ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -70 -வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –பிறவித் துயரற -1-7-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் – பிறவித் துயரற -1-7- நிரதிசய போக்யத்வம் ஆராதனைக்கு இனியவன்–இதிலும் துழாய் இனியது-திருத்துழாய் முடிந்த அவன் -இரான் எனில் -அதிலும்–மூன்று அர்த்தங்கள்–1-திருத்துழாய் ஆசைப்பட்ட எனக்கு -கிடையாதபடியாலே வண்ணம் பசலை நோய் இப்படி மாறிக் கொண்டு இருக்க – 2-இரவு நெடுகி துன்பம் கொடுக்க – 3-இப்பொழுது மாலை மாறி இரவு வரப் போகிறது இது அநேகம் கல்பங்களாகி என்னாய் ஆகுமோ – )

அவதாரிகை –-ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால்
உண்டான-த்வரையாலே – காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –

இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும் விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே வந்த ஆர்த்தியை இரவின் நெடுமைக்கு இரங்கின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு ––அவதாரிகை -ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும் என்னும் அபேக்ஷையால் உண்டான த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள–அவதாரிகை-இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப் பாசுரத்தில்

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
— 70-தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு —7–ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும் உள்ளது தேவையாய் இருக்கும் அன்று-ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன-ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும் ரசிக்கும் விஷயம் ஆகையாலே அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற பிறவித் துயரில் -அர்த்தத்தை பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு- குணைர் விருருசே ராம-என்னும்படி நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று நெஞ்சே சீக்ர கதியாகச் சென்று பற்று – முந்துற்ற நெஞ்சாய் அங்கே  பற்றும் படி ஓடு-

வளைவாய் திருச் சக்கரத்து –வளைத்த வாயை உடைய திருச் சக்கரம் -என்னுதல்-அன்றிக்கே –
வளை -ஸ்ரீ பாஞ்ச   ஜன்யமாய் –வாயை உடைய திரு ஆழியை உடையவன் என்னுதல்–தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதாதர -என்னக் கடவது -இறே (மண்டோதரி பெருமாளது அடையாளம் சொல்லும் ஸ்லோகம் )-எங்கள் வானவனார் முடி மேல் –த்ரிபாத் விபூதி யடைய திவ்ய ஆயுதங்களும் – சாத்தின மாலைகளும் – ஆன இவ் அழகே யாம்படி  இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய – திரு அபிஷேகத்தில்  உண்டான தொடை வாய்ப்புள்ள –அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே –தளை என்று தொடையாய் –வாய் –வாய்ப்பை உடைய – தொடை வாய்ப்புள்ள திருத் துழாய்–வண்ணம் பயலை விளைவான்–நறுங்கண்ணி தண் அம் துழாய்க்கு – செவ்வியை உடைய மாலையான திருத் துழாய்க்கு வண்ணம் இத்யாதி –அம் மாலையை ஆசைப்பட்டு -பெறாமையாலே நிறமானது பயலை யாம்படி-விவர்ணமாம் படியாக–மிக வந்து இத்யாதி – முந்துற ஒரு ராத்திரி –ஒரு நாளாய் பெருகிற்று –
அது போய் ஒரு மாசமாய் – அது போய் ஒரு வத்சரமாய் – அது போய் ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய
என்னை நலிகைக்காக வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது –மிக வந்து – ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல் – அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே – இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-

இருள் இன்று என்னை அடியோடு முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நீடிக்கிறதே
வளைவாய்த் திருச் சக்கரத்து-வட்டமான நுனியை யுடைய திருச் சக்கரம் என்றும் -சங்கையும் கூர்மையான சக்கரமும் என்றுமாம்-ஸர்வேஸ்வரத்வத்துக்கு ஸூ சகமம் -அடிமை கொள்ள -சம்பந்தமும் உடைய -உபய விபூதி நாயகன் -அலங்காரமும் உடைய சர்வேஸ்வரனை அனுபவிக்க பெறாமையாலே தன்மை குலையும் படி காலம் வரையறை இல்லாமல் வளர்கின்றதே –

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்-வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய் எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின-தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு-வண்ணம் பயலை விளைவான்-ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு ராத்ரி மிக்கு நாளாயும் மாஸமாயும் ஆண்டாயும் ஊழியாயும் வந்து ஒழிய–எம்மைஉளைவான் புகுந்து-எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி-இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-இந்த ஒரு ராத்ரியானது ஆயிரம் கல்பம் ஆகா நின்றன-ஆயிரம் என்றது-அநந்தம் என்றதாகவுமாம் –இத்தால்-வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும் விபூதியையும்
பூஷணத்தையும் ஒப்பனையையும் யுடைய ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை–வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாக-விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — காலமானது அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –வியாக்யானம்-வளைவாய்த் திருச் சக்கரத்து-வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்–அன்றிக்கே-வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே–எங்கள் வானவனார் முடிமேல்-த்ரிபாத் விபூதியை யுடையராய் திவ்ய ஆயுதங்களும் சாத்தின மாலைகளுமான அழகேயாய் இருக்கிறவர் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான-தளைவாய்-தொடை வாய்ப்புள்ள அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே–நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு–வண்ணம் பயலை விளைவான்–அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக விவரணமாம் படியாக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று-அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று-அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று–அது நிற்க-அத்தைக் கடக்க நிறுத்தி இது ஒரு ராத்ரி இருந்தபடி என் அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது–எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது அநேகம் ஊழிகளாய் இரா நின்றன-மிக வந்து–ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே இது ஒரு ராத்ரி இருந்தபடி என்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்-வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய் எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு நாழிகையே வந்து நாளாயும் திங்களாயும் ஆண்டாயும் ஊழியாயும் மிகவும் வளர்ந்து நிற்குமே–எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது எங்கனே நான் தரிக்கும் படி –

ஸ்வா பதேசம்–இத்தால் –பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21- அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும் என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

ஸ்வாபதேசம்-இத்தால்-பதி சம்மா நிதா சீதா –என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை- ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே -பெற வேணும் என்று ஆசைப்பட்டு – பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –ஒரு கங்குல் –வளைவாய் திருச் சக்கரத்து எங்கள் வானவனார்
முடி மேல் தளைவாய் தண் அம் துழாய்க்கு
வண்ணம் பயலை விளைவான் மிக வந்து-
நாளாய் திங்களாய் ஆண்டாய் ஊழியாய் வர்த்திக்கிற மாத்ரம் அன்றிக்கே – எம்மை உளைவான் புகுந்து ஊழிகள் ஆயிரமாகா-நின்றது
– என்று அந்வயம் –தளை –கட்டாய் —வாய் -வாய்ப்பாய் –தொடை வாய்த்து இருக்கை–என்னை உபேஷித்து என் உடம்பை விவர்ணமாம் படி செய்து –-தான் தன திருக்கையில் இற்று இருக்கிற திரு ஆழியினால் தன்னுடைய பரம பதத்தை விளங்கச் செய்து –
அவ் விபூதி எங்கும்-தான் சூடிய திருத் துழாய் பரிமளம்  கமழும் படி  தூரமாக வீற்று இருந்தான் –
என் எளிமை அறிந்து-இந்த இரவானது இப்படி நீண்டு அநந்த கல்பங்களாக பரிணமிக்க தொடங்கிற்று இதைக் கடந்து-நாம் ஜீவிக்க வழி என் -என்று சோகிக்கிறாள்  –

தாத்பர்யம்-இதில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஸ்வஸிப்பித்த அளவிலும் அஷமத்தால் -கால விளம்பம் பொறுக்காமல் நலிய கார் காலத்தில் வருவதாகச் சொல்லிப் போந்தான்-அதுவும் வந்து அவனும் வாராமல் நலிய இப்பொழுது இரவும் வந்து குளிர்ந்த திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு பெறாமல்
பயலை நோய் திரு மேனி எங்கும் பரவ அவன் ஸ்ரீ வைகுண்டத்தில் -எட்டா நிலத்தில் -தூரமாக வீற்று இருந்து அங்கு உள்ளார் அதன் பரிமளம் அனுபவிக்க இப்பொழுது எனது எளிமையையும் தனிமையையும் அறிந்து நலிய இரவு வந்து பரிணமிக்கும் காலம் போல் இல்லாமல் அளவுக்கு உட்பட்ட காலம் இல்லாமல் அளவு இல்லாத அநேக கல்பங்களாய் பரிணமிக்கத் தொடங்க இத்தைக் கடந்து நாம் ஜீவிப்பது எங்கனே என்கிறாள்

1-7-பிறவித் துயர் பிரவேசம் 

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போகரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்-இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே . 

ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும் 

ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில் அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து
ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –3-பர தசையிலும் அவதாரம்
அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும் 5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் -7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
-8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல
பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே 
–1-7-1-

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து-அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-அறவனை – அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும் அதனைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.

அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.-ஆழிப் படை அந்தணனை-கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ 
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!

மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது – அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே! இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.

————–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே 
–1-7-2-

ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.-அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், பிராபகத்வம் கூறிய படி.

எங்கள் ஆயர் கொழுந்தே-ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,  எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் கொழுந்தே-– அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,-வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,  ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார்

———–

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
1-7-3-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்ப டவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும்-அவரால் புடை உண்ணும்-‘-மத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,-ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக் கட்ட மாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப் பிரானை’ என்கிறார்.என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடை யுண்ட மாணிக்கம் போன்று,
திரு மேனி புகர் பெற்று வருகிறபடி.என் சோதியை-அப் புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமே யாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.-தூய வமுதைப்அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது

———-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ 
–1-7-4-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விடேன் என்கிறார் –

என் மனத்தே மன்னினான் தன்னை – இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து- ஸ்தாவரப் பிரதிஷ்டையாக இருந்தவனை,-என் மனத்தே-புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்-உயர் வினையே தரும் – -ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான்-தரும்-தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.-காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’,  ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’-என பத்தியை மேன்மேலும் தந்து கொண்டே இருக்கின்றான்-ஒண் சுடர்க் கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இரா நின்றான்’ என்கிறார்.-என் இசைவினை – ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

———–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
 –1-7-5–

‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.-மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?
ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.-உய்யக்கொண்டு விட்டிலன்;-மேல் மேல் எனக் கொள்ளா நின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.-உடையவன் ஆகையாலே செய்தான்-திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு-யத்னம் – முயற்சி செய்தவர் யார்?’ 

விடவே செய்து விழிக்கும்–அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற.
இனி, இதற்குத் ‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து விழிக்கின்ற’ என்று கூறலுமாம்.-தவாஸ்மி–தாஸோ அஸ்மி -என்றால் போலே சொல்லுகை – இனி, ‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று பொருள் கூறலும் ஓன்று.விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம் -விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்-விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை –

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
 –1-7-6-

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே -தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும்-என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்-பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.-பெரு நிலம் கீண்டவன்-சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்.-ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான்-மரா மரம் எய்த மாயவன் –இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-பின்னை யான் ஒட்டுவேனோ-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்  பணிப்பர். தொங்குகை-திரிதல்.

————-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
–1-7-7–

நான் நெகிழ்த்துக் கொடு போக்கிலும் அவன் இசையால் -என்கிறார் –ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று -ப்ரதிஜ்ஜை -சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், 
தான் ஒட்டி’ என்கிறார்.என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். -‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

————-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே 
–1-7-8-

அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.-‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’

——

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
 –1-7-9-

சர்வ பிரகாரத்தாலும் அவனை ஸம்ஸ்லேஷித்த -ஏக த்ரவ்யம் — என்னலாம்படியான இவ் வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும், ‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –.-அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின், இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

————–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே 
–1-7-10–

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது-இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –பொருவல்லன் – ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை-அன்றியே பொரு என்று பொருத்தமாய் -அநன்யரைச் சேர வல்லன் என்றுமாம் –

————-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே 
–-1-7-11-

அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

உடைந்து ஓடுவிக்கும்-இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading