ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
கீழே மதி உடன் படுதல் துறை-ஸம்ஸ்லேஷம் நடக்க-இவருக்கு ஆர்த்தி விளைக்க பிரிவு என்ற துறை உண்டே -பொதுவாக வித்யா அப்யாசம்- பொருளீட்ட -காவலில் பொருட்டு -போர் செய்ய -இலக்கியம் உள்ளதை கதை சொல்வது போல் இவள் நெஞ்சில் உறைத்து வலிமைப்படுத்துவோம் என்று பார்க்க
அதுவே இவளுக்கு பிரிந்து விட்டாரோ என்று எண்ணி திருமேனி விகாரம் அடைய-கூடி இருக்கவே -ஐந்தாவது பிரிவு இது -கீழ் சொன்ன நான்கிலும் இல்லை-தலைமகன் வார்த்தையாய் இது இருக்கிறது
பெருமானே ஆழ்வாருடைய ஞான பக்தி வைராக்யங்களை கொண்டாடி பேசும் பாசுரம் இது –
கண்ணனுடைய ஸ்ரீ வைகுந்தத்துக்கு சமமானவளே -சம்போதகம்-பொருளின் பொருட்டு பிரிதல் உண்டு என்று பொதுவாக சொல்ல கடலுக்கு அக்கரை இருந்தால் போல் பிரிந்தனாக நினைத்து விகாரம்-கண்கள் -பக்தி ரூபா பன்ன ஞானம்-உபமானம் கெண்டைக்குலம் -முற்று உவமை மட்டும் உண்டு இதில் –ஞாலம் -உலகம் -உயர்ந்தோர் மாட்டே -அனைவரும் ஆசைப்படும் ஞானம்
அஸ்ரு பிந்து -ஒண் முத்து
மேனி வர்ணம் -பசலை நிறம்
மைய கண்ணாள் -சிவந்து இருக்க
பொருளுக்காகப் போக வேண்டாமே -இங்கேயே குண அனுபவமும் கைங்கர்யமும் ஆழ்வார் இடமே உள்ளது-குடக்கை -மெலிந்து குடங்கை -வளைந்த கை என்றவாறு-சிறாங்கை -என்றவாறு
ஞானம் அனுக்ரஹம் எட்டாக்கனி இல்லையே-ஆழ்வார் பாசுரம் ஒரே பாதம் போதுமே பூர்ண பகவத் ஞானம் பெற-கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே-இவை -இரண்டு கண்கள் -பன்மை -எண்ணிறந்த ஞானம் அன்றோ ஆழ்வாரது –
என்று பார்ஸ்வத்தில் உள்ளோர் கொண்டாடுகிறார்கள்-பக்தி ப்ரபாவத்தைக் கொண்டாடிய படி )
பொருள் வரிற் பிரிவேன் என்ற தலைமகன் இவள் கருத்தை அறிய சில சொல்லி பொருளுக்காகப் பிரிவர் பேச்சு வழக்கு என்னும் இடத்தை பிரசங்கிக்க ‘ இவர் தானும் பிரிய நினைக்கிறான் என்று அவன் பிரிந்தால் பிரிந்தார் படும் வியஸனத்தை அவன் முன்னே இவள் பட்டத்தைக் கண்டு
நான் உடன் இருக்கவே இப்படிப் படுவார்களோ என்ன ஆச்சார்யம் -விஷமி தான் ஆகிறான்
தலைமகனோடு கலந்து விஸ்லேஷம் அறியாத படி அதி மாத்ரமாய்ச் செல்லா நிற்க பொருள் அதிகாரத்தை ஒருவன் வந்து வாசிக்க அதைக் கேட்டு இருந்ததைக் கொண்டு –அப்ரதிஷித்த மநுமதம் பவதி -என்று பிரதிஷேதியாமையாலே அநு மதமாய் இருந்தது என்று கொண்டு இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே பிரிந்தான் என்று நினைத்து பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து செல்லுகிறது –
கீழ் எட்டாம் பாட்டில்
நாயகன் பொருள் சம்பாதிக்க தேசாந்தரம் செல்ல நினைத்து இருந்த படியை நாயகி
குறிப்பால் அறிந்து கூறி இருக்கிறாள்
அது நிற்க
பொருள் படைப்பதற்காக நாயகியைப் பிரிந்து போக வேணும் என்று எண்ணிய நாயகன் –
அவளோடு செல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும் -அல்லது தேசாந்தரம் போகப்போகிறேன் என்று
சடக்கென பிரிவைத் தெரிவித்தாலும் அவள் மரண பர்யந்தமான கஷ்டத்தை அடைந்திடுவாள் எனக்கருதி அவள் ஆற்றுமாறு கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி லோகாபிராம மாகப் பல பிரஸ்தாபங்கள் பண்ணும் அடைவிலே உலகத்திலே பொருள் ஸம்பாதிக்கப் பிரிந்து தேசாந்திரம் போகும் விஷயம் ஓன்று உண்டு என்று பொதுப்படையான ஒரு பிரஸ்தாபம் எடுத்துக்கூற அவள் அது கேட்டவுடன் -இப்போது இவர் இவ்விஷயம் பிரஸ்தாபித்தது வெறுமனே இல்லை – இது லோகாபிராம வார்த்தைகளிலே சேர்ந்தது அல்ல – நம்மைப் பிரிந்து போவதற்காகவே
இது அவதாரியை யாகவே வேணும் என்று கருதி பிரிவு உண்டானதாகவே நினைத்து வருந்தி பிரிவாற்றாமையால் உண்டான பசப்பு என்கிற நிற வேறுபாட்டை அடைந்து கண்ணும் கண்ண நீராய் இருக்க அதைக்கண்ட நாயகன் நாம் பிரிந்து போவதாகச் சொல்லாது இருக்கவும் வெறும் வார்த்தையாலே நம் உட்கருத்தைத் தெரிந்து கொண்ட இவள் நிலைமை இப்படி யாயிற்றே என்று ஆச்சர்யப்பட்டுத் தோழியை நோக்கிக் கூறொயது என்றாவது நெஞ்சை நோக்கிக் கூறியதாகவோ கொள்ள வேண்டும் –
இப்படி இவருடைய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டு பகவத் அனுபவ அர்த்தமாகவும்-(இசைவித்து உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே-நின் கண் வேட்க்கை ஏழுவிப்பேன்-அனுபவத்துக்கும் -உம்மை ப்ரீதி காரித கைங்கர்யத்துக்கும்-இவற்றை ருசி காற்றிய ஆழ்வார் அருளிச் செயல்கள் உண்டே )தேசாந்தரத்திலே பாகவத விஸ்லேஷம் பொறாத படியான இவருடைய ஞான வை லக்ஷண்யம் கண்ட அன்புடையார் சொன்ன பாசுரத்தை பொருள் வயிற் பிரியலுற்ற தலைமகன் பிரிவாற்றாத தலைமகள் வேறுபாடு கண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்–விலக்ஷண ஞானம் பாகவத ஸம்ஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம்-கண்ணபுரம் ஓன்று உடையோருக்கு வேறு ஒருவருக்கு உரியேனோ ஞானம் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -விலக்ஷண ஞானம் கேட்டு அல்லிக் கமலக் கண்ணன் ஆவான் அன்றோ–
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-இதன் விவரணம்
இது வரையில் நான் எத்தனையோ ஆச்சர்யங்கள் கண்டு இருக்கிறேன் -ஆனால் இன்று காணும் ஆச்சர்யம் என்றைக்கும் காண முடியாது என்று அடங்கா வியப்புத் தோற்ற பாசுரம் தொடங்கும் போதே
அரியன யாமின்று காண்கின்றன— இது போன்ற அதிசயம் முன்பு எங்கும் கண்டேன் இல்லையே -என்கிறான் மேல் முழுவதும் இந்த ஆச்சர்யத்தை விவரிக்கின்றான்-ஸாமான்யமாக உலக நிகழ்ச்சியை நான் பிரஸ்தாபித்த மாத்ரத்திலும் இவளோ தன்னையே குறித்துச் சொன்னதாக நினைத்து-அதுக்கும் மேலே தன்னைப் பிரிந்ததாக நினைத்து விலக்ஷணமான விகாரத்தை அடைந்து விட்டாளே-இதனின் மிக்கதோர் ஆச்சர்யம் உலகிலே உண்டோ என்கை –வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி-என்று –
ஆழ்வாருடைய ஞான விசேஷத்தையே –அரியன யாமின்று காண்கின்றன–என்கிறான்–
அரியன யாமின்று காண்கின்றன
லோகத்தில் சிலருக்கு கூடாதவை நாங்கள் காண்கிறோம்-அரியன-இவை சால அரியவாய் இருந்தன
ஸம்போக மத்யே பிரிவை நினைக்கை சால அரியது ஓன்று இறே-இப்பெரிய திருநாளிலே இது ஒரு திரு ஏகாதசி எங்கே தேடி எடுத்தி கோள் -என்று பட்டர் அருளிச் செய்தார்-நீ நினைத்த ஸாஹஸத்தை நாம் போய் அனுஷ்ட்டித்தாலும் கிடையாதது ஒன்றாய் இருந்ததே-இது சாலப் பெறுவதற்கு அரிதாய் இருந்ததீ-யாம்-உன்னாலே உன்மஸ்தக போகங்களையும் புக்கு அனுபவிக்கிற நான்-இன்று காண்கின்றன-நீ அதிசங்கை பண்ணுகிற இப்பிரிவுக்கு முன்பேயும் சில பிரிவுகள் உண்டு இறே
அவற்றிலும் கண்டிலோமீ இவை-இத்தை ஐந்தாம் பிரிவு என்னக் கடவது இறே-அநந்தரம் வார்த்தை இறே
அரியன –
ஒக்க இருக்கச் செய்தே-கண்ணும் கண்ண நீருமாய் இருந்தபடி என் -என்று கொண்டாடுகிறான் –
கலந்த காலத்திலும் பிரிந்த காலத்திலும் கண்டு அறியோம்-யாமின்று –கடலில் குளப்படியும் ஆயிரத்தில் ஒன்றும் உண்டானால் போலே-இவள் சம்ஸ்லேஷத்துக்கு உள்ளே எல்லாம் உண்டு என்று இருக்க –சில பெறுதற்கு அரியன இருந்த படி என் -என்கிறான் தலைமகன்–காண்கின்றன--ஓதல் -காவல் -பூசல் -பரத்தை மாட்டு -என்று சொல்லப் படுகிற(ஓதல் -ஸ்ருங்கார வித்யை கற்க-பரத்தை மாட்டு-வேசி ஸ்த்ரீகள் பக்கம் போக என்றும்-இவளது ஆனந்த சாகரத்தை மட்டுப்படுத்தி சாத்மிக்க-தன்னுடைய பரத்வ அங்கியை மாட்டிக் கொண்டு என்றுமாம் ) நாலு வகை யில் பிரிவிலும் -இது கண்டு அறியோம் -என்கிறான் –-இது ஐந்தாவது வகை பிரிவு கூடி இருக்கச் செய்தே பிரியுமோ என்று அதிசங்கை–
கண்ணன் விண்ணனையாய்
நச புன ஆவர்த்ததே -என்னும்படியே அத்தேசத்தில் புக்கார் புறப்படில் அன்றோ-உன்னைக் கிட்டினார் பிரிவது – அவிகாராய -என்ற தேசத்தை ஒத்து இருக்கிற உனக்கு இவ் விகாரங்கள் எல்லாம் என் –புறம்பே சிலரோடு கலந்தவர்கள்-ஒரோ ஹேதுக்களாலே பிரியக் கண்டு என்னையும் அங்கனே பிரிந்தாரோ என்று சங்கிக்கும் அளவிலே-அல்லாத விஷயங்களோபாதியோ நீ உன்னுடைய வீறு பாட்டைப் பாராய்--கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நிரதிசய போக்ய பூதை யானவளே
(கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )
கண்ணன் விண்ணனையாய்
ஒரு தேச விசேஷங்களிலே-ஸமஸ்த போகங்களையும் பெற்று புஜிக்கிறான் ஒருவன் ஒன்றேயாய்
அது தான் அகஞ்சுரிப்பட்டு மற்றவை இன்றிக்கே இருக்குமத்தை நினைக்கும் அன்று அன்றோ
உன்னோடே கூடினவன்று ஓர் இடத்தை நினைப்பது-தேவ தாவத் ஸர்வார்த்த ஸித்திஸ் ஸ்யாத் -என்கிறபடியே ஸ்வத யுண்டாயிற்று அது ஒரு நாளும் அழியக் கடவது அன்றிக்கே இருந்துள்ள அபஹத பாப்மத்வாதிகளை உடையவோடு ஓக்கத் தானும் அபஹத பாப்மத்வாதிகளைப் பெற்று அனுபவிக்கிறவன் இவற்றுக்குத் திரோதானம் பண்ணக் கடவதான ஸம்ஸாரத்தை ஸ்மரிக்குமோ
பெரியன காதம் பொருட்கோ பிரிவென–
பொருள் சம்பாதிக்க லோகத்தார் த்வீபாந்தரங்களுக்கு செல்லுகின்றனர் அன்றோ–ஓ -வினாவாகவும் கொள்ளலாம் -தெரி நிலையாகவும் கொள்ளலாம்-உலகில் காதலர் காதலிகளை விட்டுப் பிரிந்து த்வீபாந்தரங்களுக்குச் செல்வது பொருள் சம்பாதிக்கப் போவதா என்று இவள் இடம் கேட்பதாகவும் கொள்ளலாம்-அவர்கள் பொருள் படைக்கவே செல்கிறார்கள் என்று உலக நிகழ்வைத் சொன்னதாகவும் கொள்ளலாம்–அதி தூரங்களான காதங்களில் பொருளுக்காகவோ நினைத்தது
பெரியன காதம் பொருட்கோ பிரிவென –பிரிவு என ஒ பெரியன காதம் –பிரிவு என்ற மாத்ரத்திலே பிரிந்ததாய் நெடும் தூரமுமாய் நடுவே மலைகளும் கடல்களுமாய்-ஆளி இயக்கம் அற்று தூத ப்ரேஷணத்துக்கும் யோக்கியம் இன்றிக்கே இருந்தபடி –பெரியன காதம் பொருட்கோ பிரிவென
சிலரைச் சிலர் பொருளுக்குப் பிரியலாம் என்ற பேச்சு வர உனக்கும் எனக்கும் நூறு யோஜனை –
படா நின்றாய் -பொருளுக்காக நெடும் தூரம் பிரிவார்கள் என்றுமாம்–பொருட்கு –சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பாக பொருள்களுக்கு பிரியத் தேடினீர் ஆகில்-அவை இங்கே உண்டு -என்கிறது –
பெரியன காதம்
அஸங்கயேயமான காதமாகப் புக்கதாயிற்று-பிரிவைப் பிரசங்கித்தவாறே காதல் நெடிதாகப் புக்கது-பொருட்கோ பிரிவென-ஷூத்ர ப்ரயோஜனங்களுக்காகச் சிலரைச் சிலர் பிரிவார் காண் என்று இங்கனே சிலர் பிரசங்கித்தார்கள் போலே இவனும் அத்தைக் கேட்டான் போலே பொருள் அதிகாரத்தைக் கிழித்துப் பொகடப் போகாதே இவனால் போய்ப் படைக்கும் பெரும் பொருளை த்யாஜ்யம் என்று இருந்தானாகில்
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,-நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.-கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார்.
ஞாலம் எய்தற்குரியன ––
உலகம் முழுவதும் விலை யாகப் பெறுவதற்கு உரியவை என்றும்-உலகம் எல்லாம் ஆசைப்படுவதற்கு உரியவை என்றும்-ஸர்வ லோகத்தையும் தன் வசம் ஆக்கத் தக்கவையாய்-என்றுமாம்
ஞாலம் எய்தற்குரியன –
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு -என்கிறபடியே-விசேஞ்ஞர் ஆனவருக்கு அனுபவிக்கலாய் இருந்தபடி –உபய விபூதியும் விலை என்னலாம் படி இருந்தது -என்கை- ஒரு முகத்தாலே -நீர் தேடித் போகிறவை -இங்கே உண்டு -என்கிறாள் –முகத்திலே என்று த்வனி-ஞாலம் எய்தற்குரியன-உலகம் அடைய தனக்கு சேஷமாக்கும் படியான என்றும்-லோகம் எல்லாம் ஆசைப் படப்படுமவன என்றுமாம்-ஒரு முகத்தால் -பிரிய நினைந்த -பிரகாரத்தாலே வழியிலே அனைத்தும் இவள் திரு முகத்திலே உண்டே-ஞாலம் லீலா விபூதி-நித்ய விபூதி க்கு உப லக்ஷணம் )
(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- )
வொண் முத்தும் –ஆகாரத்தே பட்ட முத்தும் –பைம் பொன்னுமேந்தி –பசும் பொன்னாய் இருந்த படி-இவை உண்டாய் இருக்கப் போகையாவது என் என்று இவற்றைக் கைக் கொள்ளும் -என்று ஏந்தின படி –
வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
கலங்கின போது உண்டான ஆற்றாமையால் உண்டான விரஹ தாபத்தால் உண்டான கண்களில் சிகப்பும் -இது வந்தேறியான சிகப்பு அகவாயில் உள்வாயில் உள்ள சிகப்பையும் கண்ணீர் துளி வெளி வர -இவன் வெளிவர பத்தர் கூட்டத்தில் முக்தர் -முத்துச் சிப்பியில் முத்து போல் அழகியதாக இருக்கும் படி–பைம்பொன் –விரஹ சங்கையால் உண்டான வை வரண்யம் —ஆற்றாமையால் வந்த அஸ்ரு பிந்துக்களாகிய முத்துக்களையும் பயப்பாகிற அழகிய பொன்னையும் ஏந்தி—வொண் முத்தும் பைம் பொன்னு மேந்தி—கண்ணீர் பெருக்கு முத்து –-பசலை நிறம் பொன்–-ஆகு பெயர்
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் -கலியன்
ஊருண் கேணி யுண்டுறைத்தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே -குறுந்தொகை -399-தொட்ட இடங்கள் தோறும் பாசி நீங்கி விட்ட இடங்கள் தோறும் மீண்டும் பரவுதல் போல் கணவனது கை படும் இடங்களிலே பசலை நிறம் நீங்கி அணைத்த கை நெகிழ்த்தவாறே அப் பசலை நிறம் படரும் -என்றவாறே
ஒரோ குடங்கைப் –போக்தாவுக்குக் கண்களை சிறாங்கித்துப் பருகலாய் இருந்த படி –ஒரோ குடங்கைப்
பருகலாம் படி-பெரியன-இங்கனே இருந்து வைத்தும் பரம்பின கண்கள்–தனித் தனியே ஒரு சிறாங்கை போலே பெருத்து இருப்பன–அஸி தேஷிணா -மிளிரும் கண்கள் –அவ்வளவு ஞானம் இருந்தாலும் -எளிய பாசுரங்கள் கையாலே பருகலாம்-பெரியன- போக்தாவுக்கு பரிச்சேதிக்கலாம் அத்தனை தான் அவ்வருகாய் இருந்தபடி –கெண்டைக் குலம் –கெண்டை-மௌக்த்யமும் மதமதப்பும் இருந்தபடி –குலம் –ஜாதியாகக் கூடினால் ஒப்புப் போரும் இத்தனை –கெண்டைக் குலம்-1-குளிர்த்தியாலும்- 2-மிளிர்தலாலும்- 3-ஓடுதலாளாலும்-கெண்டையோடே சமமான குலம் என்னும்படி–இவை
இக் கண்களானவையோ
கெண்டைக் குலம்
முக்தமான நோக்கின்-ஞான பரம்பரை இருக்கும்படி
இவையோ வந்து பேர்கின்றவே –
அசலமான பதார்த்தம் சலித்த படி இக் கண்களைக் கண்டார் படும்பாட்டை கண் தான் பட்ட படி
வந்து பேர்கின்றவே -சேதன சமாதியாலே சொன்ன படி--வந்து பேர்கின்றவே-என் முன்னே வந்து உலவா நோன்றன- –இவையோ வந்து பேர்கின்றவே-இவற்றைக் கண்டாரை இப்படிப் படும் பாட்டை இவை படுவதே-இப்படும் பாட்டோடு ஸஞ்சரியா நின்றனவே-
கெண்டைக் குலம் இவையோ–கண்கள் சொல்லாமல் முற்று உவமை –ஓ -வியப்பிடைச் சொல்
பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து போவதைக் கூறத் தொடங்கின என் முன்-பரந்த கண்கள்
உலகையே விலை பெறத் தக்கவையாய்ச் சிறந்த முத்தையும் பொன்னையும் ஏந்தி வந்து எதிர் நின்று
நீ பொருட்களுக்கு பிரிந்து போக வேண்டுமோ இந்த பொன்னும் முத்தும் உனக்காக இங்கே இருக்க –குளிர்ச்சியாலும் மிளிர்ச்சியாலும் ஓடுதலாலும் மதமதப்பாலும் கண்கள் கெண்டை மீன் போலும்
கெண்டைக்குலம்-என்பதைக் குலக் கெண்டை என்று மாற்றி அமைத்து உயர்ந்த சாதிக் கெண்டை மீன் எனினுமாம்-–இப் பொருள்கள் உனக்கு உரியவையே காண் -என்று கூறுகின்றன போலும்
பிரிவை நினைத்த மாத்ரத்திலே கண்ணீரும் நிற வேறுபாடுமாய் இருந்த இருப்பும் புதியதாக
ஒரு முத்து அணியையும் பொன் அணியையும் அணிந்தால் போலே தனக்கு ஒரு அழகு விளைத்தது என்பது தோன்ற ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -என்றான் என்னவுமாம்
ஓ-இது என்ன ஆச்சர்யமோ-அரியன யாம் இன்று காண்கின்றன என்று அந்வயம்-இத்தால்-அரியன யாம் இன்று காண்கின்றன -என்று இவருடைய ஞான வை லக்ஷண்யம் ஓரு இடத்திலும் காண அரிது என்றபடி–மாதா பிதா -ஆளவந்தார்-ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம்-ஜகத் காரணம் ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமே-வாஸா -விவகாரத்துக்கு பரிணாமம் ரூபம் நாமம்-ஸர்வம் ப்ரஹ்மம்
நிர்ஹேதுக கிருபா விசேஷத்தாலே மதிநலம் அருளப்பெற்றவர் அன்றோ-
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-
கண்ணன் விண் -என்கையாலே-பரமபதமும் ஓர் மாயையினால் போந்த கிருஷ்ணனது என்றபடி-விண் அனையாய்-பரம வ்யோமம் போலே-1-அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்-2-அப்ராக்ருதத்வத்தையும்
3-ஆனந்தாவஹத்வத்தையும் -உடையவர் என்றபடி –-(எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் பக்த அம்ருதம் தொண்டர்க்கு அமுதம் அன்றோ )பெரியன காதம் பொருட்கோ பிரிவென -என்று புருஷார்த்த ஸித்த்யர்த்தமாக தேசாந்தர கமனம் பண்ண வேணுமோ என்றபடி–ஞாலம் எய்தற் குரியன-என்கையாலே-ஸமஸ்த விபூதியையும் விளாக்குலை கொள்ளும்படியாய் இருக்கை
(சூழ்ந்து அதனில் பெரிய அவா அன்றோ இவரது )வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி -என்கையாலே விலக்ஷணமான நித்ய முக்த்தாகாரத்தையும் ஹிரண்மயமான ஈஸ்வர விக்ரஹத்தையும் தன்னுள்ளே பிரகாஸிப்பிக்கை–(சர்வஞ்ஞத்வமும் இவருக்கு உண்டு என்றபடி
கண்ணுள்ளானே இவனும் அனைவரும் பிரதிபலிப்பார்களே )
ஒரோ குடங்கைப் பெரியன -என்கையாலே-ஏவம்விதமான மஹாத்ம்யத்தை யுடைத்ததே யாகிலும்
அன்பர்களுக்கு சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி இருக்கை–கெண்டைக் குலம் -என்கையாலே
ஸ்ரீ நாயனாபமாய் பிரளய ஆபத் சஹமான பிரதம அவதாரத்திலே அவஹாகித்தமை தோற்றி இருக்கை-இவை-என்கையாலே-ஞானத்தை அபரோஷித்து அனுபவிக்கலாம் படி இருக்கை-வந்து -என்று-ஆசையுடையோர் சென்று அனுபவிக்கை அன்றிக்கே-தானே வந்து-ஆசையையும் அவர்களுக்கு உண்டாக்கும் என்கை–பேர்கின்றவே-என்று அதற்கு அடியான பரம்புதலை ஸ்வ பாவமாக யுடைத்தாய் இருக்கும் என்றபடி–இவ் விடத்து-இவையோ பேர்கின்றவே என்று பன்மை ஞானத்தின் வ்ருத்தி பேதத்தை நினைக்கிறது–இப்படி அன்புடையவரான பாகவதருடைய ஸ்லாகா வசனத்தை வெளியிட்டு அருளினார் ஆயிற்று –
ஸ்வா பதேசம் –
இத்தால்-ஆழ்வாருக்கு வைஷ்ணவர்களோடே (கிளைவித் தலைமகன் இங்கு ) கூடி இருக்கச் செய்தே
பிரிவை அதிசங்கை பண்ணி நோவு படும்படி பிரிவு பொறாமை -இருந்தபடி –பிரிவு என்று ஓன்று உண்டு என்னும் அளவில்-பிரிவு உண்டாய்த்து என்று வெருவும்படியான தமக்கு யாரோ சிலர் திருக்கண்ண புரம் சென்றார் என்ற பிரசங்கத்தில்-திருமேனி மாறி கண்கள் சிவந்து கண்ணநீர் முத்து அரும்ப ஆழ்வாருக்கு உண்டான பாகவத விஸ்லேஷ அஸஹத்வத்தைச் சொல்லிற்று–
ஆழ்வாரைப் பிரிந்து திவ்ய தேசம் போகக் கருதிய ஸ்ரீ பாகவதர்கள் தமது பிரிவைப் பொறுக்க மாட்டாத படியான அவருடைய ஞான விசேஷத்தைக் கண்டு கூறுதலாம்—அரியன நாம் இன்று காண்கின்றன
இவருடைய ஞான விசேஷம் வேறு எவ்விடத்திலும் காண முடியாது–கண்ணன் விண்ணனையாய்-
எம்பெருமானுடைய பரமபதம் போல் ஆழ்வாருடைய மகிமையும் பேரின்பமும் பிரகிருதி சம்பந்தம் இல்லாமையும் – என்றும் வேறுபாடு இல்லாத தன்மையும்-ஆழ்வாரை விளித்த படி—பெரியன காதம் பொருட்கோ பிரிவென- பரம் பொருளான எம்பெருமானை சேவிக்க நீண்ட தூரம் போவதை – திவ்ய தேச யாத்ரா பிரஸ்தாபம் செய்த அளவிலே—ஞாலம் எய்தற்குரியன –எல்லா உலகங்களையும் வேண்டிய வேண்டியவாறு பெறுகைக்கு உரியவையும்-அல்லது-உலகத்தாரை எல்லாம் வசப்படுத்த வல்லவையும்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே-விசேஷ ஞானமுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாம் அனுபவிக்கத் தக்கவை என்றுமாம் –அனைத்து லோகார்த்தார் பெற வேண்டிய புருஷார்த்தங்களும் அனைவரையும் வசப்படுத்தும் திறமையும் ஆழ்வாருக்கு உண்டே–ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -எம்பெருமான் உடைய சுத்த சத்வ மயமும் ஒளி மயமான தேஜஸ் கொண்ட ஆழ்வார் –ஒரோ குடங்கைப் பெரியன-கைகளால் ஏந்தி பருகும் படி ஸுலப்யமும் இங்கே உண்டே –அன்றிக்கே-கைக்கு வசப்பட்டவர் –என்றுமாம்–கெண்டைக் குலம் இவையோ-எம்பெருமானுடைய மத்ஸ்யாவதாரத்தில் ஈடுபட்டு தன் மயம் ஆனவர் –ஆழ்வார் உடைய ஞான விசேஷங்கள் பரவி வந்து ஆசையை மூட்டுகின்றன –இவையோ வந்து-பேர்கின்றவே-இவை ஆழ்வாரது ஞானத்து வகைகள்-பரவி வந்து -பிரிய ஒண்ணாத படி ஆசையை மூட்டுகின்றன–ஓ இவை என்ன வியப்பு – ஸ்ரீ வைஷ்ணவர்கள் பிரிவு தமக்கு ஏற்பட்டு விடுமோ என்று அதிசங்கை பண்ணி ஆழ்வார் உடைய ஆற்றாமை விசேஷம் இருந்தவாறே –
தாத்பர்யம்-இப்பாசுரத்தில் பாகவத விஸ்லேஷம் ஒரு ஷணமும் பிரியாமையை ஸஹியாத ஆழ்வாரைக்
கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனம் அர்த்தமாக பிரிந்த நாயகனைக் கண்ட நாயகியின் அவஸ்தையைக் கண்டு உரைத்த நாயகன் பாசுரமாய் இருக்கிறது–அத்யந்த போக்யமாய் உள்ள ஓ நாயகியே-நான் இன்றைக்கு ஒருநாளும் காணாத அத்புதம் கண்டேன் சிலர் என்னிடத்தில் பொருளின் பொருட்டு பிரிவதைச் சொல்ல நான் அவர்களை நிஷேதியாமல் இருக்க நானும் பிரிந்தேன் என்று எண்ணி அவ்வளவிலேயே நெடுதூரம் பிரிந்த நாயகி போல் படுகிறாய் நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன் உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல் நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே இது என்ன ஆச்சர்யம்
6-6-மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-ப்ரவேஸம்-
மேல் திருவாய்மொழியிலே இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க் கிடக்க,
அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க,
இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார்
இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிற படியைக் கண்டு, –
அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள்.
ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள்–ராஜ தானி -பட்டணம் -பேட்டை – வேவப் புக்கால்,
‘ஒரு மாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப் போலே.
மேல் திருவாய்மொழியிலே பெறாத நிலைமையாய், ‘கிடையாது’ என்றாலும் விடமாட்டாதபடி
தம்முடைய மனம் வாக்குக் காயங்கள் அவ்விஷயத்திலே மிக்க ஈடுபாடு உண்டானபடி சொல்லிற்று;
இதில், அந்த அலாபத்தால் வந்த பரவசப்பட்ட தன்மையைச் சொல்லுகிறது.-
பரனான சர்வேஸ்வரனுக்கு வசப்பட்டு -விஸ்லேஷ பதிகங்கள் இரண்டும் –
“நெடுமால் என்றே கூவுமால்” என்று தன்னுடைய வியாமோகத்தைக் காட்டியாயிற்று
இவளை இப்படி விளைத்தது;
பெரியவன் தாழ நின்றால் பொறுக்கலாய் இராதன்றோ.
“பெருமாளால் அபயம் கொடுக்கப் பட்ட போது, இராவணன் தம்பியும் மஹா புத்திசாலியுமான விபீஷணன்
பூமியைப் பார்த்துக் கொண்டு வணங்கினான்” –
ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-என்று
இவன் தறைப்படும்படி யன்றோ அவனுடைய வியாமோகம் இருப்பது.-
உருகினான் இவன் பருகினார் பெருமாள் -(கண்களால் பருகினான் )
கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன் கல்லும்
மரங்களு முருக நோக்கும் காதலான் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும் இரு நிலத் திறைஞ்சு கின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்.–என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக்கலப். 140.
த்வரை அநு குணமான -அனுபவ அலாபத்தால் -ஆற்றாமை முறுகி -கீழ்ச் சொன்ன தசையும் கலங்கி –
(சம்பந்த ஞானமும் – இது பொதுவாக பிராப்ய த்வரையை தூண்டி விடும்-அத்யவசாயமும் உறுதிப் படுத்தும் – –
இங்கு இவளுக்கு -ஆற்றாமை விஞ்சி- இத்தனை சம்பந்தமும் இருக்க
கைக் கொள்ளாமல் இருப்பதா என்று தோழியும் மயங்கி )
சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உடலாய் இன்றிக்கே –
இத்தனை சம்பந்தம் இருக்க துடிக்க விட்டானே -என்று -இருக்குமே
உபாய அத்யாவசாயம் நிமிர்ந்து -தோழியும் தலை மகளும் மயங்கி இருக்க –
நமஸ் சப்தம் தானே -வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்யமாம் பதமே தாயார் –
தன்னடையே-ஆத்மாத்மீயங்கள் விலகிப் போவதை கண்டு -தடுக்க முடியாதே -இவள் தாய் வசம் இல்லையே –
பரன் வசம் அன்றோ -புலம்பத் தான் முடியும் –
ப்ராப்ய அலாபத்தாலே தன்னடையே போவதைத் தடுக்க முடியாமல் பரவசப்பட்டுப் புலம்புகிறாள்
ஏறாளும் இறையோனில் -வேண்டாம் என்றாரே —
ஆழ்வார் விரும்பியதை செய்து தலைக் கட்டுபவன் நெடு மால் அன்றோ –
ஆறாம் திருவாய் மொழியில் இப்படி கரண த்ரயத்தாலும் பகவத் விஷயத்திலே ப்ரவணரான இவர் ப்ராவண்ய ஜனகனான
அவனுடைய ஆஸ்ரித வ்யாமோஹ பிரகாசகமான ஆகார விசேஷங்களையும்
அவர்களுக்கு போக்யமான ஆயுயாதி பூர்த்தியையும்
ரக்ஷண பிரகாரத்தையும்
ஸர்வ பிரகார ரஷக உபகாரத்வ அதிசயத்தையும்
பிரமாண பிரசாநாதி ரக்ஷண பிரகாரத்தையும்
ஆ கர்ஷகமான அவயவ சோபையையும்
அவயவ சோபையோடே கூடின ஆபரண சோபையையும்
விரோதி நிரசன ஸ்வ பாவத்தையும்
அபேக்ஷித சித்தியால் வந்த அத்யந்த உச்சாயத்தையும்
சேஷத்வ போக்யத்வாதி யுக்தமான சர்வாத்ம பாவத்தையும்
அநு சந்தித்து -ஏவம் பூத ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த நிரவாதிக ப்ராவண்ய க்ருதமான
பாரவஸ்ய அதிசயத்தாலே ஆத்மீய பதார்த்தங்கள் எல்லாம் அவன்கிட்ட வழக்காம்படி அவற்றில் ஸ்வாம்ய நிவ்ருத்தி
தமக்குப் பிறந்தபடியைக் கண்ட பரிவார் வித்தராய்ச் சொன்ன பாசுரத்தை
நாயகன் பிரிவாற்றாத நாயகியினுடைய ஆபரண சோபையோடு ஆபி ரூப்பியத்தோடு ஆத்ம குணத்தோடு வாசியற
அழிந்து வருகிற படியைக் கண்ட செவிலி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-
‘மாலுக்கு’ என்று தொடங்கி,-தன் மகள் மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்;
இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று. —
1-வ்யாமோஹம் குணம் -2-சேஷ்டிதம்–3-விக்ரகம் -4-கண் அழகிலும் அகப்பட்டபடி –
வையம் அளந்த மணாளற்கு –உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம்.
“அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக் கொண்டான் அன்றோ.-அச் செயலுக்கு எழுதிக் கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ;அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள்.-உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே.
இவள் மயிர் முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழி நீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்!-பங்களப் படை கொண்டு, தனி வீரம் செய்வாரை அழிக்குமாறு போலே–இழந்தது சங்கே –-இவள் மயிர் முடி கண்டு அவன் இழக்கக் கடவதனை இவள் இழந்தாள்.
———–
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-
இவளுடைய ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்?
கைக்கு மேல் ஐந்துங் காட்டிக் காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று.-கையிலே ஒன்றனைத் தரித்துக் காட்டிக் கவர்ச்சி செய்ய வேண்டி இருந்ததோ?
ஸ்மிதம் -புன் சிரிப்பும் நோக்கும் அமையாதோ நலிகைக்கு?-திரு முடியிலே யுடையவனுக்கு.
வைத்த வளையத்தைக் காட்டிக் காணும் இவள் நிறத்தை அபகரித்தது.-ஆக, ஆபரண சோபை, அவயவ சோபை, ஒப்பனை அழகு என எத்தனை செய்ய வேணும்
இவள் நிறத்தினைக் கொள்ளுகைக்கு –என் மங்கை – தன் பருவத்தாலே இவற்றை யடையத் தோற்பிக்குமவள் கண்டீர் நிறம் இழந்தாள்!-
————–
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச்சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்குஎன்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-
சிறுக் கள்வனவர்க்கு –-வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி.
தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும்
காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.
அவன் கைப் பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையரா யன்றோ இருப்பது.
ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க் கரையிலே நின்று
ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியா நிற்கும்.
————
பீடுடை நான்முகனைப்படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-
மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்;-‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல்.-
‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள்.
1-அடியிலே உலகத்தை உண்டாக்கி,
2-அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு,
3-அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழி தொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி
இவள் நீர்மையைக் கவர்ந்தான்.-
—————-
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-
பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கையாலும்,
வேதங்களிலேயே அறியப் படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக் காட்டிலும் மேலானவனுக்கு.-அறிவு இழந்தாருக்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான்.
மேற்பாசுரத்தில், “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்பதனையும்,
இப்பாசுரத்தில் “யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை”என்பதனையும் சொல்லுகிறது என்று அருளிச் செய்வர்
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு மண்புரை வையம் இடந்த வராகற்கு-மண்ணோடு விண்ணோடு வாசி அறத் தன் முகத்தால் ரக்ஷித்தபடி. –
மண்ணை –மண்ணோர் களை திரு வயிற்றில் வைத்து ரஷித்து
விண்ணை -விண்ணோர் களை -ஹம்சாதி முகேன ரஷித்து
பிறருடைய ஸ்வரூப சித்திக்காகத் தன்னை அழிய மாறுமவன்.
அழிவுக்கு இட்ட வடிவுக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி யன்றோ இருப்பது.-
இழந்தது கற்பே –-எல்லார்க்கும் ஞானத்தைக் கொடுக்கக் கூடியவனான அவனுக்குங்கூட அறிவினைக் கொடுக்கும்-இவள் கண்டீர் அறிவினை இழந்தது!
————–
கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்குஎன்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-
தன் அவயவங்களைக் காட்டி இவளுடைய அவயவியைக் கொண்டான்-என் வில் புருவம் கொடி –வில் போலே இருக்கிற என்பெண்.-பிரஹ்மாஸ்திரத்தைக் கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது!
————–
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-
நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை இயல்பாகவுடையவனைப் படுக்கையாக வுடையவனாய்,-அதிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனுக்கு:
இதுவும் ஓர் ஆபரண விசேடம் போலே காணும்; அநந்த முகமான ஆபரணம் அன்றோ.
மேலே கூறிய ஒப்பனை நிறம் பெறும்படியான படுக்கை அன்றோ.திருமேனிக்குப் பரபாகமான சிவப்பை யுடைய திருக் கைகளையும், திருவடிகளை யுமுடையவனாய்
உபகார சீலனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு. திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியாலே யாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை பூர்ணமாயின.
என் தையல் இழந்தது தன்னுடைச் சாய் – என் பெண் பிள்ளை இழந்தது, மாணிக்கத்தின் ஒளி போலே தனக்கு நிறங்கொடுக்கும் லாவண்யத்தை.-கழற்றிப் பூணும் ஆபரணத்தைக் காட்டிக் கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான்.-தையல் – பெண். சாய் – லாவண்யம்.-
———–
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கு வில்லை முறித்தல் போலே, இந்தச் செயலினைக் காட்டியாயிற்று-இவளைத் தனக்கே உரியவளாக்கியது.–அங்கு கை வண்ணம் இங்கு கால் வண்ணம் -இவள் தாசர் -அவள் பட்ட மகிஷி –
என் வாசக் குழலி – இயற்கையிலேயே வாசனை பொருந்திய குழலையுடைய என் பெண் பிள்ளை. -வாசனையே ஸ்வரூப நிரூபகம் —-அவனை, “சர்வ கந்தா:” என்று சொல்லுகைக்கு அடி இத்தலையை இட்டு.-வாசஞ்செய் பூங்குழலாள் அன்றோ.-இது திருவாய்மொழி,- 10. 10 : 2.–இழந்தது மாண்பே- தன் ஆண் தன்மைக்குரிய செயல்களை எல்லாம் காட்டி, இவளுடைய பெண் தன்மையைக் கொண்டான்.-மாண்பு-மாட்சிமை; பெண்தன்மை. மாண்பு என்பதற்கு, அழகு என்றும் சொல்லுவர்.-கிருஷ்ணன் விரோதி நிரசனதுக்கு தோற்று தன்னுடைய ஸ்த்ரீத்வம் இழந்தாள்-
—————
மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-
என் பூண் புனை மென்முலை –-ஆபரணத்தாலே அலங்கரிக்கப்பட்டனவாய் விரகத்தைப் பொறுக்கும் அளவில்லாத மெல்லிய முலைகளையுடையவள்.–தோற்றது பொற்பே –-“பூண் புனை மென் முலை” என்கையாலே, ஒப்பனையால் வந்த அழகினை இழந்தாள் என்கிறாள்.-பொற்பு – அழகு.-“மலராள் தனத்துள்ளான்”-மூன்றாந் திருவந். 3.- என்கிறபடியே,-அவனைத் தன் மார்பு அழகாலே புறம்பு ஒன்று அறியாதபடி பண்ணி அநுபவிக்குமவள் கண்டீர் தோற்றாள் –
————-
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-
பரத்துவம் என்ன, அவதாரம் என்ன, உலகமே உருவமாயிருக்கும் தன்மை என்ன இவற்றை யடங்கக் காட்டி-இவள் உடைமை எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள்.-இழந்தது கட்டே –தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான். கட்டு – முழுதும்.-கட்டு’ என்று மரியாதையாய், உலக மரியாதையை இழந்தாள் என்றுமாம்-
———-
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண்பாரே.–5-6-11-
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க வல்லவர்கள் நித்திய ஸூரிகள்
அநுபவிக்கின்ற இன்பத்தினை அநுபவிப்பார்கள்
நல் வேங்கடம் –சேஷ சேஷிகள் இருவர்க்கும் உத்தேஸ்யமான திருமலை.
(கைங்கர்யம் செய்ய ஏகாந்தமான தேசம் சேஷ பூதனுக்கு உத்தேச்யம்
இவனுக்கு அடிமை கொள்ள அவனுக்கும் உத்தேச்யம் )-இவள் வர்ணம் அவன் இடம் சேர்ந்து –நீல கரு நிற மேக நியாற்கு -நிறம் கரியான் மாறிற்றே –-அனைத்தும் -அவனுக்கு கொடுப்பதாக உணர்த்தியில் சொல்லியதாக இருந்தாலும் மயக்க நிலையில் –
இவள் ஆசைப்பட்ட படியே தானே நடக்கும் -இவள் இழந்தது எல்லாம் அவன் இடம் தானே-
கட்டு எழில் தென் குருகூர்--அரணை யுடைய திருநகரி.-கட்டு-அரண்.
கட்டு எழில் ஆயிரம் –-அழகிய தொடைகளை யுடைத்தாயிருக்கை.-கட்டு-தொடை.
கட்டு எழில் வானவர் –-கட்டடங்க நல்லவரான நித்திய ஸூரிகள்.
அன்றிக்கே,-‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேடணமாகவுமாம். என்றது,-சம்சாரத்தில் போகங்கள் கர்மங் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலை யற்றவையாய் இருக்கும் அன்றோ.-இது, ஸ்வரூபத்துக்குத் தக்கது ஆகையாலே நிறைந்ததாய் நித்தியமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,-நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு, ஸாகல்ய பரமாய் -முழுதும்- என்றே பொருள் கோடலுமாம்.
நீர்மைக்கு எல்லையான திருமலை பற்றுதற்குரிய தலம்;
மேன்மைக்கு எல்லையான பரமபதம் அநுபவத்திற்குரிய தலம்.
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.
அசித் அவி விசேஷணம் துர் விவேகமாய் இருக்கும் நம்மை –உஜ்ஜீவிப்பைக்காக –-சரீர பிரவேசம் -ஆகாமைக்காக -கருக் குழியில் புகா வண்ணம்-காத்து அருள அவசர ப்ரதீஷனாய் நின்றபடி-
மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-என்கிறபடி மிகவும் அவசன்னராய் அத்தாலே மோஹித்துக் கிடக்க-ஏறாளும் இறையோனில் -4-8-தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –இப்படி அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய – நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –ஒவாத ஊணாக உண் -பெரிய திருவந்தாதி -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply