ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌– ஸ்ரீ திருநாராயணபுரம்‌ அரையர் -ஸ்ரீ உ .வே .ஸ்ரீ ராம சர்மா ஸ்வாமிகள்-பகுதி-3–

15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–

23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-

இனி மேல்‌ திருவாய்மொழியில்‌ பத்துப்‌ பத்தாலும்‌ பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ தமக்குப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார்‌-

218-பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன்‌ மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம்‌ கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக்‌ கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலாஸத்தி பல திக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத் தோறும்‌ வெளியிடுகிறார்‌.

இப்படி ஈஸ்வரன்‌ தமக்குப்‌ பண்ணிக்‌ கொடுத்த தஸைகளைப்‌ பத்துப்‌ பத்தாலும்‌ வெளியிடுகிறார்‌.

24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–

219-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள்‌ உம்பர்‌ வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன்‌ என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர்‌ சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய்‌ நீயும்‌ நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம்‌ ஸம்ஸாரிகளுக்கமாம்படி வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து எளிதாக ௮வதரித்துப்‌ பிழைகளை ஸஹித்துப்‌ புரையறக்‌ கலந்து அல்ப ஸந்துஷ்டனாய்‌ அம்ருதமே ஒளஷதமாக்கி நீர் புரையத்‌ தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும்‌ இனிமையுமுண்டு, தொழுதால்‌ அரும்‌ பயனாயதரும்‌, உத்‌யோகத்தே வினைகளும்‌ மாளும்‌, ௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று தாம்‌ மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார்‌ முதற்பத்தில்‌.

220-சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன்‌ அறியாதன அறிவிக்க உள்ளம்‌ தேறித்‌ தூ மனம்‌ மருளிலென்னும்‌ ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம்‌ தேடிவாட, உலராமலாவி சேர்ந்து சிக்கனப்‌ புகுந்து ஸம்பந்தி களும்‌ சேர்தல்‌ மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர்‌ ஆஸ்ரயணீயனுக்குப்‌ பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்‌யாதிகளைத்‌ திண்ணன்‌ அணைவதென்று வெளியிட்டு கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டிப்‌ புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப்‌ பெருக்கி முழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதும்‌ செய்து இளமை கெடாமல்‌ செய்யும்‌ க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத்‌ யங்க யுக்தம்‌ ஆக்குகிறார்‌ இரண்டாம்‌ பத்தில்‌.

221-(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..

222-(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் 

223-(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

224-(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

225-(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

226-தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்‌னும் படி சக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன்‌ கொண்ட வாக்‌ வ்ருத்தியையும்‌ மறப்பிக்கும்‌ கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும் தீர, தலைச்‌ சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர்‌ தலைவன்‌ கந்யகாதநம்‌ போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப்‌ பணைத்து ஜந்ம பாஸம் விட்டு ஆத்‌வாரம்‌ ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்‌ மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அரு வினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேனென்றதின்‌ பெருமையைக்‌ காட்ட தேஹாதிகளில்‌ பரமாய்‌ கன்று நினைக்கில்‌ லக்ஷ்மீ துல்யமாய்‌ அவர்க்கே குடிகளாம்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌ ஸ்வ ஸாதந ஸாத்‌யஸ்தர்‌ இரு கரையராகாமல்‌ மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக் கொண்மின்‌ உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார்‌ எட்டாம் பத்திலே –

227-எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற ஆலின்‌ மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின்‌ லயாதிகளைப்‌ போக்குமாபத்ஸகன்‌ ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக்‌ கூவுதல்‌ வருதலென்று முடுகவிட்டு ஏகமெண்ணிக்‌ காணக் கருதி எழ நண்ணி நினை தொறும்‌ உருகி யலற்றிக்‌ கவையில்‌ மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம்‌ ஒருபகல்‌ பொறுத்தவர்கள்‌ ஒரு மாஸ தின ஸந்த்‌யையில்‌ படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக்‌ கீடாக இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத்‌ தம்பிக்‌ கிட்டதாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப்‌ பெற்றவர்‌ இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக்‌ காட்டி மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌, அதில்‌ துர்பல புத்‌திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி, அதில்‌ அஸக்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி அதில்‌ அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌, ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும்‌ பாடியிடும்‌ தண்டனென்று கீதாசார்யனைப்‌ போலே அதிகாராநுகுணம்‌ நெறி யெல்‌லாம்‌ உரைக்கிறார்‌ ஒன்பதாம்‌ பத்தில்‌.

228-சுரிகுழல்‌ அஞ்சனப்‌ புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக்‌ காயாவென்னும்‌ ஆபத்திற் கொள்ளும்‌ காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன்‌ அருள் பெறும்‌ போதணுக விட்டதுக்குப்‌ பலமான வானேறும்‌ ௧திக்கு அண்ட மூவுலகும்‌ முன்னோடிக்‌ கால்‌ விழுந்திடத்தே நிழல்‌ தடங்களாக்கி அமுதமளித்த தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே வேடன்‌, வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம்‌, இடைச்சி, இடையர்‌, தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர்‌, பிணவிருந்து, வேண்டடிசில்‌ இட்டவர்‌, அவன் மகன்‌, அவன் தம்பி, ஆனை, அரவம்‌, மறையாளன்‌, பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன்‌ பெருங்கூட்டம்‌ நடத்தும்‌ ஆத்தனை வழித் துணையாக்கி அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல்‌ போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்‌ ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தஸையானவாறே முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து, வலம்‌ செய்து எண்ணுமின்‌ பேசுமின்‌ கேண்மின்‌ காண்மின்‌ நடமின்‌ புகுதுமென்று கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டுப்‌ பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து எண்பெருக்கிலெண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி மாதவனென்று த்‌வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்துச்‌ செஞ்சொற் கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு மனம்‌ திருத்தி வீடு திருத்தப்‌ போய்‌ நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம்‌ தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம்‌ புறப்பட்ட வாக்கையிலே புக்குத்‌ தான நகர்களை அதிலே வகுத்துக்‌ குரவை துவரைகளில்‌ வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம்‌ அறிவித்து மாயையை மடித்து வானே தரக்‌ கருதிக்‌ கருத்தின் கண்‌ பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்‌ யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க இந்த்‌ரிய கிங்கரராய்க்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌, அவை யாவரையும்‌ அகற்ற நீ வைத்தவை யென்பர்‌; அது தேஹ யோகத்தாலே யென்னில்‌ அந் நாள்‌ நீதந்த சுமடென்பர்‌: முன் செய்த முழு வினையாலே என்னில்‌, அது துயரமே உற்ற விருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌ ; ஈவிலாத மதியிலேன்‌ என்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில்‌, ஆங்காரமாய்ப்‌ புக்குச்‌ செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌; யானே எஞ்ஞான்றும்‌ என்றத்தாலே யென்னில்‌; அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழிலென்பர்‌: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்‌; தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌; ஸெளஹார்தம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌; பிணக்கிப்‌ பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில்‌ அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள்‌ நம்மது; நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌; நெறி காட்டி அருகும்‌ சுவடும்‌ போலே இதுவும்‌ நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம்‌ போலே ஏறப்‌ பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத்‌ தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு போகாமல்‌ தடுத்துத்‌ திருவாணை யிட்டுக்‌ கூசம்‌ செய்யாத செய்திப்‌ பிழை பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; புறம் போனால்‌ வருமிழவு, உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம்‌, உயிருறவு முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல்‌ போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌.

16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—— 1

இனிமேலிவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தராய்க்‌ கொண்டு ஸரணம்‌ புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில்‌ அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும்‌ இவர்க்குப்‌ பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான்‌ என்கிறார்‌.

229-உறாமையோடே உற்றேன்‌ ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப்‌ பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம்‌ தலைக் கட்ட, வேர்சூடுவார்‌ மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும்‌ இனி இனியென்று இருபதின் கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்‌யம்‌.

26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—–4–

ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச்செய்கிறார்‌

230-கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.

231-இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.

232-முடிந்த அவாவென்றது பரமபக்தி.

233-இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.

27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 ———1

234-அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.

அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading