ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

இவருக்கு இந்த பிரபாவத்துக்கு அடி ஏது என்னும் ஆ காங்ஷையிலே இதுக்கு ஹேது -பகவத் நிர்ஹேதுக கடாஷம் என்கிறார் மேல் – இப்படி கடாஷித்தது தான் இந்த லோகத்தை இவரைக் கொண்டு திருத்துகைக்காக என்னும் அத்தையும் – இவர் தம்முடைய பூர்வ அவஸ்தையும் – இவரை கடாஷித்த பிரகாரத்தையும் – விசதமமாக சொல்லலுகிறது இச் சூரணையிலே –இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என்‌ என்னில்‌, ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன்‌ ஸஜாதீயரைக்‌ கொண்டு இவர்களைத்‌ திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில்‌ கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்‌யஸ்தரான இவர்‌ பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார்‌-

இதுக்கு ஹேது —ஊழி தோறும் சோம்பாது-ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து-முற்றுமாய் நின்று
நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன் உலகினத்தின் இயல்வை நல் வீடு செய்ய இணக்குப் பார்வை தேடி கழலலர் ஞானமுருவின முழுதும் ஒட்டின பெரும் கண் எங்கும் இலக்கு அற்று அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்கு உழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர்
மேலே பட பக்க நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்-சூரணை -94-

(1-ஆள் பார்க்கிறவன் –2-நல் வீடு செய்ய –தேடி -3-முழுதும் ஒட்டின பெரும் கண் –இலக்கு அற்று —
4-அன்போடு நோக்கான திசையில் –5-துளங்குகிறவர் மேல் பட –6-பக்கம் நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்- -என்றவாறு )-அதாவது இதுக்கு ஹேது – அதாவது – இவருடைய இந்த பிரபாவதுக்கு ஹேது –
ஊழி தோறும் சோம்பாது ஒன்றி பொருள் என்று அளி மகிழ்ந்து –அதாவது – ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து -திருவாய் -10-7-9-என்றும்-சோம்பாது இப் பல் உயிர் எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18- -என்றும்-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –திருவாய் -3-9-10-என்றும் –-பொருள் என்று இவுலகம் படைத்தான் –திருவாய் -2-10-11-என்றும்-அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து திருவாய் -3-4-8-என்றும்-சொல்லுகிற படி – பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பி கை வாங்காதே பின்னையும் கிருஷி தன்னை பண்ணும் கர்ஷகனைப் போலே கல்பம் தோறும் சிருஷ்டிக்கச் செய்தே –
சபலமாகாது இருக்க முசியாதே -மிகவும் ஒருப்பட்டு என்றேனும் ஒரு நாள் – பிரயோஜனப் படும் என்று க்ருஷியை உகந்து -ஜகத் சிருஷ்டியைப் பண்ணி —

இதுக்கு ஹேது – கீழ்‌ ப்ரஸ்துதமான ப்ரபாவத்துக்கு ஹேது. “ஊழி தோறும்‌. தன்னுள்ளே படைத்துக்‌ காத்துக்‌ கெடுத்துழலும்‌”’ (திருவா. 10 – 7-9) என்றும்‌, ”சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம்‌ படர்வித்த வித்தா”” (பெரியதிரு. 18) என்றும்‌, ”ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌”” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌, ‘“பொருளென்றிவ் வுலகம்‌ படைத்தவன்‌”’ (திருவா. 2 – 10 – 11) என்றும்‌, அளிமகிழ்ந்துலக மெல்லாம்‌ படைத்தவை” (திருவா. 3 – 4 – 8) என்றும்‌ சொல்லுகிறபடியே கர்ஷகனானவன்‌ ஒரு போகம்‌ பதறி(ரி)ற்றென்னா, கை வாங்காதே மேலே மேலே க்ருஷி பண்ணுமாப் போலே கல்பந் தோறும்‌ ஸ்ருஷ்டிக்கச் செய்தேயும்‌, அது ஸபலமாகாதிருக்‌கச் செய்தேயும்‌, பின்னையும்‌ முசியாதே ப்ரயோஜநமாம்‌, ப்ரயோஜநமாம்‌ என்று திருவுள்ளத்தில்‌ க்ருபையாலே வந்த உகப்போடே அடுத்தடுத்து ஸ்ருஷடித்து,

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9—சகல லோகங்களையும் கல்பம் தோறும் தன் சங்கல்ப ஏக தேசத்திலே உண்டாக்கி -நாம ரூபங்களைக் கொடுத்த பின்பு -தன் கார்யம் தானே செய்து கொள்ளலாம் என்று -அவ்வளவில் விடாதே அவற்றினுடைய ரக்ஷணத்தைப் பண்ணி -இவை அதி ப்ரவ்ருத்தமான வாறே சம்ஹரித்து -இதுவே யாத்ரையாய் இருக்கிற-ம்பீர ஸ்வ பாவனானவன் என் ஸ்வாமி –

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் –சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா
உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் )காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ-நீயே சொல்லு

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே- கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து-

ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–3-4-8–கிருபையை உகந்து -ஸ்ருஷ்ட்யாதி ரக்ஷணத்தை உகந்து – லோகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -அந்த ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் பெற்று அவர்கள் ஏத்தும் படி நின்ற

முற்றுமாய் நின்று –அதாவது –நில நீர் எரி கால் விண் உயிர் என்று இவைதான் முதலா முற்றுமாய் நின்ற எந்தை திருவாய் -7-6-2-என்றும்-தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அனுப்ராவிசத்-தைத்ரியம் –இத்யாதி படியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாகத்வங்களுக்கும் பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளுக்குமாக அனு பிரவேசித்து – இவற்றைச் சொல்லும் வாசக சப்தம் தன் அளவிலே பர்யவசிக்கும் படி பிரகாரியாய் நின்று —

(முற்றுமாய் நின்று) ““தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிஸத்‌”’ (தை. 2 – 6 – 1) என்கிறபடியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே அவற்றினுடைய வஸ்துத்வ-நாம பாக்த்வங்களுக்காக அவற்றைச்‌ சொல்லுகிற ஸப்‌தங்கள்‌ தன்னளவிலே பர்யவஸிக்கும்படி வ்யாப்தனாய்க்‌ கொண்டு ப்ரகாரியாய்‌ நின்று-

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-பிருதிவ்யாதி பூத பஞ்சகங்களுக்கும் தத் அந்தரவர்த்தியான சேதன வர்க்கத்துக்கும் அந்தராத்மாவாய் நின்று நிர்வஹிக்கிறவனே-எந்தாயோ!-அபேக்ஷை இன்றிக்கே இருக்க இவற்றை உண்டாக்கும் படியான சம்பந்தம் சொல்லுகிறது -இந்நீர்மையாக்கி காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -உண்டாக்கி விடும் அளவு அன்றியே அரியன செய்து நோக்குமவன் அன்றோ

நூல் உரைத்து –அதாவது –அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -பெரிய திருமொழி -11-4-8-என்கிற படி கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாதபடி திர்யக் ரூபேண தன்னை தாழ விட்டு நின்று – ஜ்ஞாதவ்ய தர்ம பிரகாசமான சாஸ்த்ரத்தை உபதேசித்து-

‘அன்னமதா யிருந்தங்கற நூலுரைத்த ‘” (திருமொழி 11 – 4 – 8) என்கிறபடியே ஸாராஸார விவேகோந்முகமான ஹம்ஸ ரூபியாய்க் கொண்டு ஸாஸ்த்ர ப்ரதராநத்தைப் பண்ண-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-
–கொடுத்த நாம் இருந்தோம் ஆகில் இவை இப்படிப் படுகிறது என்-என்று திரியட்டும் அவர்கள் அளவில் பிரசாதத்தைப் பண்ணி லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து-தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத திர்யக்காய் – ( தானே தாழ நின்று )சாரதியாய் உபதேசித்தால் போலே ஹிதானுசந்தானம் பண்ணக்  கடவ அவனே ரஷகன் –

யோகு புணர்ந்து –அதாவது –குறைவில் தடம் கடல் கோள் அரவேறி தன் கோல செம் தாமரைக் கண் –
உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்–
திருவாய் -3-10-2-என்கிற படியே
திரு பாற் கடலில் திரு அனந்த் தாழ்வான் மேல் ஏறிப் படுக்கை வாய்ப்பாலே கண் வளர்ந்து அருளுகிறார் போலே ஜகத் ரஷண உபாய சிந்தை பண்ணி கண் வளர்ந்து —

யோகு புணர்ந்து) ““தன் கோலச் செந்தாமரைக் கண்‌ உறைபவன்‌ போலவோர்‌ யோகுபுணர்ந்த ஓளிமணிவண்ணன்‌”’(திருவா. 3 – 10 – 2) என்று க்ஷீராப்தியில்‌ யோக நித்‌ரா வ்யாஜத்தாலே சேதநருடைய ரக்ஷண உபாயசிந்தை பண்ணி,

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்

கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2–நானே அன்று -என்னிலும் குறைவற்றார் உண்டு திருமேனி நீ தீண்டப் பெற்று மாலும் கருங்கடல் என்நோற்றாய்-என்கிறபடியே சர்வ காலமும் தன மடியிலே வைத்துக் கொண்டு இருக்கப் பெற்ற இதுவும் ஒன்றே –-தடம் கடல்
தாலும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
-என்கிறபடியே அங்குசிதமாக கண் வளர்ந்து அருளும் படி இடமுடைத்தான இதுவும் ஒரு பாக்யமே–கோள் அரவு ஏறி கோள் -என்று ஒளியாய் -ஸ்வ ஸ் பர்சத்தாலே உண்டான ஒளியை சொல்லுகிறது-கோள் என்று தேஜோ பதார்த்தங்களான க்ரஹங்களாய் அவ் வழியிலே ஒளியைச் சொல்லுகிறது-கோள் என்று மிடுக்காய் -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலை கதாமநி -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை சொல்லுகிறது என்றுமாம்-அரவு-மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றை பிரக்ருதியாக உடையனாய் இருக்கை-ஏறி சுழல வந்து சாதரமாக நோக்கி ஏறுகை
தன் கோலச் செந்தாமரைக் கண்-உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் ஐஸ்வர்யா ஸூ சகமான சிவப்பை உடைத்தாய் இருக்கை-கண்ணுறைகை -கண் வளர்கை – கண் வளர்த்தல் என்ற பேராய்-ஜகத் ரக்ஷண சிந்தனை உக்தன் ஆகை
ரஷ்ய வர்க்கம் கரைமரம் சேரும்படி யாதல்-ஆத்மாநம் வா ஸூ தேவாக்க்யம் சிந்தையன் -என்கிறபடியே -ரக்ஷகனான தன்னை யாதல் அனுசந்திக்கை –
ஒளி மணி வண்ணன் கண்ணன்-ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்-
ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்

கண் காண வந்து –அதாவது – சிந்தித்த உபாய அனுகுணமாக-துயரில் மலியும் மனிசர் பிறவியில் -தோன்றி கண் காண வந்து–திருவாய் -3-10-6 -என்கிற படியே–சஷுசா பச்யதி கச்ச னைனம் -கட உபநிஷத் -என்றும்-நமாம்ச சஷூர் அபிவீஷதே தம்-என்றும்-கட் கண்ணால் காணா அவ் உரு–பெரிய திருவந்தாதி –28 -என்றும் சொல்லப் படுகிற தான் துக்கதோரான மனுஷ்யருடைய பிறவியிலே ஆவிர்பவித்து அருளி , அவர்கள் மாம்ச சஷுவுக்கு விஷயமாம் படி வந்து-

சிந்தா ஸமநந்தரம்‌ தோற்றின உபாயாநுகு, ணமாக (கண் காண வந்து) “துயரில்‌ மலியும்‌ மனிசர் பிறவியில்‌ தோன்றிக் கண் காண வந்து”’ (திருவா. 3 – 10 – 6) என்கிறபடியே ”ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம்‌”, “ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம்‌””“என்றேனும்‌ கட்கண்ணால்‌ காணாத அவ்வுரு” (பெரியதிரு. 28) என்றும்‌ சொல்லுகிற தான்‌ துக்க பஹுளரான மநுஷ்யரோடே ஸஜாதீயராய்க் கொண்டு வந்து பிறந்து அவர்களுடைய மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷய பூ,தனாய்‌,

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-துக்கோத்தரமான மனுஷ்யருடைய ஜென்மத்தில் வந்து ஆவிர்ப்பவித்து மாம்ஸ சஷூஸ்ஸூ க்கு விஷயம் இன்றிக்கே
நித்ய ஸூ ரிகளுக்கு சதா தர்ச நீய விஷயமான தன்னை மாம்ஸ த்ருஷ்டிக்கு விஷயம் ஆக்கி அநு கூலரை அழகால் ஈடுபடுத்தி பிரதி கூலரை ஆயுதத்தால் அழியச் செய்து

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் –என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து
–28-ஒரு நாளும் பகவத் விஷயத்தைக் காணாமையாலே பீலிக்கண் -என்றவோபாதி கண் என்று பேரான கண்ணால் காணப் போகாத அவனுடைய திருமேனியை நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணுமாகில் அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்

ஆள் பார்க்கிறவன் –அதாவது –-இப்படி அவதாராதிகளாலே –ஆள் பார்த்து உழி தருவாய் -நான்முகன் -60–என்கிற படி , எனக்கு அடிமை ஆவார் உண்டோ -என்று இதுவே வேளாண்மையாக தேடித் திரிகிறவன்-

‘ஆள்பார்த்துழிதருவாய்‌”? (பெரியதிரு. 60) என்று அப்ராக்ருத விக்‌ரஹ விஸிஷ்டனாய்‌, நிரங்குசா ஸ்வதந்த்ரனாய்‌, நிரபேக்ஷனான தான்‌ உற்றாரா யிருப்பார்‌ உருமாறி நின்று ஆராயுமாப் போலே *தமருகந்த இத்யாதிப்படியே அர்ச்சகர்‌ உகந்த திரவ்யத்தைத்‌ திருமேனியாகக்‌ கொண்டு அவர்களுக்கு அத்யந்த பரதந்த்ரனாய்‌, அவர்களிடுகிற பத்ர புஷ்பாதிகளிலே ஸா பேக்ஷனாய்க் கொண்டு கோயில்‌களிலேயும்‌, க்‌ருஹங்களிலேயும்‌ நின்றருளி நம்முடைய விஷயீகாரத்துக் காளாவார்‌ ஆர்‌ என்று ஆள் பார்க்கிறவன்‌.-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-எனக்கு அடியார் ஆவார் யுண்டோ என்று இது வெள்ளாமை யாகத் தேடித் திரிகிறபடியை கண்டு உனக்கு அடியேனாக வேணும் என்று உன் திருவடிகளையே பார்த்துத் திரிகிற என் ஸ்வ பாவத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும்

தமருகந்த   தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர் தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் –
44–தன் கருத்து அறிந்து எடுத்துக் கை நீட்டும் திருவாழி முதலான திவ்ய பரிகரங்களை யுடையனான சர்வேஸ்வரன் அவர்களைக் கால் கடைக் கொண்டு இன்று சம்சாரத்திலே தன்னைப் பற்றி இருக்கும் ஆஸ்ரிதரானவர்கள் ஸூவர்ண ரஜாதாதி களான த்ரவ்யங்களாலே உகந்து ஏறி அருள பண்ணினது யாதொரு விக்ரஹம் அந்த விக்ரஹத்தை அசாதாரண விக்ரஹத்தோ பாதி தானே ஆதரித்து பரிக்ரஹியா நிற்கும்-இப்படி அவர்கள் உகந்த திரு மேனியை விரும்புகிற அளவன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்து சாத்தின திரு நாமம் யாதொன்று அந்தத் திரு நாமத்தை நாராயணாதி நாமங்களோபாதி தனக்கு நாமமாக விரும்பா நிற்கும்-ஆஸ்ரிதரானார்கள் உகந்து கொண்டு குண சேஷ்டிதாதிகளான யாதொரு பிரகாரத்தை அனுசந்தித்து அனவ்ரத பாவனை பண்ணி இருப்பார்கள் -அந்த பிரகாரத்தை உடையனாகா நிற்கும் 

உலகினது இயல்வை நல் வீடு செய்ய –அதாவது –ஒ ஒ உலகினது இயல்வே—திருவாசிரியம் -6-என்று
தத்வ வித்துகளை கண்டால் சகிக்க மாட்டாமல் விஷணராம் படி – பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுவாரை போலே –பெரிய திருமொழி -11-6-6- உத்பாதகனாய் சர்வ பிரகார ரஷகனாய் போருகிற பர தேவதையான தன்னை விட்டு கிடந்த இடம் தெரியாத படி அபிரசித்தமான சூத்திர தேவதைகளை –
ஆட்டை அறுத்தல் – பிரஜையை அறுத்தல்- அத்யந்த நிஷிதமான மதுராதிகளை நிவேதித்தல்- ஆகிய
பரஹிம்சாதி சாதனா முகத்தாலே பஜித்து- தத்பலமாக துக்க மிஸ்ரமான சுகத்தை தருமவையாய்
அநாதியாய் துஸ்தரமாய் இருக்கிற பிரகிருதி சம்பந்த நிபந்தனங்களான ஜென்மங்களில் நின்றும்
ஒருகாலும் நீங்காமைக்கு உறுப்பாய் – பல வகைப் பட்டு தப்ப அரிதாய் இருந்துள்ள சப்தாதி விஷயங்களிலே துக்கப் பட்டு அழுந்துகிற லோக ஸ்வபாவத்தை-யாதேனும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல் வீடு செய்யும் திருவிருத்தம் -95– என்று அநாதி வாசனையாலே பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை அவலம்பித்து தன்னை விட்டு அகலுகையே ஸ்வபாவமான சம்சாரி சேதனன் விரதத்தை நன்றாக விடுவிக்கும் என்கிறபடியே ஸ வாசனமாக போக்குகைக்காக —

(உலகினதியல்வை நல்வீடுசெய்ய) “ஓ ஓ உலகினதியல்வே”’ (திருவாசிரி. 6) என்கிற படியே ஸர்வ ப்ரகார ரக்ஷகனான தன்னை விட்டு ஷூத்‌ர தே,வதைகளை பர ஹிம்ஸாதி ஸாதந முகத்தாலே வலித்து, ஷூத்‌ர ப்ரயோஜநங்களைப்‌ பெற்று அவற்றை அநுபவிக்‌கைக்காக தேவாதி சரீர ப்ரவேஸம்‌ பண்ணி, ஆஸ்சர்ய பூதையான ப்ரக்ருதி வஸ்யரான ஸம்ஸாரி சேதநர் ஸ்வபாவத்தை “யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதத்தை நல் வீடு செய்யும்‌”” (திருவிரு. 95) என்று ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்‌ ஏதேனுமொன்றைப்‌ பற்றத் தன்னை விட்டு நீங்குகையே ஸ்வபாவமான விரதத்தை ஸவாஸநமாகப்‌ போக்குகைக்காக,

ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே – இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே -உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி – பின்னை கர்ப்பத்தில் தரித்து – பிரசவ வேதனையை அனுபவித்து – அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால் அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே அவளை விட்டு ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே
புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர்   –அசேதனமாய் இருப்பது ஒன்றை
வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –-பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி

இணக்கு பார்வை தேடி--அதாவது – மிருக பஷிகளை பிடிப்பார் சஜாதீய புத்தியாலே தன்னோடு
இணக்க வற்றான மிருக பஷிகளை பார்வையாக வைத்து பிடிப்பாரைப் போலே -பார்வை வைத்து இணக்குவதாக அதுக்கு ஆவார் ஆர் என்று தேடி

இணக்குப் பார்வை தேடி) ஸஜாதீய புத்‌தியாலே தன்னோடு இணக்க வற்றான பார்வை மானை வைத்து ம்ருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டு திருத்த வேணும்‌ என்று பார்த்து,அதுக்காளாவார்‌ ஆரோ என்று தேடி,-

கழலலர் ஞானம் உருவின முழுதும் ஒட்டின பெரும் கண்-அதாவது –கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஒரு கழல் போய் நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா அழறலர் தாமரைக் கண்ணன் –திருவிருத்தம் -58- என்று தொடங்கி ஒரு திரு அடி தலமே பூமி அடைத்தானாயிற்று-ஒரு திரு அடி பூமியிலே இடம் இல்லாமையாலே போய் சர்வருக்கும் சர்வ காலத்திலும் இந்த சம்பந்தத்தை நினைத்து தனி நிழலில் ஒதுங்கலாம் படி நிழலை கொடுக்கைக்காக ஊர்த்த்வ லோகங்களில் எல்லாம் நிறைந்தது –
பரப்பை உடைத்தான அவ் அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய் இருந்துள்ள ஞானம் ஆகிய பிரகாச ரூபமான தீபத்தை உடையனாம் என்கிற படியே கழல் தலமும் உழறலர் ஞானமும் -மாறுபாடு உருவின பரப்பு எங்கும் ஓட்டிப் பார்த்த அழறலர் தாமரை போன்ற செவ்வியை உடைய –
பெரும் கண் மலர்–
திருவிருத்தம் -45- -என்ற பெரிய திரு கண்களானவை –

(கழறலர்‌ ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங்கண்‌) ““கழறலம்‌” (திருவிரு. 58) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற படியே ஜகத்திலே வ்யாப்தமான ஜ்ஞாநத்தையும்‌ அதிக்ரமித்து, ”மண்முழுது மகப்படுத்து நின்ற””, ”மேலைத் தண்மதியும்‌ கதிரவனும்‌ தவிரவோடி”’ (திருநெடு. 5) என்று ஸகல லோகங்களையும்‌ ஆக்ரமிக்கும்படி வ்யாபிக்கப் பெற்ற திருவடிகளிலும்‌ முற்பட்ட ்‌அழறலர் தாமரைக் கண்ணன்‌ ” (திருவிரு. 58) என்றும்‌, ““பெருங் கேழலார்‌ தம் பெருங்‌கண் மலர்ப் புண்டரீகம்‌”” (திருவிரு. 45) என்கிற திருக் கண்களானவை,-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58–விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன் த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று அவனுடைய ஸம்பந்தத்தையும் ஸக்தியையும் பிரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–5-சதுர்தச புவனத்தையும் அளந்து கொண்டு –-மண் -என்று பூமியைச் சொல்லி முழுதும் -என்கையாலே ஊர்த்வ லோகங்களையும் நினைக்கிறார் –அங்கன் இன்றிக்கே-மண் -என்று ஸ்தலமாய்-மேல் உண்டான ஸ்தலங்களைச் சொல்லுகிறது –-அளந்து -என்னாதே –அகப்படுத்து -என்கையாலே – இவன் மேல் விழுக்காடும் அவர்கள் இறாய்ப்பும் -தோற்றுகிறது –நின்ற – க்ர்தக்ருத்யனாய் நின்ற-சேஷ பூதன் சேஷியை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் போலே காணும்-சேஷியும் சேஷ பூதனை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் ஆனபடி -(க்ருத க்ருத்யா ததோ ராம விஜ்வர பிரமுமோத ஹா )

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார்
இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45–ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி -பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–

எங்கும் இலக்கு அற்று –-அதாவது – ஓர் இடத்திலும் அதுக்கு ஆவாரைக் காணாமல் ஒரு விஷயத்தை அப்படிக்கு ஆக்குவதாக பார்க்கிற அளவிலே –அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்கு உழன்று- மாறி படிந்து துளங்குகிறவர் மேல் பட –-அதாவது-அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் –பெருமாள் திருமொழி -1-10-என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாக எப்போதும் ஸ ஸ்நேகமாக பார்த்துக் கொண்டு கிடக்கையாலே – தனக்கு பள்ள மடையான தஷிண திக்கிலே –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம் -95-என்றும்-ஆக்கையின் வழி உழல்வேன் -திருவாய் –3-2-1-என்றும்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –திருவாய் -3-2-2-என்றும் –பல் பிறவியில் படிகின்ற யான்—திருவாய் -5-1-9-என்றும்-பிறவிக் கடலில் நின்று நான் துளங்க -திருவிருத்தம் -45-என்றும் சொல்லுகிற படி ஜாதி நியமம் ஆதல் வர்ண நியமம் ஆதல் அன்றிக்கே கர்ம அனுகுணமாக ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து அந்த சரீரத்தின் வழி போய் ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவ் அனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே அதில் அவஹாகித்து தரை காண ஒண்ணாத சம்சார சாகர மத்யஸ்தராய் கொண்டு நடுங்குகிற இவர் மேல் பட –

(எங்குமிலக்கற்று) விஷயீகாரத்துக்கு அநுகுணமான நன்மை சேதநர் பக்கல்‌ காணாமையாலே எங்கும்‌ இலக்கற்று, (அன்பொடு நோக்கான திசையிலே) *’அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளி கொள்ளும்‌”’ (பெகுமா.தி. 1 – 10) என்கிறபடியே இவர்கள் பக்கல்‌ நன்மை பெறாத வளவிலும்‌ இவர்கள் பக்கல்‌ தனக்குண்டான சாபலத்தாலே ஸ ஸ்நேஹமாக கடாஷித்த திசையிலே, (ஆக்கையில்‌ புக்கு) ”யாதானு மோராக்கையில்‌ புக்கு”’ (திருவிரு. 95) என்றும்‌, ““ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌”’ (திருவா. 3 – 2 – 1) என்றும்‌, “மாறி மாறிப்‌ பல பிறப்பும்‌ பிறந்து (திருவா. 2 – 6 – 8) என்றும்‌, “’பன் மா மாயப் பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவா. 3 – 2 – 2) என்றும்‌, ““பிறவிக் கடலுள்‌ நின்று நான்‌ துளங்க”” (திருவா. 5 – 1 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவாதி சரீரங்களிலே புக்கு“தேவோஹம்‌ மநுஷ்யோஹம்‌’ என்கிறபடியே அவற்றிலே பக்‌தராய்‌, அவற்றின்‌ வழியே போய்‌ தத் பலமான ஜந்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவற்றிலே அவகாஹித்துத்‌ தரை காண ஓண்ணாத ஸம்ஸார ஸமுத்‌ர மத்‌யஸ்தராய்க் கொண்டு நடுங்குகிற இவர் மேலே படும்படி,

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  –
அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95–ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து – அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம்   வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே 

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் – உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8—சபரிகாரமாக உம்மை விஷயீ கரிக்கைக்கு நீர் செய்தது என் என்ன – அநாதியாக சாவது பிறப்பதுமாகப் போந்தேன்-அனுபவித்து மீளுதல் -பிராயச்சித்தம் பண்ணுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று-இப்படி ஜென்ம பரம்பரையாக போரா நிற்க உன் திருவடிகளை வந்து கிட்டிக் கொண்டு நின்றேன் -அதாகிறது இந்த சித்திக்கு இத்தலையில் ஒரு முதலும் உண்டு என்று தோற்றாத படியால் சொல்லுகிறது

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–-மம மாயா என்று உன்னுடையதாய் -தான் ஒன்றாய் இருக்க குண த்ரய பேதத்தை உடைத்தாய் துரத்யையாய் இருந்துள்ள ப்ரக்ருதி – நீ முடித்த முடியை நான் அவிழ்க்கவோ -ஸூ கத்திலே சங்கிப்பிப்பது -பிரவ்ருத்தியிலே மூட்டுவது-உணர்த்தி அறப் பண்ணுவது -ஆகிற குணங்களை தப்பவோ –பல் பிறவியில் – பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான தேவாதி பேதங்கள்-படிகின்ற யான்– -விழுகின்ற -என்னாத படி கின்ற -என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை –வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் -ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை –

பக்க நோக்கற பண்ணின விசேஷ கடாஷம்--அதாவது-இப்படி இவர் மேல் பட்ட இத்தை-நம் மேல் ஒருங்க பிறழ் வைத்தார் -திருவிருத்தம் -45-என்கிற படியே ஒரு மடைப் படுத்தி-பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணனே திருவாய் -2-6-2- என்று-நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பார்க்க அறியான் என்னும் படி — நா ஸௌ புருஷகாரேண ந சாப்யன்யேன ஹேதுநா கேவலம் ஸ்வ இச்சையாவாஹம் ப்ரேஷே கிஞ்சித் கதாசன–பாஞ்சராத்ரம்-(என் இச்சையால் ஒருவனை ஒரு கால் கடாஷிக்கிறேன் -வேறே சாதனத்தாலும் புருஷகாரத்தாலும் இல்லை ) -என்றும்
நிர்ஹேதுக கடாஷேண மதீயேன மகா மதே ஆச்சார்யா விஷயீகாராத் பிராப்னுவந்தி பராம் கதிம்–பாஞ்சராத்ரம்-(எனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே ஆச்சார்யர் அங்கீகாரத்தாலே உயர்ந்த பேற்றினை அடைகிறார்கள் )-என்றும் சொல்லுகிற படி –ஸ்வ இச்சையால் நிர்ஹேதுகமாக பண்ண பட்ட விசேஷ கடாஷம் —இதுக்கு ஹேது–இப்படி பட்ட விசேஷ கடாஷம்-என்று வாக்ய அந்வயம் –ஆக கீழ் உக்தமான இவருடைய பிரபாவத்துக்கு ஹேது ஸ்பஷ்டமாக பிரதி பாதகமாயிற்று ..-இத்தாலே சங்கா வாக்கியத்தில் சொன்ன சங்கைகள் எல்லாம் கிடக்க ,-அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவர் இவர் என்று நிர்ணயமாய் விட்டது .

“எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”’ (திருவா, 2 – 6 – 2) என்கிறபடியே நாச்சிமார் வந்து திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்‌ புரிந்து பாராதே ““நாஸெள புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா | கேவலம்‌ ஸ்வேச்ச யைவாஹம்‌ ப்ரேஷே கஞ்சித்‌ கதாசந”” (பாஞ்ச.), ““நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே ! ஆசார்ய விஷயீகாராத்‌ ப்ராப்நுவந்தி பராங்கதிம்‌”” (பாஞ்ச.) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப்‌ பண்ணப்பட்ட விஸேஷ கடாஷம்‌ என்கிறார்‌
ஆக இத்தால்‌ கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம்‌ என்றதாய்த்து.

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார்
இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45–ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே –ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி -பெரும் கேழலார்  என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –-கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்- ஸ்ரீ பூமிப் பிராட்டியை குளிர நோக்கிக் கொண்டு இருக்கிற இருப்பு –நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –ஒருங்கே –ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி–பிறழ வைத்தார் –மிக வைத்தார் –-தம்மால் தரிக்க போகிறது இல்லை–

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
2-6-2-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் – இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

நித்ய சம்சாரியாய் போந்தார் ஒருவருக்கு பகவத் கடாஷ விஷயமான அளவிலே நிகில பாபங்களும் நீங்கி -இப் பிரபாவம் எல்லா உண்டாகக் கூடுமோ என்கிற சங்கையிலே -பகவத் கடாஷ வைபவத்தை அருளிச் செய்கிறார் –நித்ய ஸம்ஸாரியாய்ப்‌ போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும்‌ போய்‌ இந்த ப்ரபாவமெல்லாம்‌ உண்டாகக் கூடுமோ என்னில்‌; ஸபரி முதலானாரை பரி ஸூத்‌,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம்‌ அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும்‌ நஸிப்பிக்குமிறே என்கிறார்‌

ச்ரமணி விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு சாபம் இழிந்தது என்னப் பண்ணும் இறே-சூரணை -95-

சிரமணீ பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடு நோக்கு-அதாவது – ஸ்ரமநீம் தர்ம நிபுணாம் அபிகச்ச—பாலகாண்டம் -1-57-( தாயினும் உயிருக்கு நல்கும் சவரியைத் தலைப்பட்ட நன்னாள் ஏயதோர் நெறியின்
எய்தி யிரலையின் குன்றமேறி
-கம்பர் ) –என்று கபந்தன் சொன்ன அநந்தரம் – சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்-பால -1-57( மிக்க தேஜஸ் உடைய ஸ்ரீ ராமபிரான் சபரியிடம் சென்றார் )-என்கிற படியே –
ஸ்வயமேவ சென்று விஷயீகரித்த வேடுவச்சி யான ஸ்ரமணியை சஷுசா தவ ஸூவ்ம்யேன பூதாஸ்மி ரகுநந்தன – பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்ய சாரிஷம் –ஆரண்யம் -74-12-
( ஆண்டவன் அன்பின் ஏத்தி அழுது இழி அருவிக் கண்ணாள்
மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேளை –
கம்பர் ) என்று தேவரீர் உடைய அழகிய திரு கண் பார்வையாலே என்னுடைய பிராப்தி பிரதி பந்தங்கள் எல்லாம் போய் – பரிசுத்தன் ஆனேன் என்று சொல்லும்படி யாகவும் –

(ஸ்ரமணிவிது,ர) ““ஸ்ரமணிம்‌ த.ர்ம நிபுணாம்‌”’ (ரா. ஆ. 1 – 56) என்கிறபடியே வேடுவிச்சியாயிருக்கிற ஸபரியை *சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு,தந்த,ந । பாத,மூலம்‌ க,மிஷ்யாமி யாநஹம்‌ பர்யசாரிஷம்‌”‘ (ரா. ஆ. 74 – 12) என்று அவள்தானே “தேவரீருடைய அழகிய கடாக்ஷத்தினாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிப,ந்த,கங்களெல்லாம்‌ நிங்பேஷமாகப்‌ போகையாலே பரிஸுத்‌,தை,யானேன்‌’ என்று சொல்லும்படி பண்ணியும்‌,

விதுரரைப் பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு-அதாவது – வெள்ளமானது பள்ளத்திலே தானே சென்று விழுமா போலே – அபிஜனாத்ய அஹங்கார யோக்யதையும் இல்லாமையாலே – நிவாசாய ய யௌ வேசம விதுரஸ்ய மகாத்மான-உத்யோக பர்வம் – -என்று தானே சென்று க்ரஹத்தில் புக்கு
விதுரான்னானி புபுஜே சுசீனி குண வந்தி ஸ-உத்யோக பர்வம் –தம்முடைய ஸ்பர்சம் உள்ளவற்றை விரும்பி அமுது செய்யப் பெற்ற விதுரரை –பீஷ்ம துரோண வதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூதன கிமர்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம்-உத்யோக பர்வம் – – என்று எதிரியானவன்- சீறிச் சொல்லச் செய்தேயும் –-புண்டரீகாஷா -என்னும் படி அழகிய திரு கண்களின் கடாஷத்தாலே சகல சம்சாரிக தோஷங்களும் போய் பரிசுத்தர் ஆம் படியும் —

ஸ்ரீவிது,ரரை ‘“பீ,ஷ்மத்‌,ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது,ஸூ௫த.ந । கிமர்த்த_ம்‌ புண்ட,ரீகாக்ஷ பு,க்தம்‌ வ்ருஷலபே,ஜநம்‌”” (பார. உத்‌.) என்று எதிரியானவன்‌ சீறிச்‌ சொல்லா நிற்கச் செய்தேயும்‌ ”புண்ட,ரீகாக்ஷ”” என்னும்படியான திருக்கண்களாலே அவரை பரிஸூத்‌,த, ராம்படி பண்ணியும்‌,

ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு-அதாவது-வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு–நாச்சியார் -12-6- கொள்ளுகிற போதை – நெடு நோக்காலே பக்த விலோசனத்தில் ருஷி பத்நிகளில் ஒருத்தியை –
தத்ரை கா வித்ருதா பர்த்தா பகவந்தம் யதாஸ்ருதம் ஹிருதோபகூஹ்ய விஜஹவ் தேஹம் கர்ம நிபந்தனம் –ஸ்ரீ பாகவதம் -10-23-34–(ஒருத்தி கணவனால் தடுக்கப் பட்டவளாய் தான் கேட்டு இருந்தபடியே கண்ணபிரானை மனசால் கட்டிக் கொண்டு கர்மத்தால் உண்டான சரீரத்தை விட்டாள் )
என்று ஸ்வ விஷய பிராவண்யத்தாலே – அப்போதே சம்சாராம் முக்தையாம் படியையும் – அல்லாதாரை ஷீண பாபராய் முக்த அர்ஹராம் படி பரிசுத்தராகவும் பண்ணின சர்வேஸ்வரனுடைய கடாஷமானது –

(ருஷி பத்நிகளை) “*வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்‌” (நா. திரு. 12 – 6) என்கிறபடியே தன்னுடைய நெடு நோக்காலே ப,க்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகளிலே ஒருத்தியை “கத்ரைகா வித்‌,ருதா ப,ர்த்ரா ப,க,வந்தம்‌ ய தாஸ்ருதம்‌ । ஹ்ருதேரபகூ,ஹ்ய விஜஹெள தேஹம்‌ கர்மநிப,ந்த,நம்‌”” (ப,ாக,. 10 – 28 – 34) என்று தன் பக்கல்‌ ப்ராவண்யத்தாலே-அப்போதே முக்தையாம்படிபண்ணியும்‌, அதிலே சிலர்‌ தன்னை அதுப,விக்கும்படியாகவும்‌ பண்ணின விஷோேஷ கடாக்ஷமானது,

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு-அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்-அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே – இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –பத்தம் -சமைத்த சோறு — விலோசனம் -பார்வை-(பிரசாதம் எதிர் பார்த்து இருக்கும் -என்றே சப்தார்த்தம் ) சோறு பார்த்து இருந்த இடமாய்த்து- சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி

அம்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து–திருப்பாவை –22 -என்று-அழகிய திரு கண்களாலே எங்களைப் பார்த்து அருளினாய் ஆகில் சாபோபகதரைப் போலே அனுபவித்து அல்லாது நசியாத எங்கள் பாபம் போய் விடும் என்கிற படியே – அனுபவ விநாஸ்யமான சகல பாபங்களும் நிவ்ருத்தமாம் படி பண்ணும் இறே என்கை–பகவத் கடாஷம் தான் சகல பாப ஷபண நிபுணமாகையாலே பட்டவிடம் -அமலங்களாக –திருவாய் -1-9-9 -என்னும் படி நிர் தோஷமாம் இறே —

(சாபமிழிந்தென்னப் பண்ணுமிறே) “திங்களு மாதித்தியனுமெழுந்தாற் போல்‌ அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல்‌ நோக்குதியேல்‌ எங்கள்மேல்‌ சாபமிழிந்து ”” (திருப்பாவை 22) என்கிறபடியே ஆஹ்லாத,கரத்வத்தையும்‌, அதிப்ரகாஸகத்வத்தையும்‌ உடைத்தாகையாலே சற்த்‌.ராதி.த்யர்களிருவரும்‌ உதித்தாற்போலேஇருக்கிற அழகிய திருக்கண்களாலே எங்களைப்‌ பார்த்தருளினாயாகில்‌ ஸசாபோபஹதரைப்போலே, அநுப,வித்தல்லது நமமியாத ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும்‌ நிவ்ருத்தமாம்‌ என்று சொல்லும்படி ஸகல பாபக்ஷபணத்தில்‌ நிபுணங்களாயிறே இருப்பது என்கிறார்-

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் (எம் கண்)மேல் நோக்குதியேல்
எங்கள்  மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்–22—சந்திர ஸூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –இரண்டும் கொண்டு முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –-2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்-3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –-4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )-2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)-4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான் -விஷய பிரவணமான இந்திரியங்கள் செய்வது என் என்னில்-ஐம்புலனும் அவன் மூர்த்தி அவையும் அவன் அழகைக் கண்டு அவனுக்கு சரீரவத் விதேயம் ஆயிற்றின அவனைக் காண்பதற்கு முன்பு அவிதேயமானவை அவனைக் கண்டவாறே விதேயம் ஆயிற்றன

இப்படி இவரை நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணிற்று எதுக்காகா ? விசேஷ கடாஷ வேஷம் தான் ஏது– இவர் தாம் பின்பு ஆன படி எங்கனே என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —ஸர்வேஸ்வரன்‌ இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம்‌ என்‌ என்னில்‌, லோக ஹிதார்த்தமாக என்கிறார்‌

கோ வ்ருத்திக்கு நெருஞ்சியை புல்லாக்கினவன் ஜகத் ஹிதார்த்தமாக- எனக்கே நல்ல அருள்கள் -என்னும் படி சர்வ சௌஹார்த்த பிரசாதத்தை ஒருமடை செய்து இவரைத் தன்னாக்க லோகமாகத் தம்மைப் போல் ஆக்கும் படி யானார்-சூரணை-96-

கோ வ்ருத்திக்கு நெருஞ்சியை புல்லாக்கினவன் ( கோ விருத்திக்கு -பசுக்களை பாதுகாத்து போஷிக்க )அதாவது-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-திருவாய் -10-3-10-என்று பரம பதத்தில் காட்டிலும் ,
பசு நிரை மேய்க்கையே விரும்பி இருக்கும் அவனாகையாலே – பிருந்தாவனம் பகவதா கிருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா சுபேன் மனசா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28–என்கிற படியே-கோ ரஷணத்துக்காக நெறிஞ்சிக் காட்டை -உத்பன்ன நவ சஷ்பாட்யா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-37- என்கிறபடியே தத் போக்யமான புல்லாம்படி பர சம்ருத்தி ஏக பிரயோஜனமான
திரு உள்ளத்தாலே சங்கல்பித்த சர்வ சக்தி யானவன் –ஜகத் ஹிதார்த்தமாக-அதாவது –-நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத் ஹிதிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம –பாரதம் -என்கிற படியே கோ ரஷணத்தோபாதி ஜகத் ரஷணத்துக்கும் கடவன் தானே ஆகையாலே –
ஜகத்தினுடைய ஹிதார்தமாக
-( ஆடுதுறை – ஜகத் ரக்ஷணப் பெருமாள் )

“*திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி” (திருவா, 10 – 3 10) என்று ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத கோ ரக்ஷணத்திலே திருவுள்ளம்‌ உகந்திருக்கையாலே அவற்றினுடைய அபிவ்ருத்‌திக்காக “ப்‌ருந்தாவநம்‌ பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்ட கர்மணா ! றாபே,ந மநஸாத்‌,யாதம்‌ கவாம்‌ வருத்‌தி மபிப்ஸதா”’ (வி.பு. 5 – 6 – 28) என்று நெரிஞ்சிக் காட்டை பர ஸம்ருத்‌த்‌யேக ப்ரயோஜநமாகத்‌ திருவுள்ளத்தாலே **உத்பந்நநவபாஷ்பாட்‌யம்‌”’ (வி.பு. 5 – 6 – 37) என்கிறபடியே அவற்றுக்கு போக்‌யமாக ஸங்கல்பித்தவன்‌. “நமோ ப்‌ரஹ்மண்யதே வாய கேரா ப்‌ராஹ்மண ஹிதாய ச ।ஜகத்‌தி தாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம?” (பாரதம்‌) என்று பசுக்களினுடைய ரக்ஷணத்தோபாதி ஜகத்தினுடைய ரக்ஷ்ணத்துக்குக்‌ கடவன்‌ அவனாகையாலே அந்த ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக.

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10—பரம பதத்தில் இருப்பைக் குலைத்து அன்றோ பசு மேய்க்கப் போந்தது -அவ்விருப்பு குலைந்து வந்து இருந்ததும் இப்போது பொல்லாது என்று இருக்கிறாள் -அவ்விருப்பிலே இருந்தான் ஆகில் இப்போது வயிறு எரிய வேண்டா விறே -நம் பேர் இழவு கொண்டு கார்யம் இல்லை –வஸ்து ஸூ ரஷிதமாய் இருக்கும் என்று இறே இவர்கள் இருப்பது -பரம பதத்தில் இருப்பை விட்டு பசு மேய்க்கப் போகக் கடவ யுன்னை – எங்களை உபேக்ஷித்தாய் என்று இன்னாதாகப் புகுகிறோமோ -அவ்விருப்பிலும் பசு மேய்க்க என்றால் யுகப்புதி என்றுமாம் –

எனைத்தோர் பிறப்பும் –எனக்கே நல்ல அருள்கள் -என்னும் படி-அதாவது – எனைத்தோர் பிறப்பும் எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய அம்மான் திரு விக்ரமனை – விதி சூழ்ந்தது–திருவாய் -2-7-6 -என்று அநேக ஜென்மங்கள் நான் பிறந்த ஜென்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து எனக்கே தன் பிரசாதங்களைப் பண்ணும் படி சர்வேஸ்வரனை கிருபை கால் காட்டிற்று என்றும் – நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்–திருவாய் -8-6-1 -என்றும் இத் தலையில் குற்றம் ஆதல் –அஜ்ஞஞத்வம் ஆதல்–தன் சார்வஜ்ஞம் ஆதல் -பாராதே – தன் பேறாக பண்ணுமதான அருள்களை நமக்கே அசாதாரணமாக தந்து அருளுகிறவன் என்றும் இவர் பேசும் படி –

(எனக்கே நல்ல வருள்கள்‌ என்னும்படி) ‘எதிர்சூழல் புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – எம்மான்‌ திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது”‘ (திருவா. 2 – 7-6) என்று – அநேக ஜந்மங்கள்‌ நான்‌ பிறந்த ஐந்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து என்னை விஷயீகரிக்ரும்படி ஸர்வேஸ்வரனை க்ருபை கால் கட்டிற்று என்றும்‌, ‘நல்ல வருள்கள்‌ நமக்கே உகந்தருள் செய்வான்‌’” (திருவா. §-6- 1) என்றும்‌ தன் பேறாக க்ருபை பண்ண!], “பிராட்டி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானார்க்குக்‌ கூறுகொடாதே எனக்கும்‌ என்னோடு ஸம்பந்தமுடையார்க்கும்‌ தருகிறவன்‌” என்று இவர்‌ பெறும்படி.

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-
–நான் இழவுக்கு யத்னம் பண்ணிப் போந்த காலம் எல்லாம் என்னைப் பெறுகைக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகையாலே பெற்றேன்
எதிரான சூழல் -என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திரு வவதாரங்கள்-எனக்கே யருள்கள் செய்ய- எனக்கும் பிறருக்குமாக அன்றிக்கே எனக்கே அருள்கள் பண்ணும்படி –-யம்மான் திரிவிக்ரமனையே – எனக்கு என்னவே விதி சூழ்ந்தது-சர்வேஸ்வரனாய் வைத்து ஸ்ரீ வாமனனாய் சகல லோகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்டவனை –-அது பரதசை என்னும்படி எனக்கு என்னவே விதி சூழ்ந்தது –தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது -ச தம் நிபதிதம் –

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1—இத்தலையில் குற்றம் பாராதே வெறுமையே பார்த்து தன் பேறாக அருளுகை -மாயக் கூத்தனில் விடாய்க்கு அருளினான் என்று இருக்கிறிலர்-நமக்கே தந்தருள் செய்வான்-பலர் அடியார் முன்பு அருளிய -என்று நித்ய ஸூ ரிகளும் தாம் பெற்றபேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது-

சர்வ சௌஹார்த்த பிரசாதத்தை ஒருமடை செய்து-அதாவது-ஸூஹ்ருதம் சர்வ பூதானாம்-ஸ்ரீ கீதை -5-29-என்கிற படியே-சர்வ பூதங்களின் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய சௌஹார்த்த பலமான பிரசாதமாகிற கிருபையை இவர் ஒருவர் விஷயமாகவும் ஒரு மடைப் படுத்தி –இவரைத் தன்னாக்க-
அதாவது –-என்னைத் தன்னாக்கி –திருவாய் –7–9-1-என்கிற படி- அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லையாய் இருக்கிற இவரை- தன்னோடு ஒத்த ஞான சக்திகளை உடையராம் படி பண்ண
இப்படி அவனால் திருந்தின இவர் –லோகமாகத் தம்மை போல் ஆக்கும் படி யானார்-அதாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி–திருவாய் -6-7-2- -என்கிற படி-தம்மோடு அன்வயித்த லோகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்மை போல் பகவத் ஏக பரராக பண்ணும் படி ஆனார் என்கை —

(ஸர்வ ஸெளஹார்த்த, ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து) “ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ .ஸாந்திம்ருச்சதி‘” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூதங்கள்‌ பக்கலிலும்‌ நடக்கிற தன்னுடைய ஸெளஹார்த்தத் தாலுண்டான ப்ரஸாதத்தை-இவரொருவர் பக்கலிலே ஒரு மடைப் படச்‌ செய்து விஷயீகரித்து. (இவரைத் தன்னாக்க) ““என்னைத் தன்னாக்கி”” (திருவா. 7 – 9 – 1) என்கிறபடியே இவரைத்‌ தன்னோடொத்த ஜ்ஞாந பக்திகளை உடையராகவும்‌, அநந்யார்ஹ ஸேஷபூதராகவும்‌ பண்ண- அவனாலே விஷயீ க்ருதரான இவரும்‌ லோகமாகத்‌ தம்மைப் போலே ஆக்கும்படி ஆனார்‌. “ஊரும்‌ நாடுமுலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவா. 6 – 6 – 2) என்கிறபடியே தாம்‌ அவதரித்த திருநகரி, அத்தோடே சேர்ந்த திருவழுதிவளநாடு, அத்தோடே சேர்ந்த பூ, லோகம்‌, அவற்றிலுள்ளாரடையத்‌ தம்மைப் போலே பகவதநுபவைக பரராகப்‌ பண்ணும்படி ஆனார்‌ என்கிறார்‌.-

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி
-5-29—யாகம், தபசு இவைகளைக் செய்விக்கும் கர்த்தாவாயிருப்பவரும், இவைகள் வாயிலாக யோகியால் அடையப்பெறும் தெய்வமாயிருப்பவரும் நாராயணனே. உலகம் முழுவதையும் அவர் ஆளுகிறார். அப்படிச் செய்வதால் அவரிடத்து அன்பு இல்லாதுபோய்விடவில்லை. கைம்மாறு கருதாது எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்கிறார் அவர். எல்லாருடைய உள்ளத்திலும் மன சாக்ஷியாக வீற்றிருந்து அவரவர் கர்மத்துக்கு ஏற்ற பலனை அவர் எடுத்து வழங்குகிறார். செயலுக்குத் தலைவனாயிருப்பது போன்று அறிவுக்கும் அறிவாய் இலங்குகின்றார் அவர். இவ்வுண்மையை அறிகின்றவர்களுக்கு மனச்சஞ்சலம் இல்லை.
சாந்தி தானே வந்தமையும்.

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை
ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1–கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி -என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –-என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே -சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற
க் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் –ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் -அரவிந்த லோசனன் என்றும் -மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை -ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading