ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -89-தீ வினைக்கு அரு நஞ்சை –அங்கும் இங்கும் -8-3-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அடைவதில் சம்சயம் இல்லையே ஆழ்வாருக்கு-எஞ்ஞான்று தலைப்பெய்வன்-(நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-) -என்று என்பதே –உலகம் அளந்த பொன்னடி திரிவிக்ரமன்-ஊராகத் தொட்ட கண்ணன் ஆவினை மேய்க்கும்-வல்லாயன் -சஜாதீயத்தில் மெய்ப்பாடு-அன்று தப்பினேன்-அகாரம் ஆகாரம் தீ வினைக்கு அரு நஞ்சு ஆறு நஞ்சு -தளை தப்பாமல் -தமிழர் –ஆர்ஷ பிரயோகம் போல் ஆழ்வார் -மாற்ற வேண்டாம்-ஆரும் -போக்குவதற்கு போருமதான நஞ்சு–அங்கும் இங்கும் -8-3-இதன் விவரணம்-

அவதாரிகை –-சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப்      பெற்றோம் –இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு  நாம் சஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார் –(சம்சாரிகளில் வியாவருத்தரானதால் மகிழலாம்-நித்யர்கள் உடன் சேரப்பெறாமல் துக்கம்-ஆரூரோஹ-ரதம் ஏறி -அனிஷ்டம் தொலையப் பெற்று மகிழ்ந்த பரதன் -அதே சமயம் கூடப் பெறாமல் துக்கம் போல் இங்கும் -)

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும் பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய் ஸூலபனான இவனை என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்-இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே
– – 89-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும் வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக-பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்-எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட-நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்-நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

தீ வினைக்கரு நஞ்சே –பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை–நல் வினைக்கு –பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )-இன்னமுதினை –நிரதிசய போக்யனாய் – பரம ப்ராப்யனாய் உள்ளவனை –இப்படி பாபங்களை போக்குகைக்கும் –தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –பூவினை மேவிய இத்யாதி –பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு–புன்மை இத்யாதி –அம் மேன்மை  உடையனாய்  இருக்கச் செய்தே –அவளோட்டை சேர்த்தியாலே- ஆஸ்ரிதர்க்கு ஸூலபனாய் உள்ளவனை –புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் –ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ –இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –வல்லாயினை –மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –ஏற்றை –லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால் மேணானித்து இருக்கிறவனை –-இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி–எம்மானை –அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று- இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –எஞ்ஞான்று தலைப் பெய்வனே
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே – அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ) அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

பேற்றுக்கு விரைந்து பேசுகிற படி-தீய கருமங்களை ஒழித்து கைங்கர்யம் செய்பவர்க்கு இன்ப மயமாய் இருந்து -பக்தியை வளர்ச்சி செய்பவன்-நல் வினை-என்றது முக்திக்கு வியாஜ்ய காரணமான பிரபத்தியை புன்மை எள்காது-ஆவினை மேய்க்கும் வல்லாயனை -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாய்-எங்கள் ஆயர் தேவே– எள்காது-பெறாப் பேறு பெற்றால் போன்று அன்றோ உகப்பான் –நாயகனுடைய ஸம்ச்லேஷத்துக்கு விரைகின்ற நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. கொடிய துன்பத்தை விளைக்கின்ற தீக் கருமங்களை எளிதில் ஒழிப்பவனும், தன் பக்கல் அடிமை செய்வார்க்கு நிகரற்ற இன்பமூர்த்தியாயிருப்பவனும், தாமரையைத் தனது சிறப்புக்கும் ஸௌகுமார்யத்துக்கும் அழகுக்கும் தக்க இடமாகக் கருதி அதில் வீற்றிருப்பவளாய்ப் புருஷகார பூதையான பிராட்டிக்கு நாயகனும், திருவுள்ளத்தில் சிறிதும் வெறுப்பின்றியே உகப்புடனே பசுக்களை மேய்க்கப்பிறந்து, வேஷம் கொண்டவன் போலன்றிச் சாதி குணந்த தொழிகளில் உறைந்து நிலைநின்ற இடையனும் இரண்டடிகளாலே ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட மேம்பாடுடையனுமான எமது தலைவனை எப்பொழுது சேரப்பெறுவேன் என்கிறாள்.
அடியார்கட்குப் பகை தீர்ப்பவனும் அடிமைக்கு இனியனும் புருஷகாரமான திருமகளுக்குக் கணவனும் அனபர்க்கு எளியனும் எல்லாவுலகையும் கீழ்ப்படுத்தியவனுமான எம்பெருமானை எப்பொழுது சேர்ந்து அநுபவிக்கப் பெறுவேனென்று ஆழ்வார் பேற்றுக்கு விரைந்து பேசுகிறபடி.–‘தீவினைக்கு அரு நஞ்சு’ என்றது- கொடிய துன்பத்தை விளைக்கிற தீய கருமங்களை எம்பெருமான் எளிதில் ஒழிப்பவன் என்றவாறு.‘நல்வினைக்கு இன்ன முதம்’ என்றது- தன் விஷயத்தில் கைங்கரியம் செய்பவர்கட்கு இன்பமயமாயிருப்பவன் எம்பெருமான் என்றவாறு;-அவர்கள் பக்தியை அழியாது வளரச் செய்பவன் என்க. முக்திக்க வ்யாஜ காரணமான ப்ரபத்தியை இங்க நல்வினை என்றது.புன்மை யெள்காது ஆவினை மேய்க்கும் = மகிவும் நீச ஜாதியாகிய பசுக்கையோ நாம் மேய்ப்பது’ என்று ஜுகுப்ஸை கொள்ளாமல்“ திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே!” (திருவாய்மொழி 10-3-10). என்கிறபடியே ‘பசுமேய்க்கும் பாக்யம் பெற்றோமே!’ என உவந்து மேய்ப்பவனென்றவாறு.–‘தாவின வேற்றை’ என்றவிடத்து ‘ஏறு’ என்றது விளக்கவந்த உபசார வழக்கு; ஏறு காளை சிங்கம் இச்சொற்கள் ஆண்பாற்கு வருகையில் சிறப்புப் பொருளுணர்த்துவனவாம்; இது வடமொழி மரியாதை.

தீ வினைக்கரு நஞ்சை-கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை–ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல-அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்நல் வினைக்கின்ன முதத்தினை-ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை-பூவினை மேவிய தேவி மணாளனை-அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்-நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற-பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை-(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபணம் பட்டர்) புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை-இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே சிறுமை என்று இகழாதே பசுக்களை மேய்க்கக் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-அன்றுலகீரடியால் தாவின வேற்றை-இப்படி இனியனானாலும் தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில் தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை–எம்மானை-கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை–எஞ்ஜான்று தலைப் பெய்வனே –இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை-அது எக்காலம் என்றதாயிற்று –

தாத்பர்யம்--இப்படி பகவத் விலக்ஷண பக்தி உக்தராய் இருக்க சம்சாரி வ்யாவருத்தராய்
அதே சமயம் நித்ய ஸூரிகளுடன் சேரப் பெறாமையால் ஆற்றாமை மிக்கு அத்யந்த வல்லபையான – கமல வாஸினியான பெரிய பிராட்டியார் யுடைய -புருஷகாரம் இருக்க ஆஸ்ரிதருக்கு அத்யந்த துக்க ஜனகமாய் உள்ள பாபங்களைப் போக்கி பிரபத்திக்கு -நல்வினைகள் -அவனே பலம் -அவன் முக விலாசத்துக்குச் செய்ய வேண்டுமே-கர்மமும் கைங்கர்யத்தில் புகுமே-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-மேன்மையைப் பாராதே இடைக்குலத்தில் பிறந்து பசு மேய்த்தும்
மஹாபலி அபஹரிக்க தனது உடைமையை -கால் கீழ் இட்டுக் கொண்ட விசித்திர சரிதங்களால் புகர் பெற்று-இவ்வண்ணமாக பரத்வ ஸுலபயங்களைக் காட்டி என்னை ஆளாக்கிக் கொண்டான்
எப்போது நித்ய கைங்கர்யம் பெறப்போகிறேனோ என்று பிராப்தி -காலத்தைப் பிரதேஷிக்கிறார்- எதிர்பார்த்து அருளிச் செய்கிறார் –

8-3-அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-ப்ரவேஸம்-

அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக

நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –

அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி

சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர் என்னும் அளவும் செல்ல அறிகை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —

இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –

மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அபிமதம் அவன் -அபிமத சாதனம் இல்லை -இதுவே ஆழ்வார் கொள்கை –இவர் நெஞ்சில் அவன் சௌகுமார்யமே ஆயிற்று உறைத்து இருப்பது

எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதே-நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று

கருமுகை மாலை போலே இருக்கிற உன் படி அறியாதே –போக்ய பூதன் என்று அனுபவியாதே-புருஷகார பூதன் அபீஷ்ட பல பிரதன் என்பர்

ஸ்வரூப அனுரூபம் மங்களா சாசனம் என்றவாறு

சரணமாகிய நான் மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

க்ஷேமம் கரமான-சேஷ பூதராக–சேஷிக்கு அதிசயம் பண்ணி பரியாமல்-ஆத்தும லாபத்துக்காக வணங்குகிற  கேவலரை நிந்திக்கிறார்

தாதர்த்தம் ஸ்வரூபமாக இருக்க ஸ்வார்த்ததா -தங்கள் பிரயோஜனத்துக்காக இருப்பதே

ஈஸ்வரன் விடினும் அடியார்களை விடாத திண்மையை உடைய படை ஆதலின் திண் படை

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

அழும் தொழும் ஸ்நேக பாஷ்ப அஞ்சலி யோடே ருசிர சானுக்களின் கூவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண்
என்று வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –சூர்ணிகை -127 –

விரோதி பூயிஷ்டமான ஜகத்தில் -சஹாயாந்தர ராஹித்யம் -சஹாயாந்தர நிரபேஷ்யம் இத்தை கொண்டே பிர பத்திக்கு ஏற்றம்-அதுவே குறையாகப் படுகிறதே பரிந்து இருக்கும் ஆழ்வாருக்கு

ஆளுமாளார் –
விபூதி த்வயத்திலும் புரிவதற்கு ஆள் இல்லை -தனியே ஒருவரே ஆள வேண்டும் என்று இருக்கிறார்
நித்ய ஸூரிகள் பகவத் அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-சம்சாரிகள் ப்ரயோஜனாந்தரங்களிலே அந்ய பரர்

தொழக் காணேன்
தொழுகையும்-பரிதலும்-பர்யாயம் போலே காணும்–தொழக் காணப் பெறுகின்றிலேன்

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

ஞாலத்தே-
பரம பதத்தில் இருந்து அஸ்தானே பய சங்கை பண்ணுகிறேனா-
பிரம்மாஸ்திரம் விடுவார் நாக பாசத்தை இட்டுக் கட்டுவார்
அழைத்து வைத்து மல்லரை இட்டு வஞ்சிக்க தேடுவர்
பொய்யாசனம் இடுவார்
ஆகிய இவர்கள் இருக்கிற தேசத்தில் வாழா நின்றால் நான் அஞ்சாது செய்வது என் –

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே--8-3-4-

ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே-ஆலிலை பேர் சொல்லும் படி -வயிற்றில் இடம் இருக்கும்
இலையில் இடம் இல்லையே-இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து -திருப் பாற் கடல் போலே திரு உள்ளம்

பேரிலை-பெயருகிற இலை-அதாவது-முகிழ் விரிகிற இலை -என்றபடி –ஆலிலை என்ற ஓர் பெயர் மாத்ரமான இலை-பெரிய இலை என்று விபரீத லஷணையாய்-சிற்றிலை -என்னுதல் –

கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே-உலக பயத்துக்கு உம்மைப் பற்றி போக்குவேன்
உம்மைப் பற்றிய பயம் போக்க முடியாத பாவி அன்றோ -ஆழ்ந்து போன கொடியேன் -எல்லாரையும் இரட்சிக்கின்ற வஸ்து அன்றோ பிரளயத்தில் அகப்படப் புக்கது -என்று அதற்கும் அஞ்சுகிறார்-அகடிதகடநா சாமர்த்தியமும் -ரக்ஷகத்வம் சக்தியும் அன்றோ என்னில் இவையே இவருக்கு அஞ்ச ஹேதுக்கள் ஆனதே-

1-தனக்கு ஜீரணம் ஆகாத பூமியை உண்டலும்
2-ஜீரணம் ஆகாது -என்று அறியாத இளைஞன் ஆகியும் –
3-பிரளயத்தில் சிறிய இடத்தை உடைய ஆல் இலையிலே திருக் கண் வளர்ந்து அருளுகையும் –
4-அதிலே கிடந்த இடத்தில் கிடக்காமல் விளையாடுகையும் –
இவை எல்லாம் பயத்துக்கு இடங்களாய் இருக்கிற தாயிற்று இவருக்கு –

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

கொடிக்கு பயப்பட வல்லார் இவரைப் போன்றார் இலர் –கொடி இடை மடவாருக்கு பயப்படுவார் –

அளந்த திருவடி பிடிக்கவோ -எய்த்த திருத் தோள்களை பிடிக்கவோ இவருக்கு உத்தேச்யம்

உகந்து அருளின இடங்களிலும் செய்ய முடியாதன இல்லை-
சொல்ல நினையாமல் இருக்கிறான் இத்தனை -என்று இருக்கிறார்

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

திரு நீல மணியார் மேனியோடு –
நீல மணி போலே ஸ்ரமத்தை போக்கக் கூடியதாய் சுகுமாரமான வடிவோடு-
இங்கே வர வேண்டுமானால் அவ்வடிவோடே வர வேண்டுமோ-
அத்தை கழற்றி வைத்து வரக் கூடாதோ -இச்சா க்ருஹீதாம் அன்றோ -வடக்கே அதனால் வெள்ளை திருமேனி பரிவு அதிகம் என்பதால்

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே –சூர்ணிகை -173-மனம் சூழும் படி ஸூ குமார்யம் பிரகாசிப்பித்தானே
ஒரே பாசுரம் -மங்களா சாசனம்

மாயக் கூத்தன் -சாதரரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் சூர்ணிகை -173-அங்கேயும் ஒரே பாசுரம் –

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஒருவர் இலர் என்று கை வாங்கி இருப்பர்-அது வேண்டா-
ஒருவன் உளன் என்று என் இடையாட்டம் சொல்லுகின்றிலர்கள் -என்கிறார் -என்றபடி –செய்வது என் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றே இருக்கும் ஒருவன் உளன் என்று சொல்லார் செய்வது என் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –

உம் திருவடிக் கீழ் பரிகைக்கு நிலை ஆளாக என்னைக் கொள்வது என்று–அவனைக் கேட்கிறார்-
சர்வஞ்ஞன் -மடி பிடித்துக் கேட்க்கிறார் –

வண் பரிசாரத்து இருந்த -என்ற எழுந்தருளி இருக்கிற இருப்பு தனக்கு பரிய வேண்டி இருக்க–
அதி மானுஷ  செயல்களுக்கு –மங்களா சாசனம் செய்து நிற்க வேண்டாவோ -என்கிறார் மேல்-
இருந்த திருக் கோலம் -ஈரடிக்கு பாடினால் மூவடிக்கு -பாட வேண்டாவோ –இருந்தவனுக்கு பாடினால் நடந்தவனுக்கு பாட வேண்டாவோ

திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கரு மா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

நம்மிடத்தில் பரிவு கொள்ளுவதற்காக பிரமன் முதலானோர் இருக்க-நீர் இங்கன் அஞ்சுகிறது என் -என்ன
அவர்கள் உன் சௌகுமார்யத்தை அறிவார்களோ -என்கிறார்-

திருமால்-திருமால் என்று பிரித்து விளிக்கிறார்-நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களா சாசனம் செய்வார்களோ அவர்கள்-

ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரேமாந்தகனான அடியேனாலும் உனக்கு சத்ருசமாக பரிய ஒண்ணாதே

காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-

ஸுகுமார்யம் பாராமல் மதுரமான -உபகாரகனாய் வியாபாரித்து -என் போல்வாரை அங்கீ கரிக்க
திவ்ய மேனிகள் உடன் வந்து -என்ன பாசுரம் இட்டு சொல்ல முடியும் –

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

இவருடைய அச்சத்தைப் போக்குகைக்காக–
நம்மிடையே சனகன் முதலான முனிவர்கள் -முக்தர்கள் -நித்யஸூரிகள் –இவர்கள் கிட்டி நின்று அபிமத சாதனமாக இல்லாமல் அபிமதமாகவே பரிமாறுகிறார்கள் -தொழுகின்றார்கள்-
நாம் தான் அரிய செயல்களும் செய்ய வல்லோம்-ஆன பின்பு நீர் நம் பொருட்டு அஞ்ச வேண்டாம் காணும் -என்ன-
முன்பு அச்சங்களுக்கு காரணங்களாக இருந்தவை தாமே-அச்சம் நீங்குவதற்கு காரணமாக
அதனை நினைத்து இனியர் ஆகிறார்-முக்தர் கரை ஏறி -ஆப்நோதி என்பதின் தமிழ் ஆக்கம் –
இவர் தமக்கு இன்ன போது இன்னது அச்சத்துக்கு காரணமாம்-இன்ன போது இன்னது பரிகாரமாம் என்று தெரியாதே அன்றோ-

முன்பு தன் மிடுக்கைக் காட்டின இடங்களில் அதனை நினையாதே-அதனையே சொல்ல இப்போது
சமாதானத்தை அடைந்தவர் ஆயினர்-இது –
இப் பிரபந்தம் தலைக் கட்டக் கடவது ஆகையாலே யாதல்-
ஈஸ்வரனுடைய ஜீவன அதிர்ஷடத்தாலே யாதல்-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி கற்பவர்கள்-அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –
பயம் ஊட்ட வல்ல சம்சாரம் -என்றபடி –ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

உரையா வெந்நோய் –
சொல்லுதற்கு முடியாததாய் -மிகக் கொடியதான நோய்–
தம் அளவில் பொறுத்தல் அன்றிக்கே–உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின நோயே அன்றோ

தவிர அருள் நீண் முடியானை –கிரீடம் விபூதி பூர்த்தி -சக்தி பூர்த்தி-சர்வாதிக சேஷி
இது போகும்படிக்கு தகுதியாக திருவருள் புரியும் தன்மையனான-உபய விபூதி நாதனை –
இவர் அச்சம் போகும்படி -நீர் விரும்பிய காரித்தைச் செய்கிறோம் என்று தலையை-சிரக்கம்பனம் பண்ணினான் -துலுக்கினான் போலே காண் –
என்று அம்மங்கி அம்மாள் அருளிச் செய்வர்-
கிரீடம் தாழ்ந்தே –தொழுது எழும் நீண் முடி இவருக்கு — அவனுக்கு அருள் நீண் முடி

அன்றிக்கே-
இவ் ஆழ்வார் உடைய பயம் நீங்கிய பின் பாயிற்று உபய விபூதிக்கும்
இரட்ஷகனாய் சூடிய முடியும் நிலை நின்றதாயிற்று -என்ற படியுமாம்

வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் –
இவர் அச்சம் நீங்கின வாறே நிறைவு பெற்றதுமாய் நிலை உள்ளதுமாயிற்று திரு நகரியும்–

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading