ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
சாது பரித்ராணாம் போன்றவை கீதையில் அவதார பிரயோஜனம்-இங்கு உண்மை அறிந்தவர் சரியான காரணங்கைக் காட்டி அருளுகிறார்-ஏறு கோள் கூறி வரைவு தடவுதல் -ஏறு தழுவுதல்
கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள்-எங்கனே என்னில்-சொன்ன உக்தி செவி படுவதற்கு முன்னே உணருகையினாலே உயர்வற உயர் நலம் உடையவன் என்னா — உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் என்னும் படியாலே- மோஹித்த போது அறியாதே கிடக்கவும் , உணர்ந்தார் ஆகில் ,தம் உடைய பாழியான கிருஷ்ண அவதாரத்தில் மண்டும் இத்தனை–த்வராவதி மன்னனை ஏத்துமின் -சொன்னதும் உணர்ந்தாள் அங்கு – அதே போல் –மாலையைச் சூட்டுமின் என்ற சொல் கேட்டதுமே உணர்ந்தாள் –
இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது-(ஏழு ரிஷபங்கள் அடக்கி நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்-துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும் )-என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )-மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை –ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் ) (ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார் –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
சூட்டு–சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்-ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-
கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே-ஏற்பது தன் தலையால் இருக்கையாலே-பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம் கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லிக் காட்டினார்–-அஸ்நாமி-என்னுமா போலே-பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்-எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன் -நன் மாலைகள் —இவன் ஆதரிக்கும் என்னா-எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே ,
இங்குத்தைக்கு சத்ருசமாய்-ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும் ( பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் –
கள்ளார் துழாய் -என்றும் நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்-அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால்)
மாலைகள் — ஈரம் கொல்லியை கொன்று திரு பரியட்டம் சாத்தி ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,-சாந்து சாத்த அபேஷிதமான தசையிலே கூனி சாந்து கொண்டு போகா நிற்க ,–பெண்டாட்டி ஆகையாலே மறுக்க மாட்டாதே – இடை பிள்ளைகளுக்கு முடை நாற்றத்தோடு கூடின வடிவுகளுக்கு ஏதேனும் வழக்கான சாந்தை இட்டு ,மருட்டுகிறோம் – என்று தண்ணிய சாந்தைக் கொடுக்க ,-முன் கையை நீட்டி மோந்து பார்த்து ,–சுகந்தமேதத் –-இது உனக்காய் இருந்தது என்ன–அதற்க்கு மேல் தரமாய் இருந்ததொரு சாந்தைக் காட்ட –ராஜார்ஹம்–இது உம் கண் ஆயனார்க்காய் இருந்தது — அதற்க்கு மேல் தரமாய் இருப்பதோர் சாந்தைக் காட்ட –ருசிரம்-நிறம் அழகியதாய் இருந்தது – கந்தத்தாலே நன்றாம் இது நிறம் அழகிது என்கை-அதுக்கு உறுப்பு அன்று இறே –ருசிரானனே –இடை பிள்ளைகள் சாந்தின் வாசி அறியார் என்று என்று இருந்தோம் ..
இது இவர்கள் வாசி அறிந்த படி என் என்று ஹிருதயத்தில் கிடந்த பிரியம் முகத்திலே தோற்றி இருந்த படி-ஒரு சாந்து இட வேணுமோ –ஒரு முகம் இருந்த படி என் என்று ஏத்துகிறான்–கம்சனுக்கு வைத்த சாந்து இடுகைக்காக-ஆவயோர்காத்ர சத்ரு சந்தீயதா மனுலேபனம் — நல் சரக்கு பரிமாறுகிற நீ உடம்பின் வாசி அறிய வேண்டாமோ-அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் சத்ருசமான சாந்து நீயே அறிந்து தா-
சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்-(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )மாலைக்கு நன்மை யாவது-அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை-அனுரூபமாய் புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )-சூட்டு -திருமுடி சாத்தாய்-மாலை -தோளுக்கு விடுவதாகவும்(மூன்று முடிக்கு உரிய அரசு-பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே-வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்) அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்
தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது-த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் )
தூயன —
அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–-கெண்டை ஒண் கண் இத்யாதி–மிக்க சீர் தொண்டர் இட்ட
–தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் -ஸ்வயம் பிரயோஜனம் )
ஏந்தி
பாரதந்தர்யத்தால்-யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )
ஏந்தி–
தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு-மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —
மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி –(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )
விண்ணோர்கள் இத்யாதி –
மண்ணோர்கள் இட்டதை கொள்ளும் அவன்-விண்ணோர்கள் இட்டால் சொல்ல வேண்டா இறே-
பிரயோஜனந்ததுக்கு அன்றி லோகம் வாழ பண்ணும் திரு மஞ்சனம்–அம் தூபம் தரா நிற்கும் அங்கு –
முறை மாற வேண்டாதே ,-முதுகு நோவ வேண்டாதே ,-தானே போஷக தாரக போக்யமாய் இருக்கை –
நமஸ்நானம் –(பரதாழ்வான் இடம் கூடின பின்பே ஸ்நானம்
விபீஷணன் தாங்கிப் போகப் பிரார்த்திக்க -மறுத்து பெருமாள் கடுக விரைந்தால் போல் )பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்-நன்னீர் ஆட்டி-அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய் சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே (வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு -இத்யாதி-ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )அங்கு-அந்த நித்ய விபூதியில்
விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு அங்கே சென்ற பின்பு போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )
ஓர் மாயையினால்-
அத்வதீயமான ஆச்சர்யம் –அவ்விடம் அங்கனே செல்லா நிற்க செய்தே ,-திரு ஆய்ப்பாடியிலே அனுகூலர் பக்கல் வெண்ணெய் உண்டாய் இருந்தது என்று நாரதராதிகள்-சொல்ல —
தனது சங்கல்பத்தால் கிடைக்கும் வெண்ணெய் விட-கோபிமார் ஸ்பர்சத்தால் கிடைக்கும் வெண்ணெயில் விருப்பம் கொண்டு ,-தூபம் உண்டாகிய புகையிலே தன்னை மறைத்து –
ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று இருக்கிறவர்களை-கண்ணில் மணல் தூவின படி—மாயை–
மாயா வயுனம் ஞானம் என்கிற படியே இச்சை-அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து —
சிர காலம் கூட சம்பாதித்த வெண்ணெயை–க்ருத்ரிமத்தாலே ,புஜிக்க போந்து ,-இவன் கையிலே சிலவர் அடிலும் அநபிமதமாய் இருந்த படி ..-இவர் தாம் அங்கும் கூட நின்று இங்கும் கூட போந்தார் போல் காணும்-ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி-(கையிலே கொடுத்தாலும் கொள்ளான்-தானே களவு கண்டு உண்ணும் அத்தனை–திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து-அதுவும் ஆய்ச்சியர் வெண்ணெயை மட்டுமே கொள்வான்-அங்கு நடந்தவற்றையும்-இங்கு நடந்தவற்றையும் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்றோ அருளிச் செய்கிறார் )
அத பஞ்சவடீம் கச்சன் -என்னுமா போலே– பஞ்ச வடிக்கு போகும் வழியில் ஜடாயுவை கண்டால் போல் –
வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி — விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி–இமில் ஏற்று இத்யாதி–ககுத்தை உடைத்தான எருத்தை உடைய வலிதாய்- வளைந்து இருந்துள்ள கொம்பிலே விழுந்தான் ..-அனந்தரம் நப்பின்னை பிராட்டியை அணைக்கப் புகுகிறோம் என்னும் -அத்தாலே அவன் நின்ற படி–உத்தேசம் ஆகையாலே-கூத்து -என்கிறார்–
(கிஞ்சித் தாண்டவம் -நின்ற திருக்கோலமே கூத்து போல் இருக்குமே )ககுத்துக்களை யுடைய எருதுகளின் வலித்தாய் வளைந்த கொம்புகளின் நடுவே வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்
அடல் ஆயர் தம் கொம்பினுக்கே–
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதசபாண்டவ-என்று-இவன் பிறந்த பின்பு யுத்தோன் முகமாய் இருந்த படி– இவனைக் கண்டு வைத்து கடுக நீராட்டிக் கொடாதே -நடுவே எருத்தை இருத்துவதே –தம் கொம்பினுக்கே-அம் கொம்போடே பொரலாம் ஆகில் , -இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-கரு மாறி பாய்ந்தாலும் பேற்றுக்கு தக்கது போராதாய் இருக்கிற படி–ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மேசுதா–என்னும் படியே —சீதை பிராட்டியால் ஜனகன் குலத்துக்கு கீர்த்தி உண்டானது போல் –பால காண்டம் -68-21–நம் கொம்பினுக்கே -அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-ஆயர் பன்மை -கொம்பு ஒருமை -இதுக்கு இந்த பிரமாணம் -பிரபலரான கோப குலத்தில் பிறந்த நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது
திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்-அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன் மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப்பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப்பின்னைப் பிராட்டியை அணைக்க -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
ஆகவே இப்பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்–
முன்னிரண்டு அடிகளால் பரத்வத்தையும் -பின்னிரண்டு அடிகளால் ஸுலப்யத்தையும் அருளிச் செய்கிறார் –புகை நிழலில் ஒளித்து வருவாரைப் போலே அங்கு நின்று இங்கு வந்தமை தோற்ற –
அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால் போந்த -என்கிறார்
ஸ்நாநாசனம் அலங்காராசனம் அங்கே நடக்க -போஜ்யாசனமும் சயனாசனமும் இங்கே –
அவனுக்கு இரண்டும் வேறுபாடு இன்றி நிகராக உரியவை –ஓர் மாயையினால் -பகவானுடைய சங்கல்ப ஞானம் – ஸம்பவாமி ஆத்ம மாயயா போல் மாய வகையினால் என்றுமாம்–ஈட்டிய வெண்ணெய்-திருவாய்ப்பாடியில் மனைகள் தோறும் திரட்டி வைத்த வெண்ணெய் –அடலாயர் -பிரபலமான இடையர் என்றபடி–பூர்வர்கள் இது தானான தன்மை பாசுரம் என்றே சொல்வர்-சிலர் அகத்துறை -ஏறு கோள் கூறி வரைவு கடாதல்-முல்லை நிலத்து தலைமகள்-எருதுகளின் வலியை அடக்குமாறு சொல்லி விவாஹம் செய்து கொள்ளச் சொல்லுதல்–
ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே) தயிர் பால் சம்சாரி-வெண்ணெய் முமுஷு-நெய் முக்தன் )இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து-முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி-ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து – ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக-உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி-நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை-பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்-சம்சாரம் கழித்து – உண்டியே உடையே உகந்து திரியாமல் அவஸ்தையைக் கழித்துஆகதோ பரமபதம் புகப் பெறாமல்-ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க-இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் – எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே-அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து-கோட்டிடை இத்யாதி-ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்-அவஸ்தா சப்தகம் போக்கி-கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள் பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்–அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே-நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்–பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்-ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை –அடலாயர் கொம்பு-அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் –கொம்புக்கு இரண்டும் உண்டே-இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்-என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று
தாத்பர்யம்–கீழ் பாசுரத்தில் ஸூஹ்ருத்துக்கள் உச்சரித்த பகவத் திரு நாமங்களைக் கேட்டு-வெறி விலக்க பகவத் நாமங்களைச் சொல்லுங்கோள் என்பதைக் கேட்டு மோகம் தெளிந்து- (மோகம்-பக்தி மேலிட்டு -ப்ரேமம் –தாமான தன்மையால் கிருஷ்ண அவதாரம் -தனது பாழியிலே ஆழ்ந்து
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம்-ஏறு தழுவுதகள் துறை என்பதையும் பார்த்தோம்
ஸ்ரீ வைகுண்ட மா நகரத்தில் வீற்று இருந்து-உன்னை நித்ய ஸூரிகள் திருமஞ்சனம் செய்வித்து
வஸ்திரம் மால்யா திரு ஆபரணாத்திகள் -உபசாரங்கள் சமர்ப்பித்து-16 உபசாரங்கள்-சந்தனம் சாத்தி -பூ சமர்ப்பித்து சாம் ஸ்பர்சிகம்-தீபம் ஒத்துவாடை சமர்ப்பித்து உபசாரிகம் தொடாமல்-உள்ளே செல்வது போனகம் -போன்ற மூன்று வகைகள் உண்டே –
தூபம் சமர்ப்பிக்க-அவர்களுக்குத் தெரியாமல் புகை மண்டலத்தில் ஒளிந்து ஓடி வந்து -சமத்காரமாக சாதிக்கிறார்-திருவாய்ப் பாடியில் கோபிமார் கடைந்து ஈட்டிய-திரட்டி வைத்த வெண்ணெயை தானே திருடி புஜித்து -அமுது செய்ய- கிருஷ்ண அவதாரம் செய்து-நப்பின்னைப் பிராட்டியைப் புணருகைக்காக-கோபர்கள் -கும்பன் இட்ட-ஏழு எருதுகளைப் பொருது-அக் கொம்புகளில் அகப்படாமல் நடுவே கூத்தாடிய படி-வல்லார் தாண்டவம் போல் சஞ்சரித்து இது என்ன ஆச்சார்யம் என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –கொம்புகளை ஆட்டி தாமும் தாண்டவம் ஆடினார் அன்றோ
வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள அத்தைக் கண்டு சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்-சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-
4-5-வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, -ப்ரவேஸம்-
மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே!
உன்மச்தக ப்ரீதி அப்ரீதி மாறி மாறி வருமே -இந்த இரண்டு திருவாய்மொழிக்கும் ஏற்றம் என் என்னில் –
மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய,
‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி.
அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
-நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )
பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு
சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி,
நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?
இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று
இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.
ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத் திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச் சேர்த்தியைச் சேர்த்து வைக்கின்றவர்கள் கூட இருக்கச் செய்தே பிரிகையும்,
போலி கண்டு மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும்,
இரண்டு இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத் தெரிவித்தபடி.
அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு, நித்தியசூரிகள்;
அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி.
அங்குப் பரிகரம் மஹாராஜர் முதலானோர்;
இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை.
அங்குப் பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க,
இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்-என்க.
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்;
‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.
அஞ்சாம் திருவாய் மொழியில் –
கீழ் சத்ருசமாயும் சம்பந்தியாயும் உள்ள வஸ்துக்களுடைய தர்சனத்தாலே பிரமிக்கும் படி இவர்க்கு உண்டான
ஆர்த்தி அதிசயம் தீருகைக்காக சர்வேஸ்வரன் தன்னுடைய நிரதிசய விபூதி வைலக்ஷண்யத்தையும்
மஹா உதார சேஷ்டிதங்களையும் அனுபவிக்க அனுபவித்து ப்ரீதராய் –
அவனுடைய அகில லோக நிர்வாஹகத்வத்தையும்
அதுக்கு அடியான லஷ்மீ பதித்தவத்தையும்
உபய ஸித்தமான ஆனந்தாதி குண யோகத்தையும்
இக்குணாதி போக்தாக்களை காத்தூட்டும் வாஹன ஆயுதவாஹத்தையும்
போக அனுகுணமான ஞான ப்ரேமாதி பிரதத்வத்தையும்
அஸ் கலித ஞானர்க்கு அநு பாவ் யமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
இந்த போக்யதைக்கு சர்வ அவஸ்தையிலும் ஓத்தாரும் மிக்காரும் இல்லாத மேன்மையையும்
அதுக்கு உபபாதகமான விபூதி திவ்ய யோகத்தையும்
தத் விஷயமான வ்யாப்த்யாதிகளையும்
வ்யாப்ய ரக்ஷண அர்த்தமான தர்சனீய வியாபாரங்களையும்
அனுசந்தித்து -இப்படி பரி பூர்ணனான சர்வேஸ்வரனை அனுபவித்துப் பிறந்த ஹர்ஷ அதிசயத்தாலே ஸூரிகளைப் போலே
வாய் விட்டுப் புகழ்ந்து இந்தளத்திலே தாமரை போலே இங்கே இந்த அனுபவம் கிடைக்கையாலே
எனக்கு சத்ருசம் உண்டோ என்று தமக்குப் பிறந்த செருக்கை அருளிச் செய்கிறார் –
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
வீற்றிருந்து-தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது-ஏழுலகும் தனிக்கோல் செல்ல, மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.-நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு; இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது, கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி, ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.வீவு இல் சீர் –அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல்.
வெம் மா பிளந்தான் தன்னை –-‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி-இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து, களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது-வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால்,-இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர்.-கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே, இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்;
முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது; கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான்
போற்றி – சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும் சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.-கைகள் ஆரத் தொழுது –‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின் விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.
சொல் மாலைகள் –-வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –-‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.
நோற்றேற்கு –-இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –
இனி என்ன குறை –பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;-அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமையுமே –முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக் கடவதன்றோ?-என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இறே-
————-
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-
அவளோடே கூடக் கேட்பித்து அச்சேர்த்தியிலே மங்களா சாசனம் செய்தார் இவர்;
மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினனை ஆயிற்றுக் கவி பாடிற்று. மலர்மேல் உறைவாள் –-செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். அவயவ சோபை அது; சௌகுமார்யம் இது.
உறை மார்பினன் –பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார்,‘உறை மார்பினன்’ என்கிறார்.
மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே பார்த்துக் கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
‘செய்யாள் திருமார்வினில் சேர் திருமால்’–9-4-1- என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக் கொண்டிருக்கையாலே அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்; ‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்;
அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம். இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.-இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு அவன் பிராட்டியைப் பார்க்க, அவள்,அந்ய பரதை பண்ணாமல் –‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் -என்னைப் பார்க்காமல் –அத்தைக் கேட்கலாகாதோ?’ என்று சொல்ல, இப்படிக் காணும் கேட்டது.-விண்ணோர் பெருமான் தன்னை –பெரிய பிராட்டியாரும் அவனும் கூடவிருக்க நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க
ஆயிற்றுக் கவி கேட்பித்தது,’ என்றவாறு.
‘மொய்’ என்பது செறிவைச் சொல்லுதல்; அல்லது, பெருமையைச் சொல்லுதல்-கேட்டார் கட்டு உண்ணும்படி இசை மிகுந்து இருப்பனவாதலின், ‘இசை மாலைகள்’ என்கிறது.
நினைத்து அன்று போலே காணும் ஏத்திற்று; ஆதலால், ‘ஏத்தி உள்ளப் பெற்றேன்’ என்கிறது.
இதனால், ‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிற நியதி இல்லையாயிற்று இவர் பக்கல் என்கிறது.-‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் உறுப்புகள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியேஆயிற்று அனுபவிக்கிறது’
வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,
தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது
பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர். பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.
————
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-
அச்சுதன்-இவ்வானந்தத்திற்கு ஒருகாலும் அழிவு இல்லை என்னுமிடம் திருப்பெயரே சொல்லுகிறதே அன்றோ?மலர்க்கண்ணன் –ஆனந்தத்தை இயல்பாகவேயுடையவன் என்னுமிடத்தைத் திருக்கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.மேவி – ஆனந்தத்தில் சாம்யாபத்தி உண்டே -அவனுக்கு இயல்பிலே அமைந்தது; எனக்கு அவனை அடைந்த காரணத்தால் வந்தது; அவனுடைய ஆனந்தத்திற்கு அடி இல்லை;-என்னுடைய ஆனந்தத்திற்கு அடி உண்டு.அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –
———–
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-
மேவி நின்று தொழுவார் –கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே ,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,
அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,
‘இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி. கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –மேவும் பிரான் –இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும் வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ? நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்;
அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’-அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன் இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது.-‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு-
———–
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-
ஆற்ற –அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தாற் போலே யன்றிக்கே, பொறுக்கப் பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’-கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.- என்றபடி. ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின்
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார்-தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்திய ஸூரிகளையுடையனாய் இருந்து வைத்தும் என்னை அனுபவிப்பித்தான்,’ -அவன் செய்த உபகாரத்திலே தோற்று ஏத்தினார்; அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’-வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின.-வினை நோய்கள் கரியும்படி-மாற்ற மாலை-
————–
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-
‘இடும்’ என்பதனைக் கண்ணுக்கு அடைமொழியாக்குவர் வியாக்கியாதா.
அதனைப் பெருமானுக்கு அடைமொழியாக்குவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.‘இதற்கு முன்பு பெறாததாய் இனிப் பெற வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.-கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை இடுகின்ற’-கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது,
அம்மேனி மிசை –அழகிய திருமேனியிலே, வெளிய – சீற. ‘நீறு சிறிதே இடும் – பொடியாக்கும்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர்.
ஈஸ்வரோஹம்-‘ஈசுவரன் நான்’ என்று இருக்கிற இவ்வுலகத்திலே அடிமை இனிக்கப்பெற்று,
சொரூபத்திற்குத் தகுதியாக வாசிகமான அடிமை செய்யப்பெற்று,‘வினை நோய்கள் கரிய’ என்கிறபடியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு.-இன்று தொட்டும் இனி என்றுமே – அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை.-பின்பு ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?-பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இறே
——–
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-
“அரியது உண்டோ எனக்கு?’ என்கிற இந்த நிறைவு உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன
‘பகவானுடைய கிருபையாலே வந்தது,’ என்கிறார்.
‘தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, அவதரித்து மனிச்சு ஏறிட்டுக் கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம்.
சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் – சொன்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்கியத்தை அடையப்பெற்றோம். பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை மாத்திரமே உள்ளது,-அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன? ‘இப்படி விஷயம் நிறைவுற்றிருந்தால் ‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.-இவர் இப்போது ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், விதி’ என்கிறார். ‘விதி சூழ்ந்ததால்’ -திருவாய்.2. 7 : 6.-என்றாரேயன்றோ முன்னரும்?
கிருபயா பரிபாலயது –‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;-அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்? ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )நமக்கு ஒரு குறை உண்டாகை யாகிறது கிருபையை பரிச்சின்னம் ஆக்குகை இறே-
————
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும்.-பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்;-ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும். மலரில் மணத்தை வகுத்தாற் போலே இருந்துள்ள மிருதுத் தன்மையையும் இனிமையையும் உடையவளாதலின்,
‘பூவின் மிசை நங்கை’ என்கிறது.‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப் போலே யாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார்.இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.-தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –-அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று?
சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு –
அவனுடைய உபய விபூதிகளை உடைமையால் வந்த ஐசுவரியத்துக்கும் மிருதுத்தன்மைக்கும் தகுதியாம்படியான கவி பாட வல்ல எனக்கு.
இதற்கு, ‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால்,
அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’-ஆசு கவித்துவம்- என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.
அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே,-சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி,
‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல்
தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.-ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது
இனி யாவர் நிகர் அகல் வானத்தே –
பரமபதத்திலே தரித்து நின்று, ‘அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவுக்கு இனியன், நான் பரமாத்துமாவுக்கு இனியன்’ என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பை யுடைத்தாமத்தனையோ வேண்டுவது? – அகல் வானம் அது -நிகர் அற்றவன் அடியேனே-தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லுவிக்கும்;
இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்;
‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’-திருவிருத்தம், 79.– என்னக் கடவதன்றோ?
————–
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-
நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்;
யாரைக் கண்டால் கண் பார்க்காதோ புத்தி வேறு ஒன்றில் போகாதோ -சுருதி வாக்கியம் –
வேறு ஒரு பிரகாரம் போகாது என்று கொண்டு -ஆழ்வார் –
முத்தர்கள் ‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல்
நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்;
இங்குள்ள பராசரர் வியாசர் முதலிய முனி புங்கவர்கள் ஒரோ துறையிலே மண்டியிருப்பர்கள்; ‘எங்ஙனே?’ என்னில்,
‘ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ ராமாவதாரமல்லது அறியாதே இருக்கும்.
ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ வேதவியாச பகவானும் கிருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்;-கிருஷ்ண த்வைபாயனர் —
ஸ்ரீ சௌனக பகவான் அர்ச்சாவதாரத்திலே ஈடுபட்டவனாய் இருக்கும்;
அங்ஙனன்றிக்கே, சர்வேசுவரனை எல்லா நிலைகளிலும் புக்குக் கவி பாடப்பெற்ற என்னோடு ஒப்பார் உளரோ?’ என்கிறார்.
‘ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ என்கிறபடியே,
தன்னுடைய பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று வந்து அவதரிப்பது,’ என்கிறது. என்றது,
‘தேவர்களுக்கும் தேவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்தவனாய் வந்து அவதரித்தாய்,’ என்று சொல்லும்படியாயிற்று இருந்தது என்றபடி.
‘அஞ்சலி செய்தவராய் வணக்கத்துடன் இருக்கின்ற’ என்கிற இளைய பெருமாளைப் போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சியாலே சரீரத்தை வளைத்துக் கொண்டிருப்பவன் ஆதலின், ‘கூனல் சங்கம்’ என்கிறது. என்றது, ‘வாயது கையதுவாக அனுபவிக்கின்றவன் அன்றோ?’ என்றபடி.
‘உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே;
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்; பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே!
லீலா விபூதியும் நித்திய விபூதியுமாகிய இரு வகைப்பட்ட உலகங்களும்வந்து ஒதுங்கினாலும், பின்னையும் கையே விஞ்சி இருக்குமாதலின் ‘தடக்கை’ என்கிறது.
குடமாடியை – எங்கும் ஒரே தன்மையாய்ப் பரந்து நின்றாற்போலே, ஓர் ஊராகக் காணும்படி குடக்கூத்து ஆடினபடி.-குடக்கூத்தினைக் கூறியது, எல்லாச் செயல்களுக்கும் உபலக்ஷணம்
வானம் கோனை –ஓர் ஊர் அளவன்றிக்கே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறபடி-கவி சொல்ல வல்லேற்கு – இப்படி இருக்கிறவனை எங்கும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு.-இனி மாறு உண்டே –அகல்வானம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டுமோ? ‘உபய விபூதியிலும் எதிரில்லை-
——————
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
கிடந்தும் -கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,-ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.-மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.- ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது-எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’
தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதார குணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது.
அன்றிக்கே.-இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று,-லவ குசர்கள் பாட பாட நடந்த ராம சரித்ரம் மக்களுக்கு விளங்கினது போலே – பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ?
அடியார்க்கு இன்பமாரியே –சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.-‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?
————–
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்திய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே நித்திய சமுசாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.திருநகரிக்கு ஸஹ்யம் திருமலையாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.ஆறாக் கயமாகையாலே -பொற்றாமரை கயமாகையாலே –பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.(வேரி பரிமளம் -கீழே பன்னீராயிரத்தில் மது அர்த்தம்-மாரி-வாரி -வேரி-மூன்றும் மாறாது –
‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, –
பிரசாத வெள்ளம் திருக்கண்களில் வழிய பிரவாஹமாக வெளியிட – சர்வேசுவரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.
இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான
எல்லாத்தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது. தீர்க்கும் – போக்குவாள்.
‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.-
வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள அத்தைக் கண்டு சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்-சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-
—-=—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply