ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
மதி உடன் படுத்தம் துறை
தலைமகன் -தான் அவள் இடம் பெரும் விருப்பம்கொண்டவன் என்று அவள் மனதில் திண்ணமாக உரைக்கிறான்-அகத்துறையில் தோழி இடம் சொல்லி அவளைத் தலைமகள் இடம் சொல்வதாக தமிழ் மரபு என்றபடி யாகவும்-வட திருவேங்கட நாட -இருப்பிடமாகக் கொண்ட தோழிகள்-வல்லி கொடிகாள் -பலர் உண்டே-விபீஷணன் எல்லா முதலிகள் இடம் சொன்னது போல் அனைவர் இடமும் சொல்கிறான் தலைமகள்-மாயோன் -பரிபாடல்-சங்கத்தமிழ் பழைமை -இதே வாசனை யுடன் இங்கு அருளிச் செய்கிறான்-நானும் கிளி கூட உங்கள் வாயைப் பார்த்து வெட்கப்பட்டு ஈடுபடுகிறோம்
ஆயோ -வார்த்தை கேட்டு ஈடுபட்ட படி-தொண்டைப்பழம் போல் சிவந்து
அறையோ –வெற்றி -நாவல் -தெரிந்து கொள்ள இயலாமைக்கு -வெற்றி என்றபடி
தலைமகள் தோழி மாரும் தானுமாய் புனத்திலே இருக்க தலைமகன் சென்று-இரண்டாம் காட்சி யாகையாலே தன் ஆசையை ஆவிஷ்கரிக்கிறான் –தடாவிய அன்பும் -கீழே பார்த்தோம் முதல் காட்சி
தொட்டும் தொடாமல் கலந்து போனது -மதியுடன் படுத்தல் தோழிக்கு உரித்து -என்னும் பஷத்தில்
அவள் முகத்தை நோக்கிச் சொன்னான் -ஆகவுமாம் -புனம் நோக்கி தலைமகளும் தோழிகளும் இருக்க
அங்கு சென்று அவர்களை சில வார்த்தைகள் கேட்டு அங்கு பதில் இல்லாமல் -தன்னைக் குறித்து மறு மாற்றம் பெறாமல் ஒழிய இவளது சவுந்தர்யாதிகளில் நலிந்து தான் ஈடுபட்டு இருப்பதை அறிவிக்க
இவள் அந்நிய பரராய் இருக்க குருவி நெல்லை சாப்பிடாமல் இருக்க -ஓட்ட- ஆயோ -என்கிறார்கள் –
நேராகப் பேசாமல் இருக்க தோழிமார் இடம் தலைமகன் சொல்லும் வார்த்தை–
இதிலே தானே அறிவிக்கை முக்யம்-தோழி அறிவிக்கை கௌணம்-மதியுடன் படுத்தல் தோழிக்கும் உரித்து என்றது அத்தனை-அன்றிக்கே-தோழிமார் இல்லையாகில் பந்து வர்க்கத்தை இட்டு அறிவிக்கையுமாம் –
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் –
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
ஆச்சர்யமான பூதனான வடக்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திருமலையில் வல்லி போன்றவர்களே-அற்புதனான எம்பெருமான் லோக ஸம் ரக்ஷண அர்த்தமாக பரமபதத்தை விட்டு திருமலையில் வந்து நிற்கிற நீர்மையை நாடுகின்றவரும் கொடி போல் பாரதந்தர்ய ஸ்வரூபம் யுடைய ஆழ்வாரே -என்று விளித்த படி பஹு வசனம் கௌரவம் தோற்ற
பரமபதத்தில் வாங் மானசங்களுக்கு அபூமியாம் படி இருக்கிற இருப்பை-மாயோன் -என்னுதல்
அன்றிக்கே
பரமபதத்தை விட்டு-கானமும் வானரமும் வேடுவர்களுமான (நான்முகன் -47 )-திருமலையில் நிற்கிற நிலையில் அனுசந்தித்து அந்த ஆச்சர்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்-ஒருவன் விபூதியில் இல்லாத ஆச்சர்யம் இல்லை யாகாதே–வட திருவேங்கட நாட–தனக்குக் கலவிருக்கையான பரமபதத்தை விட்டு சம்சாரிகளுடைய –
மாயோன் –
இந்த ஆச்சர்ய மான பதார்த்தங்களை உடையான் ஆவதே –-பரமபதத்தை இருப்பிடமாக உடையவன் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -நான் முகன் திருவந்தாதி -47-என்னும்படி இங்கே வந்து நின்ற நீர்மையில் ஏற்றம் என்றபடி-வட திருவேங்கட நாட – திருமலைக்கு அவ்வருகு நாடு இல்லை -என்று இருக்கிறார் –ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் பாடல் நடையாடும் இடங்களே நாடு -தேசம் என்று இருக்கிறார்-வல்லிக் கொடிகாள் –வல்லி –என்றது – ஆணறுத்து –ஆண் நாறிற்று -என்றபடி ஸ்த்ரீத்வத்தின் அதிசயத்தை சொல்லுகிறது–கொடிகாள் -என்றது உபக்நத்திலே அணைந்து நிற்க வேண்டி இருக்கிறபடி-பதி சம்யோக ஸூலபம் -இத்யாதி-கொள் கொம்பு ஒன்றாய்-கொடி பலவாய் இருக்கிறபடி –வல்லி என்றாலும் கொடி என்றாலும் ஒன்றே -வல்லி – உவமைச் சொல் –
கொடி -பெயர் மாத்ரமாய் பெண்டிரைக் குறிக்கும்-தோழிகளை கொடி என்பது நாயகி நாயகனை கூட உதவும் தன்மை கொண்டவர்கள் என்பதால்–இங்குக் கொடி என்று-கொடிச்சியாய் குற மகள் ஆகவுமாம்
போக்ய பூதன் வர்த்திக்கிற போக ஸ்தானமான திருமலையிலே மானஸ அனுபவம் நடந்து அத்தாலே பாரவஸ்யம் பிறந்து இருக்கிற நீர் என்றதாயிற்று–நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் -என்று
உம்முடைய பக்கல் ப்ராவண்யத்தாலே எங்களுக்கு உண்டான ஈடுபாடு விண்ணப்பம் செய்தாலும்
அனுபவ பாரவஸ்யத்தாலே திரு உள்ளம் போற்றுகிறது இல்லை –
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
ஆர்த்தியை நானே அறிவிக்கிலும் கேளாமல் உள்ளீர்-ஸர்வேஸ்வரன் நியாமகன் என்று அறிந்தும் பேசாமலும் கேட்க்காமலும் உள்ளீர்களே-எனது ஆற்றாமையே நானே சொல்லிக் கொள்ளும்படி உள்ளதே-
நோயோ –முடியவும் ஒட்டாதே -ஜீவிக்கவும் ஒட்டாதே இருக்கிறபடி –நோயோ யுரைக்கிலும் ஒ கேட்கின்றிலீர்-என்றும் நோய் கொள்வேனும் நானேயாய் வருவானும் நானேயாய் சொல்லுவேனும் நானேயாய் யானாலும் கேட்கை அரிதாக வேணுமோ – அனுஷ்டானம் வேண்டா -கேட்கவே அமையும்–உரையீர் – கேளாதவர்களைச் சொல்லீர் என்றது -ஆசையின் மிகுதி இருந்தபடி –ஓ என்று-ஈடு பாடு தோற்றுவித்த அசைச் சொல் உங்கள் ஸந்நிதி எனக்கு ஈடுபாட்டை விளைத்த படி
நோய் அறிந்தீர் ஆகில் நாங்கள் இனிச் சொல்லுவது என் என்ன-நோய் கொண்டமை அறிந்தேன் அத்தனை-நோய்க்கு நிதானம் அறிந்திலேன் –
நுமது வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—
வாயா -சொல்லிலே தோற்கும் படி-நானும் கிளியும் லஜ்ஜிக்கும் படி சிவந்த தொண்டைப்பழம் போன்ற வாய் ஆயோ என்ற சொல்லோ–அதரம் மாத்ரமோ-அறிய அரியதாய் உள்ளதே–அடும் -துன்பப் படுத்துகிறதே-
நுமது வாயோ –
உம்முடைய முக விகாசமோ –
அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ –
அதில் ஏக தேசமான ஆயோ என்கிற சொல்லோ –-(வாயில் ஏக தேசத்தாலே வந்த சொல்லே ஆயோ) –கிளியும் எள்கும் –இவள் சொல்லைக் கேட்டு சப்த க்ரஹணத்தாலே புறம்புள்ளத்தை
விட்டுக் கிடக்கிறபடி –எள்குதல் -ஈடுபடுதல் -என்ற போது- இச் சொல்லைக் கேட்டு துவண்டு கிடக்கிற படி –வல் வினையேனும் – அவற்றைப் போல் அன்றியே சப்த க்ரஹணத்தாலும் ரூப கிரஹணத்தாலும்
ஈடுபட்ட படி –கால் தாழ்ந்து நோவு படுகைக்கு ஈடான வலிய பாபத்தை யுடையேனான நானும்
உங்கள் புனத்திலே போகம் படிந்து உண்ணும் கிளியும் சிதிலராம்படி ஆய விடுகிற மிடற்று ஓசையோ–உமது திரு முக மண்டலமும் திருவாய் மொழியும் -திருவாய் இதழ்களும் -தனித்தனியே வருத்தம் செய்பவன-இன்னது என்று பகுத்து அறிய கொள்ளோம் நீரே அருளிச் செய்ய வேணும் -என்கிறார்கள் –
இவ்விடத்தில் வினை என்பது-பாவ பந்தத்தை–கிளியும் –என்று பசுஞ்சாம நிறத்தாலும் அவ்வதரத்தில் பழுப்பாலும் வசன மாதுர்யத்தாலும் போக்ய பூதனான ஈஸ்வரனை ஸூசிப்பிக்கிறது-எள்கும்-என்று
ஈசேஸிதவ்ய விபாகம் அற இவர் பாசுரத்தில் ஈடுபட்டமை தோற்றிற்று–தொண்டர்க்கு அமுது உண்ண அன்றோ சொன்னார் அவனும் தென்னா தென்னா என்று ஈடுபடும் படி அன்றோ இவர் திவ்ய பிரபந்தங்கள் —ஆயோ -என்று வ்யவஹார ரூபமான ஸப்த வ்ருத்தியோ -என்றபடி-தொண்டையோ -என்று தாத் காலிகமான அதர ஸ்புரணமோ -என்றபடி-அடும்-என்கையாலே இவை தனித்தனியே சைதில்ய ஜனகம் என்றபடி-அறையோ விதறிவரிதே—என்கையாலே வேறே ஆராலே இத்தை விவேகித்து அறியலாம் என்றபடி-உரையீர் –என்று-நீர் தாமே இத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ய வேண்டும் என்று அந்வயம் –
அடும் தொண்டையோ –
அதரமோ-அடும்–முடிக்கிறபடி உண்டாய் இருந்தது –அறையோ விதறிவரிதே –இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்-அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ –நாவலோ நாவல் -என்றால் போலே –
இத்தால் –
ஆழ்வார் உடைய ஆத்மா குணங்களோடு தேக குணங்களோடு அவற்றில் ஏக தேசத்தோடு
வாசி அற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –வேங்கட வல்லிக் கொடிகாள் -என்கையாலே–திவ்ய தேச வாசமும்–சம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்–விஸ்லேஷத்தில் தரியாமையும் -ஆகிற இவை –
ஸ்வா பதேசம்
இவருடைய சவுந்தர்யாதிகளும் யுக்தியும் வாசி இன்றியே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்லாக்யமாய் இருக்கும் படியைச் சொன்னபடி
தாத்பர்யம்-இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை (நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே-என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்
6-10-உலகம் உண்ட பெருவாயா! -ப்ரவேஸம்-
மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்;
இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார்.
மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது;
இத் திருவாய்மொழியில் உபேயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக் கடவது.
மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரம ஸ்லோகம் போலே –
இரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், அது சக்தி யோகத்தாலே வருமது அன்றோ;
வெவ்வேறு நிலைகளைப் பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக் கடவன.
கோல திரு மா மகள் -தடம் தாமரைகட்கே -பிராப்ய வேஷம் –
பிராபக வேஷம் -அகலகில்லேன் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
சரணாகதனுக்கு பிராப்ய பிராபகங்கள் அவனே -பக்தனுக்கு பக்தி உபாயம் –
காப்பானே -கீழில்–பிராபகத்வம் -இங்கு நால் தோள் அமுது -பிரபாயத்வம் -இரண்டிலும் இரண்டு உண்டே -பிரதானம் –
பிரதான குணங்கள் திவ்ய தேசம் காட்டி நாயனார் அருளிச் செய்தது போலே -வாத்சல்யம் திருவேங்கடத்தில் –
பிராப்ய பிரதானம் திரு மந்த்ரம் –பிராபக பிரதானம் சரம ஸ்லோகம் –
பாலே மருந்துமாகவும் விருந்தாகவும் -உபாயம் உபேயம் -தன்மை மாற்றாதே -பிரதானம் சொல்வது எங்கனே –
சக்தி யோகம் -பாலுக்கு மருந்தாகும் சக்தி உண்டு –மருந்து பால் ஆகாதே -அவன் எப்போதும் அனுபவிக்க தக்க பிராப்யம் தான்
வேற வழி இல்லாமல் அவனை உபாயம் -கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
நம்முடைய -வரண தசை –பிராப்தி தசை -இரண்டும் -அவஸ்தா பேதம் -ஒன்று முடிந்து அடுத்து ஒன்று வருமே –
அதனால் இரண்டும் இரண்டாகவே இருக்கக் கடவது -என்றவாறு
கீழே ஸங்க்ரஹ சங்கதி
இனி விஸ்தார சங்கதி அருளிச் செய்கிறார்
மிகப் பெரிய துன்பத்தோடே பரம பதத்திலே கேட்கும்படி கூப்பிடச் செய்தேயும் சர்வ ரக்ஷகனானவன் வந்து
முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள் கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய்
உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் –
ஸ்ரீ யபதி — அவாப்த ஸமஸ்த காமன்– உபய உக்தன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
“நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும்
பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”
‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -என்கிறபடியே,
நித்திய ஸூரிகட்குக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சர்வேஸ்வரன், பலரும் நம்மை இழக்க
நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து
அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்;
அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்க வேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து
திருமலையிலே நாய்ச்சியாருடனே கூட நின்றருளினான்;
அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே,
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறு கதி இல்லாமையை விண்ணப்பம் செய்து
சரணம் புக்குத் தம்முடைய-அத்யாவசாயத்தை – எண்ணத்தை அறிவிக்கிறார்.
மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே
‘தர்மி புக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்;
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்.
மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே.
திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், –
அகாரம் உகாரம் நார சப்தங்கள் ஸ்ரீ சம்பந்தம் சொல்லும் சப்தங்கள்
வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அது போலே இத் திருவாய்மொழி.
“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”–என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.
1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.
2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.
3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு
விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம்
உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –
(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )
அவனை ஆஸ்ரயிக்கும் அளவே -இழந்தது பெறுவதும் –
ஆர்த்தன்-வாஞ்சா -ஐஸ்வர்ய காமன் ஆசை -அர்த்தாத்தி -அபிராப்தி விஷய சாபல்யம் —
மோஹம்-அஜ்ஞ்ஞானம் -ததா சுகம் இஹ லோக சுகம் -விரோதிகள் -தொலைந்து -அபேக்ஷிதங்கள் பெறுவர் –
அனைத்துக்கும் தம் இடம் வரச் சொல்லி -திட்டம் -அழகு குணம் பார்த்து என்றாவது ஒரு நாள் வைராக்யம் பெற்று
பகவல் லாபார்த்தி ஆவார்கள் -கதி த்ரயத்வ மூலத்வாத்
இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று,
எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
இனித் தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும் வேணும்;
தான் அதிகாரியாகவும் வேணும்.
நற் குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அது தானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணா நின்றோம் அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம்
கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம்.
இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )
சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –
“மயர்வற மதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும்.
(எப்படியாவது கார்யம் செய்விக்கத் தேடுவார்களே -அச்சம் கொடுத்து ஆகிலும் காரியமே மடல் எடுப்பது )
செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடி யுடையார்க்குக் கார்ய கரம் ஆகாதே அன்றோ.
பெருமாள் போல்வார் இடம் இல்லாமல் ஆழ்வார் போல்வார் இடமே சரணாகதிக்கு பலம் கிட்டும் -என்றபடி
வேறே இடம் போகாமல் அவன் இடமே கார்யம் நிர்பந்தித்தாகிலும் அச்சம் கொடுத்தாவது கார்யம் கொள்வார் வேணும் –
ஸூ பிரவ்ருத்தியில் ஈடு படாமல் பர ப்ரவ்ருத்தி எதிர்பார்த்து -நான் பண்ண மாட்டேன் -உன்னை பண்ண வைப்பேன் என்றாரே
“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்
“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –
கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –
மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே
“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –
ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராவமுதே -அரங்கமேய அந்தணன் –
ஸ்வாமி புஷ்கரணி தடே -மந்தி பாய் –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –அரங்கத்து அரவிந் அணையான்
விண்ணவர் கோன்-விரையார் பொழில் வேங்கடவன் -நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு இடம் இருக்க -இப்படி மூன்று ஸ்தானங்கள்
இரட்டைக் குழந்தை தாய் -விண்ணோர் மண்ணோர்-அனுபவிக்க திருமலை
ரிக்வேதம் -பத்து புராணங்கள் பேசும் -ரிஷபாசசலம்-
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி -சேஷாசலம் வேங்கடாசலம் -நான்கு யுகங்களாக காத்து இருந்த திருமலை
வேங்கடேச சம ஸ்தானம் நாஸ்தி கிஞ்சித் – ந பூதோ ந பவிஷ்யதி -வேங்கடேச இதிஹாச மாலை அனந்தாழ்வான் பணித்தது –
கரவீர புரம்-ப்ரஹ்மா பசு ருத்ரன் கன்று –
வேங்கடேசன்-மாட்டை அடித்ததால் சபிக்க -பிசாசாக -அடுத்த பிறவி ஆகாச ராஜன் -மகள் பத்மாவதி -தம்பி தொண்டைமான் சக்கரவர்த்தி
வேகவதி தானே பத்மாவதி தேவி -நாராயண புரம் -ஆகாச ராஜன் பிரார்தித்த படி -புரட்டாசி ஸ்ரவணம்-ஏகாந்தமாக சேவை –
கல்லும் கனை கடலும் -விண் மேல் இருப்பாய் மலர் சேர்ப்பாய் –திருச் சுகவனூர் -திருச்சானூர் மருவி -சுகாச்சார்யார்
ஓன்று அத்விதீயம் இரண்டு வாக்கியம் மூன்று கண்டங்கள்-
நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்த பஞ்சகம் -ஆறு பாதங்கள் -ஏழு சமுத்திரம் போலே –
அஷ்டாஷர விவரணம்- நவ ரசம் சாந்தி கொடுக்கும் த்வயம் –
பாட்டுத் தோறும் திருவடி பிரஸ்தாபம் பதிகத்தில் –
கைங்கர்ய பிரார்த்தனை ஒழி வில் காலம் எல்லாம்
இதில் சரணாகதி
த்வயம் இரண்டு வாக்யத்துக்கும் இவை இரண்டும் –
குரு பரம்பரா பூர்வகமாக த்வயம் ஸதா அனுசந்தேயம் –சந்ததஸ் ஸ்புரிதா சதம் -நம் பூர்வர்களுக்கு
பத்தாம் திருவாய் மொழியில் -கீழ் -தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே புருஷார்த்த வைலக்ஷண்ய நிபந்தமான ஆர்த்தி
பிறந்து கூப்பிட்டவர் -பல சித்திக்கு சரணையானவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை -என்று அறுதி இட்டு
சரண்யத்வ பிரகாசகமான அகில ஜகத் ரக்ஷண ஆகாரத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தனத்தில் அத்யுஜ்ஜ்வல பரிகர யோகத்தையும்
ரூப குண சாரஸ்யத்தால் யுண்டான ஊத்துங்க அநு பாவ்யதையையும்
ஜகத் விரோதிகளுக்கு தீங்கு விலைக்கும் ஸ்ரீ மத்தையையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான அ நாயாச வியாபாரத்தையும்
அதிசயித ஞானர்க்கும் ஆராத்யனாம்படியையும்
சர்வ சாதாரண சாரஸ்ய அதிசயத்தையும்
சர்வ ரோதரான ஈஸ்வர அபிமானிகளுக்கும் சதா ஆஸ்ரயணீயனாம் படியையும்
அதிசயித போக்யமான அவயவ சோபையையும்
ஆஸ்ரயணீயத்வ ஆகாரத்தையும்
அனுசந்தித்து -இப்படி சரண்யனான திருவேங்கடமுடையான் விஷயமாக
ச க்ரம சமக்ர சரணாகதியைப் பண்ணித் தலைக் கட்டுகிறார்-
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-
1-பிரளய ஆபத்தில் -விரஹ ஆபத்து -லோகமாக -ஒருவனை -ஆர்த்தி அறியாதார் -ஆர்த்தி அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ
2-அர்த்தித்தவம் இல்லா உலகம் -ஆசைப் பட்டாரை-ரஷிக்கலாகாதோ -அர்த்தித்தவம் ஆசா கார்யம்
3-வயிற்றில் வைத்து -வடிவு காட்டி ரஷிக்கலாகாதோ
4-அபி நிவேசத்தால் ரக்ஷித்தாய்- நான் அபி நிவேசித்தால் ரஷிக்கலாகாதோ
5-வாயாலேயே ரக்ஷிக்க வேண்டுமோ -வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
6-அபரியந்த குணங்களை அழிய மாறியோ ரஷிக்க வேண்டும் -அவற்றை அனுபவிப்பித்து ரஷிக்கலாகாதோ
7-உறவு அறியா லோகம் -உறவு அறிந்த என்னை -ரஷிக்கலாகாதோ
8-வடிவில் வாசி அறியாத உலகம் -அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ -பெருமை உணராத லோகம்
9-வியதி ரேகத்தால் தரிக்கும் லோகம் -வாழ மாட்டேன் என்று இருக்கும் என்னை ரஷிக்கலாகாதோ
10–ஸுலப்ய ஞானம் இல்லா லோகம் -அன்ய சேஷம் -அன்ய கதி ரஷிக்கலாகாதோ -பிரயோஜனாந்தர பரர்களை ரக்ஷித்தாயே
11-பிரிய நினைப்பார் -எழுவார் -வைகல் தொழுவார் வழுவா வகை நினைந்து -கூட இருப்பாரை ரஷிக்கலாகாதோ
12–மகா வியாபாரம் செய்து ரஷிக்க -மாஸூச சொல்லி ரஷிக்கலாகாதோ
13-ஏக பிரளயம் -பஹு நாம் அனுக்ரகம் நியாயம் -என் பிரளயம் மோசம் –
14-அசேதனம் -உலகம் -உண்டது முக்கியமா உலகத்தாரை ரக்ஷித்தார்-அசேதனம் போலே அன்றோ கிடந்தார்கள்
ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ?
பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ?
அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ?
( உலகத்தார் உலகம் போல் அசேதனமாக இருந்தார்களே )
சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
ஜலப் பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ?
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
‘சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேண்டும் என்கிற நியதி உண்டோ! சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ?
பெரு வாயா – பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,-அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.-உலப்பு இல் கீர்த்தி அம்மானே – இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்;-இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஆர்ஜித்த -ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.-பொழில் ஏழும் காவல் பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம்,-இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியை யுடைய சர்வேஸ்வரனே!-ஸ்வரூபம் ஒழிய குணங்களுக்கு அன்றோ இவர் தோற்றது-நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி – பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி-த்த சுத்துவமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்,
நெய் திணுங்கினாற்போலே உள்ளும் புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.-நெடியாய் –மேலே கூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண ஒண்ணாதபடி யாயிருக்கை.-நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.-அடியேன் ஆருயிரே–-வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னை விட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே!-“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க-இதனைக் -அடியேன் ஆருயிரே-கூட்டக் கடவது.
இவ்வளவும் வர, அவனுடைய ஸ்வரூபம் சொன்னார்; இனி, தம் ஸ்வரூபம் சொல்லுகிறார்:-குல தொல் அடியேன் – குலமாகப் பழையதான அடியேன்.-எந்தை தந்தை –முன்பே அருளி –
இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்;-தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் –உன பாதம் கூடுமாறு கூறாய் –-ஸ்வரூபம் இதுவான பின்பு, ஸ்வரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய்.-அடியவன் உன்னைக் கூட என்னுமது ‘உன பாதம் கூட’ என்பதே அன்றோ.-இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி.
பெறுமாறு சொல்லாமல் கூடுவதை -சா யுஜ்யம் -யுஜ் -தாது -சேர்ந்து குண அனுபவம் –-கூறாய் –-உனக்கு ஒரு சொல்;-எனக்கு ஸ்வரூப லாபம் கண்டாய்.-அவன் ஒரு வார்த்தை அருளிச் செய்ய, தளப்பம்-அலைச்சல் – தீரும் அன்றோ-இவர்க்கு. “மாஸூச: – துக்கப்படாதே” என்ன வேணும்.-
—————–
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
அவன் அருள் மறுத்த போதும் இங்குத்தை அருள் மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.-அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை.-திரு நேமி -அழகு அனுகூலர்களுக்காக -கூர்மை பிரதி கூலர்களுக்கு-திரு நேமி வலவா –-நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!-தெய்வக் கோமானே –அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர்.
அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது;
இரு துண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ.-இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே.-அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும்.-அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும்.
அங்குள்ளார்க்குக் கை மேலே ஜீவனமாயிருக்கும்;-இங்குள்ளார்க்கு விரோதியைப் போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே.-ஸூய பிரயத்தனம் இங்கு –
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே –-சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப் போலே மலரா நிற்கும்.
எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது;-நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது.
ஆறா அன்பில் அடியேன் –-இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி.-சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது.-மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. ஊற்றுடைத்தே.-கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ.-உன் அடி சேர் வண்ணம் அருளாயே – உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்.-நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரை இடப் பாராய்-நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ –
———–
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-
வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞான லாபத்தைப் பண்ணித் தந்த உனக்கு,
பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? -என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ
மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான
திருவருளின் மிகுதி இருக்கிறபடி-இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள் கொள் அணி மேக வண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க் கொண்டு, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே -உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாய் – கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்!-உன் திருவடிகளை அடையும்படி வேறு கதி இல்லாத எனக்கு
ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருள வேண்டும்.-உன்னடி அன்றோ?
உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.-
அடியேற்கு ஆ ஆ என்னாயே.–அடியோமுக்கு -முறை அறிந்த எங்களுக்கு -ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருள வேணும் –வடிவு அது -குண சேஷ்டிதங்கள் அவை -ரஸ்யத்தை அது -மேன்மை அது -ஸுலப்யம் அது -இப்படிப்பட்ட உன்னோடு உண்டான முறையை அறிவித்தால் ஆறி இருக்கலாமோ-
————–
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-
நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;-நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,-“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.
ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,-“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,-“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.
“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.-ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம்-
நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,-‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,-செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் -விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்
ஆ ஆ என்னாது –ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;-நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.-பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.
திருமாமகள் கேள்வா –-விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது.-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ-உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ?புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ?-அருவினையேன் –
அவன் தடைகளைப் போக்க வல்லனாயிருப்பது,-எனக்கு ஆசை கரை புரண்டு இருப்பது,
திருவடிகள் எல்லை இல்லாத இனிய பொருளாக இருப்பது;-இங்ஙனே இருக்கச் செய்தே,
கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன்.-பொருந்துமாறு புணராயே –
அசோக வனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது;-புணராய் –உன்னைக் கிட்டும் வழி கல்பிக்க வேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்ய வேணும் என்னுதல்.
————–
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-
ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே!-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?
திணர் ஆர் சார்ங்கம் –-தன் வளைவிலே-மிடுக்கிலே – விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை.-உன பாதம் – அந்த வளைவுக்கு -மிடுக்கிலே -அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது.-சார்ங்கத்தில் அகப்படுவார் பிரதி கூலர் அடியில் அகப்படுவார் அநு கூலர் –-ஏழு ரிஷிகள் கன்னிகைகள் குல பர்வதங்கள் சமுத்திரங்கள் நடுங்கினவே-சேர்வது அடியேன் எந்நாளே –-கையில் வில் இருக்க இழக்க வேண்டா விரோதி உண்டு என்று;-இனி உன்னைப் பெறும் நாளையாகிலும் சொல்ல வேணும். கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம் where there is will there is way
————
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-
இங்குள்ளார் அங்கே சென்று அடிமை செய்ய ஆசைப்படுமாறு போலே காணும்,
அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி.-மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் –
மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யா நிற்பர்கள்.
அன்றியே,-மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது,-வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக் கொண்டு அடைந்து வணங்குதல்.-நித்திய ஸூரிகளான போது, கைங்கரியமாகக் கொள்க.
பிரமன் முதலான தேவர்களான போது, உபாசனமாகக் கொள்க-மேலே அவர்களை சொல்லுகையாலே ப்ரஹ்மாதிகளை சொல்கிறது உசிதம் அன்று –.-மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –-குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;-நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –
————–
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! – தேவஜாதிகளுடைய உப்புச் சாறு போலன்று;
ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று;-வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று.-அநந்ய ப்ரயோஜனமாய் -நித்தியமாய் -அத்விதீயமாய் இருக்கை-அமர்கின்ற -அர்ச்சை-மேவி -மற்றவற்றை த்யஜித்து-செடியார் வினைகள் தீர் மருந்தே-அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.-
திருவேங்கடத்து எம்பெருமானே – அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி.
1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய், 4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,
6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தைச் சொல்லி –4–ஸுலப்யம் சொல்லி –5-அழகைச் சொல்லி-6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது
பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே,-என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “
‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே
இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.
உன பாதம் காண நோலாது ஆற்றேன்–அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப் பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணாதே அனுஷ்ட்டித்து பலம் தாழ்த்தாரைப் போலே கூப்பிடா நின்றேன் –
————
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் சபரிகரமாக வந்து தங்கள் ஆகிஞ்சன்யத்தை ஆவிஷ்கரித்து அன்றோ தங்கள் தங்கள் அபேக்ஷிதங்களைப் பெற்று போவது –
மாலாய் மயக்கி –-“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும்,-அன்றிக்கே,-மாலாம்படி மயக்கிக் கொண்டு வர வேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்;-ஸம்ஸலேஷிக்கும் படி வர வேண்டும் -நீ வ்யாமோகத்துடன் வர வேண்டும் –-வ்யாமோஹம் என்னிடம் உண்டாக்கிக் கொண்டு வர வேண்டும் –அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய்,-கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக் கொண்டு
வந்தாற் போலே எனக்காகவும் ஒரு வரத்து வர வேணும் என்கிறார்;
“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3.-மாலே செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத் தலைக்கு-வியாமோகத்தை விளைக்குமவனை.-மாலாய் – கிருஷ்ணனாய்.-
பித்தே வடிவாக உள்ள குண பூர்ணன் -மாலாக்கி சாம்யா பத்தி அளிப்பான்-
————–
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-
போக்கியமும் குறைவற்று, அவன் தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க,
கிட்டி அநுபவிக்கப் பெறாது ஒழிவதே–எனதுயிரே!-புண்டரீகாக்ஷமாய் சதுர்புஜமுமாயிற்று இவர் பிராணன் இருப்பது-அந்தோ -ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே
அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே –-என் ஸ்வரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்தி பண்ணாய்.-காணா நிற்கச் செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.-நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-
————-
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-
தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். -அசரண்ய சரண்யன் என்பதால் சொல்லி-
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். -புனருக்தி தோஷம் இல்லை –
பேற்றுக்கு உடல் -வெறுமை ஸ்வரூபம் -இரண்டும் பிரபத்திக்கு பரிகரம்–
வெறுமையும் ஸ்வரூபமும் -ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் – பிரபதிக்கு பரிகாரம் அன்றோ
அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
(போக்யத்வம் மார்த்வம் வாலப்யம் மூன்றும் கீழே பார்த்தோம் இதுக்கு )
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,(பிரிய மாட்டாள்)
“உறை மார்பா” என்கையாலே, நித்திய யோகமும்,
(பிரியாமல் இருப்பதும் நித்ய யோகமும் கொஞ்சம் வாசி –
கோயிலே கதி என்றால் -கோயில் சாத்தின பின்பு -இருக்க முடியாதே –
சரணாகதி பலித்தே தீரும் -பிராட்டி இருந்தால் தான் பலிக்கும் –
எப்பொழுதும் பண்ணலாம் என்றால் நித்ய யோகம் இருக்க வேண்டுமே )
“நிகரில் புகழாய்”என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”என்ற சொல்லின் பொருளும்,
(வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுசீல்யம் ஸுலப்யம் )
“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.
இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.
இனி த்வயத்தை விட இங்கு ஏற்றம்
அதில் அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின் பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.-
பிரபத்யே -ஆர்த்தமாக அங்கு –
அடியேன் -த்வயத்துக்கு அடையாளம் சொல்லும் ஸ்லோகத்தில் உண்டே -லக்ஷணம் ஸ்லோகம் –
அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –
(த்வயத்துக்கு லக்ஷணம் சொல்லும் இந்த வாக்கியத்தில் இருப்பதால் இது இங்கு தானாகேவே சொல்லவில்லை -)
ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன,
அஷட் கரணமாக சொல்ல வேண்டுமே -மூன்றாம் ஆள் கேட்க்க கூடாதே —
நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து
துவயத்தை அருளிச் செய்கையில் அருளிச் செய்த வார்த்தை” என்று சீயர் அருளிச் செய்வர்.
“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க
“அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க,
இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ;
அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலை கொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே.
அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.”
போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ;
(கையில் வில் நழுவி போக்கற்று நின்ற நிலையே சரணாகதி தானே )
இங்ஙனே இருக்கச் செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே.
இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி;
இவன் செய்த குறைகளைத் தான் காணாக் கண் இட்டிருக்கை அன்றிக்கே,
தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ.
ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச் சொல்லி,
முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது.
தொட்டாரைத்தொட்டு “குற்றம் செய்யாதார் யாவர்” என்னக் கடவ இவள்,
இதில் உபாயத் தன்மை சொல்லச் செய்தே,
உபேய விஷயமும் ஸூசகமுமாயிருக்கிறது.
அதாகிறபடி எங்ஙனே? என்னில்,
இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமை செய்வது;
அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப் பிராப்யத்வம் அன்றோ.
நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாக வல்லது.
அகலகில்லேன் இறையும் என்று-இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று.
இவள் அவனுடைய ஸ்வாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும்,
அவன் இவளுடைய மிருதுத் தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.
அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது. -காஷாய வஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப் புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.-இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விட ஒண்ணாது என்கிறார்
மண்ணோர் விண்ணோர் வைப்பில் ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் –
திருவேங்கடத்தானே –
அதற்கு முடிந்த பொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குண யோகமும், சேஷித்வமும், விசேஷ கடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும் இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலை பெற்றிருக்கின்றான்
என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. –
அந்தர்யாமித்வ ஸுலப்யம் -சதா சன்னிஹித ஆகாரம் அர்ச்சையிலும் உண்டே
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.
மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லி
சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.
சரண்யன் ஸ்வரூபமாவது,
நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே
பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை.
ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில்
உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும்.
அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்திய ஸூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன்
முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க் கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே
ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத ஸ்வபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக் காரணங்களான ஞானம் சக்தி முதலான
எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.
அதிகாரி ஸ்வரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பிய ருசியும் ஸ்வரூபப் பிரகாசமும் என்கிற இவையே யன்றோ.
திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத்
துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே;
ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;-புருஷகார சாபேஷமாயும் -அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –
உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது
விக்கிரஹம் ஆகையாலே என்க.
முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!
ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும்
கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.
பிராட்டியாலே பேறு சொல்லும் த்வயம் –
சரீரத்தால் பேறு வேதம் —
ஆத்மாவால் பேறு திருமந்திரம் –
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் சொல்லும்
திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –பாத ரேகை போல் அமர்ந்து புகுந்தார்
மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -சாம்யாபத்தி கொடுக்கும் –
கிழிச் சீரை போல் தனம் –
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே
ராஜ குமாரர் கற்பூர நிகரம் போல் த்வயம் நமது பூர்வர்களுக்கு
கூரத்தாழ்வானனுக்கு சரம விமல திருமேனியில் த்வயம் ஓத உடையவர் கட்டளை –
———————
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-
அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.-“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.
பெரிய வானுள் நிலாவுவரே –
“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம் புக
வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.
நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து
இப்பத்துங் கற்றார்பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
‘இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.
பஞ்ச ஸம்ஸ்காரமும் ஞான அனுஷ்டானங்கள் வேண்டாவோ -இப்பத்தில் அந்வயமே போதுமோ -என்னில் –
வேணும் –இவை அந்தர் பூதங்கள்-ஆழ்வார் சம்பந்தம் என்று சொல்லும் பொழுதே
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply