வாழ்ச்சியும் -தாழ்ச்சியும்
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–-இரண்டாம் திருவந்தாதி–23-த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும் என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –-ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் ––இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே –கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் –-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –கேழ்ந்த அடித்தாமரை மலர்மேல் –கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை-இத்தால்
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை –எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –அவளுக்கு போக்தாவானவன் –அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும் கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை–-அடித் தாமரை யாமலர் – திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –இத்தால் நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி-கேழ்த்த வடித் தாமரை மேல் மங்கை மணாளன் அடித் தாமரையா மலர் வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வாங்கத் தழும்பாமே என்று அந்வயம் –
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி –11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி-
வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு-என்று அந்வயம்
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ – சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –
———————————-
வாழ்ச்சி
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2-உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது-அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ- என்றான் இறே மாரீசன்-ஸ்ரத்தயாதேவோ தேவத்வமஸ் நுதே -என்னக் கடவது இறே-ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம் அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ-வடிவாய் ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்-நின் வல மார்பினில் சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இறே-வடிவு இருப்பது வல மார்பினில் அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை-வாழ்கின்ற மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி இறே போக்யதை இருப்பது மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது – யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது
மங்கையும் –ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல் மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல் பல்லாண்டு கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்-வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது-சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி -நாய் தொழில் –என்னக் கடவது இறே-சேஷத்வம் துக்க ரூபம் உலகில் -அபிமத விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே —
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -உபாசக நிஷ்டர் –அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும் துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் – என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –
பட்டு -என்பது-உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு-ஓடினேன் ஓடி –பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –கிருபாவசப் பட்டு -கர்மவசம் தவிர்ந்து -வாழாள் பட்டால் நின்றீர் கூழாள் பட்டு திரிந்து என்றவாறு-உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இறே இருப்பது–வாசுதேவாஸ் சர்வம் இதி மகாத்மா -ஸ்ரீ கிருஷ்ண சித்தாந்தம் -ஸூ துர்லப – பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -நம்மாழ்வார் -திருவவதாரம் -திருக் குருகைப் பிள்ளான் சாதிப்பாராம்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார் தேட்டமாய் இறே இருப்பது –இந்த யதி–ஆல் -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை – துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்-இவர்கள் அபிப்ராயத்தால் வாழும் –புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும் மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – -4- 4-1 –பகவத் பாகவத கைங்கர்யங்களுக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து –
வேத பிரதிபாத்ய வஸ்துவை கண்ணாலே கண்டு அனுபவிக்கிறவர்கள்
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னக் கடவது இறே
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – 4-4- 2-செற்றம் ஆவது பொறாமை-அதாவது-பர சம்ர்த்தய அசஹதை-ஒன்றும் இல்லாமையாவது – முதலிலே அதிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை-கீழ் சொன்னவை எல்லாம் உண்டாகிலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது –வண் கை யினார்கள்-உதாரமான கொடையை உடையவர்கள்-அதாவது ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும் இடத்தில்
கொள்ளுகிறவன் சிறுமையையும் கொடுக்கிறவன் சீர்மையையும் பாராமல் கொடுக்குமவர்கள் -என்கை த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஒக்கும் இறே இவர்களுக்கு இது –வாழ் திருக் கோட்டியூர்-இத் தேச வாசம் தானே இவர்களுக்கு வாழ்வு
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் (நாச்சியார் )-என்றும்-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் ( நாச்சியார் ) -என்றும் சொல்லக் கடவது -இறே-இப்படி இருக்கிறவர்கள் வர்த்திக்கிற திருக் கோட்டியூரில்
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து -3-8- 7– நாலாயி:303/3-இவளைக் கொண்டு தன்னுடைய குடி வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து –அதாவது –இவள் முகப்பாக தன்னுடைய க்ர்ஹ க்ர்த்யம் எல்லாம் நடத்தி -என்கை-கோப குலத்துக்கு ஸ்வாமி-என்று தன் மகிஷி யானமை தோற்ற பட்டம் கட்டி-பண்டே பட்டம் கட்டி -தனக்கு மகிஷிகளாய் இருக்கிறவர்கள் முன்னே-அந்த புரக் காவலில் வைக்குமோ-
பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – 4-4-6-பூதம் ஐந்தோடு –-இத்தால் பஞ்ச பூத ஆரப்தமான தேஹத்தை சொல்லுகிறது–மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு வுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -இறே –இத்தோடே-வேள்வி ஐந்து –பஞ்ச மகா யக்ஞங்கள்-புலன்கள் ஐந்து –சப்தாதிகளான விஷயங்கள் ஐந்து-புலன் -என்று புலப்படும் விஷயங்களை சொல்லுகிறது-பொறிகள்-என்று-ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது-இவற்றால் ஏதம் ஒன்றும் இலாத –-இவற்றோடு கூட இருக்கச் செய்தே தோஷம் இன்றிக்கே இருக்கை-( நான்கிலும் –பூதம் ஐந்து-வேள்வி ஐந்தும்-புலன்கள் ஐந்தும்-பொறிகள் ஐந்தும்-மூன்று-ஏதம்-ஏதம் இன்றிகே இருக்கை-ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஆக 12- விஷயங்கள் சாதிக்கிறார் மேல் )
பூதம் ஐந்து ஏதம் ஓன்று இலாத –-ஏதம்-தேகத்தை தனக்கு என்று இருக்கை-ஏதம்
ஏதம் இன்றிகே இருக்கை–ஈஸ்வரனுக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை
ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-வேள்வி ஐந்தும் ஏதம் ஓன்று இலாத–ஸ்வர்காதி சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம்-மோஷ சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம் இன்றிகே இருக்கை-பகவத் பாகவத ப்ரீதி என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-புலன்கள் ஐந்தும் ஏதம் ஓன்று இலாத –சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களை தனக்கு என்று இருக்கை-ஏதம் இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத-இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை -ஏதம்-பகவத் விஷயத்தில் மூட்டுகை -ஏதம் இன்றிக்கே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-வண் கையினார்கள் –அதாவது ஒவ்தார்யம்-அதாவது பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி -என்கிறபடி-அப்பதார்தங்கள் நசியாதபடி வாங்குகையும்–இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கொடுக்கையும்
ஈஸ்வரனையும் உள் படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்-அதற்க்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது- –துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை – தான் துற்றிய தெற்றெனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தானே உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது -பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு (நாச்சியார் )-என்று ஸ்ரீ பாஞ்சசன்ய ஆழ்வாரையும் உள்பட கர்ஹித்தாள் இறே பெண்மகள்-அவ்வளவும் அன்றிகே –சாதுக் கோட்டியுள் கொள்ளப்படுவாறே – என்கிறபடியே – தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச சந்யத்தை பத்ம நாபனோடு கூட்டி வைத்தது-அவதாரத்தில் உண்டான இழவு தீர இறே –அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போல் குறையாமல் கொடுக்கிறது –வாழ்–கண்ணாலே கண்டு அனுபவிக்க பெற்றவர்கள்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -திருப் பாற் கடல் நாதன் -என்பதிலும் –திருக் கோட்டியூர் நாதன் -எனபது இறே ஏற்றம்
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:366/2–4-4-7–வேதத்துக்கு திருத்தம் ஆவது-பகவத் ஸ்வரூபாதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கை
நான் மறைரயோருக்கு திருத்தம் ஆவது –இதில் இவர்கள் செய்வது-குண விக்ரக அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை-இராப் பகல் ஏத்தி –வேறு அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாமல் நடக்கும்-வாழ் –
அநந்ய பிரயோஜனர் ஆகையாலே இது தானே பலமாக இருக்கும்-திருக் கோட்டியூர்–
அவர்கள் வர்த்திக்கிற தேசம்-
தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/2-4-4 -10-யஜஸ் கரமான வார்த்தைகளை படைக்கும்-அதாவது-இருந்தார் இருந்த இடங்களிலே -தங்களுடைய ஒவ்தார்யம் கிருபை முதலான குணங்களை சொல்லிக் கொண்டாடும்படி யாகை –இவர்கள் புகழை நச்சி செய்யாது இருந்தாலும் தன்னடையே வந்து உண்டாமிறே இது-உதாரமான கையை உடையவர்கள்-அதாவது-உள்ளது எல்லாம் பரார்த்தமாகவே விநியோக்கிக்க வேணும் -என்னும் ஒவ்தார்ய கையை உடையவர்கள்-என்கை-வாழ் திருக் கோட்டியூர் –இப்படி இருந்துள்ளவர்கள் இத் தேச வாசமே தங்களுக்கு வாழ்வாகக் கொண்டு வர்த்திக்கிற திருக் கோட்டியூர்-
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4–4-8-2 –வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் –பகவத் சமாராதனத்தையும்-அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே –
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று –– 5-3-3- –- நாலாயி:455/3-புனத்தில் புதுத் தினையை முறித்து -ஹவிஸ்சுக்கு காட்டி –புதியது அமுது செய்யப் பண்ணி இப்படி அமுது செய்யப் பண்ணினால் வேண்டிக் கொள்ளும் படி ஏது என்னில் -இந்த தேசம் தான் –அமுது செய்திடப் பெறில் பின்னும் ஆளும் செய்வன் -என்னும் தேசம் இறே –
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3-2-10-வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-5-1-என்னுடைய சோகத்து அடியான அக் குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும் நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே-எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் – நாலாயி:547/4–—5-3-பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –
காமரம் -என்ற பண்ணைப் பாட – அதுக்கு செவி தாழ்த்து-மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – –59-நாலாயி:553/2––ஒ குயிலே என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே அவ் விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்-ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்–9-4- – நாலாயி:590/1-பரந்த பொழிலிலே வர்த்திக்கிற குயில்காள் உங்களுக்கு சோலை நோக்கித் தருவார் யார் –
ஏக தேச வாசித்வமே ஹேதுவாக பாதகமாகா நின்றி கோளீ
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – 12-8–நாலாயி:624/1-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-பசுக்களை மேய்க்கையை உகந்தான் –-அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –
தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ்
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் –-2-1– நாலாயி:658/1,2–தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-ய ஆத்மதா பலதா-என்னுமா போலே – தன்னையும் கொடுத்து –
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்- திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1-மெய் என்றும் -பொய் என்பது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது – நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ – திருச்சந்த விருத்தம்-68-நாலாயி:819/4–சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்-ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே-
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –திரு மாலை-13 நாலாயி:884/4-இந்த்ரியங்களுக்கு குடி மக்களாய் வர்த்திக்கிற லீலா விபூதி –எல்லா அவஸ்தையிலும் தப்பாத படி தங்களுக்குள் அகப்படுத்திக் கொள்ள வற்று ஆகையாலே-பொறி -என்று இந்த்ரியங்களை சொல்லுகிறது-நரகம் –அவிவிவேகிகளுக்கு நரகம் யமனுடைய தண்டல்
அறிவுடையார்க்கு நரகம் –சம்சாரம்–லீலா விபூதி கட்டடங்க தரிசாய்ப் போம் இறே –நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்னக் கடவது இறே-
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – -23-நாலாயி:894/4-இவ் விஷயத்தை கண்டு அனுபவிப்பதற்கு முன்பாகிலும் மறக்கவுமாம் –கண்டு அனுபவித்த பின்பு இனித் தான் எந்த பிரகாரத்தாலே மறப்பது –வாழ்கேன் –இவ் விஷயத்தை விட்டுப் போய் மணலை முக்கவோ –அனுபவித்தால் மறக்க ஒண்ணாது-ஏழையேன் ஏழையேனே-நானோ அத்யந்த சபலனாய் கிட்டினால் அனுபவிக்க மாட்டே-முன்பு இதர விஷயங்களிலே அகப்பட்டு சிதிலராய் இருப்பார் இப்போது பகவத் விஷயத்தில் அகப்பட்டு புறம்பு கால் வாங்க மாட்டாதே இருப்பார் –அது கர்மத்தாலே வந்த சைதில்யம்-இது விஷய வை லஷண்யத்தாலே வந்த சைதில்யம்–
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் -6-– நாலாயி:932/2–லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்-வண்டு வாழ் பொழில் –வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை -–2-1-3– நாலாயி:1050/3-வண்டுகள் ஆனவை மது பாநத்தைப் பண்ணி மத்தமாய் கொண்டு வாழா நின்றுள்ள திருமலையைத் தனக்கு நித்ய வாஸத்துக்கு ஸ்தானமாகக் கொண்டு உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு ––ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு -வெறும் அண்டம் என்னில்
ஸ்வர்க்காதிகளிலும் ஏறும் என்று மீமிசை அண்டம் என்று பரம பதத்தை சொல்லுகிறது
மஹா ஆகாசம் பரம ஆகாசம் -என்னக் கடவது இறே உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –
அருள் நடந்து இ ஏழ்உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – -3-10-1-–நாலாயி:1238/2,3 -இப்படி இருக்கிற இவன் அல்லது லோகத்திலே வேறு ஆஸ்ரயணீயர் அல்ல என்று ஏழு வகைப்பட்ட லோகங்கள் உள்ளாறும் அடைய ஆஸ்ரயிக்க தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான
இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –பெரும் புகழ் வேதியர் வாழ்-தரும் இடங்கள்-
இவனை அனுபவிக்கையே யாத்ரையாம் படி இருக்கையாலே மிக்க புகழை உடைய ப்ராஹ்மனர் வர்த்திக்கிற இடங்களை உடைத்தாய் –வாழ் தரும் இடங்களிலே உண்டாய்
அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள்
மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள
அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது –
அள்ளி அம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – 4-10-7-–நாலாயி:1344/3 -அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல் அன்றிக்கே அளியை அள்ளி என்னுதல் -அத்தாலே தண்ணளி யாய் குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து ஹரி ஹரி என்னுமா போலே திரு நாம சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து (மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து அங்குத்தை திர்யக்குகளுக்கும் –
பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே – 5-1-8-–நாலாயி:1355/4 -வேதத்தால் அக்னி த்ரயத்தையும் வளர்க்கும் மாறாத புகழால் ஔதார்யத்தால் ஷமையால்
இவை எல்லா வற்றாலும் மிக்கு இருந்துள்ள பிராமணர் வர்த்திக்கிற தேசம் –புள்ளம் பூதங்குடி தானே –
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை மருவுமூர் போல்- 5-2-8-–நாலாயி:1365/1 –கலைகளானவை பிணை யோடு -மானோடே அணைந்து வாழா நின்றுள்ள
திரு நீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத் தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –புருஷோத்தமன் தான் இந்தப் பெண்கள் உடன் ஸம்ஸ்லேஷிக்க குருகுல வாசம் திரு நீர்மலை மான் இடம் கற்றுக் கொண்டானாம்
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – 5-4-6-–நாலாயி:1383/2 –யசோதை பிராட்டியைப் போலே அலங்கரித்துக் கொண்டு கலையை உடுத்து அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடைய-யசோதை பிராட்டியில் இவளுக்கு ஓர் ஏற்றம் -வன்மை யாய்த்து-யசோதை பிராட்டியைப் போலே பரிவு எல்லாம் தோற்ற ஒசழக்காக தூக்கி எடுத்து இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன்–இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள் –
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – -–5-4-7-நாலாயி:1384/2 –திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் -என்பர்கள்-
நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே -6-7-7- நாலாயி:1514/4 –இவையே யாத்ரையாம் படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம்-தங்களை நோக்குகைக்காக-தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –(ஸ்வரூப ரக்ஷணம் -மங்களா சாசனம் செய்தல் இது அன்றோ வாழ்கை )
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8-– நாலாயி:1515/4 -தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – -–6-7-10-நாலாயி:1517/1 -அநந்ய பிரயோஜனரான பிராமணர் வர்த்திக்கிற திரு நறையூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூரணன் ஆனவனை –
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – 6-8-10-–நாலாயி:1527/1 –சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை –இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – -7-6-7-–நாலாயி:1604/1 -ஸ்வ வ்யதிரிக்தர் உடைய ஐஸ்வர்யத்துக்கு-நிதான பூதையான பிராட்டி-அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும் படியான மார்வு படைத்தவனை –-ஈசேசி தவ்ய வைஷம்ய நிம்னோன் நத மிதஞ் ஜகத் நமஸ் ஸ்ரீ ரெங்க நாயக்யை யத்ப்ரூவி ப்ரமபேததா -என்னக் கடவது இறே-
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே – 8-5-5–நாலாயி:1692/4-ஆதித்யன் ஆனவன் தான் தோற்றின கடலிலே புக்கு அஸ்தமிக்க-ஆஸ்வாச கரனான அவனை இழந்து பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற பிராணங்களை முடிப்பதாக அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2-தமப்பன் தாய் புத்ரர்கள் உறவு முறையார் சம்பந்திகள் என்று இங்கனே பற்றிக் கொடு நிற்கிற
பந்தகமான யாத்ரையை –மாதா பிதா ப்ராதா -என்கிறபடியே அவன் ஒருவனே சர்வ வித பந்துவாய் இருக்க சோபாதிக பந்துக்களை நிருபாதிக பந்துக்களாக நினைத்து போருகிற பந்தகமான யாத்ரையை அனுசந்தித்து வெறுத்து ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவுக்கு இது அவத்யாஹம் என்று புத்தி பண்ணினாய் ஆகில் –
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று – 10-3-3–நாலாயி:1870/3-கூற்றமாய் வந்த படி கண்டு அஞ்சி – நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று -10-3-7– நாலாயி:1874/3-வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே ப்ராவண்யம் – இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – -11-8-1-–நாலாயி:2022/3 – நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ –சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-ஆறு பெருகித் தன் வேரை அகழ்ந்து பொகடா நின்றால்-பேர நிற்றல் பரிஹரித்துக் கொள்ளுதல் கூப்பிடுதல் செய்வது அறியாது இறே-பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும்
பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் – பயமே இறே இவனுக்கு உள்ளது –அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )-நன்றும் அஞ்சுவன் –(திருவாய் )-மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில் என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே – நாலாயி:2039/4-த்ருடம் இன்றியே அப்போது போயிற்று இப்போது போயிற்று என்றும் மின்னிலும் நிலை அற்று இருக்கிற இச் சரீரத்துக்கு பூண் கட்டவே தேடுவர்கள்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த -மூன்றாம் திருவந்தாதி—100– நாலாயி:2381/2 -திருத்துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் – மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவனான தானே –போக உபகரணமான திருத்துழாயை யுடையவன் தானே முயங்கும் முயங்குகை -தழுவுகை –-அபி நிவேசித்து சம்ச்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –இப்படி இருக்கிற தான் –அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே — 72– நாலாயி:2549/4-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று இதுவும் போழ்க-வாலிமையாவது சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது-அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்-இத்தால் போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – -16-நாலாயி:2806/4-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் – 96-நாலாயி:2763/1 –இது விளைத்த
மன்னன் –-இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –நறுந்துழாய்-இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்-வாழ் மார்பன் –தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் –141- நாலாயி:2787/7 -ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய் தன்னை வாழ்வாகவும்
துணையாகவும் தோழனாகவும் தூதனாகவும் உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்
ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று – 2-3-1-–நாலாயி:3031/1 —ஊன் என்று சரீரமாய் -வாழ்க்கையாவது வர்த்திக்கிறதாய் -சரீரத்திலே-வர்த்திக்கிற – வசிக்கிற உயிரே!
இவ் விளியால்,
-பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? மாம்ச பிரசுரமான சரீரத்தில் இருந்து வைத்து வாழுகிற உயிரே சரீரத்தைப் பற்றி வாழ்ந்து போந்த உயிரே -என்றுமாம்-பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று -மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச் ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம்.–இவ்விளியால்,‘நெடு நாள்-பிராகிருத போகங்களை – இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ,-அப்ராக்ருத போகத்துக்கு- அவ்வுலக இன்பத்துக்குக் கை தர நிற்பதே!’ என்ற தொனிப் பொருள் தோன்றும்.-இப் பொருளில் வாழ்தல் – அனுபவித்தல்.–வாழ்கை -வர்த்தனமும் விஷய ஸூக அனுபவமும் -நித்ய முக்தர் போல் பகவத் அனுபவ ஏக ஸூகமும்
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் – -–2-3-5-–நாலாயி:3035/3 -எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே -பிராட்டி-ஏக அஷ- ஒற்றைக் கண்ணள், -ஏக கர்ணி- ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், தனியேன்’-என்கிறார் – எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை -நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு–
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள ––2-5-1- நாலாயி:3053/2 -அழகிய மாலை வாழா நின்றுள்ள முடி -வாள் -என்று ஒளியாய் -அழகிய மாலையும் ஒளியையும் உடைத்தான் திரு அபிஷேகம் என்றுமாம் –-‘வாண்முடி’ என்பது பாடமாயின், வாள்-என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான – ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள்-தாமம் -தேஜஸ் ஆகவுமாம்-இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் அருளிச் செய்வர். -இனி, இதற்கு எம்பெருமானார்,-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்-அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6– நாலாயி:3126/3 –வேதங்களும் கூட ஏங்குவது இளைப்பதாகா நிற்க நான் இச் சேர்த்திக்கு பாசுரமிட்டு ஏத்தவோ –பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று வாழா நின்றுள்ள திருத் துழாயை திரு அபிஷேகத்திலே உடையவனே-திருத் துழாய்ப் பூ முடி சூடி வாழா நிற்கிறது -இவ்வொப்பனை என்னால் பேசலாய் இருந்ததோ –சிந்து பூ மகிழும் -விஷ்வக் சேனர் எடுத்து திரு வேங்கடவனுக்கு சமர்ப்பிப்பார் என்கிறார் –-பூவிலே வர்த்திக்கிற பிராட்டி உன் சுவடு அறிந்த பின்பு அப்பூ நெருஞ்சி முள்ளாம் படி மார்பு படைத்தவனே —பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –
இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ ––சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –3-2-4– நாலாயி:3135/4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –
———————————-
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ—4-1-5- – நாலாயி:3235/4-நீல ரத்னம் போலே ஒளியை யுடைத்தான திரு மேனியை யுடையவனாய்-ஆனபின்பு பக்தா நாம் என்று இருக்குமவன் உடம்பை பற்றுங்கோள்-ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -ஸூ லபமாய் நிரவாதிக தேஜோ ரூபமான வடிவை உடையவன்-நம்-ஆஸ்ரிதரான நமக்குத் தன்னை அனுபவிப்பிக்கும்-மாயவன் –ஆஸ்ரித விஷயத்தில் செய்தது போராது என்று இருக்குமவன்-பேர் சொல்லி வாழ்மினோ.–ஆச்சர்ய பூதனுடைய திரு நாமங்களைச் சொல்லி ஆனந்திகள் ஆகுங்கோள்-திரு நாமத்தைச் சொல்லி நிரதிசய போகத்தில் அந்வயின்கோள் –செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே-கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்–
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை -–4-9-8– நாலாயி:3326/2 –பஞ்ச பூதங்களையும் -சமேத்ய அந்யோன்ய சம்யோகம் என்கிறபடியே த்ரிவ்ருத்திகரித்து-சமைத்து வைத்த-ப்ரஹ்மாதிகளுக்கு போக ஸ்தானமாய் -ஈஸ்வரோஹம் -என்று வன்னியம் செய்கிற தேசமாய் அத்விதீயமான வை லக்ஷண்யத்தை உடைத்தான் அண்டமாகிற அரணின் நின்றும் புறப்பட விட்டு – புக்காருக்கு புறப்பட ஒண்ணாத அரண் இறே
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு–5-7-3-– – நாலாயி:3409/3 –வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்-நித்ய ஸூரிகளை போலே திரள் திரளாக பகவத் குண அனுபவம் பண்ணி வர்த்திக்கிறவர்கள்-இத் தலையில் சாதனமும் இல்லை -செய்யலாவதொரு பிரதியுபகாரமும் இல்லை என்று பகவத் குண அனுபவமே யாத்ரையாய் இருக்குமவர்கள்
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே–5-8-6- – நாலாயி:3423/3 –விஸ்லேஷ கந்தம் இல்லாத படி உன்னை அனுபவிக்கை யாகிற ஸ்லாக்யமான புகழை யுடையவர்களதான -திருக் குடந்தை -பழையதான புகழ் என்றுமாம் -எனை நாள் அகன்று இருப்பன் என்ன வேண்டாதவர்கள் -விஷய சந்நிதி தனக்கும் அவர்களுக்கும் ஒத்து இருக்க அவர்கள் வாழுகிற படி எங்கனே என்னில் -தம்மைப் போலே கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்
பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் —–6-3-6-– நாலாயி:3478/2 -ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.-தவ்வை – திருமகள் அல்லாதவள்.-திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,-தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – -6-3-10-நாலாயி:3482/3 -மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்-பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.
நிற்கும் நால்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் -–6-5-4- நாலாயி:3498/1–அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் -நித்தியமான நான்கு வேதங்கள்.-நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம்.-ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ.–வேதங்கள் தங்கள் இட்ட வழக்காய் செல்லுகையாலே வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள்-வாழ் தொலை வில்லி மங்கலம்-வேத தாத்பர்ய பூதனானவனைக் கண்டு நித்ய அனுபவம் பண்ணுகிற வூர் -(காட்சி இருந்தாலே வாழ்ச்சி தானே )–ஸ்வாத்யாயாத் யோகம் ஆஸீத -என்னும் அளவு அன்றிக்கே -யோகாதி ஸ்வாத் யாயமா மநேத் -என்று ஆரூட யோகமாய் இருக்குமவர்கள்-“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்” என்னுமளவன்றியே,–ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழே–ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு
மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் ––6-5-8– நாலாயி:3502/2-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர்
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் ––6-10-4– நாலாயி:3553/1-அ ஸூ ரர்கள் உடம்பில் அன்றிக்கே அவர்கள் ஆயுசிலே யாயிற்று அம்பு தைப்பது –இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை-
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள் கொடுக்கும் – -–6-10-11–நாலாயி:3560/1-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-சேஷபூதர்கள் -உங்கள் உத்தேஸ்யம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக் கிருத்தியராய்ப் போங்கோள் என்று,-அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.-கொடுத்த -என்னாமல் -கொடுக்கும் வர்த்தமானம் -இப்பாசுரம் அநுஸந்திக்கும் நமக்கும் இப்பேறு உண்டு
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே –7-10-3– நாலாயி:3662/3,4-அவனுடைய கல்யாண குணங்களை பாடா நின்றுள்ள நாலு வேதங்கள்-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் -ஷடங்கங்கள் இவற்றை பயின்றவர்கள் -வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் -நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் -எஃகிக் கரை கண்டு இருக்குமவர்கள்.
போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்.–ஒக்கத்தை யுடைய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையிலே புக்கு அங்கு உள்ள வைஷ்ணவர்களோடே கூடி அனுபவிக்க காலம் எல்லாம் இங்கனே யாக வற்றோ –
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் —–8-3-7-– நாலாயி:3699/2-திருப் பரிசாரத்தில் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ண வேணும்-என்-திரு வாழ் மார்வற்கு-அதுக்கு மேலே பிராட்டியோட்டை சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேணும் –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்ற இளைய பெருமாளை போலே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் படி யாயிற்று இங்குத்தை இருப்பு-என்-திரு வாழ் மார்வற்கு-என் ஸ்வாமி நி சந்நிதி யாகையாலே சொன்ன வார்த்தை விலை செல்லும் கிடீர்-ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய்
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே ––8-4-6- நாலாயி:3709/3,4-ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கடவராய் பிரதானரான மூவரும் செய்யக் கடவ காரியத்தை ஓர் ஒருத்தரே செய்ய வல்லராம் படி யாயிற்று இவர்கள் சக்தி இருக்கும் படி-அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8- – -9-1-8-நாலாயி:3788/3–அவன் குணங்களை அனுசந்தித்து -வாழுமதே கிடி கோள் யுக்தம் –-அந்தோ-கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை அபேக்ஷிக்க வேண்டுவதே எனக்கு –ஆச்சர்யமான ஸுந்தர்ய சீலாதிகளை யுடைய வனுடைய திருவடிகளை ப்ரீதியாலே அக்ரமமாக ஏத்தி அத்தாலே கால ஷேபம் பண்ண வேணும் என்று அத்யசிக்க வல்லரான அநந்ய பிரயோஜனர்க்கு--புன்மை யிலாதவர்கள்–சீரியவர்கள் –வுள்ள கிற்கை-உள்ள வல்லராகை –அத்யவசிக்க வல்லராகை ––கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்காக –அஹம் வோ பாந்தவோ ஜாத -என்கிறபடி துணையாக வந்து பிறந்தவன் -பரித்ராணாய ஸாதூ நாம் -என்று இறே அவதாரத்துக்கு பிரயோஜனம் இருப்பது –கல்யாண குணங்களையே ஆசைப்படும் துணையாக பற்றும் இது போக்கி – வீழ் துணை-ஆசைப்படும் துணை -தாம் வீழ்வார் -என்ன காட்டுவதே ஆசா யுக்தரை –யாதுமில்லை மிக்கதே–இதில் காட்டில் மேல் பட்டது வேறு ஒன்றும் இல்லை –
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் —9-1-9-– நாலாயி:3789/2-பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை –காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –
நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர் -10-1-2— நாலாயி:3892/3-–ஆன்ரு ஸம்சயமே வேதார்த்தம் -என்று வேத தாத்பர்யம் கை வந்து இருக்குமவர்களாய் -வேத நிர்வாஹகரானவர்கள்-நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் –அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து-கை வந்து இருக்குமவர்களாய் வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்-அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்–அத்தேச வாசத்தாலே ஆஸ்ரித சம்ரக்ஷணமே பரம தர்மம் -என்று ஈஸ்வரனுக்கு அதிலே நிஷ்டனாக வேண்டி இருக்கும் தேசம் -அவ்வூரில் ஆஸ்ரயிக்க சென்றாரை -அஸ்மாபிஸ் துல்ய பவது -நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -–10-4-8– நாலாயி:3931/4-வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து -ஆயுஷ்மன் -என்னுமா போலே –நடுவே மங்களா சாசனம் செய்கிறார் –-உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழ் நெஞ்சே என்கிறார் –-புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் -சா ஹானி –என்னக் கடவது இறே –வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இறே நான் கால் பிடிக்கிறது –பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே–பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே- இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – -10-8-3- நாலாயி:3970/2-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்–மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –-கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் பிறவி புக்க இடத்தே புகக் கூடிய-பிணியைக் கிட்டேன் ––மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –ஸூஷ்ம சரீர விமோசனம் –இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –ஸூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –
நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன் – -10-8-11-நாலாயி:3978/2-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பிநல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ-சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்–நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி – திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே-–10-9-1- – நாலாயி:3979/4–வாழ் புகழ் நாரணன்ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்–10-10-9- – நாலாயி:3998/3-விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து – வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து- மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –
—————————————————————————————————–
தாழ்ச்சி
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட –-1-6 2- –- நாலாயி:76/2-தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க அத்வீதியமான சுட்டியானது-திருக் குழலில் சாத்திய-உங்கள் தமப்பனராய் இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்த கோபருடைய மடியில் இருந்து –இத்தால்-தன் மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும்-அவர் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை தனக்கு உகப்பு ஆகையாலே அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து-
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் –-1-9 4- –- நாலாயி:111/2-நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை-ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் –திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு – நாம் இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக அர்ஜுனனுடைய அழகியதாய் –
திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் – என்னைப் புறம் புல்குவான் –
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் – 2-3 1- நாலாயி:139/1–பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –அன்றிக்கே –போய் –என்ற இது –மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் ) ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –கூர் வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே – -3-6-9- –நாலாயி:283/2-சிவந்த செந்தாமரைப் பூவை சூழப் படிந்த வண்டினுடைய திரள் போலே
சுருட்சியும் மிருட்சியும் உடைத்தான திருக் குழல்கள் தாழ்ந்த திரு முகத்தை உடையவன் –
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் –6-6– நாலாயி:561/2–முத்து மாலை நிரைகளானவை தலையிலே வந்து தாழ்ந்த பந்தலின் கீழே(இன்றும் யானை வாஹனம் பொழுது முத்துக் கொடை கொண்டே புறப்பாடு –மற்ற நாள்களில் ஸ்வர்ணம் கொடை -யானை வாகனமும் ஆறாம் நாள் நடக்கும்
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – 6-2-நாலாயி:699/3-மேல் பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹா பாரதம் இறே—ஊர் எங்கும் அடி ஒத்தித் திரியும் இறே -தனியே நின்று தயிர் கடைவார் உண்டோ என்று –ஒருத்தி தனியே நின்று தயிர் கடையக் கண்டவாறே அலாப்ய லாபம் பெற்றானாய்-ஓடிச் சென்று புக்கான் –நீ தனியே நின்று தயிர் கடையில் -ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாகப் படாது —
சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப் பற்றி கடையில் யாய்த்து என்று
அன்று தேவரசுரர் வாங்க -என்று பிறர் கை விட்டால் கடிவது பிறர் கார்யம் ஆகில் இறே
இங்கும் இவளும் ஒரு தலைப் பற்றில் இறே தன் பிரயோஜனம் ஆவது -இவன் கள்ள விழி –
அவள் கெண்டை ஒண் கண் மடவாள்-நோக்கும் நினைவும் செயலும் -சொல்லும் ஒருபடிப் பட்டு இருக்கும் அவளுக்கு-இவனுக்கு நோக்கு ஒரு படியும் நினைவு ஒரு படியும் சொல்லு ஒரு படியும் செயலும் வேறு ஒரு படியுமாய் இருக்கும் – இவன் நோக்காலே எல்லாம் மெய் என்று அவள் விஸ்வசித்தாள் யாய்த்து–வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ-உன் குழலை விஸ்வசித்த வண்டுகள் என் பட்டனவோ
சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – –7-3-4-நாலாயி:1571/4–கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ -8-4-2– நாலாயி:1679/4-பூத்துச் செவ்வியை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ-–8-4-4- – நாலாயி:1681/4-பூமிக்கு ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –(கிருஷ்ணன் கிருஷ் பூமி வாச -கிருஷ்ண துளஸீ –சாத்திக் கொண்ட தாலேயே கறுத்த திருமேனி என்றும் –அவன் ஸ்பர்சத்தாலே இதுவும் கறுப்பானது )
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-5–நாலாயி:1682/4-பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –
தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-6–நாலாயி:1683/4-ஆதி ராஜ்ய பிரகாசமான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான செவ்வியை உடைத்தான திருத் துழாயிலே படிந்து இங்கே வந்தூதப் பாராய் –(இவனே தேவாதி ராஜன் கோள் சொல்லிக் கொடுக்குமே )
தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – ––8-4-7–நாலாயி:1684/4-மாலையாய்
பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் ––8-5-2– நாலாயி:1689/2–ஒரு பிரயோஜனத்துக்காக போகில் இறே அத்தைக் கொடு போகல் ஆவது –
வரை போலே இருக்கிற திரு மார்பிலே இரண்டருகும் அருவி விழுந்தால் போலே இட்ட மாலையைப் பெற வேணும் என்னும் ஆசையாலே போன நெஞ்சானது ஒரு கால் மீளுகை அன்றிக்கே அங்கே அதி மாத்ர பிராவண்யத்தை உடைத்தாய்க் கொண்டு கால் தாழ்ந்தது –
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – 9-5-4-நாலாயி:1791/1–கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற ஒரு மணி யாய்த்து –மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – -திரு நெடும் தாண்டகம்–-25-நாலாயி:2076/2–இத்தால் ஒப்பனை அழகு சொல்கிறது-தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று அதி பரிமளிதமான திருத் துழாயாலே அலங்க்ருதமான வளையத்தின் கீழே –வைத்த வளையத்தின் கீழே திருத் தோள் அளவும் வரத் தாழ்ந்து பரபாக ரூபத்தாலே விளங்கா நின்றுள்ள திரு மகரக் குழையும் காட்டி –பிரிந்ததுக்கு மேலே –திருவடி திருத் தோளிலே ஏறி இவள் முன்னே சாரிகை வந்து -(புள்ளூறும் கள்வா கீழே உண்டே ) தனக்கு உள்ளதை அடையக் காட்டி இங்குள்ளத்தை அடையக் கொண்டான் -என்கிறாள் –இத்தால் ஒப்பனையோடு ஆபரணத்துக்கு உண்டான சேர்த்தி அழகு சொல்லுகிறது-
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து – இரண்டாம் திருவந்தாதி –-22-நாலாயி:2203/4-பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது இல்லையோ – ஆன பின்பு அதிலும் ஒரு குறையில்லை –
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால் – –23--நாலாயி:2204/1–த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும் என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –
தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த – நாலாயி:2331/2
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது –53- நாலாயி:2234/1,2–புறம்புத்தை அந்ய பரத்தையடைய அற்றுத் திருமலை யாழ்வார் பக்கலிலே அனுசந்தானத்தை யுடையராய்க் கொண்டு வழி பட ஆஸ்ரயிக்கிற வர்களுடைய குழல் கற்றையிலே –அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி –மூன்றாம் திருவந்தாதி-70– நாலாயி:2351/1-மஸ்தகஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும் பாய்த்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே –மதம் மிகைத்துக் கொண்டு வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இறே – அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் -கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தைக் கொண்டு கால் கழுவி
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் –-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி –11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி
வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு-என்று அந்வயம்
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ – சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –
தற்கச் சமணரும் சாக்கிய பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும் -99- நாலாயி:2889/1,2-தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் -தன்னை ஈஸ்வரன் என்று பிரமித்து லோகம் எல்லாம்-ஆராதிக்க வேண்டும் என்று -அதுக்கு தகுதியாக தீர்க்க ஜடையைத் தரித்து கொண்டு -சாதனா-வேஷத்தோடு இருந்து -மோஹா சாஸ்தராணி காராய -என்கிறபடியே -பகவத் அனுமதியாலே மோஹா சாஸ்த்ரத்தை-பிரவர்த்திப்பித்த ருத்ரனுடைய வசனமான ஆகமத்தை அதிகரித்து போந்து -அதி தாமசராய் இருக்கும் பாசுபதரும் –பௌ த்தரை எடுத்த உடனே பாசுபதரை எடுத்தது –அவர்களோபாதி இவர்களும் வேத பாஹ்யர் என்னும் இடம் தோற்றுக்கைக்காக –
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது —–2-10-2– நாலாயி:3111/1-சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக புத்தி பண்ணாதே -என்னுதல்
சதிரிள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே -என்னுதல்-கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் –கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் –இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்-ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல்-அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்-பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை-பக்தாநாம் தவம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3-3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப – 4-7-10–நாலாயி:3306/1-திரு வாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -என்று இவ்வுக்தியோடே தரைப்பட்டு இவருடைய அவசாதனத்தினுடைய எல்லை காண்பது கண்ண நீரிலே யாயிற்று
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –5-5-8– நாலாயி:3392/4-தர்ச நீயமாக கண்டால் மறக்கப் போகாத குழல்கள் வந்து அலை எறியா நிற்பதாய் அணைக்கப் பாங்கான தோளும்-மொய் -அழகு-பாவியேன் -முன்னே நில்லா நிற்க அனுபவ யோக்யம் அல்லாத பாபத்தைப் பண்ணினேன் -கண் வட்டத்தில் தோற்றா நிற்க அணைக்க எட்டாது இருக்கிறதே –அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.-கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.
செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்-7-3-3- – நாலாயி:3585/1,2–பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று -பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி
இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் -8-5-11– நாலாயி:3725/2–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply