ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
————–
(இப் பாசுரம் தோழி பாசுரம்
கீழே த்ருஷ்ட்டி பந்தம் -கண்ணோடு கண் கவ்வி -ப்ரத்யாஹாரம் -உள்ளே இழுத்து -இலக்கு இல்லாத ஞான கூர்மை
இது கால மயக்க துறை
வருத்தம் தீர்க்க -காலத்தை மாற்றி தலைமகளை மயக்கி தரிக்க வைக்கிறாள்
ரக்ஷணத்துக்கு பொய் -பொய்மையும் நன்மை பயந்தால் சொல்லலாமே
சுக்ரீவன் மழைக்காலம் முடிந்து சீதாப்பிராட்டியைத் தேட போவதாக சொல்ல
இங்கு தலைமகன் வருவதாக சொல்லிப் போந்தான்
மழைக்காலம் வந்தால் வருவேன் என்று நம்பி இருந்தாள் தலைவி
அதுவும் வந்தது -அவன் வரவில்லையே -ஆகவே தோழி ஆற்றாமை தவிர்க்க இப்பாசுரம்
கீழ் வானம் வெள்ளென்று -முகம் ஒளி கிழக்கில் பட்டு பிரதிபலித்தது
எருமை சிறுவீடு மேயப் போனதை -முக காந்தி பட்டு இருட்டு விலகுகிறது
நிர்ணயம் செய்து கவலைப்படாதே என்று முன்பு சொல்லி
பின்பு சம்சயம் -இப்படியும் இருக்கலாம் என்று சொல்லியும் ஆஸ்வாஸப் படுத்துகிறாள்
என்று நம்பிள்ளை ஈட்டில் காட்டி உள்ளார்
நிர்ணயம் பண்ணி நாயகியை மனசைத் திருப்பி சிந்திக்க வைத்து -அடுத்து சம்சயம் -இன்னுயிர்ச் சேவல் -9-5–இதன் விவரணம்)
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-
எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)
வர்ஷாவில் வரக் கடவதாக காலம் குறித்துப் போன தலைமகன் வர்ஷாவாகச் செய்தே வராது ஒழிய
இவ்வளவிலே தலைமகள் மோஹிக்கிற படியைக் கண்ட தோழி
அவன் வரும் அளவும் இவள் சத்தையை தரிப்பிக்கைக்காக-வர்ஷா வந்தது அன்று-கறுத்தன இரண்டு ரிஷபம் அன்யோன்யம் விரோதத்தாலே பூமியிலே இடம் போராமையாலே ஆகாசத்திலே பிணங்குகிறது காண் -என்று பிரபஞ்ச அபலாபம் பண்ணுவாரைப் போலே -காலத்தை ஷேபிக்கிறாள் –
பிரபஞ்ச அபலாபம் பண்ணி –-ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை என்பார்கள் -பாஹ்யர்கள்
(தர்க்கம் -சர்வ சூன்யம் -ஸப்த பந்தி வாதம்-பிரத்யக்ஷமாக காணும் பிரபஞ்சம் இல்லை என்பார்களே )இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகைக்காக செய்கிறாள்-இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில்
நாயகி ஆற்றாளாய் முடியும் – இவள் இல்லையாகில் அவன் இல்லையாம் – பின்னை விபூதியாக இல்லையாம் –(அப்ருதக் ஸித்த விசேஷணங்கள் அன்றோ-திரு நெடும் தாண்டகத்தில் ஸேவை சாதித்து ஆழ்வார் -ஜகத் -தன்னையும் உளராக ஆக்கி இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –
காணும் அளவும் போய் –மடலில் என்றாரே –காண்பித்து ரக்ஷித்து அருளினார் அன்றோ )
பெய்கின்றது மழை நீர் அன்று
காளைகளின் வியர்வை நீரும் சிறு நீரும் என்று ஒருவாறு ஆற்றிக் காலத்தை மயக்குகிறாள்
ஏவம் வித ப்ராவண்ய அநு ரூபமான போக ஸித்திக்கு ப்ராப்த காலமாய் இருக்க
(கீழ் ஆறாம் பாட்டில் விளக்கிய அவள் ப்ராவண்யம்-அதுக்கு ஏற்ற காலமும் வர )
விளம்பிக்கையாலே கண் கலங்கின ஆழ்வாரை-ஆற்றி உரைக்கிற ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை
கார் காலத்துத் தலைவன் வரவு காணாது கண் கலங்கின தலைவியைக் கால மயக்காலே ஆற்றின தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-கால மயக்கு –
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து நீல வல்லேறு பொரா நின்ற வானமிது
பூமியடைய நடுங்கும் படி செறிந்து நன்றான நீரை இட்டு -மதஜலத்தைப் பெருக்கி கால் விழுந்த-ஆகாசத்தில் காலூன்றி பொருகின்றவாம் – மேல் கால் என்று காற்று – – கறுத்த நிறத்தை யுடைய வலியவான ரிஷபங்கள் பொரா நின்ற ஆகாசமானது
ஞாலம் பனிப்பச் செறித்து-
லோகம் அடங்க இவ்வதி வ்ருஷ்டியாலே குளிர்ந்து நடுங்கும் படி பாராய் -என்று
நாயகி சொல்ல-அங்கன் அல்ல காண்
இவை அந்யோந்யம் பிணங்குகிற படியைக் கண்டு பீதியாலே நடுங்குகிற படி காண்-செறுத்து –
அந்யோந்யம் சீற்றம் இருந்த படி-
நன்னீரிட்டுக் –
நெடும் போது வர்ஷித்த படியாலே-தரையிலே அழுக்கு கழிந்து-அள்ளிப் பருகலாம் படி பெருகுகிற நீரைக் கண்டு-இந்த சுத்தமான ஜல சம்ருத்திக்கு அடி என் -என்ன-விலஷணமான ருஷபங்கள் சீற்றத்தாலே எப்போதும் நீரிடுகிற படி காண் –
கால் சிதைந்து –
வர்ஷத்தின் உடைய பூர்வ அவஸ்தையிலே-கால் விழவு -என்று சொல்லும் அளவு தவிர்ந்து
(அங்கு ஓன்று இங்கு ஓன்று தூத்தல் முதலில் கால் சிதைந்து இருக்குமே ) வர்ஷத்தின் இடை மத்யமாய் ஆயிற்று –பூர்வ அவஸ்தையில் காற்றுத் தவிர்ந்து-நிலை நின்ற வர்ஷ்மே ஆயிற்று -என்று சொல்ல-அங்கன் அல்ல காண்
கோபத்தாலே கால் சிதை கொள்ளுகிறபடி -காண்-கால் சிதைந்து–மேகத்துக்கு வர்ஷ தாரை முரிந்து விழுகை-ஏற்றுக்குச் சினத்தாலே காலைச் சிதைக்கை –
பிராட்டியும் ஈஸ்வரனுமான சேர்த்தியை- மின்னும் மேகமும் – திருஷ்டாந்தமாக சொல்ல –நீல வல்லேறு பொரா நின்ற வானமிது –திருமால் கோலம் கறுத்து மிடுக்கை யுடைத்தான ரிஷபங்கள் இடைவிடாதே பொருகின்ற ஆகாசம் காண்-அன்றிக்கே
திருமால் கோலம்
மேலே மேகத்துக்கு அடைமொழியாக சொல்கிறாள்
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது –
இச் சொல்லால் இவற்றை சொல்லுவான் என் என்னில்
இவை விலஷண சப்தத்தாலே சொல்லக் கடவது காண் –-முடிய பொய் சொல்லும் அது அன்றிக்கே
தன்னை விச்வசிப்பைக்காக தானும் காலத்தை சம்சயிக்கிறாள்-இத்தசை வந்தால் நாயகன் வரவு சம்பவிக்கும் என்னும் அத்தாலே–நீல நிறத்தை யுடைய ஏறு என்று மேகத்தை மயக்கி உரைக்கிறாள்-இந்த ஆகாசத்திலே பொருகிறன அத்தனை-கால் சிதைந்து பொரா நின்ற -என்று மேகமானது காற்றின் சிதைவாலே மேகம் எதிர் எதிரே பொருகிறது என்றுமாம்-
அன்றியே
திருமால் கோலம் சுமந்து
விளங்கின மின்னாலும் ஸ்யாமளமான நிறத்தாலும் ஸ்ரீ மானுடைய கோலத்தைத் தரித்து-பிரிந்தார் கொடுமை குழறு-இக்காலத்தில் பிரிந்து போய் வராத தலைவருடைய கொடுமையைத் தன் அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான-தண் பூம் காலம் கொலோ-குளிர்ந்து அழகிய
கார் காலம் தானோ
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு –
அவனுக்குப் போலியான வடிவோடு கூடி நின்று-நான் வந்த போது அவன் வந்திலன் கண்டாயே -என்று
அவனுடைய குற்றத்தை இவளுக்கு முன்னிடுகிறாள் போலே இரா நின்றது -குழறுகிறபடி –
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் –
மேகமானது ஸ்ரீ யபதியுடைய வடிவைத் தரித்து –நம்மை விஸ்லேஷித்த வனுடைய கொடுமையை
அக்ஷரம் இல்லாத கொடு கொடு சப்தத்தால் இவள் படுகிற துன்பம் ஸஹியாமல் குழறுகிறதோ
திருமால் கோலம் சுமந்தது நீல வல்லேறா மேகமா என்று சம்சயம்-மேகம் பொழிந்த பின் வெளுத்துப் போகுமே -இவையே எப்பொழுதும் கறுத்தே இருக்குமே-வறியேன் –உன்னை இப்படிக் காண வைத்த பாபத்தை யுடைய நான் காணா நின்றன ஏது என்று அறிகின்றிலேன் தெரிந்து அறிய மாட்டு கிறிலேன் –
தண் பூம் காலம் கொலோ வறியேன் –
குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன்-சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –நீல வல்லேறு பொரா நின்ற வானமா -இல்லை –தண் பூம்காலமா –எம்பெருமானுக்கும் பிரிவில் ஆறி இருக்க ஒட்டாமல் வந்து சம்ச்லேஷிக்கத் தூண்டும் காலம் அன்றோ-என்று ஆராய்வதில் இழிந்து பொழுது கழித்து பிரிவாற்றாமையால் ஆழ்ந்து அழிவதை மாற்றலாமே-
வினையாட்டியேன் காண்கின்றவே –
1-அவன் உகப்பாரை கை விடுமவன் அன்றே
2-இவளுக்கு ஆசை இல்லாமை அன்று
3-வர வேண்டும் தசை இல்லாமை அன்று
4-பிராப்தி இல்லாமை அன்று –
5-திருமால் -என்றதால் பிராப்தியும் சித்தம்-
காண்கின்ற என் பாபம் இத்தனை இறே-மத்பாபம் ஏவா துர் நிமித்தம் –
வினையாட்டியேன் காண்கின்றவே
நாம் காண்கின்ற இவை-இவளை இப்படி துன்பம் படும் பாபத்தை காண-நாம் பண்ணின பாபமே ஹேதுவோ-மத் பாபம் நிமித்தம் -நானே தான் ஆயிடுக—வினையாட்டியேன்-வினையை ஆள்பவள் –
வினையை யுடையவள்-பிரகரணத்தால் இங்கு தீ வினையையே குறிக்கும்
(நம்பிள்ளை ஈட்டில்
ஆரண்ய காண்டம் ஸ்லோகம் -ரஷிணே தர்மம் இத்யாதி –
காப்பாற்றிக் கொள்-உன்னையே முடிக்கவா சக்கரவர்த்தி பெற்றார்
தர்ம உபதேசம் பண்ணி இளைய பெருமாள்
அதுக்கும் மேல்
சரணாகதி பண்ணி பெருமாளை ஆஸ்வசிப்பித்தார்
அதே போல் இங்கும் கால மயக்கு -நிர்ணயம் சம்சயம் இரண்டுமே இங்கும் )
ஸ்வாபதேசம்
ஆழ்வார் உடைய விஸ்லேஷ தசையைக் கண்ட வைஷ்ணவர்களுக்கு பிரபஞ்ச அலாபம் பண்ணி யாகிலும்- தரிப்பிக்க வேண்டு இருக்கிற படி –ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பிரிந்தால் அவர்கள் வரும் வரை தரிக்க ஒண்ணாத ஆழ்வார் வியசனம் சொன்னவாறு
காசு பொன் மணி இழந்தவை மேலே மேலே துன்பம் வருமே
பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் அவதாரம் -கிடைக்காமல் -தூது அஞ்சிறைய மட நாராய்-அடுத்து-அது காலாந்தரம் – வ்யூஹம் -காசு இழந்தது போல் –திருக்குறுங்குடி நம்பி -எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ-வாயும் திரை யுகளும் -பொன்னை இழந்த துக்கம் -அது அர்ச்சாவைத்தாராம்-அடுத்து –-அடியார் உடன் கூடுவது என்று கொலோ-ஆடி ஆடி –வாடும் இவ்வாண் நுதலே -மணியை இழந்த துக்கம் –-அதே போல் இங்கும் –
அவி விவேக கநாந்த திங்முகே பஹுதா சந்தித்த துக்க வர்ஷிணி–பகவன் பவ துர்த்திநே ––ஸ்தோத்ர ரத்னம் -49 )-சம்சாரம் -கார்காலம்-ஆளவந்தார்-ஸம்ஸாரத்தைக் கார் காலத்து மேகம்-இருள் மூடி நல் வழி தீ வழி தெரியாமல் இருக்கும்-நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க-எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்க்கை-துக்க நீர்த்தாரைகளை வர்ஷிக்குமே ஆகவே மழை நாள்கள் என்று ஸம்ஸாரத்தைச் சொன்னபடி-சம்சாரம் மேலிட்டு நலியும் பொழுது வந்து ரஷிப்பேன் என்று வாயோலை அருளிச் செய்து வாராமல் உள்ளான் –
ஸாம்ஸாரிக கோலா ஹலத்தாலே இவருக்குப் பிறந்த கண் கலக்கத்தைக் கண்ட ஸூஹ்ருத்துகள் (நல்லார் நாவில் குருகூர் ஸாத்விகர் )ஞாலம் பனிப்பச் செறித்து-லோகம் நடுங்கும்படி பரஸ்பர ஸ்பர்தாளுக்களாய் நெருங்கி-நன்னீரிட்டுக் கால் சிதைந்து-நல்ல நீர்மையை இட்டு வைத்து
நிலை குலைந்து (நீர்மை ஸுலப்ய குணம் விட்டு )நீல வல்லேறு-நைல்யத்தாலே தமஸ் பிராஸுர்யத்தையும்-ஏறு என்று செறுக்கு சொல்லுகையாலே ரஜஸ் பிராஸுர்யத்தையும்
உடைய வலியரான துர்மான ப்ரசுர புருஷரானவர்கள்–பொரா நின்ற-ஒருவருக்கு ஒருவர் மேலிட்டு நடத்துகிற-வானமிது -என்கையாலே இத் தோஷம் ப்ரஹ்ம பவனம் அறுதியாக நடக்கும் என்றபடி –இத்தால் ஸம்ஸாரிகள் கோலாஹலத்துக்குக் கண் கலங்க வேணுமோ பாடாந்தரம் -நீர் கலங்க வேணுமோ என்று கருத்து –
அன்றியே
அனுபவ அலாப தசையிலே
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ரஜஸ் தமஸ் ப்ரஸுரரான புருஷர்கள் ஸ்ரீ யபதியைப் பாவித்துத் தங்கள் ஸாந்நித்யத்தாலே
பிரிந்தாருடைய கொடுமையை ஸூசிப்பிக்கிற ஆகாரத்தாலே இவ்வவஸ்தை அஸஹ்யமாகவும் கூடும் இறே என்று கோடி த்வய தர்சனத்தாலே ஸம்ஸயித்து ஆற்றாமையை மட்டம் செய்வித்தார் ஆயிற்று (ரஜஸ் தமஸ் ப்ரக்ருதிகள் தங்களுக்குள்ளே பொருது என்றும் உம்மிடம் கலந்து என்றும்
கோடி த்வயம் )-இங்கு வினையாட்டியேன் என்றது பாரதந்தர்யத்தாலே ஸ்மாரகமான லௌகிக கோலாஹலத்தைத் தவிர்த்தல் அவிளம்பேந போக ஸித்தியைப் பிறப்பித்தல் செய்ய மாட்டாத பாபத்தை யுடையேன் என்றபடி
தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி-இது வர்ஷா காலம் அன்று-மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்-அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதைப் பார்த்தால் நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப் பிரிந்து நாயகன் வரவில்லை என்று துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது-உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்-
9-5-இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு-ப்ரவேஸம்-
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -என்று களித்தவர்
தம்முடைய உயிரைப் பாது காப்பதற்காக-பறவைகளின் காலிலே விழும்படி ஆயிற்று –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்னும்படி தெளிவு பிறந்த போதே-
புறத்திலே காண வேண்டும் என்னும் ஆசை பிறந்தது-
இவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேண்டும் -என்று-இவர் விருப்பத்தை சடக்கென முடித்திலன் -இறைவன் –
நினைத்த போதே விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்-
தளர்ந்தவர் உலகப் பொருள்களில் கண் வைத்தார் –
பரம விரக்தராய் இருக்கிற இவர் உலகப் பொருள்களில் கண் வைப்பான் -என் என்னில் –
உலகப் பொருள்களை நினைக்கும் நினைவாலே மனத்தினை வேறு ஒன்றினில்-செலுத்து தரிப்போம் -என்று கண் வைத்தார் –
அன்றிக்கே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைத்தார் -என்னுதல்
அவை தரிப்புக்கு காரணம் ஆகாமல்-அவனுடைய நினைவினை ஊட்டுவனவாய் துன்பினைத் தரப் புக்கன –
யாதானும் ஒரு பொருள் தோற்றிலும்-அப்பொருளின் உளதாம் தன்மை-
அவனை ஒழிய இல்லாமையாலே-அவனைக் காட்டிக் கொண்டே அன்றோ தோற்றுவது –
ஆக
உலகப் பொருள்கள் அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
அவற்றால் நோவு படுகிறபடியை-அன்யாபதேசத்தால் பேசுகிறார் –
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று-அவ்வாற்றாமை கை கொடுக்க-
உபவனமாகிய பூம் சோலைக்கு புறப்பட –
அங்கு உண்டான குயில் மயில் தொடக்கமானவை-அவனுடைய பேச்சினையும் வடிவினையும் நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
இவை நலிகைக்கு இவற்றோடு நமக்கு ஒரு பகை இல்லை-
இவை நலிகைக்கு ஒரு காரணம் உண்டாக வேண்டும்-
அது -அவன் -நம்மை முடிக்க வேண்டும் என்று பார்த்தான் –அதற்கு தக்க வழி நம்மை பிரிவதே -என்று நினைந்து
பிரிவு கலவியை ஒழியக் கூடாமையாலே நம்மோடு கலந்தான் –
கலந்து நம்மைப் பிரிந்தான் –பிரிந்த இடத்திலும் நாம் முடியாது இருந்தோம் –
பிரிந்து நோவு பட்டு இருக்கும் சமயத்தில்-நம்மோடு போலியாக இருக்கிற பொருளைக் காட்டி முடிப்போம் -என்று
பார்த்து வர விட்டான் இத்தனையே யாம் என்று கொண்டு
உங்களுக்கு நினைவு இதுவாகில் இப்பாரிப்பு எல்லாம் வேண்டுமோ-என்று அவற்றைப் பார்த்து கூறி
நம்மைப் பார்த்தால் அன்றோ இப்படி நோவு பட வேண்டுவது
தாயாதி குண விசிஷ்டனான -அவனைப் பார்த்தால் நோவு பட வேண்டா அன்றோ -என்று
அவனுடைய கல்யாண குணங்களை ஏத்துகையாலே-வருந்தி தரித்து தலைக் கட்டுகிறதாய்-இருக்கிறது –
இது எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி என்று-ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்-அருளிச் செய்வர்
மாதுகரத்தில் விஷம் வைக்க உடையவர் திருவரங்கத்தில் இருக்க ஒட்டாமல் திரு வெள்ளறையில் எழுந்து அருளி இருக்க
அரையர் -இந்த பத்து பாசுரங்களையும் -ஸாதித்து மயக்கி திருவரங்கம் கூட்டி வந்தார்
துக்கம் — ஒன்பது பாசுரங்கள் – மஹா துக்கம்–ஒரு பாசுரம் -பலம் -நிகமந பாசுரம்
ஐஞ்சாம் திருவாய் மொழியில் கீழே மாசமாக அபரோஷித்து அனுபவித்து ப்ரீதரானவர் –
அவ்வனுபவ அனுரூபமாக பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபி நிவேசம் பிறந்து -அனுபாவ்யமான சர்வேஸ்வரனுடைய
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
ஸுசீல்யத்தையும்
தன் நிபந்தநமான ஆகர்ஷகத்வத்தையும்
ஆச்சர்ய குணாதி யோகத்தையும்
அநந்யார்ஹத்வ அபாதனத்தையும்
அனுபாவ்யமான திவ்ய அவயவ சோபையையும்
சைதில்ய ஜனகமான ரூப வை லக்ஷண்யத்தையும்
அவ்சாத்தை காரமான நாமாவத்தையையும்
போக்யமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனானவனோடு யதா மநோ ரதம் கலந்து பரிமாறப் பெறாத ஆர்த்திக்கு மேலே –
ஸ்வ சந்த வர்த்திகளான லௌகிக பதார்த்தங்களும் தத் குண விக்ரஹாதிகளுக்கு ஸ்மாரகமாக –
அத்தாலே சிதிலராய் கத்யந்தர ஸூன்யதையாலே அவனுடைய குண அனுசந்தானத்தாலே தரித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி தன் ஆற்றாமையால்
லௌகிகமான பஷ்யாதி பதார்த்தங்களைக் கண்டாகிலும் போது போக்குவோம் என்று அபி சந்தி பண்ணி –
பரஸ்பர ஸம்ஸ்லிஷ்டங்களாய் -ரசித்துத் திரிகிற அவை
அவனுடைய சம்ச்லேஷத்துக்கும் வடிவுக்கும் பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு நலிய
அத்தாலே ஈடுபட்டுப் போலி கண்டு இரங்கினவள்-
பின்னும் போக்கில்லாமையாலே அவனுடைய குணங்களை ஸ்மரித்து தரித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
———
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-
மாதுகரத்தில் விஷம் வைக்க உடையவர் திருவரங்கத்தில் இருக்க ஒட்டாமல் திரு வெள்ளறையில் எழுந்து அருளி இருக்க
அரையர் -இந்த பத்து பாசுரங்களையும் -ஸாதித்து மயக்கி திருவரங்கம் கூட்டி வந்தார்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர்–இவளுக்கு உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
எம்பெருமான் என்றே தளரும் -6-7-1-
பிறர் நலத்துக்காக தன்னை ஓக்கி வைப்பவன் ஆதலால் -பிரான் -என்கிறார் –
நீங்கள் சேர இருக்கையும் -கலக்கையும் -ஒன்றை ஓன்று அழைத்தலும்-
காதலை புலப்படுத்துகிற மழலை ஒலியும் –இவை எல்லாம் வேண்டுமோ -என்றபடி-
நொந்தாரை பிழைப்பிப்பது அன்றோ அரிது –முடிக்கையில் பணி உண்டோ –
அழிக்க வல்லவை சேர்க்கவும் வல்லவை -என்று இருக்கிறாள் -என்றது –இவற்றின் வாயது வாணாள் என்று இருக்கிறாள் -என்றபடி –
———
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-
இராமாவதாரத்தில் மெய்யும்-கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –
வித்தகன்-ஆச்சர்யப் படத் தக்கவன்-இப்போது அனுகூலருக்கு அரிய வித்தகன்
கோவிந்தன்-எல்லாப் பொருள்களையும் காப்பவன் –இதனால்-எல்லாப் பொருள்களையும் காப்பவன் போலே இருந்து
தீங்கு இழைப்பவன் -என்ற படி-பாதுகாப்பவன் -என்று பற்றப் போகாது-தீங்கு இழைப்பவன் -என்று விடப் போகாது –
அத்தனை ஆம் -இனி என் உயிர் அவன் கையதே -என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –
————
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-
ஸுசீல்ய அதிசயத்தாலே -ஆக்ருஷட பிராணை -உடையவள் -மனத்தை பறி கொடுத்த பின்பு எத்தை சொல்லி தரிப்பேன்
அவன் கையதே என் ஆர் உயிர் –-என் உயிர் அவன் கையதே –(நிராசையாலே கீழே -இங்கு பிரணயித்வத்தால் )
நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ-
தவம் செய்தில்லா வினையாட்டியேன்-
உயிரை இங்கே வைத்து உங்களுக்கு உதவி செய்ய புண்ணியம் செய்யப் பற்றிலேன்-
அன்றிக்கே -அவனைப் போலே பிரிவுக்கு சிளையாதபடி புண்ணியம் செய்யப் பற்றிலேன் -என்று பிள்ளான் பணிக்கும்-
உயிர் இங்கு உண்டோ –
வல்லடிக்காரர்க்கு விளக்கு ஏற்றிக் காட்டுமாறு போலே காணும்-இங்கு உண்டோ -என்று என்று காட்டுகிறபடி –
—–
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-
வெளிப்படான்–ஆவீர பூத்-மறைந்தவன் வெளிப்பட்டான் என்றார் ருஷி -இவர் வெளிப்படான் என்கிறார் -கோபிகா கீதா சமனந்தரம்
சமீபஸ்தனாய் தோற்றா நின்றான் -என்றால் போலே இவரும் சந்நிஹிதனாய் இருந்தும் வெளிப்படான் என்கிறார் –
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –துக்கத்தின் வாசனையாலே-ஆக்கையும் ஆவியும் நடுவே நின்று கிலேசப் படுகின்றன -இத்தனை
பிடித்து விட்ட கொம்பு போலே வாசனையே உள்ளது-நோவு பட வேண்டுவதற்கு உண்டு-நலியப் படுவதற்கு பொருள் இல்லை-
———–
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-
யானுடைப் பூவைகாள்–நான் என் உடைமை என்று நினைக்க அமையுமே அன்றோ துன்புறுத்துகைக்கு -நம் திரு மார்பன் –
அவனும் என் உடையவன் ஆதலால் அன்றோ நலிந்தான் –இது அன்றோ ஆழ்வார் -நான் கண்ட நல்லது —
நம் திரு மார்வன் – காதலை உடையவன் என்பதால்-வந்த ஒரு பிரசித்தியை எனக்குக் காட்டி -என்பார் –நம் -என்கிறார் –
பிராட்டியோடு பழகிற்றும் காதலை உடையவனாய் அன்று-அதனைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக என்பார் –திரு மார்வன் -என்கிறார் –
நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் –-சில பொய்களைப் பேசி பூமியைக் கொண்டால் போலே-நம்மோடு கலவியைச் செய்கிறான் என்று தோற்றும்படி
சில பொய்யான கார்யங்களை செய்து-பிரிதல் இவளை முடிக்கைக்கு உபாயம் என்று நம்மை முடித்தற்கு நல் விரகு பார்த்தான் -என்னுதல் –
அன்றிக்கே –
உங்களுக்கு இங்கு இடம் இல்லை-நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான் என்று தன்னிலே நொந்து கொள்ளுகிறாள் -என்னுதல்
சர்வ சக்தி செய்வதாக ஒருப்பட்ட கார்யத்தில்-குறை கிடப்பதாய்-அதிலே நீங்களும் துணை புரிகின்றீர்களோ-
———-
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-
தனது நிலையை அறியாதே-திருப் பெயரைச் சொல்லுகிற-கிளிப் பிள்ளையை குறித்து
என்னால் பொறுக்கக் கூடாத நிலையில் சொல்லவோ-உன்னை வளர்த்தது -என்று திருப் பெயரை இப்பொழுது சொல்ல வேண்டா –என்கிறாள் –
நன்கு எண்ணி – திருப் பெயரைச் சொன்னால் பொறுக்கும் நிலை அறிந்து சொல்வதற்கும்
பொறுக்க முடியாத நிலையில் திருப் பெயரைச் சொல்லாது-இருத்தற்கும் அன்றோ உன்னை வளர்த்தது —
முளைக் கதிரை –அரங்கமேய அந்தணனை -திரும்பி சொல்ல வாய் துடிக்க —வருக என்று மடக் கிளியை–
கை நுனியில் இருக்காமல் அருகில் வர – கை கூப்பி வணங்கி -மிருத சஞ்சீவினி -வயர்த்ததனால் பயன் பெற்றேன்-அங்கே வேறே திசை
———–
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-
என் உயிர்க்கு அது காலனே-விரஹம் தின்று பண்டே-தற்பு -வலி -அற்ற என் உயிர்க்கு அது கூற்றுவனாக இருக்கின்றது –
குழாங்கள்காள் நும் உரு -என்று முன்னிலை ஆக்கினவள்-பின் அது என்று படர்க்கையிலே கூறுவது என் என்னில்–காண மாட்டாமையாலே-முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்-
———
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-
சில குயில்களைக் குறித்து-திருப் பெயர்களைச் சொல்ல வேண்டா -என்று நான் இரக்க-அதனையே சொல்லி நலிந்தீர் கோள்-
உங்களை வளர்த்த தனால் வந்த பயன் பெற்றேன் –சொல் பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே என்கிறாள் –
வளர்த்த தனால் பயன் பெற்றேன் -பரகாலனும் பராங்குசனும் தொனியில் தானே வாசி
சம்பந்தமும் அடக்கமும் கிடக்க-சால நீர்மை உடையீராய் இருந்தீர் கோள்–காப்பாற்றுவார்கள் விஷயத்தில்-அருள் இல்லாதவர்களாய் இருந்தீர் கோள்-
உயிர்க்கு அது காலன் என்று–தோல் புரையே போமது அன்று -அது -என்கிறாள் –தன் வாயாலே சொல்ல மாட்டாமையாலே –
மிருத சஞ்சீவனமான இராம குணங்களையும் ஒரு கால்-சொன்னால் ஆகாதோ என்பாள் -கண்ணன் நாமமே -என்கிறாள் –
—————–
பண் புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண் புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-(பண் புரை பாட பேதம்)
நம் ஆவி உண்டு எழ நண்ணினான் – அவ்வடிவு அழகைக் காட்டி-என்னை முடித்து-பிரிந்து போனான் –
நிரதிசய போக்யமான -கண் அழகன் -பிராண அபகாரம் பண்ணிப் போனான் -பிரஹரித்து –அடித்து -ஆவியை அடிக்க முடியாதே -அபஹரித்து என்றவாறு-
——–
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-(ஒன்பது பாசுரம் துக்கம் -இதில் மகா துக்கம் -)
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்-ஒன்றி -திருப்தி தோன்றும் -எண்ணத்துடன் ஒத்துப் போனோம்
அவன் திரு உள்ளம் இவரை அழிக்கவே-அடித்து அபகரித்து –போக்கிலே ஒருப்பட்டு ஏக ஹ்ருதயராய் ஒத்துப் போனோம்
நாமும் முடிகையிலே துணிந்தோம்-நித்ய ஸூரிகளும் அவன் நினைவினையே பின் பற்றுமவர்கள் ஆகையால்-அவன் கருத்தே தங்கட்குமாக இருப்பார்கள் அன்றோ
வான நாடன் -நாரைக் குழாங்கள் காள் -என்கையாலே-உபய விபூதியும் வேண்டுமோ -ஓர் அபலையை முடிக்கைக்கு-என்பது தோற்றுகிறது-
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே – ஈஸ்வர விபூதி நிறை வுற்று இருக்க வேண்டும் -என்கிறாள் -இதற்கு
தாம் தாம் முடிய நினைப்பார் -நாடு வாழ்க -என்பாரைப் போலே சொல்லுகிறாள் -என்று-ஆளவந்தார் அருளிச் செய்வர்-வீரம்
நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேண்டும் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்- விவேகம்
நான் முடிய என் துக்கம் கண்டு நோவு படாதே உலகம் அடங்க-பிழைக்கும் அன்றோ -என்று பட்டர் அருளிச் செய்வர்- வெறுப்பு
———
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-
நிகமத்தில்-இத் திருவாய்மொழி பாசுரங்கள் நெஞ்சில் படில்-ஆரேனுமாகிலும் தரியார்–மூ வுலகும் உருகும் –பட்டர் நிர்வாகப்படி வெறுப்பில் அருளிச் செய்த படி –
ப்ரவேசத்தில் -இவர் குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது–தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –
இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-
அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய் அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார்
இப்படி ரூப தர்சனத்தாலும்-நாம சங்கீர்த்தனத்தாலும்-பிரணய கூஜிதத்தாலும் மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை – இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –மாறன் அருள் –அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை –அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்-ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் – இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply