ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு – பொன்னுலகு ஆளீரோ -6-8-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

நான்கு தூது பாசுரங்கள்-அன்னமோடு அழுதல் துறை-தூது போகாத அன்னம்-பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம்-இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ
இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது
–குடியாலே வந்த சீர்மை யுடைய அன்னங்கள் என்றும் -இல்லாத -அன்னங்கள் என்றும்-வேறே ஆள் இல்லாமல் இவற்றை இரந்தாலும்-பெருமாள் உலகம் -ஸ்ரீ வைகுண்டம் –-நீல தோயதம் -மின்னன்ன மேனி-பெண் தூது போக மாட்டார் போல்-வினையாட்டியேன் நான் இரந்தேன் -பொன்னுலகு ஆளீரிலும்-வந்து இருந்து உம்முடைய பெடையோடும் -அலர்மேல் அசையும் அன்னங்கள் -அங்கும் உண்டே-என் நலம் கொண்ட பிரானுக்கு உரையீர் -அங்கும் உண்டே –
சேர்ப்பார்களை பக்ஷிகள் -ஞான அனுஷ்டானம் சிறகு–அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு-ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்-சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம்-

பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் , அருளுகிறேன் என்னுதல் அருளேன்  என்னுதல்  சொல்லாதே பேசாதே இருந்த படியால் – வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –

இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும் நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து வெறுக்கிற பிரகாரத்தை நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும் அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம் அருளக் கண்டது இல்லை அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே–அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு–ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்-சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம்

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே
–29-தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் – -அன்னமோடு அழிதல் துறை

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–
58-உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும் என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல் எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை-அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

இன்னன்ன தூது--இப்படி பட்ட தூது ,-தரித்து இருந்து விடுகிறது அன்று —-போகத்துக்கு விடுகிறது அன்று ..-சத்தா தாரகமாக விடுகின்ற தூது –இளைய பெருமாள் சுக்ரீவன் கூட இருக்க தரித்து இருந்து தூது விட்ட பெருமாள் போல் அல்ல–கிம் கார்யம் சீதயா மம போல் அல்லவேஅஞ்சிறைய மட நாராய் -தழுவ தூது -போகத்துக்குத் தூது -அலற்றுவன் தழுவுவன் என்றாரே அங்குகதேஹி  ஹரிசார்தூல புனராகமநாயது பிராணா நாமபி-சந்தேஹோ மாமாச்யாநாத்ரா சம்சய  -சுந்தர காண்டம் 39-22—என்று
பிராட்டி திரு வடிக்கு தன் தசையை அருளி செய்தது போலே–எம்மை-நான் இருக்கிற படியே அமைந்து கிடீர் இருக்கிறது-தூது போவார்க்கு-ஒரு ஐந்தர வியாகரண பண்டிதனை-தூது போக விடும் இடத்தை
உங்களைப் போக விடும்படியான தசை கிடீர்–ஆள் அற்ற பட்டு-ஆள் அறுதி பட்டு ..உபய விபூதி நாதனும் கூட ஆள் விட இருக்கும் அவள் இறே-மிதிலா மண்டலும் ஸ்ரீ கோசல வள நாடும் குறை வறுத்தாலும்
பின்னையும் குறை கிடந்ததற்கு ஒரு மூலையிலே பத்து கோடி பேர் பிணை உண்ணும் படிக்கு ஈடாக
பரிகரம் உடையவள் இறே இப்போது ஆள் அறுதி பட்டேன் என்கிறாள்–இரந்தாள்-அவன் தான் செய்யக் கடவத்தை இவள் செய்த படி ..-அத்தலை இட்டு விடக் கடவது  இது இறே இவள் தான் விடுகிறது-இவள்-
அப்ரேமேயம் ஹி தத் தேஜ
-ஆரண்ய காண்டம் -37-18-என்னும் இவள் கிடீர்–அன்னன்ன சொல்லா
அப்படி பட்டவை சொல்லா-நான் சொல்ல விட்ட வற்றை சொல்லி ,–தானும் வேண்டும் வார்த்தை இட்டுக் கொண்டு சொல்லுகிறதும் இல்லை–ஓலை பாதி தூது பாதி என்று சொல்லும் அது பொய்யாய் இருந்தபடி–நிரபேஷராய் இருப்பவர் சாபேஷர் கார்யம் செய்து- தாங்கள் நிரபேஷராய் இருக்க வேண்டாவோ–பெடையோடும் போய் வரும் – போம் போது -அனுபாவ்ய குணங்களை அனுசந்தித்து கொடு போம் -வரும் போது-அனுபூத குணங்களை அனுசந்தித்து கொடு போம் — அடிமை செய்வார் மிதுனமாய் இருந்து இறே அடிமை செய்வது-ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே-
பெரிய திரு அடி ஸ்ரீ கீர்த்தியோடே-அத்ரி பகவான் அனுசூயையோடே- பாதேயம் புண்டரீகாஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்–ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே திருமால் இருஞ்சோலை சேவை உண்டே–

நீலம் உண்ட இத்யாதி —அங்கு உள்ளார்க்கு சர்வ ஸ்வதாநம் பண்ணும் வடிவு –
நீலதோ யத் மத்யஸ்தா வித்யுல்லே கேவ பாஸ்கரா  –நீளா ஸூக்தம்-பிரிந்த போது மின் இலங்கு திரு உருவு –திருநெடும் தாண்டகம் -25-என்னும் படியாய்-கலந்த போது கரு முகில் ஒப்பார் -திருநெடும் தாண்டகம் -24-என்னும்படியாய்  இறே இருப்பது–நீலம் உண்ட மேனி – ஒளி படைத்த மேனி -மின்னல் கறுப்பை விழுங்கி –கறுமைக்கு முக்யத்வம் -மின்னலுக்கு முக்யத்வம் இரண்டும் உண்டே-இரண்டுக்கும் பிரமாணம்–பெண் தூது செல்லா -அங்கு ஆண் தூதோ செல்லுவது —அபலைகள் தூது செல்லாதோ ?–
அபலைகள் தூது அங்கு செல்லாது என்று இருந்தீர்களோ ?–-அபலையாய் இருந்து வைத்து தூது விடுவாள் என்று இருந்தீர்களோ ?–உங்கள் பாடும் அவன் பாடும் குற்றம் என் ?-என் குற்றத்தாலே இறே
(மத் பாபமே -நானே தான் ஆயிடுக )–அன்னன்ன நீர்மை கொலோ –அப்படி பட்ட ஸ்வபாவங்களோ ?-குடி சீர்மை இல் அன்னங்களே —-உங்கள் பாடு குற்றம் உண்டோ ?-அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ —நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே சொல்லிற்று இலி  கோள் என்றும்-

எம்பெருமான் இடத்திலே அன்றோ – ஸ்வயம் புருஷார்த்தமாக போக வேண்டிய இடம் அன்றோ
பெண்மையையும் ஆள் அற்ற நிலையையும் பார்த்து இரங்காமல் தூது போகாமல் – பேடை உடன் உலாவுவதே–அனுமன் தூது–கண்ணன் தூது–நளன் தூது – ஆண் பிள்ளைகள் பொருட்டாகவே தூதுகள் உள்ளனவே-குடிச் சீர்மை இல்லாத –என்று குலத்தையும் உட்படப் பழிக்கின்றாள்-நீலம் உண்ட-மின்னன்ன மேனி பெருமான்--மின் உண்ட நீலம் அன்ன மேனி –சத்வ குண பரிபூர்ணனாய்-சார அசாரங்கள் விவேகித்து அறிய சக்தன்-ஆச்சார்யன் விவஷிதம் –

இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூது–நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ–எம்மை-கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய நம்மை அன்றோ-வீசும் சிறகால் பரப்பீர் –ஆள் அற்ற பட்டு–வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ அபேக்ஷிக்கிறது–இரந்தாள்–அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று–இவள்-தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ அபேக்ஷித்தது–என்று–1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்-2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்-3-தன் ஆள் அறுதியாலும்-4-தன் பெண்மை பாராதே -நம்மை இரந்தாள் என்று நினைத்து–அன்னன்ன சொல்லாப்–அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது–பெடையொடும் போய் வரும்-ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற–நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்–நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே–ஸ்யா மளத்வ ஹிரண்மயத்வங்கள் கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்–பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?–பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ–குடிச் சீர்மையில் அன்னங்களே –குடிப் பிறப்பால் வந்த சீர்மை–அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி–

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி

1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே–நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே-ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு யாதாயாதம் பண்ணா நின்றார்கள்-உபாஸ்யத்வ போக்யத்வ ப்ரகாஸகத்வமாம் படி வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில் பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ – இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்–நீலம் உண்ட மின்னன்ன மேனி-உபாஸ்யத்வம் போக்யத்வம் ப்ரகாஸகத்வம் மூன்றுமே உண்டே–ஸ்வ பாவ ஸுத்தியும் ஸ்ரைஷ்ட்யமும் அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று-அன்னன்ன சொல்லாப்-அந்த அன்னமானது சொல்லுமது அல்ல–பெடையொடும் போய் வரும்-தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்-போய்வருமது யுண்டாயும் என் தசையை இவை சொல்லா என்று அந்வயம்சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்-நீலம் –இத்யாதியாலேநீலம் உண்ட மின்னன்ன மேனிப் பெருமான்-நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய் குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்–உலகில் பெண் தூது செல்லா-பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல-அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை-குடிச் சீர்மையில் அன்னங்களே –குடிச் சீர்மையாவது-அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை-அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ-அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

ஸ்வாபதேசம்-
பகவத் விஸ்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி-பிராப்திக்கு ஸஹ காரிகளாய் இருந்தவர்களையும் கூட இன்னாதாக வேண்டும் படியான தசையைச் சொல்லுகிறது 

தாத்பர்யம்
கீழ் நாயகியின் தசையை திருத்தாயார் திருவரங்கன் பதில் கிடைக்காமல் -அர்ச்சையில் பேசாரே
பரமபத நாதனுக்கு அங்கு கண்ட பக்ஷிகளைத் தூது விட-அவைகள் சொல்லாமல் தங்கள் கார்யமே பார்த்து இருக்க-ஓ ஹம்ஸங்களே-உங்களை விட வேறு ஒருவரும் இல்லாமல் தூது விட அவன் இருதயத்தில் படும்படி நீங்கள் முன்னமே அவன் சேவையைப் பெறுவீர்-எனது காரியமும் பார்க்காமல்-சொன்ன பின்பும் கூடப் போகாமல் கூட சென்று அறிவியாமையால் ஸ்த்ரீகள் உடன் திரிகின்றிர்களே திரு ஆபாரணங்கள் -அத் உஜ்ஜவலமான நீல மேக ஸ்யாமளன் ஸ்வயம் பிரயோஜனமாக போக வேண்டி இருக்க போகாமைக்கு -வெறுத்து ஒரு பென்னுக்குத் தூது போக்கத் தகாது பெரும் குலத்தில் பிறக்காமல் இது செய்தீர்

—-

6-8-பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழிகள் இரண்டும், மோஹமும் உணர்த்தியுமாய்,
இதில் தூது விடுகிறதாக அன்றோ இருக்கிறது;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்க்கு “மரணத்தில் பாதி அவஸ்த்தை” என்னும் மோஹம் இல்லையே;

உலகத்திலே, ஒவ்வொருவருக்கும் நனவு கனவு சுஷுப்தி மூர்ச்சை மரணம் என்று சொல்லப்படுகின்ற
ஐந்து அவஸ்த்தைகள் உண்டு;

அவற்றுள்,நனவாவது,-ஜாக்ரத் தசை – புறக்கரணங்களும் அந்தத்கரணமும்
தனது தனது விஷயங்களை அறிந்து பற்றுகிற நிலை.

கனவாவது, புறக் கரணங்கள் எல்லாம் அடங்க மனம் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க
இந்தச்சரீரத்தோடு ஒத்த வேறு சரீரங்களையும் பகலில் காண்கிற விஷயங்களோடு ஒத்த விஷயங்களையும்
ஈசுவரன் உண்டாக்க அது காரணமாக, முடி சூடுதல் முதல், தலை அறுப்புண்ணல் இறுதியாகக் காண்டல்.

ஸூஷுப்தியாவது, புறக் கரணங்களும் மனமும் அடங்க, உஸ்வாச நிஸ்வாசங்களாலே பிராணன் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க,
நனவிலே தன் தன் விஷயங்களிலே இந்திரியங்கள் பரந்திருந்த காரணத்தால் வந்த இளைப்பெல்லாம் மாறும்படி, புரீதத் என்கிற
நாடியிலே பரமாத்மாவின் ஸ்வரூபத்திலே சேர்ந்து சிரமம் எல்லாம் நீங்கி இருத்தல்.

மூர்ச்சையாவது, ஸூஷ்ம பிராணனோடும் ஸூதூல சரீரத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கும் நிலை.

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.
இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே
சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி
‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரகமீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10.காண்க.

இனி இவர்க்கு மோஹமாவது,
புறத்திலேயுள்ள பொருள்களை நினைத்தற்கும் இயலாதவராய் விஷயங்களினின்றும்
அந்தக் கரணம் விடுபட்டதாய், மனத்திற்கு அவனே விஷயமாய், அவன் குணங்களையே அநுபவித்தல்.
அதாவது,
ஆத்மாவாய் இருப்பவனே ஞானத்திற்கு விஷயமாய்த் தன்னை மறக்கை.
மேல் திருவாய்மொழியில் நிலை “நான் மநு ஆகின்றேன்” என்றும்,
“அனந்தன் என்னும் திருநாமமுள்ள அப் பரம்பொருள் எங்கும் இருப்பதால் நான்
அப் பரம்பொருளாகவே இருக்கிறேன்” என்றும் சொல்லுகிற நிலைபோலே.

உணர்த்தியாவது,
“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே
“மாலுக்கு” என்ற திருவாய்மொழியிலும், “உண்ணுஞ் சோறும்” என்ற திருவாய்மொழியிலும் உண்டான மோஹத்தையும்,
உணர்ச்சியையும் திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘மேல்’ என்று தொடங்கி.
‘மேல் திருவாய்மொழியில்’ என்றது, “மாலுக்கு” என்ற திருவாய்மொழியில் என்றபடி.

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.
‘உணர்த்தியாவது’ என்றது, “உண்ணும் சோறும்” என்ற திருவாய்மொழியில் உண்டான உணர்த்தியாவது என்றபடி.
“த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.
தம்மையும் உணரக் கூடியவராய் உலக விருத்தாந்தத்தையும் நினைக்கக் கூடியவராதல்.
நிர்க் குணமான விஷயத்திலே அன்றே இவர் மூழ்கியது, குணாதிக விஷயத்திலே யன்றோ.
சேஷி பக்கலிலே நினைவுண்டானால் சேஷ பூதனான தன்னையும் காணும் அன்றோ.
மேல், நெடும் போது அவன் குணங்களை நினைக்கையாலே தரித்து வலிமை குறைவும் நீங்கிப் புறத்திலே யுள்ள
பொருள்களையும் நினைக்கக் கூடிய நிலையை அடைந்தார்;
அவ்வளவிலே, இவர் தரித்தவாறே பழைய அலாபமே தலையெடுத்து
ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தவராய் அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

மேல் திருவாய்மொழியில், திருத்தாயார் “எங்ஙனே புகுங்கொல்?” என்று நொந்ததுவே பலித்து,
தன் சாபலத்தாலே புறப்பட்டாள்,
முடியப் போய்ப் புக மாட்டாமல் தன்னுடைய நகரத்தை அடுத்த உபவனத்திலே விழுந்து கிடந்து,
அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே, கண்ட பறவைகளையெல்லாம் தூது விடுகிறாள்.
தனி வழியே புறப்பட்டுப் போம்படியாய் விழுந்த இவளுக்குத் தூது போவார் இலரே;
உண்டானாலும் இவள் தனக்கு முன்னே ஈடுபட்டுக் கிடப்பர்களே;
இனித் தன் பக்கத்தில் வசிக்கிற பறவைகளுக்கு மேற்படக் கால் நடை தந்து போக வல்லார் இலரே;
இவ்வளவிலே நீங்கள் என் நிலையை அறிவிக்க வேணும் என்று அவற்றின் காலிலே விழுகிறாள்.

“அஞ்சிறைய மடநாராய்” என்ற திருவாய்மொழியில் என்னை நினைத்தானத்தனை, தன்னை மறந்தான் என்றாள்;
இத் தலையில் அபராதம் பாராதே, அத் தலையில் அபராதத்தைச் சகித்துக் கோடல் பற்றாசாக,
அபராதத்தைச் சகித்துக் கொள்ளும் தன்மையைப் பார்த்து வருவது என்று ஆள் விட்டாள்.
“வைகல் பூங்கழி” என்ற திருவாய்மொழியில், மேலே, இருமுறை தூது விட்டாளே? அவற்றிற்கும் இதற்கும் வாசி யாது? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘அஞ்சிறைய’ என்று தொடங்கி
என்னை-பாபம்செய்த என்னை. தன்னை-அபராதங்களைப் பொறுக்கின்ற தன்னை.

“வைகல் பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில், ‘அவ்விடங்களிலே துன்புறுவார் பலர்
உளராகையாலே அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை’ என்றார்;
இங்கு,‘இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப் பண்ணிற்று என்றாள்’
என்கிறார்; இதுவும் ஒரு நிர்வாகம் என்று கண்டுகொள்வது.
‘இருவரையும்’ என்றது,பிரிந்தால் தரித்திருக்கப் போகாத வைலக்ஷண்யத்தையுடைய அவனையும்,
பிரிந்தால் தரித்திருக்க ஒண்ணாத துன்பத்தையுடைய தன்னையும் என்றபடி.
‘விசேஷஜ்ஞனாகையாலே’ என்றது, தன் வைலக்ஷண்யத்தையும் இவளுடைய துன்பத்தையும் அறியுமவனாகையாலே என்றபடி.

இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப் பண்ணிற்று என்றாள்;
விசேஷஜ்ஞனாகையாலே துன்பத்தை அறிவிக்க வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூதுவிட்டாள்.
இத் திருவாய்மொழியில், வாராமைக்கு அடி பரப்பனாகையாலே என்று பார்த்தாள்;
‘பரப்பனாகையாலே’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகிற“முன்னுலகங்கள் எல்லாம் படைத்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்”-திருவாய். 6. 8 : 6.– என்கிறபடியே,
அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏக ரசன் ஆகை யன்றோ என்று பார்த்து
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூது விடுகிறாள் என்று பட்டர் அருளிச் செய்வர்.
“பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே,
உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.

“இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை
நுகர்ந்தவளான நான்”
“ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.
என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,
அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

‘புறப்பட்டவள் முடியப் போக மாட்டாதே நகரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூது விடுகிறாள்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.

“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே
உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே,தலைவனுடைய பேர் அருளையே பற்றாசாகக் கொண்டு தூதுவிட்ட பேர்
உளரோ? என்ன, ‘உளர்’ என்று, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்‘கீர்த்தியை யுடைய’ என்று தொடங்கி.
இது, பிள்ளான் நிர்வாஹத்தைப் பற்றியது.

“ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.
பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

“தினைத்தனையும் விடாள்” என்ற திருத் தாயாருடைய விருப்பமே பலித்தது;
அங்கே புக்கு அநுபவித்தாள் என்பது, பிள்ளான் நிர்வாஹத்திற்குக் கருத்து.
பட்டர் திருவுள்ளம், இத்திருவாய்மொழியின் முடிவிலே கலவி உண்டானால்,
“ஆடி ஆடி” என்ற திருவாய்மொழியின் ஈற்றிலே கலவி தோன்ற அருளிச் செய்து,
“அந்தாமத்து” என்ற திருவாய் மொழியிலே அதனை விரித்து அருளிச் செய்தாற் போன்று,
மேல் திருவாய்மொழியிலே கலவியை விளக்கி அருளிச் செய்வர்;
அங்ஙனம் அருளிச் செய்யாமையாலே கலவி இல்லை என்பது. பட்டர் நிர்வாஹம்
“எங்ஙனே புகுங்கொல்” என்றதனை நோக்காகக் கொண்டு எழுகின்றது.
“செல்ல வைத்தனள்” என்பதற்குச் செல்ல ஒருப்பட்டாள் என்பது பொருள்.

6-3/6-4 -மட்டும் தானான நிலை -இந்த பதிகத்தில் இது வரை –
அபராத சஹத்வம் /படைத்த பரப்பு முதல் இரண்டுக்கும் தூது
ஷமா -தீஷா -தம் பிழையை மறப்பித்தது ஷமா உணர்த்த வ்யூஹத்தில் தூது முதலில்
சிறந்த செல்வம் -மறக்கப் பண்ணிற்று -தீஷா உணர்த்த விபவத்தில் தூது இரண்டாவதில்
இதில் -படைத்த பரப்பு மறக்கப் பண்ண சாரஸ்யம் உணர்த்தி பரத்வ த்வயத்தில் தூது –
பரத்வ த்வயத்தில் தூது -வைகுண்ட நாதனைக் கண்டு பரத்வம் -எனக்குச் சென்றாகிலும் என்று அந்தர்யாமித்வம்
அடுத்து தமரோட்டை சஹ வாசம் மறக்கப் பண்ண சௌந்தர்யம் உணர்த்தி அர்ச்சையில் தூது

எட்டாம் திருவாய் மொழியில் -கீழே ப்ராப்ய விஷயத்தில் அதி த்வரிதரான இவர்க்கு த்வர அனுரூபமான ப்ரவ்ருத்தியில்
யோக்யதை இல்லாமையால் கடக முகத்தால் பிராபிக்கையில் அபேக்ஷை பிறந்து -கடக அனுரூபமான அவனுடைய
ஸ்ருஷ்ட்ருத்வாதி ஆகாரத்தையும்
அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தையும்
அதிசயித புருஷ அநு பாவ்யமான போக்யதா வை லக்ஷண்யத்தையும்
உதார ஸ்வ பாவத்தையும்
அத்யந்த பவ்யத்தையும்
அபி ரூபனாய் அகிலாத்ம பூதனானவனுடைய அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
சர்வாதிகாத்வத்தையும்
அந்த பரத்வத்தோடே கூடின ஸுலப்யாதி அதிசயத்தையும்
உபய ப்ரயுக்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை வடிப்பித்த மஹா உபகாரத்தை ப்ரீதி அதிசயத்தாலே
ஐஹிக ஆமுஷ்மிக சகல பதார்த்தங்களையும் கடக்கருக்கு சமர்ப்பணீயம் என்கிற அதிசயித ஆதாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால் தூது விடத் தேடின நாயகி தூது போகிற பக்ஷிகளைக் குறித்து
பிரதியுபகார ப்ரதர்சனம் பண்ணின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
.-6-8-1

பொன் உலகு ஆளீரோ –1-ஈஸ்வரனுடைய விபூதியானது பிரிவு நிலையில் அவனையும் தன்னையும் சேர்த்தார்க்குப் பரிசிலாகக் கண்டது என்று இருக்கிறாள்.-2-இரண்டு விபூதிகளும் ஒரு மிதுனத்துக்கு அடிமை அன்றோ.-அந்த நிலை பிறந்தால் சொல்லலாம் அன்றோ.-3-சர்வேஸ்வரன் இருக்க இவ்விடம் அராஜகமாய்க் கிடக்கிறது என்றிருக்கிறாள்.4-பிரகிருதி சம்பந்தம் அற்று ஒரு தேச விசேடத்திலே போய் அநுபவிக்குமதனை இங்கே இருந்தே கொடுக்கிறாள்.-5-ஒருவரை ஒருவர் பிரிந்து துழாவுகிற சமயத்திலே கொடுக்கை இருவர்க்கும் ஒக்கும். சேர்க்கைக்காக உடம்பு இழப்பாரும் உடம்போடே கூடி நின்று சேர விடுவாருமாய் அன்றோ-உங்கள் உலகமும் நான் பட்டது பட வேணுமோ? என்பாள் ஆளீரோ என்கிறாள். –ஈஸ்வர விபூதி தான் வீணாக கிடக்க உங்கள் விபூதிகளும் வீணாக வேண்டுமோ-அவன் தன்னையும் தன்னுடைமையையும் இவளுக்கு ஆக்கி வைத்தபடி.-இவள் தான் உபய விபூதியையும் கொடா நின்றாளாகில்,
அவன் வந்தால் தானும் அவனும் எங்கே இருப்பது?’ என்ன,-‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச் செய்வர்

‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளை யுறங்கா வில்லி தாசரைக் கொண்டு ஆழ்வான் புக, ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து ஏறப் போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.-பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –-எம்பெருமானார் இங்கேயே இருக்க -ஆளவந்தார் திருவடி என்கிறார் –பரமபதம் போக ஆழ்வான் வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்றவாறு-

பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –-1-கைப்பட்டதனைக் கொடுத்தன்றோ மற்றொன்று தேடிக் கொடுப்பது.-2-தனக்கு ஆக்கின அடைவிலே கொடுக்கிறாள்.
நித்திய விபூதியைக் கொடுத்தே அன்றோ, லீலா விபூதியைக் கொடுத்தது;-இங்கே இருந்தாலும் ஞானம் பிறந்தால் அணித்தாகத் தோற்றுவது அவ்விடம் அன்றோ:-3-“மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்” – திருவாய். 9. 3 : 7.-என்றே அன்றோ இருப்பது. பிராப்தி தசையிலும் முற்பட்டிருப்பது அவ்விடமே அன்றோ.-4-அவன் உடைமை என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாவது அன்றோ இவ் விடம்.-5-அடிமைக்கு அடைத்து ஏற்றலாயன்றோ இவ்விடந்தான் இருப்பது;
அவ்விடம் அடிமையால் அல்லது செல்லாத இடமாய் அன்றோ இருப்பது.-6- அன்றிக்கே, தூது போனாரது பரம பதம், அது உடையாரது லீலா விபூதி என்னுதலுமாம்.-புவனி முழுது ஆளீரோ –7- உத்தேஸ்யமான நித்திய விபூதியைக் கொடுத்தவள், தியாச்சியமான லீலா விபூதியைக் கொடுப்பான் என்? என்னில், இவை செய்கிற உபகாரத்தை நினைத்து, ‘இன்னது கொடுப்போம்’ என்று அறியாமல் கலங்கி. பண்டு கலங்கினாரும் இப்படியே செய்தார்கள்;

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!-உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.-உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.-பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!

நான் இரந்தேன் –-அத் தலை இத்தலையானபடி.-ஸ்ரீஜனகராஜன் திருமகளான வேண்டற்பாட்டோடே அன்றோ தான் தூது விடுகிறது இவள்!-இரந்தேன் – மேலே, அவன் திருவடிகளிலே நான்கு முறை சரணம் புக்கார்;-இப்போது அவன் அடியார்கள் பக்கலிலே சரணம் புகுகிறார்:-அது தப்பிலும் இது தப்பாதே அன்றோ. இதற்கு வேறு விலக்கடி இல்லையே.-பிரார்த்தனா மதி -பிரார்த்தித்தலாகிற புத்தியன்றோ சரணாகதி ஆகிறது.
தப்புதல் இல்லாத உபாயத்தைப் பற்றுகிறாள்.-இனங்காள் இரந்தேன் –மிதுனமாயிருப்பார்க்கு இரந்தார் வாசி தெரியுமன்றோ.-சரணாகதி செய்தவர்கட்குத் தன் உயிரைக் கொடுக்குமவையே. -கபோத உபோத்யானம் -சாஸ்திரம் புறா கதை –
நல் நலம் புள் இனங்களுக்கு அன்றியே படு கொலைக் காரர்க்கும் இரங்க வேண்டும்படி அன்றோ -என்னுடைய நிலை-நான் இரந்தேன் ‘சரணாகதி அடைதற்குரிய குணங்கள்’ என்றது,-“நலம்” என்ற சொல், வாத்சல்யம் முதலிய குணங்களையும்,-“புள்” என்ற சொல்,(இரு சிறகு) ஞான அநுஷ்டானங்களையும்,-“இனம்” என்ற சொல்,புருஷகாரத்தையும்-இரந்தேன் -ப்ரபத்யே அர்த்தமும் கூறுகின்றன –வினையாட்டியேன் நான் இரந்தேன் –-எல்லாம் கொடுத்தாலும் அவற்றுக்கு ஒன்றும் செய்ததாகத் தோற்றாதே பல் காட்டுகிறாள்.
அவர்கள் செய்கிற உபகாரம் அளவு பட்டிருக்கில் அன்றோ ஒப்பாக ஒன்று தேடிக் கொடுக்கலாவது.-இவனுக்குப் பணி குறையை அறிவிக்கையே அன்றோ,
மேல் உள்ளன எல்லாம் அவன் பணி அன்றோ.

என் நிலைமை உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ –-துயர ஒலி கேளாமல் ஜீவிக்கப் பாருங்கோள்! சக்கரவர்த்தி பெருமாளை முடி சூட்டப் பாரித்த போது, இருடிகள் இராக்கதர்களாலே நோவு படுகையாலே, இராச்சியம் திரு வுள்ளத்தில் பொருந்தாமை புறப்பட்டுப் போனார் அன்றோ; அப்படியே, பெண் கொலையும் துயர ஒலியும் கேட்டால் இவை உபய விபூதியையும் ஆள மாட்டா என்று இருக்கிறாள்.

————–

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே
.–6-8-2-

முதற் பாசுரத்தில் ‘அவன் பதம் கொடுத்தாள்; அதற்கு மேலே ஒரு பதம் தேடிக் கொடுக்கிறாள் இப் பாசுரத்தில்.-அவன் பதமாகிறது, உபய விபூதியையும் கொடுக்கை அன்றோ,-அதற்கு மேலான பதமாகிறது, அவனாலே விரும்பப்படும் தன்னைக் கொடுக்கை.
தன்னைக் கொடுக்குமிடத்திலும், ‘பின்னை முன்னே’ என்னாதே, எல்லாரும் காணக் கை மேலே அன்றோ கொடுக்கப் புகுகிறது.-அவன் திருமுடிக்கு ஆபரணமான என்னுடைய கையை உங்களுக்குப் பாத பீடம் ஆக்குகிறேன்.

நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள் தோறும் பாலோடே கூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்க வேணும். “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள்,
இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பகவத் விஷயத்தில் உபகார பரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒரு கை பகுந்திட்டோமாகில்
செய்யலாவது உண்டோ?’ என்று கைவாங்குமதன்று;-அவர்கள் விரும்பினவற்றையே தேடி இட வேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.

கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு –-உண்டாரை உண்ணுவிக்கத் தேடுகிறாள் அன்றோ. இதனால் என் சொல்லியவாறோ? எனின்,
இவர்க்கு முன்னே இவர் விரும்பிய பொருள், இவரைப் பற்றினார்க்கு முற்பட்டிருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-“வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்.-

என் சக்கரத்து கனி வாய்- கையும் திருவாழியுமான அழகினைக் காட்டுவது முறுவலைக் காட்டுவதாய் என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.-பிரிந்து போகிற போது ‘இவள் சத்தை கிடக்க வேணும்’ என்று நினைத்துச் செய்த-புன்முறுவலுக் காயிற்று இவள் தோற்றது.-என் கனி வாய் –-திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக் கை;
தமக்கு முற்றூட்டு திருப் பவளம்.-அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான்,
என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.-அவனுக்கே கை யடைப்பு ஆயிற்றே. கை மேலே இடுமே.

மெய் அமர் காதல் – ‘தம்மைப் போலே பொய்யுமாய் நிலை நில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-சத்தியமான காதல் என்றபடி.-அன்றிக்கே, ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
“மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.

கிளிகாள் விரைந்து ஓடி வந்து –-பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற் போலேயும்,-பெருமாள் மீண்டு எழுந்தருளுகிற போது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற் போலேயும், நீங்கள் முன்னே வர வேணும்.-அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள்.-நீங்கள் முற்பட வந்த பிரீதி-சாத்மித்தால் – பொறுத்தால், பின்பு அவன் வரவாக வேணும்-அவனுடனே கூட வரில் வாய் புகு நீராய் உங்களைக் கொண்டாட ஒண்ணாது;-ஆன பின்பு நான் முறை கெடாமல் அநுபவிக்கும்படி வாருங்கோள்-உபகாரகரான உங்கள் காலிலே முற்பட விழுந்த பின்பு அவன் காலிலே விழும்படி பண்ணுங்கோள்.-ஆகையால் அன்றோ, நம் முதலிகள் குரு பரம்பை முன்னாகத் துவயத்தை அநுசந்தானம் செய்கிறது-சேதன ஈஸ்வரர்களுக்கு –ஆச்சார்யர்–ஈஸ்வரர் -இருவருக்கும் -ஆழ்வார்-நாயகி -கைங்கர்யம் -போக்யதை -தானே-சாஸ்திரம் சஸ்த்ரம் கொண்ட இருவருக்கும் கைங்கர்யம் பண்ணக் குறை இல்லையே-அன்யாபதேசத்துக்கு இதனால் விரோதம் இல்லை –

—————–

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே
.–6-8-3-

என் குழல் மேல் –அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.-அங்கு மஹாராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது; இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ. தலையான பரிசில் அன்றோ இது தான். -தலைக் குழல் என்னும் காடு -தலையான பரிசு-உங்களையும் அவனையும்-ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி.-தலையான ஊண் அன்றோ.

படை நீறு எழச் செற்ற பிரான்–ஆயுதம் எடாமைக்கு அநுமதி பண்ணுகையாலே, தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான்.-தன்னை அழிய மாறியும் பரோபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடையவன் ஆதலின் ‘செற்ற பிரான்’ என்கிறாள்.
இதனால், தாழ்த்தது ஒளபாதிகம் என்று இருக்கிறாள் என்றபடி.

சூடிய தண் துளபம் உண்ட – சாரதியாய் நின்று தேரினை ஓட்டுகிற போது வைத்த வளையத்திலே மதுவைக் குடிக்கிற வண்டுகள்,-அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும், அந்த நிலையை அடைந்து அநுகூலிக்கிறது திருத் துழாயாகக் கடவது,-தூ மது வாய்கள் கொண்டே – அவ் வளையத்தில் மதுவைக் குடித்துச் சுத்தமாய் இனிதான வாய்களைக் கொண்டு.-அன்றிக்கே,-வாய்கள் கொண்டே என்பதற்கு, இனிதான பேச்சினைக் கொண்டு என்னலுமாம்.

—————

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.
–6-8-4-

என் முல்லைகள் மேல் தும்பிகாள் –-உடன் கேடராய் ஒக்கப் பட்டினி விட்டுக் கிடப்பாரைப் போலே அன்றோ நீங்கள் கிடக்கிறது.-இவள் குழலில் பூவைப் போன்று, உத்தியானத்திலுள்ள பூக்களும் சருகா யன்றோ கிடப்பது;-பூ மது உண்ணச் செல்லில் 
மதுவையே உண்பவைகள் ஆகையாலே பூக்கள் உள்ள இடம் தேடி மது பானம் செய்யப்போகக் கடவீர்கோள் அன்றோ.-இவள் பக்கத்தில் உள்ளவை அன்றோ உறாவிக் கிடப்பன; அங்கு உள்ளவை எல்லாம் செவ்வி பெற்றிருக்குமன்றோ;

பொய் செய்து –-கலவிக் காலத்தில் குறைவு இருக்கிறபடி.
பல காலம் ஜீவிக்கச் செய்தேயும் ‘ஒரு கனவாய்ப் போயிற்று’ என்பர்களே அன்றோ,
பிரிவோடே முடிவு பெறுகையாலே. கனவு என்றும், இந்திர ஜாலம் என்றும், பொய் என்றும்
முடிவு பெறாத போகத்தைச் சொல்லக் கடவது.
சிர காலம் கலந்து பிரிந்தான் -பிள்ளான் -எத்தனை வருஷம் கலந்தாலும் அபர்யார்த்தி பிறக்குமே-பொய் செய்து அகன்ற – அகன்று போவதற்கு இட்ட வழி இருக்கிறபடி. என்றது, ‘கலவி’ என்று பெயரை இட்டு,- முடிவு போகக் கலவாதே வஞ்சித்து அகன்றான் என்றபடி.

மா மதுவார் தண் துழாய் முடி –-இங்கு உள்ளதும் அங்கே ஆகையாலே மது இரட்டித்திருக்கும் அன்றோ. தலையான மதுவுமே அது தான்.-கலவியிலும் பிரிவிலும் ஒரு படிப்பட்டிருக்கு மவனைக் கண்டு. -வானவர் கோனைக் கண்டு –தந்தாமைப் பேணுவார்க்கு உடம்பு கொடுத்திருக்குமவனைக் கண்டு. என்றது,-பழைய உறவு கொண்டாடி இருக்குமவனைக் கண்டு என்றபடி.-யத்ர பூர்வே சந்தி தேவாயா நித்ய ஸூரிகளைக் கொண்டாடி அன்றோ இருக்கிறான் –

நுங்கட்கே –-அவன் அல்லாத உங்களுக்கு இத்தனையும் செய்ய வேணும். இல்லையாகில்,
இவ்வளவிலே முகங்காட்டின உங்களுக்கும் அவனுக்கும் வாசி இல்லை.-நுங்கட்கே – என் முல்லைகள் மேல் தும்பிகள் அன்றோ! உங்கள் ஜீவனம் நீங்களே நோக்கிக் கொள்ள வேணும்.-அவன் பெண் கொலை புரிந்து ஸ்வரூப ஹாநி பாராமல் ஓலக்கம் கொடுத்திருந்தான்;-நான் பாடோடிக் கிடந்தேன்;-இனி உங்கள் ஸ்வரூப ஹாநி நீங்களே போக்கிக் கொள்ளுங்கோள்.-(கடக புருஷகார ஸ்வரூபம் )-கலந்து வைத்து பொகட்டு போனவனில் காட்டில் -ஆற்றாமையை முகம் காட்டின உங்கட்க்கு இத்தனையும் செய்ய வேண்டாவோ-

——————

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!
–6-8-5-

வம்மின் –முன்கை மூன்று காதமாய் இருக்கிறபடி. -வருக என்று கை கூப்பி வணங்கி -கிளி மிகவும் கிட்ட வர கேட்டது போலே –-யான் வளர்த்த – நெய்யமர் இன் அடிசில் நிச்சல் பாலொடும் ஊட்டி வளர்த்த.

வெம் கண் புள் ஊர்ந்து வந்து –வெவ்வியவான கண்களை யுடைத்தான புள்ளை நடத்திக் கொண்டு வந்து. வருகிற போதே வழியில் விரோதிகளைப் போக்குகையிலே சினத்த கண்களை யுடையவனாதலின் ‘வெம்கண்’ என்கிறது.-அன்றிக்கே,-பிரித்துக் கொண்டு போகிற போது கண் பாராதே பிரித்துக் கொண்டு போனவனாதலின் ‘வெம்கண்’என்கிறது என்னுதல்.-அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. “அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.-வெம் கண் புள் ஊர்ந்து வந்து –-பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜ புத்திரனைப் போலே,-“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” திருவாய். 1. 4 : 6.-என்றே அன்றோ அடியிலே தூது விட்டது,
அப்படியே வந்தபடி.-வினையேனை –-அவனைப் போலே இரண்டு மனம் படைக்கப் பெறாத பாவத்தைச் செய்தேன்;-புணர்ச்சிக் காலத்தில் அழிதற்கும், பிரிவு காலத்தில் தரித்திருக்கைக்குமாக இரண்டு மனம் உண்டாகப் பெற்றிலேன்.

நெஞ்சம் கவர்ந்த – நாட்டார்க்கு மனம் மலர்தற்குக் காரணமான விஷயம் என் மனத்தை அழிக்கும்படி ஆவதே! சாரத்தை எடுத்துக் கொண்டானாய்க் கோதை இட்டு வைத்துப் போனான்; பூக் கொண்டு புட்டில் பொகடுவாரைப் போலே. அறமணத் தன்றோ இவர் மனம் இருப்பது; “பூசும் சாந்து என் நெஞ்சம்” திருவாய். 4. 3 : 2.-என்னும்படி.

செம் கண் கரு முகில் –கண்களாலே குளிர நோக்கி, வடிவினை முற்றூட்டு ஆக்கி நின்ற நிலை.-அன்றிக்கே,-இத் தலையோடே வந்து கலந்த பின்பு, அத் தலைக்கு வந்த நிறைவினைச் சொல்லவுமாம்.-அன்றிக்கே பிரிவினைப் பற்றிப் பேசிக் கண்களாலே குளிர நோக்கி, அவன் விளைநீர் அடைத்துக் கொண்டு நின்றபடி.

செய்ய வாய்--நூற்றுக் கணக்கில் புனைந்துரைகளைச் சொல்லப் புக்குப் புன் சிரிப்பினைச் செய்கிற திருவாய்.-செழும் கற்பகத்தை – விலக்ஷணமான கற்பகத்தை;- தானே விரும்பித் தன்னைக் கொடுக்கை.-கற்பகம், தன்னைக் கொடுக்கவும் மாட்டாது விரும்பவும் மாட்டாதே;
இவன், தன்னைக் கொடுக்க வல்லவன் அன்றோ-அன்றிக்கே,-தான் கடக்க இருந்தாலும் தன் இரண்டு உலகத்தின் செல்வங்களையும் நான் நினைத்தார்க்குக் கொடுக்கும்படி-எனக்குத் தந்தவனை என்னுதல்.-எங்குச் சென்றாகிலும் கண்டு –-வானவர் கோனைக் கண்டு என்றாரே-‘ஆள் வாரா நின்றது’ என்று கேட்டு ஓலக்கத்தைக் கிளப்பாக் கடக்கப் போய்த் திரை வளைத்துக் கொண்டிருப்பர்.-அன்றிக்கே,-புகை புக்க இடம்-ஈஸ்வர கந்தம் -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-என்றவாறே-எங்கும் புக்கு – எங்கும் புகுங்கோள் என்னுதலுமாம். என்றது,-பரத்துவம் வியூகம் விபவம் அர்ச்சாவதாரம் ஆகிய இவற்றைக் குறித்தபடி.-அந்தர்யாமி – “அந்தப் பரமாத்வை ஆத்மா அறிகிறான் இல்லை” என்கிறபடியே, ஒளித்திருக்கும் இடம் எங்கும் புக்கு.-

————–

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!
–6-8-6-

இத் திருவாய்மொழிக்கு, நிதானமான பாட்டு அன்றோ இது.-அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாகையாலே, ‘அடியார்கட்குச் செல்வமான பின்பு அறிவிக்க வரும்’ என்று
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூது விடுகிறாள்.

என் மின்னு நூல் மார்வன் –என் மின்னு நூல் –என் மார்வன் –தன் திருமேனியிலே சாத்தச் செய்தே என் மனத்திலே இட்டாற் போலே பிரகாசிக்கிற பூணு நூலைக் காட்டி-
நெஞ்சிலே -அனுபவம் மானசம் என்றவாறு –-என்னைத் தனக்கே உரியவளாக்கினவன்.-என், என், என் என்று பதங்கள் தோறும் சொல்லுகையாலே, ஒப்பனை அழகிலும் வடிவழகிலும், சௌலப்யத்திலும் தனித்தனியே ஈடுபட்டபடி.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,-‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.-இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:-நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி-கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –-மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் – சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

சொல்லிச் சென்மின்கள்-அது வழிக்குப் பாதேயம் காணும். அங்கே போனால் சொல்லப் பார்த்திராமல் போகிற போதே சொல்லிக் கொடு போங்கோள்.-அவனுடைய வை லஷண்யம் கண்டால் வாய் எழாமல் போனாலும் போகுமே -சொல்லிக் கொண்டே போமின்-அவனுக்கு மறு பேச்சு சொல்ல அவகாசம் கொடுக்காமல் -என்றுமாம்-

————————

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே
.–6-8-7-

என் ஆழிப் பிரான் – தன்னுடைய அசாதாரணமான விக்கிரஹத்தை எனக்கு ஆக்கினவன்.
‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்று உலகமே உருவமாய்க் கொண்டு நின்ற நிலையைச் சொல்லி வைத்து, ‘என் ஆழிப் பிரான்’ என்கிறார் அன்றோ, அசாதாரணமான வடிவுக்குத் தாம் ஈடுபட்டபடி.“நிராய் நிலனாய்” என்று வைத்து, “கூராராழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால் வாராய்” என்றாரே அன்றோ.-அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒன்று இல்லை என்று சொல்லுவதற்காக,

வினையாட்டியேன் – உங்களைக் கொண்டாடுகை தவிர்ந்து, காரியம் கொள்ளும் படியான துக்கத்தை அடைந்தவளானேன்.-“மாசுச:” என்று சொன்னவன் விளைத்த சோகத்தை, அசேதனங்கொண்டு தீர்க்க இருக்கிற மஹா பாபியானேன்.-

————–

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே
.–6-8-8-

நும்மை அல்லால் மறு நோக்கு இலள் –உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை. நடந்ததைச் சொல்லிக் கொள்ளுவதற்கும், உம்மை ஒழிய வேறு ஒருவரை யுடையள் அல்லள். “தோழிமாருடன் சுகமாக விருப்பாய்” என்னும் நிலையும் குலைந்தது.
அன்றிக்கே,-நும்மை அல்லால் – ‘வாரா நின்றோம்’ என்று, ஸ்ரீ பரதாழ்வானைப் போலே ஆள் வர விடத் தரியாது என்னுதல்.-அன்றிக்கே, ஸ்வரூப குணங்களை நினைத்துத் தரித்திருக்கும் அளவல்லள் என்னுதல்; அன்றிக்கே, உம்மை ஒழிய, பந்துக்களை நோக்கும் நிலை கழிந்தது என்னுதல்.

———–

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே
.–6-8-9-

பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் –-தன் பரிகரங்களிலே ஒன்றைக் கொண்டு போது போக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது.
வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ ததீயர் பக்கலிலும். உங்களை ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்.-ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -வெறுமை முன்னிட்டே -ஆச்சார்ய அபிமானத்துக்கு – ஸ்வ அபிமானம் குலைத்த நமக்கு -பரதந்த்ரன் அபிமானமே உத்தாரகம் – ஆச்சார்ய உபதேசம் எதிர் பார்த்து அவன் கார்யம் செய்ய இவர் அதுவும் இல்லாமல் அருளுவாரே –

கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் –எல்லா விடாயும் ஆறுங்கண்டீர் அவ் வடிவைக் காணப் பெறில். இவள் கண்களுக்குக் கருப்பா யிருக்கிறதன்றோ.
கருமை யெல்லாம் திரண்டாற் போலே இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை யுடையவன்.-கார் காலத்தில் திரண்ட மஹா மேகம் என்றுமாம்.
அன்றிக்கே,-மாமுகில்–மாறாதே கொடுக்க வல்ல முகில் என்றுமாம்.

வார்த்தைகள் கொண்டருளி வந்திருந்து வைகலும் உரையீர் – ஒரு கால் போய் அவன் வார்த்தையைக் கேட்டு, என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து,
அதனை எனக்கு எப்போதும் சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்.
அன்றிக்கே,-விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-
“மாசுக:” என்று பலத்தோடே முடிவு பெற்றிருக்கிற வார்த்தைகளைக் கொண்டு,
என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர் என்றுமாம்.
வாரான் என்றோ பல வ்யாப்த வார்த்தை யாகவோ –மாட்டேன் என்கிற வார்த்தை -தனது சத்தை தரிக்க அவன் பக்கலில் இருந்து ஏதேனும் -தாராயினும் –போலே -வேண்டும் –
ஜீவிஷ்ய பேஷஜம் போலே சீதை வார்த்தை சொல்லு அத்தைக் கொண்டு ஜீவிப்பேன் -என்றாரே பெருமாள் திருவடி இடம் –

————-

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே
.–6-8-10-

என்னை –அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை.
‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று,-இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
அன்றிக்கே,-உம்முடைய தேவாரமோ! இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.-தேவாரம் -க்ருஹார்ச்சை -அர்ச்சை – அர்ச்சகர்கட்கு வசப்பட்டதன்றோ.-மந்திரத்து ஒன்று உணர்த்தி–ஓலக்கத்திற் சொல்லாதே கொள்ளுங்கோள்;-அவள் சொல்லே கேட்குமிடத்தே சொல்லுங்கோள் என்னுதல்.-போக தசையில் அர்த்தாந்தரம்–கேவலம் ஏகாந்தம் ஆனால் மறுக்கவும் கூடும் –-மந்திரம் – பிரணவம். ஒன்று – அதில் நடுப்பதம்.
அதிற் சொல்லுகிறபடியே அநந்யார்ஹதையை விண்ணப்பம் செய்து.-உரையீர் மறுமாற்றங்களே – முன்பு செய்து போந்த குற்றங்களைப் பார்த்து அவன் சொல்லுகிற வார்த்தைகளையும், சம்பந்தத்தையும் நம் நிலையையும் பார்த்து அவள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்டு வந்து சொல்லுங்கோள்

—————

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே
.–6-8-11-

இவர் கலங்கிச் சொல்லச் செய்தேயும், பகவானுடைய அவதாரம் போலே தோன்றின என்றபடி. தோற்றம் – தோன்றுதல்.-ஆழ்வாருடைய திருவாக்கிலே புக்கு
‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்ய வேணும்’ என்று அச் சொற்கள் தாம்
‘என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி.
வைதிகர் அல்லாதாருடைய வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதே யன்றோ சொற்களுக்கு.

இவர் கிலேசம் அவன் முகம் காட்டத் தீரும்;-இப் பாசுரம் நித்தியமாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;-ஊற்றிடத்து உண்டான நுண்ணிய மணல் போலே உருகுகின்ற மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.-இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள் பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்ததாகையாலே இது தானே பலம் என்கிறது.-உருகிண்டே இருப்பதே பிராப்ய அந்தர் பூதம் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading