ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -79-வேதனை வெண் பூரி நூலனை-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சீதளம் -குளிர்ந்த -பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளியதால் –அருமை பெருமைகளை வரிசைப்படுத்தி அருளிச் செய்கிறார்-சீதனையே தொழுவாரைக் கொண்டாடுகிறார்-மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-திருநாம வைபவம் சொல்லும் பதிகம்போற்ற தேவர்கள்-ஏச நான்உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8-சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – இங்கு

பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும் சிலரே -என்கிறார் –
தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷணர் ஆவர்கள் இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே
– – -79–தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீதம் முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனை யுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கி யநுபவிக்கப் பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வேதனை –புக்க இடமும் புறப்பட்ட இடமும் தாம் பட்டது படும் வேதத்தை நினைக்கிறார் –வெண் புரி நூலனை-மைவரை போல் பொலியுமுரு -என்று அவ் வடிவை இறே வேதங்களும் பிரதிபாதிக்கிறது –
அவ் வடிவுக்கு பரபாகமான திரு யஜ்ஜோபவீதத்தை உடையவனே–விண்ணோர் பரவ நின்ற நாதனை –
நித்ய ஸூரிகளும் அடைவு கெட்டு கிடந்தது கூப்பிடுவது-அவ் வடிவை இறே –ஞாலம் விழுங்கும்  அநாதனை--குறைவற்றார் சிலர் கொண்டாட இருந்தோம் என்று மேன்மை பார்த்து இராதே –
குறைவாளரான சம்சாரிகளை பிரளயம் நலியாதபடி வயிற்றிலே-எடுத்து வையா நின்றால் – நீ இது  செய்யக் கடவ இல்லை -என்று சிலரால் சொல்ல ஒண்ணாது-இருக்கிறவனை –ஞாலம் இத்யாதி –
புழுக் குறித்தது எழுத்தாமாப்  போலே –ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே – ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோம் என்று இவற்றின் உடைய ரக்ஷண சிந்தனை செய்து கிடக்கிற படி-உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி-இந்திரனுக்கு இழந்தத்தைக் கொடுத்து -(மஹா பலி -அம்ருத மதனம் இரண்டிலும் -) தான் பேர்ந்து கிடக்கிறபடி யாதல் தனது படுக்கையாக பாற்கடலையே கடைந்தான் அன்றோ-சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-இதுவே அவதாரிகையில் பார்த்தோம்-நிறுத்தி நிதானமாக அனுபவிக்க வேண்டும்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –
அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்–அநாதனை –ஆத்மேஸ்வரம் –என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –

நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –-இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட – அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி-வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப்
திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்
திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூகதம் சொல்லுமே-உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட
ஆழ்வார் நித்ய ஸூரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று –-நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது.-வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப்
பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனை யுடையனாகாதவனாய் உலகத்தை யளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயி யாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க் குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும் நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது.–நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது.-நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி,-‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால்
‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று.–ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை‘பாற்கடல் பாம்பணை மேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால் குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம்
தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.–‘வேதனை’ என்பதற்கு– வேதம் வல்லவன் என்றும், வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.-வெண்புரிநூல் = வெண்ணிறமான முப்புரிநூல் வைதிக புருஷனென்கைக்கு அடையாளமான சுத்த யஜ்ஞோவீதத்தையுடையவன் என்றவாறு. “வேதமுதல்வன் விளங்கு புரிநூலன் (8-4-2.) என்ற திருமொழியுங் காண்க. “ஞாலந்தத்தும் பாதன்” என்பதற்கு- ‘உலகத்தை யளந்த திருவடியையுடையவன்’ என்று பொருள் கொள்வதன்றியே, பூமிக்கு உற்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் என்றும் பொருள் கொள்வர்;-திருமாலின் திருவடியினின்று பூலோக முண்டாயிற்றென்று வேதங்கள் கூறும். சீலன் – அருளுடையானென்றபடி.–இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறு மில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம் பகவதநுபவத்திற்கு நேர்விரோதி யாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?-ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம்மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப் பெருமானையே மனமொழி மெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று. அப்படிப்பட்ட அநுபவம் தமக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்துகின்றமையும் இதில் தோன்றும்.

வேதனை-வேதங்களால் சொல்லப் படுமவனை-வெண் புரி நூலனை -வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை–விண்ணோர் பரவ நின்ற நாதனை-வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள் தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை-ஞாலம் விழுங்கும் அநாதனை-அத் தேவதைகளோடு அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை-ஞாலந்தத்தும் பாதனைப் அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்-ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால் ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை–சீதனையே-அந்நிய விமுகராய்க் கொண்டு (வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்-விண்ணுளாரிலும் சீரியரே – நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்–இவ்விடத்தில் சீதன் என்றது தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத் திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

தாத்பர்யம்-இதில் பகவத் அனுபவத்தில் தம்மைப் போல் நெஞ்சு தளராமல் திட ஸித்தராய் இருந்து அவனை அனுபவிக்கும் பாகவதரைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார்-கரிய மேனிக்கு பரபாகமாக -யஜ்ஜோபவீதம் கண்டு வேதமும் வைதிகரும் எப்பொழுதும் ஏத்தும் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸர்வேஸ்வரன் சிறியவருக்கு ஆபத்து வர மேன்மையை நினைத்து மதம் பிடித்து இல்லாமல்
திரு வயிற்றிலே வைத்து ரஷிப்பவன் இவ்வாறு செய்யாதே என்று நியமிக்க யாரும் மேம்பட்டவர் இல்லாதவனாய் இவ் விபூதியை ஒருகால் ரஷிக்கும் அளவு அன்றிக்கே திருவிக்ரமனாய் அளந்து
இன்னும் ரக்ஷண சிந்தை பண்ணும் ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே
ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

3-5-மொய்ம் மாம் பூம் பொழில் — பிரவேசம் –

‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியிலே, பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து, அதனால் வந்த ஹர்ஷப் பிரஹர்ஷத்தாலே களித்து அவ்வனுபவமில்லாதாரை நிந்தித்து, அவ்வனுபவமுடையாரைக் கொண்டாடிச் சொல்லுகிறது ‘மொய்ம்மாம்பூம்பொழில்’ என்ற இத்திருவாய் மொழி.
இவர் ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில், சரீர சம்பந்தத்தை அநுசந்தித்தும்,
மற்றைய விஷயங்களில் ஈடுபாட்டினை அநுசந்தித்தும் சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகில் அன்றோ,
இத்திருவாய்மொழியில் பகவானை அனுபவித்த அனுபவத்தாலே மகிழ்ச்சி கொண்டவரான இவருடைய மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது?
‘ஆயின், இவரும் பகவானை அனுபவம் பண்ணுகிறார்; நாமும் அவ்விஷயத்திலே கை வைக்கிறோம்;
இவருக்கு இங்ஙன் இருப்பான் என், நமக்கு இங்ஙன் இராதொழிவான் என்?’ என்னில்,
நாமாகிறோம் கண்டார்க்கு ஒளிக்க வேண்டுமவையாய், சாஸ்திரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நீக்குகின்றவையாய்,
முதல் தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலை நில்லாதவையாய், பின்னர் நரகத்திலே மூட்டிக் கேட்டினை
விளைக்கக்கூடியனவான மற்றைய விஷயங்களினுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியுமே ஆயிற்று அறிவது.
நெருப்பும் நெய்யும் பக்கம் -ஆண் பெண் -தஸ்மாத் நாரீச சம்சர்க்கம்
விஷத்தை விட விஷயாந்தரம் தாழ்ந்ததே -நினைத்தாலே விநாசம் –
ஞானவான்களையும் அழிக்கும்-மனம் சஞ்சலம் -பிரம்மா த்யானமே பண்ண வேண்டும் –
ராக -பய -குரோத மூன்றையும் வெல்ல வேண்டும் -பிடித்தது -நடக்காமல் போகுமே -பயம் -நடந்தால் கோபம் வருமே –

‘நன்று; ஆசையற்றவராய், சத்துவ குணத்தையுடைய பெரியோர்கட்குத் தலைவராய் இருக்கிற இவர்க்குச் சாஸ்திரங்கள்
‘கூடாதவை’ என்று விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் கூடினபடி எங்ஙனே?’ எனின்,
‘இவருடைய சோகமும் மகிழ்ச்சியும் சாஸ்திரங்களிலே விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் அல்ல;
சமஸ்த கல்யாணகுணாத்மகனான சர்வேசுவரனை அனுபவித்து அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியாயிற்று இவர்க்கு மகிழ்ச்சியாவது.
‘இப்படி வகுத்த சர்வேசுவரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’
என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது.
மேலும் ‘காமம் ஆகாது’ என்று விலக்கியிருக்கவும், ‘இடைவிடாது தியானம் செய்யத் தக்கவன்’ என்று கொண்டு
பகவத் காமத்தைச் சாஸ்திரங்கள் விதியா நின்றனவே அன்றோ?
சேம நல் வீடும் –சீரிய நல் காமமும் -கண்ணனுக்கே ஆமது காமம் -அத்தை கிட்ட இது வேண்டுமே –
இனி, முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே ‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற
இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-
களியாநிற்பர்கள் அன்றோ? ‘இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும்,
ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர்
முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகாநிற்பர்கள் அன்றோ?
விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து,
‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’
(விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க,
‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது,
‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும்
பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்க வொட்டாமல்,
வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று,
ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

வெற்றிலைச்சாறு சிறிது மிடற்றுக்குக் கீழே இழியப்பெற்ற ஒருவன், தன்னைத்தான் அறிகின்றிலன்; அங்ஙனம் இருக்க
உள் கலந்தார்க்கு ஓர் அமுதமாய், அமுதிலும் ஆற்ற இனியனாய், எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம்,’ என்று
தாமே முற்றூட்டாக இவ்வமுதத்தை உண்ட இவர்க்கு மகிழ்ச்சி உண்டாகச் சொல்ல வேண்டாவே அன்றோ? நிற்க.
இப்படிப்பட்ட பகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியின் மிகுதியினாலே முதலிலே-1- இதில் அறிவில்லாதாரையும்,
-2- அறிவுண்டாய்ப் புறம்பே கருத்தூன்றினவர்களாயிருப்பாரையும்,-3- சந்தி செய்தல் முதலிய ஒழுக்கங்களையே முக்கியமாகக் கொண்டவர்களாய்,
‘அநுஷ்டான காலங்களில் திருநாள் சேவிக்கலாகாது,’ என்று இருப்பாரையும், -4-அறிவு உண்டாகியே புறம்பே பரபரக்கற்று
‘அதற்கும் இதற்கும் வாசி என்?’ என்று சமானபுத்தி பண்ணி இருப்பாரையும், -5-தங்களை ஆஸ்திகராகப் புத்தி பண்ணி
அவ்வாஸ்திக்யத்துக்குப் ‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும்,6- இராஜச தாமசங்கட்கு ஒத்தனவான
அற்பப் பலன்களைக்கொண்டு போவாரையும், -7-அந்த அந்தப் பலன்களுக்காகத் தாமத தேவதைகளை அடைகின்றவர்களையும் எடுத்து,
அவர்களுக்குப் புறம்பே எல்லா நன்மைகளும் உளவேயானாலும், பகவானுடைய குணங்களை அநுசந்தித்தால் அவிக்ருதராகில்,
‘அவர்கள் அவஸ்துக்கள்’ என்று அவர்களை நிந்தித்து,
‘உயர்குடிப்பிறப்பு, உயர்ந்த தொழில், ஞானம் இவைகள் இல்லாதிருப்பினும், பகவானை அனுபவம் பண்ணி விக்ருதராமது உண்டாகில்,
அவர்களுக்கு நான் அடிமை’ என்று அவர்களைக் கொண்டாடிப் பிரீதராகிறார்.
ரத யாத்ரை – -தாரு ப்ரஹ்மம் -தள்ளு முள்ளு நடுவில் -பூரி -ஏழு நாளும் தொட்டு சேவிக்கலாம் -752 அடுப்புக்கள் -மடப்பள்ளி -2000 படி தளிகை –
ஸ்ரீ பத்ரி அலக நந்தாவில் குளித்து–ஸ்ரீ த்வாரகையில் பட்டு ஆடை உடுத்தி -ஸ்ரீ பூரியில் உண்டு – ஸ்ரீ ரெங்கம் வந்து
கண் வளர்ந்து அருளுவதே நித்ய கைங்கர்யம் என்பர் –
மத்யானம் -சந்த்யா வந்தனம் -கைங்கர்யம் -செய்யும் பொழுது கர்ம லோபம் -மூன்று கோடி ரிஷிகள் இவன் விட்ட கைங்கர்யம் செய்வார்களாம் –
விஷ்ணு பக்தி இல்லாதவனுக்கு ஜபம் தபஸ் போல்வன -பிணத்துக்கு அலங்காரம் பண்ணினது போலே -பிரமாணம்

அஞ்சாம் திருவாய் மொழியில் –கீழ்ச் சொன்ன பகவத் பிரகார தயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரசாதிசயத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டராய்
1-பிரதிசம்பந்தியான சேஷியினுடைய ஆபந் நிவாரகத்வத்தையும் –
2-அஸூரா நிராசன சாமர்த்யத்தையும்
3-ஆர்த்த சம்ரக்ஷணத்தையும்
4-அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அவதார ப்ரயோஜனத்தையும்
6-அதிசயித போக்யதையையும்
7-ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
8-அர்ச்சாவதார சவ்லப் யத்தையும்
9-உபய விபூதி நாதத்வத்தையும்
10-விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் —
அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகரஷத்தாலே சம்ப்ராந்த ராகாதாரை நிந்தித்தும்– உகந்து ஆடுவது பாடுவதாவாரை உகந்தும்–
இந்த சேஷத்வ சாரஸ்யத்தை உபபாதிக்கிறார்

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!
–3-5-1-

கலங்கிய மடுவின் கரைக்கு கலங்கா பெரு நகரின் இருந்து வந்தானே –அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற-இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார். ‘வல்லரக்கர் புக்கு அழுந்த –தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு இப் பொய்கையும் போலியாய் இருத்தலின், வர்ணிக்கிறார்,’தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத் தக்கதாய்
இருக்கிறதாதலின், வர்ணிக்கிறார் -அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார்.-முதலையின் செயலே யாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார்-கால் வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? –

பலம் இருக்கிறது என்ற எண்ணம் -யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது.
அன்றியே, ‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல்.‘யானைக்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று ‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான்-யானையின் காலில் விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ -பெரிய திருமொழி, 6-8-3.-அன்றோ? ‘விலங்கு’ என்றது, சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’ என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,-கண்ணன் – கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ –கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –யானையின் இடரைப் போக்கின போது வடிவிற் பிறந்த துடிப்பும் குணத்திற் பிறந்த துடிப்பும் இருக்கிறபடி.
வடிவழகை யனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று.எம்மானை –யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்;பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும் வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்த விடத்தில் இருக்க மாட்டாமல் விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச் செய்தார்.

தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர்-விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ் வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.-சதுஸ் சஹார பர்யந்த பூமியில் உள்ள நீங்கள் சொல்லி கோளே-இப்பூமியில் பிறந்தது பகவத் அனுபவத்துக்காக என்கை-ப்ரஹ்ம தேசத்தில் அப்பன் பிள்ளையோடு திருவாயமொழி கேட்ட போதை வார்த்தை நினைப்பது –

———

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.
–3-5-2-

‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ,-தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது?-ஆபத்துக்கு உள்ளே இருந்து சம்பத்து என்று நினைத்துக் கொண்டு இருப்பார்களுக்கும் வந்து ரஷித்தானே-என்று நீர்மையை நினைந்து விக்ருதர் ஆகாதார்

தண் கடல் வட்டத்துள்ளார் – ஏக தேச வாசித்வ பாந்தமே -ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது-தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் – சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஹேது -ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும்.மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’இறைவன், ரக்ஷிக்கைக்கு ‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார். ‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.

பண்கள் தலைக்கொள்ளப் பாடி –
1-‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று,
2- பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது,
3- ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. -அதிகமாக பாடி -ராக மாலிகையில் என்றுமாம் –
4-அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி.
5-அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம்.

———-

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே
.–3-5-3-

தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது-மஹிஷீ ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ என்று பார்த்து, ‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது? -ஆகாசம் வாசமாக கொண்ட இந்த்ரன் – நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய் இருக்கிற
இம்மலைக்கு அன்றோ இடுவது?’

வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ? அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.-அவன் செய்த தீங்கிற்குத் தோளைக் கழிக்க வேண்டியிருக்க, ‘பாவி பசிக் கோபத்தாலே செய்தானாகில் செய்வது என்? அசுரர்கள் பக்கல் செய்யுமதனை இவனோடு செய்ய ஒண்ணாது; தானே கையோய்ந்து போகிறான்!’ என்று, அவனால் வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழு நாள் ஒருபடிப்பட்ட மலையை எடுத்துக்கொண்டு நின்றானாயிற்று.
குன்று குடையாக எடுத்தான் குணம் போற்றி – ‘கல்லை எடுத்துக் கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில் ‘நீராலே வர்ஷித்தானாகில் கடலை எடுத்துக் காக்குமித்தனை காணும்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

ஆயர்களுடைய இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களே யன்றோ?-அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய், உதவிற்றும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘பிரானை’ என்கிறார்.நிலா, தென்றல், சந்தனம், தண்ணீர் போலே பிறர்பொருட்டாக ஆயிற்று வஸ்து இருப்பது.

‘அரியன செய்து பாதுகாப்பதற்குப் பண்ணும் செயலை விலக்காது ஒழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரம் இல்லை,’

என் தஞ்சனே! நஞ்சனே! வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகம்,’ என்கிறபடியே,
‘வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று ஏத்தாதார்.

அவன் தன்னை தங்களுக்காக ஒக்கினால்-அவனுக்காக தங்களை ஒக்காதார் அவஸ்துக்கள் என்கை-தடு குட்டம் -குணாலை கூத்து –

————-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?
–3-5-4-

கோகு கட்டுண்கை –ஆரவாரம் கொட்டுகை –கோகு கொட்டு என்றும்- பாடம் –

ஒப்பனை யழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி – உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான்-அடர்த்த – பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று.

செம்பவளம் திரள் வாயன் – விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி.
அன்றியே,
‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல்.
சிரீதரன் – இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை
அன்றி,-‘அவள் அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம்.-தந் திருஷ்ட்வா -மஹர்ஷீணாம் சுகாவஹம்-பபூவ –ஹ்ருஷ்டா-வைதேஹீ –பர்த்தாரம் –-பரிஷஸ்வஜே –இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ஸ்த்ரியம் புருஷம் விக்ரஹம் என்றவள் –‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’ என்றவளே யுத்தவடு உள்ள இடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். ’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ 

‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக் கொண்டிருக்கச் செய்தே, கிராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலே காண்’ என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்– கூரத்தாழ்வான் சிஷ்யர்.-அருளிச் செய்வர்.–பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம்-

——–

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?
–3-5-5-

பாகவத அபாசாரம் பொறாமையாலே இவன் அவதரித்து ஆனைத் தொழில்கள் -ஆஸ்ரிதர்களுக்காகவே திருவவதாரம் –என்பர் -நித்திய விபூதியில் உள்ளார் அனுபவிக்கிறபடியே -அனுபவிக்கிற பிரகாரமும்,-அனுபவிக்கிற திருமேனியும்.-லீலா விபூதியில் உள்ளாரும் அனுபவிக்கும்படியாக அவதரித்தான்-பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும்
திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது
-இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றே யன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே?
அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையே யன்றோ? இதற்குப் பிரமாணம் ‘அஜாயமாந:’ என்ற சுருதியே யன்றோ?

வேத முதல்வனைப் பாடி – வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல்.
‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது?
‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை.

‘துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’ என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’ என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது கருத்து.

ஈசுவரன் கை விட்டாலும் விடாத என் நெஞ்சிலும் அவர்களைஉபேக்ஷித்தேன் என்கிறார்

மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ் விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்;
இத்திருவாய்மொழியில், இவ்விபூதி தன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும்,
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளா நின்றார்;
‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில்,
இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி
,மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். ‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது?
முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷூக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

————-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.
–3-5-6-

கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.
‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்

’தனியன் –இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த ஒலியலோடே-கட்டின வஸ்த்ரத்துடன் – ஆயிற்றுப் போவது.
‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும்‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையே யன்றோ? -அவர் பட்ட பிரயத்னத்துக்கு இது நாலிரண்டு போலே என்றவாறே –
‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின்,
‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ?

பிறப்பிலி தன்னை – இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும்,நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகை யன்றி,இவர்களுக்கு ஒன்றுஞ் செய்யப்பெற்றிலோம்’ என்று,பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன்.
தடங்கடல் சேர்ந்த பிரானை –இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி.
திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ?‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள். இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது?
கனியை –
கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல்
அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்;-எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்;
அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.

கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை– கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும்,
எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை.
கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்
என்கோ!’ 
என்று தொடங்கி அனுபவித்த இனிமை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் – பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்;முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே ஒழிகையாவது, கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள் 

முழுது உணர் நீர்மையினாரே –1- ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம்-‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்:
2-ஞான பலமான இது -ஏத்திக் குனிப்பது-உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லை யன்றே?

———–

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!
–3-5-7-

அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம் தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது.பரஞ்சுடரை –‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின
திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.-ஆதி யம் சோதி உரு -ஏஷ நாராயண ஷீராப்தி நாதனே இவன்-

நினைந்து ஆடி –அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங் குணத்தை அநுசந்தித்து,
ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கி யன்றோ வைப்பது?

அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி – பழையாறை – நாதன்கோயில் – நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும், பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து அரசாண்டனர். இராஜா – கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த சோழ அரசன்.-கிருமி கண்ட சோழன் –
ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண
இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.

ஸ்ரீ வைஷ்ணவன் -அநாதி இல்லையே ச நாதன் அன்றோ -ஜென்மத்துக்கு பிரயோஜனம் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உறுப்பாக-கூரத் ஆழ்வான்-மாருதி ஆண்டான் மூலம் அனுப்பி அருளிச் செய்த ஸ்லோகம்
அஷ்டகாக அஷ்ட அத்யாயி -வையாகரனிகள் -தீ விஷய -அஸ்தி -நாஸ்தி -திஷ்டன் -மனுஷ்யாணாம் –
ஆஸ்திகன் -நாஸ்திகன் -திஷ்டன் -பூர்வம் -மத்யம் -பச்சிம -யதீஸ்வரன் -துரந்தவன்-பின்னால் உள்ள -பூர்வம் பிரதமம் –
கிருமி கண்ட சோழன் நாஸ்திகன் –
உன் சேவை எப்படி கிடைக்குமோ -என்று கேட்பது போலே
ஆந்தர அபிப்ராயம் -மத்யம நமஸ் – -பெருமானுக்கு கிங்கரன்
பகவத் பக்தன் -பாகவத பக்தன் -பிரணவம் -பாகவத சம்பந்தம் தெளிந்த பின்பு தானே நாராயண கைங்கர்யம் சித்திக்கும் -என்றவாறு
அஷ்டாஷர-தீ விஷய -ஸ்வரூப -உபாய -புருஷார்த்த -ஞானம் -த்ரிவித நிஷ்டன் -மத்யமபத ஏக தேச -ஷட்யந்தமான மகார வாஸ்ய உபாய விரோதி –
பூர்வம் மாம்-ஸ்வரூப நிஷ்ட மாம் -அடியேனை -கிழக்கு தேசத்தில் உள்ளவர் -பிரணவம் நிஷ்டர் -இரண்டும்-மன் நாசாயா முயற்சிக்கிறது -இங்கு அர்த்தம் –
ஹே பச்சிம -ஹே கைகர்யா நிஷ்டர் -மேலேதேசத்தில் உள்ள பாஷ்யகாரர் -என்றுமாம் –
திருதிய பத -நாராயணாய -கைங்கர்யம் பண்ணி ஆனந்தப்பிபது புருஷார்த்த விரோதி -நலிகிறது-பாகவத ஆச்சார்ய கைங்கர்ய அலாபத்தால் ஞானமே வியர்த்தம்
போக்கி கொடுத்து அருளும் -என்கிறார் -திரு உள்ளம் உகந்தார் –

உத்தமர்கட்கு என் செய்வாரே –பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்
கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.

———–

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே
.–3-5-8-

‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்?
நித்தியஸூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.

பேர் பல சொல்லிப் பிதற்றி – அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, தாம் ‘ஒழிவில் காலத்’திலும், ‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார்-

ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’ என்பன, ஸ்வரூப வாசகம்; ‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது, ரூப வாசகம்; ‘புகழும் நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.

‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா, ‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே’ என்பதாகா நின்றார்;

வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.இராவணன் ‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?
மிளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல,‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன,
‘அது என்? வேதபரீக்ஷை வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில்
அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்சொல்ல வொண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலே காண்,’ என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால்
‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.

———

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .
–3-5-9-

சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் மக்கள் ஆகார்,’கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப் பண்ணி, சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம்.-யாத்ருச தாத்ருச -நின்ற நின்ற நிலையிலே வாரும் -பக்தியிலே குறைந்தார்களும் மிக்கார்களும் -என்றவாறு –
அமர நினைந்து எழுந்து அலற்றுவதே கருமம் – வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ் வனுசந்தானத்தாலே வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க காரியம்.-பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ் பன்ன பக்திக ப்ரவ்ருத்தியை அநு விதானம் பண்ணுகை பிராப்தம் -என்று கருத்து –

————

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே
.-3-5-10-

ஒருமை மனத்தினுள் வைத்து – ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து.-இதனால், மேற் பாசுரத்திலே பிரயோஜநாந்தர பரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ?
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின்– இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி,
‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் விக்ருதராய் -நமக்குப் போருமோ? ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும், இவற்றை அடையப் பொகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.

———

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.
–3-5-11-

பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;-அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –அருவினை நீறு செய்யும் –பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading