ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு-கற்பார் இராம பிரானை -7-5-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கால மயக்கு-தோழி சந்த்யா காலம் இல்லை-மாலையும் வந்தது -இரவும் வரும் -பெருந் துக்கம் வர
சர்வ ரக்ஷகன் வந்துவிடுவான்-கார் எருதுவும் சிகப்பு எருதுவும் சண்டை போடுகின்றன என்கிறாள்
ப்ராத காலம் சாயங்காலம் -அதுக்கு ஒரு காலம் இதுக்கு ஒரு காலம்-அற்பமான இருள் அதிகமான சுடர் ப்ராத காலம்-அற்பமான சுடர் அதிகமான இருள் சாயம் சந்த்யா-அருளால் விட மாட்டார் -வருந்தாதே -சமாதானம் படுத்துகிறாள் கற்பார் இராம பிரானை -7-5-இதன் விவரணம்-சராசரம் முற்றும் நற்பாலுக்கு உய்த்தவன் அன்றோ-மோக்ஷ பிரதன்-ரக்ஷகத்துக்கு சீமா பூமி தானே நாட்டை அளித்து ஷேம கரன்
சிசுபாலனுக்கும் ரக்ஷகன் அன்றோ-நன்மைப்புனல் பண்ணி -நான்முகனைப் பண்ணி -பாட்டுத்தொறும் ரக்ஷகத்வம் உண்டே –

அவதாரிகை –அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய –அநந்தரம்-போகயோக்யமான காலமாய் இருக்க அவன் வந்து தோன்றாமையால் தலை மகள் ஆற்றாளாக –இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன காண் -என்றுகாலம் மயக்கி அவளைத் தரிப்பிக்கிறாளாய்  -இருக்கிறது –

இப்படி ஆஸ்வாஸ கரரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள் இவ் வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே தலைமகள் நோவு பட-இத்தைக் கண்ட தோழியானவள் ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
– -69 –மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா
 –65-கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

காரேற் றிருள்–இருளாகிற கார் ஏறானது- கறுத்த வ்ருஷபம்  ஆனது –செகிலேற்றின சுடருக்கு உளைந்து –ஆதித்யனாகிற சிவந்த ரிஷபத்தினுடைய கிரணங்களுக்கு தோற்றுப் போய் சுரமடைந்தது (தளர்ந்து மங்கிப்போனது )- வெல்வான்போரேற்று எதிர்ந்தது–அது -நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடக்கும் இத்தனையோ –நாமும் ஒருகால் மேலிட வேணும் -என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது – இருள் தான் வெல்ல வேணும் என்று மாலை இட்டுக் கொண்டு வந்தது போலே காணும் –(சாடு -மாலைப் பொழுது ஏறிட்டுக் கொண்டு-உறுதி தீக்ஷை மாலை சாத்தி வந்தது ) புன் தலைமாலை – புல்லிதான தலையை உடைத்தான சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் –1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக –அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் உன்னை விடுமோ –4-தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை விட்டு இருக்குமோ –(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி ) -காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-
உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –5-மண்ணுக்குப் பதறி இரந்தவன் பெண் ஒரு தலை யானால் ஆறி  இருக்குமோ –6-வாரேற்றி இள  முலையாய் -என்னும் அளவுக்கு – காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்- உன்  முலை மேலே காலை வையாது ஒழியுமோ –

புவனி இத்யாதி –பூமிப் பரப்படைய நீரேற்று அளந்து கொண்டு  –எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்-பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –அருளா விடுமே – சத்வம் உடையாருக்கு தன்னை அழிய மாறுமவன் சுத்த சத்வமேயான   உன் விஷயத்தில் கை வாங்கி இருக்குமோ-அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான  அருளும் உன் பக்கம் கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்று இள முலையாய் –
வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடையவளே – வார் தரித்தல்-தான் தரித்தல் செய்ய வேண்டும்படியான முலைகளை நீ தரிக்க விட்டிட்டு இருக்குமோ –இள முலையாய் –பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் – வாராலே தரிக்க வேண்டும்படியாய் காணும் முலைகள் இருப்பது –
ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்னுமா போலே – விஷயத்தை காட்டு காட்டு -என்று
கிளருகிற இள முலைகள் –வருந்தேல் உன் வளைத்-திறமே –உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா –வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக வருந்தில் வருந்து – அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று – அதற்கு மங்களாசாசனம் பண்ணு –(அதுக்கு வருந்தி பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் இது தானே நமது கையில் அகப்பட்டு
பல்லாண்டு பாடி ரக்ஷிக்க வேண்டும் என்றபடி )

இத்தால்-அவனுடைய குண ஞானத்தாலும் – அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும் தரிப்பித்த படியைச் சொல்லிற்று கீழ் –இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது – அவனாகில் ரஷகனாய் – இத்தலையாகில் ரஷ்யகமாய் -இருக்கும் இறே –ஓங்காரம் பார்த்தே தரிக்கலாம்–தர்மி இருவரும் ஸ்வரூபம் சொல்லும் பிரமாணம் பிரணவம்
அவனாகில் ரக்ஷகன் அவ ரஷணே தாது இத்தலை ரஷ்யம்–வருந்தேன் உன் வளைத் திறமே -மாஸூச -என்கிறாள் – அஹம் த்வா இரண்டு தர்மி சப்தங்கள் -என்று (ப்ராப்தனாய் சக்தனாய் ரக்ஷகனாய் இத்யாதி-அஹம் அசக்தனாய் இத்யாதி -த்வா ) இருவருடையவும் சொல்லி வைத்து இறே – மாஸூச -என்றது –செல்வான்-ஜெயிக்கைக்காக –நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை-என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது-

இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது –
பிரத்யஷ்யமான சந்த்யையை- ருஷபங்கள்  என்று சொல்லுகிறது என் என்ன –
புன் தலை மாலை ஆகையாலே -புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல்
-என்று அந்வயம்

மாலை பொழுதில் தோழி தலைவிக்கு -இருள் ஆகிய கறுத்த எருதும் ஸூ ரியன் ஆகிய சிவந்த எருதும் பொருகின்றன- காலையில் பகலுக்குத் தோற்ற இருள் இப்பொழுது வெல்லும் பொருட்டு வந்து மேலிடத்து என்கிறார்-இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரிபுவனம் த்வயா ஸ்ம்ரத்பரிய தத் வைரம் அத்ய தைரேவா மிர்ஜித்த-மண்டோதரி ராவணனுக்கு இந்திரியங்கள் சமயம் பார்த்து ராவணனை நலிய வந்தன என்றால் போலே-காவலில் புலனை வைத்து -என்ற பாசுரத்தில் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார்-புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்–நீரேற்று தாரேற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல் சீரற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம் பொன் முடி காரேற்ற மேனி அரங்கன் கையும் கழலும் ஓக்க நீர் ஏற்றன வண் திருக் குறளாகி நிமிர்ந்த அன்றே -திருவரங்கத்து மாலை -33—நெடிய பிரான் -ஓங்கி உலகு அளந்த பராத் பரன் பூமிப் பரப்படைய நீரேற்றுஅளந்து கொண்டு –-புவனி எல்லாம்-நீரேற்று அளந்த நெடிய பிரான் -அருளாவிடுமே -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான அருளும் -உன் பக்கம்-கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்றி இள முலையாய்-இப்படிப் பட்ட அழகையும் இளமையையும் விட்டு இருப்பானோ-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து-கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து–வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே-இதுக்கு வன்மையாவது-பிரிந்தாரை நலிகை–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன் பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ-வாரேற்றி இள முலையாய் -வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே–ஏற்றுகை -முடிகை–வருந்தேல் உன் வளைத் திறமே-உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று கிலேசிக்க வேண்டுவது இல்லை-அவன் அருளும் என்றதாயிற்று –இத்தால்–காரேற் றிருள் -என்று (மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு ) பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து-செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே கழிந்தமை சொல்லி —வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று–வாரேற்றி இள முலையாய் –என்கையாலே இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி–வருந்தேல் உன் வளைத் திறமே -என்று-இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில் பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா–சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-காரேற் றிருள்-இருளான கார் ஏறானது கறுத்த வ்ருஷபமானது-செகிலேற்றின சுடருக்கு உளைந்து-ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது–வெல்வான் போரேற்று எதிர்ந்தது-நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ-நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது–புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது-நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய (இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது ) ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை ஸந்த்யை தான் அல்லது காண் இது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம-காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப் போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது–மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ-கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே-உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்–உன்வளைத் திறமே வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

ஸ்வா பதேசம் –முன்பு உள்ள அஞ்ஞானம் -பக்தி ரூபா பன்ன செவ்விய ஞானத்தால் கழிந்தது என்றும்
உரிய காலத்தில் அனுபவிக்கப் பெறாமையால் அருள பெற்ற மதி நலமும் அழிந்து மோஹாந்தகாரம் மேலிட்டது என்றும்-வாரேற்றி இள முலையாய்-அடக்கவும் மறைக்கவும் அரிதான பக்தி விசேஷம்
வருந்தேல் உன் வளைத் திறமே -இப்படிப் பட்ட பக்தி வெள்ளம் உடைய நீர் உமது அடிமைத் திறம் குலையும் என்று வருந்த வேண்டா –

தாத்பர்யம்--கீழ் சொன்ன கொன்றை மலர் விருத்தாந்தத்துக்கு மேல் மாலையும் வர -அவனும் வாராமல் இருளும் வரத் தொடங்க-ஸந்த்யா காலத்துக்கு வருந்த அவரை ஆஸ்வாஸப்படுத்த பார்ஸ்வத்ஸர் பாசுரத்தை தலைவியை சமாதானப்படுத்தும் தோழி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–இவை இரண்டு ரிஷபங்கள் –இருள் கறுத்த எருது -ஒளி சிவந்த எருது – இரண்டு எருதுகளும் போர் புரியும் காலம் இது
முன் ஜெயிக்கப்பட்டு தனக்கும் ஒரு காலம் வரும் என்று கருவி இருந்து மூலையில் ஒழிந்து இருந்து சமயம் வந்ததும் ஆக்ரோஷமாக சண்டை போட யத்தனிக்கிறது-ஆஸ்ரித அநாஸ்ரித பேதம் இல்லாமல் அவர்கள் தலையில் தனது திருவடி வைத்து ரஷித்த அவனுக்கு அபிமதை யாகவும் அவனாலேயே ரஷிக்கப்பட வேண்டிய உன்னை ரஷியாமல் – உனது கை வளையல்களை கழல விட மாட்டான் –
சோகப்படாதே என்கிறாள்

7-5-கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்;
அவை தாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்?
அப்படி இருக்கிறவன் தான் பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற் குவியல் புதைந்து கிடக்க,
அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒருகால், இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.– முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது?
‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )

‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?பெரிய திருமொழி, 2. 2 : 3.

மீனோடு –முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் –
மற்றவை தான் இல்லையோ -ஸ்ரீ ராமாவதார சிறப்பால் தானாய் என்கிறார்
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனுக்காக -குலசேகர பெருமாள் பெருமாளுக்காக -மனத்திற்கு இனியன் என்றாள் ஆண்டாள்
பாரார்த்தியம் ஸ்வம் பராஸ்மி காகுஸ்த –
கண்ணன் பக்தராக்கி தான் பிரிந்து சென்று திரும்பாமல் -வேறே வேறே இடங்களுக்கு தானே செல்வான்
ராமனோ அனைவரையும் கூட்டிச் சென்றான்
ஸ்ரீ ராம ராம ராமேதி -ஸஹஸ்ர நாம சாரமே இது ஒன்றே

அஞ்சாம் திருவாய்மொழியில்-கீழ் -அநேக வித விஜய அபதானங்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய
அதிசயித சக்தி யோகத்தை அனுசந்தித்து விரோதி நிரசன சமர்த்தன் அவனே என்று அறுதி இட்டவர் –
அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை வெளியிடுகைக்காக -ஸ்வ அபிமான அந்த பாவ மாத்ரத்தாலே
அவனுடைய அதிசயித புருஷார்த்த பிரதத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி யுக்தமான ரேஷன் பிரகாரத்தையும்
சிசுபால மோக்ஷத்தையும்
ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
ஸ்ரீ வராஹ வ்ருத்தாந்தத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான ஆர்த்தித்தவ சாமர்த்யத்தையும்
மார்க்கண்டேய ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான ஹிரண்ய நிரசனத்தையும்
பாண்டவ விரோதி பஞ்சனத்தையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனாய் அதிசயித சீல ப்ரகாசகமான அவதார வைலக்ஷண்யத்தை யுடைய சர்வேஸ்வரனை ஒழிய
அநிஷ்ட நிவ்ருத்தி அர்த்தமாகவும் இஷ்ட பிராப்தி அர்த்தமாகவும் ஆஸ்ரயணீயர் வேறொருவர் இல்லை என்னும் இடம்
சர்வ ஸம்ப்ரதிபன்னம் என்று அருளிச் செய்கிறார் –

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
–7-5-1

கற்பார் –ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல்
‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று;
‘இராம பிரான்’ என்கையாலே-அவை இரண்டும் (பிரியமும் ஹிதமும் )இவ் விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.-இராமன்’ என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
‘பிரான்’ என்கிற இதனால், அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும்படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ஆனந்திக்கச் செய்கிற தன்மையும் பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.

கற்பார் இராம பிரானை – கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
‘மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
-ராக ப்ராப்தம் ஸ்வயம் ஏவ ப்ரவர்த்திக்குமே -ஆசையாலே செய்யப் படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’-ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.

மற்றும்’ என்றதனால், வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை வேறுபடுத்துகிறார் அல்லர். பஜனீய -வணங்கக் கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;-பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை

புல் பா முதலா – பா என்பது, பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது,-பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
பா பதார்த்த வாசகம் -படர்ந்த புல்-இதனால், ‘புல் முதலாகத் தாவரம் முடிவாக’ என்றபடி. புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;-வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.-தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு;-இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.-‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.-இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.-காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.-முற்றவும்’ என்று முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற சொல் உண்டாகையாலே.-ஸாகல்ய வசனம் உண்டாகையாலே
இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது, ‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.-‘திருவயோத்யையினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ சாதனம்-நில மிதியே இராம பத்தியை விளைக்கும்’ –அயோத்தியில் வாழும்- வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,-அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.என்றும், சொல்லுகிறபடியே,
‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,

நற்பாலுக்கு உய்த்தனன் –நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
தன் சேர்க்கையாலே சுகத்தை யுடையவர்களாகவும் தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.

இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு
இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் – அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக
அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கை யடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப்
பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம்
மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்-பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே -பூமா –-இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா )-

—————

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே
.–7-5-2-

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.-நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல்.-நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.-நாரணற்கு –-வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,-அடியார்களுக்காகத் தன்னை ஆக்கி வைக்கயும்,-அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,-அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும்,-அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை-எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?-ஆள் அன்றி ஆவரோ –-மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது; இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; ‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.-ஜெனித்தவர் ஜன்ப பலன் இன்றி இருப்பாரோ –

நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,-அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,-கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின் பிரிவு என்ன,-பெரிய வுடையார் சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,-அதற்கு மேலே, செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.-நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து – யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற இராவணன் முதலான கண்டகரை,-அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று,-இலங்கையின் வாசலிலே வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க் கொண்டு எழுந்தருளி நிற்க,-

நடந்தமை கேட்டுமே.-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றும் சொல்லுகிற பிரயாண வ்ருத்தாந்தத்தை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளின்றி ஆவரோ –

சப்தம் போன்ற விஷயங்களில் பிரவணராய் சர்வேஸ்வரன் என்ற தத்வம் உண்டு என்று கேட்டார் வாய் கேட்டு இருந்து தான் வந்து அவதரித்து அழகு குணங்களால் வசீகரித்து
தன்னால் அல்லால் செல்லாமை -பிறப்பித்து பின்பு பொகட்டுப் போவது படு கொலை போலே –இதில் ஸ்ரீ வைகுந்தம் -தன்னுடன் கூட கொடு போய் ரஷித்த குணத்துக்கு ஆள் ஆகாமல் இருப்பாரோ –

————-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே 
.–7-5-3-

பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.-நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே?-கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ? அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது; அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

அந்த அவதாரத்தினை நினைத்த போது ‘தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்த போது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,-ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ?

‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும் எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று
அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.

ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம், திரு முன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,-அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,-‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,-தன் பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.-

————-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.
–7-5-4-

தன்மை அறிபவர் தாம் –‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’-உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’-கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?-நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் -என்கையாலே -சேதன அசேதனங்களை உண்டாக்குவானும் இவனே -அவனாலே வந்த ஸ்ருஷ்டியும் இவனதே -அவை உபகரணம் மாத்திரமே -உபகாரணமாம் இடத்தில் அசேதனத்தோபாதி சேதனனும் –விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.-

——————-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.
–7-5-5-

தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட-பெரிய பூமியைத் தன் எயிற்றிலே நீல மணி போலே கொண்ட; -ஸ்வேத வராஹம் – தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து-நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;-தான் கொண்ட–முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே,-தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி வேண்டிக் கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.-கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி. அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது;(விக்ரஹம் சீர்மையும் குணத்தின் சீர்மையும் )-அது தான் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கையாலே திருவுரு என்கிறார் இவர் –கோலா வராகம் ஒன்றாய் -பன்றியாம் தேசு -பரமபத நிலையனான தேஜஸ் ஸூ க்கும் அவ்வருகு ஒரு தேஜஸ் ஸூ இ றே

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ, பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே
.–7-5-6-

ஈட்டம் கொள் தேவர்கள் –கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.-எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள்.-ஈட்டம் – திரள்.-சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – மணியக்காரர் -கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம் பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
‘எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ-செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி.

பொற் கை – பொலிவு எய்தின கை;-‘அழகிய கை’ என்றபடி. -கொடுத்து வளர்ந்த கை;-செய்த கூத்துகள் கண்டுமே –அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப் பேச்சுக்களும்-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச் செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

———————-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே
.–7-5-7-

தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட,
அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல,
அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று-இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு, ஒரு நாளிலே வந்தவாறே
தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,

‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:-அருகில் மாலையைப் பாராதே-என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
‘ஆனாலும் நெடு நாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?-உனக்கு ஒரு பற்றுக் கோடு காட்டக் காணாய்!’ என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக் கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,-ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.-தன்னொடும் கொண்டு–இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து.-உடன் சென்றது உணர்ந்தும் – ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடு போமாறு போலே கொடு போனான் காணும்.

நெடுநாள் தேவதாந்த்ர பஜனம் பண்ணினவன் மறந்தும் புறம் தொழா மாந்தரான சாத்விக புருஷகாரம் ஆவது ஆதல் -பிராட்டி புருஷகாரமாவது ஆதல் அன்றிக்கே தாமஸ தேவதையை புருஷகாரமாக கொண்டு வர -புறம் தொழா தவகம் படி சீற -அவர்களையும் பொருந்த விட்டு -மேன் மேலே ரஷித்த நீர்மைக்குப் போருமோ கீழ் சொன்ன குணங்கள் என்கிறது –

——————

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே
.-7-5-8-

மல்லல் அரி உருவாய்--மல்லல்-பெருமை.-‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’-இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே,-மல்லல் என்று செல்வமாய்,-அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்

ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்-

—————-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ
.–7-5-9-

உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?-பார்த்த சாரதி -நின்ற திருக் கோலம் -அங்கே நடந்தும் தேர் ஒட்டியும் –-பாண்டவ தூதன் நடந்தாலும் இன்று இருந்த திருக் கோலம் – உபதேசத்தால் சேவித்தும் பிரயோஜனம் பெறுவோம்-நடந்த நல் வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.

‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?-தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு? தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,
பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் – எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.-

———–

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே
.–7-5-10-

மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?-அவை போன்றது அன்றி,-சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.

வார்த்தை அறிபவர் – மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ? வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.- கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ- அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?-ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து- பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.-அவன் செய்யும் சேமத்தை எண்ணி –பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணி விடுகை. ‘-இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’ இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ? மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;-இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?-மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே இதிற் சொல்லுகிற குணம்.-மேற் கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?-

————-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.
–7-5-11-

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு--பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர்-நாட்டார் செயல்களைக் கண்டாதல், போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.-நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.-போலி வார்த்தைகளாவன: உபாய பல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல்,-உத்தேஸ்ய துர்லபத்துவம் – பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல்,
ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல் என்னுமிவை.

தெளிவுற்ற கண்ணனை-இவன் தெளிய மாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை

தெளிவுற்ற ஆயிரம் – மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே

‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’
 என்பது, ஆசார்ய ஹ்ருதயம், –71

பாமரு மூவுலகத்துள்ளே –-‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி.
அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர்.
பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply