யங்களில் ஆதியி லும் அந்தத்திலும் வடமொழி ஸ்லோகங்களைச் செய்து சேர்த்திருப்பது போல தமிழ்ப் பாசுரங்களையும் செய்து சேர்த்திருக்கிறார். அவ்வளவே யொழிய, தேசிகப் பிரபந்தமென்று அவர் தனியாக யாதொரு பிரபந்தமும் இயற்றி யிருக்க வில்லை ரஹஸ்ய நூல்களிலுள்ள பாசுரங்களை நீங்கள் ஒன்று சேர்த்துப் பிரபந்தமாக்கி, பிரபங்தங்களுக்குப் பெயர்களையும் புதிதாக இட்டு சண்டைக்கு வழி தேடினீர்கள். இதைத் தென்கலையார் ஆமோதிக்க ப்ரஸக்தி யில்லாமை யாலே அவர்கள் இந்த பிரபந்தங்களைச் சொல்லுவதில்லை. அல்லது, தேசிகப் பிரபந்தங்களென்பவை தேசிகர் செய்த தென்றே வைத்துக் கொண்டாலும் அவற்றைத் தென் கலையார் சொல்லியே யாக வேணு மென்று என்ன கட்டாயம் -இராமாநுஜருடைய சிஷ்யரான அருளாளப் பெருமாளெம் பெருமானார் செய்த ஞானசார ப்ரமேயசாரங்களை நீங்கள் சொல்லுகிறீர்களோ? ஸ்ரீராமாநுஜர் செய்த கத்யத்ரயம், கூரத்தாழ்வான் செய்த பஞ்சஸ்தவம்,பட்டர் செய்த ஸ்ரீரங்க ராஜஸ்தவாதிகள்…… இவற்றை யெல்லாம் நீங்கள் சொல்லுகிறீர்களோ? திருவரங்கத் தமுதனாருடைய திருக் குமாரரான பிள்ளைப் பெருமாளையங்கார் செய்த அஷ்டப் பிரபந்தங்களையாவது நீங்கள் சொல்லுகிறீர்களோ? இல்லையே. இவற்றை நீங்கள் சொல்லாததனால் அந்தந்த ஆசாரியர்களிடத்தில் உங்களுக்கு துவேஷம் என்று சொன்னால் நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? வழக்க மில்லாதவற்றைப் புதிதாக எப்படி சொல்ல முடியும்? என்பீர்கள். இப்படித்தான் தென்கலையார்களும் சொல்லுகிறார்கள். ஆகவே அவர்கள் தேசிகப் பிரபந்தங்களை ஏன் சொல்லுவதில்லை யென்கிற கேள்வி அசட்டுத் தனமாகவே யுள்ளது. சண்டைக் கென்று புதிதாக
ஏற்பட்ட ராமாநுஜாபாத்திரத்தை அவர்கள் ஏன் சொல்லுவதில்லை யென்கிற கேள்வியும் மிகவும் அசட்டுத்தனமானது ஸ்ரீமான் வேங்கட தனியனை அவர்கள் ஆதரித்து வரும் போது அவர்கள் மீது
நீங்கள் குறை கூறுவதற்கு நியாயமே யில்லை. ஆகவே நீங்கள் தேசிகரை வடகலை குருவென்பதும் தவறு; தென்கலையார்களை தேசிக த்வேஷிகளென்றும் த்ரோஹிகளென்றும் சொல்லுவதும் தவறு. “என்று பதில் சொல்லித் தெளிவு படுத்துவார்கள்.
21-தேவாலயங்களில் பழைய ஆசார மென்பது தனிப்பட்டது.அதற்கு விரோதமாகச் செய்பவர்களை ஆக்ஷேபித்தால் இந்த ஆக்ஷேபம் எதனாலென்று பார்க்க வேணும். புதிது என்கிற காரணத்தினால் ஆக்ஷேபமே யொழிய வேறொன்றினால்ல என்று தெளிய வேணும். ஆளவந்தார் ஸ்தோத்ரம் அநுஸந்திக்கத் தொடங்கும் போது ஒருவர் ஸ்ரீராமாநுஜருடைய தனியனைச் சொன்னால் ஆஷேபம் உண்டாகிறது. இதனால் இந்த ஆக்ஷேபகருக்கு ராமாநுஜரிடத்தில் துவேஷம் என்று சொல்லி விடுவதுண்டோ ? புதிதாகத் தோன்றும் அநீதியான காரியங்களை ஆக்ஷேபிப்பது புதிது என்கிற காரணத்தினாலேயே தவிர,ஆசாரியரிடத்தில் த்வேஷத்தினா லன்று என்பதைத் திடமாகக்
கொள்க-
22-தேசிகனுடைய திருவவதார ஸ்தலத்து நிகழ்ச்சியைப் பற்றி இனித் தெரிவிப்போம். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருடைய ஸன்னிதிக் கெதிரே யுள்ள தேசிகர் ஸன்னிதி வாசலில் தென்கலைத் திருமண்காப்பு காரைக் கட்டிடமாக இற்றைக்கும் விளங்குவது போல தீப ப்ரகாச தேசிக ஸன்னிதியிலும் தென்கலைத் திருமண்காப்பு விளங்கிக் கொண்டிருந்தது. அப்படியே உள்ளேயும் தென்கலைத் திருமண்காப்புகள் விளங்கிக் கொண்டிருந்தன. சில வட கலையார்கள் வெளித் திருமண் காப்பை மாறுபடுத்த 1874-ஆம் வருடத்தில் தீவிரமான முயற்சி செய்ய, அப்போது ஸ்ரீ காஞ்சியில் வ்யாபகராக விளங்கின திருப்புட்குழி அப்பா ஸ்வாமி யென்கிற ஸ்ரீக்ருஷ்ண தாதாசாரியர் ஸ்வாமியும் அந்த முயற்சியில் கலந்து கொண்டனர். அதன் மேல் கிரிமினல் கேஸ் ஏற்பட்டது. மேலே குறித்த திருப்புட்குழி அப்பா ஸ்வாமியும் அந்த கிரிமினல் கேஸில் எதிரியாக்கப் பட்டிருந்தார். மிஸ்டர் குரோல் துரையின் முன்னிலையில் பிரபலமான விசாரணை நடந்து 23-10-1874 ல் ஜட்ஜ்மெண்டு
தோன்றி யிருக்கிறது. இது சம்பந்தமான ரிகார்டுகள் முழுவதும் அச்சாகி கேஸ்களில் தாக்கலாகியு மிருக்கிறது.
23-தற்போது அந்த ஜட்ஜ்மெண்டில் ஒரு பகுதி மட்டும் முக்கிய மாக வெடுத்து மொழி பெயர்ப்புடன் இதன் கீழ் வெளியிடப்படுகிறது. CALENDAR OF PERSONS TRIED BEFORE C. S. CROLE ESQUIRE AG. JOINT MAGISTRATE OF CHINGLEPUT DISTRICT No. of the Case 72 of 1874
Name and description of the accused:-
I. T. Srinivasavaradschari 1, R. Varadachari 2, Aiya Tirumalaitatachari 3, Sir Krishnatatachari 4, (and 10 others).
IV. Name of Complainant:- Ramanujachari
True copy of last portion of judgment, (matter in brackets inserted for clarification.)
“I have no hesitation in deciding that the account of the affair given by 4th defendant (Sri Krishnatatachari) is a true one. He says that soon after the temple was made over in December last (1873), some Vadagalai, to him unknown, converted the Tengalai Namam in question (large Tengalai Namam in brick and chunam above the main entrance of the Vendanta Desikar shrine of Vilakkadi Koil) into a Vadagalai one by removing the base. It is in evidence that there was no guard placed there at nights, that doors were not even locked and that one man unassisted could casily have climbed up and committed the act during the night without being discovered.
While acquitting the defendants on this charge also I consider that in the interests of peace and order the 4th defendant, as custodian of the fabric of the temple, should lose no time in showing the bonafide of his defence by restoring the mark to its former condition:
The court further remarks with extreme reprehension that the defendan or their friends in Madras have sought to bring private influence to bear over the address decision of these matters by causing Dr. Stambrough. Health officer of Madras to to me a letter recommending the defendants to favourable consideration.
I can only characterise this as a grievous indiscretion and Dr. Stambrough’s conduct as a most grave contempt, the slightest repetition of which will subject the perpetrator to the penalties provided for the offence.
(Sd.) C. S. CROLE,
Ag. Joint Magistrate, 23-10-1874.
செங்கல்பட்டு ஜில்லா ஆக்டிங் ஜாயிண்ட் மாஜிஸ்ட்ரேட்டு
C. S. க்ரோல் துரையவர்கள் முன்பாக விசாரணை நடந்த C. C. 72 of 1874
பிராதியின் பெயர் : இராமானுஜாசாரி தென்கலை – எதிரிகளின் பெயர் : 1. T. ஸ்ரீனிவாஸவரதாசாரி, 2. R. வரதாசாரி, 3. ஐயா திரும தாதாசாரி, 4. ஸ்ரீகிருஷ்ண தாதாசாரி, (இன்னும் 10 பேர்கள்)
தீர்ப்பின் கடைசி பாகத்தின் மொழி பெயர்ப்பு (Bracket களிலுள்ளவை விவரணத்திற்காகச் சேர்த்தவை.)இந்த விஷயத்தைப் பற்றி நான்காவது பிரதிவாதி (திருப்புட்குழி ஸ்ரீகிருஷ்ண தாதாசாரியார்) கொடுத்த தகவல் தான் சரியானது என்கிற முடிவிற்குத் தயங்காமல் வருகிறேன். அவர் சொன்னதாவது, சென்ற வருஷம் (1873) டிசம்பர் மாதத்தில் இந்த கோயில் (தம்மிடம்) சுவாதீனம் செய்யப்பட்ட உடனே, தமக்குத் தெரியாத, ஏதோ ஒரு வடகலை நபர் தாவா தென்கலை
நாமத்தை(விளக்கொளி கோயிலைச் சேர்ந்த வேதாந்தாசாரியரின் சன்னிதி| கோபுர வாசலின் மேலுள்ள செங்கலினாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்டிருந்த பெரிய தென்கலை நாமத்தை) அடியிலுள்ள பாதத்தை இடித்து விலக்கி வடகலை நாமமாக மாற்றி விட்டார் என்பதே. இரவு காலங்களில் அங்குக் காவல்காரன் வைக்கப்படவில்லை என்றும், கதவுகளைப் பூட்டுவது கூட கிடையாதென்றும், ஒரு மனிதன் யாதொரு உதவியாளுமின்றி இரவில் சுலபமாக மேலே ஏறி, யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி, இந்த காரியத்தைச் செய்திருக்கக் கூடுமென்றும் சாக்ஷிகள் மூலம் ஏற்படுகிறது. இந்தக் குற்றச் சாட் டினின்றும் (இன்னார் தான் செய்தார் என்று ருஜூவாகாத படியால்) எதிரிகளை விடுவிப்பதுடன், நாம் என்ன சொல்லக் கருதுகிறே மென்றால், இந்த
கோயில் நிர்வாஹம் முழுவதும் தம்முடைய ஆதீனத்திலுள்ள நான்காவது பிரதிவாதி சமாதானம் நிலை நிற்றல் பொருட்டும் ஒழுக்கத்திற்காகவும், இந்த நாமத்தை சிறிதும் கால தாமதமின்றி உடனே பழைய ரீதியாகவே மாற்றி யமைத்து, தாம் தண்டனை யினின்றும் மீறச் சொன்ன பதிலின் ப்ராமாணிகத் வத்தை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்பதே.-இந்த கோர்ட்டு மிகமிக அருவருப்புடன் இங்குக் குறித்துச் சொல் லுகின்ற மற்றொரு விஷபம் என்ன வென்றால், பிரதிவாதிகளோ, அல்லது மத ராஸிலுள்ள அவர்களின் சினேகிதர்களோ, டாக்டர் ஸ்டாம்பரோ என்னும் மதராஸ் சுகாதார அதிகாரியிடமிருந்து, பிரதி வாதிகளிடத்தில் நாம் பக்ஷபாதமாக நடந்து கொண்டு அவர்களுக்கனுகுணமாக இந்த கேஸ் விஷயங்களில் தீர்ப்பு செய்யும்படி ஒரு சிபார்சு கடிதம் தருவித்திருக்கிார்கள் என்பது, இதை நாம் மிகவும் வருந்தத் தக்க மதி கேடு என்றுதான் சொல்லக் கூடும்.டாக்டர் ஸ்டாம்பரோவின் இந்த நடத்தை மிகவும் கேவலமாக மதிக்கத் தக்கது. மறுபடியும் இத்தகைய காரியம் சிறிதளவாகிலும் எவர் செய்தாலும் இத்தகைய குற்றத்திற்கென்று விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு அவர் உட்படுவர்.
(கையொப்பம்) C. S. குரோல்
ஆக்டிங் ஜாயிண்டு மாஜிஸ்ட்ரேட்டு 23-10-1874
24-மேலே உதாஹரித்த தீர்ப்பினால் பொது மக்களுக்கு என்ன வுண்மை தெரிய வருகிறதென்றால், குரோல் துரையானவர் தன்னிடம் எதிரியாக ஆஜரான திருப்புட்குழி ஸ்வாமியின் வாக்கு மூலத்தைப் பிராமாணிகமாக நம்பி, (அதாவது) தேசிகர் ஸன்னிதி வாசலில் காரைக் கட்டிடமாக இருந்த தென்கலைத் திருமண் காப்பை யாரோ இன்னாரென்று தெரியாத சில வடகலையார்கள் அதர்க்கணமாக (தமக்கும் தெரியாதபடி) இடித்து விட்டதாகவும், பழையபடியே புதுப்பித்து விடுவதாகவும் ஒப்புக் கொண்டதை நம்பிப் பிரதிவாதிகளை விடுதலை செய்து விட்ட தாகத் தெரியவருகிறது. இடிக்கப்பட்ட அந்த தென்கலைத் திருமண்காப்பை முன்போலவே பரிஷ்காரப்படுத்தி வைத்தாரென்றும் தெரியவருகிறது.
25-ஆனால் இப்போது அந்தத் திருமண் காணப்படாமல் வடகலை நாமம் காணப்படுவதற்கு என்ன கார்ணம் ? அப்பீலில் மாறி விட்டதா என்ன ? என்று சிலர் கேட்கக் கூடும். மேலே நாம் உதாஹரித்த குரோல் துரையின் ஜட்ஜ்மெண் டின் முடிவு பாகத்தை மறுபடியும் ஒருமுறை வாசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அந்த துரையை எதிரிகள் பிரபலமான சிபார்சு கொண்டு ஸ்வாதீனப் படுத்தப் பாரித்தார்களென்று அருவருப்பைக் காட்டி மிக்க வருத்தத்துடனல்லவா அவர் தம்முடைய தீர்ப்பை முடித்திருக்கிறார் ? சிபார்சின் வலிமையினால் சிலர்க்குச் சிலவிடங்களில் வெற்றி கிடைக்கின்றது போலும். உண்மையில் இவர்கள் சில விடங்களில் சிபார்சு கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார்களென்பது நிஸ் ஸந்தேஹம். இதற்கு மேல் நாம் என்ன எழுத வேண்டும்? ஏதேந ஸர்வம் விசதம்.
நாம் இந்நூலில் 41 -ஆம் பக்கத்தில் முக்கியமான முப்பது வாக்ய ச்ரேணிகளின் விவக்ஷையைத் தெரிவித்து இவ்வளவும் எழுதிவந்தோம். 25 வாக்ய ச்ரேணிகள் முற்றுப் பெற்று விட்டன. சேஷித்திருக்கும் ஐந்து வாக்ய ச்ரேணிகளை லோகாபிராமமாக எழுதி முடிக்கின்றோம் “ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ப்ரூயாத் ஸத்யமப்ரியம்” என்கிற வசனம் நம்முடைய சிந்தனையில் ஊறி யுள்ளது. இந்நூலில் நாமெழுதியுள்ளவை யெல்லாம் ஸத்யமா யிருந்தாலும் சிலர்க்கோ பலர்க்கோ அப்ரியமாகவே யிருக்கும். இதை நாம் அறிந்து வைத்தும் ‘உலகுக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்’ என்னுமோ ரெண்ணத்தினாலேயே இவற்றை வெளியிட்டோம்.
26-வடகலை மதத்தைச் சேர்ந்தவரான ஒரு தாதாசாரியர் தாமெழுதி வெளியிட்டுள்ள ஸம்ப்ரதாய ப்ரதீபமென்னும் வடமொழிச் சுவடியில் “நிர்ப்பந்தா தேவ” இத்யாதி வாக்யச்ரேணியில் ஸ்ரீராமாநுஜர் கூரத்தாழ்வானை அமுதனார் திரு மாளிகையில் நிமந்த்ரணத்திற்குப் போக விட்டுச் சூழ்ச்சியினால் ஸ்ரீரங்க தேவஸ் தானக் கொத்துச் சாவியைக் கைப்பற்றின ஐதிஹ்யத்தை எழுதி அந்த ராமாநுஜரே நிர்ப்பந்தத்தினால் கோயிலில் புராதனமான வடகலை நாமத்தை மாற்றித் தென்கலை நாமமாக்கினா ரென்றெழுதி, அப்படி ராமாநுஜரால் மாற்றப்பட்டதை மறுபடியும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர எங்கள் பெரியோர் முயற்சிகள் செய்து வருவது யுக்தமே யென்று முடித்திருக்கிறார் அந்த தாதாசாரியர். இதை நாம் நமது நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளோம். உலகம் முழுவதும் பார்த்திருக்கிறது. இதை வடகலைப் பெரியார் ஒருவரும் மறுக்காமல் ஆமோதித்து வருகிறார்கள். உடையவர் காலத்திற்கு முன்னே வடகலைத் திருமண் தான் இருந்த தென்றும், உடையவரே தென்கலைத் திருமணை ப்ரவர்த்திப்பித்தவரென்றும் அந்த தாதாசாரியருடை யவும் அவரைச் சேர்ந்த வகுப்பினருடையவும் ஸித்தாந்தமாகத் தேறி நிற்கிறது. ஸ்ரீராமாநுஜரை யன்றித் தேவு மற்றறியா திருந்த தேசிகன் ஸ்ரீராமாநுஜருடைய வழியை விட்டு வேறு வழியில் சார்ந்திருக்க மாட்டாரென்பதை நாம் சொல்ல வேணுமோ ?
27-திருமண்காப்பு விபர்யயத்தை ஸ்ரீராமாநுஜரும் கூரத்தாழ்வானும் சேர்ந்து செய்ததாக ஸம் ப்ரதாய ப்ரதீபகாரர் பறை சாற்றி வருவது யுக்தமாயிருக்க ஒளசித்யமில்லை. ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் எஞ்ஞான்றுமுள்ள வொரு பத்ததியை நிஷ்கண்டகமாக்கின் பெருமைதான் ஸ்ரீராமாநுஜர்க்கு உள்ளது. “ஆரண நூல் வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கு, ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்,
ஏரணி கீர்த்தி யிராமானுசமுனி யின்னுரை சேர்,
சீரணி சிந்தை யினோம் சிந்தியோமினித் தீவினையே” என்றிருக்குமாசிரியர் அல்வழக்கில் ஒருகாலும் புகாரென்பது திண்ணம்.
28-பகவத் ராமாநுஜ ஸித்தாந்த நிர்த்தாரண ஸார்வ பௌமரான தேசிகனை ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களும் ஸம ரூபமாக வழி படக் கடமைப் பட்டவர்கள். “அகில ஜகந் மாதரம் அஸ்மந் மாதரம்” என்ற கணக்கிலே அவர் எங்களுக்கே ஆசாரியர், எங்களுக்கே ஆசாரியர் என்று யார் கொண்டாலும் ஏற்கும் ஏற்கும் என்னத் தகுமத்தனை. இந் நூலில் நாம் விளக்கின உண்மைகளுக்கு மாறாக விபரீத ஸரணிகளைப் பின் பற்றி திவ்ய தேசங்களில் க்ஷோபங்களை வளரச் செய்து கொண்டு போவது பக்திமான்களுக்குப் பாங்கன்று என்றுரைப்பது தான் இந் நூலுக்கு ஜீவாதுவான விஷயம். ஒரு வகுப்பினர் கூரத்தாழ்வானிடத்திலே அபரிமிதமானயாரேனும் ஈடுபாடு கொண்டு அவரையே தங்களுக்குக் குல தெய்வமாகக் கொண்டால் இதை தடுப்பாருண்டோ? அதே போல பட்டரிடத்திலோ மற்றோராசிரிய ரிடத்திலோ ஈடுபாடு கொண்டு அவரவர்களைத் தம் தமக்குக் குல தெய்வமாகக் கொள்ளுமவர்களையும் தடுப்பாரில்லை. ஆனால், தொன்று தொட்டு வரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய
ஸங்கேதங்களைக் கடவாமல் அவற்றை யடி யொற்றியே நடந்து கொள்வது தான் உற்றது. அருளாளப் பெருமாளெம் பெருமானாரைக் குல தெய்வ மாகக் குலாவுமவர்கள் அவர்களுடைப் தனியனையும் வாழி திருநாமத்தையுந் தான் சொல்ல வேண்டு மென்கிற கிளர்ச்சியை ஓரிடத்திலும் உண்டு பண்ண வில்லை-தெய்வமாகக் அனந்தாழ்வானையோ எங்களாழ்வானையோ மற்று எந்த ஆசாரியரையோ குல தெய்வமாகக் கொள்ளு மவர்களும் அவர்களுடைய தனியன்களையும் வாழி திருநாமங் களையுமே தான் சொல்ல வேணு மென்கிற கிளர்ச்சியையும் இதுகாறும் உண்டு பண்ணி யிருக்கவில்லை -இதற்கு என்ன காரணம் தெரியுமோ? தொன்று தொட்டு வரும் ஆசரணையில் சோபத்தையும் விளைவிக்கலாகா தென்கிற பீதியும், விளக்க வேண்டிய அவசியமில்லை யென்கிற உறுதியுமே காரணம். இவை யிரண்டுமில்லாதவர்கள் ஸாஹஸமாகவே பல க்ஷோபங்களை விளைக்க முயன்றார்கள். அதன் பலனை அடிக்கடி கைமேல் கண்டு வைத்தும் சாந்தி பிறவாமைக்குப் பிராமாணிகர்கள் சோகிக்க வேண்டியது தவிர வேறில்லை.
29-அக்காலத்தில் அஸ்மக் குலகூடஸ்தரான ப்ரதிவாதி பயங்கராசார்யரும்,-சிறிது பிற்காலத்தில் சோளஸிம்ஹபுரம் தொட்டயாசார்யரும் வேதாந்தவாசிரிய ரிடத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர் களென்பதை இந்த நவீனர்களும் இசைகின்றார்கள். அவ் விருவருடையவும் ஸந்ததி பரம்பரை அநுஸ்யூகமாக வந்து கொண் டிருப்பது ப்ரஸித்தம், ஸ்வாமி தொட்டயாசார்யருடைய ஸந்ததி சோள ஸிம்ஹ விச்ராந்தம். ப்ரதிவாதி பயங்கராசார்யருடைய ஸந்ததி நாற்றிசையிலும் பெரும்பாலும் பரவியுள்ளது. இவ்விரு ஸந்ததிகளிலும் வேதாந்தாசார்யரென்கிற நாமகரணம் வைஷம்யம் முற்றின இக் காலத்திலும் மாறாமல் அநுவர்த்தித்து வருகிறது.-இவர்களுடைய குடும்பங்களில் வேதாந்தாசார்ய விக்ரஹாராதன முள்ளது-திருவிந்தளூர் முதலான தென்னாட்டுத் திருப்பதிகளில் வாழும் பிரதி வாதி பயங்கர வம்சஸ்தர்கள் தங்கள் பரம்பரையில் நயனாராசார்ய நாமகரணமும் செய்து வருகிறார்கள். இவர்கள் பரிமள ரங்கநாதன் ஸன்னிதியில் வேதாந்தாசார்ய விக்ரஹ ப்ரதிஷ்டையும் செய்வித்து உத்ஸவ பரிபாலநாதிகளை இற்றைக்கும் ஒழுங்கு பட நிர்வஹித்து வருகிறார்கள். நவீனர்களுக்கு அங்கு தேவஸ்தானத்தில் பிரவேசம் இல்லாமையினாலே பாஹ்ய ஸ்தலத்தில் புதிதாக ஆலய நிர்மாணம் செய்வித்துச் சில வருஷ காலமாய்த் தனியான வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது
திவ்ய தேசத் தெம்பெருமானுடைய ப்ரஸாத பஹுமானங்களைப் பெற்று ஆனந்தமாக வாழ்கிற ஆசார்யருடைய முன்னிலையில் இப்படியொரு தனிக் கூத்து நடத்த வேணு மென்று தோன்றினது எதனாலோ தெரிய வில்லையே. இக் கூத்து ஒன்றிரண்டு ஸ்தலங்களி லன்றே–
30-இத்தகைய தனிக் கூத்துக்குக் காரணத்தை நவீனர்கள் ஒரு விதமாகச் சொல்லி வருகிறார்கள். அதாவது,” தென்கலைத் திருமண் காப்பு சாத்தியும், தென்னாசாரியர்களுடைய மந்த்ர ப்ரபந்த வாழி திருநாமங்களைச் சொல்லியும் நடத்தப் பட்டு வருகிற பத்ததி எங்களுக்குப் பிடிக்காமையினலே நாங்கள் தனிக் கோவில் கட்டிக் குலாவுகிறோம்” என்பதாக. இவ் விஷயம் திருப்பித் திருப்பி விமர்சிக்கப் படுமளவில் தலை வேதனையே யுண்டாகும். தேசிகன் திருநாடலங்ரித்து ஐந்நூறு வருடமாய் விட்டது ஸகல ஆழ்வார்களும் ஸகல ஆசிரியர்களும் மணவாள மாமுனிகளுக்கு முற்பட்டவர்களே யொழிய பிற்பட்டவர் ஒருவருமிலர். ஸகல ஆழ்வாராசாரியர்களுக்குமுள்ள அனுஷ்டான ஸரணி தானே தேசிகனுக்கும் ப்ராப்தமாகும். வேறு பத்ததி எங்கிருந்து எவ்விதமாக வர முடியும் ? இந்தக் கிளர்ச்சி திவ்விய தேசங்களில் தேசிக விக்ரஹ ப்ரதிஷ்டை ஏற்பட்ட காலம் முதலாகவே உண்டாயிருக்குமாகில் சில விமர்ச விசேஷங்களுக்கு அவசியமுண்டாகும். நவீனர்களின் இக் கிளர்ச்சிகளெல்லாம் அதி நவீன காலத்தில் தான் தோன்றியவை யென்பது உறுதி. தோன்றின காலம் முதலாகவே எங்கும் அபராதங்களும் தண்டனைகளுமேயாய்க் காலம் கழிவதால்… இதை யெல்லாம் நன்கு ஆராய்ச்சி செய்யவல்ல மத்யஸ்த மேதாவிகள், இவர்களுக்கு நாம் நவீனர்களென்று சாத்திய பட்டமும் கோவில்களில் வீண் விவாத வளர்ச்சிக்காகவே இவர்கள் தேசிக னோடு உறவு கொண்டாட ஆரம்பித்தார்க ளென்பதும் பிராமாணிகமே யென்று உகக்கத் தட்டில்லை. இவ்வளவும் நாம் ஆர்ஜவத்தோ டெழுதினபடி..
ஸ்ரீகாஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்அண்ணங்கராசாரியரெழுதிய-வேதாந்த தேசிக வைபவமும் அநுபந்தங்களும் முற்றுப் பெற்றன.
——————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply