ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதய நாடகம்–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

யதி பக்தி ப்ரசயாத்மகே தினமுகெ த்ருஷ்டி ஷம ஷேத்ரிண
ஷிப்‌ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிடதியத்‌ ஸக்கல்ப ஸூர்யோதய
தத் வைரஸ்‌த்‌ர விபூஷணை ரதிகத ஸ்வாதீன நித்யோன்னதி
ஸ்ரீமாநஸ்‌ துஸமே ஸமஸ்த விபதுத்தாராய நாராயண

நாடக பாத்திரங்கள்
ஸ்ரீ மஹாவிஷ்ணு ; ஸ்ரீதேவி; பூதேவி, நீளாதேவி–நாரதர்‌, தும்புரு-ஆசார்யன்‌, சிஷ்யன்‌ -ஹித்தாக்த வாதிகள்‌
ஸுத்ரதாரன்‌, நடி.
புருஷன்‌ (ஜீவாத்மா)
விவேகன்‌ – ராஜா
மஹா மோஹன்‌ — அஞ்ஞானம்‌
வ்யவஸாயன்‌ –விவேகனது ஸேனாதிபதி
தர்த்கன்‌ விவேகனது ஸாரதி
ஸம்ஸ்காரன்‌ -விவேகனது சில்பி த்ருஷ்டப்‌ரத்யயன்‌ -விவேகனது தூதன்‌
ஸங்கல்பன்‌, விஷ்ணு பக்தி –பகவானுடைய ஆட்கள்‌
விரக்தி, துஷ்டி, ௮தி௧ த்ருஷ்டி–வேலைக்காரிகள்‌–சாந்தி, ஸத்ருச த்ருஷ்டி–வேலைக்காரிகள்‌
காமன்‌ –மன்மதன்‌
வஸந்தன்‌ காமன்‌ நண்பன்‌
ராகன்‌, த்வேஷன்‌, க்ரோதன்‌, லோபன்‌, டம்பன்‌, தர்ப்பன்‌ (கர்வன்‌)–மஹா மோஹனது மந்திரிகள்‌
ஸம்வ்ருதி ஸ்‌த் யன்‌ -மஹாமோஹனுடைய தூதன் —

புத்தி -புருஷனுடைய பத்னி
ஸுமதி –விவேகனுடைய மனைவி விசாரணை –ஸுமதியின்‌ தோழி
முதிதா –ஸூமதியின்‌ தோழி
துர்மதி –மஹா மோஹனின்‌ மனைவி
ரதி –காமனின்‌ மனைவி
த்ருஷ்ணை ( ஆசை) -லோபனின்‌ மனைவி
குஹனை (வஞ்சனை) –டம்பனின்‌ மனைவி
அஸூயை –தர்ப்பனின்‌ மனைவி

இடம்‌ :–ஸ்வேத த்வீபம்‌.

ஸூத்ர தாரன்‌ பிரவேஸம் –

ஸ்ருங்காராதி ஸகல ரஸ ரூபங்களையும்‌ தன்னிடத்தேயே பூண்டதாயும்‌, மகா ஸ்லாக்யமுமான சாந்தி ரஸம்‌ ததும்ப, விவேகாதி மனுஷ்ய ஸ்வபாவங்கள் அனைத்தையும்‌ நாடக பாத்‌திரங்களாக அமைத்து, மாறி மாறிப்‌ பிறந்திறந்து கரை யறியாது உழன்று வரும்‌ பாமரர்களை ஸம்ஸார அந்தகாரத்தினின்றும்‌ மீட்க வல்லதான பகவத்‌ ஸங்கல்பமாம்‌ ஸுூர்யோதயத்தை வெளிப்படுத்த, யாவரையும்‌ நித்ய ஆனந்தத்‌திற்கு உள்ளாக்க வேண்டுமென்பது, சகல கலா வல்வைர்களும்‌ ஆசார்ய ஸ்ஷ்ரேடர்களுமான பெரியோர்களது ஆக்ஞை. ௮த்தகைய ௮ஞ்ஞான அந்த காரத்தைப்‌ பேதித்து, நித்யானந்த வெளிச்சத்தில்‌ நம்மைப்‌ புகுத்த வல்ல ௮ருணோதயமாகக்‌ கூடிய ஞான வொளியை அளிக்குமாறு ஆதி மூர்‌த்தியான ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி ௮ருள்‌ புரிவாராக.

நடிப்‌பிரவேஸம்

ஸுத்ர.--ஆர்யே ! நமது நாடக பாத்திரங்கள்‌ தயாராயுள்ளனரா?

நடி.--ஆர்ய! எந்த க்ஷணத்தில்‌ எந்த நாடகத்தை நடித்துக்‌ காட்ட உத்திரவோ, ௮ந்த ஷணத்திலேயே அதற்காக. ஆயத்தமாகக்‌ கூடிய நடிகர்கள்‌ நம்மிடமிருக்கையில்‌ உமக்குச்‌ சிந்தையேன்‌ ? இப்பொழுது தாங்கள்‌ நடித்துக் காட்ட விரும்பும்‌ நாடகம்‌ யாதோ?

ஸூத்ர.–மனுஷ்ய ஸ்வபாவம்‌ ஒவ்வொன்றையும்‌ ௮தற்க்‌குரித்தான அபிமான தேவதையாக நடிக்கச்‌ செய்து விவேகனைக்‌ கதா நாயகனாக்‌கி ,-அன்னான்‌ தன்‌ வைரியாம்‌ மஹா மோகனை எதிர்க்குமிடங்களில்‌ யுத்த வீர ரஸத்தையும்‌, பரமாத்மா ஜீவனுக்காக வருந்தி இரங்கு மிடகளில்‌ தயா வீர ரஸத்தையும்‌, மற்றும்‌ ஞான வைராக்ய மடைந்த ஜீவாத்மாவை முக்தனாக்கு மிடங்களில்‌ சாந்தி ரஸ ஸ்வரூபத்தையும்‌ மிகுத்‌து , இதர ரஸ பாங்களை ஆங்காங்கே ஏற்றபடி அமையக் கொண்டதுமான ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும்‌ தனக்கிணை யற்றத்‌ தனிப் பெரும்‌ நாடகத்தை நடித்துக்‌ காட்ட விரும்பி யுள்‌ளேன்‌– அர்ஜூனனை வியாஜ மாத்‌திரமாகக் கொண்டு கீதை என்கிற அமிர்தத்தைக்‌ கண்ணன்‌ உலகத்தோர்க்கு அளித்தருளினாப் போல லோகோத்தாரணார்த்தம்‌ ஓர்‌ வ்யாஜ மாத்‌திரமாக, கவி ஸ்ரேஷ்டரும்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டருமானவரால்‌- குணாகுணங்‌கலைப்‌ பிரித்துக்‌ காட்டி ஞானத்தை உண்டாக்குமாறு எழுதப்பட்டதாகும்‌ இந்த நாடக ரத்னம் –

நடி. -ஆச்சர்யம்‌! நம்மைக்‌ கெளரவிக்க வந்திருக்கும்‌ இச்‌ சபையோரது மட்டிலா மதிப்பைப் பெற்ற அந்நாடகத்‌தின்‌ ஆசிரிய ஸ்ரேஷ்டர்‌ யாவரோ

ஸுத்ர.–நீ அறியாயா ₹—தன்‌ தபோ பலத்‌தினால்‌ புதியதோர்‌ இந்திர லோகம்‌ படைத்த விஸ்வாமித்ரருடைய கோத்ர பரம்பரையினரும்‌, புண்டரீகாஷ ஸோமயாஜி யென்னப்‌ பட்டவரின்‌ புத்‌திரராம்‌ ௮நந்த ஸூரியென்னும்‌ வித்யா நிதியின்‌ திருக் குமாரருமான வேங்கடநாத னென்னும்‌ திருநாமங்‌ கொண்ட கவிதார்க்கிக ஸிம்ஹமே இந் நாடக ஆசிரியராவர்‌–கமலாஸனனால்‌ எம்பெருமானது திரு வாராதனக்‌ காலங்களில்‌ ௮ஸுர குல த்வம்ஸத் தொனி போல்‌ கண கணவென சப்‌திக்கும்‌ கண்டையின்‌ திருவவதாரமே யென சாஸ்திரஞ்ஞர்களால்‌ ஊகிக்கப்‌ பட்டவரும்‌, ஸ்ரீரங்ககாதனது நியமனத்தால்‌ வேதாந்தாசார்யனென்ற பிருது பெற்றவருமான ஸ்ரீ பாஷ்யகாரரின்‌ சிஷ்ய பரம்‌பரையை உடைய ௮ந்த உபய வேதாந்தப் பிரவர்த்தகரே பகவத்‌ பிரீதி கரமாக இவ்வஸாதாரண நாடகத்தை உலகோர்க்களித்‌தவர்‌ ! |

நடி- அவருடைய கருணாப்‌ பிரபாவம்‌ அளவிடத் தக்கதல்ல தான்‌. ஆயினும்‌, சாந்தி ரஸம்‌ நாடகத்திற்கு எடுக்கப்‌ பட்டத்ல்ல வென்று ஒரு வகுப்பார்‌ கூறுகிறார்களே-

ஸூத்ர-மஹா ஸ்லாக்யமான சாந்தி ரஸானுபவஞ் செய்ய வல்ல ்‌ சபையோரும்‌, சாந்தி ரஸ பாவங்களை நடித்‌துக் காட்ட வல்ல “நடிகர்களும்‌ கிடைப்பது துர்லபமான காரியமென்ற அபிப்பிராயத்தினாலேயே தான்‌ நாடக நூல்களில்‌ சாந்தி ரஸம்‌ எடுக்கப்படுவதில்லை. ஆகவே தான்‌ அதை ஸபைகளில்‌ ௮பிநபிப்பது ௮சக்யமென்று ஒரு தரப்பரால்‌ ஒதுக்கப் பட்டது, ஆனால்‌, உண்மையில்‌, நவ ரஸங்களிலும்‌ ஸ்லாக்யமானது இந்த சாந்‌தி ரஸமே. ஸ்ருங்கார ரஸத்தில்‌ சபைபில்‌ அபிநயிக்கத்‌ தகாத பாவங்கள்‌ உண்‌டாகக் கூடும்‌-வீர ரஸ அபிநயத்தில்‌ ஒருவர்‌ மற்றொருவரை அவமதிப்பதே மேம்படுகின்றது– அத்புக ரஸமோ நம்பத் தகாக பொய் மிகுந்த விஷயங்களையே எடுத்துக்‌ காட்ட வல்லது- இதர சாதாரண ரஸ பாவங்களும்‌ ௮ற்ப மானவையே. சாந்தி ரஸமோ மனோ துக்கங்களைப்‌ போக்கி உண்மையை வெளிப் படுத்திச்‌ சந்‌தோஷத்தைக் கொடுக்க வல்லது காண்‌.

நடி.-வாஸ்தவமே! ஆயினும்‌, ஸாதாரண ஜனங்களும் பார்தது அனுபவிக்க வேண்டிய நாடகங்களில்‌, இந்தப்‌ பரமோத்‌ திருஷ்டமான சாந்தி ரஸத்தை மிகுத்திக்‌ காட்டக்‌ கூடுமா வென்று தான்‌ எனக்குச்‌ சந்தேகமா யிருக்கிறது –
ஸுத்ர–பெண்ணே ! நாடகத்தின்‌ உண்மையான தத்வத்தை நீ பூர்ணமாய்‌ அறிந்திட்டாயில்லை போலும்‌. நாடகானு குணமாக உபயோகப் படுத்தக் கூடத சாஸ்‌திரங்கள சாஸ்‌திரங்களல்ல-வித்யைகள்‌ வித்யைகளல்ல-சித்திரங்கள்‌ சித்திரங்களல்ல, கலைகள்‌ கலைகளல்ல, யோகங்கள்‌ யோகங்களல்ல, ஞானமும்‌ ஞானமல்ல.
நடி.--எப்படியாபினும்‌, சபல சித்தம்‌ வாய்ந்த என்‌ பேதை மனத்துள்‌, தாம்‌ கைக் கொண்ட காரியம்‌ மகா பிரயாஸகரமானதாகவே படுகிறது-துவேஷ வசத்தினராகிய பண்டிதர்களது கண்டன மொழிகளைக்‌ குறித்தே அஞ்சுகிறேன்‌. ஸுத்‌ர. பேதாய்‌! இதற்கோ அஞ்சுவது ? பகவத்‌ ஸங்கற்ப மாத்‌திரமாய்‌ கல்விக் களஞ்சியத்தினின்றும்‌’ நமக்குக் கிடைத்த, தோஷ ரஹிதமான ரஸ பாவ ஸ்ரேந்த யஸ்‌ மிகுந்த இந்த நாடகத்தை, தேர்ந்த நடிகர்கள்‌, பஷபாதமற்ற மஹா பெரியோர்கள்‌ நிறைந்த இந்த ஸபையில்‌ நடித்‌துக்‌ காட்டுவதைக்‌ குறித்துமா நீ அஞ்சுவது? பெரியோர்‌கள்‌ மனத்தில்‌ ௮வர்களையுமறியாது ௮ஸுூயை உதித்‌தாலும்‌ ௮து மின்னல் போல்‌ ஷணத்திலேயே மறைந்து ஓழியக்‌ கூடியதாகும்‌. துவேஷ வசப்பட்டவர்‌, வெளிக்கு வெறுப்புக் காட்டிய போதிலும்‌, மனத்துள்‌ நம்‌ நாடகத்தைப்‌ புகழ்ந்தே மதிப்பார்கள்‌ என்‌பதை நம்‌பு -ஆகவே ஸபையோரின்‌ ஆதரவை மேற் கொண்டு அன்னாரது ௮னுக்‌ரகத்தை வேண்டிக்‌ குதாகலக்துடன்‌ நடிகர்களை வரச் செய்‌து நாடகத்தை ஆரம்பிக்கலாம்‌ வா. (போகிறார்கள்‌)

அங்கம்‌ 1-முதற்‌ காட்‌சி -இடம்‌ :–ஸ்ருங்கார வனம்‌-வஸந்தன்‌ தொடர, ரதியும்‌ காமனும்‌ குதூகலத்‌துடன்‌ பிரவேஸம் –
காமன்‌:–
வஸந்தா !. விவேகனது வீண்‌ ‘ ‘ஆரவாரத்தைப்‌ பார்த்தாயா ?. ஸ்திரிகளின்‌ புருவமாகிற தனுஸ்ஸினின்‌றும்‌- அவர்களது அகத்தின்‌ சஞ்சலத்தைப்‌ புறத்‌தே காட்டுவன போன்ற விழிகளாம்‌ புஷ்ப பாணங்களாகிற கடைக் கண்‌ நோக்கு வெளிப்படுமாயின்‌, இந்‌த விவேகன்‌ எந்தத்‌ திக்கில்‌, தான்‌ இருக்கக்‌ கூடுமென்பதை அறிவனா-

வஸந்‌.—வாஸ்‌தவமே !–நண்ப! நமது மகாராஜா மகாமோகனுக்கே மங்கள முண்டாகுமாறும்‌, விவேகளுக்குப்‌ பீதியை யுண்டாக்குமாறும்‌, மன்மத மகோத்ஸவமாம்‌ உனது திருவிழாவை இப்பொழுதே நான்‌ தொடங்கப்‌ போகிறேன்‌.

காமன்‌.–௮தவே ஸரி, விவேகன்‌ ஜெயிக்கப்படுவது திண்ணம்‌, |

ரதி.-நாதா! உத்ஸவம்‌ உண்மையில்‌ எனக்கு உத்ஸாகத்‌தைக்‌ கொடுக்க வில்லையே ! தடுத்தற்கரிகானதோர்‌ விதியினால்‌, வெல்லுதற்கரிதான விவேகன்‌, மகாராஜன்‌ மகா மோகனது ஜென்ம வைரியாக அமைந்ததை நினைக்க நினைக்க, எனக்கு மனவமைதி உண்டாக வில்லை!

காமன்‌.–பேதமை மிக்கவளே! சமமானதோர்‌ வீர வைரியை எதிர்த்‌து வெற்றியுடன்‌ வெளிவர வேண்டிய சந்தர்ப்பம்‌ நமக்குக்‌ கிடைத்ததைக் கண்டு மகிழ்வதை விட்டு, அவ்‌ விவேகனது வைபவத்தைப் பாராட்டி புகழ்வதுவோ முறை? ‘ஹ! ஹ! ஹ! மேருவையே தனுஸ்ஸாகக்‌ கொண்ட முக் கண்ணனும்‌ என்‌ கரும்பு வில்லின்‌ கணைக்‌குட்பட்ட வனல்லவா

வஸர்‌.–.ராணி யறியாத ரகஸ்யமல்லவே ௮து ! மன்மத ராஜனின்‌ மகிமை பண்டை பரம்பரையாய்ப்‌ பரவி வருவ தல்லவா ? பிரம்மனும்‌ பத்தினியை வேதமோதும்‌ தன்‌ நாவிலேயே வைத்து மகிழ்வதேன்‌ ? ருத்‌ர மூர்த்தியும்‌ தனது வாம பாகத்தையே ஓர்‌ மாதுவுக்கு, அர்ப்‌பணஞ்‌ செய்து விட்டதேன்‌ ? யாவராலும்‌ கொண்டாடப்படும்‌ அந்தப்‌ பரதத்வமும்‌ ஆய்‌ச்சியர்க்கே ௮தீனமாய்க் கிடந்ததேன் ? மும்மூர்‌த்திகளுமே காமன்‌ கணைக்‌கிலக்காகிக்‌ கலங்கிக்‌ கிடந்தனரென்றால்‌, விவேகனது கூட்டத்தாராம்‌ ௮ற்பர்களா மதன பாணாவஸ்தையை மீற வல்லவர்கள்‌ –

ரதி-எனினும்‌, வைராக்யமென்னும்‌ கோட்டைக்குள்‌, முன்‌னறிவு மித்க மந்திரிகளது உதவியும்‌ விடா முயற்சியுமுடையவனாகிய ௮ஸகாய ஸூரனான விவேகன்‌ நமக்கு எக்கணம்‌ யாது இன்னல்‌ விளைவிப்பனோ என்‌ற கலக்கம்‌ என் மனத்தை விட்டு ௮கலத் தான்‌ இல்லை.

காமன்‌. –௮டி. பயங்கொள்ளி ! ஸ்திரீகளுடைய சரீர ௮மைப்‌பையே ஓத்த இந்த வில்லும்‌ நாணும்‌ ௮ம்புமே, இப்‌ பிரபஞ்சமனைத்தையும்‌ ஜெயிக்க வல்ல உன்‌ பர்த்தாவின்‌ கொடி கணைகள்‌ ஆகும் காண்‌. மதுரச்‌ சொற்‌களை யுடைய ஸ்‌திரீகளது பெயரையே கேட்ட மாத்திரத்தில்‌ ஒருவனது விரக்தியாதி சகல நற் குணங்களும்‌ இருந்த விடரம் தெரியாது பறந்தோடிப் போய்‌ விடாதா !
வஸந்‌, -ஸ்திரிகளது, குணங்களைப் பற்றி யோசிப்பது இருக்கட்‌ டும்‌. அவர்களிடம்‌’ தோஷத்தை எண்ணுவதற்காக அவர்களை நினைப்பதே போதுமே வைராக்யத்தை விலகி நிற்கச் செய்ய ! ஹ! ஹ! மத யானையாம்‌ மனததைத் தன்‌ தைர்யத்தினால்‌ அடக்கப்‌ பார்ப்‌பது-ஐராவதத்‌தைத் க தாமரைத்‌ தநதுவினால்‌ கட்டச் சமைவது ஓக்கும்‌.

ரதி.–ஏன்‌ ?– புத்தியால்‌, மோஷ பர்யந்தமான யாவற்றையும்‌ ஒருவன்‌ ஸாதித்துக்‌ கொள்ளக்‌ கூடுமென்பது ப்‌ரஸித்த மல்லவா ?

காமன்‌.–(கோபச்‌ சிரிப்புடன்‌) என்ன ₹ நான்‌ இருக்குமிடத்‌திலுமா ஸ்‌திரபுத்‌தி நிலைக்கக்‌ கூடும்‌ -அத்துடன்‌ கூட, க்ரோதனும்‌ என்‌ துணைக்கு வருவானாகில்‌ எங்களை எதிர்க்க வல்லவருமுளரோ – கோபாதீநனானவன்‌ புத்‌தியை யிழந்து செய்ததை மறந்து செய்ய வேண்டுவனவற்றை விடுத்து அஞ்ஞாந அந்தகாரத்தில் ஆழ்ந்து நாசமடைவது நிச்சயமல்லவா ? ௮ச் சமயம்‌ விவேகனால்‌ அக் கோபரதீநனனை அணுகவும்‌ முடியுமோ? விவேகனாலும்‌ ௮வன்‌ மந்திரிகளாலும்‌ நமது ஸாகஸங்கள்‌ ஆகக் கூடியனவோ !

ரதி-௮துகிடக்‌ கட்டும்‌.–நாதா | விவேகனாதியோர்களுக்கும்‌ நம்‌ கக்ஷியாருக்கும்‌ இப்படி. வீர வைரம்‌ ஏற்படக்‌ காரணமென்ன ?
காமன்‌.—காரணமா !–ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ் என்று முக்‌குணங்கொண்ட ஜீவாத்மாவுடன்‌, புத்தியென்ற பத்னியின்‌ சேர்க்கையால்‌, அவ் வக்‌ குணங்கள் மிகுந்த காலத்‌திலுண்டாகிய முக்குலங்கள்‌ தோன்றின-இக் குலங்களே முறையே, விவேகன்‌, ராகன்‌, மோகன்‌ முதலியோரதாகும்‌. இவற்‌றுள்‌, ஸத்வ குண மிகுதியால்‌,, ஸம்ஸார சுக துக்கங்களை த்வேஷிக்கிற விவேகன்‌, விஷ.யாநுபவங்களில்‌ தோஷத்தை ௮றிபவளாம்‌ ஸூமதியை மணந்து, தன் குலத்திற்கு ராஜாவாகத்‌ தனித்து நிற்கிறான்‌. ரஜஸ்ஸும்‌ தமஸ்ஸும்‌ மிக்க மற்ற இரு குலத்தினரும்‌ ஒன்று சேர்ந்து, மகா மோகனைச்‌ சக்ரவர்த்‌தி யாக்கிக்‌ கொண்டு, மோஷத்தில்‌ தோஷத்தையே ஆராயுந்‌ தன்மை யுள்ள துர்மதியை அவனுக்கு மனைவியராக்கி மகிழ்ந்து பெருகி விளங்குகின்றனர்‌.

ரதி.--அப்படியா ?…பிறகு?

காமன்‌.–-இக்குலத்தோர்‌ யாவருக்கும்‌ பிதாவாகிய ஜீவாத்‌மாவும்‌ மாதாவாகிய புத்தியும்‌, தத் சமயம்‌ மகா மோகன்‌ கக்ஷியின் மீதே ௮பிமானம்‌ மிகுந்துள்ளார்‌.. இதைக்‌ கண்டு சகியாக விவேகனது கக்ஷியினர்‌ தம்‌ கக்ஷி’ க்ஷீணித்து நசிக்க யிருப்பதைக்‌ கவனியாது ஜீவாத்மா வின்‌ ஸம்ஸார சுக போகத்தையும்‌, அத்தகைய விஷயாதிகளை விருத்தி செய்‌.து வரும்‌ எங்கள்‌ கக்ஷியினரையும்‌ வேரறுக்கக்‌ கங்கணக்‌ கட்டியுளர்‌

ரதி –உம் –அப்புறம்
காமன்‌–குரங்குகளுக்கும் ரஷஸர்களுக்‌ கும்‌ அரசர்களாம்‌ சுக்ரீவ விபீஷணாதிகளைப்‌ பிரமாணமாகக் காட்டி, ப்‌ரக்ருதியினிடத்தில் ஜீவாத்மாவுக்கு விரக்தியை உண்டாக்‌கி அந்த ஜீவனை இந்த விவேகனாதியர்‌ பலவிதத்‌ தொல்லைகளுக்கும்‌ ௮வஸ்தைகளுக்கும்‌. ஆளாக்கி வருகின்றனர்‌. இதனால்‌ நம்‌ பிதா, பிறர்‌ குற்றத்தைக்‌ காண்பதில்‌ பிறவிக்‌ குருடனாகவும்‌, பர நிந்தை சொல்வதில்‌ ஊமையனாகவும்‌, அவற்றைப் பற்றிக்‌ கேட்பதில்‌ பிறவிச்‌ செவிடனாகவும்‌, பரஸ் ஸ்திரிகளை வசப்பித்துவதிலும்‌’ ௮வர்‌களால்‌ வச்யப் படுத்தப் படுவதிலும்‌ இந்திரிய வியாபாரங்‌களற்ற வராகவும்‌ நபும்ஸகனாகவும்‌ மாறி, பேராபத்திற்குள்ளாக இருக்கிறார்‌. இத்‌தகைய ஆபத்‌தினின்றும்‌ எம் தந்தையை மீட்பதற்காகவே, ப்ராத்ருஸ்‌ ஸ்நேகத்‌தைப்‌ பாராமலும்‌ நாங்கள்‌ விவேகனாதியாரை ஓழிக்க வேண்டி, ஓரே பிரம்மாவினால்‌ படைக்கப்பட்டவராயினும் தேவாசுரர்கள்‌ தீராப்‌ பகைவாராய் இருந்தது போலே ஒருவருக்கொருவர்‌ ஜென்ம வைரிகளாயிருக்கிறோம்‌.

ரதி-ஐயையோ ! பெற்றோரது பேரானந்தங்களைப்‌ பிள்ளைகளே போக்க வழி தேடுகிறார்களே ! நாதா!–ஸகோதரர்களாம்‌ உங்களுக்குள்‌ யுத்தமொழிந்து ஒற்றுமை ஏற்‌படும்‌ மார்க்கங்‌ கிடையாதா

காமன்‌.–பைத்தியமே!புலி பசித்தாலும்‌ புல்லைத்‌ தின்னுமா? அர்த்தம்‌,காமம்‌ இவைகளையே. மிகப்‌ போக்யமாகக்‌ கொண்ட எங்களுக்கும்‌, நாராயணனே பரம போக்யமெனப்‌ பாடுபட்டு வரும்‌ எமது விரோதிகளுக்கும்‌, கனவிலும்‌ சமாதான மேற்படுவது முடியாத காரியமாகும் எங்களுள்‌ வெற்றி பலிஷ்டருக்கே! மகா மோகன்‌ எக் காரணத்தாலும்‌ ஸமாதானத்தை வேண்டான்‌. நானும்‌ உடன்‌
படேன்‌-

ரதி, –குல நாசகர்களாகிய விவேகனாதயோர்‌ மகா பலிஷ்டர்க ளாம்‌ உங்களை நசிக்கச் செய்ய உத்தேசித்திருக்கும்‌ உபாயங்கள்‌ தாம்‌ யாவையோ ?
காமன்‌.–காமினி ! ௮து ஸ்திரீகளிடத்தில்‌ பிரஸ்தாபிக்கத்‌ தகாததோர்‌ ராஜ ரகஸ்யமாகும்‌–
ரதி –(மன்றாடு பவளாய்‌) நாதா! என்‌ மீதாணை ! ! உமது நண்‌பர்‌ மீதாணை ! ராஜ ரகஸ்யமாயிலும்‌ யதார்த்தத்தை என்‌ னிடம்‌ வெளியிடத்தான்‌ வேண்டும்‌.
வஸன் – (தனக்குள்‌ பெருமூச்செறிந்து) ஹும்‌ விதி வலிது!(வெளிப்படையாய்‌) ஸகே- மகர த்வஜ ! ‘விரோதிகளின்‌ ரஹஸ்யங்களை வெளிப்‌ படுத்‌துவதில்‌ யோசனையேன்‌ ? அது முறையே யன்றோ ?
காமன்‌.– வாஸ்‌தவந்தான்‌–பிரியே ! ! அவர்களின்‌ உபாயத்தை அறிவிக்கிறேன் கேள்‌ -ஓவ்வொரு கர்மங்களிலும்- கர்த்தா நானல்ல, பகவானே அவற்றைச்‌ செய்விக்கிறான் -என்று ௮னுஸந்திக்கும்‌ ௮கர்த்ருத்வாபிமானம்‌, ஸாத்விக த்யாகம்‌ முதலிய விபரீத ஞானங்களை உதவியாய்க் கொண்ட நிவ்ருத்தி தர்மங்களாம்‌ பெரும் பேய்‌ ஜீவன் மேல்‌ ஆவேசித்து, புத்தியின்‌ . சேர்க்கையால்‌ ௮ந்த ஜீவனிடத்தில்‌ நமது குலத்திற்கே வேர்ப்புழு போன்றவளாம்‌ சாந்தி ஸ்வரூபையாகிய பரபக்தி யென்‌னும்‌ ப்ரஹ்ம ராக்ஷஸியைப்‌ பிறப்பிக்கப் போகிறது -௮ப்‌பரபக்தி யென்பாள்‌, வைராக்யம்‌ மிக்கு, ஐம் புலன்களையு மடக்‌கி , மகா உக்ரமான தபஸ்‌ செய்யுங்காலத்தில்‌, பகவானுடைய கருணா ப்‌ரபாவத்தால்‌, கோடி கைடபாஸுரர்‌களுக்குச்‌ சமானமானதோர்‌ ௮ஸுரன்‌, அப் பர பக்திக்குச்‌ சகாயனாகத்‌ தோன்றுவான்‌,—மவ்னம்

வஸந்‌.-(மனத்துள்‌) ௮வன்‌ வருகையே, ‘நம்மை நிர்மூல மாக்கும்‌ பகவானது ஸங்கல்ப ஸூர்யோதயமாகும்‌ !-.. (வெளிப்படையாய்‌) அத்துடன்‌ நிறுத்துங்கள்‌-பிறகு நடக்கப்‌ போவதைச்‌ சொல்லத் தகாது
ரதி.–(பயத்தினால்‌ பரபரப்புடன்‌ காமனைக் கட்டிக்‌ கொள்‌கிறாள்‌). ஐயையோ ! நாதா ! என்னைக் காரும்‌ ! என்னைக்‌ காரும் –

காமன்‌,–( ஆலிங்கனத்தால்‌ ஆனந்த பரவசனாகி), பிரியே! , மகா மோக ராஜனது சேனாபதியின்‌ வீர பத்னியா இப்படிப்‌ பயப்படுவது? ஹ!ஹ!- நான்‌ கூறிய தவ்வளவும்‌ வேதாந்திகளென்‌னும்‌ வழி போக்கர்கள்‌, மாளா வழியில்‌ நடக்கும்‌ களைப்பு தெரியாதிருக்கும்‌ பொருட்டு கற்பனை செய்‌து சொல்லிக்‌ கொண்டே. போகும்‌” கட்டுக்‌ கதையே யாகும்‌,-அவ்வளவும்‌ இந்தரஜால வித்தை !’ ஹ! ஹ! ஹ! என்‌ கரும்பு வில்லின்‌ நாணொலி கிளம்பிய மாத்திரத்திலேயே விரக்தியின்‌ வீட்டை நாடுபவனுமுளனோ ? மகா மோகனை ஜெயிக்க வல்ல உபாயமுமுளதோ ?
ரதி–மகாராஜனுக்கு மங்களமுண்டாக வேண்டியதே என்‌ கோறிக்கை.
வஸந் –-அப்படியே ஆகுக: மகா மோகனாதியோர்‌ உயிர்த்திருக்கும்‌ வரை , ஜீவாத்மா மூல ப்ரக்ருதியை நாடி விரக்திக்கு ஆளாவதில்லை யென்பது நிச்சயமே.
காமன்‌.–ஆம்‌! விவேகன்‌ முயற்சிகள்‌ வீணே ! யுத்தத்தில்‌ இறந்தும்‌ பிமைத்தெழுந்த ஸுத்ரீவ ஸைன்யங்கள்‌ போல்‌, காமத்தின்‌ சச்தியால்‌ நம்‌ குலத்தவர்களும்‌ புத்‌துயர்‌ பெறுவார்களே –
(திரைக்குள் )

அடே துரா சாரா ! ! லோக நாடக அரங்கத்தில்‌, ஸம்‌ஸாரமென்னும்‌ நாடகத்தில்‌, ஜீவாத்மா ப்ரபன்னென்‌னும்‌ வேஷந்தரித்து நடித்த மாத்திரத்‌திலேயே ஸந்தோஷத்தை அடையப் பெற்ற பிரபுவாகிய ஸ்ரீமந் நாராயணன்‌ தனது ஸாம்யத்தை ௮ந்த ஜீவனுக்குக்‌ கொடுக்‌கக்‌ காத்திருக்கையில்‌, வீண்‌ பிதத்றலேன்‌ ? பகைவரை வென்ற. கீர்த்தியும்‌, பிதாவை ரஷித்தலாகிய தர்மமும்‌,எத்தனித்த எம்‌ காரியத்தை நிறைவேற்றிய தாலாகிய ஸந்தோஷமும்‌ இக் கணமே எங்களை வந்தடையப் போகிறது காண்‌.

காமன்‌-(பயத்‌துடன்‌, பேச்சை மறைக்க வெண்ணி )பிரியே ! ஸூமதியோடு விவேகன்‌ நம்மை எதிர்த்து வருகிறான்‌.இடம்‌, காலம்‌, வ்லிமைகளை ஓர்ந்தறிந்தே எதிரி முன்‌ தோன்றுவது வீர லக்ஷண மாதலால்‌, தனித்திருக்கும்‌ நாம்‌ இச் சமயம்‌ அவர்கள்‌ கண்களில் படாது மறைவோம்‌. வாருங்கள்‌.
(போகிறார்கள்‌)

இரண்டாங்‌ காட்சி – இடம்‌ :—ஓர்‌ நதிக்கரை –விவேக ராஜனும்‌ ஸூமதி ராணியும்‌ பிரவேஸம் –
விவேக.–
நம்மைக் கண்டு ௮ஞ்சியோடும்‌ ௮ந்தப்‌ பாப சாரப்‌ பேய்களைப்‌ பார்த்தனையா ? நம்மையே யன்றோ பாபிகளென்று தூஷித்துத்‌ திரிகிறார்கள்‌ ! மோக மென்னும்‌ மாயையின்‌ ஸ்வபாவம்‌ இது தான்‌ ! பிறரிடத்தில்‌ இருக்கும்‌ குணங்களை ஓர்ந்து அறியாது, ௮வரிடம்‌ இல்லாத குற்றங்களை இருப்பது போல்‌ காண்பிப்பதும் தன்னிடம்‌ இருக்கும்‌ குற்றங்களை தெளிந்தறியாது, இல்லாத குணங்கள் இருப்பது போல்‌ பிரசுரித்திக் கொள்‌வதுமே யன்றோ மாயை !
ஸூமதி.- ஆம்‌, நாதா ! குரூபிகள்‌ தம்‌ முகத்தைக்‌ கண்ணாடியில்‌ காண்பார்களாகில்‌, தமது விகாரத்தை அறிந்து கொள்ளாமல்‌ கண்ணாடியிலேயே, தோஷத்கைக்‌ கூறுகிறார் களல்லவா ₹
விவேகன் –நன்றாய் உரைத்தனை -சுருங்கச் சொல்லி விளங்க வைத்‌தனை தத் வார்த்தத்தை ! எனது தர்ம பத்னியாம்‌ உன்‌ உதவியைக்‌ கொண்டு நான்‌ நிறைவேற்ற வேண்‌டிய கர்ரியததை இதோ ‘ஸங்கல்பித்துக் கொண்டேன்‌-ஜீவனுக்கு உள்ளம்‌ புறமும்‌ ஸஞ்சரித்‌து , ஜீவனைப்‌ பீடிப்பதையே தமது விளையாட்டாக உடைய மகா மோகனாதி பகைவர்களை வென்று, ஜீவனை ஸமாதியில்‌ நிறுத்திப்‌ பரமாத்மாவை அடைந்து க்ருதார்‌தனாகச் செய்ய வேண்டிய நியமங்களைக்‌ கண்ணுகம் கருத்துமாய்ப்‌ பெருக்குவதே எனது ஸங்கல்பமாகும்-

ஸூமதி.–சித்தம்‌. . ஆயினும்‌, நித்தியன்‌, நிர்மலன்‌, ஸ்வயம்‌ பிரகாசன்‌, ,ஆனந்த ஸ்வரூபன்‌, என்றெல்லாம்‌ போற்றப்‌ படுகிற ஜீவாத்மா, மகா கொடூரமான துக்க ஸாகரத்துள்‌ எப்படி ௮கப்பட்டு ஏன்‌ பரிதவிக்க நேரிடுகிறது ?

விவேக.--ஏனா ?–ஆகமப்‌ பிரமாணத்தை நம்புவதே அதற்கான பிரதியுத்திரமாகும்‌.-ஜீவன்‌ நிர்மலனே : நித்யனே : ஸ்வயம்‌ பிரகாசனே : ஆயினும்‌, ௮நாதியான கர்ம உபாதியால்‌ பாதிக்கப்பட்டு, ௮ந்தக்‌ கர்ம சேர்க்கையால்‌ மகா மோகன்‌ வசப்பட்டு துக்க ஸாகரத்தில்‌ மூழ்க நேரிடுகிறது. அந்தக்‌ கர்மமென்னும்‌ உபாதி நீங்கும் காலத்‌தில்‌ ஜீவனும்‌ ஸ்வயம்‌ பிரகாசத்துடன்‌ ஆனந்த ஸ்வரூபனாய் நிர்மலனாகி நிதயனாகக்‌ காணப் படுகிறான்‌. ‘ இயற்கை ஸ்வபாவத்‌துடன்‌ செயற்கை காரணத்தின்‌ கூட்டுதலா லுண்டாகும்‌ மாறுதல்களை நாம்‌ ௮னுபவத்தில்‌ காண்பதில்லையா ? வெள்ளை ஸ்படிகத்கினுடன்‌ செம்பருத்திப்‌ பூவைச்‌ சேர்த்து வைத்தால்‌, ஸ்படிகமும்‌ ரக்த வர்ணமாகச்‌ சோபிக்கிற தல்லவா ? அப் பூவை அப்புறப் படுத்‌துவோமாகில்‌ அப்படிகமும்‌ ஸ்வயம்‌ பிரகாசத்துடன் விளகங்கு கிறதல்லவா ?
ஸூமதி.–உண்மை யறிந்தேன்‌. ஸர்வஞ்ஞ ஸர்வ சக்‌தனான. ஸ்ரீ லஷ்மீபதியாம்‌ பரம காருண்ய மூர்ததி, கர்ம சம்பந்தத்‌தால்‌ ௮வதிப்படும்‌ ஜீவாத்மாவை இது காறும்‌ ஏன்‌ உபக்ஷித்தார்‌ ? |
லிவேகன்‌.–இதை ௮றியாயா? லீலை–கருணை என்லும்‌ நேர்‌ முரண்பாடு கொண்ட தேவிகளை ௮ங்கீ கரித்துப்‌ பராதீனனாகப்‌ பரவசப்படும்‌ லீலா விநோதன்‌, எந்தக்‌ கர்மமென்‌னும்‌ பந்தத்‌தினால்‌ ஜீவாத்மாவை சுக துக்கமென்னும்‌ நேர்‌ முரண்பாடு கொண்ட பிரவாஹ மத்‌தியில்‌ ஆழ்த்திக்‌ கரை காண முடியாது தவிக்கச்‌ செய்து ஆனந்திக்கிறானோ அதே கர்மத்தின் பலனாகவே சுக்ருதமென்லும்‌ வியாஐத்தைக் கொண்டு அந்த ஜீவனைக்‌ கர்ம பந்தத்‌தினின்‌றும் விடுவித்து ஸ்வயம்‌ பிரகாசனாக்குவான் –

ஸூமதி..-இதுவரையிலும்‌ ஜிவாத்மாவைக்‌ கவனியாத பகவான்‌, இனி இப்படிச் செய்ய முன் வருவான் என்பது என்ன நிச்சயம்
விவேக.-பேதாய்‌!! உனக்குமா சந்தேகம் ஒவ்வொரு ஜீவனுக்கும்‌, அநாதியாகவும்‌ விசித்ரமாகவு மிருக்கின்‌ற கர்மம்‌, வாஸனை, ருசி , ப்‌ரக்ருதி ஸம்பந்தம்‌ என்னும்‌ சக்கரச் சுழல்‌ உண்டு என்பது யாவரும்‌ ஒப்புக் கொண்ட விஷயமே யல்லவா –அச் சுழலில்‌ கர்மம்‌, பரிபாகப் பட்டுப்‌ பக்குவ தசையை: அடைய முயலுகையில்‌, ஓர் அனுகூல பரிபாகத்‌தில்‌, ஓர்‌ வ்யாஜத்தினால் , ப்‌ரதம ஆசார்யனான பகவான்‌, ஜீவன் மீது அனுக்ரஹித்து அவனை மோஷ ஸாம்ராஜ்யத்திற்கு ஆளாக்குவான்‌-அதுவரை, தாண்டு வதற்கரிய சமுத்‌ர மத்தியிலுள்ள லங்கா த்விபத்தில்‌ தச கண்டனால்‌ சிறை வைக்கப்‌ பட்டிருந்த சீதையைப் போல்‌, கரை காண முடியாத பவ சாகரம் சூழ்ந்த. சரீரமென்னும்‌ த்வீபத்தில்‌ இந்த ஜீவாத்மாவும்‌, ஞானேந்திரிய கர்மேந்ரியக்களாகிய பத்துத்‌ தலைகளை யுடைய மனமென்னும்‌ ராக்ஷஸனால்‌ பீடிக்கப் பட்டவனாய்ச்‌ சிறை வாஸம்‌ செய்ய வேண்டியது தான்‌- ஆஞ்சநேயனை முன்னிட்டுத்‌ தனது சிறை மீட்‌ச்சிக்காகப்‌ பகவானது வருகையை எதிர் பார்த்து அழுது வருந்திக் கொண்டிருந்த அந்தச்‌ சீதையைப் போலே இந்த ஜீவனும்‌, தகுந்ததோர்‌. ஆசார்யானுக்ரகம்‌ பெற்று பரிபக்‌குவமடைந்து பகவானது கிருபா கடாக்ஷத்தால்‌ தானிருந்து வரும்‌ சிறைனின்றம்‌ மீட்கப்பட வேண்டிய காலத்தை எதிர்‌ நோக்கி வருந்த வேண்டியதே. ப்ரக்ருதி ஸம்பந்தத்தால்‌ ஒளியிழந்த ஜீவனது தேவியாம்‌ புத்தியும்‌, ஆசார்யோபதேச பாக்யம்‌ கிடைக்கும்‌ காலம்‌ வரை தானும்‌ சக்தி யற்றவளாகவே தான்‌ இருக்க வேண்டி வருகிறது.

ஸுமதி.–கொடிது ! கொடிது! புத்திபுடன்‌ கூடிய ஜீவாத்மா வுக்கு மோக்ஷஸாம்ராம்யம்‌ கிட்டுவது துர்லபம் என்றே எனக்குத்‌ தோன்றுகிறது. ்‌

விவேக.—அப்படி. எண்ணாதே | தோஷ ரஹிதனானதோர்‌ ஆசார்யனது கடாக்ஷமாகிய ௮மிர்தத்தால்‌ ௮பிஷேபிக்‌கப் பட்ட ஜீவனுக்கே, பாக்ய வசத்தால்‌ பரப்பிரம்ம விஷயத்தில்‌ பரபக்தி யென்பது கைகூடும்‌. சமம்‌ தமம்‌ முதலிய நற்குணங்களின்‌ உதவியால்‌ என்னையும்‌ உன்‌னையும் கொண்டு அந்தப்‌ பக்தி பரீ்ணாம ஸமயத்தில்‌ ஓர்‌ யஞ்ஞம்‌ நடந்தேறும்‌-௮ந்தத் காரணத்தால்‌, பத்த ஜீவனாகிய யாகப் பசு, கர்மமென்னும்‌ . பாசத்தை அறுத்துக்‌ கொண்‌டு ஸ்ரீ மந் நாராயணனிடம்‌ ஓப்படையும்‌. ரஷண பாரத்தைப்‌ பரமாத்மாவிடம்‌ ஓப்படைத்‌த க்ஷணத்திலேயே, லஷ்மீ பதியும்‌ சரணாகதனான அந்த ஜீவனுக்குப்‌ பற்றில்லாததோர்‌ நிலையைச் செய்‌ து கொடுக்கிறான்‌. மோக் ஷஸாம்ராஜ்யத்தை ஜீவன்‌ அக் கணத்திலேயோ அல்லது ஜென்மாந்திரத்தலேயோ கோறுகிறபடியே சரணாகத ரக்ஷகன்‌ லபிக்கச் செய்வான்‌-ஆகவே வேதாந்தமென்‌னும்‌ பட்டணத்தை அறிந்து சேர்ந்‌தவனே, பகவானுடைய தயா ரூபமான்‌ ஒற்றை யடிப் பாதை வழியாய்‌ மோஷமாகிற பட்டணத்தை யடையக் கூடியவனாவன்‌. எனவே ஜீவன்‌ மோஷ ஸாம்ராஜ்யத்தை அடைவது துர்லபமல்ல என்பதை அறிவாய்‌.

ஸூமதி.–பிரபோ ! -அழுகிற குழந்தைக்குப்‌ பழத்தைக் காட்டிச்‌ சமாதானப் படுத்‌துவது போல்‌, எனக்கு இவ்வார்த்‌கைகளைக்‌ கூறியதால் மட்டும்‌ தெளிவு ஏற்படுமா ?மோஷத்தில்‌ ஆசை யுடைய புருஷர்களால்‌. பல தேவதைகளும்‌ உபாஸிக்கப்படுகையில்‌, ஸ்ரீலக்ஷ்மீபதியே மோக்ஷத்‌திற்கு மூல காரணனென்று .நீர்‌ . எப்படிச்‌ சொல்லக்‌ கூடும்‌? அந்த மூல காரணனை அறியப்‌ பலரும்‌ பிரமிக்‌கையில்‌, தாங்கள்‌ ‘௮வனிடத்தில்‌ முடிவான நிச்சயம்‌ வைக்கக்‌ காரணமென்ன -இந்த வேதாந்தங்களின்‌ ஸாரார்‌த் தங்களை நான்‌ ௮றிந்து ஜீவாத்மாவுக்குத்‌ தெரிவிமாறு உபதேசம் செய்தருள்வீராக-

விவேகன் – அப்படியே சொல்‌லுகிறேன்‌ கேள்‌ : தாக விடாயைப்‌ போக்கப்‌ பனித்‌ துளிகளால்‌ ஆகுமோ-சித்திரத்‌தில்‌ எழுதப்பட்ட ஆயிரம்‌ ஸூரியர்கனை ஓன்று சேர்ப்பினும்‌ துளி இருட்டாவது அகலுமோ ? ௮து போலவே ஸ்ரீயபதி விஷயத்தில்‌ செய்யப் படுகின்ற பரமபக்தி தவிர்த்து, இதர தேவதைகள உபாஸிப்பதால்‌ ஸம்‌சாரத் துக்கமும்‌ பந்தமுமாகிற இருள்‌ நீங்குமோ ? அவ் விருளை நீக்க வல்லது ௮ந்தப்‌ பகவானுடைய ‘ஸங்கல்பமென்னும்‌ ஸூர்யோதயாமொன்றே ! உன் மீதும்‌ ஆஸ்திகத்தின்‌ மீதும்‌ ஆணை யிட்டுக்‌ கூறுகிறேன்‌ நம்பு : ௮ஹ்ங்கார மென்னும்‌ முதலையால்‌ பீடிக்கப்பட்டு வருந்திக் கதறும்‌ சரீரி யென்னும்‌ யானையை வெகு வேகமாய்க் காத்தனின்றுமே முராரியின்‌ கருணா பிரபாவம்‌ உனக்கு, விளங்க வில்லையா ?

ஆகவே ௮ந்த லக்ஷ்மீ பதியை ௮டையவல்ல மார்க்கங்கள்‌ பக்தியும்‌ பிரபத்தியுமே. பக்தியோகஞ்‌ செய்ய சிலருக்குத் தான்‌ ௮திகாரம்‌ உண்டு. பிரபத்தியோ ஜாதி மத வித்யாஸமும்‌, ஸ்திரீ புருஷ வித்யாஸமுமின்‌றி எல்லோராலும்‌ அனுஷ்டிக்கசக் கூடிய எளிதான மார்க்கமே யாகும்‌. இந்தப்‌ பிரபத்தியைத்‌ தானாகவும்‌ செய்யலாம்‌. ஆசார்யனையும்‌ தனக்‌காகச்‌ செய்யும்படிப்‌ – பிரார்த்‌திக்கலாம்‌. குறி வைத்து: அடிப்பதற்குப்‌ பழக்கம்‌ வேண்டுவது போல, தானாகவே: ௮னுஷ்டிப்பதற்குப்‌ பழக்கம் வேண்டும்‌. இந்தப்‌ பிரபத்தி ஒரு க்ஷண காலத்தில்‌ நடந்தேறக்‌ கூடிய காரியம்‌. அனுஷ்டானத்தில்‌ ஏதேனும்‌ குறைவு நேரிடினும்‌ ஸ்ரீமந் நாராயணனுடைய பரம காருண்யத்தினால்‌ குறைவு குன்றி நிறைவு ஏற்படக்கூடியது. ஆனால்‌ பக்‌தி மார்க்கமோ கஷ்டமும்‌. பொறுமையும்‌ கூடிய மார்க்கமாகும்‌. இந்திரியங்களை அடக்கி நிச்சல நிர்மல மனத்துடன்‌, சதா பரந்தாமனைக்‌ கோறி அனுஷடிக்க வேண்டிய யோகமாகும்‌. ஒரே ஜன்மத்தில்‌ முடியக்‌ கூடாது போயினும்‌ போகும்‌. ஆயினும்‌, ஜன்ம ஜென்‌மங்கங்களாக விட்ட இடத்தினின்றும்‌ தொட்டுப்‌ பிடித்துப்‌ பூர்த்தி செய்து கொள்ளக்‌ கூடியது. சரணமடைந்தவன்‌ எத்தகை யோனாயினும்‌ அவனை ரக்ஷிக்க வேண்டியதே முறை யென்பது தொன்று தொட்டு ஸ்தாபிக்கப்‌.பட்ட தருமமல்லவா – ஆகவே, பிரபத்தி செய்‌தோரைப்‌ புறக்கணிக்க மாட்டான்‌ பரமாத்மா : எனவே யாவரும்‌ அறியத்தக்க’ தத்வம்‌ அந்த ஸ்ரீமஹா விஷ்ணுவே ! அதற்குப்‌. பிரமாணங்கள்‌ வேத வாக்யங்களே -இதை அறிகின்றவர்‌ ஸத்வம் மிகுக்த ஜீவன்கனே ! *மூத்தோர்‌ சொல்‌ வார்த்தை ௮மிர்தம்‌ ‘ என்பதும்‌ பொய்யோ –

ஸூமதி–நாதா? தெளிவடைந்‌தேன்‌. ‘தன்னுடம்பிலுள்ள வியாதியைத்‌ தானே அறிந்து போக்கிக் கொள்ள வழி தேடாத மூடர்களைப் போலல்லவா ஜீவன்‌ பரிதபிக்கிறது

குளவயி மோக்கணுூ ஸவ மி யங்க கஹாசயியா
ணவ ஸம ரூ ஸூயாவிணய ஹோயிக யிந்த கடா –
தஹ்வி ஜுயந்த ஹோந்த தண யிண்ணுணி ஹக்கணி ஓ
கஹகஹ கோவி ஹந்தணி ஹினம் முஹளே யிணஹம்

விவேகன் – ப்ரியே! உன்னைத் துணையாகக் கொண்ட எனக்கு இனி. வெற்றி கிடைப்பது திண்ணமே. சத்ருக்களை ஜெயிக்க விரும்பும்‌ என்‌ ஆசையாகிய நீர்த்‌ திவலை, ஸ்ரீயபதியின்‌: காருண்யப்‌ பிரவாகத்தினால்‌ பெரு நதியாக, விடா முயற்சி யென்லும்‌ கற்பகத்‌ தருவை! நனைத்து வளர்த்து என்‌ இஷ்டத்தைப்‌ பூர்த்தி செய்விக்கப் போகிறது சத்யமே: ஆகவே இது காறும்‌ ஸ்வபஷ பெருமையை நிலை நிறுத்துவதிலேயே கருத்துக்‌ கொண்டிருந்த நாம்‌, இனி நிர்ப் பயமாய்‌ பர பக்ஷத்தை நிராகரிக்‌கப்‌ போக்க வேண்டிய வழிகளைத் தேடுலோம்‌. வா
(போகிறார்கள் )

மூன்றாம் காட்சி -இடம் -கங்கைக் கரை யோரம் -ஓர் பூஞ்சோலைக்கு எதிரில் —விசாரணையும் ஸ்ரத்தையும் ப்ரவேஸம்

விசாரணை –சகி -வேர்வையும் களைப்பும் காணப்பட்டும் உத்ஸாகம்‌ குறையாது விரைந்து செல்லும் உன் கார்யம் தான் யாதோ
ஸ்ரத்தை--வேதாந்த ஸித்தாந்தம் அல்லாதவற்றைக் களைந்தெறியக் கங்கணம் கட்டியிருக்கும் விவேக மஹா ராஜனது ப்ரதிஜ்ஜை பூர்த்தியாக வேண்டி, மகாராணி ஸூமதி தேவியார்‌ ஓர்‌ மங்கள விரதம்‌ கைக் கொண்டிருக்கின்றனள்‌. அதற்‌காக, ஸ்ரீலஷ்மீபதியின்‌ பாத பங்கயங்களை ௮ர்ச்சிக்கத் தகுந்த தாமரை மலர்களைக்‌ கொண்டு வர எனக்கு ஆஞ்ஜை – அவைகளைத் தேடிக்‌ கங்கையை நாடிச்‌ செல்கிறேன் இவ்வளவு ஸ்ரமப்பட்டுக் கொண்டு –

விசா. -கங்கையும்‌ அதோ நெருங்கி விட்டது -இந்தப்‌ பூஞ்‌ சோலையில்‌ சற்று இளைப்பாறிச்‌ செல்லலாமே-
ஸ்ரத்‌தை – செய்தால்‌ போகிறது . “நீ: இந்தப்‌ பிரதேசம்‌ வந்த காரணம் என்ன-
விசா-விவேக ராஜனின்‌ பிரதிஞ்ஞையைக்‌ ‘கேட்டறிந்த மகா மோகன்‌ கோபாதீனனாகி , ஜீவாத்மாவைப்‌ பல விதத்‌திலும்‌ பீடித்து, கபட யுக்திகள்‌ செய்து புத்தி மாறாட்‌டத்திற்கு ஆளாக்கி வருத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவது நம் ராணியாருத்துத் தெரிந்தது -தக்ஷணமே விரோதிகளது சூழ்ச்சிகளை சேனாபதியாகிய வ்யவசானனிடம் ஏகாந்தத்தில் தெரிவித்து வருமாறு ஸூமதி தேவியார் என்னை அனுப்பி இருக்கிறார்கள் –

ஸ்ரத்தை--பேய்களின் விவாகத்தில் கழுதைகள் படுவது போல் தான் மஹாமோஹன் பிரயத்தனத்தில் கபட வாதிகளின் கோலாகலம் -இவர்கள் கொள்கை நிலையற்றது -சாத்தியமே நித்யமானது -விவேக ராஜனே முடிவில் வெற்றி பெறுவார் காண் –
விசா -அப்படியே தான் ஆக வேண்டும்-நாழிகையாகிறது -நான் சேனாதிபதியை நாடிச் செல்ல வேண்டும் –
ஸ்ரத்தை–செய் -நானும் மலர்களைக் கொய்து செல்கிறேன் -சீக்கிரத்திலேயே இருவரும் அரண்மனையில் திரும்ப சந்திப்போம் –
(போகிறார்கள் )

நான்காம்‌ காட்சி -வாத மண்டபம் –விவேக ராஜனும் சேனாபதி வ்யவசாயனும் ப்ரவேஸம்

விவேக.–பாதகங்களைப்‌ பரவச் செய்யும் மஹா மோஹனே நிஷ்காரண த்வேஷம் கொண்டு கலகத்துக்காகவே கபட ஸித்‌தாந்‌திகளை ஏற்படுத்தி அன்னாரது சிஷ்ய வர்க்கங்களை விருத்தி செய்வித்து என்‌ அபிஷ்டத்தைக் கெடுக்கப் பார்க்கிறாய்‌–இதோ நானும் என் ஸித்தாந்திகளையும் சிஷ்யர்களையும் பரவச்செய்து மோஹித்த ஜீவனை விடுவிக்கிறேன் பார் அப்யாசங்களின் நின்றும் -என் கோறிக்கை நிறைவேற ஈடேற ஸ்ரீ ஹயக்ரீவர மூர்த்தி தான் அனுக்ரஹித்து அருள வேண்டும்(த்யானம் செய்கிறார்கள்)

ஸமாஹாரஸ் ஸாம்நாம்‌ ப்ரதிபதம்ரு சாந்தாம யஜுஷாம்‌
லய:ப்‌ரத்யூஹாநாம்‌ லஹரி விததிர் போத ஜலதே:
கதாதர் பஷுப் யத்ப்‌ரதி கதக கோலா ஹல பவம்‌
ஹாத்வந்தர் த்வாந்தம் ஹய வதந ஹேஷா ஹல ஹல

வ்யவ.–பிரபோ! வெற்றிக்குச்‌ சற்றும்‌ சந்தேகமில்லை, புருஷனுக்கு வேதாந்தத்தில்‌ உண்மையான ஞானம்‌ உம்மால்‌ உண்டாக்கப்பட்டு விட்டது. ஸ்ரத்தை குறைவு மாத்திரமே விலக்கப்‌ பட வேண்டியதாயிருக்‌கிறது -‘சத்ரு பக்ஷத்தைக்‌ களைவதற்காகத்‌ தம்மால்‌ நியமிக்கப்பட்ட வாதத்துடன்‌ வேதாந்த ஸித்தாந்தம் அடித்தார்‌ இதோ வருகிறார் பாரும் –
[அவ் விருவரும்‌ ஓர்‌ புறமாய்‌ நின்று கவனிக்க ஆசார்ய சிஷ்ய பாவனையுடன்‌ ஸித்தாந்தமும் வாதமும்‌ பிரவேசம்‌. ]

ஆசார்யர் -ஆயுஷ்மன்‌ ! பந்தக்காலை ௮சைத்தசைத்தே மணலிலிறக்கி உறுதி செய்வது போல சத்ருவாதிகளாகி ராஷஸர்களுக்கு ஹநுமானை யொத்த உன்னால்‌ நமது வேதாந்த தத்வார்‌த்தங்கள் திடமாக ஸ்தாபிக்கப்படும் என்று நம்புகிறேன்-

சிஷ்யர் -பகவன் –சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார் –

உபிவீதி ந மூர்த்வ புண்ட்ர வந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணாகத ஸார்த்த வாஹ கந்த்வாம் சிகாய சேகர சாலிநம் பஜாமி –

ப்ரதிஷ்டாபி வேதாந்த ப்ரதி ஷிப்த பஹிர் மத
பூயாஸ்த்ரை வித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம்

ஆசார் – ஆயுஷ்மன்‌ ! பரமத கண்டனஞ்‌ செய்து நிகமாந்த ஸித்தாந்தத்‌தை ஸ்தாபித்து ஸர்வ மங்களத்துடனும்‌ விளங்குவாயாக
(ஒரு திவ்ய பவித்ரத்தைக் கொடுக்கிறார் )
சிஷ்யர்
–பவித்ரத்தை வாங்கி சிரமேல் அணிந்து விரல்களில் அணிந்து கொள்கிறார் ) கேட்க யோக்யதை உள்ளவன் என்று கருதப்படுவேனாகில்‌ சில சந்தேகங்களைக்‌ கேட்டு நிவர்‌த்தித்திக்‌ கொள்ள ஆசைப்படுகிறேன்

ஆசார்யர் -ஸ்ரேயஸ் மிகுந்த சிஷ்யனுக்கு ஸம்ஸயம் வாய்த்த போது சொல்லத் தகாததும் உண்டோ -உன் ஸம்ஸயம் யாது –

சிஷ்யன் –பகவன் -வாதத்தில் வெற்றி பெற்றவர் ஸ்மஸாநத்தில் மலட்டு மரமாகப் பிறப்பார்கள் என்பது மஹ ரிஷிகளின் வாக்காயிற்றே -அப்படி இருக்க அடியேன் எதிரிகளை வாதித்து ஜெயிக்க வேண்டும் என்று எப்படி விரும்புவது –

ஆசார்யர் -பத்ர நன்றாய்க் கேட்டனை -விதி நிஷேதங்களாகிற செய்யத் தக்கனவும் செய்யத் தகதானவும் ஆகிற கார்யங்கள் யாவும் –வர்ணம் ஆஸ்ரமம் ஜாதி கோத்ரம் ப்ரவரம் குலம் சரணம் இடம் காலம் இவைகளைப் பொறுத்ததல்லவா -விச்வாமித்ரரது நியமனப்படி ஸ்ரீ ராகவன் யாக ரக்ஷணம் செய்தது போலே நீயும் என்னுடைய அதிகாரம் பெற்றவனாய் விரக்தர்களோடு பிரசங்கிக்கும் வேளை தவிர்த்து பிரதிவாதிகளை எதிர்க்கும் காலத்தில் பலை அதி பலை என்பதைக் போன்ற வீரவாதம் விதண்டா வாதங்களால் ஜெயிப்பாயாகில் இத்தகைய விலக்குகளுக்கு இலக்காக மாட்டாய் –

சிஷ்‌-பாக்யம்‌? எந்த ஸித்தாந்தத்தை ஆதாராமாக வைத்துக் கொள்ள வேண்டுமோ அதை அடியேனுக்கு அனுக்ரஹித்து அருள வேண்டும் –

ஆச்சார் -பத்ர ஸ்வ கோஷ்ட்டி வாதங்களில் இரு கக்ஷியினரும் ஒப்புக் கொண்ட ப்ரமாணத்திலேயே நிற்கக் கடவாய்–பராசரர் வியாசர் சுகர்‌, செளநகர்‌, போதாயனர்‌ முதலானோரது வழிகளைப் பற்நியதான நமது ஐந்தாறு கிரந்தங்கள்‌ இருக்கின்றன; அவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நீ கூறும்‌ பிரமாணங்களும்‌ ‘ யுக்திகளும்‌ ஸபையோர்களது மனத்‌தில்‌ ௮ழுந்தி அவர்களை மகிழ்விக்கக்‌ கூடியனவா யிருத்தல்‌ வேண்டும்‌
சிஷ்யன் -ஒரு சம்சயம்

ஆசார்‌. என்ன

சிஷ்ய -தானே தர்ம உபதேசம் செய்து அதற்கு விரோதமாக ஜீவன்களை நடக்கும்படித் தானே நியமிக்கிற பகவானை எப்படி ஆப்தன் என்று சொல்லக் கூடும் –

ஆசார் -ஓ ஓ மிகவும் ஸூஷ்மமான அர்த்தத்தையே கேட்டனை

சிஷ் –மேலும் எப்பேர்க்கு ஒத்தவனுக்கும் சிற்சில காரணங்களினால் எதனாலும் தடுக்க முடியாததாக சம்பவிக்கக் கூடிய பாபங்களை விட்டுவிட வேண்டுமென்று விதித்திருக்கிறதே -அது எப்படி ஆகக் கூடியது –

ஆசார்‌. -௮தி ஸூஷ்மமான கேள்வியே இ து!

சிஷ் –தவிற தன்‌ நியமனத்தினுலே பாபாதிகளில்‌ பிரவேஸிக்கும்‌ ஜீவலுக்கும்‌, அந்தப்‌ பகவான்‌ தானே தண்‌டனைகள்‌ விதிப்பது எப்படி நியாயமாகும்‌?

ஆசார்‌.-நன்றாய்க்‌ கேட்டனை! ‘இவைகள்‌ எதிலும்‌ ஒருவித விரோதமுமில்லை.-ஏனெனில்‌, கர்மம்‌ என்னும்‌ ஒரு காரணமே இம் மூன்று கேள்விகளுக்கும்‌ ஏற்ற சமாதானமாகிறது. பகவானது இச்சை, ௮நாதியான கர்ம வாஸனையின்‌ காரணத்தால்‌ ஜீவ்னைத்‌ தடுக்க முடியாக பாபத்திற்‌குள்ளாக்குகிறது. அந்தக்‌ கர்ம வசமானவனுக்கும்‌, ஸுஹ்ருதம்‌ பரி பாகம்‌ ௮டையுங்‌ காலத்தில்‌, அந்தப்‌ பாபகங்களயும்‌ தடுக்க வல்ல கர்மங்களினாலேயே பாபங்களை நிவ்ருத்தி செய்யப்‌ பிரயத்தனம்‌ ஸம்பவிக்கும்‌. ௮ப்‌படிக்கல்லாதவனுக்கு, அவனவன்‌ கர்மானுஸாரமான பலம்‌ லபிக்க வேண்டியதே முறை. ஆதலால்‌, பகவான்‌ ஆப்‌தனென்பதிலும்‌, பாபம்‌ நிவ்ருத்‌திக்கக் கூடியதென்‌பதிலும்‌, தண்டனை ௮வஸ்யமே என்பதிலும் வேண்டல்‌ விரோதம் ஏதும் இல்லை யல்லவா –

சிஷ்யன் -(குதூகலத்துடன் ) தெளிந்தேன்‌ ‘தெளிந்தேன்‌ ‘- (திரும்பிப்‌ பார்த்‌து) ௮டே மூர்க்கர்களே ! எங்கள்‌ மதப்‌ பெருக்கைச்‌ சிறிய தென்றா ௮வமதிக்‌கிறீர்கள்‌? ௮நேகம்‌ கந்தைகளால்‌ முடிந்து ஒன்றாக்கப் பட்ட உங்கள்‌ ஸித்‌தாந்தங்கள்‌ யாவற்றினையும்‌ இதோ கிழித்தெறிந்து உதறி யெரிகிறேன்‌ காணுங்கள்‌?, என்ன ?…என்ன (செவி சாய்த்துக் கேட்டு) இது புது மதமா – ஹ ஹ ஹா ! (கை கொட்டிச்‌ சிரித்‌து) எந்தப் பொருளும் உண்டாகும் பொழுது புதியது தான்‌. நாளா விருத்தியில்‌ இந்தப்‌ புதியதே பழையதாக . விடுகிறது ! புதியதும்‌ பழையதுமா யிருத்தல்‌ குணத்தக்கும்‌ தோஷத்துக்கும்‌ காரணமாகாது. எது வஸ்துவின்‌ உண்மையை ௮னுஸரித்ததோ ௮துவே புத்திசாலிகளால்‌ நம்பத் தக்கதாகும்‌. எம்‌ மதமும்‌ புதிய தல்லவே !

ஆசார்‌.–பத்‌ர! கபட வாதிகளைப்‌ பேதித்தெறியக்‌ கூடிய யோக்யதை பெற்றுள்ள உனக்கேற்ற ஸபாத்யக்ஷரும்‌ ஸப்யரும்‌ இல்லையே என்று தான்‌ சிந்திக்கிறேன்‌.

விவேக. –(ஒரு புறமாய்‌: ஸேனாபதியுடன்‌) ஸேனாபதி! நாம் இவர்கள் முன்‌ தோன்ற இது தான்‌ ஸமயம்‌ (முன்‌ வந்‌து நமஸ்கரிக்கின்‌றனர்‌. )

ஆசார. -ஸர்வ மங்களானி பவந்து.! ஹே ராஜன்‌ ! கோமுக வியாக்ரர்களை நிக்ரஹிக்கும்‌ பகவான்‌, உம்மை ரக்ஷித்து வேதத்தை நிலை நிறுத்திக்‌ கொள்வாராக !
விவேக.–பாக்யம்‌ !
ஆசார்‌.–ராஜன்‌ ! நற் சமயத்தலேயே வந்தீர்கள்‌ !: உமது இஷ்ட பூர்த்தியை இந்தச்‌ சிஷ்யன்‌ மூலமாய்‌ ௮டைவீராக! உமது ஏவல்களைச்‌ செய்து முடிக்கச்‌ சித்தமாய்‌ உளன்‌ இவன்‌.

விவேக–நியமனம் -சிஷ்யனை நோக்கி -சவும்ய ! நீரே வாதிராஜனாகுவீர்‌! ஸாத்விகர்களது சேர்க்கையும்‌ அனுக்ரஹமும்‌ கிடைக்கும்படி நடந்து கொள்ளும்‌. பெரியோர்களது அனுஷ்டானத்தையே நிலை நிறுத்தும்‌. ப்ரஹ்ம வித்துக்களுடைய அபசாரம் பெறாதேயும் -ஸர்வாபசாரங்களையும்‌ பொறுக்க வல்லவனான ஸ்ரீமந்‌ நாராயணனிடத்திலேயே எல்லா பாரத்தையும்‌ ஒப்புவித்து, ௮வனது ஆஞ்ஞானுக்ஞா காரியங்களையே செய்து கொண்டிரும்‌. வேதாந்த வாக்யங்களையே சதா பரிசயம்‌ செய்து கொண்டிரும்‌. பெரியோர்களுக்கே சர்வதா சிச்ரூஷை செய்து கொண்டிரும்‌. வேதாந்த. விரோதிகளை திரஸ்காரஞ்‌ செய்யும்‌,

ஆசார.-ஆயுஷ்மந் ! ஸாவதானத்துடன்‌ கேட்டுக்‌ கொள்ளும்‌. அவ்வளவையும்

சிஷ்‌.–௮னுக்ரஹம்‌!

விவேக–ஓரு பானை சாதத்திற்கு ஒரு ௮விழே பதம்‌ போலவும்‌, மாற்றுப்‌ பார்க்கும்‌ நிமித்தம்‌ தங்கக் கட்டி பூறாவாகவும்‌ உரைக்கப்‌ படாதது போலவும்‌, ப்‌ரமாண மார்க்‌கத்தை விட்டு நழுவின முக்யாம்சங்களையே எடுத்து, கோடி. காண்பிப்பது போல, வாதிகளை வென்றால்‌ போதுமானது.

சிஷ்‌.–உத்திரவு -என்னுடன்‌ வாதத்தித்கு வருபவர்கள் வரட்டும்

ஜயதி ஸகல வித்யா வாஹிநீ ஜென்ம சைலோ
ஜனிபத பரிவிருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி ஸாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்யோ
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோய தீந்த்ர

(திரைக்குள்‌) ஸேது முதல்‌ ஹிமாசலம் வரையிலு முள்ள எந்த ஸித்தாந்த வாதிகளையும்‌ நாங்கள்‌ லக்ஷியஞ்‌ செய்ய மாட்டோம்‌.” ।
வ்யவ.–கேட்டீர்களா -கபட வாதிகளது வீர வாதத்‌தைக்‌ கேட்டீர்களா ? |

சிஷ்யன்–கேவலம் தமது உத்ஸாகத்தையே சாதனமாகக் கொண்ட கடட வாதிகள் எல்லோரும் ஏக காலத்தில் எதிர்த்தாலும் எனக்கு எதிர் நிற்க மாட்டுவரோ -குருடனுக்கு குருடன் கோல் கொடுக்கும் கதை யல்லவா இவர்கள் வாதம் – நம்‌ யதிராஜனால்‌ பிரகாசிக்கப்பட்டதும்‌, ௮ஞ்‌ஞானமென்னும்‌ இருட்டிற்கு விடியற்காலமானதுமாகிய சரீர சரீரி பாவமென்னும்‌ ப்‌ரதிதந்திரத்தை எவன்‌ அறின்றானோ, ௮நத மஹானைக் கண்ட மாத்திரத்திலேயே , தத்தம்‌ மதஸ்தாபனத்திலேயே குதாகலித்துத் துள்ளும்‌ கபடவாதமென்னும்‌ பெரு முழக்கம்‌ கணப்‌ பொழுதில்‌ விநாசமடையுமல்லவா –

வ்யவ.–நன்கு ‘கூறினீர்‌:! இனி, ப்‌ரதிவாதிகளது கொள்‌கைகளை ஒவ்வொன்றாகக்‌ கண்டனஞ்‌ செய்வோம்‌–.

சிஷ்‌ –அப்படியே ! !

ஆசார்‌--ஸவ்மய ப்‌ரகிருதியையும்‌ ஜீவாத்மாவையும்‌ பிரித்‌து விட்டு , பரபுருஷன்‌ என்ற ஒருவன்‌ இல்லை யென்னும்‌ சாங்கிய மதத்திற்கு. என்ன பதில்‌ சொல்லுவாய் ‘

சிஷ் -ஆசார்யரையும் சபையோரையும் வணங்கி — ப்ரக்ருதியும்‌ ஜீவாத்மாவும்‌ ஸ்ருதி பலத்தால்‌ இவர்களால் அங்கீகரிக்கப்‌படுமாயின்‌, ௮தே அநேகம்‌ ஸ்ருதிகளுக்கும்‌ நாதனான அந்தப்‌ பரமபுருஷன்‌ மாத்திரம்‌ ஏன்‌ கிடையாது? யோக சாஸ்‌திராப்பியாச காரணத்தால் , பரம புருக்ஷனுடைய ஐச்வரியத்தைப்‌ பிரதிபிம்பத்துக்குச்‌ சமானமாகக்‌ கூறுகிறார்களே இவர்கள்‌–ஈஸ்வரனுக்கு ஞானம்‌, சத்தி, பலம்‌ முதலிய குண ஐச்வர்யங்கள்‌ ஸ்வபாவமாகவே உண்டு என்கிற வேத-வாக்கிரங்களக்கு ஏன்‌ பதில்‌ சொல்ல வில்லை

வ்யவசா -நன்றாகக் கண்டனம் செய்தாய் -கணாநாதருடைய மதத்திற்குப் பதில் என்ன –

சிஷ் -பதிலா ?–. மோஷானுபவம்‌ ஆனந்தரூபமன்று என்றும்‌, ௮ஃது பாஷாணத்தை யொத்தது என்று மல்லவா கூறுகிறார்கள்‌ இந்த வாதிகள்‌ ? அப்படியாயின்‌, கும்பகர்ணனுடைய ௮னுபவமே பரம சுகமானதாகிறது இவர்கள்‌ வாதப்படி ! ௮வன்‌ தூக்கம்‌ சாபமல்ல, அநுக்ரஹமே ஆகிற தல்லவா இந்தக்‌ கக்ஷியின்படி.

வ்யவ.–ஒரே வார்த்தையில்‌ கண்டித்‌து விட்டீர்‌ -கணந தோறும்‌ ப்ரபஞ்சம்‌ நாசமடை தென்‌று வாதிப்‌போரை ௮டக்கும்‌ முறை?

சிஷ்ய –பலமற்ற அக் கஷியினோரைப்‌ பற்றியும்‌ பேச வேண்‌டுமோ ?. ஒருவரை யொருவர்‌ பொய்யனென்று சொல்‌லிக்‌ கொள்ளும்‌ பல பிரிவுகள்‌ கொண்ட இவர்கள்‌, தங்கள்‌ தங்கள்‌ வாதத்தை ௮றிந்து ஸ்‌திரப்படுத்தப்‌ பார்க்கிறார்களா, அல்லது, சொல்வதை அறிந்து கொள்‌ளாமிலேயே பொய்‌ என்று பிதற்றித்‌ திரிகிறார்களா –

வ்யவசா -ஸ்லாகையோடு. சுருக்கமமாயும்‌ : கம்பீரமாயும் இருக்கறது பதில்‌!–, ஆயினும்‌, உலகமே பொய்‌யென்று ஓரு சாரார்‌ வாதிக்கிறார்களே -அவர்களுக்கு என்ன பதில்‌ –

சிஷ் -தன்னைப் பெற்ற தாய் மலடி என்றும் வாதிப்போருடன் பிரதிவாதம் செய்து என்ன பலன் –
திரைக்குள் பிசாசுகள் பிசாசுகள் என்ற கூக்குரல்

வ்யாவ –அது ஒரு மதஸ்தர் கூக்குரல் -அவர்களையும் நிராகரிக்க வேண்டும் நாம்

சிஷ் –-தவறுதல்‌ தவிர்த்த வேறு விஷயம்‌ இவரிடம்‌ இடையாது, *உண்டு ” என்பதை *இல்லை’ யென்பார்கள்‌- இல்லை ” என்று கூறியதையே *உண்டு ‘ என்பார்கள்‌. முரண்பாடுகொண்ட இவர்கள்‌ வார்த்தைகளே இவர்‌கள்‌ மதத்தைக்‌ கண்டிக்கப்‌ போதுமானதாகும்‌. வேத மார்க்கத்தை இவர்கள்‌ தூஷித்ததால்‌, தேவதைகளை ‘ இவர்களுக்குத்‌ தகுந்த தண்டனை விதித்திருக்கிறா கள்‌. தங்கள்‌ தலைமயிரைத்‌ தாங்களே பிடுங்கிக்‌ கொள்ள விதிக்கப்பட்டிருக்கும்‌ இவர்களது ௮வஸ்யே இவர்‌களுக்குப்‌ போதுமான கண்டன தண்டனையாகும்‌.

(உள்ளே, பேரிரைச்சல்‌, இடி முழக்சம்‌, காரிருள்‌, கனத்த மழை )

வ்யவஸா – கேட்டீர்களா ! ஸூர்யஸ்தம்பநம்‌ முதலிய, செய்து வரும்‌ திகம்பரர்‌ நமது கண்டனத்தைக்‌ கண்டு சகியாது, வஞ்சனையால்‌ இந்த ௮கால மழையை உண்டாக்கி ஜனங்களை மருளச் செய்து தமது சித்தாந்தத்திலேயே நம்பிக்கை யுண்டாக்க முயல்இறார்‌கள் ! இவர்களை இக் கணமே கண்டித்தல்‌ வேண்டும்‌!

ஆசார்‌ -தன்னைச்‌ சரண மடைந்தவர்கள்‌ ௨ழன்று தவிக்கும்‌ ஸம்ஸார ஸாகரத்தைப்‌ பானஞ் செய்த, ஜீவனைக்‌ கரை யேற்றுவிப்பவனான ஸாக்ஷாத்‌ பகவான்‌, இவ் வஞ்சனைகளைத்‌ தானே கண்டனஞ் செய்யக்‌ காத்திருக்க, நாம்‌ கவலை கொள்வானேன்‌?

(இரைச்சலடங்‌க, மழை நின்று, வெளிச்சம்‌ பிரசாசிக்கிறது )
யாவரும்‌.-
ஆச்சர்யம்‌! ஆச்சர்யம்‌! பகவான்‌ பிரஸந்நனே – பிரஸந்நனே-

அங்கம் 1—நான்காம்‌ காட்சி

விவேக–குரோ தேவரீர்‌ சிஷ்யர் மற்றொரு வேத வ்யாஸர்‌ போல,பாஞ்சராத்‌ர மஹிமையைத்‌ தெளிவுற ஸ்தாபிததார்‌ ! கெளமாரில கக்ஷியாரது கொள்கையையும்‌ கண்டனம் செய்யும்‌ மார்க்கம்‌ கூறில்‌, நம்‌ சித்தாந்த வாதம்‌ பூர்ணமாகு மென்று நம்புவேன்‌,

ஆசார்‌-வேத ஸம்‌ரக்ஷகர்களாயும்‌, வேதாந்தத்தை விட்டவர்களாயு மிருக்கிற கெளமாரிலராதியோர்‌, சந்தோஷப்படுத்தவும் பயமுறுத்தப்படவும்‌ தக்கவர்‌களே.

சிஷ் –தலையில்லாத உடல்‌”. அவ்வளவே தான்‌ ௮வர்‌ கள்‌ சித்தாந்தம்‌.

விவேக-பாஷண்டிகளால் சூழப்பட்ட இந்தக் காலம்‌, மஹா ஸமர்த்த வாதியான உம்மால்‌ புண்யமடைந்ததாகவே ஆகிறது !

வ்யவ.–அரசே! இவருக்குத்‌ தகுந்ததோர் சம மானம் செய்தருள்வேண்டும்‌.

சிஷ்‌-.ஆசார்ய ஸ்ரேஷ்டரது அனுக்‌ரகமும்‌, இந்த மகாராஜனது கடாஷமும்‌ கிருபையுமே எனக்குப் போதுமான சம்மானமாகும் –

விவேக, பகவந்‌ ! சேனாபதி கூறியது நியாயமே–. ஸ்வாமின்‌! தாங்கள்‌ பூஜ்பரே ! சிஷ்ய.– ஆயின்‌, அடியேனது ஆசார்ய ஸ்ரேஷ்டரான இந்த பகவானே தமது பூஜைக்கு ௮ர்‌ஹராகிறார்‌-
ஆசரர்‌–என்‌ நியமனத்தால்‌ நீயும்‌ சம்மானிக்கத்‌ தகுந்தவனே!

விவேக..-பகவரந் ! தேவரீரது சிஷ்யர்‌ வேதாந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்‌. இவரால்‌, தத்வ ஞ்ஞானம்‌ மிகவும்‌ உறுதியாக உண்டாக்கப் பட்டதென நகரத்தில்‌ தண்டோரா போடப்படட்டும்‌. இந்தக்‌ கடகத்தைத்‌ தன்‌ இடது காலில்‌ இந்த வாதி கேஸரி ௮ணிந்து கொள்ள வேண்டும்
(கடகத்தைக் கொடுக்கிறார் )
சிஷ்
–(ஆசார்யனை நோக்கிய வண்ணம்‌ மெளனம்‌)

ஆசார்‌..-ராஜாஞ்ஜை மீறத் தகாதது. அப்படியே செய்வாயாக!
சிஷ் . -நியமனப் படியே–(கடகத்தை வாங்கிக்‌ கொள்கிறார் )
ஆசார்‌-ஆயுஷ்மன்‌ ! இனி நீ செய்ய வேண்டிய கடமைகளைக்‌ கூறுறேன்‌ கேள்‌ –பணம்‌, கியாதி, பூஜை இவைகளை அடைவதில்‌ ஆசை வையாதே. உத்தம சிஷ்யர்கள்‌ கிடைக்குமிடத்து எவ்விதப்‌ பிரதி ப்ரயோஜனமும்‌ எதிர்பாராமல்‌ அவர்களுக்கு வேதாந்த சாஸ்‌திரப்‌ பரவசனம்‌ செய்வதையே விரதமாகக்‌ கொள்ள வேண்டும்‌;

சிஷ்‌-பகவந் நியமனப்படியே

விவேக-— தமது ஆஞ்ஜையை ஊக்கத்துடன் நிறைவேற்றுவிக்க இப்பொழுதே புறப்படும்‌-நாங்களும்‌ சத்ருக்களின்‌ சேனையை நாசம்‌ செய்வதற்காகப்‌ ப்ரயத்தனிக்க இதோ செல்கிறோம் (போகிறார்கள்‌-திரை விழுகிறது )

ஐந்தாம்‌ காட்சி–இடம்‌ :—ஓர்‌ காட்டுப் பாதை–ராகனும்‌, த்வேஷனும்‌. பிரவேஸிக்கிறார்கள்‌.]
ராகன்‌-
-நண்ப ! விவேகனது ‘வஞ்சனையினால்‌ மகா மோக ராஜன்‌. வளர்த்து வந்த பல்வேறு ஸித்தாந்தங்களெல்‌லாம்‌ தீவிரமாய்க்‌ கண்டிக்கப் பட்டன. இனி உன்‌ உதவியினால் தான்‌ நான்‌ மகா மோக ராஜ்யத்தைத் திரும்பவும்‌ நிலை நிறுத்த முயல வேண்டும்‌. நமது முதல்‌ முயற்சி விரக்தியையும்‌ விஷ்ணு பக்தியையும்‌ ஜீவனை ௮ணுகாதிருக்கச்‌ செய்வதே யாகும்‌. மாரீசன்‌ வஞ்சனையினால்‌ ராமனைச்‌ ஸீதையிடமிருந்து அகற்றினது போல, நானும்‌ விரக்தியை விரட்டி விடுகிறேன்‌. ராவணன்‌ ஸீதையை ௮பகரித்‌துச் சென்றது போலே நீயும்‌ ௮தே சமயம்‌ விஷ்ணுபக்தியைப்‌ பலாத்கரித்தேனும்‌ விலக்க வேண்டும்‌. தெரிந்ததா?
துவே –அப்படியே|

ராகன்‌. –அற்ப சுகத்தை இச்சிப்பவன்‌ ஆசைக் காரன்‌ எனப்‌படுவானாயின்‌, பேரின்பமென்பதைக்‌ கோறுபவன்‌ பேராசைக்‌காரனாகிறா னல்லவா – அன்னாக்கு விரக்தி எப்படி உண்டாகக்‌ கூடும்‌? தன்னைத் தானே ௮டைவது” என்‌றதே சுகமாகுமா? மற்றொன்றை அனுபவிப் பதினாலல்லவா சுக, மேற்படக் கூடும்‌–ஆகவே காமமே யன்றோ ப்ரஸித்தமான புருஷார்த்தமாகக் கூடியது

துவே. நன்றாய்‌ சொன்னாய்‌ -ஹ ஹ! இந்த உலகம்‌ பரமாத்மாவுக்குச் சரீரமாம்‌ ! உலகமோ துக்கம்‌ நிறைந்தது -ஆகவே பராமாத்மாவும்‌ துக்கத்தை அடைந்த வனல்லவா? பரமாத்மாவை அடைவதால்‌ துக்கம்‌ எப்படி நிவ்ருத்தியாகக் கூடும்‌ ? ௮ப்படிக்கின்‌றி , அடையப்படுவது நிர் விசேஷப்‌ ப்ரஹ்ம மானால்‌, ௮து ஸூக ரூபமாக ஆக மாட்டாதே! ஆகவே உபநிஷத்‌து வாக்கியங்கள்‌ கேவலம்‌ ஏட்டுச்‌ சரக்காய் தானே ஆகின்றன –

ராகன்‌–சபாஷ்‌! இந்த ஞானம்‌ ஜீவனுக்கு இருக்குமாயின்‌, விஷ்ணு பக்தி இருந்த இடம்‌ தெரியாமல்‌ ஓட்டம்‌ பிடிக்க வேண்டியது தான்‌ ! எந்த ஸ்‌தீரிகளது மோகத்தினின்றும்‌ ஜீவனை விடுவிக்க வேண்டுமென்று விவேகன்‌ முயற்சிக்கிறானோ ௮ந்த ஸ்‌த்ரீகளின்‌ குணங்களாலேயே இதே விவேகனே கட்டுப்படுகையில்‌, விரக்தி உலகில்‌ எப்படி உண்டாகக் கூடும்‌ நாம்‌ காம வலையைத் தீவிரமாய்‌ விசி வருவோமாகில்‌ பேரானந்த ௮னுபவங்களுக்குக்‌ காரணமான ௮ங்க ௮வயவங்களையுடைய ஸ்‌த்ரீகளை மாம்ஸ பிண்டங்களென்று வைதிகப்‌ பிசாசுகள்‌ மூடர்களை வஞ்சித்து வருகிறார்களே.! ஆயினும்‌ ௮ந்த யுவதிகளின்‌ நடை யென்னுங்‌ கதியைக்‌ கண்ட க்ஷணத்திலேயே, இவர்கள்‌ ஸ்மாதியின்‌ ௧கி ௮தோ கதி யடைந்து விடுறதல்லவா ! (உற்றுக்கேட்டு) இல்லையா ? ௮ந்தோ ! குருடனுக்கு? பாலின்‌ நிறத்தை எப்படிக் காட்டுவது –

துவேஷ- விவேகனை வெல்வோமாகில்‌ இந்த வைதீகப்‌ பேய்‌களனைத்தையும்‌ வென்றவராவோம் -நானே அக்காரியத்தை முடிக்க வல்லவன்‌ -ஹ! ஹ! ! ஹ! (உரக்கச்‌ சிரித்‌து ) எந்த உபநிஷத்தில்‌ விழுந்து புரண்ட போதிலும்‌, அழுக்கடைவதைத்‌ தவிர்த்து விவேகனால் ப்ரஹ்மத்தைக் கண்டு விட முடியுமோ நானிருக்கும்‌ வரை?
(திரைக்குள்‌: யார்‌ அப்படிக்‌ கூறுவது – அப்படிக்‌ கூறுவது யாரடா ? )

ராகன்‌. (பயத்‌துடனும்‌, பரபரப்புடனும்‌., ஐயையோ ! நாம்‌ எவ்வளவோ சிரமப்பட்டும்‌, விரக்தியும்‌ விஷ்ணு பக்தியும்‌ நம்‌ வலைகளைக் கடந்து ௮தோ வரும்‌ விவேகனையும்‌ ஸூமதியையும்‌ ௮ணுகுகிறார்களே ! நம்‌ மகாராஜனின்‌ உத்திரவை எப்படி நிறைவேற்றுவிக்கப்‌ போகிறோம்‌ ? நம்‌ ௮திர்ஷ்டம்‌ மாறி விட்டது போல்‌ காண்கிறதே -இச் சமயம்‌ நாம்‌ தனித்து இவர்களிடம்‌ அகப்பட்டு கொள்ளக் கூடாது! நம்‌ தோழர்களான காம க்ரோதாதியோரைக்‌ கலந்து யோஸித்தே. தகுந்த வழி செய்ய வேண்டும்
(ஒடி விடுகிறார்கள் )

ஆறாம் காட்சி -இடம்‌ :–ஸபா, மண்டபம் –விவேக்கும் ஸூமதியும்‌ பிரவேசம்‌. | விவேக –பெண்ணே ! இன்னமுமேன்‌ உனக்குப்‌ பயம்‌? எதிரி ஏவின சோரார்களிடமிருந்து தப்‌பி ) விரக்தியும்‌ . விஷ்ணு பக்தியும்‌ உன்னைத்‌ திரும்பவும்‌ அடைந்து விட்‌டார்களே!
ஸூமதி , (பெருமூச்செறிந்து ) ஆயினும்‌, எப்பொழுதும்‌ மறைவிலைேயே இருக்கும்‌ ராகனும்‌ துவேஷனும் எச்சமயம் என்ன தீங்கு செய்வார்களோ என்றே என் மனம் சலிக்கிறது

விவேக.--பேதாய்‌! அக்கவலை நீ கொள்ளத் தக்கதல்ல.கீதோபசேசம்‌ செய்த பகவான்‌, முடிவில்‌ கூறியதை மறந்தனையோ ? தன்னையே சரணமடைந்தோரைக்‌ காப்‌ பாற்றுவது ௮வன்‌ பொறுப்பே யல்லவா ? அப்படிச்‌ ச்ரணமடைந்த பிறகு ஜீவனுக்குப்‌ பயம்‌ ஏது?
ஸுுமதி. _-(துக்கத்‌துடன்‌) எனிலும்‌, . சுக துக்காதிகளில்‌ மாறி மாறிச்‌ சுழன்று வருந்தும்‌ ஜீவாத்மாவின்‌ கஷ்டங்களைக்‌ கண்டு ஸூகிக்க என்னால்‌ ஆக வில்லையே !
விவேக.–(அனுதாபத்துடன்‌)–. இனி வருந்துத லொழி! ஜீவனுடைய புண்ய விசேஷத்தால்‌ அவனது புத்தி பர ப்ரஹ்மத்தினிடத்தில் அவனுக்கு அளவில்லாத ஆசையை உண்டாக்குகிறது -சிற் சில ஸமயம்‌, புத்தி, மோகத்தால்‌ சலித்த போதிலும்‌ திரும்பவும்‌ ஜீவன சக்திக்‌ கேற்றாப் போல்‌, பக்‌தியிலோ பிரபத்தியிலோ வந்‌து நிலை நிறுத்தப்படுறது. “இந்தச்‌ சக்தி உண்டானதும்‌, ஸ்வர்க்க சுகத்தைத் கூட நரக வேதனையாய்‌ நினைத்துப் பரமாத்‌மாவின்‌ பாதார விந்தங்களிலே ஸ்‌திரப்பட்டு நிலைத்து விடுகிறான்‌. ௮ப்பொழுதே அவனக்கு மோக்ஷம்‌ ஸித்‌தம்‌ ௮த்தகைய உபாஸனை ஏற்படுங் காலத்திலேயே புருஷன்‌ மகானந்த ஸ்வரூபமான ப்ரஹ்ம அனுபவத்தில்‌ ஆசை, யுடையவனாகிப்‌ பேராநந்தத்தைப்‌ பெறுகிறான்‌ !

ஸுமதி -. நாதா! சந்திரனைப்‌ பிடிக்கக்‌ கை நீட்டும்‌ குழந்தை போல, ப்ரம்மாதி யோகிகளும்‌ சப்தாதி விஷயங்களில்‌ மயங்கும் போது , சாதாரண ஜீவனுக்கு. மோக்ஷம்‌. எப்‌படிக் கிடைக்கக்‌ கூடும் என்கிற சந்தேகம் என்னை விட்டபாடு இல்லை தான் –

விவேக,–பேதாய்‌! திடத்துடன்‌ மரத்திலேறிய சாமர்த்திய சாலிக்குக் கிடைக்காத கனிகள்‌, அசிரத்தையுடன்‌ , போய்க்‌ கொண்டிருக்கும்‌ வழிப் போக்கனுக்கு, அவனது புண்ய விசேஷத்தால்‌ கிடைப்பது சந்தேகமற்ற அனுபவமல்லவா?

ஸூமதி.-வாஸ்தவமே! என்‌ சந்தேகம்‌ தீர்ந்தது. ஆனாலும்‌ தங்களால்‌ கை கொடுக்கப்‌ பட்ட ஜீவன்‌, ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டத்‌ தக்கவனானால்‌, இடையிடையே ஏன்‌ பயத்தினால்‌ பீடிக்கப் பட்டவனாகிறான்‌ ?
விவேக.–என்ன மயக்கம்‌ ! மோக்ஷத்தை அடையப் போகிறவனையும்‌ மோக்ஷத்தை அடைந்தவனாகவே பாவித்துப்‌ பேசுகிறாயே? மனஸ்‌ அஜாக்‌ரதையா யிருந்தால்‌ பயம்‌ உண்டாவது சகஜந்தானே ! வர்ணம்‌, ஆச்‌ரமம்‌, இடம்‌ காலம்‌ இவைகளுக்கு ஏற்ற சாஸ்‌திர நியமனப்படி நடந்தால்‌ எவ்வித பயமம்‌ உண்டாவதற்குக் காரணமே இல்லை –

ஸூமதி –பயத்திற்கு ஹேது இதுவானால் தியானம்‌ எவ்விதம் பூர்த்தி அடையக்‌ கூடியது ?

விவேக எவனொருவன்‌ மனத்தை வேறொன்நிலும்‌ செலுத்‌தாமல்‌, பகவத் கிருபை யொன்றையே ஆதாரமாக வைத்‌துக்‌ கொள்கிறானோ அவன்‌. த்யானம்‌ தடங்கலின்‌றி பூர்த்தி அடைவது நிச்சயம்‌.

ஸூமதி -சரிதான் -மஹா புருஷர்களுக்கும் கூட ஏன் மோக்ஷம் சீக்கிரத்தில் கிடைக்கிறதில்லை –

விவேக-மஹா ஸூஷ்மமான விஷயமாகும் இது -பாகவத அபசாரம் சகல புண்யங்களையும் போக்கடிக்க வல்லது -பாதகங்களிலும்‌ கொடியது செய்த நன்றியை மறப்பது-அதனினும்‌ கொடியது செய்யப்படுகிற நன்றியை மறப்பது. அதனினும்‌ கொடியதானது செய்யப் போகிற நன்றியை மறப்பது! ஆகவே சிறிது ௮ஜாக்ரதையும்‌ பெரிய ௮பசாரத்தை உண்டாக்குகிற தல்லவா-

ஸூமதி,–நாதா! பாகவதாபசாரக்‌ கொடுமையை அறிந்‌தேன்‌. அதற்குப்‌ பரிகாரம்‌ கிடையாதா ?

விவேக –திரும்பவும்‌ ௮தே பாகவதர்களைச்‌ சரணமடைந்து அவர்களது ௮நுக்ரஹத்தைப்‌ பெறுவதே அதற்கேற்ற பரிஹாரமாகும்‌. நீரின்றித்‌ தவிக்கும்‌ மீன்‌, மறுபடியம்‌ நீரினாலேயே பிழைத்து சந்தோஷமடைவது போலத் தான்‌ இதுவும்‌! இம்மாதிரி யோகத்திற்கு, விக்னங்கள்‌ ஸம்பவித்த பிறகு ௮வைகளை நிவர்த்தித்துக் கொள்ள வழி தேடுவதை விட, அவைகளை நெருங்க விடாமல்‌ ஆரம்பத்திலேயே தடுத்துக்‌ கொள்வதே மோஷாமடையச்‌ சிறந்த மார்க்கமாகும்
(ஓர் தூதன்‌ பிரவேசம்‌.]

தூதன்‌-–பிரபோ! ராஜாதி ராஜ -ராஜ மார்த்தாண்ட, ராஜ காம்பீர்ய, ‘ஸார்வ பெளம திவ்ய ரத்ன ஸிம்‌ஹாஸனாதி ரூட .மகாமோக மகா ராஜனின்‌ ‘தூதன்‌, ஸம்வ்ருதி ஸதயன்‌ நமஸ்கரிக்கிறேன்‌. (அஞ்சலி ஹஸ்‌தனாய்‌, ஒர்‌ பனை ஓலையைக் காட்டி,) எங்கள்‌ சக்ரவர்த்தியார் உத்திரவு இது –

விவேக (அலஷியத்தடன்‌)– நீயே படி

தூதன்‌. உத்திரவு (படிக்கிறான்‌)– எங்கள்‌ மகா மோக மஹா ராஜனின் உத்திரவு என்ன என்றால்

விவேக.–(வெளிக் கிளம்பிய சிரிப்பை அடக்கிக் கொண்டு) பிரியே! மோக ராஜன்‌ நமக்கு உத்திரவு இடுகிறானாம் !.பேஷ்‌! எதிரியின்‌ அபிப்ராயத்தை முற்றிலும்‌ கேட்டறிவோம்‌!– மேலே படி.

தூதன்‌.–(படிக்‌கிறான்‌) * ஜீவாத்மாவிற்குப்‌ பரப் ப்ரஹ்மத்‌தினிடம்‌ ஸ்ரத்தையை உண்டாக்கி விட்டாய்‌. அந்தஸ் ஸ்ரத்‌தை ஐஸ்வர்யாபேஷைக்காக மட்டிலும்‌ நிற்குமாக-அப்படியாயின்‌ நாமும்‌ உன்னை மன்னிப்போம்‌.”

விவேக, (அலக்ஷிய்ச்‌ சிரிப்புடன்‌)–பேஷ்‌. ! பிரம்மசாரிக்கு நிற்க இடம் கொடுத்த நியாயந்தான்‌ இது !–௨ம்‌– மேலே?

தூதன்‌.–* மீறி நடப்பாயாகில்‌, நமது சம்ஞ்ஞா மாத்‌திரத்‌திலேயே ஏவப்படும்‌ ‘ க்ரோதன்‌ முதலிய ஸேனுபதிகள்‌ உன்னைத்‌ த்வம்ஸம்‌ செய்து விடுவார்கள்‌, ஜாக்ரதை,.”

விவேக –சாபாஷ் -இவ்வளவு தானா ?. இன்னமும்‌ உண்டோ ௨த்திரவு –

தூதன்‌-காமக்ரோதாதி ஸேனாபதிகளின் திவ்ய பிரபாவம் எடுத்துக் காட்டப் படுகிறது –

விவேக. எங்கே , படி ?

தூதன் – ‘காமனுடைய ஒபில்லா ‘செளர்யத்தை வெல்ல” எ்வனாலாகும்‌?’ ‘கோபத்தணலாலுண்டாகிய ருத்ரனது: . மூன்றாவது கண்ணும்‌ மதனனது சிருங்காரத்‌தினால்‌ மயக்கமடைந்து சீதளமாகி விடவில்லையா –ஆதி பகவானும்‌ ராகத்‌ துவேஷாதிகளுக்கு ஆட்பட்டவனாகியே யன்றோ ஸ்ருவ்டி. ஸ்திதி ஸம்ஹாரமென்னும்‌ லீலைகளைப்‌ புரிந்து வருகிறான்‌ ! ஆசைக்கு ஆளாகாதவர்களும் அவனியில் உண்டோ

ஸூமதி -காமத்தின்‌ கொடுமை கணக்கிடக் கூடாததுதான்‌ !

விவேக-இந்த உளறல்‌களையா லக்ஷியம்‌ செய்வது ?–. தூதா! மீதி உளறல்கள்‌ ஏதேனுமுண்டோ?

தூதன் -க்ரோதன் மஹிமையைக் கேள் -கோபத்தை விலக்கும் பொருட்டுக்‌ குரோதத்தைக்‌ கோபிப்பது, கோபத்தை ஓழிப்பதாகுமா? கோபத்தை ஜெபிக்க எண்ணும்‌ பொழுதே க்ரோதம்‌ ஏற்படுகிறதல்லவா ?

ஸுமதி –ஐயையோ! காமனை விடக்‌ க்ரோதன்‌ வெல்வதற்‌ கரிதானவனா ! ்‌

விவேக.-இந்தப்‌ பிதற்றல்களுக்குக்‌ காது கொடாதே !–. உசிதமான. கால இடங்களில்‌ கோபம்‌ உண்டாக வேண்டியது கொண்டாடத் தக்கதே யொழிய குற்றமாகாது -ஹே தூத! அநங்கனாக்கப் பட்ட காமனையும்‌, யாவரும்‌ பரிஹஸித்து வரும்‌ க்ரோதனையுமே நம்பிக்‌கிடக்கும்‌ பேடியாம்‌ மகா மோகனை நான்‌ அழிக்கவே போகிறேன்‌ என்‌பதை என்‌ உத்திரவாக உனது அரசனிடம் தெரிவி போ

தூதன் -சரி -கொஞ்ச தூரம் சென்று திரும்பி -ப்ரபோ எங்கள் மஹா ராஜனும் தாங்களும் ஒரே குலம் -ஒரு குலத்தைக் காப்பாற்றுவதற்காக ஒருவனைப் பலி கொடுக்கலாம் என்ற நியாயத்தை மறக்கக் கூடாது –போய் வருகிறேன் -(போகிறான் )

ஸூமதி –நாதி முக்தி யுபாய ஆரம்பம் செய்ய இருக்கும் ஜீவாத்மா, மோகனால்‌ ஏவப்பட்‌ட காம க்ரோத மாச்சர்யங்களால்‌. பீடிக்கப்படுவானாகில்‌ உமது ப்ரதிஜ்ஜஞை எப்படிக்‌ கை கூடும் –

விவேக –ஏன்‌ சந்தேகம்‌?_-, தெளிந்த புத்தி யுடைய திடஞ்ஞானிகளை இம் மயக்கங்களால்‌ சற்றும்‌ சலிக்கச்‌ செய்ய முடியாது. ௮வன்‌ இடத்தைக்‌ கண்டதும்‌ இவை யாவும்‌ தாமே பறந்து விடும்‌! ஸுர்யாஸ்‌தமன காலம்‌ நெருங்கி ஸந்தியா காலம்‌ கிட்டி விட்டது! வர இருக்கும்‌ இருட்டே மோகனுக்கும்‌ காமனுக்கும்‌ வஸதியான காலம்‌. ௮தைத் தடுக்க நானும்‌ ஸந்த்ய அனுஷ்டானங்களை முடித்‌துக் கொண்டு ஜீவாத்மாவின்‌ பக்தியை ஸ்திரப்படுத்தச்‌ செல்கிறேன்‌. நீயும்‌ ஷமை சாந்தி முதலியவர்களுடன்‌ வேண்டிய மங்களாசாரங்களைக்‌ கைக் கொண்டு, அஞ்ஞானாந்தகாரத்தை விலக்கி ஞான விளக்கை ஏற்றி என்‌ வரவை எதிர்பார்த்திருப்பாயாக,

ஸூமதி -பாக்யம்
(இருவரும் செல்கிறார்கள்)

அங்கம்‌ -2-முதற்‌ காட்சி –இடம்‌ :—நந்தவனம்‌-[காமனும்‌ வஸந்தனும்‌ பிரவேசம்‌)
காமன்‌–
வஸந்தா ! என்னே என்‌ மஹி மையும்‌ என்‌ பாணங்க ளின்‌ பெருமையும்‌! மதுரமான கரும்பை வில்லாகவும்‌, சுகந்தமான புஷ்பங்களை பாணங்களாகவும்‌, ரீங்காரஞ்‌ செய்யும்‌ வண்டுகளை நாணாகவும்‌, ௮பலைகளாகிற சுந்தர யுவதிகளே சைன்யமாகவும்‌ கொண்ட நான்‌ சூலாயுத பாணியையே வெல்ல வில்லையா ?

வஸந் .–உன்‌ வீரம்‌ ௮ஸாதாரணமானது. அறிவாளிகள்‌ ஓரோர்‌ பயன்களை விரும்பி நன்மையோ தீமையோ செய்து ௮ரும் பெருமை யுள்ள உம்மிடத்தில்‌ **காமன்‌ செய்தான்‌, கோபம்‌ செய்தான்‌ – என்று தியாகம்‌ செய்‌கிறார்கள்

காமன்–நற்றாய்க் கூறினை–உன்னோடு கூடிய என்னாலேயே நமது மோகனுக்கு இனி வெற்றி நிலைக்கப் போகிறது !

வஸந் ,–ஸமாதி செய்வதில்‌ பிரயத்தனிக்கும்‌ புருஷன்‌ மனத்‌தை கலைக்க வேண்டிய ஸ்ருங்கார ரஸங்களை விருத்தி செய்ய வேண்டிய காரியத்தை நான்‌ செய்து முடிக்கிறேன்‌! அதற்கு ஆதாரமான ஆலம்பந விபாவங்களாகிற ஸ்‌திரீகள்‌ முதலியோரது சேஷ்டாதிகள்‌ உன்னால்‌ உண்டாக்கப்‌ படட்டும்‌ !

காமன்‌ -௮துவே ஸரி!–. ஹ! ஹ! பரப் ப்ரஹ்மமா எது ? பரப்‌ரம்மமா சுந்தர யுவதிகளே பரப்ரம்மம்‌ என்பதற்குமா சந்தேகம்‌.? ஸ்ருஷ்டிக்குக்‌ காசணமா யிருக்கற தல்லவா பரப்‌ரம்மம்‌! ஆனந்தத்தைக்‌ கொடுப்பதல்லவா பரப்ரம்மம்‌?–. ஸ்திகளேதான்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணமாகுபவர்கள்‌ ! ௮வர்களே ஆனந்தத்தைக்‌ கொடுக்க வல்லவர்கள்‌ ! ஆகவே ஸ்‌திரீகளே பரப்ரம்ம மென்பதிலுமா சந்தேகம்‌ ?

வஸந் –உபநிஷத்துக்களும்‌ ஆமோதிக்கக் கூடிய வாக்யமே கூறியது! யோகியின்‌ புத்தியும்‌ ஸ்‌திரீகளைக்‌ கண்ட மாத்‌திரத்தில்‌ கலங்கயே விடுகிறது ! ஸ்திரீகளாகிற நம்‌ ஸேனை உயிரோடிருக்கும்‌ பொழுது இந்திரிய ஜயம்‌ செய்‌ய வேண்டு மென்ற ஆசை யுடையவனும்‌ உயிர்த்திருப்‌ பானா? புருஷனது தியானம்‌ அபாய கரமான ஸந்தேதேஹ ஸ்‌திதியிலேயே இருக்கிறது இப்பொழுது ! ஸம்ஸார கஷ்டங்களை வெறுக்கிறான்‌ ! ஸம்ஸார சுகங்களை விரும்புகிறான்‌! ௮தை விரும்புவதற்காக வெட்கப்படுகிறான்‌ ! வெட்கப்பட்டும்‌, அதையே திரும்வும்‌ விரும்புகிறான்‌ ! -ஆகவே, இதுவே நம்‌ ஸைன்யத்தைக் கொண்டு அவனை ஜயிக்க வேண்டிய தருணம்‌!

காமன்‌ -நன்றாயுரைத்தனை ! எவ்விதத்திலும்‌ அவ்விவேகன்‌ அவிவேகனே ! என்‌ ஸைன்யங்களின்‌ ப்‌ரபாவத்தை ௮றிந்தவனில்லை! ஹ! ஹ!–, இரு பக்கங்களிலும்‌ சுருக்கை ‘ யுடைய கயிற்றை யல்லவா கொண்டிருக்கிறான்‌. ஜீவாத்மா என்னிடம்‌ கோபம் கொள்‌வானிகில்‌, அக் கோபக்தினாலே2ய அவன்‌ ஜயிக்கட்பட்டவனாகிறான்‌ ! கோபம் கொள்ளாமல்‌ இருப்பானாகில்‌, என்னை எப்படி விலக்க முடியும்‌ ௮வனால்‌ ?

[பயங்கர ரூபத்துடன்‌ க்ரோதன்‌ (கோபன்‌) பிரவேசம்‌. ]

க்ரோத–.!விரைவுடன்‌ வந்து) மன்மத ராஜனே! விவேகனுடன்‌ சேர்ந்து காம க்ரோதாதிகள வெல்வதாகக்‌ கூறும்‌ விணன்‌ யாவன்‌ ? (ஆர்ப்பரித்து) ஹ.! ஹ!! ஹ!!! நானிருக்கையிலுமா விவேகனைப்‌ பற்றிய பிரஸ்‌தாபம்‌ –

காமன்‌ –உன் வரவு நல் வரவாகுக ! மஹாமோஹ மஹா ராஜனுக்கு ஜே-

வஸந்‌–ஜே!…நெருப்புப்‌ பிடித்ததும்‌ காற்றடிக்க ஆரம்பித்‌தது போலக்‌ காமனும்‌ க்ரோதனும்‌ சேர்ந்த பிறகு ஜீவன்‌ முக்‌தி யடைவதேது – இனித்‌ தைர்யமாய்‌ நம்‌ காரியத்தைச்‌ செய்ய ஆரம்பிப்போம்

காமன்‌ -எனக்கு ஸஹாயங்கள்‌ வெகு அ௩லமாகவே இச்‌ சமயம்‌! , சேர்ந்திருக்கின்றன- சந்திரன்‌ எனக்குப்‌ பிரியமான: ஸ்நேஹிதன்‌ ! ! நிலா எனக்கு இஷ்டையான தோழி-ஸ்ருவங்கார ஸ்ரஷ்டி கர்‌த்‌தாவாகிய வஸந்தன்‌ ஆத்ம பந்து ! மஹா வேகத்தையும்‌ பலத்தையுமுடைய க்ரோதன்‌ ஆபத்‌ பந்து !–. இத்தகைய ஸஹாயங்கொண்ட புஷ்பபாணனை உயிருடன்‌ எதிர்த்து நிற்க வல்வவனுமுளனோ –

க்ரோத.-இல்லவே யில்லை–… இருந்தால்‌ முன்‌ வரட்டும்‌ !

காமன்‌.–ஸமாதியை விரும்பும்‌ ஜீவனப் பிடிப்போம் வாருங்கோள்
ஆர்ப்பரிக்கின்றனர் –

வஸந்‌– அதோ பாருங்கள் விவேகனால்‌ பீடிக்கப்பட்ட ஜீவன்‌ ஊசலாடுவதை ! பயத்திற்குக்‌ காரணமான கிரந்தங்‌களைக் கவலையுடன்‌ பரிசீலனை செய்து கொண்டிருக்‌கிறான்‌ ! தேக போஷணத்தையும்‌ கைவிட மனமில்லை !
துக்க ஸாகரத்தை நிவ்ருத்‌தித்திக் கொள்ள ஆசைப்படுகிறான்‌–, ஸம்ஸார ஸுகங்களை அகற்றவும்‌ இஷ்டமில்லை! இப்படி ஊசலாடும்‌ இந்த ஜீவனை இப்பொழுதே நம்‌ வசமாக்கிக்‌ கொண்டால்‌ தான்‌ ! ஜயித்தோமாவோம்‌.

காமன்‌.-மமகாராதிகளான பழைய வாஸனை, கயிறு போலிருக்‌கிறது, நம் பக்கலிலேயே ஜீவனை இழுத்து விடும்‌ ஸந்தேஹமின்றி !

வஸந் -அப்படி. நம்பி அஜாக்ரதையா யிருக்கக் கூடாது ! இக்‌ கணமே க்ரோதன்‌ ஜீவனைப்‌ பிடித்‌துக் கொள்ள வேண்‌டும்‌. அதோ! அதோ! ஸதா பகவந் நாம ஸ்மரணத்துடனும் , குணானுபவத்துடனும்‌, அவனையே ஆராதித்துக்‌ கொண்டும்‌, விவேகனது கோட்டைக்குள்‌ புகுந்து விட்‌டான் -இனி ஜீவனை மீட்டு வர நம்மால்‌ முடியாது !

காமன்-(வெட்சத்துடன்‌ சிரித்‌து.) வஸந்தா ! என்ன வார்த்‌தை. “கூறினாய்‌ ?.ஸாமர்த்திய மில்லாதவனைப்‌ போல்‌,இந்த. ஸமயத்திலா பயமடைகிறாய்‌? ௮சுவத்தாமா முதலியோர்‌ – முன் காலத்தில்‌ செய்து காட்டிய வழி அடைக்கப் பட வில்லைேயே? நாமும்‌ எதிரிகள்‌ தூங்கும்‌ பொழுதே அவர்களை வதம்‌ செய்து வருவோம் காண்‌!

வசந் –அதுவும் முடியாத காரியமே இனி! ட்‌ அதோ ஜீவாத்மா பரமாத்மாவை சரணமாக அடைந்து விட்டானே -வீடு கொள்ளை போன பிறகு விழித்‌துக் கொண்ட. காவல்காரர்கள்‌ போலாகி விட்டோம்‌ நாம்‌ இப்பொழுது –

க்ரோ — (பரபரப்புடன்‌!) ஹ! ஹ!! ஹ!!! பயப்படாதீர்கள்‌ – எனக்கு எங்கும்‌ செல்வாக்குண்‌டு ! மஹா புருஷர்களும்‌, அவர்களுடைய கந்கைத் துணி, கமண்டலு, தாப்பாஸனம்‌ ஆகிய சிறிய வஸ்துக்களை அவர்கள்‌ அறியாது மறைத்து விடுவேனாகில்‌, அவர்கள்‌ ஒருவர்க்கொருவர்‌ கோபமும்‌ மனஸ்தாபமும்‌ கொண்டவராக, பொய்‌ சொல்லுதலும்‌, தோஷாரோபணம்‌ செய்வித்தலும்‌,கோட்‌ சொல்லிக் கொள்ளுதலுமாகிய சகல தோஷங்களும்‌ உடையவராய்‌, தியானத்தை இருந்‌தவிடந்தெரியாது மறந்து போகும்படிச் செய்து விடுவேன்‌ அவர்‌களிடமிருந்து

காமன்‌.-வாஸ்‌தவமே!

வஸந் .–காமனையும்‌ க்ரோதனையும் “வெல்வதரிது தான்‌-. யாரது வருவது ?… சபாஷ்‌! தர்ம த்வம்ஸி ‘லோபன்‌ த்ருஷ்ணா பத்னி ஸமேதராக எழுந்தருளுகிறார! நமது உதவிக்காக! கவனிப்போம்‌
(லோபனும் -பேராசையும் -திருஷ்ணையும் துராசையும் ஒரு புறமாய் பேசிய வண்ணம் பிரவேசம் )

லோபன் -என்னை திருப்தி செய்ய வல்லவரும்‌ உண்டோ -திருப்‌தி என்றால்‌. என்ன -த்ருஷ்ணே ! நீயே எனக்‌கேற்ற ஸஹ தர்மிணி! உன்‌ ௮ழகே அழகு! ஸ்‌திரீகளுக்‌கு இடை சிறியதாய் இருப்பது அழகாமே -உன் வயிற்றில் பிரபஞ்சத்தில் உள்ள பொன் வெள்ளி ரத்ன மயங்கள் அனைவற்றையும் மலை மலையாகக் கொட்டி நிரப்பினாலும் உன் இடை மட்டுமே மேன்மேலும் இளைத்ததாகவே காட்டுகின்றதே

திருஷ்‌.–நான்‌ அழகில் சிறந்தவளாயிருப்பது ஓர்‌ ஆச்சர்யமா? அதற்கேற்றதாக மூவுலகலிலுள்ளவர்களது பொன்‌ தனம்‌ எல்லாவற்றையும் கொண்டு வந்து எனக்குச்‌ சகல வித ஆபரணங்களும்‌ செய்து கொடுக்க வல்ல சாமர்தியம்‌ உங்களிட மிருந்தாலல்லவா என்‌ ௮ழகு சோபிக்‌கும்-

லோப.-௮து தானா பிரமாதம்‌ -என்னால்‌ ஆக்ரமிக்கப்‌ பட்டவர்களும்‌ என்னால்‌ வெல்லப்‌ படாதவர்களாவரோ? உமியையும் மேருவாக எண்ணிச்‌ சண்டையிட்டுச்‌ சாகிறார்களே ! குபேரனை நான்‌ படுத்தும்‌ பாட்டைக் கேள்‌ ! இருக்கும்‌ தனத்தை எவர்க்கும்‌ கொடுப்பது மில்லை- தானும்‌ திருப்‌தியாக அனுபவிப்பதுமில்லை-மேல்‌ ‘மேலும்‌ தனத்திலேயே – ஆசை கொண்டு, இருக்கும்‌ தனத்தைக்‌ காக்க வேண்டிய கவலையால்‌ நித்ரா ஸூகத்தையும்‌ இழந்தவனா யிருக்கிறான்‌ அக் குபேரன்‌ !–. மகா மோகனாஞ்ஜைப்படி விவேகனை வெல்வதற்காகக்‌ காத்‌திருக்கும்‌. காமக் க்ரோதர்களை, ஜீவன்‌ சாந்‌தி யடையுமுன்‌ கண்டு நம்‌ வெற்றிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்‌.
(காம க்ரோதரர் முன் வர நமஸ்கரித்‌து ) தமையன்மார்களே !–அபிவாதயே–; ஸர்வ ருஷி ப்‌ரவராந்வித ஸர்வகோத்‌ர, ஸர்வ ஸூத்‌ர ஸர்வ வேதாத்யாயீ -லோப சர்மாநாமாஹம்‌ அஸ்மிபோ –

காம- க்ரோ .–தீர்க்காயுஸ்யமான் பவ லோப சர்மா
திருஷ்‌--நாட்டுப்பெண்‌ திருஷ்ணை இதோ நமஸ்கரிக்கிறேன்‌ !:
காம- க்ரோ….-தீர்க்க ஸுமங்கலி பவ ! (யாவரும்‌ ஒருவர்க்கொருவர்‌ ஆலிங்கனஞ்‌ செய்து கொள்கிறார்கள்‌,).
வஸந்‌.--மஹா அநந்த கரமான சேர்க்கை! பற்றி யெரியும்‌ கோடையில்‌, குடிக்கத் தண்‌ ணீரில்லாத இடத்‌தில்‌, நெருப்‌பு பிடித்துக் கொள்ளக் காற்றும்‌ சேரந்தாப்‌ போல நாம்‌ சேர்ந்த பிறகுமா விவேகன்‌ தலை நிமிர்த்தக் கூடும்‌ ?

காமன்‌ –புறப்படுவோம்‌ அணி வகுத்து ஜீவாத்மாவை: வெல்வ !–. முதலில்‌ நான்‌ போகிறேன்‌ -நீங்கள்‌ மூவரும்‌ த்ருஷ்ணையை நடுவில்‌ நிறுத்தி எனக்குப்‌ பின் பலமாகவும்‌ பக்க பலமாகவும்‌ வாருங்கள்‌—
(அப்படியே வ்யூஹம்‌ வகுத்து ஐந்தாறு அடி நடக்கிறார்கள்‌.)
காமன்‌.–
(இரண்டு மூன்று பாணங்களை : அதி வேகமாகத் தொடுக்கிறான்‌.)
வஸந்‌–ஜாக்ரதை ! ஜாக்ரதை : ! விவேகன்‌ ஏதோ ரகஸ்யமானதோர்‌ மந்திர உபேதேசம்‌ செய்கிறான் ஜீவாத்மாவுக்கு !
க்ரோ.-விவேசன்‌ என்ன செய்யுக் கூடும்‌ நம்மை ? ஜீவன்‌ இன்‌னமும்‌ காமன்‌ கணைகளைக்‌ கடக்க வல்லவனாக வில்லை அறிவாய்‌- |

வஸ்ந் . -நண்பர்களே ! சத்ரு மிகவும்‌ பலலான்‌ ! விண்‌ வீர வாதங்கள்‌ அவனெதிரில்‌ கூற வேண்டாம்

இரண்டாங்‌ காட்சி–இடம்‌ -கங்கையும்‌ யமுனையும்‌ சங்கமமாகுமிடம்‌ : டம்பன்‌ ஆஸ்ரமத்திற்‌ கெதிரில் ([டம்பனும்‌, வஞ்சனை (குஹனை) யும்‌ பிரவேசம்‌)

டம்பன்‌--ஹ!ஹ! ஹ!: ஹ!–. அடியே ! உன்னைத் தான்‌ – ப்ருஹஸ்பதிக்குக்‌ தாரை போல பர புருஷ ஸ்பர்ச மறியாத எனது இன்னுயிர்க்‌ காதலியாகத்‌ தர்மானுஷ்டானம்‌ செய்து வருகிறா யல்லவா நீ ?

வஞ்ச.–நல்ல உதாரணம்‌! வெட்கமாயிீருக்கிறது எனக்கே! வஸிஷ்டருக்கு அருந்ததி போல என்று சொல்லக்‌ கூடாதோ என்னை – பாருங்கள்‌,–எவ்வளவு சோரர்‌கள்‌, எவ்வனவு சூதாடுபவர்கள்‌, எவ்வளவு -கிராமாதிகாரிகள்‌, எவ்வளவு மந்திரி ஸ்ரேஷ்‌டர்கள்‌, எவ்வளவு பாஷாண்டிகள்‌ என்னைச்‌ சதா பிரார்த்தித்துக் கொண்டே காத்‌திருக்கின்‌ றனர்‌ பாருங்கள்‌ !. என்னைப்‌ பிரார்த்திக்கும்‌ அவ்வளவு பெயர்களையும்‌ அவர்கள்‌ பிரார்த்திக்கும்‌. பொழுதெல்லாம்‌ ௮வரவர்களை உங்களைப் போலவே பாவித்‌தல்லவா சேருகிறேன்‌

டம்பன்‌-(மனத்துள்‌ சிரித்துக் கொண்‌டு )_- நீயே நித்ய பதி விரதை! இதோ பார்‌–. என்னுடைய கார்ஹ்பத்‌யாக்னி அணைந்து போனல்‌ எந்த நெருப்பை யாவது கொண்டு வந்து போட்டு: எனது – அக்னி ஹோத்ரகம் குறைவுறாது செய்கிற யஞ்ஞ பத்னி நீயே. தீண்டாக் காலம்‌ கிட்டிய போதிலும்‌ வெளி யிட்டுக்‌ கொள்ளாது சர்வதா என்னுடனேயே யிருந்து கொண்டு என்னுடைய தர்ச பூர்ணமாஸ இஷ்டிகளையும்‌, பிண்ட தான ஸ்ரார்த்தம்‌ முதலிய கர்மாக்களையும்‌ குறைவறச்‌ செய்வித்‌து , ப்ராயச்‌ சித்தாதி உபத்ரவங்களுக்கு என்னை ஆளாக்காது, என்‌ பிராம்மண்யத்தை நிலை நிறுத்து கின்றனை! ஹ! ஹ! உன்‌ சாமர்த்தியம்‌ வேறு யாருக்கு வரும்‌-

வஞ்சனை–நாராயண ! நாராயண ! என்ன வார்த்தை நீங்கள்‌ சொல்வது ? நம்‌ க்ருஹத்தில்‌ என்றாவது அக்னி ௮ணைந்‌ததுண்டோ ? ருது தோஷமும்‌, தெய்வாதீனத்தால்‌, பர்வ ஸ்ரத்தாதி காலங்களில்‌ நேராது ஏற்படுகிறது ! அதற்‌கென்ன பிரமாதம்‌ !

டம்பன்‌ – அதைத் தான்‌ நானும்‌ சொல்கிறேன்‌- தப்பென்ன? ஆகவே தான்‌ உன்னை- ஸ்லாகித்துப்‌ போற்றுகிறேன்‌! ஏகாதசியில்‌ பட்டினி யிருப்ப.து போல்‌ பாவித்து வரும்‌ எனக்குப்‌ பூர்ணமாகப்‌ போஜனம்‌ பண்ணி வைத்‌தும்‌, ௮தை மறைத்து, துவாதசி யன்‌ று விடியுமுன்னமே பர பரப்புடன்‌ பாரணைக்குப்‌ பதார்த்தங்கள்‌ ௮க்கம்‌ பக்‌கத்‌தில்‌ ஸம்பாதிக்கப்‌ போகிறாயே !. ௮தனல்‌ என்‌ ஏகாதசி விரதமும்‌ உலகோர்க்குப்‌ பிரசுரிக்கப் படுவதுடன்‌, உண்மையான துவாதசிப்‌ பலனுமல்லவா எனக்கு லபிக்‌கச் செய்‌கிறாய்‌!– உன்னை ஸஹ தர்மிணியாயடைந்த என்‌ பாக்யமே பாக்யம்‌! ஒரு ரகஸ்யம்‌ ஞாபகத்திலிருக்கட்டும்‌’-என்‌னை விட்டு உன்னை எடுத்துச் செல்ல பலர்‌. சதி யாலோசனை செய்து வருகிறார்கள்‌. ஜாக்ரதையா யிருக்க வேண்‌டும்‌ நீ இதோ பார்‌!–. ஸ பதிகளாம்‌ நம்மை விவேகனைக்‌ கொல்ல வேண்டிய அபிசார யாகத்தை நிறை வேற்றி க் கொடுக்கும்படி. மகாமோக ராஜன்‌ தர்ம பத்னி தூர்மதி தேவி என்னை வேண்டிக் கொண்‌டு இருக்கிறார்கள்‌. நமது ஸ்லாக்யமான பிராம்மண்‌யமும்‌ இதிலிருந்தே பிரகாசிக்கிற தல்லவா! அவர்‌கள்‌ தாஷிண்யத்தை மீறாமல்‌. ஓத்துக் கொண்டு விட்டேன்‌. ‘இன்னதென்று தெரியாததோர்‌ தேவதையை நான்‌ ஆராதிக்க வேண்டும்‌-அதற்காக ஆகாச கங்கையில்‌ ௮னுஷ்டானம்‌ முடித்துப்‌ புனிதானாயிருக்கும்‌: தேவ குருவான பிருஹஸ்பதியால்‌ சேகரிக்கப்பட்ட கற்‌பக மலர்களையும்‌, கனிகனையும்‌ சீக்கிரத்திலேயே கொணர்‌வாயாக –

வஞ்-விவேகனை ௮பிசாரஞ்‌ செய்து கொல்ல முடியுமோ ? ௮வனைக்‌ கொல்லாவிட்டால்‌ ௮ந்தகத் தேவதை ௮பிசாரம்‌, செய்தவன் மீதே திரும்பு மல்லவா ?
டம்பன்‌–அடி அடே !”என்‌னுடைய மஹிமைஈய நீ இன்னமும்‌ வறியவில்லைபா? 18-வித்பைகளும்‌ 64-கலைகளும்‌ எளிதில்‌ ௮றிந்த என்‌ சாமர்த்யத்தால்‌, இம் மாதிரி ஆயிரக்கணக்கான யாகங்கள்‌ செய்து முடிக்கப் பட்டிருக்‌கின்றதல்லவா !. என்‌ வைராக்பம்‌ சாமான்யப்‌ பட்டதா? பூமண்டலம்‌ முழுவதையும்‌ ஜபித்த பரசுராமன்‌ ௮ம்மண்டலத்தைப்‌ பெற்றுக் கொள்‌ளும்படி என்னை மன்‌றாடியும்‌ மறுத்து விட்டேன்‌. அதைக் கண்டு ஆச்சர்யப்‌ பட்ட தேவாதி தேவர்கள்‌, ஸ்வர்க்கத்தைபும்‌, மோகத்‌தையும்‌ வருந்தி வருந்தி வேண்டிக்‌ கொடுக்கவந்தும்‌ அவற்றையும்‌ வேண்டாமென்‌று திரஸ்கரித்து விட்‌ டேனே! சாந்தியே எனது. ஐச்வர்யம்‌! ஓம்‌- சாந்தி சாந்தி சாந்தி?

வஞ்ச.–வாஸ்‌தவகம் தான்‌-அந்த யாகம்‌ ச்யேன யாகமா ? தங்கள்‌ தர்ம பத்னியாகிய என்க்கும்‌ காரியம்‌ அந்த யாகத்‌தில்‌ உண்டல்லவா—பைத்யமே! இதோ பார்‌; பரம ரஹஸ்ய மொன்று கூறுகிறேன்‌. ௨னது பரமாப்கைகளான திருஷ்ணை முதலியோருக்குக் கூட தெரியக் கூடாது இது – நான்‌ செய்யப் போவது யாகமமில்லை, ஹோமமுமில்லை–எந்‌த நல்ல காரியத்திலும்‌ டம்பனாகிய என்னுடைய ஸம்‌பந்தம்‌ ஏற்பட்ட மாகத்திரதிலேயே விவேகனுக்கு ௮பிசாரம்‌ ஏற்பட்டு விடிகிற தென்பதை ௮றிவாய்‌ : இதுதான்‌ ஸுஷ்மமான ரஹஸ்பம்‌.

வஞ்ச.–தெரிந்து கொண்டேன்‌. இந்த யாகத்தில்‌ உங்களுக்‌கும்‌ புரோஹிதர்‌ யாராவது உண்டோ?

டம்பன்‌--௮டி மூடாத்மா ! எனக்குமா புரோஹிதர்‌? எனக்கு சொல்லி வைக்கக் கூடிய ஒருவனுமா இருக்கிறான்‌ ?’ பண்டிதனென்று என்னப் படுபவர்கள்‌ ஓவ்‌வொருவரும்‌ என்னை யடைந்து உபதேசம் பெற்றுப்‌ போகிறார்களே- இருந்தபோதிலும்‌, லோக வியவஹாரத்திற்கேற்ப, கர்வனாகிய தர்ப்பன்‌ இந்த யாகத்திற்குப்‌ பேருக்கு ப்ரம்மாவாக யிருப்பன்‌.’ அவனை எதிர்பார்த்தே ஒன்பது தடவை புண்யாஹவாகனம்‌ செய்யப்பட்ட இந்த சித்தாச்ரமத்தில்‌ யாகத்‌துக்கான ஸகலத்தையும்‌ சேகரித்துக்‌ கொண்‌டு ஸப்த ரிஷிகளினாலும்‌ விரிக்கப்பட்ட இந்த தர்பாசனத்தில் உட்கார்க்திருக்கிறேன்‌ :–. அதோ அந்த மஹாத்மாவும்‌. வருகிறார் காண்‌ -நாம்‌ ஆஸ்ரமத்‌துள்‌ செல்வோம்‌–(ஆஸ்ரமத்துள்‌ போகிறார்கள்‌.)

[பெரிய பாதுகைகளை தரித்தவனாய்‌, கழுத்தில்‌ மாலைகளும்‌, கைகளை வீசிக் கொண்டும்‌, பெருந் தடியில்‌ கொடி போல்‌ பத்திரிகை கட்டிக் கொண்டும்‌ கர்வனாகிற தர்ப்பன்‌ பிரவேசம்‌. ]

கர்வ,–உத்தமர்களை நிந்திக்கும்‌ பொருட்டு மகா மோக ராஐனால்‌ நியமிக்கப்பட்ட நான்‌ சகல லோகங்களின்‌ தாரதம்‌யங்களைப்‌ பார்க்க உத்தேசித்து இப்பொழுது பாரத வர்‌ஷமடைந்திருக்கிறேன்‌. “சென்ற விடமெல்லாம்‌ என்ன சிறப்பு எனக்கு ! என்ன உபசாரம்‌! என்ன வரவேற்பு ! என்ன பகுமானம்‌ ! மற்றோர்‌ கொடுத்த பஹுமானங்களைவிட, ஸ்ரீமகா விஷ்ணுவுக்கு லக்ஷ்மியைக்‌ கொடுத்‌ தோனாம்‌ ஷீர ஸாகரனளித்த இந்த ரத்னஹாரத்‌தின்‌ காந்தியே என்‌ மதிப்பை பெருக்குகின்‌றது ! என்னைப்‌ பார்ப்பவர்‌ பலரும்‌ பதின்மூன்றாவது ஸூர்யனோ, பன்னிரண்டாவது ருத்ரனோ, ஒன்பதாவது வஸூவோ வென ஐயமுறுகிறார்கள்‌ ! | (சிறிது யோசித்‌து கோபச்‌ சிரிப்புடன்‌) :என்னே உலகின்‌ மடத்தனம்‌ ! நமது பரிசாரகர்களின்‌ பரம்பரையில்‌ சேர்க்கத் தக்க யோக்‌யதை யற்றவர்களு மல்லலா நமக்கு ஸமமானதது்‌ம் மேம்பட்டதுமான ஸ்தானத்தை வஹிக்க வீணாசை கொள்கிறார்கள்‌ ! ஸகல சாஸ்திர பண்டிதர்களையும்‌ வென்று ஆளாக்கிக் கொண்ட எனக்குமா இணை உண்டு – ஹ ஹ! ஹ. | சிஷை யாரிடத்திலா ? பாலினின்றும்‌ நீரைப்‌ பிரித்தப்‌ பாலையே பருக ஹம்ஸத்திற்கும்‌, சாகரம் அனைத்தையுமே ஒரே ஆசமனத்தில்‌ வற்றடிக்க அகஸ்தியருக்கும் யாரிடம் சிஷை என்‌ கல்விச் சிறப்பு ௮ப்படி யிருக்க, என்‌ குலச் சிறப்பு தானென்ன ? எமக்கு யாகஞ்‌ செய்விக்க யோக்யதை யுள்ளவர்‌ இல்லாத காரணத்தாலேயே மூல புருஷர் முதல்‌ எம்‌ குலத்தோர்‌ எவ்வித யஞ்ஞங்களும்‌ செய்ய வேண்டிய ஆவஸ்யகம் இன்றிக்கே இருக்கிறோம் ஆக்கும்‌! .ஹ! ஹ!! !ஹ! (வலது பக்கம்‌ பார்த்து) வஞ்‌சனையாலும்‌ கண்டறிய முடியாத யுக்திகளால்‌ உலகத்தை. வென்று வரும்‌ என்‌ சிஷ்யர்களின்‌ சாமர்த்‌தியம்‌ எவருக்‌கு வரும்‌ -பெளத்த மதத்தில்‌ 48 பிரிவுகளுண்டாக்கி ௮ந்த வைதிகர்களுடைய வித்யா கர்வத்தை ௮பஹரித்து விட்டேன்‌ !. மதவாதிகளைப்‌ பெருக்கி அவர்களுக்குள்‌ ஆக்‌ரஹத்தை ௮திகரிக்கச்‌ செய்து, அவர்களிடும்‌ சண்‌டைகளைக் கண்டு, மல்லர்கள்‌ செய்யும்‌ யுத்தத்தையும்‌ ஆடுகள்‌ இடும்‌ சண்டையையும்‌ கண்டானந்திப்பது போல்‌, வாத யுத்த ரசத்தை சதா அனுபவித்துக்‌ கொண்‌டே யிருக்கறேன்‌ !(மற்றோர்‌ பக்கம்‌ திரும்பிப்‌ பார்த்‌து ) அதோ! அதோ! கை நிறையப்‌ பவித்ரமும்‌ கட்‌ஷத்தில்‌ புஸ்‌தகக்‌ கட்டுமாக தாடி மீசை வளர்த்துக்‌ கொண்டு தம்மைப் பண்டிதனெனக்‌ கூறிக் கொண்டு சகலரையும்‌ ஏமாற்றிப்‌ போதனை செய்து. வருகிற நிரஷர குக்ஷிகள்‌ கூட்டமல்லவா அதோ அந்த மிலேச்ச தேசத்‌தில்‌ தென்படுவது ? (வடக்கு திக்கைப் பார்த்‌து )–.,ஐயா வடதேசத்தவரே ! துர்மதி தேவியின்‌ ஆஞ்‌ஜையால்‌ ஹிமவகத் பர்வதச்‌ சாரல்‌ சென்ற என்‌ பத்னிகள்‌ ௮ஸூயை, ஈர்ஷ்யை என்பார்களைக்‌ கண்டீரோ – (உற்றுக்‌ கேட்டு(–என்ன ஸுமதியின்‌ தோழிகளான “மைத்ரீ ,முதிதை, . கருணை, உபேஷை ஆதிகளால்‌ நிவ்ருத்தி மார்க்கமென்னும்‌ சுரங்கத்தில்‌ அடைபட்டு விட்டார்களா (கோபத்துடன்‌) பொய்‌! பொய்‌!-ஏ விதவாஸுதனே ! பிராம்மணப்‌ பைசாசமே ! என் பத்‌னிகளுக்கா ௮க்கதி வரக்கூடும்‌?…(உற்று?நோக்கி, ௮டடா! பழைய ஆசாமி தான்‌ இவன்‌ ! வைதீகனாகிய மித்யா சாரனல்லவா! இவனுடன்‌ பேசியதும்‌ தப்பு..

ஸ்வஸ்ரூரஸ்ய திகம்பர வ்‌ரவததீ ஸம்பந்தி நஸ்ஸெளகதா:
மாதா சாஸ்ய பிதா ச பாஸூபதிநெள வைஷஸேஷிகோ தேசிக |
ஜாயா திஷ்டதி ஸாங்க்ய யோக ஸமயே சார்வாக சிஷ்யஸ் ஸாகா
மித்யாசார ஸமாஹ்வய: ஸ்வயமஸெள விப்லாவகோ வைதிக –

(வேறு திக்கு நோக்கி) அதோ! வெளி வேஷத்தால்‌ மட்‌டும்‌ காப்பாற்றப்பட்ட வர்ணாஸ்ரம தர்மங்களை யுடைய பிராம்மணர்களின்‌ ௮க்‌ரகாரம்‌ ! உபநயநாதி ஸம்ஸ்காரங்கள்‌ கேவலம்‌ உத்ஸவார்த்தமாக நடத்தப்படுகின்றன ! ஸந்தியாவந்தனம்‌ ஓர்‌ விளையாட்டாகவும்‌ பொழுது போக்காகவும்‌ செய்யப்படுகிறது ! காயத்ரீ ஜபம்‌ ‘கோஷ்டியாகப்‌ பலர் கூடி. ஊர் வம்பளக்க வேண்டிய பிரக்ருதமாகக்‌ கொண்டாடப்படுகிறது! ஸுரதகேளி ௮க்னி ஹோத்ரம்‌ ஸாங்கோபங்கமாக ஸதா நடை பெறுகிறது ! அவ்வளவும்‌ மோஹ ராஜன்‌ வெற்றிக்கு அறிகுறியையே ஸூஸிப்பிக்‌கிற தல்லவா ! (வேறு பக்கம்‌ பார்த்‌த) அதோ! மடங்களின்‌ மூலைகளில்‌, மெளன ஸமாதியில்‌ இருப்பவர்கள்‌ யார்‌ ?–. வலதுகை விரல்கள்‌ நிறைய தர்ப்பம்‌! மூக்கை இறுக்கிப்‌ பிடித்திருக்கிறார்‌கள்‌ !–. ஹ!- ஹ! ஹ! (கை கட்டிக்‌ குதூகலித்து) பேசுந்திறனில்லாமையாலும்‌, ஆதரிப்‌பாரில்லாமையாலும்‌ மெளன விருதம்‌ கொண்டு குதிரைப்‌ ப்‌ரம்மசர்யம்‌ பூண்டு உஞ்ச விருத்தி செய்யும்‌ வேஷக்காரர்களல்‌லவா –. (வேறு பக்கம்‌ திரும்பி) பேஷ்‌ ! பிடிக்கடங்காத பூணூல்‌ வடம்‌! மூடிய கண்‌! ௮சக்கிய வாய்‌! கையில்‌ ஜெப மாலை ! வஸ்திரத்‌தின் மேல்‌ கிருஷ்‌ணாஜினம்‌! அதன் மேல்‌ தர்ப்பாஸனம்‌ !–பேஷ்‌ இவர்கள்‌ வேஷம்‌! மார்ஜார வ்ருத்தி! கொக்கின்‌ வாட்டம்‌ ! நல்ல் தபஸ்விகள்‌! காலடியில்‌ விழும் காசுகள்‌ தவிர்த்து வேறு எதின் பேரிலும்-கண்ணோட்டம் இருப்பதாகக்‌ காணோமே இந்த யோகிகளுக்கு!–, ஸ்வர்ண மலையை இச்சித்து ௮க்னிபில்‌ ஹோமம்‌ செய்கிறான்‌ ஒருவன்‌ ! கலி யுக ஸந்யாஸிகளின்‌ -வைராக்யம்‌ மெச்சத்‌ தக்கதே ! மடம்‌ கட்டுவதாயும்‌ கிரந்தங்கள்‌ பிரசுரிப்பதாயும்‌, பிஷையென்றும்‌, சிஷ்ய ரக்ஷணமென்றும்‌ பணம்‌ பறித்துப்‌ பிழைக்கிறார்‌களே இக்தக்‌ காஷாயதாரிகள்‌ ஸ்பாஷ் ! உலகம்‌ இப்படி இருக்கையில் மஹா மோஹ ராஜ்யம் நிலை நாட்டப்படுவதற்கா சந்தேகம் -விவேகனுக்கு இடமேது இனி இவ்வுலகில்‌?–அதோ காணப்படும்‌ ஆஸ்ரமம்‌ யாருடையது – தர்ப்பக்கட்டு–துளஸீ ! புஷ்பங்கள்‌ குவியல்‌ குவியலாக : ! ஸூர்யனுக்கு ஸூதனோ, ஜேஷ்‌டப் ப்ரதாவோ, பிதாவோ என்று ஐயுறும்படியான ஐவலிப்பு -உண்மையானதோர் முக்தன் தானோ -நெருங்கி –எனது வலது கண் துடிக்கிறது -என்ன ஆச்சர்‌யம்‌! இந்த சகுனத்திற்குப்‌ பத்னியின்‌ சேர்க்கை யல்லவா ஸம்பவிக்க வேண்டும்‌!-யோகி யாஸ்ரமத்தில்‌ இந்த விபரீதச்‌ சகுனமேன்‌ –அதோ! ஓர் யோகியார் வெளி வருகிறார் –மறைந்திருந்து கவனிப்போம் –
(ஸந்யாஸ வேஷ்த்‌துடன்‌ அஸூயை ப்ரவேசம்‌ )
அஸூயை –
-துர்மதி தேவியின் உத்தரவால் இத்தகைய கோலத்துடன் இவ் வீரேழு உலகிலுமுள்ள விவேகிகள் ஒவ்வொருவரிடம் தோஷ ஆரோபணம் செய்து -அவற்றையே பெரிதாக்கிப் பிரசுரித்தி வந்தேன் –தோஷமற்ற பெரியோரும் உளரோ -ஹ ஹ ஹ -ராமனையே எடுத்துக் கொள்வோம் –

நிரவதி குண க்ராமே ராமே நிராகஸி வாகஸி
ஸ்புரண முஷிசாலோகா லோகா வதந்தி ஸசந்திகே |
வரதநு ஹதிம்‌ வாலி த்ரோஹம்‌ மநாகப ஸர்பணம்‌
பரிமிதகுணே ஸ்பஷ்டாவத்யே முதா கிமுதாஸதே

ப்‌ரபஞ்சத்திலுள்ள தோஷங்களைப்‌ போக்கடிக்க வல்ல அந்தப்‌ பகவானிடமும்‌ தோஷத்தைக்‌ கூற வல்லேனல்லவா நான்‌ !–, (கர்வனைக்‌ கண்டு)அதோ ! ஸ்வர்ண குண்டலங்கள்‌ ! தண்ட கமண்டலு! இடையில்‌ தர்ப்‌பக் கயிறு, ! வயிறோ -அஷ்டகா ஸ்ராத்த போஜனத்தால்‌ பருத்த ஏற்றச்‌ சால்‌ !
(கர்வன்‌ முன்வர )
அடிக்கடி ஹுங்காரக்‌ கனைப்பு -இந்த ஆஸ்ரமத்துள்‌ நுழையப்‌ பார்க்கிறான்‌ போலும்‌ !–தடுத்து நின்று யாரென அறிகிறேன்‌|

கர்வன்‌.– (வணக்கத்துடன்‌) பகவதி? மகா யோக ஸித்தி பெற்றவளாய்த்‌ தோன்றும்‌ உனது ஊர் , குலம்‌, கோத்‌ரம்‌ முதலியனவற்றை நான்‌ அறிய விரும்புகிறேன்‌.

௮ஸுூ.–பிள்ளாய்‌! என் போன்ற இவ்வாஸ்ரமத்தில்‌ உள்‌ளவர்கள்‌ சொல்லக் கூடாத விஷயங்களை என்னைச்‌ சொல்‌லச் சொல்லுகிராய்‌ ? என்னை ஏன்‌ நமஸ்கரியாது தம்பம் போல்‌ நிற்கிறாய்‌ –

கர்வன்‌.–நீ ஆஸ்ரசமமொன்றில்‌ மட்டும்‌ பெரியவள்‌, நானோ வயது, கர்மம்‌, வித்யை எல்லாவற்றிலும்‌ உன்னை விடப் பெரியவனா யிருக்க, நான்‌ எப்படி. உன்னை நமஸ்‌கரிக்கக்‌ கூடும்‌ என்றுதான்‌ தயங்குகிறேன்‌.
௮ஸூ .—இந்த ஸந்தேகத்தை இந்த ஆஸ்ரமத்திலுள்ள பெரியாரைக்‌ கேட்டுத்‌ தெளிவோம்‌ முதலில்‌.

கர்வன் -சரி ஆயினும்‌.–. நீ இதற்கு முன்‌ என்னால்‌ அனுபவிக்கப்பட்டவளாகவே . காண்கிறாயே!—வேஷம்‌ மட்டும்‌ வேறாயிருக்கிறது !
அஸு,–நீயும்‌ பழைய பரிச்சயா முள்ளவனாகத் தான்‌ தோன்றுகிறாய்‌ ! இருந்த போதிலும்‌ உன்‌ ஸந்தேகத்தை ஆசஸ்ரமத்திலுள்ள பெரியாரிடம்‌ கேட்டு நிவர்த்தித்‌து பிராயச்சித்தாதிகளை முடித்‌து உன்னைப்‌ பரிசுத்தனாக்க வேண்டும்‌ முதலில்‌ !

கர்வன்‌.–(தனக்குள்‌) கொண்டிருக்கும்‌ வேஷத்தால்‌ தைரியமாய்ப்‌ பிதற்றுகிறாள்‌ ! (வெளிப்படையாய்‌), இந்த ஆஸ்ரமத்திலுள்ள பெரியார்‌ யார்‌

அஸு,—பார்த்கால்‌ தெரிய வரும்‌ ௮வர்‌ பெருமை.
(ஆஸ்ரமத்துள்‌ செல்கின்றனர்‌.)

மூன்றாம்‌ காட்சி- இடம்‌ :–டம்பன்‌ ஆஸ்ரமத்திற்குள்‌ [டம்பனும்‌, வஞ்சனையும்‌ –கர்வனும்‌, அஸூயையும்‌ வருவதைக் கண்டு டம்பன்‌ மெளன விரதம்‌ அபிநயித்து பத்னியை ஜாடையால்‌ ஏவுகிறான்‌.]

வஞ்சனை– ஜயா (பரபரப்புடன்‌)--. ஐயா பிராம்மணோத்தமரே ! அம்மா பகவதி! வெகு தூரம்‌ நடந்து வந்து ௮சுத்‌தமா யிருக்கும்‌ உங்கள்‌ நிழல் கூட மஹா யோகியாகிய இவர் மேல்‌ படக் கூடாது. : எட்டி நில்லுங்கள்‌.–கங்கா ஜலத்தையே மஹ ரிஷிகளே கொண்டு வந்தாலும்‌ அதையையும்‌ கையாலே நனைக்க மாட்டார்‌ என்‌ யஜமான் ! கிட்டி வராதேயுங்கள்‌ !

கர்வன்‌–அபூர்வ தம்பதிகள்‌ -நீங்கள்‌! கங்கா யமுனா ஸங்கமத்தில்‌ தீர்த்த மாடிய மஹாபரிசுத்தர்கள்‌ நாங்கள் -எங்கள்‌ தேஜஸ் என்ன ! கியாதியென்ன ! சூர்யனைப்‌ போல்‌ ஸ்வயம்‌ பிரகாசிகளான எங்கள்‌ நிழலும்‌ கீழே விழுமா ? ஸந்தேக நிவ்ருதயர்த்தம்‌ இங்கே வந்தால்‌, ௮திதி ஸத்காரம்‌ ஏதும் செய்யாததுடன் ௮நாதரவுமாகவும் செய்கிறீர்கள்‌? ஹ!ஹ! ஹ! தனது மூடத்தனத்தை மறைத்துக்‌ கொள்ள உனது யஜமானர்‌ மெளன விரதம்‌
கொண்டிருக்கிறாரோ ?

டம்பன்‌.--(புருவத்தை நெறித்து ஹுங்காரஞ்‌ செய்கிறான்‌)

வஞ்சனை, — (வேகத்துடன்‌ ௮ருகில்‌ சென்‌று வாயைப்‌ பொத்‌திய கையுடன்‌) மெளன விரதத்தை சாஸ்திரோக்தமாக முடித்துக் கொண்டு அதிதிகளுக்குப் பதில்‌ சொல்லலாம்‌–.

டம்பன்‌.–(உரத்‌து ஓமென்று ப்ராணாயாமம்‌ ௮பிநயத்‌து )-அடே வராத்யப்‌ பிராமணா ! மூட சிகாமணியே ! தபோ பலம்‌ குறையப் போகிறதே யென்று உன்னைச்‌ சபிக்காமல்‌ விட்டேன்‌ ! என்‌ சாபத்தினால்‌ சாம்பலானோரைக்‌ கணக்‌கிட முடியாது? போ இக் கணமே என்‌ எதிர்‌ நில்லாதே!
என்‌ நேத்ர ஜ்வாலை உன்னைப் பஸ்மப்படுத்து முன்‌ தப்பி மறை! |

கர்வன்‌.--(கோபத்‌துடன்‌) மூடா! ஜாத்யாபிமானத்தினால்‌, என்‌ பாதங்களால்‌ உன்‌ கபோலம்‌ அலங்கரிக்கப்படாது தப்பியது அறிவாய்‌ ! நான்‌ யார்‌ தெரியுமா –

துண்டீரம்‌ மண்டலம்‌ மே குலபதிரபி ச ஸ்கந்த பூபால வந்த்ய
க்ஷேத்ரம் ஸத்ய வ்‌ரதாக்யம்‌ க்ஷிதி தல திலகம்‌ ஷூத்ர காஞ்ச்யக்‌ரஹார
ப்ரக்யாதச்‌ சிஷ்ய பூம்நாதி சிதிசி பவதா கூப கூர்மோபமேக
ஸ்தாதாவா தாஹவேஷுஸ்‌தவிர !கதமஹம்‌ ந ஸ்ருதோநாபி த்ருஷ்ட-

(சிரித்து )–அடே டாம்பிகா! என்‌ ப்ரபாவம்‌ என்னைத்‌ தவிர வேறு எவரால்‌ ௮றிய வல்லது ? என்‌ யோக்யதைகளில்‌ லவ லேசமாவது மஹா யோகிகளுக்கும்‌ இருக்குமா- எனவேயன்றோ மூத்தோரையும்‌ என்‌ ஸேவைக்கு ௮ர்‌ஹரல்ல என்று கருதி நான்‌ ஸேவிப்பதுமில்லை –. என்‌ தர்ம அனுஷ்டான ஸ்ரத்தையை நீ ௮றிவாயோ? ஹ! ஹ! ஹூ ஊராரரால்‌ ஸம்சயிக்கப்பட்ட பந்து ஒருத்தி, தானாக வந்து என்‌ தாயாரிடம்‌ பேச யத்தனித்த நிமித்தத்தினால்‌, மஹா பதி வ்ரதா சிரோமணியான என்‌ தாய்‌ ௮னாசாரப் பட்டு விட்டதாக அவளையே துறந்தவனடா நான்‌ !
டம்பன்‌–ஹ! ஹ! நல்ல ப்‌ரம்ம பந்து தான்‌ நீ, அடே விநயமற்ற துராசார! இந்த ஸக்யாஸிநியை நீ நமஸ்கரிக்க வில்லை ! போகட்டும்‌–மஹா கியாதி வாய்ந்த பெரியவனான என்னையும்‌, யாவரும்‌ ௮ஞ்சி வணங்கும்‌ என்‌ பத்னியையும்‌ நீ நமஸ்கரியாத காரணம்‌ யாது?

கர்வன்‌.-௮டே ஆத்ம ஸ்தோத்திரஞ்‌ செய்து கொள்ளும்‌ பாலி! மஹா பூஜ்யனான என்னைப்‌ பூஜியாத தோஷத்‌தால்‌ நீ நாய்‌ ஜென்மமோ சண்டாள ஜென்மமோ அடையப்‌ போகிறாய்‌ :
வஞ்சனை.–௮ம்மா ஸந்யாஸிநி ! இந்த நீசப்‌ பிராமணன்‌ இந்த மஹரிஷியை நிந்திப்பதால்‌ நாசமடையப்‌ போகிறான்‌ பார்‌ !
௮ஸூ.–௮திதிகளை ஆராதிக்கும்‌ யோக்யதை யற்ற தார்மிக பத்னியின்‌ நிந்தனை வெகு நன்றா யிருக்கிறது !.

டம்ப–(கோபத்‌துடன்‌) அடே! காக்கையைப் போல வீணில்‌ கத்துகிறவனே ! நீ தான்‌ நாய் மாதிரி ஊரூராய்த் திரிந்து வருபவன்‌ ! மூடு வாயை –

கர்வ.–(கை கொட்டிச்‌ சிரித்து) ஹ! ஹ! உள்ளதைச்‌ சொன்‌னால்‌ கோபம் தான்‌ வரும்‌! ஏனடா குரங்கைப் போல்‌ அப்படிக்‌ கோபித்துக்‌ கொக்கரிக்கிறாய்

டம்ப -தூணைப் போல்‌ பருத்‌திருக்கிறாயே யொழிய லோக . வ்யவஹாரம்‌ ஒன்று மறியாதவனாகக்‌ காண்‌கிறாய்‌ நீ ! ப்‌ரம்மாவே தன்‌ ஹஸ்‌தங்களினால்‌ எனக்கு அர்க்ய மளித்‌திருக்கிறார்‌! இவர்‌ பரம்பரையில்‌ பிறந்த பலரும்‌ இன்றும்‌ கிருதார்த்தர்களாக வேண்டி. ‘எனது ஸ்ரீபாத தீர்த்‌தத்‌தினால்‌ ப்ரோக்ஷிக்கப்‌ படுகின்றனர்‌ காண்‌!

வஞ்சனை-ஸ்வாமிகள்‌ ஸாதித்தருளிய தவ்வளவும்‌ யதார்த்தமே! ஸஹ தர்மிணியான நான்‌ பிரத்யஷமாகக்‌ கண்‌டதுவே!

கர்வன்‌-பேஷ்‌! அம்மா ஸந்யாஹிநி ! யுக்தி விசேஷத்தால்‌ நான்‌ இப்பொழுது. அறிந்ததைக்‌ கூறுகிறேன்‌ கேள்‌! பிறார் ஸொத்திலேயே கண்ணுள்ளவளும்‌, கோண புத்தி மிகுந்தவளுமான இவளே என்‌ மதினி குஹனா தேவி! ஸ்வாமிகள்‌ தான்‌ என்‌ முத்தண்ணா ‘டம்பாசாரியார்‌-நமது தர்ம ஸந்தேகம்‌ இவர்களால் எப்படித் தீர வல்லது –

டம்பன்‌–(மந்த ஹாஸத்துடன் ) ஸரி தான்‌ ! ஸரி தான்‌! வீண் சப்த ஆடம்பரம் செய்பவனும்‌ மிகுந்த குணசாலிகளையும்‌ தூஷிப்பவனாகிய நீ, தம்பி கர்வனாகத் தான்‌ இருக்க வேண்டும்‌ ! ஸந்யாஸி வேஷம் பூண்டிருப்பது உனது தர்ம பத்னி ௮ஸூயை யம்மாள்‌ தான்‌! தர்ம ஸந்தேகம்‌ நிவர்த்தியாயிற்றா ? என்னால் –

கர்வன்‌.–௮ண்ணா ! ௮டியேன்‌ ௮பராதங்களை க்ஷமித்‌தருள வேண்டும்‌! டம்பன்‌–௮பராதமென்ன ! ௮துவே யன்றோ நம்‌ குணம்‌ (ஒருவரை யொருவர்‌ கட்டிக்‌ கொள்‌கிறார்கள்‌.)
கர்‌வன்‌.–௮தோ ! மகா ராஜனும்‌ தேவியாரும்‌ வருகிறார்கள்‌ -நாம்‌ சற்று அடங்கி ஒதுங்கி நிற்போம்‌- (ஒதுங்‌கி நிற்கிறார்கள் ) (மஹா மோகனும் துர்மதியும்‌ பிரவேசம்‌]

மோகன்‌.--என்ன ஆச்சர்யம்‌ ! விவேகளை வெல்வதற்காக அனுப்பப்பட்ட காம க்ரோதாதியர்‌, வ்யூஹம்‌ கலைந்து, பயந்தோடி, நம்மைக்‌ காண்பதற்கு அஞ்சிப்‌ பிராயோபவேசஞ்‌ செய்து விட்டார்களாமே! குயுக்‌திகளாலான பல்வேறு மதங்களும்‌ பிரயோசன மற்றன ! பெண்ணாசையும்‌, மண்ணாசையும்‌, பொன்னாசையும்‌, பேராசை கோபம்‌ முதலியனவற்றின்‌ உதவியைப்‌ பெற்ற போதிலும்‌, விவேகனால்‌ பீடிக்கப்பட்ட ஜீவாத்மாவால்‌ நிராகரிக்கப் பட்டன ! இருந்தும்‌ ஜீவன்‌ பூர்ணமாக விவேகன்‌ வசம்‌ ஆகாமல்‌ ஊசலாடிக் கொண்டிருக்கும்‌ தற்கால நிலையில்‌, ஊக்கம் விடாது நமது ராஜ்யத்தை நிலை நிறுத்த முயன்றே தீர வேண்டும்‌ ! அதற்கேற்ற ஸாமர்‌த்யமுள்ள மந்திரிகளைத்‌ தேட வேண்டும்‌ !
(டம்பன்‌ முதலானோர்‌ முன் வந்து நமஸ்கரிக்கின்‌றனர்‌;)
ப்ரியே ! நீ கவலை விடு ராக்ஷஸர்களை வெல்வதில்‌ ராமன்‌ தனித்தே நின்று ஜெயித்தாப்‌ போல, காம க்ரோதாதியரால்‌ கை விடப்‌ பட்டாலும்‌ நான்‌ தனித்தேனும் நின்று, விவேக மோஹ யுத்தத்தில்‌ வெற்றி பெறாது திரும்பேன்‌ என்பைத நிச்சயமாய் நம்பு –

டம்பன்‌,– பிரபோ! அந்த ராமனுக்குக்‌ குரங்குகளல்லவா உதவி செய்து வெற்றியைக் கொடுத்தன. கிருஷ்ணனுக்குக்‌ கேவலம்‌ இடையர்களே யன்றோ பக்க பலம்‌.ஆகவே, இதோ நிற்கும்‌ நாங்கள்‌ இருக்க உமக்கேன்‌ கவலை?

மோகன்‌.–பேஷ்‌ !–, இந்தக்‌ கலி காலமே எனக்குத்‌ தேர்‌! துர்மதீ! நீயே என்‌ ஸாரதி! டம்பனே எனது ஜயத்‌தைக்‌ தெரிவிக்கும்‌ துந்துபியாகிறான்‌–. கர்வனே இனி எனது கவசம்‌! வெற்றி என்னுடையதே !–டம்பா மீண்டும்‌ புண்ய நதிகளின்‌ சமீபங்களில்‌ சஞ்சரித்து உனது தர்மங்களை ஜாக்ரகையாகக்‌ காத்து வருவாயாக!–. தர்ப்பா! – மகா வைராக்யத்துடன்‌ தபஸ்‌ செய்பவர்கள்‌ . நிறைந்த காடுகளிலும்‌ வேறிடங்களிலும்‌ சஞ்சாரஞ் செய்து என்‌ ஆஞ்ஞாசக்ரத்தைக்‌ கை விடாது செலுத்தி வருவாய்‌. ‘

டம்ப -தர்ப்ப மஹா ராஜன் உத்தரவுப்படியே இதோ செல்கிறோம்
(தம் தம் மனைவிகளுடன் செல்கிறார்கள் )

மோகன்–பிரியே -இனி நாம்‌ தைரியத்துடன் செல்‌வோம்‌ வா –விவேகனை வெல்வது அசாத்யமானது அல்ல -ஜயம் நன்மை விட்டு விலக வில்லை இன்னமும்‌ !
(குதூஹலத்துடன்‌ செல்கிறார்கள்‌)

நான்காம்‌ காட்சி-இடம்‌ :–விவேகனது கோட்டைக்‌கெதிரில்‌–[விவேகன்‌, தன்‌ ஸாரததியான தர்க்கனுடன்‌ ரதா ரூடனாய்க்‌ காணப்படுகிறான்‌.]

விவேகன்‌.-தர்க்கா! தியானத்திற்கேற்‌ற ஸ்தலத்தைத் தேடி வரும்‌.என்‌ மனோ ரதத்தை வெகு சாமர்த்யத்‌துடன்‌ செலுத்தத்‌ கூடியவன்‌ நீ ஒருவனே ! ஜீவாத்மா சகல இந்‌தியங்களையும் தனக்கு வசமாக்கிக்‌ கொண்டு விட்‌டான்‌ ! கர்ம பூமியாகிய பாரத வர்ஷத்‌தில் தான்‌ யோகம்‌- ௮துள்‌, கைலாஸம்‌ பவனீபதிக்கு ஸ்தானமாயினும் அநந்யப்‌ பிரயோஜனமான தியானத்‌திற்கு ௮து ஏற்ற இடமல்ல- ஸித்தர்களினால்‌ ௮டையப் பட்டிருக்கும்‌ கந்தமாதன பர்வதமும்‌ யோக ஸித்தி உண்டாகக் கூடிய இடமில்லை. ஆயினும்‌!. யுத்தத்தில்‌ உண்டான காய வடுக்களுடன்‌ ஸ்ரீராமனை ஸ்தோத்திரஞ்‌ செய்து குதூகலத்துடன்‌ காணப்பட்ட ஆஞ்சநேயன்‌ ஆங்கு பாடிய ஸ்லோகமொன்று இன்னமும்‌ என் காதில்‌ ஒலித்துக் கொண்டே மனதில்‌ பதிந்திருக்கறது ! | ஹா ஹா!

பகவதி பரத்வாஜே புக்திஸ்‌ ததா ஸபரீ க்ருஹே
ப்‌ரபுரனுஸ்ருதோ விஸ்வாமித்ர: ப்லவங்க பதிஸ்‌ சதா |
ப்ருகுபதி தபோலூநம்‌ திருஷ்டி: ககஸ்ய ச தக்ஷிணா
ஜயதி லளிதோத்துங்கா வ்ருத்திர்‌ தஸாஸ்ய ரிபோரியம்

இங்கிருந்தால்‌, மனது , த்யானத்தை மறந்து இந்தக் காரணாம்ருதத்‌தால்‌ மயக்கப்பட்டு நிலை தடுமாறக் கூடும்‌!–, ஹிமவத் பர்வதச் சாரலிலோ, கங்கையின்‌ சலனமும்‌ ஸமாதியைக் கெடுக்க வல்ல பல ஸ்ருங்காரங்களுங்‌ காணப்‌ படுகின்‌றன–. ஆர்யா வர்த்த தேசமும்‌ பாஷண்டர்கள்‌ நிறைந்துளதால் நம்‌ காரியத்திற்கேற்ததல்‌ல -. ஹ! ஹி! -. அயோத்யையை நினைத்தால்‌ மயிர்க்‌ கூச்சலிடுகிறது –

நமஸ்‌தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சந ஜன
ஸ்வயம்‌ ரஷா தீஷா ஸமதிக ஸமிந்தாந யஸஸே |
ஸுராதி ஸஸ்வை’ ரஷண குபித ஸாபாயுதவ தூ:
த்ருஷத்தா துர்ஜாத ப்ரஸமந பதாம்போஜ ரஜஸே.

ஆனால்‌ தத் ஸமையமோ, இவ்‌ வயோத்யையும்‌ கிருத யுக தர்‌மம்‌ நீக்கியும் , நிவர்த்தி தர்மத்தைக்‌ கொண்ட ஸாதுக்களால்‌ விடப்பட்டதாயு மிருக்கறது !–. பூமி பாரத்தைப்‌ போக்க வேண்டிப்‌ பகவான்‌ ௮வதரித்‌து லீலா விநோதங்‌கள்‌ நடத்தி வந்த மதுரா பட்டினமோ, அந்தக்‌ காரணத்தால்‌ பூஜிக்கத்‌ தக்கதே !…

ஹர்த்தும் கும்பே விநிஹிதகர ஸ்வாது ஹய்யங்க வீநம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம்‌ மாதரம்‌ ஜாத ரோஷாம்‌|
பாயா தீஷசத் ப்ரசலிசபதோ நாப கச்சந் ந திஷ்டந்
மித்யா கோபஸ்‌ ஸபதி நயநே மீலயந் விஸ்வ கோப்தா

ஆனாலும்‌ சுந்தரிகளான கோபிமார்களது லீலைகளையே ஞாபகப் படுத்துவதும்‌, தத் காலம் அதர்மத்தால் முழுங்கப் பட்டதுமான ௮ந்த மதுராபுரியும்‌ சமாதிக்கு ஏற்ற இடமில்லை. ஸ்ரீஹரி க்ஷேத்ர மெனப்படும்‌ ஸாளக்ராம ஷேத்ரமும்‌ என் மனத்திற்குப்‌ பிடித்ததாயில்லை! வாரணாசியும்‌ வஸதியானதல்ல–. விந்த்யாசலச் சாரலும்‌ பிரயோஜனமில்லை–. பாலைவனங்கள்‌, -பணமே பிரதானமாகக்‌ கொண்டவர்கள்‌ நிறைந்த இடம்‌

ப்ராளபதி பூர்ணதி ஸ்கலதி முஹ்யதி ஹுங்குருதே
ந ச பதவீமவைதி ந ச தாம ந சத்ரபதே |
விக்ருதி ச ப்ரஸூதி விஷமாஸய தோஷபூமா
தனமதி ராமதேந தமதீவ தாரவலயம்

காவிரிப்‌ பிரதேசமும் மகா கடின சித்தர்களும்‌, அங்குள்ள ஸாதுக்களிடம்‌ விஷமம்‌ செய்பவர்களும்‌, ஹிம்சிக்‌குமவர்களாலும்‌ நிறைக்கப் பட்டிருக்கறது –யாதவாசலம்‌ பரவாயில்லை–பரசுராம க்ஷேத்ரம் மோக்ஷ ஆசையுள்ள பெரியோர்களை நிந்திக்கும்‌ இடம்‌–மலய பர்வதம்‌ பூலோக ஸ்வர்க்கந்தான்‌–பாண்டிய தேசம்‌ நம்‌ ஸம்பிரதாய கூடஸ்‌தரான ஸ்ரீ சடகோபன்‌ திருவவதரித்த பிரதேசம்‌ ! (கை கூப்பி)

ஸாரஸ்‌ ஸாரஸ்வதாநாம்‌ ஸடரிபுபனிதி ஸ்ஸாந்தி ஸூத்தாந்த ஸீமா
மாயா மாயாமிநீபி:ஸ்வ குணவிததி பிர் பந்த யந்தி ந்தயந்தி |
பாராம்பாரம்‌ பரீதோ பவ ஜலதி பவந் மஜ்ஜநாநாம்‌ ஜநாநாம்‌
ப்ரத்யக் ப்‌ரத்யஷ யெந்ந ப்‌ரதி நியதரமா ஸந்நிதாநம்‌ நிதாநம்‌ ॥

திருமாலிருஞ்‌ சோலைக்‌ கண்ணிருக்கும்‌ அழகர்‌ க்ருபை எல்லா இடங்களிலும்‌ பரவி இருக்கிறதல்லவா

த்வயா ஜுஷ்ட துஷ்டிம்‌ பஜதி பரமேஷ்‌டீ நிஜப்தே
வஹந் முர்த்தீ ரஷ்டவ் விஹரதி ம்ரூடாநீ பரி ப்ருட: |
பிபர்தி ஸ்வாராஜ்யம்‌ வ்ருஷ சிகரி ஸ்ருங்காரி கருணே
ஸூநா ஸீரோ தேவாஸூர ஸமர நாஸீரஸுபட: |

அப்பப்ப ? சோள தேசத்தில்‌ தங்குவ்தும்‌ பிசகு! கலைமகள்‌ நூபூரம்‌ ஒலியின்‌ மிகுதியை ஸூசிக்கும்‌ கவிஞர்கள்‌ வாக்கு மலிந்து சஞ்சல சித்தர்களைக் கவரும் இங்கு தங்கினால்‌, நமக்குள்ள சிறிது மநோ திடமும்‌ மறைந்து போகும்‌ !–ஆனல்‌, ஸ்ரீரங்கம்‌ (ஸந்தோஷத்துடன் )

கநகருணாரஸெள கபரிதாம்‌ பரிதாப ஹராம்‌ நயந மஹஸ்சடாம்‌ மயி தரங்கய ரங்க பதே
துரிதஹு தாஸந ஸ்புரித துர்தம து:கமஷீ மலிநித விஸ்வஸெளத துரபஹ்நவ வர்ண ஸுதாம்‌.

மகா ஸ்லாக்யமான க்ஷேத்ரமே தான்‌ இது !–.தொண்‌டை மண்டலத்திலுள்ள ஸத்ய விரத ஷேத்தரமென்‌னும்‌ ஹஸ்‌கிரியும்‌ வெகு ஸ்லாக்கியமானது தான் –

ஸம்ஸாரா வர்தவேக ப்ரஸமந ஸூப த்ருக் தேசிக ப்ரேக்ஷிதோஹம்‌
ஸந்த்யக் தோந்யை ருபாயை யநுசித சரி தேஷ் வத்ய ஸாந்தாபிஸந்தி :
நிஸ் ஸங்கஸ்‌ தத்வ த்ருஷ்ட்யா நிரவதிக தயம்‌ ப்ரார்த்ய ஸம்‌ ரக்ஷகம்‌ த்வாம்‌.
ந்யஸ்ய தவத் பாதபத்மே வரத நிஜ பரம்‌ நிர்பரோ நிர் பயோஸ்மி-

ஸ்ரீவரதனையே ரக்ஷகனாகப்‌ பிரார்த்தனை செய்து என்னுடைய பாரத்தை ௮வன்‌ திருவடித்‌ தாமரைகளிலேயே சமர்ப்‌பித்து விட்டேன்‌ — நிர்ப்பபயனானேன்‌ -என்‌ ஸந்தேகங்களெல்லாம்‌ ஓழிந்தன!–. கசடறக் கற்ற ஆசார்‌ய ஸ்ரேஷ்டர்களது கடாக்ஷமும்‌ பெற்‌றவனானேன்‌ !-(ஸ்ரீவேங்கடாசலமோ ! -அஞ்சலி ஹஸ்‌தனாய் )

நிஷாதாநாம்‌ நேதா கபிகுலபதி காபி சபரீ
குசேல: குப்ஜா ஸா வ்‌ரஜ யுவ தயோ மால்ய க்ருதிதி
அமீஷாம்‌ நிம்நத்வம்‌ வ்ருஷிகிரிபதே ருந்நதிமபி
ப்ரபூதை: ஸ்ரோதோபி; ப்ரஸபமநுகம்‌ பேஸமயஸி

தர்க்கன்‌…-பிரபோ பாரத வர்ஷத்திலுள்ள சகல தேசங்களையும்‌ பார்த்து விட்டோம்‌. ௮வற்றுள்‌, யோக ஸித்திக்கு எந்த இடம்‌ யுக்தமான தென்று மகா ராஜனுக்குப்‌ படுகிறதோ?
விவேக. ஸாரிதி ! பஞ்சேந்திரியங்களையுமடக்‌கி எவனொருவன்‌ எங்கிருக்க வல்லனோ ௮துவே ஸ்லாக்யமான இடம்‌! கலியின்‌ கொடுமையால்‌ விபாபிக்கப்பட்ட உலகில்‌ ஸமாதிக்கு ஏற்ற இடம் இது தான் என்று சொல்ல முடியாது -. தன்னைச்‌ சரணடைந்தவரைக்‌ காப்பதாக அருளிச்‌ செய்திருக்கும்‌ பகவானைச்‌ சரணமடைவதற்குச் சாதனமான இடம்‌ ஒருவனுடைய நிர்மல மனஸே — அம் மனத்துள்‌ ஞானக்குன்றிலேறி, ஆசார வனத்துள்‌ இருந்து , லக்ஷ்மீபதியின்‌ திஸ்ருவடிகளே சரணமென்னும்‌ ஆசைப் பெறுக்கில்‌ நீராடி, உபநிஷ அர்த்தங்களைச்‌ சிந்தித்தலாம்‌ தவமியற்றுபவன்‌ எங்கிருந்தால் என்ன ? எப்‌படி யிருந்தாலென்ன -ஆழ்வார்‌ ஆசாரியர்கள்‌ புகழ்ந்து பாடி யிருக்கும் ஸ்தலங்களில்‌, எங்கு ஸ்ரீமந் நாராயணனது திருவடி ஸேவை செய்து வரும்‌ பெரியோர்கள்‌ இருக்‌கிறார்களோ ௮துவே தியானத்‌ததிற்கேற்ற இடமாகும்‌. ஸ்‌தலமாயிருந்து பெரியோரில்லாத இடத்தை விட, ஸ்‌தலமென்ற பேரற்றதாயினும்‌ பெரியோர்களான ஸாத்விகர்களை யுடைய இடமே சிறந்தது. எந்த இடமான போதிலும்‌, பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்‌தை ஸதா அவனவன்‌ ஹ்ருதய கமலத்தில்‌ வைத்துத்‌ தியானஞ்‌ செய்து வர வேண்டுவதவஸ்யம்‌. இனி, நாம்‌ போய்‌, ஜீவனுக்குப்‌ பகவானுடைய திவ்ய மங்கள விக்‌ரகத்தை. நிர்த்தாரணஞ்‌ செய்து தியானத்தில்‌ தெளிவான வ்ருத்தியை உண்டாக்குவோம்‌, வா-
(போகிறார்கள் )

ஜந்தாம்‌ காட்சி–இடம்‌ விவேகனது சித்ர சாலை[ஸம்ஸ்காரன்‌ பிரவேஸம் )
ஸம்ஸ்‌.
–தேவ சில்பியான விச்வ கர்மாவையும்‌, ௮ஸூர சில்பியான மயனையும்‌ வென்று இளைப்பாறி வந்தேன்‌ விவக ராஜனது சிற்பியான யான்‌ ! ஸுமதி தேவியின்‌ உத்திரவால்‌ ஸஹதிருஷ்டி, ஸத்ருச த்ருஷ்டி என்ற சேடிகளால்‌ எழுப்பப் பட்டவனாய்‌ ஸேனாபதி வ்யவஸாயனால்‌ ஏவப்‌ பட்டவனாக ஜீவாத்மாவினுடைய மனத்தையே சுவராக வைத்‌துக் கொண்டு, சுத்தம்‌ ௮சுத்தமென்று பிரிக்கக் கூடியதான ப்ரபஞ்சம்‌ முழுவதையும்‌ சித்திரித்து “எழுதி விவேக மகாராஜனின்‌ ஆஞ்ஞஜையைப்‌ “பூர்த்தி செய்து விட்டேன்‌! -சித்திரமும்‌. கைப் பழக்க மல்லவா- மஹா ராஜன்‌ என்‌ சித்திரத்தை ஆதரித்து , சந்தோஷித்து நல்ல பஹுமானமே கொடுப்பார்‌! அதோ அவரே வந்து விட்டார்‌!

[விவேகன்‌, ஸூமதி, வ்யவஸாயன்‌ பிரவேசம்‌.]

வ்யவ.–ப்ரபோ! தேவி! ஸம்ஸ்காரனென்னும்‌ நமது சில்பியால் உள்ளத்தை உள்ளபடி சித்‌திரத்துக்‌ காட்டப்‌ பட்டிருக்கும்‌ முக்காலுத்தையும் உணர்த்தும் இந்தத் சித்ர சாலையைக்‌ கடாக்ஷித்‌தருள வேண்டும்‌–
விவேக.–(சுற்றிப்பார்‌த்‌து ) கண்ணே! என்றும்‌ காணாதோர்‌ ஆச்சர்யமே இது -யாவும்‌ வெகு சிறப்பாகவும்‌ உண்மையாகவுமே ௮மைந்திருக்கின்றன-ஹ ஹ ஜான திருஷ்டியைச் செலுத்த விரும்பும் புருஷனுக்கு முக் குணங்களால்‌ செய்யப்பட்ட இந்த ப்ரக்ருதி என்‌னும்‌ குதிரை, அதோ ௮வன்‌ புத்தயை மறைக்கிறது -அதனால்‌, : ஸம்ஸாரமென்னும்‌ ஜ்வராக்னிக்கு ஜன்ம பூமியாகிய வற்றைத்‌ தெரிவிக்க ௮ந்த அசுத்த பாகத்தை நீ பார்க்க வேண்டாம்-

ஸூமதி .-நாதா! பழைய வாஸனையின்‌ காரணத்தால்‌, கண்‌ ப்‌ரக்ருதியின்‌ பக்கம்‌ செல்கின்றதாயினும்‌, தங்கள்‌ உத்‌திரவின்‌ படியே நான்‌ ௮வைகளைக்‌ காணப் போவதில்லை!
வ்யவ.–சுதத ஸ்ருஷ்டி ஸ்‌வரூபமான பகவானது நித்ய விபூதி யென்னும்‌ பாகத்‌தை மகா ராஜனும்‌ ராணியாரும்‌ நன்முகக்‌ கடாக்ஷித்தருள வேண்டும்‌.

விவேக.–௮ப்‌.படியே செய்வோம்‌. ௮துவே, மனது நிலைத்‌திருப்பதற்கு ப்‌ரயத்னமில்லாமல்‌ ஸுலபமாகச்‌ செய்‌யக் கூடிய காரியமாகும்‌. பரமாத்மாவினுடைய ௮வதாரரங்கள்‌ யாவும்‌ ௮வனது ௮பார தயையினால்‌ உண்‌டானவை யல்லவா”?
வ்யவ.–ஆம்‌ ப்ரபோ !இதோ !-, (ஆச்சர்ய பரவசனாக) மகா அத்புதமான இந்தச்‌ சித்‌திரத்தை எழுத மயனாலுமாகாது – விச்வ கர்மாவாலுமாகாது ! அந்த ஸாஷாத்‌ ஸ்ரீமந் “நாராயணனே தான் தன்னைப் பற்றிய இச் சித்திரங்களை எழுதினான்‌ போலும்‌!-அதோ பாருங்கள்‌! ஸமுத்திரத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு மூன்று அவதாரங்கள்‌ காட்டப் பட்டிருக்கின்றன ! முழுகிப் போன வேதங்களைத்‌ தேடுவதற்காக பார்வைகளால்‌ ஸமுத்‌ரமத்தியில்‌ தாமரைக் காடு பூத்தது போலத்‌ தோன்‌றும் பகவானது மச்சாவதாரம்‌ முதலானது! ஹா! ஹா! – உச்சைச்ரவஸ்‌, ஐராவதம்‌, அம்ருதம்‌ முதலானவற்றைக் கொடுத்த ஸமுத்ரம்‌ மந்தரசரியால்‌ கடையப்‌ பெற்ற: போது அம்மலையை ௮நாயாஸமாகத்‌ தாங்கிக் கொண்டும்‌ தூங்கிக் கொண்டுமிருக்கும்‌ கூர்மாவாதார மூர்த்தியின்‌ விசித்‌ரத்தைப்‌ பாருங்கள்‌ !--கல்பக விருஷம்‌, சந்திரன்‌ கெளஸ்துப ரத்னாதி அபூர்வ வஸ்துக்களுடன்‌ ஸ்ரீ மகா விஷ்ணுவின்‌ : வஷஸ்‌ ஸ்தல் லக்ஷ்மியையே கொடுத்த ஷீரஸாகரமல்லவா அந்தக்‌ கூர்மத்தை உடைய சமுத்திரம் ! – (ஆனந்த பரவசனாகி )

விவேக:–ஆச்சர்யம்‌ ! ஆச்சர்யம்

கல்யாணாநா மவிகலநிதி காபி காருண்ய ஸீமா –
நித்யாமோதா நிகமவசஸாம்‌ மெளளி மந்தார மாலா –
ஸம்பத் திவ்யா மதுவிஜயிநஸ் ஸந்நி தத்தாம்‌ ஸதாமே
ஸைஷாதேவீ சகல புவந ப்ரார்த்தநா காமதேநு :

அந்த லஷ்மியின்‌ கிருபா கடாக்ஷத்தாலேயே என்‌ கோறிக்கை ஈடேற வேண்டும்‌ –, ஸுமதி! இந்த லஷ்மியை முன்னிட்டுக் கொண்டு போனால்‌ பகவானை மிகவும்‌ சுலபமாய்‌ அடையலாம்‌!
வ்யவ..–தேவி ! ‘ பெளராணிகர்கள்‌ வார்‌த்தை யாதெனில் –

தேவ திர்யங்‌ மனுஷ்யேஷு புந்நாமா பகவாந் ஹரி :
ஸ்‌த்ரீநாம்நீ லஷ்மிர்‌ மைத்ரேய நாநாயோர்‌ வித்யதே பரம்‌.’

தேவ மனுஷ்ய திர்யக்குகளில்‌ ஆண் பாலெல்லாம்‌ பகவானாகிய ஸ்ரீவிஷ்ணு . ஸ்வரூபமே- பெண் பாலெல்லாம்‌ ஸ்ரீ மஹா லஷ்மீ ஸ்வரூபமே.
விவேக.–ஸரியே !

ஸாதாரண்யே ஸத்யபி ஸ்வேச்சயைவ : த்வேதா விஸ்வம்‌ யத் விபூதிர்‌ வ்யபாஜி சூடாபாகே தீப்யமாநவ் ஸ்ருதீ நாம்‌ திவ்யா வேதெள தம்பதீமே தயேதாம்

வ்யவ –இது லஷ்‌மியைத் தரித்துக் கொண்டிருக்கிற ரூபம்‌–பூமியைத்‌ தரிக்கிற மத்றொரு ரூபத்தை அதோ பாருங்கள்‌ !-

விவேக-– மஹத் ஆச்சர்யம்‌ இந்த ஆதி வராஹ அவதாரம் – ஹா? ஹா! லக்ஷ்மியை மார்பில்‌ வைத்து உபசரித்த பகவான்‌ பூ தேவியை ஆதி சேஷ ரூபியாய்‌ ஆயிரம்‌ ஸ்ரங்களால்‌ வஹித்துப்‌ போகிக்கும் காக்ஷி மகத்‌ ஆனந்த கரமாயிருக்கறது !

ஸூமதி — நாதா! எப்படி இந்த மஹா வராஹர்‌, பிரளயத்தில்‌ மூழ்க பூமியை ஹீரண்யாக்ஷனைக் கொன்று மீட்டு வந்தாரோ, ௮ப்படியே, ஆர்ய புத்ரரான தாங்களும்‌ ஸம்ஸார ஸாகரத்தில்‌ மூழ்கிய புருஷனை மோக்ஷ சத்ருக்‌களைக்‌ கொன்று மீட்டு வருங்‌ காஷியைக்‌ காண விரும்புகிறேன்‌ !
வ்யவ.–தேவி! உமது ௮பீஷ்டம்‌ நிச்சயம்‌ ஸித்திக்கும்‌– ௮தோ பாருங்கள்‌ நரஸிம்ஹாவதாரக்‌ காஷியை !

விவேக.–௮ஸூரர்களுக்குப்‌ பயங்கரமாயும்‌, பிரஹ்லாதனுக்‌குக்‌ குளிர்ச்சியைக்‌ காட்டுவதுமாகிய பார்வையைக்‌ கொண்ட ஹிரண்யகசிபுவின்‌ காலனே நம்மை மோஹ மாயைகளினின்றும்‌ காத்து ரக்ஷிக்க வேண்டும்‌ !
வ்யவ.–வாமனாவதாரக்‌ காஷியை ௮தோ கண்டீர்களா ?
விவேக ;–திரிவிக்‌ரமனின்‌ பராக்ரமமே நம்மையும்‌ பாதுகாத்தருள வேண்டும்‌! வ்யவ.–அதோ!மூன்று லோகங்களையும்‌ காப்பாற்‌றிய ப்ருகு, ரகு யதுவினுடைய வம்சங்களில்‌ பிறந்த மூன்று ராமர்‌களும்‌ !

௮நேந கில கோஸல ஸுதா குமாரபாவ கஞ்சுகித காரணா காரேண
கெளமார கேளிகோபாயித கெளசிகாத்வரேண, ராணாத்வர துர்யபவ்ய
திவ்யாஸ்த்ர ஸாலிநா, ப்‌ரணத ஜந விமதந துர் லளித தோர்லளிதேந மை
திலநகர ஸுலோசநா லோசந சசோர சந்த்ரேண, திநகர குல கமல திவாகரேண, கண்ட பரஸூ கோதண்ட ப்‌ரகாண்ட கண்டந சவ்ண்ட புஜ தண்டேந , பித்ரு வசந பரிபாலந ப்‌ரதிஜ்ஞாவஜ்ஞாத யெளவராஜ்யேந , தண்டக தபோவந ஜங்கம பாரிஜாதேந , ௧ரதரகரதரு கண்‌டந சண்ட பவநேந , த்வி ஸப்‌த ரஷஸ் ஸஹஸ்‌ர–நளவந விலோளந : மஹா களபேந , மஹித மஹாம்ருத தர்ஸந முதித மைதிலீ த்ருட தர,சச பரி ரம்பண விரோபித விகடவீர வ்ரணேந, க்ருத்ர ராஜ தேஹ திதஷா லக்ஷித பக்தஜந தாக்ஷிண்யேந , ௮வந்த்ய மஹிம முநி ஜந பஜந முஷித: ஹ்ருதய கலுஷு சபரீ மோஷ ஸாஷி பூதேந , ப்‌ரபஞ்ஜநதநய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருதயேந , தரணிஸுதா , சரணாகதி பர தந்த்ரீ க்ருத, ஸ்வாதந்தர்யேணே, விமதஸஹோதர ரஷ : பரிக்ரஹ ஸம்ரம்ப விஜ்ரும்பித ஸர்வேஸ்வர பாவேந , ஸக்ருத் ப்‌ரபந்ந ஜந ஸம்ரஷண தீஷித ஸத்ய விரதேந , கபிகுலகரதல துலித கிரி நிகர ஸாதித ஸேது பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ரேண, விஸ கட விசிக விதாடந விகடித மகுட விஹ்வல விஸ்‌ரவஸ் தநய விஸ்ரம ஸமய விஸ்ராணந விக்யாத விக்ரமேண, விபீஷண வசம்வதீக்ருத லங்கைஸ்வர்‌யேண, ப்‌ரதிஜ்ஞார்ணவ,தரண க்௫த ஷண பரத மநோரத,ஸிஹ்‌மாஸநாதி ரூடேந , திவ்ய பெளமாயோத்தயாதி தைவதேந , ஜாநகீ ஸஹ தர்ம சாரிணா, ஸர்வ தர்ம ஸமாராதநீயேந , ஸநாதந தர்மேண, ஸாகேத ஜந பத ஜநிதநிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய ௧தி தாந தர்சித நித்ய நிஸ்ஸீம வைபவேந , பகவதா பக்‌த ஜநாபி ராமேண ஸ்ரீ ராமேண விஸ்வ மேதத் ஸநாதி க்ருதம் –

விவேக– ரகுராமனே ஸாதுக்களைக்‌ காப்‌பாற்றும்‌ ப்ரபத்‌தி சாஸ்‌திரத்‌தினால்‌ பிரதிபாதிக்கப் பட்டவராவர்‌ !

வ்யவ.–வேதாந்த ஸாரமாகிய கீதையை உபதேசம்‌ செய்‌தருளிய ஆசார்யனான ஸ்ரீவாஸூ தேவன்‌ ! இதோ
விவேக, -நமாமி!

நிகடேஷு நிஸா மாயாமி நித்யம்‌ நிக மாந்தை ரதுநாபி ம்ருக்ய மாணம்‌ யமளார்ஜுந த்ருஷ்ட பால கேளிம்‌ யமுநா ஸாஷிக யவ்வனம் யுவாநாம்

வ்யவ.–ஸகல பாபத்தையும்‌ போக்கடிக்கக் கூடிய கல்கி இதோ !-ப்ரபோ : பகவானது இந்தப் பல அவதாரங்களில்‌, புருஷனுக்குத்‌ தியானத்திற்கு விஷயமாகக்‌ கூடிய அவதாரம்‌ எது என்பதை மகா ராஜன்‌ நிர்த்தாரணஞ்‌ செய்து அருள வேண்டும்‌ !

லிவேக:–நமக்கு ‘இதில்‌ -௮தி௧ பாரமே யில்லை ! தன்‌ திருவடிகளில்‌ தலை வணங்கினவர்களுக்குப்‌ பிரமாணங்களில்‌ உள்ளபடி பகவான்‌ தானே பிரகாசிக்கிறார் | பழைய ஸம்ஸ்காரங்களுக்கு தகுந்தாப் போல , ஒவ்வொருவருக்‌கும்‌ ஒவ்வொரு சுவையை உண்டு பண்ணுகிறார்‌. மகாப்‌ பிரபுவான அவர்‌ இஷ்டத்திற்குத்‌ தடங்கல்‌ யாரால்‌ உண்டாக்கக்‌ கூடும்‌? ஆகவே, புருஷனது த்யானத்திற்குத் தகுந்த ரூபத்‌தை ௮வரே அவனுக்குக் கொடுப்பதால்‌ நமக்கேது பாரம்‌ ?–ஸேனாபதி ! சில்பி மஹா ஸமர்த்‌தன்‌! அவனுக்குத்‌ தகுந்தபடி பஹுமானம்‌ செய்‌. இனி எதிர்‌த்து நிற்கும்‌ ‘விரோதிகளை வெல்ல வேண்டிய விஷயங்களைக்‌ குறித்து நாம்‌ யோசிக்கச்‌ செல்‌வோம்‌ வா. (போகிறார்கள்‌)

ஆறாம்‌ காட்சி –இடம்‌ :–யுத்தகளம்‌: -மஹாமோஹன்‌ தண்டிறங்கி இருக்கும்‌ இடம்‌.-[நாரதர்‌ பாடிய வண்ணம்‌ பிரவேசம்‌.)

நாரதர்‌–அதராஹித சாருவம்‌ ஸநாநா மகுடாலம்பி மயூரபிஞ்சமாலா:
ஹரிநீலசிலா விபங்கநீலா: ப்‌ரதி பாஸ் ஸந்து மமாம்‌திம ப்‌ரயாணே- [மஹா மோஹனும்‌, துர்மதியும்‌ பிரவேசம் )

மோஹன்‌.–பகவந் ! ஸர்வ லோக ஸஞ்சாரியான தேவரீரால்‌, மாயை என்ற எனது ராஜ தானி ௮னுக்ரகிக்கப்பட நாங்கள்‌ கிருதார்‌தர்களானோம்‌–, தேவி! ‘மஹர்ஷிக்கு அர்க்ய பாத்யாதிகளும் மதுபர்க்கமும் சமர்ப்பி

துர்மதி -இதோ

நாரதர் (தடுத்த ஜாடையாய் ) உபவாஸ விரதத்தில் இருக்கிறேன்‌-துவாதசி பாரணை வரையில்‌ எவரிடமிருக்தும்‌ எதையும்‌ பெற்றுக் கொள்வதற்கில்லை

மோஹன்‌.–பர்க்யம்‌ ! ப்‌ராபோ தங்கள்‌ பிரபாவம்‌ அளவிட முடியாததன்றோ -நமது ஸுகம்‌ விருத்தி யடைவதற்குக் காரணமேயாகும் தேவரீர் இங்கு இப்பொழுது வந்தது –

நார- (தனக்குள்‌) நம்‌ அபீஷ்டம்‌ ஜயமே அடையும்‌ (வெளிப்படையாய்‌)–மகாராஜ ! உன் ப்‌ரபாவமன்றோ அளவிட முடியாதது! . தாமரை யிலையில்‌ பட்ட நீர்‌ போல்‌ எதிலும்‌ பட்டு நிலைக்காத ஜீவாத்மாவை அநந்த போகங்களையும் ௮னுபவிக்கச்‌ செய்யும்‌ உன் பிரபாவமே ஸ்லாக்கியமானது
[வாயில்‌ காப்போன் பிரவேசம்‌.].

வாயில்காப்‌:-தேவ ! விவேக ராஜன்‌ தூதன்‌, திருஷ்ட ப்ரத்யயன்‌ பேட்டிக்குக்‌ காத்‌திருத்கிறான் –

மோஹன்‌.- வரச் சொல்‌

[வாயில்‌ காப்போன்‌ போக த்ருஷ்ட ப்ரத்யயன்‌ பிரவேசம்‌. ]

தூதன்‌. (ஓருபுறம்‌ தனக்குள்‌). ஓகோ! கலகப் பிரியரும்‌ இங்கிருக்கிறாரா? நமக்கு நல்லது தான்‌–,

நாரதர்‌: “ப்ரபோ! தூதன்‌ அதோ வருகிறான்‌ ! உபசரித்து விசாரிக்கலாம்‌;

மோஹன்‌. -உபசாசமிருக்கட்டும்‌-. என்னடா ஸமாசாரம்‌?

தூதன்‌. (ஓர்‌ பனை ஓலையை நீட்டி) இதோ எங்கள்‌ மகா ராஜனுடைய உத்திரவு !

‘மோஹன்‌– என்ன? எனக்குமா உத்தரவு

நாரதர்‌,– வேலைக்காரர்கள்‌ தம் யஜமானனைப் பற்றி உயர்த்திப்‌ பேசுவது ஸகஜம் தானே ! அதை யெல்லாம்‌ லக்ஷஷியம் செய்யக் கூடாது.
மோஹன்‌. -௮டே தூதா! உங்கள்‌ லிபி எமக்குப்‌: பரிசயமில்லாததால்‌ நீயே படி, கேட்போம்‌.
தூதன்‌ அப்படியே. (படிக்கிறான்‌). “மங்களம்‌? மகா ராஜன்‌ விவேகன்‌, மகா மோஹனுக்குத்‌ தெரிவிப்பது : துஷ்டர்கள்‌. . சண்டையை விரும்புவதும்‌ ஸாதுக்கள்‌ ஸந்தியைக்‌ கோறுவதும்‌ ப்‌ரஷித்தம்‌ ”’.

மோஹன்‌..–ஸரி தான்‌ ! தனது தாழ்மையையே விவேகன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறான்‌–உம்‌. மேலே–
தூதன்‌.-தீ யந்தாமிஹ தக்ஷிணா பதபுவோ யாவத்கலே ரத்யயஸ்‌ தத்‌ர ஸ்‌தாவர திர்யக் அம்‌சம் அகிலம்‌ புங்க்க்ஷவ த்வமய்பக்ஷத இத்தாந் நாம குலஷயோப சமநோபாயே த்வயா தஸ்துஷா ஸந்திஸ்‌ ஸத்ய கிராம துச்ச மநஸா மச்சாத் மநாமஸ்‌து ந —

நமக்குள்‌ சமாதானம்‌ ஏற்படுவதே முறை யல்லவா ?
(கை கொட்டிச்‌ சிரித்து )மோஹன்‌- யுத்தத்‌திற்குப்‌ பயந்த இந்த. .விவேகன்‌ சில போகங்களை அனுபவிக்க எல்லை யில்லா ஐஸ்வர்யமுள்ள எனக்கு உத்தரவு செய்வது சூர்யனுக்கு தேஜஸ்‌ உண்டாக வரம்‌ கொடுப்பது போலத் தான்‌ இருக்கிறது –

நார.–(தனக்குள்‌ சிரித்து )–. இந்த ஸமாதானம்‌ ஏற்‌படாதபடி. தடுக்க வேண்டியதே எனது முக்ய கடமை00இனி : (வெளிப்படையாக, துக்க பாவத்துடன்‌) என்ன ஆச்சர்யம்‌? | (பாடுகிறார் )

ப்ரூபங்கேஷ- ப்ருதக் விதேஷு பலிநோ யஸ்யா யதந்தே
ஜகத் யாஸம்‌ ஸாரமலங்க்ய ஸாஸநகதே ராஜந் மதீராத்மந : –
ப்‌ரஹ்மஸ்‌ தம்ப படஸ்ய முக்‌த ஜநக த்ரோஹஸ்ய மோஹஸ்யதே –
தஸ்யா ஸீதிதரேண ஸந்தி வசநம்‌ கிங்கஸ்யவா கத்யதே

அடா? டா! மகா சூரனாகிய மகா மோஹ ராஜனிடமா ஸந்தி என்னும்‌ பேச்சு பேசும்படியாக ஆயிற்று

துர்மதி ,.–நாதா ! சமாதானம்‌ என்கிற வியாஜத்தினால்‌ விவேகனை இங்கு வரவழைத்துப்‌ பிறகு அவனை உயிருடன்‌ பிடித்துப்‌ பீடிப்பதே உசிதமென எனக்குத்‌ தோன்றுகிறது | |

மோஹன்‌. (உரத்துச்‌ சிரித்த) பேதையே ! மகாமோஹனிடமா இத்தகைய பேச்சுக்கள்‌ ? ஸ்‌திரிகளுக்கு ராஜ காரியம்‌ என்ன தெரியும்‌? கேள்‌ என்‌ வீர வ்‌ரதத்தை ! என்னை வெட்டி னாலும்‌ ஸரி,–கொளுத்‌தினாலும்‌ ஸரி;-ஊசி முனை நாட்டக் கூடிய பூமியையும்‌ விவேகவன் அதீனத்தில் விடேன்‌ !–. எவ்வித ஸமாதானமும்‌ அவனுடன் கோறேன்‌!. தெரிந்ததா ?–௮ப்படிக்கேதாவது செய்‌வேனாயின்‌ நான்‌ மஹா மோக மஹா ராஜனல்ல –

நார-(மனத்துள் ) பிணப்பிடிபோல்‌ பிடிவாதம்‌ கொள்ளும்‌ மூர்க்கனல்லவா இவன்‌–(வெளிப்படையாய்‌) தேவி _துர்மதி! உனது நாதன்‌ வார்த்தைகள்‌ ஸ்லாகிக்கத்‌ தத்கவைகளே -தூதன்‌ படிக்க இருப்பதை
மேலேயும்‌ கேட்போம்‌.

மோஹன்‌.–(அலக்ஷியத்துடன்‌) கேட்பதற்கு என்ன இருக்கப் போகிறது ?–ஸரி.–மேலே படி–..

தூதன்‌.–.ஆகவே, ஸமாதான மேற்பட்டால்‌ நாம்‌ நம் நம்‌ வரம்பிற்குள்‌ இருக்கப் போகிறோம் – சண்டை உண்‌டானால்
(படுகிறான் )

நிஷ்காம க்ரோத லோப்ந்நி பதிதகுஹநா டம்ப தர்பாபி மாநம்
நிர்தூ தேர்ஷ்யாப்ய ஸூயாமத விஹ்ருதி ஐஹந் மஸ்தா ஸ்தம்ப ஜாட்‌யம்
அத்யஸ்வோ வா விதத்யாதபி சரமயுகே விஸ்வம ஷுத்ர ஸத்வம்‌
வேலாதீத ப்‌ரஸர்பந் மதுமதந தயா தத்த ஸேகோ விவேக

சண்டை யுண்டானால்‌, இன்றோ நாளையோ உனது மந்திரிகளனைவரையும்‌ ஓழித்து , இந்தப் ப்ரபஞ்சத்தை ஸத்வ குணமுடையதாக விவேகன்‌ செய்யப் போவது நிச்சயம்‌.”

மோஹன்‌ (கோபாதீனனாகி )–. ஹா! ஹா! எவனும்‌ என்‌னுடன்‌ பேசத் துணியாத வார்த்தைகள்‌ !–யாரடா அங்கே? இந்தத்‌ தூதனைக்‌ கொன்று விடு இக் கணமே?

நார--இவன்‌ ராஜ தூதனல்லவா

மோஹன்‌: ஆயின்‌, அங்க ஹீனப்படுத்தி. யனுப்பி விடுங்கள்‌”!
தூதன்‌.-யோஜனையேன்‌?–இதோ நானே ஒடிவிடுகிறேன்‌’ (மறைவில் சென்று )-(தனக்குள் ) இங்கு நடப்பதை கவனித்துச்‌. செல்கிறேன்‌.

நார-தூதனை ஜாடையாகக் கண்டு ஸ்லாகிக்கிறார்-

மோஹன் -(கோப வெறியால் பாத பீடத்தைக் காலால் உதைத்துத் தள்ளி பற்களால்‌ உதட்டைக்‌ கடித்துக் கொண்டு ) ஹ!’ஹ! எத்‌திக்கும்‌ துதிக்கும்‌ கீர்த்திக்கும் நேர்த்திக்கும் சேர்த்திக்கிடமான எனக்குமா இந்த அவமானம் – இதைப்‌ பொறுத்திருப்பதாலேயே ௮தம நீசனாகிறேனல்‌லவா? (யோசித்து )--. ப்ரியே! வஞ்சிக்கப்பட்ட என்‌ பிதாவுக்கே வருந்துகிறேன்‌! இது வரை சுகமாக இருந்து வந்த ஜிவாத்மாவுக்கு இனிப் போக்கு என்ன -அடே துராசாரா விவேகா வீண்‌ காரியங்களில்‌ ஏன்‌ தலை யிட்டுக் கொள்கிறாய் –

நார-ஏன் வருத்தம் உமது ஸுவ்ர்யம் யாவராலும் காணப்பட்டதும் கேட்கப்பட்டதுமே -சம்சாரம் நிலைத்து இருக்கும் வரை உனது பிரபாவம் நிலைத்தே இருக்கும் -அதோ! ஸூர்யன்‌ ௮ஸ்தமிக்கிறான்‌, மாலைக்‌ கடன்கள்‌ முடிக்க வேண்டும்‌. நான்‌ போய்‌ வருகிறேன்‌ (பாடிக் கொண்டே போகிறார் )

ஜயதி லளித வ்ருத்திம்‌ சிக்ஷிதோ வல்லவீநாம்‌ சிதில வலய சிஞ்ஜா சீதளைர்‌ ஹஸ்‌த தாளை ௮கில புவந ரக்ஷா கோபவேஷஸ்ய விஷ்ணோ ரதா மணி ஸுதாயாமம்‌ ஸவான் வம்ஸந நாள :

மோஹன்‌.--ப்ரியே ! இரவு கிட்டியது ! இனி நாம்‌ சயன ஸுகமனுபவிக்கச்‌ செல்வோம்‌ ! பொழுது புலர்ந்ததும்‌ விவேகனை வெல்ல வேண்டிய வழிகளைச்‌ சிந்திக்கலாம்‌,
துர்ம–நாதா ! விரோதி எதிர்த்‌து வர சயன ஸுகம்‌ கோறுவது பைத்யத்தினாலா ? அல்லது அதி தீரத்தினாலா
மோஹன்‌.–பேதாய்‌ 1! அளவில்லாத ஸைன்யமும்‌ சூராதி வீரர்களும்‌ கொண்ட எனக்கேன்‌ யுத்தத்தைப்‌ பற்றிக்‌ கவலை? காமனை ஆராதிப்பதே ! விவேகனை வெல்லக்‌ கூடிய ஒரே உபாயம்‌. ஆகவே தான்‌ நான்‌ சயன ஸுகம்‌ கோறியதும்‌ ! என்‌ வீரர்கள்‌ தாமே மிகுதியை கவனிப்பார்கள்‌, வா போவோம் (போகிறார்கள் )

அங்கம்‌- 3-முதற்‌ காட்சி – இடம்‌ ?-யுத்த களம்‌ ஓர் புறம்‌ (நரதரும்‌, தும்புருவும்‌ விமானத்தில்‌ ஏறிக் கொண்டு வருகிறார்கள்‌)
நார-
ராம ராவண யுத்தக் காட்ஷியைக் கண்டு வெகு நாளாயிற்று -அதை யொத்ததாக நடக்கும்‌ விவேக மஹா மோஹ யுத்தமும்‌ மஹா கடோரமானதாகவே இருக்கப்‌ போகிறது -முடிவில் விவேகன் ஜெயிப்பது திண்ணமே

தும்பு -யுத்தம் முடியும் வரை எந்தக் கட்சி ஜெயிக்கும் என்பதை எப்படி நாம் நிச்சயித்து முன் கூறக் கூடும்

நார-என் வார்த்தையுமா பொய்க்கும் -பாருமே
(திரைக்குள் பெரிய சல சல சப்தம)

தும்பு –(சந்தோஷத்துடன் ).அதோ! யுத்த பேரிகை !.அதோ ..’ஸேனைகளும்‌ ஆயுதங்களும்‌ கலந்து தாக்க ஆரம்பித்து விட்டன -அதோ. லோபன்‌ யுத்த சன்னத்தனாகி கிளம்பி விட்டான்‌ !
நார-(சிரிப்புடன் )௨லகம் முழுவதையும்‌ : ஸ்வர்ண மயமாக்கி அதை இந்த லோபனுக்கு அளித்தாலும்‌, அந்தப்‌ பொன்னையும்‌ வட்டிக்கு விட்டுப் பெருக்க ஆசைப்‌ படுபவன் அல்லவா இந்த லோபன் –

தும்பு. -ஹா! ஹா! அதோ ! மூஞ்சூரைப்‌ பாம்பு விழுங்குவது போல்‌ துஷ்டி யென்னும்‌ திருப்தி லோபனை விழுங்கி விட்டாள்‌ ! லோபன்‌ ஸேனை யெல்லாம்‌ சிதறுண்டு ஓடுகிறது அதோ! அதோ !–. சிதறுண்டோடும்‌ ஸேனையைத்‌ தைரிய வார்த்தைகள்‌ கூறித்‌ திரட்டி, வருபவன்‌ யார்‌?
நார. –௮வன் தான்‌ காமன்‌ !மன்மதன் -மீனக்கொடியோன் ! ஸ்திரீகளே ௮வனது ஸைன்யம்‌!–ஹ! ஹ! ‘எதற்கெல்லாமோ அஞ்சா நெஞ்சனாகிய விவேகன்‌ ! இந்த ஸ்‌திரீ லோலனுக்கா பயப்படுபவன்‌?–அதோ ! இந்த ஸ்திரீ லோலனை ஜெயிக்க விரக்தி என்னும் ஸ்த்ரீயையே விவேகன்‌ ஏவி யிருக்கிறான்‌ பாரு !
(திரைக்குள் விரக்தி )

அதப்‌ரஜ கநஸ்தந ப்ரப்ருதி மாம்ஸ விஷ் பூர்ஜித ப்‌ரஸக்த விகட வ்ரண ப்‌ரதி பதஞ்ஞயா ப்‌ரஞ்ஞயாஸ்த்ரிய ஸ்த்ரிகுண வீசிமத்கரள வீசிகாஸ் சிந்தயந் கஸப்ய பரிபாடிகரம்‌ படதி காட மூடோ ஜந

காம புருஷார்த்தத்தில ஸாரமில்லை..

நார--கேட்டாயோ: விரக்தியின்‌ வார்த்தைகளை -அதோ மன்மதனும் அவன் ஸைன்யமும் விரக்த்தியால் இருந்தவிடம் தெரியாமல் துரத்தப் பட்டிருப்பதைக் காண்பாய்-

தும்பு–ஆச்சர்யம்‌ .–. அதோ!” லோபனும்‌ காமனும்‌ தோற்கடிக்கப் பட்டதைக்‌ கண்டு ஸஹியாத கோபன்‌ மகா வேகத்துடன்‌ நெருப்பு ஜ்வாலைகளை வீசிக்கொண்டு யுத்தரங்கம்‌ வந்திருக்கிறான்‌ பாரும்‌!

நார-இந்த ௮ஸுரனுக்கு ஆயுதமாக எதுவும்‌ உதவுகிறது–. ஸமயோசிதமாக சரீரத்தோடு. சேர்ந்த வைகளான கை, கால் , நகம்‌, பல்‌ யாகிய சகலமும்‌ ஆயுதமாக்கப் படுகிறது ! பேஷ் ! . இவனை எதிர்க்கப்‌ பொறுமையை ஏவி விட்‌டார்‌ விவேக ராஜன்‌!–. ஹ ! ஹா! கோபத்தின்‌ கர்ஜனம்‌ சுத்தமான ஷமையின்‌ மந்த ஹாஸத்தினால் நாஸத்தை அடைந்து விட்டது.

தும்பு –ஆம் ஆம் -ஷமையினால் தடுக்கப்பட்ட க்ரோதன் முன்னும்‌ போகாது , பின்னும்‌ நகராது வெட்கிக்‌ கோபாதீனனாகிப்‌ பரதவிக்கும்‌ காட்சி வெகு விநோதமாயிருக்‌கிறது -. ஆச்சர்யம்‌! அதோ கோபன்‌ பின் வாங்க யத்தனிக்கிறான் -அதோ க்ரோதனை க்ஷமை கட்டிக் கொண்டு விட்டாள்‌ !

நார-. பொறுமையைக்‌ கவசமாய்க்‌ கொண்டவனை எவ்வித தோஷமும்‌ அணுகாதல்லவா ‘–அன்னானை வெல்வதும்‌ கூடாத ‘கரரியமல்லவா !:

தும்பு. இவ்வளவு சூரர்கள்‌ கொல்லப்பட்ட பிறகும்‌ யுத்த ரங்கத்தில்‌ முன்னணிக்கு- வரும்‌ அல்பன்‌ யார் ?.ஹ ஹ,தர்ப்பனே!–.. அட! அட! காண்பதற்குள் மறைந்த விடடானே கர்வன்‌.! எப்படி.

நார-சிம்ஹத்தை மான் எதிர்த்தது போல் விவேகனது திருஷ்டியால் தோன்றிய அதிக திருஷ்ட்டி என்பவளால் கர்வன் வீர ஸ்வர்க்கம் அனுப்பப் பட்டான்-

தும்பு.–௮தோ வரும்‌ கலியுகக்‌ தாடகை யார்‌? தர்ப்பன்‌ மனைவி அஸூயையோ !–பேஷ்‌! முதிதை சந்தோஷத்‌துடன்‌ அவளைக்‌ கொன்று விட்டாள்‌ !
நார.–மதுகைடபர்களே புனர் ஜென்ம மெடுத்து வந்தார்களோ வென்று ஐயுற வல்ல மஹா மோஹனுடைய மஹா ப்ர தானிகளும்‌ தத்‌தம்‌ மனைவிமார்களுடன்‌ மாண்டது தைவ ஸங்கல்பமென்லும்‌ நியதியைத்‌ தாண்ட எவராலுமாகாது என்பதை ஸந்தேகமற நிரூபிக்கிறதல்லவா–ஆஹா! அதென்ன. த்வந்தவ யுத்தம்‌?,..ஹா ! ஹா! ஸூமதி வல்‌லபனுக்கும்‌ துர்மதி காந்தனுக்கும் அல்லவா யுத்தம்‌ மும்‌ முறமாக நடக்கிறது ராம ராவண யுத்தம் போல்‌ –பல முறை விவேகனால்‌ அடிக்கப் பட்டும்‌ சளையாதவனாகி மஹா மோஹன்‌ மேன்மேலும்‌ ஆக்ரோசத்துடன்‌ எதிர்த்து வருகிறான்‌…அதோ! விவேகன் பலத்ததோர்‌ அடியினால்‌ கீழே வீழ்த்தி விட்டார்‌ மஹா மோஹனை !

தும்பு-அதோ ! திரும்பவும்‌ பிரஞ்‌ஜை பெற்று யுத்த சன்னத்தனாகி விட்டானே அந்த மாயாவி

நார– (பரபரப்பு டன்‌ மேல் போட்டிருந்த கிருஷ்ணாஜினத்தை உதறிக் கொண்டு)–௮தோ !. அதோ! கொல்லப் பட்டான்‌ (மஹா மோஹன்‌ !—. தர்மமே ஜயம் –

பவது ஸ ப்ரஹ்மதா பவது ஸ ப்ரஹ்மதா
தர்மமே ஜயம்
(திரைக்குள் அழுகை )

துர்மதி
மஹா ராயா ஹா தும்மயி ஜீவியேஸா ஹா ணிஹிள ஜணமோஹண ! கஹிம் கயோஸி ? பந்திக்காஹம்‌ கஹீதோ மமனாஹா தாஹிம்‌ தியஸ மஹிளாஹிம்

ஹா நாதா எங்கே போனீர் எப்படிப் போனீர்

நார-கஷ்டம்‌! கஷ்டம்‌! துர்மதியின்‌ பிரலாபமும்‌ மார்பில் அடித்துக் கொண்டு செய்யும் ரோதனமும் கேட்க ஸஹிக்க வில்லை
(திரைக்குள் )

துர்மதி -ஐயோ கணமும் என்னை விட்டுப் பிரியாத நீர் இப்பொழுது என்னை இப்படி தனியாகத் தவிக்க விட்டுச் செல்லத் துணிந்தீர்

நார-யுத்தம் முடிந்து விட்டது -குரூரமான காலத்தின் பரிபாகம் யாராலும் தடுக்க முடியாததல்லவா -தேவ ஸ்த்ரீகளின் வளையல் ஸப்தம் கேட்ட மஹா மோஹன் இனி இவர்களது ரோதனங்கள் எல்லாம் தொந்திரவு செய்யப் படக் கூடாத தீர்க்க நித்திரையை அடைந்து விட்டான் -அதோ மது கைடபர்களை நிக்ரஹித்த பகவானைப்போல மோகனை வென்ற விவேகனும் தேவ ஸ்ரேஷ்டர்களால் ஸ்தோத்ரம் செய்யப்படுகின்றனன்-

தும்பு,–எங்கும்‌ புஷ்‌ப வர்ஷம்‌ ! துந்துபி முழக்கம்‌

நார.–இந்த வெற்றிக்‌ கொண்டாட்டத்தை நாமும்‌ ௮னுபவித்து விவேக மகாராஜனுடைய ஜயத்தை உலக முழுவதும்‌ ப்‌ரஸித்தம்‌ செய்வோம்‌ :–. . இனி விவேக மகா ராஜனுக்கும்‌ ஸூமதிக்கும்‌ ஆகவிருக்கும்‌ பட்டாபிஷேக மஹோத்ஸவத்கைக்‌ கண்டு களிக்கச்‌ செல்கிறேன்‌.

தும்பு.—நானும்‌ விவேக ராஜன்‌ வெற்றியைப்‌ பிரசித்தப் படுத்தி வருகிறேன்‌. (போகிறார்கள் )

இரண்டாம்‌ காட்சி – இடம்‌ யுத்த களம்‌-விவேகன்‌ பாசறை[ விவேகனும்‌ வ்யவஸாயனும் ப்ரவேஸம் )
விவேக.
–சேனாபதி ! உன்னாலே தான்‌ ஸகல தோஷங்களுக்கும்‌ உத்பத்தி ஸ்‌தானமாகிய வெல்வதற்கு அரிதான மஹா மோஹனை நான்‌ முறிய அடித்‌தொழித்தது
வ்யவ.-ப்ரபோ! – நாங்கள்‌ தங்கள்‌ கருவிகளே யல்லவா -தாமே யன்றோ எம்மை ஆட்டி வைப்பவர்

விவேக- ஸர்வ ஸ்வாமியான ‘ பகவானுடைய கர்யத்தில்‌ பராதீனனான என்னை ஏன்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறாய்‌ -யாவும்‌, பரமாத்மாவின்‌ லீலைகளுடைய அலைகளின் பரம்பரை-

வ்யவ.–பிரபோ ! தங்கள்‌ வணக்கமே ச்லாகிக்கத் தக்கது ! ௮து இன்மையே மகா மோகன்‌ வீழ்ச்சிக்குக்‌ காரண மாயது !– மோக்ஷ மார்க்கத்திலிருந்த முள் முனைகளைப்‌ பிடிங்கி தங்கள்‌ ஆட்கள்‌ வழியைச்‌ சுத்தப்‌ படுத்தி விட்டனர்‌.–இனி வேதாந்தமாகிய ஸிம்ஹாஸ னத்தில்‌ தாங்கள்‌ அமர்ந்‌து பட்டாபிஷேகக் கோலத்‌துடன்‌ அளிக்கும்‌ மகோத்ஸவக்‌ காஷியைக்‌ கண்டு களிக்கக்‌ கோறுகிறோம்‌ நாங்கள்‌.
விவேக.—ஸேநாபதே! ஜீவாத்மா முடிவை அடையாத த்யானத்திலிருக்கையில்‌ நான்‌ எப்படிப்‌ பட்டாபிஷேகத்திற்கு அர்ஹனாவேன்‌? ப்ரஹ்மஞ்ஞாந ஆரம்பம்‌ மாத்திர மல்லவா இப்பொழுது செய்யப்பட்டிருக்‌கிறது ! ௮து பூர்‌த்தி யடைந்தாலன்றோ என்‌ பிரதிஞ்ஞை நிறைவேற வல்லது ! –

வ்யவ .–இன்னமும்‌ ஏன்‌ கலக்கம்‌ ?: ஜீவன்தான்‌, தன்‌ சரீரமே ஆத்மா என்கிற புத்தியை விட்டு, தான்‌ பரமாத்‌மாவின்‌ சரீரம்‌ என்னும் புத்தியைப்‌ பெற்று விட்‌டானே.

விவேக –தொந்திரவு! முற்றிலும் விட்டபாடில்லை இன்னமும்‌!மனக் குரங்கு சபலஸ்வ பாவத்திலிருந்து ஒய்வடைந்த போதிலும்‌, சாம்பலால்‌ மூடப்பட்ட தணல் போல, ஒவ்வொரு ஸமயங்களில்‌ பரவசனாகி வெளி விஷயங்களை நினைக்கிறான்‌–. ஆகவே, நாம்‌ ஸாதித்ததைவிட, ஸாதிக்க வேண்டிய காரியங்களே கஷ்‌டமானவை !—காமன்‌ முதலியோர்‌ ‘இறந்த போதிலும்‌, கர்மமென்னும்‌ அவித்யை இறந்து போன அவர்களை உயிர்ப்பிக்கக்‌ கூடிய மருந்தாக. இன்னமும். இருந்து வருகிறது -(அனுதாபத்துடன்‌) ஜீவாத்மா இன்னமும்‌ கோடிக் கணக்கான பாபம்‌ செய்து கொண்டே யிருக்கிறானே ! இவைகளை எப்படித்‌ தாண்டப்‌ போகிறான்-

வ்யவ.–இதற்கா கவலை? இந்தப்‌ பாபங்களைப்‌ பகவானிடததி லிருந்து உண்டானதாகிய யோகமாகிய ப்‌ரளய காலாக்நி க்ஷணத்தில்‌ பஸ்‌மீகரித்து விடாதா? மேலும்‌, தன்‌னுடைய பாரமனைத்தையும்‌ முகுந்தனிடத்தில்‌ சமர்ப்பித்து நிர்ததோஷனாகி முக்தன்‌ போலிருக்கிறான்‌ அந்தப்‌ புருஷன்‌ பகவானுடை.ய அபிப்ராயங்களை சாஸ்‌திரத்‌தில்‌ உள்ளபடி தெரிந்த செய்து பாப ரஹிதனாகி விடுவான்-

(ஸூமதியும் சேடியும் ப்ரவேஸம்)

ஸூமதி -நாதா தங்கள் ஜெயத்தை அப்சரஸ் ஸுக்களுடைய குதூஹல கான கோஷங்களில் நின்றும் அறிந்து வந்தேன்
வ்யவ -தேவி ஜயம் ஒரு லக்ஷியமா நமக்கு -இனி இன்னமும் ஜெயமடைய வேண்டியதற்கான உபாயங்களைச் சிந்திக்க வேண்டும் அல்லவா
விவேக-எல்லா உலகத்திற்கும் அந்தர்யாமியாய் இருக்கும் பரமாத்மாவே சகல பாரத்தையும் நிர்வஹிக்க வல்லவராதலால் அவரே தாம் நம் ஜயம் பூர்த்தி யாவதற்கான உபாயங்களைக் காட்டி அருள வேண்டும் –

ஆதேயத்வ ப்ரப்ருதி நியமை ராதிகர் துஸ் ஸரீரம்‌
ஸ்த்தாஸ்தே மப்‌ரயத நபலேஷ்வே: ததா யத்தமே தத்
விஸ்வம்‌ பஸ்யந்நிதி பகவதி வ்யாப காதர் த்ருஷ்டே
கம்பீராணா மக்ருதக க்ராம்‌ காஹதே சித்தவ்ருத்திம்‌.

வ்யவ –-வாஸ்‌தவமே ! ஸமாதி உண்டாவதற்காக ஜீவனுக்குச்‌ சிறந்த ஆசார்யனால்‌ ச்ரேஷ்டமான மந்த்‌திரத்ன்‌ ரஹஸ்யார்த்தங்கள்‌ உபதஸிக்கப்பட்டு அவனும்‌ ஞானி யாக்கப்பட வேண்டி இருக்கிறது இனி-

விவேக –ஆம்‌ அது பூர்‌த்தி யடைவது பகவானுடைய வசத்தில் தான்‌ இருக்கிறது இனி –ஹா. என்ன தேஜஸ் அங்கே தெரிவது –

வ்யவ –(உற்று நோக்கி )பகவான் நாரதர் வருகிறார் போலே காண்கிறது

ஸூமதி –ஆம் நாதா நாரத மஹரிஷியுடன் தாங்கள் பேசும்வரை நான் என் தோழிகளுடன் தங்கள் அபீஷ்ட பூர்த்திக்கான யோஜனைகளைச் செய்து வருகிறேன் (போகிறாள் )(நாரதர் பாடிய வண்ணம் ப்ரவேஸம்)

அதராஹித சாருவம்‌ சநாளா – மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா: –
ஹரிநீல சிலா விபங்க நீலா: ப்‌ரதிபாஸ் ஸந்து மமாந்தி மப்ரயாணே

விவேக.--(விரைந்‌து சென்று வரவேற்று உபசரித்து நமஸ்‌கரிக்கிறான்‌)–. பகவந் ! அடியோங்க்கள ௮னுக்‌ரஹித் தருள வேண்டும்‌ !
நார--ஆயுஷ்மன்‌ ! ஜீவாத்மாவை எவ்விதத் தடங்கலுமின்‌ றி | மோக்ஷத்‌தில்‌ சேர்க்கக் கடவாய்‌ ! – மஹா மோஹனை ஜயித்‌தவனாகிய நீ கலியையே நீக்கி விட்டாயே இப்‌ பிரபஞ்சத்தில்‌!
விவேக..-பகவந் ! இன்னமும்‌ நாங்கள்‌ ஜாக்‌கிரதையுடன்‌ பார்த்திருந்து ஜயிக்க வேண்டிய சத்ருக்கள்‌ இருந்தால்‌ வெளிப்படுத்‌தி யருள வேண்டும்‌ !
நார--ஜீவாத்மா பிரக்ருதியைத்‌ தாண்டி இன்னமும்‌ மோஷமடைய வில்லை யல்லவா -ஆகவே ௮வன்‌ கால சக்கரத்தில் ௮கப்பட்டுத்‌ துர் வாஸனையினால்‌ இன்னமும்‌ அல்ப சுகங்களில்‌ புத்‌தியைச்‌ செலுத்தாமல் இருக்கும்படி ஜாக்ரதை செய்ய வேண்டும்‌-
விவேக.—பாக்யம்‌-கால சக்‌ரத்‌தினுடைய சுழலில் இருந்து புருஷனை வெகு சீக்ரத்திலேயே வெளிப்படுத்த வேண்டிய பிரயத்தனங்களைச்‌ செய்து முடிக்கிறேன்!தாங்களும் அதற்கேற்ற உதவிகளைச்‌ செய்தருள வேண்டும் -ஆசாரியனற்றவன்‌ வேத மார்க்கத்தில்‌ நடக்க முடியாதல்லவா! ஆகவே தேவரீரே என்னால்‌ அங்கீ கரிக்கப் பட்ட. புருஷனுக்கு மந்த்ரோபதேசம்‌ செய்து வழி காட்டி உத்தரித்து அருள வேண்டும்

நார- இவ் விஷயத்தில்‌ என்‌ சக்திக்குத்‌ தகுந்தபடி நான்‌ பிரயத்தனப்‌ படுவதற்குமா ஆஷேபம்‌ ? அப்படியே செய்து வருவேன்‌–இதோ புறப்பட்டேன்‌ உங்‌கள்‌ ௮பீஷ்டத்தை நிறைவேற்றி வைக்க!”
( ஆனந்தத்துடன்‌ செல்கிறார்‌)

விவேக.-இனி ஸமாதி ஸித்தியானதுவே! பக்தி அல்லது ப்‌ரபத்தியில்‌ ஆசை யுடையவனுக்குப்‌ பகவானுடைய தயையே ஆதாரம்‌! இந்த புருஷனும்‌ ௮ந்த தயையினால்‌ ௮ங்கீகரிக்கப் பட்டவனாகக்‌ காணப்படுகிறான்‌-ஆகவே நான்‌ ஜீவனுக்குப்‌ பகவத்‌ ஸங்கல்பம்‌ சீக்கிரத்தில் ஸித்திக்கும்படி செய்கிறேன்‌ ! நீ போய்‌ விஷ்‌ணு பக்தியை த்வரிதப்படுத்து (போகிறார்கள் )-

மூன்றாம்‌ காட்சி -இடம்‌ ஆகாயம்‌ -மோக்ஷ-மார்க்கம்‌-(விஷ்ணு ப்க்தி பிரவேஸம் )
விஷ்ணு பக்தி -(தனிமை )
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு –

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினால் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

ஜீவனுக்குப்‌ பகவானைப் பற்றிய தியானம்‌ பரி பூர்‌ணமாக ஏற்பட்டிருக்கிறது. இனி ௮வனைப்‌ பாப ரஹிதனாக்க வேண்டும்‌. பகவத்‌ ஸங்கல்பத்தாலேயே ஆகக்‌ கூடிய: காரியம்‌ ௮து – நற் குணங்கள்‌ உண்டாகின்றன ! பகவத்‌ ஸங்கல்பமாகிற ஸூர்யன்‌ உதயமாகப் போவது நிச்சயமே –
(கைகளைக் கூப்பி )

பல விதரண தக்ஷம் பஷ பாதாநபிஞ்ஞம் பிரகுண மது விதேயம் ப்ரப்ய பத்மா ஸஹாயம்
மஹதி குண ஸமாஜே மாந பூர்வம் தயே த்வம் பிரதி வதஸி யதார்ஹம் பாப்மநாம் மாமகாநாம்

தயா தேவியே என் பாவங்களுக்குப் பிரதிவாதம் செய்ய வேண்டும் அப் பரமாத்மாவிடம் -ஹா ஹா தயாதேவியின் ஏவுதல் தானா -அதோ வேதாத்மாவான கருடாழ்வாரும் நர்த்தனம் ஆடுபவர் போல் சேவை சாதிக்கிறாரே -இவரே தான் ஆஸ்ரித ரக்ஷகனை சீக்கிரத்தில் ஆஸ்ரிதர்களிடம் அழைத்து வந்து அவர்களைக் காத்தருள வேண்டும் –(கைகூப்பி )

நமோ பன்னகநத்தாய வைகுண்ட வச வர்த்திநேஸ்ருருதி ஸிந்து ஸூதோத்பாத மந்தராய கருத்மனே
என்ன ஆசார்யம் எங்கு பார்த்தாலும் ஒரே தேஜோ மயமான ப்ரகாஸம் விளங்குகிறதே -தயாதேவிக்குப் பர்த்தாவான பகவானுடைய ஸங்கல்பன் வருவதை ஸூசிப்பிக்கிறது இப்பிரகாஸம்
(ஸங்கல்பன் ப்ரவேஸம் )

வி பக்தி -சந்தோஷத்துடனும் பரபரப்புடனும் எதிர்கொண்டழைத்து நமஸ்கரிக்கிறாள்
ஸங்கல் –ப்ரீதியுடன் கைகொடுத்து எழுப்புகிறார்
வி பக்தி -பகவானுடைய ஸங்கல்பமாகிய தேவரீருக்கு சதகோடி நமஸ்காரங்கள் -அடிக்கடி சேவிக்கிறாள்
ஸங்கல்-பத்ரே போதும் போதும் சிறந்த யோகங்களுக்கு எல்லாம் சிறந்தவளாகிய உன் மஹிமையும் நமஸ்காரமும் என்னையே உன்னை வணங்கும்படி செய்கின்றன -உன் விருப்பம் யாது
வி பக்தி -ஹா ஹா பிரபோ தாம் பரதந்த்ர பாவத்தை ஒப்புக் கொள்வதும் ஸ்வ தந்தரராய் இருப்பதால் தான் -நான் ஞாபகமூட்ட விரும்புவது ஒன்றே -ஜீவாத்மாவை மஹா மோஹாதி பிசாசங்கள் விட்டுவிட்டன -அவனும் பிரணவம் திரு அஷ்டாக்ஷரம் இவைகளை ஜபித்துக் கொண்டு ஸந்தோஷமாக மோஷ தர்மத்திலேயே தான்‌ இருக்‌கிறான்‌. எது நேர்ந்தாலும்‌ ௮தை நன்மையாகவே தான்‌ நினைக்கிறான்‌

ஸங்க.— இருந்தாலும்‌, எவ்வளவோ காலங்களாக ஸம்ஸாரமாகிய அல்ப ஸுகங்களில்‌ ஈடுபட்டு கர்ம பாச வசப்பட்டவனான இந்த ஜீவாத்மா, ஸத்ய லோகம்‌ மாதிரியான அல்ப ஸுகமுள்ள இடங்களையே கோறுவானாகில் எவ்விதம் மோஷத்திற்கு அர்ஹனாவான்‌ !

வி பக்தி -(காதுகளை மூடிக்கொண்டு )தாங்கள்‌ அப்படிச்‌ ஸந்தேகிக்கலாகாது – பரமாத்மாவின்‌ நாபிகமலத்‌துதித்த வேதனுக்கும்‌ மதுகைடபர்கள்‌ மூல்யமாய்‌ ஆபத்து நேர்ந்ததை ஜீவாத்மா அறியாதவனல்ல-ஆகவே மோஷித்திற்குத்‌ தாழ்ந்த ஸ்வர்க்காதி போகங்களையும்‌ இனி இச்சிக்க மாட்டான்‌–தாங்கள் தான் இவன்‌ விலங்குகளைச்‌ சீக்கிரத்தில் அறுத்துத் தள்ள வேண்‌டும்‌–. இதோ ! .. தங்களையே அந்தக்‌ காரியத்திற்காக நிச்சயமாய்‌ நம்பி யிருக்கும்‌. விவேக மஹாராஜனை உம்மிடம் அழைத்து வருகிறேன் -(விரைந்து செல்கிறாள் )

ஸங்க -(தனிமை )(நாற்புறமும் பார்த்த வண்ணம் )ஜீவாத்மா க்ருதார்த்தனாகி விட்டான் -ஸ்ருங்காரம் வீரம் கருணை அத்புதம் ஹாஸ்யம் பயம் பீபத்ஸம் ரவ்த்ரம் ஆகிய அஷ்ட ரஹஸ்யங்களுடைய விஷயங்களின்றும் விலகினவனாகி -தத்வ ஞானம் உண்டாகி ஸாந்தி ரஸத்தோடு பிரகாசிக்கிறான் -மோக்ஷ மார்க்கத்தில் மநோ ரதத்தில்‌ அதிவேகமாகவே. சென்று கொண்டிருக்கிறான்‌–. மறைவிலிருந்தே இன்னமும்‌ சிறிது காலம்‌ இவனைப்‌ பரீஷித்தறிகிறேன்‌-(போகிறான்‌)

நான்காம் காட்சி -இடம் -விரஜைக்கு இக்கரை -ஸாந்த ஸ்வரூபனான புருஷன்‌ ஸ்ரத்தையுடன்‌ பிரவேஸம்‌.]

புருஷ- (துக்கத்‌துடன்‌ சிந்தித்தவனாய்‌) : ஹா ஹா – பிறப்புப்பிணி யொழித்தேன்‌ ! துக்க ஸாகரத்தையும் தாண்டிக் கரை யேறி விட்டேன்‌! பகவானது கிருபையால்‌ நிவ்ருத்‌தி தர்மத்தில்‌ வைக்கப் பட்டேன்‌ ! விவேகனது மகிமையினால்‌ காம க்ரோதாதிகளை வென்றேன் !–(ஆயினும்‌ ! (பெரு மூச்செறிந்து .)–. பரமாத்மாவை மட்‌டிலும்‌ இன்னமும்‌ கிடைக்கப்‌ பெற்றிலேனே ! முன்‌ போல்‌ பக்தனாகவும்‌ இருக்க வில்லை! விரும்பியபடி முக்தனாகவும்‌ ஆக வில்லை !. தீனனாயிருக்கும்‌ அடியேன்‌ எதைச்‌ செய்வது? எதை விலக்குவது ? எப்பொழுது எனக்கு முக்தி கிட்ட வல்லது ?

ஸ்ரத்–நாதா! முழு ஞானியல்‌லேனாயினும்‌, முக்திக்குப்‌ பாத்திரமாகியே உள்ளீர்‌ என்றோ அடியாள்‌ விஞ்‌ஞாபித்துக்‌ கொள்கிறேன்‌, – ஆகவே தாம்‌ சந்‌ தோஷப்‌பட வேண்டி இருக்க, இன்னமும்‌ வருந்துவானேன்‌-

புருஷ –பேதாய் -சப்தாதி விஷயங்கள் என்னை இன்னமும் தொடர்ந்து என் ஞானத்தைத் தடுக்கின்றனவே -துராசைப் பேய் என்னை எப்படிக் கெடுத்து விடுமோ என்ற பயம் என்னை விட்டபாடில்லையே -நான் தீனன் -மஹா தீனன்-

ஸ்ரத்தா –நாதா பேதையான நான் தங்களுக்கு யாது சொல்லக் கூடும் -வெகு காலத்திற்கு முன் நடந்தேறியவைகளைக் குறித்து ஏன் இப்பொழுது சிந்தித்து வருந்து கிறீர்கள்-

புருஷ –நீ கூறுவது வாஸ்தவமே -சென்றதையோ வரப்போவதையோ நினைத்து வருந்துவதில் பிரயோஜனம் இல்லை தான் -மரணம் எப்பொழுது நேர்ந்தால் என்ன-இன்றைக்காய் என் என்றைக்காய் என்ன-நாம் செய்ய வேண்டுவன வற்றை முன் ஜாக்கிரதையுடனேயே சீக்கிரத்திலேயே செய்து முடித்துக் கொள்வதே உசிதம் –

ஸ்ரத்தா -விரோதிகளைப் பற்றித் தாம் இனி சிந்திப்பதே தவறு -இன்றைக்கோ என்றைக்கோ மோக்ஷம் கிட்டுவது திண்ணம் என்ற நிச்சயத்துடனே இருக்க வேண்டியதே —

புருஷ –நல்ல ஸமயத்திலேயே இந்த நித்ய ஞானத்தை ஞாபகமூட்டினை -நீ உடனே விஷ்ணு பக்தியை அடைந்து என் ஸ்திதியை அவளுக்கு அறிவித்து என்னை சீக்கிரத்திலேயே மீட்க்கும் வழியை நாடி வா

ஸ்ரத்–அப்படியே (போகிறாள் )

புருஷ–(சிந்தனையில் ஆழ்ந்து –)சம்சாரச் சழல்களில் இருந்து கரை யேற்றப் பட்டுக் களைத்திருக்கும் ஏழையேனை, நித்யானந்த ஸ்வரூபனான ஹரியெனும்‌ சந்தன விருஷம்‌ தன் நிழலில்‌, ‘தன்‌ ஆதி வாஹிகர்களால்‌ அழைத்து இருத்தி இன்னமும்‌ ஆனந்திக்கச் செய்ய வில்லையே !
[ஸங்கல்பன்‌ பிரவேசம்‌.)

ஸங்கல்‌.–(புருஷனைக் கண்டு தனக்குள்‌ சந்தோஷத்‌துடன்‌ ஒருபுறமாய்‌)--. ஹா! ஹா! ஸ்ரீலக்ஷ்மீபதியின்‌ திருவடிகளில்‌ தன்னை ஒப்படைக்திருக்கும்‌ இந்தப்‌ புருஷனுக்குள்ள மேன்மை எவ்வளவே கணக்கிலாது கர்மானுஷ்டான பரர்களுக்கும்‌, யோகானுஷ்டான பரர்களுக்கும்‌ இருக்க வில்லை யல்‌லவா ! இந்தப்‌ புருஷனிடம்‌ யம படர்களும்‌, ௮ந்த யமனுமே அணுக அஞ்சுகின்றனர்‌! தேவதைகளும்‌ நடுங்குகின்றனர்‌! ராக்ஷஸாதி துஷ்டர்கள்‌ கண்ணில் படாது ஒடுகின்‌றனர்‌ ! இவன்‌ இருக்கும்‌ தேசத்திலும்‌ பசி பிணி மூப்‌புத்‌ துன்ப மென்பவைகளைக்‌ காணவே காணும்‌!–. பகவானிடத்தி லிருப்பதை விட அவன்‌ பக்தர்களிடத்த லல்லவா இந்த புருஷனுக்குப்‌ பிரேமம் ௮திகமாயிருக்கிறது –. இவனை அடைவதால்‌ தானும்‌ கிருதார்த்தனாவேன்‌ அன்றோ !
(புருஷன்‌ முன்‌ ஸந்தோஷம்‌ பஹுமானம்‌ இவைகளுடன்‌ நெருங்கி )
மகாத்மான் பகவானுடைய கைங்கர்யத்தில்‌ பரம ப்ரீதி யுள்ளவரா யிருக்கிறீர்‌ நீர்‌ என்பதைக்‌ காண மிவும்‌ ஸந்தோஷிக்கிறேன்‌ !

புருஷ.–(பரபரப்புடனும்‌ பயத்துடனும்‌ ஸந்தோஷத்துடனும்‌ நமஸ்கரித்து அஞ்சலி ஹஸ்தனாய் )--.. பகவந் தாம்‌ யாரென்று அறியச்‌ சக்தி யற்றவனாயிருககிறேன்‌ !–. பகவானே தானே, இல்லை, ௮வருக்குப்‌ பரம அந்தரங்‌கமானவரோ ?

ஸங்கல்‌.–மகாத்மரந் ! பகவத்‌ ஸங்கல்‌பன்‌ நானே. தீன ஜன பந்துவும்‌. பரம புருஷனது பத்னியுமாகிய க்ருபா தேவியினால்‌ ஏவப்பட்ட நான்‌, உம்மை ஸகல பாப புண்யங்க ளென்னும்‌ விலங்குகளினின்றும்‌ விடுவிப்ப தாதியாகப்‌ பரப் பிரம்மத்தினது ஸேவையை அந்தமாக வுடைப கரரியாதிகளைச்‌ செய்து முடிக்க உம்மை அடைந்துள்‌ளேன்‌!–ஆகவே மோஷ ஐஸ்வர்யம்‌ உமக்கு ஸமீபத்திலேயே கிட்டக் கூடியதென்பதைச்‌ ஸந்‌தேகமற நம்பும்‌. ரஜோ குண தமோ குணங்கள்‌ ௮டங்‌கி உம்மிடம்‌ ஸத்வ குணம்‌ விருத்தி யடைகின்றதா? இந்திரியங்கள்‌ யாவும்‌ உமக்கு வசப்பட்டனவா? மனம்‌ நிர்மலமாகவும்‌ நிச்சலமாகவும்‌ இருக்கிறதா ?

புருஷ:–(ஸந்தோஷத்துடன்‌ தழதழத்து)--. ப்ரபோ மிகவும்‌ கிருதார்தனானேன்‌ !. பகவானுடைய கிருபா கடாஷத்தினால் உமது அனுக்ரஹம்‌ பெற்றுள்ள அடியேனுக்கு ஸித்திக்கக்‌ கூடாததும்‌ உண்டோ.?

ஸங்கல்‌.–( தனக்குள்‌) இவரை இன்னமும் சிறிது சோதிக்க வேண்டும்‌–. (வெளிப்படையாய்‌) பத்ர! கிடைத்‌தற்கரிய ஸமாதியின்‌ பூர்த்தி உமக்கு எப்படி இருக்‌கிறது?

புருஷ.–ப்ரபோ! ஸமாதி விசேஷமாக அனுபவிக்கக்‌ தக்கதாய்‌ இருந்த போதிலும்‌, விசேஷித்து இவ்விதமிருக்‌கிறதென்று சொல்ல முடிய வில்லையே. -ஸ்ரீ பூமி நீளா ஸமேதனைத்‌ தியானம்‌ செய்யும் பொழுது மஹா ஆநந்த மாகவே யிருக்கிறது. வெகு சீக்கிரத்தில்‌ மனம்‌ அவ்விடத்திலேயே லயம்‌ ௮டைகிறது !

ஸங்கல்‌.–(ஸந்‌தோஷத்துடன்‌) மகாத்மந் ! பகவதனுக்ரகம்‌ உம்மிடம்‌ பூர்ணமாகவும்‌ நிச்சயமாகவும்‌ உண்டாயிருக்‌கிறது–, ப்‌ரகிருதி ஸம்பகந்தத்தைப் போக்‌கி பரமாத்மாவுடன்‌ ஸாம்யத்தை யடைந்து, நீரும்‌ ஆதிசேஷாதியரைப்‌ போல்‌ பகவத்‌ கைங்கர்ய ஸித்தி பெற்ற முத்த ராகப்‌ போகிறீர்‌! ப்ராரப்த கர்மாவின்‌ முடிவில்‌ நீரும்‌ பரமபதத்தை அடைவீர்‌. அப்பொழுது உம்மால்‌ த்தயஜிக்கப்பட்ட சுக்ர பலன்களை உமது நண்பர்கள்‌ அடைவார்கள்‌. பாப பலன்களை உமது திவேஷிகள்‌ அடைவார்கள்‌.

புருஷ.–தேவ –. ஓரு விஷயம்‌ அனுக்ரஹித்தருள. வேண்டும்‌. ஆதி வாஹிகர்கள்‌ அழைத்துப் போய்ப்‌ பகவானிடம்‌ சமர்ப்பித்‌து , – அவனுடைய ஆகாராங்கள்‌ பிரகாசமாக எற்பட்டு, “இனிமேல்‌ : ஜன்‌மமில்லை யென்று சொல்லப்படுகிறதே ௮ந்த விஷயத்தை அடியேன்‌ அறியத் தகுந்தவனாயின்‌ ௮றிய விரும்புகிறேன்‌.

ஸங்கல்‌.–நீர்‌ அறியத் தகாததும்‌ உண்டோ இனி? புனர்‌ ஜென்மம் என்பது இல்லாது அழிவில்லாததான பரமபதத்‌தையே நீர்‌ அஅடையப் போகிறீர்‌- பரமாத்ம ஸேவா கைங்கர்யமாகிய ஒரு ஸார்வ பெளமத்வம்‌ உமக்குக்‌ கிடைக்கப்‌ போகிறது. விவேகனுக்கும்‌ யெளவ ராஜ்‌யம் கொடுக்க நிச்சயிக்கப் பட்டிருக்‌கிறது -இனி நான்‌ போய்‌ வருகிறேன்‌–. (சிறிது தூரம்‌ சென்று திரும்பி) ப்‌ரஹ்ம வித்யையின்‌ சம்பிரதாய ப.ரம்பை விட்டுப்‌ போகாதிருக்க ௨மது மூலமாய்‌ உலகத்தார்க்கு ஓரு வார்த்தை சொல்லிச்‌ செல்கிறேன்‌ கேளும்‌. பகவானிடத்தில்‌ மிகுந்த பத்தியுள்ள மகாத்மாவாகிய புருஷன்‌ சிஷ்யர்களுக்குத்‌ தாமே ஸந்தேககம் தெளிவித்து சகல அர்த்தங்களையும்‌ போதித்து, ௮வர்கள்‌ மூலமாக ஸத் ஸம்ப்ரதாயம்‌, ஆசார்ய சிஷ்யக்‌ கிரமமாக வ்ருத்தியாகி , அந்‌தணரந்திய ரெல்லையில்‌ நின்ற அனைவருக்கும்‌ ஷேமத்தையும்‌ மங்களத்தையும்‌ உண்டாக்க வேண்டு மென்பதே.
(புருஷனை திரும்பிப்‌ பார்த்துக் கொண்டே போகிறார் .)

புருஷ–(தனிமை)–ஹா! ஹா! அளவில்லா அபராதங்கள்‌ நிறைந்த நானும்‌ மோக்ஷமடையும்‌ ஸம்பவத்‌தினால்‌ எவராலும்‌ செய்ய முடியாததையும்‌ செய்யக் கூடிய ஸாமர்தய மென்னும்‌ பகவானுடைய ௮பாரா சக்தி என்னிடத்தில்‌ இப்பொழுது ப்‌ரத்யஷமாகவே காண்பிக்கப்பட்ட தல்லவா!–ம ஹா ஆச்சர்யம்‌ –இந்தச்‌ சரீரம் எவ்வளவு அசுத்தமானது -ஜல மலப்‌ பேழை ! எலும்புக்‌ கூடு! ரக்த மாம்ஸாதிகளாகிய நாற்றக் குழி! சேற்றில்‌ விழுந்த குழந்தையை எடுக்கத்‌ தானும்‌ சேற்றில்‌ குதிக்கும்‌ தகப்பனைப் போல்‌ இந் நரகக்‌ குழியினின்றும்‌ நம்மைக்‌ காக்கப்‌ பரமனும்‌ அந் நரகக்‌ குழியில்‌ தானும் குதித்‌து , இந்தச்‌ சரிரத்திலிருந்து, ஜீவன்‌ சரீரத்தை விட்டுப்‌ போகும் காலத்தில் மோஷ வழியாகிய நூற்றியோராம்‌ நாடியில்‌ அதைப்‌ பிரவேசிக்கச்‌ செய்கிறார் அல்லவா ! இவ்வளவும்‌ :அந்த அஸஹாய சூரனான விவேகனுடையவும்‌, ஆச்சர்ய மஹிமையுடைய விஷ்ணு பக்தியினுடையவும்‌. காரியமேயல்லவா * அந்த மஹாத்மாக்களின்‌ திவ்ய தர்சன பாக்யம்‌ எனக்கு எக்காலம் கிட்டுமோ !–. ௮தோ! அவர்கள் தான்‌ போலும்‌ ! என்‌ பாக்யமே பாக்யம்‌ !
(ஒர்‌ புறம்‌ ஒதுங்‌கி நிற்கிறான்‌,) (விவேகன்‌, ஸூமதி, விஷ்ணு பக்தி பிரவேசம்‌)

வி- பக்தி--மஹா ராஜ கர்ப்ப ஜன்ம ஜரா மரணங்கள்‌ என்ற சக்கரச்‌ சுழல்களில்‌ சிக்கிய ஜீவாத்மாவிற்கு மோக்ஷ ஸாம்‌ராஜ்ய பதவி கிடைக்கும் படியான வஸதிகள்‌ ஏற்‌படுத்திக்‌ கொடுத்த தங்கள்‌ ப்‌ரதாபம்‌ சொல்லில் அடங்‌காததுவே யாகிறது !
விவேச.–யாவும்‌ உன்னுடைய ௮னுக்‌ரஹத்தால்‌ உண்டானதுதான்‌ : (பக்த்யா த்வநந்யயா)அநந்ய பக்தியே அவனை அடைவதற்குக் காரணமாகும் எனப் பகவான் கீதையில் அருளிச் செய்ய வில்லையா -அது கிடக்கட்டும் -புருஷன் . இன்னமும் பிரக்ருதியைக் கடக்க வில்லையே ! விரஜா நதியைத் தாண்டி வந்த பின்னரன்றோ நித்யானந்த ஸ்வரூனாகக்‌ கூடியவர்‌?

வி-பக்தி..-இதைக்‌ குறித்து மஹா ராஜன்‌ வ்யஸனப்பட வேண்டியதில்லை. பகவத்‌ ஸங்கல்பத்தால்‌ புருஷனுடைய பாப ஸமுத்ரம்‌ வரண்டு போய் விட்டது . பாம்பு தோலுரிப்பது போல, ப்ருஷனும் ப்ரக்ருதியை தியஜித்து விடுவார்‌.

விவேக. _ஆயின்‌ நாம்‌, ஆரம்பித்த கார்யமும்‌ பூர்த்தி ஆகி விட்டது. நம்‌ முயற்சியும்‌ ப்ரயோஜனத்தை உடையதாய் ஆயிற்று
(ஆகாயத்தில்‌. வாத்ய முழக்கம்‌, யாவரும்‌ ஆச்சர்யப்‌ படுகின்றனர் )

வி-பக்தி.-ஜீவாத்மாவிற்கு மோஷ ஐஸ்வர்யம்‌ கிட்டிவிட்டதென்று தேவதைகள்‌ ஆனந்தித்துச்‌ செய்யும்‌ குதூ ஹலவாத்ய முழக்கங்களைக்‌ கேட்டீர்களா !

புருஷா.–(ஒரு புறம்‌ ஸந்தோஷத்‌துடன்‌) நம்முடைய ஷேம லாபத்தால்‌ சந்தோஷ மடைந்திருக்கும்‌ விவேகாதியரை நான்‌ எதிர் கொண்டு வரவேற்பதே முறை. (முன்‌ வருகிறான்‌.)
விவேக.--௮தோ ! பகவத்‌ ஸங்கல்பத்தினால்‌ பாப ரஹிதரான புருஷன்‌ இதோ வருகிறார்‌ – நாம்‌. நமஸ்கரிப்போமாக!.
(நமஸ்கரிக்கிறார்கள் )

புருஷ –ஸர்வே தீர்காயுஷோ பூயாஸ்த
பத்ரே !. விஷ்‌ணு பக்தி! : ஜெயசீலனாய் விளங்கும் விவேகனை தைவாதீனமாய்‌ அடைந்த என்‌ பாக்யமே பாக்யம்‌ –
(விவேகனை ஆலிங்கனம் செய்து ஆனந்த பரவசனாய் )
வத்ஸ!
விரோதிகள்‌ வசப்பட்டு பாபங்களையே செய்து ப்‌ரக்ருதியில்‌ உழன்று வந்‌த என்னை நற்பத்தி புகட்டி. மீட்டு ரக்ஷித்தாய்‌ ! என்‌ பாபமனத்தையும்‌ போக்கியவள் இந்த விஷ்ணு பக்தியே யல்லவா –

விவேகோயம்‌ தத் வேஷ்வ விதத விஸேஷக்ர ஹதனுர்‌ பவோதஙத் தோஷ ப்‌ரதிகமநிகாத்மா ச ஸுமதி : பாப்ரேமாகாராத்வ மிதி ஸமவேதாஸ்த்ர ய இமே தம: பாரே த்ரி குணமபி ச த்யக்ஷத நமாம்

திவ்யம்ஸ் ஸம்ப்‌ரதி துந்துபிர்‌தி சிதிசித் வாநைர் முஹு ஸ்ரூயதே தேவாநாமபி ஹாவு ஹாவு லஹரீ விக்ஷோபய த்யம் பரம்‌ ஆரப்த ப்‌ரதி ஸம்ஸ்க்ருதி க்ருத முகைரர்சிர் முசைமஸ் ஸ்ரீபதே ராஜ்ஞா தாரி பிராதி வாஹிக கணை ராதிஸ்யதே பத்‌ததி : ॥

தத்வங்களில்‌. உண்மையான விசேஷத்தையே க்‌ரஹித்‌ கும்‌ ஸ்வ பாவனான விவேகனும்‌, ஸம்ஸார ஸாகரத்தின்‌ தோஷங்களை ௮றிவதையே ஸ்வரூபமாக வுடைய ஸூமதியும் பரந்தாமனின் ப்ரீதி ஸ்வரூபையான விஷ்ணு பக்தியும் பரமபதத்தில் என்னை விட்டு அகலாதிருப்பீர் களாக

ஜந்தாம்‌ காட்சி.-இடம் -பரமபதம் முக்தர்களின் நித்யானந்த-பல்லாண்டு பாடு பஜிக்கிறார்கள் (நடிகர்கள் எல்லாரும் )

பரத வாக்யம்
அங்கீ குரவந்வ கலுஷதியோ நித்ய மத்யாத்ம வித்யாம் ஆத்யோ தர்ம ஸ்ப்ருசது வஸூதா மாசிஷ பாரவர்தீ தேவ ஸ்ரீ மான் நிரவதிதயா ஸிந்து ரஸ்மின் ப்ரபந்யே வக்தா ஸ்ரோத வசன விஷய ப்ரீயதாம் வாஸூ தேவ

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு –

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினால் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading