ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
மூன்று பாசுரங்களில் திருத்துழாய்-(76-77-78) உலகு அளந்த திரிவிக்ரமன் சாத்திய இலங்கை அளித்த பெருமாள் சாத்திய பாணாசூரனை முடித்த கண்ணன் சாத்திய-அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி-சென்று அங்கு தென் இலங்கை செற்றான் திறல் போற்றி -பொன்றச் சகடம் உதைத்தான் கழல் போற்றி -அங்கும் இதே வரிசை-துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-இதன் விவரணம் -திருமோகூர் ஆத்தன்–சிறப்பான உருவக அணி-ஸூர்யன் அரசன்
ஸூர்யன் கிரணம் செங்கோல்-அஸ்தமனம் அரசன் இறந்து போக -மேற்குத் திக்கு அமர்க்களம் -செக்கர் வானம் சிவந்து ரத்தம் பட்டு –-மாலைப்பொழுது மனைவி-சந்திரன் குழந்தை-கடலோசை யாதல் -பறவை சப்தம் அழுகை –
அவதாரிகை-சந்த்யையில் நோவு படுகிறாள் ஒரு தலை மகள் வார்த்தையாய் இருக்கிறது –தலைவி மாலைப் பொழுது கண்டு வருந்துதல் –
இப்படி ஆர்த்தரான இவர் தமக்கு அனுபவ யோக்ய காலம் சந்நிஹிதமாய்க் கொண்டு போக்ய விஷயத்தை ஸ்மரிப்பித்து பாதகமான பிரகாரத்தை மாலைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இதுக்கு மேல் மாலை வந்து தோன்றி நலிய அம் மாலைக்கு ஆற்றாத் தலைமகளாய் நலிவு படுகிறாள் இதில்
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய
செங்கோள்மையை யுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
எள்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது தேவாதி தேவனான தலைவனது-சக்ரவர்த்தி திருமகன்
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்களை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது-
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில் கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும் திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு-நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல் தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய் ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்–பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும் எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய-ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-
திங்களம் பிள்ளை –சந்தரன் ஆகிய அழகிய பிள்ளை –மகாதா தபஸா -என்கிறபடியே வருந்திப் பெற்ற பிள்ளை இறே –புலம்ப –வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே-கடலோசை யாதல் –-அக் காலத்தில் பஷிகளுடைய ஆரவாரம் ஆதல் இறே யதாவது–தன் செங்கோல் இத்யாதி – தன்னுடைய ஆஜ்ஜா பிரதானனான ராஜாவானவன் –சந்த்யா காலத்துக்கு ராஜாவான ஸூர்யன் -ராஜாவானவன் –பட்ட யுத்த பூமியை பற்றி நின்று ஈடுபடுகிற புல்லிய மாலை – உதிர வெள்ளத்திலே சிவந்த யுத்த பூமி போலே இருக்கும் இறே -அப்போதைக்கு ஒப்பு –ராவணன் பட்ட களத்திலே மண்டோதரி கூப்பிட்டாப் போலேயும்-வாலி பட்ட களத்திலே -தாரை அங்கத பெருமாளையும் கொண்டு கூப்பிட்டாப் போலேயும் ஆயிற்று-
இவ் வாதித்யனை இழந்த சந்த்யையும் அப் பிரதேசத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிற படி –இத்தால்
வாயும் திரை யுகிளில் படியே – கண்டது அடங்க தம்மோடு சம துக்கிகளாய் தோற்றுகிறபடி – பகல் கண்டேன் ( பூதத்தாழ்வார் )-என்கிற ஆதித்யனை இழந்து இறே இவள் நோவு படுகிறது –தென் பால் இத்யாதி –ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியான தெற்குத் திக்கில் அறிவுடையார் நடை யாடாத
இலங்கையை வெவ்விய களமாம் படி பண்ணி – இலங்கை ஒள் எரி மண்டி உண்ண (பெரிய திருமொழி -10 )-என்னக் கடவது இறே –நம் விண்ணோர் பிரானார் – ராவண வத அனந்தரமாக –பவான் நாராயணோ தேவ -என்று ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற உபகாரகர் ஆனவர் –துழாய் துணையா –அவர் தோளில் மாலையைப் பெற வேணும்-என்ற ஆசைப்பட்ட இதுவே பரிகரமாகக் கொண்டு –நங்களை இத்யாதி –தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே – நம்மை நலிகைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே –நங்களை மாமை கொள்வான் – நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ – தன் இழவுக்கு கூப்பீடும் கிடக்கச் செய்தே – பண்டே குறை பட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்கு பாரிக்கிற பாரிப்பாய் இருந்ததீ –
மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும் சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும் சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும்
அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு
கணவனை பிரிந்தவளுக்கு பார்த்த பொருள்கள் எல்லாம் தம்மைப் போலே கணவனை இழந்ததாகவே கருதுவாளே-இப்படி கண்டார் இரங்கத் தக்க நிலைமையை அடைந்த மாலைப் பொழுது ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத் துழாயை துணையாகக் கொண்டு நாயகியை வருத்துதலை
தனது மக்கள் தனிமைப்பட தன் கணவனை இழந்து வருந்திய தாடகை அகஸ்திய சாபத்தை உதவியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல் போலே கொள்க–மாலைப் பொழுதில் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும் -அக்காலத்தில் பறவைகள் கடல் ஓசையை அழுகை குரலாகவும் தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –பிராட்டிக்கு உதவியவர் -விண்ணோர்களுக்கு உதவியவர் எமக்கு கொடுமை தீர்த்திலரே –துழாய் துணையா-மாலைப் பொழுதும் தம்மைப் போலவே திருத் துழாய் துணையாக பெற வில்லையே என்று வருந்துவதாக ஆழ்வார் திரு உள்ளம் அவன் போக்யத்தை தம்மை நினைப்பூட்டி வருந்துவதை இத்தால் ஆழ்வார் அறிவிக்கிறார்-திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட-செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை--தமக்கு உண்டான ஞான பிரகாசமும் துயர் அடையும் படி விவேகமும் குலைந்து-பக்தியே விஞ்சி ஆற்றாமையே விளைக்கும் கொடிய காலம்-தென் பாலிலங்கை-வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா--துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன சீலரான-எம்பெருமானது போக்யதையை நினைப்பூட்டிக் கொண்டு – நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -எமது ஸ்வரூபத்தை மாற்றும் படி வருத்துகிறது –மாலைப்பொழுதுக்கு ஆற்றாத நாயகி இரங்கி யுரைக்கும் பாசுரம் இது.-கீழ் “பால்வாய்ப் பிறைப்பிள்ளை” என்ற முப்பத்தைந்தாம் பாட்டின் முன்னடிகளை இப்பாட்டின் முன்னடிகட்கு ஸ்மரிப்பது.-இதில் மாலைப்பொழுதை ஒரு மகளாகவும், ஸூர்யனை அவளது கணவனாகவும், சந்திரனை அவர்களது பிள்ளையாகவும் ஸுர்யனது சிவந்த கிரணங்களை அவனது செங்கோலாகவும், அந்த ஸூர்யன் அஸ்தமிப்பதை அக்கணவன் இறந்து போவதாகவும், அவன் அஸ்தமிக்கின்ற திக்கினிடத்தை அவனிறந் விழுந்தொழிந்த போர்க்கலமாகவும்,
ஸூர்யாஸ்தமாக காலத்து மேற்குத் திக்கில் அவன் கிரணஸம்பந்தத்தால் தோன்றுகிற செவ்வானத்தை அவன் போரில் பட்டு இறக்கும்போது-அவனது ரத்தம் தெரித்த இடமாகவும் உருவகப்படுத்தியவாறு.-கணவனைப் பிரிந்த இவளுக்கு, கண்ணிற்காணும் பொருளெல்லாம் கணவனை யிழந்ததாகத் தோன்றுதலால் இக்கற்பனை கூறினானென்க.-இப்படி கண்டாரிரங்கத்தக்க நிலைமையை யடைந்த மாலைப்பொழுது, ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத்துழாயைத் துணையாகக் கொண்டு நாயகியை வருத்துதலை, தனது மக்கள் தனிமைப்படத்தன் கணவனை யிழந்து வருந்திய தடாகை
அகஸ்திய சாபத்தை உதியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல் போலக் கொள்க.-புலம்ப’ என்பதற்கு-தனிப்பட்ட என்றும், வாட என்றும், அழ என்றும், உரையிடலாம்.-புலம்புதலென்பதும தனித்தலென்னும் பொருளதாதலை ‘புலம்பே தனிமை’ (தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- உயிர்ச்சொல்லியல்-33.) என்பதனால் அறிக.-மாலைப்பொழுதிற் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும், அக்காலத்தில் பறவைகள் மிகுதியாக ஒலித்தலையாவது
கடலொலியையாவது அழுகைக் குரலாகவும் கருதுக. இலங்கை வேங்களஞ்செய்த = எல்கையிலள்ள ராக்ஷஸர்களை வேரறும்படி போர் செய்தழித்த என்றபடி. ‘வெங்களஞ்செய்தல்- ச்மசாநமாக்குதல்’ என்றுமுரைப்பர். ‘ஒரு பிராட்டியைப் பிரிந்திருக்கமாட்டாமல் தாம் பெரு முயற்சி செய்து
கடல்கடந்த கொடும் பகை யொழித்துக் கூடியருளியவர், இப்பொழுது எம்மை இங்ஙனம் உபேக்ஷப்பதே!’ என்ற இறக்கந்தோன்ற-தென்பாலிலங்கை வெங்கனஞ் செய்த நம் விண்ணோர் பிரானார்’ என்றது. தேவர்களுக்குக் கொடுமை தீர்த்தவர் எமக்குக் கொடுமை நீர்த்திலரே என்று குறிப்பிட வேண்டி, ‘விண்ணோர் பிரானார்’ என்றது.-துழாய் துணையா = மாலைப் பொழுதுக்குத் திருத்துழாய் துணையானதாகச் சொல்ல தன் கருத்து,-திருத்துழாய் நமக்குக் கிடையாததாய்க் கொண்டு நம்மை எப்படி வருத்துகின்றதோ அப்படியே இந்த மாலைப்பொழுது வந்து வருத்துகின்றது என்பதாம். நங்களை- நங்களது உருபு மயக்கம்.–இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிப்பதற்கு உரிய காலம் ஸமீபித்து அவனது போக்யதையை நினைப்பூட்டித் தம்மை வருந்தும் விதத்தை ஆழ்வார் அருளிச் செய்தலாம். (திங்களம்பிள்ளை + எள்குபுன்மாலை) தமக்கு உண்டான ஜ்ஞாநப்ரகாசம் துயரமடையும்படி செவ்விதான மஹா விவேகமுங் குலைந்து பக்தியே விஞ்சி ஆற்றாமை விளைக்கிற கொடிய இக்காலமானது (தென்பால் + துழாய் து¬ணா) துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சீலரான எம்பெருமானது யோக்யதையை நினைப்பூட்டிக் கொண்டு. (நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே) எமது ஸ்வரூபத்தை மாற்றும்படி வருத்துகிறது என்கை.
திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை-சந்த்ரனாகிற அழகிய பிள்ளை தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்பிற்று என்னும் படியாக
சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே
சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது–தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்-இப்படி இழந்து கிலேசிக்க வேண்டாதபடி தெற்குத் திக்கு இடத்திலேயான லங்கையிலே சத்ருக்களை ச புத்ர பவ்த்ர பாந்தவமாம் படி கொன்று கொடிய களத்தைப் பண்ணின வெற்றியாலே ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களுக்குக் குடி இருப்புக் கொடுத்த மஹா உபகாரத்தாலே
பெண் பிறந்த நமக்கு விஸ்வஸித்துப் பற்றலாம் படியானவருடைய–துழாய் துணையா-வெற்றி மாலையான திருத்துழாய் நமக்கு ஸ்மரிப்பிக்கிற முகத்தாலே நலிகைக்குத் துணையாகக் கொண்டு-நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – நம்முடைய மாமை நிறத்தை அபஹரித்துக் கொள்ளுவதாக வந்து தோன்றி தன் தைன்ய பிரகாரத்தாலே நலியா நின்றது என்று ஆற்றாது உரைத்தாள் ஆயிற்று –இத்தால் தமக்கு உண்டான ஞான ப்ரகாஸமும் (திங்கள் அம் பிள்ளை )ப்ரலாப பர்யவசாயியாம் படி அநுராக உத்தரமான மஹா விவேகமும் (ஸூர்யன் )குலைந்து
அநுபாவ்ய விஷயமான ராகம் விஞ்சும்படியான அவஸ்தா விசேஷமானது அநந்யார்ஹர் ஆனவருக்கு அதிசயித விரோதிகளை அழித்துக் கொடுக்கும்-சர்வாதிகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக போக்யதா ஸஹ சரிதமாய்க் கொண்டு நம்முடைய ஸ்வரூப விபர் யாசத்தைப் பிறப்பித்து ஈடுபடுத்தா நின்றது என்று தம்முடைய ஆர்த்தியை அருளிச் செய்தார் ஆயிற்று
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்-திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை-மாலைக்கு அரசு ஆதித்யன் சாயம் ஸந்த்யையிலே திங்களாகிற இளம் பிள்ளை தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தால் கோஷிக்கவே தனக்கு அரசாய்ச் சிவந்த கிரண தண்டங்களை ப்ரவர்த்திப்பித்த ஆதித்யன் ஹதன் -என்னும்படி அஸ்தமித்த இடமான
செங்களம் -ரக்தமயமான களம் -யுத்த பூமி அதிலே தான் நின்று எள்கு -துக்கத்தால் ஈடுபடுகிறது கண்டு-புன்மாலை புன்னிய -ஏழைத்தனம் பெற்று மாலை -ஸந்த்யையானது வந்து தோன்றி நலிகின்றது என்று அந்வயம்–அது தனக்குத் துணை கூட்டிக் கொண்டு நலிகிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்-தெற்கில் உள்ள லங்கா த்வார அங்க கணத்தை வெவ்விய போர்க்களமாக்கி தன் விரோதிகளை நிரசித்த நம் ஸ்வாமியாய் இந்த்ராதிகளான விண்ணோர்க்குக் குடி இருப்பைத் தந்து உபகரித்தவனுடைய துழாய் மாலையை அவனால் வரப் பெற ஆசைப்பட்டாள் என்பதே தனக்குத் துணையாகக் கொண்டு நல் நிறத்தை அபஹரிப்பதாய் வந்து நமக்கு எதிர்ப்பட்டு நம்மை நலியா நின்றது-வந்து தோன்றி நலிகின்றதே-புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர் திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று ஆயிற்று-தன் சைதன்ய பிரகாச நத்தாலே நலிகிறது என்பாரும் உண்டு –
ஸ்வாபதேசம்-கீழ் திரு உலகு அளந்து அருளின போது இட்ட மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு பெறாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று –இதில் ராவண வத அநந்தரம்-இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு வந்து கிடையாமையாலே- நோவு பட்ட படி சொல்லுகிறது –
தாத்பர்யம்-இதில் மாலைக்கு அஞ்சி நைந்து போன நாயகி பாசுரம்-புத்தி ஹீனரான அரக்கர் வாழும் இலங்கைக்குச் சென்று அவர்களை வென்று கூறாக்கி ஸ்மாசனம் -சுடுகாடு போல் அழித்து நின்ற
மஹிமையைக் கண்டு ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ணும் சக்ரவர்த்தி திருமகன் சாத்தி அருளும் திருத் துழாயை ஆசைப்பட்டு கிடையாமல் நலிய அப்பொழுது மாலை பொழுது செக்கர் வானம்
வாலியைக் கண்டு தாரை அங்கத பிள்ளையைக் கூட்டி புலம்பினது போல் புலம்பி என்னை நலிகிறதே
10-1-தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்-ப்ரவேஸம்-
முதல் பத்தால் -பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட-பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு-திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை-அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –
–பக்தி பாரவஸ்யத்தையால் -அர்ச்சையிலே சரணா கதி பண்ணி
திருக் கண்ண புரம் பெருமாள் வார்த்தை அருளி –
திரு மோகூர் –ஆப்தன் வழித்துணை -யாய் இருப்போம் –
திரு வனந்த புரத்தில் -கூட்டிச் சென்று உமக்கு – சாம்யம் காட்டுவோம் –
திரு வாட்டாற்றில் ஆதி கேசவ பெருமாள் -எம் விதி வகை யே -கச்ச லோக -பெருமாள் சொன்னால் போலே –ஆணை இடுவோம் –
திருப் பேர் நகரில் -அப்பால ரெங்கன் ஸ்வாமித்வம் நாம் என்று ஏற்போம் –
திருமால் இரும் சோலை மலையிலே சரீர ஆதார அதிசயம் காட்டுவோம் –
மேலே ஸ்ரீ வைகுந்தம் கூட்டிப் போவோம் –
ஈரரசு ஆகாமல் -அது நமது விதி வகையே –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயை -ஆழ்வார் களுக்கும் அவனுக்கும் -நாலு ஆறும் – உபதேசித்து –
பத்தாம் பத்தால் -ஆர்த்தி ஹரத்வம் காட்டி -அருளுகிறார் –
அவா -கடல் -குளப்படி போலே -தான் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு இத்தால் புகர் பெற்றான் –
அர்ச்சிராதிகதி நேராகக் கண்டு -அவன் காட்டக் கண்டு -அனுபவித்து அருளிச் செய்கிறார் –
பத்தாம் பத்தில் -கீழ்ப் பத்திலே சர்வேஸ்வரனுடைய பல ரூபத்வத்தை நிரூபித்து அருளி –
தத் அனுபவ ரூபமான பலத்தினுடைய அவாப்தி பிரகாரத்தை இப்பத்திலே நிரூபித்து அருளுவதாகக் கொண்டு –
ஆப்தனான அவனுடைய அதி சாஹாய்யத்தையும்
முன்பு யுண்டான நிரவதிக கிலேச சாந்தியைப் பண்ணும் போக்ய நாமாதி யோகத்தையும்
சம்ஸ் லிஷ்டனாய் இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ சங்கை பண்ணி கிலேசிக்கும் படியான சாரஸ்ய அதிசயத்தையும்
அநந்ய ஸாதனரோ பாதி உபாசகர்களுக்கும் ப்ராப்யனாம் ஆகாரத்தையும்
ச பிரகார உபாஸன பரர்க்கும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளுக்குத் தானே நிர்வாஹகன் என்னும் இடத்தையும்
ததீய சேஷத்வ பர்யந்தமாக தன்னை ஆஸ்ரயித்தாருடைய சித்த அநுவிதானம் பண்ணிக் கொண்டு பல பிரதானத்திலே அபி யுக்தனாம் படியும்
தன் பக்கல் ப்ரவணரானாருடைய சரீராதிகளையும் தான் விரும்பா நின்று கொண்டு அவர்கள் அபேக்ஷைக்காக அவற்றை விடுவிக்கும் படியையும்
யாத்ருச்சிகமான ஆனுகூல்யமே பற்றாசாக யதாவத் போக ப்ரதானாகையும்
போக ஸித்திக்கு உறுப்பான அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிந ஸத்கார பிரதர்சனகத்தையும்
அதிசயிதையான பயபக்தி ரூபமான அபி நிவேசத்தை யுடைய தமக்கு
ஸ்ரீ யபதியான தன்னோடு உண்டான ஸ்த்திர சாயுஜ்ய ப்ரகாசத்தைப் பண்ணின படியையும்
அபரோக்ஷித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் அவாப்த பலராய் முடித்து அருளுகிறார் –
முதல் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்ய பிரதி சம்பதித்வம் ஒரு தேச விசேஷத்திலே பூரணமாய் இருக்கையாலே –
இந்த தேசத்தில் நின்றும் அங்கு ஏறப் போகைக்கு பாதகமான நம்முடைய விரோதியைக் கழித்து உகப்போடே
வழி நடத்திக் கொண்டு போவான் ஒரு ஸஹாய பூதன் வேணும் என்று அறுதியிட்டு திருமோகூரிலே ஸந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய
நிரவதிக போக்யமான யுதார ரூபதையையும்
நித்ய அனுபாவ்யத்வ யுக்தமான திரு நாம பூர்த்தியையும்
நிகில ஜகத் ரக்ஷகத்வத்தையும்
ரக்ஷண அர்த்தமான அநந்த ஸாயித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அனுபவ ப்ரீதி கரமான ஆப்தத்வத்தையும்
அகில லோக ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
அவதார ப்ரயுக்த சீல சீதலத்வத்தையும்
திவ்ய அவயவ வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அபீஷ்ட திவ்ய விக்ரஹ பரிக்ரஹத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான ஸர்வேஸ்வரனே நமக்கு வழித் துணையாவான் என்று
ஸ்ரீ காளமேகத்தின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி அருளுகிறார் –
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-
பகைவர்களை அழிக்கும் தன்மையனான-காள மேகம் அல்லது துணை இல்லை –என்று அவனைப் பற்றுகிறார் –பிரதி கூல நிரசன ஸ்வ பாவன் நிரதிசய போக்யன் -தவிர நமக்கு சகாயம் வேறு கதி இல்லை
நாளும் மேவி–இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி நன்கமர்ந்து நின்று –இவ் ஊரில் வசித்தலை ஒழிய-வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே-இது தானே பிரயோஜனமாய் நின்று –
———–
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே--10-1-2-
இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உய்வு பெறுவதற்கு காரணமான திருப் பெயர்களையும் உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்- வேறு புகல் உடையோம் அல்லோம் –என்கிறார்
அவனடி நிழல் தடம் அன்றி யாமே –அவனுடைய திருவடி நிழல் ஆகிற பொய்கையை ஒழிய-நாம் வேறு ஒரு கதியை உடையோம் அல்லோம் –
———
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-
அகில ஜகத் ரக்ஷண-ஸ்வ பாவம்-மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற இறைவன்-எழுந்து அருளி இருக்கின்ற திரு மோகூரை நம்முடைய எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம்-என்கிறார் –நமது இடர் கெடவே ––ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட – பிரமன் சிவன் இவர்களோடு கூட தேவ சாதி முழுவதும் வந்து அடைய- அநந்ய பிரயோஜனர்களைப் போலே-தங்கள் பிரயோஜனம் கை புகுரும் அளவும்–நின்று-அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி--தப்பாக பாடினாலும் பொறுப்பார் -கண்ணன் கழலிணை –நாரணமே -எப்படி சொன்னாலும் பலம் -அதே போலே-வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர் –
அவர்களுடைய பகைவர்களை வென்று-அவர்களுக்கு இடமான மூன்று உலகங்களையும் காப்பாற்றி-அதுவே யாத்திரையாக-தொழிலாக இருக்குமவன் வந்து வசிக்கிற நகரம் ஆயிற்று —
——-
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-
சுடர் கொள் சோதியைத் –ஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று-பேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை
அன்றிக்கே-மிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்-அவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக உள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –
தேவரும் முனிவரும் தொடர –-தேவர்களும் இருடிகளும்-ஈச்வரோஹம் -என்று இருப்பாரும்
செல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –சாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களும்-என்றுமாம்
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –வேறு பிரயோஜனங்களை கருதாதவர்களை-அநந்ய பிரயோஜனரை-அடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –பிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்-
தன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்-ஆதலின் –படர் கொள் பாம்பு -என்கிறார் –தன்னுடைய சேர்க்கையாலே-சர்வஞ்ஞனானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரைக்கு இடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் –பள்ளி கொள்வான் -என்கிறார்-
————–
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவன் -த்ரிவிக்ரமன் வர்த்திக்கும் –கொண்ட கோயிலை –
திரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்-திரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்-
நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –-தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்-மூன்று விதக் காரணமும்-தானே யானவன்-தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர-நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும் சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற-பிரமாண சித்தியைப் பற்றி –நம் -என்கிறார்
அன்றிக்கே தம் வடிவு அழகினையும்-தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –
இங்கு ஆடுதும் கூத்தே –அங்கு சென்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம்
————
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-ஆத்தன்-சப்த பிரயோகம் -நடு பாசுரம்-ஆப்ததமன் -ஆஸ்ரிதர் விசுவாசம் உடன் பற்ற
தாமரை யடி யன்றி –நம்பத் தகாதவனாய் இருப்பினும்-விட ஒண்ணாத தாயிற்று திருவடிகளின் இனிமை –மற்று இலம் அரணே –பாது காப்பவர்களாக வேறு சிலரை உடையோம் அல்லோம் —தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே-இனிமை இல்லை யாகிலும்-விட ஒண்ணாதபடி-புறம்பு புகல் இல்லை -என்கிறார் -என்றபடி –
குண க்ருத தாஸ்யம் மட்டும் இல்லாமல் –ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் உண்டே -அநசூயை சீதை பிராட்டி சம்வாதம் —
———-
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-
நம்மை பாது காத்தல் தனக்கே உரியதாய்-அகில ஜகத் ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரன் –அப ஏவ -பெரிய நீர் படைத்து -வர்த்திக்கும் -அனுகூல வ்ருத்திகளை பண்ண-சுற்றி நாம் வலம் செய்ய– நம் துக்கம் -வழித் துணை இல்லை என்கிற நம் துன்பம் சடக்கென போம் –
——–
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-குணங்கள் ரத்னம் மாணிக்கம் முத்து -இத்தை அன்றோ சக்கரவர்த்தி பெற்றான் –திரு மோகூரிலே நின்று அருளினவனான-ஆண் பிள்ளையான-சக்கரவர்த்தி திருமகனை அடைய-நம்முடைய துக்கம் எல்லாம் போம்-வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –புண்டரீகத் தடாகம் நின்ற சேவை தானே நம்பெருமாள் –
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர்-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு (மேக நாத ஹரி -இந்திர ஜித் வென்ற லஷ்மணன்)-என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் –
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30–என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே –பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ
————–
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-
நமக்கு அரணான திரு மோகூரை நாம் அடையப் பெற்றோம்-என்று தம் லாபத்தை பேசுகிறார்-
மலர்க் கண்கள் –அத் தடாகம் பூத்தால் போல் ஆயிற்று திருக் கண்கள் இருப்பன-மூன்று காலம் -மலர் கண் வைத்த -தன்னடியார் பாசுரம் –முன்பு மலர்ந்த -இன்று மலரும் -நாளையும் மலர இருக்கும்-இங்கே மலர்க் கண்கள் -மலர்ந்த திருக் கண்கள்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்-அவன் வழித் துணையாகப் போம் போது
சிரமத்தை போக்கக் கூடிய வடிவும்-தன் உகப்பு தோற்றின புன் முறுவலும்- கடைக் கண் நோக்கம்-முதலானவைகளையும் உடையவனாய்- ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமாறு போலே-அச்சம் கெட்டுப்போம்படி ஆயிற்று-தோள் நிழலிலே ஒதுங்கினால் இருக்கும்படி
உறை பொழில் திரு மோகூர் –சிங்கம் வசிக்கும் முழைஞ்சு என்னுமா போலே –
———–
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-10-1-10-
மூ வேழ் உலகும்-உலகினுள் -எல்லாவற்றையும் காக்கின்ற இறைவன் வசிக்கின்ற திரு மோகூரை-நமர்காள் ஆதரித்து-நினைந்து- ஏத்துங்கோள்-திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–நம்முடையவர்களே–மூன்று கிரியா பதங்கள்- திருமோகூர் நவின்று-ஊரின் பெயரைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி -வாக் வியாபாரங்கள் –எண்ணுமின் -மநோ வியாபாரம்-பயிலுதல் -நினைந்து -மேலும் ப்ரீதி பிரேரிராய் ஏத்துமின்—
————
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் – ஆழ்வார் உடைய குற்றேவல்கள் என்றது-அவன் குடக் கூத்தினை நினைத்து-இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே மூண்டார் -என்றபடி –
இவை-ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – இப் பத்தினை கற்க வல்லார்க்கு-உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே-வழித் துணை இல்லை என்று-வருந்த வேண்டாதபடி-காளமேகம் வழித் துணையாம்-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply