ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நான்கு நிலம் ரசம் சூர்யன் உண்டு பருகி-நன்னீர் அற மென்று -உமிழ்ந்த கோதே பாலை ஆனதே
இதுவே ஐந்தாவது நிலம் -நாலில் இருந்து பிறந்ததே ஐந்தாவது -ஆனது
திருத்தண்கா-திருவெஃகா-இதுவே ஷேம கரம் -திவ்ய தேசம் இருக்க ஏன் கவலை என்றவாறு
நகர் காட்டல் துறை-தலை மகன் வார்த்தை-ஒன்றாக போகிறார்கள்
குறிஞ்சி நிலத்தில் கலந்து-பாலை தாண்டி -மருத நிலம் போகிறார்கள்
திருவெஃகா நகரம் அடைந்து-கால் தோய்ந்து விண்ணோர்கள்-சொன்ன வண்ணம் செய்த -கண்ணன் ஊர் வந்தோம்-தாண்டி பொழில் திருத்தண்கா-நகரமும் பொழிலையும் கான்டக்டி
மாலை நண்ணி -திருக்கண்ண புரம் -கண்ணன் வெக்கா -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம்
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்-நகரம் காட்டுகிறான் -ஏழு மதில்கள் சூழ்ந்த நகரம்
வந்து பாடும் பொழில்-கழனி -அதிலும் உண்டே –கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்-திரு வெக்கா -பெருமாள் கோயில் —
புணர்ந்து உடன் போக்கு துறை-புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகன் தலை மகளை –
பாலை நிலத்தை கடந்து-குளிர்ந்த நிலத்தே புகுந்தோம் காண்-என்று ஆஸ்வசிப்பிகிறான்-
நகர் காட்டல் இப்பாட்டுக்கு அகத்துறை-நடை இளைப்புத் துன்பம் தீர அதோ தெரிகிறதே அதுவே நம்முடைய நகர் என்று ஸாமீப்யம் தோன்றக் காட்டிச் சொல்வது –தைவா தீனமாக பாலை நிலம் கடந்தோம்–அதோ தெரிகின்றது அப்பெரிய நகர் நம் நகர் என்று புணர்ந்து உடன் போன தலைவன் –
இளைத்த தலைவியைக் குறித்து இடம் தலைப் பெய்தமை -நகர் காட்டும் துறை -நீர் அற்ற பாலை நிலம் கடந்தோமே –
இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர் இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும் அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து உடன் போன தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடம் தலைப்பெய்தமை சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள் -திரு வெக்கா -பெருமாள் கோயில்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-
மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்—தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று-முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி ––-மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் – அதில் துர்பல புத்திகளுக்கு- மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி – அதில் அசக்தருக்கு தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்- சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று- ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-
வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–-திரு வெஃகா திவ்ய தேசம் அருகில் திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூசிதம்-இத்தால் என்பர்-
நால் நிலம் வாய் கொண்டு — ஆதித்யனாவன் நாலு வகை பட்ட நிலத்தையும் வாயிலே கொண்டு–தமிழர் ஐந்து என்பர்–ஆழ்வாருக்கும் அதுவே மதம்–நல் நீர் இத்யாதி–இதனுடைய சத்தையான நீர் அரும் படி மென்று கோதாக்கி-அக் கோதை வாயிலே கொண்ட- ஆதித்யன் ஆனவன் தன் உஷ்ண க்ரணத்தாலே சுவைத்து ஆஸ்ரயம் பொறாமையால் உமிழ்ந்து பாலை ஆயிற்று–பாலை -சம்சாரம்-ஆழ்வாரை ஆஸ்வாசப்படுத்தும் பாகவதர்கள்-108 திவ்ய தேசங்களில் ஒன்றே பரமபதம் –கடந்த –சம்சாரத்தை கடந்த என்ற படி-பொன்னே-சம்போதனம் — உன்னோடு போகிற எனக்கு பாலை நிலம் என்று அறிய வேண்டுமோ–என்கிறான்-அஞ்சாது இருக்கைக்கும்-அஸ்த்தானே பய சங்கை பண்ணுகைக்கும் பொன்னே என்கிறது--உண்டு என்ன உயிர் நிற்கும் படியும்-அபஹரணத்தைக் குறித்து அஞ்சி இருக்கையும்–கால் நிலம் இத்யாதி–தேவர்கள் ஹவிஸ்ஸூக்காக கொள்ளும் இடத்தில் சம்சார வெக்காயம் தட்டாமே-ஒரு யோஜனைக்கு அவ் அருகே நின்று பின்னையும் இது பொறுக்க மாட்டாமை அவ் வருகே போய் சர்த்தி பண்ணுவார்கள்-இப்படியே அங்குற்று அங்கு பரம பதம் அம்கண் இருக்கிற நித்ய ஸூரிகள் ஆனவர்கள்-பூமியில்-இழிந்து ,-திரு வெக்காவிலே தங்கள் உடைய அபிமத விஷயம் கிடைக்கையாலே பிரதஷிண -நமஸ்காராதிகளை பண்ணா நிற்ப்பார்கள்-கண்ணன்-சர்வேஸ்வரன் —சிநேகம் உள்ள இடத்தில் குற்றம் தோற்றாது இறே–வெக்கா வுது – இப் படிப் பட்ட திரு வெக்கா இது என்று காட்டா நின்றான்-வுது-அதூர விப்ரக்ருஷ்டம்-ஏஷா சா த்ருச்யதே இத்யாதி-
புஷ்பக விமானத்தில் இருந்து ராஜ தானி புதிர் மம அயோத்தியைக் காட்டி பெருமாள் வார்த்தை -அவ் வருகு தோற்றுகிறது என் என்பது என்ன–அப் பூம் தேன் அலம் சோலை அப்பாலது– -அழகிய பூவையும் தேனையும் உடைய அழகிய சோலை —அது-சந்நிவேசம்–எப் பாலைக்கும் சேமத்ததே —எல்லா அவஸ்தைக்கும் சேமம் உடைத்து-திவ்ய தேசங்கள் —
நிலம் தான் நாலு என்பாரும் அஞ்சு என்பாருமாய் இருக்கும் –ஐந்து என்கிறவர்கள் -பாலை நிலத்தையும் தன்னிலே தன்னிலே ஒன்றாக்கிச் சொல்லுவார்கள் –நாலு என்றவர்கள் இப்பாலை நிலம் தான் மாற்ற நாலிலும் உண்டு என்கிறார்கள் –அதாவது நீரும் நிழலும் இல்லாத இடம் பாலையும் அத்தனை இறே–பாலை கடந்த பொன்னே என்று-நாயகன் உடன் சேர்ந்து இருப்பதால் பாலை வானம் நடந்து கடந்தாலும்
அவனுடன் இருப்பதே பேர் இன்பமாகக் கருதி ஒளி தேஜஸ்ஸு இருந்தபடி திருமகள் போன்றவளே என்றுமாம்–நல் நீர் அறம் என்று – ஸூர்ய கிரணங்களால் நீரைக் கவர்கின்றான் என்பதே –நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று நால் வகை நிலத்துள்ளும் பாலை நிலம் அசாரம் -இன்பத்துக்கு உரியது இல்லாமை – கோது கொண்ட -மென்று சுவைத்து உமிழ் –வேனிலம் செல்வன் –இள வேனில் முது வேனில் நடுப்பகல் -தெய்வம் சூர்யன்–திரு வெக்கா வில் -சொன்ன வண்ணம் பெருமாள் -யதோத்தகாரி –பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்பதால் கண்ணன் -என்கிறார் –வேகா சேது -வெஃகணை-வெக்கா —நம்மாழ்வார் திருவிருத்தத்தில் திருவரங்கம் திருவேங்கடம் திருவெஃகா மூன்றையுமே மங்களா சாசனம்-கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்று சிறப்பித்து கூறுவார்-எல்லா பாலை நிலங்களால் வந்த வெம்மையையும் போக்கி நமக்கு ரக்ஷகமான தேசம் திரு வெக்கா காண் அது–இந்தப் பாலை நிலம் அன்றிக்கே இன்னம் சில பாலை வனங்களும் கடக்கலாம் இந்நிலம் உண்டாக–அம் பூம் இளஞ்சோலை அப்பாலது -திருத் தண்கா -விளக்கொளி பெருமாள் ஸ்ரீ விசுவாமித்திரர் உபதேசித்த பலை அபலை மந்த்ர வித்யைகள் போலே தலைவிக்கு தாபம் தணிக்கும் திருத் தண்கா –
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட-முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து-வேனிலம் செல்வன்-கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்-சுவைத் துமிழ் பாலை-பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை-கடந்த பொன்னே-நெருப்பிலே நடப்பாரைப் போலே இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே ஒளி விடுகிறவனே-கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்-இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து கால் பொருந்தி அனுபவிக்கும் படியான-கண்ணன் வெக்காவுதம்-ஆஸ்ரித ஸுலப்யத்தாலே-சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது அடுத்து அணித்தாயிற்று-பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற சோலை அவ்விடத்தது –-எப் பாலைக்கும் சேமத்ததே —இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்-
இத்தால்
நானிலம் என்று தொடங்கி– சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும் தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி-கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்–செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்-கிரணம் -சங்கல்பம்-ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்-குணம் -அடியேன்-வைபவம் -கைங்கர்யம்-சார அம்சம் புஜித்து -பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து-அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம் அதூர வர்த்தியாய் அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றது–இது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற ஷேம கரமான புகலிடம் என்கிற அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –
ஸ்வாபதேசம் –
ஆழ்வார் சம்சாரம் தவிர்ந்தமையையும் –உகந்து அருளினை நிலங்களின் போக்யதையும்-சொல்வது
கோது – சம்சாரம் -பாலை வானம் போலே – நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் போக்யதை -ஷேமங்கரமான புகலிடம்-
ஸ்வாபதேசம்-இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும் பகவத் விஷயம் பிராப்யம் என்னும் இடத்தையும் அறிந்த ,இவர்க்கு பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் – சம்சாரம் சென்று அற்றதாகில் உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-
பிராப்த்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது -என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-சரணா கதி விளக்க வந்த பாசுரம்-சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள் சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-
தாத்பர்யம்
கீழ் சம்சார ஸ்திதியாலும் பகவத் அலாபத்தாலும் தவித்த ஆழ்வாரைத் தேற்றி-நாயகன் உக்தியால் அருளிச் செய்கிறார்-லோக உத்தர மான ரூப லாவண்யம் கொண்ட -பொன்னே-சம்சாரமாகிய பாலை நிலத்தைத் தாண்டினோம்-இனி நாம் சிரமம் படவேண்டாம்-திருவெஃகா-யதோத்தாக்காரி-தோப்பு திருத்தண்கா விளக்கொளி பெருமாள் பாராய் என்கிறான்-ஸம்ஸாரத்திலேயே திவ்ய தேசங்களே ஸ்ரீ வைகுண்டம் போல் நிரதிசய போக்யமாகவே இருக்குமே என்றவாறு-
பொருள் -அகப் பொருள்–திணை –பாலைத் திணை–கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்–உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –
பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. –சடகோபர் அந்தாதி -67–சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்-மருதம் தாண்டி விட்டோம்-ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட–இது உருவக அணி-இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால் அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்—
9-10-மாலை நண்ணித் தொழுது எழுமினோ-ப்ரவேஸம்-
அறுக்கும் வினையாயின -என்ற திருவாய் மொழியிலே அவனை பெற-வேண்டும் என்ற எண்ணமேயாய்ச் சென்றது –
எண்ணின சமயத்திலே விரும்பியபடி கிடையாமையாலே
மிக்க துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று -மல்லிகை கமழ் தென்றல் என்ற திருவாய் மொழியில்-
அது தான் இரவில் விசனமாக நோவு பட்ட படி அன்றோ –
இப்படி எண்ணினவாறு பெறாமையாலே-நோவு படுகிற இவருடைய துன்பத்தினை நினைத்து-
நான்கு திருவாயமொழி தொடர்ந்து நலிய -இதற்கு மேலே ஆழ்வார் பொறுக்க மாட்டார் என்று திரு உள்ளம் கொண்டு –
சர்வேஸ்வரன்-நீரோ இப்படி எண்ணுவீரும்-அது கிடையாமல் துன்பப் படுவீரும்
உம்மைப் பெற வேண்டும் என்று எண்ணுவோரும் நாம் அன்றோ-ஸ்வாமி யன்றோ சொத்தைப் பெற எண்ணுவர் —
-உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ-உமக்கு ஒரு குறை உண்டோ-
கலங்கா பெரு நகரம் கலவிருக்கையாய் இருக்க-அவ்விடத்தை விட்டு
திருக் கண்ணபுரத்திலே வந்து நாம் எழுந்து அருளி இருப்பதும் உமக்காக அன்றோ
நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் முடிவிலே -செய்யக் கடவோம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்று சமாதானம் செய்ய
சமாதானத்தை அடைந்தவராய் இவரும்உவகையர் ஆகிறார் –
அவன் ஓன்று செய்யக் கடவோம் -என்றால்-
அப்போதே பெற்றதாக நினைத்து உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது –
இப்படி உவகையராய்-அவன்படி இதுவான பின்பு-சர்வேஸ்வரன்-எல்லாராலும் பற்றப்படுபவனாய்க் கொண்டு –
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் –தொழுது எழுமினோ தொண்டீர் –
திருக் கண்ணபுரத்தில் அணித்தாக எழுந்து அருளி இருக்கிறான்
எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்
அடையும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள் –முதல் நான்கு பாசுரங்களில் பக்தி பற்றி அருளி –
மேலே பிரபத்தி பற்றி அருளி-பக்திக்கு சாதனம் இல்லாதார் பிரபத்தியை செய்யுங்கோள்-
அதற்கு தகுதியான மன உறுதி இல்லாதார்-திருக் கண்ணபுரம் -என்ற வார்த்தை மாத்ரம் ஆகிலும் சொல்லுங்கோள் –
-பத்தாவது பாசுரத்தில் –அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்-
ஆனபின்பு எல்லாரும் ஒரு சேர அவனை அடையுங்கோள்-என்று பரோபதேசத்தில் மூளுகிறார்
மோகித்துக் கிடப்பார் ஆகில் கிடப்பார் இத்தனை போக்கி-உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு நலம் சொல்லி அல்லது நிற்க மாட்டார் –
பிராரப்த கர்மங்களின் முடிவில் மோஷமாகக் கடவது -என்று அன்றோ-வேதாந்தங்களில் சொல்லப் பட்டு இருக்கின்றது
சரீரத்தின் முடிவில் நீர் விரும்பியதை செய்யக் கடவோம்-என்று சர்வேஸ்வரன் சொன்ன இடமும்
அதனைக் கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்தா -என்னில்
இத் திருவாய் மொழியில் -பக்தியை செய்யுங்கோள் என்றும்-
அது மாட்டாதார் பிரபத்தியை செய்யுங்கோள் என்றும்-சொல்லிற்றே அன்றோ –
வேதாந்தங்களில் உபாசகன் ஆகிற அதிகாரியை நோக்கிக் சொல்கிறது-இங்குப் பிரபன்னனுக்கு சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற-வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
இந்த உபநிஷ வாக்கியம் தான் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ-என்று விசாரித்து
கர்மங்களின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறது-என்று -ஸ்ரீ பாஷ்யகாரர்-சித்தாந்திப் படுத்தி உள்ளாரே அன்றோ
தேகாவசேனே முக்தி -ஸ்ரீ தேவ பெருமாள் -அதிகாரி பேதத்தால் முரண்பாடு இல்லை என்றதாயிற்று –
அதனோடு சரீரத்தின் முடிவில் மோஷம் என்று இங்கே சொன்னது முரண் படாதோ என்னில்
நியாயத்தோடு கூடிய வாக்கியம் அன்றோ பொருளை அறிவிப்பதற்கு உரியது ஆவது
உபாசகனுக்கு தான் பற்றின உபாயம் முற்றுப் பெற்ற பின்னரே பலிக்க வேண்டி இருக்கையாலே-அவ்வளவும் நியாயம் நடக்கும்-
பிரபன்னன் முதல் அடியிலே -என்னுடைய எல்லா பாபங்களுக்கும் நீயே கடவாய் -என்று கொண்டு
சர்வேஸ்வரன் பக்கலிலே-பரந்யாசம் செய்தவன் அன்றோ-
இவன் தான் இனி செய்கிறது என்று ஓன்று உண்டாய்-அது முடிந்த பின்பு பெற வேண்டும் என்னும்
கால தாமதத்துக்கு காரணம் இல்லையே
இதனால் பரந்யாசம் பண்ணப் பட்ட சர்வேஸ்வரனுக்கு-ஆற்றல் இல்லை
அதனால் அது விளம்பதுக்கு காரணம் ஆகின்றது என்று சொல்லுவதற்கும் இன்று –
ஆக
இப்படி நியாயங்கள் காட்டினவாறே-இவனுக்கு சரீரத்தின் முடிவிலே பேறு கிடைப்பதற்கு தட்டு இல்லை அன்றோ
இனித் தான்
அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3
அவள் பகவானைச் சரண் அடைந்தாள்
பகவானை அடைந்தாள் -என்கிறபடியே மாதவி சரணாகதி செய்து மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ-
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று-அதனுக்கே கவல்கின்றேனே -திருமாலை
அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் -என்றே சொல்லா நின்றது அன்றோ –
த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-
த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும்
சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –
புருஷோத்தம வித்யையையும் அவதார ரகஸ்யமும் அறிந்தால் அந்த தேவ அவசானத்திலே முக்தி என்றானே –
சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே பக்திக்கு -பாரதந்த்ர காஷ்டை என்பதாலே பூர்வாச்சார்யர்கள் -பிரபத்தி நிஷ்டர் ஆனார்கள்
-பார்த்தாவின் கையை எதிர்பார்க்கும் பார்யை போலே –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை –18-66
நன்று
ஆனால் சரணாகதி செய்த உடனே பகவானை அடைதல் வேண்டாவோ-
இந்த விரோதியைப் போக்கி உன் திருவடிகளைத் தர வேண்டும் என்று அன்றோ இவன் விரும்புவது-
பின்பும் தனக்கு விருப்பம் இல்லாத இச் சரீரத்தோடு இருக்கும் இருப்பு-
கர்மங்கள் அனுபவித்து முடிவு பெறாமையாலே ஆவதோ-சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆவதோ -என்னில்
சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆகில் அவனுக்கு சில குற்றங்கள் உண்டாகும்
அவன் தான் நம் இரு வினைகளையும் நடுவே துண்டித்து-அவ்வருகே கொண்டு-போகிறேன் என்று சொன்னதோடும் முரண்படும்
ஆனபின்பு கர்மங்கட்கு கட்டுப் பட்டவர்கள் போன்று இன்ப துன்பங்களை இவனும்-அனுபவித்து இருக்கையாலே கர்மத்தாலே யாம் இத்தனை அன்றோ –
நன்று
இனிக் கர்மம் நடையாடக் கடவது ஆனால்-பிராரப்த கர்மங்களை அனுபவித்து முடிகிற வரையிலும்
போகத் தட்டு என் என்னில்-அதிகாரி விசேடத்தாலே அது வேண்டா-யாங்கனம் எனின்-
இவன் சரணாகதி-செய்த அளவிலே முக்தனாம் ஆகில்-இது தன்னை நச்சுப் பொய்கை போன்றதாக நினைத்து அஞ்சுவார்கள் –
அதனால் ஆள் பற்றாது
இனி அவனை இங்கே சில நாள் வைக்கவே-ஸ்ரீ வீடுமரைக் கொண்டு நாட்டுக்கு வெளிச் சிறப்பைச் செய்து கொடுத்தால் போலே
இவன் சிலருக்கு உபதேசித்தும்-இவனுடைய ஒழுக்கைத்தைக் கண்டு திருந்துவாருமாய்-இங்கனம் சில நன்மைகளும் காரணமாக இருக்கும்
இனித் தான் -இவனை நமக்கு தந்த சரீரம் அன்றோ -என்று-இறுதியாக இந்த சரீரத்தை ஈஸ்வரன் தானாக உபஷிக்கவும் மாட்டான்
சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே-சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி-இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்-சரம விமல திருமேனி -அன்றோ –
இது காறும் ஆர்த்த பிரபன்னன் விஷயமாக மூன்று விஷயங்களை அருளி-மேலே த்ருப்த பிரபன்னன் விஷயமாக ஒரு விஷயம் அடுளிச் செய்கிறார்-
இவன் தான் சரணாகதி செய்யும் காலத்தில்-இப்போதே இவ் உடல் நீங்கி உன் திருவடிகளை பெற வேண்டும் -என்னும் விரைவும்
இவனுக்கு உண்டாக காரணம் இல்லை
முகம் பழகினது ஆகையாலே -இச் சரீரத்தை விட -என்றால் கடுக இசையான் –
இனி வேறு ஒரு சரீரத்தை அடைதல் கர்ப்ப வாசம் செய்தல்-செய்யாது ஒழிய வேண்டும் என்னும் அளவாயிற்று இவனுக்கு உண்டாகில் உண்டாவது-
ஆகையாலே -தத் க்ரது-நியாயத்தாலே எங்கனம் நினைத்தானோ அங்கனமே பலித்தல் –அப்படியே பேறாக இருக்கும்
ஆகையால் இவனுடைய நினைவையும் நோக்கி-இவன் தான் இச் சரீரத்தில் ஆசை வைத்து இருந்தானே ஆகில் நாலு நாள் இருந்திடுவானுக்கு
என்று இருப்பன் சர்வேஸ்வரன் –
ஆனால்-இங்கு இருக்கிற நான்கு நாள்களும் ஆதி வியாதிகளுக்கு இடம் கொடாதபடி-
மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு தோற்ற மிக உயர்ந்த இன்பத்தினை உடையவனாக-இவனை வையாது ஒழிவான் என் -என்ன
உலகத்து மக்களைப் போன்று ஒன்றனை இழந்த காலத்தில் துன்புற்றும்-விரும்பிய பொருள்களை பெற்ற காலத்தில் இன்புற்றும்
போரும்படிக்கு தகுதியாக வைக்கிறது என் -என்னில்
இவன் தன் சரீரத்தைப் போக்கி உன்னைத் தர வேண்டும்-என்றோ அன்றோ விரும்பியது
இச் சரீரம் தான் தண்ணியது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் விட மாட்டாது-இச் சரீரத்தில் இன்பத்தையே அனுபவிக்குமாறு வைக்கும் அன்று
இது தான் நன்றாய் இருந்ததாகில் ஈனனம் சில நாள் இச் சரீரமே தொடர்ந்து நமக்கு இருந்திடுக-என்று விரும்புவான் அன்றோ
இவனுடைய இச்சைக்கு ஈடாக வைக்கும் அன்று இன்னமும் ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி உண்டாகவும் கூடுமே
ஆகையால்
இவனுடைய நலத்திலே நோக்கு உடையவனாய்-இவன் இருந்தபடி இருக்கிறான் என்று இருப்பான் இறைவன்
-ஆகையால் முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிய-இனி வேறு ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி பிறப்பதற்கு முன்பே ஈஸ்வரனுக்கு
கார்யம் செய்து தலைக் கட்டலாய் இருக்கும்-
முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிந்து கொடு நிற்கும்-மேல் வரப் புகுகிறது அறியாமையாலே அச் சரீரத்திலே ருசி இல்லை
இது தான் பொல்லாதது என்று போலியாக அறிந்தும் வைக்குமே
இவன் முதலிலே இச் சரீரத்தை நீக்கி அருள வேணும் -என்று ஒரு வார்த்தை சொல்லி வைக்கையாலே
அவன் விரும்பாதது ஒன்றை செய்தானாகவும் சொல்ல ஒண்ணாதே அன்றோ –
விச்வாஸ ஆயாஸ பூம்நா -பக்திக்கு ஆயாசம் -பிரபத்திக்கு விச்வாஸம் -வேணுமே
அனுபவித்து -போகேனே அனுபவனே -பிராரப்த கர்மா முடிந்தால் மோக்ஷம் -முடிக்கும் பொறுப்பை பிரபன்னனுக்கு அவனே ஏறிட்டுக் கொள்கிறான் –
இனி
இறக்கும் நிலையிலே காஷ்ட பாஷானங்களைப் போலே இருப்பானே அன்றோ இவன் தானே-
ஆகையால் முதலில் சொன்ன வார்த்தையை கொண்டு இவன் விலக்க மாட்டாத அளவில்
ஈஸ்வரன் காரித்தைச் செய்து தலைக் கட்டுவான்-
தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் -ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –
நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –
இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ
மனஸி ஸ்திதே –
நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது-
பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ –
மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34-
காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று நான் நினைக்கிறேன்-என்றான் அன்றோ அவனும்
த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன-பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்
-ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-
உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க
அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல-விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்-
எந்தை பெயர் புனை யாயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகராகிய தளவத் திரு நகையாய்
கொந்து உற்றெழு குழலாய் குழல் நிகராகிய மொழியாய்
வந்துற்றது என என அன்னை மலர்த்தாள் களில் வீழ்ந்தான் –வில்லி புத்தூரார் செய்யுள்
ஸூஸ்வஸ்தே சரீரே –
வேறுபாட்டினை அடியைக் கூடியதான இந்த சரீரமும் ஒரு நிலையிலே நிற்பது
தாது சாம்யே ஸ்திதே –
அதற்கு உறுப்பாக தாதுக்களும் ஓன்று முடங்கி-ஓன்று நிமுருகை அன்றிக்கே இவை எல்லாம் சமமாய்
சரீரத்திலே ஒரு நொய்ம்மை பிறந்து-சத்துவம் தலை எடுத்த போதாக-நம்மை யாவன் ஒருவன்
ஸ்மர்த்தா –
நினைக்கிறான் -என்றது-நாம் யார் -சரீரம் ஆகிற இது அறிவில்லாத பொருளாய் இருந்தது –
சரீரத்துக்கு வேறு பட்டதாய் ஒரு ஆத்மா உண்டு-அவ்வாத்மாவானது ஈஸ்வரனுக்கு அடிமைப் பட்ட பொருள்-
சர்வேஸ்வரனைப் பெறுதல் இவ்வாத்மாவுக்கு மோஷம் ஆகிறது -என்று நினைக்கிறவன் -என்றபடி –
விஸ்வ ரூபஞ்ச மாம் –
குடல் தொடக்கத்தால் முள் பாய்ந்தால் வரும் துன்பம் ஆத்துமாவினது ஆமாறு போலே-
இவற்றுக்கு வந்த இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாம்படி-
எல்லா வற்றையும் சரீரமாக உடையனாய் இருக்கிற என்னை –
அஜம் –
இவனைப் போன்று பிறவி காரணமான கலக்கம் இன்றிக்கே இருக்கை அன்றோ –
விஸ்வ ரூபஞ்ச மாம் -அஜம் –
நாராயணன்-ஸ்வாமித்வம் சௌலப்யம் வாத்சல்யம் சௌசீல்யம்
அஜம் -ஞான சக்தியாதிகள் –
தத
ஆகையாலே
தம் காஷ்ட பாஷாண சந்நிபம் ம்ரியமாணம் அஹம் ஸ்மராமி
நடையாடித் திரியும் அன்று இவனுக்கும் உண்டே அன்றோ இந் நினைவு-
அறிவில்லாத பொருளைப் போன்று கிடந்த அன்றும்-இவன் நினைதிலன் -என்ற தேவை இடாதே-
நான் அவனை எப்போதே நினைத்தபடி நிற்பன்-
மத் பக்தம் –
அடைகொடு பாழ் பொகடுமவனையோ அவன் பற்றிற்று -என்றது –
பல நாள்கள் பச்சை இடுவித்துக் கொண்டு-காரிய காலத்தில் வந்தவாறே-
பச்சை இடாத நாள்களை எண்ணி-அகற்றுமவனையோ பற்றிற்று -என்றது-
நயாமி பரமாம் கதிம் –
கள்வன் கொல் -பெரிய திருமொழி – 7-7-1-பிராட்டியை-அத்வாளத்தலையை-முந்தானையின் தலையில் -இட்டு
மறைத்து கொடு போனால் போலே-தானே கையைப் பிடித்து கொடு போமாயிற்று -என்றது
ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்-பெரிய திருவடியை வரக் காட்டி யாதல்-கொடு போகை அன்றிக்கே
ஆதி வாஹிகரில் முதன்மையான தானே கொடு போம் -என்றபடி –
சரண்ய முகுந்தவம் உத்பலா வதகத்திலே பிரசித்தம் -சூர்ணிகை -181-
மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு-தாள் அடையும் பிரபத்தி –
அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு -இப்பத்தும் பாடியிடும் தண்டன் -என்று
கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-சூர்ணிகை –227-
உத்பல -மாம்சத்தில் விருப்பம் இல்லா ரிஷிகள் -விமானம் -சரண்ய முகுந்தத்வம் -காட்டி அருள
-பர உபதேசம் பண்ணி -அழுகை நின்றால் உடனே உபதேசிப்பாரே –
முதல் 4 பாசுரங்கள் பக்தி பாரமாக
மேலே பிரபத்தி பாரமாக -5 பாசுரம் –
மேலே -திவ்ய தேசம் சொன்னாலே போதும் -மூன்று நிலைகள் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்-தனி ஸ்லோக வியாக்யானம் –
ஏஷ -ஸவ்ரி -/நாராயண ஸவ்ரி /ஸ்ரீ மான் ஸவ்ரி -இப்படி ஒவ் ஒன்றும் -கீழை வீடு திருக் கண்ண புரம் -திருமங்கை ஆழ்வாரை பாடுவித்த முக்கோட்டை –
ஆனந்தமாக ஆழ்வார் அருளிச் செய்யும் திருவாய் மொழி -இது –
நீல மேகப் பெருமாள் மூலவர் -புண்டரீக விசாலாக்ஷம் -சரஸ் சந்த்ர ஆனணம்-நீலாத்ரி -நீல மலை போலே
மலை இலங்கு தோள் நான்கே-கருவரை போலே நின்றானை கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ
பதமினி தாயார் -திருக் கல்யாணம் –
பிரயோக சக்கரம் மூலவர் –
சர்வாங்க ஸூ ந்தரன் -அழகியான -திரு நாக்கை ஸூ உத்தர பெருமாள் -அச்சோ ஒரு அழகிய வா -சமுதாய சோபை –
ஸவ்ரி அழகால் இவர் ஈர்ப்பார்
உபரி சரவசூ அரசன் வேட்டை -ரிஷிகள் -சாமைக் கதிர் போலே இளைத்து -இருக்க -16 வயசு பாலகனாய் வந்து -ரக்ஷிக்க
பக்தர்களை காக்க -அவனை அனுக்ரஹித்து -அவன் ஏழு மதிள்கள் இருந்த -வேலை மோதும் மதிள் -அலைகள் வீசா நிற்கும்
திருமலை ராயன் பட்டணம் -மாசி மகம் தீர்த்தவாரி -பல்லக்கில் -மாப்பிள்ளை ஸ்வாமி –
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தார் -கொற்றப் புள் ஒன்று ஏறி மன்னூடே வருகின்றான்
திருக்கைகள் மேலே -யதாஸ் ஸ்தானம் -இங்கு ஒரு திருவடி மேலும் ஒன்றும் கீழும் பரம பதன் போலே சேவை –
அரையர் -சோழ மன்னன் மதிள்களை இடிக்க -கையில் வில் பொம்மையா -சிலை இலங்கு பொன் ஆழி–தாளம் வீசி திரு முகம் நெற்றியில் வடு –
மயங்கினேன் பாசுர இனிமையால் -அம்பு பொழிந்து ரக்ஷித்தான்
அம்மாவாசை திருக் கைத் தல சேவை -கண்ண புரத்தமுதே என் அவலம் களைவாய் –
ராஜா ஒத்தக்க குழை -காதில் அழகிய மணி சூடி -நாஞ்சிலும் ஒரு பாடு இலக-
ராம சந்நிதியில் கண்ணன் சேவை -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம் -தண்டக மகரிஷிக்கு சேவை -முனியதரையர் பொங்கல் பிரசித்தம்-
அரசன் புத்ர காமோஷடி யாகம் -சுமதி -ராணி உபரி வசூ ராஜா -பதமினி தாயார் -தானம் பெரும் ஹஸ்தம் -64 சதுர் யுகம் கண்ட பெருமாள் –
பத்தாம் திருவாய் மொழியில் கீழே ப்ராப்ய ஆர்த்தராய்க் கூப்பிட்டவர்க்கு ஈஸ்வரன் அர்ச்சாவதார ஸூலபனாய்க் கொண்டு
திருக் கண்ணபுரத்திலே நிற்கிற நிலையைக் காட்டி இவருடைய ஆர்த்தியை சாமிப்பித்த இவ்வாபத் ஸகத்வத்திலே ஸந்துஷ்டாராய்
வடதள ஸாயித்தவ மஹா உபகாரத்வத்தையும்
வஸ்த்வய தேச வைலக்ஷண்யத்தையும்
விலக்ஷண விபூதி யோகத்தையும்
அதிசயித்த போக்யத்வத்தையும்
பரமபத பிரதத்வத்தையும்
அனுகூல விரோதி நிராசைக்காதவத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூலபதையையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
காரணத்வத்தையும்
ஸ்ரீ யாபதித்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டானாய்க் கொண்டு ஆஸ்ரயண ஸ்தலத்தில் அடிமை கொள்வதாக நிற்கிற
கைங்கர்ய பிரதி சம்பந்திவத்தையும் அனுசந்தித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் –
பக்தி பரராயும் பிரபத்தி பரராயும் யுக்தி பரராயும் அவனை
ஆஸ்ரயித்தும் அனுபவித்தும் அவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணியும்
நிவ்ருத்த சாம்சாரிக சகல கிலேசராய்க் கொண்டு வர்த்தியுங்கோள்-என்று
அவனுடைய கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தவத்தால் வந்த பல ரூபத்தை ப்ரதிபாதித்து நிகமிக்கிறார் –
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-
இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது–இறைவனைப் பற்றுமின் -என்பது-அதனை இப் பாசுரத்தில் சுருங்க அருளிச் செய்கிறார்-
மாலை நண்ணி-சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி-சிநேகத்தின் காரியமான அன்பினைப் பொருந்தி–அடைந்து-காலை மாலை –இறைவனைப் பற்றுதற்கு கால வரை யறை இல்லை கமல மலர் இட்டு–எல்லா மலர்கட்கும் உபலஷணம் –ஆயாஸ சாத்தியமான பக்தியை தொழுது எழு என்பது இவர் அபிப்ராயத்தால் –அருளினன் -என்று பிரபத்தியை பற்றி இழிந்தவர் ஆகையாலே-தன் வாசனை தோற்றச் சொல்லுகிறார்
ஆல் -நீரும் இடமும்–தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்-ஆலின் மேலிடத்து என்னுதல்-இரண்டாவது பொருளில் -மேல் ஆல் -என்பதில் உள்ள ஆல் அசை நிலை-ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உகந்து அருளினார் –
—————
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-
சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சும் ஆசை உடையார்-காவலோடு கூடிய தேசம் என்று-அச்சம் இல்லாதவர்களாய் நாள் தோறும் தொழுது எழுமின் –என்கிறார்
——–
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே--9-10-3-
விலக்ஷண விபூதி உக்தன் -சுலபன் -ஏக கண்டமாய் —தொண்டர் -என்கையாலே எல்லாரும் ஒரே மிடறு ஆகலாம் அன்றோ -உங்கள் துயர் கெட-அநந்ய பிரயோஜனராய்-வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்-ஆராதிக்க -அருளிச் செய்கிறார்
விண்டு வாடா மலரிட்டு–அலரத் தொடங்கின அளவாய்-கழிய அலர்ந்து வாடாத பூ -என்றது-ஈஷத் விகசிதம் –
திருக் கண்ணபுரத்து -அண்ட வாணன் அமரர் பெருமானையே–இங்கே இறைவனைப் பற்றும் விரோதியைப் போக்கிக் கொண்டு-பூர்ண அனுபவம் பண்ண ஒரு தேச விசேடம் தேடித் போக வேண்டா-
நித்ய ஸூரிகளும் இங்கே வந்து சீல குணத்தை அனுபவிக்கும்படி ஏற்றம் உண்டே அன்றோ இங்கு-
பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு அம் மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி
ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப்பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் -அக்நோ த்ருஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி த்ருஷ்டதி யோகிநாம் பிரதிமாசு அப்ரப்புத்தானாம் அபி ஸர்வத்ர சம தர்சனம்
——–
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை மானானது நோக்கை -கண் அழகை – நைந்த கடைக் குறை-நோக்கி-நோக்கை உடைய—மான் நை நோக்கி-மானானது நையும்படியான நோக்கை உடையவன் -என்றது
மான் தோற்று நாணும்படி ஆயிற்று நோக்கு இருப்பது -என்றபடி –அதிசயித போக்யனான கிருஷ்ணனை நப்பின்னை பிராட்டி உடன் சேர்ந்து -ஆராதிக்க அருளிச் செய்கிறார்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-திருவடியாகிய -தேனையும்-செவ்விப் பூவையும்-சேர்க்கை போலே காணும் பற்றுலதல் ஆவது –
தான் நயந்த பெருமான் –அடியார்களோடு கூடி இருந்து குளிர்வதற்கு பாங்கான தேசம்
என்று அதனை விரும்பி வசிக்கிற-சர்வேஸ்வரன் ஆனவன்
—————-
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-
தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்–இப்படி பக்தி யோகத்தால் அடைவதற்கு-தகுதி இல்லாதவர்களாகி தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து-அவன் செய்து அருளும் படியை-அருளிச் செய்கிறார்-மேலே சொன்ன பாசுரங்களாலும் சொன்ன பக்தி யோகம்-எல்லாருக்கும் செய்யத் தக்கது அன்று-இப்பாசுரத்தில் சொல்லுகிற பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது(முதல் பாசுரம் மட்டும் பக்தி பிரபத்தி இரண்டுக்கும் -அடுத்த மூன்றும் பக்தி பரம் -இது பிரபத்தி பரம் )
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்-திருவடி பற்றினார்களுக்கு உபாயம் தானே என்றுமாம் –திருவடியே சரணம் ஆகும் என்றுமாம் -திருவடியே உபாயம்-தரணி யாளன்-தரணி பூமியை ரக்ஷிக்க -பூமா தேவிக்கு ஸ்வாமி
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-ஆஸ்ரிதற்கு பரம பதம் -பிரதன் ஆனவன்-தனது அன்பர்க்கு அன்பாகுமே— ஸூ விஷயத்தில் கைங்கர்ய நிஷ்டர்க்கு அபி நிவேசமே வடிவாகக் கொண்டவன்-ஞானி பிரியோ- அத்யந்த மம பிரிய -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேய-அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாதபடி-அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருத்தலின்-அன்பாகும் -என்கிறார் –
நடுவில் இவன் இருக்கும் நான்கு நாள்களும்-அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே –மரணமானால் -என்கிறார் –தனக்கு ஆற்றல் இல்லாமையால் அன்று –
இவன் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து-முடிக்கப் பெறாமையாலும் அன்று –இவனுடைய ருசியைக் கடாஷித்து நிற்கிறான் இத்தனை-என்றபடியைத் தெரிவிக்கிறது
————
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-
ஸூ அனுபவ விரோதியை நிரசித்து -பரமார்த்திக உண்மையான அன்பை உடையார்க்கு பரமார்த்த பூதநாம்-நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே – தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு-தானும் அவர்கள் பக்கல் என்றும் ஒக்க-அநந்ய பிரயோஜனனாய் இருக்கும்
அன்றிக்கே-தன் பக்கல் சிநேக பாவம் உடையாரை-விட மாட்டேன் என்று இருக்குமவன் -என்னுதல் –
———–
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-
அநந்ய பிரயோஜனருக்கு ஸூலபனாய்-பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான்–புறம்பே பிரயோஜனாந்தரங்களை பெற விரும்பிஅடைகின்றவர்கட்கு-
இவ் உலகில் மேலும் மேலும் ஆசையை உண்டாக்கக் கூடிய-அந்த பேறுகளை விரும்பிக் கொடுத்தவனாய் தன்னைக் கொண்டு அகலுவான் –-என்கிறார்-ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே – அநந்ய பிரயோஜனருக்கு – தன்னை மனத்தில் வைப்பவர்கட்கு-கையாளாய் இருப்பன் –
இமௌ ஸ்ம முனி சார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ-ஆஜ்ஞ்ஞாபய யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் -பால -31-4-முனி புங்கவரே-நாங்கள் உம்மை அடைந்தவர்களாய்-உமக்கு வேலையாளாய் இருக்கிறோம்-என்கிற படியே இருப்பன் –
———-
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-
அவனை அடையுங்கோள்-உங்கள் துக்கத்தையும்-துக்கத்துக்கு காரணமான பிறப்பினையும்
போக்கி அருளுவான் –என்கிறார்- —பிறவி கெடுத்து ஆளும் –அந்த துன்பங்களுக்கு காரணமான பிறப்பினைப் போக்கி-அடிமை கொள்ளும் –
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே – பரமபததில் இருக்கும் படியில் ஒன்றும் குறை இல்லாத படி-ஆயிற்று இங்கு இருப்பது–அவன் திருவடிகளில் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான-கைங்கர்யத்தைச் செய்யுங்கோள் –
அங்கு நித்ய ஸூரிகள் பணிய இருக்குமவன்-இங்கே வந்த பின்பு நீங்களும் அவன் திருவடிகளிலே பணியப் பாருங்கோள் -என்பர்- திருக் கண்ணபுரம் பரமேட்டி பாதம் பணிமின் –என்கிறார்-
————-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-
பணிந்து தணிந்தேன் -அடைந்து சகல துக்கங்களையும் தீர பெற்றேன் -தனக்கு ஆனதை பர உபதேசம் செய்து அருளுகிறார்-துன்பம் கடலில் எழுந்து முன் நான்கு -இதில் ஒரு தலை துலுக்கலில் நம்பி விஸ்வஸித்து பாடுகிறார்-ஒருவருடைய உபதேசமும் இல்லாமலே-நான் முன்னம் அவனை அடைந்து- இன்பத்தினை அடைந்தவன் ஆனேன்-என்று ப்ரீதர் ஆகிறார்-
நாளும் பணியத் தணியும் பிணி-நாள் தோறும் அனுபவிக்க – முன்புள்ள பிணிகள் போகுமே பணிந்தால் தணியும் என்றால் நிர்ஹேதுகம் ஆகாதே
தணியும் பிணி-ஏதம் சாரா -பாதம் பணிய- நாளும் பிணி–பலகாலமாக ஈட்டிய வினைகள் எல்லாம்-அநாதி கால ஆர்ஜித பிணி எல்லாம் தணியும்–பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் –போய பிழையும் -புகு தறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத்
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை-காரணம் து த்யேய– காரணமாய் உள்ள பொருள் த்யானிக்கத் தக்கது -என்கிறபடியே-உலக காரணன் அன்றோ த்யானிக்கத் தக்கவன்-
வேதார்த்தம் —வேத சாரம் -சார தாரம் -சார தம காயத்ரி முன்னோதிய- வேதார்த்தம் திருக் கண்ண புரம்-சம்பந்தம் -திருமந்த்ரார்த்தம் -அருளியதால் –
திரு மங்கை ஆழ்வாரைப் போல்வாரை -வேத நாவர் -என்கிறது –விரும்புகையாவது
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியேனோ -பெரிய திருமொழி –6-9-3–என்கை –
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே –தாய் மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லையே -என்னும் இடம் உறுதி –
—————
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-
ப்ரீதியின் மிகுதியாலே-மேல் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி-
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் தகுதி இல்லாதவர்கள்–விச்வாஸம்-வேணுமே -சங்கா த்ரயம்-பல்கு-உயர்ந்த பலன் -பாப குவியல் மூன்றும் -உண்டே –திருக் கண்ணபுரம் என்ற வார்த்தையினைச் சொல்லவே-எல்லா துன்பங்களும் போம் —யுக்தி மாத்திரமே அமையும்–என்கிறார் –திரு மார்பினன்--திருக் கண்ண புர நாயகியும் இருக்க -என்ன குறை-அனுபவ அலாப துக்கம் இல்லை -அவிச்சின்ன அனுபவம் கிட்டும்
எனக்கேல் இனி என் குறை –-இனி எனக்கு என்ன குறை உண்டு -என்றது –பகவானை அனுபவிப்பதற்கு விரோதியான துன்பங்கள் எல்லாம் போன பின்பு நான் அனுபவிப்பதற்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்தது இல்லையே -என்றபடி –
———-
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
உங்களுடைய துன்பங்கள் எல்லாம்-வாசனையோடு போக வேண்டி இருக்கில்-
இத் திருவாய் மொழியில்-ப்ரீதி முன்னாகச் சொல்லிக் கொண்டு-அவன் திருவடியைப் பற்றுங்கோள்-என்கிறார்- யுக்தி கூட சொல்ல முடியாதவர்கள் -இந்த திருவாய் மொழி சொல்ல அமையும் -இது நான்காவது நிலை —
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே-மூன்று வினைச் சொற்கள் -ப்ரீதியால் பாடியும் ஆடியும் -சுலபனான அவன் திருவடிகளை வணங்கி அனுபவிக்க -பகவத் அனுபவம் பண்ணவே ஸமஸ்த துரிதங்களும் போகுமே -ஸூசுகம் கர்த்தவ்யம் –
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே-திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை-பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –ப்ரீதி முன்னாகப் பாடி-இருந்த இடத்தில் இராதே ஆடி-ப்ரீதியினால் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு- அவன் திருவடிகளில் விளுங்கோள்- இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற-வேப்பங்குடி நீர்-
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –
—–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply