ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை-மாசறு சோதி -5-3–

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி ஆற்றாமையைத் தெரிவிக்கும் பாசுரம் முதல் பாசுரம் பெருமானைப் பிரிந்து பகவத் விஸ்லேஷம்
6-11-பாசுரங்கள் வரை பாகவத விஸ்லேஷம் -கிளைவித் தலைமகன்-திருவேங்கடமுடையான் சேவிக்கப் போவதைத் தவிர்த்தார்கள்-அரையர் மந்தி பாய் பாசுரம் போல்-போதயந்த பரஸ்பரம்-பேசி மகிழ்ந்து கேட்டும் மகிழ இது பெருமாளைத் தானே நினைவூட்டும் அன்றோ -பகவத் ஸ்மாரகம்
இப் பாட்டு ஆற்றாமையைத் தெரிவிக்கும்
இளங்கலை பட்டம் வாங்கினால் முதுகலைப்பட்டம் வாங்கலாம் ஆனால் இங்கு பாகவத விஸ்லேஷம் பகவத் விஸ்லேஷமும் உண்டாக்கும்-நம்பிள்ளை ஈட்டில் -ஊனில் வாழ் உயிரிலே -2-3- 1/10/11 பாசுரங்களையும் சேர்த்து – களிப்பும் கவர்வும் அற்று விளக்கி உள்ளார் –

நெஞ்சினார் -அஃறிணை உயர்திணையாகவும் ஒருமையை பன்மையாகவும் கோபத்தால் சொன்னபடி
இவர் இடம் பிரிவாற்றாமை விளைத்து திருத்துழாய் தேடிப் போனதே-இனி வந்து கலந்தாலும் பழைய ஆனந்தம் கிட்டாதே-ஸம்ஸ்லேஷமும் விஸ்லேஷமும் மாறி மாறி தானே வரும்
ஆர்த்தி கொடுத்துப் போனதே -இன்றும் அப்படியே இந்த சொத்து இருக்குமே
தந்து போன தனி வளமே –அத்விதீயமே -நாதனுக்கு நாலாயிரம் அருளி இந்த சொத்தை அருளினார்
மாமையையும் பயலையும் கங்குலூழிகளே -சொல்லி-இது எல்லாம் ஸ்மாரக பதார்த்தங்கள்
இன்னவே -இனவே -சுருங்கி-
சந்திரன் மல்லிகை -வாடை போன்றவை வாட்டுவதைச் சொன்னபடி

எம்பெருமானோடு புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் அவசன்னையாய் தனக்குப் பிறந்த வை வர்ணயாதிகளைச் சொல்லி நெஞ்சோடு கிலாய்க்கிறார்

கீழ் எல்லாம் வைஷ்ணவர்களை தலைமகனாகப் பேசிற்று
இதில்-எம்பெருமானைத் தலை மகனாகப் பேசுகிறது –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ச்லேஷ பர்யந்தமாய் நிற்கக்   கடவதாகையாலும்
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ஸ்லேஷம் பகவத் சம்ஸ்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –இதிலே தானே அசாதாரண திருத்துழாய் திருவாழி அடையாளம் – ஆகவே பகவத் ஸம்ஸ்லேஷம் கிட்டாத ஆற்றாமை-பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷம் வரை போக வேண்டுமே அறிந்து அறிந்து தேறித் தேறி நிலைக்க பாகவத ஸம்ஸ்லேஷம் கிட்ட வேண்டும் –பாகவத ஸம்ஸ்லேஷமும் நிலைக்க பகவத் ஸம்ஸ்லேஷமும் வேண்டுமே-திருவேங்கட யாத்திரை ;போகாமல் அவர்கள் கலக்க -அது பெருமாள் உடன் சேர நினைவூட்ட -ஆற்றாமை மானஸ ஸம்ஸ்லேஷம் கிட்டி பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிட்டாமல் ஆற்றாமை வருமே )–

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாமல் விடாமல் இருக்கும்
பகவத் சம்ச்லேஷம் ஏற்பட்டு பாகவத சம்ச்லேஷம் விரும்பலாம்-அடியாருக்கு ஆட்படுத்தி அருள் என்று பிரார்த்திக்கலாம்-என் அப்பனில் -என்று சொல்லி மேல் முடிவில் உண்டான பாகவத ஸம்ஸ்லேஷம் இல்லாத அன்று கீழ் உண்டான பகவத் ஸம்ஸ்லேஷமும் போவதற்கு ஹேது-இந்த பகவத் ஸம்ஸ்லேஷம் தான் -பாகவதர்கள் உடன் கூடின அன்று தான்-அல்லது ஒன்றாய்த் தலைக் கட்டாதே அது போன அன்றே இதுவும் போகுமே-main switch போட்டு தான் ஒன்றை உபயோகிக்கலாம் -சார்ந்தே இருக்கும் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று இவர்கள் உடன் கூடி அவனை அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த பகவத் சம்ஸ்லேஷமும் குலைந்து போனதே

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
–2-3-1––அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9—-களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே
–2-3-10-குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக் குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக் குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-பகவத் ஸம்ஸ்லேஷம் பெற்று ஏக ரஸமாகக் கலந்து –குலைந்து ஆற்றாமை யுடன் தலைக்கட்டிற்றே ‘களித்தேனே’ என்றவர்,–மீண்டும், ‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி, இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்
‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!
’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.-மாயப்பிரான் தானே–மாயப்பிரான் அடியார்கள் – பாகவத ஸம்ஸ்லேஷம் அளிக்க வேண்டும்குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்–குழாங்களாய் –என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி, குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.–அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –-அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும் நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.-ஆடுகை –அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி–அவனைப் பிரிந்த பிரிவு தோற்றாத படி-ஸ்மரிப்பித்து ஆஸ்வசிப்பித்தி போந்த இவர்கள் போய் நின்ற வாறே -இவர்கள் விலகினால் -பழைய பகவத் விஸ்லேஷமும் கிட்டும்-பத்து மாதம் பிரிந்த சீதை-திருவடி கண்டு மகிழ்ந்து திரு கணையாழி கண்டு அவனையே கண்டது போல் மகிழ்ந்து போன பின்பு பிறந்த ஆற்றாமை போல் இங்கும் இருந்தது கணையாழி கையிலே இருந்தாலும் நோவு பட்டாள்
அன்றோ அங்கு

அனுகூல பதார்த்தங்களும் இப்பொழுது அவனை நினைவூட்ட -அவை நலிய-உன்னாலே தானே வந்தது என்று தோழியைக் கோபித்து-பின்னும்-இவளை வெறுப்பது என்-அவள் சொல்ல மெய் என்று கைக் கொண்ட நெஞ்சு அன்றோ என்று அத்தோடு கிலாய்க்கிறாள் அவள் குண கீர்த்தனம் பண்ண அத்தை மெய் என்று நினைத்தது நெஞ்சின் குற்றமே என்று கிலாய்க்கிறாள்

பேர்கின்றது மணியாமை  பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே
—12-தலைவன் பிரியப் பெற்ற தலைவி
தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –

பேர்கின்றது மணியாமை
மாந்தர்க்கு இளமைப் பருவத்தில் உள்ள நிறம் மாமை எனப்படும் –-தனது திறத்தை-நிறத்தை – அவன் புகழ்ந்து விரும்புகிறபடி சொல்லி-தற் புகழ்ச்சி இல்லையே-அவன் விரும்புவதால் இவளுக்குத் தாரகம்-பேர் கின்றது வர்த்தமானம் -காணக் காண அழியா நின்றது-பேர்கின்றது மணியாமை –-விலஷணமான நிறம் போகிறபடி-மணி மாமை என்று-தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்-ஒரு நிறமே ஒரு எழிலே-என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே தனக்குத் தான் அன்றியிலே அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும்–(அத்யந்த சேஷத்வம் -தாதார்த்த சதுர்த்தி அர்த்தம் அறிந்தவர் அவன் கொண்டாடினவற்றைக் கொண்டாட வேண்டுமே – மாமைத் திறத்துகொலாம் –திரு விருத்தம் -5- என்று ஆசைப் பட்ட நிறம் போகிறபடி-காண காணச் சரக்கு வாங்குகிற படி-இவ்வளவிலே அவன் வரிலும் மீட்கலாமாய் இருக்கிறபடி –போய்க் கொண்டே இருக்கிறதே -வர்த்தமானம் -(மணி மாமை குறைவிலமே -ஏறாளும் -அவன் விரும்பாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாம் என்றாரே-ஐஸ்வர்யம் த்யாஜ்யம் ஒரு நாயகமாய்-கொண்ட பெண்டிர் லோக யாத்திரை த்யாஜ்யம் )

கிட்டின போது நிறமானது மேலே மேலே ஒளி வீச ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்கு யோக்கியமான இவள் நிறம் அவன் போன போது அத்தைக் கொண்டு ஜீவித்தோம்-அதுவும் மாறிற்றே
இளைய பெருமாள் சுக்ரீவனுக்கு பெருமாள் பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமையை சொன்னது
சுந்தர காண்ட ஸ்லோகம் –-வார்த்தை செவியில் பட பிரபை குறையத் தொடங்கிற்று
பெருமாள் அளவு அல்ல சுக்ரீவனுக்கு-செய்தியைக் கேட்டவுடன் இவனுக்கு அத்யர்த்தம் ஆனதே
பிராட்டி உடன் கூடியவாறே பெருமாளுக்குப் போகும்-இவனுக்கு கூடவும் வேணும்
பெருமாளுக்கு வர்ணமும் வர வேண்டும்-தான் ராஜ்ஜியம் மனைவி இழந்த போதும் பெற்ற இழவை பெருமாள் திரு உள்ளத்தில் போட்ட பின்பு முகம் வெளுத்து இருந்ததே பின்பு இளைய பெருமாள் பிராட்டி பிரிவால் பெருமாள் பட்ட பாட்டை சொல்லக் கேட்டு கிரகத்தால் பீடிக்கப்பட்ட அம்சுமான் -சந்திரன் போலே ஆனதாம்-காண்கிற போதே ஹர்ஷம் மேலே மேலே யாமா போல் இங்கு நிறம் போகிற படி-இவை போனதும் இருள் சூழ்ந்து கொண்டதே விஷம் போலே ஒரே யாத்ரி அநேக கல்பங்களாக உருக்கொண்டதே

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது
அற மிக்கு -மிகவும் -செறிந்து இருந்துள்ள பயலை நிறம் உடம்பு எல்லாம்-அப்ரதிஹதம் எதிர்ப்பார் இல்லாமல் பரவி இருந்தது-பிறங்கி யள்ளல் பயலை-நிறம் போன பாழ் கிடவாமை-பயலை பரக்கிற படி-பிறங்கி-கிண்ணகம் போலே பெருகி —அள்ளல் –இட்ட இடத்திலே கால் செருகும் படி வண்டல் இட்ட படி-தானே வந்தாலும் தூர்வை எடுக்க ஒண்ணாது-அவா வறச் சூழ்ந்து -ஆர்த்தி ஹரத்வம்-முடித்துத் தானே கூட்டிப் போனார்-இருந்தாலும் ஆர்த்தி இல்லாமல் ஆழ்வாரை நாம் இன்றும் நினைக்க முடியாதே ) ஊர்கின்றது--விஷம் பரந்தால் போலே – சார்வ பௌமரான ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலேயும் ஸ்ரீ பர்ண சாலையில் நின்றும் இளைய பெருமாள் போக ராவணன் புகுந்தால் போலேயும் –-

கங்குலூழிகளே
கலப்பதற்கு முன்பு முப்பது நாழிகையாய் இரா நின்றால் கலந்தவாறே ஒரு ஷணமாய் இரா நின்றது
பிரிந்தவாறே கல்பங்களாய் இரா நின்றது –இப்படி நிறம் தொடக்கமானவை கலியுகத்தில் பதார்த்த வியவஸ்தைகள் மாறுமா-மாறாடுமா போலே ஆழ்வார் திருமேனியும் வெளுப்பு அடைந்ததே இதனால்-அனைத்தும் அந்யதா கரிக்கப் புக்கவாறே -இரவும் வெட்கப்பட்டு -நாமாவது மாறாமல் இருக்க எண்ணி –-அநேகம் கல்ப கோடி யாகப் பார்க்கிறது –அன்று இரவே நீள் இரவாய் நீண்டதே –ஊர் எல்லாம் துஞ்சி -உலகு எல்லாம் ஓர் நீள் இரவாய் -போல் இரவும் இரவும் –கிருஷ்ணனைக் காத்த பிள்ளை உறங்கா வல்லி தாசர் சேவிப்பார் ரஷித்த யாத்ரியும் சிஷித்த ராத்திரியும்-அது த்வாபர கடைசியில்-இது கலியுக தொடக்கத்தால் கலி யாதலால் சிக்ஷிக்கிறதோ

இதெல்லா மினவே–இந்த வை வர்ணயம் போல்வன எல்லாம் இப்படியே இதெல்லா மினவே-
நெஞ்சில் பட்டவற்றைக் கொண்டு அல்லாதவற்றையும் சொல்லுகிறது-மற்றும் உண்டான அன்றில் தென்றல் இவை எல்லாம் இப்படியே-பிராட்டியும் பெருமாளுமாக கலந்த போது எடுத்துக் கை நீட்டின பதார்த்தங்கள் அவள் போய் நிற்கும் காட்டில் நின்றால் போலே -பகையானால் -போலே –(யானி ஸ்ம ரமணீ யாநி தயா சஹ பவந்தி மே தான்யே வாரமாணீ யாநி ஜீவிதோ மே தயா விநா- –இருக்கும் பொழுது ரமணீயமானவை இப்பொழுது அரமணீயமாக இருப்பதே பெருமாள் அலற்றிய படி )

இவை எல்லாம்
சந்திரன் அன்றில் தென்றல் போல் அனைத்தும் என் நெஞ்சினார் கொடுத்துப் போன இவை
கலந்து பிரிந்தவர் தந்தது அல்ல

அவரோடே கூட போன நெஞ்சினார் கொடுத்த சந்தான சாபம் போல் வைத்துப் போனதே
சக்கரம் பிடித்த கண்ணன் மறைத்துப் போக சொன்ன தேவகி -இங்கு கம்சன் போல்வார் இல்லையே
காணில் முடிப்பான் அவன் காணாத போது முடிவார் இவர் போல்வார்
தோளில் சாத்தின துழாயில் ஈடுபட்ட நல் நெஞ்சு அங்கே சார்ந்தது
நாம் கண்டது அடங்கலும் பகையாக்கிக் கொண்டு இங்கே இருந்தோம்
என்னைப் போல் இல்லாமல் நெஞ்சு துணிந்தார் துணிந்தாருக்கு அல்லது பேறு இல்லையே –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம ருஷி வேத வியாசர் பக்கலில் சென்று ப்ரஹ்ம பிராப்தி உபாயம் பிரார்த்தித்த அளவிலே
எனக்கு ஞானம் மட்டுமே உண்டு-எனது சிஷ்யர் ஜனகனுக்கு சால அத்யவசாயம் உண்டு என்று சொல்ல
அவன் இடம் கேட்ட இடத்து விவசாயம் -திட அத்யாவஸ்யம் தவிர வேறே ஒன்றும் இல்லை -மோக்ஷ தர்மம் ஸ்லோகம்-துணிவைத் தவிர வேறே உபாயம் இல்லையே
நாம் பழிக்கு பயந்து இருந்தோம்-அது மேல் விழுந்து வாழ்ந்து போனார்யுகாவாதாரை ஆண்மையால் அழிக்கும் உகந்தாரையும் அழகாலே அழிக்கும் கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டான்நல் நெஞ்சினார்-பாரதம் சாந்தி பர்வ–334-47-என்று துணிவே ஒழிய வஸ்துவை லபிக்கைக்கு ஒரு விரகு இல்லை காண் என்றான் இறே நாம் பழிக்கு இறாய்த்து நின்று கிலேசப்படா நின்றோம்-அவர் மேல் விழுந்து வாழ்ந்து போனார்-தம் தாம் வயிற்றிலே பிறந்தார்களே யாகிலும் பகவத் ப்ரத்யா ஸந்தரை கௌரவிக்க வேணும் இறே

ஈர்க்கின்ற சக்கரம் –
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே ஈர்கின்றபடி-சேதன சமாதியாலே ஈர்கின்றது என்கிறார்-பிரதிகூலரைப் போய் ஈரும்-அனுகூலரை கையில் சேர்த்தியாலே ஈரும்-பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்-அனுகூலரை அழகாலே கொல்லும் –சக்கரத்து  தெம்பெருமான்--கையும் திரு வாழியுமான சேர்த்தியைக் காட்டி இவளை எழுதிக் கொண்ட படி-ராஜ புத்ரர்கள் கையில் கடைச் செறிக்குத் தோற்ப்பாரைப் போலே – எம்பெருமான் -என் ஸ்வாமி –கண்ணன் –கிருஷ்ணன்-அவன் த்வி புஜனாய்  அன்றோ இருப்பது-உப சம்ஹர சர்வாத்மன் ரூப மேதச் சதுர்ப் புஜம்  –அத்புத பாலம் சங்கு சக்ர கதா இயற்கையில் நான்கு திருக்கரங்கள்-பழையபடி நான்கு திருக் கைகளுடன் சேவை சாதிக்க அர்ஜுனன் பிரார்த்திக்கிறேன்-பட்டர் அங்கு இரண்டானால் பெரிய பெருமாள்-நான்கானால் நம் பெருமாள் என்றாரே-கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் காட்டவே கண்ட திருப்பாண் ஆழ்வார்

தண்ணம் துழாய் சார்கின்ற-
கிருஷ்ணன் பக்கல் உண்டான-அழகிய குளிர்ந்த திருத் துழாயிலே விழுகிற நெஞ்சு –முதல் அடியில் அன்று கிடீர் தோற்றது-எல்லை நிலத்தைக் கண்டு – உன் பழைமையை காக்காய்க்கு  இடு (நாய்க்கு போடு )என்று போன படி –முதல் அடி -பகவத்-திருத்துழாய் -எல்லை நிலம் -பாகவத சேஷத்வம்
திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் கடந்து போனதே

நன்னெஞ்சினார் –
தம்முடைய நெஞ்சை நல் நெஞ்சினார் என்பான் என் என்னில்-பிரஜைகளே யாகிலும் பகவத் விஷயத்தில் முற்பாடானார் ஆனாரை-இங்கன் அல்லது சொல்லல் ஆகாது  –-அலைந்த பரியட்டமும் தாமுமாய்த் திரிகிறார் இறே-பூசும் சாந்து என் நெஞ்சமே -என்கிறபடியே அத் தலைக்கு எல்லா போக்யமும் தாம் ஆகையாலே பலகால் அருளப் பாடிட அருகே நிற்கவே வேண்டுகையாலே –சார்கின்றது -போகின்றது என்றால் வருவதிலும் பிரசக்தி உண்டே

நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க -மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான்
ஆர் இருக்கினும் என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே
–24–

தோழிமீர் -நீர் அவன் அழகிலே ஈடுபட்டு திரும்பி வாராமல் இருப்பீர்
கிளியோ மன்மதன் குதிரை வண்டோ மன்மதன் வில்லின் நாண் அன்னம் மந்தகதி 

குருத்தத்தை மாரன் குரகதமாம் என்றே வருத்தத்தை அங்கு உரைக்க மாட்டேன்
கருத்துற்ற மா தண்டலைவாய் மதுகரத்துக்கும் அவன் தன் கோதண்ட நாண் என்று கூறேன் நான்
பொற்கால் வெறிப்பது மவீட்டன்னம் வெண் பாலும் நீரும் பிரிப்பது போல் நட்பும் பிரிக்கும்
குறிப்பு அறிந்து காதலால் உள்ளக் கவலை யது கேட்க ஓதலாகாது என்று உரையாடேன் ஆதலால்
உள்ளே புழுங்குவது அன்றி ஒருவருக்கும் விள்ளேன் -திரு நறையூர் நம்பி -மேக விடு தூது )

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய் சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—
தான் பிரிவதும் செய்து-கையும் திருவாழியும் பொருந்தின படியைக் காட்டி என்னைத் தரிக்க செய்தான்
அது தான் ஈரா நின்றது-அவ் வழகாலே என்னை எழுதிக் கொண்டு-பெண்களுக்கு பவ்யனாய் இருக்கும்-தோள் மாலையைக் கண்டு சார்கின்றது -நான் தான் எப்படி சேர்வது என்று ஆலோசித்து இருக்க-விபீஷணன் புறப்பட்டு சேர்ந்தால் போல்-விசாரமே இல்லாமல் -திட அத்யாவசாயம் இருந்த நல் நெஞ்சினார் -நம்மைப் போல் கிடைக்குமா கிடைக்காதா என்று விசாரியாதே -மேகம் போல்வனவற்றை தூது விடாமல் பதறி திருவடிகளில் விழுந்து–இவை போன்றவற்றைக் கொடுத்து-பிரதிபக்ஷத்தை ஈர்க்கின்றது என்றுமாம்-கூர்மையாலே பிரதிபக்ஷத்தையும் அழகாலே அனுகூலரையும் அழிக்குமே
ஷோப யுக்தி கோபத்தால் நெஞ்சை சொல்கிறார் என்றும்-எம்பெருமான் இடம் ப்ரத்யாசன்னமானதால் கொண்டாடியும் என்றுமாம்

தந்து போன தனி வளமே –
இவர் தந்து போன சம்பத்து –(தனி -அத்விதீயம் –வளம் -நிரவதிகம் )மேனி நிறம் மாறப்பெற்றதும் –
பசலை நிறம் படர பெற்றதும் இரவு நீடிக்கப் பெற்றதும் நான் வருத்தப் பெற்றதும் பாக்கியமே –வளமே
எதிர்மறை லக்ஷணை என்றுமாம்-நெஞ்சு இழந்து வருந்தி ஆற்றாமையால் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ —இழந்தது மாமை நிறமே -என்று வருந்தும்படி –போகிற தசையில் நமக்குத் தந்து போன நிரதிசய ஐஸ்வர்யம் என்று பாங்கியைக் குறித்துத் தன் ஆற்றாமை சொன்னாள் ஆகவுமாம் –

ஆழ்வார் தமது அகக்கண்ணால் எம்பெருமானைக் கண்டு வைத்தும் சேரப் பெறாது நெஞ்சு இழந்து தனித்து வருந்துபவராய் தமது ஆற்றாமையைக் கூறுதல் இதுக்கு உள்ளுறைப் பொருளாம்
எம்பெருமான் கையும் திருவாழியுமாய்த் தோளும் தோள் மாலையுமாய் ஸேவை சாதிக்கிற நிலையிலே ஸேவிக்கப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு அது கிடையாமையாலே ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -என்று வருந்தவும் சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையர்க்கு –கொங்கலர் தண்ணம் துழாய் முடியர்க்கு என் மங்கை இழந்தது மாமை நிறமே என்று கிலேசிக்கவும் நேர்ந்ததே என்றார் ஆயிற்று

இத்தால்
பகவத் விஷயத்தில் இவர் நெஞ்சு அபி நிவிஷ்டமாய்ச் சென்றதடியாக-பேர்கின்றது மணியாமை -என்று
ஸ்வா பாவிகமான ஸ்வரூப ஆகாரமும் குலையும்படியாய்-பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது -என்று
அபி நிவேச விகாரங்கள் அபி விருத்தமாய் ப்ரசரிக்கும் படியாய்-கங்குலூழிகளே -என்று மோஹ அந்தகாரம் நடக்கும் காலமானது விளம்ப அஷமத்வத்தாலே கல்ப கோடியாய் ப்ரதிபாதியா நின்றது-(பக்தி பாரவஸ்யத்தாலே இவருக்கு-நமக்கு அஞ்ஞானத்தாலே-காலைப் பூசலும் மாலைப் பூசலும் உண்டே-இரவாக ஆளவந்தார் நிர்வாகம் -முற்கூற்றில் இருந்து பிற்கூற்றாக வந்தமை எம்பெருமானார் ) இதெல்லா மினவே– இது எல்லாம் இப்படி யானது-ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் -என்று
விரோதி ஸமர்த்தமான திருவாழியையும்-தெம்பெருமான்-ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்தையும்-கண்ணன்-ஆஸ்ரித பவ்யத்தையும் யுடையனான கிருஷ்ணனுடைய-தண்ணம் துழாய்-நிரதிசய போக்யதா ஸூசகமான மாலை அழகிலே-சார்கின்ற நன்னெஞ்சினார்-அநு ரக்தமான நெஞ்சானது-தந்து போன தனி வளமே-தந்து போன அத்விதீயமான ஸம்பத்து இறே என்று அனுசந்தித்தார் ஆயிற்று-ஸூஹ்ருத் பூதரை நோக்கி அருளிச் செய்தார் ஆகவுமாம் –

ஸ்வா பதேசம் –
மன ஏவ மனுஷ்யாணாம்
-என்னும் படியாலே இவர் நெஞ்சம் அங்கே பிரவணம் ஆன படி –

தாத்பர்யம்
தம்முடைய திரு உள்ளம் பகவத் ப்ராவண்யம் அடைந்து அத்தாலே பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிட்டாத-அஸஹ்யமாய் -பிறந்த ஸைதில்யம் நாயகன் விரஹம் -நாயகி -சேர்ந்த நாயகன் இங்கு
கையும் திருவாழியுமாக சேவை சாதிக்க அவன் சாத்தி அருளிய திருத்துழாயை ஆசைப்பட்டு அவன் பின்னே நெஞ்சு போக தேக சவுந்தர்யாதிகள் அழிந்து அது போனதால் இது வந்ததால் கொடுத்துப் போனதாக சொல்கிறார்
சூர்யன் இருளை பரிசாகக் கொடுத்து போனது போல் சரீரம் வெளுத்து வைவர்ணயம் அடைந்தது
மற்றும் உண்டான தென்றல் முதலியவையும் பாதிக்க இப் பாதகங்கள் எல்லாம் ஒரு இரவு பல கல்பங்களாக பெருகத் தொடங்கிற்றே -நெஞ்சுடன் ஸஹவாசத்துக்கு நான் பெற்ற பலனே இது

5-3-மாசறு சோதி-ப்ரவேஸம்

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று,
வடிவழகையும் குணங்களையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்தார்; இப்படி அநுசந்தித்து,
கண்ணன் தன்னை-சுலபனுமாய் –மாயப்பிரான் தன்னை-ஆச்சரியமான குணங்களையும் செயல்களை யுமுடையவனுமாய்
அவை இல்லையே யாகிலும் விட ஒண்ணாத
மலியும் சுடரொளி மூர்த்தி தன்னை-வடிவழகை யுமுடையனான இவனோடு தன்னை-மெய் யுறு புணர்ச்சியை விரும்பி
அவனை அணைக்கக் கோலிக் கையை நீட்ட,
அவன் அகப் படாமல் கை கழிந்து நிற்க, அதனாலே கலங்கி —
ஒரு பிராட்டி தசையை அடைந்து மடல் எடுக்கையிலே புகுகிறார் இத் திருவாய் மொழியில்.

மடல் எடுக்கையாவது,வைக்கோல் போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம். —
பிரயத்தனம் அதிகம் -பலம் கிஞ்சித் -என்றவாறு —
தூதர்களை விட்டு பதிலுக்கு எதிர் பார்த்தல் போன்றவை – போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது –
‘அநீதி செய்யாதே கொள்ளுங்கோள்’ என்று பிறரைத் திருத்தினவர்,
‘நீர் செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று- பிறர் திருத்தவும் திருந்தாதபடி ஆனார்.
பகவத் விஷயத்தில் பிரவணர் -ஈடுபடும் படியாகப் பிறரைத் திருத்துகிற இவரை,
‘பகவானிடத்தில் பிரவணர் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரே அன்றோ.

அன்றிக்கே, “ஏறாளும் இறையோனும்’ –4-8–என்று திருவாய்மொழியில்,
அவனுக்கு உறுப்பு அல்லாத யானும் என்னுடைமையும் வேண்டா என்று
அலாபத்தாலே கூப்பிடும் தம்மோடு ஒக்கக் கூப்பிடுகைக்குத் துணை தேடி உலக ஒழுக்கத்தை நினைத்த இடத்து,
தாம் பகவத் விஷயத்திலே ஈடுபாடுடையவராய் இருக்குமாறு போலே
அவர்கள் இதர விஷயங்களிலே ஈடுபாடுடையவராய் இருக்கிறபடியைக் கண்டு,
அவர்கள் கேட்டிற்கு நொந்து நண்ணாதார்-4-9-
-அவர்களுக்குப் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துக் கூறித் திருத்தி,–ஒன்றும் தேவும் –4-10-
‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற என்னை, இவர்களையும் திருத்தும்படி ஆக்குவதே சர்வேச்வரன்!’ என்று
அவன் தமக்குச் செய்த உபகாரத்தை நினைத்து,–கையார் சக்கரத்து–5-1-
தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் செய்து,–பொலிக–5-2-
இப்படிப் பிறருடைய நலத்துக்கு வேண்டுவன எல்லாம் செய்து கை ஒழிந்த பின்பு பழைய தம் இழவே தலை எடுத்து,
(இப்படி சங்கதி ஐம்பது பாசுரத்துக்கும் –
இதில் ஆற்றாமை கரை புரண்டு -இதற்கு தான் அவன் கிருஷி பண்ணுகிறான் )
‘வழி அல்லா வழியே யாகிலும் கிட்டுமத்தனை’ என்னும் படியான விடாய் பிறந்து மடல் எடுக்கையிலே
ஒருப் பட்டுப் பேசுகிறார் இத் திருவாய் மொழியில் என்னுதல்.

ஒவ்வொரு விஷயத்திலே ஒவ்வொருவருக்குப் பற்று உண்டானால் அவ் விஷயங்கள் கிடையாவிட்டால்
‘அவற்றை அப்போதே பெற வேணும்’ என்னும்படியான மனோ வேகம் பிறந்தால், பின்பு அவ் விஷயங்கள் இருந்த இடங்களிலே
புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே,
‘அத் தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்கு மத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு,
தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

அபிமத விஷயத்தைப் பிரிந்து ஆற்ற மாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு தமிழர் சொல்லிப் போருவது.
அதாவது, “ஒத்த சீலம் வயது ஒழுக்கம் உடையவளை” என்கிறபடியே,
சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் செல்வத்தாலும் குறைவற்று இருப்பவர்களான இருவர்,
அவர்களில் ‘அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி’ என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய லக்ஷணங்கள் நாயகனும் உடையவனாய்,
‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு’ என்பன போன்று சொல்லுகிற நாயகியுடைய லக்ஷணங்கள் நாயகியும் உடையவளாய்,
இப்படி இருவரும் குறைவற்று, இவர்கள் தாமும் தக்க யௌவனப் பருவத்தை யுடையவர்களுமாய் இருக்க;
திராவிட லஷணம் –அறிவு -வேண்டியவற்றை வேண்டிய காலத்தில் அறிதல் சம்யஞ்ஞானம்–நிறைவு -ஐஸ்வர்ய பூர்த்தி
ஓர்ப்பு -நிரூபண சாமர்த்தியம் –கடைப்பிடி -ஸ்வீகரித்த விஷயத்தில் யாவதாத்மாபாவி உறுதியாய் இருக்கை -வ்ரதம் மம என்பவன் –

இவர்களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க, இவனும் தெய்வாதீனமாக ‘வேட்டைக்கு’ என்று புறப்பட,
இவளும் ‘பூக் கொய்து விளையாட’ என்று உத்தியானத்திற்குப் புறப்பட, அவ் விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க
இருவர்க்கும் கண் கலவி உண்டாக, சிலர் காரணமாக வந்த கலவி அல்லாமையாலே பிரிவோடே முடிவுற்றுப் பிரிய,
குணாதிகர்களாகையாலே இருவர்க்கும் ஆற்றாமை விஞ்சி, ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க,
இரண்டு தலையையும் அழித்தாகிலும் பெறப் பார்ப்பது.

ஸ்வாபதேசம்
வேட்டைக்கு -ராவணாதிகளை நிரசிக்கை -ராம கிருஷ்ணனாக அவதரிக்கை -வேட்டையாடி வருவானை பிருந்தாவனத்தில் கண்டேனே –
பூ கொய்ய –என்பது விஷய பிரவணர் ஆவது -அல்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று
தோட்டம் -பெய்த கா -லீலா விபூதி
தெய்வம் கூட்டுவிக்க என்றது -யாத்ருச்சிக்க தெய்வ கடாஷம் -ஸூஹ்ருதம்
தோழிமார் -தூர்த்தர் உடன் இசைந்தோம் -விஷய ப்ரவண சஹகாரிகள்-
கண் கலவி -காந்தர்வ விவாகம்
காந்தர்வ விவாகம் -நாசௌ புருஷகாரம் இல்லாமல் -ஸ்வா தந்த்ரம் -கடாஷம் -பட்டாலும் படும் -விட்டாலும் விடுமே –

மடல் ஊர்தல் என்பது தான், தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி,
வைத்த கண் வாங்காதே அவ் வுருவைப் பார்த்துக் கொண்டு பனை மடலைக் குதிரையாகக் கொண்டு,
தலைவியைப் பிரிந்த போது தொடங்கிக் கண்ட போக உபகரணங்கள் எல்லாம் நெருப்பினாலே கல்பிக்கப்பட்டதாகத் தோற்ற,
ஊணும் உறக்கமும் இன்றிக்கே, உடம்பிலே துளி நீரும் ஏறிட்டுக் கொள்ளாதே, தலை மயிரை விரித்துக் கொண்டு திரியா நின்றால்,
இத் தீயச் செயலைக் கண்ட அரசர் முதலானோர் ‘கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத் துணை அன்பு இருப்பதே!’ என்று
அவர்கள் அவனை அத் தலைவியோடு கூட்டக் கூடுதல், இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையிலுள்ள உறவினர்களும் கைவிட,
அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல்,
தலைவியானவள் குணங்களால் சிறந்தவளா யிருப்பாளே யாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லை யாகில்,
முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.

இது தன்னை, “கடலன்ன காமத்த ராகிலும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்” என்று உயிரின் அளவல்லாதபடி
ஆற்றாமை கரை புரண்டாலும் பெண்கள் மடல் ஊரக் கடவர்கள் அல்லர்;
நாயகன் தன் ஆற்றாமையாலே மடல் எடுக்க உலகின் மேல் வைத்துச் சொல்லுவான்,
பின் ‘நான் வரை பாயப் புகா நின்றேன், மடல் எடுக்கப் புகா நின்றேன்’ என்று தோழிக்கு வந்து அறிவிப்பான்,
அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக் கடவன்; இத்தனை அல்லது,
பெண்கள் மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்ஙனே ஒரு மரியாதை கட்டினார்கள் தமிழர்கள்-
கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலேறார் மைந்தர் மேல் என்ப – மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார் கோமான் வேட்டமா மேற் கொண்ட போழ்து–என்பது, நச்சினார்க்கினியர்
“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.” என்பது, திருக் குறள்.

இங்கு அங்ஙன் அன்றிக்கே, பிராட்டி தான் மடல் எடுப்பதாக இரா நின்றது;
தமிழர் ‘பெண்கள் மடல் எடுக்கக் கடவர் அல்லர்’ என்று சொன்ன இது, சேரும்படி என்? என்னில்,
அவர்கள் ஒரு தலையிலே தான் அதனை இசைந்தார்களே, அப்படி இசைகைக்குக் காரணம், ஆற்றாமையே;
அவ் வாற்றாமை இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்குவார் யார்?
இதற்கு ஒரு மரியாதை கட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை.
அப்போது பின்னை அரசர் ஆணைக்கு நிற்க வேணும், இன்றேல் வேலி யடைத்தால் நிற்க வேணும்;
ஆகையால், அவர்கள் அன்பின் தன்மையை அறிந்திலர்களாமித்தனை.
(சாஹசம் ஷாட் குணம் ப்ரோக்தம்-ஆறு மடங்கு இருக்கும் -காமம் ஆண்களை விட பெண்களுக்கு பெருத்ததாக இருக்கும்
ஆகையால் பெருமை குறைவாக இருக்க வேண்டும் -)
வரம்பு அழியவாகிலும் முகங்காட்டி வைத்துக் கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு இல்லையே;
இங்ஙனம் இருப்பார் சிலரைக் கல்பித்துக் கொண்டார்கள் இத்தனையே.
மடல் ஏறுவர் கடவுளர் வந்தால் -பரிபாடல் -ராக பிராப்தம் மடல் எடுப்பது –

இனி, இவர் தாம், “வளவேழ் உலகு” என்ற திருவாய் மொழியில், நாம் அவனோடே கலத்தலாகிற இது
அவனுக்குத் தாழ்வினை விளைவிப்பதாம், நம் பேற்றுக்காக அவனோடே கலந்து அவனுக்குத் தாழ்வினை விளைப்பதிற் காட்டில்
நாம் அகன்று முடிந்தாகிலும் அவனுக்கு அதிசயத்தைச் செய்ய அமையும் என்று இருக்குமதனோடும் சேராது;
இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவும்,
ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நசித்துப் போக அமையும் என்று சொன்ன அதனோடும் சேராது;
எனக்குக் கிடைக்காத அவனும் வேண்டாம் என்கிறார் -இதில் –
ஆக, இவர் தம்
1-ஸ்வரூபத்தோடும் சேராது.
2- ஆசையற்றவர்களாய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று.
3- ஞானாதிகராய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. -மூன்று சங்கை – -ஆறு சமாதானங்கள் –
ஆனால், இது இருந்தபடி என்? என்னில்,
இவற்றிற் கெல்லாம் சமாதானம், பட்டர் திரு மடல் வியாக்கியானம் அருளிச் செய்கிற போது அருளிச் செய்தருளினார்;
இங்குத்தைக்கும் வேண்டுவன சொல்ல வேணுமே அன்றோ.

ஞானத்தால் மேம்பட்டவர்களாய் இருப்பவர்கள் ஜனக குலத்தில் பிறந்தவர்களா யுள்ளவர்களுக்கு மேல் இலரே அன்றோ;
அக் குடியிலே பிறந்த பிராட்டியானவள், “எந்தப் பிராட்டி முன்பு ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவைகளான பூதங்களாலும்
பார்ப்பதற்கு முடியாதவளோ அந்தப் பிராட்டியை இப்பொழுது இராஜ வீதியிலுள்ள மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள்” என்கிறபடியே,
வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள் -கம்பர் –
பெருமாள் காட்டிற்கு எழுந்தருளுகிற காலத்தில் “மன்னன் இராமன் பின் வைதேகி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே” என்கிறபடியே, அவர் பின்னே புறப்பட்டுப் போகையாலே சிஷ்டாசாரம் உண்டாயிருந்தது;
மேலும், மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இவர் அநுஷ்டிக்கையாலே இது தானே பிரமாணமாகத் தட்டு இல்லையே அன்றோ.
“பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்; அந்தப் பெரியவன்
எதைப் பிரமாணமாகச் செய்கிறானோ அதனையே உலகமும் அநுசரிக்கின்றது” என்கிறபடியே,
சத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக் கொள்ளக் கடவதன்றோ.
ஆனாலும், காமம் விலக்கப்பட்டிருக்கிறதே? என்னில்,
அவை நிலை நில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயே யன்றோ விலக்கப்பட்டிருக்கிறது.
பகவத் விஷயத்தில் காமத்தை “தியானம் செய்யத்தக்கவன்” என்கிறபடியே, விதியா நின்றதே அன்றோ.
வேதாந்தங்களிலே விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது.
வளவேழ் உலகு”என்ற திருவாய் மொழியில், நாம் கிட்டுகை அவனுக்குத் தாழ்வினைத் தருவதாம் என்று அகன்ற இவர்,
அத் தலையை அழித்து முகங் காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற இது இவர் ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா;
ஆறு சமாதானங்கள் -சொல்லி அருளுகிறார் இதற்கு மேலே
1-அங்கு அகல நினைத்ததும் அத் தலைக்கு வரும் தாழ்வினை நீக்குகைக்காக அன்றோ; தமக்கு ஆற்றாமை கரை புரண்டு இருந்தது,
‘தன்னை ஆசைப் பட்டார் பெறாமலே முடிய, முகங் காட்டாமலே இருந்தான்’ என்கிற தாழ்வினை நீக்குகைக்குச் செய்கிறாராகையாலே.
கைத் தலை சேவை ஆழ்வாருக்கு தானே -ப்ரேமம் பராங்குச நாயகிக்கு தானே -ஸ்வரூபத்துடன் சேரும் –

2-அங்கு அகன்றது ஞான காரியம்; இங்கு மேல் விழுகிறது பக்தியின் காரியம்.
இத்தனை கலங்கப் பண்ணிற்றில்லை யாகில், அத் தலையில் வைலக்ஷண்யத்துக்குத் தாழ்வாம்;
இவர் தாம் இப்படிக் கலங்கிற்றிலராகில் இவருடைய பிரேமத்துக்குத் தாழ்வாம். அவன் அருளியதும் மதி நலமே அன்றோ,
அவை படுத்துகிற பாடே அன்றோ இவை எல்லாம். மதியின் காரியம் அது; பக்தியின் காரியம் இது.

3-இனித் தான் சித்தோபாயத்தை மேற் கொண்டு அது பலியா விட்டால் ஸ்வரூபத்தை வேறு வகையாகச் செய்யுமித்தனை அன்றோ;
அவன் ஸ்வரூபம் வேறுபட்டால் இத் தலை சொல்ல வேண்டாவே அன்றோ. இத் தலையில் கர்த்தவ்யம் இல்லையாகில் அவனுக்கு
அசக்தி இல்லையாகில் நடுவில் விளம்பத்துக்குக் காரணம் என்? என்று தோற்றுமே அன்றோ.
இவர் தாம் ‘மடல் எடுக்கக் கடவேன்’ என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுஷ்டிக்க வேண்டுவது இல்லையே யன்றோ

4-குணாதிக விஷயம் ஆகையாலே. ஆற்றாமையையும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும் படியான விஷயத்தை அன்றே இவர் பற்றியது.
கடலைப் பெருமாள் சரணம் புக்க இடத்தில் அக் கடல் தானாக வந்து முகங்காட்டாமையாலே நாலு மூன்று அம்பை விட,
உடம்பிலே பாதி வெந்த பின்பே யன்றோ வந்து முகங் காட்டியது; இங்கு அது வேண்டாமையாலே,
“ஓ இலக்குமணா! வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒப்பான பாணங்களைக் கொண்டு வா,
சமுத்திரத்தை வற்றச் செய்யப் போகிறேன், வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்” என்றதைப் போன்று,
‘மடல் ஊர்வேன்’ என்று அச்சம் உறுத்தி முகங் காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிறார்.
தம்முடைய ஸ்வரூபத்தில் கலக்கம் தொடர்ந்து நிற்கச் செய்தேயும்
அவனுடைய குண ஞானத்தில் கலக்கம் இன்றிக்கே இருக்கிறது காணும் இவர்க்கு.
ராம பானம் விடாய் போகிறேன் பயப்படுத்தி கார்யம் போலே மடலூருவேன் அச்சுறுத்தி கார்யம் இங்கும்
(மதி -நலம் -இரண்டையும் அருளப் பெற்றார் அன்றோ-
பிரேமாதிக்யத்தால் தன் ஸ்வரூபத்தில் கலங்கி -ஞானாதிக்யத்தால் அவன் ஸ்வரூபத்தில் தெளிவுடன் இருக்கிறார் என்றபடி )

5-“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று
முடித்துக் கொள்வாய் பார்த்த இடத்தில், அது தம் கையது அன்றிக்கே, அவன் உளனாக இது அழியாததாய் இருந்தது;
இனி அத் தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்கப் பார்க்கிறார்; உண்டாம் போதும் அத் தலையாலே உண்டாய்,
இல்லையாம் போதும் ஒன்றும் இல்லையாம்படி அன்றோ வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது.
வேர்ப் பற்று -நிரூபகம் ரஷண தர்மம் -ஒளியை அளித்தால் மணி இல்லையே -மடல் எடுத்தால் நிரூபகம் அழிந்து அவனையும் அழித்தார்
இத்தை தானே 4-8 வேண்டிக் கொண்டார் -பிரமம் இருந்தால் தான் ஜீவாத்மா சத்தையா காரணம் -அப்ருதக் சித்த விசேஷணம் அன்றோ

6 “உயிரினாற் குறை இலம்” என்றார் அங்கு; இங்கு, உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கிறார்.
“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என்கிறார்.
(இங்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் என்றபடி -உயிருக்கு உயிர் -பரமாத்மா தானே )
“இராவணன் மாயா சிரசைக் காட்டின போது, மற்றைய பெண்கள் மனத்தோடு படாமலே அழுமாறு போன்று,
தன் ஆற்றாமையாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ் வார்த்தை கேட்டபோதே முடியாதிருப்பான் என்?” என்று பட்டரைச் சிலர் கேட்க,
ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல; அத் தலையில் சத்தையும் அது இல்லாமையும் ஆயிற்று;
அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று அருளிச் செய்தார்.

இப்படி அத் தலையை அழித்தாகிலும் முகங் காட்டுவித்துக் கொள்ள வேண்டும்படி தமக்குப் பிறந்த நிலை விசேஷத்தை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி. ஆற்றாமை மீதூர்ந்திருக்கச் செய்தே இவள் தரித்திருந்த இருப்பைக் கண்டு,
தோழியானவள், ‘முன்புத்தை அளவுகள் அன்றிக்கே, இவள் தேறி இருந்தாள், அவன் வாராதிருக்க இவளுக்கு
இத்தனை தேற்றம் உண்டாம் போது, சாகசங்களிலே துணிந்தாளாக வேணும்’ என்று பார்த்து,
நீ செய்ய நினைக்கிற இது, உன் தலைமைக்கும் அவன் தலைமைக்கும் உன் மதிப்புக்கும் உன் பிறப்புக்கும் உன்னுடைய
மர்யாதைகளுக்கும் தகாது கண்டாய்’ என்ன, ‘என் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் மடல் எடுக்கை தவிரேன்’ என்று
துணிந்து துணிவைத் தோழிக்கு அறிவிக்க; இதனைக் கேட்டு அஞ்சி, சர்வேச்வரன், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமை
வந்து முகங்காட்டித் தானும் சத்தை பெற்று இவளையும் தரிப்பித்தானாய்த் தலைக் கட்டுகிறது.
(அடியேன் சொல்லாமல்-யாம் மடலூர்தூம் -தலைமை நம்மாழ்வார் கூடஸ்தர் /ஆதி மூர்த்தி -அவன் தலைமைக்கும் /
நிறை கொண்டான் -உன் மதிப்பிக்கும் /குதிரியாய் மடலூர்த்தும் –உன் பிறப்புக்கும் –தகாது கண்டாய்’ -)

இவர் மடலிலே துணிந்தால் கடுக வந்து முகங்காட்டிப் பிழைக்கில் பிழைக்கு மித்தனை போக்கி,
இல்லை யாகில் சத்தை கிடக்க விரகு இல்லை அன்றோ அவனுக்கு;
(ஆழ்வார் சத்தை இருந்தால் தானே தனக்கு சத்தை என்று இருப்பானே இவன்)
பிரஹ்மாஸ்திரத்துக்குத் தப்ப ஒண்ணாதே அன்றோ அவனுக்கு.
இதற்கு முன்னர், ‘அவனாலே பேறு’ என்று போந்தாரே யாகிலும், அடையத் தக்கதான கைங்கர்யத்துக்கு முன்பு
உள்ளனவாய் இருப்பன பர பக்தி பர ஞான பரம பக்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே.
இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு, பிரபந்நனுக்கும் பக்தி உண்டு, ருசியை ஒழியப் பரபத்தி பண்ணக் கூடாதே,
பக்திமானுடைய பக்தி, விதி ரூபமாய் வரும்; பிரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும்.
(பிரபத்தி -அதிகாரி விசேஷணம் ருசி தானே பக்தி இவனுக்கு -பக்தனுக்குய சாதனம் )
பக்திமானுக்குச் சாதன ரூபமாயிருக்கும், பிரபந்நனுக்குத் தேக யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும்.
பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாத போது அந்தப் பக்தி தவிரலா யிருக்கும்
பிரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் வருமதாகையாலே ஒரு காலும் தவிராததா யிருக்கும்.

மூன்றாம் திருவாய் மொழியிலே கீழ் அநு சந்தித்த பாகவத உத்கர்ஷ ஹேதுவான
பகவத் உத்கர்ஷத்தையும் குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும் அநு சந்தித்து
அவனுடைய ஆலோகாலாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அநு பவிக்கைக்கு ஆசைப்பட்டு அது கிடையாமையாலே
ஆசா ஜனகமான ஆபி ரூபியாதி அதிசயத்தையும்
அவயவ விசேஷ வை லக்ஷண்யத்தையும்
பிரதிபந்தக நிவர்த்தகமான பால சேஷ்டிதத்தையும்
அபி நிவேச வர்த்தகத்வத்தையும்
அநந்யார்ஹத ஆபாகத்வத்தையும்
ஆகர்ஷகத்வ ஸ்வ பாவ யோகத்தையும்
ஆசத்தி ஹேதுவான அர்ணவ ஸாயித்வாதிகளையும்
அகில விரோதி நிவர்த்தனத்தில் அநாயா சத்தையும்
உத்துங்க தேச வாஸித்வத்தையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நிவேச அதிசயத்தாலே
இரண்டு தலைக்கும் அநநு ரூபமான ஸ்வ ப்ரவ்ருத்தி விசேஷத்தாலேயாகிலும் பிராபிக்கக் கடவோம் என்கிற த்வர அதிசயத்தாலே
தமக்குப் பிறந்த விவசாய விசேஷத்தை அந்யாபதேச முகத்தாலே
நாயகனான ஈஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி தத் ப்ராப்த்ய அபி நிவேச த்வரையாலே
தன் குடிப் பிறப்புக்கும் பெண்மைக்கும் அநநு ரூபமாம் படி அவனுடைய மெய்ப்பாட்டை அழித்து மடலூர்ந்தும் பெறக் கடவோம் என்கிற
அறுதிப் பாட்டை பாங்கிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மேல் திருவாய் மொழியில் நின்றும் இத் திருவாய் மொழிக்குப் புகுருகைக்கு வழி இரண்டாக இருக்கும்.
சீலம் இல்லாச் சிறியன்”4-7- என்ற திருவாய் மொழியிலே கூப்பிட்டார்; கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாமையாலே,
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் எனக்கு வேண்டா–4-8- என்றார்;
இப்படி ஒழியப் புறம்பே பேறு இழவுமாய் இருக்கிற சம்சாரிகள் படியைக் கண்டு வெறுத்தார்;–4-9-
‘ஈச்வரனும் கை வாங்கிய இவர்களை நான் திருத்துவேன்’ என்று, பகவானுடைய பரத்வத்தை எடுத்துச் சொல்லித் திருத்தினார்;4-10-
‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற எனக்கு இவ் வாசி உண்டாவதே!’ என்று பகவானுடைய கிருபையைக் கொண்டாடினார்;5-1-
தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்தார்;5-2-
தொடங்கின காரியம் முடிந்தவாறே பழைய இழவே தலை எடுத்து,
தம் ஆற்றாமையாலே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.
அன்றிக்கே,
மேலே, “மலியும் சுடர் ஒளி மூர்த்தி”-5-2-11- என்று வடி வழகை அநுசந்தித்தார், பின்பு புறக் கலவியை விரும்பினார்,
அப்போதே பெறாமையாலே, வழி அல்லா வழியே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.

மாசறு சோதி . . . . . . என் செய்யுமே – என் செய்ய வாய் மாசறு சோதி மணிக் குன்றத்தை என்று சேர்த்துக் கொள்வது,
‘இனி, விசேஷணந் தோறும் ஒரு பொருள் சொல்ல வேணும்’ என்னுமதனாலே சொன்னோம்” என்று அருளிச் செய்வர்.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?
–5-3-1-

மாசு அறு சோதி– கலந்து பிரிந்தவள் ஆற்றாமை இன்றிக்கே மர்யாதைகளை நோக்கிக் கொண்டிருத்தலானது அத் தலைக்குத் தாழ்வு போலே காணும்;-பிரிந்தால், இப்படிச் செய்யாத அன்று குற்றமே அன்றோ அழகிற்கு.-சோதி -ஒளி பெருமை வடிவு அர்த்தங்கள் உண்டே –-நான் மடல் எடாது இருக்கை அவ் வடிவிற்குக் குற்றத்தை உண்டாக்குகை காண்.
‘அவன் அவ் வடிவை உகந்தார்க்குக் கொடான்’ என்னும் பழியைத் துடைக்கக் காண் நான் பார்ப்பது;-பக்தர்களுக்காகவே என்கிற உடம்பைத் ‘தனக்கு’ என்று இருக்கையாகிற இது அவ் வடிவிற்குக் குற்றமே அன்றோ.-‘மடல் எடுத்தல் மாசு’ என்று இருக்கிறாள் தோழி; ‘மடல் எடாது ஒழிகை மாசு’ என்று இருக்கிறாள் இவள்.-பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கிற விஷயங்களைப் போன்றது ஆகுமே.-வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்பட வடிவிலே -சௌந்தர்யத்தில் முதலில் -மண்டுகிறாள்.-ஐயப்பாடு அறுத்த அழகனூர் அரங்கன் அன்றோ –நான் மடல் எடுக்க நினைத்த அளவிலே மாசு அற்று வருகிறபடி பாராய் என்கிறாள்.-

என் செய்ய வாய்-அவாக்யநாதர:” என்கிறபடியே, வேறுபாடு இல்லாமல் இருக்கக் கூடிய பரம் பொருள், என்னோடே கலந்து அதனால் வந்த பிரீதிக்குப் போக்கு விட்டுப் புன் முறுவல் செய்து வேறுபாட்டினை அடையக் கூடிய பொருள் போலே வேறுபட்டவன் ஆகா நிற்க,
நான் அவனைப் பிரிந்து வேறுபடாதவளாய் இருக்கவோ.
ஒரு வார்த்தை சொல்லக் கூடியவன் அன்றிக்கே, முகம் பார்த்து வார்த்தை சொல்லுகைக்குத் தன்னோடு ஒப்பது ஒரு வேறு பொருள் இல்லாமையாலே அநாதரித் திருக்குமவன். ‘கர்மங் காரணமாக வருகின்ற வேறுபாடு இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களோடு கலத்தலாலும் பிரிதலாலும் வருகின்ற வேறுபாடு இல்லை எனில், ஒரு சேதனனோடு கலந்தது அன்றிக்கே ஒழியுமே அன்றோ.அவன் கலந்த போது செய்த புன் முறுவல் அன்றோ என்னை மறைவு அற்ற வழியாகிய மடல் எடுக்கையிலே மூட்டிற்று.
சம்சாரி முத்தன் ஆவானே ஆனால் அவனுக்குப் பிறக்கும் உவகை போலே காணும் இத் தலையைப் பெற்று அவன் புன் முறுவல் பூத்து நின்ற நிலை-மலர் புரையும்-தளிர் புரையும் திருவடி -கிருபையால் விகாரம்-

என் செய்ய வாய் மணிக் குன்றத்தை– இவளுடனே கலந்ததனால் உண்டான பிரீதியாலே புன்முறுவல் பூத்து வடிவிலே வேறுபாடு தோற்ற நின்ற நிலை ஆயிற்று
இவளைக் கையும் மடலுமாம்படி தொட்டு விட்டது. வாய்க் கரையிலே நின்று மடல் எடுக்கிறாள்;-கழுத்துக்கு மேலே அன்றோ இவள் மடல் எடுக்கப் பார்க்கிறது.-மனஸ் சஹாயம் இல்லாமல் –
மணிக் குன்றத்தை – மாணிக்க மலை போன்று இனியன் ஆனவனை.-மணிக் குன்ற பெருமாள் -தஞ்சை மூன்று கோயில்களில் ஓன்று –என்னோடே வந்து கலந்ததனாலே வடிவில் வைவர்ண்யம் போய்ப் புகர்த்துக் குளிர்ந்து நிலை பெற்றபடியும், பிரிவை நினைத்துக் கால் வாங்க மாட்டாதே நின்ற நிலையுங் காண் என்னை மடலிலே துணியப் பண்ணிற்று-ஆசு அறு சீலனை – குற்றம் அற்ற சீலத்தை யுடையவனை, என்றது, அவன் கலக்கிற போது என் பேறாகக் கலந்தானாகில் அன்றோ நானும் பிரிவில் என் பேற்றுக்கு வேண்டுமதனைச் செய்திருக்கலாவது;
அம் மேன்மை யுடையவன்–ஆதி மூர்த்தியை- இப்படித் தாழ நின்று -இதனால் -ஆசு அறு சீலனை–என்னைப் பெற்ற இது பெறாப் பேறாகத் தான் நினைத்திருக்க, நான் அவனைப் பிரிந்து வைத்து, வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று நினத்திருக்கலாமோ?
அவன் தன் குணம் பரிஹரித்துப் போக, -சீலத்து குறை வராமல் -அவன் பேறாக கலந்ததால் என்னைப் பழி பரிஹரித்திருக்கச் சொல்லுகிறாயோ? ஆக, ‘ஆசறு சீலனை’ என்றதனால், வெறும் வடிவழகு கண்டு அன்று காண் என்பதனைத் தெரிவித்தபடி.

ஆதி மூர்த்தியை –-1-ஜகத்துக்கு காரணம் –-2-இவள் காதல் பெறுவதற்கும் காரணம் என்றவாறு –-‘ஒப்பற்ற குடியிலே பிறந்த உனக்கு, அவன் தானே வர இருக்குமது ஒழிய நீ பதறுகிற இதனால் உன் மதிப்பை அறுத்துக் கொள்ளப் பார்க்கிறாயே’ என்ன, நான் மதிப்பை அறுத்துக் கொள்ளப் பார்க்கிறேன் அல்லேன்,-மதிப்பை உண்டாக்கிக் கொள்ளப் பார்க்கிறேன் என்கிறாள்;-

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஸ மஹாபுருஷ பூர்வஜ”-இங்கே, ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றதனால், பிரணவத்தால் சொல்லப்பட்ட சேஷத்துவமும்,
நமஸ்தே’ என்றதனால், நமஸ் சப்தத்தால் சொல்லப்பட்ட பாரதந்திரியமும்,
விஸ்வ பாவந’ என்றதனால், நாராயண சப்தத்தால் சொல்லப்பட்ட காரணத்வமும்,
நமஸ்தேஸ்து’ என்றதனால், கைங்கர்யப் பிரார்த்தனையும்,
ஹ்ருஷீ கேச’ என்றதனால், ‘உனக்கே நாமாட் செய்வோம்’ என்கிறபடியே,
கைங்கர்யத்தால் தனக்குப் பலன் இல்லாமையும் சொல்லுகிறது.
இந்தச் சுலோகத்தில் ‘விஸ்வ பாவந’ என்றதனால், ஜகத் காரணத்வம் சொல்லி இருப்பதனால், ‘பூர்வஜ’ என்பதற்கு, சேதந உஜ்ஜீவனத்திற்கு முற்பாடனாய்க் கிருஷி பண்ணுமவன் என்ற பொருள் கொண்டு நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாய்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்–இத்தையே ஆதி மூர்த்தி என்று காட்டி அருளுகிறார்

நாடியே பாசறவு எய்தி--1-பகவத் தத்துவம் உள்ள இடம் எங்கும் புக்குத்-காரார் திரு வேங்கடம் காணும் அளவே போய்- தேடிக் காணாமையால் நசை அற்றுத் துக்கத்தை யுடையேனாய்ப் பின்பே அன்றோ மடல் எடுத்தது;-பாசறவு-துக்கம். -நாடி நாடி –நரசிங்கா என்று வாடும் இவ் வாணுதலே –
அன்றிக்கே,-2-பாசு என்று பசுமையாய், அது அறுகையாவது, வைவர்ண்யமாய், வைவர்ண்யத்தை மேற் கொண்டு என்னுதல்.
அன்றிக்கே,
3-பாசு என்று பாசமாய், அதாவது, பற்றாய், உறவினர்கள் பக்கல் பற்று அற்று என்னுதல்;
அன்றிக்கே,
4-சிநேகம் அடைய அவன் பக்கலிலே எய்தி என்னுதல்.
இன்றோ, நான் எத்தனை காலம் உண்டு இப்படிக் கிலேசப்படுகிறது என்பாள் ‘எனை நாளையம்’ என்கிறாள். என்றது,-அவன் என்னைப் பெறுகைக்குப் பட்ட காலம் எல்லாம் போராவோ நான் அவனப் பிரிந்து பட்டவை என்றபடி.
காலம் எல்லாம் தேடிக் காணப் பெறாமல் துக்கப் பட்டுத் திரிந்த தத்தனை யாகாதே தான்;
சிறைக் கூடத்திலே பிறந்து அங்கே வளருமாறு போலே. பிரிவினாலே ஊகிக்கப் படுமித்தனை காணும் புணர்ச்சி. எல்லாம் செய்தாலும் இது அறிவுடையார் செய்வது ஒன்று அன்று என்ன,

அறிவு இழந்து எனை நாளையம் –அறிவு குடி போய் எத்தனையோர் காலத்தோம்.
மயர்வற மதி நலம் அருளின அன்றே போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு.
(உலகு அறிவு போயிற்று -இருப்பது அவன் ஞானம் மட்டுமே -ஆகவே மடல் எடுப்பதே பிராப்தி ) அவர் அறிவே இருந்தது -என்றபடி -பறவை முதலானவற்றின் காலிலே விழுந்து தூது விட்ட அன்று, அது ஞான கார்யம்’ என்று இருந்தாயோ,-இன்று இருந்து கற்பிக்கைக்கு–உபதேசிக்கைக்கு -; அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ.
தன் பக்கல் கை வைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,

ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ் வருகுள்ள வற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?-தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநு சந்திக்கும் படியோ அவன் படி.-நன்று; நீ எல்லாம் சொன்னாலும் பழிக்கு அஞ்சவேண்டுங் காண் என்ன,

ஏசு அறும் ஊரவர் –-1-இவளை ஒரு பழி சொன்னோமாய் விட வல்லோமே’ என்று அதிலே
அற்று இருக்கிற-துணிந்திருக்கிற ஊரார் என்னுதல்; என்றது,
ஏசுகையில் துணிந்திருக்கிற ஊரார் என்றபடி. இதனால், மடல் எடுக்கை நமக்குக் குற்றமாகில் அன்றோ-அவர்களுக்கும் பழி சொல்லுகையும் குற்றமாவது என்கிறாள் என்றபடி.
அன்றிக்கே,-2-பகவத் விஷயத்தில் கை வைத்தவர்களுக்கு ஒரு பழி சொன்னோமாய் விட வல்லோமே’ என்று துக்கப் பட்டிருக்கிற ஊரார் என்னுதல்; –ஏசறும் – துக்கப் பட்டிருக்கின்ற.
அன்றிக்கே,-3-ஏசற்று இருக்கிற நமக்கு. அதாவது, ஏசும் எல்லையைக் கடந்திருக்கிற நமக்கு என்னுதல்; என்றது, அறிவுடையார்க்கு வரக் கூடியதான பழி, அது வாசனையோடே குடி போன நமக்கு வாராது காண்; இதற்கு அஞ்ச வேண்டா என்கிறாள் என்றபடி.

என் செய்யுமே – ஏசு அறும் எல்லையிலே நிற்கிற எனக்கு, இது -மடல் எடுத்தல் -ஏசாம்படி இருப்பார் சொல்லும் வார்த்தை கொண்டு கார்யம் என்?
ஊரார் பழி, புகழாம் எல்லையிலே அன்றோ நாம் நிற்கிறது. அவர்கள் சொல்லுகிற
இது நமக்குத் தாழ்வேயோ, தாரகமாமித்தனை அன்றோ?
“அலர் எழ ஆருயிர் நிற்கும்”-திருவாய்-7-3-8- என்னக் கடவதன்றோ.-
அபவாதம் உதிக்குமாகில் பூர்ண பிராணன் நிற்கும் -தாரகம் -அபாகாவதர் தூற்றுவதே –
அலர் தூற்றிற்று அது முதலாக் கொண்ட என் காதல்”-திருவாய்-7-3-8- என்கிறபடியே,
அவர்கள் பழி தாரகமாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது.-

————–

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே
.–5-3-2-

முதல் பாட்டில் -மத்யே ஒருவர் எழுந்து அருள மீண்டும் சங்கதி சொல்லக் கேட்டதும் மீண்டும் அருளிச் செய்கிறார் இதில்-என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ –

இனி நம்மை- தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட,
உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’என்கிறாள்.-தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக் கடவதன்றோ. -முன்னமே ஈடுபடுவர்களே -என்றவாறு –“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி; இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவே யாயிற்று வாசி.
ஸ்வார்த்ததா கந்தமும் இல்லாமல் –
தலைவியைக் காட்டிலும் தோழிக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்; அதற்குக் காரணம், தலைவனைப் பிரிகையால் உண்டான ஆற்றாமை மாத்திரமே தலைவிக்கு உள்ளது, தலைவி நோவு படக் காண்கையாலும், தலைவியும் தலைவனுமாகச் சேர இருக்குமது காணப் பெறாமையாலும் தோழிக்கு இரட்டித்திருக்குமே அன்றோ.

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் –
‘என்னுடைய ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நீ இட்ட வழக்கு அன்றோ’ என்கிற அக வாயில் தண்ணளி தோற்றும்படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த தாமரையைப் போன்ற திருக் கண்களாலே குளிர நோக்கி
‘நானும் என்னுடைமையும் உன்னது’ என்று சொல்லுவாரைப் போலே வந்து
இத் தலையிலுள்ள எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொண்டு போனான். என்றது,
எனக்குக் கொடுப்பவனைப் போலே இருக்க நோக்கி, என்னை உரி கூறை கொண்டு போனான் என்றபடி.-சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தன; “தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி” என்னக் கடவதன்றோ.

என்னை நிறை கொண்டான் –-அவன் புருஷோத்தமனாய் இருக்கும் தன்மைக்குத் தாமரைக் கண்ணனாய் இருத்தல் எல்லையாய் இருக்குமாறு போல ஆயிற்று-இவள் பெண் தன்மைக்கு நிறை எல்லையாய் இருக்கும்படி.-அவன் புருஷோத்தமன் ஆனாற் போலே ஆயிற்று, இவள் பெண்ணுக்குள்ளே உத்தமியாய் இருக்கும்படி. –-நாரீணாம் உத்தமி அன்றோ இவள் –

என் தாமரைக் கண்ணன்–பிரிவோடே இருந்து மடல் ஊர்ந்து பழி விளையா நிற்கச் செய்தேயும் என்னுடையவன்’ என்னலாம்படி காணும் அவன் கிட்டினால் இருக்கும்படி;
ஆதலின், ‘என் தாமரைக் கண்ணன்’ என்கிறாள்.

என்னை நிறை கொண்டான்--நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப் போம் இதற்கு மேற்படச் செய்யலாவது இல்லை என்றாயிற்று,-இவளுடைய பெண் தன்மைக்குரிய அபிமானந்தான் இருப்பது; ஆதலின், ‘என்னை நிறை கொண்டான்’ என்கிறாள். என்றது,
கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி.
தன்னுடைய ஆண் தன்மை முழுதையும் அழிய மாறி என்னுடைய பெண் தன்மையைக் கொண்டான் –நிறையாவது,-அடக்கம். அகவாயில் ஓடுகிற இது பிறர்க்குத் தெரியாதபடி மறைத்துக் கொண்டிருக்கை அன்றோ.-நான் எனக்கு ஓடுகிற நிலையை உனக்கு வாய் விட்டுச் சொல்லும்படி அன்றோ செய்தது.-தோழி தானும் இவள் வடிவிலே வேறுபாடு கொண்டு “உற்ற நன்னோய் இது தேறினோம்” என்று இவள் அகப்பட்டபடி அறியுமித்தனை போக்கி, இவள் தான் தோழிக்கும் வாய் விட்டுச் சொல்லாதபடி அன்றோ பெண்மை தான் இருப்பது.

‘மடல் ஊர்வேன்’ என்கிற என் வாயை நீ புதைத்தால்,என் வடிவு மடல் எடுக்கிற இதனை என் கொண்டு மறைப்பாய் என்கிறாள்.-முன் செய்ய மாமை இழந்து– இதற்கு மூன்று விதமாகப் பொருள் அருளிச் செய்வர்:
1-தன் பக்கல் கை வைப்பதற்கு முன்னே, அதாவது, பிறந்த போதே உண்டான நிறத்தை இழந்து என்னுதல்.
அன்றிக்கே,-2-மற்றைய வற்றை இழப்பதற்கு முன்னே நிறத்தை இழந்து என்னுதல்;
முன்பு தோற்றினவற்றைப் பறித்துக் கொண்டு, பின்பே அன்றோ கிழிச் சீரையை அறுத்துக் கொள்வது;
அவன் தானும் முந்துற விரும்பியது இந் நிறத்தைக் காணும்.
அன்றிக்கே,
3-முன்னே காணக் காண நிறத்தை இழந்து என்னுதல்.
இப் பாசுரத்தில் ‘செய்ய மாமை’ என்கிறாள்; முன்னே “மணி மாமை” என்கிறாள்;
இவ் விரண்டாலும் சிவப்பும் கறுப்பும் அல்ல இங்குச் சொல்லுகிறது;
இரண்டிலும் ஒரு சேர ஏறின பிரயோஜனம், -ஸ்ப்ருஹணீயத்வம்-‘விரும்பத் தக்க தன்மை’ என்பதே யாகும்.-அவனோடு கலந்து பெற்ற நிறத்தைத் தனமாக நினைத்திருந்தபடியால் ‘மாமை இழந்து’ என்கிறாள்.
சம்பந்தம் முன் இழந்தது – /முதலில் இழந்தது -/பார்த்து இருக்கும் பொழுதே இழந்தேன் –

என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த – அவயவியாகத் தேடுகிறேனோ, அவயவங்கள் தோறும் வற்றி வருகிறபடி பாராயோ? என்கிறாள்.
இப்போது“செய்ய வாயும் கருங்கண்ணும்’ என்று தன்னுடைய அவயவங்களைத் தானே புனைந்துரைக்கிறாள் அல்லள்;
அவன் வந்து கிட்டின போது அவனுடைய ஸ்ரீ சகஸ்ர நாமங்களுக்கு -ஸ்தோத்ரம் -விஷயம் இவையே அன்றோ, அதனைச் செவியாலே கேட்டிருக்குமே, அதனாலே சொல்லுகிறாள். என்றது,-தான் இழந்த முறை சொல்லா நிற்கச் செய்தே,-அவன் உகந்த முறை தோன்றா நின்றது காணும் இவளுக்கு-ஆத்ம ஸ்வரூபமும் பிராப்ய அந்தர் கதமாய் அன்றோ உத்தேஸ்யமாவது,-பிராப்ய பூதனுக்கு உப யுக்தம் -மதியம் என்ற காரணத்தால் ஆத்மாவை கொண்டாடுகிறோம்-என்னது என்று அவன் அபிமானித்ததால் இவள் தன்னது என்கிறாள் அவன் வாய் புகு சோறு பறி யுண்ணா நின்றது என்பாள் “செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த” என்கிறாள்.“செங்கனி வாய் நுகர்ந்தான்”, “மண நோக்கம் உண்டான்”-பெரிய திரு மொழி-8-10-1- என்னக் கடவதன்றோ. –-இவள் வாயும் கண்ணும் அவனுக்கு ஆகாரம் அன்றோ –

———————–

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?
–5-3-3-

“என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ‘எல்லாம் செய்தாலும் பழி நீக்க வேண்டாவோ’ என்று இருப்பாளே அன்றோ இவள்;
1-இது பழி’ என்று நீக்க ஒண்ணாதபடி எனக்கு ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்,
2-இது பழி’ என்று மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபட்டவளாய் இருக்கிற நான் எவ்வளவிலே நிற்கிறேன்,
3-இது பழி’ என்று சொல்லுகிறவர்கள் தாம் எவ்வளவிலே நிற்கிறார்கள்,
4-அவர்கள் சொல்லுகிறவற்றைச் சொல்லுகிற நீ தான் எவ்வளவிலே நிற்கிறாய் என்கிறாள்.
நால்வர் நிலைகளையும் நான் சொல்கிறேன் கேள் என்கிறாள்-

பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று.-அசேதனமான சகடத்தில் அசுரர்கள் ஆவேசித்து நலிவதாக ஊர்ந்து வந்ததித்தனை அன்றோ.-அதுவும் செய்வது எல்லாம் செய்து, இவனும் அகப்படுவது எல்லாம் அகப்பட்டு நின்றான்;-திருவடிகளினுடைய செயலாலே தப்பின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள்.-இவனை அடி காத்துத் திரிந்ததித்தனை.

உதைத்த பாதத்தன்–முலை வரவு தாழ்க்கச் சீறி நிமிர்த்தத் திருவடிகளுக்கு இலக்காய்த்
துகளாய்ப் போயின-நமக்குப் புகலான திருவடிகள் தாமே நமக்கு விருப்பம் இல்லாதவைகளையும் போக்கித் தருமாயிற்று.-

அவளும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முட்டி முலை உண்டு,-உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற புன்முறுவல் செய்தாயிற்று முலை உண்டது.-முலைப் பாலோடே இரங்கி உயிரையும் சுரக்கும்படியாக ஆயிற்று முலை உண்டது.-விஜயா முஹூர்த்தம் வாமனன் -திருவவதாரம் -கிருஷ்ணன் அவதரித்த முஹூர்த்தம் விஷமும் அமிர்தமாயிற்றே –

எனக்குத் தன் பக்கலிலே ஈடுபாட்டினை உண்டாக்குகைக்காகச் செய்தான்’ -இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாட்டினை உண்டாக்குதல் அவனுக்குச் சத்தா பிரயுக்தம்-என்னை நிறை கொண்டான் –ஒரு செயலாலே இரண்டு பெண்களைக் கொன்றான்.-அவளை நற் கொலையாகக் கொன்றான்,-என்னை உயிர்க் கொலையாகக் கொன்றான்.

அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்-அவன் சம்பந்தத்தையுடைய வார்த்தை அல்லது
வேறு ஒரு வார்த்தையை யுடையேன் அல்லேன்.-அவனை ஒழிய எனக்கு வேறு ஒரு சொல் இன்றிக்கே இருந்தது என்கிறாள்–நாம் இவளை அவனோடு சேர்ப்பதற்குப் பட்ட பாடும், அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயற்சி செய்தாலும் மறவாதபடி உட் புகுந்த வாறும் என்னே! என்று உகந்தாள்; இவள், விலக்குகிற வார்த்தைகளை விட்டு
இவள் மனத்தினைக் கண்டாள் ‘தீர்ந்த என் தோழி’ என்கிறாள்.ஊரார் பழி கொண்டு காரியம் என்? உன் நெஞ்சிற் குறை இல்லாமையே அன்றோ எனக்கு வேண்டுவது-பழி அனைவரும் சொன்னாலும் கவலை இன்றி இருக்க செய்தான்-சேஷ்டிதங்கள் -செய்தவன் என்னை நிறை கொண்டான் அவனை தவிர வேறு சொல் இல்லையே -அவனை விட முடியாதபடி ஈடுபாடு செய்த பிரான்-

————-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?
–5-3-4-

அவன் இப்போது வந்து முகங் காட்டிற்றிலனாகிலும், தான் முகங் காட்டாத போதும் தன்னை ஒழிய நாம் மற்றொன்றால் பொருந்தாத படி செய்தானே! அவன் செய்த படி பொல்லாதோ என்கிறாள்.-ஊரார் சொல்லுகிற பழியை இவளுடைய அன்புக்கு எருவாக இட்டான்.
ஊரார் பழி சொல்லிற்றிலர்களாகில் இவள் தானும் கை வாங்கி இருக்குங் காணும்-இவள், ‘மறப்பேன்’ என்னும் அன்றும் மறக்க ஒண்ணாதபடி ஊரார் நினைவினை உண்டாக்குகின்றவர்கள் தன்மையிலே நிற்பர்கள் ஆயிற்று

அன்னை சொல் நீர்படுத்து– தாயாரும் இதற்கு முன்பெல்லாம் ‘என் மகள்’ என்றே இருந்தாள், ஊரார் பழி சொல்லப் புக்க பின்பாயிற்று இவள் அறிந்தது.-தாயாருடைய ஹித வசனத்தை நீராகப் பாய்ச்சி.-எருவாவது, அடியிலே ஒருகாலே இட்டுவிடுவதே அன்றோ, நீர் மாறாமல் பாய்ச்ச வேணுமே;-ஊரார் ஒருகால் சொல்லி விடுவர்களித்தனையே, தாயார் வீட்டுக்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாக ஹிதம் சொல்லா நிற்குமே அன்றோ; அதனால், அன்னை சொல்லை ‘நீர்’ என்கிறாள்.

ஈர நெல் வித்தி – அன்பாகிற நெல்லை வித்தி. இவள், அன்பு இருக்கும்படி ஆராய்ச்சி செய்ததும் இவ் விஷயத்திலே ஆயிற்று;-புறம்பே சில விஷயங்களிலே பற்று உண்டாய் விரக்தி பிறக்க வேண்டா ஆயிற்று இவளுக்கு.-தன் சம்பந்தமான ஞானத்துக்கு உபகாரகமான மூல சுக்ருதமும் அவன் தானே ஆயிற்று.-முளைத்த –-எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்கும்போதும் முளைப்பிக்கும் சக்தி உண்டாகும்போதும் அவன் உண்டாக்க வேண்டுமே;-ஆதலின், “முளைத்த” என்கிறது-வரவாறு ஓன்று இல்லையேல் -சாதனம் அவன் பண்ண சாதனப் பலனை இவள் அனுபவிக்கிறார்-ஆழ்வார் விஷயத்தில் இச்சையும் உண்டாக்கி அருளினார்-

நெஞ்சப் பெருஞ் செய்யுள் – நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.
ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி,-ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.

பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி ஆத்மாவோடு கட்டுப் பட்டிருக்கின்ற காதல் என்றபடி.
இங்கே ‘கடல் புரைய’ என்றது,-கடலின் மிகப் பெரிதால்” -7. 3 : 6.என்னா நின்றது;
அதனில் பெரிய என்னவா” -10. 10 : 10 என்று, ஈச்வரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது; ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட காரியம் இதுவாயிற்று.

அன்றிக்கே,-பெரிய போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது,
ஊர்ப் பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,-காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல்.

கார் அமர் மேனி – அடியிலே எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும், மேல் மழை பெய்யாதாகில் அப் பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ;-வடிவாலே ஆயிற்று மழை பெய்தது. நீர் உண்ட மேகம் போலே குளிர்ந்த வடிவு.-நம் கண்ணன்--வடிவையும் தந்து தன்னையும் நமக்குத் தந்த கிருஷ்ணன். வெறும் வடிவில் பசை கண்டு அகப்படுமவள் அன்று,-அக வாயில் தண்ணளியும் உண்டாக வேணுமாயிற்று. கிருஷ்ணன் என்றால்
பெண்களுக்குச் சேஷ பூதன்’ என்பது பிரசித்தமே அன்றோ.தோழி--நீ தான் யாராய் இவ் வார்த்தை சொல்லுகிறாய்.-இரண்டும் உனக்கே பணியோ; ‘நீர்மை யுடையவன்’ என்று பொருந்த விடுகையும் உனக்கே பணியாய்,-‘அருள் அற்றவன்’ என்று அகற்றப் பார்க்கையும் உனக்கே பணியாயோ இருப்பது!-கடியனே – இவ் விஷயத்தில் இப்படிப் பொருந்த விட்ட நீயே மீட்கப் பார்த்தாலும் மீளாதப டியான ஈடுபாடு உண்டாம்படி செய்தானாகில்,
இனி அவன் என் செய்வான். முன்பு நீர்மை யுடையவனாகச் சொல்லப் பட்டவன், இன்று பழிக்கும்படி கடியன் ஆனானோ?-

———–

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!
–5-3-5-

அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும் போதும் நானே சொல்ல வேணுங்காண்;
நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகா நின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை; ஆன பின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள்.–கடியன்-தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால், எதிர்த்தலையின் அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன்-கொடியன் –தான் மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன்.-கலவியின் மத்தியத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? –நெடிய மால்- மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப் பெரியவன் என்றபடி.
இதனால், கை புக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை.
பிரிய நினைக்கின்றான்’ என்று அறியா நிற்கச் செய்தேயும்-நீ பிரிய நினைத்தாய்’ என்று
மடி பிடித்துக் காற்கட்டி விலக்க ஒண்ணாத படியாய் இருக்கை.

உலகம் கொண்ட அடியன் –-பிறர் உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன்.-அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். பாதாளங் கலவிருக்கை கொடுக்குமவன்.-ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றும் எஞ்சாதபடி கொள்ளும் திருவடிகளை யுடையவன்.-அறிவு அரு மேனி
கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாத படியான வடிவை யுடையவன்.-என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளை கொள்வது. என்றது, தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னை யாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று –

மாயத்தன்- நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு’ என்ற இவ் வார்த்தையை நினைத்து அதிலே நெஞ்சு மூழ்கி யிருக்க, அவ்வளவிலே கண்களிலே மணலைத் தூவி அகல வல்லவன்.

ஆகிலும்--நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும், சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம் நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில்.-கொடிய என் நெஞ்சம் –உல்லோகமாய் உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது,-நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த் தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது;-அங்ஙனன்றிக்கே, குண ஹாநி தன்னையே பற்றுகைக்கு உடலாகக் கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி.-அவன் என்றே கிடக்கும்–இத் தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று பிள்ளான் பணிப்பர். என்றது,-அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காண வேணும்;-அவன் கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காண வேணும்;
அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனான படியை இப்போதே காண வேணும்;-அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்க வேணும்;
அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறிய வேணும் என்ற படியாம்.

அன்றிக்கே,-என் நெஞ்சுக்கு மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது, விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி.
அத்வைத ருசி -விசேஷணங்கள் இல்லாத கண்ணன் -தோஷங்கள் இல்லாத கண்ணன் மட்டுமே நெஞ்சிலே பட –-நிர் விசேஷம் ப்ரஹ்மம் என்றபடி
இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை.-குண க்ருத தாஸ்யம் இல்லை -ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் என்றபடி

எல்லே--என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே!
அன்றிக்கே,-உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு, இனி, நீ நினைத்த படியே நினைத்திரு’ என்று போகப் புக்காள் தோழி; இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.

இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு-துடிகொள் இடை மடம் தோழி’ என்கிறாள்.-துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ!-அன்றிக்கே,-உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்கலுண்டான அன்பிற்கும் ஈடாக வார்த்தை சொல்லப்பாராய் என்கிறாள் என்னுதல்.
நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ, தாய் சொல்லுமதற்கு அஞ்சிக் காண் நான் இப்படிச் சொல்லுகிறது என்ன, அன்னை என் செய்யுமே- உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன்.

நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம், பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே அன்றோ நாட்டார் நினைத்திருப்பது;
தெய்வ சம்பந்தத்தால் அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும் நான் அவரை விட மாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ அவரைக் குணங்களோடு பிரித்து வைக்கப் பெற்றதாகில்’ என்றாளே அன்றோ.-ஒரு விஷயத்தில் பாவ பந்தம் உறைத்திருப்பார் வார்த்தையாயிற்று இது.
“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது; என்னக் கடவதன்றோ. நன்று;
“இது, குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில், ‘கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன வேண்டவோ? என்னில்,
அவனுக்கு இந் நன்மைகள் இல்லையே யாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற பாவ பந்தத்தில் உறைப்புத் தோற்றும்படி மாறாடிச் சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது இருப்பதாமோ என்க.என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன்,-நீ நீ அன்றிக்கே இருந்தாலும் என்னால் விடப் போகாது..-

———

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே
.–5-3-6-

அன்னை என் செய்யில் என்– அவள் பிழைத்தால் என்? முடியில் என்?-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?நன்று; – ‘தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய், இவள் நாயகனுடைய
அழகு முதலானவைகளில் ஈடுபட்டவள் ஆனாள்’ என்று ஊரார் பழி சொல்லுவார்களே என்ன ஊர் என் சொல்லில் என்- அவர்கள் பழி சொல்லில் என்? குணங்களைச் சொல்லில் என்? “கொல்லை” என்னுதல், “குண மிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.

தோழிமீர்-‘தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே, தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.-என்னை –தாய் வாயிற் சொற் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய் இருக்கிற என்னை.-இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கை கழிந்த பின்.-உமக்கு –இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.-ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த்தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;-இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியாகிலும் மீட்க வேணும்’
என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன; அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.

என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.-“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி-தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது-திருஷ்டி சித்தாபஹாரிணம்-.-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.-தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி. -மனம் இந்த்ரியம் பிரித்தால் போலே 

முதல்வன்-நித்திய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மை யுடையவன்-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆசைப்படக்கூடிய விஷயமானவன்-வண் துவராபதி மன்னன்’ முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை-பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்” -பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறை-மணி வண்ணன்–அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.-வாசு தேவன்- வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-அவனுடைய அருள் அற்ற தன்மையோடு -நீர்மையோடு,- ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றாற் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.-அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம் பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,-கமலக் கண் என்னும் நெடுங்கயிறு” 
என்னக் கடவதன்றோ. அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப் படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-முகப்பில் அனுகூலம் போலே தோற்றி பந்துக்களோட்டை தொற்றை யறுத்து வ்யதிரேகத்தில் முடிய ஒண்ணாது இருக்கை-

—————

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே
.–5-3-7-

அலை கடல் பள்ளி அம்மானை–“ஸ்ரீமத் துவாரகையில் இருக்கில், ‘பெண்களுக்கு ஓலக்கங் கொடுத்த இடம்’ என்று சம்பந்தம் சொல்லிக் கொண்டு வரக்கூடும்” என்று எட்ட ஒண்ணாத நிலத்திலே பின்னையும் போய்ப் புக்கான்.
பின்னையும் –-ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆழ்வார் நெஞ்சை அபஹரித்த பின்பு மீண்டும் ஷீராப்தி நாதன் ஆனான் என்றபடி –-அலை கடல்-பெண் பிறந்தார்க்கு நினைக்க ஒண்ணாதபடி கொந்தளிக்கிற கடல் என்பாள் ‘அலை கடல்’ என்கிறாள்.
அம்மான்- பெரிய செல்வம் கைப்பட்டவாறே கடல் ஓடத் தொடங்கினான். -அம்மான் -ஸ்வாமி -ஆழ்வார் -சொத்தை பெற்றதும் —-ஆழிப்பிரான் தன்னை –‘புக ஒண்ணாத நிலத்திலே புக்கான்’ என்று விட ஒண்ணாத படியாயிற்றுக் கையும் திருவாழியுமான அழகு.கடல் ஓடியாகிலும் பெற வேண்டியாயிற்று இருப்பது.

தாய்மார் சொல்லுகிற வார்த்தையை இவர்களும் சொல்லுகையாலே-தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்.-இங்ஙனம் பேசுவாரை விட்டுத் “தீர்ந்த என் தோழி” என்னலாம்படி நெஞ்சு கலந்து ஒரு நீராய் இருக்கிற உயிர்த் தோழியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்.

தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே--‘பிரிந்த இடத்தில் தன்னுடைய பெண் தன்மைக்குப் போரும்படி அவன் தானே வரப் பார்த்திருந்திலள்,
அவனும் வரவு தாழ்த்தான்’ என்று பழி சொல்லுகிற இவர்கள் முன்பே அவனும் வந்து, அவன் வந்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ!

இத் திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க,-ஆ மருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று,-ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்;
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச் செய்தார்.-இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே, அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.-இது தான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,-அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல, பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க
அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.-

———————-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.
–5-3-8-

தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை – தடையாக வந்தவை தாம் பிரபலமா யிருக்கச் செய்தேயும், தன் வீரத்துக்கு அவை பாத்தம் போராமையாலே புன் முறுவல் செய்து நின்றபடி.-என்றது, வெண் முறுவலையும் சிவந்த அதரத்தை யுமுடைய உபகாரகனை என்றபடி.
அன்றிக்கே,-தூய்தான பற்களின் வரிசைகளையும், தொண்டைக் கனி போன்ற அதரத்தை யுமுடையவனை என்னுதல்.
இப்போது அவனை அழிக்க நினைத்து மடல் எடுக்கிறாளாகில், அவன் உபகாரத்தைச் சொல்லுவான் என்? என்னில்-இவையே யன்றோ இவள் தான் அவனை அழிக்க நினைத்தபடி. என்றது, அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற
இத்தனை போக்கி, அவனை அழிக்க உத்தேசியமாகச் செய்கிறாள் அல்லள் 
என்றபடி.
அவ் வுபகாரங்கள் எல்லாம் தனக்காகச் செய்தது என்று இருக்கிறாள் ஆதலின் ‘பிரான்’ என்கிறாள்.-பூத் தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்பன சில சங்கேதங்கள் உண்டு தமிழர்க்கு-இவளை நோக்கினதற்காக, இவள், தன்னை அவனுக்கு ஆக்குதல் என்பதே அன்றோ இங்கே சொல்லப்பட்டது;-அவ்வளவு அன்றிக்கே, இவள் தலைமை இருந்தபடி; அவன். தன்னைத் தப்புவித்த உபகாரத்துக்கு அநந்யார்ஹமாக இவள் தன்னை அவன் தனக்கு எழுதிக் கொடுக்கிறாள். அங்கு ஒவ்வோர் உபகாரத்துக்கே அன்றோ அப் பெண்கள் தங்களை அவ்வவர்க்கு உரிமையாக்குவது,-இங்கு எல்லா உபகாரங்களையும் செய்தால் அவனுக்கு ஆக்காது ஒழிய ஒண்ணாதே அன்றோ.-இப்போது அவனை அடைந்து, நம் பிரயோஜனம் பெற ஆசைப் படுகிறோம் அல்லோம்; பின்னை எற்றிற்கு? என்னின்,-அன்னையர் நாணவே- பிரிந்த பின்பு அவன் தானே வருமளவும் ஆறி இருந்திலள்,-அவன் தான் வரவு தாழ்த்தான்’ என்று இருவர்க்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே,-‘நாம் இத் தலை மடல் எடுக்குமளவாம்படி பிற்பாடரானோமே!’ என்று, “எனக்கு இது மிகவும் நாணத்தைத் தருகின்றது,-நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்” என்கிறபடியே,-பெருமாள் ரிஷிகளைப் பார்த்து லஜ்ஜித்து வார்த்தை சொன்னால் போலே
அவன் நாணமுற்று வந்து நிற்கிற படியைக் கண்டு, ‘இவனையோ நாம் இவ் வார்த்தை சொன்னோம்’ என்று-தாய்மார்கள் நாணமுற்றுக் கவிழ்தலை இடும் படியாக

———-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே
.–5-3-9-

நல் நெஞ்சம் கூவிக் கொண்டு- பறித்துக்கொண்ட நாணையும் நிறையையும் தந்தாலும் இட்டு வைப்பதற்குக் கலம் இல்லாதபடி, அவற்றுக்குப் பற்றுக்கோடான, என்னிற் காட்டிலும் தன் பக்கல் அன்பிலே ஊற்றமுடைய மனத்தைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு
இவற்றைக் கொண்டு இன்னம் கடலிலே கிடக்கில்’ இவள் மனோ வேகம் இருந்தபடியால்
திரை மேலே-அலை மேலே- நடந்து வந்து கையும் மடலுமாக நிற்கவும் கூடும்’ என்று பார்த்து
எட்டா நிலத்திலே சென்று இருந்தானாயிற்று என்கிறாள் மேல்

சேண் உயர் வானத்து இருக்கும்--மிக்க ஒக்கத்தை யுடைத்தான வானத்திலே இருக்கும். என்றது, அந்தர ஜாதிகளான இந்திரன் முதலாயினோர்கள் குடி இருப்பில் அன்றிக்கே பரமபதத்தில் இருப்பதனைக் குறித்தபடி. சேண் என்றாலும் உயர்வு, உயர் என்றாலும் உயர்வு;-ஆக, இரண்டாலும் மிக்க உயர்வினைக் குறித்தபடி.-தேவ பிரான் தன்னை-
இங்கே வந்து கொண்டு போன நாணும் நிறையுமான ஒடுக்கு மாட்டைப் பாரித்துக் கொண்டு தன் வெற்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறபடி.-பிரிவினால் வரும் வியசனம் அறியார்களே யாகிலும் சேர்க்கையால் வரும் ரசம் அறிவார்களே அன்றோ முன்னம். தேவபிரான் தன்னை-அவன் தானும் ‘பிரளயத்துக்கு அழியாத நிலம்’ என்னுமித்தனை யாயிற்று அவ் விடத்துக்கு ஏற்றமாக நினைத்திருப்பது;-விரஹப் பிரளயம் ஏறிப் பாயாத இடம் இல்லை’ என்று அறிய மாட்டுகின்றிலன்;-அறிந்தானாகில் கிடந்த இடத்தே கிடக்குமே!
அன்றிக்கே,-நீயே பார்ப்பாயாக அவ் வோலக்கமும் அவனும் அவ் விருப்பும் என்கையிலே படப் புகுகிற பாடு;-இருந்த இடத்தே இருக்க ஒட்டுவேன் என்று இருக்கிறாயோ? என்பாள் தேவபிரான் தன்னை’ என்கிறாள்-

ஆணை என்கிறாள்.-இவள் இப்போது அவன் மேல் ஆணை இடுகிறாளோ, தோழி மேல் ஆணை இடுகிறாளோ? என்னில்,-அழிக்க நினைக்கப்பட்டவன் மேல் ஆணை இடாளே,ஆதலால், தோழி மேல் ஆணையாமத்தனை.
இதற்கு உடன் பட்ட தோழியை ஒழிய, ‘வேறு ஒரு பர தேவதை உண்டு’ என்று இராளே, இவள் தான்.-என் தோழி- இது வார்த்தை யளவேயாய்ப் போகாமல், இவள் இத்தனையும் செய்து தலைக் கட்டப் பெறுவது காண்’ என்னும் தன் நினைவு தோன்ற இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ‘என் தோழி’ என்று அணைத்துக் கொள்ளுகிறாள்.
அன்றிக்கே,-ஆணை என்-இவள் எண்ணம் கூடப் புகாநின்றதோ என்று இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ஆணை என்? என்கிறாள் என்னுதல்;
ஆணை என்--தடை என்? ஆணை-தடை. என்றது, அவன் என் சொல் வழியே வருமாகில், நீ என் கருத்திலே ஒழுகுவுதியாகில்,-தாய்மார் தொடக்கமானார் வார்த்தை கொண்டு காரியம் இல்லை யாயிற்ற பின்பு, இனித் தடை என்? என்றபடி.
அவன் இவள் வழியே வருகையாவது என்? என்னில், சர்வாதிகன் ஆகையாலே அழிய விடானே,-இத் தோழி தானும் இவள் கருத்திலே நடப்பாள் ஒருத்தியே.

உலகு தோறு அலர் தூற்றி- உலகங்கள் எங்கும் புக்கு அழிக்கக் கடவேன்.
என்னை ஊரார் பழி சொல்லும்படி செய்தானாகில், தன்னை உலகம் எல்லாம் பழி சொல்லும்படி செய்கிறேன்.-அசாதாரண விபூதியிலுள்ளார் தாம் பிறர் அறியும்படி இரார்களே அன்றோ’ என்றிருக்கைக்கு,-அவ் வோலக்கத்திலே வந்தாலோ நான் சொல்லுவது; என் கையிலே வழி யடையப் படப் புகுகிற பாடு பார்ப்பாயாக.
அங்கு தோஷங்களை குணமாகக் கொள்வார்கள் -இங்கோ குணங்களையும் தோஷங்களாக கொள்வார்களே –-ஆம் கோணைகள் செய்து--என்னாலான மிறுக்குக்களை எல்லாம் செய்யக் கடவேன்.-கோணைகள் –-மிறுக்குக்கள்.-என்றது என் சொல்லியவாறோ? எனின், நான் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே,-‘நம் குண நிஷ்டர்படி இது அன்றோ’ என்று – குணங்கொண்டாடி அதிலே செலவு எழுதக் கடவன்;-ராமாயாணம் மகா பாரதம் போன்ற புராணங்களில் எழுதப் பண்ணுவேன் –-அன்று, நான் உன்னைப் பெறுகைக்குச் சாதந அநுஷ்டானம் பண்ணுகிறேன்’ என்னக் கடவேன்.
அன்றிக்கே,-நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன்,
அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன்.-“வட்டிக்கு மேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டு விடக் கடவேன்.

குதிரியாய்--குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய்-தடை இல்லாத பெண் என்கிற படியாய், தடை யுடையேன் அன்றிக்கே என்னுதல்;-அன்றிக்கே,-குதிரி என்பது,-செப்பு என்ற பொருளதாய், பெண்களுக்குச் செல்வமாவன: நாணும் நிறையுமே யன்றோ,-அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே வெறும் சரீர மாத்திரமேயாய் என்னுதல்;
அன்றிக்கே,-பனை மடலைக் குதிரையாகச் செய்து கையிலே கொள்ளக் கடவர்கள் மடல் ஊருகின்றவர்கள்,-அதனை யுடையேனாய் என்னுதல்.-மடல் ஊர்துமே-‘செய்யக் கடவதாயிற்ற பின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’
என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

மடலாகிறது -அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி பனை மடலையைக் குதிரையாய்க் கொண்டு -உடம்பைப் பேணாதே மயிரை விரித்து கண் வாங்காதே பார்த்துக் கொண்டு திரியா நின்றால்-போக உபகரணங்கள் கண்டால் அக்னி கல்பமாய் இருக்கக் கடவதாய்-இப்படி செல்லா நின்றால் -ராஜாக்கள் கூட்டுதல் -ஆற்றாமை கூட்டுதல் -இரண்டு தலையிலும் உள்ள பந்துக்களும் கை விட்டு ஒருவருக்கு ஒருவர் தஞ்சமாய் முடிகை தானே பேறாகச் செய்யுமதாயிற்று –

———-

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.
–5-3-10-

மடல் ஊர்ந்தே யாகிலும்-1-பெற்று அன்றித் தரியாத உபேய வைலக்ஷண்யம், –2-அதற்கு அடியான உபாய வைலக்ஷண்ய அநுசந்தானம்,-3–‘அவ் வுபாயந் தன்னாலே பேறு’ என்கிற துணிவு, 4-வேறு ஒன்றினை உபாயமாக நினையாமை,-5- முறையிலே பெறுகிறோம் என்று நினையாமை ஆகிய இவைகளே, –-இங்கு ‘மடல்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. -ஐந்தாவது அங்கி -மற்றவை அங்கங்கள்

என் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் பெறத் தவிரேன்.
செய்யக் கடவது அல்லாததனைச் செய்தாகிலும் பெறக் கடவேன்.
ஆத்மாவோடு சேராத செயலைச் செய்தே யாகிலும் பெறக் கடவேன்.
யாம்--பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசக சப்தம்
இருக்கிறபடி யாயிற்று ‘யாம்’ என்பது.-அத் தலையைக் கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.-அஹம் அர்த்தம் -மகாரம்-சேஷ பூதன் –அகாரம் சேஷி –-ஆறி இருக்காமல் -ஸுவ பிரயோஜனம் கூடாதே -மடல் எடுப்பதால்-அஹம் அர்த்தம் உடன் சேராத செயல் –
யாம் -முதலில் சொல்லி
ஆழி அம் கைப் பிரான் –-பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே-ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம் —எம் பிரான்’ என்றதனால் நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது. இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது.

அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள் இரண்டும் அமோகம் -வீணாகாதே –ஈஸ்வரத்வம் திரு ஆழி காட்டும் –-பிரணயித்வம் மடல் காட்டுமே – தேஜோ கரம் இரண்டும் இருவருக்கும்-ஆழி அம் கைப் பிரான்’-என்கிறாள். நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில் ஆபரணத்தை வாங்கி என் கையிலே இட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்; இல்லையாகில் எல்லாங்கூட இல்லை யாகின்றன. -உபய ஸ்வரூபமும் அழியும் என்றவாறு –ஆபரணம் என்பதால் இங்கு ஆழி -மோதிரம் என்றபடி -திவ்யாயுதமும் திவ்யாபரணம் தானே அநு கூலர்களுக்கு 

தெருவு தோறு--“உலகு தோறு அலர் தூற்றி” என்றாளே கீழே; அங்ஙனம் உலகமாகத் திரண்டிருக்க உலகத்திற்காக ஒரு வார்த்தை சொல்லி விடுவேனோ, தெருவுகள் தோறும் புக்கு, அறியாதார் எல்லாரும் அறியும்படி அலர் தூற்றக் கடவேன்.
கிருஹ அர்ச்சனைகள் அர்ச்சக பராதீனம்’ என்று ஒரு மூலையிலே புக்கு இருக்க ஒட்டுவேனோ. அர்ச்சை பிராவண்யமும் அழிப்பேன் என்றபடி –

1-வேற்றுப் பெண்கள் நாக்குப் புரளாத படியான பழிகளை எல்லாம் சொல்ல.
சிசுபாலன் முதலானார் வாயில் கேளாதவற்றை எல்லாம் என் வாயிலே கேட்க அன்றோ புகுகிறான்.
அன்றிக்கே,-2-அவர்கள் நா, மீளாமல் உருவப் பழி சொன்ன படியே இருக்கும் படியான பழிகளைத் தூற்ற என்றுமாம்.
அன்றிக்கே,-3-நாம் தங்களுக்கு அடங்காமல் மடல்கொண்டு புறப்பட்ட பழியைத் தூற்ற என்னலுமாம்.

சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும்-எல்லாம் அழிய அன்றோ புகுகின்றன;
நாராயணன் பரதத்வம் பர ஜோதிஸ் வாக்யங்கள் -அழிக்கப் பார்க்கிறாள் –அவனோடே கலந்த என் வார்த்தை ஒழிய, -அடி இல்லாத வேதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பர்களோ? பிரமேய சிரேஷ்டமானத்தை அழித்தேன், இனிப் பிரமாண சிரேஷ்டமானது தானே நில்லாதே அன்றோ.
ஆசைப் பட்டார்க்குப் பலம் இதுவான பின்பு இனி உபாசனத்துக்குப் பலம் இல்லை’ என்று கை வாங்கி நாஸ்திகராம்படி உலகினரனைவரையும் செய்கிறேன்.

நாடும் இரைக்க யாம் மடல் ஊர்ந்தும்–நாட்டார் சொல்லும் பழி தானே தாரகமே அன்றோ. “ஊரவர் கவ்வை எருவாக” என்றாளே,-அதிலே அன்றோ வேர் ஊன்றித் தரிப்பது.
அயல் தையலார்—நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே—அதுவே தாரகம்-

—————-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்
.–5-3-11-

இந்தத் திருவாய்மொழி கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே அவ் வெம்பெருமான் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான்-இரைக்கும் கருங்கடல் வண்ணன் – அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில் “‘வில்லைக் கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தாற் போலே யாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச் செய்தார்.

அவ் வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை. வடிவழகு இது. ஸ்வாபாவம் இது. இங்ஙனம் இருக்க-நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ?-இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது உண்டான பரிமளத்தால் –-சஞ்சாத பரிமளம் -நிறைவு பெற்றபடி.-மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.

நிரைக் கொள் அந்தாதி – இவர் முன்னடி தோற்றாதே மடல் ஊரச் செய்தேயும், பிரபந்தமானது, எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும்-பத்தும் பத்தாக — சேர விழுந்தபடி.
இவர் முன்னடி தோற்றாதபடி கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே, இலக்கணங்கள் ஒருசேர விழத் தட்டு இல்லையே அன்றோ.

தம் ஊர் எல்லாம் வைகுந்தமாகும் –-அவர்களுக்கு உத்தேசிய பூமி பரமபதமாம்.
அன்றிக்கே,-நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன்தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் என்னுதல்.-அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.-இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;-இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;
இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்—
——-43-இப்படி இவர் பிறரைத் திருத்தி-4-10-
அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி கை ஒழிந்த பின்பு-5-2-
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்று அவன் சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
பழைய தம் இழவு-ஏறாளும் இறையோன் இழவு- 4-8- தலை எடுத்து வழி அல்லா வழியில் இழிந்து
இரண்டு தலையையும் அழித்தாகிலும் அவனோடு கலக்கக் கடவோம் என்று ப்ராப்ய ருசி பாரவச்யத்தாலே முன்னாடி தோற்றாமல் கண் கலங்கிச் செல்லும் தம் தசா விசேஷத்தை
அவனோடு கலந்து பிரிந்துnஆற்றாமையாலே கண்ணான் சுழலை இட்டு நாடாகப் பழி சொல்லும்படி
அவனுக்கு அவத்யம் விளைவித்து என்று மடலூருகையில் ஒருப்பட்டு சொல்லுகிறாள்
ஒரு பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற மாசறு சோதி- யில் அர்த்தத்தை மாசறு சோதி கண்ணன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading