ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –எல்லியும் காலையும்–8-6-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி மாலை பெற்று மகிழ்தல் -துறை-பகவத் ப்ரஸாதம் பெற்றபின்பு பிரதிகூலமானவை எல்லாம் அனுகூலமாகுமே-செறுவாரும் நன்மை செய்வார்களே–பெரியாருக்கு ஆட் பட்டால் பெறாத பயன் என்ன
திருத்தண்கா இப்பொழுது தான் குளிர்ந்ததானது-இதுவே கீழ்ப்பாட்டுக்கும் இதுக்கும் சங்கதி
மாலைப் பிரசாதம் பெற்றாள் -அதன் பயனே இது
-எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -நாயகி துன்பம் நீங்கிய திருவாய் மொழி அதுவும்-

நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை
இவன் கடாஷித்தால் இவ் வருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்

ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-
தாங்களே வந்து ,அனுசரிக்குமா போலேயும்-பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள்  பண்ணின ஏகாஷீ ஏக கர்ணிகளான ராஷசிகள் அனுகூலித்தால்   போலேயும் –வேற்றுப் பொருள் வைப்பு அணி இது என்பர்
காற்று குளிர்ந்து இருப்பதுக்கு ஹேது சொன்னவாறு –

இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும் அனுகூலித்த படியை நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம் இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே
–27-தலைவி மாலை பெற்று மகிழ்தல் –

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-இவருடைய பெரு விடாய் கெடும்படி இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி அடுத்து அணித்தாக ஸ்ரீ திருக் கடித் தானத்திலே வந்திருந்து தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற எல்லியும் காலையில் -அர்த்தத்தை எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –இப்படி
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்-இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை-அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை

சேமம் செம்கோன் அருளே —இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய்  இருக்கும்-எங்கனே என்னில் —-ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை  கொடுத்து பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி-திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே- சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும்-இத்தை கால் கடை கொண்டு , தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது–மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில் அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-பக்தி உழவனின் பெரும் உபகாரங்கள் –ஷேம க்ருஷி பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார்-யாதானும் பற்றி அன்றோ நாம் இவற்றைத் தப்புவது -இவன் சைதன்யம் –தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி
இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்- தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோ பாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று
–உத்தமன் என்றும் உளன் கண்டாய் – நாம் பாராமுகனாய் இருக்கும் அவஸ்தையிலும் அவன் ரஷித்தே தீருவான்–செம்கோன்–செவ்விய நிர்வாககன் —
பதிம் விஸ்வஸ்ய — யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி பாரார்த்யம் ஸ்வம் —என்று சொல்லலாம் படி இருக்கும்-

செருவாரும் நட்பாகுவார் என்று —
சத்ருக்களும் பந்துக்கள் ஆவார் என்று சத்ருக்களும் மேவுற்று செய்வார்கள் என்றுமாம்-
த்யாஜ்யமும் ,பகவத் கடாஷத்தாலே உபாய சக காரியாய் ஸ்வ யத்ந த்யாஜமாய் இருக்கும்–த்யாஜ்யமான சரீரமும் அவன் அருள் இருண்மதால் உபாயத்துக்கு ஸஹ காரியாய் -கைங்கர்யத்துக்கு
ஸ்வ யத்ன உபாயாந்தரம் த்யாஜ்யம் -உபாயாந்தரம் என்று கொண்டு சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் செய்தவை உபாயாந்தரம் இல்லை –அதிகார பூர்த்திக்கு சித்த்யர்த்தம் கைங்கர்யத்துக்கு உத்தேச்யம் அன்றோ இவை

ஏமம் பெற –
பழமை பெற-ரஷை பெற என்றும் ஆம்–வையம் சொல்லும் மெய்யே — லௌகிகமான  பழம் சொல்லும் சத்தியமாய் இருந்தது–சாவாதிருந்தால் காண்பன சில உள என்னுமா போலே —கல்யாணீ லௌகிக ப்ரதிபாதிமே -ஏதி ஜீவநதி இத்யாதி--நூறு வர்ஷம் ஆனாலும் வாழ்ந்து இருப்பவனுக்கே ஒரு நாள் ஆனந்தம் கிட்டும் -பிராட்டி அசோகா வனத்திலே இருந்து-இனி முடிய அமையும் என்று நிச்சயிப்பது
பெருமானை காணலாம் ஆகில் இருந்தால் ஆகாதோ-என்பதாமே- அவ் அளவிலே திரு அடி சென்று
ராம குணங்களை சொல்லி ,முகம் காட்டின அளவிலே , இங்கனேயும் ஓன்று சம்பவிப்பதே-என்று ஹிருஷ்ட்டையாய் – ஒரு காலத்தில் சோகித்தார் முடியாது இருந்தால் ஒரு காலத்தில் ஆனந்திக்கலாம் என்று சொல்லுவது- இன்று வாடை குளிர்ந்த படியால் மெய்யாகக் கண்டோம்
–பத்து மாதங்களில் ஒன்பது மாதம் இருந்தால் தானே இப்பொழுது திருவடி வார்த்தை கேட்கவும் முடிந்தது-பின்பு ராமர் கூட கூடவும் பெறுவாள் –

பண்டு எல்லாம்-
சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே என்றும் பிரிவேயாய் வாடையின் கையில் நோவு பட்ட படி–அறை கூய்–மகாராஜர் பெருமாளை அண்டை கொண்டு , வாலியை அறை கூவினால் போலே
இங்கு வாடை தனி வீரனான படி
யாமங்களோடு எரி வீசும் —பாதகத்தில் உறைப்பாலே கோமுக வியாக்ரம் என்கிற படியாலே–பசு தோல் போர்த்திய புலி போல் -வேறு பட்டு வருகிற படி-வீசும்-
தன் மேல் விரஹ அக்நி கதுவாமே கடக்க நின்று வீசும் படி–லௌகிக அக்நி போல அன்று இறே நரக அக்நி   —அத்தை நீர் என்னலாம் படி இறே விரஹ அக்நி

நம் கண்ணன் தண் அம் துழாய் இத்யாதி —
துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்–வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே –அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா–ஸ்பர்சிக்கவே அமையும்–அவ் வாடை – முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் — முன்பு அப்படி தடிந்து போன வாடை–ஈதோ வந்து தண் என்றதே —இப்படி வந்து குளிரா நின்றது-.ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-

திருத் துழாய் மாலையை தரித்து -முன்பு நலிந்த வாடை இப்பொழுது தணிந்ததே –தலைவன் உடன் கலந்த அனுபவம் என்றுமாம்–சேமம் செங்கோன் அருளே விசுவாசம் பிறக்கவே பகைவரும் நண்பர் ஆவார்-அவன் குண விசேஷங்களில் ஆழ்ந்து உலக பொருள்கள் துன்பம் தவிர்ந்தமை சொல்கிறதுபந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன
குண த்ரய விசித்ர கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்து எழுந்தும் சுழன்றும் உழன்றும் பறி பட்டும் அற்ப சாரமாமாவையுமாய் மதீயம் என்னில் விட்டகலவும் ததீயம் என்னில் இகழ்வறவும் முனிவதும் இக்காலம் ஈதோ என்னப்படும் பொங்கைம் புலனில் போக்யாதி ஸமூஹம் –
ஆச்சார்ய ஹிருதயம் –இரண்டாம் பிரகாரணம் இறுதி சூர்ணிகை – -149 – இதில் ஈதோ-இந்த பாசுரச் சொல் –

சேமம் செம்கோன் அருளே-நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது–செருவாரும் நட்பாகுவர் என்று -அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று-ஏமம் பெற-தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி-வையம் சொல்லும் ,மெய்யே-நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்–எங்கனே என்னில்-பண்டு எல்லாம் மறை கூய் யாமங்களோடு எரி வீசும்-முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்-நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,-நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்–சேமம் என்று தொடங்கி–நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில் முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்-ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்-
ஸ்ரீ கீதை -8-12- ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்-8-13—எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில்
நிலை யுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,–ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான். உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –அங்கன் அன்றிக்கே ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே-இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் – இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம்-சேமம் செம்கோன் அருளே-நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –செருவாரும் நட்பாகுவர் என்று முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று ஏமம்பெற பழகினும்-வையம் சொல்லும் ,மெய்யே லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே எங்கனே என்னில் பண்டு எல்லாம் மறை கூய்-முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து-யாமங்களோடு எரி வீசும் யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்-நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,-நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ் வாடை ஈதோ வந்து அவ்வாடையே இப்போதாக வந்ததாய்-தண் என்றதே-ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

தாத்பர்யம்
கீழ் பகவத் ஆலாபத்தால் நொந்த -சம்சார அச்சத்தாலே பாதிக்கப்பட்ட ஆழ்வாரை தலைமகனே ஆஸ்வசிப்பித்த அளவில் அவற்றில் நெஞ்சு ஊன்றி – சந்தோஷமாக பாலை நிலத்தில் நடந்து இழைத்த துக்கம் தீரப்பெற்று-திவ்யதேசங்களைக் காட்டக் கண்டு ஸூகித்த ஆழ்வார்
அவனால் சாத்தி அருளப்பெற்ற திருத்துழாய் இப்போது குளிர்ந்து ஆனந்தகரமாய் இருக்கக் கண்டு
தெய்வம் அநு கூலித்தால் -அனைத்துமே அநு கூலிக்கும் என்கிற உலக மொழியை
இப்பொழுது யதார்த்தம் என்று அறிந்தோம்-பகவத் அருள் இல்லாவிட்டால் இன்று உள்ள அநு கூல்ய பதார்த்தங்கள் எல்லாம் பிரதிகூலிக்கும் என்றும்-அருள் இருந்தால் துக்கம் தருமவை எல்லாம் ஸூக கரம் ஆகும் என்கிற யதார்த்தம் நன்றாகவே இப்பொழுது அறிந்தேன்-
ஜகத் ரக்ஷணத்துக்கு ஸ்ரீ யப்பதியே ஏக ரக்ஷகம் என்றும் தேவ தாந்தரங்களும் சாதனாந்தரங்களும் ரக்ஷகம் ஆகாவே

8-6–எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ-ப்ரவேஸம்-

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-
என்னுமதனாலே தபிக்கக் பட்டவனாய் -ஆகுலத்தை உடையவனாய் -பிற்பாட்டுக்கு
உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன் -என்றபடி நாணி

ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
இனி நாம் கடுக முகம் காட்டில் பிரீதியாலே உடைகுலைப் படுவர்-ப்ரீதியைப் பொறுப்பித்து உளர் ஆக்கி-
பரிமாற-வேண்டும் -என்று நாளை வதுவை -நாச்சியார் திருமொழி –சாத்மிப்பித்து-
பதினான்கு ஆண்டு பிரிவாலே நொந்த ஸ்ரீ பரத ஆழ்வானைத் தரிப்பித்து-
முகம் காட்டுகைக்காக திருவடியைப் போக விட்டு ஸ்ரீ பரத்வாஜ பகவான் ஆஸ்ரமத்தில் இருந்தாப் போலேயும் –

பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்-
முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக
குசத் ஸ்தலத்திலே தங்கி உள்ளான் -அவன் காலையிலே இங்கு வருவான் -என்கிறபடியே-
உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-
குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினாபுரத்துக்கு-எழுந்தருளினாப் போலேயும்-

தூது போனதே ஸ்ரீ விதுர ஆழ்வானுக்காக ஆனால் போலே -அன்றோ
எண்ணாயிரத்து எச்சான் -வீட்டுக்கு போகாமல் பருத்திக்கு கொல்லை அம்மையார் திரு மாளிகைக்கு போனார் ஸ்வாமி –

தம்மோடு கலவியிலே நோக்குள்ளவனான சர்வேஸ்வரன்-
தம்முடைய ப்ரீதியைப் பொறுப்பித்து தம்மோடு கலக்கைக்காக-
திருக் கடித்தானத்திலே எழுந்தருளி இருந்து தம் பக்கல் செய்கிற வ்யாமோகத்தை இனியராய்-
அதனைப் பேசி அனுபவிக்கிறார் –

மேல் திருவாய்மொழியில் துக்கத்து காரணமான நினைவு தானே இப்போது-உஜ்ஜீவனம் ஆம்படி செய்தான்-
செறுவாரும் நட்பாகுவார் அன்றோ செங்கோன் அருள் பெற்றவாறே-திருவிருத்தம் -27-

38 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் நம்மாழ்வார் –
12 -மலையாள திவ்ய தேசங்கள் -திரு வித்துவக் கூடு -குலசேகர பெருமாள் -மட்டும் மங்களா சாசனம் –
சாத்ய ஹ்ருதி ஸ்த்தானாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்தா கந்தம் தாயப் பதியிலே –
ஸ்ரீ அற்புத நாராயணன் – ஸ்ரீ கற்பக வல்லி தாயார் –
திருக் கொடித்தானம் -சிதைவு
பரிமளம் கொண்ட ஸ்தானம் -ஆழ்வார் திரு உள்ளம் ஆத்ம குண பூர்த்தியால் பரிமளம் –
இங்கே தவம் புரிந்தது ஆழ்வார் திரு உள்ளம் பெற்றான் –
தாயப்பதி விசேஷ விசேஷண அசாதாரண க்ஷேத்ரம் இது –
அற்புதன் நாராயணன் -ஆழ்வார் திரு உள்ளம் புக தபஸ் -இதுவே அத்புதம் தானே –

ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி அனுபவ அபி நிவேசத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்ட இவ் வாழ்வாருடைய
ஆர்த்தி தீருகைக்காக இவருடைய சகல விரோதிகளை போக்கி ஸம்ஸ்லேஷிப்போம் என்று ஈஸ்வரன்
திருக் கடித்தானத்திலே ஆசன்னமாக வந்து ஸந்நிஹிதனான படியை பிரகாசிப்பிக்க அவனுடைய
ஆஸக்தி நிதானமான சேஷித்வத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தகமான சாமர்த்யத்தையும்
பராக்ரம ஸைக்ர்யத்தால் வந்த வீர ஸ்ரீ யோகத்தையும்
ஆந்த்ர விரோதி நிவர்த்தகமான அந்த ப்ரவேசத்தையும்
ப்ரத்யாசக்திக்கு அடியான ப்ராப்ய தேச வர்த்தித்தையும்
அவனிலும் அவன் தேசம் விரோதி நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
தேச ஸ்ம்ருதி மாத்திரமே துக்க நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேசத்தினுடைய அசாதாரண்யத்தையும்
அர்ச்சாந்தர ஸ்த் தலத்திலும் ஸந்நிஹிதன் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேச ஸ்த்திதி அந்த ப்ரவேச அர்த்தம் என்னும் இடத்தையும்
அனுசந்தித்து -நெஞ்சிலே வந்து புகுந்து தம்முடைய விரோதியைப் போக்கி அனுபவிப்பதாக அத்யா சன்னனான
அவனுடைய அபி நிவேசத்தைக் கண்டு தமக்குப் பிறந்த ஹர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்-நிர்ஹேதுகம்-ஆகமனம் – ஆஸக்தி -விரோதி நிவர்த்தனம் – அனுபவம் -நிரதிசய உபகாரம் பண்ண வந்தவன் திவ்ய தேசம் இது –

நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்-
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்-
தன் பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே-விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
என் வருத்தத்துக்காக அருளினார் என்றால் கிஞ்சித் ஸ்வாதந்த்ரய சாதனத்வம் கிட்டுமே-

நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே-
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பன் –மேல் திருவாய் மொழியிலே-
மொய் பூம் தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே -என்று-இவர் ஆசைப்பட்டபடியே காட்டிக் கொடுத்தான் –

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே –மாயக் கூத்தனும்-எல்லியும் காலையும் வேண்டாமலே-அனுபவத்தோடு காலம் கழிக்கிறார்கள்-

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே –1-அருள் செய்வானாகிற அப்பனுடைய ஊராகும்

அன்றிக்கே
2-அருள் செய்வானாகிய அப்பனுடையதாய்ச்–செல்வர்கள் வாழும் ஊர் திருக் கடித்தானம் -என்னுதல்

அன்றிக்கே
3-தண் அம் துழாய் முடி அப்பன்-எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே அருள் செய்வான் –அவன் ஊர் – செல்வர்கள் வாழும் திருக் கடித்தானம் -என்னுதல் –

——–

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

என் பக்கல் வருகைக்கு உள்ள தடைகளையும் தானே போக்கி–திருக் கடித்தானத்திலும் என் மனத்திலும்-
ஒக்கக் காதல் கொண்டு உள்ளே வசிக்கிறான்-என்கிறார்-ஒருக்கடுத்து – ஒருங்க அடுத்து என்றது ஒக்க நினைக்கை-

——–

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திரு வமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப் பிரானே–8-6-3-

பிராட்டியோடு கூடி திருக் கடித் தானத்திலே-நித்ய வாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான உபகாரகன்-
நினைக்கும் தோறும் இனியன் ஆக நின்றான் -என்கிறார்-

வீர ஸ்ரீ ஸ்ரீ சீதா பிராட்டி இருவர் உடன் வந்து என் விரோதிகளை போக்கி கைங்கர்யம் கொள்ளும் மிதுனம் என்கிறார் –

——–

மாயப் பிரான் என் வல் வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்-நெஞ்சை நாடாகக் கொண்டு -திவ்ய தேசம் -சிறிய ஸ்தானம்

திருக் கடித்தானத்தை-பகல் இருக்கை மாத்ரமாகக் கொண்டு–அன்பின் மிகுதியாலே என் மனத்தையே
எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் -என்கிறார்-

நெஞ்சம் நாடு –கலவியலும் பிரிவினாலும்-ஒரு பரமபதத்தைப் போலே-ஆக்கினான் ஆயிற்று -இவர் திரு உள்ளத்தை –
நெஞ்சு ஸூ ஷ்மம்-நாடாகுமோ -விஸ்லேஷம் சுருங்கி -சம்ஸ்லேஷம் வளர்ந்து ஊதி ஊதி பெருக்கி -நாடாக்கினான் -என்றவாறு –

என் வல் வினை மாய்ந்தற-மாய -மட்டும் இல்லை மாய்ந்து அற –மறுகல் இடாதபடிக்கு

குடி கொண்டான் –பரிகரங்களோடு நித்ய வாசம் பண்ணா நின்றான் –
அரவத்து அமளியினோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-என்ற பாசுரப் படியே –
சர்வ மங்கள விக்ரகாய — ஸமஸ்த பரிவாராயா -ஸ்ரீ மதே நாராயாணாயா –

———–

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

என் பக்கல் கொண்ட மிக்க காதலாலே–திருக் கடித் தானத்தோடே கூட என் மனத்திலே புகுந்து அருளினான் –என்கிறார்-

செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது -என்று
திருக் கடித் தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளினான் –

சாத்தியம் கை பட்டால் சாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க-
என்னைப் பெற்றது அத் தேசத்தில் நிற்கையாலே என்று-அத் தேசத்தோடு வந்து புகுந்தான் -என்கிறார்-

————

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

தம்முடைய மிக்க ப்ரீதியாலே-திருக் கடித் தானத்தை எல்லாரும் அடையும் கோள்-என்கிறார்-

பூத்த பொழில் –அவன் நித்ய வாசம் செய்கையாலே-எப்போதும் மலர்களோடு கூடின பொழில் –
திருவருள் ஆகிய மழை மாறினால் அன்றோ-பூக்கள் மாறுவது –நித்ய வசந்தம் –

திருக் கடித் தானத்தை ஏத்த இடர் நில்லா –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும்
இனியதனைச் செய்ய-இடரானது நமக்கு இது தேசம் அன்று என்று-
சும்மனாதே கை விட்டோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-
போக்யத்தையினால் ஸ்தோத்ரம் பண்ணினார் -வியாதி போகுமோ –
ராஜ வித்யா ராஜ குஹ்யம் -ஸூ சுகம் கர்த்தும்-ஆரம்ப தசையில் இனிமையாய் இருக்குமே –

———–

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

இடர் கெட -திருக் கடித்தான நகர் உள்ளத்துக் கொள்மின்–உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டா-திருக் கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் -தேச ஸ்ம்ருதி மாத்திரமே நினைத்தாலே போதும் -ஸ்தோத்ரமும் பண்ண வேண்டா -உள்ளத்தில் கொண்டாலே இடர்கள் கெடும்

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே–இங்கு உள்ளார் அங்கு போவது மேன்மையை அனுபவிக்க-
அங்கு உள்ளார் இங்கே வருவது சீல குணத்தை அனுபவிப்பதற்கு–கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு திரு மலை போலே-

————

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

நகரங்கள் பலவும் உண்டாய் இருக்கச் செய்தேயும்–என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும்
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி-இருக்கிறான் -என்கிறார் –

என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தான தாயம் பதியே –என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும்
தனக்கு தாய பாகமாகக் கிடைத்த இடமாக விரும்பி இரா நின்றான்-தாயப்பதி பரம்பரை சொத்து-இயற்கையாக-தாயாதி தாயத்தை ஆளுகிறவர்கள்-தானே வரும் –

——–

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே--8-6-9-

அல்லாத திருப்பதிகளும் எல்லாம் அவனுக்கு அப்படியே -தாயப்பதிகள்-அன்றோ -என்னில்
அது அப்படியே யாகிலும்-
என்னோடு கிட்டுகைக்கு உறுப்பான நிலம் என்று திருக் கடித் தானத்திலே மிக்க காதலன் ஆனான்-என்கிறார்-
இங்கு மாயத்தினால் வீற்று இருந்தான் என்றது சாதனமாக இருந்ததால் என்றபடி –

அற்புதன் –ஆச்சர்யமான படிகளை உடையவன் –தானே உகந்தருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும்
என்னைப் பெறுவதற்காக திருக் கடித்தானத்திலே-தன் மேன்மையும் நீர்மையும் எல்லாம்-பிரகாசிக்க நின்றான் -என்கை –
தேசத்தமரர் -மேன்மை -ஆயருக்கு அதிபதி நீர்மை -இரண்டையும் காட்டிய அற்புதன் -தாமோதர நாராயணன் போலே –

——–

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற் புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித் தானமே-8-6-10-நிதான பாசுரம்

கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-கற்பக வல்லி நாயகி சமேத அற்புத நாரணன் -காட்டி அருளுகிறார் –

மேவியிருப்பது என்னெஞ்சகம்-சாத்ய ஹிருதயம் மேவுதல் ஆழ்வார் திரு உள்ளம் -சாதன பூமி இது – -உறுப்பாக-நிற்பது திருக் கடித் தானமே

என்னைப் பெறுமளவும் திருக் கடித் தானத்தில் நின்றான்-
என்னைப் பெற்ற பின்பு நிற்பதும் இருப்பதும்-என் நெஞ்சிலே -என்கிறார்

நாரணன் –தன் உடைமையை விட்டுக் கொடாத வத்சலன்-பஹு வரீஹி சமாசம் —

அரி –அடியவர்கள் விரோதிகளை-அழிக்கின்ற ஆற்றலன் –

வாமனன் –தன்னைச் சிறுகவிட்டு-அடியார்கள் விருப்பங்கள் அனைத்தையும்-முடிக்குமவன்

அற்புதன்-இப்படிகளாலே-ஆச்சர்யத்தை உடையவன் –

————

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி கற்றவர்களை-இது தானே திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்

பாலோடு அமுதன்ன–வாச்ய வாசகங்களின் சேர்த்தி இருக்கிறபடி–பால் -என்றது-சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை–அமுது -என்றது-சடகோபன் சொல் வாசகத்தை –இது ஆளவந்தார் நிர்வாஹம்

மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியில் உண்டான விடாய்-நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் -என்றபடி-அதிஷ்டான தேவதை எம்பெருமான் கொடுக்கும் என்றபடி –

சாம வேத சமம் -திருவாய் மொழி -நடையாடுமே அங்கும் –வைகுந்தம் காண்மினே –குருகூர் ஈரரசு பட்டு இருக்குமே –
நீர் மலி வையத்து நீடு நிற்பார் பலம்-தெள்ளியீர் அனுபவம் இங்கே போலே -மாயக் கூத்து விஸ்லேஷ அனுபவம் இங்கே –

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading