ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 7-ஒளபம்ய பாதம் –11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ -133–155-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

(1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

7-ஒளபம்ய பாதம் – 122–155—மொத்தம் 34 ஸூரணைகள் -இதில் இரண்டு அதிகரணங்கள் —
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132–மொத்தம் – 11 ஸூரணைகள்
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– மொத்தம் —23-ஸூரணைகள்

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில் அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —ஆனால்‌ பக்தி தஸையில்‌ பெண் பேச்சாகில்‌ பிராட்டி ஒருத்தியாகப்‌ பேசுகை ப்ராப்தம்‌, தோழி தாய்‌ மகள்‌ என்கிற த்ரைவித்‌யமான பேச்சுக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌, இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும்‌, நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்‌களில்‌ ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்‌தில்‌ த்வரை யென்ன இவற்றைத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்கிறார்‌

சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

(சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –-அதாவது –
தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –-திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு ஹேது ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –

தோழியாவாள்‌ நாயகநாயகிகளை இணக்கிச்‌ சேர்க்குமவளாகையாலே திருமந்தரத்தில்‌ ப்ரதம பதமான ப்ரணவத்தில்‌ அகாரத்தாலே சொல்லப்பட்ட, காரணமாய்‌ ரக்ஷகமாய்‌ ஸேஷியாய்‌ ஸ்ரீய: பதியாயிருக்கிற பகவத் ஸ்வரூபத்துக்கும்‌, தத் ப்ரதி ஸம்பந்தியாய்‌, கார்யத்வ- ரஷ்யத்வ ஸேஷத்வங்களை ஸ்வரூபமாக உடைத்தாய்‌, ப்ரக்ருதே: பரமாய்‌, ஜ்ஞாநாநந்த மயமாய்‌, ஞாந குணகமாயிருக்குமென்று மகாரத்தாலே சொல்லப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கும்‌ சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ சொல்லப்பட்ட நிருபாதிக ஸேஷத்வ-அநந்யராஹ ஸேஷத்வாதி,ஸம்பந்தத்தை விஷயீகரித்த ஜ்ஞாநத்தைத்‌ தோழி என்றும்‌,

உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –-அதாவது தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே- அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய – படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே – சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே – சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் – அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் – இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து – சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

தாயாராவாள்‌ நாயகன் பக்கலிலே அதி மாத்ர ப்ராவண்யம்‌ பெண் பிள்ளைக்கு உண்டானாலும்‌ நாயகன் தானே வந்து பரிக்‌ரஹித்துக் கொண்டு போமதொழியப் படி கடந்து புறப்படுகை குல மர்யாதைக்குப்‌ போராதென்று அவளை நிஷேதித்து அவன் வரவு பார்த்திருக்குமவளாகையாலே, ஸம்பந்த ஜ்ஞாந ஸமநந்தரம்‌ ஸம்பந்தாநுரூபமான பரிமாற்றத்திலே த்வரை உண்டானாலும்‌, ஸ்வ ப்ரவ்ருத்தியில்‌ இழிகை நமஸ்ஸில்‌ சொன்ன பாரதந்த்ர்யத்துக்கு விருத்‌தமாகையாலே அத்தை நிவர்த்திக்க, அதில்‌ ஸாப்‌தமாகவும்‌, ஆர்த்தமாகவும்‌ சொல்லுகிற பகவதேகோபாயத்வத்தாலே ப்ராப்ய ஸித்‌தி, என்கிற அத்‌யவஸாய ஜ்ஞாநத்தைத்‌ தாயார்‌ என்றும்‌,

பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்-அதாவது-தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு – குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு – சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து – தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக் கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

தலைமகளாவாள்‌, இயற்கையிலே புணர்ந்து நாயகன் வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு, குல மர்யாதைகளையும்‌ பாராதே கிட்டியல்லது தரியேன்‌ என்னும்‌ பதற்றத்தை உடையாளொருத்தி யாகையாலே, நாராயண பதத்தாலே சொல்லப்பட்ட ஸேஷியாய்‌, ஸரண்யனானவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளால்‌ வந்த வைலக்ஷண்யத்தை அநுபவித்து அத்தால்‌ வந்த விளம்ப அக்ஷமத்வத்தாலே ததேகோபாயத்வாத்‌ யவஸாயத்தையும்‌ அதிக்ரமித்துக் கிட்டி, அநுபவித்து அநுபவ ஜநித ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தை இப்போதே பெற வேணுமென்கிற த்வராஜ்ஞாநத்தைத்‌ தலைமகள்‌ என்றும்‌ சொல்லும்‌,

ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது-திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–-பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில் எப்போதும் உண்டாய் இறே இருப்பது .

““ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா ! புத்திஸ் தாத்காவிகீ ப்ரோக்தா ப்ரஜ்ஞா துரைகாலிகீ மதா” என்று அதீத-அநாகத-வர்த்தமாந-விஷய ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதிமதி-புத்‌தி, என்று சொல்லுகையாலே பூர்வமேவ உண்டாயிருக்கிற ஸம்பந்தத்தை விஷயமாக உடைத்தா யிருக்கிற ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி என்றும்‌, மேல் வரக் கடவதான கைங்கர்யத்தில்‌ த்வராஜ்ஞாநத்தை மதி என்றும்‌, ஸம்பந்த, ஜ்ஞாந ஸமநந்தரம்‌ யாவத்‌ பல ப்ராப்தி நடக்கக் கடவதான உபாயத்வாத்‌ யவஸாயத்தை புத்தி என்றும்‌ சொல்ல வேண்டி யிருக்க, ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்பானென்‌? என்னில்‌, மூன்றும்‌ ஏக காலிகமாக நடக்கையாலே ஓரொன்றினுடைய ப்ராதாந்யம்‌ தோற்றப்‌ பேசுகையாலே ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்றது.-ஆக இப்படி ஸ்வ ஸ்வரூப-பரஸ்வரூப -ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ஈஸ்வரைகோபாயத்வத்தில்‌ வ்யவஸாயம்‌, பலமான கைங்கர்யத்தில்‌ த்வரை இவையாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று சொல்லுகிறது என்கிறார்‌-

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –-தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை-ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–இனி மேல்‌ மூன்று தஸையின்‌ பேச்சினுடைய ப்ரகாரங்களையும்‌ அவ்வோ தஸைகளில்‌ திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும்‌ அருளிச் செய்கிறார்‌-

ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்‌ அநந்யார்ஹத்வமும்‌, வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்‌ கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில்‌ அத்‌யவஸாயமும்‌, புத்ரி பலகால்‌ ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக்‌ கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக்‌ கண் புதையப்‌ போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக்‌ கூடுதாள்தேடித்‌ தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச்‌ சூழவும்‌ பகைமுகம்‌ செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும்‌ காலையும்‌ பூசலிடுகிற பதினேழில்‌ த்வரையும்‌ தெரியும்‌.–சூரணை -134–

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை ) அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்–வெறி விலக்கி-
அதாவது-எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் – மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி – இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே – பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு – இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி –வெறியாடல் உற –இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது- நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து – அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி – தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் –என்றும் – உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே–பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் கலங்கி–தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -– ( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே – தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு – இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட – அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக – அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் — அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

வெறி விலக்காவது – இயற்கையிலே புணர்ந்து பிரிந்த தலைமகள்‌ மோஹங்‌கதையாய்க்‌ கிடக்க, அவளுடைய பந்துக்கள்‌ இது க்ஷுத்‌ர தேவதைகளால் வந்ததோ என்று ஸங்கித்து இத்தை பரிஹரிப்பதாக வெறியாடலுற அவ்வளவில்‌ இவள்‌-ப்ரக்ருதியறிந்த உயிர்த்தோழியானவள்‌ “இது க்ஷுத்‌ர தேவதைகளால்‌ வந்ததன்று; இது ஒரு விஷயத்தில்‌ ஸங்கத்தாலே வந்தது” என்று அத்தை விலக்கிஅதுக்கு யோக்‌யமான பரிஹாரத்தைச்‌ சொல்லுகை,-இத்தால்‌ ஸம்ஸாரகாந்தாரத்திலே ஸப்‌தாதிகளாகிற போக்‌யோபஜீவதத்துக்காக ஸ்வர்க்க -நரக-கர்ப்பங்களாகிற போக ஸ்தலங்களிலே ஸஞ்சரிக்கிறவனுமாய்‌, பாரதந்ர்த்ர்ய- போக்யதா-அநந்யார்ஹத்வங்களாலே ஸ்த்ரீத்வத்தை உடையனான ஆத்மாவை அவ் விடத்திலே ஆத்ம ம்ருக யாத்ரா வ்யாஜத்தாலே ஸஞ்சரிக்கிற ஈஸ்வரன்‌ “ஏவம்‌ ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்‌ராம்யமாணே ஸ்வ கர்மபி,: | ஜீவே துக்கா குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே?” என்றும்‌, ““நாஸெள புருஷ காரேண”’ இத்யாதியிற்படியே கடகரும்‌, ஜ்ஞாபகருமன்றியிலே உபயருடையவும்‌ தர்ம ப்ரயுக்தமாக கடாக்ஷிக்க, அத்தாலே இத்தலைக்கு முண்டான க்ரம ப்ராப்தி பற்றாத அதி ப்ராவண்யத்‌தாலே வந்த கலக்கத்தாலே ததேகோபாயத்வாத்‌யவஸாயம்‌ குலைந்து ‘இந்த ப்ராவண்ய ஹேது எது? ப்ராவண்ய கார்யமான கலக்கத்தை பரிஹரிக்கலாவது எத்தாலே?’ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கலாபங்களாலே பரிஹரிக்கலாமோ என்று ஸங்கிக்க, ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ‘அநத்யார்ஹமான இவ்வஸ்துவிலுண்டான இந்த ப்ராவண்யம்‌ நிர்ஹேதுக க்ருபா கார்யமாகையாலே ததேகோபாயத்வத்தாலே பரிஹரிக்கலா மத்தனை யல்லது தத்‌ வ்யதிரிக்தங்கள்‌ பரிஹாரமாகாத வளவேயன்றிக்கே அநத்யார்ஹ ஸேஷத்வாதி ஸம்பந்தங்களுக்கு விருத்‌தமாகையாலே ஸ்வரூபத்துக்கு நாஸகமாகையாலே இவை நிவர்த்யங்கள்‌” என்று அந்ய ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற வெறி விலக்காகிற *தீர்ப்பாரை யாமினியிலும்‌.

இது திருவாய்மொழி யால சொல்லிற்று யாயிற்று –அஞ்ஞான தசையிலும்-தேவதாந்த்ர ஸ்பர்சமும்-ததீய ஸ்பர்சமும் விநாச ஹேதுவாய் அத்தசையிலும் பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தா தாரகமாம் படி இவருடைய வைஷ்ணத்வம் அதிசயித்தபடி சொல்லுகிறது –

ஆசை அறுத்து –அதாவது-திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்- இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் – இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது – ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் – அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது — பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது — இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —

(ஆசை யறுத்து)திருத் தொலை வில்லி மங்கலத்திலே அதி ப்ரவணையாயிருக்கிற இவளை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்துத்‌ தோழியானவள்‌ ‘நீங்களே யன்றோ திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு அதி ப்ராவண்யத்தை விளைத்திகோள்‌; இனி உங்களால்‌ ப்ராப்த விஷய ப்ரவணையான இவளை மீட்கப் போகாது; ஆன பின்பு இவள் பக்கல்‌ நீங்கள்‌ ஆசை யறுங்கோள்‌’ என்று ஆசை யறுக்கிறது.-இத்தால்‌ உபாயாத்‌யவஸாயமானது உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லது இராமையாலே அந்த உபேய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோ என்னும்‌ அதி ஸங்கையாலே அந்த ப்ராவண்யத்தை வ்யவஸாயம்‌ நிவர்த்திப்பிக்கத் தேட இந்த ப்ராவண்யம்‌ ஸேஷ வஸ்துகதமாகையாலே ஸேஷியினுடைய ப்ரியோபயோகியாமத்தனை யல்லது உபாயத்தில்‌ அந்வயியாதென்கிற ஸங்கையை நிவர்த்திப்பிக்கிறது-ஸம்பந்த ஜ்ஞாநம்‌.–இத்தால்‌ ப்ராப்த விஷய வைலக்ஷண்யாதீநமாக உண்டான அந்த ப்ராவண்யத்தை, “இது ஸ்வரூபாதிரேகியாய்க் கொண்டு ஸாதநத்திலே அந்வயிக்குமாகில்‌ “தத் தஸ்ய ஸத்‌ருஸம்‌ பவேத்‌”” (ரா.ஸு.. 39 -30) என்றிருக்கிற ஸ்வரூபத்துக்கு விருத்‌தமாம்‌; ஆகையாலே இது நிவர்த்யம்‌” என்று இந்த ப்ராவண்யம்‌ ஸ்வ நிவர்த்யம்‌ என்று தடுக்க, இவ்வுபாயாத்‌யவஸாயத்தில்‌ ஸ்வாதீநதாப்ரதிபத்தியை பரேச்சாநுகுண விநியோகார்‌ஹதா ரூபமான ஸேஷத்வ ஜ்ஞாந மானது, ஸேஷ வஸ்துகதமாய்‌, ஸேஷியினுடைய வைலக்ஷண்யாதீநமான இது ஸேஷிக்கு அதிஸயகரமாகையாலே ஸ்வரூபாதிரேகியன்று; தாரகமாகையாலே ஸ்வ நிவர்த்யமுமன்று. இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்திருக்கையாகிற ஸ்வாதந்த்ர்யம்‌ கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்தோடு விருத்‌தமாகையாலே த்யாஜ்யம்‌ என்று ஸ்வ ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற *துவளில்‌ மா மணியிலும்‌.

இது திருவாய் மொழிக்கு கீழ் எல்லாம் -சர்வேஸ்வரனைப் பேசினார் -இத்திரு வாய் மொழியிலே தம்மை பேசுகிறார் –-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்டு -பேசுகைக்கு தாம் அல்லது இல்லாதா போலே – இவ்விஷயத்தில் தம் விஷயத்தை பேசுகைக்கும் தாம் அல்லது இல்லை யாயிற்று –இனி இவளை மீட்க முடியாது -நீங்களும் இவள் வழியே ஒழுக பாருங்கோள் -என்று தோழி வார்த்தையாகச் செல்லுகிறது – இத்தால் சேஷத்வம் சத்தா ப்ரயுக்தமானவோபாதி ப்ராவண்யமும் சத்தா ப்ரயுக்தம் என்னும் இடத்தை நிர்வஹிக்கிற தாயிற்று –

அறத்தொடு நின்ற-அதாவது-தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க–திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் – இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் இருக்கிற இவளை கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள் பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது – தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன– ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன – அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே – அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க – அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும் இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை

(அறத்தொடு நின்ற) அறத்தொடு நிற்கையாவது – தலைமகளுடைய பருவத்தையும்‌, வடிவில்‌ வேறுபாட்டையும்‌ கண்ட பந்துக்கள்‌ ஸ்வயம்வரத்துக்கு ராஜ லோகத்தைத்‌ திரட்டுகைக்கு மணமும்‌ செறிவிக்க, இவளுடைய உயிர்த் தோழியானவள்‌ கேட்டு, “இது இவள் செவிப்படில்‌ இவளைக் கிடையாது இத்தை ஏற்கவே பரிஹரிக்க வேணும்‌” என்று இவளுடைய பந்து ஜநங்களைப் பார்த்து “இவளுக்குத்‌ திருப்புலியூர் நாயனாரோடே ஸங்கம்‌ உண்டு போலே இரா நின்றது; ஆன பின்பு நீங்கள்‌ செய்கிறது தர்மமல்ல” என்ன, “ஆனால்‌ இவளுக்குத் தக்க அவயவ ஸோபை தொடக்கமான நாயக லக்ஷணங்கள்‌ அவனுக்குண்டோ” என்ன, ‘அவை எல்லாத்தாலும்‌ ஒரு குறையில்லை. அவையொன்று மில்லையே யாகிலும்‌ இவள்‌ அவனுக்கு அநந்யார்ஹையானாள்‌ என்னுமிடத்துக்கு அடையாளம்‌ ஸுவ்யக்தமாகக்‌ காணலாம்‌. ஆன பின்பு நீங்கள்‌ செய்கிற விது அதர்மம்‌” என்று மத்‌யஸ்தையாய்க் கொண்டு தர்மம்‌ சொல்லுகிறாளாய்‌ அந்த மணத்தை விலக்குகை.
ஆக இத்தால்‌ ப்ராப்ய த்வரையினுடைய பரிபாகத்தை அநுஸந்தித்த உபாயாத்‌யவஸாயம்‌, “இந்த த்வரை அப்ராப்த விஷயாவலம்பியோ?” என்று அதி ஸங்கை பண்ண, ஸம்பந்த,ஜ்ஞாநம்‌, “இது ப்ராப்தனான ஸேஷி விஷயீகாரத்தாலே உண்டானது, இதுக்கு அப்ராப்த விஷய ஸங்கையும்‌ ஸ்வரூப நாஸகரம்‌; இனி அந்த ஸேஷியினுடைய போக்‌யதையாலும்‌, அந்த போக்‌யதை ஒழியவே நிருபாதிக ஸேஷித்வத்தாலும்‌ இவ் வஸ்து அவனுக்கு அநந்யார்ஹம்‌” என்று அந்த அதி ஸங்கையை நிவர்த்திப்பிக்கிற *கரு மாணிக்க மலையிலும்‌, 

ப்ரீதியில் அந்யாபதேசம் உள்ளத்து இத்திரு வாய் மொழியே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும்–அறத்தோடு நின்று அவர்கள் செய்கிறவற்றை -நீங்கள் கேட்க்கிற அளவுள்ள – இவை எல்லாம் குறைவற்ற விஷயம் -இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் இவள் தான் அங்கே அநன்யார்ஹை ஆனாள்-நீங்கள் செய்கிற இவற்றை தவிருங்கோள் -என்று -விலக்குகிற தோழி வார்த்தையாய் இருக்கிறது –-மண விலக்கு-என்பதோர் கிளவித் துறை இது -திருமந்த்ரத்திலே தனக்கும் பிறருக்குமாய் இருக்கும் இருப்பை கழித்து அநன்யார்ஹா சேஷத்வத்தை சொல்லக் கடவது இறே -அது இங்குச் சொல்லுகிறதுகீழில் திருவாய்மொழியில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –-இதில் அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வாதந்தர்யமும் அபுருஷார்த்தம் என்கிறது-ஒரு கன்யகை யானால் ஒருவருக்கேயாய் இருக்கையும் -ஒருவனுக்கே யானால் -பிறர்க்கு உரிய அல்லளாய் இருக்கையும் இறே ஸ்வரூபம் –

ஆக இத்தால்-வெறி விலக்கியும் ,-ஆசை அறுத்தும் , அறத்தோடு நின்றும் – இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

ஆகத்‌ தோழிப் பேச்சான மூன்று திருவாய்மொழியிலும்‌ இவ்‌ வாத்மா தர்மி தர்ம விபாகமற அந்ய ஸேஷமுமன்று; ஸ்வஸேஷமுமன்று;பகவத் அநந்யார்ஹ ஸேஷமாயிருக்குமென்று ஸம்பந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சாயிருக்கிறது.

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
-அதாவது
வாடிஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப் பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
மெலிந்துபாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
பித்தேறி – மண்ணை இருந்து துழாவி- யிலே –என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
ஏறப்பேசி-கடல் ஞாலத்திலே –ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
கட்டு அழிந்து-மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
அகன்று –-உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
சார்வதே வலித்தமை-கங்குலும் பகலிலே –சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும் க்லானி கார்ச்யாதிகள் போல சாதனத்தில் மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும் குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –-முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை .. ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும் போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் – உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும் உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

(வாடி மெலிந்து என்று தொடங்கி) – (எழில்‌ அத்‌யவஸாயமும்‌) *ஆடியாடியில்‌ “வாடி வாடுமிவ்வாணுதல்‌”’ (திருவா. 2 – 4 – 1) என்று ஆஸ்ரயத்தை ஓழிந்த தளிர் போலே வாடா நின்றாளென்றும்‌, *பாலனாயேழுலகில்‌ ”பொன் செய்பூண் மென்முலைக்கென்று மெலியும்‌” (திருவா. 4 – 2 – 10) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்க வேணுமென்று மெலியா நின்றாளென்றும்‌, *மண்ணை யிருந்து துழாவியில்‌ ““என் பெண்‌ கொடி யேறிய பித்தே”’ (திருவா. 4 – 3 – 7) என்று என் பெண் பிள்ளை அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்த்தங்களையும்‌ அவனாகச்‌ சொல்லும்படி பிச்சேறினாள்‌ என்றும்‌, *கடல் ஞாலத்திலே ““ஈசன் வந்தேறக்கொலோ”’ (திருவா. 5-0 1) என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறாள்‌ என்று அறிய மாட்டாதே ஸர்வேஸ்வரன்‌ இவள் பக்கலிலே ஆவேஸித்தாப் போலே பேசா நின்றாள்‌ என்றும்‌, *மாலுக்கு வையத்தில்‌ “கற்புடை யாட்டி இழந்தது கட்டே”’ (திருவா. 6 – 6 – 10) என்று அறிவுடையாளான இவள்‌ ஸர்வேஸ்வரனை ஆசைப்பட்டு ஸர்வத்தையும்‌ இழந்தாள்‌ என்றும்‌, உண்ணும் சோற்றிலே ““எனக்குதவாதகன்ற இளமான்‌” (திருவா. 6 – 7 – 6) என்று தன்னைப் பிரிந்து க்லேஸப்படுகிற இவ்வாபத்‌ தஸையில்‌ எனக்குதவாதே அகன்றாள்‌ என்றும்‌, *கங்குலும்‌ பகலில்‌ ‘“சந்தித்துன்சரணம்‌ சார்வதே வலித்த தையல்‌” (திருவா. 7 – 2 – 5) என்று உன்‌ திருவடிகளைக் கிட்டி உன் முன்னே முடிய வேணுமென்று வ்யவஸிதையானாள என்றும்‌ சொல்லுகிற இவளுடைய விரஹ கார்யத்தையும்‌, அந்த விரஹக்‌லேஸத்தாலே அடைவு கெடப் பேசுகையும்‌, பெற்றல்லது தரியாத அதிமாத்ர ப்ராவண்யமும்‌, உபாஸகனுக்கும்‌ உபாயாநுஷ்டாந துஷ்கரதையாலும்‌, பக்தி பாரவஸ்யத்தாலும்‌ ப்ராப்த வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலும்‌ அவை உண்டாகுமாகையாலே இவளுக்கும்‌ இவை ஸாதநத்திலே அந்வயிக்கில்‌ ததேகோபாயத்வத்துக்கு விருத்‌தமா மென்று மாதா அஞ்சி, “முறையோ அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்வண்ணனே”’ (திருவிரு. 60) என்று தேவர் க்ருபை யொழிய இவள்பக்கல்‌ உள்ளவை யோன்றும்‌ ஹேது வல்ல; ஆனபின்பு இவளை இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை தேவரீருடைய க்ருபைக்கும்‌, ரக்ஷகத்வத்துக்கும்‌ போருமோ என்று சொல்லிக்‌ கூப்பிடுகிற தாய்ப் பேச்சான. ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உடாயாத்‌யவஸாயமான தஸையில்‌ பேச்சுத் தோன்றும்‌.

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-சர்வ தேசத்திலும் அவன் வரவை ஆராய்ந்து பலகாலும் பார்த்து -எங்கும் தோற்ற வல்ல நரஸிம்ஹ ரூபத்தை யுடையவன் என்று -அவ்வளவிலும் வரக் காணாமையாலே வாட்டத்தின் மேல் வாட்டமாம் படி தளரா நிற்கும் –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே
.–4-2-10—விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்-மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து -என்கிற படியே ஸ்ரீ கௌஸ்துபம் தன் முலையிலே அழுந்த அணைக்க ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது –மெலியுமே.–இவள் மெலியா நின்றாள் -நான் என் செய்கேன் -இவளுடைய அவஸ்தை இருக்கிற படியால் இவளைக் கிடைக்க மாட்டாதாய் இரா நின்றது-நான் எங்கனே ஜீவிக்கக் கட வேன்-என்கிறாள் –

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6—தாய் உதவாத தனிமையிலே பூதனை தாய் வடிவு கொண்டு நலிய புக அவளை முடித்து தன்னை அபகரித்த உபகாரத்துக்கு தோற்றாயிற்று இவள் பிச்சேறிற்று-பூத் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி ஆறு தரு புணர்ச்சி –
அசிந்திதமாக கையிலே பூவைக் கொடுத்தல் -ஆணையின் கையிலே அகப்பட்டவர்களை மீட்டல் -ஆற்றிலே அமிழா நிற்க எடுத்தல்-செய்தவர்களுக்கு அவர்கள் அநன்யார்ஹைகள் -தம் தாமை உண்டாக்கினவர்களுக்கு இறே அங்கு-அவன் தன்னை உண்டாக்கிக் தந்தத்துக்கு தன்னை அநந்யார்ஹம் ஆக்கினாள்-என் பெண் கொடி-நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடைய என் மகள் ஏறிய பிச்சு 

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-சர்வ ஸ்ரஷ்டாவாய் -சகல அந்தர்யாமியாய் -சர்வ ஆபத் சகனானவன் வந்து ஆவேசித்தானோ -அறிகிறிலேன்-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே
.–6-6-10-அறிவுடையாளாய் இருக்கிற என் பெண் பிள்ளை இழந்தது ஸ்த்ரீத்வ மரியாதை-கட்டு -மரியாதை -கடடடஙக என்றுமாம் 

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6—தன்னைப் பிரிந்து நோவு படுகிற இத் தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழியப் போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத் தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்இளமான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5-–தெளிவுடைய சிறுக்கனுக்கு உன்னை அழிய மாறி உதவினாய -ப்ரயோஜனாந்தர பரருக்கு உடம்பு நோவக் கடல் கடைந்தாய் -உன்னை அல்லாது அறியாத இவளை அறிவு கெடுத்து வைத்தாய் -உன் திருவடிகளைக் கிட்டி முடிய வேணும் என்று துணிந்து இருக்கிற இப் பெண்ணை என்னுதல் -உன்னைக் கண்டு உன் எதிரே முடிய வேணும் என்று பிராணனை தரித்து இருக்கிற இவளை என்னுதல் –நசாஸ்ய மாதா நபிதா நஸான்ய –மானஸ அனுபவமே அன்றி உன்னைக் கிட்டி பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணினேன் ஆக வேணும் என்று துணிந்து இருக்கிற இவளை என்னுதல் –மையல் செய்தானே –உன்னைக் காட்டாதே இவளை மதி கெடுத்தவனே –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
 – 62–தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும்-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ–முறையோ என்று க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி–1-ஸ்ரம ஹரமாய்–2-தர்ச நீயமாய்–3-உதாரமான வடிவை யுடைய நீ-இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு விளித்து யுரைத்தாள் யாயிற்று–இத்தால் அநந்த க்லேச பாஜனமாய் கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால் ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —

அதாவது –-புத்ரி பல கால் ஆள் இட்டு தலைமகள் ஆனவள்- அஞ்சிறை மடநாராய்-1-4-
வைகல் பூம் கழி-6-1– பொன் உலகு ஆளீர்-6-8– எம் கானல்-9-7– என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
ஆற்றாமை சொல்லி –-வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை –
என்று சகல பதார்த்தங்களும் பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-
கவராதவை விட்டு –-ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
இரைக்க மடல் எடுத்து –மாசறு சோதியிலே-5-3- –நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
கண் புதைக்கப் போக்கற்று--ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் –என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
உரு நெஞ்சுள் எழ
-எங்கனே யோ அன்னைமீர் காள் -திருவாய்மொழியிலே -5-5– –சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள்ளும் எழும் –என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –
கூடு நாள் தேடி-மானேய் நோக்கிலே-5-9- –திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?-என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
தாழ்த்ததுக்கு ஊடி-மின்னிடை மடவாரிலே-6-2- –போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
உசாத்துணை அற்று-வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —
சூழவும் பகைமுகம் செய்ய-ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –
தடை நில்லாதே –நங்கள் வரி வளை யிலே-8-2- –காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை- என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –
புயக்கற்று-இன் உயிர் சேவலிலே–9-5 –இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –-என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்
மாலையும் காலையும் பூசல் இடுகிற-மல்லிகை கமழ தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
வேய் மரு தோள் இணையிலே-10-3- –பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

(புத்ரி) தலைமகளானவள்‌, (பலகால்‌ ஆள்விட்டு) *அஞ்சிறைய மடநாரை (திருவா. 1 4), *வைகல் பூங் கழிவாய்‌ (திருவா. 6 – 1), *பொன்னுலகாளீரோ (திருவா. 6 – 8), *எங் கானல்‌ (திருவா. 9 – 7) என்கிற நாலு திருவாய்மொழிகளிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாமல்‌ தூது விட்டு, (ஆற்றாமை சொல்லி) *’ஆற்றாமை சொல்லி அழுவோமை”’ (திருவா. 2 – 1 7) என்று *வாயும் திரையுகளிலே ஸகல பதார்த்த,ங்களும்‌ பகவதலாபத்தாலே நோவு படுகிறனவாக க்லேஸித்து, (கவராதவை விட்டு) *ஏறாளுமிறையோனிலே “மாறாளன்‌ கவராத மணி மாமை குறைவிலமே”‘ (திருவா. 4 – 8 – 1) என்று அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள்‌ வேண்டா என்று உபேக்ஷித்து, (இரைக்க மடலெடுத்து) *மாசறு சோதியிலே ““யாமடலூர்ந்தும்‌ … நாடுமிரைக்கவே”” (திருவா, 5 – 3 – 10) என்று ஜகத் க்ஷோபம்‌ பிறக்கும்படி மடலூரக்கடவேனென்று, (கண் புதையப் போக்கற்று) *ஊரெல்லாம்‌ துஞ்சியிலே ‘“பின்னின்ற காதல் நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்‌றிராவூழி கண்புதைய மூடிற்றால்‌”” (திருவா, 5 – 4- 6) என்று ப்ரேம வ்யாதியும்‌, ராத்ரியாகிற கல்பமும்‌ க்ருத ஸங்கேதிகளாய்க்கொண்டு சூழப் பொருகையாலே போக்கடியற்று.
(உருநெஞ்சுள்ளெழ) *எங்ஙனேயோவிலே “*சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும்‌”
 (திருவா. 5 – 5- 10) என்று தேஜஸ்தரங்க மத்‌யே உந்நேயமான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ நெஞ்சிலே ப்ரகாஸிக்கும்படியான உருவு வெளிப்பாட்டாலே ப்ரீத்ய ப்ரீதி ஸமமாய்‌, (கூடுநாள் தேடி) *மானேய் நோக்கியிலே ““திருவல்லவாழுறையும்‌ கோனாரை அடியேனடி கூடு வதென்று கொலோ”” (திருவா. 5 – 9 – 1) என்று அவன்‌ திருவடிகளைக் கிட்டும்‌ நாளை ப்ரார்த்தித்து (தாழ்த்ததுக்கு ஊடி) இப்படி ப்ரார்த்திக்கச்‌ செய்தேயும்‌ தாம்‌ தாழ்த்தவாறே *மின்னிடை மடவாரிலே ”போகு நம்பி’‘ (திருவா. 6 2 – 2) என்று ப்ரணய ரோஷத்தாலே ஊடி-(உசாத் துணையற்று) *வெள்ளைச் சுரி சங்கிலே ““என்னெஞ்சினாருமங்கே ஒழிந்தார்‌ ஆரைக்‌ கொண்டென் னுசாகோ”’ (திருவா. 7 – 3 – 4) என்று அபஹ்ருத சித்தையாகையாலே உசாத் துணையுமின்றிக்கே, (பகைமுகம்செய்ய) *ஏழையராவியிலே “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே’‘ (திருவா. 7 – 7 – 8) என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கங்களெல்லாம்‌ ஒருமுகமாய்‌ நலியத் தேட நில்லாதே, *நங்கள் வரிவளையிலே ”காலம் பல சென்றும்‌ காண்பதாணை உங்களோடெங்களிடையில்லை”’ (திருவா. 8 – 2 – 7) என்று அதிமாத்ர ப்ராவண்ய மாகாதென்‌று நிஷேதிக்கிற தோழிமாரையும் தாமரையும் அதிக்ரமித்து -புயக்கற்று –இன்னுயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது (திருவாய் -9-5-10) என்றும் முடிகையிலே வ்யவசிதையாய் (மாலையும் காலையும் பூசலிடுகிற ) மல்லிகை கமழ் தென்றலிலும் -வேய் மரு தோளிணையிலும் -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனைப் பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமையாலும்-அக்காலத்தில் பாதக பதார்த்தங்களாலும் பார்த்து, “நீ பசுமேய்க்கப்போனால்‌ நலியக்கடவதான டாத, க பதார்த்தங்களும்‌ நோவு பட்டுக் கூப்பிட்டும் ப்ராத காலத்திலே கிருஷ்ணன் பசு மேய்க்க்கப் போனானாக அதி சங்கை பண்ணி கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவதான பாதக பதார்த்தங்களும் நலியாநின்றது” என்று கூப்பிட்டும்‌, இப்படித் தலைமகள் பேச்சான பதினேழு திருவாய்மொழியிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாதபடியான அதிமாத்ர ப்ராவண்ய கார்யமான ப்ராப்ய த்வரை தோன்றும்

அஞ்சிறை மடநாராய்–1-4-அவன் தானே வரப் பற்றாமையாலே -அவன் வராமைக்கு அடி நம் பக்கல் உண்டான அபராதம் என்று பார்த்து -அவனுடைய அபராத சஹத்வத்தை அறிவிக்கவே வரும் என்று -தன் உத்யானத்திலே பஷிகளைத் தூது விடுகிறாள் –தன்னுடைய சேஷத்வத்தை அனுசந்தித்தால் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று அவன் செய்தபடி கண்டு இருக்கலாம்-அத்தலையில் வைலஷண்யத்தை அனுசந்தித்தால் தூது விட்டு அல்லது இருக்க ஒண்ணாது

வைகல் பூம் கழி-6-1-இவர் தம்முடைய ஹிதத்தோ பாதி ஜகத்தினுடைய ஹிதத்துக்கும் கடவ-அது பற்றாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து-கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே திரு வண் வண்டூரில் -வாராமைக்கு அடி -திரு வண் வண்டூரில் போக்யதையாலே -நம் ஆற்றாமையை அறிவிக்க வரும் என்று பார்த்து-தூது விடுகிறாள் ஒரு பிராட்டி பேச்சாலே இவர் தம் தசையை யருளிச் செய்கிறார்-

பொன் உலகு ஆளீர்-6-8–அஞ்சிறைய மட நாறையில்-அபராத சஹத்வம் பற்றாசாகத் தூது விட்டாள்
வைகல் பூங்கழியிலே சர்வ ரக்ஷகனானவன் திரு வண் வண்டூரில் போக்யத்தையாலே கால் தாழ்த்தான் அத்தனை – நம் ஆர்த்தியை அறிவிக்க வரும் என்று அவன் சர்வ ரக்ஷகத்வம் பற்றாசாக தூது விட்டாள் இதில் தன் ஐஸ்வர்ய பரப்பால் மறந்து இருந்தான் அத்தனை –ஆஸ்ரிதரோடு ஏக ரசனாய் இருக்கும் -என்று ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விடுகிறாள் -தக்கோர்மை பற்றாசாக தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிக்கும் –

எம் கானல்-9-7–அஞ்சிறைய மட நாரையில்-இத்தலையில் அபராதத்தாலே வாராது ஒழிந்தான் அத்தனை -என்று அவனுடைய அபராத சஹத்வம் பற்றாசாக தூது விட்டார் –
வைகல் பூங்கழி வாயில்-நல்லது கண்டால் கால் தாழுமவன் ஆகையால் மறந்து இருந்தான் அத்தனை
நம் ஆர்த்தியை அறிவித்தால் தன்னிமையிலே நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் என்று அது பற்றாசாகத் தூது விட்டார்
பொன்னுலகாளியில்-ஐஸ்வர்ய பரப்பாலே மறந்து இருந்தான் அத்தனை –ஆஸ்ரிதரோடு ஏகரசன் என்று அறிவிக்கவே வரும்-என்று ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விட்டார்
இதில் தனக்கு நல்லாரை விட மாட்டாமையாலே வாராது இருந்தானாம் அத்தனை –தன் வடிவு அழகு அது -குணங்கள் அவை -ஆன பின்பு பிரிந்தார்க்கு ஜீவித்து இருக்கப் போமோ என்று அவ் வடிவு அழகும் குணங்களும் பற்றாசாகத் தூது விடுகிறது –

வாயும் திரை உகளிலே –2-1-நாரையாகில் வெளுத்து இருக்கையும் -காற்றாகில் சஞ்சரிக்கையும் முதலான ஸ்வ பாவங்கள் இவற்றுக்கு நியதம் என்று அறியாதே-வியதிரேகத்திலே சேதன அசேதன விபாகம் அற ஆற்றாமையை விளைக்க வல்ல விஷயம் -என்னுமத்தை புத்தி பண்ணி அவற்றுக்குமாக வெறுக்கிறார்பாட்டுத் தோறும் எம்மே போல் -என்கிறது இவற்றுக்குத் தனித் தனி உண்டான ஆற்றாமை இவர்க்கு ஒரு வகைக்கு போறும் அத்தனை என்கைக்காக–

ஏறாளும் இறையோனில்-4-8–அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-கோவை வாயாள் -திருவாய் மொழியில் படி விரும்பினவன் இப்படி உபேக்ஷித்த பின்பு என்னாலும் என் உடைமையாலும் எனக்குத் தான் என்ன கார்யம் உண்டு என்கிறாள் – ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை – முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்-என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் – அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே -நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்

மாசறு சோதியிலே-5-3- ஏறாளும் இறையோனில்-தமக்குப் பிறந்த இழவே தலையெடுத்து -ஆற்றாமையால் மடல் எடுத்தாலும் கிட்டுவோம் -என்று துணிகிறாள் –-ஏறாளும் இறையோனில்-அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டேன் என்று தன்னை முடிக்கப் பார்த்தாள்-அது அவனது ஆகையால் முடிந்தது இல்லை –இதில் அத்தலையே பிடித்து அழிக்கத் தொடங்கினாள் – அங்கு உயிரினால் குறைவிலம் -என்று உயிரை வேண்டா என்றாள் –இங்கு உயிருக்கும் உயிரை வேண்டேன் என்கிறாள்–இதில் அவன் ஸ்வரூபத்தை அழிக்கப் பார்க்கிறாள் –அவன் தானே மேல் விழ-தம்மோட்டை கலவி அவனுக்கு அவத்யம்-என்று அகன்றவர் தம்மைப் பாராதே -வழி யல்லா வழி யாகிலும் அவனோடே சம்ச்லேஷிப்போம் என்று தமக்குப் பிறந்த தசா விசேஷத்தை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10--அவன் ஊரார் கவ்வை பரிஹரியானாகில் நாடாகப் பழி சொல்லும் படி பண்ணுகிறேன் -ஜகத் ஷோபத்தை பண்ண கடவேன் -இந்நாட்டுக்கு ஓர் பேர் இறே உண்டாகப் புகுகிறது – ஒருத்தி ஒருவனை படுத்திற்று இ றே -ஒருவன் முகம் காட்டிற்று இலன் -என்னும்படி பண்ணுகிறேன் -ஒருவன் உளன் ஆகில் ஒருத்தி உடம்பு இங்கனம் இருக்க அடுக்குமோ ஜகத்து நிரீஸ்வரம் என்னும்படி பண்ணுகிறேன் -கலந்த என் வார்த்தையில் காட்டிலோ வடிவு இல்லாத வேதத்தின் வார்த்தை –எல்லாரையும் நாஸ்திகர் ஆகும் படி பண்ணுகிறேன்-நாடும் இரைக்கவே–யாம் மடலூர்தம் -தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்

மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6—புக்க இடம் புக்கு -பின்னாட்டிக் கொண்டு திரிகிற பிரேம வியாதியானது -இதுக்கு இடைந்தால் வேறு நிழல் இல்லையாய் இரா நின்றது –நெஞ்சை மிகவும் நோவு படுத்தா நின்றது –பாதகம் பாத்யத்தின் அளவன்று-என்கை -அக்னி போல் தனக்கு ஆச்ரயமான நெஞ்சை தக்தமாக்கா நின்றது –பதார்த்தங்கள் தோற்றாத படி முன்னே நின்று ராத்ரியாகிற கல்பம் கண்ணை மறையா நின்றது –பிரேம வியாதியும் ராத்திரியும் முன்பும் பின்புமாய் க்ருத சங்கேதங்களாய் நலிகிற படி உட்கண்ணும் அழிந்து புறக் கண்ணும் அழிந்தது -க்ராஹகமுமாய் ப்ரகாசகமுமான கண்ணை க்ராஹ்ய மான இருள் மறையா நின்றது

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-
உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறி லோமே என்ன –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணா தாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-–
கோனாரை என்று நாராயண சப்தம் –அடியேன் என்று பிராணவார்த்தம் –பிராட்டியான தசையோடு தாமான தசையோடு வாசி யற இவர்க்கு சேஷத்வம் ஒருபடிப் பட்டு இருக்கிற படி-அடி கூடுவது என்கிறது சதுர்த்த்யர்த்தம் –என்று கொலோ என்கிறது ப்ராப்ய த்வரையாலே வாக்ய சேஷத்தால் வந்த பிரார்த்தனை –அணைக்க வேணும் என்னும் ஸ்தானத்தில் அடி கூடுவது என்கிறார் இறே-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2–நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனை பேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் 

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ
! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-லங்கையை அரண் அழிக்கைக்கு ஸ்ரீ விபீஷணனை பெற்றால் போலே -என்னுடைய ஸ்த்ரீத்வம் ஆகிற அரண் அழிக்கைக்கு உள் ஆள் பெற்றோம் என்று நெஞ்சை படை யறுத்துக் கொண்டான்-இலங்கையின் அளவன்றிக்கே ஸ்த்ரீத்வ அபிமானத்துக்கு அவன் அஞ்சி இருப்பது –நெஞ்சினார் -அங்குத்தை ராஜ குலத்தாலே என்னை மறந்தார் -பெற்றாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும் தரிக்க வேண்டாவோ என்ன-உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!-உழந்து -வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.
–7-7-8–தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாகும் படி ரூபகம் முற்றின படி-.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7--காலம் எல்லாம் கூடாவாகிலும் கண்டு அல்லது மீளேன் -சொல்லலாம் இத்தனை அல்லது செய்யப் போமோ -என்ன –ஆணை –அவனுடைய ஆணை -விடுகிறவர்களோடு சம்பந்தம் இல்லாமையால் அவர்கள் ஆணை இடாளே-இப்படி இவள் ஆணை இடைச் செய்தேயும் தங்கள் சாபலத்தாலே சில சொல்லப் புக
உங்களோடும் எங்களிடை இல்லையே–உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை -நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டா -என்கிறாள்-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10–ஆபரணத்தாலே அழகிதான சரீரம் என்னுதல் -ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற வி லக்ஷண சரீரம் என்னுதல்-பையவே புயக்கு அற்றது-க்ரமேண பசை அற்றது என்னுதல் –க்ரமத்தில் போகத் தொடங்கிற்று என்னுதல்–புயத்தல் என்று போதல் ஆதல் –புயக்கு-என்று ஆகர்ஷகம் ஆதல் –

மல்லிகை கமழ தென்றலிலே-9-9-திருவாய்ப்பாடியிலே பெண்கள் எல்லாம் ஒரு ராத்திரியில் கிருஷ்ண விரஹத்தால் பட்ட நோவை இவர் ஒருவருமே படுகிறார் -என்று ஆளவந்தார் அருளிச் செய்வார்-ஒரு ஸந்த்யையில் அவர்கள் பட்ட நோவை படுகிறார் என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் –
ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –அப்போதே லபிக்கப் பெறாமை -மாலைப் பூசல்அன்றோ  இது –

வேய் மரு தோள் இணையிலே-10-3-இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை -அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து –நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் – எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்–இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் –என்கிறார் –

ஆனால் தோழி என்றும் தாய் என்றும் சொல்லுகிறது – சம்பந்த ஞானத்தையும் – உபாயத்வ அவசாயத்தையும் ஆகில் ,தத் விஷயமான பன்மை சொலவுக்கு தாத்பர்யம் எது என்னும் ஆ காங்ஷையில் அருளி செய்கிறார் மேல் —ஆனால்‌ தோழி என்றும்‌, தாய்‌ என்றும்‌ சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும்‌ உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில்‌ இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார்‌ 

தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த வாத் சல்யாதி வ்யவசாய புத்தி பேதத்தாலே–சூரணை -135-

(தோழிமார் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த புத்தி பேதத்தாலே–
அன்னையர் என்கிற பன்மை வாத் சல்யாதி வ்யவசாய புத்தி பேதத்தாலே )

அதாவது – தோழிமார்களும் அன்னையரும்–5-5-9 -என்றும் அன்னையரும் தோழியரும்-5-4-5 -என்றும்
தோழிமார் விளையாட போதுமின் என்ன -6-2-8-என்றும் அன்னையர் நாண -5-3-8–என்றும்
ஊர் என் சொல்லில் என் தோழிமீர் -5-3-6–என்றும் எங்கனயோ அன்னைமீர்காள்-5-5-1- -என்று

இப்படி தோழி,தாய் விஷயமாக சொல்லுகிற பன்மை திரு மந்த்ரத்தில் சொல்லுகிற படியே -இவ் ஆத்மாவோடு ஈஸ்வரனுக்கு ரஷகத்வ ,சேஷித்வ ,காரணத்வ ,சரீரி-இத்வாதி சம்பந்தங்கள் பலவும் உண்டாகையாலே – அவ்வோ சம்பந்தங்களை விஷயீகரித்த ஞானத்தின் உடைய பேதத்தாலும் –உபாய பூதனான அவனுடைய -வாத்சல்ய -ஸ்வாமித்வ –சௌசீல்ய -சௌலப்ய ஞான சக்தி கிருபாதிகளை பற்றி வரும் வ்யவசாய ரூபமான ஞானத்தின் உடைய பேதத்தாலும் என்கை —புத்தி சப்தம் ஞான வாசி–
புத்திர் மநீஷா திஷணா தீ பிரஜ்ஞா சேமுஷீ மதி-அமரகோசம் – -என்னக் கடவதிறே ..
இத்தால் சம்பந்த ஞானத்துக்கும் உபாயத்வ அத்யாவசாயத்துக்கும் விஷய பேதத்தாலே -வ்யக்தி பேதம் உண்டாகையாலே – தத் விஷய பன்மை பிரயோகத்துக்கு கொத்தை இல்லை என்றபடி –

ஊரென் சொல்லிலென்‌ தோழிமீர்‌”’ (திருவா, 5 – 3 – 9), எங்னேயோ அன்னைமீர்காள்‌”’ (திருவா. 5 – 5 4 1), ”அன்னையரும்‌ தோழியரும்‌” (திருவா, 8 – 4-5), “ஏலமலர்க் குழலன்னைமீர்காள்‌”’ (திருவா. 8 – 2 – 3); ““என்னுடைத்‌ தோழியர்காள்‌”” (திருவா. 8 – 2 – 7) என்று தோழிமாரையும்‌, தாய்மாரையும்‌ பலவாகச் சொல்லுகிறது – ரக்ஷகத்வாதி,பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே; ‘ரஷக ரக்ஷ்ய ஸம்பந்தம்‌, சேஷ சேஷி ஸம்பந்த,ம்‌, பித்ரு புத்ர ஸம்பந்தம்‌, பர்த்ரு பார்யா ஸம்பந்தம்‌, ஜ்ஞாத்ரு ஜ்ஜேய ஸம்பந்தம் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்‌, ஸாரீர ஸரீரி ஸம்பந்தம்‌, ஆதார ஆதேய ஸ்ம்பந்தம்‌, நியந்த்ரு நியாம்ய ஸம்பந்தம் , போக்த்ரு போக்‌ய ஸம்பந்தம்‌’ என்று இவை முதலான ஸம்பந்தங்களை விஷயீகரித்த ஜ்ஞாநங்கள்‌ பலவாகையாலே அவற்றையும்‌, வாத்ஸல்யம்‌, ஸ்வாமித்வம்‌, ஸெளஸீல்யம்‌, ஸெளலப்யம்‌, ஜ்ஞாநம்‌, பக்தி, க்ருபை, ப்ராப்தி, பூர்த்தி என்கிற குண அநுஸந்தாநத்தாலே அந்த வ்யவஸாய புத்‌திகளும்‌ பலவாகையாலே பன்மையாகச்‌ சொல்லுகிறதென்கிறார்

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-துணையாவாரோடு பொடிவாரோடு வாசி அற பொடியத் தொடங்கிற்று-இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-இவளுடைய அவசாதிசயம் தாய்மாரோடு தோழிமாரோடு வாசி அற சொல்லும் படி யாய் விட்டது -என் நினைவே நினைவாய் இருப்பார்க்கும் -நிஷேதிப்பார்க்கும் வாசி யற்றது

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8–உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இறே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் –எம் தோழிமார் -சஜாதீயராய் இறே இருப்பது

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8–நாம் உறுகின்றது தோழீ!
நாம் என்றோ கிட்டுவது -யாம் -பேறு இருவருக்கும் ஒத்து இருக்கிற படி -சோகாஸ் யாஸ்ய கதா பாரம் ராகவோ அதிகமிஷ்யாதி-அன்னையர் நாணவே.–-அவனுக்கு குண ஹானி சொல்லுகிற தாய்மார் லஜ்ஜிக்கும் படி -இவள் தான் அவனைப் பெற்ற தனக்கு வரும் லாபம் ஒழிய -இவனையே நாம் இப்படிச் சொல்லிற்று என்று அவர்கள் லஜ்ஜித்து கவிழ்ந்து நிற்கை உத்தேச்யம் என்று இருக்கிறாள் –

தலை மகள் என்கிறது -பிராப்ய த்வரை ஆகில் தலை மகளுக்கு சொல்லும் பருவம் ஏழும் இங்கு
கொள்ளும் படி என் என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் .-தலைமகளுக்கும்‌ இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள்‌ உண்டென்கிறார்‌

அபிலாஷா சிந்தனா அனுஸ்மிர்த்தி இச்சா ருசி பர பரம பக்திகளிலே பேதை முதலான பருவம் கொள்ளும் -சூரணை -136-(பர பரம பக்தி -பக்தி -பர பக்தி -பரம பக்தி )

அபிலாஷா-அதாவது-அனுபாவ்ய விசேஷ பிரேம தர்சனத்தில் பிறக்கும் ஆசை ஆகிற அபிலாஷையும் .
சிந்தனா-த்ருஷ்டமான அவ் விஷயத்தில் உண்டாம் ஸ்மரணம் ஆகிற சிந்தைனையும் ,
அனு ஸ்ம்ருதி-அந்த ஸ்மரணம் அநவரதம் நடக்கை ஆகிற அனு ஸ்ம்ருதியும்
இச்சா-அவ் விஷயத்தை அவசியம் அனுபவித்தே நிற்க வேணும் என்னும் ஆசை ஆகிற இச்சையும் ,
ருசி-அவ் ஆசை தானே ரசாந்தரத்தால் மாற்ற ஒண்ணாத படி முதிருகையாகிற ருசியும்
பர பக்தி-அவ் விஷயத்தில் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே சுக துக்கங்களாகிற பரபக்தியும் –
பரம பக்தியும்-அவ் விஷயத்தின் விஸ்லேஷத்தில் சத்தை கிடவாது ஒழிகை யாகிற பரம பக்தியும்
ஆகிற ஏழு அவஸ்தையிலும்
பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேர் இளம் பெண்-என்கிற ஏழு பருவமும் தலைமைகளான பிராப்ய த்வரைக்கு கொள்ளும் என்ற படி–இத்தால், பக்தி ரூபையான பிராப்ய த்வரைக்கு பக்தியின் உடைய பிரதம தசை-(அபிலாஷை ) தொடங்கி சரம தச பர்யந்தமான -( பரம பக்தி )அவஸ்தா விசேஷங்களிலே பர்வ சப்தகமும் கொள்ளலாம் என்றது ஆயிற்று —

அபிலாஷையாவது ப்ரதம தர்ஸநத்தில்‌ பிறக்கும்‌ ஆசை. சிந்தனையாவது – த்‌ருஷ்டமான விஷயத்தில்‌ உண்டான ஸ்மரணம்‌. அநு ஸ்ம்ருதியாவது – அந்த ஸ்மரணம்‌ இடை விடாமல்‌ நடக்கை. இச்சையாவது – அவ் விஷயத்தை அவஸ்யம்‌ அநுபவிக்க வேணுமென்கிற ஆசை. ருசியாவது – ரஸாந்தரத்தால்‌ மாற்ற வொண்ணாதபடி அந்த ஆசை முதிருகை. பரபக்தி யாவது – அந்த வஸ்துவினுடைய ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே ஸூக துக்கங்களாகை. பரமபக்தி யாவது – அவ்வஸ்துவினுடைய விஸ்லேஷத்தில்‌ ஸத்தை கிடையாதொழிகை. ஆகையாலே இந்த அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான்‌ பருவம்‌ கொள்ளக் கடவது என்கிறார்‌.

இனி தலை மகளான அவஸ்தையிலே வர்ணிக்கும் அவயவ விசேஷங்கள் எவை என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல்–மேல்‌ அந்தத்‌ தலைமகளுக்குச்‌ சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம்‌ இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக்‌ கடவதென்கிறார்‌ 

மயில் பிறை வில் அம்பு முத்துப் பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வ உரு விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய அக மேனியின் வகுப்பு —சூரணை -137-

மயில் -விகாசம் –பிறை -சுத்தி –வில் -தாந்தி -அம்பு -ஞானம் –முத்து -ஆனந்தம் –பவளம் -அநு ராகம் -செப்பு -பக்தி -மின் -அணுத்துவம் /தேர் -போக்யதை-அன்னம் -கதி/அகமேனி -ஆன்ம ஸ்வரூபம்-என்றவாறு –

மயில் விகாசம்-அதாவது-தோகை மா மயிலார்கள் –6-2-2–என்று ஸ்திரீகளை மயிலாக சொல்கிறது –
அகல பாரா விஸ்த்ருதியை இட்டாகையாலே -அத்தால் இங்கு ஆத்மாவினுடைய ஞான விகாசத்தைச் சொல்லுகிறது —

தோகைமாமயிலார்கள்‌”்‌ (திருவா. 6 – 2 – 2) என்று ஸ்த்ரீகளை மயில்‌ என்பது – அளகடாரத்தினுடைய விஸ்த்ருதியைப் பற்றவாகையாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸத்தைச்‌ சொல்லுகிறது

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2—தோகை மா மயிலார்கள் -இது ஒரு மயிர்முடி இருக்கும் படியே -என்றான் -நீ போலி கண்டு பிரமிக்கும் படி மயிர் முடி யுடையார் ஆர் –அங்கனம் சிலர் உண்டோ ஏன் –நின்னருள் சூடுவார்-உன்னோடே சம்ச்லேஷித்து பிரிவில் இப்படி பிச்சேறும் படி பண்ணினவர்கள் -அவர்களை பிரிந்து நோவு படாதே அவர்களோடே சம்ச்லேஷி என்ன – அவர்களைக் கிட்டும் அளவும் இங்கனே இருக்கிறேன் என்று திகைத்து இருந்தான் -அவர்களோடே கிட்டும் விரகு என்-என்று இருக்கிறாய் யாகில் -அவர்களை கிட்டும் விரகு சொல்லுகிறேன் கேள் என்ன -அது

பிறை -சுத்திபிறை உடை வாணுதல்–பெரிய திருமொழி -2-9-9–என்று நெற்றியை பிறையாகச் சொல்லுகையாலே அதன் தாவள்யத்தை இட்டு –ஸ்வாதந்த்ர்ய அந்ய சேஷத்வங்கள் தோஷ ஸ்பர்சம் அற்று இருக்கும சுத்தியைச் சொல்கிறது —

““பிறை யுடை வாணுதல்‌” (திருமோழி 2 – 9 – 9) என்று ஸ்தரீகளுடைய நெற்றியைப்‌ பிறையாகச்‌ சொல்லுகையாலே, அதினுடைய தாவள்யத்தையிட்டு அந்த ஜ்ஞாநத்தினுடைய ஸூத்‌தி யோகத்தைச்‌ சொல்லுகிறது.

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து முன்னே ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9—ஒளியை உடைத்தான
நுதலை உடைய நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே

வில் -தாந்திவிற்புருவக்கொடி–திருவாய் -6-6-6–என்று புருவத்தை வில்லாக சொல்கிறது -வளைவு இட்டு ஆகையாலே – பாஹ்யாப் அந்தர கரண நியமன ரூப தாந்தியை சொல்லுகிறது

“விற் புருவக் கொடி”‘ (திருவா. 6 – 6 – 6) என்று புருவத்தின்‌ வளைவாலே வில்லாகச்‌ சொல்லுகையாலே, அது கொண்டு ஜ்ஞாநத்தினுடைய தாந்தி ரூபதையைச்‌ சொல்லுகிறது.

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6–வில் போலே இருக்கிற புருவத்தை உடைய என் பெண் -ப்ரஹ்மாஸ்திரத்தை கொண்டு முடிந்து கிடப்பாரைப் போலே ஜய ஹேதுவான பரிகரத்தை கொண்டு கிடீர் தோற்றது -ஊர்த்தவம் மாஸன்ன ஜீவிஷ்யே-என்னும் வடிவைக் காட்டி ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது-

அம்பு -ஞானம்-அம்பன்ன கண்ணாள் – என்று கண்ணை லஷ்ய பாதியான அம்பைச் சொல்லுகையாலே –தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு–முதல் திருவந்தாதி –67-என்று தனக்கடைத்த விஷயத்தை அவலம்பித்த ஞானத்தைச் சொல்கிறது —

”அம்பன்ன கண்ணாள்‌” (திருமொழி 6 – 8 – 6) என்று கண்ணை அம்பாகச்‌ சொல்லுகிறது – லக்ஷ்யபாதியாகையாலே, அத்தாலே விஷய க்‌ராஹியான ஜ்ஞாநத்தைச்‌ சொல்லுகிறது,

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6–பிள்ளை உறங்கா வல்லி தாசர் பிள்ளைக்கு தாய் வழி ஆகாதே கண் -என்று அருளிச் செய்வர் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –
67—ஞானம் ஆகில் ஸ்ரீ யப்பதியை அறியும் அத்தனை
மற்று ஒன்றை அறியாது –தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்னும் படியே-

முத்து -ஆனந்தம்-முத்தன்ன வெண் முறுவல்-என்று முறுவலை முத்தாகச் சொல்லுகையாலே –
முத் ப்ரீதி பிரமதோ ஹர்ஷா –அமரகோசம் -என்கிற படியைக் கொண்டு அவ் விஷய அனுபவத்தால்
உண்டான ஆனந்தத்தைச் சொல்லுகிறது–

முத்தன்ன வெண் முறுவலை முத்தாகச்‌ சொல்லுகிறது – அதினுடைய ஒளியையும்‌, நீர்மையையும்‌ இட்டாகையாலே, ““முத்ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ?” என்று அந்த ஜ்ஞாநத்தினுடைய ஆநந்த ரூபதையைச்‌ சொல்லுகிறது. 

பவளம் -அநு ராகம்-பவள வாயாள்–நாச்சியார் -5-8-என்று அதரத்தை பிரவாளமாக சொல்கிறது சிவப்பை இட்டு ஆகையாலே அவ் விஷயத்தை பற்றி உண்டான அனுராகத்தை சொல்கிறது —

பவள வாயாள்‌”‘ (திருமொழி 4 – 8 – 1) என்று அதரத்தை ப்ரவாளமாகச்‌ சொல்லுகிறது – சிவப்பை யிட்டாகையாலே, பகவத்‌,விஷயத்தில்‌ அந்த ஜ்ஞாநத்தினுடைய அநுராகதையைச்‌ சொல்லுகிறது.

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-அவள் வாய் புலத்தும் படி அவயவ சோபை –இவள் உகப்பு மிகுந்த படி-அவன் இடம் ஆசை முதல் படி -திவ்ய தேச திரு நாமம் சொல்லி அதிலே இழிவது சரம பர்வம் –

செப்பு -பக்தி-செப்பன்ன மென் முலை-திருப்பாவை -20- -என்று பரிணதமான முலையை செப்பாகச் சொல்லுகையாலே – சேஷி விரும்பி மேல் விழும் படி பரிணதையான பக்தியை சொல்கிறது —

செப்பன்ன மென்முலை”” (திருப்பாவை 20) என்று முலைகளைச்‌ செப்பாகச்‌ சொல்லுகையாலே, ஸேஷிக்கு போக்‌யமாம்படி அந்த ஜ்ஞாநம்‌ பக்தி ரூபாபந்நமானமையைச்‌ சொல்லுகிறது.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்–20-செப்புப் போலே சந்நிவேசம்-நிதி இட்டு வைக்கும் செப்புப் போலே அவன் கிடைக்குமிடம் – மலராள் தனத்துள்ளான் -என்னக் கடவது இறே-செப்புக்கு உள்ளே பொதிந்து வைத்த ஆபரணம் நினைத்த போதே பூணக் கிடையாதாப் போலே செப்பு போலே இருக்கிற ஸந்நிவேசத்தை யுடைத்தான அவள் முலையிலே அழுந்திக் கிடக்கிறவனை நமக்கு கிடைக்கப் புகா நின்றதோ

மின் -அணுத்துவம்-மின்னனைய நுண் மருங்குல்–பெரியாதிருமொழி -3-9-5-என்று இடையை மின்னாக சொல்கிறது –-நுண்மையை இட்டு ஆகையாலே -கீழ் சொன்ன ஞான அவஸ்த விசேஷங்களுக்கு
எல்லாம் ஆதாரமான ஆத்ம ஸ்வரூபத்தின் அணுத்வம் சொல்கிறது —

“மின்னனைய நுண் மருங்குல்‌”’ (திருமொழி 3 – 9 – 5) என்று இடையின்‌ நுண்மையையிட்டு மின்னாகச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய அணுத்வம்‌ சொல்லுகிறது. 

தேர் -போக்யதை-தேரணங்கு அல்குல்-பெரிய திருமொழி 1-4-6– என்று நிதம்ப வைலஷண்யம் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் ஆகையாலே –தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து –திருவாய் -4-3-10–என்கிறபடியே சேஷிக்கு மிகவும் ரசாவஹமாம் படி இருக்கிற ஆத்ம வஸ்துவின் போக்யதை சொல்கிறது —

“தேரணங்கல்குல்” என்று நிதம்பத்தினுடைய விஸ்த்ருதியைச்‌ சொல்லுகையாலே ஆத்மாவினுடைய போக்‌யதையைச்‌ சொல்லுகிறது.

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-6-தேரானது பொருந்தி ஒப்பாய் நின்றுள்ள அல்குலை உடையளாய்-நிதம்ப பிரதேசத்தை உடையளாய்

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10–சர்வ ரஸ-என்கிற ரஸ்யத்தையாலும் தன பிரணயித்வ குணத்தை அபகரித்த உபகார ஸ்ம்ருதியாலும் இழிந்தேன்-திருப்பாவாடை ரசித்தது என்னா தன் வயிறு அறியாதே பரிச்சேதிக்க இழிவார் உண்டோ -என்னில் கலியர் மேல் விழும் போது விவேகித்தோ இழிவது

அன்னம் -கதி-அன்னம் அன்ன நடையாள்–பெரிய திருமொழி -3-7-9-என்று அன்னத்தை ஒப்பிடுகிறது நடை அழகுக்கு ஆகையாலே – சேஷரும் ததீயரும் ஸ்லாகிக்கும் படி ஸ்வரூப அனுரூபமாக நடக்கை ஆகிற கதியை சொல்கிறது —

“பெடையன்ன மென நடந்து” (திருமொழி 3 – 7 – 5), “தூவிசேரன்னமன்ன நடையாள்‌”’ (திருமொழி 3 – 7 – 9) என்று நடையை யிட்டு அன்னமாகச்‌ சொல்லுகையாலே, ஆத்மாவினுடைய ஸேஷத்வாநுரூபாநுஷ்டாநத்தைச்‌ சொல்லுகிறது.

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-வேயன தோள் விசிறிப் – மூங்கில் போன்று இருந்துள்ள தோள் வீசி (இடைப்பெண்கள் கையை வீசியே நடப்பார்கள் அன்றோ )பெடை யன்ன மென நடந்து – வெறும் அன்னம் எனில் ஆண் நாறும் என்று -பெடை யன்னம் -என்றாள் (ஆண் நாறும் -பும்ஸ்த்வ கந்தம் வீசும்)

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்
நடையாலே பிச்சேற்ற வல்லள்-நெடுமாலொடும் போய் – நடைக்கு பிச்சேறி வ்யாமோஹிக்குமவள்

ஆக இப்படி மயில் பிறை இத்யாதி வர்ண னார்ஹ அவயவ விசேஷ யுக்தமாய் –-என் தெய்வ உருவின் சிறு மான் –திருவாய் -4-4-2- -என்று அப்ராக்ருதமாகச் சொன்ன ரூபமானது – ஞான விகாஸ சுத்யாதிகளுக்கு ஆஸ்ரயமாய் –-அகமேனி-என்று ஆந்தரமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தின் வகுப்பு என்ற படி — வகுப்பு ஆவது–தர்மி தர்ம வைசிஷ்டியாலே -ஏவம் பூத ரூபக அர்ஹமாம் படி இருக்கிற கட்டளை —

ஆக இத்தால்‌, “என்‌ தெய்வ வுருவில்‌ சிறுமான்‌”’ (திருவா. 4 – 4 – 2) என்று அப்ராக்ருத ஸ்வபாவமாய்‌, *“’அகமேனியொழியாமே” (திருவா. 9 – 7 – 10) என்று ஸர்வேஸ்வரனுக்கு அந்தரங்க, ஸரீரமான ஆத்மாவுக்கு அவயவ பூதமான ஜ்ஞாநத்தினுடைய பிதைகள்‌ என்கிறார் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.
–4-4-2–என்-தெய்வ உருவிற்-சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி–சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் – அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இறே இருப்பது-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே
திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10—என்-அகமேனி ஒழியாமே–புறம்பு கழலுமவை கழன்றது -அகவாயில் ஸ்வரூபம் கழலுவதற்கு முன்பே -நான் முடிவதற்கு முன்னே -என்கை –

கீழ் பிராப்ய த்வரையை அன்றோ தலை மகளாகச் சொல்லிற்று –அவயவ வர்ணனையில் ஆத்ம
ஸ்வரூப பரமாகச் சொல்லுவான் என் என்னில்—மூன்று அவஸ்தையும் இவர் தமக்கே ஆகையாலே –
தத் தத வவஸ்தைகளோடேச் சேர்ந்த வேஷத்தால் சகலமும் இவர் தாமேயாக நின்று பேசுகையாலே –
பிராப்ய த்வரையை அடைந்து நிற்கிற இவர் ஸ்வரூபத்துக்கே தலை மகளான நிலை ஆகையாலே -அப்படி சொல்லக் குறை இல்லை-

ஆக தோழி தாய் என்னும் அவஸ்தைகளில் சொல்லும் பஹு வசனத்துக்கு விஷயங்களையும் –
தலை மகளான அவஸ்தையில் சொல்லும் பருவங்களையும் – அவயவ வர்ணனைகளையும்
தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ் ..-இவ் அவஸ்த த்ரயத்தின் உடைய வ்ருத்தி விசேஷங்களை எல்லாரும்
அறியும் படி பிரகாசிப்பிகிறார்
மேல் -இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது—

சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி இணக்கி எங்கனே என்னும் மேல் எழுத்து முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க்காட்டு நீர் என்னே என்னும் உடன்பாடு இடை இல்லை என்னும் உதறுதல்
இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம் அவஸ்தா த்ரய வ்ருத்தி–சூரணை -138-

சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி-அதாவது- தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் -பெரியாழ்வார் -3-7-4–என்று தோழிமார் அன்றோ இவளைக் கொடு போய் அவ் விஷயத்தில் அகப்படுத்தி – இப்படி ஆக்கினார்கள் என்று தாயானவள் தோழிமார் மேல் பழி இடுவது —துலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் –திருவாய் -6-5-2-என்று அவ்வூரிலே கொண்டு புக்கு – விஷயத்தைக் காட்டி நீங்களே அன்றோ இப்படி கை கழியப் பண்ணினீர்கள் என்று தோழியானவள் தாயார் மேல் பழி இடுவதும் –

“தோழிமார் பலர்‌ கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌”” (பெரியா. திரு. 3 – 7 – 4) என்று தாயார்‌ தோழிமார் மேலே பழியிட, * அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றியகற்றினீர்‌”” (திருவா. 6 – 5- 2) என்று தோழி தாய்மார் மேல்‌ பழியிட,

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை  உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே – 3-7- 4—அணியார் ஆழி (8-3-)-என்கிற படியே
சர்வ ஆபரணங்களும் தானேயாக போரும்படியான -திரு ஆழியை உடையவன் என்று -பிரசித்தமாய் –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாதபடியாய் இருப்பதாய் – அகப்பட்டாரை உள் வாங்கிக் கொள்ளும் கீழாறு போலே இருக்கிற விஷயத்திலே –உள்ளூற தள்ளி அகப்படும்படி பண்ணி செய்த க்ருத்ரிம வியாபாரத்தை யார்க்கு சொல்வேன்

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்

திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2–ஓத்துச் சொல்வார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவாராய் -எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வனியைக் கொண்டு திரு நாளிலே ஆரவாரம் பரமபதத்தில் கொண்டு புக்கி கோளாகிலும் மீட்கலாயிற்று-கொண்டு புக்கு-இவள் அறியாதே இருக்க நீங்களே கொண்டு புக்கு –-அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்-இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று -மென் மொழி -அம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்-மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று

இணக்கி எங்கனே என்னும் மேல் எழுத்து-அதாவது-இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போந்துமின் என்னப் போந்தோமை –திருவாய் -6-2-8– என்று உன்னை வெறுக்கிறது என்?-இணைக்கு பார்வையாய் நின்று உன் பக்கலிலே அகப்படுத்தின தோழி மாராலே வந்தது அன்றோ இது எனபது —எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் -5-5-1-என்று எனக்கு அவ் விஷயத்தைக் காட்டி -இப் ப்ராவண்யத்தை விளைத்த தாய்மாரான நீங்கள் என்னை பொடிகிறபடி எங்கனே தான் என்பதாய்- கீழ் சொன்ன பழி இரண்டுக்கும் தலைமகள் மேல் எடுத்து இடுகையும் –

““இணக்கி எம்மை யெம்‌ தோழிமார்‌ விளையாடப்‌ போதுமின்‌ என்னப்போந்தோமை”‘ (திருவா. 6 – 2 – 8) என்றும்‌, ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காளென்னை மூனிவது நீர்‌?” (திருவா. 5 – 5 – 1) என்றும்‌ தலைமகள்‌, “உங்களாலே யன்றோ எனக்கு இந்த ப்ராவண்யம்‌ உண்டாய்த்து‘ என்று பழி இரண்டுக்கும்‌ மேலெழுத்திட.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8—உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாதே எங்களை உன்னோடே சேர்த்து –இவ்வளவாக விளைத்தவர்களை சொல்லாதே உன்னைத் சொல்லுகிறது என்-பகவத் விஷயத்தில் வைஸத்யம் பிறந்தால் உபகாரகரை கொண்டாடும் என்னும் அர்த்தம் இ றே உள்ளோடுகிறது-நித்யம் யதீய சரனவ் சரணம் மதியம் -எம் தோழிமார் -சஜாதீயராய் இறே இருப்பது-விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை--கிருஷ்ணன் உண்டு என்று அறிந்தோம் ஆகில் வாரோம் –இவ்வகப்பாட்டை அறிந்து இருந்தோம் ஆகில் வாராது ஒழியல் யாயிற்று

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1–இஸ் ஸுந்தர்யத்திலே மூட்டின நீங்களே மீட்கப் பார்க்கிற படி எங்கனேயோ –நீங்கள் கற்பித்தது பலிக்கப் பூக்கவாறே பொடியும் இத்தனையோ –நீர் -என் பிரகிருதி அறியும் நீங்கள் –என்னை முனிவது-என்னுடைய பிராவண்யத்துக்கு அடியான நம்பியுடைய வடிவு அழகை அன்றோ இன்னாதாவது -உங்களையும் மறந்து -என் ப்ரக்ருதியையும் மறந்தால் விஷயத்தையும் மறக்க வேணுமோ-முனிவது–எங்ஙனேயோ-கொண்டாட வேண்டும் தசையில் போடுவது எங்கனேயோ

முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க்காட்டு-(இருபடை மெய்க்காட்டு- இரண்டு பக்கங்களிலும் சேர்ந்து பேசுதல் -ஒரு சமயம் தாய் பக்கல் சேர்ந்து கொண்டு தலைவியை முனைவது -ஒரு சமயம் தலைவி பக்கல் சேர்ந்து கொண்டு தாயை வெறுப்பது )-முன்னின்றாய் என்று தோழி மார்களும் அன்னையரும் முனிதீர்––திருவாய் -5-5-9-என்னும் படி-இதுக்கு முன்பு ஒருவர் கண் படாமல் வளர்ந்து போன நீ இப்பொழுது எல்லோரும் காண புறப்பட்டு முன்னே நின்றாய் என்று தோழிமார் தாய் மாரோடு கூடி நின்று தலை மகளைப் பொடிவது-இவளை நீர் அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ –திருவாய் -6-5-1- என்று தாய்மாருக்கு கார்ய உபதேசம் பண்ணுவாரைப் போலே தோழி தலை மகளுக்குத் துணை செய்வதாகக் கொண்டு இரண்டு தலைக்கும் ஓர் ஒரு போது சஹகரிக்கை யாகிற இரு படை மெய்க்காட்டும் –

முன்னின்றாயென்று தோழிமார்களும்‌ அன்னையரும்‌ முனிதிர்‌”” (திருவா. 5 – 5 – 9) என்று தோழி தாய்மாரொடே கூடி நின்று தலைமகளைப் பொடிந்தும்‌, **தொலை வில்லி மங்கலம்‌ தொழுமிவளை நீரினி அன்னைமீர்‌ உமக்காசையில்லை விடுமினோ”? (திருவா. 6 – 5 – 1) என்று தோழி, தாய்மார்க்கு கார்யோபதேஸம்‌ பண்ணுவாரைப் போலே தலைமகளுக்கும்‌ ஸஹகரித்தும்‌ இப்படி(இருபடை மெய்க்காட்டு.)

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-ஒருவராலும் காண ஒண்ணாதபடி வர்த்திக்கும் ஸ்த்ரீத்வத்தை யுடையவள் யாயிற்று இவள் –யா நசக்யா புராத்ரஷ்டும் பூதைராகாசனகாபி -என்னும்படி இருக்குமவள் இறே –துணையாவாரோடு பொடிவாரோடு வாசி அற பொடியத் தொடங்கிற்று

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;

தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது காண் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இ றே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை –தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று
நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்-இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு-அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ
உமக்காசை இல்லை விடுமினோ;-வகுத்தவன் கைக்கு கொண்டால் உமக்கு ஆசை இல்லை

நீர் என்னே என்னும் உடன்பாடு-அதாவது-அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்–திருவாய் -5-4-5–என்று தாய் மாறும் தோழியரும் இத் தசையில் என்னை ஆஸ்வசிப்பியாதே இரவு முழுக்க உறங்கா நின்றார்கள் என்று தாய்மாரோடும் தோழி மார்களோடும் தலை மகளுக்கு உண்டான உடன்பாடும் ( உறவு கொண்டாடுதல் ) –

(நீரென்னேயென்னு முடன்பாடு) ““அன்னையரும்‌ தோழியரும்‌ நீரென்னே யென்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌”‘ (திருவா. 5 – 4 – 8) என்று தலைமகள்‌ தாய்மாரொடும்‌ தோழிமாரோகும்‌ உடன்பாடாக வார்த்தை சொல்ல;

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்

கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5—இவளுடைய அவசாதிசயம் தாய்மாரோடு தோழிமாரோடு வாசி அற சொல்லும் படி யாய் விட்டது -என் நினைவே நினைவாய் இருப்பார்க்கும் -நிஷேதிப்பார்க்கும் வாசி யற்றது-அன்னையரும் தோழியருமான நீங்கள் -என்னே என்னாதே -என் பட்டாய் என்னாதே என்னுதல்-அன்றியே நீர் -இது ஒரு நீர்மையே –அவனுக்கு தன்னை ஒழியச் செல்வதாய் இருக்க -அவனை ஒழிய தனக்குச் செல்லாத படியாய் இருக்கிற இது ஒரு ஸ்வ பாவமே என்னே -இது ஒரு ஆச்சர்யம் ஆதல் –

இடை இல்லை என்னும் உதறுதல்-அதாவது அன்னைமீர்காள் என்னுடை தோழி மீர்காள் என் செய்கேன்– -8-2-7- என்ற அளவில் அவர்கள் எங்களைக் கேட்கில் மீள அமையும் என்ன –-உங்களோடு எங்கள் இடை இல்லை-8-2-7–என்று இவ் விஷயத்தில் நின்றும் மீட்க நினைக்கிற உங்களோடு எனக்கு சம்பந்தம் இல்லை என்று இரு தலையும் உதறுகையும்-

(இடை யில்லை யென்னு முதறுதல்‌) அவர்கள்‌, “நீ எங்கள் வார்த்தை கேட்கில்‌ மீளவமையும்‌’ என்ன, ”உங்களோடு எங்களிடையில்லையே”’ (திருவா. 8 – 2 – 7) என்று ‘நீங்கள்‌ இவ் விஷயத்தினின்றும்‌ மீட்கத் தேடில்‌ உங்களுக்கும்‌ எனக்கும்‌ ஒரு ஸம்ப,ந்தமில்லை” என்று அவர்களை அதிக்ரமிக்க,

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-உங்களோடு எனக்கு ஒரு சம்பந்தம் இல்லை -நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டா -என்கிறாள் –

இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்-அதாவது-இருந்து இருந்து அரவிந்த லோசனன் என்றே நைந்து இரங்கும்-6-5-8- -என்று ஒருகால் அரவிந்த லோசனன் என்னும் போது பல ஹாநியாலே நடுவே பலகால் இளைத்து இருந்து இருந்து – அவன் கண் அழகுக்கு வாசகமான அத் திரு நாமத்தைப் பல காலும் சொல்லி சிதிலையாய் அழியா நின்றாள் என்று இவள் பிராவண்யத்தைக் கண்டு தோழிமார் கொண்டாடுவது —திரு கோளூர்க்கே நேர் இழை நடந்தாள்-6-7-9–என்று அவன் வர்த்திக்கிற தேசத்தை குறித்துப் போனாள் என்று அமைந்து இருக்க பகவத் ப்ராவண்ய அதிசயத்தைப் பற்ற பஹுமானம் பண்ணி- நடந்தாள்- என்று தாயார் கொண்டாடுகிற இதுவும் –

(இருந்திருந்து நடந்தாள்‌ என்னும்‌ கொண்டாட்டம்‌) ‘“இருந்திருந் தரவிந்தலோசன என்றென்றே தைந்திரங்குமே” (திருவா. 6 – 5 – 8) என்று தோழி கொண்டாட்டமும்‌, “நேரிழை நடந்தாள்‌ எம்மை ஒன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று தாயார்‌ கொண்டாட்டமுமான

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8--ஒரு கால் அரவிந்த லோசனன் என்னும் போது நெடும் போது கூடிப் பெரு வருத்தத்தோடே சொல்ல வேண்டி இருக்கை –என்றென்றே – இருக்க மாட்டாதே நிரந்தரமாக சொல்லா நின்றாள் -அவ் வழி யாலே அழகையும் குணங்களையும் நினைத்து நையா நின்றாள் -இரங்குமே-சரீரத்து அளவு அன்றிக்கே நெஞ்சம் சிதிலமாகா நின்றது –

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9—திருக் கோளூரிலே போகையாலே போனாள் என்னாதே-நடந்தாள் என்கிறாள் -வயிற்றில் பிறந்தாரே யாகிலும் பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றால் கௌரவித்து வார்த்தை சொல்ல வேணும் என்கை -வழித் துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் –குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

இவை அனைத்தும்)தோழி தாயார் மகள் என்ற அவஸ்தய த்ரயத்தின் வியாபாரம் என்கை –

இவை அவஸ்தா த்ரய வ்ருத்தி.

இதில் பழி மேல் எழுத்து -என்கிற இரண்டாலும் – அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வானுபத்தி ( கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் சித்தியாது )– என்கிறபடி- சேஷ வ்ருத்த அந்வயம் இல்லாத போது -சேஷத்வ சித்தி இல்லாமையாலே சேஷ வ்ருத்தியிலே நோக்காய் இருக்கும்–சம்பந்த ஞானம் பிராப்ய ருசிக்கு ஹேதுவாகையாலும் விலஷண குண விக்ரக விசிஷ்டனாய் உபேயமாய் இருக்கிற வஸ்து தன்னையே தத் பிராப்ய உபாயமாக பரிகிரஹிக்கையாலே – உபாயத்வ அத்யவசாயம் உபேய வைலஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கையாலே உபேய ருசிக்கு ஹேதுவாய் இருக்கையாலும் – இவற்றில் ஓர் ஒன்றை பார்த்தால் இதுவே பிராப்யா த்வரை ஹேது என்னும் படி இருக்கையும் – பிராப்ய த்வரை வேஷம் தன்னை நிரூபித்தாலும் அவை இரண்டும் அடியாக இது வந்தது என்று தோற்றும் படி இருக்கையும் சொல்லுகிறது — இப்படி சம்பந்த ஞானமும் உபாயத்வ அத்யாவசமும் பிராப்ய தசைக்கு காரணமாக இருக்கிற இது பிரதம தசை ..

இத்தால்‌ இந்த வ்ருத்திகளினுடைய அவஸ்தா த்ரயத்துக்கும்‌ ஸ்வாபதேஸம்‌ – “சூழ்ச்சி அகற்றினீர்‌’ என்று அந்யோந்யம்‌ பழியிடுகிற வித்தால்‌ சேஷத்வ ஜ்ஞாநம்‌ ஸேஷ வ்ருத்தி பர்பந்தமா யல்லதிராமையாலே அந்த ஸம்பந்த ஜ்ஞாநம்‌ ப்ராப்ய ருசிக்கு ஹேது என்றும்‌, உபாயாத்‌யவஸாயம்‌ உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லதிராமையாலே அந்த அத்‌யவஸாயம்‌ உபேய ருசிக்கு ஹேது வென்றும்‌, மேலெழுத்து என்று ப்ராப்ய த்வரை தன்னை நிரூபித்தாலும்‌ இது ஸம்பந்த உபாயங்களிரண்டாலும்‌ வந்ததென்று சொல்லுகிற வித்தாலும்‌, ஸம்பந்த ஜ்ஞாநமும்‌ உபாயாத்‌யவஸாயமும்‌ ப்ராப்ய த்வரைக்கு ஹேது வென்று அந்த ஸம்பந்த உபாயங்களிரண்டினுடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றி நிற்கிறது.

இருபடை மெய்காட்டு உடன்பாடு -என்கிற இரண்டாலும்-சம்பந்த ஞானம் ஆனது சேஷத்வம் ஸ்வரூபம் ஆன பின்பு -சேஷி தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்கை ஒழிய –-தான் பதருகை ஸ்வ பிரயோஜனத்தில் முதலிடுகையாலே ஸ்வரூப விருத்தம் என்னும் ஆகாரத்தாலே –-ஸ்வ பிரவ்ருத்தி நிவர்தகமான உபாயத்வ அத்யாவசத்துக்கு சஹகரித்தும் ,-இவ் அதி பிராவண்யம் உபாயத்தில் முதலிடில் செய்வது என் என்று இத் த்வரையை நிவர்த்திக்கப் பார்க்கிற உபாயத்வ அத்யாவசத்தை –
பிராப்த விஷயத்தில் பிராவண்யம் ஸ்வரூப அதிரேகி இல்லாமையாலே -இது நிவர்த்த நீயமும் அன்று —நிவர்திப்பிக்கத் தானும் போகாது என்று நிவர்தனோத் உத்யோகத்தைக் குலைத்து பிராப்ய த்வரைக்கு சஹகரித்தும் இப்படி இரண்டுக்கும் அனுகூலிக்க தக்கதாய் இருக்கும் படியும் – சேஷிக்கு அதிசயகரமான கைங்கர்யத்தில் அன்வயிப்பது எப்போது என்னும் அத்தாலும் – சித்தோ உபாயத்தை பற்றினார்க்கு விளம்ப ஹேது இல்லாமையாலே சீக்கிரமாக பிராப்யத்தை பெற வேணும் என்னும் அத்தாலும் செல்லுகிற பிராப்ய த்வரைக்கு -சம்பந்த ஞானமும் -உபாயத்வ அத்யாவச்யமும் -அனுகூலமாய் இருக்கும் படியையும் சொல்லுகிறது —இப்படி சம்பந்த ஞானம் உபய சக காரி ஆவது- பிராப்ய த்வரைக்கு நிராவ்தகங்களான சம்பந்த ஞான உபாயத்வ அத்யாவசயங்கள் முக பேதேண தத்தத் அனுகூலங்கள் ஆகிறது மத்யம தசை —

ப்ரதம தஸையில்‌ – வ்ருத்தி இருபடை மெய்க்காட்டென்கிற வித்தால்‌ ஸம்பந்த ஜ்ஞாநமானது ஸேஷத்வம்‌ ஸ்வரூபமான பின்பு அந்த ஸேஷி தானே வந்து விஷயிகரிக்கக்‌ கண்டிருக்கு மத்தனை யல்லது தான்‌ த்வரிக்கை ஸ்வரூப விருத்‌தம்‌ என்று உபாயாத்‌யவஸாயத்துக்கு ஸஹ்கரித்தும்‌, ஸேஷத்வம்‌ வ்ருத்தி பர்யந்தமாகையல்லது ஸித்‌தியாதென்று அந்த வ்ருத்தியில்‌ ருசியை விளைக்கையாலே ப்ராப்ய த்வரைக்கு ஸஹகரித்தும்‌, உடன்பாடென்கிற வித்தால்‌ ப்ராப்யம்‌ ஸம்பந்தாநுகுணமாகவும்‌ வேண்டுகையாலே ப்ராப்ய த்வரை இவை யிரண்டும்‌ கூடி நின்ற படி சொல்லிற்று.

உதறுதல், கொண்டாட்டம் ,என்கிற இரண்டாலும் இப்படி அனுகூலமாய்த் தோற்றி இருக்கிற சம்பந்த ஞானமும் உபாயத்வ அத்யவசாயமும் க்ரம பிராப்தியே அமையும் என்று பிராப்ய த்வரைக்கு நிவர்தகமாம் அளவில் – த்வரை இரண்டையும் அதிகிரமித்து போம் படியும் அப்படி த்வரை அதிகிரமித்த காலத்தில் , சம்பந்த ஞானமும் உபாயத்வ அத்யவசாயமும் அவத்யமாய் தோற்றுகை அன்றிக்கே
ஸ்லாக்யமாம் இருக்கும் படியைச் சொல்லுகிறது — இப்படி பிராப்ய த்வரை சம்பந்த ஞானம் உபாயத்வ அத்யவசாயமும் அதிகிரமிக்கையும் -அது தான் ஸ்லாக்கியம் ஆகையுமாகிற இது சரம தசை

ஆக இருபடை மெய்க்காட்டு உடன்பாடென்கிற இரண்டாலும்‌ ஸம்பந்த ஜ்ஞாநம்‌ உபாய வ்யவஸாயம்‌ உபேய ருசி என்கிற இவற்றில்‌ சேர்ந்து நின்றது மத்‌யம தஸையில்‌ வ்ருத்தி-உதறுதல்‌ கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ ப்ராப்ய த்வரையானது ஸம்பந்த உபாயங்களை அதிக்ரமிக்க, பலதஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ‘“எம்மை யொன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று உபாயாத்‌யவஸாய ஸத்‌பாவம்‌ இல்லை யென்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது, சரம தஸையில்‌ வ்ருத்தி;

ஆக சம்பந்த ஞானம் உபாயத்வ அத்யவஸாயம் பிராப்ய த்வரை ஆகிற அவஸ்த த்ரயத்தின் உடைய வ்ருத்தி விசேஷங்களை சர்வரும் அறிந்து அனுசந்திக்கும் படி ஸங்க்ரஹேன அருளி தர்சிப்பத்தார் ஆய்த்து–

ஆக அவஸ்த_த்ரய வ்ருத்தி –

இவ் அவஸ்தா த்ரயத்தில் தாய் என்றும் மகள் என்றும் சொல்லுகிற அவஸ்தைகளில் ஸ்வ ஸ்வ சத்ருக்களும் பந்துக்களுமாக சொல்லுகிறது யாரை என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் —

தாயார் ஏதலர் உற்றீர்கள் என்னும் சாத்திய சித்த சாதன நிஷ்டரை மகள் நம்முடைய ஏதலர் யாமுடைத் துணை என்னும் சித்த சாதன சாத்திய பரரை-சூரணை-139-

(தாயார் ஏதலர் என்னும் சாத்திய சாதன நிஷ்டரை-செய்யும் சாதனங்களில் – கர்ம ஞான பக்தி பிரபத்திகளில் – ஊன்றி இருப்பவர்களை – -என்றும் -தாயார் உற்றீர்கள் என்னும் சித்த சாதன நிஷ்டரை—அவனையே சித்த சாதனமாகக் கொண்டு உபயாந்தரங்கள் சம்பந்தம் இல்லாவர்கள் -என்றும் -மகள் நம்முடை ஏதலர் என்னும் சித்த சாதன பரரை-என்றும் மகள் யாமுடைத் துணை என்னும் ஸாத்ய பரரை என்றும் )

தாயார் ஏதலர் என்னும் சாத்திய சாதன நிஷ்டரை-அதாவது –தாயாரான உபாய அத்யவஸாய தசையில்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2-7-5-என்று சத்ருக்களாகவும் –
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுவேன் நான்–திருவாய் -5-6-7- -என்று பந்துக்களாகவும் சொல்லும்
ஸித்த ஸாதன நிஷ்ட பிரதிகூலரான சாத்ய சாதன நிஷ்டையரையும் , அனுகூலரான ஸித்த சாதன நிஷ்டரையும் –

தாயாரான உபாயாத்‌யவஸாய தஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ”எம்மை யொன்றும்‌ நினைத்திலளே ” (திருவா. 6-9- 7) என்று உடாயாத்‌யவஸாய ஸத்‌ பாவமில்லை என்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, ஸித்‌த ஸாதநத்துக்கு எதிர்த் தட்டான உபாயாந்தர நிஷ்டரையும்‌, அநுகூலரான ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌ சொல்லுகிறது-

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5—பிள்ளைத் தனமும்-தெள்ளியமும்–அப்ரயோஜகம் –வடிவு போருமாயிற்று -கை விட ஒண்ணாமைக்கு-ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்-ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –-இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்? உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-ஆனாலும் பந்துக்களான எங்களுக்கு சொல்ல வேண்டாவோ என்னில்-பந்துக்களாக அமையுமோ -விஷயம் சொல்லாக வேண்டாவோ -உறவு முறையான உங்களுக்கு என்ன பாசுரத்தை சொல்லிச் சொல்லுவேன்-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-திருக் கோளூரிலே போகையாலே போனாள் என்னாதே-நடந்தாள் என்கிறாள் -வயிற்றில் பிறந்தாரே யாகிலும் பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றால்கௌரவித்து வார்த்தை சொல்ல வேணும் என்கை -வழித்துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் -குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

மகள் நம்முடைய ஏதலர் என்னும் சித்த சாதன பரரை--அதாவது மகளான பிராப்ய த்வரா தசையில் –
நம்முடைய ஏதலர் முன்பு நாணி –திருவாய் -8-2-1–என்று- அந்தரங்க சத்ருக்களாயும் –யாமுடைத்துணை என்னும் தோழி மார் -திருவாய் -9-9-5–என்று ஸ்வ சமான சுக துக்கரான பந்துக்களாகவும் சொல்லும்
பகவத் ஏக பரராய் இருக்க செய்தேயும் -தத் உபாய பாவத்தில் ஊன்றி நின்று – இத் த்வரை பாரதந்த்ர்யதுக்கு சேராது என்று நிஷேதிக்கும் -ஸித்த சாதன பரரையும் — தன்னைப் போல் உபேய பாவத்தில் ஊன்றி உடன்பாடராய் இருக்கும் சாத்திய பரரையும் என்கை —

(மகள்‌ நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌) மகள்‌ என்று சொல்லுகிற ப்ராப்ய த்வரா தஸையில்‌ “நம்முடை ஏதலர்‌ முன்பு நாணி?” (திருவா. 8 – 2 – 1) என்று அந்த விரோதிகளாகவும்‌,யாமுடைத் துணையென்னும்‌ தோழிமாரும்‌”’ (திருவா. 9 – 9 – 5) என்று தன்னோடு ஸம ஸுக துக்கிகளான பந்துக்களாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, தன்னைப் போலே பகவத்‌ விஷயமொன்றிலும்‌ இழிந்திருக்கச் செய்தேயும்‌ அத்தை ப்ராப்யம்‌ என்று கொள்ளாதே ப்ராபகம்‌ என்று கொள்ளுகிற ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌, தன்னைப்‌ போலே ப்ராப்யமென்றிருக்கிற ஸாத்‌ய பரரையும்‌ சொல்லுகிறது –

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1–தோழிமார் ஹிதம் சொல்லி இப்போது மீட்கப் பார்க்கிறார்கள் ஆகிலும் பேறும் இழவும் விழுக்காட்டில் ஒத்து இருக்கையாலே -நம்முடைய ஏதலர் -என்கிறாள் -ஏதலர் -சத்ருக்கள் -இவர்களுக்கு சத்ருக்கள் இல்லை இறே -ஹிதம் சொல்லி மீட்கப் புகுகிற தாய்மார் யாயிற்று சத்ருக்கள் -ஏதலர் முன்பு நாணி -சத்ருக்கள் முன்பு லஜ்ஜித்து-நுங்கட்கு-தோழிமாரான உங்களுக்கு நான் ஒரு வார்த்தை சொல்ல வேணும் என்று ஆராய்ந்து பாரா நின்றேன் –எங்கும் காண மாட்டேன்-இதுக்கு ஒரு பாசுரம் இட்டு சொல்ல வேணும் என்று பார்த்த இடத்து ஒருபடியாலும் க்ஷமை ஆகிறி லேன்

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5—நமக்குத் பரதந்த்ரை களாய் உசாத் துணை என்னும்படியான தோழிமாரும் அவன் விஷயமாக ஈடுபடுகிற எனக்கு முன்னே -இவளுக்கு அவன் உதவப் பெறுகிறது இல்லை -என்று அவன் பொருட்டு ஈடுபடா நிற்பார்கள்

கீழில் வாக்யத்தில்-சூழ்ச்சி -என்றும் இதில்-ஏதலர்-என்றும் மற்றை ஆழ்வார்கள் சந்தைகளையும் கூட்டி எடுத்தது ஆழ்வார்கள் எல்லாரும் ஏக கண்டர் ஆகையாலே அருளிச் செயல்களுக்கு எல்லாம் இந்த ஸ்வாபதேசம் ஒக்கும் என்று தோற்றுகைக்காக–

இந்த பிரசங்கத்தில் அருளிச் செயலில் , வரும் பல அந்யாபதேசங்களுக்கும் ஸ்வாபதேசங்களை அருளிச் செய்கிறார் மேல்-பல வாக்யங்களாலே —

நாலயலார் அயல் சேரியார் உபாய சதுஷ்ட அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

(நாலயலார்-உபாய சதுஷ்ட-பரர்-அயல் சேரியார்-அந்தர்யாமித்வ பரர்-)-நாலயலார் உபாய சதுஷ்ட பரர்-
அதாவது நாலயலாரும் அறிந்து ஒழிந்தார்—நாச்சியார் -12-2-என்கிற நாலயலாரும் ,-அயல் சேரியார்-அந்தர்யாமித்வ பரர்-அதாவது-நானக் கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்கள் அயல் சேரியீர் காள் –திருவாய் -7-3-2-என்கிற அயல் சேரியாரும் -ஆகிறார் கர்ம ஞான பக்தி பிரபத்தி களாகிற உபாய சதுஷ்டத்திலும் ஊன்றி இருக்கும் அவர்களும் – அர்ச்சாவதாரிகளில் அபேஷை அற்று தேவதாந்தர்யாமித்வதிலே ஊன்றி இருக்கும் அவர்களும் என்கை —

”நாலயலாருமறிந்தொழிந்தார்‌] (நா.தி.12 – 2) என்றும்‌, “*அயற்சேரியுள்ளாருமெல்லே” (திருவா. 6 – 7 – 4) என்றும்‌ நாலசலாகவும்‌, அயல் தெருவாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்தி என்கிற நான்கு உபாய நிஷ்டரையும்‌, பரத்வம்‌ முதலான மற்றை நாலிடத்திலும்‌ உறவற்று கேவலம்‌ ஸ்வரூபாந்தர்யாமியளவிலே உறைத்திருக்குமவர்களையும்‌ சொல்லுகிறது –

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது – இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே-இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து – இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து- மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-இவள் தான் திருக் கோட்டியூர் நம்பியை போலே -பகவத் விஷயம் ஒருவரால் அறியலாகாது என்று மறைத்துக் கொடு போருமவள் ஒருத்தி போலே காணும்-

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4–சிலுகு வாரிகளான நம் சேரியில் உள்ளாரும் -அயல் சேரியான அந்நிய ஸ்த்ரீகளும் -வசன பரரானவர்களும் -அவர்களுக்கு உடல் அன்றியே -இருந்த வூரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ -என்னும் ப்ரேமார்த்த சித்தரும்-எல்லே!-என்னே என்று ஆச்சர்யம் ஆதல் -சொல்லுகிறவர்களைக் குறித்து சம்போதானம் ஆதல் 

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2—நானம் என்று கந்தம் -இவள் தளராமைக்காக தோழிமார் தரித்து காட்டின படி-அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்-தோழிமாரோடு-தாயமாரோடு -அந்நியரோடு வாசி அற ஹிதம் சொல்லத் தொடங்கினார்கள் -ஏக கண்டைகளான தோழிமாரோடு அந்நியரோடு வாசி அற இவள் ஆற்றாமை பிரசித்தமான படி -பகவத் ப்ராவண்யத்தாலே உங்களில் வ்யாவருத்தையான என்னைக் காட்டில் ப்ரவணம் ஆகையால் ஸ்வ தந்திரமான நெஞ்சை நோக்க மாட்டேன்-

பிரபத்தி பரரையும் அசலாகச் சொல்லலாமோ என்கிற சங்கையிலே அருளி செய்கிறார் மேல்-ஆனால்‌ ப்ரபத்தி நிஷ்டரையும்‌ அசலாகச்‌ சொல்லுமோ என்னில்‌,

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

(கீழை மேலை வடக்கில் அவை புறம்பு அசலாக -தன் பற்று உள் அசல் .)கீழை மேலை வடக்கில் அவை புறம்பு அசலாக — -..அதாவது .-கீழை அகத்து தயிர் கடைய–பெருமாள் 6-2– -என்றும் –
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள்–பெரிய திருமொழி -10 -7 -2– -என்றும் –
வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண் இடை யாள் ஒரு கன்னிகையை வேற்றுவம் செய்து வைத்த–பெரியாழ்வார் 3-1-2-என்றும்-கிரியையும் -தர்சனமும் -அனுபவமும் ஆகிய கர்ம யோகமும் -ஞான யோகமும் -பக்தி யோகமும் – ஸித்த சாதன பரருக்கு புறவாசலாய்
தன் பற்று உள் அசல் – அதாவது – அவ் விஷயம் தன்னில் ஸ்வ கத ஸ்வீகாரம் உள் அசலாய் இருக்கும் என்ற படி–(தயிர்கடைதல் -கிரியை -கர்மயோகம் -வந்து காண்மின் -காண்கை-ஞானயோகம் -வேற்று உருவம் செய்து வைத்த -வேற்று உருவம் படுதல் பக்தி யோகம் -மூன்றும் உபாயாந்தரங்கள்-அசல் பகை -பிரபத்தி ஸ்வகத ஸ்வீகாரம் உள்பகை )(மேம்பொருள் போக விட்டு -மெய்ம்மையை மிக உணர்ந்து -ஆம்பரிசு அறிந்து கொண்டு -ஐம்புலன் அகத்து அடக்கி – காம்பறத் தலை சிரைத்து -உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பராம் நிலைக்கு முரண்பட்டது ஆதலால் தன் பற்று உள் அசல் என்கிறார்-அசல் -அயல் -பகை என்றவாறு )

“கீழையகத்துத் தயிர் கடைய”* (பெரு.தி. 6 – 2) இத்யாதி யாலே சொல்லுகிற கர்ம நிஷ்டரையும்‌, ‘“மேலையகத்து நங்காய்‌ வந்து காண்மின்கள்‌” (திருமொழி 10 – 8 – 2) என்று சொல்லுகிற ஜ்ஞாந யோக நிஷ்டரையும்‌, ““வடக்கிலகம்‌ புக்கிருந்து மின் போல்‌ நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம்‌ செய்து வைத்த அன்பா” (பெரியா. தி. 3 – 1 – 2) என்றும்‌ சொல்லுகிற பக்தி யோக நிஷ்டரர்க்கும்‌ ஸித்‌த ஸாதந நிஷ்டரர்க்குப்‌ புறவாசலாகையாலும்‌ இவ் விஷயத்திலே இழிந்திருக்கச் செய்தேயும்‌ தன் பற்றை உபாயமென்றிருக்குமவர்கள்‌ உள்ளசலாயிருக்கையாலும்‌ சொல்லுகிறது-

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2—பாவன பிரகர்ஷத்தாலே -ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே -ஒரு அகமும் உண்டாய் — அதுக்கு கீழை அகமுமாய்ச் செல்லுகிறது காணும் இவர்க்கு –நீ தான் மூலையடியே நடந்தது வேறு ஒரு இடத்தேயோ –என்னகத்துக்கு கீழை அகத்தன்றோ

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைகைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த

அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 –இவ் வகத்துக்கு வட அருகில் அகத்திலே புக்கு இருந்து –-மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை – மின் போலே நுண்ணியதான இடையை உடையளாய்-நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்தியை-சம்போக சிஹ்னங்களாலே விகர்த வேஷையாம்படி பண்ணி வைத்த-

ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்த்ரர்-சூரணை -142-

ஊரார்-கேவலர் –அதாவது-ஊரார் இகழிலும்–சிறிய திருமடல் – –என்றும் –-ஊரவர் கவ்வை –திருவாய் –5-3-4–என்றும் – நாட்டார் -ஐஸ்வர்யா காமர்-நாட்டாரோடு இயல் ஒழிந்து–திருவாய் -10-6-2- -என்றும் –
உலகர் -ஸ்வ தந்த்ரர் எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் திருவாய் -9-2-8–என்றும் – இம் மட உலகர் –திருவாய் -9-2-7–என்றும்- ஊரும் நாடும் உலகமும்–திருவாய் -7-7-2 -என்கிற இடங்களில்
ஊரார் –என்பது ஆத்ம பிராப்தி காமரான கேவலரை – நாட்டார் -என்பது புத்ர பசு அஸ்வ அன்னாதிகளான இக லோக ஐஸ்வர்ய காமரை — உலகார் –என்பது ஸ்வர்க்காதி பரலோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரை–என்கை —

”ஊரும்‌ நாடுமுலகமும்‌”‘ (திருவா, 6 – 7 – 2) என்றும்‌, “ஊரவர்‌ கவ்வை” (திருவா, 8 – 3 – 4) என்றும்‌, ”நாட்டாரோடியல் வொழிந்து ”* (திருவா, 10 – 6 2) என்றும்‌, ““எங்கள் கண் முகப்பே உலகர்கள்‌”‘ (திருவா. 9 – 2 8) என்றும்‌ சொல்லுகிற இது – ஊரார்‌ என்று கேவலரையும்‌, நாட்டார்‌ என்று புத்ர பங்வந்நாதிகளான ஐஹலெளகிக ஐஸ்வர்ய காமரையும்‌, உலகத்தவர்‌ என்று ஸ்வர்க்காதி பர லோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரையும்‌ சொல்லுகிறது.-

ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை–அப்படி அவன் பின்னே போனவளை ஊரார் கொண்டாடின வித்தனை யல்லது பழி சொன்னார் உண்டோ –

செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-ஊரார் இகழ்ந்து இடப் பட்டாளே-என்று அவளை ஊரார் கொண்டாடினால் போலே-என்னையும் தலையாலே சுமப்பார்கள் -சுமவாதே இகழ்ந்தார்களே யாகிலும் –-ஊராது ஒழியேன் நான் – இவர்கள் கொண்டாடாதே பழி சொன்னார்களே யாகிலும் நான் மடலூருகை தவிரேன்

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் –விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இறே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இறே எனக்கு தரித்து இருக்க லாயிற்று

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அரவிந்த லோசனன் என்றும் -மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத –என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-அஞ்ஞரான சம்சாரிகள் அனுபவிக்கும் படி எங்கள் கண் வட்டத்தில் ஒரு நாள் இருந்து அருள வேணும் -நித்ய ஸூரிகளுக்கு சதா தர்சனமான விஷயம் நீ ஒரு நாள் எங்கள் கண்ணுக்கு விஷயமாய் இருந்தால் ஆகாதோ -உன்னுடைய தர்சனம் அதிக்ருதாதிகாரமாக வேணுமோ –

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8—எங்கள் கண் முகப்பே இருக்க வேணும் -அது செய்து அருளும் இடத்தில் லௌகீகர் எல்லாம் திருவடிகளின் சேர்த்தி அழகை கண்டு திருவடிகளிலே விழுவது எழுவதாய் ஆஸ்ரயித்து –

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2–அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே -இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே –நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக்க கிட்டப் பெற்றோம்-

கேவலரை ஓர் ஊராக ( ஊராராக ) சொல்லுவான் என் ? என்கிற சங்கையில் அருளி செய்கிறார் —கேவலனையும்‌ ஓரூராகச்‌ சொல்லுவானென்‌ என்னில்‌,–

இறுகல் இறப்புக்கும் இறந்தால் தங்குமூர் ஒக்குமே–சூரணை-143-

(இறுகல் இறப்பு-சுருங்கிய குறைந்த மோக்ஷம் -கைவல்யம் )இறுகல் இறப்புக்கும்-அதாவது-அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதி பர ப்ரஹ்ம அனுபவம் போல் அன்றிக்கே அநுபூத ஆத்ம அனுபவம் மாத்ரம் ஆகையாலே –இறுகல் இறப்பு -என்கிற சங்கோச ரூபமான மோஷத்துக்கும் –இறந்தால் தங்குமூர் ஒக்குமே–அதாவது-ஜரா மரண மோஷாய மாம் ஆஸ்ரிதய யதந்தியே-ஸ்ரீ கீதை -7-29- -என்கிற படியே ஜரா மரணாதிகளில் அந்வயம் அன்றி இருந்து அனுபவிக்கும் போது ஸ்ருஷ்ட்டி ,
சம்ஹாரங்களுக்கு கர்மீபவிக்கும் பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகான பரம ஆகாசத்தில் இருந்து அனுபவிக்க வேண்டுகையாலே –யோகி நாம் அம்ருதம் ஸ்தானம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணீம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-38-– என்கையாலே –-இறந்தால் தங்குமூர் அண்டமே -பெரிய திருமொழி 7-2-10–என்கிற படி பிரகிருதி சம்பந்தம் அற்றால் – போய் வசிக்கும் தேசம் ஒக்கும் என்ற படி —

“எல்லாம் விட்ட இறுகலிறப்பு’” (திருவா. 4 – 1 – 10) என்று ஐஸ்வர்யத்தையும்‌ -பகவதநுபவத்தையும்‌ விட்டு ஆத்மாநுபவ மாத்ரமான ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற கேவலனுக்கு அவ் வநுபவம்‌ நித்யமாம் போது “ஜரா மரண மோக்ஷாய”‘ (கீதை) என்று அதுக்கு விரோதி யான ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்கு கர்மீ பவிக்கைக் கடியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸம்பந்தம்‌ அற வேண்டுகையாலே ““யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌”” என்கிறபடியே “இறந்தால்‌ தங்குமூரண்டமே கண்டு கொண்மின்‌”” (திருமொழி 10 – 2 – 10) என்று அவனுக்கு வஸ்தவ்யம்‌ தேஸ விஸேஷமாக வேண்டுகையாலே ஊர்‌ என்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்

ஜராமரணமோக்ஷõய மாமாஸ்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்
-7-29-மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் அது என்ற பிரம்மத்தை யுணர்வார்;
ஆத்ம ஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின்
சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-10-இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் பரம பதம் – அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம் –

சிறு சீரார் சுளகுகள் உபய விவேக பரிகரம்-சூரணை-144-

( சிறு சுளகு உபய விவேக பரிகரம்–சீரார் சுளகு உபய விவேக பரிகரம்-)சிறு சுளகு-அதாவது
சிறு சுளகு மணலும் கொண்டு –நாச்சியார் -2-8–என்றும்–சீரார் சுளகு-அதாவது-சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா -சிறிய திருமடல் -21-என்றும் சொல்லுகிற இடங்களில் சிறு சுளகாவது நுண் மணலையும் பெரு மணலையும் பிரிப்பது ஒன்றாகையாலே தேக ஆத்மா விவேகத்துக்கு பரிகரமான பிரமாணம் —சீரார் சுளகாவது -இவளுக்கு இவ் வியாமோகத்தை விளைத்தார் யார் என்று ஆராய்கிற
அளவிலே –சில நெல் பிடித்து எறியா-என்று தொடங்கி –பேர் ஆயிரம் உடையான் என்றாள் – என்று
தேவதாந்தரங்கள் அன்று –சர்வேஸ்வரன் என்று விவேகிக்கிற போதைக்கு -உபகரணம் ஆகையாலே –
ஆத்மா பரமாத்மா விவேகத்துக்கு பரிகரமான பிரமாணம் என்கை —உபய விவேகமாவது த்யாஜ்யோ உபாதேய ரூபோ அபய வஸ்து விவேகம் ஆகையாலே பிரகரண உசிதமாக இப்படிச் சொல்லத் தட்டு இல்லை —

”சிறு சுளகும்‌ மணலுங் கொண்டு”’ (நா.தி. 2 – 8) என்று சிறு சுளகாவது – பெரு மணலையும்‌ நுண் மணலையும்‌ பிரிப்பதொன்றாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான ப்ரமாணம்‌, ”சீரார் சுளகில்‌ சில நெல்‌ பிடித்தெறியா” (சிறியதிரு மடல்‌) என்று தொடங்கி ““பேராயிரமுடையானென்றாள்‌”’ என்று இவளுக்கு இவ் வ்யாமோஹத்தை விளைத்தான்‌ ஸர்வேஸ்வரனாகையாலே, சீரார்‌ சுளகென்பது ஆத்ம பரமாத்ம விவேகத்துக்கு பரிகரமாய்ப்‌ போருகிற ப்ரமாணம் –

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே2-8–இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே-இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி விளையாடுகிற எங்களை

அது கேட்டு-காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்சீரார் சுளகில்சுளகுக்கு சீர்மை யாவது -பதர் அறுத்து மணியும் மணியாக்கிப் பதரும் பதராக்குமது இறே –இச் சுளகும் -தேவதாந்த்ரங்கள் ஆகிற கூளத்தையும் பதரையும் அறுத்து-மணியே மணி மாணிக்கமே -என்கிற மணியைக் காட்டப் புகுகிறாள் இறே – ஆகையால் -சீரார் சுளகு –கை மோவா-பாவனா பிரகர்ஷத்தாலே –விரை குழுவு நறும் துளவம் மெய் நின்று கமழும் –என்கிறபடியே கை திருத் துழாய் நாறும் இறே-பேர் ஆயிரம் உடையான் என்றாள் –
நாமம் பலவுமுடைய நம்பி இறே இப்படி பண்ணினாலும்-பேர் ஆயிரம் உடையான் என்றாள் – ஓன்று தோற்றிற்று இரண்டு தோற்றிற்று நாலு தோற்றிற்று பத்து தோற்றிற்று நூறு தோற்றிற்று-ஆயிரம் பேர் தோன்றா நின்றதீ -என்றாள் –பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் – அவனது காளமேகம் போன்ற திரு மேனியை உவமையாக காட்டினாள் – ஸ்ரமஹரமான மேகத்தைக் காட்டி வடிவைக் காட்டினாள் –காரார் திரு மேனி கண்டதுவே காரணமாக விறே இவள் தான் இப்படிப் பட்டது-

மாலை கங்குல் காலை பகல் ரஜஸ் தமஸ் சத்வ சுத்த சத்வ ஜ்ஞானங்கள் —சூரணை -145-

மாலை –அதாவது .-செங்களம் பற்றி நின்று எல்கு புன் மாலை-திருவிருத்தம் -77—செல்கதிர் மாலை–திருவாய் –9-9-1 -இத்யாதிகளில் சொல்லுகிற மாலையாவது –-ரஜஸ் ஞானம் –-அதாவது –-ராகோத்தரமாய் -பதார்த்தங்கள் விசதமாக பிரகாசியாமை கொண்டு அயதாபிரதிபதிக்கு உறுப்பாய் இருக்கும் சந்த்யா காலம் ஆகையாலே – பதார்த்தங்களில் அந்யதா பிரதி பத்திக்கு உறுப்பான ராஜச ஞானம் —

மாலையும்‌ வந்தது ” (திருவா. 9 – 9 – 10) என்றும்‌, ”செங்களம்பற்றி நின்றெள்கு புன் மாலை ”? (திருவிரு. 77) என்றும்‌ சொல்லுகையாலே, மாலையாவது – ஸந்த்‌யை; அது ராகோத்தரமா யிருப்ப தொன்றாகையாலே ராஜஸ ஜ்ஞாநம்‌,

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே
 –  -77—தமக்கு உண்டான ஞான பிரகாசமும் துயர் அடையும் படி விவேகமும் குலைந்து-பக்தியே விஞ்சி ஆற்றாமையே விளைக்கும் கொடிய காலம்- புலம்பிற்று என்னும் படியாக சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1—செல்லப்பட்டு இருந்துள்ள கதிரை  யுடைத்தான மலையானது மயங்கப் பண்ணா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையானது மோஹிப்பியா நின்றது -புடைவையை வாயிலே கொடுத்து நலிவாரைப் போலே ஓடுகிற வியசனத்துக்கு போக்கு விட்டு கூப்பிட ஒண்ணாத படி உணர்த்தி அழியும் படி மோஹிப்பியா நின்றது-

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-மாலையையும் அவனையும் கூடப் பிணைத்து விட்டாள் போலே காணும் -அவன் வருவதாக குறித்துப் போன காலமும் வந்தது -தான் வருகிறிலன் – மாயன் –தன்னைக் காணவே பிரதி கூலங்கள் எல்லாம் அனுகூலமாம் படி தோற்றும் ஆச்சர்ய பூதன் வரக் காண்கிறிலன்-

கங்குல்-அதாவது-சூழ்கின்ற கங்குல் —திருவிருத்தம் -72–செல்கின்ற கங்குல்–திருவாய் -5-4-10– கங்குல் நாழிகை–பெரிய திருமொழி -9-5-3–இத்யாதிகளில் சொல்லுகிற கங்குல் ஆவது – பதார்த்தங்கள் ஒன்றும் தோற்றாது படியாய் -ஏதேனும் தோற்றுமது உண்டாகில் – விபரீதமாகத் தோற்றும் படி இருக்கும் திமிரோபஹத ராத்திரி காலம் ஆகையாலே – தமஸ் ஞானம் –அதாவது-ஜ்ஞாதவ்ய பிரகாசமும் இன்றியே -விபரீத பிரதி பத்திக்கு ஹேதுவாய் இருக்கும் தாமச ஜ்ஞானம்-

“கங்குல்‌ நாழிகை ஊழியில்‌” (திருமொழி 9- 5 – 3) என்றும்‌, ”செல்கின்ற கங்குல்வாய்‌”” (திருவா. 5 – 4 – 10) என்றும்‌ கங்குல்‌ என்பது – மத்‌ய ராத்ரி; அது தமோ பூதமாயிருக்கையாலே தாமஸ ஜ்ஞாதம்‌.

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே 
– 72–பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஒக்க தானே வந்து சூழ்ந்தது –-இது ஓர் இடத்திலேயாய்-மற்றொரு இடத்தில் ஒதுங்க நிழலாம் படி இருக்கை அன்றிக்கே–கங்குல் சுருங்கா  இருளின் –இன்னதினை போதை-இருள் செறிந்து வரக் கடவது –இன்னதினை போதை அதாகக் கடவது -என்று ஓர் மரியாதை உண்டு இறே – அது இன்றிக்கே இரா நின்றது –கரும் திணும்பை –கறுத்த நிறத்தை உடைய திணும்பை என்ற ஒரே சொல்லாய்- அத்தால் திண்மையை சொல்லுகிறது – இருளினுடைய புற இதழைக் கழித்து – அகவாயில் திண்மையான-வயிரத்தை சேர பிடித்தால் போல் இருக்கிறது

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3–ராத்ரியில் நாழிகை யானது கல்பத்தில் காட்டிலும் இருக்கிற ஸ்வ பாவமானது கிட்டி நில்லா நின்றது –

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10–முடிவு இன்றிக்கே நிரந்தரமாக உருகுகிற என்னை போலே மஹாதத்த்வமான ஆகாசம் சென்று அற்று நுண் துளியாய் உருகிச் செல்லுகிற ராத்திரியில் சகல பதார்த்தங்களும் அவகாச பிரதானம் பண்ணும் மஹா தத்வம் அழிகிற படிக்கும் வேறு த்ருஷ்டாந்தம் இல்லை –என்னை சொல்லும் அத்தனை -அளவுடையார் எல்லாம் அழிகிற காலம் ஆகாதே –

காலை சத்வ ஞானம்-அதாவது-காலை எழுந்து இருந்து —நாச்சியார் -9-8–காலை நன் ஜ்ஞானத் துறை படிந்து -திருவிருத்தம் -93-இத்யாதிகளில் சொல்லப் படுகிற காலை யாவது – ப்ரஹ்ம முகூர்த்தம் ஆகையாலே சத்வோத்தரமாய் -இருள் நீங்கி வெளி செறித்து வருகிற ப்ராத காலம்-ஆகையாலே பதார்த்த யதா பிரதிபத்திக்கு உறுப்பாக இருக்கும் சாத்விக ஜ்ஞானம் –

““காலையெழுந்திருந்து” (நா.தி. 9 – 8) என்று காலையாவது – ப்ராத காலம்‌; அது ப்‌ராஹ்ம முஹுர்த்தமாய்‌ ஸத்த்வோத்தர காலமாகையாலே ஸாத்த்விக ஜ்ஞாநம்‌.

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
 – -93 —காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8—கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-விறே பண்ணிக் கொண்டு இருப்பது –சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி – இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று-ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
வ்யாஹரேத் வைஷ்ணவ புமான்
-வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –என்னுமா போலே யாய்த்து

பகல் சுத்த சத்வம்பகல் கண்டேன்—இரண்டாம் திருவந்தாதி -81-இத்யாதிகளில் சொல்லும் பகலாவது –
பதார்த்தங்களை சம்சய விபர்யமற விசதமாக பிரகாசிக்கும் காலம் -ஆகையாலே – நாரணனை கண்டேன்-இரண்டாம் திருவந்தாதி -81-என்கிற படியே சமஸ்த குண விக்ரக விபூதி விசிஷ்டனான சர்வேஸ்வரனை சம்யக் சாஷாத் கரிக்கிற சுத்த சத்வ ஜ்ஞானம் என்கை —

““பகல் கண்டேன்‌ நாரணனைக் கண்டேன்‌”‘ (இ.திரு. 71) என்று, பகலாவது – ஸகல பதாார்த்தங்களையும்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிப்பதொரு காலமாகையாலே குண விக்‌ரஹ விபூதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை யதாவாக ஸாக்ஷாத் கரிக்கிற ஸூத்‌த ஸத்த்வ ஜ்ஞாநம்‌.

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81–விடிவு கண்டேன் – முன்படங்க இருள் போலே காணும் –
காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் – ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2-ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் – முன்பு பகல் கலவாது – பின்பு இரவு கலவாது –வடுகர்   வார்த்தை போலே  தெரிகிறது இல்லை – எங்களுக்குத்  தெரியும்படி சொல்லீர் -என்னச் சொல்லுகிறார் –அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் –-உறங்காத என்னையும் கண்டேன் –அநாதி மயயா ஸூ ப்த-என்கிற உறக்கம் பிரகிருதி அன்று இறே-இளைய பெருமாளுடைய ஸ்தா நீயன் ஆத்மா – அங்கும் –சதா பஸ்யந்தி ஜாக்ருவாம் சமிந்ததே –ருக் அஷ்ட -1-2-7-சவிபூதிகனான சர்வேஸ்வரனை  கண்டேன் – உபய விபூதி யுக்தன் இறே -போக்குவரத்து இல்லாத ஆதித்யன் – நியாம்யனானவன் அல்லன் -நியாமகன் – பீஷோதேதி ஸூர்ய-தைத் ஆன -8-என்றும் –
சாஸ்தா ஜனா நாம் -தைத் ஆற -3-11-என்றும் சொல்லக் கடவது இறே –

இத்தால் அந்யதா ஜ்ஞானம் (ரஜஸ் ) -விபரீத ஜ்ஞானம் ( தமஸ் ) -யதாஜ்ஞானம் ( சத்வம் ) -தத் பலமான
சாஷாத்கார ஜ்ஞானம் ( சுத்த சத்வம் ) என்கிற வற்றைச் சொன்ன படி-

இத்தால்‌ அந்யதா ஜ்ஞாநம்‌, விபரீத ஜ்ஞாதம்‌, யதாஜ்ஞாதம்‌, தத் பலமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம்‌ என்கிற இவற்றைச்‌ சொல்லுகிறது –

நிலா முற்றம் பிரஜ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் —சூரணை -146-

நிலா முற்றம்-அதாவது-நீணிலா முற்றத்து நின்று அவள் நோக்கினாள்–பெரிய திருமொழி -8-2-2 என்கிற நிலா முற்றமாகிறது – பிரஜ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் – அதாவது-பிரஜ்ஞா பிரசாதமாருஹ்ய அசோஸ்யஸ் சோசகான் ஜநான் , பூமிஸ்தாநிவ சைலஸ்த்தோ ஹ்யஞ்ஞான் பிரஜ்ஞா பிரபஸ்யதி –பாரதம் -சாந்தி பர்வம் -150-11- (திருமந்திர யதார்த்த ஞானமாகிய உயர்ந்த மாடியில் ஏறி தன்னைப்பற்றி வருத்தம் அற்ற ஞானி அறிவில்லாமல் உழலும் சம்சாரிகளை மலைமேல் இருப்பவன் பூமியில் உள்ளவர்களை பார்ப்பது போலே பார்க்கிறான் ) என்கிறபடியே – உத்துங்கமாக நின்று சர்வத்தையும் தர்சிக்கைக்கு உறுப்பாக சொல்வதால் அதில் நின்று தர்சித்த அளவிலே –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்—பெரிய திருமொழி -8-2-2-என்கையாலே , ததீய விஷயமே பரம பிராப்யம் என்று பிறர்க்கும் பிரகாசிக்கும் படி சரம அவதியான பரம புருஷார்த்த ஜ்ஞானம் என்கை-

*“நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌” (திருமொழி 8 – 2 – 2) என்று நிலா முற்றமாகச்‌ சொல்லுகிறது – “’ப்ரஜ்ஞா ப்ராஸாத, மாருஹ்யா ஸோச்யஸ் ஸோசகாந்‌ ஜநாந்‌ ! பூமிஸ்தாநிவ ஸைலஸ்தோ ஹ்யஜ்ஞாந்‌ ப்ராஜ்ஞ ப்ரபஸ்யதி’‘ என்று சொல்லுகிறபடியே “காணுமோ கண்ண புரமென்று ‘காட்டினாள்‌”’ (திருமொழி 8 – 2 – 2) என்று சொல்லுகையாலே ததீயரை ப்ராப்யர்‌ என்கிற எல்லை நிலமான புருஷார்த்த ஜ்ஞாநத்தை என்கிறார் –

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்

பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2—மனுஷ்ய சஞ்சாரம் இல்லாத பிர தேசத்திலே இவளைக் கொடு போய் இட்டு வைக்கவே மீளக் கூடும் என்று நினைத்து நீணிலா முற்றத்து வைத்துக் கொடு போய் வைத்தாள் –அம் மனுஷ்யர்கள் உடைய வார்த்தையும் கூட செவிப் படாதபடி ஒக்கத்தை உடைத்தான நிலா முற்றம் – முமுஷுவானவன் சரீர சம்பந்தாதிகள் உள்ள இடத்து குத்சையும் பயமும் வர்த்தியா நிற்கச் செய்தேயும் பதார்த்தங்களின் உடைய சந்நிதியில் கால் தாழ்கைக்கு யோக்யதை உண்டாம் இறே–சரீர சம்பந்தம் கிடைக்கையாலே – தத் பரிஹார அர்த்தமாக விவிக்த சேவியாய் வர்த்திப்பான் என்று சொல்லிற்று இறே-அப்படியே தானும் பூர்வார்த்த நிஷ்டையாகையாலே தன் மகளுக்கு இந்த அதி பிராவண்யம்  உண்டாகைக்கு  அடி சம்சர்க்க தோஷம் இறே என்று நினைத்து
நிர்மானுஷ்யமான நீணிலா முற்றத்திலே வைத்தாள் –அந் நிலா முற்றத்தைக் கண்டவாறே –கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வந்து -8-1-8-அனந்யார்ஹம் ஆக்கி பிரதம சம்ஸ்லேஷம் பண்ணின இடம் போலே இருந்ததீ -என்று இட்ட கால் இட்ட கைகளாய் இருந்த இவள் எழுந்து இருந்து தரித்து நின்றாள்-இதுவே போலே காணும் -ஆச்சார்ய உபதிஷ்டமான யதார்த்த ஞானம் பிறப்பதற்கு முன்பு விஷயாந்தரங்களில் படும் கண் கலக்கமும் – பின்பு வகுத்த விஷயத்தில் வந்து புகுந்தால் அதஸோ அபயம் கதோ பவதி -என்று நிர் பயனாய் தரித்து நிற்கும் நிலையும் -அவ்வளவே அன்றிக்கே
லோக தர்சனமும் பண்ண ஷமை யானாள் –சுற்றும் கண்ணை யோட்டிப் பார்த்தவாறே திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –-அல்லாத பிரதேசங்கள் கிடக்க திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயமாக வேண்டுவான் என் என்னில் – இவளுக்கு அபிமதம் சௌரிப் பெருமாள் பக்கலிலே ஆகையாலும் – இவள் தான் லஷ்யத்தை உடையாள் ஆகையாலும் திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய் -5-2-2-என்றாப் போலே கண்ணால் கண்டவர்கள் அடங்க நீங்கள் கண்ண புரத்தை காணி கோள்-என்னா நின்றாள் – உனக்கு அதி மாத்ர பிராவண்யம் ஆகாது காண் என்று நிஷேதிக்கிற தாயையும் கூட திருக் கண்ண புரத்தைப் பாராய் -என்றாள்-நல்லது கண்டால் தனியே அனுபவிக்கும் பிரகிருதி அன்றே –

— —

கலை வளை அஹம் மம கிருதிகள் —சூரணை -147-

( கலை அஹம் கிருதி -வளை மம கிருதி )அதாவது –-கைவளையும் மேகலையும் காணேன் -திரு நெடும் தாண்டகம் -22-என்றும் கலையாளா அகல் அல்குல் கன வளையும் கையாளா –பெரிய திருமொழி -5-5-2–இத்யாதிகளில் சொல்லுகிற கலையும் வளையுமான – பகவத் அனுபவ விரோதி ஆகிற அஹங்காரமும் -மம கிருதியும் என்கை-அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் பகவத் அனுபவ விரோதி ஆகையால் இறே-மத்யம பதத்தாலே இவை இரண்டையும் கழித்து கொண்டு த்ருதீய பதத்தாலே பகவத் அனுபவம் சொல்லிற்று கழல் வளை பூரிப்ப யாம் கண்டு ,கை தொழக் கூடும் கொலோ –திருவாய் -5-9-9-–என்றும் ,-ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்-திருவாய் -8-2-2-என்றும் , தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையும் –திருவாய் -9-7-6–என்கிற இடங்களிலே த்யாஜ்யமான அஹம் மம காரங்கள் அன்றிகே ,-சேஷோஹம்- என்னுடைய திருவரங்கர் -என்றார் போலே இருந்துள்ள அஹம் மம தைகளைச் சொல்லிற்றாகக் கொள்ளலாம் ஆகையாலே அங்குத்தைக்கும் இதுவே ஸ்வாபதேசமாக கொள்ளக் குறை இல்லை —

 ‘“கை வளையும்‌ மேகலையும்‌ காணேன்‌ கண்டேன்‌ கனமகரக் குழை யிரண்டும்‌ நான்கு தோளும்‌”’ (திருநெடு. 22) என்றும்‌, ““கலையாளாவகலல்குல்‌ கன வளையும்‌ கையாளா என்செய்கேன் நான்‌” (திருமொழி 5 – 5 – 2) என்றும்‌ கலை வளையாகச்‌ சொல்லுகிறது – பகவதநுபவ விரோதியான அஹங்கார மமகாரங்களை-

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-கை வளையும் இத்யாதி – அகம் ஒடுக்குண்டு போனால் கண்டது ஏது காணாதது ஏது என்று கேட்பாரைப் போலே அவன் வந்து கலந்த போது கலவியின் பலமாய்க் கொண்டு நீ காணாதது ஏது கண்டது ஏது என்னச் சொல்கிறாள் –த்ர்ஷ்டம் அத்ர்ஷ்டமாய் அத்ர்ஷ்டம் த்ர்ஷ்டம் ஆய்த்து –கை வளையும் –வளை கழல்வது விரஹத்தின் பின்பு அன்றோ -வளை போய்த்து என்பான் என் என்னில் – சம்ஸ்லேஷ ரசத்தால் பூரித்து வெடித்துப் போய்த்து -என்கை –மேகலையும் – மேகலை கண்டிலேன் என்கை -அசதஸ்யம் அன்றோ என்னில் – அத்தசையில் பரியட்டம் மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் -என்கை-அவன் பரியட்டம் தன் கையில் இருக்க கண்டாள் இத்தனை இறே –காணேன் – புக்கவிடம் அறிந்திலேன் –இத்தால் -ஸ்வாபதேசத்தில் வந்தால் –அஹங்கார மமகார நிவ்ருத்தியை சொல்லிற்றாய்  இருக்கும் இறே –ஸ்வரூப ஜ்ஞானம் போதில் விரோதியான அஹங்கார மமகாரங்கள்-போக வேளையில் வந்தால் வஸ்த்ரம் என்றும் வளை என்றும் பேரிடக் கடவதாய் இருக்கும் – நான் போக்தா என்று இருத்தல் – எனக்கு போக்யம் என்று இருத்தல் -செய்யுமது ஸ்வரூபம் அன்று இறே – போஜ்யமாய் இருக்கை இறே ஸ்வரூபம் –(உபாய விரோதி, ப்ராப்ய விரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.-‘நான் போக்தாவன்று, எனக்குப் போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.)-காணேன் – தன் விரோதியைக் கழித்துக் கொள்ளுதல் அவனைப் பற்றிப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தல் – செய்தால் இறே விரோதி போனது அறிவது –தான் போகத்தில் அந்ய பரையாய் இருக்க அவன் போக்கப் போனவை ஆகையாலே கண்டிலேன் -என்கிறாள்

கலையாளா வகலல்குல்  கன வளையும் கை யாளா என் செய்கேன்  நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2–கன வளையும் கை யாளா – ஸ்லாக்கியமான வளை கையிலே தங்குகிறது இல்லை –என் செய்கேன்  நான்- இவள் பர்யட்டப் பண்பும் கையும் வளையுமே ஜீவனமாய் இருக்கக் கடவ நான் எத்தைச் செய்வேன் –1-பர்யட்டத்தையும் வளையும் தங்கும்படி பண்ணுவேனோ-2-இவளை ஈடுபடாதபடி பண்ணுவேனோ- 3-அவனை ஆளாகக் கொள்ளும்படி பண்ணுவேனோ- எத்தைச் செய்வேன் –

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9—கையில் தொங்காதே கழலுவது இடுவது ஆகிறவளை-அவன் வந்த ஹர்ஷத்தாலே பூர்ணமாம் படி விடாய் பட்ட நாம் கண்டு தொழும் படி அவன் இரங்க கூடவற்றோ -விஸ்லேஷத்திலே வளை கழலுவது தனக்கே யானாலும் காட்சி எல்லாருக்கும் ஒத்து இருக்கும் இறே-கழல் வளை பூரிப்ப –யாம் கண்டு கை தொழ க் கூடும் கொலோ-அவ்வண்டுகள் போலே களித்து அனுபவிக்க வல்லோமோ –

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-–அவன் பக்கலிலே திரண்ட வேலையையும் அடக்கத்தையும் அவன் பக்கலிலே கொள்ளுகைக்காக -தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கும் –இவ்வாசையோடே எத்தனை காலம் யுண்டு இளைத்து போருகிறது-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6--என் பாசுரமான தூத வாக்யத்தைச் சொல்லப் பார்த்தி கோளாகில் -என்னுடைய அழகிய வளையும் கலையும் சிதிலமான படியைச் சொல்லுங்கோள் -செப்புவுதி கோளாகில் அது தானே எனக்குச் சுடர் வளையும் களையுமே -அறிவிக்குமதுவே குறை -வரவு தப்பாது -என்கை –

பட்டம் சூடகம் ஆவன பராவர குருக்கள் பூட்டும் ஆத்மா பூஷணங்கள் —சூரணை -148-

(பராவரம் -பர அவரம்-முன்னரும் பின்னரும் -பஞ்ச ஸம்ஸ்காரத்துக்கு -முன்னும் பின்னும் /
குருக்கள் -ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி )-பட்டம் சூடகம் ஆவன–அதாவது-பட்டம் கட்டி பெற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு -பெரியாழ்வார் -3-7-6-என்றும் –
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம் –திருப்பாவை -27- என்றும் சொல்லுகிற ஆபரணங்கள் ஆவன –-பராவர குருக்கள் பூட்டும் ஆத்மா பூஷணங்கள் — அதாவது-க்ருஷ்ணாங்க்ரி துளஸீ மௌலி பட்டம் க்ருஷ்ணாபி வந்தனம் குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம் கங்கண அஞ்சலி –( ஸ்ரீ கண்ணபிரான் திருவடித் திருத் துழாய் நமக்கு கிரீடம் -அவனை சேவிப்பதே பட்டாடை – அவன் சரித்ரங்களைக் கேட்பதே குண்டலங்கள் -கை கூப்பி வணங்குவதே வளையல்கள் )என்கிறபடியே – பிரதமத்தில் இவ் ஆத்மாவை அங்கீகரித்த ஆசார்யன் உண்டாக்கும் நாம ( இராமானுஜ தாஸ்ய நாமம் ) ரூபங்களும் ( -சங்கு சக்கர லாஞ்சனையும் -பன்னிரு திருமண் தரித்த ரூபம் )- பகவத் வந்தனாதிகளும் ( திருவாராதன க்ரமும் )- பின்பு அவ் ஆச்சார்யா வைபவத்தை உணர்த்தி அவன் உண்டாக்கும் சேஷத்வ ஜ்ஞானாதிகளும் ஆகிற ஆத்மா அலங்காரங்கள் என்கை —

”பட்டங்கட்டிப் பொற்றோடு பெய்திவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்து” (பெரியா. திரு. 3- 7 – 6) என்றும்‌, “சூடகமே தோள் வளையே” (திருப்பாவை 27) என்று தொடங்கி இவற்றாலே சொல்லுகிற ஆபரணங்களாவன – ‘“க்ருஷ்ணாங்கரி துளஸீ மெளளி: பட்டம்‌ க்ருஷ்ணாபிவந்தநம்‌ ! குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம்‌ கங்கணோஞ்ஜலி:” என்கிறபடியே ப்ரதமத்திலே இவளை அங்கீகரித்த ஆசார்யன்‌ உண்டாக்குமவை. இவ் வாத்மாவுக்கு அலங்காரமா யிருக்கிற நாம ரூபங்களும்‌, பகவத்‌ வந்தநாதிகளும்‌, பின்பு அவ்வாசார்ய வைபவத்தை உணர்த்தினவன்‌ உண்டாக்கின ஸேஷத்வ ஜ்ஞாநாதிகளும்‌ என்கிற இவை –

பட்டம் கட்டப் பொன் தோடு பெய்திவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு
என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய் புறப்பட்டு நின்று   இவள் பூவைப் பூ வண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மால் உருகின்றாளே -3 -7-6 –லலாட பூஷணமான பட்டத்தை கட்டி –
கர்ண பூஷணமான பொன்னின் தோட்டை இட்டு-பாத பூஷணமான பாடகத்தையும் சிலம்பையும் இட்டு –
பெய்து -என்கிற கிரியை இங்கும் அன்வயிக்க கடவது-இவை தான் சர்வ பூஷணங்களுக்கும்  உப லஷணம்-நியமித்து வளர்க்கை அன்றிக்கே – இவளுடைய இஷ்டத்திலே வளர்த்து நிலத்திலே நடக்க விடாமல் – ஒக்கலையிலே எடுத்துக் கொண்டு திரிந்த எனக்கு-

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–27–சூடகமே- பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்-பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –-அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே – அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது – (பாணி கிரஹணம் முதல் அன்றோ )-தோள் வளையே-கையைப் பிடித்த அனந்தரம் – அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி- இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-தோடே தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –செவிப் பூவே-அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்-பாடகமே-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்

இனி லீலா உபகரணாதிகளாகச் சொல்லப் படும் அவற்றுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்கிறார் மேல் —போக உபகரணமாகவும்‌ சொல்லப்படுகிறவற்றுக்கு ஸ்வாபதேஸம்‌ அருளிச் செய்கிறார்‌.-

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசல சாந்தம் பூணகில் சிற்றில் தூதை
முதலாவான- குண த்ரய விசித்திர கர்ம சூத்தரத்தாலே கட்டி லீலையாக பிரேரிக்க விழுந்து எழுந்தும்
சுழன்றும் உழன்றும் பறிபட்டும் அற்ப சாரமாம் அவையுமாய் மதியம் என்னில் விட்டு அகலவும் ,
ததீயம் என்னில் இகழ்வு அறவும் முனிவதும் இக்காலமீதோ என்னப்படும் பொங்கு ஐம் புலனில்
போக்யாதி சமூகம் –சூரணை -149-

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசல சாந்தம் பூணகில் சிற்றில் தூதை முதலாவான-அதாவது – பந்தும் கழலும் தந்து போகு நம்பீ -திருவாய் -6-2-1-என்றும் –
கன்ம மன்றேங்கள் கையில் பாவை பறிப்பது–திருவாய் -6-2-7- -என்றும் –
குழகி எங்கள் குழமணன் கொண்டு -திருவாய் -6-2-6-என்றும் ,
யாழ் நரம்பு–திருவாய் -9-9-7- -என்றும் –
தைவந்த தண் தென்றல் –திருவாய் -5-4-8–என்றும் –
மேவு தண் மதியம் –திருவாய் -9-9-4–என்றும் –
இன் அடிசிலொடு பால் அமுதூட்டி -நாச்சியார் -5-5-என்றும் ,
சாந்தமும் பூணும் –பெரிய திருமொழி -2-7-3–என்றும் –
சீருற்ற வகில் புகை–திருவாய் -9-9-7–என்றும் –
எங்கள் சிற்றிலும்–திருவாய் -6-2-9- -என்றும் –
வட்ட வாய் சிறு தூதை–நாச்சியார் –2-8-என்றும் இத்யாதிகளில் சொல்லுகிற- லிலோ உபகரண போக்ய போகோ உபகரணாதிகளான-

”பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ”: (திருவா. 6 – 2 – 1) என்று பந்து கழல்‌ என்பது – போக ஸ்தாநமாகிற ஸ்தூல ஸூக்ஷ்ம ஸரீரங்களை- ““கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது?” (திருவா. 6 – 2- 7) என்றும்‌, ”குழகி யெங்கள்‌ குழமணன் கொண்டு”” (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ சொல்லுகையாலே பாவை குழமணன்‌ என்பது – போக்த்ரு வர்க்கமான ஸ்த்ரீ புருஷ விபாகத்தை. ““சீருற்ற அகில் புகை யாழ்‌ நரம்பு” (திருவா. 9 – 9- 7) என்றும்‌, “தைவந்த தண் தென்றல்‌’” (திருவா. 5 – 4 – 8) என்றும்‌, ‘“மேவு தண் மதியம்‌” (திருவா. 9 – 9 – 4)-என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி ”’ (நா.தி. 5 – 5) என்றும்‌, “சாந்தமும்‌” பூணும்‌ சந்தனக் குழம்பும்‌”” (திருமொழி 2 – 7 – 3) என்றும்‌ சொல்லுகிற யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ என்கிறவை ஸப்‌தாதிகளான போக்‌யங்கள்‌. சிற்றில்‌ ‘ என்பது – போக ஸ்தாநம்‌, தூதை என்பது – பதார்த்தங்களை இட்டு வைப்பதொன்‌றாகையாலே போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம்‌,

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–
இவை யாரதாக நினைத்துக் கொண்டு போகிறாய் -நீ நினைக்கிறவர்களவை இல்லை காண் -என்னுடைய பந்தும் கழலும் கிடாய் -ஸ்வரூபத்தை பார்த்தாலும் மமகாராம் த்யாஜ்யம் –த்வயஷ ரஸ்து பவேன் ம்ருத்யு என்கிறபடியே ப்ரணய தாரையில் வந்தாலும் -உன்னது என்னது -என்கைக்கு மேல் இல்லை உறவு அறுதிக்கு -தானே பொகட்டு போம் என்று –என்னுடைய -என்கிறாள் -அவனும் யஸ்யை தே தஸ்ய தத்த நம் அன்றோ -ஸ்வரூப ஞானம் உடைய உன்னுடைய மமகார விஷயம் அடங்கலும் என்னதன்றோ என்று போகாத தொடங்கினான் –-தந்து போகு நம்பீ!–-உயிரை வைத்துப் போ என்பாரைப் போலே -அவன் மாட்டான் என்று அறிந்து மர்மஜ்ஜை யாகையாலே தந்து போ என்கிறாள் –இவர்கள் தொட்டு அளைந்து என்று இறே அவன் ஆதரிக்கிறது -இவளும் அவன் தொட்டு அளைந்ததைக் கொண்டு தரித்து கிடைக்காக தந்து போ என்கிறாள் –நான் தருவேனோ -இவை ஒழிய எனக்குச் செல்லுமோ என்றான் –-நம்பீ -முதலிகள் அன்றோ -உமக்கு புக்க இடம் எங்கும் பந்தும் கழலும் அன்றோ –ஷோடச ஸ்த்ரீ சஹஸ்ராணி என்கிற படியே அபிமத விஷயங்கள் ஓன்று இரண்டா -நடக்கலாகாதோ – சப்தத்துக்கு பொருள் சொல்லுகை அன்றிக்கே யுக்தி பிரதியுக்தியாலே நினைவைச் சொல்லுகிற இது விறே இத் திருவாய் மொழிக்கு கருத்து -திருப் பாவைக்கு எல்லே இளங்கிளியே பாட்டுப் போலே இத் திருவாய் மொழியும் பாவ பிரதானம் என்னும் இடத்தைக் காட்டுகிறது

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7–எங்கள் கையில் பாவையை பறிப்பது கார்யம் அன்று -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை –எங்கள் அனுமதி இல்லாமையால் பறிக்கப் போகாது –தன்னுடைய சக்தி கொண்டு அழிக்கலாவது எதிரிகள் ஆகில் இறே-அபலைகள் கையில் அத்தை பறிக்க சக்தன் அல்லனே -ஒரு கலத்தில் உண்பாரை போலே அவர்கள் கையிலும் தன் கையிலும் இருக்குமாகில் இறே பிரயோஜனம் உள்ளது -பிரயோஜனம் இல்லாமையே அன்று -உனக்கு குண ஹானியாய் வரும்-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6—பாவீ இது ஆரதாக எடுத்தாய் -எங்களது காண் நீ நினைக்கிறவர்களது அன்று காண் -என்கிறாள் -எங்களது என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னாள்-அது தான் அவனுக்கு விருப்பத்துக்கு உடலாயிற்று –எங்கள் அனுமதி வேண்டாவோ உனக்கு என்ன –எனக்கு நிவாரகர் உண்டோ -நான் செய்தது செய்யலாம் அன்றோ என்ன – கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;நிவாரகர் இல்லை என்னா -அடிக் கழிவான செயல்களை செய்தால் உனக்கு ஒரு கார்யம் இல்லை -நீ நினைக்கிறவர்களது அல்லாமையாலே உனக்கு ஒன்றும் வாயாது –எங்கள் அனுமதி இல்லாமையாலும் பிரயோஜனம் இல்லை –பிரயோஜனம் இல்லை யாவது என் -இது தானே பிரயோஜனம்-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7—பிரதானமான வாடையை ஒழியவே பாதக பதார்த்தங்கள் அஹம் அஹமிகயா மேல் விழுந்து நலிகிற படியைச் சொல்கிறது –சீர் உறுகையாவது-அழகு மிக்கு இருக்கை –அதாகிறது பரிமளிதமாய் க்ராண இந்திரியத்தை நலியும் அளவன்றிக்கே -கண்ணையும் நலியும் படியான -தர்ச நீயமான அகில் புகை –யாழ் நரம்பு -பண் பட்டு இருந்துள்ள யாழ் -பஞ்சமம் ஆகிற பண் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8—குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் –தை வருகை யாவது -தடவுகையாய் -காந்தனுடைய ஸ்பர்சத்துக்கு ஸ்மாரகமான தென்றல் என்றுமாம் —

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4—நாட்டார் தாபத்துக்கு அஞ்சி நிலாவில் ஒதுங்கக் காண்கையாலே தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்-அவனும் அக்னிமய சந்திரன் ஆகா நின்றான் –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5–பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை–-இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது-இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக் கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி  வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3–எங்களால் நோக்கும் காலம் கழிந்தது )வாளா நோக்கும் காலம் எல்லை கழிந்தது-பழகப் புதைத்து ஆறி குளிர்ந்த சாந்தும் முத்தாராமும் சந்தனக் குழம்பும் –நிதானம் அறியாதே நாம் இருந்து பரிஹாரம் பண்ணுகை யாவது என் என்று முன்பு எல்லாரும் கை வாங்கி இருப்பார்கள் – பின்னையும் இவள் பக்கல் ஒரு வாசி இன்றிக்கே நோவு படக் காண்கையாலே இனி நாட்டார் செய்யுமவற்றை ஆகிலும் செய்து பார்ப்போம் என்று இவற்றைக் கொண்டு சிசு ரோபசாரம் பண்ணப் புகுவர்கள்  – புக்கால் அவை தானே இந்தனளமாய் வேவா நிற்கும் –

ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-பிரதானமான வாடையை ஒழியவே பாதக பதார்த்தங்கள் அஹம் அஹமிகயா மேல் விழுந்து நலிகிற படியைச் சொல்கிறது –சீர் உறுகையாவது-அழகு மிக்கு இருக்கை –அதாகிறது பரிமளிதமாய் க்ராண இந்திரியத்தை நலியும் அளவன்றிக்கே -கண்ணையும் நலியும் படியான -தர்ச நீயமான அகில் புகை –யாழ் நரம்பு -பண் பட்டு இருந்துள்ள யாழ் -பஞ்சமம் ஆகிற பண் –தண் பசுஞ்சாந்து –ஆறிக் குளிர்ந்து செவ்வி அழியாத சாந்து –அணைந்து-இவற்றைக் கூட்டிக் கொண்டு –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9—எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே –உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்ம நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே-இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி விளையாடுகிற எங்களை-ஓர் அவயவி ஆக்கிக் காண  ஒண்ணாத படி – மறுமுட்டுப் பெறாதபடி அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு – இது தானே யன்றோ பிரயோஜனம் என்று வாராத் தொட்டான் –

குண த்ரய விசித்திர கர்ம சூத்தரத்தாலே கட்டி லீலையாக பிரேரிக்க-அதாவது-அஜாமேகாம் லோஹித சுச்ல க்ருஷ்ணாம்–தைத்ரியம் என்கிறபடியே செந்நூல் வெண்ணூல் கருநூல் உடைய – ஸ்தாநேயான குண த்ரயத்தோடே-ஹரே விஹரசி கிரீடா கந்துகைரிவ ஐந்துபி த்வம் ந்யஞ்சத்பிஸ் கர்ம சூத்ரோ உபாபாதிதை –ஸ்ரீ விஷ்ணு தர்மம் — என்கிற படியே விசித்திரமான கர்ம சூத்தரத்தால் கட்டி –
ஹரே விஹரிசி க்ரீடாகந்து கைரிவ ஜந்துபி -என்கிற படியே ஈஸ்வரன் தன்னுடைய லீலைக்கு உறுப்பாக –அஜ்ஞோ ஜந்துரநீ சோய மாத்மனஸ் ஸூக துக்கயோ ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்கம் வா ஸ்வ ப்ரேமாவா–பாரதம் சாந்தி பர்வம் –12-36–என்கிறபடியே – அஜ்ஞனாய் அசக்தனான இவன் -கர்ம அனுகுணமாக உபரித லோகாதிகளிலே போவது – மீளுவதாம் படி ஸ்வ சங்கல்ப்பத்தால் பிரேரிக்க –

(குண த்ரய விசித்ர கர்ம ஸூத்ரத்தாலே கட்டி) பந்தானது – வெண்ணூல்‌ செந்நூல்‌ கருநூலாலே கட்டியிருப்ப தொன்றாகையாலே, ப்ரக்ருதியும்‌, ‘‘லோஹித ஸுக்ல க்ருஷ்ணாம்‌”’ (தை.௨..) என்று ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாலே விசித்ரமாய்‌. “த்வம்‌ ந்யஞ்சத்‌ பீருதஞ்சத்‌, பிர் கர்ம ஸூத்ரோபபாதி,தைச | ஹரே விஹரஸி க்ரீடா கந்து, கைரிவ வஸ்துபி?”’ என்கிறபடியே கர்ம ஸூத்ரத்தாலே கட்டி.-

விழுந்து எழுந்தும்-அதாவது-த்வம் நியஞ்சத்பி ருதஞ் சத்பி–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிற படியே தாழ விழுந்தும் உயர எழுந்தும் –சுழன்றும் உழன்றும்-அதாவது-ஏவம் சம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி -அஹிர் புத்ன்ய சம்ஹிதை -என்கிற படியே-சக்கர பிரமம் போலே சுழன்றும் –
யமாலய மஹா சூல மாதுர் ஜடர தோல்பத யாதாயாதா சஹாஸ்ராணாம் முனே ஜீவஸ்ய சாதனம்-என்கிறபடியே ஒரு கால் போனதிலே அநேக பர்யாயம் போவதும் வருவதுமாய் உழன்று
போகிற ஆத்மவோட்டை அன்வயத்தாலே விழுந்து எழுகை முதலான ஸ்வபாவ யுக்தமாய் –
பறிபட்டும்-அதாவது-பந்து பறித்து–பெரிய திருமொழி -10-7-5 -என்கிறபடியே-ஈஸ்வரன் தன்னுடைய போக விரோதி என்று வலிய விடுவிக்க விடு பட்டும்-

(வீலையாக ப்ரேரிக்க விழுந்‌தெழுந்தும்‌ சுழன்றுழன்றும்‌) ““அஜ்ஞோ ஜந்துர நீஸோய மாத்மநஸ்ஸுக துக்கயோ ச | ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத்‌ ஸ்வர்க்கம்‌ வா ஸ்வ ப்‌ரமேவ வா’” என்கிறபடியே அஜ்ஞனாய்‌ அஸக்தனா யிருக்கிற இவன்‌ கர்மாநுகுணமாக ஈஸ்வரன்‌ ப்ரேரிக்க, ்‌ யமாலய மஹாஸூலே மாதுர் ஜடர தோல்பதா ! யாதா யாத ஸஹஸ்ராணாம்‌ முநே ஜீவஸ்ய ஸாதநம்‌ 1! க்வசித் கதஈசித் ஸ்வர்க்கஸ்ய புநாபதந துர்கதோ ‘‘ என்கிறபடியே ஸ்வாக்க, -நரக-கர்ப்பங்களிலே தட்டித் திரிந்து பறிபட்டு, ““பந்து பறித்து”” என்கிறபடியே ஈஸ்வரன்‌ தன்னுடைய போக விரோதி, என்று விடுவிக்க விட்டும்‌.-

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5—அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

அற்ப சாரமாம் அவையுமாய்-அதாவது-அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் –திருவாய் -3-2-6–என்கிறபடியே பகவத் விஷயத்தில் நின்று அகற்றுமது ஒழிய தன்பக்கல் புஜிக்கலாவது ஓன்று இல்லாதபடி -அல்ப ரசங்களாய் இருக்குமவையாய் –

(அற்ப சாரமாமவையுமாய்‌) ““அற்ப சாரங்களவை சுவைத் தகன்று ஓழிந்தேன்‌”’ (திருவா. 3 – 2- 6) என்கிறபடியே ஸப்‌தாதிகள்‌ பகவத்‌ விஷயத்தினின்றும்‌ அகற்றுமதொழியத்‌ தன் பக்கல்‌ புஜிக்கலாவ தொன்றில்லாதபடி அல்ப ஸாரங்களாய்‌.-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6—அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை -இப்படி இருப்பன அநேகம்
சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை – இத்தால் பெற்றது ஏது என்ன-அகன்று ஒழிந்தேன்
சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்-உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை நீர் நின்ற நிலை அசமாதேயம் என்னும் படி யாய் இருந்ததீ

மதியம் என்னில் விட்டு அகலவும் ,-அதாவது –-மதீயம்-என்று ஸ்வ சம்பந்தத்தை இட்டு பார்க்கும் போது –
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற–பெரிய திருமொழி -3-7-8- -என்கிறபடி த்யாஜ்யங்களாய் –
ததீயம் என்னில் இகழ்வு அறவும்-அதாவது-ததீயம் என்று தத் சம்பந்தத்தை இட்டு காணும் போது
இகழ்வில் இவ் வனைத்தும்–திருவாய் -3-4-1- -என்கிறபடி- கட்டடங்க உபாதேயமுமாவையாய்-

(மதீயமென்னில்‌ விட்டகலவும்‌) இவற்றை பகவதீயத்வாகார மொழிய மதீயமென்று பார்த்த போது “சிற்றில்‌ மென் பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை”” (திருமொழி 3 – 7 – 8) என்கிற படியே த்யாஜ்யங்களாய்‌. (ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌) ததீயத்வாகாரத்தாலே கண்ட போது ““இகழ்விலிவ்வனைத்துமென்கொ?” (திருவா. 3 – 4 – 1) என்கிறபடியே கட்டடங்க உபாதேயங்களாயும்‌.-

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8—சிறு கூட்டிலே நின்று பேசா நின்ற மிருது ஸ்வபாவமான பூவையையும் விட்டகன்ற-லிலோ உபகரணங்களை விட்டு அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.–3-4-1—ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –

முனிவதும் இக்காலமீதோ என்னப்படும் பொங்கு ஐம் புலனில் போக்யாதி சமூகம் –-அதாவது
அன்னை முனிவது மன்றிலின் குரலீர்வதும்–பெரிய திருமொழி -11-2-5 -என்றும் இத்யாதி படியையும் –
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ்வூர் பனிப்பியல்வு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் – திருவிருத்தம் -5- என்கிற படியே அவனை ஒழியக் கண்ட போது பிரதி கூலங்களாகவும் –
அவ்வாடை ஈதோ வந்து தண் என்றதே –திருவிருத்தம் -27-என்று அவனோடு சேர்ந்து கண்ட போது
அனுகூலங்களாகச் சொல்லப் படுபவையான-பொங்கு ஐம் புலனும்–திருவாய் -10-7-10- -என்கிற பாட்டில் சொல்லப் பட்ட போக்ய போக உபகரண போகஸ்தானம் சமூகம் என்ற படி —

(முனிவதுமிக்காலமீதோ என்னப்படும்‌) “அன்னை முனிவதும்‌ அன்றிலின்‌ குரலீர்வதும்‌ இத்யாதி, (திருமொழி 11 – 2 – 5), இக்காலமிவ்வூர்ப் பனிப்பியல்வெல்லாம்‌ தவிர்ந்தெரி வீசும்‌” (திருவிரு. 5) என்கிறபடியே அவனை யொழியக் கண்டபோது ப்ரதிகூலங்களாயும்‌, ““அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே”” (திருவிரு. 27) என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அநுகூலங்களாயுமிருக்கிற. (பொங்கைம் புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌) பொங்கைம்புலன்‌ என்கிற பாட்டிற் சொல்லுகிற போக்‌ய-போக்த்ரு வர்க்க, -போக உபகரண-போக ஸ்தாநங்களைச்‌ சொல்லுகிறதென்கிறார்‌.

அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே —11-2-5—அவன் ஊர் பகை விளைத்து விட்டான் ஆகில்
நாம் இவற்றை வெறுக்கிறது என் – பரிவுடைய தாய் முனிகிறதும்- நானும் அவனுமாய் இருந்த போது அனுகூலமான அன்றிலின் உடைய த்வனி பாதகம் ஆகிறதும் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே
–5–இக் காலத்திலே-இத் தேசத்திலே-இதுக்கு ஸ்வபாவ பேதம் பண்ணுகின்றவன் ஆகையாலே- அவனுக்காக நின்றபடி-பதார்த்தங்கள்
ஸ்வ பாவ பேதமும்-ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும் இவளை அழிக்க நினைத்த படி-(தத்துவமும் தகவும் இல்லை -கிருபையும் ரக்ஷகத்வமும் இல்லையே அவனுக்கு )அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோஇக்காலம் இவ் ஊர்-–முன்பு இப்படி இல்லை -விஸ்லேஷத்திலே –ஆழ்வார் நிலை கண்டு ஊரெல்லாம் இப்பாடு படுவதால் இவ்வூர் –இக் காலத்திலும் இவ் வூரிலும்–காலாந்தரத்திலும் இல்லை–தேசாந்தரத்திலும் இல்லை முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்–இவளுக்கு என்னாதே-இவ்வூருக்கு என்றது-இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே-பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து–பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு—எரி வீசும்-வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது-வீசும்-ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது-

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே
 –27–அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –அவ் வாடை ஈதோ வந்து அவ்வாடையே இப்போதாக வந்ததாய்-தண் என்றதே-ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10—பொங்கு ஐம் புலனும்-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –-பொறி ஐந்தும் -வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கருமேந்த்ரியம் -கர்ம இந்திரியங்கள் ஐந்தும் —ஐம் பூதம்--பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-– -இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

இதில்-செந்நூல் வெண்ணூல் கருநூல் சமைக்க பட்ட பந்தாகச் சொல்லிற்று போக ஸ்தானமான தேகம்
என்னும் இடம் மேலில் வர்ணித்ததில் தெரியும்-
கழலாவது -சிறுகி அஞ்சாக இருக்கும் ஆகையாலே போக உபகரணமான பஞ்ச இந்திரியங்கள் ..பாவை குழமனங்கள் ஆவன -லிலோ உபகரண விசேஷங்கள்–யாழ், தென்றல், மதீயம் ,அடிசில் ,சாந்தம் . பூண் ,அகில் -ஆவன போக்யங்களான சப்தாதி விஷயங்கள் .. இதில் பூண் அகில் – என்பன ரூப கந்தங்களில் பேதை-சிற்றில்-கொட்டகை-போக ஸ்தானம்- தேகமும் வாசஸ்த்தான க்ருகாதிகளும் போக ஸ்தான விசேஷம் இறேதூதை யாவது -சிறு சோறு அடுகைக்கு உபகரணம் ஆகையாலே இந்திரிய வ்யதிரிதங்களான போக உபகரணங்களுக்கு உபலஷணம் — போக ஸ்தான தேகத்தையும் போக உபகரண இந்திரியங்களையும் பந்து கழல் இத்யாதியாலே லிலோ உபகரணமாக சொல்லுகிறது – லீலையாவது தாதாத் விக ரசமான வியாபாரம் ஆகையாலே -தாத்ருச வ்யாபாரத்துக்கு இவை உபகரணமாக இருக்கையாலே —ஆகையால் இவை அனைத்தும் பொங்கு ஐம் புலனில் போக்யாதி சமூகம்– என்னக் குறை இல்லை —

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

மூன்றம் பிரகரணம் –

இனி பகவத் விஷயத்தில் தூது விடுகிற பஷிகளுக்கு ஸ்வாபதேசம் ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அத்தை அருளிச் செய்கிறார் மேல் —இனிமேல்‌ இவர்‌ தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில்‌,

சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களை சிறகு என்று குரு ச ப்ரஹ்மச்சாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும் –சூரணை -150-

அதாவது-சேர்ப்பாரைப் பஷிகளாக்கி –பகவத் விஷயத்தில் கடகராம் அவர்களை பஷிகளாகப் பிரதி பத்தி பண்ணி — ஜ்ஞான கர்மங்களை சிறகு என்று —–வீசும் சிறகால் பறத்தீர்—திரு விருத்தம் -54-என்றும்-அஞ்சிறைய மட நாராய் –திருவாய் -1-4-1–இத்யாதிகளாலே–உபாப்யாமேவ பஷாப்யாம் ஆசாசே பஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்கிறபடியே பகவத் விஷயத்தில் சீக்ர பிராப்த்திக்கு உறுப்பான அவர்களுடைய ஞான விருத்தங்களை பஷங்கள் என்று சொல்லி –குரு ச ப்ரஹ்மச்சாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும் –-நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய்
ஆவா என்று எனக்கு அருளி
-1-4-1–என்றும் –-இது சொல்லி அருள ஆழி வரி வண்டே -1-4-6-என்றும் –
வந்து மேயும் குருகினங்காள் —-கைகள் கூப்பிச் சொல்லீர் -6-1-1–என்றும் –-உடன் மேயும் மட அன்னங்காள் –அடியேனுக்கும் போற்றுமினே –6-1-5–என்றும் – நன்னலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் யான் இரந்தேன் -6-8-1—என்றும் , என் முல்லைகள் மேல் தும்பிகாள்–யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் -6-8-4–என்றும் – செங்கால மட நாராய் –குடக்கூத்தர்க்கு என் தூதாய் –நுமரோடே -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ -9-7-1–என்றும் – கொக்கினங்காள் குருகினங்காள் தக்கிலமே கேளீர்கள்-9-7-3 –இத்யாதிகளாலே குருக்களுடையவும் -ச ப்ரஹ்மச்சாரிகளுடையவும் —-இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே -திருவாய் -1-4-7-என்றும் –
நீ அலையே சிறு பூவாய்–திருவாய் -1-4-8- -என்றும் –யான் வளர்த்த கிளிகாள்–திருவாய் -6-8-5–என்றும் –
தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே -திருவாய் -6-8-6–இத்யாதிகளால் புத்ரர்களுடையவும் சிஷ்யர்கள் உடையவும் ஸ்தானே சொல்லும் என்கை —

(சேர்ப்பாரைப்‌ பக்ஷிகளாக்கி) பகவத்‌ விஷயத்தில்‌ கடகரைப்‌ பக்ஷிகளாக்கி, (ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று) “உபாப்‌ யாமேவ பக்ஷாப்‌யாமாகாமே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்‌யாம்‌ ப்ராப்யதே புருஷோத்தம:” என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகாக உடையரான குரு ஸப்‌ரஹ்மசாரி ஸிஷ்ய புத்ர ஸ்தாநீயரா யுள்ளாரைப்‌ பக்ஷி முதலானவையாகப் பேசக்கடவது –-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே
 -54 —வீசுகையாவது –1-அசைந்து வருகையை சொல்லுவது-2-வேகத்தை சொல்லுதல்-3-பரந்து இருக்கையை சொல்லுதல்–சிறகால் பறத்தீர் –-தனக்கு சிறகும் இன்றியே கால் கொண்டு ஆயிற்று நடப்பது –-அது தானும் இட்ட கால் இட்ட கையாய் – திருவாய்மொழி -7-2-4-இறே தான் இருக்கிறது–

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ 
–1-4-1–பிரஜைக்கு தாய் முலையிலே கண் ஓடுமா போலே தனக்கு உபகாரமான சிறகிலே யாயிற்று முற்படக் கண் வைத்தது –
ஆச்சார்யனுடைய ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே கடகருடைய பரிகரவத்தையை அறிந்து பற்ற வேணும் இறே-அம் -என்று அழகு –சிறை -என்று சிறகு -அழகிய சிறகை யுடைய தன்னைப் போலே உறாவி இராதே-சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே செந்தலித்து இருக்கை-ச பங்காம நலங்காராம் விபத்மாமிவ பதமி நீம் -என்று இறே தன் தசை -சம்ச்லேஷத்தாலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாய் இருக்கை-நாண் மடம் அச்சம் -என்று ஸ்த்ரீத்வமாய்-பிரியில் வியசனம் அறியும் தன் இனத்தைப் பார்த்து சொல்லுகிறாள் என்னவுமாம் –ஆவா வென்று எனக்கு அருளி-என் தசையைப் பார்த்து ஐயோ ஐயோ என்று-ஏஹி பஸ்ய சரீராணி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள்-அருளி -கிருபை பண்ணி இரப்புக்குச் செய்தாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி –

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே
–1-4-6—அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று வார்த்தையைச் சொல்லி அருள வேணும் –அருளாழி வரி வண்டே-கம்பீர ஸ்வ பாவத்தையும் -சரீரத்தில் வரியையும் யுடைய வண்டு -என்னுதல்-வட்டமான வரியை யுடைய வண்டு என்னுதல்
ஸ்ரமஹரமாய் அழகிதான வண்டு என்னுதல்-வட்டமாகப் பறக்கிறது என்னுதல்-கடகருடைய ஆத்ம குணத்தோ பாதி ரூப குணமும் உத்தேச்யம் என்கை-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1—வழி பறிக்கும் தேசத்தில் வந்து உதவினால் போலே இறே நீங்கள் சந்நிதி பண்ணின படி –பம்பா தீரே ஹநுமதா சங்கத -ஆள் இட்டு அறிவிக்க வேண்டும் தசையிலே நீங்களே வந்து-வந்து மேயும் -நான் அபேக்ஷியாது இருக்க –க்ருஹே புக்தம சங்கிதம் -என்னுமா போலே இறே நீங்கள் செய்தது -என் கார்யம் செய்த பின் இனி உங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -இவள் கார்யம் இங்கே வந்து மேய்கை-மேயும் குருகினங்காள் -உபவாச க்ருசையாய் இருக்க என் கார்யம் புஷ்கலமாய் இருக்கிற உங்களுக்கு செய்ய வேண்டாவோ -இரவு உண்டார்க்கு உண்ணாதார் கார்யம் செய்கை பரம் அன்றோ –

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5—உடன் மேயும் மடவன்னங்காள்!
பிரிவில் இறே சூழ்த்துக் கொடுக்க வேண்டுவது என்று உடனே திரியா நின்றது -இப்படி தூரதர்சியாய் இருப்பார்க்கு அன்றோ விச்சேதியாமல் அனுபவிக்கலாவது-மேயும் -இதம் மேத்ய மிதம் ஸ்வாது -என்னா நின்றன -ஊடல் உணர்தல் புணர்தல் -என்ற இம் மூன்றிலும் இவற்றுக்கு புணர்தலேயாய் சொல்லுகிறபடி –ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன் -என்று மூன்றையும் பிரயோஜனமாக சொன்னார்கள் தமிழர்-மட வன்னங்காள்-மடப்பம் -துவட்சி-சம்ச்லேஷம் அடங்க வடிவில் தொடை கொள்ளும் படி இருக்கை –துவட்சி பேடைக்கு ப்ரக்ருதி –சேவலுக்கு கலவியால் யுண்டாய் இருக்கிற படி -பரஸ்பரம் பவ்யதை யாகவுமாம் –அடியேனுக்கும் போற்றுமினே.-அவ் ஊர் உங்களையும் விஸ்மரிப்பிக்கும் -உங்கள் பரிகரமான என்னையும் நினையுங்கோள் -அவனை மறக்கும் படி பண்ணின தேசம் அன்றோ -போற்றுகை யாவது கௌரவித்து சொல்லுகை -தொழுத கைகளும் நீங்களுமாய் எனக்காகவும் ஒரு வார்த்தை சொல்ல வேணும்-கைகள் கூப்பிச் சொல்லீர் -பாதம் கை தொழுது பணியீர் -என்று பிராட்டியான தசையிலும் இவர்க்கு ஸ்வரூபம் மாறாதே செல்லுகிற படி-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1—அழகிய நீர்மையை உடைய புள்ளினங்காள் -இருவருமான சேர்த்தியை ஒழிய வேறும் ஒன்றைத் தரவோ -என்று சிரித்து இருந்தன –அர்த்ததச்ச மயாபிராப்தா தேவராஜ்யா தயோ குணா ஹதசத்ரும் விஜயிநம் ராமம் பச்யாமி ஸூஸ்த்திதம்புள் -நீர்மையோபாதி கமன பரிகரமும் உண்டாக்கப் பெற்றது–இனங்காள் -ப்ரேரிப்பாரும் அருகே உண்டு என்கை -திஷூ சர்வா ஸூ மார்க்கந்தே -என்று எல்லா திக்கிலும் போக விடலாம் படி திரளாக இருந்தபடி என்றுமாம்-வினையாட்டியேன்-கைப்பட்டவனை விட்டு உங்கள் காலிலே விழும்படியான பாபத்தை பண்ணினேன்-நான் இரந்தேன்தர்மதபரி ரக்ஷிதா -என்று அவன் இரந்து தூது விடும்படி அறிவுதி கோள் இறே -உபய விபூதி கொடுத்தாலும் விசத்ருசம் என்று இரப்புக்கு காரியம் செய்கிறிளோம் என்றுமாம் –க்ருத்ஸ்நாம்வா ப்ருதிவீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன -இறே

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4—நான் வளர்க்கிற முல்லைகள் மேலே வர்த்திக்கிற தும்பிகாள் -இவள் உறாவுகையாலே பேணி நீர் வார்ப்பார் இல்லாமையால் உறாவின முல்லைகள் மேலே பட்டினி விடுகிறவை இ றே -என்னோடே ஓக்க நோவு பட பிறந்த நீங்கள் என் பரிசரத்தில் முல்லைகள் என்றுமாம் -இவள் வர்த்திக்கிற எல்லை அடங்க சருகாய் இறே கிடக்கிறது -சுத்தமாய் இனிய பேச்சுக்களைக் கொண்டு சென்று —வந்து,-வரவு செலவை காட்டுகிறது –நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை-என்னவேண்டும் கண்டீர் -அப் பேர் ஓலக்கத்தில் பெரிய மதிப்பனைக் கண்டு வைத்து இப்படிச் சொல்ல வேணுமோ என்னாதே இவ்வார்த்தை இத்தனையும் சொல்ல வேணும் –வாசா தர்மம் அவாப் நுஹி

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1–சிவந்த காலை யுடைய -என் மடியிலே இருக்கும் கால் போலே இருந்ததீ -நான் தலையிலே வைத்துக் கொள்ளப் புகுகிற காலும் –மட நாராய் -பவ்யமான நாராய் -உபகாரகரான உங்களுடைய காலை உபக்ருதையாய் உஜ்ஜீவிக்க இருக்கிற என் தலையிலே -இவளுடைய தலையிலே வைக்க கண்டதாய்த்து இவற்றின் கால் -இவற்றினுடைய காலை வைக்க கண்டதாய்த்து இவள் தலை -இரண்டும் பரார்த்தமாகக் கண்டதாய்த்து
கெழுமீரோ -அவனுக்கு சேஷமாக்கின போதே கடகர்க்கு சேஷமாகையாலே என் விதி கொண்டு வைக்க வேண்டா விறே -என் தலை மேலே சேரி கோளே-நுமரோடேச புத்ரஸ் பவ்த்ரஸ் ச கண-என்கிறபடியே சபரிகரமாக –ஆச்சார்ய வாதாச்சார்ய புத்தரே வ்ருத்தி –என்னக் கடவது இறே –

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3—ஓர் அறுதி பெறக் கேட்டுப் போருங்கோள் -அவர் வேணும் என்னில் -நாமும் நம் பிராணனை நோக்கவும் -அவர் வேண்டா -என்றாகில் -நாமும் ஒன்றிலே துணியும்படியும் நிச்சிதமாகக் கேட்டுப் போருங்கோள்-யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே கண்ணால் கண்ட வற்றை அடைய ஏவுகிறாள் -சிலவற்றைப் போக விட்டோம் -அத்தாலே நம் கார்யம் தலைக் கட்டும் -என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7–பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்-கலந்தார்-செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8—என் அவசாதத்தைச் சென்று சொல் என்ன -செருக்கு அடித்து இருந்தாய் நீ யன்றோ -இதுக்குச் சொன்னாளோ என்னில் கீழில் அவற்றுக்குச் சொல்லிற்று எல்லாம் இதுக்கும் சொல்லிற்று என்று இருக்கிறாள் -கலக்கத்தின் மிகுதியால்
இன்று என் அவசாதத்தைக் கண்டு தளர்ந்து இருக்கிற நீ யன்றோ அன்று செருக்கு அடித்தாய் என்றுமாம் –உன் பால்யம் நம் கார்யம் கெடுத்தது இல்லையோ-

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5—அவன் பரிகரம் போலே செருக்கி இருக்க பிறந்தி கோளோ நீங்கள் -ரக்ஷகர் தேட்டமான தசையில் ரக்ஷணத்திலே ப்ரவர்த்தியாது செருக்கு அடித்து இருக்கலாமோ -தன்னைத் தோற்றி ரஷ்ய ரஷிய நியதி அற்றது இறே-

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6–என் கார்யம்நானே தலைக் கட்ட வேண்டி -இதுக்கு உங்களை தூதாக விட வேண்டும்படி பாபத்தை பண்ணினேன் -நானும் அவனும் கூட உங்களுக்கு அபிமதம் தேடித் தருகை ஒழிய -என் அபிமதத்துக்கு உங்களைபோக விடும் படியான பாபத்தை பண்ணினேன் என்றுமாம் –

இனி இந்த பஷிகளில் அவாந்தர பேதங்களுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்வதாக திரு உள்ளம் பற்றி இதில் அன்னமாய் சொல்லுகிறது யாரை என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேலே –குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார்‌,-

விவேக முகராய் நூல் உரைத்து அள்ளலில் ரதி இன்றி அணங்கின் நடையைப் பின் சென்று
குடை நீழலிலே கவரி அசையச் சங்கமவை முரல வரி வண்டு இசை பாட மானஸ பத்மாசனத்திலே இருந்து விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் படக் குடிச் சீர்மை யிலே யாதல் பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன் மெய்நாவன் நாத யாமுன போல்வாரை அன்னம் என்னும் —சூரணை -151-

அதாவது-விவேக முகராய்–ஹம்சோ யதா ஷீர மிவாம்புமிஸ்ரம்-என்கிறபடியே – ஹம்சமானது நீர ஷீர விபாகம் பண்ணுமா போலே – சார அசார விவேக உன்முகராய்-நூல் உரைத்து – அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த–பெரிய திருமொழி -11-4-8 -என்று ஹம்ச ரூபியாய் சாஸ்திர பிரதானம் பண்ணினால் போலே – ஸ்ரோதாக்களைக் குறித்து சாஸ்த்ரங்களை உபதேசித்து-அள்ளலில் ரதி இன்றி
நபத்நாதி ரதிம் ஹம்ச கதாசித் கர்த்த மாம்பசி– என்கிறபடியே – ஹம்சமானது கர்தம ஜலத்தில் பொருந்தாது போலே – வன் சேற்று அள்ளல்–பொய் நிலத்து அழுந்தார்—திருவிருத்தம் -100-என்கிறபடி
சம்சாரகர் தமத்தில் பொருத்தம் உடையர் அன்றிக்கே –-அணங்கின் நடையை பின் சென்று –
அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
-பெரிய திருமொழி -6-5-5-என்கிறபடி ஹம்சமானது ஸ்திரீகளின் நடையை கண்டு தானும் அப்படி நடக்குகைக்காக பின் செல்லுமா போலே –
அன்ன நடைய வணங்கு-பெரிய திருமடல் -7–என்று ஹம்ச கதியான பிராட்டி உடைய அனந்யார்ஹ சேஷத்வாதிகளையும் புருஷகார பாவமாகிற நடையை அனுகரித்து –

(விவேக முகராய்‌) அன்னமாவது நீர ஷீர விபாகம்‌ பண்ணுமதொன்றாகையாலே ஸாராஸார விவேகோந்முகராய்‌. (நூலுரைத்து) “அன்னமதாயன்றங்கற நூலுரைத்த” (பெரியதிருமொழி 11-4-8) என்று ஹம்ஸ ரூபியாய்க்‌ கொண்டு ஸமாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினாப் போலே இவர்களும்‌ ஸ்ரோதாக்களைக்‌ குறித்து ஸாஸ்த்ரங்களை யுபதேஸித்து. (அள்ளலில்‌ ரதியின்றி) “ராகாதி தூஷிதே சித்தே நாஸ்பத, மது ஸூதந: நபத்‌ நாதி ரதிம்‌ ஹம்ஸ: கதா சித்‌ கர்த்த மாம்பஸி’ (விஷ்ணுதர்மம்‌ 9-11) என்று அந்த அன்னமானது கர்தம ஜலத்திற்‌ பொருந்தாதாப்‌ போலே “அழுந்தார்‌ வன் சேற்றள்ளல்‌ பொய்ந் நிலத்தே” (திருவிருத்தம்‌ 100) என்று ஸம்ஸார கர்தமத்திலே பொருத்த முடையரன்றிக்கே. (அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று) “அன்னநடைய வணங்கே” (பெரிய திருமடல்‌ 7 என்றும்‌, “அன்னம்‌ பெய் வளையார் தம்‌ பின்‌ சென்று” (பெரியதிருமொழி 6-5-5) என்றும்‌ சொல்லுகையாலே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலும்‌, புருஷகார பாவத்தாலும்‌ ஹம்ஸ கதியான பெரிய பிராட்டியாரைப்‌ பின் சென்று-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-–தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத
திர்யக்காய் – ( தானே தாழ நின்று )சாரதியாய் உபதேசித்தால் போலே ஹிதானுசந்தானம் பண்ணக்  கடவ அவனே ரஷகன் –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
 – – 100—–1-பிறப்பாம் பொல்லா –ஜன்மமாகிற பொல்லா –ஜ்ஞாநானந்த லஷணமாய் –ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து –அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –2-அரு வினை –கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து பூண் கட்டுமதாய் இருக்கை –3-மாய –ருசி வாசனைகளைப் பிறப்பிப்பதாய்–4-வன் சேறு –தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை-5-அள்ளல் –கால் இட்டால் கீழே சுரிக்கும்படியாய் இருக்கை–6-பொய் நிலம் –அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் ––பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் – என்று அந்வயம்–

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே–6-5-5—அன்னமானது பேடையோடே கூட
அங்குத்தை ஸ்திரீகள் உடைய நடை அழகைக் கண்டு தானும் அப்படியே நடக்கைக்காக பின் செல்லும்
அந்நடை அழகு தனக்கு வாராமையாலே லஜ்ஜித்து அருகே ஒதுங்கா நிற்கும் –

அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8–அன்னத்தோடு ஒத்த நடையை யுடையளாய்
சம்போகார்த்தமாக நாயகன் முன்னே நாலடி நடந்தால் அவன் இதுக்கு அவ்வருகு பின்னை ஒன்றுக்கு ஆளாகாத படி இருக்கை-அப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கை –-தேவ தாபிஸ் சமா -பால -77-30-என்கிறபடியே பிராட்டி பிள்ளைகள் மூவர்க்கும் தைவமாய் இருந்தாள் பெருமாளுக்கு மன காந்தையாய் இருந்தாள் ஆக நால்வர்க்கும் ஒக்குமாயிற்று ஆஸ்ரயணீயை யாமிடத்து –இப்படி அப்ராக்ருத ஸ்வ பாவையாய் இருக்கிற இவளும் கூட கூசும்படி அதி ஸூகுமாரமான திருவடிகள் –

குடை நீழலிலே கவரி அசைய சங்கமவை முரல வரி வண்டு இசை பாட மானஸ பத்மாசனத்திலே இருந்து —அன்ன மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் வீற்று இருக்கும் –பெரிய திருமொழி -9-1-5 -என்றும் –-செந்நெல் ஒண் கவரி அசைய வீற்று இருக்கும் -பெரிய திருமொழி -9-1-5-என்றும் –-சங்கமவை முரல செங்கமல மலரை ஏறி–பெரிய திருமொழி -7-8-2- -என்றும் –
வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் நாடும் –பெரிய திருமொழி -7-5-9-என்றும் –
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல்-பெரிய திருமொழி –என்றும் சொல்லுகிற ஹம்சமானது
மேலே எழுந்த தாமரை இலை குடையாகவும் – பக்வ பலமான செந்நெலின் அசைவு கவரியாகவும் –
சங்குகளின் தொனி ஜய கோஷமுமாகவும் – வண்டுகளின் மிடற்றோசை பாட்டாகவும் ,-பெற்று
மானஸ சர பத்மம் ஆசனமாக இருக்குமா போலே-

குடை நீழலிலே கவரி யசைய) ‘அன்னமென்‌ கமலத் தணி மலர்ப்பீடத்து அலை புனலிலைக்குடை நீழல்‌ செந்நெலொண் கவரி அசைய வீற்றிருக்கும்‌” (பெரிய திருமொழி 9-1-5) என்றும்‌, “சங்கமவை முரலச்‌ செங்கமல மலரை யேறி” (பெரிய திருமொழி 7-8-2) என்றும்‌, “வரிவண்டிசைபாட அன்னம்‌ பெடையோடுடனாடும்‌” (பெரிய திருமொழி 7-5-9) என்றும்‌ மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து அன்னமானது மேலே எழுந்த தாமரையிலை குடையாகவும்‌, பக்வ பலமான செந்நெல்லினுடைய அசைவுகள்‌ கவரியாகவும்‌ சங்குகளினுடைய த்‌வநி தூர்ய கோஷமாகவும்‌ வண்டுகளுடைய மிடற்றோசை பாட்டாகவும்‌ மாநஸ ஸரஸ்ஸில்‌ பத்‌மம்‌ ஆஸநமாகவும்‌ அன்னம்‌ இருக்குமாபோலே 

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப் பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே
—9-1-5—அன்னமானது தன் கால் பொருக்கும் படி மிருதுவான கமலத்தில் உண்டான அழகிய பீடத்தில்
அலைகிற புனலிலே உண்டான இலை யாகிற குடை நிழல் கீழே-செந்நெல் யானது சாமரம் வீச
ஐஸ்வர்யத்தால் உண்டான வ்யாவர்த்தி அடைய தோற்றும்படி இரா நின்றதாயிற்று –

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும்
செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2–செந்நெலின் உடைய  கனத்த கதிரானது கவரி வீச –அங்கே ஊருகிற சங்கங்கள் ஆனவை த்வநிக்க-செவ்வி பெற்ற அலர்ந்த தானரைப் பூவை படுக்கையாகக் கொண்டு அதின் மேல் ஏறி -அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற நிரவதிக சம்பத்தை உடைய – அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது  –

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங் கலைகள் மெலி வெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே
 –7-5-9—ஜல சர சத்வங்கள் மன்னி இருக்கிற –பழையதாய் மாறாத ஜலத்தை உடைய பொய்கைகளில் உண்டான தாமரைப் பூக்களின் மேலே மது பானம் பண்ணின தர்ச நீயமான நிறத்தை உடைத்தான வண்டினங்கள் ஆனவை – செருக்குக்கு போக்கு விட்டு இசை பாட –அதனுடைய பாட்டுக்கு சேர அன்னமானது பெடையோடே ஒக்க ஆட நிற்கும் –

அக் கமலத்திலை போலும் திரு மேனி அடிகள் –திருவாய் -9-7-3-என்று பத்ம பத்ர நிபஸ்யாமளமான திருமேனியை சம்சார துக்கார்த்த தாபம் வராத படி தங்களுக்கு ஒதுங்க நிழலாய் உடையவராய் –
அஹம் அன்னம் தைத்ரியம் -என்னும் படி பரி பக்குவ ஜ்ஞானரானவர்கள் அனுகூல வ்ருத்தி செய்ய
சுத்த ஸ்வாபவர் ஸ்துத்திக — சாராக்ராஹிகள் சாம கானம் பண்ண –-குரு பதாம் புஜம் த்யாயேத் -என்கிற படி ஆச்சார்ய சரண யுகங்களை அனவரதம் நெஞ்சுக்குள்ளே கொண்டு இருக்கும் சிஷ்யர்கள் உடைய ப்ரஹ்ம குருவுக்கு இருப்பிடமான போதில் கமல வென் நெஞ்சம்–பெரியாழ்வார் -5-2-8- -என்கிற மானஸ பத்மத்தை வஸ்தவ்யமாய் உடையராய் —

அக்கமலத்திலை போலும்‌ திருமேனி’ (திருவாய்மொழி 9-7-3 என்று பத்‌ம பத்ர நிப ஸ்யாமமான திருமேனியைத் தங்களுக்கு ஒதுங்க நிழலாக உடையராய்‌ பரிபூர்ண ஜ்ஞாநர்‌ அநுகூல விருத்திகளைப்‌ பண்ண ஸூத்‌த ஸ்வபாவர்‌ ஸ்தோத்ரம்‌ பண்ண ஸாரக்‌ராஹிகள்‌ ஸாமகாநம்‌ பண்ண, “போதிற்‌ கமல வன்னெஞ்சு’ (பெரியாழ்‌-திரு- 5-2-8) என்கிறபடியே ஸிஷ்யர்களுடைய மாநஸ பத்‌மத்தை வாஸஸ்தாநமாக உடையராய்‌-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலைபோலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக்கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்கப் பாருங்கோள் –

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார்
பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 ––போது -அறிவு-இல் -இருப்பிடம்
கமலம் -ஹிருதய கமலம்-வன்மை -அந்தர்யாமியையும் அறிய ஒட்டாத வலிமை-ஞான பிரசவ த்வாரமான நெஞ்சை இருப்பிடமாக உடைய கமலம் புகுந்தும் – இப்படிக்கொத்த நெஞ்சுக்கு உள்ளே புகுந்து திருத்தின படி

விதியினால் இடரில் அந்தமின்றி இன்பம் பட குடி சீர்மை யிலே இத்யாதி-விதியினால் பெடை மணக்கும் அன்னங்காள் –திருவாய் -1-4-3- -என்றும் –இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் –திருவாய் -6-1-4- -என்றும் – அந்தரம் ஒன்றும் இன்றி -6-8-10–என்றும் –
மிக இன்பம் பட மேவும் -9-7-10–என்றும் சொல்லுகிற படி சாஸ்த்ரோக்தமான பிரகாரத்திலே –

(விதியினால்‌ இடரில்‌ இத்யாதி குடிச் சீர்மையிலே யாதல்‌) “விதியினால்‌ பெடை மணக்கும்‌” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌, “இடரில்‌ போகம்‌ மூழ்கி இணைந்தாடும்‌ மடவன்னங்காள்‌” (திருவாய்மொழி 6-1-4) என்றும்‌, “அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையும்‌” (திருவாய்மொழி 6-8-10) என்றும்‌ “மிகவின்பம்‌ படமேவும்‌ மென்னடைய அன்னங்காள்‌” (திருவாய்மொழி 9-7-10) என்றும்‌ சொல்லுகிறபடியே வித்‌யுக்த ப்ரகாரத்திலே-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3–என் பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷிக்கும் –-பேடையின் கருத்து அறிந்து உகப்பிக்கும்-என் ஆற்றாமைக்கு மேலே -நீங்களும் பிரிந்து இருந்து -உங்களைக் கூட்டுகையிலே யத்னம் பண்ண வேண்டாது ஒழிந்தது என் பாக்யம் இறே
உங்கள் பாக்யத்தால் இறே சம்ச்லேஷமே யாத்ரையாக பெற்றது என்னவுமாம்-சம்போகத்தாலே வந்த துவட்சியால் ஆகர்ஷகமான நடையை யுடையவையாகை – தாரை யுடைய புறப்பாடு போலே இருந்ததீ உங்கள் புறப்பாடும் –

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4—விஸ்லேஷ கந்தம் இல்லாத சம்ச்லேஷ ரசத்தில் அவகாஹித்து போகத்துக்கு ஏகாந்தமான வனத்திலே போந்து சம்போகம் செல்லா நிற்க -ராவணன் வந்து தோற்றினால் போலே இருக்கை யன்றிக்கே சம்போகத்துக்கு எல்லையில் செல்லப் பெற்றப் படி-இணைந்தாடும்-ஒரு தலை நோவு பட்டு தூது விட வராதே -இரண்டு தலையும் ஓக்க களிக்கப் பெறுவதே -ஒன்றுக்கு ஓன்று பவ்யமாகக் கொண்டு சஞ்சரிக்கை – பேதைக்கு மார்த்த்வம் ஜென்ம சித்தம் -சேவலுக்கு கலவியால் அதின் படி யுண்டாயிற்று

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!

என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10—அழையாது இருக்க நீங்களே வந்து -மஹா ராஜர் இருந்த இடத்தே வந்து உபகரித்தவரைப் போலே இருந்ததீ உங்கள் நீர்மை -இருந்து -என் ஆர்த்திக்கு எல்லாம் உடன் கேடராய் இருந்து-உம்முடைய மணிச்சேவலும் நீரும்-சிலாக்யமாய் பவ்யமான சேவலும் -அப்படியே இருக்கிற நீரும் –பிரிந்து தானும் உடம்பு வெளுத்து பேடையையும் உடம்பு வெளுக்கப் பண்ணும் சேவலைப் போல் அன்றிக்கே இருக்கை -எல்லாம் -ச புத்ர பவ்த்ரம் ச கண என்கிறபடியே சபரிகரமாக-அந்தரம் ஒன்றுமின்றி -சம்போகத்துக்கு வர்த்தகமான பிரிவும் இன்றிக்கே
அலர்மேல் அசையும் அன்னங்காள்!-பூவின் மேல் கலவியால் வந்த ப்ரீதியோடே சஞ்சரிக்கிற அன்னங்காள் -மிதுனம் ஆனால் பூவிலும் சஞ்சரிக்கலாம் ஆகாதே-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-மிக வின்பம் பட மேவும் -இன்பம் கரை புரளும் படி அன்றோ நீங்கள் சம்ச்லேஷிக்கிறது-பிரிவு தேட்டமாம் படி உன்மஸ்தக ரசமாய் சொல்லுகிறபடி -விஸ்லேஷியா விடில் இரண்டு ஆஸ்ரயமும் அலியும் படி யாய்த்து இவை பரிமாறுகிற படி –
மெல் நடைய அன்னங்காள்-கலவியின் மிகுதி நடையிலே தொடை கொள்ளலாம் படி சர சஞ்சாரம் இருக்கிற படி –

சாம்சாரிக சகல துரிதங்களும் தட்டாத படியும் – ஒரு விச்சேதமும் வாராத படியும் – மென் மேலும் ஆனந்தம் அபி விருத்தம் ஆகும் படியும்-குடி சீர்மையில் அன்னங்காள்–திரு விருத்தம் -29–என்கிற படியே
பார்யா புத்ரர்களாதி யோடு இருந்து பகவத் அனுபவம் பண்ணுகிற-நளிர்ந்த சீலன் நயாசலன்–பெரியாழ்வார் -4-4-8–என்று சொல்லப் பட்ட செல்வ நம்பிமெய்நாவான் மெய்யடியான் விட்டு சித்தன்–பெரியாழ்வார் -4-9-1- -என்கிற பெரியாழ்வாரைப் போலேயும் ,-பற்று அற்றார்கள் –பெருமாள் -1-4-என்றும்
சிற்றயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார் அற்ற பற்றார் -திருச்சந்த -52-என்றும்
சொல்லுகிறபடி சம்சாரிக சகல சங்கமும் அற்று , உத்தம ஆஸ்ர்ரமிகளாய் பரம ஹம்ச சப்த வாஸ்யரான
நாத முனிகள், யாமுன முனிகள் போல்வாரையும் – இந்த குண சாம்யத்தை இட்டு அன்னம் என்று சொல்லும்
என்கை —

ஸாம்ஸாரிக ஸகல து.:க்கங்களும்‌ தட்டாதபடியாகவும்‌ ஒரு விச்சேதமும்‌ வாராதபடியாகவும்‌ மேல்மேலென ஆநந்தமபி விருத்தமாம்படி யாகவும்‌, “குடிச்சிர்மையிலன்னங்கள்‌’ (திருவிருத்தம்‌ 29) என்கிறபடியே புத்ர தாராதிகளோடே யிருந்து பகவதநுபவம்‌ பண்ணுகிற “நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌” (பெரியாழ்‌.திரு. 4-4-8) என்று சொல்லுகிற செல்வ நம்பி, “மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌” (பெரியாழ்‌.திரு. 4-9-11) என்கிற பெரியாழ்வார்‌ போல்வாரையும்‌, (பற்றற்ற பரமஹம்ஸரான ) “பற்றற்றார்‌ பயிலரங்கம்‌” (பெருமாள்‌ திருமொழி 1-4) என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கத்தையும்‌ விட்டு உத்தமாஸ்ரமிகளாய்‌ பரம ஹம்ஸராயிருக்கிற நாதமுனிகள்‌ யாமுந முனிகள்‌ போல்வாரை அன்னம்‌ என்கிறது என்கிறார்–

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே 
–29—குடிப் பிறப்பால் வந்த சீர்மை–அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி–குடிச் சீர்மையாவது-அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை-அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ-அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி – ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –-அதுக்கு அடி -வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான் –  என்றும் – ஆளாராய்த் தொழுவாரும் அமரர்கள்-என்றும் துர் மாநியான  ருத்னனும் -சாவாமைக்கு மருந்து தின்னும் தேவ ஜாதியும் இறே இவனுக்கு அடிமை செய்வது-நயா சலன்
நயம் -என்று நீதியை சொல்லுகிறது-அங்கும் –நீதி வானவன் -என்னக் கடவது இறே-அசலன் –
நீதிக்கு குலைதலிலாதவன்–சேஷ சேஷி பாவ சம்பந்தம்-ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் –என்கிற படி அடைவு பட்டு இறே அங்கு இருப்பது-

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11–மெய்யே  சொல்லும் நாவை உடையவன் –அசத்தியம் எனபது ஒன்றும் கலவாத நாவை உடையவன் -என்கை
பொய் மொழி ஒன்றில்லா மெய்ம்மையாளன் -என்னுமா போலே –இத்தால் ஸ்ரீ பகவத் வைபவம் 
ஸ்ரீ தேச வைபவம் கீழ் அருளிச் செய்தவை ஒன்றிலும் ஒரு பொய் இல்லாமை சொல்கிறது-மெய்யடியான் –அநந்ய பிரயோஜனான அடியான்-அடியான் என்று பேர் இட்டு பிரயோஜனத்துக்கு அடி ஏற்கும் அவர்கள் பொய் அடியார் இறே – சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால் – சேஷிக்கு அதிசயத்தை விளைக்கும் அது ஒழிய ஸ்வ அதிசயம் தேடுகை சேராது இறே-அங்கன் இன்றிக்கே சேஷிக்கு மங்களத்தை ஆஸாசித்து கொண்டு திரியும் ஸ்வபாவர்  ஆகையாலே தம்மை மெய்யடியான் என்கிறார்-இவை இரண்டும் தாம் அருளிச் செய்த வசனங்களை அப்யசிப்பார்க்கு ஆப்திக்கு உடலாக அருளிச் செய்தார் ஆய்த்து-விட்டு சித்தன் அரவத்த அமளிப் படியே ஸ்ரீ சர்வேஸ்வரனை தம் உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கிறவர்

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4—தன்னையே பற்றி புறம்புள்ளவற்றை அநந்ய பிரயோஜனர் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற நாதனை-நாத் தழும்பு ஏறும்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி-கை தழும்பு ஏறும்படி புஷ்பாத் யுபகரணங்களைப் பணிமாறி அஞ்சலி பண்ணப் பெறுவது என்றோ –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52—புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய் பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் – சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளி செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்–சூரணை-152-

அதாவது-என் பெறுதி என்ன பிரமியாது-கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரியாழ்வார் -8-4-5 – என்று நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் _-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி -4-3-9-என்று தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும் சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –-த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி – ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி- மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

(என்பெறுதியென்ன ப்‌,ரமியாது) ஏரார்‌ மலரெல்லாமூதி நீ என்பெறுதி (பெரிய
திருமொழி 8-4-5) என்று நிவர்த்திப்பிக்க வேண்டாதபடி அப்ராப்த போக்யங்களிலே
ப்ரவணரன்றிக்கே, (உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்‌) “உளங்கனிந்தருக்கும்‌ பெரிய திருமொழி 4-3-9) என்று அடியவர்‌ தங்கள்‌ உள்ளத்துள்‌ ஊறிய தேனை ( பகவத்‌ விஷயத்திலே பக்வமான ஸ்நேஹத்தை உடையராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுள்ளத்திலே ஊறியிருப்பதாய்‌ “ஸாஹிஸ்ரீரம்ருதாரகிற மதுவை ஸதாம்‌” என்று நிரதிஸய போக்‌யமான பகவத்‌, குணமாகிற மதுவை “தவாம்ருதஸ்யந்திநி” என்று தொடங்கி “மதுவ்ரதோ நேஷுரகம்‌ ஹி வீக்ஷதே (ஸ்தோத்ர ரத்நம்‌ 27) என்கிறபடியே புஜிக்கையே வ்ரதமாக உடைத்தாய்‌.-

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ —8-4-5–ஒன்றிலே உன் அபேஷை குறைவறக் கிடக்கிறது அன்றே – நிறம் கொண்டு பிரமிக்கிற இத்தனை இறே உள்ளது – எங்கும் புக்கும் ஆத்ம ரஷணம்  பண்ணினாய் -என்னும் வார்த்தை கேட்கப் பெற்றிலையே –பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9–ஸ்ரமஹரமான வடிவை எனக்கு முற்றூட்டாக்கினவனே -என்று நினைத்து ஹிருதயமானது பக்வமாய் இருக்கும் சேஷ பூதர் இடைய ஹிருதயத்தில் ஊறிய தேன் போலே நிரதிசய போக்யன் ஆனவனை-

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே |
|-ஶ்லோகம் 27 –-அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம், வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

தூ மது வாய்கள் கொண்டு — சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு -என்று பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த – ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே இத் தலையில் போக்யத்தை அனுபவித்து

(தூ மது வாய்கள்‌ கொண்டு) “தண்டுளவமுண்ட தூமது வாய்கள்‌ கொண்டு” (திருவாய்மொழி 6-8-3) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்கையாலே பரி ஸூத்‌தமாய்‌ இனிதான வாயைக்‌ கொண்டு. (குழல்‌ வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்து) “ஓடிவந்தென்‌ குழல்‌ மேல்‌ ஒளிமாமலர்‌ ஊதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, “வைகுந்த மன்னாள்‌ குழல்வாய்‌ விரைபோல்‌ விண்டு கள்வாரும்‌ மலருளவோ நும்‌ வியலிடத்தே” (திருவிருத்தம்‌ 55) என்றும்‌, மணிவண்டு வகுளத்தின்‌ மலர்மேல்‌ வைகு” (பெரிய திருமொழி 6-6-1 என்றும்‌, ‘நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்பினன்‌” (திருவாய்மொழி 4-10-11) என்றும்‌ பரத்வாதி களிலே போக்‌யதையையும்‌ பரிச்சிந்ந மென்னும்படியாய்‌ பகவதநுபவ ஜநித ப்ரீதியாலே விஸ்த்ருதமாயிருக்கிற ஆழ்வாருடைய போக்‌யதையை புஜித்து.-

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—சாரார்த்தியம் பண்ணும் போது வைத்த வளையத்தில் மது பானம் பண்ணின -அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைக்கிலும் அவ்வஸ்தையை பிராப்பித்து அனுகூலிக்கிறது-திருத் துழாயாக கடவது-தூமது வாய்கள்கொண்டே.–அம்மதுவை பானம் பண்ணுகையாலே சுத்தமாய் தேனை யுடைய வாய்களோடே கூட -இனிதான பேச்சை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் -வாய் -வார்த்தை –த்ருஷ்டா சீதா என்றால் போலே -என்னையும் மது பானம் பண்ணுவித்து நீங்களும் மது பானம் பண்ணுங்கோள்-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11–நாள் தோறும் கமலா நின்றுள்ள திரு மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையவர்-நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் சம்சாரிகள் கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளம் வாடின வாறே இட்ட மாலையும் வாடிற்று-பகவத் பரத்வத்தை உபதேசித்து -இவர்களுக்கு ஒரு குறை இல்லை -என்று திரு உள்ளமுகந்தவாறே அதுவும் செவ்வி பெற்றது

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
–55–வைகுந்தம் அன்னாள் –காதா சித்தமாக அவன் வந்து ரஷித்து போம் இவ் விபூதி போல் அன்றியிலே –அவன் சதா சன்னதி பண்ணுகிற அவ்விபூதியோடு ஒத்து -உள்ளவள் இறே இவள் – தன் சன்னதியிலே வேறு ஒன்றின் உடைய போக்யதை நெஞ்சில் படாதபடி இருக்கும் அவன்–இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம் போலே இருக்கிறவளுடைய–குழல்வாய் விரை போல்–புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே (கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )-விண்டு எங்கும் ஒக்கப் பரம்பி-கள் வாரும்-மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்-மலருளவோ நும் வியலிடத்தே-நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ-

தே தெனவென்று ஆளம் வைத்து – வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் –பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியேஇப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

தேதெனவென்று ஆளம்‌ வைத்து) வரி வண்டு தேதெனவென்று இசைபாடும்‌” (பெரிய திருமொழி 4-1-1) என்றும்‌, “யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌ அரங்கம்‌” (பெரியாழ்‌.திரு. 4-8-6 என்றும்‌ இப்படி பகவத்‌ பாகவத குணங்களை அனுபவித்து உண்டான செருக்குக்குப்‌ போக்குவீடாக ஆளத்தி வைத்து,

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4
-1-1-வரியை உடைத்தான வண்டானது முக்தர் சாம கானம் பண்ணுமா போலே தேதென என்று இசை பாடா நின்றுள்ள திருத் தேவனார் தொகை-

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே 
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்  
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து   
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே –
யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய -வண்டின் உடைய திரள் ஆனவை
பாடுகைக்கு அடிக் கொண்டு  தென தென என்று ஆளத்தி வையா நிற்கும்   அரங்கமே

சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் — (இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி – வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு ) அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும் –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –-எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி –பெரியாழ்வார் -4-8-8–என்றும்-வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –-கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் – என்கிறபடியே காலோசிதமான பண்களை –-பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

(சிறுகாலெல்லியம் போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக் கொள்ளப்‌ பாடி) “அறுகால்‌ வரிவண்டுகள்‌ ஆயிரநாமஞ்சொல்லி சிறுகாலைப்‌ பாடும்‌”, (பெரியாழ்‌.திரு. 4-2-8)-எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான்‌ குணம்‌ பாடும்‌” (பெரியாழ்‌- திரு- 4-8-8 “வண்டு குறிஞ்சி மருளிசைபாடும்‌” (பெரிய திருமொழி 2-1-2), “வண்டினங்கள்‌ காமரங்களிசைபாடும்‌” (பெருமாள்‌ திருமொழி 8-4), “கந்தாரமந்தேனிசைபாட” (பெரிய திருமொழி 3-8-1), “பண்கொள் தலைக்‌ கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2 என்று காலோசிதமான பண்களிலே பண்கள்‌ தலைமேற்‌ பொரும்படி பாடி,

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும்
தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8—ஷட் பதங்களான அழகிய வண்டுகள் –
இத்தால் இவற்றின் உடைய ரூப குணங்கள் சொல்லிற்று–தேவோ நாம சகஸ்ரவான் -என்று(பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் ) அவனுடைய ஆயிரம் திரு நாமங்களையும் சத்வோத்தரமான காலத்திலே ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடா நிற்கும்

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் 
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்  
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி 
மல்லிகை வெண் சங்கூதும்
மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8—அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும் -(4-2-8)–என்றாரே அங்கே  இங்கே இப்படி அருளிச் செய்கிறார் –இத்தால் 
திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் வண்டுகள் ஆனவை -கால அனுகுணமாக பண்களிலே  பகவத் குணங்களை நியமேன பாடும்படி சொல்லுகிறது – -அந்திப் போதிலே  -பெரிய சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை –பகவத் பிரவணமான விஷயங்களுடைய ரூப குணங்களும் உத்தேஸ்யம் என்று இருக்குமவர் ஆகையாலே இவற்றினுடைய சிறகை வர்ணித்து கொண்டு  அருளிச் செய்கிறார் –சர்வ ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய கீழ் சொன்ன ஆஸ்ரித ரஷணங்களால் உண்டான திவ்ய குணங்களை ப்ரீதி ஹர்ஷத்தாலே பாடி  -மல்லிகை பூவாகிய வெள்ளிய சங்கை ஊதா நிற்கும் –அதாவது – சாயங்கால புஷ்பமான மல்லிகையினுடைய பூவை அது இருந்து ஊதும் போது  அந்த பூவானது அலருவதுக்கு முன்பு – தலை குவிந்து – மேல் பருத்து – காம்படி நேர்ந்து -வெளுத்த நிறத்தை உடைத்தாய் -சங்கு  போலே இருக்கையாலே  வெள்ளிய சங்கை இருந்து ஊதுமா போலே இருக்கும் ஆய்த்து –அத்தைப் பற்ற இப்படி  அருளிச் செய்கிறார் 

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-குறப் பெண்களோடு கூட வண்டுகள் ஆனவை குறிஞ்சி இந்தளம் என்கிற பண்ணைப் பாடா நிற்கிற –

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கரு மா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1–பார்த்த பார்த்த இடம் எங்கும் காந்தாரம் என்கிற பண்ணை-அந்தேனை உண்டு தர்சநீயமான வடிவை உடைத்தாய் -தேன் என்று பேரை உடைத்தான வண்டுகள் ஆனவை மதுபானம் பண்ணி இசை சொல்ல –அதனுடைய பர்யந்த்தே சம்ச்லேஷத்தால் ஹ்ருஷ்டமாய் களிக்கிற வண்டுகள் ஆனவை –நிரம்பா மென் சொல்லாலே ஆலத்தி வைக்க-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2–பண்கள் உஜ்ஜவலமாம் படி -என்னுதல் -ஹர்ஷத்தாலே ஒரு பண்ணிலே எல்லாப் பண்ணும் கூடும்படி அடைவு கெடப் பாடி என்னுதல் –

துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு- அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )-பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க – நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி- திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே – அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற – பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி – வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –-நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

(துன்னிட்டு நெருக்கி நீக்கென்று ) “துன்னிட்டுப்‌ புகலரிய வைகுந்த நீள்வாசல்‌” (பெருமாள்‌ திருமொழி 4-3), “சுந்தரர்‌ நெருக்க விச்சாதரர்‌ நூக்க” (திருப்பள்ளியெழுச்சி 7) என்றபடி திருவாசல்களிலே “நேச நிலைக் கதவம்‌ நீக்கு” திருப்பாவை 16) என்றும் “பொன்னியலுமாடக்‌ கவாடம்‌ கடந்து புக்கு” (பெரியதிருமடல்‌ 73) என்கிறபடியே தகைவறப்‌ புக்கு (வண்டொத்திருண்ட குழலிலே மங்கையற மருவி) “நீ மருவி அஞ்சாதே நின்று” (திருநெடுந்தாண்டகம்‌ 26) என்று பாடுமவர்களாகையாலே ஸங்கையற பகவத்‌ ஸமீப வர்த்தியாய்‌ மருவி-

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய
வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3—பின்னப் பட்ட சடையான் என்னுதல் –
பின்னே நாலப்பட்ட சடையான் -என்னுதல்-பின்னே வர்த்திக்கக் கடவன் இறே புத்ரன்-அப்படியே ப்ரஹ்மாவின் பின்னே நிற்கும் சடையான் என்னுதல் –இவனுக்கு ஜனகனான ப்ரஹ்மாவும்-ச ப்ரஹ்ம ச சிவ -என்றால் இவர்களோடு ஒக்க – சேந்திர-என்னும்படியான இந்த்ரனும்-ஒருவருக்கு ஒருவர் முன்பு போக வேண்டி இருக்கையாலே புக வரிதாய் இருக்கிற வைகுந்த நீள் வாசலிலே –

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7—சுந்தரர் நெருக்க)தேவ ஜாதியிலே ஒரு பே,தம். ” சுந்தரம்’ என்று அழகாய் அத்தாலே பாடுவாரென்னவுமாம். சுந்தரரென்று கந்தர்வர்,(விச்சாதரர் நூக்க) அதிலே முன்கை வலியராயிருப்பார் சிலர்.

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்–16-அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு எங்களால் தள்ளப் போகாது நீயே திறக்க வேணும் – என்கிறார்கள்-கம்சன் பரிகரம் அடைய பிரதி கூலமாய் இருக்குமா போலே திருவாய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியிலே எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது-படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்னுமா போலே –அணைய ஊர புனைய –ஸ்தாவர ஜென்மங்களை பெருமக்கள் ஆதரிப்பார்கள் அன்றோ–

மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74–மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –அவன் காண்கை-
அவ வாளம் காலை தப்பின படி பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை என்னுடைய படபாக்னி குளிர –

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து  இருண்ட  குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 –அழகு பொருந்தி இருந்துள்ள வண்டு போலே
சுருண்டு இருண்டு இருக்கிற குழல்களை வாராய்-

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26—ஆ மருவி நிரை மேய்த்தவன் ஆகையாலே திர்யக் ஜாதியான உனக்கு முகம் தரும் நீ சென்று கிட்டி –நீ மருவி –
என்னைப் போல் அவனுடைய ஸ்லாக்கியத்தைக் கண்டு வைத்தும் அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே-என்று அவர் பக்கலிலே அதஸ்மிம் ஸ்தத் புத்தி பண்ணி -பிற்காலியாதே அவனோடு பொருந்தி –அஞ்சாதே நின்று- அமரர் கோமானாய் இருக்கிற படியைப் பார்த்து அஞ்சாதே ஆ மருவி நிரை மேய்த்த படியைப் பார்த்து தரித்து நின்று –அங்கன் இன்றியே-அஞ்சாதே நின்று –-மகிஷி பக்கலில் நின்றும் வந்தார்கள் என்று தோற்றும் படி மேலிட்டு நின்று வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள் ஆகவுமாம் – மேலிட்டு வார்த்தை சொல்லும் போதே என் பக்கல் நின்று வருகிறார்கள் என்று இருக்கும்-

அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் , இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே – இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-என்கிற படியே
அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள் வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

(அருளாதயாமென்று ஓடிவந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” (திருவாய் 1-4-6) என்றும்‌, யாமிதுவோ தக்கவாறு (திருவாய்மொழி 6-8-4) என்றும்‌, “ஓடிவந்தென்‌ குழல்மேல்‌’ (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில்‌” (பெரிய திருமொழி 11-1-9) என்றும்‌ இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து அவனுடைய விஷயிகாரத்தை இத்தலைக்குண்டாக்க இத்தலையில்‌ ஸெளமநஸ்யத்தைத்‌ தாங்களநுபவித்து அத்தலையில்‌ போக்‌யதையாலே இத்தலையை ஆஸ்வஸிப்பித்து–

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-அவள் பக்கல் அருளக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்து இருக்கிற நீர் -மயர்வற மதிநலம் அருளினன்-என்று ஓரடி போகமாட்டாதே நெஞ்சு உருகின இவர்-அருளாத நீர் என்னும் போதைக்கு என்ன அபஸ்மார விசேஷம் அறிகிலோம் -என்று பிள்ளான் – அருளாத நீர் என்று திரு நாமம் சாற்றுகிறாள் -என்று சீயர்-அவள் தய நீய தசையைக் கண்டு அருள வேணும் – இதுக்கு முன்பு இப்படி தய நீயர் இல்லாமையாலே கிருபை பண்ணாது இருக்கிற நீர் என்னவுமாம்

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-நாம் தக்கோரான படி இதுவோ -என்னுங்கோள் -ஸ்த்ரீவதம் பண்ணிப் போந்து -பிரிவு அறியாத அந்தரங்கருக்கு ஓலக்கம் கொடுத்து ஆன்ரு சம்சயம் கொண்டாடிக் கொண்டு இருக்குமதுவோ தக்கோர்மை-அப் பேர் ஓலக்கத்தில் பெரிய மதிப்பனைக் கண்டு வைத்து இப்படிச் சொல்ல வேணுமோ என்னாதே இவ்வார்த்தை இத்தனையும் சொல்ல வேணும் –வாசா தர்மம் அவாப் நுஹி–கலந்து வைத்து பொகட்டு போனவனில் காட்டில் -ஆற்றாமையை முகம் காட்டின உங்கட்க்கு இத்தனையும் செய்ய வேண்டாவோ-

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—முன்பே அவற்றின் வார்த்தை கேட்க்கையில் உண்டான த்வரையாலே யாதல் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான த்வரையிலே யாதல் -சடக்கென வர வேணும் என்கிறாள்-என்குழல்மேல்-அவனோடே போக சாம்யம் உண்டாம் படி பண்ணைக் கடவேன் -அவன் தனக்கு தூது போனவர்களுக்கு ததிமுகன் காத்து இருக்கிற காவல் காட்டை அழிக்கக் கொடுத்தான் இறே -அவன் காவல் காட்டை அழிக்க தருகிறேன் உங்களுக்கு -என்கிறாள் –அஹமாவாராயிஷ்யாமி யுஷ் மாகம் பரிபந்தின-என்று திருவடியைப் பற்றி அழிக்கவும் வேண்டா விறே -இவளுடைய ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து இருக்கிற படி -உங்களுடைய வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலிலே –ஒளிமாமலர் ஊதிரோ?-ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் பண்ணீரோ –ஊதிரோ?-மதுவின் ஸம்ருத்தியாலே கிண்ணகத்தில் இழிவாரைப் போலே இழியமாட்டாதே நின்று பறக்கிற படி -உங்கள் காரியமுமாய் பர ரக்ஷணமும் ஆனால் ஆறி இருக்கிறது என் என்கை-

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –
11-1-9–அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும் பழைய நிறம் வருவதுவும் 

வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –கொங்குண வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே – அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி – கருட வாஹனாய் ,சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —-சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் – பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி — லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை
இக் குண சாம்யத்தாலே ,வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–-தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே .. ஓர் அவாந்தர பேதம் — ஆகையால் இறே –வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும் பிரிய அருளிச் செய்தது-

(வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌) “கொங்குண் வண்டே கரியாக (பெரிய திருமொழி 9-3-4) என்று ஸாகாக்ர ஸாராஸார க்‌ராஹியாய்‌ ஷட்பத நிஷ்டராய்‌ பக்ஷத்‌ வயத்தை உடைத்தாகையாலே அப்ரதிஹதக தியான மது கரத்தை முன்னிட்டு ௮ங்‌கீ கரிப்பானுமாய்‌ ‘தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வவண்டு’ (திருவாய்மொழி 9-9-4) என்று வேதாந்தவேத்‌யனாய்‌ “தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வர: என்கிற ஸார க்‌ராஹியாயிருக்கிற ஈஸ்வரனோடே சேர்க்கிற “சேமமுடை நாரதனார்‌’ (பெரியாழ்‌.திரு. 4-9-5) என்று பகவத்‌ குணாநுபவ ஜநித ஹர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கிற ஸ்ரீநாரத ப்‌ரஹ்மருஷி, முநிவாஹநரென்கிற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி பாடுகையே தங்களுக்கு போக்‌யமாயிருக்கிற தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பி என்னும்‌ என்கிறார்‌. இவர்களை ஸ ப்‌ரஹ்மசாரிகளென்கிறது அநுபாவ்ய விஷயத்தில்‌ ஐக்யத்தினாலே-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே —-9-3-4–தானும் யானுமே என்னும் படிக்கு ஈடாக வந்தான் –(வண்டு -அவன் கோஷ்ட்டி -துளஸீ பீதாம்பரம் போல் அவன் உடனே இதுவும் சேர்த்தி –
பொதுவான சாக்ஷி இல்லையே-கடக சமாஸ்ரயணம் பண்ண வில்லையே – )தன் வளையத்திலே மது பானம் பண்ணுகிற வண்டே சான்றாம்படி வந்தான்-உபவாச க்ருசர் முகம் பார்த்து வார்த்தை சொல்லார்கள் இறே சுகமே ஜீவித்து இருக்கும் இவர்கள்-அவை உண்டு உடுத்து சுகமே காலம் போக்குகிறன விறே-நக்குண்டார் நாவிழார் -என்று அவன் பக்கலிலே ஜீவித்தவை நமக்காக வார்த்தை சொல்லுமோ –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-பெரிய திருவடியை யுடைய-தெய்வ மாகிற வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய பெண்மையாகிற பூ -ஏவம் விதமாய் ஏவம்விதமாய் நலிவு படா நின்றது –படுக்கை பாதகம் ஆனவாறே புறம்பே புறப்பட்டாள் -ஸ்வரூப அனுபந்தியான ஸ்த்ரீத்வம் சிதிலமாகத் தொடங்கிற்று —தூவி -சிறகு -அழகிய சிறகை யுடையனாய் தர்ச நீய வேஷமான பெரிய திருவடியுடைய முதுகிலே வந்தாயத்து ஸ்த்ரீத்வத்தை அழித்தது -கருட வாஹனன் இ றே பரதேவதை யாவான் –இது என்கிறது -ஸ்த்ரீத்வம் அழிந்த படி பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறது-

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்  அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார்   சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –சேமம் -ரஷை-சேமம் உடையன் ஆகையாவது – கர்ம பாவனை அன்றிக்கே பிரம பாவனா நிஷ்டனாய் இருக்கை-நாரதனார் -என்றது –சர்வ சம்சய நிர்முக்தோ  -நாரதஸ் சர்வ தர்ம வித் -என்று ஞான ஆதிக்யத்தாலும் – பகவத் சன்னதியிலே வந்தவாறே பாடுவது ஆடுவது ஆக நிற்கும் பிரேம அதிசயத்தால்  உண்டான
கௌரவ அதிசயத்தாலே –

கிளி பூவை முதலானவகையாக சொல்வது -யாரை என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேலே —

கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு ஒருமிடறாய்ப்‌ போற்றி ஒரு வண்ணம்‌ திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும்‌ நீயலையே நல்வளம்‌ துரப்பனென்னு மவற்றுக்கும்‌ உகந்து சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்‌ கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர்‌ தலைமீதடிப் பொடி உடையவருடையார்‌ போல்வாரைக்‌ கிளி பூவை குயில்‌ மயிலென்னும்‌.–சூரணை -153-

அதாவது –கண் வலைப் படாதே அக வலைப் பட்டு –மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு -திருமாலை -16–என்று ஸ்திரீகளுடைய த்ருஷ்டியாகிற வலையுள் அகப் பட்டு அனர்த்தப் படாதே –
தாமரை தடம் கண் விழிகளின் அகவலை படுவான் –திருவாய்மொழி–6–2–9–என்கிற படியே-
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் சர்வேஸ்வரனுடைய தாமரை போன்ற திரு கண்களின்
நோக்காகிற வலைக்குள்ளே அகப்பட்டு –

“மாதரார்‌ கயற்கணென்னும்‌ வலையுள்‌ பட்டு” (திருமாலை 16 என்று இதர விஷயங்களினுடைய த்‌ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதே “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றும்‌ “யம்‌ பஸ்யேத்‌’ என்றும்‌ ப்ரேக்ஷ்யே கஞ்சித்‌ கதாசந என்றும்‌ “அமலங்களாக விழிக்கும்‌ திருவாய்மொழி 1-9-8) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல பாப க்ஷபண நிபுணங்களாய்‌ ஸம்ஸார தாபமெல்லாம்‌ ஆறும்படி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரைப்‌ பூப்போலே யிருக்கிற பகவத் கடாஷமென்கிற வலையிலே அகப்பட்டு –

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-ஸ்திரீகள் உடைய கயல் போலே முக்தமாய் இருந்துள்ள கண்ணாகிற வலையிலே அகப்பட்டு கால் வாங்க மாட்டாத என்னை –ஜாதி மாத்ரமே பற்றாசாக மேல் விழும் அது ஒழிய ஜன்ம வ்ருத்தங்களாதி அறியான் – கண்ணின் உடைய ஆகர்ஷகத்வமே அறியும் அத்தனை – அகவை மயிர்க்கத்தியாய் -இவனை ஒழிய தங்களுக்கு செல்லாமை தோற்றும்படி யாய்த்து பார்ப்பது –கண் என்று பேரால் – வலையின் கார்யமே யாய்த்து பலிப்பது – இது தானும் மணி வலை இறே-கண்ணுக்குளே மணியும் உண்டு இறே-அத்தைப் பற்றி வலை என்கிறது – புறம்பு கால் ஒண்ணாதபடி கண்ணைக் காட்டி தான் கிட்டாதே அகல நிற்கும்-அதுக்கடி கிட்டினவன் அபிநிவேசத்தோடே போக உபகரணங்களைக் கொண்டு இழிந்த இவன்
தனக்கு ச்நாநீயம் கொண்டு புறப்பட வேண்டும்படி இவன் தண்மை இருப்பது – இவன் தான் அவிவிவேகி ஆகையாலே அகவை ஆராய மாட்டாதே வாய்கரையிலே அழுந்தி நோவு படா நிற்கும் –வலையுள் பட்டு அழுந்துவேனை – மீண்டு கால் வாங்க ஒண்ணாது-அது தன்னில் அனுபாவ்யம் ஓன்று இல்லை கிடந்தது உழைக்கும் இத்தனை விஷய பிராவணயத்தால் சித்தித்தது கிலேசமேயாய் விட்டது –

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்

வளர்த்து எடுப்பார் கை இருந்த –-(கிளி வளர்க்கிறவர்கள் கையில் இருப்பது போலே ஞானமூட்டிய ஆச்சார்யர் ஆதீனத்தில் இருப்பவர்கள் என்றபடி ) வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் தாண்டகம் -14-என்றும் ,-எடுத்த என் கோலக் கிளியை –நாச்சியார் திருமொழி -5–5–என்றும் ,
மங்கைமார் முன்பு என் கை இருந்து –திருவாய்மொழி-6-8-2—என்றும் சொல்லுகிறபடியே ஸ்வரூப வர்த்தகராய் உபலாலித்து நோக்கிக் கொண்டு – இட்டமாக வளர்த்து எடுத்துப் போருமவர்கள் கை வசமாய்-

(வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து) “வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ ‘திருநெடுந்தாண்டகம்‌ 14) என்றும்‌ ‘ எடுத்தவென்‌ கோலக்‌ கிளி” நாச்சியார்‌ தி மொழி 5-5) என்றும்‌, மங்கைமார்முன்பென்கையிருந்து” (திருவாய்மொழி 6-8-2 )என்றும் உபலாலித்து ரக்ஷிக்கிறவர்களுடைய கை வஸமாய்‌

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய்  நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -14-இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் – ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான்-அத் தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5–பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் – அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் – தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம் கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-அவனுக்கு தன்னேராயிரம் பிள்ளைகள் போலே இவளுக்கும் தன் பருவத்தில் தோழிமார் உண்டாய் இருக்கிறதாயிற்று-முன்பு-எல்லாரும் சூழ இருந்து கொண்டாட-என்கை இருந்து-அவர்கள் ஆதரிக்க விட்டுக் கொடேன் -அவர்கள் ஓலக்கம் இருக்கும் அத்தனை -என் கையிலே இருக்க வேணும் – என்கை இருந்து-தன் கையை மதித்த படி –அடிச்சியோம் தலை மீசை நீ அணியாய்-என்கிறது அவனுக்கும் உண்டாகையாலே அவன் தலையில் இருக்கக் கடவ கை –அத்தை உங்களுக்கு பாத பீடம் ஆக்கக் கடவேன் -உபய விபூதியையும் கொள்ளுங்கோள் என்றார் கீழ் –உபாயவிபூதி உக்தன் தலையிலே இருக்கக் கடவ கையை உங்களுக்கு பாதபீடம் ஆக்கக் கட வேன் -என்கிறாள் இதில் –

தயிர் நெய்யமர் பாலமுதுண்டு –-தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து -திருவாய்மொழி–9-5-8–என்றும் – நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –-திருவாய்மொழி–6-8-2-என்றும் –
இன்னடிசிலோடு பாலமுதம் ஊட்டி –நாச்சியார் திருமொழி -5–5-என்றும்- சொல்லுகிறபடி -அவர்கள் காலோசிதமாகவும் -பாக அனுகுணமாகவும் – உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் –ஸ்ரீ கீதை –4–34–என்கிறபடியே உபதேச முகேன தாரக போக்யங்களான பகவத் குணாதிகளை அனுபவிக்க அனுபவித்து- ஒரு மிடறாய் –ஆச்சர்யர்களோடு ஏக கண்டராய்-

தயிர்ப்பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” (திருவாய்மொழி 9-5-8) என்றும்‌ “நெய்யமரின்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடும்‌” (திருவாய்மொழி 6-8-2) என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” (நாச்சியார்‌ திருமொழி 5-5) என்றும்‌ சொல்லுகிறபடியே அவர்கள்‌ காலோசிதமாகவும்‌, பாகாநுகுணமாகவும்‌ “உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்‌” (கீதை 4-34) என்கிறபடியே பகவத்‌ குணங்களை ஆசார்யர்கள்‌ அநுபவிப்பிக்க அநுபவித்து (ஒருமிடறாய்‌) ‘ஆசார்யர்களோடு ஏக கண்டராய்‌,

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8–தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2–நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்யமிஸ்ரமாய் பால்முடிவான சோறு -இன்னடிசில் -எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி -என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது-இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் – அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந
:-4-34-அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.-உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

போற்றி ஒரு வண்ணம் திருந்த –-போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூம் குயில்காள் -திருவாய்மொழி–6-1-6–என்றும் – ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஓன்று உரை ஒண் கிளியே –திருவாய்மொழி–6-1-7–என்றும் – திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -திருவாய்மொழி–6-1-8-என்றும் கடக புத்தி பண்ணி ஆதரித்த தசையிலும் –

(போற்றி ஒருவண்ணமித்யாதி) போற்றியானிரந்தேன்‌ புன்னைமேலுறை பூங்குயில்காள்‌’ திருவாய்மொழி 6-1-6) என்றும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண்கிளியே” திருவாய்மொழி 6-1-7) என்றும்‌, “திருந்தக்‌ கண்டெனக்கொன்றுரையாய்‌ ஒண்சிறு பூவாய்‌ ்‌ (திருவாய்மொழி 6-1-8) என்றும்‌ ஆதரித்துக் கொண்டு போந்த தஸையோடு,-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-புன்னையின் கீழே நின்று குயில்களுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறாள் -ஏகாந்தமாக அனுபவிக்கிற சேர்த்தி நித்தியமாக வேணும் -தன் ஆர்த்தி கண்டு இரங்குகைக்கு பாசுரம் இது என்று இருக்கிறாள் –-யான் இரந்தேன் -ஸீதாம் உவாஸ-என்கிறபடியே புருஷகாரத்வாரா -எல்லாராலும் இரக்கப் படும் நான் இரந்தேன் -நியமிக்கிறேன் அல்லேன் -இரக்கிறேன்-இரப்பார் கார்யம் செய்து தர வேணும் என்னும் நினைவாலே-புன்னை மேலுறை பூங் குயில்காள்! வைமா நிகரைப் போலே மனுஷ்ய கந்தம் தட்டாத படி உயர வர்த்திக்கை -இசை இ றே உயர்த்தியை காட்டுகிறது -நெய்தல் நிலத்தில் புன்னை படர்ந்து அன்றோ இருப்பது என்னில் –பணைத்து ஓங்கி இருக்கும் என்கிறது –வானார் வ ண் கமுகு என்றும் சேண் சினை ஓங்கு மரம் -என்றும் சொல்லுகையாலே -நெருப்பிலே சஞ்சரிப்பாரை போலே புன்னைப் பூவிலே வர்த்தியா நின்றன -அக்னி ஸ்தம்பனம் யுடையார்க்கு வர்த்திக்கலாம் இறே-உறை -பூவின் மேலே நித்ய வாசம் பண்ணா நின்றன –நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நே மான் புஷப பல த்ருமான் என்று ராக்ஷஸே தர்ச நத்தோபாதி நினைத்து இருக்கும் தன்னைப் போல் அன்றே கலவியால் உள்ள புஷ்கல்யம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை –

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7–வழியிலே நெஞ்சை அபஹரிக்கும் போக்யதையை யுடைத்து அதில் கால் தாழாதே ஒருபடி சென்று புக்கு –ச ததந்த புரத்வாரம் சமதீத்ய -என்னுமா போலே ஐஸ்வர்ய தரங்களாலே புகுகை அரிது வருந்தி புக்கு என்னவுமாம் –இப்போது முதலிகள் பிரம்பு வந்து விழும் அதுக்காக பிற்காலியாதே மேல் விழுங்கோள் என்கை எனக்கொன்றுரை; ஒண்கிளியே!நிவேதியத மாம் -என்கிறபடியே வடிவைக் காட்டுகிறாள் -அங்குத்தை வார்த்தை கேட்டால் அல்லது தரிக்க மாட்டாது எனக்கு -ஒரு நல் வார்த்தை சொல்லு – சஹசரத்தோடே கூடி இருக்கையாலே அழகு பெற்று இருக்கிற கிளியே -மௌக்த்யமும் பேச்சும் வாயில் பழுப்பும் வடிவில் பசுமையும் அவனோடு போலியாய் இருக்கையாலே உன்னைக் கண்டு கொண்டு இருக்க அமைந்தது என்றுமாம் –

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8—பிறருக்கு சொல்லலாம் படி விசதமாகக் கண்டு-எனக்கு ஒன்றுரையாய்; -நீ வந்து சொல்லும் வார்த்தை கேட்டால் தரிக்க இருக்கிற எனக்கு -ஒரு வார்த்தை கேட்டு வந்து சொல்லாய்-ஒண் சிறு பூவாய!-அழகுக்கு ஒரு கிளி யோடு ஒத்து -பால்யமும் அத்தால் வந்த லாகவமும் இதுக்கு ஏற்றம் -போக விடுகை மிகை என்னும் படி கண்டு கொண்டு இருக்கும் அழகை யுடைத்தாய் -தூது போகைக்கு கார்ய காலத்தில் வடிவை சிறுக்க வேண்டாத படி -ஏற்கவே சிரமம் செய்து இருக்கிற லாகவத்தையும் யுடைத்தாகை –

நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் – நோய் எனது நுவல்–திருவாய்மொழி–1-4-8–என்று என் ஆர்த்தியை சீக்கிரமாக போய் அவனுக்கு அருவி என்ன செய்தே செய்யாததற்கு –
என் பிழைக்கும் இளம் கிளியே நான் வளர்த்த நீ அலையே –திருவாய்மொழி-1-4-7–என்றும் –
நீ அலையே சிறு பூவாய் –நுவலாதே இருந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி-1-4-8–என்றும் – ஸ்மாரக பதார்த்தங்கள் பாதகமாகிற அளவில் -அருகு இருந்து திரு நாமத்தைச் சொன்னது பொறாமல்-
சொல் பயற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே -திருவாய்மொழி–9-5-8—என்றும் – இன்னானதான தசையிலும்-துரப்பன் என்னும் அவற்றுக்கும் உகந்து –-இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன்—நாச்சியார் திருமொழி-5-10–என்று அநாராதித்த தசையிலும் -சொன்ன இன் சொற்களும் வெம் சொற்களும் ஆகிறவற்றுக்கும்- வகுத்த விஷயத்தில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டும் அங்குத்தைக்கு விநியோக பிரகாரம் – என்னும் நினைவாலே உகந்து —

“நோயெனது நுவல்‌ என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்‌” திருவாய்மொழி 1-4-8) என்றும்‌, என்‌ பிழைக்கும்‌ இளங்கிளியே யான்‌ வளர்த்த நீயலையே” (திருவாய்மொழி 1-4-7) என்றும்‌ இன்னாதான தஸையோடு,“சொல்‌ பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீர்‌” திருவாய்மொழி 9- -5-8) என்றும்‌, “நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குற்று நின்றும்‌ துரப்பன்‌” (நாச்சியார்‌ திருமொழி 5-10) என்றும்‌ அநாதரித்து தஸையோடு வாசியற வகுத்த விஷயத்தில்‌ நிக்‌ரஹாநுக்‌ரஹங்களிரண்டும்‌ அங்குத்தை விநியோக,ப்ரகாரமாகையாலே இவற்றுக்கும்‌ உகந்து,-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8—நோயெனது நுவல் என்ன- நோயைச் சொல் என்ன -இவள் நோய் என்றால் வியாவர்த்தமாய் யாயிற்று இருப்பது ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராதே –ஜடிலம் –புத்ரவ்யாதிர் நதே கச்சித்-சம்சாரிகளுக்கு சப்தாதி விஷயங்களில் இழவு பேறாகையாலே பகவத் விச்லேஷம் அறியார்கள்–நுவலாதே இருந்து ஒழிந்தாய்--நோய் அறியாமை சொல்லாது இருந்தாய் இல்லை-நான் ஏவாமை அன்று-செல்வப் பிள்ளைத்தனம் அடித்து இருந்தாய் அத்தனை இறே-அத்தலையில் வ்யாமோஹம் அது-இத்தலையில் நோவு இது
இரண்டு தர்மியையும் ஓர் உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7—பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே
–9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல் வளம் ஊட்டினீர் -நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-பண்பு உடையீரே –பிராப்தியும் பவ்யத்தையும் கிடக்க சால நீர்மை யுடையீராய் இருந்தி கோள் -ரக்ஷக விஷயத்தில் நிர்த்தயராய் இருந்தி கோள் -பண்பு -குணம்

சொல்லெடுத்து சோர்ந்தவாறே-சொல்லெடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே–-திரு நெடும் தாண்டகம் –13- என்று திருநாமத்தைச் சொல்ல-உபக்ரமித்து பல ஹானியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை எடுக்கும் போலேயாய்- அதுவும் மாட்டாதே -பரவசகாத்ரனரவர் ஆனவாறே —கற்பியா வைத்த மாற்றம்-கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்–திருவாய்மொழி-6-8-6–என்கிறபடியே , முன்பே கற்பித்து வைத்த சொல்லான திரு நாமத்தைச் சொல் என்ன –கை கூப்பி வணங்கப் பாடி–திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம் –14–என்று கற்பித்தவர் தாங்கள் உபகார ஸ்ம்ருத்தி பண்ணி-அனுவர்த்திக்கும் படி ப்ரீதி பிரேரிதராய் சொல்லி –

“சொல்லெடுத்துத்‌ தன்‌ கிளியைச்‌ சொல்லே யென்று துணைமுலைமேல்‌ துளிசோரச்‌ சோர்கின்றாளே’ (திருநெடுந்தாண்டம்‌ 13) என்று திருநாமத்தைச்‌ சொல்ல உபதேஸித்து பல ஹாநியாலே ஒரு சொல்‌ சொல்லும் போது மலை யெடுக்குமா போலேயாய்‌ அதுவும்‌ மாட்டாதே பரவஸகாத்ரை யானவாறே (கற்பியா வைத்த மாற்றங்‌ கைகூப்பி வணங்கப்பாடி) “கன்மின்கள்‌ என்று உம்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசார்யருசி பரிக்‌ருஹீதமான திருநாமங்களை, “திருமாலைப்‌ பாடக்‌ கேட்டு வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ வருக வென்று மடக்கிளியைக்‌ கைகூப்பி வணங்கினாளே” (திருநெடுந்தாண்டகம்‌ 14 என்று அவ்வாசார்யர்‌ தாமே அநுஸந்திக்கும்படி ப்ரீதி ப்ரேரிதராய்ப்‌ பாடி.

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-–சப்தோச்சாரணம் மலை எடுத்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு-அவன் மலை எடுக்கிற போதை அவனுடைய சக்தியை நினைந்து –கல்லெடுத்து –என்றாள் –-தன் அளவில் வந்தவாறே வாய் விடுகைக்கும் சக்தி அற்று இருந்தபடி –தான் விரும்பி வளர்த்த கிளியை –பாவை பேணாள் -என்றது போக்யமாக தோற்றினவாறே பாவையை அநாதரித்தாள் –இதுக்கு திருநாம ஸ்பர்சம் உண்டாகையாலே ஆதரிக்கிறாள்-பரிக்ரஹங்களில் வந்தால் ஸ்வரூபேண த்யாஜ்யம் இல்லை -ஸ்வரூபேண- உபாதேயமும் இல்லை இறே -பிரதிகூலம் ஆன போது சர்வமும் த்யாஜ்யமாகக் கடவது-அனுகூலமான போது சர்வமும் உத்தேச்யமாகக் கடவது இறே –

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள்
தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் -இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்-சொல்லிச் சென்மின்கள் -அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய்  நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -14--திரு நாமம் சாத்மித்த படியாலே அவகாசத்திலே கிஞ்சித் கரிக்க பெற்றோமே என்கிற ப்ரீதி பிரகர்ஹத்தாலே சொல்ல –கேட்டு – ப்ரீதி ப்ரேரிதையாய்க் கொண்டு கேட்டு–சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திரு சொன்ன இடத்தில் கேட்ப்பாரைப் பெற்றது இல்லை –-இப்போது சாம்யை யாகையாலே கேட்பாரைப் பெற்றது என்கிறாள் – செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் – என்னுமா போலே –இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் – ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான் அத் தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்

ஆலியா அழையா — ஆலியா அழையா அரங்கா என்று –பெருமாள் திருமொழி –3–2–என்கிற படியே
ஆனந்தத்தோடு திரு நாமத்தைக் கொண்டு -போது போக்குமவர்களாய்–(மயில்கள் மேகத்தைக் கண்டவாறே தோகையை விரித்து ஆனந்தமாக விளையாடுவது போலே இவர்களும் கார்முகில் போல் வண்ணன் கண்ணன் யெம்மானைக் கண்டு கூத்தாடுமவர்கள் என்றபடி )பர அபிமானத்தில் ஒதுங்கின –தேவு மற்று அறியேன்–கண்ணி நுண் சிறுத் தாம்பு -2–என்கிற படி –ஆச்சார்யா அபிமானம் ஆதல் – பாகவத் அபிமானம் ஆதல்-ஆகிய பர அபிமானத்தில் ஒதுங்கினவரான –(குயில்களுக்கு பரப்ருதம்-பிறரால் வளர்க்கப்படுகிறது – என்ற பெயர் வடமொழியில் உண்டே அதே போலே ஆச்சார்யர் பாகவதர்கள் அபிமானத்தில் ஒதுங்கி அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் என்றபடி )

(ஆலியாவழையா) “குயில்‌ நின்றால்‌” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 10) என்றும்‌ “ஆலியாவழையாவரங்கா” (பெருமாள்‌ திருமொழி 3-2 என்றும்‌ சொல்லுகிறபடியே அவ்வநுபவத்தாலே வந்த ஹர்ஷத்தை உடையராய்‌, (பராபிமானத்திலே ஒதுங்கி) “தேவு மற்றறியேன்‌” (கண்ணிநுண்‌- 2) என்று ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கின

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10—இவரை அவகாஹித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி-இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு–ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு–இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன-இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று–சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு ) ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே- தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..–இவர்கள் அப்ராப்த விஷயத்திலே படும் பாடெல்லாம் ப்ராப்த விஷயத்தே படுமவன் நான் என்கிறார் -ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே –ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிட்டு-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-–வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை
பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை-ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று

நம்பிக்கு அன்பர் –தலை மீது அடிப் பொடி –உடையவர் உடையார் -போல்வாரை – தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –கண்ணி நுண் சிறுத் தாம்பு-11-என்றுஆசார்யரான ஆழ்வார் விஷயத்திலே பிரேமமே நிரூபகமாம் படி இருக்கும் ஸ்ரீ மதுர கவிகள் —-நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை –1–என்று திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே அடி இடும் படி செருக்கை உடையவராய் –பாகவதர்களுக்கு பாத தூளி போல பரதந்த்ரராய் -இதுவே நிரூபகமான தொண்டர் அடி பொடி ஆழ்வார் — இராமானுசன் உடையார் -என்றே
நிரூபகம் ஆகும் படி உடையவருக்கு பரதந்தரரான ஆழ்வான் -ஆண்டான் -எம்பார் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -முதலானவரைகளை போல்வாரை –கிளி பூவை குயில் மயில் -என்னும் – குண சாம்ய நிபந்தனமாக கிளி என்றும் பூவை என்றும் – குயில் என்றும் -மயில் என்றும் சொல்லும் என்ற படி
பூவையாவது -நாகண வாய்ப்புள் – மயிலை தூது விட்டமை இன்றிக்கே இருக்க -அத்தை சஹ படித்தது –
யான் வளர்த்த கிளிகாள் பூவைகாள் குயில்காள் மயில்காள்–திருவாய்மொழி–8-2-8–என்று
ஸ்தலாந்தரத்திலே அருளிச் செய்கையாலே அதுக்கும் இதுவே ஸ்வாபதேசம் என்று அறிவிக்கைக்காக —

(நம்பிக்கன்பர்‌) “தென்குருகூர்‌ நம்பிக்கன்பரான (கண்ணிநுண்‌- 11 ஸ்ரீமதுரகவிகள்‌. (தலைமீதடிப்பொடி) “நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்றமர்‌ தலைகள்‌ மீதே” (திருமாலை 1 என்று திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள்‌ தலையிலே அடியிடும்படியான செருக்கை உடையராய்‌, “அடியார்க்கென்னை ஆட்படுத்தாய்‌’” (அமலனாதிபிரான்‌ 1 என்கிற ஸ்ரீதொண்டரடிப்பொடிகள்‌. (உடையவருடையார்‌ போல்வாரை) இராமானுசனுடையார்‌ என்று சொல்லப்படுகிற ஆழ்வான்‌ ஆண்டான்‌ எம்பார்‌ அருளாளப்‌ பெருமாள் எம்பெருமானார்‌ போல்வாரான ஆச்சார்ய பரதந்த்ரராய் இருப்பாரை குயில்‌ மயில்‌ என்னும்‌)

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–பகவத் விஷயத்து அளவன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிக்கே ஆச்சார்ய விஷயத்திலே சக்தராய்-இவருடைய பகவத் ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகிற ஆத்ம குணம் கண்டாய்த்து இவருக்கு ஸ்நேஹம பிறந்தது-அவருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் -ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் என்று நிரூபகம் ஆனால் போலே-இவருக்கும் ஆழ்வாருக்கு நல்லவர் ஆனவர் என்று நிரூபகம் -அவர் பிரணவ நமஸ் ஸூ க்கள் இரண்டிலும் நிஷ்டராய்ப் போருவர்-இவர் மத்யம பதத்திலே நிஷ்டராய் இருப்பர்-

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே -1–முன்பே யமாதிகள் பேர் கேட்க அஞ்சிக் கிடந்தவர் –திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமன் வாசலிலே சென்று அறை கூவுகிறார் -இப்போது –வாலி பேர் கேட்க அஞ்சி சுரமடைந்து கிடந்த மகாராஜர் – பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே கிஷ்கிந்தா த்வாரத்திலே சென்று அறை கூவினாற் போலே –அங்கு நாமி பலம் –
இங்கு நாம பலம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன்
விண்ணவர் கோன்  விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1—இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது-நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –என்னை –-ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை – தந்தத்தின் சீர்மை அறியாத என்னை – தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –ஆள் படுத்த – அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன் -அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில்  நின்றால் மீள சங்கை உண்டு – பாகவத் சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே-உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால்  போலே -சேஷத்வத்தின் எல்லையில் என்னை வைத்தான் –

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–4-2-8–முன்பு இவள் ஆதரித்தவை அவனுடைய லீலா உபகரங்களிலும் குவால் இ றே -அவை எல்லா வற்றிலும் நசை அற்ற படி-

நாரை கொக்கு குருகு-என்று சொல்கிறது யாரை என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் –

ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரை உகளும் வ்யசன வ்யதை யற்றுத்
தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைம்கானம் என்று
ப்ரஹ்ம ரதம் பண்ணி கொடுத்தவை கொண்டு நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் தனிப் பெறும் பித்தர் நம் முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும் —சூரணை -154-

அதாவது-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே–-ஆசறு தூவி வெள்ளைக் குருகே –திருவாய்மொழி–6-8-8–என்று பழிப்பு அற்ற சிறகை உடைத்தாய் -உள்ளும் புறமும் ஒக்க -நிர்மலமாய் இருக்கும் குருகே -என்று சொல்லப் பட்ட –ய ஸ்மரேத் புண்டரீகாஷம் ஸ பாஹ்யாப்யந்தரஸ் சுசி-என்கிறபடி(செந்தாமரைக் கண்ணனை தியானம் செய்பவன் உள்ளும் புறமும் தூய்மை உள்ளவன் ஆவான் ) பாஹ்யாப்யந்தர சுத்தி யோடு கூட –

“ஆசறுதூவி வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசறுகை அந்த:கரண ஸூத்‌தியாய்‌, “வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று பாஹ்ய ஸூத்‌தியாய்‌, “(அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம்‌ கதோபி வா ய ஸ்மரேத்‌ புண்டரீகாக்ஷம்‌ ஸ பாஹ்யாப்‌யந்தரஸ் ஸூசி: என்கிற பாஹ்யாந்தர ஸூத்‌தியை உடையராய்‌,-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-ஆசறு தூவி -பழிப்பு அற்ற சிறகு
வெள்ளைக்குருகே! -வடிவும் மனசும் நிர்மலமாகை-பர அநர்த்தம் பொறுக்க மாட்டாது ஒழிகை -மனஸ்ஸூக்கு நைர்மால்யம்-புறம் போல் உள்ளும் கரியான் -என்கிறவனுக்கு எதிர் தட்டாய் இருக்கை

திரை உகளும் வ்யசனவ்யதை யற்று–வாயும் திரை உகளும் கானல் மட நாராய் –திருவாய்மொழி-2-1-1–என்று ஆமிஷை காக்ரா சித்தத்தையாலே நாரையானது திரைகள் வந்து கிட்டி மேலே தாவிப் போகா நிற்கிற கானலிலே சலியாமல் இருக்குமா போலே –கிரயோ வர்ஷா தாராபிர் ஹன்யமானா ந விவ்யது
அபிபூயமானா வ்யசனைர் யதா தோஷஜா சேதச
– –ஸ்ரீ மத் பாகவதம் –10–20-15–என்கிறபடியே
பகவத் ஏகாக்ர சித்தையாலே சம்சார சமுத்திர தரங்கங்களான தாப த்ரய ரூப வ்யசனங்கள் அஹமஹமிகாய வந்து மேலிடா நின்றாலும் -அதுக்கு இடையாதே-

(திரையுகளும்‌ வ்யஸந வ்யதையற்று) வாயும்‌ திரையுகளும்‌” (திருவாய்மொழி 2-1-1 )என்று “கிரயோ வர்ஷ தாராபி,: ஹந்யமாநா ந விவ்யது: அபி பூயமாநா வ்யஸநைர்‌ யதா தோ கஜ சேதஸ:” (ஸ்ரீபாகவதம்‌ 10-2015) என்று பகவத்‌ விஷயத்திலே நெஞ்சு ஊன்றுகையாலே ஸம்ஸார துஃக்கோர்மிகளானவை அஹமஹமிகயா மேலிடா நின்றாலும்‌, சலியாதே.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1—வாய் கை -கிட்டுகை-உழலுகை மேலே மேலே போகை-அலை கடல் நீர் குழம்ப வகுடாடவோடி-இத்யாதி-மலை போல் வருகிற திரைகளால் சலிப்பிக்க ஒண்ணாத படி தன் ஆமிஷம் கிட்டும் தனையும் பேராதே இருக்கை- தன் நாயகன் ஒருவனையும் நினைத்து இவ்வருகு உண்டான துக்க பரிபவங்களைப் பொறுத்து இருக்கிற இருப்புக்கு போலியாக நினைத்து இருந்தாள்-பகவத் த்யான பரர் இருக்குமா போலே –க்ரயோ வர்ஷ தாராபி –கானல் –
நெய்தல் நிலம் -பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் நிலம் -அத்தாலும் தன் ஆற்றாமை அவற்றுக்கும் உண்டு என்று இருக்கிறாள்-நெய்தலுக்கு பூதம் -ஜலம்-கூடும் இடம் குறிஞ்சி -பூதம் ஆகாசம் -பிரியும் இடம் பாலை -பூதம் தேஜஸ் ஸூ -ஊடலுக்கு ஸ்தானம் மருதம் -பூதம் வாயு-மடநாராய்–மடப்பம் -பற்றிற்று விடாதே ஒழிகை-கிராமணிகள் யாகங்களும் பண்ணி பவித்ரங்களும் முடிந்திட்டு -தார்மிகர் -என்னும் படி திரியா நிற்பார்கள் இறே-பாரா ஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே-அப்படியே தான் நினைத்த ஆமிஷம் கிட்டும் தனையும் ஷூத்ர மத்ஸ்யங்கள் மேலிட்டாலும் அநாதரித்து இருக்கை

தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி –-தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் -பெரிய திருமொழி -9–6–1–என்றும் –பழனக் கழனி அதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் –பெரிய திருமொழி -5–1–2–என்றும் , சொல்லுகிற படி கொக்கு தன் வாயாலே எடுத்து கொடுக்க -ஜீவித்து இருக்கும் தன் பிள்ளைக்கு வாய்க்கு அடங்கும் இரை தேடி இடுமா போலே –
தங்கள் வாக்காலே உபகரிக்கும் பகவத் விஷயத்தை -உப ஜீவித்து இருக்கும் குழை சரக்கான சிஷ்யர்களுக்கு பாக அனுகுணமாக சாத்ம்யமான பகவத் விஷயார்தங்களை சாஸ்த்ரங்களிலே ஆராய்ந்து உபகரித்து –

(தாய்‌ வாயிலுண்ணும்‌ பிள்ளைக்கிரைதேடி) “தாய்வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிறவுண்ணும்‌” (பெரியதிருமொழி 9-6-1 என்றும்‌, “புள்ளுப்பிள்ளைக்கிரை தேடும்‌” (பெரியதிருமொழி 5-1-2) என்றும்‌, கொக்கானது தன்‌ பிள்ளைக்கநுகுணமாக இரைதேடி யிடுமாபோலே முறைகெடாமல்‌ அநுபவிக்க விருக்கிற ஸிஷ்யர்களுடைய ப்ரக்ருதிக்கநுகுணமான பகவத்‌ விஷயத்தை ஸகல ஸாஸ்த்ரங்களிலும்‌ ஆராய்ந்து அருளிச் செய்து-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும்
குறுங்குடியே —9-6-1–அங்கு நிற்கிற அவன் படி
அங்குத்தை ஸ்தாவரங்களுக்கும் உண்டாயிற்று –-தக்க மரத்தின்-ஒரு முள் பற்றை அன்றிக்கே பாலார்க்கும் தவழ்ந்து ஏறலாம் படி இருக்கிற அங்குத்தை வருஷங்களின் படி -என்று பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் இறே 

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரைத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-–ஆலவாய் உடையான் கேட்க பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது  இறே-கயல் உகளா நின்றதாகில்
புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன-பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ
பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது நில மிதியாலே அவை தான் தூணும் துலாமும் ( உத்தரமும் ) போலே வளர்ந்து இருக்கும் அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –

வைகலுடன் மேய்ந்து –-வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் –திருவாய்மொழி -6-1-1–என்றும் –காதல் மென் படையோடு உடன் மேயும் கருநாராய் —திருவாய்மொழி –6-11-2-என்றும் –
சொல்லுகிற படி -சர்வ காலமும் -போக ஸ்தலங்களிலே தாங்களே சென்று – தங்களைப் பிரியில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்கள் உடனே கூடி பகவத் குண அனுபவம் பண்ணி –

(வைகலுடன்‌ மேய்ந்து) _வைகல்பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌’ (திருவாய்மொழி 6-1-1 என்றும்‌ காதல்‌ மென்பெடையோடு உடன்மேயும்‌ கருநாராய்‌” (திருவாய்மொழி 6-1-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வகாலமும்‌ அநுகூலரான ஸிஷ்ய புத்ர்களோடே பகவத்‌ குணங்களை அநுபவித்து–

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1—நாள் தோறும் -நாயக வ்யாவ்ருத்தி -காதா சித்கமாக கலந்து பொகட்டு போனவனை போல் அன்று இ றே நாள் தோறும் முகம் காட்டுகிற நீங்கள் — தர்ச நீயமான கழி என்னுதல் -பூத்த கழி என்னுதல் –கழிவாய்-கழி இடத்தே -கழியிலே -பிரிந்தவன் பாதகனாகை அன்றிக்கே இருந்த தேசமும் பாதகமாகை-இருவர் கூட அனுபவிக்கும் இடம் தனித்தால் ம்ருத்யுசமமாய் இறே இருப்பது –வந்து -வழி பறிக்கும் தேசத்தில் வந்து உதவினால் போலே இ றே நீங்கள் சந்நிதி பண்ணின படி -பம்பா தீரே ஹநுமதா சங்கத -ஆள் இட்டு அறிவிக்க வேண்டும் தசையிலே நீங்களே வந்து-வந்து மேயும் -நான் அபேக்ஷியாது இருக்க -க்ருஹே புக்தம சங்கிதம் -என்னுமா போலே இ றே நீங்கள் செய்தது -என் கார்யம் செய்த பின் இனி உங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -இவள் கார்யம் இங்கே வந்து மேய்கை-மேயும் குருகினங்காள் -உபவாச க்ருசையாய் இருக்க என் கார்யம் புஷ்கலமாய் இருக்கிற உங்களுக்கு செய்ய வேண்டாவோ -இரவு உண்டார்க்கு உண்ணாதார் கார்யம் செய்கை பரம் அன்றோ – இளங்காள்-இருவராய் இருப்பார்க்கு தனியார் கார்யம் செய்ய வேண்டாவோ -பெருமாள் தனிமையில் மஹா ராஜரும் பரிகரமும் தோற்றினால் போலே யாயிற்று தனிமையில் இவை வந்து முகம் காட்டின படி

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2—காதலே நிரூபகமாக யுடைத்தாய் -விரஹ சஹம் அல்லாத பேடை பிரியவும் பொறாதே கலக்கவும் பொறாதே இருக்கை –-உடன் மேயும் -பிரிந்தால் வருமது எல்லாம் அறிந்து பரிமாறா நின்றன -உணர்த்த டலு டுணர்ந்து இறே – அந்வயத்திலே-வ்யதிரேகத்தில் வருமது எல்லாம் அறிந்து பரிமாறா நின்றன -இரண்டுக்கும் வாய் அலகு ஒன்றால் பிறக்கும் கார்யம் பிறவா நின்றது -நான் உபவாச க்ருசையாய் இருக்க -இதம் மேத்யமிதம்ஸ்வாது-என்கிறபடி புஜிக்க உங்களுக்கு பிராப்தி யுண்டோ -நாட்டில் பிறந்து பொகட்டு போகாதாரும் சிலர் யுண்டாகாதே-கரு நாராய் -பிரிவுக்கு பிரசங்கம் இல்லாமையால் தன்நிறம் பெற்று இருக்கிற படி -பிரிந்தவன் வடிவுக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி

நும் கால் பைம் கானம் என்று ப்ரஹ்ம ரதம் பண்ணி –-நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ–திருவாய்மொழி -9-7-1–என்றும் , பைம் கானம் ஈது எல்லாம் உனதே யாகி பழன-மீன் கவர்ந்து உண்ணத் தருவன் —திரு நெடும் தாண்டகம் –27- என்றும் சொல்லுகிறபடி தங்கள் பக்கல் உபஜீவித்த சிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியாலே சிரஸா வகிக்கை ஆகிற ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு –
சரீரமர்த்தம் ப்ராணாஞ்ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிற -க்ரமத்திலே சாதரமாக சமர்ப்பித்தவற்றை அங்கீகரித்து –நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் -இத்யாதி –-நல்ல பதத்தால் மனை வாழ்வார் –திருவாய்மொழி -8-10-11–என்று பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான கார்ஹஸ்யத்தையும் –
சம்சார வெக்காயம் அடியான பயத்தாலே –-இன்பமரும் செல்வமும் இவ் வரசும் யான் வேண்டேன் –பெருமாள் திருமொழி -3-9–என்று உபேஷிக்கும் அவர்களாய் உள்ள – அம் கை ஆழி அரங்கன் அடி இணை தங்கு சிந்தை தனி பெரும் பித்தரான –ஸ்ரீ குலசேகர பெருமாள் – ஆச்சர்ய பதஸ்தரான நம் முதலிகள் போல்வாரை – குண சாம்யத்தால் நாரை என்றும் -கொக்கு என்றும் -குருகு என்றும் சொல்லும் என்கை-

(நுங்கால்கள்‌ பைங்கானம்‌ என்று ப்‌ரஹ்ம ரதம் பண்ணிக்‌ கொடுத்தவை கொண்டு) “நுங்கால்கள்‌ என்‌ தலைமேல்‌ ‘கெழுமீரோ நுமரோடே” திருவாய்மொழி 9-7-1) என்றும்‌, “பைங்கானம்‌ ஈதெல்லாம்‌ உனதே யாகப்‌ பழன மீன் கவர்ந்துண்ணத்‌ தருவன்‌ (‘திருநெடுந்தாண்டகம்‌ 27 )என்றும்‌ இவர்கள்‌ பக்கல்‌ உப ஜீவித்த ஸிஷ்யர்கள் உபகார ஸ்ம்ருதியால் ப்ரஹ்ம ரதம் பண்ணி –ஸாரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத் (விஹகேச்வரஸம்ஹிதை) என்று ஆத்மாத்மீயங்களை முகமலர்த்தியோடே கொடுக்கக்‌ கைக்கொண்டு நல்ல பதத்தையும்‌ வேண்டேன்‌ என்னும்‌ தனிப்பெரும்‌ பித்தர்‌ (நல்ல பதத்தால் மனை வாழ்வர்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று பாகவத கைங்கர்யத்துக்‌கு உறுப்பான -கார்ஹஸ்த்யத்தையும்‌ ஸம்ஸார வெக்காயத்தாலுண்டான அச்சத்தாலே இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (பெருமாள் -4-5) என்று உபேக்ஷிக்குமவருமாய்‌, “அங்கை யாழி அரங்கன்‌ அடியிணைத்‌ தனிப் பெரும்‌ பித்தன்‌” (பெருமாள்மொழி 4-5) என்று சொல்லப்படுகிற ஸ்ரீகுலஸேகரப் பெருமாள்‌(நம்‌ முதலிகள்‌ போல்வாரை) நம்‌ முதலிகள்‌ என்கிறது பட்டர்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை, திருத்தமப்பனார்‌ பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, திருத்தமையனார் பிள்ளை இவர்கள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்‌-என்கிறார் –

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-–உபகாரகரான உங்களுடைய காலை உபக்ருதையாய் உஜ்ஜீவிக்க இருக்கிற என் தலையிலே -இவளுடைய தலையிலே வைக்க கண்டதாய்த்து இவற்றின் கால் -இவற்றினுடைய காலை வைக்க கண்டதாய்த்து இவள் தலை -இரண்டும் பரார்த்தமாகக் கண்டதாய்த்து-கெழுமீரோ -அவனுக்கு சேஷமாக்கின போதே கடகர்க்கு சேஷமாகையாலே என் விதி கொண்டு வைக்க வேண்டா விறே -என் தலை மேலே சேரி கோளே
நுமரோடேச புத்ரஸ் பவ்த்ரஸ் ச கண-என்கிறபடியே சபரிகரமாக –ஆச்சார்ய வாதாச்சார்ய புத்தரே வ்ருத்தி –என்னக் கடவது இறே 

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்
தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27—நாளும் -இத்யாதி –ஆசார்யன் ஒருக்கால் உபகரித்து விட்டால் சிஷ்யன் யாவதாயுஷம் அனுவர்த்திக்கக் கடவன் -என்கை-பைம் கானமீது எல்லாம் – தன் அபிமானத்தில் கிடந்தத்தைக் கொடுக்கும் அத்தனை இறே செய்யலாவது – பரப்பை உடைத்தான கடல் கரை சோலை அடைய – பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் ஆகையால் கடல் கரையில் தான் இருக்கையாலே – பைம் கானமீதெல்லாம் –என்கிறாள் –ஈ தெல்லாம் –=தன் கண்ணால் கண்ட பிரதேசத்தை அடையக் கொடுக்கிறாள் – என் விபூதி அடங்கலும் தருவன் -என்கிறாள் – இது உபய விபூதிக்கும் உப லஷணம்-பொன் உலகு ஆளீரோ புவன முழுது ஆளீரோ -என்னக் கடவது இறே

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-பாகவத சேஷத்வம் -அத்தோடு த்கார்ஹஸ்த்த்யத்தை நடத்துவார்கள் – கொண்ட பெண்டிர் மக்களேச புத்ர பவ்த்ரஸ் ச கண என்கிறபடியே ச பரிகரமாக பாகவத சேஷத்வத்தை அனுபவிக்கக் கடவர்கள் –

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9—ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளிலே-ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே அங்கே தங்கு சிந்தையை உடைய-பகவத் விஷயத்திலே இவர்களோபாதி பித்தேறினார் வேறு ஒருவர் இல்லாமையும் –
சிலவரால் மீட்க ஒண்ணாமையுமான பித்தனாம்-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5–அங்கே இருந்து எல்லா போகங்களும் புஜிக்கும் சம்பத்தும் அதுக்கு அடியான ராஜ தர்மமும் யான் வேண்டேன் –

நன்னீல மகன்றில்காள் -திருவாய்மொழி -1-4-4—என்று மகன்றில்களையும் தூது விட்டமை ஒத்து இருக்கச் செய்தே அதுக்கு ஸ்வாபதேசம் அருளிச் செய்யாது ஒழிந்தது – அதில் இப்படி பரக்கச் சொல்லத் தக்கது இல்லாமையாலும் இந்த நியாயத்திலே தத் சமான குணரைச் சொல்லிக் கொள்ளும் இத்தனை அன்றோ என்னும் அதைப் பற்றவும்– மகன்றிலாவது -அன்றிலிலே ஒரு அவாந்தர பேதம்-ஆக இப்படி தூது பிரகரணத்திலே சொல்லுகிற பஷ்யவாந்தரங்களுக்கு ஸ்வாபதேசம் அருளி செய்தார் ஆய்த்து

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌ எங்கும்‌ திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்துத்‌ தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து , பரஸம்ருத்‌தியே பேறான அன்புகூரும்‌ அடியவர்‌, உறையிலிடாதவர்‌, புயற்கை அருள்மாரி, குணந்திகழ்‌ கொண்டல்‌ போல்வாரை மேகமென்னும்‌.சூரணை-155-

அதாவது-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு — வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி கொண்டு இருக்கும் -மேகம் போலே –-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் – திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் – சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே உள்ளே அடக்கி கொண்டு —

(பூண்டநாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு) “மற்பொன்ற நீண்டதோள்‌ மால்‌ கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ பூண்டநாளெல்லாம்‌ புகும்‌” (முதல்‌ திருவந்தாதி 69) என்றும்‌, “சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன்‌” (பெரியதிருவந்தாதி 69) என்றும்‌ பகவத்‌ விஷயத்திலே அவகாஹித்தவன்று தொடங்கி, கல்யாண குண ஸாகரத்தைப்‌ பருகி –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்
—–69—அவன் சாய்ந்த கடலிலே நாடோறும் அவகாஹிக்கப் பாரும் கோள் –
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69—குணா நாமா கரோ மஹான் -என்று அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன் (கிஷ்கிந்தா தாரை வார்த்தை குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் என்கிறாள்-உள் பொதிந்த என்கையாலே பரிச் சின்னம் ஆக்கினேன் என்கிறது )

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-அறிவுடையரான யோகிகள் ஆனவர்கள் தம் ஹிருதயத்திலே கொண்டு எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும் ஒருபடிப்பட நின்று ஏத்த அவர்களுக்கு எல்லாம் செய்தும் பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் பெரும் தனிசு பட்டால் போலே -இவர்களுக்கு செய்யல் ஆவது என் -என்று
இவற்றை அனுசந்திக்குமவனை –

திரு மேனி நன்னிறம் ஒத்து –-திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் – சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

(திருமேனி நன்னிறமொத்து) “மேகங்களோ உரையீர்திருமால்‌ திருமேனியொக்கும்‌ யோகங்கள்‌” (திருவிருத்தம்‌ 32 )என்றும்‌, “என்னுடைய கண்ணன் பால்‌ நன்னிறங்கொள்‌ கார்‌” (பெரிய திருவந்தாதி 85) என்றும்‌ சொல்லுகிற படியே ஸ்வரூப குணத்தாலும்‌ ரூப குணத்தாலும்‌ அவனோடு ஸாம்யாபத்தியை உடையராய்‌,-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே 
–32–யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற இவ் வடிவு எங்கே பெற்றி கோள்–அவனும் அவளும் பிரிந்து வெளுத்த வடிவு இன்றியிலே அவனும் அவளுமாக கலந்து புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்-திருவைப் பிரிந்த மாலின் வெளுத்த வடிவு என்னுடையது-திருவுடன் கூடிய மாலின் வர்ணம் உங்களது –நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு அவ் வருகான வடிவு எங்கே பெற்றி கோள்-

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-
–கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள் எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ-தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே-

உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து – உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக – விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,-தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி-

(உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌) “உயிரளிப்பான்‌ மாகங்கள்‌ எல்லாம்‌ திரிந்து” (திருவிருத்தம்‌ 32) என்றும்‌ “தீர்த்தகரராமின்‌ திரிந்து” (இரண்டாம்‌ திருவந்தாதி 14) என்றும்‌ “தீதில்‌ நன்னெறிகாட்டி எங்கும்‌ திரிந்து” (பெருமாள்‌ திருமொழி 2-6 என்றும்‌ சொல்லுகிறபடியே லோக ரக்ஷணார்த்தமாக எங்கும்‌ ஸஞ்சரித்து, பகவத்‌ குணங்களை வர்ஷித்து, எல்லாரையும்‌ பரிஸூத்‌தராக்கி,–

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-ஜகத்துக்கு அடங்க ஸூபாவஹமாய்க் கொண்டு திரியுங்கோள் –
திரிதலால் தவமுடைத்து இத்தரணி தானே –பெருமாள் திருமொழி -10-5-தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-அவனாலும் செல்லாத -திருத்த முடியாத -நிலத்தை அவன் பேரைக் கொண்டு செலுத்திடு கோள்–அவர்கள் தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்குமா போலே இவர்கள் தாங்களும் க்ருதார்த்தராய் நாட்டையும் க்ருதார்த்தம் ஆக்குகிறபடி –

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6—தீமையோடு கூடின நெறி யன்றிக்கே -சேதனர் நல் வழி போம் படி தாங்கள் ஆஸ்ரயித்துக் காட்டி-புகக் கடவது அல்லாத தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து-

ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –-ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

(ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்து) “ஜ்ஞாந ஹ்ரதே, த்‌யாந ஜலே ராக த்‌வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே, ஸ யாதி பரமாம்‌ கதிம்‌” என்கிறபடியே ஜ்ஞாநமாகிற தடாகத்தை பகவத்‌ கு,ணங்களாலே பூரித்து–

தீங்கின்றி வாழ நிதி சொரிந்து – தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் – வாழ உலகினில் பெய்திடாய் –திருப்பாவை -3–என்றும் , மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும் சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

(தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” (திருப்பாவை 3) என்றும்‌, வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” (திருப்பாவை 4) என்றும்‌, “மாமுத்த நிதி சொரியும்‌” (நாச்சியார்‌ திருமொழி 8-2) என்றும்‌ அநர்த்த கந்த மின்றியே எல்லாரும்‌ உஜ்ஜீவிக்கும்படி பகவத்‌ கு,ணங்களை வர்ஷித்து,-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-யத்ர அஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ-மஹாபாகோ -மஹீயதே -ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா –அவித்யாதி சகல துரிதங்களும் போய்-
இவர்கள் தாங்களும் முதல் தன்னிலே நாராயணனே -என்று துணிந்து இறே இழிந்து –சத்வோத்தரமான காலத்திலே- அனன்யார்ஹ சேஷத்வ- அநந்ய சரணத்வ
அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்- அத்தாலே அபிவிருதங்களாய்-ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த்த தேக தாரகரான ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க–

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–சரம் போலே முடிக்க ஒண்ணாது –-அங்கு எதிரிகளான ராக்ஷசர் மேல் விட்டால் போலே அன்றிக்கே ஜகத்தடைய வாழ வேணும் லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-என்னைத் தோற்றி ஒரு ஔதார்யம் படைக்க வேண்டாவோ உங்களுக்கு-பரானுக்ரஹமே சீலமாய் இருக்குமவர்கள் அன்றோ நீங்கள் – பெரு விலையனான முத்துக்களையும் பொன்னையும் சொரியுமாய்த்து –அதாவது பிறர் இரக்க கொடுக்கை யன்றிக்கே தன் ஆஸ்ரயம் கொண்டு தரிக்க மாட்டாமல் கொடுப்பாரைப் போலே யாய்த்து கொடுப்பது
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே –

கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-வெளுத்து ஒளித்து
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து மறைந்து வெளியே முகம் காட்டாமல் ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – ) கண்டு உகந்து பர சம்ருத்தியே பேறான – உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து – அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

(கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து பர ஸம்ருத்‌தியே பேறான) ஒளதார்யாதிஸயத்தாலே பிறருக்குபகரித்து அத்தை நினையாதே ‘மேலும்‌ உபகரிக்கப்‌ பெற்றிலோம்‌ என்று இழவாளராய்‌ எதிர்த்தலையில்‌ ஸம்ருத்‌தி யைக்‌ கண்டுகந்த அதுலே தங்களுக்குப்‌ பேறாக நிலைத்திருக்க–

அன்பு கூறும் அடியவர் – ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்- (ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை — அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் – அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

(அன்புகூரும்‌ அடியவர்‌)ஆங்கரும்பிக்‌ கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்‌” (பெரிய திருமொழி 2-10-4) அடியவர்களான முதலாழ்வார்கள்‌ –

தாங்கரும் போர் மாலி படப் பறவை யூர்ந்து தராலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங் கரும்பு சுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால்-கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம் ஆயனே கரும்பு-

உறையில் இடாதவர் – உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர வரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

(உறையிலிடாதவர்‌) உருவின வாள்‌ உறையிலிடாதே ஆதி,மத்‌யாவஸாநம்‌ தேவதாந்தரங்களினுடைய அவரத்வ ப்ரதிபாதந பூர்வமாக பகவத் பரத்வத்தை உபபாதிக்கிற திருமழிசைப்பிரான்‌-

புயற்கை அருள் மாரி –-காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

(புயற்கை அருள்மாரி) “காரார்‌ புயற்கைக்‌ கலிகன்றி” (பெரிய திருமொழி 3-2-10) என்றும்‌, “அருள்மாரி” (பெரிய திருமொழி 3-4-10) என்றும்‌ ஒளதார்யத்திலே மேக ஸத்‌ருஸராய்க்‌ கொண்டு க்ருபையை வர்ஷிக்கிற திருமங்கையாழ்வார்‌-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-பரம உதாரரான திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த திரு மொழி பத்தும் வல்லார்
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி
வாழ்வாராகப் பெறுவர்–கைங்கர்ய ஸ்ரீ விச்சேதம் இல்லாமல் பெரும் தாளுடை பெருமான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே –

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி யடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன்
சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-அனுகூல வர்க்கத்துக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுமவர்-சத்ருக்களை வந்து அணுக ஒண்ணாதபடி சிம்ஹம் போலே அநபிபவ நீயர் ஆனவர் –-எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயனரானவர் திருமங்கைக்கு பிரதானராய் உள்ளவர்

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் – இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி

குணந்திகழ்‌ கொண்டல்‌” (இராமானுச நூற்றந்தாதி 60 )ஆன உடையவர்‌ போல்வாரை மேகம்‌ என்னும்‌ என்கிறார்‌.-

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம் கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் . மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading