ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-ஆறாம் பத்தின் ஸாரம்-ஸ்ரீ. உ வே. வித்வான்‌ திருமலை அனந்தாண்‌ பிள்ளை க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமிகள்–

கீழ்‌ ஐந்தாம்பத்தில்‌ நோற்ற நோன்பு தொடங்கி நான்கு பதிகங்களால்‌ ஆழ்வார்‌ எம்பெருமானை நான்கு தடவைகள்‌ சரணம்‌ புகுந்த போதிலும்‌ தம்‌ மிஷ்டம்‌ நிறை வேறாமையர்ல்‌ வருந்தி ஒரு நாயகியின்‌ நிலையை அடைந்து ஆற்றாமை கரை புரண்டு, அதனை அண்மையிலுள்ள திருவண் வண்‌டூரெம்பெருமானிடம்‌ விண்ணப்பித்து வரும்படி குருகு நாரை முதலிய பக்ஷிகளைத்‌ தூது விடுகிறார்‌ வைகல்‌ பூங்கழிவாயில்‌, பஷிகளால்‌ அறிவிக்கப்பட்ட எம்பெருமான்‌ சிறிது தாமதித்து வர, பராங்குச நாயக ப்ரணய ரோஷத்தால்‌ போகு நம்பீ! உன்னுடனே கூடேனென்று ஊட, அவ் வூடலைத்‌ தீர்த்து க்ருதக்ருத்யனான எம்பெருமானுடன்‌ கூடுகிறாள்‌ மின்னிடை மடவாரில்‌, தம்‌ ஊடலைத்‌ தீர்த்துச்‌ சேர விட்டுக்‌ கொண்டதைக்‌ கண்டு ஆச்சர்யமடைச்த ஆழ்வார்‌ விருத்தவிபூதிகத்வத்தைக்‌ (ஓரிடத்தில்‌ ஒரு காலத்தில்‌ சேராத வறுமை செல்வம்‌, சுவர்க்கம்‌ நரகம்‌ முதலிய பலவற்றைத்‌ தன்னோடு சேர்த்து நியமித்து வரும்‌ தன்மையைக்‌) காட்டக்‌ கண்டு புகழ்ந்து,ஸம்ஸாரிகளுக்கு அவன் திருவடிகளல்லது புகலில்லை யென்று உபதேசிக்கிறார்‌ நல் குரவில்‌, பிறந்த வாற்றில்‌ (5-10) உன்‌ சிறந்த குணத்தால்‌ உருகுந் தன்மையைப்‌ போக்க, தரித்து நின்று குணாநுபவம்‌ செய்யும்படி. அருள வேணும்‌” என்று செய்த ப்ரபத்திக்குப்‌ பயனாக எம்பெருமான்‌ ஸ்ரீப்ருந்தாவன சரிதங்களை அனுபவிப்பிக்க அனுபவித்து ‘என்ன குறை வெனக்கு? என்று களித்துப்‌ பேசுகிறார்‌ குரவை யாய்ச்சியரில்‌, அவ் வ்னுபவம்‌ தம்மை மோஹிக்கச்‌ செய்ய, தமக்குப்‌ பிறந்த துக்கத்தையும்‌ தொலை வில்லி மங்கலத்‌ தெம்பெருமானுக்கே அற்றுத்‌ தீர்ந்த தம்‌ தன்மையையும்‌ தாய்மார்க்குத்‌ தோழி கூறுவதாகப்‌ பேசுகிறார்‌ துவளில்‌ மாமணிமாடத்தில்‌. இப்படிப்‌ பேசிய தோழி தானும்‌ பராங்குச நாயகியைப்‌ போல்‌ மோஹிக்க’ தரித்திருக்கிற தாய்‌ தன்‌ பெண்ணின்‌ வளை முதலியவை தாமே விட்டு நீங்குகிற படியைக்‌ கண்டு *என் பெண்‌ வளை யிழந்தாள்‌, மாமை திறமிழந்தாள்‌? என்று இழந்தவற்றைத்‌ தனித் தனியே சொல்லிக்‌ கதறுகிறாள்‌ மாலுக்குப்‌ பதிகத்தில்‌, இவ்வாறு புலம்பித்‌ தாயும்‌ மோஹிக்கவே முன்பு தாய்‌ உச்சரித்த, மால்‌ வையமளந்த மணாளன்‌ முதலிய திரு நாமங்களைக்‌ கேட்டு உணர்ந் தெழுந்த பராங்குச நாயகி திருக்கோளூர்க்குச்‌ செல்ல, பின்புணர்ந்த தாய்‌ படுக்கையில்‌ மகளைக்‌ காணாமல்‌ கலங்க, திருக்கோளூரெம்பெருமானிடம்‌ மிக்க ஈடுபட்டிருந்த தன்‌ மகள்‌ அவ்வூர்க்கே சென்றிருக்க வேண்டும்‌ என்நு அறுதியிடுகிறாள்‌ உண்ணுஞ்சோற்றில்‌. திருக்கோளூர்க்குப்‌ புறப்பட்ட தலைவி போக முடியாமல்‌ நன்னூரருகிலுள்ள தோட்டத்தில்‌ தங்கி யிருந்து மறுபடியும் பக்ஷிகளைத்‌ தூது விடுகிறாள்‌ பொன்னுலகில்‌. தூது விட்ட்‌ பஷிகள்‌ தமது அழு குரலைக்‌ கேட்டுப்‌ போக முடியாமல்‌ இரங்கவே, *பகுத்தறிவற்ற பஷிளும்‌ இரங்கும்படி யிருக்கும்‌ தம்மழு குரலைக்‌ கேட்டால்‌ பரம சேதநனான பரமபத நாதன்‌ இரங்காமலிரான்‌” என்று நினைத்துத்‌ தம்‌ கண்ட த்வநியாலே ஸ்ரீ வைகுண்டத்‌திலிருந்து அவனை அழைத்துக்‌ கொள்ளக்‌ கூப்பிடுகிறார்‌ நீராய்‌ நிலனாயில்‌.-இங்ஙனம்‌ கூப்பிட்டும்‌ எம்பெருமான்‌ வந்து முகங்காட்டாமையினால்‌ வருந்திய ஆழ்வார்‌–ஆச்ரிதர்க்கு முகங்காட்டுவதற்காகவே ராம க்ருஷ்ணாத்ய வதாரங்‌களைப்‌ பண்ணியதையும்‌, பிற்பட்ட ஸம்ஸாரிகளும்‌ தன்னை யிழக்க வேண்டாத படி நாச்சிமாருடன்‌ திருவேங்கட மலையில்‌ நின்‌றருளினபடியையும்‌ எம்பெருமான்‌ காட்டக்‌ கண்டு, பிராட்டி புருஷகாரமாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திருவடி.களில்‌, தமக்கு வேறு புகலில்லாமையை விண்ணப்பித்துச்‌ சரணம்‌ புகுகிறார்‌ உலகமுண்ட பெரு வாயனில்‌,

எம்பெருமான்‌ ஆழ்வாருக்குக்‌ காட்டித் தந்த கல்யாண குணம்‌ ஸரண்யத்வம்‌
ஸரண்யத்வமாவது ஸரண வரணார்ஹத்வம்‌
. பக்தி முதலிய வேறு உபாயமும்‌ வேறு ரக்ஷகரும்‌ இல்லாத அடியவர்களால்‌ தஞ்சமாகப்‌ பற்றுதற்குத்‌ ‘தகுதி யுடைமை என்றபடி. இக்‌ குணம்‌ எம்பெருமானிடம்‌, ஐந்தாம்‌ பத்தின்‌ குணமான கருணை யென்னும்‌ குணங்காரணமாக வெளிப்படுவதாகும்‌. “ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளளென்மின்கள்‌’” 6-1-10 (எங்கும்‌ ப்ரஸித்தமான பெளருஷமுடைய இராமபிரானிடம்‌, அவரால்‌ காக்கப் படுவோர் திரளில்‌ நானு மொருத்தி உளேனென்று சொல்லுங்கள்‌-என்று: தம்மைப் பற்றவும்‌, “திரு விண்ணககர்ச்‌ சேர்ந்த பிரான்‌ வரங்கொள்‌ பாதமல்லா லில்லை யாவர்க்கும்‌ வன்‌ சரணே” 6-8-7 என்று அளவற்ற அறிவாற்றல்‌ படைத்தவர்களைப்‌ பற்றவும்‌, “வன் சரண்‌ சுரர்க்காய்‌: 6-8-8 என்று தேவர்களைப்‌ பற்றவும்‌ எம்பெருமான்‌ புகலா யிருக்கும்‌ தன்மையைச்‌ சொல்லி, “:அடிக்‌கீழமர்ந்து புகுந்து அடியீர்‌ வாழ்மினென்றென்று அருள் கொடுக்கும்‌….பெருமான்‌’” 6-10-11 என்று திரு வேங்கடமுடையான்‌ தன்னடியாரெல்லாரையும்‌ சரண மடையும்படி, தன்‌ திரு வடிகளைத்‌ தன்‌ திருக் கையால்‌ காட்டிக்‌ கொண்டே, கல்லில்‌ (திருமலையில்‌) யாராலும்‌ இல்லை செய்ய முடியாமல்‌ பேராது நின்று, தான்‌ உபாயமா யிருக்கும் தன்மையைக்‌ கல் வெட்டாகும்படி அருளிச்‌ செய்கின்‌றமையைக்‌ கூறி யிருப்பதனால்‌, இன்னார்‌ இனையா ரென்ற வாசி பாராமல்‌ எல்லோராலும்‌ சரணமாகப்‌ பற்றப் படுந் தகுதியுடைமை (அநாலேசித விசேஷாசேஷா லோக சரண்யத்வம்‌) என்‌னும்‌ எம்பெருமானுடைய கல்யாண குணம்‌ இப் பத்தின்‌ ப்ரதான குண மாகும்‌ என்பது ஆசார்ய ஹ்ருதயகாரரின்‌ திருவுள்ளக்‌ கருத்து –

ஆழ்வார்‌ அவனருளால்‌ பெற்ற பேறு ப்ரேமபலோபாயத்தே புகுதல்‌
கழிய மிக்கதோர்‌ காதல்‌”
‘ என்னப்பட்ட மிக மிக வுயர்ந்த ப்ரேமத்தால்‌ எம்பெருமானை யனுபவிக்கத்‌ தாமதம்‌ பொறாமல்‌ விரைந்து “*அலர் மேல் மங்கை யுறை மார்பா உன்னடிக்‌ கீழ் அமர்ந்து புகுந்தேன்‌?” 6–10–10 என்று ஆழ்வார்‌-எம்பெருமானை உபாயமாக வரித்தல்‌ என்பது அவர்‌ அவனருளால்‌ பெற்ற பேறாகும்‌. தன்னிடமுள்ள ஸரண்யத்வத்தைக்‌ காட்டித் தந்த எம்பெருமானை ஆழ்வார்‌ அவனருளால்‌ ஸரணம்‌ பற்றினாரென்‌றபடி–

ஆழ்வார்‌ ஸம்ஸாரிகளுக்குச்‌ செய்யும்‌ உபதேசம்‌
திருவிண்ணகர்ச்‌ சேர்ந்த்‌ அப்பன்‌ தந்தனன்‌ தன தாள் நிழலே”
-6-4-9 -(தன்‌ பாத நிழலை எனக்குத்‌ தந்து எனது ஊடற்‌ கோபமென்னும்‌ அழலைப்‌ போக்‌கினான்‌) என்று தம் பேற்றைப்‌ பேசி, திருவிண்ணகர்‌ மன்னு பிரான்‌ கழல்‌ களன்றி மற்றோர்‌ களை கணிலம்‌ காண்மின்களே”‘ 6–4–10 (திருவிண்ணகரில்‌ நித்ய வாஸம்‌ செய்கிற உபகாரகனுடைய திருவடிகளைத்‌ தவிர வேறு தஞ்ச மில்லை, இதை நீங்களும்‌ காணுங்கள்‌) என்று தாம்‌ தஞ்சமாக நினைத்திருக்கும்‌ திருவடிகளையே தஞ்சமாக நினைக்கும்படி ஸம்ஸாரிகளுக்கு உபதேசித்துத்‌ தமது உறுதியைக்‌ காட்டுகிறார்‌.

இப்பத்தில்‌–தோழி தாய்‌ மகள்‌ பாசுரங்கள்‌ –தோழி பாசுரம்‌ துவளில்‌ மா மணி மாடப் பதிகம்‌ ஒன்றே.
தாய்ப் பாசுரம்‌ மாலுக்கு உண்ணுஞ் சோறு என்னும்‌ இரண்டுமாகும்‌.
வைகல்‌ மின்னிடை’ பொன்னுலகு என்ற இம் மூன்றும்‌ மகள்‌ பாசுரம்‌.
மற்ற நல்குரவு குரவை நீராய்‌ உலகுமுண்ட என்ற இவை நான்கும்‌ ஆழ்வார்‌ தாமான தன்மையி லருளிச்‌ செய்தவை,
ப்ரணவார்த்தமான ஸேஷ ஸேஷி பாவம்‌ (அடியவனும்‌ எஜமானனுமாகுந் தன்மை) என்னும்‌ ஸம்பந்த ஜ்ஞானம்‌, நம: பதார்த்தமான ஸித்தோபாயத்தின் கண்‌ துணிவு, ஸேஷியாய்‌ ஸரண்யனான எம்பெருமானுக்‌குள்ள ஏற்றத்தை நாராயணாய என்ற பதத்தினால்‌ அறிந்தவனுக்கு உண்டாகும்‌ ப்ராப்ய த்வரை என்ற இம்‌ மூன்றும்‌ முறையே தோழி தாயார்‌ மகள்‌ என்ற பெயர்களைப்‌ பெறும்‌ என்று ஆசார்ய ஹ்ருதயம்‌ கூறும்‌.

இப்பத்தில்‌ மங்களாசாஸநம்‌ பெற்ற திவ்யதேசங்களும்‌ அங்கங்கு எம்பெருமான்‌ ஆவிஷ்கரித்த கல்யாண குணங்களும்‌
வைகலில்‌ திருவண்வண்டூர்‌, நல்குரவில்‌ திருவிண்ணகர்‌, துவளில்‌ மா மணி மாடத்தில்‌ திருத் தொலைவில்லி மங்கலம்‌) உண்ணுஞ்சோற்றில்‌ திருக்‌ கோளூர்‌, உலகமுண்ட பெருவாயனில்‌ திருவேங்கடம்‌ என்ற இவ்வைந்தும்‌ இப்‌ பத்தில்‌ ஆழ்வாரால்‌ மங்களாலாஸனம்‌ செய்யப்பட்ட திவ்ய தேசங்களாகும்‌. இவற்றில்‌ எம்பெருமான்‌ வெளிப்படுத்திய கல்யாண குணங்களை ஆசார்யஹ்ருதயத்தைத்‌ துணையாகக்‌ கொண்டு காண்போம் –

திருவண்வண்டூர்‌.
இதில்‌ எம்பெருமான்‌ ஆவிஷ்கரித்த கல்யாண குணம்‌ ரஷணஸ்தைர்யம்‌, அடியவரைக் காப்பதில்‌ திண்ணியனா யிருக்கை என்றபடி. “வ்யவஸாயஜ்ஞர்‌ ரஷணஸ்தைர்யம்‌ பம்போத்தரதேசஸ்தம்‌”’ என்பது ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை. நோவு பட்டாரைக்‌ காப்பதில்‌ எம்பெருமானுக்குள்ள உறுதிப்பாட்டை அறிந்த ஸீதா பிராட்டியைப்‌ போலே இருப்ப வர்களுடைய ரஷணத்தில்‌ யாராலும்‌ அசைக்க முடியாதபடி இருக்கும்‌ அவனுடைய திண்மை யென்னும்‌ குணம்‌ பம்பையின்‌ வடகரையான திருவண்‌ வண்‌ டூரில்‌ நிலை பெற்று நிற்கும்‌ – என்பது அதன்‌ கருத்து. **மாறில்‌ போரரக்கன்‌ மதிள் நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையு முளளென்மின்கள்‌:” என்று (6-1-10) தேவர்‌ முனிவர்‌ விபீஷணன்‌ முதலியோரிடம்‌ தான்‌ செய்த ப்ரதிஜ்ஞையின்படி இராவணனைக்‌ கொன்று அவர்களை ரக்ஷித்த திண்மையை யுடைய இராமபிரானைக்‌ கூறியதனால்‌ இது விளங்குகிறது.

திருவிண்ணகர்‌.
குணம்‌ விருத்தகடகா ஸாமர்த்த்யம்‌.
-சேராதவ.ற்றைச்‌ சேர்க்கும்‌ ஆற்றலென்றபடி. விளம்ப விரோதமழிக்கும்‌ விருத்த கடகா ஸாமர்த்யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌:* என்பது சூர்ணிகை. ஆழ்வார்‌ தூது விட்டும்‌ தாமதித்து வந்த எம்பெருமானை “போகுநம்பி**, “கழகமேறேல்‌ தம்‌.பீ’” என்னும்படிப்‌ பிறந்த விரோதத்தை ‘*அழித்தா யுன்‌ திருவடியால்‌” என்னும்படித்‌ திருவடியால்‌ அழித்து விரோதமுடைய ஆழ்வாரைத தன்னோடு சேர்த்துக்‌ கொண்ட ஆற்றல்‌, நல் குரவு செல்வு முதலிய விருத்தங்களை விபூதி யாகத்‌ (தானிட்ட வழக்காகத்‌) தன்னோடு சேர்த்துக்‌ கொண்டு நிற்கின்‌றமையை வெளிப்படுத்திய திருவிண்ணகராம்‌ நன்னகரில்‌ பரந்திருக்கும்‌ என்பது அதன்‌ பொருள்‌.

திருத்தொலைவில்லிமங்கலம்‌.
குணம்‌-கடிதகடகவிகடநா பாந்தவம்‌,-
தன்னோடு சேர்க்கப்பட்ட தலைவிக்கும்‌ சேர்த்த தாய்மார்க்கும்‌ பிரிவை உண்டு பண்ணுவதான-எம்பெருமானிடமுள்ள தந்‌தை தாய்‌ முதலிய உறவு முறை யென்றபடி. “கடித கடக விகடநா பாந்தவம்‌ அவ் வூரிலே த்வி குணம்‌’‘ என்பது சூர்ணிகை. “ஏழையை…தொலைவில்லிமங்கலம்‌ கொண்டு புக்கு…பிரானிருந்தமை காட்டினீர்‌‘” என்றபடி எம்பெருமானைக்‌ காட்டி அவனுடன்‌ தலைவியைச்‌ சேர்த்த தாய்மார்க்கும்‌ சேர்க்கப்பட்ட தலைவிக்கும்‌, “தொலைவில்லிமங்கலம்‌ தொழுமிவளை உமக்காசையில்லை விடுமினேோ’‘ என்று தோழி கூறியபடிப்‌ பிரிவைப்‌ பண்ணுமதான, “தேவ பிரானையே தந்‌தை தாயென்றடைந்த சடகோபன்‌‘”-என்கிறபடியே எம்பெருமானுக்குள்ள உறவு முறையரனது-“அவ்வூர்‌’” எனப்பட்ட திருத்தொலைவில்லிமங்கலம்‌ இரட்டைத்‌ திருப்பதி யாகைமால்‌ அங்கு இரட்டித்‌ திருக்குமென்பது அதன்‌ கருத்து.

திருக்கோளூர்‌
குணம்‌ ஆபத்ஸகத்வம்‌. *கைம் முதலிழந்தார்‌ உண்‌ணும்‌ நிதியின்‌ ஆபத்ஸகத்வம்‌ புகுமூரிலே ஸம்ருத்தம்‌:”
என்பது சூர்ணிகை, எம்பெருமானுடன்‌ கலந்து வாழப் பெறாமையால் நைந்து அதனால்‌ உண்‌மையில்‌ ப்ராபகமும்‌ ப்ராயமுமாகாமல்‌ அங்ஙனம்‌ தோற்றுகிற சங்கு முதலியவை தாமே கழிகையாலே கைம்முதலிழந்தவர்கள்‌ உண்ணுஞ்சோறு முதலிய எல்லாம் தானேயாக அனுபவிக்கும்‌ வைத்தமாநிதி யெம்பெருமானுடைய அதன்‌ கருத்து.

திருவேங்கடம்‌,
குணம்‌ வாத்ஸல்யம்‌, தோஷத்தை போக்யமாகக்‌ கொள்ளுந்‌ தன்மையே அது. மண்ணோர்‌ விண்ணோர்‌ வைப்பில்‌ , போகின்ற ஏழுலகுக் குயிர்‌ பாசம் வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜவலம்‌’
” என்பது சூர்ணிகை. மண்ணோர்க்கும்‌ விண்ணோர்க்கும்‌ நிதி போலே அடையத்‌ தகுந்த திருவேங்கடமலையில்‌ எல்லார்க்கும்‌ எல்லா வித பந்துவுமாய்க்‌ கொண்டு, எல்லார்க்கும்‌ ஆத்மாவா யிருக்கிற அந்தர்யாமி யெம்பெருமானுடைய குண மான-‘என்‌ கண்‌ பாசம்‌ வைத்த” (தோஷம்‌ நிறைந்த என்னிடம்‌ ப்ரீதியை வைத்த) என்று பாசமாகவும்‌ ”நிகரில்‌ புகழாய்‌”” (ஒப்பற்ற புகழை யுடையாய்‌) என்று ஒப்பற்ற புகழாகவும்‌ சொல்லப்பட்ட வாத்ஸல்யம்‌ திருவேங்கடமுடை யானுடைய திருமேனியிலே ப்ரகாசிக்குமென்பது அதன்‌ கருத்து.

இனி ஒவ்வெர்ரு பதிகத்திலுமுள்ள விசேஷார்த்தங்களில்‌ சிலவற்றை அனுபவிப்போம்‌.
வைகல்‌

பக்ஷிகளைத்‌ தூது விடும்‌ இப் பதிகத்தால்‌ ஆழ்வார்‌ கடக ஸமாச்ரயணம்‌ பண்ணுகிறார்‌ என்று ஆசார்யர்கள்‌ அருளிச்‌ செய்வர்‌. கடகராவார்‌–எம்பெருமானோடு நம்மைக்‌ கொண்டு சேர்க்கும்‌ ஆசார்யர்‌ முதலியோர்‌. இவர்களைப்‌ பக்ஷிகளென்பது—ஆகாசத்தில்‌ விரைந்து செல்லுதற்குத்‌ தக்க பக்ஷங்கள்‌-சிறகுகள்‌ இரண்டு பறவைகளுக்கு உள்ளது போல்‌, பரமாகாசத்திலுள்ள எம்பெருமானிடம்‌ விரைந்து சென்று சேர்வதற்குக்‌ கருவியான ஞானம்‌ அநுஷ்‌ டானம்‌ என்ற இரண்டும்‌ இவர்களுக்குச்‌ சிறகுகளாக அமைந்த படியினால்‌ என்பர்‌. அப்படிப்பட்ட ஆசார்யர்‌ முதலியோரை விளித்து, நீங்கள்‌ என்‌ நிலைமையை எம்பெருமானிடம்‌ விண்ணப்பித்து அவனேடு என்னைச்‌ சேர்க்க வேணும்‌ என்று வேண்டுவதே இப்பதிகத்தின்‌ ஆழ்ந்த கருத்தாகும்‌.

இரண்டாம்‌ பதிகத்தில்‌ எம்பெருமான்‌ ஆழ்வாருடைய ஊடலைத்‌ தீர்க்கப்‌ போவதை, இப் பதிகத்தின்‌ கடைசிப் பாட்டின்‌ “மின் கொள் சேர்‌ புரி நூல்‌ குறளாய்‌ அகல் ஞாலங் கொண்டவன்‌ கள்வன்‌:” என்ற பகுதியால்‌ ஆழ்வார்‌ குறித்திருப்பதாக வ்யாக்யாதாக்கள்‌ அருளிச்‌ செய்வர்‌. மஹாபலியின்‌ மமகாரத்தைப்‌ போக்கி எம்பெருமான்‌ எல்லா வுலகங்களையும்‌ கைக் கொண்டது
போல்‌, சேரோம்‌ என்றிருந்த செருக்கைப்‌ போக்கிப்‌ பராங்குச நாயகியை ஸ்வாதீனப்படுத்திக்‌ கொள்ளப்‌ போகிறானென்பது இங்கு வாமன சரிதத்தால்‌ குறிக்கப்படுகிறது. “மின்னிடை மடவார்க்குக்‌ கிழக்கு வெளுக்கிறபடி“‘ என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி மிகவும்‌ ரஸிக்கத்‌ தக்கதாம்‌.-

2-மின்னிடை
இப்பதிகத்தின்‌ இறுதிப் பாட்டிலுள்ள ‘“ஆய்ச்சியாகிய அன்னையால்‌ அன்று வெண்ணெய்‌ வார்த்தையுள்‌ சிற்றமுண்டழுகூத்தவப்பன்‌” என்ற க்ருஷ்ண சரிதத்தினல்‌ ஓர்‌ சுவையுள்ள பொருள்‌ குறிக்கப்படுகிறது. எம்‌ பெருமான்‌ பராங்குச நாயகியின்‌ ஊடலைத்‌ தீர்க்க வந்த போது, “’நீ எங்கள்‌ திரளில்‌ புக வேண்டா” என்று அவள்‌ கூற, அவ்விடம்‌ விட்டு நீங்காமல்‌ எளி வரவுபட்டு அவன்‌ நின்ற நிலையானது-வெண்ணெய்‌ களவு போயிற்றென்கிற வார்த்தை பிறந்த போது (இவனே களவு செய்தான்‌” என்று யசோதை வசவு கூற, வசவுண்டு அவ்விடம்‌ விட்டு நீங்காமல்‌ கண்ணுங்‌ கண்ணீருமாய்‌ நின்ற நிலை போலிருந்தது என்பதே அச்சுவைப்‌ பொருள்‌.

3-நல்குரவும்‌
இப்பதிகம்‌ விபூதி யோகத்தைக்‌ காட்டுவதென்று கொண்டால்‌, அதையே கூறும்‌ மாயா வாமனனே (7-8) பதிகத்திற்கும்‌ இதற்கும்‌ என்ன வாசி யென்றால்‌ ஒரு காலத்தில்‌ ஒரிடத்தில்‌ ஒன்று சேராத (மாறுபட்ட தன்மையைக்‌ கொண்ட) வறுமை செல்வம்‌ முதலியவற்றைத்‌ தனக்கு விபூதியாக (தானிட்ட வழக்காக) உடைமையாகிய விருத்த விபூதி யோகம்‌ நல்குரவில்‌ கூறப்படுகிறது, வெவ்‌ வேறுபட்ட தன்மைகளைக்‌ கொண்டு, ஒன்றோடொன்று சேர்ந்துள்ள பஞ்ச பூதம்‌ முதலியவற்றைத்‌ தனக்கு விபூதியாக உடைமை யாகிற விசித்ர விபூதி யோகம்‌ மாயா வாமனனேயில்‌ கூறப்படுகிற தென்று வாசி காணத் தக்கது.

4-குரவை யாய்ச்சியர்‌
இப் பதிகத்திற்கு மின்னிடை மடவார்‌ பதிகத்தோடு தான்‌ ஸங்கதி-
-உன்னோடு கூடேன்‌ என்று அகல நினைத்த ஆழ்வாரைக்‌ கூடுவேனென்னும்படி பண்ணித்‌ தன்னோடு சேர்த்துக்‌ கொண்ட படியை நினைத்து, இங்ஙனம்‌ செய்ய வல்லவன்‌ குரவை முதலாம்‌ கோலச்‌ செய்கைகள்‌ செய்த கண்ணனே யாவன்‌ என்றெண்ணி இப் பதிகத்தை ஆழ்வார்‌ பாடினராகையால்‌. நடுவில்‌ விருத்த விபூதி யோகத்தை அவன்‌ காட்டியதும்‌ இவர்‌ பேசியதுமான நல் குரவுப் பதிகம்‌ ப்ராஸங்கிகம்‌ என்பர்‌ அரும் பத வுரையா சிரியர்‌-க்ருஷ்ணசரிதமே கூறும்‌ இப் பதிகத்தின்‌ நடுவில்‌, (‘மாணியாய்‌ நிலங்‌ கொண்ட மாயன்‌:!’ என்று வாமந சரிதம்‌ புகுந்தது-தன்னிஷ்டம்‌ நிறைவேறினால்‌ ஜீவிப்பது, இல்லையேல்‌ முடிவது, இரப்பிலே தழும்பேறின திருமேனி, குறை வற்ற அழகு, இன்னாரினையாரென்ற வாசி பாராமல்‌ எல்லோரையும்‌ தீண்டுவது ஆச்ரயித்தவர்களிடம்‌ பக்ஷ பாதம்‌, அமாநுஷமான சேஷ்டிதங்கள்‌ ஆகிய வற்றால்‌ வாமனாவதாரம்‌ க்ருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கைபால்‌ என்பர்‌ வ்யாக்யாதா-இப் பதிkத்தில்‌ “நாயகன்‌ முழுவேழுலகுக்குமாய்‌ முழு வேழுலகும்‌ தன்‌ வாயகம்‌ புகவைத்துமிழ்ந்தவையாய்‌ அவை யல்லனுமாம்‌ கேசவன்‌” என்ற கடைசிப் பாட்டில்‌ “நாயகன்‌……அல்லனுமாம்‌’” என்று ஏழுலகுக்கும்‌ நாயகனாம் தன்மை முதலிய ஸர்வேச்வரத்வம்‌ கூறுவதனால்‌ அப்பகுதி விருத்த விபூதி யோகத்‌தாலே ஸித்தமான நல்குரவில்‌ கூறிய ஸர்வேச்வரத்வத்தின்‌ அநுவாதமென்றும்‌, கேசியைக்‌ கொன்ற க்ருஷ்ணனைக்‌ கூறும்‌ கேசவன்‌ என்னும்‌ சொல்‌ க்ருஷ்ணனைக்‌ கூறும்‌ இக் குரவைப்‌ பதிகத்தின்‌ அநுவாதமென்றும்‌ சிலரது கொள்கை. **க்ருஷ்ண ஏவ ஹி லோகாகாம்‌ உத்பத்தி: அபி ௪ அப்யய:!! என்ற மகாபாரத ஸ்லோகத்தின்படி உலகத்தின்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌, முதலிய காரியங்களெல்லாம்‌ கருஷ்ணனுடையனவாகக்‌ கொள்ளுவதனால்‌, ॥நாயகன்‌….. கேசவன்‌” என்ற முழுதுமே கிருஷ்ண சரிதம்‌ சொல்லும்‌ குரவைப்‌ பதிகத்தின்‌ அநுவாதமே யென்று மற்றும்‌ சிலருடைய கொள்கை-‘உருகாமல்‌ வரித்ததும்‌ நண்ணி வணங்க பலித்தவாறே’: என்று இப்‌ பதிகத்தின்‌ ப்ரமேயம்‌ ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ குறிக்கப்பட்டிருக்கறது. பகவத்‌ குணங்களையும்‌ சேஷ்டிதங்களையும்‌ அநுபவிக்கத்‌ தொடங்கனவாறே ஊடு புக்கென தாவியை உருக்கி யுண்டிடுகின்‌ற”: என்‌றபடியே அவை மனதை யுருக்கி யதனால்‌ நன்றாக அனுபவிப்பதற் குறுப்பாக “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌”? என்று பிறந்தவாற்றில்‌ (6-10) ஆழ்வார்‌ அவனை உபாயமாக வரித்தது இப்பதிகத்தில்‌ *நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ எனக்கார்‌ பிறர்‌ நாயகரே” என்று அவனுடைய கிருஷ்ணாவதார குணசேஷ்டிதங்களை எப்‌போதும்‌ முறையாகக்‌ கிட்டி தரித்து நின்று அனுபவித்து கர்விக்கும்படி. பலித்த தென்று கருத்து–சன்மம்‌ பல பல (8-10) என்ற பதிகத்தில்‌ “நானோர்‌ குறைவிலனே’” என்றும்‌, வீற்றிருந் தேழுலகில்‌ (4-6) *இனி யென்ன குறை” என்றும்‌, இப்‌ பதிகத்தில்‌ “என்ன குறை வெனக்கே” என்றும்‌ களித்துப்‌ பேசுகின்றமை மூன்று திருவாய்மொழிகளிலும்‌ ஒத்திருக்க இவை தம்முள்‌ வேறுபடுமாறு என்ன யெனில்‌, சன்மம்‌ பல பலவில்‌-சொன்னால்‌ விரோதப்‌ (9-9) பதிகத்தில்‌ தாம்‌ உபதேசித்தும்‌ திருந்தாமல்‌ சோறு கூறைக்காக மன்னாத மானிடரையே வாழ்த்திக்‌ கெட்டுப் போகும்‌ புன்புலவரைக்‌ காட்டிலும்‌ எம்பெருமானையே பாடுவதாகிய தமக்குள்ள தனித்‌ தன்மையை நினைத்துக்‌ களித்தார்‌ என்றும்‌, மண்ணை யிருந்து துழாவியில்‌ (4-4) ‘போலி கண்டு மயங்கிய மயக்கம்‌ தீர எம்பெருமான்‌ உபய விபூதியையும்‌ காட்டிக்‌ கொடுக்கக்‌ கண்டு அநுபவித்து “போற்றி யென்றே கைகளாரத் தொழுது’” என்கிறபடியே பல்லாண்டு பாடிக்‌ களித்தார்‌ வீற்றிருந்தேழுலகில்‌ என்றும்‌, குரவை யாய்ச்சியர்‌ பதிகத்தில்‌ பரபத்தியின்‌ பயனாக க்ருஷ்ண குண சேஷ்டிதங்களில்‌ ஒன்று விடாமல்‌ அனு பவித்துக்‌ களிக்கிறார்‌ என்றும்‌ வாசி நோக்கத்தக்கது–

5-துவளில் மா மணி மாடம்‌
இப்பதிகம்‌–அழ்வாருக்கு *பொய்ந் நின்‌ற ஞானம்‌ ‘” (திருவிருத்தம்‌-1) தொடங்கி இது வரையில்‌ உண்டான ப்ராவண்யாதிஸயத்தைக்‌ கூறும்‌, ப்ரா வண்யாதிஸயமாவது-எவ் விதத்தாலும்‌ யாராலும்‌ மீட்க முடியாதபடி ஆழ்வாருடைய கரண த்ரயமும்‌ (மநோ வாக்‌ காயங்கள்‌) எம்பெருமானிடத்திலேயே ஈடு பட்டிருக்கும்‌ தன்மையே யாகும்‌. **இத்‌ திருவாய்மொழி ஆழ்வார்‌ ப்ரக்ருதி (ஸ்வபாவம்‌-தனித் தன்மை) சொல்லுகிறதென்று நம் முதலிகள்‌ (ஆசார்யர்கள்‌) எல்லாரும்‌ போர (மிக) விரும்பி யிருப்பர்கள்‌’? என்றுள்ள ஈடு ஸேவிக்கத்‌ தக்கது. இந்த ப்ராவண்யம்‌ “தொலை வில்லி மங்கலம்‌ தொழுமிவளை உமக்காசை யில்லை விடுமினோ””, சிந்தையாலும்‌. சொல்லாலும்‌ செய்கையினாலும்‌ தேவ பிரானையே தந்தை தாயென்றடைந்த…சடகோபன்‌’” என்றுள்ள சந்தைகளினால்‌ அறியலாம்‌.

6-மாலுவுக்கு
ஏருளுமிறையோனும்‌ (4-8) என்னும்‌ பதிகத்தால்‌
ஆழ்வார்‌ எம்பெருமான்‌ ஆசைப்படாத தம்முடைமைகளும்‌ தம்முயிரும்‌ தமக்கு வேண்டா என்று அவற்றைத்‌ தாமே உபேஷித்தார்‌. இம்‌ மாலுக்கில்‌-௮வை, வேண்டா என்று தாம்‌ உபேஷிக்கும்படி இராமல்‌ அவை தாமாகவே தம்மை விட்டுப்‌ போனமையை அருளிச்‌ செய்கிறார்‌ என்று இவ் விரண்டு பதிகங்கட்கும்‌ உள்ள வாசி காணலாம்‌.-*கட்டெழில்‌ சோலை நல் வேங்கட வாணனைக்‌,
கட்டெழில்‌ தென் குருகூர்ச்‌ . சடகோபன்‌ சொல்‌,
கட்டெழிலாயிரத்திப் பத்தும்‌ வல்லவர்‌,
கட்டெழில்‌ வானவர்‌ போக முண்பாரே’
”–என்ற இப் பதிகத்தின்‌ இறுதிப் பாட்டில்‌, வேங்கட வாணனை சடகோபன்‌ சொல்‌ ஆயிரத்து என்று அந்வயம்‌ கொண்டு ஈட்டில்‌ ஒரு விசேஷம்‌ அருளிச்‌ செய்யப்படுகிறது. ஆழ்வார்‌ திருவேங்கடமுடையானைத்‌ திருவாய்‌ மொழியாலே துதித்தார்‌; “*திருவேங்கடத் தென்னானை யென்னப்பன்‌ எம்பெருமான்‌ உளனாக–என் நாவிலின் கவி யானோருவர்க்கும்‌ கொடுக்கிலேன்‌”’ (8-9-1) என்‌றிருக்கு மவரன்றோ–என்‌பதே அவ் வர்த்தம் –

7-உண்ணுஞ்சோறு
இப்பதிக வ்யாக்யானத்தின்‌ அவதாரிகையில்‌ ஒர்‌ ஐதிஹ்பம்‌ அருளிச்‌ செய்யப் பட்டுள்ளது. திருக்கோளூர்க்குத்‌ தனியே சென்ற பராங்குச நாயகியைப்‌ பற்றி அஞ்ச வேண்டுமா, அல்லது “கள்வன்‌ கொல்‌”. (பெரியதிருமொழி 9-1) திருமொழியிலுள்ளபடி நெடுமால்‌ துணையாப்‌ போன பரகால நாயகியைப்‌ பற்‌றி அஞ்ச வேண்டுமா? என்று காலக்ஷேப கோஷ்டியில்‌ ஆளவந்தார்‌ சிஷ்யர்‌களை வினவ, அவர்கள்‌– தனியே போனவளுக்கு அஞ்ச வேண்டுமே தவிர ஒருவரைத்‌ துணையாக்‌ கொண்டு போனவனுக்கு ஏன்‌ அஞ்ச வேண்டும்‌? என்று விடை யளிக்க, அதன் மேல்‌ ஆளவந்தார்‌–*அகலகில்லேன்‌” என்றும்‌ “பித்தர்‌ பனி மலர் மேல் பாவைக்கு”’ என்றும்‌ சொல்லுகிறபடியே பித்தர்களான பிராட்டியும்‌ பெருமாளுமாகிய இருவரும்‌ ஒருவர்க்கொருவசர் ஆசைப் பட்டு மோஹித்துத்‌ தம்மைக்‌ கடித்ததையும்‌ தம்மேலூர்ந்ததையும்‌ அறியார்கள்‌. ஆகையால்‌ அங்கு இருவரைப்‌ பற்றியும்‌ அஞ்ச வேண்டும்‌. அங்குத்‌ திருத் தாயார்‌ *அணியாலி புகுவர்‌ கொலோ”? என்றதனை ஒரு தடவைக்கு ஒன்பது தடவைகளாகச்‌ சொல்லி (கொல்‌ என்னும்‌ ஐயப் பொருள் படும்‌ இடைச் சொல்லின்‌ வாயிலாக) அணியாலி புகுவரோ அன்றிக்கே லங்கா த்வாரத்தில்‌ சென்றது புகுவரோ என்று ஐயமுற்றுக்‌ கவலைப் படுவதைக்‌ காண்பதனால்‌ இருவர்க்கும்‌ அங்கு அஞ்ச வேண்டுமென்பது உறுதிப்படுகிறது. இங்குப் பராங்குச நாயகியோ வெனில்‌–திருக்கோளூர்‌ சென்று புகுந்தாலன்றி தரியாதவளாகையால்‌ சென்றே தீருவள்‌. ஆதலால்‌ இவளுக்கு அஞ்ச வேண்டா–என்று அருளிச்‌ செய்தா ரென்பதே அந்த ஐதிஹ்யம்‌-உண்மை இவ்வளவே யானாலும்‌ எங்குப்‌ போனாலும்‌ இருவரா யல்லது போகார்கள்‌ அங்கு (கள்வன் கொல்லில்‌). இங்குத்‌ தனியே போன பராங்குச நாயகி என்ன பாடு படுகிறாளோ என்று திருத் தாயார்‌ வருந்திக்‌ கூறுகிறார்‌? வருந்துகிறவர்களெல்லாரும்‌ தம் தம்‌ வருத்தமே பெரிதென்று நினைப்பது உலகத்‌தில்‌ இயல்பு தானே-ஆசார்ய ஹ்ருதயத்தில்‌-துவளில்‌ மாலுக்கு உண்ணுஞ் சோறு என்ற மூன்று பதிகங்களுக்கும்‌ ப்ரமேயமாக புராண பெனராணிகர்‌ தயாஜ்யாம்ச மாக்கிய சித சித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களைக்‌ கை வலிந்து கை கழல எல்லாங்‌ இடக்க நினையா தகன்று, தந்‌தை தாயுண்ணுஞ்சோறு மாநிதி பூவை யாவையும்‌ ஒன்றே யாக்கி ” என்று அருளிச்‌ செய்யப் பட்டுள்ளது. இதன்‌ விவரணம்‌ வருமாறு-*பிதரம்‌ மாதரம்‌ தாராந் …….ரத்நாநி தநதாந்யாநி ……ஸர்வ தர்மாந் ச ஸக்ந்யஜ்ய சர்வ காமாந்‌ ச ஸாக்ஷராந் , லோக விக்ராந்த சரணெள சரணம்‌ தே வ்ரஜம்‌ விபோ” என்ற பவிஷ்யத்‌ புராணமூம்‌ அப் புராணத்தை நன்கறிந்து அதன்படி கத்யத்தில்‌ சரணாகதி செய்த ஸ்ரீபாஷ்யகாரரும்‌ சரணாகதிக்கு அங்கமாகப்‌ பரி த்யஜித்த (விட்ட) தகப்பன்‌ தாய்‌ மனைவி முதலிய சித்துக்கள்‌ (உயிருள்ள பொருள்கள்‌) ரத்நம்‌ தநம்‌ தான்யம்‌ முதலிய அசித்துக்கள்‌ (உயிரில்லாத பொருள்கள்‌ ) ஆகிய ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை (- உண்மையில்‌, அடைப்படும்‌ பயனும்‌ அதனை அடைவிக்கும்‌ உபாயமும்‌ பகவானே யாகையால்‌ மேலெழுந்தவாறு பார்க்கும்‌ போது பயனும்‌ உபாயமும்‌ போல்‌ நம்மால்‌ ப்ரமிக்கப் படுமவற்றைக்‌) கை வலிந்து கை கழலக்‌ கண்டும்‌ எல்லாம்‌ கடக்க நினையாதகன்றும்‌ தந்‌தை தாய்‌ உண்ணுஞ்சோறு மாநிதி பூவை யாவையும்‌ ஒன்றே யாக்கியும்‌ போந்தார்‌ ஆழ்வார்‌. அன்னைமீர்‌ அணி மா மயில்‌ சிறு மானிவன்‌ நம்மைக்‌ ‘ கை வலிந்து: (6-5-7) என்று பராங்குச நாயகி தாய்மாரையும்‌ தோழிமாரையும்‌ கை கடந்து அவர்களை விட்டமையும்‌, *இழந்தது சங்கே” (6-6-1) இத்யாதிகளின் படி சங்கு முதலியவை கழலக் கண்டமையும்‌, “இதெல்லாம்‌ கிடக்க இனிப் போய்‌” (6-7-9) என்று-எல்லாம்‌ கண்ணனென்று சொல்வது தாமரை திருத் துழாய்‌ முதலிய நற் பொருள்களைக்‌ கண்டால்‌ இவை எல்லாம்‌ என்‌ கண்ணனுக்கு என்பது தொடக்கமாக இங்கிருந்து அநுபவிக்கும்‌ போகங்களை யெல்லாம்‌ விட்டுப்‌ போனமையும்‌, ‘எம்மை ஒன்றும்‌ நினைத்திலளே” (6-7-9) “இன்றெனக்குதவா தகன்ற”: (6-7-60) என்று-இவர்களையும்‌ இவற்றையும்‌ ஒரு பொருளாக நினையாமல்‌ அகன்று போனமையும்‌, “தேவபிரானையே தந்தை தாயென்‌றடைந்த (6-6-11) “உண்ணுஞ் சோறு… …எல்லாம்‌ கண்ணன்‌”! (6-7-1) “வைத்த மாநிதி யாம்‌ மதுசூதனையே அலற்றி” (6-7-11) “பூவை பைங் கிளிகள்‌ பந்து தூதை பூம் புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால் திரு நாமங்களே’ (6-7-3) என்றிவற்றால்‌… தந்தை தாய்‌ முதலிய பந்துக்கள்‌ சோறு நீர்‌ வெற்றிலை முதலாகும்‌ தாரக போஷக போக்ய வஸ்துக்கள்‌, ஆபத்தில்‌ உதவும்‌ நிதி இவை யெல்லாம்‌ எம்‌ பெருமான்‌ ஒருவனே யாகவும்‌, பூவை முதலியவற்றால்‌ பிறக்கும்‌ மகிழ்ச்சி திருமால் திரு நாமங்களைாச்‌ சொல்லவே உண்டாகு மென்றும்‌ கூறியதனால்‌ முன்னே விட்ட சிதசித்துக்கள்‌ அனைத்தும்‌ பகவத்‌ விஷய மொன்றே யென நினைத்தமையும்‌ கூறப்பட்டுள்ளமை காண்க.

8-பொன்னுலகாளீரோ..
வைகல்‌ பூங்கழிவாய்‌ போலே இப் பதிகமும்‌ பக்ஷிகளைத்‌ தூதுவிடும்‌ முகத்தால்‌ ஆழ்வார்‌ அநுஷ்டித்த கடக ஸமாச்ரயணத்தையே காட்டும்‌
. இவ் விரண்டிற்கும்‌ வாசியுமுண்டு. அது வருமாறு–கடக ஸமரச்ரயணம்‌ மட்டுமே வைகலில்‌, இங்கு அதோடு’ கூட, *புள்ளினங்காள்‌/! நீங்கள்‌ எனது நிலைமையை எம்பெருமானுக்கு விண்ணப்பித்து வந்து, பரம பதத்தையும்‌ இப் புவனி முழுவதையும்‌ நான்‌ தர நீங்கள்‌ ஆள வேணும்‌, கிளிகாள்‌! தோழிமார்‌ முன்பு என்கையில்‌ இருந்து மெய்யடிசிலையும்‌ பாற்சோற்றையும்‌ தினந்தோறும்‌ நான்‌ ஊட்ட நீங்கள்‌ உண்ண வேணும்‌, வண்டினங்காள்‌! என்‌ குழலில்
வீற்றிருந்து அதிலுள்ள மலரின்‌ தேனை நீங்கள்‌ பருக வேணும்‌'” என்று கூறி கடகர்க்கு போக்யமான மெய்யடிசில்‌ முதலியவற்றைத்‌ தமக்கு போக்யமான பரம பதத்தோடு ஸமானமாக அவர்களுக்கு ஸமர்ப்பித்தும்‌ கூறப்பட்டிருப்பது அதனில்‌ இதுக்குள்ள வாசி
, திர்யர்க்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து” என்று வைகலின்‌ ப்ரமேயமும்‌, ‘ஆளீர்‌ மேவீர்‌ ஊதீர்‌ என்று ததிய சேஷமாக்க’ என்‌று . இப் பதிகத்தின்‌ ப்ரமேயமும்‌, ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ அருளி யுள்ளமை காணத் தகும்‌-மேலும்‌, வைகலில்‌, விபவாவதாரமான இராம:பிரானிடம்‌– திருவண்வண்டூரிலுள்ள சிறந்த செல்வம்‌ அவனை மறப்பித்த ஆர்த்த ரக்ஷண தீஷிதத்வத்தை (நோவு பட்டாரைக்‌ காப்பதில்‌ விரத முடைமையை) உணர்த்துதற்காகத்‌ தூதுவிட்டார்‌ ஆழ்வார்‌, பொன்னுலகாளீரோ வில்‌–தான்‌ படைத்த உலகைக்‌ காக்கும்‌ பராக்கினால்‌ அவன்‌ மறந்த ஐக ரஸ்யத்தை (அடியார்களின்‌ ஆனந்தத்தையை தனக்கு ஆனந்தமாகக்‌ கொண்டுள்ளமையை) அறிவிப்பதற்காகப்‌ பரமபதநாதனிடமும்‌ அந்தர்யாமியிடமும்‌ தூதுவிட்டார்‌ என்று வாசி கூறலாம்‌. :*தம் பிழையும்‌” என்‌று தொடங்கும்‌ ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின்‌ வ்யாக்பானத்தில்‌ இது விரிவாக ஸேவிக்கத் தக்கது.

9-நீராய்‌ நிலனாய்‌
இப் பதிகத்தின்‌ ஈட்டவதாரிகையில்‌ அர்‌ஜுநனுக்கும்‌ ஆழ்வாருக்கும்‌ ஒப்புமை கூறப் பட்டுள்ள,து, அது வருமாறு–*பஸ்யாமி தேவாந்தவ தேவ தேஹே” (கீதை 11-15). இத்யாதிப் படியே அர்ஜுநன்‌ எம்பெருமானுடைய விச்வ ரூபம்‌ கண்ட பிறகு அது தனக்கு ஆச்சரியத்தையும்‌ அச்சத்தையும்‌ விளைத்ததனால்‌, அதை மறைத்துத்‌ தனக்குப்‌ பூர்வ பரிசிதமான ஸெளம்யமான ரூபத்தையே காட்ட வேணுமென்று **இரீடிநம்‌ கதிகம்‌ சக்ர ஹஸ்தம்‌’ (கீதை 11-16) இத்யாதியால்‌ ப்ரார்த்தித்தது போல, ஆழ்வாரும்‌–நல்குரவுப் பதிகத்திலும்‌ இங்கு **நீராய்‌ நிலனாய்‌…சிவனாய்‌ அயனானாய்‌”” என்ற இரண்டடிகளிலும்‌ ஐகதாகாரனா யிருக்கும்‌ தனது இருப்பைக்‌ காட்டிய எம்‌ பெருமானைக்‌ குறித்து, இது எனக்குக்‌ கண்ணைக்‌ கவர்வதாய்‌ அநுபவிக்கத் தக்ககாக இல்லை அப்படி யிருக்கிற–*கூராராழி வெண் சங்கேந்திய — உன்னுடையதேயான ஆகாரத்தோடு வாராய்‌–என்‌.று ப்ரார்‌த்திப்பதனால்‌ இவ் வொப்புமை காண்க-இத் திருவாய்‌ மொழியில்‌
*ஞாலத்தூடே நடந்தும்‌ நின்றும்‌ இடந்‌திருந்தும்‌,
சாலப் பல நாள்‌ உகந்தோறு உயிர்கள்‌ காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக்‌ கூடாதே,
சாலப் பல நாள்‌ அடியேனின்னும்‌ தளர்வேனோ’”
என்ற மூன்றாம்‌ பாட்டு ப்ரணவத்தில்‌: உள்ள அகாரத்தின்‌ பொருளை விவரிக்கிறது என்பர்‌ வ்யாக்யாதா:-
அவ-ரக்ஷ்ணே என்னும்‌ தாது அடியாகப்‌ பிறந்த அகாரம்‌-எம்பெருமானை ரக்ஷ்கன்‌ என்று மட்டும்‌ காட்டுமே யொழிய வேறொன்றும்‌ காட்டாது. இப்பாட்டு–காப்பான்‌’ என்று அகாரார்த்தைக்‌ காட்டுவதோடு நில்லாமல்‌, “ஞாலத்தூடே நடந்தும்‌….இருந்தும்‌ என்று எல்லா விதத்தாலும்‌ ரக்ஷிப்பதையும்‌, *சாலப் பல நாள்‌ ௨(யு)கந்தோறு(ம்‌) என்று எல்லாக் காலத்திலும்‌ ரக்ஷிப்பதையும்‌, *உயிர்கள்‌’ என்றுள்ள பன்மையால்‌ எல்லா வுயிர்‌களையும்‌ ரக்ஷிப்பதையும்‌, ‘கோலத் திரு மா மகளோடு காப்பானே’ என்று அவன்‌ செய்யும்‌ ரக்ஷணம்‌ பிராட்டியின்‌ புருஷகாராதீநம்‌ என்பதையும்‌ விளக்கக்‌ கூறுவதனால்‌ அகாரார்த்த விவரண மாதல்‌ பொருந்தும்‌-மேலும்‌ இது அர்த்த பஞ்சகத்தை அறிவிக்கும்‌ திருமந்தரத்தின்‌ பொருள்களையும்‌ காட்டுமென்‌று அருளிச்‌ செய்வர்‌ வ்யாக்யாதா. *கோலத் திரு மா மகளோடு : உன்னை” என்று ஸ்ரீய: பதியான பர ப்ரஹ்மத்தின்‌ ஸ்வரூபமும்‌, *அடியேன்‌’ என்று திருமாலடியவனான ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபமும்‌, !’உயிர்கள்‌ காப்பான்‌! என்று எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தின்‌ ஸ்வரூபமும்‌, உன்னைக்‌ கூட’ என்‌று பர ப்ரஹ்மத்தை யடைவதாகிய புருஷார்த்தத்தின்‌ ஸ்வரூபமும்‌, (கூடாதே தளர்வேனோ’ என்று அதனை அடைய முடியாமல்‌ தடுக்கும்‌–(தளர்ச்சிக்குக்‌ காரணமான) அழுக்குடம்பு முதலிய விரோதியின்‌ ஸ்வரூபமும்‌ கூறப்படுவதனால்‌ இது திரு மந்த்ரார்‌த்த ப்ரதிபாதக மென்பதும்‌ தகும்‌,

10-உலகமுண்ட பெருவாயா
இக்‌ கடைசித்‌ திருவாய்‌ மொழியில்‌ முதல்‌ ஒன்பது பாட்டால்‌ ஆழ்வார்‌ தாம்‌ தஞ்சமாகப்‌ பற்றத்‌ தகுதி பெற்ற எம்பெருமான் படிகளைப்‌ பேச, பத்தாம்‌ பாட்டால்‌ எம்பெருமானைச்‌ சரணம்‌ புகுகிறார்‌, பிராட்டி புருஷகாரமாகச்‌ சரணம்‌ புகுதலை விளக்‌கும்‌–அகல கில்லேன்‌” என்னும்‌ அப் பாசுரம்‌.-இனி ப்ரபத்திக்கு விஷய நியமமும்‌;, பிராட்டியின்‌ புருஷகாரம்‌ இருந்தே தீர வேண்டிய நிர்ப்பந்தமும்‌, முன்பு செய்த நான்கு ப்ரபத்திகளை விட இந்த ப்ரபத்திக்குள்ள வாசியும்‌, அகலகில்லேன்‌ பாசுரம்‌ த்வயத்தின்‌ பூர்வ வாக்யார்த்தா நுஸந்தாந ரூபமென்ப தும்‌ வ்யாக்யாநத்தை ஒட்டி விண்ணப்பிக்கப்படும்‌.

ப்ரபத்தியின்‌ விஷய நியமம்‌
ப்ரபத்‌திக்கு விஷய நியமமாவது–எம்பெருமானுடைய ஐந்து நிலைகளில்‌ ஐந்தாவதான அர்ச்சாவதார நிலையிலேயே ப்ரபத்தி அநுஷ்டிக்க வேண்டியதென்னும்‌ நிர்ப்‌பந்தம்‌. அது வருமாறு-பரம பதத்திலுள்ள எம்பெருமான்‌, ஜீவாத்‌ மாவுக்கு பகவானை ஆச்ரயிக்க வேணுமென்று ஆசை பிறந்த போதே ஆச்ரயிக்க முடியாதபடி வெகு தாரத்தி லுள்ளான்‌. ப்ரஹ்மாதி தேவர்களால்‌ மட்டும்‌ ஆச்ரயிக்கலாம்படித்‌ திருப்பாற்கடலில்‌ உள்ள வ்யூஹ மூர்த்தியும்‌ அப்படியே. ராமக்ருஷ்ணாதிரூபம்‌ கொண்டு அவதரித்த எம்பெருமானோ ஸம காலத்தில்‌ பிறந்த பாக்யவான்களுக்கே யன்றிப்‌ பிற்பாடரான நமக்கு உதவாமல்‌ காலத்தால்‌ மிக முற்பட்டிருப்பான்‌. அந்தர்யாமி யெம்பெருமான்‌ எல்லா விடங்களிலும்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாருடைய ஸஹ்ருதயத்திலும்‌ எழுந் தருளி யிருந்தாலும்‌ யோகிகளுக்கன்றி நம் கண்ணுக்குப்‌ புலப்படான்‌. இக் குறைகளில்‌ ஏதுமின்றி எங்கும்‌ எக் காலத்திலும்‌ எல்லார்க்கும்‌ ஆச்ரயிக்கலாம் படியான பெருமை யோடு நம்‌ கண்ணுக்குத்‌ தென்பட்டு, நம்‌ காரியத்தைச்‌ செய்து முடித்தற்குத்‌ தக்க ஜ்ஞான சக்திகள்‌ நிறையப்‌ பெற்று ஸதா ஸேவை ஸாதிக்கும்‌ அர்ச்சாவதார எம்பெருமானே நம்மால்‌ ப்ரபத்தி செய்யத் தக்கவன்‌. அவர்களுள்‌ நித்ய ஸூரிகள்‌ ப்ரஹ்மாதி தேவர்கள்‌ நித்ய ஸம்ஸாரிகளான மநுஷ்யர்கள்‌ வானரம்‌ யானை முதலிய விலங்குகள்‌ ஆகிய எல்லார்க்கும்‌ முகங்கொடுத்துக்‌ கொண்டிருக்கும்‌ திருவேங்கடமுடையானே மிக முக்கியமானவன்‌, இது தான்‌ விஷய நியமம்‌.

பிராட்டி புருஷகாரத்தின்‌ நிர்ப்பந்தம்‌
பகவானுக்கே அடிமைப்பட்டிருக்கும்‌ ஜீவாத்மா நேரே அவனையே சரணாகப்‌ பற்றாமல்‌ பிராட்டியை முன்னிட்டுப்‌ பற்ற வேண்டிய நிர்ப்பந்தம்‌ எதற்கு? என்று நஞ்சீயர்‌ முதலிய சிஷ்யர்கள்‌ கேட்க அதற்கு பட்டர்‌ அருளிய ஸமாதாநம்‌ வருமாறு-இராவணனுக்கும்‌ காகாஸுரனுக்கும்‌ இராமபிரானோடு- உண்மையில்‌ அடியவன்‌ எஜமான னென்னும்‌ ஸம்பந்தமும்‌, காகாஸுரன்‌ மூவுலகும்‌ சுற்றிக்‌ காப்பாரற்று முன்னே வந்து விழுந்ததனாலும்‌, வஜ்ராயுதம்‌ முதலியவற்றுக்குச்‌ சளைக்காத இராவணன்‌ இராம பாணத்தால்‌ அடி யுண்டு மனங் கலங்கிக்‌ கையிலுள்ள வில்லையும்‌ வீசி யெறிந்து நின்றதனாலும்‌ செயலற்று நின்ற நிலையும்‌ இருவர்க்கும்‌ ஒக்கும்‌. ஆகையால்‌ இருவரையும்‌ _ அவர்‌ காப்பாற்றி யிருக்க வேண்டும்‌. பிராட்டியிடம்‌ அபசாரத்தையே முக்கியமாகக்‌ கொண்டால்‌ இருவரையும்‌ கொன்றிருக்க வேண்டும்‌. இராவணன்‌ வேதவதியின்‌ சாபத்திற்கு அஞ்சிப்‌ பிராட்டியைக்‌ கிட்டாமலிருந்ததையும்‌, காகாஸுரன்‌ அங்ஙனல்லாமல்‌ கிட்டித்‌ திருமார்பைக்‌ குத்திப்‌ புண் படுத்தியதையும்‌ நோக்கினால்‌ இராவணனை விட்டு விட்டு, காகத்தையே வதைத்திருக்க வேண்டும்‌. ஆனால்‌ இதற்கு நேர்மாறாக, காகம்‌ தலை தப்பிற்று, இராவணனோ தலை யறுப்புண்டு மாண்டான்‌. இதற்குக்‌ காரணம்‌ காகம்‌ விழுந்த போது பிராட்டி. பெருமாளருகில்‌ இருந்தமையும்‌, இராவணன்‌ செயலற்று நின்ற போது அவள்‌ அவனருகில்‌ இல்லாமையும் தான்‌. ஆகையால்‌ பிராட்டியை முன்னிட்டே பெருமாளைச்‌ சரணம்‌ புக வேண்டும்‌. தகப்பனை விடத்‌ தாய்‌ மக்களிடம்‌ அதிகப்‌ ப்ரீதி யுடையவளாகையால்‌ அவர்கள்‌ செய்த குற்றத்தைத்‌ தகப்பனிடம்‌ சொல்லாமல்‌ மறைத்து விடுவாளொருத்தி யன்றோ? தன்‌ வார்த்தையைக்‌ கேளாத இராவணனுக்கும்‌ உபதேசம்‌ செய்து அவனை நல்வழிப்படுத்த நினைத்தவள்‌–தன்னை மிகவும்‌ வருத்திய ராஷஸிகளைச்‌ சித்ரவதை செய்ய எண்ணிய திருவடியிடம்‌ மன்றாடி உலகில்‌ தவறு செய்யாதவர்யார்‌, நீ இவர்கள்‌ திறத்தில்‌ இரங்க வேணும்‌’ என்று உபதேசித்து அவர்களைக்‌ காப்பாற்றியவள்‌–தன்‌ சொல்லைக்‌ கேட்கும்படித்‌ தன்னிடம்‌ மிக்க அன்பு கொண்ட பெருமானிடம்‌ நம்மைப் பற்றிப்‌ புருஷகாரம்‌ (சிபார்சு) செய்து நம்மை அவன்‌ காக்கும்படிச்‌ செய்வாள்‌ என்பதைத்‌ தனிப் படச்‌ சொல்ல வேண்டுமா? . இதனாலும்‌ பிராட்டியைப்‌ புருஷகாரமாகப்‌ பற்ற வேண்டிய நிர்பந்தம்‌ அறியலாம்‌--என்பதே

முன்பு செய்த ப்ரபத்திகளைக்‌ காட்டிலும்‌ இந்த ப்ரபத்திக்கு உள்ள வாசி
முன்பு நோற்‌ற நோன்பு தொடங்கி நான்கு தடவைகள்‌ ப்ரபத்தி செய்‌திருக்க, இவ் வுலக முண்ட பெரு வாயனில்‌ ப்ரபத்தி செய்கிறாரே, அவற்றை விட இதற்கு ஏதாவது விசேஷ முண்டோ என்றால்‌–அங்கெல்லாம்‌ பிராட்டியைச்‌ சொல்லும்‌ ஸ்பஷ்டமான சப்தம்‌ இல்லை, இங்கு அது உண்டென்பதே வாசி.
பிராட்டியின்‌ புருஷகாரம்‌ அவசியமான தென்பது முன்னே கூறப் பட்டமையால்‌ அப்படிப்பட்டவளை வெளிப்படையாகக்‌ கூறிய இவ் விடத்தில்‌ செய்யப்பட்ட ப்ரபத்தியே உயர்ந்த தென்னத்‌ தடையில்லை யன்றோ -இவ்வாசியை ஒரு உவமையாலே விளக்கி யருளுகிறார்‌ வ்யாக்யாதா *கீழில்‌ ப்ரபத்திகள்‌ திருமந்த்ரம்‌ போலே; இது த்வயம்‌ போலே’ என்று. அதைச்‌ சற்று விரிவாகக்‌ கூறுகிறார்கள்‌ அரும்பதவுரையாசிரியர்கள்‌–திரு மந்த்ரத்தில்‌ ரஷகனைச்‌ சொல்லும்‌ அகாரம்‌, ரஷணம்‌ பிராட்டியின்‌ அதீன மாகையால்‌ அவன்‌ மார்பை விட்டுப்‌ பிரியாத பிராட்டியையும்‌ சொல்லிற்றேயாகக்‌ கொள்ள வேணும்‌. அப்படிக்‌ கொள்வது அர்த்த ஸ்வபாவத்தினால் தான்‌, சப்தத்தின்‌ சக்தியினால்‌ அன்று. தவயத்திலோ வென்றால்‌–*ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே’” என்று பிராட்டியைச்‌ சொல்லும்‌ ஸ்ரீ என்கிற சொல்லே உள்ளது. அது போல–நான்கு தடவைகள்‌ முன்பு ப்ரபத்தி செய்த நான்கிடங்களில்‌, எம்பெருமானைச்‌ சொன்னது அவனை விட்டு நீங்காத அவளையும்‌ கூறின படியாகவே கொள்ள வேணுமென்கிற ந்யாயத்தால்‌ லக்ஷ்மீ ஸம்‌பந்தம்‌ (புருஷகாரமாக லக்ஷ்மீ ஸம்பந்தம்‌) ஆழ்வாரால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது இங்கோ வெனில்‌ ‘திரு மா மகள்‌ கேள்வா” *அலர்மேல்‌ மங்கை யுறை மார்பா’ என்று–புருஷகாரமாக லஷ்மீ ஸம்பந்தம்‌, அவளை ஸ்பஷ்டமாகக்‌ கூறும்‌ திரு மா மகள்‌, அலர்மேல்மங்கை என்ற சப்தத்தாலேயே அருளிச்‌ செய்யப்பட்டுள்ளது என்று அறியவும்

அகலகில்லேன்‌ என்னும்‌ பாசுரம்‌ த்வய பூர்வ வாக்யார்த்தாதுஸந்தாந ரூபம்‌
ஸ்ரீ மந் நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே!
” என்கிற த்வயமந்த்ர பூர்வ வாக்யத்தில்‌ உள்ள ஸ்ரீசப்தார்த்தம்‌, அலர்மேல்‌ மங்கை’ என்றும்‌, மதுப்‌ பின்‌ பொருளான , நித்ய யோகம்‌ (பெருமாளுடன்‌ பிராட்டிக்குள்ள இடை விடாத சேர்த்தி) (அகலகில்லேன்‌…… உறை மார்பா’ என்றும்‌, நாராயண சப்‌தார்த்தமான வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸெளசீல்ய ஸெளலப்ய குணங்கள்‌ நான்கும்‌ “நிகரில்‌ புகழாய்‌: தொடங்க, திருவேங்கடத்தானே”’ என்று நான்கு விளிகளாலும்‌’ சரண சப்தார்த்தம்‌ ‘உன்னடிக்கீழ்‌’ என்றும்‌, ப்ரபத்யே என்றதன்‌ பொருள்‌ ‘அமர்ந்து புகுந்தேன்‌” என்றும்‌, ப்ரபத்யே (பற்றுகிறேன்‌) என்‌பதற்கு எழுவாயாக வந்து புகுந்த அஹம்‌ (நான்‌) என்பதன்‌ பொருளை (அடியேன்‌ * என்றும்‌, அந்த அதிகாரியின்‌ ஸ்வரூபங்களாய்‌, அங்குச்‌ சொல்லப்‌ படாத ஆகிஞ்சந்யம்‌ (வேறு உபாய மின்மை), அநந்ய கதித்வம்‌ (வேறு காப்‌பாரின்மை) என்ற இரண்டும்‌ !புகலொன்றில்லா’ என்றும்‌, இப் பாட்டில்‌ அநு ஸந்திக்கப் பட்டிருக்கிறபடியால்‌ இது தவய பூர்வவாக்யார்த்தா நுஸந்தான ரூப மென்று ஆசார்யர்கள்‌ அருளிச்‌ செய்வர்‌. (புகல்‌ என்ற தொழிற்பெயர்‌ ஆகு பெயராய்‌ (லாக்ஷணிகமாய்‌) நின்று, புகுதலுக்குக்‌ கைம்முதலான உபாயத்‌தையும்‌ புகுமிடமான ரக்ஷகனையும்‌ காட்டும்‌.)

அகலகில்லேன்‌”’ பாட்டின்‌ பொருள்‌ .
இனிப் பாசுரத்தின்‌ பொருளைச்‌ சிறிது அனுபவிப்போம்‌. அகலகில்‌லேன்‌.;…… உறை மார்பா–எவ்வளவு அநுபவித்தாலும்‌ புதிதாகவே தோன்றி மேன் மேலும்‌ அநுபவிக்க வேண்டியதாகத்‌ தோன்றும்‌ எம்பெருமானுக்குள்ள போக்யதையின்‌ மிகுதியாலே, பத்தர்‌ முக்தர்‌ நித்யர்‌ என்ற திரிவித சேதனர்க்‌கும்‌ ஸ்வாமிநியாய்‌ . எம்பெருமானுக்கும்‌ நியாமிகையாய்த்‌ தாமரை மலரின்‌ பரிமளமே ஒரு வடிவு கொண்டாற் போலுள்ள பேரழகியான பெரிய பிராட்டியார்‌–ஷண காலமும்‌ உன்னை விட்டு அகல வல்லமை யுடையேனல்லேன்‌ என்று சொல்லிக்‌ கொண்டே–நித்ய வாஸம்‌ செய்யும்‌ திரு மார்பை யுடையவனே என்பது இதன்‌ பொருள்‌. இத்தால்‌–எம்பெருமானை விட்டுப்‌ பிரியாத பெரிய பிராட்டியாரை–தாம்‌ பேறு பெறுவதற்காகத்‌ தாம்‌ எம்பெருமானிடம்‌ செய்யப்‌ போகும்‌ ப்ரபத்தி பலிக்குமாறு அவனிடம்‌ புருஷகாரம்‌ செய்யும்படி–ஆழ்வார்‌ ஆச்ரயிக்கின்றமை கூறப் படுகிறது. ஒர்‌ அபராதியை ரக்ஷிக்க வேணு மென்று பிராட்டி பெருமாளிடம்‌ விண்ணப்பித்த போது, அபராதியைத்‌ தண்டியாது விட்டால்‌ சாஸ்த்ர வரம்பை மீற வேண்டுமே யென்று பெருமாள்‌ சொல்ல, இவ் ஜீவனை ரஷியாது விட்டால்‌ உம்முடைய தயை வீணாய்ப்‌ போகுமே யென்று பிராட்டி கூற, சாஸ்த்ர வரம்பும்‌ தயையும்‌ நிறம்‌ பெறும்படி நீ ஓர்‌ உபாயம்‌ சொல்‌ என்று பெருமாள்‌ சொல்ல, அபராதியாயிருந்து உம்மைச்‌ சரணமாகப்‌ பற்றினவனைக்‌ காப்பாற்றினால்‌. உம்முடைய தயை ஜீவிக்கும்‌. அபராதியாய் உம்மிடம்‌ வராமல்‌ த்வேஷ புத்தி யுடையவனைத்‌ தண்டித்தால்‌ சாஸ்திர வரம்பும்‌ பிழைக்கும்‌, ஆகையால்‌ உம்மை ஆச்ரயித்த இவன்‌ அபராதியாயிருந்தாலும்‌ உம்மால்‌ அவச்யம்‌ காக்கத் தக்கவனே யாவான்‌ என்று–பெருமாள்‌ மறுக்க முடியாதபடி. உபதேசித்து அவனது ஸ்வாதந்தர்யத்தைத்‌ தலை சாயும்படி. செய்வள்‌ பிராட்டி. ஸ்வாதந்தர்யம்‌ மடிந்தவாஹறே, இது வரையில்‌ விஷயமாகப்‌ படாமல்‌ உள்ளேயே அடங்கிக்‌ கிடந்த-ப்ரபத்தி பலிக்குமென்று நாம்‌ நம்பு வதற்குக்‌ காரணமான நான்கு குணங்கள்‌ தலையெடுக்குமாறு சொல்லுகிறது மேல்‌ நான்கு அடைமொழிகளால்‌:

(1) நிகரில்‌ புகழாய்‌--ஒப்பற்ற புகழை உடையவனே! என்பது இதன்‌ பொருள்‌. புகழப்படுவது புகழ்‌–கல்பாண குண மென்றபடி. அக் குணங்கள்‌ பலவற்றில்‌ ஒப்பற்ற குணமாவது வாத்ஸல்யம்‌. ஆச்ரிதருடைய தோஷத்தை போக்யமாகக்‌ கொள்ளுகையே வாத்ஸல்யம்‌. எம்பெருமானார்‌ கத்யத்திலே ‘*அபார காருண்ய ஸெளசீல்ய வாத்ஸல்ய”” இத்‌யாதியாலே மற்ற குணங்களுடன்‌ சேர்த்து அருளிய வாத்ஸல்யத்தை **ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே” என்று தனிப்படவும்‌ அருளிச்‌ செய்கையாலே இக்‌ குணம்‌ நிகரில்லாததென்பதை அறியலாம்‌. ஆழ்வார்‌ இங்கு நிகரில்‌ என்றதையே எம்பெருமானார்‌ ஏக சப்தத்தால்‌ மொழி பெயர்த்தருளினார்‌. எம்பெரு மானுக்குள்ள எல்லாக்‌ குணங்களும்‌ அளவிட முடியாதவை யாயினும்‌, வாத்‌ஸல்யமென்னும்‌ குணம்‌ அளவிட முடியாமையில்‌ ஒப்பற்றது என்னும்‌ பொருள்‌–வாத்ஸல்யமேவ, ஏக :–அத்விதீய :, ஜலதி:–ஐலதிவத்‌ அபரிச்சிந்ந: (குண;) யஸ்ய ஸ:–ஆச்ரித….ஜலதி: என்ற பஹாு வ்ரீஹி ஸமாஸத்தாற்‌ பெறப்‌ படும்‌. தான்‌ புருஷகாரம்‌ செய்து சேர்த்த ஜீவன்‌ விஷயமாக ஒரு வேளை பிராட்டி குற்றம்‌ சொன்னாலும்‌, ‘என்னடியார்‌ குற்‌றம்‌ செய்யார்‌, செய்தாரேல்‌ நன்று செய்தார்‌’ என்றது அவளோடு மன்றாடுவதற்கு உறுப்பாகும்‌ இவ் வாத்ஸல்ய குணம்‌. நிகரில் புகழாயென்ற விளியினால்‌–எம்பெருமான்‌ நம்‌ தோஷங்‌களைக்‌ கண்டு நம்மை விலக்குகை யன்‌றிக்கே, அதற்கு நேர்மாறாக அவற்றையே போக்யமான உபஹாரமாகக்‌ கொண்டு நம்மை ரஷிக்குமவன்‌ என்று சொல்லப்‌ பட்டதாயிற்று. –

உலகம்‌ மூன்றுடையாய்‌–மூவுலகுக்கும்‌ ஸ்வாமியே! என்றபடி. முன்‌ சொன்ன வாத்ஸல்யத்துக்குக்‌ காரணமான ஸ்வ ஸ்வாமி பாவ ஸம்பந்தம்‌ சொல்லுகிற இவ் விளியினால்‌–எம்பெருமான்‌ உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமி யாகையாலே நம்‌ தோஷங்களை போக்யமாகக்‌ கொண்டு நம்மை ரக்ஷிப்‌பான்‌ என்று கூறப்பட்டதாயிற்று. –என்னை யாள்வானே! உன்னுடைய மிக்க இறை நிலையாகிய மேன்மையையும்‌, மாறிமாறிப்‌ பல பிறப்பும்‌ பிறந்து துளங்குகிற என்‌ தாழ்மையையும்‌ பாராமல்‌ மயர்வற மதிநலமருளி, கர்மாத்யுபாயங்கள்‌” ஸ்வரூப விரோதி, பிராட்டி புருஷகாரமாகப்‌ பற்றப்படும்‌ உபாயமும்‌ உபேயமும்‌ தானே” என்னும்‌ ௨றுதியை உண்டாக்கி என்னை ஆண்டு என்னோடு ஒரு நீராகக்‌ கலந்தவனே! என்பது இதன்‌ பொருள்‌. மிகப்‌ பெரியவன்‌ மிகத்‌ தாழ்ந்தவனோடு புரையறக்‌ (குற்றமறக்‌) கலக்கை யாகிற ஸெளசீல்யம்‌ இதனால்‌ சொல்லப்படுகிறது. இங்குக்‌ குற்றமாவது–கலக்கும் போது, ஐயோ இவ்‌வளவு உயர்ந்த நாம்‌ இத்தனைத்‌ தாழந்தவனோடு கலக்க வேண்டியதாயிற்றே என்னும்‌ நினைவே யாகும்‌. இவ்விளியால்‌ எம்பெருமான்‌–முற்கூறிய ஸ்வஸ்வாமிபாவஸம்பந்தத்தை வீணாக்காமல்‌–நம்மைக்‌ கைக்கொண்டு நமக்கு உபகரித்துக்‌ கலந்து பயனுள்ளதாகச்‌ செய்யுமவன்‌ என்று சொல்லப்பட்டதா யிற்று.

நிகரிலமரர்‌ முனிக்கணங்கள்‌ விரும்பும்‌ திருவேங்கடத்தானே! | இதனால்‌ சொல்லப்படுவது–ஸெளலப்யம்‌, அதாவது வேடர்கள்‌ யானைகள்‌ வாநரங்கள்‌ அகப்படத்‌ தன்னைக்‌ கண்ணால்‌ கண்டு பற்றும்படி எல்லார்க்கும்‌ எம்பெருமான்‌ வசப்பட்டிருக்கை என்றபடி. இது திருவேங்கடத்தான்‌, என்‌ற
சொல்லால்‌ கிடைக்கின்றது. பரமபதத்திலே கைங்கர்யத்திலே யூன்றின அமரர்‌, குணாநுபவத்திலே யூன்றின முனிவர்‌ என்று இரு திறத்தாராய்‌ உள்ள நித்ய ஸூரிகள்‌–அங்கு அநுபவிக்க முடியாத எம்பெருமானுடைய ஸெளஸீல்‌யத்தை அநுபவிப்பதற்காக விரும்‌பி வந்து படுகாடு கடக்கும்‌ இடம்‌ திருமலை என்ற பொருளைத்‌ தரும்‌–
நிகரில்‌…… விரும்பும்‌ என்னும்‌ திருவேங்கடத்தின்‌ அடைமொழி. இந்த நித்யஸூரிகன்‌ நிகரற்றவர்கள்‌-சரீர (அழுக்குடம்பின்‌) ஸம்பந்தம்‌, அது இருந்து கழிதல்‌, ஸ்ருஷ்டி முதலிய ஜகத்வ்யாபாரம்‌ ஆகிய மூன்றும்‌ இல்லாத இவர்கள்‌, முறையே இவற்றில்‌ ஒவ்வொன்றையுடைய ஸம்‌ ஸாரிகள்‌ முக்தர்கள்‌ எம்பெருமான்‌ இவர்களை ஒப்பாக வுடையவரல்லாமையால்‌ இவர்களுடைய நிகரின்மை கூறப்படுகிறது.

இங்ஙனம்‌ மூன்றடிகளாலும்‌-பிராட்டியை முன்னிட்டு, அவளால்‌ தலையெடுத்த நான்கு குணங்களை யுடைய எம்பெருமானை விளித்து விட்டு, “புகலொன் றில்லா வடியேன்‌ உன்னடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே” என்‌ற நான்காமடியால்‌– வேறு உபாயமும்‌ வேறு ரக்ஷகரும்‌ இல்லாத–தேவரீருடைய அடியவனான நான்‌ தேவரீருடைய திருவடிகளின்‌ கீழே இடை வெளியில்லாதபடி சேர்த்து (அத்திருவடிகளை) உபாய மாகவும்‌ (நிரபேக்ஷ ரஷகமாக) பற்றினேன்‌”- என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பித்து ஆழ்வார்‌ திருவேங்கடமுடையான்‌ திருவடிகளில்‌ ப்ரபத்தியை அநுஷ்டிக்கிறார்‌-ஆக ஆழ்வார்‌–இப்பதிகத்துல்‌ எம்பெருமான்‌ திருவடிகளை உபாயமாகப்‌ பற்றி ப்ரபத்தியை யநுஷ்டித்தும்‌, கீழ்‌ நல்குரவுப்‌ (6-3) பதிகத்தில்‌ (தந்தனன்‌ தன தாள்‌ நிழல்‌”, திருவண்ணகர்‌ மன்னு பிரான்‌ கழல்களன்றி மற்றோர்‌ களை கணிலம்‌ காண்மின்கள்‌” என்று ஸம்ஸாரிகளுக்கு உபதேசித்தும்‌–ஸித்தோ பாயமான எம்பெருமானிடம்‌ தமக்குள்ள உறுதியான நம்பிக்கையை இவ்‌ வாறாம்‌ பத்தால்‌ வெளிப்படுத்தினாராயிற்று.

பல ச்ருதி
கடைசிப்‌ பதிகத்தின்‌ பலச்ருதி–திருவேங்கடத்துக்குச்‌ சொன்ன இவை பத்தையும்‌ அதுஸந்தித்தவர்களைப்‌ பற்றியவர்கள்‌ அல்லது அநுஸந்தித்தவர்‌ களாலே அபிமானிப்‌ பெற்றவர்கள்‌ பரம பதத்தில்‌ தம்முடைய சிறப்புத்‌ தோற்ற இருக்கப் பெறுவர்‌- என்று கூறப்பட்டுள்ளது. அதாவது திருவேங்கட முடை யானைப்‌ பற்றிய இப்பதிகத்தோடு நேராக ஸம்பந்தம்‌ பெற்றவர்களோடு பரம்பரா ஸம்பந்தம்‌ பெற்றவர்களோடு (தொட்டாரைக்‌ தொட்டவர்களோடு) வாசி யற எல்லார்க்கும்‌ மோக்ஷ ப்ராப்‌தி கூறப்பட்டுள்ள தென்‌றவாறு –

இப்பதிகத்தோடு பராம்பரா ஸம்பந்த முன்ளவர்களுக்கே பரமபதம்‌ கிடைப்‌பது உறுதியானால்‌, திருவேங்கடமுடையானேடு பரம்பரா ஸம்பந்தம்‌ உள்ளவர்‌களுக்கு அது கிடைப்பது சொல்லாமலே விளங்கும்‌. அதையும்‌ கீழே இரண்டாம் பத்திலலேயே —என்னமுதம்‌ கார்முகில்‌ போலும்‌ வேங்கட நல்வெற்பன்‌” என்று திருவேங்கடமுடையானையே கூறும்‌ கேசவன்‌ தமரில்‌ (2–7) நாராயணனாலே (-அந்தர்யாமியாய்‌ வத்ஸலனான திருவேங்கட முடையானாலே) கீழ்‌ மேலெமர்‌ ஏழு பிறப்பும்‌ கேசவன்‌ தமர்‌ ஆனார்கள்‌ என்று தம்மோடு பரம்பரா ஸம்பந்தம்‌ பெற்றவர்கள்‌ அடிமைப்பட்டதையும்‌, (எந்தாய்‌ தண் திருவேங்‌ கடத்துள்‌ நின்றாய்‌! ‘தண்வேங்கடம்‌ மேகின்றாய்‌’ என்று திருவேங்கடமுடை யாளையே ப்ரஸ்தாவிக்கும்‌ வைகுந்தாவில்‌ (2-6) *செடியார்‌ நோய்களெல்லாம்‌ துரந்து எமர்‌ கீழ்மேல்‌ எழுபிறப்பும்‌ விடியா வெந்நகரத்‌ தென்றும்‌ சேர்தல்‌ மாறினர்‌? என்று தம்‌மோடு பரம்பரா ஸம்பந்தம்‌ பெற்றவர்கள்‌ நரகத்தில்‌ சேராமல்‌ பரம பதம்‌ பெறுவதையும்‌ கூறி–குறிப்பித்தருளியே இருக்கிறார்‌ ஆழ்வார்‌.

இருந்தமிழ்‌ நூற்புலவன்‌? (திருவாய்மொழிப்‌ புலவன்‌) என்று தம்‌ பெருமையைத்‌ தாமே வெளியிட்டருளிய திருமங்கையாழ்வார்‌ ஆறங்கம்‌ கூறவே அவதரித்தவர்‌–*இண்டையாயின கொண்டு தொண்டர்கள்‌ ஏத்துவார்‌ உறவோடும்‌ வானிடைக்‌ கொண்டு போயிடவும்‌–வேங்கடம்‌ கோயில்‌ கொண்டு…..இருப்பார்க்கு அடிமைத்‌ தொழில்‌ பூண்டாயே”’ என்று (பெரிய திருமொழி 9-1-3) திருவேங்கடமுடையான்‌ தொண்டர்களோடு ஸம்பந்தம்‌ பெற்ற அவருறவினரும்‌ மோக்ஷம்‌ பெறும்‌ பெருமையைக்‌ கூறி யருளியதையும்‌, மாறனடி. பணிந்துய்ந்து, அவர்‌ தம்‌ தமிழ்‌ மறையை மொமய்ம்பால்‌ வளச்த்த ஸ்ரீஸ்வாமி யெம்பெருமானார்‌–ஸ்ரீபாஷ்ய மங்கள சலோகத்தில்‌–**விகத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷ. …ஸ்ரீநி வாஸே”” என்று “பூத வ்ராத:” சப்த மிட்டருளி யதன்‌ மூலம்‌–அலர்மேல்மங்கையுறை மார்பன்‌ (திருவேங்கட முடையான்‌) தன்னை யாச்ரயித்தவர்களோடு பரம்பரா ஸம்பந்தம்‌ பெற்றவர்க்கும்‌ பரமபத மளிப்பதில்‌ விரதம்‌ கொண்டுள்ளமையைக்‌ கூறியருளியதையும்‌ இதற்கு, ப்ரமாணமாக நினைக்கத்‌ தக்கது- திருவேங்கடமுடையான்‌-ஆழ்வார்‌ எம்பெருமானார்‌-ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌.

இப்பணியில்‌ எளியனோகிய அடியேனை நியமித்த வளவோடு நில்லாமல்‌ அடியேன்‌ வேண்டுகோளுக் கிணங்கிப்‌ பல தலைப்புகளைக்‌ குறித் தெழுதி யனுப்பிப்‌ பேருபகாரம்‌ புரிந்தருளிய ஸ்ரீமான்‌. ௨. வே. வித்வான்‌-வாகம்‌ருதவர்ஷி–வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி ஸந்நிதியில்‌ க்ருதஜ்ஞ்தையோடு தண்டம்‌ ஸமர்ப்பித்து விடை பெறுகிறேன்‌. குற்றங்களைப்‌ பெரியார்‌ பொறுத்து அடியேனைத்‌ திருத்திப்‌ பணிகொள்வாராக.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ வே. வித்வான்‌ திருமலை அனந்தாண்‌ பிள்ளை க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading