ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) -(75-93)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

இது வரை ஸ்ரீ திருவாய் மொழி வைபவம் -மேலே 19 சூர்ணிகைகளால் ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் மேலே –இப்படி பிரமாண பிரமேய வைபவத்தை பிரதிபாதித்த அநந்தரம் பிரமாத்ரு வைபவத்தை
விஸ்தரேண பிரதி பாதிக்கிறார் மேல் — அதில் பிரதமத்தில் பிரமாண பிரமேயங்கள் இப்படி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் , இப் பிரமாண வக்தா ஆனவர் சதுர்த்த வர்ணர் அன்றோ என்ன
பாகவத உத்தமரான இவருடைய ஜன்ம நிரூபண தோஷத்தை பிரமாண பிரமேயங்களில் த்ரவ்ய பாஷா நிரூபண தோஷம் கீழ் உக்தம் அன்றிக்கே இருக்கச் செய்தே அத்தை சித்தவத்கரித்து திருஷ்டாந்தமாக கொண்டு அருளிச் செய்கிறார்-ஆக, ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்‌–மேலெல்லாம்‌ இதில்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்‌தவத் கரித்து இவற்றோடொக்கும்‌ ப்ரமாதாக்களின்‌ ஜந்ம நிரூபணம்‌ என்கிறார்‌ –

வீட்டு இன்ப-இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி –சூரணை-75-

அதாவது
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே –திருவாய் -2-3-5-என்கிற படி பகவத் விஷயம் என்றால்
உளம் கனிந்து இருக்கும் அவர்கள் உடைய க்ருஹங்களிலே அவர்கள் உகந்த ஒரு த்ரவ்யத்தை திரு மேனியாக கொண்டு இருந்து இன்பத்தை விளைக்கிற த்ரவ்ய அர்ச்சாவதாரத்தில் , நிரூபணத்தோடும்-அம் தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியை -பெருமாள் -1-4- -என்கிற படியே திராவிட ரூபமாய்
பகவத் குண கண பிரதிபாதகதயா விசேஷஜ்ஞர்க்கு ஆனந்தவஹமாய் இருக்கிற திரு வாய் மொழியில் பாஷா நிரூபணத்தோடும் , துல்ய தோஷம்-அடியார்க்கு இன்ப மாரியில் -திருவாய் -4-5 -10-–என்கிற படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல் உத்பத்தி நிரூபணம் என்கை-விஷ்ணோ அர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய யோ குரவ் மானுஷம் பாவ முபவ் நரக பாதினவ்– ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –
(எவன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களில் தாம்பரம் போன்ற உலோகபுத்தியைச் செய்கிறானோ –
எவன் குருவிடத்தில் மனிதன் எண்ணத்தைச் செய்கிறானோ -அவ்விருவரும் நரகத்தில் விழுமவர்கள் )யோ விஷ்ணவ் பிரதிமாகரே லோஹபாவம் கரோதி வை குரவ்ச மானுஷம் பாவமுபவ் நரகபாதினவ்–(மானிடவன் என்றும் குருவை மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும் ஈனமாதா எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு –ஞானசார -32-) அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பரீஷாயாஸ் துல்யமாகூர் மநீஷணா-ஹரிகீர்த்திம் வினைவ அந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம பாஷாகானம் ந காதவ்யம் தச்மாத்பாபம் த்வயா க்ருதம்–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் –கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் சர்வ யோநிஷூ
பிரத்யஷி தாத்ம நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்
–ஸ்ரீ பவிஷ்யோத்தரம் –சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் தா வீஷதே ஜாதி சாமான்யாத் சா யாதி நரகம் நர – ஏவமாதி சாஸ்திர வசனங்களை ஹரூதிகரித்தி இறே இவர் இப்படி அருளிச் செய்தது .-அவஜானந்தி மாம் மூடா –ஸ்ரீ கீதை -9-11–என்கிற படி வாசி அறியாமல் ,அவஜ்ஜை பண்ணும் மூடர்க்கும் பஸ்யந்தி கேஸிதநிசம் த்வத் அநந்ய பாவா -ஸ்தோத்ர ரத்னம் -16-(ஒப்பார் மிக்கார் இலையாய தேவரீர் தன்மையை தேவரீரைத் தவிர வேறு பொருளில் எண்ணத்தைச் செலுத்தாத ஒரு சிலர் எப்பொழுதும் பார்க்கிறார்கள் ) -என்கிற படியே
வாசி அறிந்து ஆதரிக்கும் அநந்ய பாவர்க்கும் மூன்று இடமும் ஒக்கும் இறே-

““கனிவார்‌ வீட்டின்பமே”’ (திருவா. 2 – 3 – 5) என்கிறபடியே அவன்‌ என்றால்‌ உள் கனிந்திருக்கிற வர்களுடைய க்‌ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும்‌ அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, ““அந்தமிழினின்பப் பாவினை”” (பெருமா.திரு, 1 – 4) என்றும்‌ சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய நிருபணத்தோடும்‌ பாஷா நிரூபணத்தோடும்‌ ஓக்கும்‌ என்றும்‌, ““அடியார்க்கின்பமாரி?? (திருவா. 4 – 5 – 10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத்‌ திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தாவஹமான பகவத்‌ குணங்களை வர்ஷிக்கும்‌ மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில்‌ ஆராய்ச்சியு மென்கிறார்‌. அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதம்‌ பஹு ப்ரமாண ஸித்‌தம்‌. அத்தோடே சேர்த்துச் சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷா நிரூபணம்‌ பண்ணலாகாதென்னுமிடம்‌ ஸித்‌தமாய்த்து. ““ஹரிகீர்த்திம்‌ விநைவாந் யத்‌ ப்‌ராஹ்மணேந நரோத்தம । பாஷா காநம்‌ ந காதவ்யம்‌ தஸ்மாத்‌ பாபம்‌ த்வயா க்ருதம்‌” (லைங்கே, 2-, 3 – 44) என்றிறே மநுவும்‌ சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென்‌ என்னில்‌; ““அர்ச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவே ஜாதி சிந்ததம்‌ | மாத்ரு யோநி பரீக்ஷா யாஸ் துல்ய மாஹுர் மநீஷிண?” (பாஞ்ச.) என்றும்‌, “யோ விஷ்ணோ? ப்ரதிமாகாரே லோஹ பாவம்‌ கரோதி வை । யோ குரெள மாநுஷம்‌ பாவம்‌ உபவ் நரக பாதிநெள”” (பகவச் சாஸ்த்ரே) என்றும்‌ சொல்லக் கடவதிறே–

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5—ஓர் அளவில்லை யாகிலும் பகவத் விஷயத்தில் பக்வமான ப்ரேமம் உடையவர் களுக்கு மோக்ஷ ஸூகமானவனே அவர்கள் இருந்த இடத்தே வந்து போக்யனானவனே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே-நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம்.  (வீடு -மோக்ஷமும் க்ருஹமும் – மோக்ஷ ஸூகத்தைக் கொடுப்பவன் – வீட்டிலேயே வந்து ஆனந்தத்தை விளைவிக்குமவன் –)

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை
பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-அம் தமிழ் இன்ப பாவினை – இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை-அவ் வட மொழியை -ஸ்ரீ மன் நாராயணனைப் போலே இனியவனை-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ-இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று–இன்ப மாரி- இன்பத்தை உண்டாக்கும் மேகம்-இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை-தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன் –

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு
–32-

இங்கன் இன்றிக்கே பேச்சிலும் ,இது சொன்னவர் பிறவியிலும் , தாழ்வு பார்த்து ,இப் பிரபந்தத்தை இகழும் அவர்களுக்கு , அநிஷ்ட பிரசஞ்சனம் பண்ணுகிறார் -பேசித்யாதி வாக்ய த்வயத்தாலே-ஆகிலும்‌ திராவிட பாஷையாயிரா றின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்‌;

பேச்சு பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்-பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும்nஅறு மூன்றும் கழிப்பனாம்-சூரணை -76-

அதாவது –
சமஸ்க்ருதமாகவும் ,த்ராவிடமாகவும் ,பகவத் பரமானது உபாதேயம் . அந்ய பரமானது த்யாஜ்யம் என்று கொள்ளாதே ,பாஷா மாத்ர அவதியாக , விதி நிஷேதங்களை அங்கீகரித்து திராவிட பாஷையாகையாலே இது த்யாஜ்யம் என்னப் பார்க்கில்–வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் –பெரிய திருமொழி -9-7-9-என்றும்-பொய்நூலை மெய்நூல் என்று என்றும் ஓதி–பெரிய திருமொழி -2-5-2- -என்றும் சொல்லுகிறmபாஹ்ய சாஸ்த்ராதிகளும் ,சமஸ்க்ருத பாஷையான ஆகாரத்தாலே , உபாதேயம் ஆக வேணும் ..–பிறவி பார்க்கில்-அதாவது சதுர்த்த வர்ண உத்பவர் என்று வக்தாவன இவர் பிறவியைப் பார்த்து , இத்தை இகழம் அளவில் , அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்–அதாவது-மத்ஸ்ய கந்தா சுதனான வியாசன் சொன்ன பஞ்சம வேதமான மகா பாரதமும் கோப ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன ஷட்க த்ரயாத்மகமான கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை ..-இத்தால் பாஷா மாத்ரத்தையும் ,வக்த்ரு ஜென்மத்தையும் பார்த்து
இகழும் அளவில் வரும் விரோதம் காட்டப் பட்டது-அதவா –-பாஷா வக்த்ரு ஜன்ம மாந்த்யங்கள் நிரூபிக்கலாகாது என்று ,கீழ் சொன்ன படி அன்றிக்கே , சம்ஸ்க்ருத பாஷையாய் உள்ளதும் ,ஜன்ம கெளரவம் உடையார் ,சொல்லும் அதுவே உபாதேயம் என்று கொள்ளுபவர்களுக்கு அநிஷ்ட பிரசன்ஜனம் பண்ணுகிறார் -வாக்ய த்வ்யத்தாலே ..-அதாவது – பகவத் பரத்வ அந்நிய பரத்வங்களை பரிக்ராக்ய பரித்யாஜ்வத்வங்களுக்கு ஹேது வாக்காதே – சமஸ்ருத பாஷை யானது உபாதேயம் என்று ,பேச்சின் உடைய கௌரவ மாத்ரத்தை பார்க்கில்-கள்ள நூல் -பொய் நூல்- என்று கழிக்கப் பட்ட பாஹ்ய சாஸ்த்ராதிகளும் பரி கிராஹ்யங்கள் ஆம்-யதாஜ்ஞானர் சொன்னது உபாதேயம் அயதாஜ்ஞானர் சொன்னது த்யாஜ்யம் என்று கொள்ளாதே-ஜன்ம கெளரவம் உடையார் சொன்னதே உபாதேயம்-
அல்லாதார் சொன்னது த்யாஜ்யம் என்று பிறவி மாத்ரத்தையே பார்க்கில் ,-மச்த்ய கந்தா சூதனான வியாசர் சொன்ன பஞ்சம வேதமும் ,கோபோ ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை —

(பேச்சுப் பார்க்கில்‌) பாஷா மாத்ரமே அங்கீகார-அநங்கீகார ஹேதுவாகில்‌, (கள்ளப்‌ பொய்ந் நூல்களும்‌ க்ராஹ்யங்கள்‌) ‘*வெள்ளியார் பிண்டியார்‌ போதியாரென்றிவர்‌ ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும்‌’” (திருமொழி 9 – 7- 9) என்றும்‌, “’பொய்ந்‌நூலை மெய்ந் நூல்‌’ (திருமொழி 3 – 5 – 2) என்றும்‌ சொல்லுகிற பாஹ்ய ஸாஸ்த்ரங்களும்‌ குத்‌ருஷ்டி ஸாஸ்த்ரங்களும்‌ அங்கீ கரிக்கப்படும்‌. அவற்றுக்கு அப்படி ஸிஷ்டாசார மில்லாமையாலும்‌, இத்தை ஸிஷ்டரானவர்கள்‌ பரிக்‌ரஹிக்கையாலும்‌ பாஷாவதி மாத்ரமே பரிக்‌,ராஹ்ய-அபரிக்‌ராஹ் யதா ஹேதுவாக ஒண்ணாது –ஆனாலும்‌ ப்ரபந்த கர்த்தா சதுர்த்த வர்ணாதிகாரி யாயிரா நின்றாரே? ப்ரபந்தமும்‌ ப்ரதிபாத்‌ய வஸ்துவும்‌ விலஷணமே யாகிலும்‌ கர்த்ரு மாந்த்‌யத்தாலே ப்ரபந்த மாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌) என்கிறார்‌. (பிறவி பார்க்கில்‌) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தை யிட்டுக்‌ கழிக்கப் பார்க்கில்‌, வலைச்சி வயிற்றிலே பிறந்த வ்யாஸன்‌ சொன்ன பஞ்சம வேதமான மஹா பாரதமும்‌, இடைச்சேரியிலே பிறந்த கருஷ்ணனருளிச் செய்த ஷ்ட்க த்ரயாத்மகமான ஸ்ரீகீதையும்‌ கழியுண்ணும் –

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்

தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற – சுக்ரனைச் சொல்லுதல்-அன்றிக்கே வெள்ளி  மலையை வாசஸ் ஸ்தானமாக உடைய ருத்ரன் -என்ணுதல்- அசோகா  வருஷத்தின் கீழே இருக்கக் கடவ   ஆர்ஹதர்
அரசின் கீழே இருக்கக் கடவ பௌத்தர் என்று சொல்லப் படுகிற இவர்கள் கதறிக் கொண்டு திரிகிற –கள்ள நூல் தன்னையும்  கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல் யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்னக் கடவது இறே-(திருடர் போல் சர்வம் ஸூந்யம் -அவனது ஸமஸ்த திருட்டு ) இது நமக்கு கர்த்தவ்யம் அன்று என்று உஜ்ஜீவிக்க விரகு பார்த்தாயாகில்  –

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப் பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-விப்ரலம்ப கரராயும் ப்ராந்தராயும் உள்ளவர்கள் தம்தாமுடைய புத்தியாலே வரைந்த சாஸ்த்ரங்களை
வைதிக சாஸ்திரம் போலே இருக்க ஆதரித்து அப்யசித்து பின்னை அவற்றின் உடைய ஸ்வரூபம் இருந்தபடியை ஆராய்ந்து மீளுகைக்கு அவகாசம் இல்லாதபடி முடிந்து-அவத்தம் போகாதே-
இஹ லோகம் பர லோகங்கள் இரண்டிலும் வ்யர்த்தமே போகாதே –வம்மின் – கெடுவிகாள்
கடுக வந்து நில்லுங்கோள் –

இவ் ஆழ்வாருடைய உத்பத்தியை வியாச கிருஷ்ண உத்பத்தி சமமாக அருளிச் செய்தார் கீழ்–
அவற்றில் இதுக்கு உண்டான வியாவிருத்தியை அருளிச் செய்கிறார் மேல்..ஆக, இதுக்குக்‌ கீழ்‌ கருஷ்ண த்‌வைபாயநனான வ்யாஸனோடும்‌, க்ருஷ்ணனேடும்‌ உண்டான ஜந்ம ஸாதர்ம்யம்‌ சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்‌வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே’‘ என்று – இனி மேல்‌ வைதர்ம்யம்‌ சொல்லுகிறது, எங்ஙனே என்னில்‌;

கிருஷ்ண கிருஷ்ண த்வைபாயன உத்பத்திகள் போல் அன்றே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மம்-சூரணை -77-

அதாவது
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனான – ஸ்ரீ கிருஷ்ணன் உடையவும்-கன்யா சூதனனான வியாசனுடையவும்- உத்பத்தி போலே அன்றே-கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்றவராய்-திரு விருத்தம் -37- கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –பூர்வ -6-என்கிற படியே-கிருஷ்ண விஷய திருஷ்ணை தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஆழ்வாருடைய அவதாரம்
என்கை ..

இடைச்சி வயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும்‌ வலைச்சி வயிற்றில்‌ பிறந்த கருஷ்ணாத்‌வைபாயநனுடையவும்‌ (உத்பத்தி போலன்றே, இவர்‌ திருவவதாரம்‌ இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும்‌ அவர்களுடைய ஜந்மத்தையும்‌ நிருபித்தால்‌ இத்தோடு அவை நேர் நில்லாது. ஆகையால்‌ இவர்க்கு அவர்கள்‌ ஸத்‌ருஸரல்லர்‌-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே 
–37- சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 – சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து – பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற – ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே பெற்ற இவள்-

அது எங்கனம் என்னும் அபேஷையில் பல ஹேதுகளாலும் இவர் ஜன்ம வ்யாவிருத்தியை பிரகாசிப்பிகிறார் மேல் — அதில் பிரதமத்தில் அவர்களைப் பெற்றவர்கள், இவரைப் பெற்றவர்களுக்கு
சத்ருசரல்லாமையை இசைவிக்கிறார்-
இவர்களுடைய உத்பத்தி ப்ரகாரங்களையும்‌ ஸ்தலங்களையும்‌ விசாரித்தால்‌ அவையும்‌ வாசா மகோசரம்‌ என்கிறார்‌ மேல்‌-

பெற்றும் பேர் இழந்தும்-கன்னிகை யானவளும்-எல்லாம் பெற்றாளாயும் தத்துக் கொண்டாள் என்பர்
நின்றார் என்னுமவளும் நெடும் காலமும் நங்கைமீர் என்னும் இவளுக்கு நேர் அன்றே –சூரணை-78-
(பெற்றும் பேர் இழந்தவளும் -பாட பேதம் – நங்கைமீர் என்னும் அவளுக்கு-உடைய நங்கையாருக்கு -நம்மாழ்வாருடைய திருத் தாயாருக்கு –பெற்றும் பேர் இழந்தவளும் -தேவகி பிராட்டியார் -நேர் அன்று –
பெற்றும் கன்னிகையானவளும்-மத்ஸ கந்தி நேர் அன்று –என்னுமவளும் யசோதை பிராட்டியும் -நேர் அன்று )அதாவது-பெற்றும் – திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற -பெரியாழ்வார் -1-2-17-என்கிற படியே ஸ்ரீ கிருஷ்ணனைப் பிள்ளையாய் பெற்று இருக்கச் செய்தேயும் , அவனுடைய பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்க பெறாமையால் , திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-பெருமாள் திருமொழி -7-5–என்று பேறு இழந்தவளான தேவகியும் ,–பெற்றும் –த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயணம் அச்சுதம்
பராசராத் சத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்
–பாரதம் —( இலந்தைக்காடு கலந்த காட்டில் சத்யவதி என்பவள் பராசரரிடம் இருந்து பகவனைத் தபிக்கச் செய்யும் விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவரைப் பிள்ளையாக அடைந்தாள் ) என்கிற படியே வியாசனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் ,அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி –புன கன்யா பவிஷ்யதி —
(பரிதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய்க் கமழ் புலவையும் மாற்றிச்
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ எனப் பனியினால் மறைத்து ஒரு வண் துறைக்குறை சேர்ந்தான்
முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரி நூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டனவென இலங்கு வேணியும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போதானும்
தரணியின் புறத்து அனல் என என் வயின வதரித்தனன் அம்மா
சென்னியால் என்னை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கு
முன்னையான் அரு குறுவல் என்று உரை செய முனிமகன்
முனி மீளக் கன்னியாக என வித்துடன் கரந்தனன்
–வில்லிபாரதம் -சம்பவச் சருக்கம் 6-7-8 –)-என்று
பராசர வசனத்தாலே ,மீளவும் கன்னியான மச்த்ய கந்தையும் எல்லாம் பெற்றாளாயும் –
அதாவது –எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5 -என்னும் படி
கிருஷ்ணனுடைய பால சேஷ்டாதிகளை எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் ,-
தத்து கொண்டாள் கொலோ ,தானே பெற்றாள் கொலோ–பெரியாழ்வார் -2 -1-7—என்றும் ,
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார்–பெரியாழ்வார் -3 –1 –3- -என்றும்
அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான மாத்ருவத்தை உடைய யசோதையும்நெடும் காலமும் நங்கைமீர் என்னுமிவளுக்கு நேர் அன்றே –அதாவது-நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற –திருவிருத்தம் –37-என்று சக்ருதாஸ்ர்யணம் அமைந்து இருக்க ,ஆதர அதிசயத்தாலே சிரகாலம் ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திரு அடிகளை ஆஸ்ரயித்து இவளைப் பெற்றவளாகவும் ,-நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்-திருவாய் -4-2–9 -என்று தொடங்கி பூரணைகளான நீங்களும் ஒரு பெண் பிள்ளை பெற்று வளர்திகோள் இறே
பகவலாஞ்ச நாதிகளை திவாராத்ர விபாகம் அற வாய் புலற்றா நின்று உள்ள சபலையான என் பெண் பிள்ளை படியை எங்கனே சொல்லுவேன் என்று வாசா மகோசரமான இவருடைய முக்த வசநாதிகளை அனுபவித் தாளாகவும் சொன்ன இவரைப் பெற்றவளுக்கு சத்ருசர் அன்றே என்கை .

தேவகி பெற்ற” (பெரியா. 1 – 8 – 17) என்கிறபடியே ஸ்ரீதேவகிப் பிராட்டி க்ருஷ்ணனைப்‌ பெற்று வைத்து, ”திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌”’ (பெருமா.தி.7 – 5) என்கிறபடியே அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலளிறே. வ்யாஸனைப் பெற்ற அநந்தரம்‌ “புந கந்யா பவிஷ்யதி?” (பார ) என்று ஸ்ரீபராஸர பகவான்‌ சொல்ல மீண்டும்‌ கந்யகையான மத்ஸ்யகந்தியும்‌ அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலள்‌. (எல்லாம்‌ பெற்றாளாயும்‌) “எல்லாம்‌ தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’‘ (பெருமா.தி. 7 – 5) என்கிற யசோதையும்‌ க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம்‌ அநுபவிக்கப்‌ பெற்றாளே யாகிலும்‌, “’தத்துக் கொண்டாள் கொலோ”’ (பெரியா.2 – 1 7) என்றும்‌, “உன்னை என் மகனே என்பர்‌ நின்றார்‌” (பெரியா. 3 – 1 – 3) என்றும்‌ – தானும்‌ பிறரும்‌ ஸங்கிக்கும் படியாயிருக்கும்‌. இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே “நெடுங் காலம்‌ கண்ணன்‌ நீண் மலர்ப் பாதம்‌ பரவிப் பெற்ற”’ (திருவிரு. 37) என்றும்‌, “நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண் பெற்று நல்கினீர்‌” (திருவா. 4 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும்‌ சில பெண்களைப் பெற்று வளர்த்தி கோளல்லிகோளோ, பகவல் லாஞ்சநாதிகளை திவா ராத்ர விபாகமற வாய் புலற்றும்படியான என்‌ பெண் பிள்ளைக்கு ஸத்‌ருஸமுண்டோ என்கையாலே இவர்க்கும்‌ அவர்களுக்கும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லிற்று –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற – திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே – கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-பால்ய அவஸ்தையிலே அனுபவங்களை அனுபவிக்க பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன்-இழக்கைக்கு நான் ஒருத்தி உண்டானாப் போலே அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாள் இறே –

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்தம் அனையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபாலர் கோளரி
அத்தன் வந்து என்னை அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 7- தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ-அன்றியே தானே மெய் நொந்து பெற்றாளோ-அதாவது-அசோதை இளம் சிங்கம் -என்ன -இவள் தத்த ஸ்வீகாரம் செய்யக் கண்டிலோம் –இவள் பெறுகிற போது இவளை பார்த்துப் பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –அயர்ந்து உறங்கி விட்டோம் – இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை -இறே ––ததர்ச ச ப்ரபுத்தாச யசோதா ஜாதமாத்மஜம்-என்கிறபடியே அவளும் அப்போது பெற்று மோகித்து கிடந்து
உணர்ந்து பின்பு இறே இவனைக் கண்டது –இப்படி தான் சொல்லுகிறது-அதி லோகமான இவனுடைய ரூப குண சேஷ்டிதங்களைக் கண்டால் – இவள் பிள்ளை -என்று -சொல்லப் போகாதபடி இருக்கையாலே –அவள் தானும் –இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்று
இவனுடைய அதி மானுஷ  சேஷ்டிதங்களைக் கண்டால் -நீ என்னுடைய பிள்ளையாக கூடாது –
நடு நின்றவர்கள் உன்னை என்னுடைய பிள்ளை என்றே சொல்லா நின்றார்கள் -என்னும்படியாய் இறே இருப்பது –

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- -இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்- பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே-இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் – உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே 
–37–தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து – பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற – ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே பெற்ற இவள்-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9–உங்கள் பூர்த்தி நான் சொல்லக் கேட்டு அறிய வேணுமே உங்களுக்கு நீங்களும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்தி கோளே-நல்குகை -வளர்க்கை -இவள் பட்டது பட்டார் உண்டோ-உன் பெண் பிள்ளைக்கு வாசி என் என்ன-எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?-என்னுடைய பெண் பிள்ளை படி என்னாலே பாசுரம் இட்டுச் சொல்லாயோ இருக்கிறது-நங்கைமீர் என்று சம்போதிப்பது சஜாதீயரை -இவளுக்கு சஜாதீயர் ஆழ்வார்களாம் இத்தனை-நீங்களும் பகவத் விஷயத்தில் பிரவணர் நான் பட்டது பட்டார் உண்டோ -என்று கருத்து-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை முடிய பேசிலும் இவ்விஷயத்தில் அவகாஹித்தார் படி பாசுரம் இட்டு சொல்ல முடியாது என்கை-சதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டாவ்யஸ் சர்வ தேஹிபி -என்று கண்டு இருக்கும் அத்தனை போக்கி பேசப் போகாது-ப்ரியோஹி ஜஃனானி நோஸ்யார்த்தம் -என்று இறே அவன் வார்த்தையும் கிடையாததிலே கிடைக்குமதில் பண்ணும் சாபல்யத்தை பண்ணுகிறவள்-

இனி மூவருடைய உத்பத்தி ஸ்தல கந்த விசேஷங்களை பார்த்தால், மற்றை இரண்டிலும் , இவருடைய உத்பத்தி ஸ்தலத்துக்கு உண்டான வைபவம் விலஷணம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்-

மீன நவநீதங்கள் கந்திக்கும் இடமும் வெறி கொள் துழாய் கமழும் இடமும் தன்னில் ஒக்குமோ-சூரணை -79-(மீன கந்திக்கும் இடம் -வியாசர் அவதார ஸ்தலம் -நவநீதம் கந்திக்கும் இடம் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதார ஸ்தலம் -வெறி கொள் துழாய் கமழும் இடம் -நம்மாழ்வார் திரு அவதார ஸ்தலம் )

அதாவது
மீன் வெறி நாறுகிற வியாச உத்பத்தி ஸ்தலமும் , வெண்ணெய் முடை நாறுகிற கிருஷ்ண உத்பத்தி ஸ்தலமும் ,-வெறி கொள் துழாய் மலர் நாறும் வினயுடையாட்டியேன் பெற்ற–திருவாய் -4 -4-3- -என்றும்
இவள் அம் தண் துழாய் கமழ்தல்–திருவாய் -8-9-10-என்றும் பகவத் சம்பந்த பிரகாசமான திருத்துழாய் மணம் நாறுகிற ஆழ்வார் அவதரித்த ஸ்தலத்துக்கு சத்ருசமோ என்றபடி-பிராக்ருத விஷய சம்சர்கஜமான ஹேய கந்தங்கள் இறே அவை .-அப்ராக்ருத விஷய சம்சர்கஜமான உபாதேய கந்தம் இறே இது -இத்தால் தாத்ருச ஸ்தலங்களில் உண்டான அவர்கள் உத்பத்தியில் -ஈத்ருச ஸ்தலத்தில் உண்டான இவருடைய உத்பத்தியின் ஏற்றம் காட்டப் பட்டது

மத்ஸ்ய கந்தத்தையுடைய வ்யாஸன்‌ பிறந்த விடமும்‌ நவநீத கந்தியான க்ருஷ்ணன்‌ பிறந்தவிடமும்‌ – ‘“வெறி கொள் துழாய்‌ மலர் நாறும்‌ வினையுடை யாட்டியேன்‌ பெற்ற”’ (திருவா. 4 – 4 – 9) என்கிற பகவத் ஸம்பந்த கந்தியான் ஆழ்வார்‌ திருவவதரித்த இடத்துக்கு ஸத்‌ஸருமன்றே-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-இத்தசையில் சம்ச்லேஷ ஸூசகமான இந்த பரிமளம் எங்கனே உண்டாம் படி என்னில்-காற்றோடு புகுந்து அணைந்தார் என்று கார்யத்தைக் கொண்டு கல்பித்தல்-கோவை வாயாளில் அனுபவம் பத்துக் குளிக்கு நிற்கும் என்னுதல்
வந்தேறி கழிந்தால் ஆத்ம ஸ்வரூபம் பகவத் சம்பந்தியாய் இருக்கும் -என்னுதல்-அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்-என்னக் கடவது இறே-வினையுடை யாட்டியேன் பெற்ற –
பிரிவிலும் திருத் துழாய் மணம் மாறாத படி அவகாஹித்து போலி கண்டு பிரமிக்கும் படி ப்ரேமம் யாய் விட்டது பாபத்தை பண்ணின என் வயிற்றிலே பிறப்பு இ றே பாக்ய பலத்தை பாப பலமாக சொல்லுகிறாள் -இழவைப் பற்ற-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10—வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்து இருக்கிற திருத் துழாய் நாறுகைக்கு -ராஜ புத்ரனை அணையாதார்க்கு மாளிகைச் சாந்து நாறுமோ -என்னுடம்பு திருத் துழாய் நாறா நின்றதோ -ஸ்வாபதேசத்தில் –அம் தண் துழாய் கமழ்தல்-என்கிறது அங்கீ கார ஸூ சகமாய் இருக்கிறது –

இன்னமும் அவர்களுடைய உத்பத்தி ஸ்தலங்களுக்கும் , இவர் உத்பத்தி ஸ்தலத்துக்கும் உள்ள வைஷம்ய அதிசயத்தை காட்டுகிறார்-

ஆற்றில்–துறையில்–ஊரில் உள்ள வைலஷம்யம் வாசா மகோசரம்-சூரணை -80-

அதாவது –
வ்யாச உத்பத்தி ஸ்தலம் -ஆறு தானே அசிஷ்ட பரிக்ரகம் ( சிவ சம்பந்தம் ) உடைய கங்கையாய் ,
அத் துறை ஓடத் துறையாய் , ஊர் வலைச் சேரியாய் இருக்கும்-கிருஷ்ண உத்பத்தி ஸ்தலம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹதயா தமோ மயியான, யமுனையாய் , துறையும் அதில் காளிய விஷ தூஷிதமான துறையாய் , ஊர் தானே –அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம்–திருப்பாவை -28–என்கிற படி இடக்கை வலக்கை அறியாதார் வர்த்திக்கிற இடைச் சேரியாய் இருக்கும்-இவ் ஆழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம் -ஆறு-பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–திருவாய் -9-2–5-என்கிற படி
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் , வாஸ ஸ்தலமுமாய் கொண்டு அதி ஸ்லாக்யமுமாய் இருக்கும் தாம்ரபரணி யாய் ,-துறை சுத்த ஸ்வாபமாய் ,அவகாதாமாய் இருக்கிற சங்கங்கள்
வந்து சேருகிற திருச் சங்கணி துறையாய்–திருவாய் -10–3-11-ஊர்-நல்லார் நவில் குருகூர்–திருவிருத்தம் –100 -என்கிற படி சகல சஞ்சன ஸ்லாகநீயமாய்-சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் -திருவாய் -3-1-11-என்றும்-நல்லார் பலர் வாழ் குருகூர்–திருவாய் -10-8-11-என்கிற படியே சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் , பகவத் அனுபவம் பண்ணி வாழ்கிற ,ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு குருகூராய் இருக்கும்-ஆகையால் அந்த ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உண்டான வைஷம்யம்
பேச்சுக்கு அவிஷயமாய் இருக்கும் என்கை –ஆக-கிருஷ்ண-கிருஷ்ண த்வைபாயனர் உத்பத்தியில் காட்டில் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான இவர் உத்பத்திக்கு ஏற்றத்துக்கு உடலாக கீழ் விவஷிதமானவற்றை வெளி இட்டார் ஆய்த்து.

வ்யாஸனுக்கு உத்பத்தி ஸ்தலமான அஸிஷ்ட பரிக்‌ரஹமுடைய கங்கா நதிக்கும்‌, அதில்‌ ஓடத் துறைக்கும்‌, அவ் விடத்தில்‌ வலைச் சேரிக்கும்‌, க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ண ஜல ப்ரவாஹமான யமுநா நதிக்கும்‌, காளிய விஷ தூஷிதமான அதில்‌ துறைக்கும்‌, “கறவைகள்‌ பின் சென்று ” என்கிறபடியே ‘பசுக்கள் தான்‌ ஸர்வஜ்ஞம்‌’ என்னும்படி அறிவு கேடரான இடையர்‌ வர்த்திக்கிற இடைச் சேரிக்கும்‌ ஆகிய இவற்றுக்கும்‌, முக்தா பல ப்ரஸவோந்முக ஸங்க ஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும்‌ ஸூத்‌த ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஸங்கங்கள் சேருகிற திருச் சங்கணித்‌ துறைக்கும்‌, “நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” (திருவிரு, 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்‌ படுமதாய்‌ ““சயப் புகழார்‌ பலர்‌ வாழும்‌ தடங் குருகூர்‌” (திருவா, 3 – 1 11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய்‌, பகவதநுப,வம்‌ பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர்‌ பலரும்‌ வர்த்திக்கிற திருக்குருகூர்க்கு முண்டான வைஷம்யம்‌ பேச்சுக்கு அவிஷயமா யிருக்கும்‌. ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்‌வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக் குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்ய, தர்ம்யங்கள்‌ சொல்லிற்று

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28—கறவைகள் பின் சென்றுஇவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் – பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –1-அறிவில்லை2-அறிவு ஓன்று இல்லை3-அறிவு ஒன்றும் இல்லைகர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5–நல்ல பவள படரின் கீழே சங்குகள்-நிர்ப்பாதமாய் வர்த்திக்கிற திருப் பெருநலை யுடைத்தாய் -ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –படர் -தூறு /நிர்ப்பாதமாய் பவளத் தூற்றில் சங்குகள் வர்த்திகையால் அவ்வூரிலே பதார்த்தங்களுக்கு பாதகங்களால் அச்சம் இல்லை என்கை –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – 100–லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் இருக்கை –ஆழ்வார் உடன் சாம்யா பன்னராய் இருக்கை –இப்படி இருப்பார் அநேகர் ஆழ்வாரை அனுபவித்து இருக்கை

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது –நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி-

எல்லாம் செய்தாலும் ,பூர்வ வர்ணங்களில் பிறவி போலே ,சதுர்த்த வர்ணத்தில் பிறவி
தேஜஸ்கரம் அன்றே என்ன – தாஸ்ய ரசஞ்ஞற்கு இது தேஜஸ்கரம் என்னும் அத்தை திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-இனி மேல்‌, இப்படி ஆழ்வார்‌ தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரே யாகிலும்‌, மிகவும்‌ தேஜஸ்ஸு உண்டாமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ஸர்வேஸ்வரன்‌ லோக ஸம்ரஷணார்த்தமாக அவதரித்த விடத்தில்‌ பரத்வ ஸங்கையும்‌ அஸஹ்யமாம்படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஸயித்திருக்குமாப் போலே பாகவதத்வ ரஹிதமான உத் க்ருஷ்ட ஜந்மமும்‌ அவத்‌யம்‌ என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால்‌ வருகிற அஹங்கார மின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில்‌ ஜந்மம்‌ நித்ய விபூதியிலும்‌ தேஜஸ் கரம்‌ என்கிறார்‌-

தேவத்மும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே ப்ரஹ்ம ஜன்மமும் இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி உள் நாட்டு தேசு இறே
சூரணை -81-

(தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஸ்ரீ ராமனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –உள் நாட்டு தேசு-பரமபத தேஜஸ்)அதாவது-ராவண வத அநந்தரம் ப்ரஹ்மாதிகள்-பவான் நாராயணோ தேவோ–யுத்த –120–13-என்றது அசஹ்யமாய் –ஆத்மானம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் – யுத்த -120-11-என்கையாலும் ,கோவர்தந உத்தரண அநந்தரம் அந்த அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சரியப் பட்ட கோபர்
பாலத் வஞ்ச அதி வீர்யஞ்ச ஜன்மச அஸ்மாஸ்வ அசோபனம்
சிந்தய மாநமமே யாத்மன் சங்காம் கிருஷ்ண பிரயச்சதி
தேவோ வா தானவோ வா த்வம் யஷோ கந்தர்வ ஏவ வா
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-7–என்று சங்கித்து சொல்ல-ஷணம் பூத்வா த்வசவ் தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 9–என்கிற படியே-அது அசஹ்யமாம் என்னும் இடம் தோன்ற சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்னை –நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ அஹம் வோ பாந்தவோ ஜாத நைவ சிந்தய மதோன்யதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12- -என்கையாலும்-தேவர்க்கும் தேவனான தான், லோக ரஷண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாக அவதரித்த அளவில் தேவனாக சொல்லுகையும் நிந்தையாகும் படி புரையறப் பிறக்கும் சீலாதிகனான சர்வேஸ்வரனுக்கு-சவு ஸ்ரேயான் பவதி ஜாயமான–யஜுர் வேதம் -3-6-3- -என்கிற படியே-பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய் -1-3-2 –என்று தாழ விழுந்த தனையும் கல்யாண குணங்கள் ஒளி பெற்ற வரும் ஜென்மங்கள் போலே
மாஸ்ம பூதபி மே ஜன்ம சதுர் முகாத்மான–ஸ்தோத்ர ரத்னம் -35–என்று பிராமணியத்துக்கு எல்லை நிலமான பிரம்மாவாய் பிறக்கையும் சேஷத்வ விரோதியான அஹங்கார ஹேது வாகையாலே
ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி –தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்– 9-2–என்ற திரு வாய் மொழியில்-பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்-உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்-தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு –உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே –பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில் வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ்கரம் என்று கருத்து –

(தே,வத்வமும்‌ நிந்தை யானவனுக்கு) ராவண வதாநந்தரம்‌ ப்‌ரஹ்மாதிகள்‌ “பவாந் நாராயணோ தேவ?” (ரா.யு. 120 – 13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய்‌, “ ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதராத்மஜம்‌”’ (ரா. யு. 120 – 11) என்றும்‌, கோவர்த்ந தோத்தரணாநந்தரம்‌. அந்த அதிமாதுஷ சேஷ்டிதங் கண்டு ஆச்சா்யப்பட்ட இடையர்‌ *““பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச ஐந்ம சாஸ்மாஸ்வ ஸோபநம் ॥ தேவோ வா தாநவோ வா த்வம்‌ யக்ஷோ கந்தர்வ ஏவ வா! (வி. பு. 5 – 13 – 7) என்று ஸங்கிக்க, “ஷணம்‌ பூத்வா த்வஸெள தூஷ்ணீம்‌ கிஞ்சித் ப்ரணய ரோஷவாத்‌” என்று அது அஸஹ்யமாய்‌, ”நாஹம்‌ தேவோ ந கந்தர் வோ ந யஷோ ந ச தாநவ ! அஹம்‌ வோ பாந், வோ ஜாத? நைதச்சிந்த்ய மதோந் யதா ‘” (வி. பு. 5 – 13 – 12) என்று இப்படி பரத்வ ஸங்கையும்‌, அஸஹ்யமாம்படி ஸீலாதிகனா யிருக்கிறவனுக்கு.
(ஒளிவரும்‌ ஜநிகள்‌் போலே) ““ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந” என்றும்‌, “பல் பிறப்பாய்‌ ஒளி வரு முழு நலம்‌”’ (திருவா. 1 – பீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாண குணங்கள்‌ ஒனி பெற்று வரும்‌ அவதாரங்கள்‌ போலே.-(ப்‌ரஹ்ம ஜத்மமும்‌ இழுக்கென்பார்க்கு) ‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’” (ஸ்தோ. ர. 55) என்கிறபடியே அபாாகவத க்‌ருஹ்ங்களில்‌ ப்‌ரஹ்மாவாய்ப்‌ பிறக்கையும்‌ அவத்‌யமாம்படி பகவத்‌ தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு (பண்டை நாளில்‌ பிறவி) “பண்டை நாள்‌” (திருவா. 9 – 2 – 1) என்கிற பாட்டின் படியே லக்ஷ்மீ-தத்‌ வல்லபருடைய கடாக்ஷமடியாகக்‌ கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய்‌, தாஸ்ய விரோதி ஜந்மாதிகளால்‌ வரும்‌ அஹங்கார ரஹிதமான குலங்களில்‌ ஜந்மமும்‌.(உண்ணாட்டுத் தேசிறே) புற நாடான வீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகராலே நெருங்கி பகவானுக்கு போக விபூ,தியாகையாலே அந்தரங்கமா யிருக்கிற பரமபதத்தில்‌ தேஜஸ்ஸன்றோ என்கிறார்-

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம்
முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை –-தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை –-உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் –-பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே-ஒளி வரு முழு நலம் –பிறக்கப் பிறக்கக் கல்யாண குணங்கள் கட்டடங்க உஜ்ஜ்வலமாகா நிற்கும்-ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||–55-
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோபங்கயத்தாள் திருவருளும்-கொண்டு — அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே ஸ்வாதந்தர்யத்தை தவிர்ப்பது-என்னடியார் யது செய்யார் -என்னும் உன் கடாக்ஷமும் -நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –
நின் கோயில் சீய்த்துப் –-உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –-பல்படிகால்-இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ -என்கை –
குடி குடி -சபரிகரமாக-வழி வந்து –ஆள் செய்யும் -சாஸ்திரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து ஆட் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் -அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-
–ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு-ஸர்வேஸ்வரனாய் வைத்து இதர ஸஜாதீயனாய்ப் பிறந்தவனுக்குக் கைங்கர்யம் பண்ணுகைக்கு யோக்யமான ஜென்மம் பரம பதத்தில் இருக்கும் தேஜஸ்ஸை யுடைத்தன்றே என்றுமாம்-உண்ணாட்டுத் தேசன்றே-உள் நாடு என்று பரம பதமாகக் கொள்ளுகிறது-பகவத் அபிப்ராயத்தாலே(அக்கரை -சம்சாரம் இக்கரை பரமபதம் என்று உண்டே )தேசன்றே -தேசன்றோ என்றபடி-பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும் 

இனி இவர் அவதாரத்தின் பரோ உபகாரகத்வத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் .-இப்படிப்பட்ட இவருடைய அவதாரம்‌ ஜநக குல ஸுந்தரியான நாச்சிமார்‌ முதலானாரூடைய அவதாரம் போலே ஸர்வோபகாரகம்‌ என்கிறார்‌-

ஜனக தசரத வசுதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடைக் குட்டியும் போலே
இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார்-சூரணை -82-

( ஜனக குலத்துக்கு மூத்த பெண் பிறந்து புகழை ஆக்கினால் போலேயும்-தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளை -ஸ்ரீ பரதாழ்வான் -பிறந்து ஆக்கத்தை ஆக்கினால் போலேயும்-வசுதேவ குலத்துக்கு கடைக்குட்டி பிறந்து அம் சிறை அறுத்தால் போலேயும்-இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார் )அதாவது
ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான பிராட்டி பிறந்து –
ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மே ஸூதா சீதா பர்த்தார மாசாத்ய ராமம் தசரதாத் மஜம்–பால -67-21- -என்கிற படியே- தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும்-தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து-ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரஹா அயோத்யா –82-12–இத்யாதியாலே
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்கிற குல மரியாதையை நடத்தின அளவு அன்றிக்கே –ஜடிலம் சீர வசனம் ப்ராஞ்சலீம் பதிதம் புவி–அயோத்யா -100-1-என்றும்-பங்கதிக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷிதே –யுத்த –127-5-என்றும் சொல்லுகிற படி ஜ்யேஷ்டரான பெருமாள் உடைய விஸ்லேஷத்தில் ,சடை புனைந்து வற்கலை உடுத்தி ,கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து , குலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை உண்டாக்கினால் போலேயும் –வசுதேவ குலத்துக்கு –மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-என்கிற படியே கடைக் குட்டியான ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்து
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -பெரிய திருமொழி -7-5-1-என்கிறபடியே-தங்களால் விடுவித்துக் கொள்ள ஒண்ணாத மாதா பிதாக்கள் கால் கட்டை அறுத்தால் போலேயும்-இவரும் திரு அவதரித்து –மலி புகழ் வண் குருகூர் –திருவாய் -4-2-11-என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கிகுடி கிடந்தது ஆக்கம் செய்து –என்கிற படியே சேஷத்வ குல மரியாதை தப்பாத படி நின்ற மாத்ரம் அன்றிக்கே ,சேஷி விரஹ கிலேச அதிசயத்தாலே , காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து–திருவாய் -8-5-2- -என்றும்-கண்ண நீர் கைகளால் இறைத்து –7-2-1–என்றும்
இட்ட கால் இட்ட கையாம் படி நிஸ் சேஷ்டராய் ,தரைக் கிடை கிடந்த பிரேம விசேஷத்தாலே ,
இக் குடிக்கு பண்டு இல்லாத ஏற்றத்தை உண்டாக்கி .அறுவர் தம் பிறவி அம் சிறையே –1-3-11-என்கிறபடி தம் உடைய பிரபந்த அப்யாச முகத்தாலே தம்மோட அந்விதரான இவர்கள் உடைய சம்சாரமாகிற அரிய சிறையும் அறுத்தார் என்கை-திருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் ஒருத்தரே செய்கையாலும் , இத்தனையும் ஸ்வரூப அனுகூலமாக செய்கையாலும் இவர் பிறப்பு இறே மிகவும் பரோ உபகாரம் ஆய்த்து-

ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான நாச்சியார்‌ திருவவதரித்து. “ “ஸீதா பர்த்தாரமாஸாத்‌ய. ராமம்‌ தஸரதாத்மஜம்‌ | ஜநகாநாம்‌ குலே கீர்த்திம்‌ ஆஹரிஷ்யதி மே ஸுதா”'(ரா. பரா. 67 – 21) என்று தான்‌ பிறந்து ஜநக குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்‌,
தஸரத குலத்துக்கு நடுவில்‌ பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான்‌ பிறந்து ‘விலலாப ஸப மத்‌யே ஜகர்ஹே ச புரோஹிதம்‌ ! ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார்ஹஸி”’ (ரா. ௮. 82 – 10) என்றும்‌, “‘ஜடிலம்‌ சீர வஸநம்‌ ப்ராஞ்ஜலிம்‌ பதிதம்‌ புவி?” (ரா. ஆ. 102 – 1) என்றும்‌, ““குடிக் கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மூத்தாரிருக்க இளையார்‌ முடிசூடக் கடவதன்று என்கிற குல மர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, ஜயேஷ்டரான பெருமாளுடைய விஸ்லேஷத்தில்‌ ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்‌,
வஸாுதேவ குலத்துக்கு “‘மக்களறுவரைக்‌ கல்லிடை மோத இழந்தவள் தன்‌ வயிற்றில்‌ சிக்கென வந்து பிறந்து நின்றாய்‌” (பெரியா. தி. 5 – 3 – 1) என்று சொல்லுகிறபடியே கடைக் குட்டியான க்ருஷ்ணன்‌ பிறந்து ““தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ”‘ (திருமொழி 7 – 5 – 1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதா பிதாக்களுடைய கட்டை அறுத்தாப் போலேயும்‌,
இவரும்‌ திருவவதரித்து ““மலி புகழ் வண் குருகூர்‌’‘ (திருவா. 4 – 2 – 11) என்றும்‌, “ஏற்கும்‌ பெரும்புகழ்‌ வண் குருகூர்‌‘” (திருவா. 3 – 9 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே தாம்‌ திருவவதரித்து அந்நகரிக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கி, “*குடிக்கிடந் தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாந வர்த்தகரான மாத்ரமே யன்றியிலே ப்ரேம வர்த்தகராயும்‌, ”அறுவர் தம்‌ பிறவி அஞ்சிறையே”’ (திருவா. 1 – 311) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்‌யாஸ முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச் சிறையையு மறுத்தார் –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை –இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இறே-ஸ்ரீ பரதாழ்வான்-ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி –பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –தேவகிப் பிராட்டிக்கு அஷ்டம கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் – கால நேமியோடே சம்பந்தம் உடையராய் – ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க – தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை(ஹிரண்யாக்ஷன் பிள்ளை கால நேமி பிள்ளைகள் இந்த ஆறு பேரும்-கால நேமி கம்சன்
ப்ரஹ்மா சாபத்தால் பாதாளத்தில் வர்த்திக்கப் பெற்றார்கள்-அங்கும் விஷ்ணு பக்தராக இருந்ததால்
ஹிரண்ய கசிபு சாபத்தால் தந்தையால் கொல்லப்பட்டார்கள் )கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது-அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1–ஆபத்திலே வந்து உதவி அவற்றைப் போக்கும் ஸ்வபாவன் ஆய்த்து–ஸ்ரீ வசுதேவர் காலில் உண்டான  பெரு விலங்கு உண்டு – எட்டு கர்ப்பத்துக்கே அவ்வருகே இட்ட விலங்கு அது தன்னடையே விட்டுப் போம்படியாக – இவன் வந்து அவதரித்த அநந்தரம் திருவாய்ப்பாடி ஏறக் கொண்டு போக வல்லாரானார் இறே 

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11–கிட்டாதவற்றையும் அனுபவிக்க ஆசைப் பட்டார் என்னும் புகழ் மிக்கு இருக்கிற ஆழ்வார் சொன்னது-தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன் பாவிற் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதனே: நாவிற் சிறந்த அம் மாறற்குத் தக்க நன்னா வலவன் பூவிற் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.’–என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2–குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை -இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இறே-ஸ்ரீ பரதாழ்வான்–ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி -பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை – நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து
உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் -உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்-வழி வருகின்ற-பரம்பரையாக வருகின்ற என்னுதல் -அடிமை செய்யும் முறையில் ஒன்றுமே தப்பாத படி போருகிற -என்னுதல்-அடியரோர்க்கு அருளி -அநந்ய கதியாய் இருக்கிற எங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11–சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

இன்னமும் இவருடைய அவதாரத்தாலே லோகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார் .-அவ்வளவே யன்றிக்கே அஜ்ஞாந அந்தகார நிரஸநாதிகளாலே ஆதித்ய ராம க்ருஷ்ணர்‌களில்‌ வ்யாவ்ருத்தர்‌ என்கிறார்‌.

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி –ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி –அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி-அதாவது
கதிரவன் குண சிகை சிகரம் வந்து அணைந்தான் -கனவிருள் அகன்றது –திருப்பள்ளி -1- என்னும் படி
பாஹ்ய அந்தகாரத்தை போக்கிக் கொண்டு உதிக்கும் ஆதித்யனுக்கு போகாத உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரம் தமோ பாஹ்யம் வினச்யேத்து பாவக ஆதித்ய சந்நிதவ் பாஹ்ய மாப்யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க சந்நிதவ் -என்கிற படியே நீங்கி–ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றிஅதாவது – சர ஜாலாம் சுமான் சூர கபே ராம திவாகர சத்ருர ஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதே–ஸூ ந்தர -37-16-(ராம சூர்யன் இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார் ) என்கிற படியே – சர ஜாலங்கள் ஆகிற கிரணங்களை உடையனாய் கொண்டு சத்ரு ராஷசர் ஆகிற சமுத்ரத்தை வற்றப் பண்ணின ராம திவாகரனுக்கும் வற்றாத பிறவி என்னும் பெரும் கடல்-என்கிற சம்சார சாகரம் வற்றி அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
அதாவது-ததோகில ஜகத் பத்ம போதய அச்யுத பாநுனா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்ற ஜகத் பத்மம் விசிதாகும் படியாக தேவகியாகிற பூர்வ சந்தையில் ,ஆவீர் பாவித்த அச்யுத பானுவான கிருஷ்ணனுக்கு விகஸியாத –போதில் கமல வன் நெஞ்சம் -பெரியாழ்வார் -5-2-8–என்கிற ஹிருதய பத்மம் விகசிதம் ஆய்த்து-யத் கோ சஹாஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்கர யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -என்று
திரு வாய் மொழி ஆயிரம் ஆகிற கிரணங்களை உடையவராய் , மகிஷீ பூஷண ஆயூத விசிஷ்டனான நாராயணனை –-கண்கள் சிவந்ததில்-8-8-1–படியே உள்ளே உடையவராய் , வேத வித்துகளான சர்வ சிஷ்டர்களும் கேட்ட போதே தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை உடையராய் , வகுளா பரணாராய் இருக்கிற ஆழ்வார் ஆகிற பாஸ்கரனுடைய உதயத்தில் என்கை-ஆதித்ய திவாகர பானு சப்தங்களால் அன்றிக்கே-( ஆதித்யன் –அதிதியின் புத்ரன் –திவாகரன் பகலை செய்கிறவன் —பானு -பிரகாசிக்கிறவன் –பாஸ்கரன் -பிரகாசிக்கச் செய்கிறவன் ) பாஸ்கர சப்தத்தாலே இவரைச் சொல்லுகையாலே – ஊரும் நாடும்-6-7-2- -இத்யாதி படியே ஸ்வ சம்பந்தத்தை உடையார் எல்லாருக்கும் பிரகாசத்தைப் பண்ணுமவர் என்று தோற்றுகிறது —

(ஆதித்யேத்யாதி,). பாஹ்யமான அந்த காரத்தைப்‌ போக்கிக்‌ கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாந அந்தகாரமும்‌,-தமோ பாஹ்யம்‌ விநஸ்யேத்து பாவக ஆதித்ய ஸந்நிதெள ந பாஹ்யாப்‌, யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க ஸந்நிதெள”’ என்கிறபடியே நீங்கி, ‘ஸரஜாலாம் ஸூமாந்‌ ஸூர கபே ராம திவாகர:। ஸத்ருரஷோமயம்‌ தோயம்‌ உபஸோஷம்‌ நயிஷ்யதி”‘ (ரா.ஸு. 37 – 16) என்று ஸரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க் கொண்டு ஸத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணுகிற ராம திவாகரர்க்கு வற்றாத ஸம்ஸார ஸமுத்‌ரம்‌ “பிறவி என்னும்‌ கடலும்‌ வற்றி” (பெரியா, தி, 5 – 4 – 2) என்கிறபடியே வற்றி,*“ததோகில ஜகத் பத்‌மபோதாய அச்யுத பாநுநா ! தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம்‌ ஆவிர்பூதம்‌ மஹாத்மநா”’” (வி.பு. 5- 3 – 2) என்று ஜகத் பத்‌மம்‌ விகஸிதமாம்படி தேவகி யாகிற பூர்வ ஸந்த்‌யையிலே ஆவிர்பூதனான அச்யுத பாநுவான் க்ருஷ்ணனுக்கு விகஸியாத ”போதில்‌ கமல வன்னெஞ்சம்‌”‘ (பெரியா. தி. 5 – 2- 8) என்கிற ஹ்ருத் பத்‌மம் விகஸிதமாயிற்று,
“யத்‌, கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்‌ நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க, சக்ரா | யந் மண்டலம்‌ ஸ்ருதிகதம்‌ ப்ரணமந்தி விப்ரா? தஸ்மை நமோ வகுள பூ,ஷண பாஸ்கராய”” (பரா. ௮.) என்றும்‌ திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய்‌, மஹிஷீ பூக்ஷணாயுத விஸிஷ்டனான நாராயணனை *கண்கள்‌ சிவந்திற்படியே உள்ளே உடையராய்‌, வேத வித்துக்களான ஸர்வ ஸிஷ்டர்களும்‌ ப்ரணாமம்‌ பண்ணும்படியான வைபவத்தை உடையராய்‌, வகுள பூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார்‌. கீழ்ச் சொன்ன ஆதித்ய திவாகர பாநு சப்‌தம்‌ போலன்றிக்கே இவர் பக்கவிலே பாஸ்கர சப்‌த ப்ரயோகம்‌ பண்ணுகையாலே **ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌ (திருவா. 6 – 7- 2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்த, முடையா ரெல்லார்க்கும்‌ தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர்‌ என்னுமிடமும்‌ தோற்றுகிறது –

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-தன்னுடைய ஆயிரம் கிரணங்களாலும் ஜகத்திலந்தகாரத்தை நீக்கி வெளிச் செறிப்பைப் பண்ண வல்ல ஆதித்யனானவன், கிழக்கிலே உதய கிரியிலே வந்து ஸங்கதனானான். அவனுக்கடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும் ; திருவடிகளும் அத் திக்கிலேயாகப் பெற்றது: கண் வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத:காலத்திலே ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப்போலே.திநகரனானவன் தன் கிரணங்களெல்லாவற்றோடும் கீழ் திக்கில் உதய கிரியை வந்தணையா நின்றான்–(உம் திருவடிப் பக்கத்திலே திருவடிக் குற்றேவல் செய்யத் தோன்றினது போலே உள்ளது. )அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க, நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்? “கதிராயிரமிரவி கலந்தெரித்தா லொத்த நீண் முடி “பெரியா திரு 4-1-1)-யிறே. “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” (திருவாசிரியம் – 1 ] முடியிலே ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளியுடைய கிரீடமாகிற ஆதித்யனும், அடியிலே உலகிலிருள் நீக்கும் ஆதியனும் வந்து நிற்க, நடுவே கிடந்து கண்ணுறங்கலாமோ? என்று நஞ்ஜீயர் கருத்தருளுவர் .(கனவிருளகன்றது) ராத்ரியில் மிக்க இருளானது ஸவாஸநமாகப் போய்த்து. ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே- செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்”-திருவிருத்தம் – 18 – என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமா போலே,ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸ பரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங் குறைய வாங்குமா போலே-இருட்டும் ஒரு பயணம் குறைய வாங்கிற்று.-(காலை யம் பொழுதாய்) ஆராதகர் ஆராத நார்த்தமாக உத்யோகிக்கக் கடவ காலமாய்த்து.

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –சம்சாரம் ஆகிற பெரிய கடலும் சுவறி-பெரும் பதம் ஆகின்றதால் – பெரியதாம் பெற்ற படி –மேல் சாத்தும் பரியட்டமும் பெற்று –-திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறிக்கப் பெற்று திருப் பல்லாண்டு பாடின படி-உடுத்துக் களைந்த -இத்யாதி –ஆகின்றதால் – இது மேன்மேல் என வளர்ந்து வருகிற படி-எத்திறத்தும் இன்பம் (திருச்சந்த ) எங்கும் திருவருள் பெற்று –இழவுக்கு சம்சாரமும் அதுக்கு அடியான கர்மமும் போலே-மோஷத்துக்கு ஞானமும் பக்தியும் –பிறவி என்னும் கடலும் வற்றி -என்று சம்சாரம் போன படி சொன்னார் –இனிஅதுக்கு அடியான கர்மம் போன படியை அருளிச் செய்கிறார்-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –போதில் கமலம் வல் நெஞ்சும் புகுந்தும் –போது -அறிவு-இல் -இருப்பிடம்-கமலம் -ஹிருதய கமலம்-வன்மை -அந்தர்யாமியையும் அறிய ஒட்டாத வலிமை-ஞான பிரசவ த்வாரமான நெஞ்சை இருப்பிடமாக உடைய கமலம் புகுந்தும் –
இப்படிக்கொத்த நெஞ்சுக்கு உள்ளே புகுந்து திருத்தின படி-

கண்கள் சிவந்து –ப்ரவேஸம்--தன் வடிவைக் காட்டி இவரை வர வணைத்து–இவருடைய ஸ்வரூபம் தனக்கு பிரகாரமாய் -தன்னைக் காணும் காட்சிக்குள்ளே காணலாம் படி இருக்கிறபடியையும்
தனக்கும் நிறம் கொடுக்கும் படியான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கிற படியையும் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதர் ஆகிறார்-முதல் இரண்டரைப் பாட்டாலே தன் வடிவு அழகைக் காட்டி அவ்வழி யாலே ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறனாய் இருக்கிறது –-முதல் இரண்டரைப் பாட்டு ஆத்மாஸ்ரயம் என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக ஆஸ்ரயமான-தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்றும் சொல்லுவர்-இருத்தும் வியந்தில் அழகு பின்னாட்டுகிறது என்றும் சொல்லுவர்கள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற
க் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் –ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி

இப்படி பர உபகார ஜன்மமான இவர் வர்ணத் த்ரயத்தில் ஒன்றிலே அவதரியாதே , சதுர்த்த வர்ணத்தில் தாழ இழிவான் என் என்ன , அதுவும் பர ரஷண அர்த்தமாகவே என்கிறார் ..-இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர்‌ அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென்‌ என்னில்‌-

வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-சூரணை -84-

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்-பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-)வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்-அதாவது யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை – அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி உத்தரிப்பிக்கைக்காக–அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்–அதாவது – ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை- உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந –தைத்ரியம் – –என்றும்-நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக –கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்
அதாவது-குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை , அந் நிலையில் நின்றும் பேதித்து –அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்-உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அனர்த்த கரம் என்று தோற்றும் படி தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே தாழ இழிந்தார் என்கை-இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக- அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து-

க்ஷத்ரியரில்‌ வைத்துக் கொண்டு ஹீநமான யது குலத்தை உத்‌தரிக்கைக்‌காக ”அங்கோராய்க் குலம்‌ புக்கு?” (திருவா. 6 – 4 – 5) என்றும்‌, அயம்‌ ஸ கத்‌யதே ப்ராஜ்ஞை? புராணார்த்த,விஸாரதை, ! கோபாலோ யாதவம்‌ வம்ஸம்‌ மக்‌ந மப்‌யுத்‌தரிஷ்யதி’‘ (வி. பு. 5 – 20 – 49) என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு கேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க் கொண்டு கோபாலனானாப் போலவும்‌, ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுக்கைக்காக ““உத்‌த்‌ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஸத பாஹுநா”’ (தை. உ.) என்றும்‌, “‘நமஸ் தஸ்மை வராஹாய லீலயோத்‌தரதே மஹீம்‌ | குரமத்‌யக,தோ யஸ்ய மேரு கணகணாயதே”’ (வராஹபு.) என்கிறபடியே வராஹ ஸஜாதீயனாய்க் கொண்டு ““கேழலாய்க்‌ கீழ்ப் புக்கு (திருவா. 2 8 – 7) என்கிறபடியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலவும்‌, ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகல ஜந்துக்களையும்‌ அதில் நின்றும்‌ எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார்‌ என்கிறார்‌.-அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீ, கரித்தாராகில்‌ வேதமும்‌ ததுப ப்‌ரும்ஹணங்களும் போலே அதி க்ருதாதி காரமாமிறே,

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5—அத்தசையிலே அஞ்சினான் புகலிடமாய் இருப்பது ஓர் இடைச்சேரி உண்டாவதே –கம்சனுக்கு குடி மக்களாய் இருக்கச் செய்தேயும் -அவனுக்கு அநிஷ்டம் என்று பாராதே மறைத்து வைத்து அடைக்கலம் நோக்க வல்ல ஊர்

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்
தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு-கீழ்ப் புக்கு-இடந்திடும்- அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி-

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-அபிமான துங்கன் – அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம் ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது –அதாவது உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும் தம்மதமாய இருக்கை-செல்வன் -என்று-ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறை வற்றவர் யென்கையும்-லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருக்கையும்-உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்-இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய் இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில் கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா
ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்-
அதவா – நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்

ஆக வீட்டு இன்பம் –சூர்ணிகை -75- என்று தொடங்கி இவ்வளவும் மந்த மதிகளுடைய சங்க நிராகரண அர்த்தமாக ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணத்தில் வரும் பிரத்யவாயமும் – வ்யாசாதிகளை பற்ற இவர் அவதார வைலஷண்யமும் -78-79-80-81- அவதாரம் பரார்த்தம் என்னும் இடமும் ,82-83-
மகா பிரபாவர் ஆன இவர் தாழ அவதரிக்கைக்கு நிதானமும்-84 அருளி செய்தாராய் நின்றார்
.

ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும்‌ வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌ திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும்‌ ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்‌’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால்‌ வரும்‌ ப்ரத்யவாயத்தையும்‌, வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்‌யத்தையும்‌, அவதாரம்‌ பரார்த்த,ம்‌ என்னுமிடத்தையும்‌, இப்படி மஹா ப்ரபாவரான இவர்‌ தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும்‌ அருளிச் செய்தார்

இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக சாமான்யேன பாகவத வைபவத்தை பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பியா நின்று கொண்டு இவ் ஆகாரங்கள் அறிவார்க்கு இறே-ஜென்மத்தில் உத்கர்ஷம் அபகர்ஷம் தெரிவது என்கிறார் மேல் ஒரு சூரணையாலே..-இனிமேல்‌ ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப்‌ பல உதாஹரணங்களாலும்‌ அருளிச் செய்கிறார்‌. அதில்‌, அவர்கள்‌ ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களே யாகிலும்‌ பகவத்‌ பக்தரானார்களாகில்‌ அவர்கள்‌ ஸர்வ உத்க்ருஷடரென்றும்‌, அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும்‌, அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும்‌, அவர்கள் விஷயத்தில்‌ பகவானுடையவும்‌, பகவதீயருடையவும்‌ ஆதர ப்ரகாரத்தையும்‌, அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்‌,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம்‌ என்னுமிடத்தையும்‌, ப்ரமேய பூதனுடையவும்‌, ப்ரமாதாக்களினுடையவும்‌, உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்‌.

1–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, –2–விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, (துளஸீ ப்ருத்யர் –துளவத் தொண்டு செய்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -தொழு குலமானவர்-நம்பாடுவான் -ப்ராஹ்மணன் –ஸோம சர்மா )-3-கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, –4-தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, (தூது மொழிந்தவருடைய சம்யக் போஜனமும் –தூது நடந்தவருடைய சகுண போஜனமும் —
தூது வந்தவருடைய ஸஹ போஜனமும் )-5-ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, (பெரும்புலியூர் ஸ்வாமிகள் -அங்குள்ள பிராமணர்கள் -யாகத்தில் திருமழிசைப்பிரானைக் கௌரவித்தார்கள் – திருவையாறு மேற்கே ஒரு மேலே தொலைவில் உள்ள பெரும்புலியூர் )-6-ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, –7-புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, –8-யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.–சூரணை -85-(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226 -239 -சூர்ணிகைகளில் அருளிச் செய்தவற்றைப் போலவே இவையும் –)

ம்லேச்சனும் பக்தன் ஆனால்-அதாவது –மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா , ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே –
என்கிற படியே-ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்-1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்-3-தானே ஆராதிக்கையும்-4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –அஷ்ட விதையாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-

“மத்‌ பக்த ஜந வாத்ஸல்யம்‌ பூஜாயாஞ்ச அநுமோதநம்‌ ! ஸ்வயமப்‌யர்ச்சதஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்‌ |) மத் கதா ஸ்ரவணே ப்ரீதி ஸ்வர நேத்ராங்க விக்ரியா । மமாநுஸ்மரணம்‌ நித்யம்‌ யச்ச மாம்‌ நோபஜீவதி । பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சேபி வர்த்ததே’* (பகவச் ஸாஸ்த்ரே) என்று பாகவத விஷயத்தில்‌ வாத்ஸல்யம்‌ முதலான அஷ்டவிதையான பக்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும்‌.

சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –அதாவது –ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே – சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள் அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் – அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –அதாவது –ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்-நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –அதாவது –தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் – அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே
–)

““ஸ விப்ரேந்தரோ முநிஸ் ஸ்ரீமாறந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌ராஹ்யம்‌-ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ । தத் பாதாம் ப்வதுலம்‌ தீர்த்தம்‌ ததுச்சிஷ்டம்‌ ஸுஃபாவநம்‌ | ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்‌ர்யம்‌ தத் ஸ்ப்ருஷ்ட மகிலம்‌ ஸூசி?” (பகவஸ் ஸாஸ்த்ரே) என்று – அவர்கள்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ உத்க்ருஷ்டர்‌. அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்‌களாலே அநுவர்த்தநீயர்‌. அவர்கள்‌ வித்‌யோபஜீவநத்துக்கு விஷய பூதர்‌. அவர்கள்‌ என்னைப் போலே யாகிலும்‌ பூஜ்யர்‌, அவர்கள்‌ தீர்த்த ப்ரஸாதாதிகள்‌ பரம பாவநம்‌” என்கிற திருமுகமான பகவதுக்தியும்‌, ”பழுதிலா ஒழுகலாற்று””  (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்‌.

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42—எம் அடியார்கள் ஆகில் – என்னோட்டை அசாதாரண பந்தத்தை அறிந்து ஜ்ஞான அனுகூலமான ஸ்வ ஆசாரத்தை உடையராகில் –
கைங்கர்யமே எல்லா நன்மைகளுமாக நினைத்து இருக்குமவர்களாய் ஈஸ்வரனும் இவர்கள் திறத்தில் நாமே இவர்களுக்கு உபாய உபேயங்களும் எல்லா உறவும் என்றும் நினைத்து இருக்கப் பெறுமவர்கள் –பகவத் பிரசாதம் ஒழிந்த சாதனாந்தரங்கள் பய ஸ்தானம் என்று இருக்கும் நீங்கள் அவர்களை ஆராதியுங்கோள–கொடுமின் கொண்மின்-அவர்கள் உங்கள் பக்கல் ஒரு ஜ்ஞான அபேஷை பண்ணில் நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் – அவர்கள் பகவத் ஜ்ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கில் கேட்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் – ஜாதி நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்-குண நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்-நீர் மேல் எழுத்தான சம்பந்தம் அன்று இறே இவர்களோடு பண்ணும் சம்பந்தம் –இது யாவதாத்மபாவியான சம்பந்தம் இறே –இப் பாசுரம் பல பிரதரான தேவரீரே அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ –நின்னோடும் ஒக்க வழி பட- எனக்கு மேல் பூஜ்யர் இல்லாமையாலே என் மாத்ரமே யாகிலும்-அவர்களை ஆராதித்து நல் வழி போங்கோள் –அருளினாய் – பக்தி ரஷ்டவிதாஹ் ஏஷா யாஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிச் ஸ்ரீ மான் சயதிச்சை பண்டித தஸ்மை தேயம் ததோராஹ்யம் – என்கிறபடியே –இந்தாஹாச்யம் தேவரீர் கிருபையால் அருளிச் செய்த இத்தனை இறே –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-
கொண்டாடும் நெஞ்சுடையார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்-நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – (திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார் அவரே என் குல தெய்வம்)அவர் எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார் என்னும் அளவல்ல எங்களது- ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-தருவரேல் –பகவத் பிரசாதம் போலே
பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாய் இருக்குமது அன்றோ இது –அலாப்ய லாபம் கிட்டிற்று ஆகில் –
ஒரு நாள் பட்டர் பிரசன்னராய் ஜீயருக்கு இட்ட பிரசாதத்தை நினைப்பது –புனிதம் அன்றே –தேசாந்தர
காலாந்தர-தேகாந்தரே அன்றியே-ஸ்பர்ச வேதியாய் இரும்பு பொன்னாப் போலே அப்போதே பரி ஸூத்தம் –தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் – பகவத் பிரசாதம் -பாவனம் இது ஸூ பாவனம்

விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்-அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்– வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே – பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து – (நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு ) வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )

(விஸ்வாமித்ர-விஷ்ணுசித்த-துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து) ““கெளஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்‌,யா ப்ரவர்த்ததே । உத்திஷ்ட, நரஸார்தூ,ல கர்த்தவ்யம்‌ தைவமாஹ்நிகம்‌”” (ரா. படா, 23 – 2) என்று பெரிய பெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின விஸ்வாமித்ரனோடும்‌, “ அரவணையாய்‌ ஆயரேறே அம்மமுண்ணத் துபிலெழாயே”” (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத்‌ திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும்‌, ”அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும்‌ ஸகேத்ரிகளாய்க்‌ கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, **வலந்தாங்கு சக்கரத் தண்ணல்‌ மணி வண்ணர்க்‌காளென்று உள் கலந்தாரடியார்‌’‘ (திருவா. 3 – 7 – 9) என்கிறபடியே வலவருகே தரிக்கப்‌ பட்ட திருவாழியையும்‌ அதுக்குப் பரபாகமான நீலமணி போலே இருக்கிற திருமேனியை யுமுடைய ஸர்வ ஸ்வாமிக்கு அநந்யார்ஹ ஸேஷ பூதரென்று கொண்டு ஸேஷத்வ ஜ்ஞாந பூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, “எம்‌ தொழு குலம்‌ தாங்களே” (திருவா. 3- 7 – 8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்த நீயருமாய்‌, ஸேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்‌-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –இவ் வன முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –பருகுதல்-பானம் பண்ணுதல் –யசோதை பிராட்டி அத்தை அறிந்து –அம்மம்  உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி – நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –நெறித்து பாய்கிற தன் முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து  முலை ஊட்டின பிரகாரத்தை தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு – தத் பாவ யுக்தராய் கொண்டு – அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.-திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு”(திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25](நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1) என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே
.–3-7-9—வலவருகே தரிக்கப் பட்ட திரு வாழி யை உடையனாய் -அதுக்கு ஆச்ரயமான நீல மணி போலே சிரமஹரமான திரு நிறத்தை உடைய சர்வாதிகனுக்கு-ஸ்வரூப ஞானம் முன்னாக அடிமை செய்கையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுடைய சம்பந்தி சம்பந்திகள் நாதர் என்கிறார் –

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8—பலவகைப் பட்ட ஜென்மங்களில் அவகாசம் தோறும் திரு நாமத்தை சொன்னவர்களே யன்று உத்தேச்யர்–அவர்கள் குலமாக எங்கள் குலத்துக்கு ஆச்சார்ய சந்தானம் –

நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –அதாவது – சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக – யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் – பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம் (உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே – ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே – அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்-

(நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌) சரக வம்ஸத்திலே பிறந்த ஸோம ஸர்மாவான ப்‌ராஹ்மணன்‌ வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில்‌ மந்த்ர-க்ரியா-த்‌ரவ்ய-தஷிணா-லோபத்தாலே யாக மத்‌யே ம்ருதனாய்‌ ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை அடைந்து வந்தவன்‌, கைஸிக வ்ருத்தாந்தத்தில்‌ வந்த ஸ்ரீ வைஷ்ணவரைக் கண்டு -த்வம்‌ வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி ஏவமுக்த்வாத, சண்டாளம்‌ ராக்ஷஸ ஸ்ரவணம்‌ ௧,த2 | ப்‌ரஹ்ம ரக்ஷோ வசஸ் ஸ்ருத்வா ஸ்வபாகஸ் ஸம்ஸிதவ்ரத ! பாட, மித்யேவ தத்‌ வாக்யம்‌ ப்‌ரஹ்ம ராக்ஷஸ சோதிதம்‌ । யந் மயா பஸ்சிமம்‌ கீதம்‌ ஸ்வரம்‌ கைஸிக முத்தமம்‌ । ப,லேந தஸ்ய பத்‌ரம்‌ தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்‌ । ஏவம்‌ தத்ர வரம்‌ க்ருஹ்ய ராக்ஷஸோ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஞீத: | யஜ்ஞ ஸாபாத்‌, விநிர்முக்தஸ் ஸோமஸர்மா மஹா யஸா” (கை. பு.) என்று அவன்‌ ஸரணம்‌ புக, (நிலையார்‌ பாடலாலே) கைஸிகம்‌ என்கிற பண்ணில்‌ தாம்‌ பண்ணின கீத ப்ரபாவத்தாலே அவனுடைய ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக் குறையும்‌ தலைக் கட்‌டினாரானமையும்‌.-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே
—9-6-10—சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி கவி பாட வல்லரான ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்த -உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல
புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்
–(கைசிக மஹாத்ம்யம் -கார்த்திகை சுக்ல பக்ஷம் ஏகாதசி -நாடகம் இன்றும் இங்கு நடக்கும்)

கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் – அதாவது – நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) – ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி , ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும் உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே – தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் ) வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்- (ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-

(கீழ்மகன்‌) “ஏழை ஏதலன்‌ கீழ்மகன்‌” (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்ற ஸ்ரீகுஹப் பெருமாள்‌ ”வானோர் தலைமகன்‌”” (திரு விருத்த-53 )என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தித் திருமகனோடே “உகந்து தோழன்‌ நீ?” (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸஹாவாய்‌,

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு
இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன் கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்-பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –இம் மூன்றாலுமாக பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து ––யுன் தோழி – உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே- –உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி – இங்கனே சொல்லுவான் என் என்னில்-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-என்று ஒழிந்திலை- அவ்வளவிலே விட்டிலை பிராட்டியை தோழி என்றும் இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – – உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்-உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )தோழன் நீ எனக்கு – ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி புருஷகாரத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்-அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது – (நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–இப்படி ஈஸ்வர அபிமானிகளான ப்ரயோஜனாந்தர பரர்க்கும் பிரகாரியான சீலத்துக்கும் மேலே தன்னோடு லப்த சா ரூப்யரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவனே –என்னும்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 —வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது–அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்-நாட்டார் கொள்ளுவது அன்றியே திவ்யமாய்-கிலேச பலம் இன்றியே-போக பலமான நோயாய் இருக்கும்–இத்தால்-நோய் முதலும் நோயும்-நாடினாள் ஆயிற்று மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தம்பிக்கு முன் பிறந்து –அதாவது –மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1- என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –அதாவது –இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க – அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று , கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –-கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம் தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்-மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்=தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான்
-கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-

(தம்பிக்கு முன் பிறந்து) “என் தம்பி உன் தம்பி‘ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைய பெருமாளுக்கும்‌ முற்பாடராய்‌, (வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) இளைய பெருமாள்‌ பெருமாள் பக்கல்‌ ஸெளகுமார்யா நுஸந்தாநத்தா லுண்டான பரிவாலே அநிமிஷ த்‌ருஷ்டியாய்க்‌ கொண்டு இவரையும்‌ அதி ஸங்கை பண்ணி ஸாயுதராய்க் கொண்டு நோக்கும்படி பெருமாள் பக்கல்‌ பரிவை யுடையராய்‌

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ருபக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய – ஏழை ஏதலன் –இத்யாதிப் படியே – (ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே ) அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –-மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –

தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –-அதாவது- ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர –அயோத்யா -86-1–என்கிற படியே ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய – பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு ஏக குலம் ஆனபடியும் –

(தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌) ‘*ஆசசக்ஷேத ஸத்‌ பாவம்‌ லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: | பரதாயா ப்ரமேயாய குஹோ கஹந கோசர?” (ரா. ஆ. 86 – 1) என்று அளவிறந்த வைபவத்தை உடையரா யிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளைய பெருமாள்‌ கைங்கர்ய ஸ்ரீயாலே உளராயிருக்கிற படியை இவர்‌ உபதேஸிக்கும்படி இஷ்வாகு வம்ஸ்யரோடு ஏக குலமானமையும்‌.

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் சகுன சஹ போஜனமும்-அதாவது –முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்-சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம் பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் ) குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம் விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும் பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே பண்ணின ச குண போஜனமும் ,தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் ) உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் – என்று திரு உள்ளம் பற்றி –கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2- என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் –

(தூதுமொழிந்து) ““முன்னோர்‌ தூது வானரத்தின்‌ வாயில்‌ மொழிந்து” ‘ (திருமொழி 2 – 2 3) என்று பிராட்டி பக்கல்‌ திருவடியோடே தூத வாக்யத்தை அருளிச் செய்துவிட்ட பெருமாள்‌ “ ஸ பர்யா பூஜிதஸ் ஸம்யக்‌, ராமோ தஸரதாத்மஜ?’‘ (ரா. பா. 1 – 58) என்று ஸபரி கையாலே ஸம்யக்காக பூஜிதரான பின்பு அழகு நிலைபெற்ற படியையும்‌, (நடந்து) குடைமன்னரிடை நடந்த தூதா’” (திருமொழி 6 – 2 – 9) என்று பாண்டவ தூதனான க்ருஷ்ணனுடைய ““புக்தவத்ஸு த்‌விஜாக்‌ர்யேஷு நிஷண்ண? பரமாஸநே ! விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ” (படர. உத்‌,.) என்று பாவநத்வ போக்‌யத்வங்களை உடைத்தா யிருக்கிற விதுராந்த போஜநத்தையும்‌, (வந்த) ”தூது வந்த குரங்கு?” (திருமொழி 10 – 2 – 6) என்கிறபடியே ”த்‌ருஷ்டா ஸீதா” (ரா.பா. 1 – 78) என்ற திருவடியோடே ““உபகாராய ஸுக்‌ ரீவோ ராஜ்யகாங்க்ஷி விபிஷண? ! நிஷ் காரணாய ஹநுமாந்‌ தத் துல்யம்‌ ஸஹ போஜநம்‌” (பாத்‌மோத்தரே) என்றும்‌; “உடனே உண்பன்‌ நானென்ற ஒண் பொருள்‌?” (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள்‌ ஸஹ போஜநம்‌ பண்ணின படியும்‌.-

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா
நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-பாண்டவர்கள் உடைய சத்ர சாமாராதிகள்  அடையப் பறித்துக் கொண்டு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத ஆஞ்ஞையை உடையராய்க் கொண்டு முத்தின் குடை நிழல் கீழ் இருந்து  பூமிப் பரப்புக்கு எல்லாம் தாங்களே ராஜாக்களாக நிர்வஹித்துக் கொண்டு போருகிற துரியோத நாதிகளின் நடுவே கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு தூது போனவனே-அன்றிக்கே கிருஷ்ணன் உடைய அபிப்ராயத்தாலே
கோதில் செங்கோல் குடை மன்னர் -என்று பாண்டவர்களையே சொல்லுகிறது ஆகவுமாம் –

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும்
என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2—வாய்மை -வாக் இந்த்ரிய வியாபாரம் அதாகிறது வசனம்-அதுக்கு கோது இல்லாமை யாவது
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்று பிராட்டி உடைய திரு உள்ளத்தை மெய் என்று பட்டு அவள் தரிக்கும்படி சொல்லுகையும்-த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும்படி சொல்லுகையும் – ( கண்டேன் சீதையை -கம்பரும்-தரிக்க சொன்னவாறு )-உடனே உண்பன் நான் என்று – இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்-இவ்வர்த்தம் –ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்-பாலே போல் சீர் –அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் ) ஒரு கலத்தில் உண்பாரைப் போலே சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

ஒரு பிறவியிலே -இத்யாதி –அதாவது – யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அக்ர பூஜை கொடுத்தமையும்
–ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-

ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு] யது குலத்திலே பிறந்து கோப குலத்திலே வளர்ந்த கிருஷ்ணனுக்கும்‌, ருஷி கர்ப்பமாய்க் கொண்டு போந்த விடத்திலே வளர்ந்த திருமழிசைப் பிரானுக்கும்‌, (தர்ம ஸுநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்- தர்ம புத்ரரும்‌, பெரும்புலி யூரடிகளும்‌ தங்கள்‌ யாகங்களிலே அக்ர பூஜை கொடுத்தமையும்‌.-

ஐவரில் இத்யாதி -அதாவது – பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்–சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம் க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் – ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் – ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்-சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்-ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் – பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் –பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு – புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-

(ஐவரில்‌ இத்யாதி,) ஐவரில்‌ முற்பட்ட தர்ம புத்ரர்‌ ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக் யத்தையும்‌ அசரீரி வாக்யத்தையம்‌ கொண்டு ஸந்தேஹியாமல்‌ புத்ர க்ருத்யம்‌ பண்ணினமையும்‌, நால்வரில்‌ முற்பட்ட சக்ரவர்த்தித் திருமகன்‌ ஸஹஜரான இளைய பெருமாளோடே கூட “ததஸ்தேநைவ ஸோகேந க்ருத்‌ரம்‌ தக்‌த்‌வா ஜடாயுஷம்‌”’ (ரா.பா.1 – 54) என்கிற படியே பெரிய உடையார்க்குப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்‌, மூவரில்‌ முற்பட்ட . பெரிய நம்பி மாறனேரி நம்பிக்குப்‌ புரோடாஸமமாகப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்

புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது-சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே-பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும்

(புஷ்ப த்யாகேத்யாதி,) “சிந்து பூ மகிமும்‌ திருவேங்கடத்து”” (திருவா. 3 – 3 – 2) என்கிற படியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப் பூவுங் கையுமாய்த்‌ திருவுள்ள மறியப்‌ பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ““துளங்கு நீண் முடி அரசர் தம்‌ குரிசில்‌ தொண்டை மன்னவன்‌”’ (திருமொழி 5 – 8 – 9) என்கிற அபிஷிக்த க்ஷத்ரிய புத்ரரான தொண்டை மான்‌ சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம்‌ ஹ்ரிஸ் ஸ்வயம்‌ । வரதஸ் ஸர்வ பூதாநாம் அத்‌யாபி பரித்‌ரு்ஸ்யதே”” (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே த்யாக மண்டபமான பெருமாள் கோயிவிலே திருவாலவட்டமும்‌ கையுமாய்ப்‌ பெருமாளுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““தெண்ணீப்பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்‌”’ (பெருமாள் தி, 1 1) என்கிறபடியே போக மண்டபமான கோயிலில்‌ வீணையுங் கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோக ஸாரங்க மஹாமுனிகள்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌.

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-
சிந்து பூ- திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு தோற்று அக்ரமமாக பிரயோகிக்கிற படி – இங்கு உள்ளார் அங்கு சென்றால் மேன்மை கண்டு படும் பாடு எல்லாம் அங்கு உள்ளார் எல்லாம் இங்கு நீர்மை கண்டு படும் படி-கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே-மகிழும் திரு வேங்கடத்து-அந்தம் இல்புகழ்--பரம பதத்தில் சாவதி என்னும் படி யாயிற்று திருமலையில் வந்த பின்பாயிற்று புகழ் நிரவதிகம் ஆயிற்று-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-உளம் கொள் அன்பினோடு – ஹித உபதேசத்துக்காக பண்ணின அன்பாகையாலே திரு உள்ளத்தைப் பற்றி இருக்கும் இறே–இன்னருள் –-தன் பேறான அருள்-உதாரா -என்று பிரயோஜனாந்தர பரர் அளவிலும்  இருக்கச் செய்தே-ஜ்ஞாநீத் வாத்மைவ -என்கிற விசேஷணம் உண்டு இறே

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை 
கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-பள்ளி கொள்ளும் கருமணியை – ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை-கோமளத்தை -கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்- அதாவது –-யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்–பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே – அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் –ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர் கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்
–ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது – அதாவது – இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே-இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி 

(யாகா நுயாகேத்யாதி,) யாகம் என்று – திருவாராதநமாய்‌, அதுக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் ஸ்பர்ஸத்தாலே காய ஸூத்‌தி, பண்ணின உடையவருடையவும்‌, அநு யாகம்‌ என்று – பகவத் ஸமாராதநாநந்தரம்‌ பண்ணப் படுகிற ப்ரஸாத ஸ்விகாரம்‌. அதுக்குப்‌ பிள்ளை ஏறு திருவுடையார்‌ தாஸருடைய கர ஸ்பர்ஸத்தாலே அந்ந ஸூத்‌தி, பண்ணின நம்பிள்ளை யுடையவும்‌, உத்தர வீதி குடி புகுருகைக்கு “ஆலோக்ய ராஜநகரீ மதி, ராஜஸூநு ராஜாநமேவ பிதரம்‌ பரிசிந்த்ய பூ,ப ! ஸூக்‌ரீவ மாருதி விபீஷண புண்ய பாத ஸஞ்சார பூத பவநம்‌ ப்ரவிவேஸ ராம?” என்று பெருமாள்‌ ஸ்தல ஸூத்‌தி பண்ணினாப் போலே, உத்தர வீதி குடி புகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்தல ஸூத்‌தி பண்ணின நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டருடையவும்‌ அநுஷ்டாந ப்ரகாரங்களையும்‌ அறிவார்க்கிறே ஐந்மத்தினுடைய உத்க்ருஷ்ட அபக்ருஷ்டத்வம்‌ தெரிவது-

இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் – உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் – அவர்களுக்கு ஞான பிரதராய் – ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும் -பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,-அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் – அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும் பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து
-(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )

ஆக கீழ்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களேயாகிலும்‌ பகவதீ யரானார்‌களாகில்‌ அவர்கள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச்‌ சொல்லிற்று

ஜென்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது -என்ற இடத்தில் –தத் உத்கர்ஷ அபகர்ஷங்களுக்கு
உடலாக விவஷிதமானவற்றை -மேல் இரண்டு வாக்யத்தாலே வெளி இடுகிறார் – அதில் பிரதமத்தில் அபக்ருஷ்ட ஜென்மம் இன்னது என்று தோற்றும்படி பகவத் ஞான ரஹிதமான வர்ணாதிகளின் ஹேயத்வத்தை ச ப்ரமாணமாக தர்சிப்பிக்கிறார்-
இனிமேல்‌ பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற கேவல வர்ணாதிகள்‌ வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார்‌-

அஜ்ஞர் பிரமிக்கிற வர்ண ஆஸ்ரம வித்ய வ்ருத்தங்களை கர்த்தப ஜென்மம் ஸ்வபசா தமம் சில்ப நைபுணம் பஸ்மாஹூதி சவ விதவா அலங்காரம் என்று கழிப்பர்கள்-சூரணை-86-

(அஜ்ஞர் பிரமிக்கிற வர்ணத்தைக் கர்த்தப ஜென்மம்-கழுதைப்பிறப்பு -என்றும் –
ஆஸ்ரமத்தை ஸ்வபசா தமம்-நாய் இறைச்சி தின்னும் நீசனை விட தாழ்ந்தது -என்றும்
வித்யயையைச் சில்ப நைபுணம்-செய் தொழில் திறன் -செருப்பு குத்த கற்றவோபாதி -என்றும்
வ்ருத்தத்தைப் பஸ்மாஹூதி–சாம்பலில் இட்ட ஆஹுதி -என்றும் கொண்டு சவ அலங்காரம் என்றும் –
விதவா அலங்காரம்-என்றும் கழிப்பர்கள்-பகவத் சம்பந்தம் இல்லாத வர்ணமும் -ஆஸ்ரமும் -ஞானமும் -அனுஷ்டானமும் -தள்ளத்தக்கவை -என்றதாயிற்று )அதாவது – பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து – தத் அனுகுணமாக -ஹேய உபாதேய விபாகம் பண்ணத் தக்க ஞானம் இல்லாதவர்கள் – பகவத் அந்வய ரஹித தயா அபக்ருஷ்டராய் இருக்க – உத்தம வர்ணம் -உத்தம ஆஸ்ரமம் ,சத் விதியை, சத் வ்ருத்தம்-என்று உத்க்ருஷ்டமாக பிரமிக்கிற வர்ணாதியான அத்தை
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேத பரா பராக்ராந்தஸ் ஸ்வை ப்ராஹ்மண கர்தப -என்று நாலு வேதங்களையும் அதிகரித்து வைத்தே – சர்வே வேதா யத்பதம் ஆமனந்தி–கடவல்லி -என்றும்-வேதைஸ்ச – சர்வைர் அஹமேவ வேதே –ஸ்ரீ கீதை -15-15-என்கிற படியே
சகல வேத பிரதி பாத்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனை அறியாதவன் குங்குமம் சுமந்த கழுதை போல் தான் பரித்து-சுமந்து கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமண கழுதை என்றும்

அஜ்ஞர்‌ – பகவச் சேஷத்வ ஜ்ஞாதமில்லாதவர்கள்‌, உத்தம வர்ணமென்றும்‌, உத்தமாஸ்ரமமென்றும்‌, ஸத்‌வித்‌யை என்றும்‌,ஸத்‌ வ்ருத்தமென்றும்‌ கேவலம்‌ உத்க்ருஷ்டமாக ப்‌ரமிக்கிற இவற்றை.
(கர்த்தப ஜந்ம மித்யாதி,) ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸு தேவம்‌ ந விந்த,தி । வேத பாரபராக்ராந்தஸ்ஸ வை ப்‌ராஹ்மண கர்த்தப”” என்கிறபடியே ஸகல வேதத்‌தையும்‌ அதிகரித்து வைத்து ““வேதைஸ் ச ஸர்வைரஹமேவ வேத்‌ய” (கீதை 15 – 15) என்கிறபடியே ஸகல வேத,ப்ரதிபாத்‌யன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்றறியாதவர்‌ குங்குமம்‌ சுமந்த கமுதையோ பாதி என்றும்‌,

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக விஷ்ணு பக்தி விஹீனஸ்து யதிஸ்ஸ ச்வபச அதமா -என்று -யதிஸ்ஸ-சரம ஆஸ்ரயமி ஆகிலும் பகவத் பக்தி ஹீனன் ஆனவன் ஸ்வபசனில் காட்டில் தண்ணியன் என்றும் –தத் கர்ம யத் ந பந்தாப சா வித்யா யா விமுக்தயே ஆயாசாயா அபரம் கர்ம வித்யான்யா சில்பனை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-41 -என்று பகவத் பரத்ய மோஷார்த்தை ஆனதுவே வித்யை –அல்லாதவை செருப்பு குத்த கற்றவோபாதி என்றும்-ஆம்னா யாப்யசநான் யரண்யருதிதம் வேத விரதான் அன்வஹம் மேத்ஸ் சேத பலானி பூர்த்த விதயஸ் சர்வே ஹுதம் பஸ்மினி தீர்த்தா நாம் அவகாஹாநாநி ச கஜஸ்நானம் வினா யத்பத த்வந்த்வாம் போருஹ சம்ஸ்ம்ருதிர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்தமாலை –25-என்று-பகவத் ஸ்ம்ருதி இல்லாதவர்கள் உடைய கர்ம அனுஷ்டானம் – பஸ்மாஹூதிவத் நிஷ் பிரயோஜனம் என்றும் –

விஷ்ணு பக்தி விஹீநஸ் சேத்‌ யதிஸ்ச ஸ்வபசாதம?’‘ என்று யதியே யாகிலும்‌ பகவத்‌ பக்தி இன்றிக்கே இருக்குமாகில்‌ அவன்‌ ஸ்வபாகனிற் காட்டில்‌ தண்ணிய னென்றும்‌, “’தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்‌யா யா விமுக்தயே ! ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌யாந்யா ஸில்பநைபுணம்‌” (வி.பு. 1 – 19) என்று மோக்ஷார்த்த,மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்‌; அல்லாத ஜ்ஞாநம்‌ செருப்புக்குத்தக்‌ கற்றவோபாதி என்றும்‌, ”ஆம்நாயாப்‌யபஸ நாந்யரண்யருதி,தம்‌ வேத வரதாந் யந்வஹம்‌ மேத,ஸ்சேத,ப,லாநி பூர்த்த விதய? ஸர்வே ஹுதம்‌ பஸ்மநி | தீர்த்தா நாம வகாஹதாநி ச கஜஸ்நாதம்‌ விநா யத்பத த்‌வந்தவாம் போருஹ ஸம்ஸ்ம்ருதீர் விஐயதே தேவஸ் ஸ நாராயண??‘ (முகுந்தமாலை 25) என்றும்‌ பகவஜ் ஜ்ஞாதமில்லாதவர்களுடைய கர்மாதிகளெல்லாம்‌ பஸ்மா ஹுதி போலே நிஷ் ப்ரயோஜநமென்றும்‌,

யச்யாகிலாமி வஹபிஸ் ஸூமங்கலை வாசோவிமிச்ரா குண கர்ம ஜன்மபி பிரணாந்தி சும்பந்தி புனந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாஸ் சவ சோபநா மத–ஸ்ரீ பாகவதம் -10-18-12— விஷ்ணு பக்தி விஹீனச்ய வேதஸ் சாஸ்திரம் ஜெபஸ் தப அப்ராணாஸ் யேவ தேஹஸ்ய மண்டனம் லோக ரஞ்சனம்–என்று பகவத் அந்வய ரஹிதோக்திகளும் பகவத் பக்தி ஹீனனுடைய வித்யா வருத்தங்களும் ஸ்வ அலங்கார கல்பம் என்றும் –பிராதுர் பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவாஸ் ததீய ஜாத்ய வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத் புவன த்ராண தோன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ– என்று பகவத் அநன்விதருடைய வித்யா வ்ருத்த பாஹுள்யமாகிற உத்கர்ஷம் – பகவத் சம்பந்த ஞானம் ரூப சௌமாங்கல்ய அபாவத்தாலே விதவ அலங்கார சமம் என்றும் ஞானிகள் ஆனவர்கள் இகழ்வார்கள் என்கை .–ஆக –இப்படி பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற
வர்ண ஆஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்கையாலே – கீழ் அப்க்ருஷ்ட ஜென்மதயா விவஷிதமானது இன்னது என்னும் இடம் அறிவித்தா
ர் ஆய்த்து –

தேசவா? புருஷா லோகே யேஷாம்‌ ஹ்ருதி, ந கேஸவ? । கேஸவார்ப்பித ஸர்வாங்கா ந பாவா ந புநர்ப வா?”, “யஸ்யாகி லாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிஸ்ரா குண கர்ம ஜந்மபி ! ப்ராணந்தி ஸூம்பந்தி புநந்தி வை ஜகத்யாஸ் தத்‌ வியுக்தா ஸவ ஸோபநா மதா?” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாதவர்கள்‌ ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள்‌ ஸவ ப்ராயரென்றும்‌, ““ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோதே வதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபி ச குண தஸ்தாத்‌ ருஸோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத்‌ புவநப வந த்ராணதோந்யேஷு வித்‌யா வ்ருத்த ப்ராயோ பவதி வித வாகல்பகல்ப? ப்ரகர்ஷூ” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாத வர்களுடைய வித்‌யாதி,கள்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாந மென்கிற ஸெளமங்கல்ய மில்லாமையாலே விதவால்ங்காரமென்று இந்த ஜந்மாதிகளை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள்‌ அநாதரிப்பர்க ளென்கிறார்‌. பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதிகள்‌ தயாஜ்யமென்னுமிடம்‌ சொல்லிற்று

முதல்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம் என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள் ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் -இனி மேல்‌ பகவத்‌ விநியோகார்ஹமாயும்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும்‌ மிகவும்‌ உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம்‌ மாநஸைரந்த்ய ஜாதிதாம்‌ | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம்‌ நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக்‌ கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ போலன்றிக்கே, பகவத்‌ விநியோகார்ஹமாய்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்‌ரஹிக்கவும்‌ ஆதரிக்கவும்‌ படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்‌

அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவனங்களில் ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-சூரணை -87-

(அணையப் பெறுகிற ஊரப் பெறுகிற புணையப் பெறுகிற திர்யக்கு ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்கள்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் – பரிக்ரஹித்தார்கள்–அடி படப் பெறுகிற- பொடி படப் பெறுகிற-பர்வதத்திலே ஏதேனுமாகப் பெறுகிற –பவனங்களில் ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரியோர்— ஸ்ரீ ஸூகப் ப்ரஹ்ம ரிஷி-ஸ்ரீ உத்தவர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் -ஸ்ரீ ஆளவந்தார் -பிரார்த்திப்பர்கள்-)-அதாவது– அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது–திருவாய் -2-8-1 -என்று ஸ்ரீ பிராட்டி திரு மேனி ஸ்பர்சத்தோடு ஒக்க விகல்பிக்கலாம் படி -அத்யந்த ஸூக ஸ்பர்சமாய் – சைத்ய மார்தவ ஸௌரப்யங்களை பிரகிருதியாக உடைத்தாய் கொண்டு –ஸ்ரீயபதி யானவன் கண் வளர்ந்து அருளுகைக்கு பாங்காய் இருக்கும் ஸ்ரீ திரு அரவணை யாயும் –

*அணைவதரவணைமேல்‌” (திருவா.2 – 8 – 1) விடாயர்‌ மடுவிலே சேர்ந்தாப் போலே ஸ்ரம ஹரமாய்‌, அதாவது – “பூம்பாவை யாகம்‌ புணர்வது” என்று நாச்சிமாரோட்டைச்‌ சேர்த்தியோடே விகல்பிக்கலாம் படியான ஸூக ஸ்பர்ஸத்தை உடையனாகையாலே ஸர்வேஸ்வரன்‌ கண் வளர்ந்தருளுகைக்குப்‌ பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும்‌

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே

இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே சேஷியும் திரு அநந்த ஆழ்வான் மேல் அணைந்து அல்லது தரியானாய் இருக்கிறபடி-பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்-நிரவதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை-தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை-யாகம்-புணர்வது
இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை
அணைவது புணர்வது -என்கையாலே போகம் ஒத்து இருக்கிற படி-ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க-தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே அதிலே ஏறி அவர்களை இவனை அணைக்கை இறே முக்த ப்ராப்யம் –

ஊரும் புள் கொடியும் அஃதே –திருவாய் –10-2-3-என்கிற படியே ஆர்த்த ரஷணத்துக்கும் அனுகூலரை அனுபவிப்பக்கைக்கும் -தன் உகப்பு தனக்குமாக – அவன் பல காலம் மேற் கொண்டு நடத்துகைக்கு வாகனமான ஸ்ரீ கருள புள்ளாயும்-

“ஊரும்‌ புட்கொடியுமக்தே”” (திருவா. 10 – 2 – 3) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத யோதகமான கருட வாஹநன்‌ கருட த்‌வஜன்‌ என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும்‌ த்‌வஜமாயுமிருக்கும்‌ பெரிய திருவடியாயும்‌-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3—வாஹனமானது பெரிய திருவடி –கொடியும் அக்தே -இது நித்ய ஸூரிகளுக்கும் உப லக்ஷணம் -இது நித்ய ஸூரிகளுக்கு கொடுத்து வைக்கும் நாநா ரஸ அனுபவத்தை -இன்று செல்லுமவனுக்கும் கொடுக்கும் என்னுமிதுக்காக சொல்கிறது

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் -திருவாய் -1-9-7-
புணைந்த தண் அம் துழாய் –என்கிற படியே -அவன் ஆதரித்து ( கேசவ பிரியா அன்றோ )சாத்துகைக்கு அர்ஹமான திருத் துழாயாயும் இருக்கும்- திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை-

“தாளிணை மேலும்‌ புனைந்த” (திருவா, 1 – 9 – 7), ““புனையுங் கண்ணி”” (திருவா. 4 – 3 – 2) என்கிறபடியே ஸர்வேஸ்வரத்வ ஸூூசகமான தனி மாலையாய்‌, ”மலர்த் துழாய் மாட்டே நீ மனம்‌ வைத்தாய்‌” (திருவா. 3- 1 & 4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக்‌ கொள்ளை கொள்ளவற்றான திருத் துழாயாழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும்
புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7—அபிமத விஷயத்தை அணைவார் புழுகு நெய் ஒட்டிக் கொண்டு போமா போலே தாம் உகந்த படியே திருத் துழாயாலே திருமேனியை எல்லாம் அலங்கரித்து வந்தபடி –தோளிணை மேலும் ஸூ காடம் பரிஷஸ் வஜே -என்கிறபடியே அணைக்கும் தோள்களிலும்-நன் மார்பின் மேலும்-அவன் அப்படி அணைக்கைக்கு பற்றாசான பிராட்டி இருக்கிற திரு மார்பிலும்-சுடர் முடி மேலும் –இவ்வணைக்கை தான் வகுத்த விஷயம் ஆகில் இறே புருஷார்த்தம் ஆவது –அந்த சேஷித்வ பிரகாசகமான சர்வாதிகாத்தவ லக்ஷணமான திரு அபிஷேகத்திலும் –தாளிணை மேலும்- அந்த சேஷித்வத்துக்கு தோற்று விழும் திருவடிகளிலும்-சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன் -இது தான் சர்வாதிக லக்ஷணம் இறே

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே;
வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2—இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே சாந்துக்கு பூக்கட்டி இறே மனம் கொடுப்பது

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –
3-1-4–உன் திரு உள்ளத்தையும் கால் தாழ பண்ண வல்ல திருத் துழாய் முதலான போக்கிய ஜாதங்களிலே பிரவணனாய்-மாடு – இடம் -அதன் பக்கலிலே –

பெரு மக்கள் உள்ளவர் –திருவாய் -3-7-5-என்கிற படி -அஹ்ருத சஹஜ (திருட முடியாத -கூடவே உள்ள) தாஸ்யர் ஆகையாலே –-அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத் -தைத்ரியம் –என்பது –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது இது –தைத்ரியம் – -என்பதாக வேண்டாதபடி என்றும் ஒக்க உளராய் இருக்கிற மகாத்மாக்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் -பகவத் கைங்கர்ய இச்சையாலே பரிக்ரஹித்தார்கள் –

பெரு மக்களுள்ளவர்‌’” (திருவா. 3 – 7 – 5) என்னும்படி மஹாத்மாக்களாயும்‌, ஸத்தையே பிடித்து மோஷத்வ ஜ்ஞாந திரோதாந மில்லாமையாலே “’அஸந்நேவ’”, ‘“ஸந்தமேநம்‌”’ (தை.ஆ.) என்ன வேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள்‌ பகவத்‌ விநியோகார்ஹமாக ஸ்வேச்சையாலே பரிக்‌ரஹித்தார்கள்‌-

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5–நித்ய ஸூரிகள்–பேராளன் பேரோதும் பெரியோர் என்றும் –ச மஹாத்மா ஸூ துர்லபா -என்றும் முமுஷுக்களை யும் சர்வ உத்க்ருஷ்டராக சொல்லக் கடவதானால்-நித்ய சித்தராய்ச் சொல்ல வேண்டா இறே-உள்ளவர்- நிரூபகமான சேஷத்வ ஞானம் நித்யம் ஆகையால் தாங்களும் நித்யராய் இருக்கை –-இங்கு உள்ளாரைப் போலே அசன்னேவா-என்பது சந்தமேனம்-என்பதாக வேண்டாதவர்கள் –

பத்யு பிரஜானாம் ஐஸ்வர்யம் பசூணாம் வா ந காமயே அஹம் கதம்போ பூயாசம் குந்தோ வா யமுனா தடே – என்று பிராஜாபதி பசுபதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் வேண்டேன் –பூத்த நீள் கடம்பேறி –நாச்சியார் -4-4–என்றும் –பூம் குருந்து ஏறி இருத்தி –நாச்சியார் -3-3–என்றும் சொல்லுகிற படி
யமுனை கரையில் அவன் திரு அடிகளால் மிதித்து ஏறின கடம்பாதல் -குருந்தாதல் ஆக வேணும் என்றும் –ஆஸாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவனே கிமபி குல்ம லதெவ்ஷதீனாம் யா துஸ்த்யஜம் ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜூர் முகுந்த பதவீம் ஸ்ருதிபிர் விம்ருக்யாம்–ஸ்ரீ பாகவதம் -10-48-61—என்று ஸ்ருதிகளால் தேடப் படும் ஸ்ரீ கிருஷ்ணன் போன வழியை ஸ்வ ஜனாதிகளும் அதிக்ரமித்து -யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள் -அவர்கள் உடைய பாத ரேணுவை பஜித்து இருப்பனவாய் பிருந்தாவனத்தில் இருக்கும் சில செடிகள் கொடிகள் ஒவ்ஷதிகளில் வைத்து கொண்டு – ஏதேனும் ஒன்றாகவேனாக வேணும் என்றும் -( ஸ்ரீ உத்தவர் –

(அடியும்‌ பொடியும் பட) ““பத்யு? ப்ரஜாநாமைஸ்வர்யம்‌ பஸூநாம்‌ வா ந காமயே அஹம்‌ கதம்போ பூயாஸம்‌ குந்தேரா வா யமுநா தடே”’ என்று ப்ரஜாபதி பஸூ பதிகளுடைய ஐஸ்வர்யத்தையும்‌ வேண்டேன்‌; ”பூத்த நீள்‌ கடம்பேறி”’ (நா. தி. 4 – 4] என்றும்‌, ‘“பூங்குருந்தேறி யிருத்தி” (நா. தி. 3 – 3) என்றும்‌ சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஸத்துக்கு விஷயமான குருந்தாதல்‌, கடம்பாதல்‌ ஆவேனாக வேணும்‌ என்றும்‌, ““ஆஸாமஹோ சரண ரேணு ஜுஷாமஹம்‌ ஸ்யாம்‌ ப்‌,ருந்ததாவநே கிமபி குல்மல தெளஷதீநாம்‌ । யா து ஸ்த்யஷம்‌ ஸ்வஜ ந மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம்‌ ஸ்ருதிபிர் விம்ருக்‌யாம்‌”‘ (பாக,.10) என்று வேதங்களாலும்‌ தேடவரிய க்ருஷ்ணன்‌ போன வழியை ஸ்வ ஜநத்தையும்‌ குலாசாரத்தையும்‌ அதிக்ரமித்து யாவர் சில பெண்கள்‌ பின் தொடர்ந்தார்கள்‌, அந்த க்ருஷ்ணனுடையவும்‌, பெண்களுடையவும்‌ பாத ரேணுவை தரித்திருக்கும்‌ ப்‌ருந்தா வநத்தில்‌ சிறு செடிகள்‌ கொடிகள்‌ ஓஷதிகள்‌ இவையாவேனாக வேணும்‌ என்றும்‌,ஸ்ரீ ஸூகர் பிரார்த்தனை அடி பட -பொடி பட )

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4—விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது-அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –-கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ-

எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3–நான் பழிக்கு அஞ்சினேன் ஆகிலும் உங்களுக்கு இது தர வேண்டுவது இல்லை இறே –என்று குருந்தின் மேல் இவற்றையும் கொண்டு அதில் பூ பொருந்தினால் போலே பொருந்தி -இழியக் கணிசியாதே இருந்தான்

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே -ஸ்ரீ பெருமாள் -4-1-
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் –4-2-
செண்மகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே —ஸ்ரீ பெருமாள் -4-4-
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் -4-5-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –என்று ஸ்ரீ திருமலை ஆழ்வாரோட்டை சம்பந்தம் உடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களில் ஏதேனும் ஒன்றாகப் பெறுவேனாக வேணும் என்றும் –ஸ்ரீ பெருமாள் -4-10-இத்தகையப் பிறப்பையும் –(பொன்மலை – பர்வதங்களில் ஏதேனுமாக -)

(பர்வத) “கோனேரி வாழும்‌ குருகாய்ப் பிறப்பேனே’‘ (பெருமா. தி. 4 – 1) என்றும்‌, “திருவேங்கடச் சுனையில்‌ மீனாய்ப் பிறக்கும்‌ விதி யுடையே னாவேனே”‘ (பெருமா.தி, 4 2) என்றும்‌ “‘தம்பகமாய்‌ நிற்கும்‌ (பெருமா. தி. 4 – 5) , “*செண்பகமாய்‌ நிற்கும்‌‘” (பெருமா. தி. 4 – ச்‌) , “கானாறாய்ப் பாயும்‌”(பெருமா. தி. 4 – 7), எம்பெருமான்‌ பொன் மலை மேல்‌ ஏதேனுமாவேனே”'(பெருமா. தி. 4 – 10) என்றும்‌ திருமலை யாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாரவரங்களில்‌ ஏதேனுமொன்றாகப்‌ பெறுவேனாக . வேணும்‌ என்றும்‌,

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1--விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே –கோனேரியைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் –திரு வேங்கட சுனையில் மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய் கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே-அப்படியும் ஓன்று அன்றியே-உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –வேம்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-ஸ்ரீ திருமலையிலே செண்பகமாய் நிற்கும் சம்பத்து உண்டாக வேணும் –
அதாவது –பகவத் பிரத்யாசத்தி இறே பிராப்யம் -அது கிட்டுமான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்- -மேலே ஏறின சைதன்யத்தாலே கார்ய கரம் இல்லை –என்கிறார் –வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
–4-5-ஒரு பிரயோஜனத்துக்கு காகாதே அங்கே மூத்தற்று தீய்ந்து போவதொரு ஸ்தாவரமாம் தவம் உடையன் ஆவேனே –அநேக ஜன்ம தப பலம் என்று இருக்கிறார் காணும் இது தன்னை —வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே
– 4-7-சஹ்யம் பற்றினதாகில் கீழே போம் இறே –
அங்கே சுவறிப் போம் காட்டாறுகள் அபிசந்தியை யுடையேனாக வேணும் –திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே
– 4-8-எப்போதும் ஒக்க வைஷ்ணவர்கள் சஞ்சரிக்கையாலே அவர்கள் பாத ரேணு படும்படி வழியாய்க் கிடக்கும் துணிவு உடையேன் ஆவேனே –
தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் -என்று இருக்குமவர் இறேநின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
–4-9-அநந்ய பிரயோஜனரும் –பிரயோஜனாந்தர பரரும்-அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும் அது என் என்னில் – சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை–அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –
நாம் அறிய வேண்டா திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

தவ தாஸ்ய ஸுகைக ஏக சங்கினாம் பவனேஷூ அஸ்த்வபி கீட ஜன்ம மே–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -55-என்று தேவரீர் உடைய தாஸ்ய சுகம் ஒன்றிலுமே சங்கத்தை உடையரான ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளிலே உத்பத்தி விநாசங்கள் இரண்டும் அங்கேயாம் படி – கீட ஜன்மமே எனக்கு உண்டாக வேணும் என்றும் -( பவனங்களில் ஏதேனுமாக -)

(ப,வநங்களில்‌]) “தவத,ஸ்ய ஸுகைக ஸங்கிநாம்‌ பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே”? (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தாஸ்ய ஸுக மொன்றிலுமே ஸங்கத்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாஸங்களிரண்டும்‌ அங்கேயாம் படியான கீட ஜத்மமே எனக்கு உண்டாக வேணும்‌ என்றும்‌;

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||
–55–எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.-ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

இப்படி-அவனடி படவும்–அவனை அணைந்தார் அடியில் பொடி படவும் –-அவன் உகந்து அருளின நிலத்தே ஆதல் ,-அவன் அடியார் அபிமானம் உள்ள நிலத்திலே ஆதல் , வர்திக்கவும் ஈடாக ஜனிக்க பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைபேராளன் பேரோதும் பெரியாரான–ஸ்ரீ பெரிய திருமொழி -7-4-4- –ஸ்ரீ ஸுக பிரம ரிஷி ,ஸ்ரீ உத்தவர் ,ஸ்ரீ குலசேகர பெருமாள் , ஸ்ரீ பெரிய முதலியார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் என்ற படி .

இப்படி பகவத்‌ பாகவத ஸம்பந்தங்களை யுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை *பேராளன்‌ பேரோதும்‌ பெரியோரான ஸ்ரீஸூக ப்‌ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப் பெருமாள்‌, பெரிய முதலியார்‌ தொடக்கமான முமுஷுக்கள்‌ ப்ரார்த்தித்தார்கள்‌.

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

இத்தால் –வாசிகை பஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர –மனு ஸ்ம்ருதி -12-9- -என்று இந்த விபூதியிலே -திர்யக், ஸ்தாவர ஜன்மங்கள் -வாசிக காயிக பாப பலங்களாக சாஸ்திரம் சொல்லா நிற்க-அப்படி இன்றிக்கே ஸ்ரீ பகவத் விநியோக அர்ஹமாக இந்த ஜன்மங்களை நித்ய ஸூரிகள் ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்வார்கள் என்றும் –
தாஸ்ய ரசஜ்ஞரான முமுஷுக்கள் தத் சம்பந்த -ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்திப்பார்கள் என்றும் சொல்லுகையாலே –தாஸ்ய குண ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்றது ஆய்த்து–

ஆக இத்தால்‌ பகவஜ் ஜ்ஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட வர்ணாதிகள்‌ ஸத்துக்களுக்கு அநாதரணீய மென்றும்‌, பகவத்‌ விநியோகார்ஹமான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ ஆதரணிய மென்னுமிடத்தையும்‌ சேர அருளிச் செய்தார்

பகவத் விநியோஹ அர்ஹம் ஆகையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை நித்ய ஸூரிகள் பரிக்ரஹிக்கைக்கு பிராப்தம் –அங்கன் இன்றிக்கே-முமுஷுக்கள் ஆன இவர்கள் – பகவத் ,பாகவத சேஷத்வ வாஞ்சையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்தித்தார்கள் ஆகிலும்
உத்க்ருஷ்டதயா சாஸ்திர சித்தமான வர்ணத்தை இப்படிக் கழிக்கிறது என் என்ன அருளிச் செய்கிறார்-இனி மேல்‌ ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான ஆத்மாவையும்‌ அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச்‌ சொல்ல வேணுமோ? என்கிறார்‌-

சேஷத்வ பஹிர்பூத ஞான ஆனந்த மயனையும் சஹியாதார் த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே-சூரணை -88-

(த்யாஜ்ய உபாதியை-தள்ளத்தக்க-கர்மம் அடியாக -இடையில் வந்த வர்ணத்தை -ஆதரிக்க மாட்டார்களே )-அதாவது – ந தேஹம் ந பிராணான் நச ஸுகம் அசேஷ அபிலஷிதம் நச ஆத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத ஷணமபி சஹே யாது சததா வினாசம் தத் சத்யம் மதுமதன !விக்ஜ்ஞாபனமிதம்
–ஸ்தோத்ர ரத்னம் -56–என்று தேவரீர் உடைய சேஷத்வதுக்கு புறம்பான தேஹாதிகள் ஒன்றினையும் ஷணமும் சகியேன் –அவ்வளவு அன்றியே –ஞான ஆனந்த மயமான ஆத்ம வஸ்துவையும் சகியேன் –அது சததாவாக விநாசத்தை அடைவதாக —இந்த விண்ணப்பம் அஹ்ருதயம் அன்று -சத்யம்-திரு முன்னே பொய் சொன்னேன் ஆகில் தேவருக்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்கையாலே-சேஷத்வத்துக்கு புறம்பான போது – ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா-என்று-ஞான ஆனந்த மயத்வாலே ஸ்லாக்யமாய் இருக்கும் ஆத்மாவையும் சகியாதவர்கள் –சேஷத்வ விரோதி பூத அஹங்கார ஹேது ஆகையால் த்யாஜ்யமாய் -கர்ம நிபந்தனம் ஆகையாலே ஒவ்பாதிகமாய் இருக்கிற வர்ணத்தை ஆதரிப்பார்களோ என்கை–ஒவ்பாதிகமான இத்தை உபாதி என்றது கார்ய காரண உபசாரம்

“ந தேஹம்‌ ந ப்ராணாந்‌ ந ச ஸுக,மஸேஷாபி லஷிதம்‌ ந சாத்மாநம்‌ நாந்யத்‌ கிமபி தவ ஸேஷத்வ விப்வாத்‌ ! பஹிர்பூ,தம்‌ நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா விநாஸம்‌ தத்‌ ஸத்யம்‌ மது மதந விஜ்ஞாபநமித,ம்‌”” (ஸ்தோ, ர. 57) என்று – தேவரீருடைய ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான தேஹாதிகள்‌ ஒன்றையும்‌ ஸஹியேன்‌; அவ்‌வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த,மயமான ஆத்ம வஸ்துவையும்‌ ஸஹியேன்‌; அது ஸததாவாக விநாஸத்தை அடைவதாக. இது – அஹ்ருதயமன்று ஸத்யம்‌- இது அஸத்யமாகில்‌ தேவரீர் ஸந்நிதி யில்‌ அஸத்யம்‌ சொன்ன மது பட்டது படக் கடவேன்‌-என்று ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான போது ““ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா” (பாஞ்ச) என்று ஜ்ஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதவர்கள்‌, ஸேஷத்வ ஜஞாந விரோதியான அஹங்காரத்துக்கு ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய்‌, காமமடியாக வருவதொன்றாகையாலே ஓளபாதிகமான வர்ணத்தை ஆதரியார்க ளென்னுமிடம்‌ சொல்ல வேணுமோ ? என்கிறார் –

இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-

இதின் ஒவ்பாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை
வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்கம் ஏற்றின போதே தெரியும்-சூரணை -89-

(இதின் ஒவ்பாதிகத்வம்-வந்தேறி -ஒரு ராஜா-விசுவாமித்திரர் – தன்னை மறை முனிவன் ஆக்கினவன்-ப்ரஹ்ம ரிஷி யாகும்படி செய்த வசிஷ்ட பகவான் -நீசனாக்குவித்த ராஜாவை-வசிஷ்டராலே நீசனாகும் படி சபிக்கப்பட்ட திரிசங்கு என்னும் அரசன் – வாரே உறுப்பாக யஜிப்பித்து-தோலாகிய வார் -வேள்விக்கு அங்கமான உறுப்புத் தோலாக-ஸ்வர்கம் ஏற்றின போதே வர்ணம் வந்தேறி ஸ்வாபாவிகம் இல்லை என்று தெரியும்-சரு மாத்தின கதை -ஜமதக்கினி -பரசுராமர் -பிறப்பால் ப்ராஹ்மணர் -க்ஷத்ரியர் ஆனார் )அதாவது இவ் வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம் குசிக வம்சனாய் ராஜாவான விஸ்வாமித்திரன் ப்ரஹ்ம ரிஷித்வ காமனாய்–நெடும் காலம் தபசு பண்ணின தன்னை –-மந்திரம் கொள் மறை முனிவன் –பெருமாள் -10-2- என்னும் படி ப்ரஹ்ம ரிஷி ஆக்கின சக்திமான வசிஷ்டன் தன் வார்த்தை கேளாமல் -தன்னை அவ மதி பண்ணிப் போனது கொண்டு ஸ்வ புத்ரர்கள் பண்ணின சாபத்தாலே மார்பில் இட்ட யக்ஜோபவீதமே வாராம் படி -சண்டாளன் ஆக்குவித்த – இஷ்வாகு வம்சனாய் உள்ள திரி சங்கு என்கிற ராஜாவை -அந்த வார் தான் யஜ்ஞாங்கமான உருப்பு தோலாகக் கொண்டு தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க ஆரோகணம் பண்ணுவித்த போது ஸுஸ்பஷ்டம் என்கை .–இத்தால் ஒரு ஷத்ரியன் ஸூஹ்ருத விசேஷத்தால் -அந்த சரீரம் தன்னோடே ப்ரஹ்ம ரிஷி ஆகையாலும் –ஒரு ஷத்ரியன் துஷ்க்ருத விசேஷத்தாலே அந்த சரீரம் தன்னோடே சண்டாளன் ஆகையாலும் ,ஷத்ரியத்வம் போய் ப்ரஹ்ம ரிஷி ஆனவன் –தான் ப்ரஹ்ம ரிஷி ஆவதற்கு முன்பே ஷத்ரிய வேஷம் போய் சண்டாள வேஷமாய் நிற்கிறவனை அந்த வேஷம் தன்னோடே யஜிப்பித்து ஸ்வர்கத்தில் ஏற்றுகையாலும் வர்ணத்தின் கர்ம ஒவ்பாதிகத்வம் எல்லோருக்கும் தோன்றும் என்றது ஆய்த்து-

ருஷிக வம்ஸ உத்பவனாய்‌ ராஜாவான விஸ்வாமித்ரன்‌ ப்‌ரஹ்ம ரிஷித் வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம்‌ தபஸ்ஸு பண்ணின தன்னை ‘‘மந்திரங்‌ கொள்‌ மறை முனிவன்‌” (பெருமா.தி.10 – 2) என்னும் படி ப்ரஹ்ம ரிஷியாக்கின வஸிஷ்டன்‌ தன்னுடைய வார்தாதிலங்கநம்‌ பண்ணின த்ரி ஸங்குவைத்‌ தன்‌ புத்ரர்களுடைய ஸாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந் தானே வாராம்படி சண்டாளனாக்கு விக்க, அந்த த்ரிஸங்குவையும்‌ அந்த வாரே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாம் படித்‌ தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம்‌ பண்ணுவித்த போதே வர்ணம்‌ கர்மோபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுவ்யக்த மென்கிறார்‌,-ஆக இத்தால்‌ ஒரு க்ஷத்ரியன்‌ ப்‌ரஹ்ம ரிஷியானானென்றும்‌, ஒரு க்ஷத்ரியன்‌ சண்டாளனானானென்றும்‌, அந்த சண்டாளனானவனை அந்த ப்‌ரஹ்ம ரிஷியானவன்‌ தபோ பலத்தாலே ஸ்வர்க்க மேற்றினான்‌ என்றும்‌ சொல்லுகையாலே வர்ணம்‌ ஓளபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுஸ்திரமாய்த்து –

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-

இனி மேல் ப்ராகரணிகமாய் வருகிற பிரமாத்ரு வைபவ ஸ்தாபனத்துக்கு உறுப்பாக பிரமாண பிரமேயங்களையும் கூட்டிக் கொண்டு மூன்றிலும் த்யாஜ்ய உபதேயங்கள் உண்டு என்னும் இடத்தை விபஜித்து சொல்லி – இவ் விசேஷம் அறிவார் பெரும் பேற்றையும் -இது அறியாமல் பாகவத ஜன்ம நிரூபணம் பண்ணுவார் அதஹ்பதிக்கும் படியும் அறிவிக்கிறார் —ஆக கீழ்‌ பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம்‌ அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ அநுபாதேயரென்றும்‌, பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம்‌ உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ உபாதேயரென்றும்‌ சொல்லா நின்றது. இனி மேல்‌ ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றிலும்‌ த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்‌ படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும்‌ ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபண ஸமம்‌ இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார்‌

மா வுருவில் கள்ள வேடம் திருந்து வேத மலமான மானிடம் பாடல் சர்வ வர்ண சூத்ரத்வம் காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம் தென்னுரையில் ஹரி கீர்த்தி ஸ்வபசரில் பத்தி பாசனுமும்
அறிவார் ஆரார் அமரர் என்ன வேற (ஏற) அறியாதார் சாதி அந்தணர்கள் ஏலும் தகர விழுவர்
-சூரணை -90-

அதாவது
எம்மா உருவும் வேண்டும் ஆற்றாலாவாய் எழில் ஏறே –திருவாய் -5-8-2-என்கிற படியே எல்லா ரூபமும்
அப்ராக்ருதம் ஆகையாலே ஸ்லாக்யமுமாய் -இச்சா க்ருஹீதமாயுமாய் இருக்கும்-பகவத அவதார விக்ரஹங்களில் வைத்துக் கொண்டு -வேத அப்ராமாண்யத்தை உபபாதித்து –-வைதிக ருசியை குலைக்கைகாக – யதாஹி சோரஸ் சத்தாஹி புத்த – அயோத்யா -109-33-என்கிற படியே
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் –திருவாய் -5-10-4-என்னும் படி பரிக்ரஹித்த புத்த முனியான விக்ரஹமும் –

எம்மா வுருவும்‌ வேண்டு மாற்றாலாவா யெழிலேறே”’ (திருவா. 5 – 8 – 2) “எவ் வுருவும்‌ மாவுரு’ என்று அவன்‌ பரிக்‌ரஹித்த விக்‌ரஹமெல்லாம்‌ அப்ராக்ருதமா யிருக்குமென்றும்‌, “இச்சா க்‌ருஹீதாபி மதோருதேஹா “” (வி.பு. 6 – 7 – 84) என்று இச்சையாலே பரிக்‌ருஹீதமா யிருக்குமென்றும்‌ சொல்லுகிற விக்‌ரஹங்களில் வைத்துக்கொண்டு “கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும்‌”” (திருவா. 3 – 10 – 4) என்று, “யாதா ஹி சோரஸ்ஸ ததா ஹி புத்தா (ரா. ஆ. 109 – 73) என்று வேதத்துக்கு அப்ராமாண்யம்‌ சொல்லுகிற புத்‌த முனியான விக்‌ரஹமும்‌,

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2—எ உரு -மா உரு –எவ்வுரு கொண்டால் ஆர்த்த ரக்ஷணம் தலைக் கட்டும்-அவ்வுருவைக் கொள்ளும் -அது தான் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமாய் இருக்கை-இச்சையால் என்னுதல்ஆஸ்ரிதற்கு ஈடாக என்னுதல்-நித்ய ஸூ ரிகள் நடு இருப்பில் காட்டில் ஆஸ்ரித கார்யம் செய்யப் பெறுகையாலே நிரதிசய தீப்தி உக்தனாய் மேனாணித்து இருக்கை –பல் பிறப்பாய் ஓளி வரு முழு நலம்

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-யதா ஹி சோரஸ் சததா ஹி புத்த -என்கிறபடியே க்ரித்ரிம வேஷத்தை கொண்டு – வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய-என்று வேதார்த்த தத்வ ஞானனானவன் வேத அபிராமாணிக வாதிகள் வேஷத்தை கொள்ளுகை-பாகத்தாலும் அழகிய சந்நிவேசத்தாலும் சென்று புக்க போதே ஆப்தன் என்று விஸ்வஸிக்கும் படி புக்க படியும்
வைதிக ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையோபாதி யாக்கப் புகுகிறவன் ஆகையாலே -பசும் புல்லுச் சாவ மிதியாதே கூசி யடியிட்டுப் புக்க படி

பகவத் ஸ்வரூபாதிகளை யாதாவாக பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்த வேதத்தில் –
ந ஸ்மர்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்கிற படியே-ஸ்மரிக்கவும் ஆகாத படி மல அம்சமான –மானிடம் பாடல் என்னாவது–திருவாய் -3-9-3 -என்கிற படி ஷேத்ரஜ்ஞரை பிரசம்சிக்கிற வாக்யங்களும் —

(திருந்து வேதம்‌) ஸகல ஸப்‌தங்களும்‌ ஸத்‌வாரகமாகவும்‌, அத்‌வாரகமாகவும்‌ ஸர்வேஸ்வரனை ப்ரதி பாதிக்கையாலே கட்டளைப் பட்ட வேதத்தில்‌ (மலமான மானிடம்‌ பாடல்‌) *’ஓர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” (திருவா. 3 – 9 – 3) என்றும்‌, “ந ஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ:? ! காவ்யாலாபோபி ஜப்யோஸெள யத்ர ஸங்கீர்த்ய தேச்யுதா ” என்றும்‌ சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை ப்ரஸம்ஸிக்கிற வாக்யங்களும்‌,-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3—நின்ற நிலையும் அழியும்படி பார்த்து த்ருஷ்டத்தில் ஸ்வரூப ஹானி -அத்ருஷ்டத்தில் நரகம் அறிவுக்கு பிரயோஜனம் மேல் மேல் என உயர்ந்த தேடுகை அன்றோ –ஷூ த்ர மனுஷ்யரை கவி பாடுகிறது ஏதுக்காக–பகவத் சேஷ பூதராய் இருக்கிற உங்கள் ஸ்வரூபத்துக்கு சேர்ந்ததோ -உங்கள் கவிக்கு சேர்ந்ததோ-பாட்டு உண்கிறவனுக்கு ஒரு நன்மை உண்டாகவோ –

ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதஸ் ஸ்ம்ருதா சர்வ வர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜனார்தனா –பாரதம் ஆஸ்வ -118-32-என்று எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் சூத்ரத்வம் ஆகிற –-பிரமேயத்திலும் -பிரமாணத்திலும் -பிரமாதாக்களிலும் உண்டான த்யாஜ்ய அம்சங்களும்-

(ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌) “ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா? | ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா யே ஹ்ய பக்தா ஜநார்த்தநே” என்று பகவத்‌ பக்தனல்லாதவன்‌ எல்லா வர்ணங்களிலும்‌ ஸூத்‌ரனென்றும்‌, ப்ரமாண-ப்ரமேய -ப்ரமாதாக்கள்‌ மூவரிலும்‌ த்யாஜ்யரையும்‌ சொல்லி இனி மேல்‌ உபாதேயரையும்‌ சொல்லுகிறது-

காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் -நாச்சியார் -12-8-என்று ஊர் மனையில் வஸியாமல் – பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வர்திக்கையாலே –-காடு வாழ் சாதி -என்கிற கோப ஜாதியில் சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கிற ஸ்ரீ கிருஷ்ணன் உடைய –காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணர் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் -3-3-1–என்று தாம் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டும் படி பசு மேய்த்து வருகிற போதை அலங்காரத்தோடு கூடி இருக்கிற விக்கிரஹமும்-

(காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன் வேடம்‌] ““கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்‌ பெற்றான்‌ காடு வாழ்‌ சாதியுமாகப் பெற்றான்‌”” (நா.திரு. 12 – 8) என்று கோபாலனாய்க்‌ கொண்டு காட்டிலே பசுக்களின் பின்னே ”கறையினார்‌” (திருவா. ச – 8 – 4) என்னும் படி பேணாதே திரியச் செய்தேயும்‌ ‘‘கடல் வண்ணன்‌ வேடத்தை வந்து காணீர்‌”” (பெரியா… 3 – 3 – 1) என்னும்படி பிறர்க்கும்‌ அழைத்துக் காட்ட வேண்டும்படி த்ரஷ்டவ்யமான க்ருஷ்ண லிக்ரஹமும்‌,

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-என்கிறபடியே-(தெய்வத்தை காட்டிலும் ஐந்தாம் வேற்றுமை -அதை விட / இரண்டாம் வேற்றுமை அங்கேயும் –டியோ டியோ -சொல்லி -பசு மேய்க்கும் மந்த்ரம் என்பான் -ஹாவு ஹாவு சொல்வது போலே )அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16–இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி-அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4—கறை மிக்கு துவரூட்டின -சிவந்த தோலாயிற்று –உடுக்கை -இடையர் காட்டிலே போனால் முன் கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது – துவர் என்னைச் செய்தே-கறையினார் என்கிறது -காட்டில் பழங்களை அறுத்து இடுகையாலே கறை மிக்கு இருக்கை

சீசீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- காலி –என்கிற இது –
ஜாதிப் பேர் ஆகையாலே இவ்விடத்தில் கன்றுகளைச் சொல்லுகிறது – கன்றுகளை வயிறு நிறைய மேய்த்து – அவற்றை முன் நடக்க விட்டு – தான் பின்னே வாரா நிற்க –கடல் போன்ற நிறத்தை உடையவனுடைய அலங்காரத்தை வந்து காணும் கோள்

தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திரு மடல் -6-என்கிற படி தஷிண திக் வர்தியானது கொண்டு – தென்னுரை என்று சொல்லப் படுகிற திராவிட பாஷை யான பிரபந்தங்களில் –
ஹரி கீர்த்திம் வினை வான்யத் ப்ராஹ்மணோ நரோத்தம பாஷா காநம் ந கர்த்தவ்யம் -காதவ்யம்-
தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்
–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் – இத்யாதிப் படியே பகவத் பிரதிபாதாக மானவையும்-

(தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி) த்‌ராவிட பாஷா பரிகல்பிதமான ப்ரபந்தங்களில்‌ வைத்துக் கொண்டு *ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத் ‘ ” (மாத்ஸ்யே) இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதக மானவையும்‌ –

மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
மன்னும் வட நெறியே வேண்டினோம் –மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங் காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர்.-அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர்.-காதல் கடல்போல் வளர்ந்து கிடந்தாலும் அபவாதத்துக் ஆஸ்பதமான மடலூர்தல் பெண்டுகளுக்கு கூடாதென்பது தமிழர்களின் கொள்கையாயிருந்தாலும் அதனை நான் உசிதமாகக் கொள்ளேனென்கிறார் ஆழ்வார்.-மடலூர்வதற்குக் காமத்தின் மிகையே அதிகாரமாதலால் அப்படிப்பட்ட காம்முள்ளவர்கள் ஆணாயிருந்தாலென்? பெண்ணாயிருந்தாலென்? யாரேனும் மடலூரலாம், ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசராணைக்குக் கட்டுப்படுமோ ஆசை, வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை,-அளவு கடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான் மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்பு கட்டுவதானது ப்ரேமத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதாக –என்கிற படி ஸ்வபசரில்-பெறற்கு அரிய நின் பாத பத்தி யான பாசனம் –திருச்சந்த -100–என்று ஸ்வ யத்னத்தாலே,-பெறற்கு அரிதாய் உள்ள பகவத் பாத கமல பக்தி ஆகிற தனம் உடையார்களும் ஆகிற –பிரேமயாதி த்ரயத்திலும் உபாதேய அம்சங்களும் ஆன இவ் விபாகம் அறிவார் –நீரார் முகில் வண்ணன் பேரார் ஓதுவார் ஆரார் அமரர்—திருவாய் -10-5-8-என்கிற படியே – ஏதேனும் ஜென்ம வருத்தங்களை உடையேரே ஆகிலும் -ஸூரி சமர் என்னும் படி ஸ்லாக்க்கியராய் –இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –திருவாய் -3-8-11-என்கிற படியே
அத்யுஜ்வலமான பரம பதத்தை ப்ராபிக்க —

(ஸ்வபசரில்‌) ஸ்வபரோபி மஹீபால் விஷ்ணு பக்தோ த்விஜாதி க” (பாஞ்ச. என்று ஸ்வபாகரே யாகிலும்‌, (பத்தி பாசனமுமறிவார்‌) “பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌” (திருச்ச, விரு. 100) என்று சொல்லுகிறபடியே ஸ்வ யத்நத்தாலே பெறுதற்கரிதான பகவச் சரணார விந்தங்களில்‌ பக்தியைத்‌ தங்களுக்கு தநம்‌ என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண -ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றும்‌ -உத்க்ருஷ்ட தமம்‌ என்றும்‌ சொல்லி இந்த உத்க்ருஷ்ட -தமமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள் வைபவத்தை (ஆராரமாரென்ன) “நீரார்‌ முகில் வண்ணன்‌ பேராரோதுவார்‌ ஆராரமரரே”” (திருவா. 10 – 5 – 8) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை அநுஸந்திக்க வல்லவர்கள்‌ ஏதேனுமொரு ஐந்ம வ்ருத்தங்களை உடையரே யாகிலும்‌ அவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌ என்றும்‌, (ஏற) ”இலங்குவான்‌ யாவரூமேறுவர்‌ சொன்னாலே”” (திருவா. 3 – 8 – 11) என்று பகவத விஷயத்தில்‌ அந்வயித்தவர்கள்‌ ஆரேனுமாகிலும்‌ தேஸ விஸேஷ ப்ராப்தி பண்ணுவர்கள்‌ என்றும்‌

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-பெருதருக்கு அரிய உன் திருவடிகளை விஷயமாக உடைத்தான பரம பக்தி யாகிற பாஜனத்தை-ப்ராப்யன் ஆனவனை காட்டில் தத் விஷய பக்தி துர்லபம் இறே–யா ப்ரீதி ரவிவேகா நாம் -என்றும் – முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா -என்றும் –
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி -என்றும் சொல்லக் கடவது இறே-பாசனம் -மரக்கலம்-அத்தாலே தனத்தை லஷிக்கிறது -தனமாய தானே கைகூடும் -என்னக் கடவது இறே-யாமேவை ஷவ்ர்ணு தேதே நலப்யே -என்றும் –ஹ்ர்தாம நீ ஷா மனஸா பிக்ல்ப்த –என்றும் –
வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் பெறுகைக்கு சாதனமான பக்தியை உபதேசித்து-வைத்தது இறே -அந்த பக்தியை –பெறற்கு அரிய மாயனே –உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-சித்தியாத ஆச்சர்ய பூதனே –லோகத்திலே சாத்யங்களுக்கு  எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே-எனக்கு நல்க வேண்டுமே – பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை  அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும் பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் – அநந்ய ப்ரயோஜனனாய் – அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே
–10-5-8–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இ றே உபதேசிக்க வேண்டுவது – பேர் ஆர் ஓதுவார் -அவன் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர்-ஆரார் அமரரே–அவர்கள் ஏதேனும் ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் அவர்கள் இருந்த படியே நித்ய ஸூரிகளோடு ஒப்பர்கள்--இத்தால் ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக அவர்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது-இதில் சொன்ன பெரு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல் அத்விதீயமான இப்பத்தை சொன்னால் இன்னார் இனையார் என்னாதே பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை உடைய பரமபதத்தை பிராபிக்க பெறுவர் 

இப் பிரேமயாதி த்ரயத்திலும் ,கீழ் சொன்ன வாசி அறியாதாராய் கொண்டு -பாகவத ஜென்ம நிரூபணம் பண்ணுவார் –அமர வோரங்க மாறும்—திருமாலை -43-என்கிற பாட்டில் சாங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்க்களுமாய் இருந்தார் ஆகிலும் தேவரீர் திரு அடிகளின் சம்பத்- ஏக நிரூபணியரான ஸ்ரீ வைஷ்ணவர்களை – ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பர் ஆகில் காலாந்திர தேசாந்தர அன்றிக்கே அப்போதே அவ்விடம் தன்னிலே அவர்கள் தங்கள் சண்டாளர்கள் ஆவர்கள் என்கிற படி உத்க்ருஷ்ட ஜென்மாக்களே ஆகிலும் கர்ம சண்டாளராய் இனி ஒரு காலமும் கரை ஏற யோக்யதை இல்லை என்னும் படி அதபதிப்பர்கள் என்கை-அநாசாரான் துராசாரான் அஜ்ஞாத்ரூந் ஹீன ஜென்மன மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்–ப்ரஹ்மாண்ட புராணம் -என்னக் கடவதிறே-

இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச்‌ சொல்லா நிற்க (அறியதார்‌) ஜந்மாதிகளால்‌ வந்த அஹங்காரத்தாலே மந்த மதிகளாய்க் கொண்டு அவர்கள் வைபவத்தை அறியாதே ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ (சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌) ‘அமரவோரங்கமாறும்‌”’ (திருமாலை 43) என்கிற பாட்டின் படியே ““அநாசாராந்‌ துராசாராந் அஜ்ஞாத்ரூதந் ஹீந ஜந்மந? । மத்‌ பக்தாந்‌ ஸ்ரோத்ரியோ நிந்தந்‌ ஸத்‌யஸ் சண்டாளதாம்‌ வ்ரஜேத்‌”” என்றும்‌ சொல்லுகிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மத்திலே பிறந்து அங்க ஸஹிதமான நாலு வேதங்களையும்‌ அதிகரித்து பகவத்‌ பக்தரா யிருந்தார்களே யாகிலும்‌ ஜந்மாதிகளால்‌ குறைய நின்று பகவதீயரா யிருப்பாருடைய ஜந்மத்தை காதா சித்கமாக வாகிலும்‌ நிரூபித்‌தார்களாகில்‌ அந் நிலையிலே அவர்கள்‌ சண்டாளராவர்‌ என்கையாலே பின்னை ஒரு காலும்‌ உஜ்ஜிவந மில்லாதபடி அத, பதிப்பர்க ளென்கிறார்‌. “ஸூத்‌ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ நிஷாதம்‌ ஸ்வபசம்‌ ததா | ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத்‌ ஸ யாதி நரகம்‌ நர- என்றும்‌, “ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம்‌ நைஷாம்‌ சிந்த்யம்‌ குலாதிகம்‌” என்றும்‌ சொல்லா நின்றதிறே –

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43-அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால் லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை – சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –ஜாதி சண்டாளனுக்கு ஒரு காலத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு – இவன் உயர வேறித் தானே விழுந்தவன் ஆகையாலும் பாகவத அபசாரம் ஆகிற மகா பாபத்தை பண்ணினவன் ஆகையாலும் அவனிலும் தண்ணியன் கர்ம சண்டாளன் இறே –பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போலே
இழக்கைக்கும் அபசாரமே அமையும்

ஆக
சூரணை 75–வீட்டின்ப இத்யாதி வாக்கியம் தொடங்கி, சூரணை -84 -நிமக்னரை உயர்த்த தாழ இழிந்த்தார் -என்னும் அளவும் -ஆழ்வாருடைய வைபவத்தை பிரதிபாதித்து – தத் ஸ்தாபன அர்த்தமாக -மிலேசனும் பக்தன் ஆனால் -என்று தொடங்கி – மேல் எல்லாம் சாமான்யேன பாகவத வைபவத்தை விஸ்தரேண பிரகாசிப்பித்தது -உபக்ரம வாக்கியத்தில் போலே – பிரமாண பிரமேயங்கள் உடனே சேர்த்து பிரமாத்ரு வைபவத்தை நிகமித்தார் ஆய்த்து –

இப்படி பாகவத சாமான்ய ப்ரயுக்த வைபவம் மாதரம் அன்றிக்கே ,-ஜனக தசரத -சூரணை -82 -இத்யாதி வாக்கியம் தொடக்கமாக மூன்று வாக்யத்தாலே -கீழ் சொன்ன வைபவ விசேஷதய உதகமான பிரமாணம் ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் மேல் –இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம்‌ வ்யாஸ ஸூகாதி களாலும்‌ ப்ரகாஸிப்பிக்கப்‌ பட்ட தென்கிறார்‌ மேல்‌.-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-சூரணை-91-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே–-அதாவது-தஷிண திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மண –குருகா மஹாத்ம்யம் –என்று – வண் தமிழ் மா முனி –என்கிற படியே -திராவிட சாஸ்திர பிரவர்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு சர்வருக்கும் புகல் இடம் என்றே மக ரிஷிகளால் –
இப்போது இது சொல்லிற்று – வைதிகரான ருஷிகள்-திராவிட பிரபந்த வக்தாவான இவரை இப்படி
பஹுமதி பண்ணி சொல்லக் கூடுமோ என்று சங்கிப்பார்க்கு ஒரு திராவிட ஜ்ஞானாலே தஷிண திக்குக்கு நன்மை சொன்னவர்கள் திராவிட பிரபந்த முகேன – லோஹ உஜ்ஜீவகரரான இவரையும் இப்படி பஹுமானம் பண்ணிச் சொல்லக் குறை இல்லை என்று தோற்றுகைக்காக –க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் —அதாவது –
க்ருதா திஷு நரா ராஜன் கலா விச்சந்தி சம்பவம் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயணா பராயணா
க்வசித் க்வசின் மஹா ராஜ த்ராவிடேஷு ச பூரிச
தாமரபரணி நதி யத்ர கிருதமாலா பயஸ்விநீ
காவேரீச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதி
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர-
தேஷாம் நாராயண பக்திர் பூயஸீ நிருபத்ரவா
–ஸ்ரீ பாகவதம் -11-5-38 /39–என்று
ஜ்ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைத் தத்தம் நதீ விசேஷங்களாலே பிரகாசிப்பித்தது அந்த நதி விசேஷ ஜலத்தை பானம் பண்ணுகிறவர்களுக்கு பகவத் பக்தி அதிசயிக்கும் படியையும் சொல்லுகிற அளவில் – பிரதமத்தில் –தாமர பரணி நதீ எத்ர – என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே – இவ் ஆழ்வார் உடைய ஆவிர்பாவமானது –கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் -5-2-1-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
திரு மங்கை ஆழ்வார் உடையவர் போல்வார் அவதரித்து -கலி யுக ஸ்வாபம் கழியும் என்றும் –
மேல் வரும் அம்சத்தை தர்சித்து அருளி செய்தாற் போலே – திரிகால ஜ்ஞரான ஸ்ரீ ஸூகாதிகளால் ஸூசிக்கப் பட்டது
என்கை–க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீக்ருதே விஷ்ணோர் அம்சாம்ச சம்பூதே வேத வேதார்த்த தத்வ வித் ஸ்தோத்ரம் வேத மயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா
ஜனிஷ்யதி சதாம் ஸ்ரேஷ்டா லோகானாம் ஹிதகாம்யயா –குருகா மஹாத்ம்யம்
-இத்யாதி
வசனங்களும் இவர் ஆவிர்பாவ ஸூசகங்கள் ஆகையால் இவ் இடத்தில் விவஷிதங்கள் –கேவல ஜன்ம வாசக சப்தங்கள் ஒன்றை சொல்லாதே அவதார சப்த பரியாயமான ஆவிர்பாவ சப்தம் சொல்லிற்று
இவர் பிறப்பும் ஈஸ்வரன் பிறப்போபாதி பரார்த்தம் என்று தோற்றுகைக்காக – இத்தால் இவர் ஒரு அவதார விசேஷம் என்றது ஆயிற்று –

“வண்டமிழ்‌ மாமுனி”’ (பெருமா.தி. 10 – 5) தக்ஷிணாதிக்‌ க்ருதா யேந ஸரண்யா புண்ய கர்மணா”’ (குருகா மாஹாத்ம்யம்‌) என்று த்ராவிட ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யன்‌ நின்ற திக்கு ஸர்வர்க்கும்‌ புகலிடம்‌ என்ற வ்யாஸ ஸூகாதிகளாலே (க்வசித்‌ க்வசித்‌ என்று இவர்‌ ஆவிர்பாவம்‌) *’கலெள கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் கவசிந் மஹா பாகா த்‌ராவிடேஷு ச பூயாஸ ? தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ । காவேரி ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹாநதீ, । யே பிபந்தி ஜலம்‌ தாஸாம்‌ மநுஜா மநுஜேஸ்வர ! தேஷாம்‌ நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்‌ரவா”’ (வி.பு.) என்றும்‌,
“க்ரூரே கலியுகே, ப்ராப்தே நாஸ்திகைச கலுஷீக்ருதே ॥ விஷ்ணோரம்ஸாம் ஸ ஸம்பூதோ வேத வேதார்த்த ஸாரவித்‌ | ஸ்தோத்ரம்‌ வேத மயம்‌ கர்த்தும்‌ த்‌ராவிட்‌யா ஸ ச பாஷயா ஜநிஷ்யதி ஸதாம்‌ ஸ்ரேஷ்டோ லோகாநாம்‌ ஹித காம்யயா ! கஸ்சிந் மநுஷ்ய ரூபேண க்ருபயா தத்ர வை முநி? । ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம்‌ பரமாத்மநா அத்‌ யேதவ்யம்‌ த்‌விஜஸ் ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ ! ஸ்த்ரீபிஸ் , ஸூத்‌ரா திபிஸ் சைவ தேஷாம்‌ முக்தி? கரே ஸ்திதா’” (குருகாமா.) என்றும்‌, ““கலெள புந பாபரதாபி பூதே ஸ உத்‌ பபூ வாஸ்ரித வத்ஸலத்வாத்‌ ! பக்தாத்மநா ஸர்வ ஜநாந்‌ ஸு கோப்தும்‌ விஸ்வாதி கோ விஸ்வ மயோ ஹி விஷ்ணு?” என்றும்‌ இவ் வாழ்வாருடைய ஆவிர்பாவம்‌ கர்ம மூலமன்றிக்கே பகவதவதாரம் போலே ஜகத்‌ ரக்ஷணார்த்தமாக பகவதிச்சையாலே உண்டான தாகையாலே ஆவிர்பாவம்‌ என்கிறது –அந்த ஆவிர்பாவம் ““கலியும்‌ கெடும்‌”” (திருவா. 5 – 2 – 1) என்று இவர் தாம்‌ திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ வந்துதித்து கலியுக, ஸ்வபாவம்‌ கெடும்‌ என்று அருளிச் செய்தாப் போலே அவர்களாலே ஸசிப்பிக்கப்பட்ட தென்கிறார் –

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1—கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –-சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா விறே – கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை-அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இறே -அதுவும் இல்லை இறே இவர்களுக்கு -அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று-பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை – அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில்‌ ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்‌தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்‌ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள்‌ என்கிறார்‌-

அத்ரி ஜமதக்னி பங்கிதிரத வஸு நந்த ஸூனுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ ? வ்யாசாதிவத் ஆவேசமோ ? மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ? முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ? என்று சங்கிப்பார்கள் –சூரணை -92-

(அத்ரி ஸூனு -தத்தாத்திரேயன் -அந்தணர் -கிருதயுகம் -ஜமதக்கினி ஸூனு -பரசு ராமன் -த்ரேதா யுகம் – பங்கிதிரத ஸூனு -சக்கரவர்த்தி திருமகன் -த்ரேதா யுகம் -க்ஷத்ரியர் -பங்க்தி -தச-வஸூ நந்த ஸூனு -துவாபர யுகம்-வைசிய குலம் -மூத்தவர் -நித்ய ஸூரிகள் -கரை கண்டோர் -முக்தர் -சீரியர் -ஸ்வேதத் தீவு வாசிகள் )அதாவது-கிருத யுகத்தில் அத்ரியும் ஜமதக்னியும் ஆகிய ப்ராஹ்மண உத்தமர்களுக்கு
பிள்ளையாய்க் கொண்டு -தத்தாரேயனும் பரசு ராமனுமாய் – த்ரேதா யுகத்தில் ஷத்ரியனானான தசரத சக்கரவர்த்திக்குப் பிள்ளையாய் – த்வாபர யுகத்தில் யயாதி சாபத்தாலே அபிஷேக பிராப்தி அற்ற யது குலோத்பவர் ஆகையாலே ஷத்ரியரில் தண்ணியராய் -வைஸ்ய பிராயராய் இருக்கிற வஸு தேவருக்கும் – கிருஷி கோரஷ வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வ பாவஜம்–ஸ்ரீ கீதை -18-44- –
( பயிர் செய்தல் -பசுக்களைக் காத்தல் -வாணிகம் இவை வைச்யனுக்கு இயல்பான தொழில்கள் ) என்கிற படி – கோ ரஷணாதி தர்மத்தை உடைய சாஷாத் வைச்யரான ஸ்ரீ நந்தகோபர்க்கும் புத்ரனாய்-
இப்படி கிருதாதி யுக தர்மத்தில் ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த
சர்வேஸ்வரன் சதுர்தமான கலி யுகத்தில் சதுர்த்த வர்ணத்திலே வந்து அவதரித்த படியோ என்கை –பூர்வ யுக த்ரயத்திலும் -அடைவே வர்ண த்ரயத்திலும் -அவதரித்து வருகையாலும்
கலவ் புன :பாபரதா பிபூதே ச உத்ப பூவ ஆஸ்ரித வத்சலத்வாத் பக்தாத்மனா சர்வ ஜனான் ஸூகோப்தும் விச்வாதி கோ விச்வ மயோஹி விஷ்ணு -என்று கலி யுகத்தில் சர்வேஸ்வரன் பக்த ரூபேண அவதரித்தான் என்று ருஷிகள் சொல்லுகையாலும் இவர் வைபவம் கண்டவர்களுக்கு இப்படி சங்கிக்க யோக்யதை உண்டு இறே–வ்யாசாதி வத் ஆவேசமோ -அதாவது –-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5- -என்றும் ,-சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மஹாமுனி–பாரதம் – –என்றும் சொல்லுகிற படி வேதங்களை வ்யசிக்கை முதலான கார்யங்களை நிர்வகிக்கைக்காக வ்யாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே – இவரைக் கொண்டு திராவிட வேதத்தை பிரவர்த்திப்பைக்காக – இவர் பக்கல் ஆவேசித்தானானோ என்கை-இவரைக் கொண்டு லோகத்தை திருத்துகைக்காக இவர் பக்கலிலே –ஆவேசித்து நிற்கவும் கூடும் ஆகையாலே
இப்படியும் சங்கிக்கலாம் இறே–மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ-அதாவது – விண்ணாட்டவர் மூதுவர்–திருவிருத்தம் -2- -என்று பரம பதத்துக்கு நிலத் தாளிகளான
நித்ய ஸூரிகளிலே இவ் விபூதியை திருத்துகைக்காக ஈஸ்வர ந்யோகத்தாலே அவதரித்தார் ஒருவரோ ?-அன்றிக்கே –கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்–திருவாய் -8-3-10- -என்று சம்சாரத்தை கடந்து அக்கரைப் பட்டு இருக்கும் முக்தரில் சம்சாரிகளைத் திருத்துகைக்காக பகவத் நிதேசத்தால் ,அவதரித்தார் ஒருவரோ ?அன்றிக்கே –முக்தானாம் லஷணம் ஹ்யதேத் ஸ்வேத த்வீபநி வாசினாம் –பாரதம் -சாந்தி பர்வம் – என்கிற படியே-முக்த ப்ராயராய் –பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் –79-என்கிற ஸ்வேத தீப வாசிகளிலே இவ் அருகு உள்ளாரை திருத்துகைக்காக ஈஸ்வர இச்சையாலே அவதரித்தார் ஒருவரோ என்கை -இவருடைய வைபவம் பார்த்தால் ,எல்லார் படியும் சொல்லலாம் படி இருக்கையாலே – இப்படியும் தனித் தனியே சங்கிப்பார்க்கு சங்கிக்கலாம் இறே —பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் —என்கிற படியே பிராட்டிமாரோடு சேர்த்து பார்க்கும் போதும் -தனித் தனியே சங்கிக்கலாம் படி இறே இருப்பது — மற்று உள்ள ததீயர் உடன் பின்னை சொல்ல வேண்டா இறேமுன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ –(முன்னம் நோற்ற புண்ணியங்கள் பலித்தவரோ -என்றும் –அநந்தன் மேல் புண்ணியம் பலித்தவரோ -என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் )அதாவது –கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அன்றிக்கே சம்சாரிகள் தன்னிலே –
முன்னம் நோற்ற விதி கொலோ —திருவாய் -6-5-7-என்கிறபடியே ஜன்மாந்திர சகஸ்ர சஞ்சிதமான
தன்னுடைய ஸூஹ்ருத பலமாக கொண்டு இப்படி திருந்தினார் ஒருவரோ ?
அன்றிக்கே –அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -திருச்சந்த -45-என்று நிர்ஹேதுக கடாஷ விசேஷத்தாலே – நித்ய சம்சாரியை நித்ய ஸூரி கல்பம் ஆக்க வல்ல அநந்த சாயியான சநாதன புண்யம் – முழு நோக்காகாப் பலித்து இப்படி திருந்தினார் ஒருவரோ சங்கிப்பார்கள் –அதாவது –
இப்படி கீழ் சொன்ன வகைகளால் இவரை இன்னார் என்று நிச்சயிக்க மாட்டாமல் பேரளவு உடையாரும் சங்கியா நிற்ப்பார்கள் என்ற படி –

க்ருத யுகத்திலே அத்ரி ஜமதக்‌நிகள் பக்கலிலே தத்தாத்ரேயராயும்‌, பரஸூராமனாயும்‌-த்ரேதா யுகத்திலே ஷத்ரியனான தஸரத சக்ரவர்த்தி பக்கலிலே வந்தவதரித்தும்‌-த்‌வாபர- யுகத்திலே க்ஷத்ரியரில்‌ தண்ணியராகையாலே வைஸ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும்‌, ‘“க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம்‌ வைஸ்யம்‌ கர்ம ஸ்வபாவஜம்‌” (கீ. 18 – 44) என்று கோ ரக்ஷண தர்மத்தை உடையராகையாலே வைஸ்யரான ஸ்ரீநந்தகோபர்க்குப்‌ புத்ரராயும்‌, யுக க்ரமத்திலும்‌ அடைவே வர்ண த்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஸ்வரன்‌ கலியுகத்திலே நாலாம்‌ வர்ணத்திலே ஆழ்வாராய்த்‌ திருவவதரித்தானோ என்றும்‌,-““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்தி, நாராயணம்‌ ப்ரபும்‌” (விபு. 3 – 4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதிகள் போல்‌ வந்தவதரித்தானோ ? என்றும்‌, ”கரை கண்டோர்‌”” (திருவா. 8 – 3 – 10)என்று ஸம்ஸாரத்தைக்‌ கரை கண்ட முக்தரிலே ஒருவர்‌ அப்படியே அவதரித்தாரோ? ““பாம்பணை மேல்‌ பன்ளி கொண்டருளும்‌ சீதனையே தொழுவார்‌ விண்ணுளாரிலும்‌ சீரியரே” (திருவிரு. 79) என்றும்‌, .““முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதச்ச்‌ வேத த்‌வீப நிவாஸிநாம்‌?” (பர. ரா. 337 – 40) என்றும்‌ நித்ய முக்தரோடொக்கச்‌ சொல்லலாம்படி இருக்கிற பவேதத்‌,வீபவாஸிகளான ஸித்‌தரிலே ஒருவரோ? “முன்னம்‌ நோற்ற விதி கொலோ” (திருவா. 6 – 5 – 7) என்கிற படியே ஜந்மாந்தர ஸஞ்சிதமான தம்முடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? “அனந்தன்‌ மேல்‌ கிடந்த வெம் புண்ணியா?” (திருச்ச. 45) என்று அநந்தஸாயியான ஸர்வேஸ்வரனுடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? என்று சங்கிப்பர்கள்‌ என்கிறார் –

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்
–18-44-உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-கரை கண்டோர்-முக்தர் –
துளக்கமில்லா வானவர்-முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூ ரிகள் —துளக்கம் –சலனம் -அதாகிறது -சங்கோசம் –எல்லாம் தொழுவார்கள்-முமுஷுக்களும் -முக்தரும் -நித்யசித்தருமான இவர்கள் எல்லாம் அடிமை செய்கிறவர்கள் -அடிமை செய்கையாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுமது ஆகையால் மங்களா சாசனம் இறே –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே 
– – -79–சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-இதுவே அவதாரிகையில் பார்த்தோம்-நிறுத்தி நிதானமாக அனுபவிக்க வேண்டும்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே – அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்–அநாதனை –ஆத்மேஸ்வரம் –என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –-இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட – அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி-வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப் –திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்-திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூகதம் சொல்லுமே-உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட ஆழ்வார் நித்ய ஸூரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று-

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7—தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இ றே -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –-முன்னம் நோற்ற விதி கொலோ? -முன்னே பண்ணின பாக்ய பலமோ -ஜன்மாந்தர சகஸ்ரரேஷூ -பஹு நாம் ஜென்ம நா மந்தே – முகில் வண்ணன் மாயம் கொலோ?-அதுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது -அழகைக் காட்டிப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களோ -அதில் சம்சயம் இத்தலையாலே சாதித்ததுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது என்று -இதில் சம்சயம் -இதுக்கு முன்பு ஒரு வ்யக்தியில் இப்படி பிறக்கக் காணாமையாலே-

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45—திருவநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளின வடிவு அழகைக் காட்டி தேவரீர் உடைய ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவத்தையும் என்னுடைய அனன்யார்ஹ சேஷத்வத்தையும் எனக்கு உணர்தினவனே –பும்ஸ்த்வம் நயதீதி புண்ய -என்கிறபடியே இவருடைய ஸ்ரூபத்தையும் பிரகாசிப்பிக்கைக்கு உபாயம் ஆனவனே-தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன –இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-இது என்ன ஆச்சர்யம்-என் திறத்தில் நீ செய்து அருளின இவை என்னால் பரிச்சேதிக்கலாய் இருந்தது இல்லை என்கிறார் –

இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே-இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில்‌, இவருடைய ப்ரபாவம்‌ கண்டு என்கிறார்‌ மேல்‌.

இதுக்கு மூலம்-1-யான் நீ என்று மறுதலித்து-2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி-3-நிலையிடம் தெரியாதே-4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக-5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய-6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே-7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து-8-நாட்டியல் ஒழிந்து-9-சடரை ஒட்டி-10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு-11-நடாவிய கூற்றமாய்-12-தீயன மருங்கு வாராமல்-13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி-14-பட்டு எழு போது அறியாது இருந்த
பிரபாவம் இதுக்கு மூலம் –சூரணை -93-

அதாவது-இவரை கண்ட ஞானாதிகர் -இவர் இன்னார் -என்று நிர்ணயிக்க மாட்டாமை –இங்கன் சங்கிகைக்கு ஹேது –
1-யான் நீ என்று மறுதலைத்து-மாறுபட்டு இருந்த பிரபாவம் –-அதாவது –
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்-நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75–என்று தொடங்கி உபய விபூதியும் உன் சங்கல்ப்பத்தில் கிடக்கின்றன – ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரயத்வாரா புகுந்து விச்சேதம் இன்றி என் ஹிருதயத்தில் உளையாகா நின்றாய் –இப்படியான பின்பு விபூதியை உடைய நீயோ விபூதிமானை உடைய நானோ -பெரியார் என்று அறிவார் ஆர் ? அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்து அறிந்து காண் என்று உபய விபூதி யுக்தனோடே மறுதலைக்கிற வைபவத்தை உடையராய்

“’புவியும்‌ இரு விசும்பும்‌ நின்னகத்த, நீ என்‌ செவியின்‌ வழி புகுந்தென்னுள்ளாய்‌, அவிவின்றி யான்‌ பெரியன்‌ நீ பெரியை என்பதனை யாரறிவார்‌, ஊன் பருகு நேமியாய்‌ உள்ளு”” (பெரிய திரு. 75) என்று – உபய விபூ,தியையும்‌ உன்‌ ஸங்கல்பைக தேஸத்திலே வைத்து என்‌ ஸ்ரவண த்‌வாரா நெஞ்சிலே புகுந்து விச்சேதமின்றியிலே நித்ய வாஸம்‌ பண்ணா நின்ற பின்பு, நானோ, நீயோ பெரியாய்‌? ஆரென்று ஸர்வாதிகனான நீயே விசாரி – என்று ஸர்வேஸ்வரனோடே விகல்பிக்கலாம் படியாய்‌

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு
–75–உபய விபூதியும் உன் ஸங்கல்பத்திலே கிடக்கின்றன-உபய விபூதி யுக்தனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரியத்தை வழியே புகுந்து விச்சேதம் இன்றிக்கே என் ஹ்ருதயத்திலே உளையாகா நின்றாய்-உபய விபூதியை யுடைய நீயோ-விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு-சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி–(விஸ்வம் பர பரா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை
இப்பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார் )

2-வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி இருந்த பிரபாவம் –( வானத்து நிகரும் இன்றி -மண்மிசை மாறும் இன்றி -என்று தனித்தனியே கொண்டு பொருள் )-அதாவது –தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்-வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
அவனுடைய விபூதி யோகத்துக்கும் ஸுகுமார்யத்துக்கும் தகுதி யாம்படி யாகவும் – சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய் ஒன்றுக்கும் விக்ருதம் ஆகாதவன் தம்முடைய உக்தி ஸ்ரவண ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தெகிடாகும் படியாகவும் திரு வாய் மொழி பாடுகிற நாவீறு உடைமையாலே –
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய்-3-நிலை இடம் தெரியாதே இருந்த பிரபாவம்
-அதாவது – கலவியும் பிரிவும் கலசி நடக்கையாலே -கல்வியால் வந்த ரசமேயாக செல்லும் அங்குள்ளார் படியும் அன்றிக்கே – பகவத் குணைக தாரகதையால் அன்ன பானாதிகளால் தரிக்கும் இங்குள்ளார் படியும் அன்றிக்கே – இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் –-வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்-திருவிருத்தம் -75- என்று வாசஸ்தலம் தெரியாத படியாய் –

(வானத்து மண்மிசை மாறும்‌ நிகருமின்றி) ““இனி யாவர்‌ நிகரகல் வானத்தே’” (திருவா. 4 5 – 8) என்றும்‌, ““மாறுளதோ இம் மண்ணின் மிசையே”’ (திருவா. 6 – 4 – 9) என்றும்‌ ‘ உபய விபூதி யிலும்‌ எனக்கு ஸத்‌ருஸருண்டோ என்னும்படி த தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையராய்‌ (நிலையிடம்‌ தெரியாதே) ““வைகுந்தமோ வையமோ நும்‌ நிலையிடம்‌”” (திருவிரு -75) என்று – இந்த விபூதிஸ்தரோ? நித்யவிபூதிஸ்தரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உபய விபூ,தியிலும்‌ வ்யாவ்ருத்தராய்‌,

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
–அநாதி அஞ்ஞானாதி சம்சாரக்கத்தாலே நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் – பூவில் பிறப்பால் வந்த போக்யதையாலும் ஆத்ம குண பூர்த்தியாலும் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பிராட்டிக்கும் தன் போக்யதா அதிசயத்தாலே ஆனந்த ஜனகனனாய்–இவ்விரண்டு ஆகாரத்துக்கும் உப பாதகமாய் அவிசேஷஞ்ஞரான லீலா விபூதியில் உள்ளாரோடு -விசேஷஞ்ஞரான பரமபத வாசிகளோடு வாசியற நிருபாதிகமான சர்வ சேஷித்வத்தை யுடையனாய் இந்த போக்யதைக்கும் மேன்மைக்கும் மேலே ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்யாதி குணங்களுக்குத் தோற்று-செவ்வியையுடைய தாமரை சுமக்கும்படியான திருவடிகளை யுடையனான சர்வாதிகனை இவ்வாகார அநு சந்தானத்தாலே உடை குலைப்படாதே-சப்த சந்தர்ப்பங்களை சொல்லும்படியாக என்னை அமைத்து தரிக்க வல்ல எனக்கு-அதி விஸ்தீரணையான த்ரிபாத் விபூதியில் அதிகார ஆகாரராய் அனுபவிக்கிறவர்கள் ஆர் தான் இனி ஒப்பார் –இந்தளத்திலே தாமரை போலே இருள் தரும் மா ஞாலத்தில் அனுபவிப்பார்க்கு தெளி விசும்பில் அனுபவிப்பார் சத்ருசர் அல்லர்கள் என்று கருத்து –

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-–ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும் நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ-ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
-75 –-இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற – இந் நீர்மைக்குத் தோற்று இருக்கிற நித்ய ஸூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டமோ-அன்றிக்கே – மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் – காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ – உங்களுடைய வாஸ ஸ்தானம் –வானவர் நாடு -என்கிறபடியே – அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி – பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –பிள்ளை திரு நறையூர் அரையர் – அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –

4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக இருந்த பிரபாவம் –அதாவது –தெய்வத்தினம் ஓர் அனை யீர்களாய்-திருவிருத்தம்-23-என்று ஒருவர் இருவர் அன்றிக்கே –நித்ய ஸூரிகள் எல்லாரும் கூடினாலும்
தமக்கு ஒருவகைக்கு ஒப்பாம் படியாய் —

(தெய்வத்தினம்‌ ஒருவகைக் கொப்டாக) “*தெய்வத்தினமோரனையீர்களாய்‌” (திருவிரு. 23) என்று நித்யஸூரிகளெல்லாரும்‌ கூடினாலும்‌ தம்முடைய ஒருவகைக் கொப்பாக உடையராய்‌,

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
 –23-தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,– ஆழ்வார் ஒருவர் எழுந்து அருளி இருக்கும் இருப்பு நித்ய ஸூரிகள் திரள இருந்தால் போல் இருக்கிறதே என்றவாறு -திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீராய் இருக்கை -நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீர்களாய் இருக்கிறீகோளே–இவையோ நும் இயல்வுகளே -பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று தன் குறையற யுரைத்தானாயிற்று-ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய் ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே-உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்–புனம் -இவர்கள் இருக்கும் தேசம்-யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று-

5-இனத் தலைவன் அம் தாமத்து அன்பு செய்ய இருந்த பிரபாவம் –அதாவது – வானோர் இனத் தலைவன் கண்ணன் -பெரிய திருவந்தாதி -25-என்று-அந்த நித்ய ஸூரி சங்க நிர்வாஹனான சர்வேஸ்வரன் ,-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –திருவாய் -2-5-1–என்று
அழகிய தாமமான பரம பதத்திலே பண்ணும் வியோமோஹத்தை அடைய தம் பக்கலில் பெரு மடை கொள்ளப் பண்ண –

(இனத் தலைவன்‌ இத்யாதி,) ”வானோரினத் தலைவன்‌”’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரி ஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்‌, ““அந்தாமத்தன்பு செய்து”‘ (திருவா. 2 – 5 – 1) என்று விலக்ஷணமான பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத் தன்னை இதர சஜாதீயனாக்கி ஸூலபனான கிருஷ்ணனாலே பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்-எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1–பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே –உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –
அம்மானுக்கு– நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று

6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக இருந்த பிரபாவம் –அதாவது –திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – திருவாய் -8-9-6- என்று மேன்மேலும் அவன் விஷயீகாரங்களை பெற்றமைக்கு -ஸூவ்யக்த லாஞ்சனமான ராகம் வாய் கரையில்- (உதட்டிலே செந்நிறம் -) தோன்றுகை முதலான கலவிக் குறிகள் உண்டாய் செல்ல –7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து இருந்த பிரபாவம் –அதாவது – உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே திருவாய் -6-5-4–என்றும்-திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -திருவாய் -6-5-2-என்றும் அவன் சௌந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து -உத்தரோதரம் விளைகிற பாஹ்யாப்யந்தர ஹர்ஷத்தாலே -சிதிலராவது – ஸ்தப்தோஸ்யுத தமா தேசம ப்ராஷ்ய -சாந்தோக்யம் –(திமிர் கொண்டவனைப் போலே இருக்கின்றாய் அந்தப் பரம் பொருளைக் கேட்டு அறிந்தாயோ )என்கிறபடியே சர்வ நியாமக ,பர ப்ரஹ்ம சாஷாத் காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமித ராவதாய்–

(சேர்ந்தமைக் கடையாளமுளவாக) “திருவருள்களும்‌ சேர்ந்தமைக் கடையாளம்‌ திருந்தவுள”’ (திருவா. 8 – 9 – 6) என்று ஸர்வேஸ்வரனுடைய க்ருபையாலே விஷயீ க்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்சநமான ராகத்தை வாய்க் கரையிலே உடையராய்‌ கேவலம்‌ வாய்க் கரையில்‌ ராக மாத்ர மன்றிக்கே “‘உகந்துகந்துள் மகிழ்ந்து குழையுமே”’ (திருவா. 6 – 5 – 4) என்று பாஹ்யாப் யந்தர ஹர்ஷத்தாலே ஸிதிலராய்‌, “’திமிர கொண்டாலொத்து நிற்கும்‌ ”” (திருவா. 6 – 52) என்று அநுஸந்தா நத்தாலுண்டான ஆதராதிஸயத்தாலே ““ஸ்தப்‌தோஸ்யுத தமாதேஸம ப்ராக்ஷ்ய?”” (சா. 6 – 1 – 3) என்று ஸர்வ நியாமகமான ப்‌ரஹ்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரம்‌ பிறந்தாரைப் போலே ஸ்திமிதராய்‌,

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே–8-9-6–அவன் விஷயீ காரங்களையும் பெற்றமைக்கு அடையாளம் வ்யக்தமாக உள-குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை உபகரிக்கைக்காக -அவன் தானே சென்று பொருந்தும் சிரமஹரமான வூர் /-திருவருள் கமுகு-என்று சில உண்டு -நீரால் வளருமது அன்றிக்கே பிராட்டியும் தானுமாக கடாக்ஷிக்க அதுவே நீராக வளருமவை-ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–ம்ருது ஸ்வ பாவையான இவளுடைய அதரம் செவ்விப் பழம் போலே இரா நின்றது –இவளுடைய அதரம் அவ் வூர்க்காய் யன்றோ இருக்கிறது 

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-
–சொல்லும் சொல் எல்லாம் திரு நாமமே யாய் -இது தன்னிலும் வடிவு அழகுக்கும் ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கும் வாசகமான திரு நாமங்களையே சொல்லா நின்றாள் -கிருஷ்ணன் ஆகில் ஆஸ்ரித பாரதந்தர்யம் பிரசித்தம் இறே -பிரான் -உபகார சீலன் –திருநாமங்களை இடைவிடாதே செல்லா நின்றால்-இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இரா நின்றாள்–ஒற்கம் -ஒல்குதல்-அதாவது ஒடுங்குதல் -இளைப்பு-திரு நாமங்கள் வழியே அவன் அழகையும் குணங்களையும் நினைந்து மேன் மேல் என ப்ரீதையாய்-உண்மகிழ்ந்து குழையுமே.-– அந்தகாரண ப்ரீதி அதிசயத்தாலே ஆஸ்ரயம் அழியா நிற்கும்-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
–திமிர் கொண்டால் போலேயாய் பேசாதே நில்லா நிற்கும் –மற்று இவள் வார்த்தை சொன்னால் தேவர்களான நித்ய ஸூரி களுக்கும் தேவர்களான விஷ்வக் சேனாதிகளுக்கும் தன்னை அநு பதிப்பித்துக் கொண்டு இருக்கிற மஹா உபகாரகன் என்கிற அர்த்த யுக்தி மாத்திரத்திலே-நெளிந்த வாயை யுடையளாய் கண்கள் நீர் மலக்கும்படியாக கட்டுக் குலைந்து தளர்ந்து நீர்ப்பண்டமாகா நின்றால் –-நிமிதல்-நெளிதல்-

8-நாட்டியல் ஒழிந்து இருந்த பிரபாவம் –அதாவது – நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -திருவாய் -10-6-2–என்றும் உண்டியே உடையே உகந்து ஓடி -என்றும்-யானே என் தனதே –திருவாய் -2-9-9–என்றும் அஹங்கார மமகார வச்யராய் இருக்கிற லௌகீகரோடு சம்பந்தம் அற்று –9-சடரை ஒட்டி இருந்த பிரபாவம் –அதாவது –சடகோபர் ஆகையாலே –ஆர்ஷம் ப்ரஹ்ம தர்ம உபதேசம்ச வேத சாஸ்த்ர விரோதினா -மனு தர்ம சாஸ்திரம் -12–106-( வேத சாஸ்திரத்துக்கு மாறுபாடு அல்லாத )என்கிற படி பிராமண அனுகூல்ய தர்கங்களாலே மத்யஸ்தமாக அர்த்தத்தை சாதிக்கை அன்றிக்கே ,
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்ருத்யந்த தாத்பர்யமான ஸ்வோக்தி விசேஷங்களாலே
ஸ்வ சந்நிதானத்தில் நில்லாதபடி துறத்தி –

““நாட்டாரோடியல் வொழிந்து”‘ (திருவா. 10 – 6 – 2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்கத்தை விட்டு (ஸடரையோட்டி) ஸட கோபராகையாலே ப்ரமாணாநு குணமாக தர்க்கம்‌ சொல்லுகை யன்றிக்கே ஸ்வ மநீஷையாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு, ஷூஷ்க தர்க்கங்களாலே அர்த்த ஸ்தாபநம்‌ பண்ண விருக்கிற ஸடரைத்‌ தம்முடைய உக்தி ஸ்ரவண மாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதாநத்தில்‌ நில்லாதபடி பண்ணி,

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2--நாம் அடிமை செய்ய -பிராப்தி பிரதிபந்தகமாய் அநாதி கால ஆர்ஜிதமான அவித்யாதிகள் எல்லாம் போகப் பெற்ற படி கண்டாயே -நாம் அநாதி காலம் கூட ஆர்ஜித்த வற்றை ஒரு சர்வ சக்தி அல்ப காலத்திலேயே போக்கினை படி கண்டாயே –நாட்டாரோடு இயல்வு ஒழிந்து –அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே – நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் –கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்–ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இ றே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இருந்தேன் இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்

10-மதா வலிப்தர்க்கு அங்குசம் இட்டு இருந்த பிரபாவம் –அதாவது – பராங்குசர் ஆகையாலே –வித்யாமதோ தன மதஸ் த்ருதீயோ அபிஜனோ மத ஏதே மதாவலிப்தானாம்- ( வித்யா மதம் செல்வா மதம் குடிப்பிறப்பு மதம் ) என்று மத ஹஸ்தி போலே அபிஜன வித்யாதி மத த்ரயா வலிப்தராய் திரியும் அவர்களுக்கு நிர் மதராய் தலை வணக்கும் படி உபதேச ரூப அங்குசம் இட்டு 

(மதா வலிப்தர்க்கு அங்குஸ மிட்டு) பராங்குஸ ராகையாலே ‘வித்‌யா மதோ தந மத,ஸ்‌த்ருதியோபி ஜநோ மத, | ஏதே மதா வலிப்தாநாம்‌ ஏத ஏவ ஸதாம்‌ தம?”’ என்று அபிஜந வித்‌யா வ்ருத்தங்களாகிற மத,த்ரயங்களினாலே தூஷிதரா யிருக்கிறவர்களை ஸ்வோக்தி ரூபமான அங்குஸங்களாலே நிர்மதராம்படி பண்ணி,

11-நடாவிய கூற்றமாய் இருந்த பிரபாவம் –-அதாவது –பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்–திருவிருத்தம் -6- -என்று வேத வேத்யத்வ த்யோதகமாம்படி வேத மய கருட வாஹனான சர்வேஸ்வரன் விஷயத்தில்- நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்–96-என்று எல்லார்க்கும் பக்தியை உண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம் தர்சனத்தில் அகப் பட்டவர்களின் சம்சாரத்துக்கு ம்ருத்துவாய் —

“பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றங் கண்டீர்‌”” (திருவிரு. 6) என்று வேத, வேத்‌யத்வ ஸூசகமான கரூட வாஹநனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே, “நின்‌ கண்‌ வேட்கை எழுவிப்பனே”” (திருவிரு. 96) என்கிறபடியே எல்லார்க்கும்‌ பக்தியை உண்டாக்கி நடத்துமவராய்‌ கூற்றம்‌ என்கையாலே தம்முடைய தர்ஸநஸ்தருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஸகரராய்‌

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
–6—இவளைப் பிராட்டியாக உடையவன்-காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்–புற மதஸ்தர்கள் நிலை கெடும்படி வேத ஸ்தாபன ப்ரவர்த்தகாச்சார்யார்-வேத நாயகன் எம்பெருமான் பக்கலிலே வேட்க்கையை எழுவித்து முக்தராக்கி ஊழ்வினைத் தொடர்ச்சிக்கு யமன் போன்றவர் என்றவாறு–கூற்றம் –அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை என்கிறது –ஜீவிக்க நினைத்து இருப்பார் தம் தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்-கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்-இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.–ஸமாப்யதிக தரித்ரனாய்-ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

12-தீயன மருங்கு வாராமல் இருந்த பிரபாவம் –அதாவது – கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்–திருவாய் -5-2-6-என்று சரீரத்தை முடித்து பிராணனை அபகரிக்க கடவதான வியாதி சாத்ரவ ஸூதாதி( நோய் பகை பசி ) தோஷங்களும் சாம்சாரிக சகல துக்க ஹேதுவான பாபங்களும் –
வன் துயரை — மருங்கும் –கண்டிலமால்-பெரிய திருவந்தாதி –54-என்ற படி அருகில் வாராத படியாய்-

(தீயன மருங்கு வாராமல்‌) **கொன்றுயிருண்‌ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌”’ (திருவா. 5 – 2 – 6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான ஆதி வ்யாதி ரூபமான தோஷங்களும்‌ “வானே மறி கடலோ”’ (பெரியதிரு. 54) இத்யாதி,ப்படி ஸாம்ஸாரிக து,:க ஹேதுவான பாபங்‌களும்‌ பார்ஸ்வத்திலும்‌ வாராதபடியாய்‌,

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6—கையும் திரு வாழி யுமான அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –கடிவான் போந்தார் ஆனவர்கள் –அதுக்காக லோகத்தில் பூமியிலே பரந்தார்கள்-யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி-

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால்
-ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54—ஆகாஸ கமனம் பண்ணிற்றோ -மஹா ப்ரஸ்த்தானம் -மஹா விந்த்யம் -பண்ணிற்றோ-இவற்றில் எங்கே சேர்ந்தது-சமீபத்திலே காணாது ஒழிகையால் ஒருங்கிற்றுக் கண்டிலமால் -என்றதிலே மருங்கு என்றது பொருள் இன்றிக்கே நிற்கும் என் அருகில் காணோம் என்றபடி –பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்-நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்-இவர் எங்கே புக்கு முடித்தார்-ஐயோ ஐயோ என்கிறார் –

13-கலியுகம் நீங்கி கிருத யுகம் பற்றி இருந்த பிரபாவம் – அதாவது – திரியும் கலியுகம் நீங்கி –திருவாய் -5-2-3-என்றும் –பவிஷ்ய த்யத ரோத்தரம்-பாரதம் (பொருள்களின் தன்மை தலைகீழாக மாறாடிப் போகின்றன )-என்கிற படி பதார்த்த ஸ்வ பாவங்கள் மாறாடும் படி பண்ணுவதாய் – கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சரஷ்டாரம் ஈஸ்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜனா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-1-50–( கலியுகத்தில் மைத்ரேயரே சர்வேஸ்வரனை பாபங்களால் கெடுக்கப்பட்ட மக்கள் வணங்க மாட்டார்கள் ) என்கிற படி பகவத் ருசி விரோதியான கலி யுகம் போய் -பெரிய கிருத யுகம் பற்றி–திருவாய் -52-3- – என்கிற படியே கேவல வைஷ்ணவ தர்மமே நடக்குமதாய் யுகாந்தர வ்யதானம் அன்றிக்கே ஒரு போகியாக கிருத யுகம் பிரவேசிக்கும் படியாக –4-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம்-( பட்ட போது-எழு போது -என்று பிரித்து பொருள் )அதாவது – பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே – நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் –அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே – த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்–அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62-( மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் – மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி நாட்டாருக்கு புறம்பே கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் – இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து

(கலியுகம்‌ நீங்கிக்‌ கிதயுகம்‌ பற்றி) “திரியும்‌ கலியுகம்‌ நீங்கி!” (திருவா. 5 – 2 – 9) என்று ‘“பவிஷ்யத்யத ரோத்தரம்‌”‘ (பார.சா .மோ) என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள்‌ வேறுபட்டு வருகிற கவியுக தோஷமும்‌ நீங்கி, ““பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக) (திருவா. 5 – 2 – 3) என்று ஆதி க்ருத யுகத்தை யொக்க மஹத்தான ஆநந்த ஸாகரம்‌ அபி வ்ருத்‌தமாக, “பட்ட போதெழு போதறியாள்‌ விரை மட்டலர்‌ தண்டுழா யென்னும்‌”‘ (திருவா. 2 – 4 – 9) என்று பகவத்‌ விஷயத்தில்‌ போக்‌யதாநுஸந்தாநத்தாலே “‘தந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் யஸ்தமிதே ரவெள”’ என்றும்‌, ‘ப்ராதர் மூத்ர புரீஷாப்‌,யாம்‌ மத்‌யாஹ்நே ஷூத் பிபாஸயா । ஸாயம்‌ காமேந படத்‌யந்தே ஜந்தவோ நிமி நித்‌ரயா” என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப்‌ புறம்பே கால க்ஷேப ஹேதுவான திவா ராத்ர விபாக மறியாதே அகால கால்யமான தேஸ விஸேஷத்திற்‌ போலே பகவதநுபவைக பரராய்ப்‌ போந்த இவருடைய ப்ரபாவம்‌ கீழ்‌ அப்படி சங்கிக்கைக்கு ஹேது என்கிறார்-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்

கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3—பவிஷ்யத் யத்ரோத்தரம் என்கிறபடியே -பதார்த்தங்களினுடைய ஸ்வ பாவம் மாராடி இருக்கும் கலி ஸ்வ பாவம் போய் -ஷூ த்ர தேவதைகள் பரராகவும் பர தேவதை அபரனாகவும் கடவதாய் இறே இக்காலம் இருப்பது -தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூரிகளும் புகுந்தார்கள்-வா ஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்னக் கடவது இறே–யுகாந்தர வியவதானம் இன்றிக்கே ஒரு போகியான க்ருத யுகம் பிரவேசித்து -கேவலம் வைஷ்ணவ தர்மமே நடையாடக் கடவ காலமாகை- பண்டே பெரிதான ஆனந்த சமுத்திரம் -அதுக்கு மேலே பெருகும் படி -அநந்த கிலேச பாஜனமான தேசத்திலே அந்தமில் பேரின்பம் உண்டாம் படி யாயிற்று

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே
–2-4-9-உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்-ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்-இவ் வறியாமை சர்வ விஷயமாகிலுமாம் இ றே -ஒன்றையே எப்போதும் வாய் வெருவா நிற்கும்-பரிமளத்தாலும் தேனாலும் பரிபூரணமான திருத் துழாய் என்னும்
பரிமளம் தேன் செவ்வி குளிர்த்தி இவற்றை உடைய திருத் துழாய் என்னுதல்–கையும் திரு வாழி யான சேர்த்தியைக் காட்டி அனுபவிப்பித்தல் -விரோதிகளை அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
அச் சேர்த்தியை இவளுக்கு காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று நலியத் தொடங்கினீர்
சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையும் உடைத்தாகை-உகப்பாரை அவ் வழகைக் காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று முடிக்கும் – யுகாவாதாரைக் கிட்டி நின்று அத் திரு வாழி யாலே அழியச் செய்து முடிக்கும் -என்பர் சீயர்-வேறு ஒன்றையும் அறியாதே அவனையே வாய் புலற்றுகிற இத்தையும் பேற்றுக்கு பரிகரம் என்று இருக்கிறிலள் அவன் நினைவே உபாயம் என்று இருக்கிறாள்இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading