ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
தலைவி களாம் பழம் ஆழி வண்ணம் போல் உள்ளது என்றதே கொண்டு அன்னை -தாயானவள்
பிறக்கும் போதே தாயார் போல் இவள் நான் படும் கஷ்டம் அறியாதவள்-நாழ்-சாமர்த்தியம்-பல பல நாழ் சொல்லி சிசுபாலன் போல்-திருத்தாயார் -செவிலித்தாயார் வெறுத்துப் பேச-தோழிக்கு தலைவி அப்படி பேசவில்லை நீ சொல்லி -தப்பு உண்டோ உரையீர்-தாய்க்கு பரிகாரம் உரையீர் என்றுமாம்-உபாயாந்தர சம்பந்தம் என்று கொள்வானோ என்று–எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-இதன் விவரணம்–ஊழி-கால உபலஷித்த அனைத்து பதார்த்தங்களும் நிர்வாஹகன்-சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சொல்லி என்று இலோம் சொன்னால் தாயார் இன்னாவாள் என்று –
அவதாரிகை –களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் –இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக
இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களை சிலர் விற்பர்களாக பண்ணி –
இவளும் அத்தைக் கண்டு தரிக்க –அத்தை தாயார் நிஷேதிக்கிறாள் – தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள் தோழி மாருக்கு சொல்லுகிறாள்–செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல் —உண்டு ரக்ஷித்தான் -காரணம் ரஷகன் -சொன்னால் –காரணந்து த்யேய -உபாசகன் பேச்சு என்று கொள்வானோ என்று அஞ்சும் தாயார்-
இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார் இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப் பரிவாலே நியமித்த பாசுரத்தைத் தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை-தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –அவதாரிகை களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன் இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் – சிலர் விற்பார்களாகப் பண்ண-இவளும் அத்தைக் கண்டு தரிக்க அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத் தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71-செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-
ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு-இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்
எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று ரஷகனுடைய குண ஞானத்தாலே மீளவும் தெளிவு குடி புகுந்து-நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான ஸ்ரீ நம்பி உடைய வடிவு அழகு நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலும் ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை ஸ்ரீ நாயகனோடு கலந்து பிரிந்து உரு வெளிப்பாட்டாலே உருவ நோவுபட்டு செல்லுகிற ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற எங்கனயோ – வில் அர்த்தத்தை-எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் – உரு வெளிப்பாடு –முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்-இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்–குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்–இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு-அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு-உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே-சேதனரானார் பேசாது இரார்கள் இறே-இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது -குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-இப்படிச் சொன்னாள் ஆகில் குற்றம் ஆகுமே-எதிர்மறையாய்ச் சொல்லி குணம் சொல்லுகிறாள்சத்யம் ஞானம் அனந்தம்-ப்ரஹ்மம் ச விசேஷம் -கூடியே இருக்கும் -குணம் குணி இரண்டும் வருமே–விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஏகமேவ ப்ரஹ்மம்-ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் அத்வைதி–ஞான மயமாகவே இருக்கும் சத்தியமாக இருக்கும்-ஞானம் சத்யம் கூடியதாக சொல்ல மாட்டார்கள்-அசத்தியம் வேறுபட்டதாய்-எல்லாவற்றையும் விட வேறுபட்டதாய்-அபேதம் சித்திக்க மாயாவாது-தர்சனம் பேத ஏவச -தேவப் பெருமாள் ஆறு வார்த்தைகள்-ஈஸ்வரன் நிர்குணன் என்று கூறும் மாயாவாதிகள் இப்படி கூறுவார்கள்-ஸத்ய ஞானாவாதி வியாவர்த்தம் –-எதிர்சொல் பொய் -ஜடம் ஞான சூன்யம் -பரிச்சின்னம் -சொல்களைக் கொண்டு இவை இல்லாமல் வேறுபட்டதாய் ப்ரஹ்மம் இருக்கும் என்பர்–சத்யம் என்கையால் சத்யாதி வேறுபாடு-ஹனானாம் ஜடம் வேறுபாடு-அனந்தம் -பரிச்சின்ன வேறுபாடு–அசத்தியத்வம் கூடி இருக்கும் வருமே -இங்கும் பேதமே சித்திக்கும்-கூடியே இருப்பதால் ப்ரஹ்மம் விசிஷ்டம் தானே சித்திக்கும் -பிரளயம் வர தனது வயிற்றிலே வைத்து ரஷித்தவன் அல்லேன் என்று சொன்னேன் அல்லேன்–குணங்களை சொல்லி தரிக்கிறாள்–உண்டான் -உண்மை -நாம் சொல்ல வில்லை -உண்மையை எனது வாயால் சொல்ல வில்லை உண்ணவில்லையே ஆகுமோ -ஆழமான அர்த்தம் -இவளுக்கு சொல்லுகைக்கு பிராப்தி உண்டு–அவளுக்கு நிஷேதிக்கவும் பிராப்தி உண்டு–அபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்கள் பேசாமல் இருக்க ஒண்ணாதே -சேதனர்கள் ஆனால் பேசாமல் இருக்க மாட்டார்களே -குணாதிக விஷயத்தில் இவ்வளவு ஈடுபட்டால் கிலேஸிக்க வேண்டி வருமே–இவளும் குணம் சாதிக்கவேஏழு உலகும் உண்டான் சொல்லி சொன்னேன் அல்லேன் என்று தப்பிக்கப் பார்க்கிறாள்
பழம் கண்டு புரோ வர்த்தியான பதார்த்தங்களை கடமாகில் கடம் என்றும் படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே-பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே–ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு –-களாம் பழ வண்ணமானது ஆழி போலே இருந்தது-என்று இத்தனை கிடி கோள் நான் சொல்லிற்று – அவள் ஆழி வண்ணரை அன்றா சொல்லிற்று -என்று கொண்டாள் அவள் –அக்தே கொண்டு –இவ் உக்தி மாத்ரத்தில் பர்யவசியாதே இதுக்கு-வேறு ஒரு கருத்து உண்டு என்று கொண்டு –அன்னை –இவள் பிறந்த அன்று தொடங்கி தாயாயோ-வளர்ந்தது – ஒரு கால் பெண் பிள்ளையாயும் வளர்ந்திலள் போலே காணும் –குற்றம் உண்டாகில் பிராப்தம் இறே –குற்றம் இல்லாத இடத்திலும் நியந்த்ரு நியாம்ய பாவம் அமையுமோ நியமிக்கைக்கு –நாழ் இவளோ என்றும் –நாமும் எல்லாம் பழம் கண்டது சொல்லிப் போருகிறோம் இறே –இவளுக்கும்-நாம் சொல்லுகிற அளவே அமையாதோ –இவளுக்கு ஓர் ஏற்றம் என் செய்ய வென்னா நின்றாள் –நாழ் -என்று தரம் உடைமை – அத்தாலே ஏற்றத்தை சொல்லுகிறது –அதாகிறது-நருவட்டாணித் தனம் –இவளுடைய ஏற்றம் எது என்னில்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்றும் –பிரளய ஆபத்திலே ஜகத்தை அடங்க வயற்றிலே வைத்து நோக்கிய அக் குணத்திலே வித்தையாய் ஆற்ற மாட்டாமை சொன்ன வாரத்தை யன்றோ இது -என்னா நின்றாள் –தோழிகளோ உரையீர் –நீங்கள் முன்னம் என்னோடு சமான சுக துக்ககைகள் அன்றோ தாய்மார் அல்லீர்கோள்–எம்மை அம்மனை சூழ் கின்றனவே – என்னை மனைப்பாம்பு போலே புக்க விடமும் புறப்பட்ட விடமும் தானே யாய் நலிகிறபடிக்கு நீங்கள் தானே ஏதேனும் சொல்ல வல்லீ கோளோ–சூழ்கின்ற –முத்துலை இட்டுக் கொண்டு (ஒன்றுக்கு மூன்றாகச் சொல்லி )இவள் நலியா நின்றாள் –காண்கிறதும் சொல்லுகிறதும் கிடக்க –இதுக்கு வேறே ஒரு கருத்து உண்டு என்று இவள் நலிகிறதற்கு நீங்கள் தான் ஒரு பரிகாரம் சொல்லீ கோளே-
ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு களாம் பழ வண்ணம்
ஆழி என்றேற்கு அக்தே கொண்டு அன்னை நாழி களோ வென்றும் ஞாலம் உண்டான்
வண்ணம் சொல்லிற்று என்றும் எம்மை அம்மனை சூழ்கின்ற வற்றை தோழிகளே உரையீர்-என்று அந்வயம் –
மனைப் பாம்பு -கிரகத்தில் வர்த்திக்கிற பாம்பு முத்துலை இட்டு -நீர் ஏற்ற ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு அதிலே ஏற்றி மீண்டும் ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு ஏற்றுவாரைப் போலே –ஒன்றைச் சொல்லி அதுக்கு மேலே ஒன்றை கற்ப்பிக்கிறாள் – பழம் என்கிறது காண்கிறது ஆழி –ஆழி வண்ணன் -என்கிறது சொல்கிறது —உரையீர் -நான் சொல்வதில் குற்றம் உண்டோ என்னுதல் -இவள் சொல்லுக்கு பரிகாரம் சொல்லுங்கோள் என்னுதல்-என்றேற்கு -என்று சொன்னேன் என்றபடி
வட்டாணி -சமத்காரம் -சாமர்த்தியமாக சொல்லுதல் -நறு வட்டாணி -நல்ல சமர்த்து-மனைப் பாம்பு கடியா விட்டாலும் பயங்கரமாய் இருக்குமா போலே-இவள் சொன்னது செய்யா விட்டாலும்-பயங்கரமாய் இருக்கும் என்றபடி-முத்துலை ஒன்றுக்கு மூன்று சொல்லுகை -கடியன் கொடியன் -அப்படிப்பட்டவன் பிரளய காலத்திலேயே வந்து உதவினான் -என்று வ்ருத்த கீர்த்தன முகேன உபகாரத்தை ஸ்த்ரீகரிக்கைக்காக--ஸத்ருச வஸ்துக்களை ஆகிலும் கண்டால் ஒழிய ஜீவிக்கக் கூடாமையாகிய
ப்ராவண்ய அதிசயத்தைக் கண்ட சில அன்பர்-சாதனாந்தர பரராக பிரமித்து இவரது ப்ராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை மற்றும் சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து
அவர்களைக் கொண்டு இவர்கள் பிராந்தியைப் போக்கினை பாசுரத்தை நாயகனுடன் ஒத்த பாதார்த்தங்களைக் கண்டு தரிக்க நினைத்த விரஹிணியான நாயகியை நிஷேதித்த தாயமார்க்கு
சகிகளைக் கொண்டு தன் அபிப்ராயத்தை அறிவித்து தெரிவித்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-ஆழி -கடல்-வண்ணமே இந்த களாம் பழம் என்றேன்-ஆழி வண்ணனின் வண்ணம் என்று சொன்னேனோ-ஆனால் அன்னை இவள் மனதில் அவனையே நினைத்து இப்படியே சொல்கிறாள் என்கிறாள்-காரணந்து த்யேய -உபாசகர் போல் சொல்கிறாள் என்று ஒன்றுக்கு மூன்றாகச் சொல்லி அன்றோ சொல்கிறாள்
அலர் பரவும் தாய் முனியவும் இருக்கிற இக்கள வொழுக்கம் இனி ஆகாது –-மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு –ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்–ஊழிகள்-பன்மை காலத்தின் பகுப்புக்களைக் குறிக்கும் -சகல காலங்களுக்கும் நிர்வாஹகன் -சர்வ ரக்ஷகன்-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பழத்தின் நிறம் கடலின் நிறம் என்றே சொன்னேன் – நாழ் குற்றம் –தாயின் முனிவைத் தலைவி தோழியர்க்கு உரைத்த பாசுரம் இது.
நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து நாயகி வருந்துமளவில் அக்களவொழுக்கம் மெல்ல வெளிப்பட்டு ஊரெங்கம் பழி பரவ,அதனை யறிந்த தாய் ‘இது நம் குடிக்குக் குறையாம்’ என்று கருதி இவளை நிர்பந்தத்திலே வைத்திருக்க, அவளுக்கு அஞ்சி நாயகி தன் ஆற்றாமையால் வாய் பிதற்றுதலொன்றுஞ் செய்யாத ஆற்றாமையை அடக்கிக் கொண்டிருக்க, அவ்வளவிலே சிலர் களாப்பழங்கொண்டு விற்க, அதனை நோக்கி நாயகி ‘இதன் நிறம் கடல்போலுள்ளது’ என்று பாராட்டிக் கூற, ஏற்கனவே இவன்மேல் குறிப்புக் கொண்டுள்ள தாய் ‘இவள் இப்படி சொன்னது நாயகனது நிறத்தைப் பாராட்டிக் கூறியபடியாம்’ என்று உட்கொண்டு இப்படியும் ஒரு அடங்காத்தன்மை யுண்டோ’ என்று வெறுக்க, அதற்குக் கலஙகிய நாயகி தோழியரை நோக்கி ஒருவகையான உட்கருததையுங் கொண்டு சொல்லவறியாத எனது தன்மையை நீங்கள் அவளுக்குச் சொல்லி அவளுடைய கோபத்தைத் தனிப்பீராக வென்று வேண்டிக் கொள்ளுகிறாளென்க.–சில பிரதிபந்தங்களினால் நாயகனை அடையப் பெறாத நாயகி, அவன் தன்னை வெளிப்படையாக விரைவில் விவாஹஞ் செய்து கொள்ள வேண்டுமெனக் கருதிச் சிறைப்புறத்தானாகுமளவில் தோழியர்க்குச் சொல்லுவாள் போன்று
ஊர்ப்பழி மிகவும் பரவியிருக்கிறபடியையும் அதனைக் தாயுமறிந்து வெறுக்கிறபடியையும் தெரிவிக்கும் முகத்தால் விரைவில் வெளிப்படையாக விவாஹஞ் செய்து கொள்ளத் தூண்டியதாமிது.
அவர் பரவவும் தாய் முனியவும் இருக்கிற இக்களவொழுக்கம் இனி ஆகாது, மணந்து கொள்ளல் வேண்டும் என்று விவாஹ ருசியை வெளியிட்டவாறு.–ஊழிகளாய் உலகேழு முண்டானென்றிலம் = ஊழிகள் என்ற பன்மை காலத்தின் பகுப்புகளைக் குறிக்கும்; ஸகல காலங்களுக்கும் நிர்வாஹகனாய் மஹாகல்பகாலத்தின் முடிவிலே திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவனான எம்பெருமான் என்று அவன் திருநாமத்தையோ தொழிலையோ பெருமையையோ ஒன்றையும் நான் வெளிப்படையாகச் சொன்னேனில்லை;-ஒருகால் அப்படி சொல்லியிருந்தேனாயின் தாய் குறை கூறுவது தகுதியேயாம்;
அந்தோ! ஆதாரமொன்று மின்றிக்குறை கூறுகின்றானே யென்றவாறு. ஊழிகளாய் என்பதற்கு- கல்பமும், அக்காலத்தில் அழிவு செய்கிற கடல் நெருப்பு முதலியனவுமாகிய இவற்றின் வடிவமாய் என்றும் உரைப்பர். என்றிலும்- என்று சொல்லிற்றிலோம்.–ஊழிகளாயுலகேழு முண்டான என்று சொல்லவில்லையாகில் பின்னை என்ன வென்று சொல்லிற்றென்ன. பழங்கண்டு ஆழிகளாம் பழ வண்ணமென்றேற்கு’ என்கிறான். (விற்பனைக்காக வீதியில் வந்த) களாப்பழத்தைப் பார்த்து
இப்பழத்தின் நிறம் கடலின் நிறம் போன்றுள்ளதென்று உட்கருத்து ஒன்றுமின்றியே இவ்வளவே சொன்னேன்:குறிப்பொருளொன்றுங் கருதாது இயல்பாகச்சொன்ன இச்சொல்ல¬யே பற்றிக்கொண்டு எனது தாய் “இப்பெண்பிள்ளை என் சொற்கேளாது தன் நினைவின்படி ஸ்வதந்த்ரமாய் நடக்குஞ் செருக்குடையவளாயினள்’ என்று கடுஞ்சொல் கூறத்தலைப்பட்டாள். களாம் பழவண்ணம் கடல் வண்ணமென்று இவள் சொன்னதானது வெறுமனோ? உலகமுண்ட பெருவாயனுடைய திமேனி நிறத்தைச்சொன்னபடியன்றோவென்று குற்றங்கூறுகின்றான்; தோழிமார்களே! இப்படி எனது தாய் என்னை மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு நீஙகளே ஸமாதானஞ் சொல்லித் தெளிவிக்க வேணுமென்றாயிற்று.-நாழ் –குற்றம்; “நாமா மிகவுடையோம் நாழ்” “நாழாலமர் முயன்ற” என்ற திருவாந்திதிப் பாசுரங்களில் இப்பொருளில் பிரயோகங்காண்க.-பெரியாழ்வார் திருமொழியில் “பல நாழஞ்சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்ற விடத்தில் இச்சொல்‘அம்’சாரியை பெற்று வந்தமையும் காண்க. இங்கே, நாழுடையாள் என்ற பொருளில் ‘நாழ்’ என்றது உபசார வழக்கு.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது-–ஆழ்வார் எம்பெருமானிடத்தில் தமக்கு உண்டான ஈடுபாட்டினை மிகுதியால் அப்பெருமானது பயனாகிய வடிவத்தின் கடல்போலளவிடப்படாத பெருமையைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்ட ஞானிகள் அவ்வார்த்தைக்கு வேறு பொருள் சங்கித்து,-ஸாதநாந்தர நிஷ்டையுடையோர்போல உபாஸஸநக்கு உரியதொரு காரணவடிவத்தைப் போற்றினதாக நினைத்து அது தகுதியன்றென்று அறியாமல் ஆரோபித்துச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைச் சொல்லும் வார்த்தைக்கு என் நினைவறிந்து பழகிய நீங்கள் மறு மாற்றஞ் சொல்லி இவர்களைத் தெளிவியுங்க ளென்று அருளிச் செய்தலாம். (ஊழிகளாய் உலகேழு முண்டானவற்றிலம்) ஸாதுநாந்தா நிஷ்டையுடையார்போல உபாஸகைக்கு உரிய காரணவடிவத்தைச் சொன்னோமில்லை.
(பழங்கண்டு ஆழி களாம்பழ வண்ணமென்றேற்கு.) பயனாகிய வடிவத்தைக் குறித்து அவ்வடிவம் கடல்போலும் என்று கூறிய எமககு.(அஃதே கொண்டு) அந்தச் சொல்லுக்கே வேறு பொருள் கொண்டு. (அன்னை) ஞானிகள்(இவளோ நாழ் என்னும்) இவரே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விரோதியான ஸ்வாதந்திரியத்தை யுடையாரென்று குறையேறிட்டுச் சொல்வார்கள்.(ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்) உபாஸகைக்கு விஷயமாகின்ற காரணவடிவத்தை யாம் கூறியதாகக் குற்றங்கூறுவார்கள்.(அமனை எம்மை சூழ்கின்ற) தாய்போ லெம்மிடத்தும் பரிவுடையான் ஞானிகள் எமது ஸ்வரூபத்துக்கு எங்கே குறைபாடு வருகிறதோவென்று ஏறிட்டுச் சங்கித்த சங்கைக்கு (தோழிகளோ! உரையீர்) என நெஞ்சரிந்த அன்பர்களே! நீங்கள் பரிஹாரஞ் சொல்லித் தெளிவிக்க வேணும் என ஸ்வாபதேசப்பொருள் காண்க.-ப்ரபத்தி மார்க்கத்தை யனுட்டிப்பவர் எம்பெருமானது பயனாகிய வடிவத்தையே கருதிப் பாராட்டக் கடவரென்றும், அதுவே முக்தி பெறுவதற்குச் சிறந்த வழியாகுமென்றும், உபாஸகைக்கு உரிய காரண வடிவத்தையே பாராட்டி உபாளித்தல் முக்தி பெறுவார்க்கு அவ்வளவாகச் சிறவா தென்றும் உணர்க.
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் ) கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும் பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்–பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு-அக்தே கொண்டு-அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு–அன்னை-எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்–நாழி வளோ வென்னும்-இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்–நாழ்-என்று-மேனாணிப்பு-நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்-தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்-நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்-தோழிகள் -என்ற பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி-எம்மை யம்மனை சூழ் கின்றவே –உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்
இத்தால்-களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே-பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே-உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி–நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி (குகன் குக பரிகரங்கள் சங்கித்தால் போல் )தோழிகளோ உரையீர் -என்கையாலே-ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால் நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி–எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே-பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே -கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய் இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன் குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்-இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு-உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே-சேதனரானார் பேசாது இரார்கள் இறே இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது-குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே-பழம் கண்டு-புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும் படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே-பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-களாம் பழ வண்ணமானது –அக்தே கொண்டு அன்னை–
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்–ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்-லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான் என்று சொல்லேன் அல்லேன்–பழம் கண்டு-களாம் பழத்தைக் கண்டு–ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு–இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு–அக்தே கொண்டு அன்னை-அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்–நாழி வளோ வென்னும்–நாழ்-என்று நிறம் உடைமை-அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது-இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்-நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது-இவ்வளவு அன்றிக்கே-ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் இந்தப் பெண் இந் நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ–தோழிகளோ உரையீர்-ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை என்று சொல்லா நின்றாளே–அவளை நீ தூற்றாதே கொள் —என்னுங்கோள்-எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான் சூழ்ந்து கொண்டாடியும் தூற்றியும் என்னைக் கொல்லா நின்றாள்-ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு என்கிற பஹு வசனம் இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –
ஸ்வாபதேசம் —ஆழ்வார் அவன் வண்ணம் ஸ்வபாவம் கடல் போலே என்று சொல்வதைக் கேட்டு –
இது சாதனாந்தர நிஷ்டையில் உள்ளோர் வார்த்தை யன்றோ என்ன-என் நெஞ்சு ஆராயாமல் ஆரோபித்துச் சொன்ன வார்த்தை ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்-உபாஸனைக்கு உரிய காரண வடிவத்தை சொன்னோம் இல்லை-பழம் கண்டு-ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு-பலத்தைக் கண்டு கடல் போலென்ற வடிவம் என்றே சொன்னேனே-அக்தே கொண்டு அன்னை-அந்த சொல்லுக்கே வேறே பொருளைக் கொண்டு ஞானிகள்-நாழி வளோ வென்னும்-பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு விரோதமான ஸ்வாதந்தர்ய வார்த்தை என்று ஏறிட்டுச் சொல்வார்கள்
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-உபாஸனைக்கு உரிய காரண வடிவைச் சொன்னேன் என்பர்-தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே -ஏறிட்டு சங்கித்த சங்கைக்கு என் நெஞ்சு அறிந்த நீங்களே பரிஹாரம் சொல்லுங்கோள்-
ஸ்வா பதேசம் –-இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் –
பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்ய அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி
இருக்கிறதையும் சொல்லுகிறது –
தாத்பர்யம்-சர்வேஸ்வரனை நேராகவே சேவிக்கா விட்டாலும் அவனுக்கு சத்ருச லௌகிக பதார்த்தம் கண்டு தரிக்க எண்ணி இருந்த ஆழ்வாரைக் கண்ட அன்பர் சாதநாந்தர- உபாயாந்தர -சம்பந்தம் ஆகிவிடுமோ என்று பிரமித்து ஆழ்வாருடைய பிராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை வேறே சில ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து – எடுத்துச் சொல்லி இவர்களுடைய -பிராந்தியைப் போக்கச் சொல்லும் பாசுரத்தைத் தலைவியை நிந்திக்கும் திருத் தாயாரை ஸஹிக்களைக் கொண்டு சமாதானப்படுத்தும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–கீழே அநேகம் கல்பமாக போன இரவு கழிந்ததும்
விற்க வந்த களாம் பழத்தைக் கண்டு ஆழி வண்ணம்- கடல் வண்ணமாக இப்பழம் உள்ளதே -என்று சொல்ல தாயார் ஆழி வண்ணனான எம்பெருமானை இவள் நினைத்தே இவ்வாறு சொல்கிறாள் என்று நிஷேதிக்க-தோழிகளே நான் சகல ஜகத் ஸ்ரஷ்டாவானர் சகல ரக்ஷகன் சகல கல்யாண குண பரிபூர்ணன் ஸ்ரீயப்பதி ஆபத் சகன் என்று இவ்வாறெல்லாம் சொல்லி -அவனது திரு நாமமே சொல்ல வில்லையே-சிறிய திருமடல் யாராலே கல் மாரி காக்கப்பட்டது – ஆரால் இலங்கை பொடி பொடியாக வீழ்ந்தது -பெயர் சொல்லாமல் சொன்னது போல் -இவள் சொன்னேன் என்று சொல்லி சமாளிக்கிறாள்
இத்தால் நம்மை நிஷேதிப்பது யுக்தம் அல்லவே-நான் ஒன்றையும் சொல்லாமல்-பழம் கடல் வண்ணம் என்று கொள்ளாமல் -இவள் மகளது சாமர்த்தியத்தால் சர்வேஸ்வரன் வண்ணம் சொல்கிறாள் என்று அன்றோ நிஷேதிக்கிறாள் நீங்கள் சம சுக துக்கம் காணும் ஸஹிகள் அன்றோ இதுக்கு பரிகாரம் சொல்லுங்கோள் என்று தோழிகளைக் குறித்து சொல்கிறாள் –
5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! -ப்ரவேஸம்-
மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்;
பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே “ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில்
1-ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு
விஷயந்தான் -பழிச் சொற்கள் -இல்லாதபடி பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்;
ஏசிப் பேசினால் தானே அவனைப் பற்றி ஸ்மரணம் வரும் –
2-“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று,
சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்;
3- “நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே” என்று-வேறு – ‘ஒன்றை நினைத்துத்
தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள்.
“மாசறு சோதி” என்ற திருவாய் மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும்
மனோ வேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
ஊரெல்லாம்” என்ற திருவாய் மொழியில், அந்த மனோ வேகமுங் கூடக் கலங்கினபடி; –
எரு நீர் இல்லாமல் பயிர் விளையாதே –
இத் திருவாய்மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
மடல் -பிராப்ய த்வரை -காள ராத்ரி வியசனம் -இழந்த உபாய அத்யவசாயமும் பிராப்ய த்வரையும் மீண்டதே –
மூன்று ஹேதுக்களும் போனத்தை அருளிச் செய்கிறார் மேலே
இந்தக் குறைகள் -மூன்று வெறுப்புகள்- எல்லாம் தீரும்படி போதும் விடியப் பெற்று,
அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற இழவு தீர
உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத் திருவாய் மொழியில்.
என்றது, பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து,
1-“தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும்,
2- “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும்,
3-“தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது;
அவ் வழியாலே அவர்கள் தாம் இவ் விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ.
சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலி பாயப் பெற்றது.
இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.
இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப் பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே
ஆற்றாமைக்கும் காரணமாய் நோவு பட்டுச் செல்லா நிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும்,
நீ இப்படி இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலை யுடையவளா யிருத்தலாகிற இது உனக்குக் குடிப் பழி,
உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,
நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ் விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக்
காண்கையாலே உள்ளபடி கண்டேன்;
ஆகையாலே, நம்பியுடைய வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும்
நீல மேனி -1-வடிவு அழகு–நீல மேனி /-
2-ஒப்பனை அழகு–பூம் தண் மாலை /3-மின்னு நூலும் குண்டலும் -ஆபரண அழகு /4-பொன் முடி வேண்டற்பாடு
நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லா நிற்கச் செய்தே;
தம் முயற்சி கொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ,
இவ் வஸ்து தான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம், பிறர் அறியாது
ஒழியப் பெற்றோமே யன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக் கட்டுகிறது.
ஸூவ யத்னத்தால் காண்பார் -அறிவரிய பிரான் -அறிவுக்கு அரிய –
பிரான் -உபகாரகன் –தன்னால் காட்டக் கொடுப்பவன் -ஆழி யங்கை பிரானை அலற்றி –
ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கும் உபாசகர்களுக்கும் கிட்ட அரியவன் –
பரகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கு அவன் காட்டக் காண்கையாலே-காணலாம் என்றபடி
ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
அவனை நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
சூரியன் உதித்துப் பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்;
பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.
நன்று; “ஏழையராவி” -7-7-என்ற திருவாய்மொழியும், ‘உரு வெளிப்பாடு’ சொல்லா நின்றதே,
அதற்கும் இத் திருவாய் மொழிக்கும் வேற்றுமை என்? என்னில்,
அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும்
பாதகத் தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று,
அது தான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த பிரீதி இன்மையுமாய், –
இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும்.
1-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி,
இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று
முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;
ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று
உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று
வெறுப்பதும் செய்தார்களே அன்றோ.
2-பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும்
செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான்.
3-பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது “வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார்,
பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று,
பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது,
அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ.
அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.
திரு மங்கை ஆழ்வாரால் கடைசியில் பேசப் பெற்ற திவ்ய தேசம் –
சுந்தர பரி பூரணன் -நின்ற இருந்த கிடந்த நம்பிகள் திருக் கோலம் -ஆழ்வாராகவே திருவதரித்த எம்பெருமான் -அன்றோ –
நம் ஆழ்வார் விக்ரகம் தனியாக இங்கு இல்லை –
வைஷ்ணவ நம்பி -குருகியவன் -குறுங்குடி -நெடும் தகை -கரண்ட மாடு பொய்கை –உருவ வெளிப்பாடு -மானஸ பிரத்யஷம்
-5-3-/5-4/5-5- மூன்று காதல் தசைகள் -பேரமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல்
நான்கு நாயகி பாவம் தொடர்ந்து -5/3 –5/4 –/5-5 தலைமகள் -5-6 தாயார் -அடுத்த நான்கும் நோற்ற நான்கு –
பிரத்யஷமாக தோற்றுவதே உருவ வெளிப்பாடு –ப்ரீதி அப்ரீதி -முனியே நான் முகனும் வரை மானஸ அனுபவம் தானே –
பூர்வ அனுபூத ரசத்தை மறந்து — ரசாந்தரமாகச் செல்லுவதே மானஸ அனுபவம் –
பரத்வம் பஜநீயத்வம் இத்யாதி -பராங்குச பக்தி கடல் தழும்பி இருக்கும்
இக்கரை அக்கரை தொட்டு காவேரி போவது போலே நடுவிலும் உண்டே -எல்லா மநோ பாவமும் உண்டே பூர்த்தியாக
அனுபூத ரசம் அனுபவியா நிற்கச் செய்தே -ரசாந்தரம் தேடிச் செல்வதே உருவ வெளிப்பாடு –
வ்ருஷே வ்ருஷே -பயத்தாலே மாரீசன் -உருவ வெளிப்பாட்டால் பயந்தான் –
இங்கு பிராவண்யத்தால் உருவ வெளிப்பாடு இவளுக்கு-
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-
என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற
என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ?நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு
வளர்ந்தவள் அன்றோ நான்.-தாம் தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ.
புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ;
கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து,
இது தான் கிரமத்திலே வந்து ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக் கட்டும்;
இனித் தான் -ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப் பிரஸ்தோத பிக்ஷுக: அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம் ஏகம் அநாபதி”-சாமான்ய தர்மம்-
பிரஹ்மசாரி யாகவாவது இல்லறத்தா னாகவாவது வானப் பிரஸ்தனாகவாவது சந்நியாசி யாகவாவது ஒருவன் இருக்க வேண்டும்;
ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லா நின்றது;
இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து,
அந்தச் சாமான்ய தர்மத்திற் காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.
நங்கள் நம்பி–கடகர் களான -உங்களை அறியா விட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள்.-இக்குடிக்கு -ஏக போகம் -முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு -சர்வேச்வரனை நோக்கிப் பல விரதங்களை நோற்றுப் பெற்றவர்களைப் போலன்றிக்கே, நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது.
உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே அன்றோ.-நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது.நம்பியை நான்–அகப் படுத்துகைக்கு அழகு சீலம் முதலிய குணங்களால் அத் தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று,-அகப் படுக்கைக்குரிய ஆசையால் இத் தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள்.
காண்பதற்கு முன்னே மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள்.-தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.-கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப் பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:-சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –கரு நிறமான திரு மேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,-இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி
இருக்கிற திருச் சக்கரத்தோடும்,மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக் கண்களோடும்,–இதனால், கண் காணக் கை விட்டுப் போயிற்றுக் காணும்.-கண்ட போது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும்,-சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ் வருகுண்டான வற்றோடு அவ்வருகுள்ள வற்றோடு வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். –உங்கள் சொற்களை மறுத்தேனே யாகிலும் நம்பியுடைய திரு முகம் மறுக்க ஒண்ணாது –என் நெஞ்சமே –-உங்களைப் போலன்றிக்கே, அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.
மீண்டும் இப்போதாக ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வர அருளிச் செய்கிறார்
எங்ஙனேயோ என்னை முனிவது நீர் – பிராவண்யமே ஸ்வபாவமாம்படி வளர்த்து வைத்து, இப் போதாகப் பொடிகிற படி எங்ஙனேயோ?-முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து, அது பயன் பட்டவாறே பொடியு மத்தனையோ?
கோலம்--உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாதபடியான அழகு.
திருக் குறுங்குடி நம்பியை- பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு.
நம்பியை–குணங்களில் நிறைவின்மை உண்டாய்த் தான் மீளுகிறதோ
நான் கண்ட பின்--இவ் விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ.
சங்கினோடும்- ஸ்ரீ பாஞ்ச சன்யத்தோடே விசேஷித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு; திரு வாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.-
————
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’-என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள்- கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக் கூடியதாக இருக்க,-நம் வயிற்றிற் பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்ற நிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று-பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள்.-திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,-வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று,-தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு கைம் முதலுடையார்க்கு அவனை அறியப் போகாது என்றதே அன்றோ.
வந்து எங்கும் நின்றிடும் – ‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன.-“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை, பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே,
உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.
————
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-
இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று,
நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் –
ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும்,
ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,
அறிவு கெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியா நின்றீர்கோள்.
அன்னையரும் முனிதிர் – தெளிந்திருப்பார் தாம் பொடியப் பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயா யிருக்கிற இப்படிச் செய்யக் கடவதோ.-தெளிவது கலங்குவதாய் இவை தாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள்.-இது, பெண் பிள்ளை வார்த்தை யானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,-அத்யவசாய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும் தெளிவதும் கலங்குவதும் உண்டு-யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப் பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ.
இந்தக் குடிக்காகப் பகவத் பிராவண்யமே யாத்திரை போலே காணும்.
நான் கண்ட பின் – ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ!-பெருமாளுக்கு வில் எடுத்துக் கொடுப்பவள் பிராட்டி அன்றோ.-பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே,-நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை ரிஷிகள் வந்து சரணம் புகுவார்கள்;-அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டி வரும்; அது பின்னை ஜாதிப் பகையாம்,
பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும்.
ஆன பின்னர், வில்லைப் பொகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ.-பெருமாள் பக்கல் சாங்கமே -பஷ பாதம் -சார்ங்கம் -சாடு -அன்றோ இப்படிச் சொல்லுவித்தது.-திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க் காட்டு உண்டு காணும்.-போர்த் தலையில் ஆயிற்று ஆயுதம் என்று அறியலாவது.
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா--கண் வட்டத்தை விடாதே நின்று தோன்றா நின்றன.
இவை கண் முகப்பே நின்று நலியப் புக்கவாறே,-அஞ்சிக் கண்களைச் செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின.-நெஞ்சுள்ளும் நீங்கா – கீழே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்;-இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள்.
இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும்.-அவ் வழகு எங்கும் ஒக்க நலிகிறாப் போலே ஆயிற்று, இவளும் கட் கண்ணாலும் உட் கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.-பக்தி பெருக்காலே இவள் வியாபகத்வம் –
————
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-
நீங்க நில்லா கண்ண நீர்கள் –அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை.
அன்றிக்கே,-நீங்க நில்லா- பேர நில்லா என்னுதல்.
அன்றிக்கே-நீங்க நில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல்.-நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது.-இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும்.
வடிவும் – அம் மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும் உரியான்’ என்று படி எடுத்துக் காட்டலாமே.-வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர் நஞ்சீயர் –பூந் தண் மாலைத் தண் துழாயும் –-பொன்முடியும் ––வடிவும்–மூன்றுக்கும் உம்மைத் தொகை –-இவற்றை உடைய வடிவு சொல்லாமல் -வடிவும் ஆபரண கோஷ்டியில் சேர்த்து அருளிச் செய்து உள்ளார் –பாவியேன் பக்கத்தவே– அநுபவிக்கத் தருதல்- உரு வெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் – செய்யாத படியான மஹா பாவத்தைச் செய்தேன்.
அருகே நின்று பிரகாசித்துக் கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை.-அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.-
————-
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-
ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என்-உயிர்நிலையிலே நலியா நின்றன என்கிறாள்.-அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.-அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள்.-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்த படியை அறிந்து வைத்த நீங்களும் பொடியா நின்றி கோள்–பாவியேன் ஆவியின் மேலனவே- தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -அகவாயில் வெளிச் சிறப்பு அழகிது.-அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.
———————-
மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-
அன்னை காணக் கொடாள்–தன்னோடு ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற-இவளும் இப்படிச் சொல்லா நின்றாள்.
முன்பு- அன்னைமீர் -வளர்த்த தாய்கள் இவள் உடன் சாம்யம் உண்டே -இதில் பெற்ற தாய் –
அழகு மிக்க கொடி போலே இருக்கிற திரு மூக்கும்,-அதன் படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக் கண்களும்,-அந்தக் கொடி பூத்தாற் போலே யாயிற்றுத் திருக் கண்கள் இருப்பது.-அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனி வாயும்,-அத் தாமரையின் இலை போலே நீலமாய் இருக்கிற திரு மேனியும்,-ஒரு பெரு வெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்,-என் நெஞ்சம் நிறைந்தனவே- உங்கள் ஹித வசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.-
————-
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-
ஆண்டாள், ஒரு நாள் பட்டரையும் சீராமப் பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள், பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக் காட்டு’ என்ன,
அவர்களையும் கொண்டு திரு முன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப் பாடிட்டு,
ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திரு வுள்ளமாக,
“இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லா நின்றார்கள்” என்ன,-நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச் செய்ய,-பிற்றை நாள் மன்னியைக் -கன்னிகையைக் -கொடு வந்து நீர் வார்த்தார்கள்.
ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம் தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி – பிரபன்ன குடி-காணும்.
இப்போது ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிறது -இவ்விஷயத்தில் உள்ள-நம்பியிடத்துள்ள பிராவண்யத்தை அன்றோ;-“பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற இந்த இரண்டு ஆகாரமும்- நிலைகளும் ஆழ்வார் தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷங்களே அன்றோ;-பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயார் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அநுபாஷித்தாற் போலே இருக்கிறதாயிற்று.
(பகவத் ப்ராவண்யம் தோஷம் -உபாய அத்யவசாயத்தில் நிலை நின்ற -திட சித்தம் -திருத்தாயார் நிலை )பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாயிற்று.
பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, உபாயத்தில் கொத்தை அறுக்கிறது;பழி என்று மீளேன், என்கிற இது, உபேயத்தில் கொத்தை அறுக்கிறது;
ஆக, உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை (வேறு ஒன்றினையும் விரும்பாமையைப்) பார்த்தால், தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் குற்றமாயிருக்கும்;
உபேய வைலக்ஷண்யத்தைப் பார்த்தால், விரையாமல் ஆறியிருத்தல் குற்றமாயிருக்கும்;
ஆகையால், இரண்டு குற்றங்களையும் அறுக்கிறது என்றபடி. கொத்தை-குற்றம்.
ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி; (மகள் வார்த்தை ) (அடிமைத்தனத்துக்குத் தக்க கைங்கர்யமே ஸ்வரூபம் -ஒரே காரியத்துக்கு உபாய உபேய ஆகாரங்கள் உண்டே )
அவனுக்கு அக் கீர்த்தியைப் போன்று,-தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ.-நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும்-
கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது.-ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப் படுவதாயாயிற்று இருப்பது.
அவ் வடிவு தான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் ஸ்லாக்கியமாய் இருக்கும்.-நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் – ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,-விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;-உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;-இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது,-விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.
நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழி யும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –-அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?-அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.
உங்கள் ஹித வசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள்,-நிறைந்து என் உள் நின்றொழிந்தான்’ என்கிறாள்
இனி, போக்கிடம் இல்லையாம்படி அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள், நின்றொழிந்தான்’ என்கிறாள் என்னுதல்.
அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்ல மாட்டீர்களோ நான் என் பழி நீக்குவதற்கு.
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப் போமோ,-அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என் பழி நிறைவினைக் குறைக்கவோ.
——-
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-
கையுள் நன் முகம் வைக்கும் – அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள். இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.-அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது.-இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் –-நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.
வடிவும்-என்னை மீள ஒட்டாத வடிவும், மெய்யே மீள ஒட்டுகிறது இல்லை காணும் இவளை.-பாவியேன் முன் நிற்குமே –-அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.
‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.
கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.-
————
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-
பார் அளந்த விசும்பு அரசே —எம்மை வஞ்சித்த ஓர் அரசே -மூன்று வித கிரீடங்கள் –
செல்லப் பிள்ளை – ராஜ முடி -வைர முடி -கிருஷ்ண ராஜ முடி -மூன்று நாள்கள் உத்சவங்கள்
மூன்று பாகங்கள் –கிரீட மகுட சூடாவதம்ச —-ஆதி ராஜ்ய ஜல்பிகா –தத்வ த்ரய சம்ப்ரதாயம்
பூஷண பூஜ்யங்களுடைய சேர்த்தியால் கண்ட சக்கரையும் சேலப் பாலும் கலந்தால் போலேயாய்-வந்து என் நெஞ்சம் கழியானே –-வந்து என் நெஞ்சில் நின்றும் போகின்றிலன்.
முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று,
‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது.
எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.-நம்பி புகுந்து விடுகின்றிலன்
—————–
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் –-எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்; -இதர விசஜாதீய காதல்–அன்றிக்கே,-நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல் நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது”
அன்னை காணக் கொடாள்--‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.-ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில்,-தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,-சரீரம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது –-அநுசந்தித்தல்.-நெஞ்சு என்னும் உட் கண்”-நெஞ்சையுங் கூட வாய் கட்டா நின்றாள்.-வழு இல் கீர்த்தி –-குறை வற்ற கீர்த்தியை யுடைய. நான்-அக் கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று, அவனை ஒழியத் தனித்து நிலை பெறுதல் இல்லாத நான்.–நித்ய ஸூ ரிகளுடைய சமூகங்கள் திரண்டு அனுபவிக்க கிண்ணகத்தில் இழிவாரை போலே திரள் திரளாக வாயிற்று இழிவது-அழகு வெள்ளத்தின் நடுவே-எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்
இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்–கண்ட பின் –இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில்,
அடியில், ‘பொய்ந் நின்ற ஞானம்’ தொடங்கி ‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல ஒரே வாக்கியமே அன்றோ,-நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ.-நித்திய ஸூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது.-ஆர்க்கும் அறிவு அரிது –-எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.
————
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-
அறிவு அரிய பிரானை– நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப் படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம்.-வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.-இவர்கள்- தாய் மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,-ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்த போதே, தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.-ஆழி அம் கையனையே அலற்றி – “சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.-அவனைக் கை விடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;-இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு, நம்பியுடைய அழகினை மெய் காட்டுக் கொண்ட இப் பத்தும் திருக் குறுங்குடி விஷயம்-திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய அழகைத் திரளச் சொன்ன பத்தும்-அறியக் கற்று வல்லார்--இதனைக் கற்று அறிய வல்லவர்.-அறியக் கற்கையாவது, ஸ்ரீ வைகுண்டத்தில் நித்திய ஸூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும், திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.-ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் –
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்திய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்-உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply