ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இருளும் -திங்கள் அம் பிள்ளை -பாலசந்த்ரனும் -விரோதிகள் -ஸஹஜ சத்ருக்கள்-இருந்தாலும் தனித்தனியே என்னை நலிகின்றனவே-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் – இருட்டைப் போக்க பாலசந்திரன் வர -அத்தைக் கண்டு ஆற்றாமை-திருமேனி இருள் போல்
பாலசந்திரன் போல் தாப ஹரன்-இரண்டுமே நிறத்தை அழிக்கின்றனவே சீலமில்லாச் சிறியன் -4-7-இதன் விவரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-–அவதாரிகை – போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே – ராத்திரி வந்து இருளாலே நலிய – இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –
இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் –-ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே போனானாய்- ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று –
அதனுடைய ரத்த பானத்தைப் பண்ணி – இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரஷணம் பண்ணி போகல் ஆயிற்று –-இனி இத்தைத் தப்பி நம் சத்தையை நோக்குகை என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று-அது போலே இறே இதுக்கும் –
இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும் பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்
சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?
சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—37-வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய்
உணர்ந்த அநந்தரம்-பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய் அத்தாலே நோவு பட்டு ஆபத் சகனாக தந் நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய் கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன் ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –இனி திரு நகரியில் ஆழ்வார் பிரதான்யம்
எங்கனே நடக்கக் கடவதோ என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –
சூழ்கின்ற –பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஒக்க தானே வந்து சூழ்ந்தது –-இது ஓர் இடத்திலேயாய்-மற்றொரு இடத்தில் ஒதுங்க நிழலாம் படி இருக்கை அன்றிக்கே–கங்குல் சுருங்கா இருளின் –இன்னதினை போதை-இருள் செறிந்து வரக் கடவது –இன்னதினை போதை அதாகக் கடவது -என்று ஓர் மரியாதை உண்டு இறே – அது இன்றிக்கே இரா நின்றது –கரும் திணும்பை –
கறுத்த நிறத்தை உடைய திணும்பை என்ற ஒரே சொல்லாய்- அத்தால் திண்மையை சொல்லுகிறது –
இருளினுடைய புற இதழைக் கழித்து – அகவாயில் திண்மையான-வயிரத்தை சேர பிடித்தால் போல் இருக்கிறது–போழ்கின்ற இத்யாதி –-இவ்விருளை போழ்ந்து கொடு கீண்டு கொண்டு தோற்றுகிற சந்திரனும் – தனக்கு புறம்பு பாத்யம் இல்லாத படியாலே நம்மையே பாதித்திடுக –தண்டையை முறுக்கி இட்டு –தண்டு வாலாய் வாலை முறுக்கிக் கொண்டு என்றபடி –போழ்கின்ற –சஹஜ சாத்ரவத்தாலே –
இத்தால் அவன் சன்னதியிலே இது போழ்கின்றது அன்றியிலே கை தொட்டு அழிக்கிறாப் போலே ஆயிற்று –இதனுடைய திண்மையும் சந்தரனுடைய பருவம் நிரம்பாமையும் –திங்களம் பிள்ளை –
சந்திரன் ஆகிற அழகிய பிள்ளை –முந்துற அநு கூலரைப் போலே தோற்றி பின்னை இறே இவன் பாதகன் ஆவது –இருளைப் போக்குகிற ஆகாரத்திலே அநு கூலனாய் – பின்பு இறே தான் நின்று பாதகனாவது –பத்ம கோச -இத்யாதி –பத்ம கோச பலாசாநி த்ருஷ்டாத்ர்ஷ்டிர் ஹி மந்யதே -ஸீதாயா நேத்ர கோசாப்யாம் சத்ருசா நீதி லஷ்மணா -இதனுடைய விபாகம் அறிகிறதில்லை- ரசனை என்னா நஞ்சைத் திண்ண ஒண்ணாது இறே –-பஸ்ய லஷ்மண -இத்யாதி –தர்சி ஸௌமித்ரி -என்னுமிவ் வாகாரத்தை பார்க்கிற இத்தனை போக்கி பின்பு அது பாதகம் என்னும் இடத்தை பார்க்கிறது இல்லை –மிருக விஷயத்தில் பொன் மான் மேலோட்ட வடிவில் ஆசை கொண்டாள் சீதா -இத்தைப் பார் லஷ்மணா –
துழாய் மலர்க்கே இத்யாதி –அவன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை பெற வேணும் என்று ஆசைப்பட்டு –அதிலே கால் தாழ்ந்து கிடக்கிற நெஞ்சை உடைய – துழாய் மலர்க்கே தாழ்கின்ற -அதில் அருமை ஒன்றையும் புத்தி பண்ணாதே-ஒரு தமியாட்டியேன் – ஸ்ரீ ஜனக ராஜனின் திரு மகளும் ஒப்பன்று காணும் இவளுடைய தனிமைக்கு – இருளுக்கும் நிலவுக்கும் நொந்து தனிமைப் பட்டாள் இவள் இறே –ஒரு -என்கிற இத்தால்-உபமான ராஹித்யம் சொல்லுகிறது —மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ--இருளால் வந்த நலிவைப் போக்கி-நம் நிறத்தைத் தருகைக்கு சந்தரன் வந்து தோன்றினான் என்று நாம் பாரித்து இருந்தது எல்லாம் இதுவோ–வந்து தோன்றிற்று வாலியதே –
இருளைப் போக்குகைக்கு சந்தரன் வந்து தோன்றினால் போலே- இச் சந்தரனைப் போக்குகைக்கு ஒரு ஆதித்யன் இல்லையே -என்கிறாள் –இதுவே நிலை நின்று-நலியும் என்று இருக்கிறாள் –வாலியது –
வலியது –
திங்களம் பிள்ளையும் போழ்க – அதுவும் நம்மை வந்து நலிந்திடுக –வந்து தோன்றிற்று வாலியதே –
அவ்விருளுக்கு மேலே இத் திங்களும் வந்து பாதகமாய் தோற்றிற்று – மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ -என்று அந்வயம் –
இருளுக்கு ஆற்றாத தலைவி அதுக்கு மேலே இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் -துயர் நீக்க வந்தான் என்று கருதும் படி வந்து மேலும் துயரை விளைவிப்பதே-பேறு கிட்டாததால் வந்த மோகாந்தகாரமும் -அதனை அடக்கி மேலிடுவதான தத்வ ஞான பிரகாசமும் இரண்டும் ஒன்றின் மேல் ஒன்றுடன் சேர்ந்து வருந்தி ஸ்வரூபத்தை அழிக்க இருக்கும் தன்மை –சந்திரோதயம் -என்றது விவேகத்தை –இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் இது. நாயகனைப் பிரிந்த நிலையில் பகலிற் காட்டிலும் இரவில் இருளில் மிக வேதனைப்படுகிற நாயகி, அப்பொழுது இளம்பிறை தோன்றி அவ்விருளை அழிக்கத் தொடங்கியதை நோக்கி இனி நமக்கு இருளினாலாகுந் துயரம் குறைவுபடுமென்று கருதி ஒருவாறு தணிந்திருக்கத் தொடங்கிய வளவிலே, இளம்பிறையும் விரஹிகளுக்குத் தாபஹேதுவான பொருள்களும் ஒன்றாதலால் அது இவளை இருளினும் அதிகமாக வேதனைப் படுத்த, அது நோக்கி அத் தலைவி இரங்கிக் கூறியதென்க.–எனக்குப் பகையாய்ச் சூழ்கிற இருளைப் பிளந்தொழிக்கிற இளம்பிறை அவ்வருளின் ஒழிவுக்கு மகிழ்கிற என்னையும் பிளந்தொழிக்கட்டும்.-பிறைதோன்றி இருள் அகன்றதைக் கண்டு இனி என் துயரங் குறைந்து இழந்த மாமை நிறத்தைப் பெற்று வாழ்வேனென்று கருதிய எனக்கு அந்தோ! பிறை தோன்றியது இங்ஙனமோ முடிந்தது! என்கிறான். துயர் நீக்க வந்தானென்று கருதப்பட்டவன்தானே துயர¬ மிகுவிக்கின்றானே! என்செய்வேன்! என்கிறாள்.-வாலியது – வாலிமை யென்னும் பண்பிணடியாய் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினையாலனையும் பெயர். இதுவோ வந்து தோன்றிற்று–இப்பிறையோ வந்து தோன்றியது. வாலியதே- இதன் தன்மை சீரிதாகவுள்ளது! என்றுங் கொள்ளலாம்; இப்பொருளில் விபரீத லக்ஷனையால் வெறுப்புத் தோன்றும். பிள்ளை– இளமைப்பெயர்.-தாம் நினைத்தபடியே பேறு கிடைத்திடாமையா லுண்டான மோஹாந்தகாரமும் இதனையடக்கி மேலிடுவதான தத்துவ ஞானப் பிரகாசமும் இரண்டும் எம்பெருமானைச் சேராது நிலையில் தம்மை ஒன்றினுமொன்று மிகுதியாக வருத்தித் தமது ஸ்வரூபத்தையும் அழிக்கவிருந் தன்மையை ஆழ்வார் வெளியிடுதல் இதற்கு உள்ளுறை பொருள். சந்திரோதய மென்றது விவேகத்தை.
சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக-திணும்பு -என்று செறிவு-பிள்ளையும் என்று இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும் ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது-துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய –மாமைக்கின்று வாழ்கின்றவாறு-ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று-இதுவும் போழ்க–வாலிமையாவது
சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது–அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்–இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும் மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும் அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய–– மாமைக்கின்று வாழ்கின்றவாறு-இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்ற பிரகாரம் என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று--வாலியதே-இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய் நிராதாரமாகத் தொங்குமதாய் தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –
ஸ்வா பதேசம் –இத்தால் –இருளன்ன மா மேனி -என்கிறபடியே –திரு நிறத்துக்கு போலியான இருள் –
அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் – (கண்ணன் என்னும் கரும் தெய்வம் )அதுக்கு மேலே சந்திரனும் –திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து திருவாய்-என்கிறபடியே திரு முகத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது –பால சந்தரன் ஆகையாலே இருளானது சந்திரனையும் கை தொட்டு நலியா நின்று-கொண்டு தன்னையும் நலிகிறது என்றபடி –=புலிக்கு பசுவும் பிராமணனும் எதிரி போல் இவள் ஹிருதயம் பத்ம கோசம் -போன்றது ஆகையாலே ஆதித்யனுக்கே அலரக் கடவது
ஆகையாலே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –இருளுக்கும் சந்த்ரனுக்கும் மலராமையாலே
சாத்ரவம் சஹஜம் என்றபடி – மாயா மிருகத்தில் பிராட்டி ஆசைப்பட்டாள் -ரசனை உள்ளோருக்கு நஞ்சு இடுவாரோ – இது மேல் எழுந்த ஆகாரம் -என்றபடி –பஸ்ய லஷ்மண வைதேஹ்யாஸ் ஸ்ப்ருஹாம்
ம்ருக கதாமிமாம் ரூபஸ் ஸ்ரேஷ்ட தயாஹ்யேஷ ம்ருகோத்யந பவிஷ்யதி -இத்யாதி கண்டு கொள்வது அது போல் பிரதமத்தில் அழகிய சந்தரன் என்றாள் –ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யதே -பிரிந்த பத்து மாசங்களிலே ராத்ரியும் உண்டு இறே –
தாத்பர்யம்-பகவத் அனுபவ அலாபத்தாலே பிறந்த மோஹ அந்தகாரம்-அதுக்கும் மேலே விவேக ஸ்வரூப ஞானம் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்க வேண்டும் -ஆறி இருக்க -வேண்டும் –
பரதந்த்ரன் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை -என்பதாலும் வந்த நலிவு படுகிற தமது படியையும்
சொல்லும் பாசுரத்தை-இருளுக்கும் சந்திரோதயத்துக்கும் நலியும் தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –இதுவரை பலகல்பங்களாகச் சென்ற இருள் காலம் முடிந்து ஆதித்யன் வர அவனுக்கு ஸத்ருச போலி பதார்த்தங்களைக் கண்டு தரித்து இருந்த ஆழ்வாருக்கு போக யோக்ய காலமும் வந்து
இருளும் எங்கும் ஓக்க வியாபிக்க இவரது இந்திரியங்களை நலிய இவ்வளவில் பால சந்த்ர உதயம் ஆக – –நாயகன் திருமேனிக்கு போலியான இருளும் நீங்கி எனது நலிவைப் போக்கவே -பால சந்திரன் மிக உபகாரகன் என்று இருந்தேன்-சந்த்ர காந்த திருமுகம் அன்றோ-பாஞ்ச ஜன்யமும் சந்திரன் போல் தானே-இவ்வாறு போலியான அவன் உருவைக் காட்டி நிறம் அழியும்படி இரண்டுமே செய்தனவே
நாயகன் திருத்துழாய்க்கு ஆசைப் பட்டு நலிந்த என்னைப் போல் வேறே யாரும் உண்டோ என்கிறாள்
4-7-சீலம் இல்லாச் சிறியே னேலும்,–ப்ரவேஸம்-
காற்றாலும் வெயிலாலும் அடிபட்டு உலர்ந்த பயிரானது, மழை பெய்தவாறே பச்சை பெற்றுப்
பருவம் செய்வது போன்று, மகிழ்ச்சி அடைந்தாள்,’
என்கிறபடியே, மழை பெய்தால் பயிர் பருவம் செய்வது தன் உணர்த்தியால் அன்றே?
அப்படியே, திருநாமப் பிரசங்கத்தால் இவர் உணர்ந்தார்.
‘ஆயின், மேல் திருநாமப் பிரசங்கம் உண்டோ?’ எனின், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்று
அமிருத சஞ்சீவினியான திருநாமப் பிரசங்கம் உண்டாயிற்றே அன்றோ?
அந்தத் திருநாமப் பிரசங்கமே குளிர்ந்த உபசாரமாக உணர்த்தி உண்டாயிற்று.
அதனால் பெற்ற பலம், முன்புத்தை மயக்கத்தையும் இழப்பதற்கு உறுப்பானது இத்தனை.
மயங்கியிருக்கும் நிலையில் நினைவு இல்லாமையாலே துன்பம் இல்லை;
பிறந்த உணர்த்தி பேற்றுக்குக் காரணம் அல்லாமையாலே துன்பத்தை விளைக்க, அதனாலே கூப்பிடுகிறார்.
உறக்கத்தில் பசி பொறுக்கலாம்; உறக்கத்தினின்றும் உணர்ந்தால் உண்டு அன்றி நிற்க ஒண்ணாதே அன்றோ?
உணர்ந்த பின்னர்ப் பொறுக்க ஒண்ணாதபடி தனக்குப் பிறந்த-அலாப கிலேசத்தை அனுசந்தித்து- பயனில் துன்பத்தை நினைத்து,
1-அவன் ஆபத்துக்கு உதவும் தன்மையனாய் இருக்கிறபடியையும்,
2-ஆபத்தின் காரணத்தை அறிந்து அதனைப் போக்குவதில் வல்லன் என்பதனையும் நினைத்து,
3-ஆபத்துக்கு உதவுகைக்குத் தகுதியான சம்பந்தத்தையுடையவனாவது,
4-பிரிந்தால் பொறுக்க ஒண்ணாதபடியான வடிவழகையுடையவனாவது,
5-ஆபத்துகளிலே விரோதியைப் போக்கி உதவுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையவனாவது,
6-அதற்குத் தகுதியான சாதனங்களையுடையவனாவது,
7-வரையாதே, எல்லாரையும் ஒருசேரப் பாதுகாக்க வல்லவனாவது,
இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக் காணாமையாலே, பரமபதத்திலே இருந்தானாகிலும் அவ்விருப்பு நிலை குலைந்து
வந்து முகம் காட்டும்படி துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே,
8-கேட்டார் அனைவரும் நீராகும்படி கூப்பிடுகிறார்.
‘அதனாலே கூப்பிடுகிறார்’ என்றதனை விரித்து அருளிச்செய்கிறார்,
‘உணர்ந்த பின்னர்’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற
1-‘ஞாலமுண்டாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆபத்துக்கு உதவும் தன்மையன்’ என்கிறார்.
2-‘ஞானமூர்த்தி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘ஆபத்தின் காரணத்தை அறிந்து’ என்கிறார்.
3-‘நாராயணா’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘சம்பந்தத்தையுடையவனாவது’ என்கிறார்.
4-‘கோலமேனி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வடிவழகையுடையவனாவது’ என்கிறார்.
5-‘ஆழ்கடலைக் கடைந்த துப்பனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான ஆற்றலையுடையவனாவது’ என்கிறார்.
6-‘அடலாழியானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான சாதனங்களையுடையவனாவது’ என்கிறார்.
7-‘வையங்கொண்ட வாமனாவோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வரையாதே’ என்கிறார்.
8-‘வள்ளலேயோ! வாமனாவோ! என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றிக் ‘கூப்பிடுகிறார்’ என்றார்.
‘ஓ கௌசல்யே! ஓ சுமித்திரே! ஓ ராமா! ஓ லக்ஷ்மணா!’ என்றாற்போலேயும், ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த
ஆற்றாமையாலே ‘பிரியேதி புத்ரேதிச ராக வேதிச’ என்று கூப்பிட்டாற்போலேயும் இவரும் கூப்பிடுகிறார்.
‘ததாபி சூதேந’ என்ற சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு :-
‘ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே கூப்பிட, ஸ்ரீ சுமந்திரன், ‘அவரைப் பிரிந்தோம் என்று
கூப்பிட வேண்டாகாணும்; தாமே வந்து புகுவர் காணும்,’ என்று தேற்றினான்.
சூதேந –
சொன்ன வார்த்தை ‘நம்பத்தகுந்தது’ என்று கைக்கொள்ள வேண்டும்படி அந்தரங்கன் ஆவது,
சாரதிகள் சொல்லுவனவெல்லாம் நம்பத் தக்கன அன்றோ?
சு யுக்த வாதிநா –
அஃது இல்லையேயாகிலும் வார்த்தையைக் கேட்டால், ‘இது அப்படியே’ என்று நம்பி ஓடுகிற சோகம்
தீரும்படி வார்த்தை சொல்ல வல்லன் ஆவது.
நிவார்யமாணா –
இவனாலே ‘இது வேண்டா’ என்று தடுக்கப்படா நிற்கச் செய்தேயும்.
சுத சோக கர்சிதா –
இப்படி இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில் நீங்காதே அன்றோ, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை?
நெடு நாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் தரிக்கப் போகாதே!
ந சைவ தேவீ விரராம கூஜிதாத் –
பிறர் கண்ணீரையும் மாற்றி, இதற்கு முன்பு சோகமும் புதியது உண்ணாதே போந்தவள்,
கூப்பிடுகிற கூப்பீட்டினின்றும் ஓவிற்றிலள்;
கூப்பிடுகிற போதுதான் கேட்டார்க்கு அடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற் போலே
காணும் கூப்பிடுவது. கூப்பிட்ட பாசுரம்,
பிரியேதி புத்ரேதி ச ராகவேதி ச –
‘பிரிந்தால் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு இனியவரே!
உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமையை நீக்கும் தன்மையை யுடையவரே!
எல்லாரையும் பாதுகாக்கும் குடியிலே பிறந்து, பெற்ற தாயை நலியலாமோ!’ என்று
அவள் கூப்பிட்டாற்போலே இவரும் கூப்பிடுகிறார்.
ஏழாம் திருவாய் மொழியிலே
கீழ் ஏத்துதலும் தொழுதாடும் -என்று பகவத் நாம ஸ்ரவணத்தால்பிறந்த ஆச்வாஸம் அவனைக் கிட்டி அனுபவிக்கைக்கு உடல் அன்றியே
அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேச அதிசயத்தை யுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநு பாவ்யமான சர்வேஸ்வரனுடைய
அகில வஸ்து சத்தையும் அழியாமல் நோக்கும் அசாதாரண சம்பந்தத்தையும்
அநந்யார்ஹமாக்கி அனுபவிப்பிக்கும் உதார குணத்தையும்
அநந்யார்ஹமான ஆஸ்ரிதர் பக்கல் அத்யந்த பவ்யதையையும்
அவர்களுக்கு ஆஸா ஜநகமான ஆபி ரூப்யாதி அதிசயத்தையும்
அரும் தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதம் கொடுக்கும் படியையும்
ஆசைக்கு தீபகமான ஆந்திர ஸ்திதியையும்
அந்த அவஸ்தா நத்தினுடைய அதிசயித போக்யதையையும்
போக்யதா நிபந்தமான அபிநிவேச ஜனகத்வத்தையும்
அபி நிஷ்டர்க்கு அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னவத்தையும்
அகில வேத வேத்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான போக்ய பூதன் பக்கல் அனுபவ அபி நிவேசத்தால் பிறந்த ஆர்த்யதிசயத்தை அருளிச் செய்கிறார்-
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-
இங்குச் ‘சிறியன்’ என்கிறது, அணுத்துவமன்று; ஞான சூக்ஷ்மத்தை,’ என்கிறார்,-செய்வினை ஓ பெரிது – செய்த பாவத்தைப் பார்த்தவாறே, ‘சித்து அசித்தோடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவங்களையும்’ விளாக்குலை கொள்ளும்படி பெருத்திருந்தது.-ஈசுவரனுடைய குணங்களைக் காட்டிலும், அவன் தந்த மதி நலன்களைக் காட்டிலும் பெரிதாய் ஆயிற்று இருக்கிறது-செய்வினை –-இவைதாம் ஈசுவரனைப் போலே சங்கற்பத்தாலே உண்டாக்கப்பட்டன அல்ல ஆதலின், ‘செய்வினை’ என்கிறது,-இதற்குப் பரிஹாரம் அவன் கையிலே’ என்றே யன்றோ அறுதியிட்டிருப்பது?
எப்போதும் ‘கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்’ என்றேயன்றோ இவர் சொல்லுவது?-இதுதான் ஸூதரிசனமாய் இருக்குமேயன்றோ? (-ஸூ தர்சனமாய் –திருவாழியையும் அழகிய தர்சனமாயும் என்று சாடு)
பூமியாகப் பிரளயங்கொள்ளிலோ பாதுகாக்கையாவது? எல்லார்க்கும் உண்டான ஆபத்து ஒருவனுக்கே உண்டானால், உதவலாகாதோ? தங்கள் தங்களுடைய ஆபத்தை அறிந்து கூப்பிடாதார்க்கோ உதவலாவது?-‘ஆபத்து அறிந்து கூப்பிடுவார்க்கு உதவோம்’ என்னும் நிர்ப்பந்தம் உண்டோ?’பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமி, தன்னைத்தானே எடுக்க முயற்சி செய்யும் அன்றேயன்றோ தாங்கள் தாங்கள் செய்த கர்மங்களைத் தாங்கள் போக்கிக் கொள்ளத் தகுதியுள்ளது? சம்பந்தமும் ஆபத்தையுடைய வராகையும் அன்றோ
உனக்குக் காப்பாற்றுவதற்கு வேண்டுவது?’ என்கிறார் என்னுதல்.-
ஆபத்து -சம்பந்தம் -இரண்டும் இருந்தும்- ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே
நான் அறிவது ஒன்றும் இல்லை; நீ அறியாதது ஒன்றும் இல்லை;
நான் செய்ய வல்லது ஒன்றும் இல்லை; நீ செய்யமாட்டாதது ஒன்றும் இல்லை.
யார் காரியம் யாருக்குப் பரம்? ஒருவனுக்குக் கண் தோற்றாதே காலும் நடை தாராதே இருந்தது;-ஒருவனுக்குக் கண்ணும் தோற்றிக் காலும் நடை தருவதுமாய் இருந்ததானால். யார்க்கு யார் வழி காட்டிப் போவார்?’ -கேவலம் சரீரமோ, சரீரியைப் பெறுகைக்கு முயற்சி செய்வது?
இவர்தாம் ஒரு பிரயோஜனத்திற்காக ஒருகால் சொல்லி, ‘அது கைபுகுந்தது’ என்று ஆறியிருக்குமவர் அல்லரே!-நம் உபாயத்தில் வர்த்தமானம் போலே இதுதான் பிரயோஜனமாய் இருக்குமே இவர்க்கும்! ஆதலின், ‘என்று என்று’ என்கிறார் என்னுதல்.
‘நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை’-முதல் திருவந்தாதி, 95.- அன்றோ இதுதான்?-இனிமையாலே நித்தியமாக அநுசந்திக்கப்படும்
கை தலை பூசல் இட்டால் –
‘தலையிலே கை வைத்தால் -பூசல்’ என்று பொருந்துதலாய், தலையிலே கை பொருந்தினால்; அதாவது, ‘அஞ்சலி செய்தால்’-மெய் காட்ட வேண்டாவோ?
அன்றிக்கே, ‘தலையில் கை வைத்துக் கூப்பிட்டால்’ -பூசலிடல் – கூப்பிடுதல்.-என்னுதல்;
அன்றிக்கே, ‘கையும் தலையுமான பூசல் மாறாதே ஒருபடியே இருந்தால்’ -காலந்தோறும் இருந்து அஞ்சலி இட்டால்’-என்னுதல்.
சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப் போலே,
வேட்டார்க்கு உதவாத தண்ணீர் ஆவதே! ‘மரகத மணித்தடம்’ என்னப்படுமவன் அன்றோ அவன்?
காண –கருமுகை மாலை தேடுவார், சூட அன்றிக்கே, சும்மாட்டைக் கொள்ளத் தேடுவர்களோ?கிட்டினாலும் ‘ஸதா பஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்’ என்பதே அன்றோ?
‘காரார் திருமேனி காணுமளவு’மே -சிறிய திருமடல், 69.-அன்றோ இங்கும்?
‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’- இத்தனையே அன்றோ-
வாராய் –‘வாராய்’ என்றதனால் உபாயம் சொல்லுகிறது. அவ்வடிவைக் காணும்போது என்றும் அத்தலையாலே வரப்பெற இருக்கை போலே காணும் முறை.
‘நீ முறை செய்யப் பார்த்திலையேயாகிலும், என் துன்பம் தீரும் அத்தனையே எனக்கு வேண்டுவது,’ என்கிறார்.
காண –பிராப்யம் -தர்சனமே பிராப்யம் -வாராய் -பிராபபகம் -அவனே உபாயம்
கூவியும் கொள்ளாயே –முறை கெட அழைத்தாகிலும் கொள்ளுகின்றிலை.
காலந்தோறும் யான் இருந்து கைதலை பூசல் இட்டால் கோல மேனி காண வருகின்றிலை;
கூவியும் கொள்ளுகின்றிலை;
இதற்குக் காரணம், சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்,’ எனக் கூட்டுக.
‘நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று;
‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று;
‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று;
‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று;
ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.
ப்ராசாங்கிகம் -த்வயார்த்தம் விவஷிதம்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -ஞான சக்தியாதிகள் -உத்தர வாக்யார்த்தம்-
நாராயணா -ஆஸ்ரயண சௌகர்யர்ய ஆபாதக -வாஸ்தல்யாதிகள்-பூர்வ வாக்யார்த்தம்
ஞாலம் உண்டான் -ரஷகம் -சப்த சாமர்த்தியத்தால் ஸ்ரீ மத் பதார்த்தமும்
கோல மேனி -சரண -திருவடி -சப்தார்த்தம்
வாராய் -சரண உபாயம் சப்தார்த்தம்
கை தலை பூசல் இட்டால் — கிரியா பிரபத்யே பிரபதனம்
பதில் கதௌ தாது -காலம் தோறும் -மகா விஸ்வாசம்-பிரகர்ஷனே பர்த்யே- பிரபர்த்யே
யான் -உத்தம அதிகாரி -அஹம் –
என்று என்று -பூர்வ உத்தர வாக்யமும்– கிரியா பதம்–வர்த்தமானம் –
காண -சதுர்த்யந்தமான பிராப்யம் -ஆய –
செய்வினையோ பெரிது -நமஸ் -அவித்யாதி கழி உண்ணும்–
————–
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-
அனுபவிக்க அனுபவிக்கத் தன் பக்கலிலே ஆசையைப் பிறப்பித்து, இதர விஷய வைராக்கியத்தையும் பிறப்பிப்பதான ஆனந்தமாதலின், ‘கோதில’ -இப்படி இப்போது கூப்பிடப் பண்ண நினைத்திருந்தால், ‘வீற்றிருந்தேழுல’கிலே அப்படி என்னை அனுபவிப்பிக்க வேண்டுமோ?’ -இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவன் அன்றோ? -நீ இரந்து தருகை ஒழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது!’-
என்று என்று –இந்திரனைப் போன்று இராச்சியம் பெற்றுப் போகிறார் அல்லர்,
மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடிப் போகின்றார் அல்லர்,
எப்போதும் இதனையே சொல்லி. வையங்கொண்ட பின்பும் வாமன வேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்று இருந்தது;-ஆதலின், ‘வையம் கொண்ட வாமனா!’ என்கிறார்
நடையழகு கண்டு வாழும்படி முன்னே நடந்து வந்து தர வேண்டும்.-உன்னை நீயே கொண்டு வந்து தரவேண்டும்.-மாநச அனுபவத்தால் போராது; கண்களுக்கு இலக்காம்படி வரவேண்டும்’ – ஈகிறிலை-பாடமான போது-செய்விவினையோ பெரிதால்’ ஈகின்றிலை
———–
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-
அனுபவித்தாலும் குறையாதிருக்க வேண்டுமோ?-அனுபவிக்காத கர்மம் தொலையாது
அனுபவித்த கர்மம் தொலைய வேண்டுமே-நானோ அனுபவித்தேனே -ஆனால் கர்மம் தொலைய வில்லையே –-‘ஆயின், அனுபவித்தாரோ?’ என்னில், -அரை ஷணம்-சிறிது நேரம் முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தார் அன்றோ?
‘செய்வினை’ என்று ஒன்றாய் இருந்ததோ? எத்தனை கோடி பாவங்களைச் செய்தேனோ!’ என்பார்,-‘தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?’ என்கிறார்.-அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்;-அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார்.-உன் வயிறு வாழாமல் அன்றோ இப்படிக் களவு கண்டு கட்டுண்டு அடி உண்டது?முந்துறக் கூவுகிற இது பிற்படக் கூவுமதனை விருத்தி செய்யும்படி கூவுகிற தம் மிடற்று ஓசை செவிவழியே புக்கு, நெஞ்சமானது நீர்ப்பண்டமாய் உருகும் ஆயிற்று.
நான் ஆசையற்றவன் ஆகும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்’ என்பார், ‘நீ பாவி’ என்று சொல்லாய் என்கிறார்-இரண்டு அவதாரத்துக்கும் புறம்பாம் படியான பாபத்தை பண்ணினாய் நீ என்று நான் நிராசனாயத் தரிக்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்-.-‘‘நீ பாக்கியவான்’ என்னவுமாம். ‘பாக்கிய ஹீநன்’ என்னவுமாம்; அதில் அர்த்தங்கொண்டு காரியம் இல்லை; உன் மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது,’ என்பார், ‘ஒன்று சொல்லாய்’ என்கிறார்.-அங்ஙனம் சொல்லுமிடத்து நிர்ப்பந்தம் ஒன்று உண்டு;-பாவியேன் காண வந்து –‘என் கண்களுக்கு இலக்காம்படி வந்து சொல்ல வேண்டும்;
———-
காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-
‘மானச அனுபவம் மாத்திரம் அன்றிக்கே, புறப்படுதல் தொடங்கி கண்களாலே, காணும் படிக்குத் தகுதியாக வந்து-ஆணிப்பொன் – அதிக மாற்றுடைய பொன்.-‘மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே!’ -திருவிருத்தம், 85.-சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது’-என்னாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்’-நெஞ்சாகிற மெழுகிலே இட்டுப் பார்த்தால், அது தள்ளுண்ணுமே அன்றோ? இவர் தாம் கண் ஆணியாக அன்றோ காண்பது?
கண் கரு விழியால் காண -ஆழ்வாருக்கு உரைகல்லே வேண்டாமே-தாமரைக் கண் பிறழ –‘கடல் கலங்கினாற்போலே, ஆழ்வாரைக் கண்ட காட்சியிலே திருக்கண்கள் மிளிர’ -என்னுடைய முன்னைய ஒழுக்கத்தை நினைக்க மாட்டாத நாணம் இல்லாதவனும், மிகச் சிறியனுமான சிறுதகையேன் –ஆக, பேணி வானோர் காண மாட்டாப் பீடு உண்டு. பீடு – பெருமை;‘அதனையுடைய சர்வேசுவரனை, -ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸிதமான நிலத்திலே இருந்து அவர்களுக்கும் நிலம் இல்லாத விஷயத்தை கூப்பிட்டு என்ன பிரயோஜனம் உண்டு –நாணமில்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்?’ என்கிறார் –
—————–
அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-
ஆழ்கடலைக் கடைந்த துப்பனே – உன்னை விரும்பாமல் ‘வேறு பிரயோசனங்களே அமையும்’ என்னுமவர்களுக்கும் ‘அளவிட முடியாத கடல்’ என்கிறபடியே,
ஒருவரால் அளவிட ஒண்ணாதபடியான கடலைக் கடைந்து கொடுத்த ஆற்றலை உடையவனே!
உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல் என்று ‘உன் தோள்கள் நான்கனையும் கண்டேனாய் விடக் கூடுமோ?’ என்று. அவர்களைப் போன்று உப்புச்சாறு கொண்டு போமவர் அல்லரே இவர்! அந்தக் கடலைக் கடைகிற போது பரந்திருந்த தோள்களைக் காணக் காணும் இவர் ஆசைப்படுகிறது. மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோள்களே அன்றோ அவை?- நாய்ச்சியார் திருமொழி, 9 : 1.
இப்பொழுதே வந்திடாய் என்று – தம் துன்பமே செப்பேடாக-தாமர சாசனம்- அரைக்கணமும் தாழாமல் வரவேண்டும் என்று.-நோக்குவனே –வருவதற்குச் சம்பாவனை யுள்ள திசையைப் பாரா நிற்பன். ‘வருகைக்கு அவன் பக்கலிலும் ஏதேனும் நினைவு உண்டாயோ இவர் இப்படிச் செய்கிறது?’ என்னில் –ஏழையேன் – அஃது ஒன்று இல்லை. இவர் தம் ஆசையே உள்ளது.-ஆழ்வான் பணித்த வரதராஜ ஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார், ‘இப்பாசுரங் கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான், உன் முகத்தைக் காட்டிக் காணாய்,’ என்று பார்த்தருளினார்.-நாள்தோறும் – எப்பொழுதும். ‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் – ஆசைப்படுதல்.-
———-
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-
யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன் – என் மனத்திலே ஆசைப்படாநின்றேன். ‘வாய் விட்டுச் சொல்லமாட்டாமல்’ என்பார், ‘எனது ஆவியுள்ளே’ என்கிறார் ஒரு விஷயத்திலே ஆசையுள்ளவனை ‘இவன் இவ்விஷயத்திலே நாக்கு நீட்டாநின்றான்,’ என்பார் அன்றோ?
ஆதலால், ‘நாக்கு நீள்வன்’ என்பது, ‘ஆசைப்படுவன்’ என்னும் பொருளைக் காட்டாநின்றது.
‘ஆசைப்படுவதற்குக் காரணம் என்?’ என்னில், ஞானம் இல்லை – இது இருந்தபடியால் என்னைப் போன்ற அறிவு கேடர் இலர். ‘சர்வேசுவரனைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிற இது அறிவு கேடாக வேண்டுகிறது என்?’ என்னில்
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் – உன்னைப் பெறுவதற்குத் தடையாக உள்ள என் சரீரத்திலும்,
பெற இருக்கிற ஆத்துமாவிலும்,இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும் விடாதே எங்கும் எல்லாக்காலத்திலும் புக்கு நின்றாய்.-கிழிச் சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.
நின்னை அறிந்து அறிந்து –இதன் பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது,
நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது,-தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது,-‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது,
எப்பொழுதும் உடனிருத்தலையுடையனாவது;-இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று
இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?‘
நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை;
நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை;
இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’
‘நாராயணனே’ என்றதனை நோக்கிச் ‘சம்பந்தமுடையனாவது’ என்றும்,
‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,‘முற்றறிவினனாவது’ என்றும்,
‘துப்பனே’ என்றதனை நோக்கி, ‘ஆற்றலையுடையனாவது’ என்றும்,
‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,‘நீர்மையுடையனாவது’ என்றும்,
‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை நோக்கி, ‘உடனிருத்தலை யுடையனாவது’ என்றும் அருளிச் செய்கிறார்.
1-நாராயணா -பிராப்தம் உண்டு
2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன்
3-துப்பன் -சர்வசக்தன்
4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம்
5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்
—————
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-
இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது,‘பேதைமை தீர்ந்தொழிந்தேனித்தனை; மார்பும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம். அடைவிப்பவன் நீ -அடைந்து அனுபவிப்பனும் நீயே -மயர்வற மதி நலம் அருளினீரே -சிறிது செய்தமை உண்டு; இந்த அமிசத்தைப் பெற்றேன்; எனக்கு இதனால் போராது,’ என்கிறார்.
அறிந்து தேறி அறிந்து தேறி –முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ?
அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்;-பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்;-பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்-இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?
அன்றிக்கே,
இனி, ‘அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி-இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,-உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே, அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,-அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்-கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய, அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.
ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.
நறுந்துழாயின் கண்ணி வேந்தே –-வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது.
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-நான் உனைக் கண்டு கொண்டே.–-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம்
—————–
கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-
மேல் திருப்பாசுரத்தில் பெற்ற அமிசம் சொன்னார்; ‘பெறாத அமிசம் இது’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.கண்டுகொண்டு –‘காண விரும்பும் என் கண்கள்’-3. 8 : 4. என்கிறபடியே, காணப் பெறாமல் பட்டினி விட்ட கண்கள் பட்டினி தீரும்படி கண்டு கொண்டு.
‘அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் கண்ணாரக் கண்டு கொண்டு’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே, இக் கண்களின் வயிறு ஆரக் கண்டு கொண்டு.
என்கைகள் ஆர –‘தாயவனே என்று தடவும் என்கைகள்’-3. 8 : 3.- என்கிற கைகளின் உறாவுதல் தீரும்படியாக.-கலியர், ‘வயிறார உண்ண’ என்னுமாறு போன்று, ‘கைகள் ஆர’ என்கிறார்.
நின் திருப்பாதங்கள் மேல் –உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார் திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
‘திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,-அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை அடைந்தவனாகக் கடவேன்,’ -மாலதீ மாதவ நாடகம்.-என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச் செய்தார்.
‘போக்கியதை யுண்டானாலும் அடையத் தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
எண் திசையும் உள்ள பூக்கொண்டு –
விஷயத்திற்குத் தகுதியாகவும் தம்முடைய ஆசைக்குத் தகுதியாகவும் இருக்க வேண்டுமாதலின், ‘எண் திசையும் உள்ள பூ’ என்கிறார்.
தம்முடைய ஆசைக்குத் தகுதியாக ‘ஆசையில் உள்ளவை எல்லாம் வேண்டும்,’ என்கிறார்.
அவ்வாசைதான் திக்குப்பட்டே அன்றோ இருப்பது? கலியர் ‘கல அரிசிச்சோறு உண்ண வேண்டும்,’ என்னுமாறு போன்று.-இங்ஙனமே அன்றோ கைங்கரிய ருசியுடையார் வார்த்தை இருப்பது? ‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்றாரே அன்றோ இளைய பெருமாள்?
உகந்து உகந்து –பிரீதி மாறாதே செல்லும்படியாக.
தொண்டரோங்கள் – இந்தக் கைங்கரியத்தில் இனிமை அறிந்த நாங்கள்.-‘கேசவன் தமர்’க்குப் பின் தனியர் அல்லராதலின், ‘தொண்டரோம்’ என்கிறார்.
பாடி ஆடபிரீதியினாலே தூண்டப்பட்டவர்களாகிப் பாடுவது ஆடுவதாம்படி.
‘இதுவாயின், முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ? இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேடத்தில் கொண்டுபோய், ‘மேலே சொல்லப் போகிற சாமத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்,’ என்ன, ‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல் :
சூழ் கடல் ஞாலத்துள்ளே – கடல் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளே நான் காண வரவேண்டும். என்றது,-‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது என்கிறார்’
வண் துழாயின் கண்ணி வேந்தே –-இவ்வுலகத்துக்குள்ளே காட்டுமிடத்தில், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்குமாறு போலே காட்டவும் வேண்டும்.
நித்திய ஸூரிகளுக்குக் காட்சி கொடுக்கும் ஒப்பனையோடே காட்டவும் வேண்டும்,’ என்பார்,
‘துழாயின் கண்ணி வேந்தே’ என்கிறார்.
வந்திடகில்லாயே
வந்திடுகின்றிலை. இதனால் ‘கூவியுங்கொள்ளாயே’ என்றது பற்றாது என்கிறார். இது நான் பெறாத அமிசம்.
‘இவைதாம் இருந்தபடி என்? இந்தச் சரீர சம்பந்தம் அற்றமையும் இல்லை; கைங்கரியம் பெற்றமையும் இல்லை;-இங்ஙனம் இருக்க, ‘இவ்வமிசம் பெற்றேன், இவ்வமிசம் பெற்றிலேன்’ என்கிறபடி என்?’ என்னில், ஒன்று குறிக்கோளாய், மற்றையது அதற்கு உறுப்பாய் வருவதே அன்றோ? -( கைங்கர்யத்துக்கு தேக விநியோகம் உறுப்பு அன்றோ )
இவர்தாம் முதலிலே ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றார்;-அவனும் அளவிலா ஆற்றலை யுடையவனாய் இருந்தான். ஆதலால்,-இது கழிந்ததே அன்றோ?’ என்று அதனைப் பெற்றாராக நினைத்திருந்தார்;-கைங்கரியம் அவசியம் பெற்றல்லது நிற்க ஒண்ணாமையாலே, ‘அது கை புகுராமையைப் பற்றப் பெற்றிலேன்,’ என்கிறார்.-
————–
இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-
நூல் பிடித்தாற்போலே சாஸ்திரங்களிலே சாதனரூபமாகச் சொல்லுகிற சமாராதனத்தில் இவர்க்குச் சம்பந்தம் இல்லை;-நூல் – சாஸ்திரமும், முறையும். ‘முறை தப்பாமல்’ என்றபடி. தேக யாத்திரைக்கு – கைங்கரியத்திற்கு.-அதாவது, கைங்கரியம் செய்யாத போது தரிக்கமாட்டாமையாலே செய்துகொடு நிற்பர்.இதனால், ‘பிராப்பியம் என்ற எண்ணத்தால் செய்யுமது உண்டு’ என்றபடி.
மடம் வல் நெஞ்சம் –மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்து கொண்டு நிற்கை.
வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்கு நின்றும் மீட்க அரிதாய் இருக்கை.
காதல் கூர – இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் –
அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்;-இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்;-என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.
சக்கரத்து அண்ணலையே –கையில் திருவாழியையுடைய சர்வேசுரனை. எங்கே காணக் கடவேன்? யசோதைப் பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக் கொண்டாற்போலே, கையும் நெய்யார் ஆழியுமாகப் பிடித்துக் கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.
நெய் -கூர்மை -நெய் பூசப்பட்ட என்றுமாம்-
————
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-
கண் நீர் ததும்ப –கண்கள் நீர் மிகைக்கும்படி. இவருடைய துக்கத்தின் எல்லை காண்பது கண்ண நீரிலே காணும்.-காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத்தான் பெற்றேனோ?’
வேத விளக்கினை –வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை.–வேதத்துக்கு விளக்கு’-‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’-நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது,-‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞான பத்திகள் இரண்டும் கழுத்துக் கட்டியாய் விட்டன,’-கண்டு அனுபவிக்கவும் ஒட்டாது,
மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி-
————-
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-
தழுவி நின்ற காதல் தன்னால்-நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே-தாமரைக் கண்ணன் தன்னை –இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்திரபூதரைச் சொல்லுகிறார்.-அந்தரங்கர் -என்றுமாம் –செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்னக் கடவது இறே -இது இறே மதி நலம் அருளின படி
குழுவு மாடம் தென் குருகூர்-‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி-ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? தழுவப் பாடி-அதிலே சிறிது அணைய நின்றாகிலும்-காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர்.-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply