ஸ்ரீ எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று;ஸ்ரீ திருமோகூரில் தடாகத்தைத் தாள தாமரை யென்றும்- ஸ்ரீ வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரை யென்றும், அவ்விடத்துச் சோலை யொன்றைப் தேனமாம்பொழிலென்றும், ஸ்ரீ திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும், ஸ்ரீ திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும் இங்ஙனே யுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும்.-ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை மூலமாகக் கொண்டே இவ் வழக்குகள் தோன்றின வென்னலாம்-
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1–தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை – உரத்த தாளையுடைய தாமரை –உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-என்னக் கடவது இறே –-தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்-திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது–
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1—பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது –சர்வ கந்த என்ன கடவது இறே –
கர சரண ஸரோஜே காந்திமந் நேத்ர மீநே
ஶ்ரம முஷி பு⁴ஜ வீசி வ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யா பீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வ மரு பரிகி²ந்ந: க்லேஶ மத்³ய த்யஜாமி –முகுந்தமாலை॥ 9॥–திருக்கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய், அழகிய திருக் கண்களாகிற கயல்களை யுடையதாய், – விடாயைத் தீர்க்குமதாய், – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய், – மிகவும் ஆழமான, எம்பெருமானாகிற தடாகத்தில், குடைந்து நீராடி, – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை, பாநம் பண்ணி, ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன், அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை, இப்போது, விடுகின்றேன்.
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5–சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே – (ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்-ஏர் கர்ம பாசங்கள்-லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4–தக்கானைக்–பரம தார்மிகனை –(கிருபை -தகவு –ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )தக்கான் குளம்-பக்தர்களுக்கு உசிதனான -தக்க அவனுக்கு -தக்க குளம்-
முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.
—
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ – 1-8 3- –விஷத்தை உமிழா நின்ற காளியனாகிற சர்ப்பம் கிடந்த கொடிய பொய்கையிலே –-அத்தை மதியாமல் சென்று புக்கு –நல் பொய்கை என்றது – விபரீத லஷணையாய்-காளிய விஷ தூஷிதம் ஆகையாலே க்ரூரமான பொய்கை என்றபடி –
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு-பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை –நிபபாத ஹ்ரதே தத்ர சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே பெரிய விசையோடு உள்ளே குதித்து கலங்க பண்ணி-
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –கரையிலே தாழைகளையும் -உள்ளே குளிர்ந்த ஆம்பல்களையும் உடைத்தாய் – மிகவும் பெரிதாய் இருந்துள்ள பொய்கை யிடத்திலே-தாழை -கரையில் உண்டான சோலைக்கு உப லஷணம்-மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -(3-5-)-என்றார் ஆழ்வார்
ஆம்பல் -உள்ளுண்டான புஷ்பங்களுக்கு எல்லாம் உப லஷணம்-வைகு தாமரை வாங்கிய வேழம் – என்கிறபடியே தாமரை நெருங்கி பூத்துக் கிடக்கிறது கண்டு அது பரிக்கைக்கா இறே-உள்ளே துஷ்டச்தவம் கிடக்கிறது என்று அறியாதே ஸ்ரீ கஜேந்த்திரன் தான் இப்பொய்கையிலே – அத்ய ஆதரத்தோடே சென்று இழிந்தது-
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் -3- 3-6 –கருதும் இடம் பொருது கை நிற்கும் பரிகரம் உண்டாய் இருக்க -இயற்றி இல்லாதாரைப் போலே நீ உன்னுடைய மார்த்தவத்தைப் பாராமல் நச்சுப் பொய்கையிலே போய் புக்கு –
நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –பரப்பு மாற தாமரை பூத்துக் கிடக்கையாலே –அழகியதாய் –-அத்விதீயமான பொய்கை யானது-
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-அருகு அணைந்த வர்ஷங்கள் பஷிகள் எல்லாம் பட்டு விழும்படி -விஷத்தை உமிழா நின்ற காளியன் ஆகிற சர்ப்பம் கிடந்த-நற் பொய்கை-என்றது நல்ல பாம்பு நல்ல நெருப்பு போலே விபரீத லஷணை-அதவா-காளியன் பிரவேசிப்பதற்கு முன்புத்தை படியை இட்டு சொல்லுகிறது என்னவுமாம்-
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-வெறும் புறத்திலே-காளியன் பொய்கை -என்ன அமையும் காணும் அதின் க்ரௌர்யத்துக்கு-பாம்புப் பாழி -என்னுமா போலே-அணுகின ஸ்தாவர ஜங்கமாதிகள் எல்லாம் அழலாலே பட்டு விழும் படி இறே பொய்கையிலே-விஷத்தினுடைய க்ரௌர்யம் இருப்பது –
ஆயிர வாய் நச்சு அழல் பொய்கை -என்னக் கடவது இறே-(ஐந்து தலைகள் என்றும் -101 தலைகள் என்றும் – புராணாந்தரங்கள் உண்டு க்ரூரத்தால் ஒன்றைப் பத்தாக்கி ஆயிரம் இங்கு )-காளியன் தடத்தை கலக்கி -என்கிறபடியே பொய்கை கலங்கும் படி ஓடிச் சென்று குதித்து-
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –இப்படி இருந்துள்ள கௌரவத்தை உடைய -திருச் சிலம்பாறானது-அவிச்சின்ன ஸ்ரோதா ரூபேண ப்ரவஹியா நிற்கும் –-க்வசித் த்வரித காமிநி க்வச நமந் தமந்தாலச -என்று தொடங்கி ஒரு ஸ்லோகத்தாலே திருச் சிலம்பாற்றின் உடைய கதியை வர்ணித்து அருளி செய்தார் இறே -ஆழ்வானும்
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-சாபத்தாலே கஜ யோனியில் பிறந்து இருக்க செய்தேயும்-பூர்வ ஜன்ம ஸ்ம்ருதி குலையாமையாலே -மிகவும் பகவத் பத்தியை உடைத்தாய்
திருப் படித் தாமம் -திருத் துழாய் -பறித்து இட்டுத் திரியா நிற்க-ஜகத்திலே ஒரு பூ மலர் கிடையாதபடி –
வர்ஷ அபாவமாய் வரண்ட அளவிலே – எங்கே ஒரு பூ காணலாம் -என்று தேடித் திரியச் செய்தே –மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -என்கிறபடியே தூரத்திலே ஒரு குளிர்ந்த சோலையும் பூத்த பொய்கையுமாய் தோற்றக் கண்டு ஓடிச் சென்று -ஒரு துஷ்ட சத்த்வம் கிடக்கிறது -என்று அறியாமல் இழிந்து-காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் ( 5-8 )-என்கிறபடியே தன் அபி நிவேச அனுகுணமாக பூவை வாரிப் பறித்து கரையிலே ஏறுவதற்கு முன்னே-
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1–ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –-பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –இது அறிந்து நீ வந்தபடி எங்கனே – நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்- இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை –-அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை – பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை நீ வந்த வழி என் –
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக் என்னுமோ பாதி – தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால் கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன — ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான் கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே – திருவாய்மொழி -9-7-3-தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே-கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா-சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –
ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-இதுக்கு பட்டர் அருளிச் செய்ய நான்-நம்பிள்ளை – கேட்டேன் -என்று அருளிச் செய்வர்–காளியன் தலையிலே கிருஷ்ணன் பாய்ந்தான் -என்று கேட்டார் கேட்ட இடங்களிலே ஆழ விழுந்ததாய்த்து-பொய்கை அளவும் கால் நடை தந்து போய் புக வல்லார் இல்லையாய்த்து இறே-அனந்தாழ்வான் எம்பெருமானாரைக் காண வேணும் என்று வாரா நிற்கச் செய்தே – வடகரை அளவிலே வந்தவாறே -திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று சில ஏகாங்கிகள் தலைகளையும் சிரித்து ஏறினார்கள்-அவர்களைக் கண்டு -அனந்தாழ்வான் உடன் வந்த ஸ்ரீ நம்பி குஹ தாசர் -மரத்திலே ஏறி விழுவதாக ஏறினாராய்- தெளிந்து ஏறின நீ சாவ மாட்டாய் காண் போந்திழி -என்றானாம் –பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இங்கே தெளிவாக இருந்து கிலேசப்படாதே-மோஹித்து கிடக்கலாம் தேசத்திலே பொகடுங்கோள் –
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-வாதாஹதாம் புவி ஷேப ஸ்பர்ச தக்தவிஹங்கம் -என்கிறபடியே-அதி பீஷணம் ஆகையாலே அத்விதீயமான பொய்கையிலே –-முதலை கிடந்த பொய்கையும் இதுக்கு ஸத்ர்சமன் அன்று என்கை –
கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே –-62–நீர்க் காக்கை சஞ்சரிக்கும் பொய்கையிலே -பனையினுடைய கறுத்த பெரிய பழம்-அதினின்றும் விழுந்து -புரண்டு நீரிலே விழ -அவற்றை நீர்க் காக்கையாக கருதி-வாளைகள் அஞ்சிப் பாயா நின்ற திருக் குருங்குடியிலே –அழகும் சௌகுமார்யமும் சீலமும் மேன்மையும் -ஆகிற இஸ் ஸ்வபாவங்கள் குறைவற்று இருக்கிற மஹா ப்ரபாவனே-கரண்டம் -நீர்க் காக்கை-ஆடுகை -நடையாடுதல் -என்னுதல் -முழுகுதல் -என்னுதல்-தகை -இயல்வு-போலியைக் கண்டு வாளையானது அதி சங்கை பண்ணுகிற இது அத் தேசத்தின் பதார்த்தங்கள் நம்பி பக்கல் அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறபடிக்கு ஸூசகமாய் இருக்கிறது-
சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-–சலங்கலந்த பொய்கைவாய் – விஷமே ப்ரசுரமாய் -அத்தோடே யமுநா ஜலமும் மிச்ரமாய் இருந்துள்ள பொய்கையிலே –தஸ்யாச்வாஸ மஹா பீமம் விஷான் நிஸ்ஸ்ர் தவாரிணம் ஹ்ர்தம் காளிய நாகஸ்ய தத்ர் சேதி விபீஷணம் –என்னக் கடவது இறே-ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற –-அப் பொய்கையிலே வர்த்திக்கிற காளியனுடைய திண்ணிய பிடரியிலே நின்று சஞ்சரிக்கிற சஞ்சாரம் வல்லார் ஆடினாப் போலே இருக்கை-
மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9–நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே இடர் பட்டுத் திரிந்த விது – பூத்த தடாகத்தைக் கண்டு – ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே வந்து இழிந்த –
தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5–காளியனானவன் ஒரு தடாகத்தை விஷத்தால் தூஷிக்க அவன் அஞ்சி ஒடும்படியாக தான் அதிலே போய்ப் புக்கான் ஆயிற்று
கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம் ஏவரத் தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3—கொழுந்தையும் அலருகிற மலரையும் உடைய சோலை சூழ்ந்த பொய்கையிலே-ம்ருத்யு போலே இத்தை அடைய முடிக்க வந்த முதலை வாள் போலே இருக்கிற எயிற்றாலே-இத்தை கிரஹித்ததாய் ஆயிற்று -அதுக்கு எள்கி -ஈடுபட்டு-
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-
இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-தாமரைப் பொய்கை புக்கான்-தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை
காளியன் புக்கு தூஷித்து கிடக்க அங்கே போய் புக்கான் ஆயிற்று-மேலே பாசுரத்தில் எதற்க்காகப் புக்கான் ஜல க்ரீடை-வஸ்திர அபஹரணம்-காளியன் புக்கு தூஷித்து கிடக்க- இத்யாதி உண்டே-பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன் திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத் தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்-
தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்-தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல் -பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-இது தன்னையும் ஆனை தனக்கே யாக்கி
ஓர் இடத்தில் ஒரு பூ மலர் காணாமையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தாவித் திரிந்தது -என்னவுமாம்
அன்றிக்கே-திரு உலகளந்து அருளின படியை யாக்கி பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்து கொண்டான் -என்னுதல்-நீ பூமி அளந்து கொள்ளுகைக்கு அந்த பூமியில் உள்ளார் தாங்கள் ஏதேனும் யத்நிதித்தது உண்டோ ஒரு பூ மலர் காணலாமோ என்னும் ஆசையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தட்டித் திரிந்து பின்பு ஒரு பிரதேசத்திலே பெரிய மலரை உடைத்தாய் இருப்பதொரு பொய்கைகைக் கண்டு -அதிலே முதலை உண்டு என்று அறியாதே போய்ப் புக்கு அதின் வாயிலே அகப்பட்டு ஒரு போக்கடி அறியாதே தடுமாறி-தான் அகப்பட்ட பொய்கையிலே நின்று திரு நாமத்தைச் சொல்லுகிற ஆனையினுடைய அச்சத்தை போக்கினவனே ஆனை தான் தனக்கு உதவுதல் முதலை உதவுதல் செய்ததோ நீயே அன்றோ மடுவின் கரையிலே அரை குலைய தலை குலைய வந்து உதவினாய்-
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5–சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே – (ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்-ஏர் கர்ம பாசங்கள்-லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )
வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-கருப்பு மிக்கு இருந்துள்ள வரால் இனம் உண்டு இவற்றின் உடைய திரள்கள் ஆனவை பூக்களைக் கிழித்துக் கொண்டு அழகிய தடாகங்களில் பாய-ஸ்லாக்கியமான – அக் கமலங்கள் மணம் நாறா நின்றுள்ள பொய்கைகள் சூழ்ந்த
திரு வெள்ளறை நின்றானே –
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3–பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு பொழிலையும் பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்-அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே தட்டித் திரியா நிற்க இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை-அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில் அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே பரிமளம் வந்து பிராண விஷயமாய் அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று –ஆகர்ஷகமான பொய்கை-ஆகர்ஷகமாக இருக்கை யாவது அகாதமாய் துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே மேல் விழும்படியாய் இருக்கை –வைகு தாமரை –அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க-
விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக யுத்தத்தில் முன்பு ஒரு நாள் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும் நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு-அவனைத் துரத்தின ஏற்றத்தை உடையவன் –தாடாளன்–திருவடிகளை உடையவன் –-நாட்டியம் ஆடிய தாள் அன்றோ -காளியன் பெற்ற பேறு விஷ துஷ்டமான ப்ரக்ருதி ஒட்டி –
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-நல்ல ஆகரத்திலே பிறந்து -தான் ஆனைகளுக்கு எல்லாம் பிரதானமாய்- மதமுதிதமாய் – மூலையடியே திரிகிற யானை விழுக்காடு அறியாதே தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு கொடிதான முதலையின் கையிலே அகப்பட்ட தாய்த்து –
இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை யார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-இலைகளால் மிக்கு இருப்பதாய் பரப்பு மாறப் பூத்து தர்ச நீயமான பொய்கையிலே போய் புக்கு ஒரு ஜல சரசத்வத்தாலே நெருக்குண்டு –
கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2–கவளம் கொண்டு இருப்பதாய் மிக்க மதத்தை உடைத்தாய் இருக்கிற ஆனையானது தன் செருக்காலே தன் நிலம் அல்லாத பொய்கையிலே புக்கு தன் நிலம் ஆகையாலே நினைத்த படி வியாபாரிக்க வல்ல
முதலையின் வாயலிலே அகப்பட்டு –-காரம் -முதலை –தன்னால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாமையாலே கலங்கி –(பரமாபத ஆபன்ன ) மனஸா சிந்த யத்தரிம் – என்கிறபடியே நெஞ்சால் நினைக்க-
அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-பொய்கை வேலி- இப்படிப் பட்ட வயல்களையும் தடாகங்களையும் சுற்றிலே உடைத்தாய் இருக்கை –
நதீஸ் தடா காநி ச பூரயித்வா -என்கிறபடியே-வர்ஷம் நிறைக்கை அன்றிக்கே ஆறு நிறைக்கக் கடவதான பொய்கைகள் இறே –
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-தாது மிக்கு பரிமிளிதமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள புஷ்பங்களை உடைத்தான தடாகங்களையும் நீர் நிலங்களையும் வேலியாக உடைய தேசம்-பிரதி கூலர்க்கு துஷ் ப்ராபமாய்-அநு கூலர்க்கு ஸ்ரமஹரமாய்-இருந்துள்ள தேசம் -என்கை
தடமால் வரை போலும் போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்–மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது-நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி-நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு-
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –பொற் கால் இட்ட ஆழ்வார் அன்றோ பொய்கை ஆழ்வார்-
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-இது த்ருஷ்டாந்தம் – பரப்பு மாறப்பூத்து குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட்ட யானை இடரைப் போக்கின-செவ்வியை உடைத்தாய் குளிர்ந்த திருத்த துழாயாலே அலங்க்ருதனான அத்விதீய நாயகன் – இது திருத் துழாயின் குளிர் வாசனையால் யாயிற்று யானையை ஆசுவாசிப்பித்தது- ஆனைக்கு உதவினதும் தமக்கு உதவிற்றாக நினைத்து இருக்கிறார்-
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-செறிந்து பரந்து தர்ச நீயமான பொழில் என்னுதல் -செறிந்து பூத்த மாம் பொழில் என்னுதல்-மா பொழில் -மொய் பூம் பொய்கை-
மாம் பொழிலையும் செறிந்த பூவையும் உடைய பொய்கை என்னுதல் –-நெடு நாள் பூத் தேடி விடாய்த்த ஆனைக்கு விடாய் கெடுகைக்கு உடல் ஆகையால் பொய்கையோபாதி சோலையும் உத்தேசியமாய் இருக்கிறது இவருக்கு-
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –-நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –-உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை-பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்-இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்-
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-கஜ ஆகர்ஷதே என்கிற ஸ்வ சாமர்த்தியம் கார்யகரம் ஆகாத அளவிலே உன் திருவடிகளை ஒழிய வேறு பற்று உடையேன் அல்லேன் என்கிறாள் –-அகலிரும் பொய்கையின் வாய்-அகன்று ஆழ்ந்து இருந்துள்ள பொய்கையை வாயிலே -இப்போது அகலமும் ஆழமும் சொல்லுகிறது -அவன் ஏற விடுதல் -தானேயேற பார்க்கில் முடித்தல் செய்யும் படியாய் இருக்கை –-நின்று-ஸ்வ சாமர்த்தியம் ஓவிச் செயல் அற்று நின்று-தன் நீள் கழல் -செயல் அற்றார் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகள் -நினைத்த அளவிலே நபி பேதி குதச்சந -என்னப் பண்ணுகிற திருவடிகளிலே-ஏத்திய-முள் பாய்ந்தால் அம்மே என்பாரைப் போலே ப்ராப்தியையும் ஸுலப்யத்தையும் நினைத்து நாராயணா என்று ஏத்தினான்-ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-துதிக்கையும் பூவும் ஒழிய அழுந்தின அழுந்தின அளவிலே -பூவில் செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளில் சாத்தப் பெற்றிலேன் என்கிற இடரைத் தீர்த்த உபகாரகன்
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply