ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-நான்காம் பத்தின் ஸாரம்-ஸ்ரீ. உ.வே, ஆழ்வார்‌ திருநகரி திருமலை நல்லான்‌ சக்ரவர்த்தி இராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-

ஸ்ரீ ௨. வே. திருமலை நல்லான்‌ ராம கிருஷ்ண ஐயங்கார்‌ ஸ்வாமிகள் ஆழ்வார்‌ திருநகரியில்‌ பரிதாபி வருஷம்‌ சித்திரை மாதம்‌ விசாக நக்ஷத்திரத்தில்‌ ஒரு விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌. இளமைக்‌ கல்வியைப்‌ பிறந்த ஊரிலேயே முடித்துக்‌ கொண்டு மதுரை ராமேச்வர தேவஸ்தான பாட சாலையில்‌ சேர்ந்து வடமொழியில்‌ சிரோமணிப்‌ பட்டம்‌ பெற்று, அதன்‌ பிறகு வட மொழியிலும்‌ தமிழிலும்‌ சென்னை சர்வகலாசாலையின்‌ வித்வான்‌ பட்டம்‌ ‘பெற்றார்‌.. உபநிஷத்துக்கள்‌, இதிஹாஸ புராணங்கள்‌ ஸ்ரீபாஷ்ய பகவத்‌ கீதாதி கிரந்தங்கள்‌, ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்கள்‌, கம்பனின்‌ கவிதைகள்‌ முதலியவற்றில்‌ ஆழ்ந்த ஞானம்‌ படைத்த இவர்‌, சுமார்‌ 60 வருஷ காலமாக உபய வேதாந்த கிரந்த கால க்ஷேபங்கள்‌ ஸாதித்து வருகிறார்‌. இரண்டு மொழிகளிலும்‌ கவிதா ஸாமர்த்யம்‌ அருளப்‌ பெற்ற இவர்‌ சில வடமொழிக்‌ காவ்யங்‌களை இயற்றியும்‌, வடமொழியில்‌ பூர்வாசாரியர்கள்‌ அருளிய சில ஸ்தோத்ரங்‌களை பொருட்சுவை குன்றாமல்‌ தமிழ்க்‌ கவிதைகளாக யாத்துமிருக்கிறார்‌. ஸ்ரீஆண்டாளின்‌ திவ்ய சரித்திரத்தை நாடகமாகத்‌ தமிழில்‌ எழுதி வெளியிட்டிருக்கிறார்‌. திருப்பாவை தண்டகம்‌, ஸ்ரீகோதா தண்டகம்‌ முதலிய வடமொழி நூல்களும்‌, திருக்கச்சிநம்பி நான்மணி மாலை, ஆண்டாள்‌ அந்தாதி முதலிய தமிழ்க்‌ கவிதைகளும்‌, ஸ்ரீஸ்துதி, ஸ்ரீகுணரத்ன கோசம்‌ போன்ற ஆசார்ய ஸ்ரீஸூக்திகளுக்கு இவர்‌ இயற்றியுள்ள தமிழ்க் கவிதைகளும்‌ இவர்‌ மேதா விலாஸத்திற்குச்‌ சான்றாகும்‌-மிகவும்‌ கடினமான வேதாந்த விஷயங்களை, பாமரரும்‌ உணர்ந்து கொள்ளும்படி எளிய தமிழ்‌ கடையில்‌ உபந்யஸிப்பது இவரது அநேக சிறப்புக்‌களில்‌ ஒன்று. கடந்த ஒரு வருஷ காலமாக சென்னை திருவல்லிக்கேணி வான மா மலை மடத்தில்‌ ஸ்ரீபாஷ்ய கால க்ஷேபமும்‌, தி. நகரில்‌ ஆசார்ய ஹ்ரூதய கால க்ஷேபமும்‌ ஸாதித்து வருகிறார்‌.

நியந்த்ருத்வம்‌- நான்காம்‌ பத்து நல்கும்‌ நற் பொருள் –
திருமாலவன்‌ கவிகளான நம்மாழ்வார்‌ திவ்ய ப்ரபந்தங்கள்‌ நான்கு. திருவிருத்தம்‌, திருவாசிரியம்‌, பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன அவை, ப்ரபந்ந ஜந கூடஸ்த்தர்‌ என்று போற்றப்படும்‌ நம்மாழ்வார்‌, ப்ரபந்நர்‌களான முமுஷுக்கள்‌ அறிய வேண்டிய மூன்று ரஹஸ்யங்களையும்‌ இந்த நான்கு திவ்ய ப்ரபந்தங்களாலும்‌ விவரித்திருப்பதாக ஸம்‌ப்ரதாயம்‌ வல்லோர்‌ பகருகின்றனர்‌. திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ என்னும்‌ இரண்டு திவ்ய ‘ப்ரபந்தங்களாலும்‌ முதல்‌ ரஹஸ்யமான திருமந்திரம்‌ விவரிக்கப்படுகின்‌ற தென்றும்‌, பெரிய திருவந்தாதியால்‌ சரம ஸ்லோகம்‌ என்னும்‌ ரஹஸ்யம்‌ விவரிக்கப்படுகின்‌ற தென்றும்‌, திருவாய் மொழியால்‌ த்வய மந்திரம்‌ என்னும்‌ ரஹஸ்யம்‌ விவரிக்கப்படுகின்‌ற தென்றும்‌ அவர்கள்‌ விளக்கம்‌ தருகின்‌றனர்

சரணாகதி மந்திரமாகிய த்வயத்தை விவரிப்பது பற்‌றித்‌ திருவாய்மொழி “தீர்க்க சரணாகதி’! என்று பேர்‌ பெற்றது. த்வயத்திற் சொல்லப்படும்‌ பத்து அர்த்தங்களும்‌ திருவாய்மொழியில்‌ முறையே பத்துப்‌ பத்துக்களாலும்‌ விவரிக்கப்பட்டுள்ளன என்கின்றனர்‌ ரஹஸ்யத்‌ துறையில்‌ தேர்ந்த நம்‌ ஆசிரியர்கள்‌. த்வயத்திற் சொன்ன பத்து அர்த்தங்களாவன:
ஸ்ரீ ய:பதித்‌ வம்‌
நாராயணத்வம்‌
நாராயணன்‌ திருவடிகள்‌
அவற்றின்‌ உபாயத்வம்‌
அவற்றைப்‌ பற்றிய ப்ரார்த்தனையை உள்ளடக்கிய மஹா விச்‌ வாஸம்‌,
கைங்கர்யத்தினை நல்கும்‌ திவ்ய தம்பதிகளுடைய அகலகில்லாத சேர்த்தி
கைங்கர்யத்தினை ஏற்கும்‌ எம்பெருமானது மிக்க இனிமை
அனைவரையும்‌ ஆளும்‌ ஸ்வாமித்வம்‌
நித்ய கைங்கர்யம்‌
அதனுக்‌ கிடையூறானவை அனைத்தும்‌ விலகல்‌
–என்னுமிவையாம்‌.-இந்த முறையைக்‌ கொண்டு பார்த்தால்‌, திருவாய் மொழியின்‌ நான்காம்‌ பத்தினால்‌ ஸ்ரீமந் நாராயணன் தாளே உபாயம்‌ என்னும்‌ விஷயமே ப்ரதானமாகப்‌ பேசப்படுவது என்பது புலனாகும்‌. உபாயமாவது அல்லன நீக்கி நல்லன நல்குவது. *மேவி நின்று தொழுவார்‌ வினை போக மேவும்‌: பிரான்‌”! என்று அல்லன போக்குதலும்‌ “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை” என்று நல்லன ஆக்குதலும்‌ நான்காம்‌ பத்தில்‌ கூறப்பட்டுள்ளமை காண்க–

இனி, வேறொரு வகையாகவும்‌ த்வய மந்திரத்தைத்‌ திருவாப்மொழி விவரிப்பதாகச்‌ சான்றோர்‌ விளக்குகிறார்கள்‌. த்வய மந்திரம்‌ இரண்டு பிரிவுகள்‌ கொண்டது. அதுபற்றியே அம் மந்திரத்திற்கு அப் பெயர்‌ அமைந்ததாகவும்‌ சொல்லப் படுகிறது. உபாயமான. சரணத்தை (திருவடியைப்‌) பற்றி பேசுவது முதற் பிரிவு. உபேயமான கைங்கரியத்தைப்‌ பற்றிப்‌ பேசுவது இரண்டாவதான பிரிவு. திருவாய்மொழியால்‌ இரண்டாம்‌ பிரிவு முன்னர்‌ மூன்று பத்துக்‌களால்‌ விவரிக்கப்படுகிறது. பின்னர்‌ மூன்று பத்துக்களாலே முதற் பிரிவு விவரிக்கப்படுகின்றது. அதனை யடுத்து ஏழாம் பத்தால்‌ *கடல்‌ ஞாலம்‌ காக்‌கின்ற மின்னு நேமியினய்‌” என்று உபாயத்திற்கு உறுப்பான குணம்‌ உடைமையும்‌, எட்டாம் பத்தால்‌ *உங்களோ டெங்களிடை யில்லையே’” என்று தம்மைச்‌ சேர்ந்தார்‌ திறத்தும்‌ தமக்கு நசை யில்லாமையும்‌, ஒன்பதாம்‌ பத்தில்‌ “நாராயணன்‌ நங்கள்‌ பிரானவனே”’ என்று எம்பெருமானோேடு தமக்கு இயல்‌பாக அமைந்த ஸம்பத்தமும்‌, பத்தாம்‌ பத்தால்‌ தாம்‌ பிரார்த்தித்தபடியே வீடு பெற்ற குருகூர்ச்‌ சடகோபன்‌” என்று பேறு பெற்றமையும்‌ பேசப்படுகின்றன என்பர்‌.-இம் முறையினைப்‌ பின் பற்றித்‌ திருவாய்மொழியின்‌ நான்காம்‌ பத்தினால்‌ கீழ்க் கூறிய அடிமை என்னும்‌ இப் பேற்றினைப்‌ பெறுதற்கு உபாயம்‌ திரு நாராணன்‌ தாளே என்றும்‌, முறையே அழிவதும்‌ அளவு பட்டதுமான ஐசுவரியமும்‌ கைவல்யமும்‌ இப் பேற்றினைப்‌ பெறுதற்கு இடையூறாய்‌ நிற்பவை என்றும்‌ நம்மாழ்வார்‌ முதலில்‌ ஒரு நாயகப் பதிகத்தினால்‌ அறிவுறுத்தி, இறுதியில்‌ ஐங் கருவிகண்ட இன்பம்‌” என்று, உண்டாகி அழிவதாக ஐசுவரிய ஸுகத்‌தையும்‌, “தெரிவரிய அளவில்லாச்‌ சிற்றின்பம்‌” என்று கைங்கர்யத்தை நோக்கச்‌ சிறியதாக அளவு பட்டுத்‌ தோற்றுவதாகக்‌ கைவல்ய ஸுகத்தையும்‌ “ஒழிந்தே”னென்று தாமே அநுஸந்திப்பதாக ஆசாரியர்கள்‌ நிர்வஹித்தனர்‌. ஆக, ஐசுவரிய கைவல்யங்களை ஒழித்து கைங்கரியமாகிற பேற்றினைப் பெறுத்துவது திரு நாரணன் தாளே என்பது இந் நான்காம்‌ பத்தின்‌ திரண்ட பொருளாகத்‌ தேறுகின்றது.

இனி, எம்பெருமானிடம்‌ ப்ரதானமாக ஒவ்வொரு குணம்‌ ஒவ்வொரு பத்‌திலும்‌ பேசப்பட்டு, அத்தகைய குணம்‌ வாய்ந்த அவனால்‌ தாம்‌ பெற்ற பேற்‌றினை நம்மாழ்வார்‌ பத்துத்‌ தோறும்‌ வெளியிடுவதாக ஆசார்ய ஹ்ருதய காரர்‌ நிர்வஹித்தருளுவர்‌. அம் முறையிற் காணும்போது நான்காம்‌ பத்தினால்‌ எம்‌ பெருமானது நியந்த்ருத்வம்‌ ப்ரதானமாகப்‌ பேசப்பட்டு அத்தகைய அவனால்‌ மூன்றாம் பத்தில்‌ தாம் பெறப் பாரித்த கைங்கர்யம்‌ என்னும்‌ புருஷார்த்தத்துக்குப்‌ பயனாக ஏனைய புருஷார்த்தங்களான ஐசுவரிய கைவல்யங்களில்‌ நசை நீங்க பேறு தமக்கு ஏற்பட்டதென்று நம்மாழ்வார்‌ வெளியிடுவதாகக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌-முத்ற் பத்தினாலே பரத்வம்‌ ப்ரதானமாகப்‌ பேசப்பட்டு, அத்தகைய அவனால்‌ தத்துவ ஞானத்தில்‌ மறதியற்‌ற பேறு தமக்கு ஏற்பட்டதென்றும்‌, இரண்‌டாம்‌ பத்தினலே காரணத்வம்‌ ப்‌ரதானமாகப்‌ பேசப்பட்டு, அத்தகைய அவனால்‌ மோக்ஷத்தைத்‌ தம்‌ ஸ்வரூபத்துக்கேற்ப வடிகட்டும்‌ (நிஷ்கர்ஷிக்கும்‌) பேறு தமக்கு ஏற்பட்டதென்றும்‌, மூன்றாம்‌ பத்தினாலே வியாபகத்வம்‌ ப்ரதானமாகக்‌ பேசப்பட்டு அத்தகைய அவனால்‌ வடி கட்டின மோக்ஷத்தின்‌ பயனான கைங்கர்யத்தை வழு விலாது செய்ய வேண்டும்‌ என்று ப்ரார்த்திக்கும்‌ பேறு தமக்கு ஏற்பட்டதென்றும்‌, நான்காம் பத்தினாலே நியந்த்ருத்வம்‌ ப்ரதானமாகப்‌ பேசப்பட்டு அத்தகைய அவனால்‌ கைங்கர்ய புருஷார்த்தத்தின்‌ பயனை ஐசுவர்ய கைவல்யங்களில்‌ நசையற்ற பேறு தமக்கு ஏற்பட்டதென்றும்‌ நம்மாழ்வார்‌ வெளியிடுகிறார்‌ என்று தொடர்பு கண்டு கொள்க -தொடக்கத்தில்‌ *மறுகலில்‌ ஈசனை:’ என்து நியமிக்கும்‌ ஈசுவரனாகச்‌ சொல்லி, இறுதியில்‌ “ஈசன் பாலோர்‌ அவம் பறைதல்‌:” என்று முடிப்பதால்‌ இந்த நான்காம் பத்தில்‌ ஈசனாம்‌ தன்மையான நியாமகத்வம்‌ ப்ரதானமாகப்‌ பேசப்படுகின்‌ற தென்பது தெளிவு. “ஐங்கருவி கண்ட இன்பம்‌, தெரிவரிய அளவில்லாச்‌ சிற்றின்பம்‌ ஒழிந்தேன்‌”” என்கையாலே ஐசுவரிய கைவல்யங்‌களில்‌ நம்மாழ்வார்‌ நசையறும்‌ பேறு பெற்றமை வெளியிடப் படுகிறது.

இங்ஙனம்‌ நான்காம்‌ பத்திற்‌ சொல்லப்படும்‌ விஷயத்தை ஆசார்ய ஹ்ருதய காரரே விரித்துரைப்பதை இனிக் காண்போம்‌. பரம புருஷன்‌ காரணப்‌ பொருளாய்‌ எங்கும்‌ பரந்துள்ளதாக மூன்றாம்‌ பத்திலே பேசப்பட்ட வியாப்தி, ஆகாசம்‌ எங்கும்‌ பரவி யுள்ளமை போன்ற தன்று; ஈசனாய்‌ அதாவது நியமிப்‌ பவனாய்‌ அவன்‌ எங்கும்‌ பரந்துள்ளமையாகும்‌ என்கிறது நான்காம்‌ பத்து, பரந்துள்ளமை மட்டும்‌ கூறப்படின்‌ ஆகாசமும்‌ பரம் பொருளாம்‌; அங்ஙன்‌ ஆகாமைக்காக நியமிப்பதாயிருப்ப தென்கிறார்‌. நியமித்தலை மட்டும்‌ கூறினும் அரசனும்‌ நியமிப்பவனாதலின்‌ பரம் பொருளாக நேரிடும்‌. அங்ஙன்‌ ஆகாமைக்‌காக பரந்துள்ளமையோடு சேர்த்து நியமித்தலைக்‌ கூறுதல்‌ வேண்டும்‌, ஏனைய அரசர்கள்‌ ஆங்காங்கே திரிந்தும்‌, கார்த்த வீர்யார்ஜுநன்‌ மக்கள் தவறிழைக்கக்‌ கருதும் போது அவர்கள்‌ முன்னர்த் தன்‌ வர பலத்தாலே தோன்றியும்‌ நியமிப்‌ பவராயிருந்தனர்‌. ஈசன்‌, அங்ஙனன்றி “எண்டிசையும்‌ தவிராது நின்றான்‌ தன்னை” என்றபடி ஜாதி, வ்யக்தி தோறும்‌ முழுதும்‌ வியாபித்திருப்பது போல ஒவ்வொரு பொருளிலும்‌ பூர்ணமாக வியாபித்திருக்து நியமிப் பவனாயுள்ளான்‌. இது தோன்ற *வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல வீவில் சிர்‌ ஆற்றல்‌ மிக்காளும்‌ அம்மானை” என்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்த அழகு காண்க, ஏனையோர்‌ ஆளுவதற்கும்‌ அம்மான்‌ ஆளுவதற்கும்‌ உள்ள வேறுபாடு தோற்ற *’வீற்றிருந்துு என்பது கவனித்தற்கு உரியது. ஒவ்வொரு பொருளிலும்‌ தான்‌ பரிபூர்ணமாக வியாபித்து நின்று நியமிப்பவனா யிருந்தாளுதல்‌ பிறருக்கு இன்றி அவனுக்கே உரிதா யமைந்ததாகிய தன்மை என்க-

இத்தகைய ஸர்வேசுவரன்‌ கீழே ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி அடிமை செய்ய வேண்டும்‌ என்று ஆழ்வார்‌ பாரிக்கும்‌ போது எல்லா இடங்‌களிலும்‌ போல்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ செய்ய வேணுமென்று, கீழ்க்கழிந்த காலத்திலும்‌ அடிமையினைச்‌ செய்ய வேட்கை மீதூர்ந்து ஆசைப்பட்டதற்‌ கேற்பக் காலத்தாலும்‌ தேசத்தாலும்‌ கை கழிந்த தன்னுடைய அருஞ்செயல்களை எல்லாம்‌ அந்தந்த இடத்திலும்‌ அந்தந்தக் காலத்திலும்‌ சேர்ந்தனுபவிக்கும்படி காட்டி யருளினான்‌. **ஆதியங்காலத்‌ தகலிடம்‌ கீண்டவர்‌ பாதங்கள்‌ மேலணி பைம்பொன் துழாய்‌ என்றே ஓதும்‌ மால்‌ எய்தினள்‌” என்று எம்பெருமானது ,நிலைகளின்‌ பண்டைய அனுபவங்களை இன்று பெற்றிடல்‌ வேண்டும்‌ என்று வாய் புலற்றும் படியான மதி மயக்கம்‌ ஆழ்வார்‌ எய்தியதாகக்‌ கூறப்படுவது காண்க. இங்ஙனம்‌ மயங்கிய ஆழ்வார் திறத்தில்‌ காலத்தை வேறுபடுத்திக்‌ காட்டுதற்கு ஏதுவானவைகளை நீக்கித்‌ தற்காலத்திலுள்ளவைகளாகத்‌ தம்‌ பண்டைய நிலைகளைக்‌ காட்டி அநுபவிக்கும்படி செய்தருளினான்‌ ஸர்வேசுவரன்‌ என்க-இப்பொழுது, நப்பின்னைக்காக ஏறடர்த்த நிலையிலும்‌, குவலயாபீடம்‌ என்னும்‌ வேழத்தை மருப்பொசித்த நிலையிலும்‌ கண்ணபிரானையும்‌, ஸீதா பிராட்டிக்காக இராவணனை அழித்த நிலையில்‌ வில் வளைத்த கோலவல் விலி இராமபிரானையும்‌ தன்‌ காலத்தில்‌ உள்ளவர்களாக நேரே கண்டநுபவிப்பவ ராயினார்‌ நம்மாழ்வார்‌. ஆயினும்‌ பகைதெறும்‌ தோறும்‌ அன்னாருக்குப்‌ பூ முதலியன கொண்டு விடாயாறுமாறு உபசரித்து உதவப்‌ பெற்றிலேனே என்னும்‌ குறைபாடு தோற்றிற்று நம்மாழ்வாருக்கு. அக் குறையையும்‌, தம்‌ திருமேனிக்கு அவருடைய நெஞ்சையும்‌ வாசகத்தையும்‌ கைகூப்புதலையும்‌ முறையே சந்தனமாகவும்‌ புனையும்‌ கண்ணியோடு வான்பட்டாடை யாகவும் ௮ணிகலனாகவும்‌ கொண்டு தீர்த்தருளினன்‌ பேரன்புடைய சர்‌வேசுவரன்‌;அத்தகைய அன்புடைமையில்‌ ஈடுபட்ட ஆழ்வார்‌, காதன்மையல்‌ ஏறிப்‌ ‘பேரன்புடை இறைவன்‌ கைக் கொண்ட காரிகையாகி , அவனோ டிணைந்து மட்டற்ற மகிழ்வுற்றார்‌. ‘ அதனால்‌ வெள்ளக்‌ கேடாக ஒண்ணாதென்று இறைவன்‌ சிறிது விலகி நின்றான்‌. ஆற்றாமை மீதூர்ந்தது ஆழ்வாருக்கு. அவனுக்குப்‌ போலியான பொருள்களையும்‌ அவனோடு தொடர்புடைய பொருள்களையும்‌, அவனாகவே ப்ரமித்துப்‌ பேசுமளவுக்குப்‌ பிரிவாற்‌ற கில்லாது, பித்துப் பிடித்த்‌’ தலைமகளாகி விட்டார்‌ ஆழ்வார்‌. பேய்ச்சி முலை சுவைத்தாற் கென்‌ பெண்‌ கொடி ஏறிய பித்தே” என்றது காண்க-

இங்ஙனம்‌ பிரிந்து பித்தேறுதற்கு இடமில்லாத பரமபதத்தில்‌ அநுபவத்தைப்‌ பெற்றுப்‌ பெயர்கிலாத பேரின்பம்‌ துய்க்க விழைந்தார்‌ ஆழ்வார்‌-அதுவோ ப்ரகிருதி மண்டலத்திற்கு அப்பாற்பட்டுக்‌ கிட்டுதற்கு ௮ரிதாயுள்ளது. ஏங்கினார்‌. அவ் வேக்கம்‌
சீலமில்லாச் சிறியனேலும்‌ செய் வினையோ பெரிதாகல்
ஞாலமுண்டாய்‌! ஞான மூர்த்தி! நாராயன ! என்றென்று
காலந் தோறும்‌ யானிருந்து கை தலை பூசலிட்டால்‌
கோல மேனி காண வாராய்‌ கூவியுங் கொள்ளாயே.”-
-என்னும்‌ பாசுர வடிவமாய்‌ வெளிப் படுகின்றது. **நான்‌ சிறியவன் தான்‌; ஆனால்‌ நான்‌ செய்த பாபமோ மிகவும்‌ பெரிது. இறைவன்‌ கருணை பெரிதே, என்‌ பாபமோ அதனினும்‌ மிகப்‌ பெரிது! கருணை பெருக்கெடுத்து வரினும்‌ நெருங்க வொண்ணாத படி யன்றோ நான்‌ செய்த பாபம்‌ அதனைத்‌ தடுத்து நிறுத்தி யுள்ளது! என்கிறார்‌. இலங்கையில்‌ பிராட்டி *மமைவ துஷ் க்ருதம்‌ கிஞ்சித்‌ மஹத்‌” [நான்‌ செய்த பாபம்‌ ஏதோ பெரிதாயுள்ளது.] என்றது போன்றுள்ளது ஆழ்வார்‌ ஸ்ரீஸூக்தி. ஞாலமுண்டா யென்று ஆற்றலும்‌, ஞான மூர்த்தி என்று அறிவும்‌, நாராயணா என்று உறவு முறையும்‌ பற்‌ற ஆபத்தில்‌ அதன்‌ காரணத்தை யறிந்து உறவு முறையில்‌ தன்‌ பேறாகக்‌ காப்பவனே என்று பல கால்‌ தலையிலே கை சேர்த்துக்‌ கூப்பிட்டும்‌ உன்‌ அழகிய மேனியைக்‌ காண நீ வரவில்லை, என்னையும்‌ அத்திருமேனி யோடும்‌ இருக்குமிருப்பைக்‌ காணுமாறு கூவிக்‌ கொள்ளவு மில்லையே என்று ஏங்குகிறார்‌ நம்மாழ்வார்‌-இத்தகைய ஏக்கம்‌ தீருமாறு ஸர்வேசுவரன்‌ பரமபதத்தில்‌ திருமகளோடு எழுந்தருளி யிருக்கு மிருப்பைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. காட்டிக்‌ கொடுப்பதற்‌காக அவன்‌ வரவுமில்லை; இவரைக்‌ கூவி யருளவுமில்லை. இங்கிருந்த வண்ணமே பரம பதத்தில்‌ அயர்வறு மமரர்கள்‌ அடிமை செய்யப்‌ பெரிய பிராட்டியாரும்‌ தாமுமாக வீற்றிருந் தேழுலகும்‌ தனிக் கோல்‌ செலுத்துவது கண்டு நெஞ்சு அதனி லீடுபடும்படி செய்தருளினான்‌. இதனை ”ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலா நிற்பக்‌ கண்ட சதிர் கண்டு’” என்று தாம்‌ கண்டதாக நம்மாழ்வாரே அருளிச்‌ செய்வது காண்க.–

காலத்தால்‌ அப்பாற்பட்ட கண்ணபிரான்‌ நிலை, இராமபிரான்‌ நிலை முதலிய நிலைகளைத்‌ தற் காலத்தில்‌ கண்டு அநுபவிக்கும்படி செய்தது போல தேசத்தால்‌ அப்பாற்பட்ட பரமபதப நாதன்‌ நிலையையும்‌ இந்தத்‌ தேசத்தி லிருந்தே கண்டநுபவிக்குமாறு ஸர்வேசுவரன்‌ நம்மாழ்வாருக்குப்‌ பேரருள்‌ புரித்தானென்க. முக்தாநுபூதி-இங்கேயே முகுந்தனருளால்‌ நம்மாழ்வாருக்குக்‌ இடைக்கப்‌ பெற்றது. ‘வீவிலின்பம்‌ மிக எல்லை நிகழ்ந்தனன்‌’ மேவியே” என்றும்‌, “*கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே: என்றும்‌ முக்தர்களுக்குப்‌ போலத்‌ தமக்கும்‌ ஸர்வேசுவரனைக்‌ இட்டி நிரதிசயாநந்த மேற்பட்டதாகவும்‌, திருவடிகளைச்‌ சேர்ப்பிக்கத்‌ தாம்‌ அனுபவிக்கப்‌ பெற்றதாகவும்‌ அவரே அருளிச்‌ செய்வது காண்க-போலி கண்டு அவனாக நினைந்து மேல்‌ விழுந்த மையல்‌ தீர ஒரு காலும்‌, தேசத்தால்‌ அப்பாற்பட்டுள்ள கோல மேனியைக்‌ காண மாட்டாத ஏக்கமும்‌, ஸம்ஸாரிகளிடையே இருத்தலினாலாகிய துக்கமும்‌ தீர மற்றொரு காலும்‌, ஆக இரண்டு தடவை பரமபத நிலையை நம்மாழ்வாருக்கு ஸ்ர்வேச்வரன்‌ காட்டிருளினமை இங்கறியத் தக்கது. இங்ஙனம்‌ நம்மாழ்வாருக்கு முக்தாநுபூதி இங்கிருந்தே மாநஸிகமாக ஏற்‌பட்டதற்குப்‌ பயனாக எம்பெருமானைத்‌ தவிர ஏனைய விஷயங்களில்‌ அவருக்கு வைராக்யம்‌ பிறந்தது. வேறு தெய்வங்களை மதித்துத்‌ தொழாதவராயினார்‌. *’உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌:’ என்று தேவதாந்தரங்களில்‌ வைராக்‌யம்‌ உரைக்கப்படுவது காண்க. இங்ஙனமே “உடம்புடையான்‌ கவராத . உயிரினாற் குறைவிலமே’” என்று தன்னிடத்திலும்‌, “யோகணைவான்‌ கவராத உடம்பினுற் குறைவிலமே”’ என்று உடம்பு உட்படத்‌ தன்னைச்‌ சேர்ந்த பொருள்‌ களிடத்திலும்‌ வைராக்யம்‌ தோற்றக்‌ கூறப்படுவதும்‌ நோக்கத்தக்கது. உலக இயலில்‌ வைராக்யம்‌. ‘கொடு வுலகம்‌ காட்டேலே” என்பதனால்‌ காட்டப்படுகிறது. ஐசுவர்யம்‌ என்னும் புருஷார்த்தத்திலும்‌ கைவல்யா நுபவம்‌ என்னும்‌ புருஷார்த்‌ தத்திலும்‌ வைராக்யம்‌ ** வேட்கை எல்லாம்‌ விடுத்து * என்று மொத்தமாகவும்‌, **ஐங்கருவி கண்ட இன்பம்‌ அளவில்லாச்‌ சிற்றின்பம்‌ ஒழிந்தேன்‌?” என்று தனித்‌தனி யாகவும்‌ எடுத்து இயம்பப் படுகின்‌றன.

இங்ஙனம்‌ பரந்தாமனிடம்‌ பேரன்பு பூண்டு, பிறவற்றில்‌ வைராக்யம்‌ கொண்ட ஆழ்வார்‌, நமக்கு வைராக்யம்‌ விளைத்து பகவானைப்‌ பற்றுவதில்‌ விருப்பம்‌ உண்டாக்கும்‌ வகையிற் பல நல்லுபதேசங்கள்‌ புரிகிறார்‌. ‘ஒரு நாயக மென்னும்‌ திருவாய்மொழியில்‌ “உலகுடனுண்டவர்‌, இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌:’ என்றும்‌ **சுவர்க்க மெய்தியும்‌ மீள்வர்கள்‌” என்றும்‌ முறையே இம்மை மறுமைச் சிறுமை, செல்வத்தின்‌ நிலையாமைகளையும்‌ “இறுகல்‌ இறப்பு” என்று பகவானுடைய அநுபவத்தை நோக்கும் போது இறுகல்‌ (ஸங்கோசம்‌) ஆகத்‌ தோற்றுதலின்‌ கைவல்யமாம்‌ ஆத்மாநுபவத்தின்‌ அளவு பட்டமையை யும்‌ காட்டி ஐசுவர்ய கைவல்யங்களில்‌ நமக்கு வைராக்ய மூட்டுகிறார்‌.

இளந்தெய்வத்துக்கு “அங்கோர்‌ ஆடும்‌ கள்ளும்‌ இறைச்சியும்‌ தூவேன்‌மின்‌?! என்று வெறி விலக்கின் மூலம்‌ ௮ணங்காடுதல்‌ கீழ்மை என்று காட்டி, தேவதாந்தரங்களிடம்‌ வைராக்யத்தை ‘ விளைவிக்கிறார்‌ நம்மாழ்வார்‌. அதனை வலியுறுத்‌தத்‌ தேவதாந்திரங்களுடைய அறியாமை, இயலாமை, குறை யுடைமை இவைகளையும்‌ காண்பித்தருளுகிறார்‌ ஆழ்வார்‌. (பேச நின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ பிறர்க்கும்‌ நாயகனவனே, கபால நன்‌ மோக்கத்துக் கண்டு கொண்மின்‌” என்று அவர்‌ காட்டுவது காண்க. தலை யறுப்புண்பானும்‌ சபிக்கப்‌ படுவானுமாய்‌ முறையே பிரமனும்‌ சிவனும்‌ ஆபத்தை வராது விலக்கக்‌ கொள்ளும்‌ வழி யறியாமலும்‌, வலுவில்லாமலும்‌, வந்த ஆபத்தை இறைவனிடம்‌ குரையிரந்து போக்கிக்‌ கொள்ளுகின்‌ற குறை யுடைமையும்‌ கபால மோக்ஷ விருத்தாந்தத்தில்‌ நன்கு புலப்படுகின்றன அல்லவா “பேசகின்ற”’ என்னும்‌ அடைமொழியை சிவனுக்கும்‌, பிரமனுக்கும்‌, பிறர்க்கும்‌ கொடுக்க. வேதங்‌களில்‌ புனைந்துரையான சில வாக்யங்களாலும்‌ ராஜஸ தாமஸ புராணங்‌களாலும்‌ பரம் பொருளாகப்‌ பேசப்பட்டு அவை தம்மைச்‌ சரிந்து விழாது தாங்குதலினால்‌ அவர்கள்‌ நிற்கிறார்களே யன்றி ஸ்வரஸமாய்‌ வேதங்கள் அனைத்தும் ப்ரதிபாதிக்க ப்ரபலமான ஸாத்விக புராணங்களாலே பேசப்படும்‌ மஹிமையுடன்‌ ஸர்வேசுவரன்‌ மூட்டுக்‌ கொடுக்காமல்‌ தானே நிற்பது போல அவர்கள்‌ நிற்பதில்லை என்பது குறிப்பு-சிவன்‌ முதலியோர்க்குப்‌ பெருமை பேச நிற்க வைக்கும்‌ லிங்க புராணமும்‌ புறச் சமயங்களைச்‌ சார்ந்த சமண பெளத்த நூல்களும்‌, இவை போன்ற பிறவும்‌ உண்மை பேசுவன அல்ல; பொய்யே பேசுவன. அப் பொய்ந் நூலை மெய்ம்‌ தூலென்று ஒதி மாண்டு போவாரை நோக்க நீங்களும்‌ நீங்கள்‌ வணங்கும்‌ தெய்வமும்‌ நாராயணனையே ஆத்மாவாக உடையவர்களாவீர்‌, ‘ ஆதலின்‌ குத்ருஷ்டி மதத்‌தை (மறையினை ப்ரமாணமாக ஏற்று அதனுக்கு அவப் பொருள்‌ கூரும்‌ மதத்தை)ச்‌ சேர்ந்தவர்ளும்‌ பாஹ்ய மதத்தை (மறையினை ப்ரமாணமாக மதிக்காத மதத்தை)ச்‌ சேர்ச்த்வர்களுமான நீங்கள்‌ அந் நெறிகளினின்றும்‌ விலகித்‌ தீதில்‌ நன்னெறியே வந்து பொலிந்து நின்ற பிரானைப்‌ போற்றுமின்‌னென்று இறுதியில்‌ உபதேசிக்கிறார்‌.

இலிங்கத்திட்ட புரரணத்தீரும்‌ சமணரும்‌ சாக்கியரும்‌
நலிந்து வாது செய்வீர்களும்‌ மற்றும்‌ நுந் தெய்வமுமாகி நின்றன்‌
மலிந்து செந்நெல்‌ கவரி எீசும்‌ திருக் குருகூரதனுள்‌
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்‌ ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே.!
”-என்பது அவரது சீரிய உபதேசம்‌,
இலிங்கத்திட்ட புராணம்‌–இவிங்கத்துக்‌ கென்று இட்ட புராணம்‌ என்‌றபடி , பக்ஷ பாதத்‌துடன்‌ இலிங்கத்திற்குப்‌ பெருமையைப்‌ புநைந்துரைக்க வந்த புராணம் என்றதாயிற்று. விஷ்ணு புராணம்‌ போலே உலகிற்குக்‌ காரணமான பொருள்‌ விஷ்ணு என்று பக்ஷ பாதமின்‌றி உள்ளதை உரைப்பதன்று என்று கருத்து, சமணரோடும்‌ சாக்யரோடும்‌ இலிங்கத்திட்ட புராணத்தாரையும்‌ சேர்த்‌துக்‌ கூறியது, தமோ குணத்‌தால்‌ மாறாடும்‌ புத்தி யுடைமையில்‌ உள்ள ஓற்றுமை பற்றி என்க. பாஹ்யர்களையும்‌ குத்ருஷ்டிகளையும்‌ சேர்த்துத்‌ தமோ நிஷ்ட்டர்‌ என்றார்‌ மநுபகவானும்‌

எம் மதத்வராயினும்‌ அவரது தெய்வத்துக்குக்‌ கூறுமேற்ற மெல்லாம்‌ அதனுக்‌ கந்தராத்மாவான பொலிந்து நின்ற பிரானுடைய ஏற்மமாக இசைதல்‌ வேண்டும்‌ அந்தந்த தெய்வத்தினுடைய ஸ்வரூபம்‌, ஸ்‌திதி ப்ரவ்ருத்‌திகள்‌ அனைத்தும்‌ ஆத்மாவான இவனுக்கு உட்பட்டவை களாதலின்‌ அவற்றிற்குக்‌ கூறுமேற்ற மெல்லாம்‌ ஆத்மாவாக நிற்கும்‌ பொலிந்து நின்ற பிரானையே சார்ந்து நிற்கும்‌. “விஷ்ணுராத்மா பவத்‌ தஸ்ய பவஸ்யா* [அந்த ருத்ரனுக்கு விஷ்ணு ஆத்மாவா யிருந்தான்‌ ] என்று ருத்ரன்‌ திரிபுர ஸம்‌ ஹாரம்‌ செய்தது விஷ்ணு அவனுக்கு ஆத்மாவாய்‌ நின்‌றமையினாலே எனப்படுவது இங்கறியத் தக்கது. எல்லாப்‌ பொருள்களுக்கும்‌ ஆத்மாவாய்‌ பரத்வம்‌ பொலிந்து தோன்றும் படி நின்ற அவனுக்குத்‌ திருநகரியில்‌ செந் நெற் பயிர்கள் கூடக்‌ ௧திர்க் கனத்தால் அசைவது சாமரம்‌ வீசுவது போலத்‌ தோற்றுகிறது ஆழ்வாருக்கு. அறிவற்ற பொருள்‌ எனத் தக்க செந்நெற்களும்‌ அவனுக்குப்‌ பணி விடை புரிகின்‌றன; நீங்களு மங்கே சென்று அவனுடைய பரத்வத்தை உணர்ந்து போற்றுங்கள்‌ என்று பிற மதத்தவருக்கு உபதேசிக்கிறார்‌ நம்மாழ்வார்‌. நீங்கள்‌ கைக் கொண்டிருந்த மதத்தில்‌ கூறப்படும்‌ உங்கள்‌ தெய்வத்தின்‌ பரத்வம்‌ உண்மைக்‌ கலப்பில்லாத முழுப்‌ பொய்‌. திருநகரியில்‌ பொலிந்து நின்ற பிரானிடம்‌ உள்ள பரத்வம்‌ பொய்க் கலப்‌ பறவே யற்ற பரிபூர்ண ஸத்யம்‌, என்பது உங்களுக்கே புலப்படும்‌ என்றார்‌-மிக்க கிருபை வாய்ந்த நம்மாழ்வார்‌, நீங்கள்‌ பொலிந்து நின்‌ற பிரானைப்‌ போற்றுதற்குத்‌ திருநகரி போக வேண்டாம்‌; இருந்த இடத்திலிருந்தே திருநகரியை மனத்தால்‌ நினையுங்கள்‌; அதுவே போதும்‌, நீங்கள்‌ உய்ந்து விடுவீர்கள்‌ என்கிறார்‌.

ஆதிப்பிரான்‌, அமரும்‌ வளங்‌ கொள்‌ தண் பணை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனை வளங் கொள்‌ ஞானத்து வைம்மின்‌ உம்மை உய்யக்‌ கொண்டு போகுறிலே”-என்னும் போது நம்மாழ்வார்‌ கருணை பொங்கி வழிவது நமக்குத்‌ தெரிகின்‌றதன்றோ 7
ஆதிப்பிரான்‌ அமரும்‌”? என்றும்‌ **அழகாய” என்றும்‌ திருக் குருகூரை விசேடித்தது குறிக் கொள்ளத்‌ தக்கது. தியானத்துக்கு உரியது காரணப்‌ பொருளாதலின்‌ காரணப் பொருளாகிய பொலிந்து நின்றபிரான்‌ அமர்ந்து எழுந்தருளி யுள்ளதும்‌ மனத்‌திற்குப்‌ பிடித்தமான அழகு உள்ளதுமான திருக்‌ குருகூர்‌, சுபாச்ரயமான அவனது திருமேனி போன்று உய்வதற்கு உளங் கொள்‌ ஞானத்து வைக்கத் தக்கது என்பது நம்‌மாழ்வார்‌ திருவுள்ளம்‌. “பஹிர் விஷயமாக்காதே ஞானத்தை பிரத்யகர்த்த ப்ரவண மாக்குங்கோள்‌’*? என்று திருநகரியை ப்ரத்யகர்த்தமாக ஆசார்யர்‌ வியாக்கியநம்‌ செய்‌திருப்பது இங்குச்‌ சிந்தித் தின்‌புறத்‌ தக்கது.

கருணையினால்‌ உய்வதற்கு மிக எளியதொரு வழியைக்‌ காண்பித்தார்‌ நம்‌ மாழ்வார்‌, திருநகரியை சுபாச்ரயமாக அநுஸந்திப்பதே அமையும்‌. . கண்டியூர்‌, அரங்கம்‌, மெய்யம்‌, கச்சி, பேர்‌, மல்லை என்று பல ஊர்களில்‌ மண்ட வேண்டியு அவச்யமில்லை. திருநகரியை மட்டும்‌ நினைத்தாலே போதும்‌, *(ஸ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணிபத்ய நஸீத:” என்றபடி திருவரங்கத்தை நோக்கி வணங்குதல்‌ வேண்டும்‌. திருநகரியையோ ஞாநத்துள்‌ வைத்தாலே போதும்‌-இங்ஙனம்‌ ஞானத்து வைத்தலினால்‌ வரும்‌ உய்வாவது பொலிந்து நின்ற பிரானுக்கு ஆட் செய்வதே என்கிறார்‌; அதுவே சீரிய புருஷார்த்தம்‌; இயல்பாதலின்‌ எளிதிற் செய்யத் தக்கதுமதுவே என்கிறார்‌. அனைத்தையும்‌ தனக்கு உடலாகக் கொண்ட பொலிந்து நின்‌ற பிரானுக்கு உடலாய மைந்த உயிரினங்கள்‌ ஆட் செய்வது உற்றதும்‌, எளிதிலாவது மன்றோ? இதனை ‘‘எவ்வுலகும்‌ மற்றும்‌ தன் பால்‌, மறுவில்‌ மூர்த்தியோடு ஓத்து நின்ற வண்ணம்‌ நிற்க, குருகூரதனுள்‌ நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வது உறுவது ஆவது என்று அருளிச்‌ செய்து பகவானைப்‌ பற்றுவதில்‌ இனிமையை உணர்த்துகிறார்‌.

-‌-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ.வே, ஆழ்வார்‌ திருநகரி திருமலை நல்லான்‌ சக்ரவர்த்தி இராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading