ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -8–கு,ண பாதம் (156–186 )-12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ (156 –158)- ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

8–கு,ண பாதம் —156–186 மொத்தம் -31-ஸூரனைகள்
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—மொத்தம்-3–ஸூரனைகள்
13 திவ்ய தேஸ -அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—மொத்தம்–28–ஸூரனைகள்

பேற்றுக்கு அடி இவர்கள் ஆகையாலே ப்ராப்யத்தில் த்வரை தோன்ற பல காலும் தூது விடுவர் –
இனி இப்படி இவர் தூது விடும்படி முகம் காட்டாமைக்கு ஹேதுவையும் — தூது விடுகைக்கு பற்றாசையும் அதுக்கு விஷயத்தையும் தூது நாலுக்கும் –வகை இட்டு அருளி செய்கிறார் மேல் —

(இவர்தாம்‌ தூது விடுகையாவது ப்ராப்யருசியால்‌ வந்த விளம்பாக்ஷமத்வத்தாலே ஆசார்ய த்‌வாரா உபாயோபேய ப்ரார்த்தநை பண்ணுகை. “கைகள்‌ கூப்பிச்‌ சொல்லீர்‌” (திருவாய்மொழி 6-1-1, “பாதம்‌ கைதொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-2), “இரங்கி நீர்‌ தொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-3) என்றும்‌, “திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌” (திருவாய்மொழி 1-4-2 “வாடாத மலரடிக்கீழ்‌ வைக்கவே வகுக்கின்று” (திருவாய்மொழி 1-4-9) என்றும்‌ சொல்லக் கடவது இறே –இனிமேல்‌ இவர்‌ இப்படித்‌ தூது விடும்படி முகம்‌ காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும்‌ தூது விடுகைக்குப்‌ பற்றாசையும்‌ அது தனக்கு விஷயத்தையும்‌ அருளிச்செய்கிறார்‌-

தம்பிழையும்‌ சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வ த்‌வய அர்ச்சைகள்‌ தூது நாலுக்கும்‌ விஷயம்‌.-சூரணை–156-

(தம் பிழையை மறப்பித்த க்ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூது-அஞ்சிறைய மட நாராய் –
சிறந்த செல்வம் மறப்பித்த -தீக்ஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூது -வைகல் பூம் கழிவாய்-
படைத்த பரப்பு -மறப்பித்த -சாரஸ்யத்தை உணர்த்தும் -பரதவ த்வய —பரத்வத்தையும் அந்தர்யாமித்வத்தையும் சொன்னபடி -மூன்றாம் தூது-பொன்னுலகு ஆளீரோ–தமரோட்டை வாசத்தை மறப்பித்த ஸுந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை-நாலாவது தூது -எம் கானல் அகம் கழிவாய் -என்றபடி )

அதாவது-தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தும் வியூகம் முதல் தூதுக்கு விஷயம்–அஞ்சிறைய மட நாரையில் –1-4— என் பிழையே நினைந்து அருளி –1-4-7–என்று தன் மேன்மையால் இத் தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான் –கலக்க கொள்ள நம் தோஷ தர்சனத்தை பண்ணிப் பிரிந்து நம் அபராதத்தை பார்த்து தன் ஷமையை மறக்கையாலே – இத் தலையை நினையாது இருந்தான் அத்தனை– அவன் தன்னுடைய அபராத சஹத்வத்தை அறிவிக்க வரும் – என்று அறுதி இட்டு
என் பிழைத்தாள் திரு அடியின் தகவினுக்கு –1-4-7–என்று அபராத சஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் கடலாழி அம்மானை கண்டக்கால் இது சொல்லி —1-4-10-என்று ஜகத் ஸ்ருஷ்ட்டி யர்தமாக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவனுக்கு
சிருஷ்டி பிரயோஜனம் –விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதம்—ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே திரு அடிகளில் அடிமை கொள்ளுகை அன்றோ -என்று இத்தைச் சொல்ல வேண்டும் என்று வியூகத்தில் தூது விடுகையால் தம் பிழை மறப்பித்த ஷமையை உணர்த்தி விட்ட வியூகம் பிரதம தூதுக்கு விஷயம்

தம்பிழை யானது மறப்பித்த க்ஷ்மையை உணர்த்தும்‌ ப்ரதம தூதுக்கு விஷயம்‌ வ்யூஹம்‌ என்கிறது ப்ரதம தூதான அஞ்சிறைய மடநாரையிலே (திருவாய்மொழி 1-4). “என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று வ்யாமோஹாதிஸயத்தாலே மேல் விழுந்து விஷயீகரித்தான்‌; ஸர்வஜ்ஞனாகையாலே தோஷ தர்ஸனம்‌ பண்ணினான்‌; பிரிந்தவாறே இதுவோ இதினளவென்று பிரிந்திருந்தானத்தனை. எங்களபராதத்தைக்‌ கண்டு கைவிடுமளவன்று. “என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு என்று ஒரு வாய்‌ சொல்‌” (திருவாய்மொழி 1-4-7) என்று அவர்க்கு அபராத, ஸஹத்வ மென்பதொரு குணமுண்டு அத்தை யறிவிக்கவே வரும்‌ என்று அபராத, ஸஹத்வம்‌ பற்றாசாக, “கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்‌ அடலாழி யம்மானைக்‌ கண்டக்கால்‌ இதுசொல்லி விடல்‌” (திருவாய்மொழி 1-4-10) என்று இல்லாத வஸ்துவை உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்தருளுகிறவனுக்கு உண்டாக்கின வஸ்துவுக்கு ஒரு குண தாநம் பண்ணலாகாதோ -என்று சொல்லென்று வ்யூஹத்திலே தூது விடுகிறார் –

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7–எலும்பிலே துளைத்து நூலைக் கோக்குமா போலே-பாவ கப்ரதிமோ வவௌ-என்கிறபடியே பண்டு குளிர்ந்து போரும் வாடை இப்போது பாதகம் ஆகிறபடி–ஈரா நின்றது -விரஹ க்ருசையாய் இருக்கிறதின் மேலே பாதக வர்க்கம் நலிகிற படி
பத்மசௌ கந்திகவஹம்--வாடை நலிந்த படி போராது என்று கீழாண்டை சிகையை யாயிற்று கணக்கு இடுகிறது-அவிஜ்ஞ்ஞாதா வாகை தவிர்ந்து இப்போது சஹாஸ்ராம்சு -என்கிறபடியே தோஷத்தில் சர்வஜ்ஞ்ஞாராய் யாயிற்று இருக்கிறது-என் பிழை பார்த்துக் கை விட்டு –ந கச்சின் ந அபராத்த்யாதி -என்னும் அவளோடு அணைய இருக்கிறாரோ நம் அபராதங்களைப் பொறுப்பிக்கும் பிராட்டி சந்நிதியில் அறிவி என்னவுமாம் -அபராதங்களைக் கணக்கு இடுகைக்கு அவளும் கூட்டுப் போல காண் -என்றும் சொல்வர்-ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –ஒரு வார்த்தை சொல்லு-பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி

விடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –-1-4-10–அகாதமான நீரை யுடைத்தான கடலைத் தோற்றுவித்து -அப ஏவ சசர்ஜா தௌ-என்கிறபடியே ஏகார்ணவத்தை சிருஷ்டித்து-இப்பால் உண்டான ஸ்ருஷ் ட்யாதிகளுக்காக அதிலே கண் வளரும் இப்போது காரணத்வம் சொல்லுகிறது – இத்தை உண்டாக்கினவன் அறிவித்தால் விடான் என்கைக்காக –ஆஸ்ரித விரோதி நிரசன சீலமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனை கண் வளரும் அடலாழி அம்மானை என்று காரண அவஸ்தையிலும் நித்ய விபூதி விக்ரஹம் திவ்யாயுதம் இவற்றினுடைய சத்பாவம் சொல்லிற்று-கண்டக்கால் இது சொல்லி-கீழ் வைக்கவே வகுக்கின்று -என்ற வார்த்தையைச் சொல்லி

சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தும் விபவம் இரண்டாம் தூதுக்கு விஷயம் –
வைகல் பூம் கழி வாயில்
-6-1–சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டூர் உறையும் —6-1-3-என்று
ஆர்த்த ரஷணம் பண்ண வாரா நிற்கச் செய்தே -திரு வண் வண்டூரின் ஐஸ்வர்யத்தைக் கண்டு கால் தாழ்ந்து தன் ஆர்த்த ரஷண தீஷையை மறைக்கையாலே -நம்மை நினையாது இருந்தான் அத்தனை –
ஆர்த்த ரஷணம் ஒரு தலை யானால் மற்று ஒன்றில் கால் தாழும் அவன் அல்லாமையால் – அத்தை அறிவிக்க வரும் என்று –புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு –6-1-5–என்று
ஆர்த்த ரஷண தீஷத்வம் பற்றாசாக மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழ செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே
–6-1-10–என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாச பூமியான இலங்கையில் அரணை துகள் ஆக்கின ஏக வீரனான சக்கரவர்த்தி திரு மகனுக்கு- ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள் என்று விபவத்தில் தூது விடுகையாலே
சிறந்த செல்வம் மறப்பித்த தீஷையை உணர்த்தி விட்ட விபவம்- இரண்டாம் தூதுக்கு விஷயம்
.-

சிறந்த செல்வமானது மறப்பித்த தீஷையை யுணர்த்தும் இரண்டாவது தூதுக்கு விபவம் விஷயம் விடுகிற விஷயம்‌ என்கிறது வைகல்‌ பூங்கழிவாயில்‌ (திருவாய்மொழி 6-1. “சிறந்‌த செல்வம்மல்கு திருவண்வண்டுருறையும்‌” (திருவாய்மொழி-6-1-3- என்றும் ஆர்த்த ரக்ஷணம்‌ பண்ணி வாரா நிற்கச்‌ செய்தே திருவண்வண்டூரிலே போக்‌யதையிலே கால் தாழ்ந்து நம்மை மறந்திருத்தான் இத்தனை
மாறில் போரரக்கன்‌ மதிள்நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளள்‌’ (திருவாய்மொழி 6-1-10), “ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33 என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீக்ஷித்திருப்பானாய்‌ ஆர்த்த ரஷணமொரு தரையானால்‌ அஸ்தமிதாந்யபாவம்‌ என்றிருப்பானொருவன்‌ ஆகையாலே நம்முடைய ஆர்த்தியை அறிவிக்கவே வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாக -அரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார் (திருவாய்மொழி 6-1-10) என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸ பூமியான லங்கையை பஸ்மஸாத்தாக்கின ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனுக்குச்‌ சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகிறார் –

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3—உன் தசையை அறிந்து வந்து உதவாதவன் நாங்கள் சொன்னவாறே வர புகுகிறானோ என்ன -அவன் குறை அன்று -அவ் வூரில் ஐஸ்வர்யம் நினைக்க ஒட்டாது என்று இருக்கிறாள்-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5—தொடுக்கப் பட்டு தர்ச நீயமாய் சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் யுடையனாய் அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு –நம் பாடு வருகைக்கு உறுப்பாக ஓப்பியா நிற்கும் -நீங்கள் அறிவிக்கும் அத்தனையே குறை -அன்றிக்கே பிரிவை ஒன்றாக நினையாதே வளையம் வைத்து ஒப்பித்து நமக்கு அபவ்யமாய் இருக்கிறவரை -என்றுமாம் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10--எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று – ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு –ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தும் பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம் –
பொன்னுலகு ஆளீரில்
-6-8–முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு –6-8-1-என்று ஸ்ருஷ்டமான ஜகத்தின் பரப்பை ரஷிக்கிற பராக்காலே ஆஸ்ரிதரோடு தனக்கு உண்டான ஐக ரச்யத்தை மறந்து – அது கொண்டு தம்மை நினையாது இருந்தான் அத்தனை .-தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்-6-8-6–என்று
ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே அத்தை அறிவிக்க வரும் என்று- ஐக ரசம் பற்றாசாக
வானவர் கோனைக் கண்டு யாதும் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும்-6-8-5-என்று-பரத்வத்திலும்-எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மின் –6-8-5-என்று அதீந்திரிய தயா பரத்வ சத்ருசவான அந்தர்யாமித்வத்திலும் ,தூது விடுகையாலே – படைத்த பரப்பு மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தி விட்ட பரத்வ த்வயம் மூன்றாம் தூதுக்கு விஷயம்-

படைத்த பரப்பானது மறப்பித்த ஸாரஸ்யத்தை உணர்த்தும்‌ மூன்றாம்‌ தூதுக்கு பரத்வ த்‌வயம்‌ விஷயம்‌ என்கிறது பொன்னுலகாளீரில்‌ (திருவாய்மொழி 6-8). “முன்னுலகங்க ளெல்லாம்‌ படைத்த முகில் வண்ணன்‌ கண்ணன்‌ என்‌ நலங் கொண்ட பிரான்‌ (திருவாய்மொழி 6-8-1 )என்று விபூதி ரக்ஷணத்திலே பராக்கை உடையவனாகையாலே நம்மை மறந்திருந்தான்‌ அத்தனை; “தன்‌ மன்னு நீள்கழல்மேல்‌ தண்டுழாய்‌ நமக்கன்றி நல்கான்‌” திருவாய்மொழி 6-8-6) என்று ஆஸ்ரிதரோடு ஏக ரஸனாயிருக்கிற ஆகாரத்தை அறிவிக்கவே வரும்‌ என்று ஐகரஸ்யம்‌ பற்றாசாக, ‘ வானவர் கோனைக்‌ கண்டு யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி 6-8-4) என்று பரத்வத்திலும்‌, “எங்குச்‌ சென்றாலும்‌ கண்டு” (திருவாய்மொழி 6-8-5) என்றும்‌ “யாவையுமாய்‌ யாவருமாய்‌ நின்ற மாயன்‌” (திருவாய்மொழி 6-8-7) என்றும் சொல்லுகிறபடியே அத்‌விதீயமுமாய்‌ நித்யமுமாயிருக்கையாலே பரத்வ ஸத்‌ ருஸமான அந்தர்யாமித்வத்திலும்‌ தூது விடுகிறார்‌

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான்
தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1–ஸ்ருஷ்ட்டி காலத்தில் வரையாதே சகல லோகங்களையும் உண்டாக்கினவன்-அழிந்தவற்றை உண்டாக்கினவன் உண்டான வஸ்துவை அழிக்குமோ-உண்டாக்கும் இடத்தில் தரமிடாதவன் தன்னைப் பெற வேணும் என்று இருப்பாரே தரம் விடுமோ-முகில் வண்ணன்-தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு -தன் பேறாக கொடுக்குமவன் என்றுமாம் – கண்ணன்-ஆஸ்ரிதற்கு தன்னைக் கையாள் ஆக்குமவன்-என்னலங் கொண்ட பிரான் தனக்கு-என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவன் -என்னை அநந்யார்ஹம் ஆக்கின உபகாரகன் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து-தூது போகைக்கு உங்கள் காலிலே விழும்படி பண்ணினவனுக்கு-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-–கீழே வானவர்கோனைக் கண்டு என்கிறபடியே லோகத்தில் அன்றிக்கே ஏகாந்த ஸ்தலத்தில் சென்றாகிலும் வார்த்தை சொல்லுங்கோள் -அங்கனம் அன்றியிலே-அநே நைவ ஹிவே கேந கமிஷ்யாமி ஸூ ராலயம் -என்கிறபடியே -பரமபதத்தில் கண்டிலோம் -என்று மீளாதே வ்யூஹ விபாவாதிகள் எங்குத் தேடியாகிலும் கண்டு சொல்லுங்கோள்

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-
-திருக் குழலிலே செவ்வியாலே மிகவும் மது தாரையை யுடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியை யுடையவன் –அகன்ற மாமது வார்தண் துழாய்முடி-இவள் பரிசரம் அடங்க சருகாய் கிடக்க பிரிவே நீராக அவன் வைத்த வளையம் மது சொரிகிறது இறே-வானவர் கோனைக்கண்டு-அவ் வழகை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்துக் கொண்டு இருக்குமவனை -புதியாரை நோவு பட விட்டு பழையாருக்கு ஓலக்கம் கொண்டு இரா நின்றான் -த்வயி கிஞ்சித் சமா பன்ன என்கிற இது யுக்தி மாத்ரமாய் விட்டது இ றே –கண்டு -நீங்கள் முன்பே காணப் பெறுகிறி கோள் இறே –தாம்இதுவோ தக்கவாறு -நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—அவனுடைய ஐகரஸ்யம் சொல்லுகிறாள் -ஆஸ்ரிதர் இருந்த இடத்து அளவும் செல்லும் திருவடிகள் -என்னுதல் -அளவிறந்த போக்யதை உடைய திருவடிகள் என்னுதல் -திருவடிகளில் பொருந்தி சிரமஹரமான திருத் துழாயில் செவ்வி நமக்கு அல்லது கொடான் –இனியது கண்டால் ஸ் வார்த்தம் என்று இராதே பக்தானாம் என்று இருக்குமவன் -அதாவது ஆஸ்ரிதரோடு ஏக ரசனாய் இருக்கை

தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்
எம் கானலில்
-9-7–தமரோடு அங்கு உறைவார்க்கு–9-7-2–என்று – தம்மை உகந்த பாகவதர்களோட்டை சேர்த்தியில் இனிமையாலே–பிரிந்தார்க்கு பிராணன் கொண்டு இருக்க ஒண்ணாத படியான தன் சௌந்தர்யத்தை மறந்து – அது கொண்டு பிரித்திட்டு வைத்துப் போய் நம்மை நினையாது இருந்தார் அத்தனை – இவ் வடிவழகை பிரிந்தார் தரிப்பாரோ என்று அவ் அழகை அறிவித்து விட்டால் வராது இரார் என்று –-செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு -தக்கிலமே -கேளீர்கள் -9-7-3–என்றும் – பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவன்று –9-7-9–என்றும்-சௌந்தர்யம் பற்றாசாக -திரு மூழிக் களத்தாருக்கு -என்று ,அர்ச்சாவதாரத்தில் தூது விடுகையாலே தமரோட்டை வாசம் பிறப்பித்த சௌந்தர்யத்தை உணர்த்திவிட்ட அர்ச்சை நாலாம் தூதுக்கு விஷயம்

தமரோட்டை வாஸம்‌ மறப்பித்த ஸெளந்தர்யத்தையுணர்த்தும்‌ நாலாம்‌ தூதுக்கு அர்ச்சாவதாரம்‌ விஷயமென்கிறது எங்கானலில்‌ (திருவாய்மொழி 9-7). “தமரோடங்குறைவார்க்கு” (திருவாய்மொழி 9-7-2) என்று தம்மையுகந்த பாகவதரோட்டைச்‌ சேர்த்தியில்‌ இனிமையாலே நம்மை மறந்திருந்தானத்தனை. “பூந்துழாய்‌ முடியார்க்கு” என்று தொடங்கி “தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று” (திருவாய்மொழி 9-7-9) என்று தம்முடைய ஸெளந்தர்யத்தை அநுபவித்துப்‌ பிரிந்தார்‌ தரிக்க வல்லார்களோ என்று ஸெளந்தர்யத்தை உணர்த்தவே வரும்‌ என்று ஸெளந்த,ர்யம்‌ பற்றாசாக, திருமூழிக்களத்தாருக்கு என்று அர்ச்சாவதாரத்திலே தூது விடுகிறார் –

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-–தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு –அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள்

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-–அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலைபோலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக்கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்ட ப் பாருங்கோள் –

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-–திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் – தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது -தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது -இமாம் அவஸ்தாம் ஆபன்னோ நேஹ பச்யாமி ராகவும் –
தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தாயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –

இப்படி பல இடங்களிலும் தூது விட்டால் ப்ராப்ய வஸ்த்வைக்யம் குலையாதோ என்கிற சங்கையிலே -பரத்வாதிகளில் ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லை என்னும் அத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் —இப்படிப்‌ பரத்வாதிகளிலே தூது விட்டால்‌ இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில்‌, பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார்‌-

பகல் ஓலக்கம் இருந்து – கறுப்பு உடுத்து – சோதித்து – காரியம் மந்த்ரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி யாதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய இளவரசுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்–சூரணை -157-

(பகல் ஓலக்கம் இருக்கும் ராஜ நீதி-கறுப்பு உடுத்து சோதிக்கும் ராஜ நீதி –காரியம் மந்த்ரிக்கும் ராஜ நீதி –வேட்டை ஆடும் ராஜ நீதி-ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -என்று கொண்டு -ராஜ நீதி -முறை பிரகாரம் -என்றபடி-வேறு வேறு காலங்களிலே-செங்கோல் நடாவுகிற- ஒரே அரசன் செய்வது போலே
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்-என்றபடி )

அதாவது-பகல் ஓலக்கம் இருந்து-சகல பரிஜன சேவ்யனாய்க் கொண்டு தம் வீறு தோற்ற பகல் ஓலக்கம் இருக்கையும் கறுப்பு உடுத்துச் சோதித்து ராஜ்யத்தில் உள்ளோர் தோஷ குணங்கள் அறிகைக்காக -ராத்ரியிலே பிறர் அறியாத படி கறுப்பு உடுத்தி நகர சோதனம் பண்ணுகையும் – கார்யம் மந்த்ரித்து – ராஜ்யத்தில் சிஷை ரஷைகளுக்காக கார்ய விசாரம் செய்கையும் வேட்டை யாடி பின் துஷ்ட சத்வ நிரசன அர்த்தமாக வேட்டை ஆடுகையும் – ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி – அந்த ஸ்ரமம் தீர பூம் தோப்புகளிலே அபிமத விஷயங்களோடு விளையாடுகிற ராஜ நீதியானது –ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய இளவரசுக்கு – பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்கச் செல்வனார் –நாச்சியார் –11-3-என்றும் –அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர்–திருவிருத்தம்-33- -என்றும் சொல்லுகிறபடி உபய விபூதியிலும் ஏக தேசமும் சேஷியாத படி -தன்னுடைய திவ்ய ஆக்ஜையை நடத்துபவனாய் –
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–திருவிருத்தம்-80- -என்று
சொல்லப்பட்ட -சௌலப்ய -பரத்வ -பிரணயித்வங்களாலே -வந்த மூன்று முடிக்கு-(பாரளந்த பேரரசே-என்பதால் சௌலப்யம் -எம் விசும்பரசே என்பதால் பரத்வம் -எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–என்பதால் -பிரணயித்வம் -என்றவாறு )உரிய வான் இளவரசனான சர்வேஸ்வரனுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் –

(பகலோலக்கமிருந்து) ஒரு ராஜாவானால்‌ மந்த்ரிகள்‌ முதலான ஸர்வரும்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்து, (கருப்புடுத்துச்‌ சோதித்து) நாட்டிலுள்ள குற்றங்குறைகளாராய்கைக்குப்‌ பிறரறியாதபடி கருப்புடுத்து நகரி ஸோதநை வந்து அந்த நாட்டில்‌ ஸிஷை ரக்ஷைகளுக்காக வ்ருத்‌த, மந்த்ரிகளும்‌ தானுமாய்‌ கார்ய விசாரங்களைப்‌ பண்ணியும்‌, துஷ்ட ஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடியும்‌, அந்த ஸ்ரமம்‌ தீரப்‌ பூந் தோப்புக்களிலே விளையாடக்‌ கடவதான ராஜநீதி (ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌ அங்காதும்‌ சோராமே ஆள்கின்ற எம்பெருமான்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ (நாச்சியார்‌ திருமொழி 11-3 என்றும்‌, “இருளார்‌ வினைகெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌” (திருவிருத்தம்‌ 33) என்றும்‌ உபய விபூதியிலும்‌ ஏகதேஸமும்‌ ஸேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய்‌, “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே (திருவிருத்தம்‌ 80) என்று ஸெளலப்‌யம்‌ பரத்வம்‌ ப்ரணயித்வம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற மூன்று முடிக்குரிய வானிளவரசுக்கு (விண்மீதென்ற ஐந்திலும்‌ காணலாம்‌) 

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-ஓதம் கிளர்ந்த கடலை வெளியாக உடைய பூமியும்
மரியாதையில் ஒன்றும் குறைந்து இல்லை இறே அங்கு பூமிக்கு மேலே விஞ்சி வாரா நிற்கச் செய்தேயும்- கரை ஏற மாட்டாதே கிடக்கிறது இறே கடல்-ஒரு மரியாதை இல்லாத த்ரிபாத் விபூதியும்-உபய விபூதியிலும் ஒரு குறை பிறவாமே நிர்வஹித்துக் கொண்டு போருகிற- அழிந்த வன்று தன மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்- உண்டாக்கின வன்று தன் நிலையிலே நிறுத்தியும் -நடத்தியும் –
இவ் விபூதியை நித்ய சம்ஸ்லேஷத்தாலே சத்தியைக் கொடுத்து நோக்கும் அவ் விபூதியை –என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளா நின்றான் – சப்தாதிகளாலே களிக்கும் படி பண்ணி வைத்தான் இவ் விபூதியை தன்னை அனுபவித்துக் களிக்கும் படி பண்ணி வைத்தான் அவ் விபூதியை–நான் இங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே –அங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே-நடுவே நோவுப்படும்படி பண்ணி வைத்தான் என்னை ஒருத்தியையுமே –தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று கோயிலிலே வந்து சாய்ந்தவர்-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே 
–33–மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற்புதீர்-

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே
 – -80—–பார் அளந்த பேர் அரசே –இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது – மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –அளந்த –பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே – உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் )என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன்  என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி  இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-

விண் மீது இருப்பாய் –திருவாய் -6-9-5–என்று-வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பத்தி
ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ-
என்கிற படியே பகல் கண்டேன்–இரண்டாம் திருவந்தாதி-81–என்கிற ஒரு பகலான பரமபதத்திலே – ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாய்–திருவாய்-4-9-10- நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கையும் –

“விண்‌ மீதிருப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) “பகல் கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌” (இரண்டாம்‌ திருவந்தாதி- 81 )என்றும்‌ “வைகுண்டே து பரே லோகே ஸ்ரியாஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” என்றும்‌ ஒரு பகலான பரம பதத்திலே பிராட்டிமாரும்‌ தானும்‌ நித்ய முக்தர்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்தும்‌,-

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5—பரமபதத்தில் நித்ய ஸூ ரிகளுக்கு அழகு ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே- நித்ய ஸூ ரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஓக்க அனுபவிக்கலாம் படி திருமலையில் நின்று அருளினவனே – திருமலையில் நிலை போலே பிரகாசிக்கிறதாயிற்று இவருக்கு பரமபதத்தில் இருப்பும் பரமபதத்தில் மேன்மையும் அறியாதே திருமலையில் நீர்மையும் அறியாதே இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்-அனுபவிப்பைக்கும் -திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவனே-அத்தனை அளவில்லாத சம்சாரிகளுக்காக சஜாதீயனாய் வந்து அவதரித்து -மார்விலே அம்பேற்று சோக மோகங்களை அனுபவித்து ரக்ஷிக்குமவனே-காண்கையும் அஸஹ்யமாய் இருப்பார்க்கு முகம் தோற்றாத படி நின்று சகல பதார்த்தங்களின் உடைய சத்தையை நோக்கினவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –-வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை – எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்–

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்று-யமாத்மா ந வேத -என்கிறபடியே – வ்யாப்த பதார்த்தங்களுக்கு தெரியாத படி அந்தர்யாமியாய் –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிகையும்-திருமாலை-34 —

இவற்றுளெங்கும்‌ மறைந்துறைவாய்‌‘ (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “யமாத்மா ந வேத என்றும்‌ சொல்லுகிறபடியே வ்யாப்ய பதார்த்தங்களுக்குத்‌ தெரியாதபடி அந்தர்யாமியாய்‌ நின்று ஆராய்ந்தும்‌,-

கடல் சேர்ப்பாய் -என்று-பாற்கடல் யோக நித்தரை செய்து சேதன ரஷோ உபாயங்களை சிந்திக்கையும் –
(மந்த்ர ஆலோசனையைச் சொன்னபடி
),

கடல்‌ சேர்ப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌, “பாற்கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்‌” (திருவாய்மொழி 2-6-5) என்றும்‌ சேதநருடைய ரக்ஷணோபாயங்களை மந்த்ரித்தும்‌-

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய்
உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5–திருப் பாற் கடலிலே ஜகத் ரக்ஷண சிந்தாத்மக யோக நித்திரை பண்ணி அருளினை-சேதனர் உடைய உஜ்ஜீவன பிரகாரம் ஆதல் –ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தையன் மதுஸூதன-என்கிறபடியே தன்னை அனுசந்தித்தல் ஆதல்

அனந்தரம்-மண் மீது உழல்வாய் -என்று ரக்ஷண அர்த்தமாக வந்து அவதரித்து-களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்–நாச்சியார்–14-9–என்கிறபடியே ஆஸ்ரித விரோதி துஷ்ட சத்வ நிரசனமாகிற வேட்டை யாடுகையும் -(விபவத்தைச் சொன்னபடி)-

அநந்தரம்‌ சேதந ரக்ஷணார்த்தமாக மண்மீதுழல்வாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “களிறும்‌ புள்ளும்‌ உடன் மடிய வேட்டையாடி வருவான்‌” நாச்சியார்‌ திருமொழி 14-9) என்றும்‌ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஆஸ்ரித விரோதிகளான ராவண கும்ப கர்ணாதி துஷ்ட ஸத்வ நிரஸநமாகிற வேட்டையாடியும்‌,-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே ––14-9—பையல்கள் கிடந்த தூறுகள் எல்லாம் புக்கு தேடி-தேனுகன்-குவலயா பீடம்-பகா ஸூரன் -இவர்களடைய -ஏகோத்யோகத்திலே -உடன் மடிய-
நிரஸ்தர் போலே இருக்க வாய்த்து அழியச் செய்தது –

மலை மேல் நிற்பாய் -என்று –விரோதி நிரசன ஸ்ரமம் ஆர நிரதிசய போக்யங்களான –-ஆராமம் சூழ்ந்த கோவில்-சிறிய திருமடல் -71- என்றபடி -திரு மலை முதலான தேசங்களிலே ரசோத்தரமாக வசிக்கையும்
ஆகிய இவை ஐந்திலும் காணலாம் என்கை–

“மலை மேல்‌ நிற்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “ஆராமம்‌ சூழ்ந்த” (சிறியதிருமடல்‌ 71 என்றும்‌ அந்த விரோதி நிரஸநத்தாலுண்டான ஸ்ரமம்‌ ஆறும்படி கோயில்‌ திருமலை முதலான தேஸங்களிலே நிற்கையாலும்‌ காணலாம்‌. –

பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்–உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய் ஆஸ்ரித ரஷணததுக்கு ஏகாந்த ஸ்தலம் என்று கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறானாய் இருக்கிறது – வன்பெரு வானகம் உய்ய -இத்யாதியில் சொல்லுகிறபடியே
அங்கே சென்று என் வடிவைக் காட்டி என்னுடைய ரஷணம் பண்ணின படி பாருங்கோள் என்கிறேன்-

இத்தால் பரத்வாதிகளிலே ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லாமை காட்டப் பட்டது–

ஆக இத்தால்‌ பரத்வாதிகளுக்கு ஸ்தல பேதமொழிய விஷய பேதமில்லை என்கிறார் –

ஆனால் ஐந்திலும் ஒத்து இருக்கை அன்றிக்கே இவர் அர்ச்சாவதாரத்தில் மண்டி இருப்பான் என் என்னும் ஆ காங்ஷையிலே இதன் குண பூர்த்தியை அருளிச் செய்கிறார் மேல்–இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ இனிமேல்‌.–

தமருகந்த அடியோமுக்கே யென்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌.-சூரணை -158-

அதாவது-தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த எப் பேர் மற்று அப் பேர்-முதல் திருவந்தாதி -44 -என்று ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யங்களே தனக்கு திரு மேனியாகவும் – அவர்கள் உகந்த திரு நாமங்களே தனக்கு திரு நாமமாகவும் -கொண்டு இருக்கும் என்றும் –-அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -பெரிய திருமொழி-4-9-5 -என்று தேச கால கரண விப்ரக்ருஷ்டதைகளால் பரத்வாதிகளில் அணுகைக்கு ஆள் அன்றிக்கே அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு – ருசி பிறந்த போதே – நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்காக அன்றோ திரு இந்தளூரில் வந்து நிற்கின்றது என்று சொல்லப்பட்ட- பின்னானார் வணங்கும் சோதிதிரு மூழிக் களத்தனாய் –திரு நெடும் தாண்டகம் -10–என்று அவதாரங்களுக்கு பிற்பாடர் ஆனவர்களுக்கு அனுபாவ்யமான அர்ச்சா அவதாரத்திலே –சர்வம் பூர்ணம் சஹோம்-உபநிஷத் -என்கையாலே –
பரத்வாதிகளில் அனுபாவ்யமான குணங்கள் எல்லாம் பூர்ணம் என்கை —ஆக இப்படி ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகமாய்-அடியோமுக்கே-என்னும் படி –கறை விழுந்த இடமான – அர்ச்சா அவதாரத்தில் முற்பட்டவற்றில் உள்ளவையும் காணலாம் ஆகையாலே –சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்–7-10-10- என்னும் படி மண்டி இருப்பார் என்று கருத்து–

“தமருகந்தது எவ்வுருவம்‌ அவ்வுருவம்‌ தானே தமருகந்தது எப்பேர்‌ மற்றப்பேர்‌’ (முதல்‌ திருவந்தாதி 44) என்று ஆஸ்ரிதருகந்த திரவயங்களே திருமேனியாகவும்‌ அவர்கள்‌ உகந்த திருநாமங்களைத்‌ தனக்குத்‌ திருநாமமாகவும்‌ கொண்டு, “அடியோமுக்கே எம்பெருமான்‌ அல்லீரோ நீர்‌ இந்தளூரீரே’ (பெரிய திருமொழி 4-9-5) என்றும்‌, “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி திருமூழிக்களத்தானாய்‌” (திருநெடுந்தாண்டகம்‌ 10) என்றும்‌ ஆஸ்ரிதாதீந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையனாய்‌, அவதாரங்களுக்குப்‌ பிற்பாடராகையாலே அநுபவிக்கப்‌ பெறாத வாஸ்ரிதர்‌ இழவாதபடி தன்னை அநுபவிப்பித்துக்‌ கொடு நிற்கிற அர்ச்சாவதாரத்திலே பரத்வாதிகளில்‌ அநுபாவ்யமான குணங்களெல்லாம்‌ ‘ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம்‌’ என்கையாலே பரிபூர்ணமென்கிறார் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர்
தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ——44–தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய
இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திரு நாமமாக நினைத்து இருக்கும்–ஸ்ரஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன் ஸ்ருஜ்யனுமாய் நியாம்யனுமாய்-இவர்கள் சத்தாதிகளும் நாமரூபங்களும் தன் அதீனமானாப் போலே தனக்கு சர்வமும் ஆஸ்ரித அதீனம்-சென்றால் குடையாம் -என்று இவன் அவனுக்கு இருக்குமா போலே அவன் இவனுக்கு இருக்கும் அவனது பிரணயித்வம்–ஆஸ்ரித பரதந்த்ரம் இவனது ஸ்வரூபம் –

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே 
—4-9-5-அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு
ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம் அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்-வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும் ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்-உகந்து அருளின நிலங்கள் – தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
–குருடருக்கு வைத்த இறையிலியில்
விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே –பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading