ஸ்ரீ பர்த்ருஹரி அருளிச் செய்த நீதி சதகம்‌-

கி. பி. 7ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்தவராகக்‌ கருதப் பெறும்‌ பர்த்ரு ஹரி இந்நூல்‌ வாயிலாக மனித குலம்‌ மேன்மையுற நூறு நீதிக் கருத்துக்களைக்‌ கூறி யுள்ளார்‌. மிக உயர்ந்த கருத்துக்கள்‌ செறிந்த நீதிகளை
உணர்த்தும்‌ இந் நூலின்‌ சமஸ்கிருதப் பாக்களை அமரர்‌ ஓஒ.என்‌. அப்பா ஸ்வாமி அய்யரவர்கள்‌ மூல ஸ்லோகங்‌களுக்கு எந்த மாறுபாடுமின்றி சுவை மிகு தமிழ்ப்‌ பாக்களால்‌ மொழி பெயர்ப்பு செய்துள்ளார்‌.-இதே போல் ஸ்ருங்கார சதகமும் வைராக்ய சதகமும் உண்டு

அறிவும்‌ மகிழ்ச்சியும்‌ உருவமாய்‌ அமைந்து
திசையாற்‌ பொழுதால்‌ தீர்வு பெறலில்லாச்‌
சுயவனு பவமே சிறந்த அளவையாம்‌
சாந்தமாம்‌ ஒளியைச்‌ சிறப்புற வணங்குவாம்‌.

அழுக்கறுத்‌ துகவார்‌ அறிவு நிறைந்தவர்‌ விழுப்பமார்‌ விரகர்‌ நகுதலோ டிகழ்வர்‌
கற்றறி யாதவர்‌ கருத்துணர்ந்‌ தாய்வரோ உற்றநம்‌ உணர்மொழி உடலினுட்‌ புதைந்தது.–மூர்க்க பத்ததி-

அறிவில்‌ லாதவர்‌ எளிதினில்‌ மகிழ்வர்‌;
அறிவிற்‌ சிறந்தவர்‌ அதனி னின்புறுவர்‌;
நன்றுணர்ந்‌ தகங்கொளா நயனில்‌ கலைஞரை
பொன்புரை கலைமகள்‌ கொழுநனும்‌ பூரியான்‌.

சுறாப்பல்‌ வரிசையிற்‌ கவரலாம்‌ முத்தம்‌;
இராப்பகல்‌ கதறும்‌ இமிழ்கடற்‌ றிரைமேல்‌
உராய்நடந்‌ தேகிக்‌ கடக்கலாங்‌ கடலை;
அஞ்சுற்‌ றெனத்தலை புனையலாம்‌ சனவரா;
பிடித்ததே பிடியாய்ப்‌ புகல்செயும்‌ மூர்க்கரை
இடித்துக்‌ காட்டிமெய்‌ யுணர்த்துதல்‌ எளிதல்‌.

மணலைப்‌ பிசைந்துநெய்‌ யெடுக்கவும்‌ முயலலாம்‌
அனலென உடற்றும்‌ அருநீர்‌ வேட்கையைக்‌
கானல்நீர்க்‌ காட்சியால்‌ தணித்தலு மாகும்‌;
ஆனமட்டொருவன்‌ அலைந்து திரிந்துபின்‌
கானுறு முயற்கொம்‌ படையினு மடையலாம்‌;
தான்பிடித்‌ ததுபிடி யென்பவர்‌ துரிசற
நாமெடுத்‌ தோதல்‌ நவிலவும்‌ படுமோ

அமுதெனப்‌ பாயும்‌ அறியவின்‌ மொழிகளால்‌
அறிவிலா னொருவன்‌ அகம்‌8ர்‌ திருந்திடல்‌
தாமரைத்‌ தண்டின்‌ துன்னு நன்னூலால்‌
தாம்புலி தன்னைத்‌ தளைத்தலே யாகும்‌;

அனிச்சப்‌ பூவின்‌ அரியமெல்‌ லருகால்‌
மணிசெதுக்‌ கமைத்தல்‌ மற்றுவே றென்சொல்‌ 9
ஒருதுளித்‌ தேனால்‌ ஓதமார்‌ உவரியை
உறுசுவைத்‌ தாக்குதற்‌ குவமை யாக்கிடுமே.

அறிவிலார்‌ தமக்கே யழகிய போர்வையாம்‌
விதியினா லமைந்ததாம்‌ விரகுறு மெளனம்‌;
சான்றோர்‌ குழுவிற்‌ சார்ந்திடும்‌ போதில்‌
ஆன்ற வோரணியா மறிவிலார்க்‌ கமைவே.

சிற்றறி வினனாய்ச்‌ சிதறுறும்‌ சமயம்‌ |
உற்ற மதத்தால்‌ உணர்ந்தமென்‌ றுகந்தேன்‌;
நற்றிற வறிஞர்பால்‌ நவின்றபின்‌ சிற்சில
கற்றில னெனக்கண்‌ டற்றது மதஜுரம்‌.

இழிஞ நிழிய பொருள்தனை வெளவுவர்‌
இழிவுள உயிர்ப்பொறை யறிகிலர்‌ ஈனம்‌
கழிமுடை நாற்றத்‌ தழுக்குறும்‌ எலும்பை
பழிப்புறும்‌ தெருநாய்‌ பாய்ந்துணும்‌ போழ்தில்‌
விழுப்பமார்‌ இந்திரன்‌ விரும்பி யணுகினும்‌
கெழுத்கை யிலதாய்க்‌ கேடுறும்‌ பாவம்‌.

வானினின்‌ நிழிந்துறும்‌ வரநதி கங்கை
தான்வந்‌ தடைந்தது தகைமைசால்‌ சிவன்றலை;
பசுபதி முடியினின்‌ றகன்றுபர்‌ வதமுற
உயர்மலை முடியினின்‌ றிறங்கியூர்ந்‌ ததுதரை

தரையினின்‌ றோடி யணைந்தது கடலை
வரைவொளன்‌ நின்றிப்‌ பலநெறிச்சென்று
உரைசால்‌ கங்கையு முயர்வை யிழந்தது
பகுத்தறி வின்றிப்‌ புன்னெறிப்‌ பட்டு
தகுந்ததம்‌ பதவியிற்‌ றாழ்ந்தவர்‌ பலரே.

ஒவ்வொரு நோய்க்கும்‌ மருந்துள துலகில்‌;
செவ்விதாம்‌ அறிவிலார்‌ சிறக்க ஏதுளதோ 2
நெருப்பை அணைக்கலாம்‌ நீரி னுதவியால்‌;
எறிக்கும்‌ வெயிலைத்‌ தணிக்கலாம்‌ குடையால்‌; ,
தெறுக்குந்‌ தோட்டியால்‌ தாண்டலாம்‌ யானையை;
காளை கழுதையைக்‌ கழித்தலாம்‌ கழியால்‌;
ஆளைத்‌ தெறிநோ யகற்றலாம்‌ மருந்தால்‌;
மந்திர தந்திரத்தால்‌ மாற்றலாம்‌ நஞ்சை
தந்திர மொன்றிலைத்‌ தணிக்க மடமையை.

வித்வத்‌ பத்ததி

நூல்பல உணர்ந்து நுவல்வல அறிஞர்‌
நேர்படும்‌ இன்சொலால்‌ நிகழ்த்துவர்‌ தெளிவு
அத்தகை யறிஞர்‌ மிடியினும்‌ அரசரே;
வித்தக வன்மையின்‌ விளங்குவர்‌ மதியால்‌;
நேர்படா வரசால்‌ நிபுணர்‌ வறிஞராம்‌
இரத்தினச்‌ சோதகன்‌ இனமில னாயின்‌
சிறப்புள ஒளிக்கலும்‌ சீர்பெற விலையே.
சிறப்பிலா திருப்பினும்‌ சிறக்குநா ளுறுமே.

கல்வியென்‌ றோதும்‌ கரந்த உட்பொருள்‌
கள்வன்‌ றனக்குக்‌ கையுற விலையே;
எப்போதும்‌ அது அளித்திடும்‌ தென்பை
எப்போதும்‌ அதால்‌ இயம்பொணா வின்புறும்‌
அற்போ டோதுவோர்க்‌ கலித்தார்‌ பெருகிடும்‌
கற்ப முடிவிலும்‌ குறைவுறல்‌ இலையே.
இத்தகை யோரை யிறைவரே போற்றுமின்‌
வித்தக வறிஞரை விரக நிகழ்வரோ 9
அவர்தம்‌ மிடத்தில்‌ அழுக்கா றெவர்க்குரும்‌
எவர்க்கு மவரிட மன்பே வளர்க.

உயர்வுள வுண்மைகள்‌ உற்றுணர்‌ புலவரை
உயர்வுற்‌ றிணங்குறும்‌ ஆடென மதியேல்‌;
புல்லினிற்‌ புல்லிதாய்க்‌ கருதும்‌ பொருளால்‌
புல்லிப்‌ பிணைத்திடல்‌ பலித்திடும்‌ செயலை;
புதுமதப்‌ பொழிவால்‌ கவுளலைப்‌ புறுங்கயம்‌
சிதைமரை நாளநூற்‌ சிடுக்கினிற்‌ றளையா.

பால்நீர்க்‌ கலப்பிற்‌ பால்பிரித்‌ திடுந்திறம்‌
பால்நிற அன்னப்‌ புள்விட்‌ டகலுமோ 2
அனந்தா னனத்துடன்‌ ஆரச்‌ சினக்கினும்‌
அனத்தான்‌ பொய்கையை வற்றிடச்‌ செயலால்‌
வனச மலர்த்திரள்‌ விளையாட்‌ டயர்வுறும்‌;
இதற்குமே லிடரும்‌ பிரமனா லியலுமோ
எதற்கும்‌ மேலோர்‌ செறினு மிளையவர்‌
தமக்குறு திறமையிற்‌ பின்வாங்‌ குவரோ

ஆண்மகன்‌ றனக்கு அழகைத்‌ தருவன
தோள்வளை மதியொளித்‌ தொங்க லலவே
குளிப்பு முழுக்கல கும்மெனும்‌ பூச்சல;
அளிப்பன சிறப்பை அழகிய மலரல
கல்விசேர்‌ சொற்றிறம்‌ ஒன்றே கவினணி
பல்வகைப்‌ பிறவணி பழுதுறு மலவோ ?

கற்றோ னுக்கே கல்வியா லழகுறும்‌
கற்ற தாங்கல்வி காத்துள மறைபொருள்‌
கற்ற தனாலே க$தித்தஇிடு மின்பிசை;
உற்ற வாசாற்கு முயர்ந்ததோ ரொளியே;
மற்றோர்‌ நாட்டிலு முற்றதோ ர௬ுறவாம்‌;
பற்றுறுந்‌ தெய்வம்‌ பலவினும்‌ சிறந்ததே;
வெற்றிவேல்‌ மன்னரும்‌ பற்றொரு வணங்குவர்‌
நற்றுங்‌ கல்வி நண்ணா தாற்கு
உற்ற வுயர்தனம்‌ உறுவது மிலையே;
இத்திறத்‌ தாலே கற்றிலா ராடே.

பொறுமை யிருந்தால்‌ போர்க்கவசம்‌ ஏன்‌?
தெறுஞ்சினம்‌ இருந்தால்‌ தெவ்வர்‌ எதற்கோ 2
பங்காளி யனைய புல்லோர்‌ இருந்தால்‌
வெங்கன லென்னும்‌ வெம்பகை யெதற்கு ?
நண்பரி ருந்தால்‌ நன்மருந்‌ தெதற்கு ?
பண்பிலா ருண்டெனில்‌ பரம்புவே றெதற்கு 9
புரையிலாக்‌ கல்வி பொருந்தி யவற்கு
நிறைபொருட்‌ செல்வம்‌ நீங்கிலென்‌ குறையே.

ஒன்பது வகைத்தாம்‌ உலகுிய லோர்வு
அன்புடன்‌ நடத்தல்‌ உற்றார்‌ உறவை
பணிவிடை யாளர்பால்‌ பரவிய கிருபை
பணிபோற்‌ பகையிடம்‌ பதுங்கி வஞ்சித்தல்‌
நல்லோ நிடத்தில்‌ நயமார்‌ அன்பு
வல்லர சிடத்தில்‌ வணங்கு விசுவாசம்‌
கற்றசான்‌ றோர்பால்‌ கரவிலாத்‌ தன்மை
உற்றப கைவர்பால்‌ உளந்தள ராமை
முதியோர்‌ தம்மிடம்‌ முற்றிய பொறுமை
நிதிபோல்‌ மனையால்‌ நிகரிலா மதிப்பே.

நல்லோர்‌ பழக்கம்‌ நல்காப்‌ பயனெது 9
ஒல்லும்‌ வகையால்‌ ஒழித்திடும்‌ மதிநோய்‌
பேசும்‌ மொழிகளில்‌ புகுத்திடும்‌ மெய்ம்மை
நேசமார்‌ மதிப்பைத்‌ தந்திடும்‌ நன்கு
பகுத்தறி வதனைப்‌ பல்கிடச்‌ செய்யும்‌
வகுக்கும்‌ திசையெல்லாம்‌ வழங்கிடும்‌ நல்லிசை.

பொருட்சுவைச்‌ சித்தராம்‌ புலவோர்‌ தமக்கு
அருட்டிற வெற்றி யமைந்திட என்றும்‌
நல்லிசை யுருவாய்‌ நிறைந்தவர்‌ உடற்கு
இல்லையே மூப்புச்‌ சாக்காட்‌ டச்சம்‌.

மானசெளர்ய பத்ததி

மதங்கொள்‌ யானையின்‌ மண்டையை யுடைத்து
ASC செய்‌ ததனின்‌ செந்நீர்‌ சதையிவை
உண்பதே நோக்கமாய்‌ உறுதிகொள்‌ வயமா
நண்ணும்‌ ஊக்கம்‌ முழுதும்‌ நலிந்தும்‌
உண்ணா தளைத்தும்‌ மூப்பால்‌ ஒடுங்கியும்‌
விண்ணுறு வரைநாள்‌ கிட்டினு மஃது
புல்லுண்டு வாழும்‌ புன்மை யுறாது
வல்லாண்‌ மையாக வயத்துடன்‌ வீயும்‌2

உணவிடு வோனை எதிர்நோக்‌ கிடிலோ
தனதுடல்‌ தரைபட மல்லாந்‌ திடும்‌ நாய்‌
வயிற்றையும்‌ முகத்தையும்‌ வயங்கக்‌ காட்டி
கயற்றிய வாலை யாட்டுங்‌ கரைந்து
கால்கள்‌ தரையில்‌ மோதுறக்‌ குதித்து
சால்புள நன்றியைக்‌ சிறக்கக்‌ காட்டும்‌;
யானையிர்‌ சிறந்ததோ எஜமானனைப்போல்‌
தான்தன்‌ போஷகன்‌ தன்னைக்‌ கண்ணுறும்‌
செல்வ மாகப்‌ பலமுறை சொன்னபின்‌
மெல்ல மெல்ல மடுக்கும்‌ கவளம்‌.

பிறப்பிறப்‌ பமைந்த பீழையாம்‌ சுழலில்‌
இறந்தவன்‌ யாரோ பிறவா திருப்பவன்‌ 9
எவனது பிறப்பால்‌ குடிமே லுறுமோ
அவனே பிறப்பவன்‌, மற்றவர்‌ பிறப்பெவன்‌ –

நசையால்‌ மெலிந்த பரதையாம்‌ தெருநாய்‌
வசையுறும்‌ அழுக்கும்‌ கொழுப்புஞ்‌ செறிந்த
தசையிலா எலும்பையும்‌ தாவிக்‌ கடிக்கும்‌;
பசிதணி உணவுப்‌ பற்றின்‌ றேனும்‌
நசையால்‌ மென்றிடும்‌ நரம்படர்‌எலும்பை;
ஒள்ளிதாம்‌ சிங்கம்‌ ஒறும்‌ பசியுற்றும்‌
குள்ளை நறியது கைக்குற்‌ றதேனும்‌
பிள்ளா ததனைப்‌ பிடித்திடும்‌ கயமே;
பசிநோய்‌ வருத்தினும்‌ பசியுறும்‌ பிராணிகள்‌
உச௫ிதமாம்‌ தந்தமக்‌ குரியதே நாடும்‌.

பூங்கொத்‌ தவைபோற்‌ பூதலந்‌ தன்னுள்‌
ஒங்கிய நிலையுள விரண்டே வறிஞர்க்கு நல்லோர்‌
தலைமிசை நிலைபெறச்‌ சிறத்தலும்‌
கல்லார்‌ கானற்‌ கன்றி வீழ்தலுமே.

பகலிராத்‌ துலக்கும்‌ பகலவன்‌ மதியை
இகலுள ராகுவாம்‌ இறுந்தலை விழுங்குவன்‌
பருவநா ளிரண்டிலும்‌ பண்ணுவன்‌ புசிப்பு
உருவமார்‌ வியாழ னாதியாங்‌ கோளொரூஉம்‌
வீரியம்‌ விரும்பு விறலோ ஸிராகு
சீரிய சிந்தையிற்‌ பகையா னிவற்றை.

ஆதி சேடனாமை வராகம்‌;
பாது காக்குமிறை பகவன்‌ அம்சமாம்‌;
அகன்ற பணாமுடி அகிலம்‌ சுமந்தது
புகன்ற வவ்வரவைப்‌ புறம்பெற்‌ றதாமை;
தகவுள விவற்றைச்‌ சுமந்தது வராகம்‌
வைத்த பாரந்‌ தாங்கிய வயவரை
எய்த்த விவ்வுலகில்‌ ஏற்றுவர்‌ பலரும்‌;
வீரர்கள்‌ செயல்கள்‌ வியந்தக்‌ கனவே.

இந்திரன்‌ குலிசம்‌ தந்தையை எறிக்கையில்‌
வந்துறு துயரால்‌ பனிவரை வருந்துறத்‌
தன்னுயிர்‌ தக்கக்‌ கடலொளி மைநகம்‌
மன்னுங்‌ கடலில்‌ மாய்ந்ததேல்‌ மானமாம்‌
மான செளரியம்‌ மன்னுமோர்‌ மன்மகன்‌
தானவர்க்‌ குதவுறா துயிர்பெறல்‌ தகவோ 9

சூரியகாந்த மென்னுஞ்‌ சிலைப்பொருள்‌
வீரியன்‌ வெயிலவன்‌ கதிருறிற்‌ கதழ்ந்திடும்‌;
ஊக்கமும்‌ மானமும்‌ உற்றவோ ராண்மகன்‌,
தூக்குறல்‌ தகுமோ பிறர்செயும்‌ பழிப்பை.

இளஞ்சிங்‌ கமாயினு மிபந்தனைக்‌ கண்ணுறில்‌
மதம்வடி மண்டையிற்‌ பாய்ந்தடித்‌ தொறுக்கும்‌;
சவுரிய முடையார்‌ செய்வர்‌ துணிசெயல்‌
கவுரவமதுவே கரந்தொடுங்‌ குவதல்‌
ஆண்டுக்‌ குறைவினால்‌ ஆண்மை குறையுமோ 9
பூண்டிடும்‌ பெருஞ்செயல்‌ பிறப்புறு மிடலே.

அர்த்த பத்ததி

பணமொன்‌ நறின்றேல்‌ புல்லாம்‌ எல்லாம்‌
கனமாம்‌ குடிமை நரகுற விடுவர்‌;
நற்குணம்‌ பலவும்‌ நீடுமே அதன்‌$ழ்‌;
நன்னெரி யதுவே நெடுங்குன்‌ நிழிவுறும்‌;
நற்குடி யோமெனும்‌ நலஞ்செய்‌ மானம்‌
ஏற்குறு பஞ்சென எரியுற்‌ றிடுமே
முரண்சேர்‌ வலிமை முவங்இடிக்‌ கிரையுறும்‌
அருணாம்‌ பலவும்‌ அகன்றிட நேரினும்‌
பணமாம்‌ ஒன்றையே பரவுவர்‌ கயவர்‌.

பொன்னுடை யானே பெருங்குடிப்‌ புகல்‌ பெறும்‌
மன்னிய செல்வம்‌ மிகுந்திடில்‌ மாண்குடி
உன்னுங்‌ கல்விமான்‌ உயர்நிதி யுடையோன்‌
பன்னும்‌ மறைவலான்‌ உயர்நிதி யுடையோன்‌
பன்னும்‌ மறைவலான்‌ பணம்நிறைந்‌ தவனே;
நல்லியல்‌ பறியும்‌ நுட்பமும்‌ அவனதே
ஒல்லும்‌ வகையா லோதுவோ னவனே
பார்வைக்‌ கழகன்‌ பணமுள்‌ ளவனே
ஏர்மட்‌ டுமுறில்‌ எளியவள்‌ அலவோ 9
பல்வகைப்‌ பண்பும்‌ பணத்தை நாடிடுமே.

பன்னிரு விதங்களில்‌ கேடுறும்‌ புவியில்‌;
கசடுறுமமைச்சால்‌ கெடுவன்‌ வேந்தன்‌;
அசடுகள்‌ சேர்க்கையால்‌ அழிவன்‌ துறவி;
செல்லங்‌ கொடுத்தால்‌ சீர்கெடும்‌ சந்ததி;
நல்லநூற்‌ பயிற்சிக்‌ குறைவால்‌ மறையவன்‌
கெட்ட சந்ததியால்‌ கேடுறும்‌ தலைமுறை;
கெட்டவர்க்‌ குழைத்தால்‌ கேடுறும்‌ நடத்தை
நாணமும்‌ ஒழுக்கமும்‌ நகுகுடி யாற்கெடும்‌;
காணுறுங்‌ கவலை குறைவுறிற்‌ க்ருஷிகெடும்‌;
தூரதேசஞ்‌ செலிற்‌ றொலைந்திடு மன்பு;
நல்லுணர்‌ வற்றால்‌ நட்புக்‌ குறைவுறும்‌;
நடுநோக்‌ கற்றிடில்‌ நலிந்திடும்‌ வாழ்வு.

செல்வஞ்‌ செலற்கு மூன்றே வழியுள
நல்வழி யளித்தல்‌ நுகர லளித்தலே;
கொடையும்‌ நுகர்வும்‌ கைகூ டாவிடில்‌
அடுதலாங்‌ கடைவழி யதையே யடையும்‌.

கட்டளைக்‌ கல்லில்‌ தேய்த்தா மரதனம்‌,
முட்டிய முரணி லூறுபெறு வெற்றியன்‌,
மும்மதம்‌ பொழிதலால்‌ முரண்‌ குறை யானை,
அம்பொழி லிலையுறு அழகிய காலம்‌
அம்பு வடிந்துறும்‌ அறல்படி யாறுகள்‌,
எண்ணிரண்‌ டவைகளில்‌ ஒரு பிறைத்‌ தேய்பிறை,
பண்புறு மிளம்பெண்‌ பதிசேர்ந்‌ திளைத்தமை
எளியவர்க்‌ களித்தலால்‌ அளிதரும்‌ ஏழமை
ஒளியுறும்‌ இளைப்புகள்‌ இவைபல அழகே.

மிக்க பசியால்‌ வருந்திடும்‌ மிடியன்‌
தக்கதோர்‌ கைபிடித்‌ தானியம்‌ விரும்புவான்‌
அநீத வறிஞனே அளவிலாப்‌ பொருள்பெறில்‌
இந்தப்‌ புவியையு மிகழ்வன்‌ புல்லென;
ஆகவே பொருட்பால்‌ அற்பும்‌ வெறுப்பும்‌
ஆகும்‌ நிலைமைக்‌ கேற்கவே மாறிடும்‌;
செல்வரின்‌ பதவி சிறப்பதற்‌ கேற்ப
அல்கும்‌ அகலும்‌ பொருட்பால்‌ மதிப்பே

மன்னா முறைகேள்‌ நிலப்பசுப்‌ பால்பெற
கன்றாப்‌ போற்றல்போல்‌ காத்திடிவ்‌ வவனியை;
ஓயா விழிப்புடன்‌ உலகினைப்‌ புரந்தால்‌
ஓவாப்‌ பயன்தரு முயர்ந்தகற்‌ பகமென.

அரசவைத்‌ தந்திர மதிசய வெதிரிடை
விரவுறும்‌ விலைமகள்‌ போலத்‌ திரிவுறும்‌
உண்மை பொய்மை கடுமை மென்மை
கொடுமை கருணை கடுஞ்செட்‌ டுதாரம்‌
ஓயாச்‌ செலவு ஓயா வரும்படி.

பின்வரு மறுபயன்‌ போற்றா தார்க்கு
மன்னரை மன்னி யுறுவதென்‌ மகிழ்வு 2
சொன்னசொல்‌ நிறைவுறல்‌ மன்னு மிசைபெறல்‌
உன்னுமொண்‌ மறையவர்க்‌ குருபொரு ளுதவுதல்‌
தன்னிடஞ்‌ சார்ந்தவர்க்‌ காத்துமிக்‌ களிதரல்‌
இன்பம்‌ நுகர்ந்தடல்‌ நண்பரைப்‌ புரத்தலே

இணற்றினிற்‌ கொண்டிடு மவ்வள வேநீர்‌
கடற்றிரை தனிலுங்‌ கொண்டிடுங்‌ குடமே;
படைத்தவன்‌ தலையில்‌ பொறித்த நஞ்செல்வம்‌
கிடைத்திடல்‌ திண்ணம்‌ கொஞ்சமோ வதிகமோ
கிடைப்பது கிடைக்கும்‌ களர்மணற்‌ பரப்பிலும்‌;
இடைப்பிற மேருவின்‌ உயர்முக டேறினும்‌
படைப்பவன்‌ விதிக்குமேல்‌ பலிப்பதே இலையே.

துர்ச்சன பத்ததி

இரக்க மிலாமை இனமிலாச்‌ சண்டை
பிறன்பொருள்‌ மனைவியைப்‌ பேதையாய்‌ வெஃல்‌
அன்புள வுறவிடயம்‌ அழுக்கா றுறுதல்‌
புன்புரைக்‌ கயவர்க்‌ இயற்கை யிவ்வைந்தும்‌.

ஒளிக்கல்‌ புனையினு மொழித்திடு நச்சரா;
கல்வி சேர்ந்திடினும்‌ கழிந்திடு கயவனை

எவ்வித உயர்வை யவ்விய ரிகழார்‌ 9 வணக்க முள்ளமையை வெள்ளறி வென்பர்‌; நோன்பு தூய்மைகள்‌ வெளிப்பகட்‌ டென்பர்‌;
மாசிலா வொழுக்கை மோசடி யென்பர்‌;
தறுகணாண்மை தண்ணளிக்‌ குறைவாம்‌;
அறம்பியல்‌ துரவியை அறிவில னென்பர்‌;
மென்மையா மின்மொழி கையுறை யாகும்‌
ஒள்ளிய தன்மையைச்‌ செருக்கென உரைப்பர்‌
நாவலர்‌ நம்மைப்‌ பேச்சுவா யென்பர்‌;
எவ்வித உயர்வையு மவ்விய நிகழ்வரே

சினமுளதென்னில்‌ செந்தீ எதற்கு ?
இனம்பார்த்‌ தஇடாமையின்‌ இழிசெயல்‌ ஏது 2
உண்மை யுளதெனிற்‌ தவம்வே றெதற்கு 9
நன்மை யிதனிற்‌ நாம்கா ணலாமே;
உளத்தூய்‌ மையுண்டெனில்‌ குளம்நதி எதற்கு 9
அளவளாய்‌ நயத்தலில்‌ அருந்திற லேது 2
நல்லிசை தன்னிலும்‌ நயந்தரு மணியெது?
நல்லினக்‌ கல்வியின்‌ நலந்தரும்‌ பொருளெது 9
பொல்லா னெனப்பெயர்‌ புனைதலின்‌ விளிவெது 9
நல்லானெ னப்பெயர்‌ புனைதலே நல்லுயிர்‌.

என்னுளம்‌ ஊறுசெய்‌ அயில்வேல்‌ ஏழுள;
மன்னொளி நீங்கப்‌ பகற்றோன்‌ நிடும்‌ மதி;
தன்னிள நலங்கழிந்த தன்பினும்‌ காதலாள்‌;
நன்னிறத்‌ தாமரை நீங்கிய பொய்கை;
அறிவெழுத்‌ தில்லான்‌ அந்தமார்‌ வதனம்‌;
செறிபொரு ளாளன்‌ சேர்பொரு Mame;
ஓவா வறுமை யாலுழலு முத்தமர்கள்‌;
கோவா ரரண்மனைக்‌ கொடியவர்‌ புகலே.

சவிமிகுஞ்‌ செந்தீ சோர்வுடன்‌ தீண்டிடில்‌
அவிசொரி யந்தணர்‌ கரத்தையுஞ்‌ சுடுமே;
காய்சின வேந்தன்‌ கதமிகு போழ்தினில்‌
ஆய்பொரு எமைச்சரும்‌ அகல்க சற்றமைவுற.

மெத்த கடினம்‌ மிக்கவர்‌ பணிசெயல்‌;
மிக்கவர்‌ தமக்குப்‌ பணிவிடை எளிதல்‌;
வாய்திற வாவிடில்‌ மூகைய னென்பர்‌;
வாய்வல னாகில்‌ வாயாடி யென்பர்‌;
அணுகிப்‌ பழகி லகந்தைய னென்பர்‌;
அணுகா தகலின்‌ அ௮ச்சமிக்‌ குடையனாம்‌;
பொறுமையுள்‌ ளானெனில்‌ பயங்கொளி யென்பர்‌;
பொறுமையில்‌ லானெனில்‌ பிறப்பினை யிகழ்வர்‌.

கீழ்மகன்‌ பழக்கம்‌ கூட்டுமே துயரை;
கீழ்மக்‌ களுக்கே கிழியை ஈவன்
நீதித்‌ தளைகளை நீங்குறத்‌ தெறிப்பன்‌;
தீதாம்‌ பதவித்‌ தீச்செயல்‌ மறந்தவன்‌;
கணக்கிலாச்‌ செல்வம்‌ கணந்தரச்‌ சேர்ந்தவன்‌;
பிணக்குடன்‌ நற்குணம்‌ பலவும்‌ பகைப்பவன்‌.

புல்லார்‌ நட்பு முற்பகல்‌ நிழலே;
நல்லோர்‌ நட்பு பிற்பகல்‌ நிழலே;
நீண்டுபின்‌ குறுகும்‌ நிலையிலார்‌ நட்பு;
பூண்டுசிற்‌ றுருவம்‌ பெருகு நன்னட்பே.

புல்லுண்‌ மானைப்‌ பகைப்பன்‌ வேடன்‌;
தண்ணுண்‌ மீனைத்‌ திருகுவன்‌ வலையன்‌;
தன்னுள்‌ எமைதியுண்‌ தவசியைக்‌ கோட்சொல்லி;
எண்ணுள்‌ மூவரும்‌ இகல்கொளல்‌ எவனோ 9

ஸுஜன பத்ததி

இந்தநற்‌ றன்மையர்க்‌ காக்குவேன்‌ பணிவை;
நைந்து நெஞ்சுருகி நல்லினம்‌ பழகுவோர்‌,
மற்றவர்‌ நன்மையில்‌ மகஒழ்வுறும்‌ நல்லோர்‌,
உற்றமூப்‌ பாளருக்‌ குரியதொண்‌ டியற்றுவோர்‌,
ஆவலாய்க்‌ கல்வியை யகமுறப்‌ பயில்வோர்‌
காதலாய்த்‌ தன்மனை யாளையே கருதுவோர்‌,
நல்லோர்‌ வசைதமை நணுகுறா தஞ்சுவோர்‌,
வல்லோ னாமரன்‌ வன்சரண்‌ புகுவோர்‌
தம்புலன்‌ பொறிகளைத்‌ தகைபெற அடக்குவோர்‌,
வன்கணர்‌ இனத்தை வகைபெறத்‌ துறந்தோர்‌.

சான்றோர்க்‌ கியற்கையாம்‌ சால்புகள்‌ கேண்மோ,
தோன்றிய துயரால்‌ திறல்தள ராமை,
ஆன்றநல்‌ வாழ்வினில்‌ அரும்புரை பொறுத்தல்‌,
ஆன்றோ ரவையில்‌ அழகிய சொற்றிரம்‌,
நேர்ந்திடும்‌ போர்களில்‌ நிலைதள ராமை,
தேர்ந்துநல்‌ விசையினைத்‌ திகழ்வுறச்‌ சேர்த்தல்‌,
ஓர்ந்துணர்‌ மறைகளை யுவந்தே பயில்தல்‌
நேர்மையா மாறும்‌ நிலைபெறல்‌ நன்றே.

இயற்கையிற்‌ பெரியராய்‌ இருப்பவர்‌ தமக்கு
பெயர்த்தகும்‌ பணங்கா சில்லையென்‌ நாலும்‌
உடலின்‌ கூறாம்‌ உறுப்புகள்‌ தம்மில்‌
இடப்பட்‌ டழகுசெய்‌ யணிகள்‌ இவையுள;
புகழத்‌ தகுகொடை பொருந்துறுங்‌ கரத்தில்‌;
திகழுங்‌ குருவடிக்‌ கன்புறுந்‌ தலையில்‌;
மெய்மையாம்‌ பேச்சுறும்‌ மென்மைசால்‌ முகத்தில்‌
மொய்ம்படர்ப்‌ புயங்களில்‌ மிகுந்துள வெற்றி;
கள்ளம்‌ கவடிலா நெஞ்சகம்‌ தன்னில்‌
ஒள்ளி தாகிய தூய்மை உறைந்திடும்‌;
கல்விகேள்‌ விகளால்‌ கனமுறுங்‌ காதில்‌
செல்வமார்‌ வேதச்‌ சுருதிகள்‌ சொரிவன.

நல்லிசை தரும்வழி நவில்வேன்‌ பத்துள;
உயிர்க்கொலை நீத்தல்‌ ஊர்ப்பொரு எிகத்தல்‌,
உள்ளதை யேசொலல்‌ உற்றபோ தளித்தல்‌,
அயற்பெண்டிர்ப்‌ பேச்சறல்‌, ஆசைவெள்‌ எளந்தெறல்‌
பெறியோர்க்‌ கிணங்கல்‌, பல்லுயிர்க்‌ இரங்கல்‌,
பலநூல்‌ மதித்தல்‌, கடமை கடைப்பிடி.

தீரர்தம்‌ நெஞ்சம்‌ திரிவுறும்‌ முறைகேள்‌;
வாழ்வுறும்‌ போது வளமா ராம்பல்போல்‌
தாழ்வுறா திரங்கும்‌ தருமஞ்‌ செயற்கு;
தாழ்வுறும்‌ போது தன்சுகம்‌ மறுத்து
மகிழ்வுறாக்‌ கருங்கல்‌ மானும்‌ துயர்வதில்‌.

நீதி நெறிநேயம்‌ நெறியிலா ததனை
ஒது யிர்தந்தும்‌ இகந்திடும்‌ தன்மை
கெட்டவர்‌ தம்மிடம்‌ கெழுமெவ்‌ வுதவியும்‌
பெட்டவர்‌ தம்மைப்‌ பரவா திருத்தல்‌
நட்டவ ராயினும்‌ நீங்கியர்‌ பொருளெனின்‌
மூட்டுற்‌ றபோதும்‌ முயன்று கெஞ்சாமை
துயருற்‌ றபோதும்‌ துணிவாய்‌ முயலல்‌
சான்றோர்‌ பற்றிய சால்புறு நெறியை
தான்தவ றாமற்‌ றுன்னி நடந்திடல்‌
இவ்வறு நுட்பமும்‌ எளிதல லிவற்றை
செவ்விய வாள்வாய்ச்‌ சேர்நடை பழகல்போல்‌
எவ்விடம்‌ உணர்வரோ யாமறி யோமே.

புகலுறா தளித்தல்‌ புகும்விருந்‌ தெதிர்கொளல்‌
நகுங்கொடை நயந்து நாவ சையாமை
மற்றோர்‌ நற்செயல்‌ மகிமையால்‌ விளம்பிடல்‌
உற்ற செல்வத்தில்‌ உயர்வு பேசாமை
மற்றவர்‌ தம்மை மருப்படா துரைத்தல்‌
இவ்வறு நுட்பமும்‌ எளிதல இவற்றை
செவ்விய வாள்வாய்ச்‌ சேர்நடை பழகல்போல்‌
எவ்விடம்‌ உணர்வரோ யாமறி யோமே.

சிவப்பக்‌ காய்ந்த சிறப்புள இரும்புபோல்‌
உவப்பதாம்‌ நீர்த்துளி உற்றிடில்‌ உறிஞ்சிடும்‌
துளியதன்‌ பேரும்‌ துன்னுவோர்‌ கேட்பதில்‌
இளிவுறு மீனர்‌ இத்தன்‌ மையரே,
அதேவித நீர்த்துளி யந்தா மரையுறில்‌,
சுவேத முத்தெனச்‌ சுகமாய்‌ ஜொலிக்கும்‌;
தாமரை நீங்கில்‌ தரள மொழியும்‌,
ஆமித்‌ தன்மையர்‌ அடைவர்‌ மத்திமநிலை,
ஆழ்கடற்‌ சிப்பியில்‌ அழகிய சுவாதியில்‌,
வீழ்ந்திடில்‌ நிர்த்துளி விரும்புரும்‌ முத்தாம்‌,
விழுந்த இடத்தில்‌ வேருற நிலைத்து,
எழுந்தோங்‌ குவதே உத்தமர்‌ இயல்பு.

தாய்தந்தையர்க்குத்‌ தன்னன்‌ னடையால்‌
ஆய்ந்த உத்தமனாம்‌ அவனே மகனாம்‌
எப்போ துந்தன்‌ கணவ ஸினிப்புற
தப்பா நலம்நினை தருமியே மனைவி;
உயர்விலும்‌ தாழ்விலும்‌ உற்றவோர்‌ தன்மையாய்‌
துயரணு காமற்‌ றணைந்தவன்‌ நண்பன்‌.

வியப்புறத்‌ தகுந்த பெருந்தகை விரகரை;
நயந்தநன்‌ மதிப்புடன்‌ நல்லோர்‌ புகழ்வர்‌;
வணங்குதல்‌ கொண்டே வளம்பெற்‌ றுயர்வர்‌;
இணங்குமற்‌ றவரியல்‌ புகழ்தலா லிசையுறும்‌;
மற்றவர்‌ கருத்தை முற்றுறச்‌ செயலால்‌;
உற்றதங்‌ கருத்தையும்‌ வெற்றியாய்ச்‌ செய்வர்‌,
தீயோர்‌ தமக்குந்‌ தயையுட ஸிரங்குவர்‌;
வீயா நரகல்‌ வீழ்வதை யுன்னி;
கொடும்வசை வாயரைப்‌ பொறையற்‌ கடியும்‌;
நடுவுள நல்லரை வணங்கா ௬ளரோ 9

பரோபகார பத்ததி

பழச்சுமை மிகுந்திடில்‌ படிந்திடும்‌ மரமே;
மழைநீர்‌ சுரந்திடில்‌ மேகம்‌ பரவும்‌;
நல்லோர்‌ செல்வம்‌ நயனுறப்‌ பெருகில்‌;
அல்லோர்‌ போல அகந்தை பெறாரே;
மற்றோர்‌ தமக்கு மாண்புசெய்‌ பெரியோர்க்‌
கிற்றே இயற்கை இனிதுசெய்‌ வாரோ.

இரக்கச்‌ செயல்களால்‌ இரங்கிடும்‌ நல்லுடல்‌
மணப்பூச்‌ சாலல மற்றவர்க்‌ குதவியால்‌;
கல்விகேள்‌ விகளால்‌ கிளர்ந்திடுங்‌ காது;
பல்விதக்‌ காதணி பொலிவு செய்யாவே
பொன்வளை புனைதலால்‌ புகழ்பெறு மோகை ?
நன்கொடை தன்னால்‌ நலம்‌ பெறும்‌ கரமே.

கஞ்சம்‌ விரிக்கும்‌ கதிரவன்‌ வைகறை;
விஞ்சுப அல்லிகள்‌ விரிவன மதியால்‌;
கொண்டல்கள்‌ மழையைக்‌ கொட்டுவ தாமாய்‌;
தொண்டர்‌ பிறர்நலம்‌ போற்றுவர்‌ துணிந்தே.

தன்னலங்‌ கருதாப்‌ பிறர்நலம்‌ புரப்போன்‌
நன்னிலப்‌ பரப்பில்‌ நல்லாண்‌ மகனே;
தன்னலங்‌ கேடுறாத்‌ தந்திரஞ்‌ செய்து
மன்னிப்‌ பிறர்பணி முடிப்பவன்‌ மத்திமன்‌;
தன்பணி முடிக்கப்‌ பிறர்பணி கெடுப்பவன்‌
அன்னவனே இவண்‌ மானுட வரக்கன்‌;
எக்கா ரணமும்‌ இன்றிப்‌ பிறர்பணி
தக்கா தழிப்பவன்‌ யாரோ துணிந்திலேன்‌.

நண்பன்‌ தன்மையை நல்லோர்‌ நவிலல்கேள்‌;
பண்பிலாப்‌ பழியைப்‌ பற்றா தகற்றுவன்‌;
நன்னெறி யிற்செல நவில்வ னுபாயம்‌;
மன்னும்‌ மந்தணம்‌ மறைவுறப்‌ போற்றுவன்‌;
நம்மின்‌ நற்செயல்‌ நயனுறப்‌ பரப்புவன்‌;
நமக்குறும்‌ இடரில்‌ நம்மைக்‌ கைவிடான்‌.

நல்லோர்‌ நட்பின்‌ இயல்புகேள்‌ நவில்வேன்‌;
நன்னீர்‌ பாலிவை நட்பிற்‌ கலந்தன;
தன்னோடு கலந்த தூநீ ரதற்கு மன்னும்‌ பால்தான்‌ தன்னியல்‌ பலித்தது;
நெருப்புறு பாலது நிலைகுலைந்‌ தெழவே
விருப்புறு நீரும்‌ வீழ்ந்தது தீயினில்‌: துன்புறு தோழனுக்‌ குறுதுயர்‌ கண்டு இன்புறு பாலும்‌ எழுந்தது தீயுற;
பின்னுநீர்‌ நண்பன்‌ புனைந்து கலப்புற
இன்னுயிர்‌ திரும்பி அடைந்த தோரமைதி.

இங்ஙனே கேசவன்‌ இன்துயி லமர்ந்துளன்‌;
இங்ஙனே அவன்பகைக்‌ குழுவினர்‌ உளரே;
இங்ஙனே அடைக்கலம்‌ புக்கவாம்‌ வரைநுனி;
இங்ஙனே ஊழிக்‌ கொண்டல்கள்‌ உளவே;
இங்ஙனே அமர்ந்தது வடவைப்‌ பெருந்தீ;
தங்கும்‌ பொருட்குழமூஉக்‌ களிவிலை திரைக்‌்£ழ்‌
வித்தார மிக்கது விரிநீர்ப்‌ பெளவம்‌;
எத்தகை வல்லமை யடைந்துள திங்ஙனே.

வைத்த பாரம்‌ தாங்கும்‌ விழுப்பம்‌
எத்தகை யார்க்கும்‌ எய்துமோ வெளிதில்‌?
அவனிப்‌ பெருஞ்சுமை அ௮மைப்பாய்த்‌ தாங்க
தவறா தளித்தது தன்முது காமை;
வான்சோ இத்திரள்‌ வகையாய்ச்‌ சுழல
தான்மை யமாக வமைந்தனன்‌ துருவன்‌;
இவ்விரு தொண்டர்‌ எய்தினர்‌ பெரும்புகழ்‌
உயர்விலும்‌ தாழ்விலு மூுளபல பறவைகள்‌
செயவுள தென்னதொண்‌ டவைகளின்‌ சிறகால்‌?
அத்திப்‌ பழத்தின்‌ உள்ளுறும்‌ கிருமிபோல்‌
இத்தரை தன்னில்‌ இழிந்துமாய்ந்‌ துறும்பல.

நல்லோர்‌ இயற்கைகள்‌ நான்மூன்‌ றனவே;
ஆசையை யறுத்தல்‌; அரும்பொறை வளர்த்தல்‌;
உளச்செருக்‌ கொருத்தல்‌; தீமைசெய்‌ துடிப்பை
தீரத்‌ தொலைத்தல்‌; உண்மை யுரைத்தலே;
நல்லோர்‌ வழிபடல்‌; கற்றோர்க்‌ குதவுதல்‌
கல்வி மான்களைத்‌ தழுவி நடந்திடல்‌;
பிறர்புகழ்‌ பெருக்கல்‌, நல்லிசை காத்தல்‌
துயருளோர்க்‌ கிரங்கல்‌; துன்னுவாய்‌ துரிசற.

உளஞ்சொல்‌ உடலம்‌ மூன்ரும்‌ நன்மையாம்‌
உயிர்மருந்‌ ததனால்‌ நிறைந்தவராக
உலகமூன்‌ றுக்கும்‌ ஒருதெருப்‌ போல
அலகில்‌ லுதவிகள்‌ இயற்றிப்‌ போற்றி
மற்றவர்‌ மேங்குணம்‌ அணுவே யாகிலும்‌
உற்றவை தம்மை மலைபோல்‌ உயர்த்தும்‌
மெய்யுடை நெஞ்சம்‌ மலரென்‌ விரியும்‌
நையுமன்‌ புடையராம்‌ நல்லோர்‌ பலரே.

தைர்ய பத்ததி

கடைந்தனர்‌ கடலைக்‌ கடவுளர்‌ அமுதுற;
இடையிற்‌ கிடைத்தன உயிரொளிக்‌ கற்கள்‌;
அடைந்த அரதனம்‌ கொண்டோய்வில்லை;
அடலுறு கொடிய கடல்‌ நஞ்‌ செழுந்தது;
திட மிழஞ்தஞ்சி விடவிலை முயற்சியை;
அமுதம்‌ அகப்படும்‌ அதுவரை முயன்றனர்‌
விழுமிய முயற்சியிற்‌ றளர்விலர்‌ விரகர்‌.

அதமர்‌ மத்திமர்‌ உத்தமர்‌ இயல்கேள்‌;
அதமர்‌ முயலார்‌ இடர்தனக்‌ கஞ்சி;
இடருற்‌ றபோதே ஓய்வர்‌ மத்திமர்‌
இடர்பல உறினும்‌ உத்தமர்‌ ஓயார்‌.

கொண்ட முயற்சியிற்‌ கருத்துறு மறிஞர்‌
அண்டுமின்‌ பத்தையும்‌ துன்பையு மதியார்‌;
தளர்ந்து சில்போழ்து தரைமேல்‌ துயில்வர்‌
கிளர்ந்து சல்வேளை கட்டிலி லுறங்குவர்‌;
பச்சைக்‌ கறிகாய்‌ புசிப்பர்‌ பல்சமயம்‌
இச்சையாஞ்‌ சோற்றையும்‌ உண்பர்‌ சில்போழ்து?
பன்னும்‌ கந்தைகள்‌ புனைவர்‌ பல்நேரம்‌
பொன்னூ லாடையும்‌ புனைவர்‌ வாய்த்திடிலே.

நீதிநெறி நூலார்‌ புகழினு மிகழினும்‌
மீதுறும்‌ சம்பவம்‌ மிகுக்கினும்‌ தாழ்க்கினும்‌
உடனே சாகினும்‌ உறும்யுகம்‌ உய்யினும்‌
அடலுறு முளத்தவர்‌ அகலார்‌ நல்வழி.

அழகியர்‌ கட்கணைப்‌ போழ்விலா வகத்தன்‌;
கொழுவிய சினத்தீ கொளுந்துறா நெஞ்சன்‌;
ஆவல்‌ புலன்பொறித்‌ தூண்டலுக்‌ கிணங்கான்‌;
மூவுல கும்வெலும்‌ முரணவன்‌ அவனே.

திண்ணிய நெஞ்சர்‌ துயர்மிகப்‌ பெறினும்‌
திண்மை யதறுமோ ௦ திகழும்‌ மேன்மேல்‌
பந்தம்‌ தன்னைக்‌ &ழுறப்‌ பிடிக்கினும்‌
அந்தமாய்‌ மேலுறும்‌ அத்தீச்‌ சுடரே.

நன்னெறி விலகி நலமிழப்‌ பதிலும்‌
உன்னத வரைபாய்ந்‌ தொழிவுறல்‌ நன்றே
கூரெயிற்‌ றரசராக்‌ கொடியவாய்‌ தனிலே
நேறினிற்‌ கையை நுழைத்திடல்‌ நலமே;
நெறிவிட்‌ டிழிதலின்‌ எரியுறல்‌ நேரென
செறிபுகழ்ச்‌ சீரியர்‌ சாற்றினர்‌ சிறக்க.

எல்லோ ருளங்களுங்‌ கவர்ந்திடுந்‌ தூாய்மையோர்‌
சில்லெனும்‌ நீராய்‌ நெருப்பையுஞ்‌ செய்வர்‌;
கடலையுஞ்‌ சிறியதாம்‌ காலக மாக்குவர்‌;
வடமலை மேருவும்‌ இடந்தரு பாறையாம்‌;
விலங்க ரசாகிய வீரகே சநியும்‌
உளங்கொள்‌ மாத்திரத்தில்‌ உறுநல மானாம்‌;
களர்ந்திடுங்‌ கோளரா குளிர்ந்ததோர்‌ மாலையாம்‌;
நஞ்சு மமிர்‌ தமாம்‌; நல்லோர்‌ திறல்பால்‌.

வெட்டிக்‌ கழிக்கினும்‌ வளர்ந்திடும்‌ மரமே;
ஒட்டி வளர்ந்திடும்‌ கட்டதாம்‌ பிறையே;
இத்தகைக்‌ காட்சியை உற்றுநோக்‌ கறிஞர்‌
இத்தரைப்‌ பொருட்டே வடைந்திலர்‌ துயரே.

அன்புடன்‌ பழகுதல்‌ இறைமைக்‌ கணியாம்‌;
வன்கணாண்‌ மைக்கணி வணங்கிய சொல்லே;
பேரறி வாண்மைக்‌ கணியது பொறையே;
சேரரு மறைக்கணி செருக்கற்‌ நிருத்தல்‌;
செல்வத்‌ திற்கணி சறப்பறிந்‌ தீதல்‌;
மல்கருள்‌ தவத்திற்‌ கணியது மகிழ்வே;
தலைமைக்‌ கணியது தண்பொறை யுடைமை;
நிலையறத்‌ திற்கணி நினைபய னின்மை;
என்னோக்‌ குடையரும்‌ எவ்வினத்‌ தவரும்‌
தன்னுளங்‌ கொளுமணி தகைமைசால்‌ தூய்மையே.

தைவபத்ததி

வலனைத்‌ தொலைத்தவன்‌ வலியனாம்‌ இந்திரன்‌;
நலனைச்‌ சொலற்கு நேர்ந்தவன்‌ பிருகஸ்பதி;
வச்சிரா யுதமே வாய்ந்த படைக்கலம்‌;
உச்சித மான உம்பரே படைத்திறள்‌;
சுவர்க்கமே யவன்தன்‌ சிறப்புறு கோட்டை
எவர்க்கு முயர்ந்தவன்‌ விட்டுணு வாழ்த்தினன்‌,
அவனின்‌ நற்கரி ஐரா வதமே;
பவனி வருங்கால்‌ பாங்கா யமைந்தது,
மதிக்கத்தக்கவை மாண்புறு சேர்க்கை
அதிசய மான வலிமை யமைநீதவன்‌;
விதிவலி மிகுதியால்‌ எதுவுங்‌ காப்பிலை.
இத்தனை யுயர்வுள னாகிய இறைவனும்‌
இற்றனன்‌ போரில்‌ இசைகெடப்‌ பகைவரால்‌
ஆதலால்‌ நாமும்‌ அறிவது யாதெனில்‌
பேதையாய்ப்‌ பெருமையைச்‌ சொலிக்கொளல்‌ தவறே

முடங்கிய பாம்புள மூங்கிற்‌ பெட்டியை
மடங்கொளும்‌ எலியொன்றறுத்துளே முகர்ந்தது;
துயில்கலைந்‌ தெழுந்தது துட்டப்‌ பாம்பு;
அயில்நிகர்‌ பற்களால்‌ அலைத்ததை யுண்டது;
உண்டபின்‌ னரவம்‌ உற்ற வத்துளையால்‌
கண்டு வெளிப்புறங்‌ கழன்றோ டியதே
ஆதலால்‌ நண்ப அகற்றிடுன்‌ கவலை
போதுறும்‌ துயர்க்கும்‌ பெற்றிடுங்‌ களிக்கும்‌
ஓதுறும்‌ விதியே உற்ற காரணமாம்‌
போதுறும்‌ துயர்க்கும்‌ பெற்றிடுங்‌ களிக்கும்‌
ஓதுறும்‌ விதியே உற்ற காரணமாம்‌.

பெரியோர்‌ வீழினும்‌ பந்தென வீழ்வர்‌
சிறியார்‌ சிறுமையாம்‌ மண்ணுண்டை வீழ்ச்சிபோல்‌ பந்து வீழ்ந்திடில்‌ பறந்து மேற்களம்பும்‌;
உந்தி மேலெழுகுமோ உறுமண்‌ ணுண்டை

வெயில்பொறுக்‌ காதவோர்‌ வழுக்கைத்‌ தலையன்‌
நிழல்பெற விரும்பி நின்றனன்‌ பனைக்&ழ்‌;
பருத்தவோர்‌ பனங்காய்‌ பட்டென வீழ்ந்து
இரத்தந்‌ தோன்ற உடைத்தது மண்டையை;
விதிவசத்‌ தாலே வதங்குறும்‌ வறியனை
மதிக்கவ லைப்புண்‌ மதிக்குமே மேன்மேல்‌.

தலைவிதி யதற்கே தலைமையாம்‌ வலிமை
அலைகட லுலகில்‌ அதற்குமேல்‌ ஏது ?
கந்தடு கரியும்‌ கொடிய நச்சரவும்‌
வந்தகப்‌ படுமே வானுறு பறவையபோல்‌);
கதிர்மதி ஞாயிறும்‌ கோள்களால்‌ பற்றுறும்‌
எதிர்வுறும்‌ பொறியால்‌ அறிஞரும்‌ வறிஞரே.

குறைவில்‌ லாத குணம்நிறை கடலாய்‌
உறைவிட மான உலகினுக்‌ கணியாம்‌
அரதனம்‌ நிகர்த்த ஆண்மகன்‌ தன்னை
இரத மான இனியனை இயற்றியான்‌
அவனையும்‌ நொடியினில்‌ அக்கினி சேர்த்திடில்‌
இவனையு மந்தோ இருந்தை யென்போமே.

விதியின்‌ பயனை விலக்குதல்‌ எவர்க்காம்‌
நிதியாம்‌ அமுதம்‌ நிறைந்துள தவன்கண்‌,
சஞ்சீ வினிபோல்‌ சிறந்தவோ டதிக்கிறை;
அஞ்சிரு பதின்மராம்‌ மருத்துவ ரவனிடம்‌;
சம்புவாம்‌ பரமன்‌ சடைமுடி வதிபவன்‌;
அம்புவி இறைவர்க்‌ குறுபிணி கயமது
இம்மதிப்‌ பெரியனை இகவா தாகும்‌.

நண்பகேள்‌ நவில்வதை கலனாம்‌ பிரமன்‌
திண்ணிய குயவன்‌ மண்திரட்டு டுதல்போல்‌
உருட்டி உருவாக்குவன்‌ உளமாம்‌ பொருளை
புரட்டிப்‌ பெருந்துயர்‌ என்னுந்‌ தடியால்‌
ஓயா தொழியா துறுதியா யடிப்பன்‌;
ஓவாத்‌ தொடுகையால்‌ உலர்ந்ததை மறுபடி
கவலையாம்‌ சக்கர மீதினில்‌ சுழற்றுவன்‌;
கவலை யிறைப்பிற்‌ சுழலல்போல்‌ கலங்குறும்‌,
இவ்வகை விஷமம்‌ இயற்றலால்‌ பிரமன்‌
எவ்வகைப்‌ பயனுறும்‌ உணரோம்‌ யாமே.

முட்டாள்‌ விதியே ! முயலா தேநீ !
முட்டுற்ற போது முரணவர்‌ முரணற !
பெருமலைக்‌ கூட்டமோ பெருங்கடற்‌ றொகுதியோ
உறுநீ்தம்‌ வலிமை உகுந்திடும்‌ முடிவிலும்‌
அறுமோ அவைதம்‌ அழகிய பெருமை
உறுமோ தீரர்‌ உரமும்‌ இறுதியை
கற்பாந்‌ தத்திலும்‌ கரையா தவர்திறல்‌
விற்பனர்‌ மேன்மை அற்றிடல்‌ இலையே.

மண்ணுல கத்திற்‌ பிறந்தமா னிடத்திற்கு
கண்ணும்‌ பிரமன்‌ கதித்ததே கையுறும்‌;
வல்லவர்‌ சேர்க்கையால்‌ மேன்மேல்‌ வருதல்‌
ஒல்லுஞ்‌ செயலல உற்றுநோக்‌ கஇிடிலே,
எல்லா விருப்பும்‌ நிறைவுற எழிலிகள்‌
செல்லார்‌ வானின்‌ சொரிபொழு தெல்லாம்‌
விண்வீழ்‌ துளிக்கு விரும்பி யலைபுள்‌
நண்ணும்‌ நன்னீர்‌ சிற்சில துளிகளே.

கர்மபத்ததி

கடவுளர்‌ தமக்குநாம்‌ கருதுவோம்‌ வணக்கம்‌;
அடலுளார்‌ அவரும்‌ அமர்ந்தவர்‌ விதிக்‌£ழ்‌;
தலைவிதிக்‌ கும்நாம்‌ தலைவணங்்‌ கல்முறை;
தலைவிதி தானும்‌ தந்திடும்‌ வினைப்பயன்‌
வினைப்பயன்‌ கிடைப்பது விளையினா லேயெனின்‌
வினையன்றி மற்றவை யாலே பயனென்‌ 9
விதியுங்‌ கூட வினைக்கப்‌ புறத்தான்‌,
விதிவினை நீக்கி வினைசெயல்‌ இலையெனில்‌
வினைக்குத்‌ தானே விழுப்பஞ்‌ செய்வோம்‌
வினையினும்‌ வல்லது விண்ணிலு மிலையே.

அண்டமாம்‌ பிண்டத்து உட்புறத்‌ திருந்து
ஒண்டிறற்‌ பிரமன்‌ குயவனாய்‌ உழைத்துளன்‌;
காக்குங்‌ கடவுளும்‌ கடலினுட்‌ டங்குவோன்‌;
நோக்கிப்‌ பத்தவ தாரம்‌ நிகழ்த்துவோன்‌;
மண்டையோட்‌ டுடனே மகிமைசேர்‌ சிவனும்‌
அண்டமெ லாமுழன்‌ றலைவன்‌ பிச்சையாய்‌
பானுவாம்‌ வெங்கதிர்‌ பகர்விதிக்‌ கொடுமையால்‌
வானெலாந்‌ தினந்தோறும்‌ வருவன்‌ சுழன்று
வினையின்‌ வலிமையே விளைத்ததிக்‌ கதிகளை;
வினைவல்‌ லமைக்கே விழுப்பஞ்‌ செலுத்துவோம்

‌நல்லோ னேகேள்‌ நற்பய னடைய
பொல்லோர்‌ தமையும்‌ புண்ணிய ராக்கும்‌,
நல்லதாம்‌ விழுச்செயல்‌ வணங்குவாய்‌ நலம்பெற
கல்லார்‌ தமையும்‌ கற்றவ ராக்கும்‌;
பொல்லாப்‌ பகைவரும்‌ பொருந்துவர்‌ நண்பராய்‌
புலப்படா வற்றைப்‌ புலப்படச்‌ செய்யும்‌
கடல்படு நஞ்சைக்‌ கிளரமு தாக்கும்‌;
இடர்தமை விளைக்கும்‌ இயல்புகள்‌ கடிக.

நற்செயற்‌ பயன்கள்‌ நணுகுறுங்‌ காரும்‌
விற்செறி யரண்மனை, விழைவுரும கிறுமிகள்‌,
ஒள்ளிய வெண்குடை யுயர்நிழ லரசு
தெள்ளிய இன்பெலாம்‌ தானாய்‌ வந்துறும்‌;
நல்வினைத்‌ தொடர்கள்‌ நைந்திட்ட னவேல்‌
புல்லும்‌ இன்பச்‌ சரடது புரைபடும்‌.
அன்புறு காதலார்‌ அணுகாப்‌ பகைவராய்‌
இன்ப முத்தாரம்‌ இற்றுச்‌ சிதறல்போல்‌
பற்பல நற்பொருள்‌ பலவழி அகலும்‌
இற்பொருள்‌ சுற்றம்‌ இவையெலாம்‌ மறையும்‌.

எச்செயல்‌ செயினும்‌ எண்ணிச்‌ செயல்நலம்‌
அச்செயற்‌ பயன்களை ஆய்ந்தறிந்‌ தியற்றுக,
அவசர அடியாய்‌ அமைந்திடும்‌ அலுவல்‌
சிவப்பாம்‌ தணலெனச்‌ செதுக்குறும்‌ நெஞ்சை.

செயல்நிறை வாகச்‌ செறிந்த இவ்வுலகில்‌
செயல்செயும்‌ சுழலில்‌ சேர்ந்துழல்‌ ஒருவன்‌
உய்யும்‌ வழியாம்‌ உயர்தவ மிகந்தால்‌
பெய்யம்‌ எள்ளை நெல்லெனச்‌ சமைப்பவன்‌
தாழ்வாம்‌ விளைபொருள்‌ தழைத்தற்‌ பொருட்டு
மேலாம்‌ பண்டம்‌ மிகஅழிப்‌ பவனாம்‌.

உருவத்‌ தெழில்நலம்‌ உயர்குடிப்‌ பிறப்பு
திருத்தமாம்‌ நன்னடை தீர்புரைக்‌ கல்வி
ஆய்ந்துணர்ந்‌ தியற்றும்‌ அறிஞர்‌ பாற்றொண்டு
வாய்ந்த இவ்வியாவையும்‌ வளந்தரல்‌ சிறிதே;
நட்ட நன்மரம்‌ நாட்செல்‌ வதனால்‌
உற்ற நற்கனியை உகந்தே தரல்போல்‌
முற்பிறப்‌ பவைகளில்‌ முயன்றுசேர்‌ நற்பயன்‌
இப்பிறப்‌ பதனில்‌ ஈந்திடும்‌ நலமே.

ஆர்கலி ஓடினும்‌ மேருமுக டேறினும்‌
போர்க்‌ களந்தனிற்‌ பகைவரை வெல்லினும்‌
வாணிபம்‌ பயிர்த்தொழில்‌ வளமாய்க்‌ கற்கினும்‌
பன்னும்‌ பல்கலை பயின்று பறவையபோல்‌
அகல்வா னத்தில்‌ ஆரப்ப றக்கினும்‌
புகல்முற்‌ செயலால்‌ பூதலந்‌ தன்னில்‌
நிகழ விதித்தது நீங்குத விலையே
வகுத்தான்‌ வகுத்த வகைமா றுறுமோ

காடு போர்க்களம்‌ கதழெரி பகைக்‌ குழு
ஆடுநீர்‌ நடுக்கடல்‌ ஒங்குதலை மலையே
தூக்கம்‌ களிமயல்‌ துன்புறும்‌ இறுநிலை
ஊக்கிய முன்னறம்‌ உயிர்காத்‌ இடுமே.

முற்செய்‌ நன்மை முதிரறி வோர்க்கு
முற்றுல கெங்கனும்‌ நிதிமணி நிறைந்ததாம்‌,
அஞ்சத்‌ தகுங்காண்‌ அம்பே ரூராம்‌
எம்மா னிடரும்‌ தம்மவர்‌ ஆவரே.
நீதிசதகம்‌ முற்றிற்று

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

    Leave a Reply


    Discover more from Thiruvonum's Weblog

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading