ஸத்யம் ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம் முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந் ஜபத் யநுதிநம மரணே ருணீவ | பாஷாண காஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்.
மனிதர்களே ! நான் கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச் சொல்லுகிறேன். (ஊக்கமாகக் கேளுங்கள்) யாவனொருவன் ஜீவித்திருக்கும் போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத் தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும் ஜபம் செய்கிறானோ அவன் திறத்தில் நான் கடன் பட்டவன் போல் இருந்து, அவன் மரணமடையும் போது, கல்லைப் போன்றும் கட்டையைப் போன்றும் நினைவற்றுக் கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன், என்பது இதன் பொருள்.
விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த -ஸ்ரீ அம்ருத பலா வளி-22-
கடிகாசைல வன ப்ரிய – கடிகை மலைக் காட்டை விரும்பி யுறையும் பெருமானே ! பாக்ய லக்ஷ்மீ விரஹ – அத்ருவடமென்னும் செல்வமில்லாமையின், விலாஸ ஆத்த விக்ரியா: மநுஜா: – திருவிளை யாடலால் மன வேறுபாடு கொண்ட மனிதர்கள், ஸ்ரவண அம்ருதேஷு – செவிக்கு அமுதம் போல் இனிய, தே வசஸ்ஸு – தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகளில், ஸ்ரத்தாம் – நம்பிக்கயை, ந விதததி – வைப்பதில்லை.
பாக்யமற்றவர்கள் மேன்மேலும் ஸம்ஸாரத்திலேயே வருந்துவதற்கு உறுப்பாகக் காமம் குரோதம் முதலிய மாறுபட்ட எண்ணங்களையே எண்ணி நசித்துப் போகிறார்கள். நரசிம்மப் பெருமாளுடைய சரம ஸ்லோககத்தில் நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து மோக்ஷம் பெறுகிறார்களில்லை என்று கவி தம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கிறார். இதனால் “ஸத்யம் ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம் முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந் ஜபத்யநுதிநம மரணே ருணீவ | பாஷாணகாஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்.
மனிதர்களே ! நான் கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச் சொல்லுகிறேன். (ஊக்கமாகக் கேளுங்கள்) யாவனொருவன் ஜீவித்திருக்கும் போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத் தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும் ஜபம் செய்கிறானோ அவன் திறத்தில் நான் கடன் பட்டவன் போல் இருந்து, அவன் மரணமடையும் போது, கல்லைப் போன்றும் கட்டையைப் போன்றும் நினைவற்றுக் கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன், என்பது இதன் பொருள். வசஸ்ஸு என்ற பஹு வசனத்தினால் வராஹ சரம ஸ்லோகம், ஸ்ரீராமசரம ஸ்லோகம், ஸ்ரீக்ருஷ்ண சரம ஸ்லோகம் ஆகியவற்றையும் கொள்ளக் குறையில்லை –
விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யுர் ம்ருத்யும் நமாம்யஹம்
உக்ரரூபமாய், வீரமானவராய், மஹாவிஷ்ணுவின் அவதாரமாய்,பிரகாசமானவராய் ,தன்சக்தி பரிமளிப்பவராய், மங்களகரமானவராய், அழிவுக்கு காரணமான விஷயங்களை அழிப்பவரான ந்ருஸிம்ஹரை வணங்குகிறேன்.
——————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply