முதற்பத்தில் முதற்பதிகம்--உயர்வறவுயர் நலம் -இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்!
புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான் நிர்க் குணனல்லன், ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார். இதனால், எம்பெருமான் தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி இவ்வாழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டமை விளங்கும்,
குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதல் என்றும் ஸ்வரூப மாகவே அடிமைப் பட்டிருத்தல் என்றும் இருவகைப்பட்டுள்ள தான அடிமையில் குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும் ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும், ஆழ்வார் தம்மை எம்பெருமான் அகப்படுத்திக் கொண்டது திருக்குணங்களைக் கொண்டாதலால். தாம் இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும் ஆழ்வார்க்குக் குறைவற்ற தென்னுமிடம் “ஆகிலுங் சொடியவென்னெஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே என்ற
பாசுரத்தால் வெளியிடப்படுகின்றமை காண்க, மற்றும் எம்பெருமானுடைய பரத்துவத்துக்கேற்ற பல தன்மைகளையும், சரிதைகளையும் அருளிச் செய்து தலைக்கட்டுகிறார் இப்பதிகத்தை. ஆகவே இப்பதிகம் எம்பெருமானுடைய பரத்துவத்தை வெளியிடுவதாகும்,
முதற்பத்தில் இரண்டாம் பதிகம்--வீடுமின் முற்றவும் -ஆழ்வார் தாம் அநுபவிக்கும் பகவத் விஷயம் தனியே அநுபவிக்கக்கூடிய தல்லாமையாலே *மச்சித்தா மத்கதப்ராணா : போதயந்த : பரஸ்பரம்* என்று கீதாசார்யன் பணித்தபடியே பிறரோடு உசாவியே போதுபோக்கித் தரிக்க வேண்டியவரான தாம் அப்படிப்பட்ட அதிகாரிகளைப் பெறுதற்காக நாற்புறமும் கண்வைத்துப் பார்த்தார்; எல்லாரும்ஸம்ஸாரிகளாயிருந்தனர் தாம் பகவத் விஷயத்திலே ஊன்றியிருக்கிரிப்போலே அவர்கள் விஷயாந்தரங்களிலே ஊன்றியிருக்கக் கண்டார் ஆழ்வார், அன்னவர்களுடைய அர்த்தத்தைத் தவிர்க்காமல் நிற்கமாட்டிற்றிலர். -அவர்களை எப்படி. மீட்கலாமென்று பார்த்தார். “இவர்களோ சேதநராயிருந்தார்கள் ; விஷயாந்தரங்களிலே வாசியறிந்து தீயவற்றைக் கழித்து நல்லவற்றைக் கைக்கொள்பவராயிரா நின்றார்கள் ; காய்கறி முதலானவற்றிலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லவற்றைப் பரிக்ரஹிக்கவும் தீயவற்றைப் பரிஹரிக்கவும் வல்லவரான இவர்கள் இன்னமும் சிறிது ஆராய்ச்சியைச் செலுத்த மாட்டாதே யிராறின்றார்கள் ; பகவத் விஷயத்தின் நன்மையையும் விஷயாந்தரங்களின் தீமையையும் நாம் எடுத்துக் காட்டினால் உண்மையை ஆராய்ந்து பார்த்து ஹேய விஷயங்களை விட்டு உபாதேய விஷயத்தைப் பற்றக் கூடுமே; ஆதலால் அதை உபதேசித்துப் பார்ப்போம் '' என்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானுடைய நன்மையையும், ஸம்ஸாரிகள் பற்றிக் கிடக்கிற விஷயாந்தரங்களின் அற்பத்தன்மை, அஸ்த்ரத் தன்மை முதலிய வற்றையும் அருளிச் செய்யா நின்று கொண்டு விஷயாந்தரங்களில் நசையற்று பகவத் பக்தியைப் பண்ணுங்கோளென்று உபதேசிக்க இழிகிறார்.
முதற்பத்தில் மூன்றாம் பதிகம்--பத்துடையடியவர் -முதற்றிருவாய் மொழியில் எம்பெருமானுடைய பரத்துவத்தைப் பேசினார். அங்ஙனம் பரனான அப்பெருமானைப் பஜியுங்கோளென்று இரண்டாந் திருவாய் மொழியில் உபதேச ரூபமாக அருளிச் செய்தார். அங்ஙனம் உபதேசித்த ஆழ்வாரை நோக்கி ஸம்ஸாரிகள் “ஸ்வாமிந்! பஜியுங்கோள், பஜியுங்கோள் என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர் ; இருகை முடவனை நோக்கி *ஆனையேறு, ஆனையேறு என்றால் அவனால் ஏறப்போமோ? அப்படியே, ஸர்வேச்வரனாய். **நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்!” என்னும்படி மிகப்.பெரியனாயிருக்கின்ற அவனை நீசரான ஸம்ஸாரிகளாலே பற்றப் போமோ? என்ன, அவ்வானை தானே அவ் விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குங்கால் ஏறத் தட்டில்லையன்றோ | அப்படியே ஸம்ஸாரிகளுக்குப் பஜிக்கலாம்படி அவன் தன்னைத் தாழவிட்டு எளியனாமாகில் பஜிக்கத் தட்டில்லையே," யென்கிறார். எம்பெருமானுடைய: பரத்வத்தை எவ்வளவும் பேசலாம்; எளிமையைப் பேசுவதென்பது அரிது; அப்படிப்பட்ட பெரியவன் இப்படித் தாழ நின்றானே !' என்று *உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோரப் பேசவேண்டிய விஷயமாகையாலே தெளிந்திருந்து பேசப்போகாதே! ஆழ்வாரை ஆறு மாதம் மோஹிக்கப் பண்ணின விஷயமாயிற்று இது.
முதற்பத்தில் நான்காம் பதிகம்--அஞ்சிறைய -எம்பெருமானை அநுபவித்தல் பலவகைப்பட்டிருக்கும்; அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், திருக்கல்யாண குணங்களைச் சொல்லி யநுபவித்தல், வடிவழகை வருணித்து அநுபவித்தல், அவனுகக்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல், அங்கே அபிமானமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசியநுபவித்தல், -- என் இப்படி பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம், இவ்வகைகளில் பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது - ஆழ்வார் தாமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பேசியநுபவித்தல். இப்படி அதுபவிக்குந் திறத்தில், தாய்பாசுரம், தோழி பாசுரம், மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு, அப்போது ஆழ்வாருக்குப். “பராங்குசர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கி. *பராங்குசநாயகி' என்று பெண்மைப் பெயர் வழங்கப்பட்டு வரும், தாய் சொல்வது போலவும், தலைமகள் சொல்வது போலவும், தோழி சொல்வது போலவும் பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரம் பேசுகிறவர் ஆழ்வாரே யாவர், ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகினாலும் அவற்றுக்குப் பிரதானமான பெயர் ஒன்றேயா யிருக்குமா போலே, இம்மூன்று. நிலைமைகளாகச் சொல்மாலை வழிந்து புறப்பட்டாலும் “அமர் பொழில் வளங்குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்"' என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும். ஆழ்வார் தரமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீ பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் ஏதுக்காக வென்னில் ஆழ்வார் தாமாக, ஏறிட்டுக் கொள்கிறாரல்லர்; அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது. புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமடங்கப் பெண் தன்மையதா யிருக்கையாலும், ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமே யின்றிப் பாரதந்திரியமே. வடிவாயிருக்கையாலும் இவ்வகைகளுக்கேற்ப ஸ்த்ரீ பாவனை வந்தேறியன்று என்றே கொள்ளலாம். நாயகி பாசுரமாகச் செல்லுகிற இத்திருவாய் மொழியில் சில பறவைகள் தூது விடப்படுகின்றன. அப்பறவைகள் ஞானமும் அனுட்டானமும் நிரம்பிய ஆசாரியர்கள் என்பதை வியாக்கியானங்களில் விளங்கக் காண்க.
முதற்பத்தில் ஐந்தாம் பதிகம்--வளவேழுலகு -ஆழ்வார் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் எம்பெருமானுடைய ஒவ்வொரு குணத்தை வெளியிட்டுக் கொண்டு வருகின்றாரன்றோ. -முதல் திருவாய்மொழியில் பரத்துவத்தைப் பேசினார். இரண்டாம் திருவாய்மொழியில் பஜநீயத்வத்தையருளிச் செய்தார். மூன்றாந்
திருவாய்மொழியில் ஸெளலப்யத்தை வெளியிட்டார். கீழத் திருவாய்மொழியில் அபராத ஸஹத்வத்தை ஆவிஷ்கரித்தார். இத் திருவாய்மொழியில் சீல குணத்தை விளக்கி யருளுகிறார். எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களெல்லாவற்றினுள்ளும் சீலகுணமென்பது மிகச் சிறக்கும், பராத்பரனான தான்: -நம் போல்வாருடைய அற்பத்தனத்தைச் சிறிதுங் கணிசியாது -தன்னைத் தாழவிட்டுக்கொண்டு நம்மோடு புரையறக் கலந்து, பழகுந்தன்மையே சீலமெனப்படும், இது ஸெளசீல்யமென்றும்
வழங்கப்பெறும். “'மஹதோ மந்தைஸ்ஸஹ நீரந்த்ரேண ஸம்ச்லேஷ: ஸெளசீல்யம்' என வடமொழியாளர் இக்குணத்திற்கு லக்ஷ்ணாங்கூறுவர். மஹானாயிருப்பவன் மந்தர்களோடு நெருங்கிப் பழகுவதே சீலம் என்றவாறு. அத்திருக்குணம் இப்பதிகத்தில் தம்முடைய அனுபவ முகத்தாலே விவரிக்கப்படுகிறது.
முதற்பத்தில் ஆறாம் பதிகம்--பரிவதிலீசனை ஒவ்வொரு திருவாய்மொழியிலும் எம்பெருமானுடைய ஒவ்வொரு திருக்குணத்தை அநுபவித்து வெளியிட்டுவருகிற முறைமையில், இத்திருவாய் மொழியில் “ஆராதனைக்கெளியன்' என்கிற ஒரு திருக்குணத்தை வெளியிட்டருள்கிறார். இக்குணம் வடமொழியில் “ஸ்வாராதத்வம்' எனப்படும், சிரமமின்றி எளிதாகவே ஆராதிக்க உரியனாயிருக்குந் தன்மை என்றவாறு. இதர தெய்வங்களிற் காட்டில் எம்பெருமான் எத்தனையோ விதங்களால் நெடு வாசி பெற்றிருப்பது போலே இவ் வகையாலும் நெடு வாசி பெற்றிருப்பன்-“ஆடு பலிகொடு, கோழி பலிகொடு' என்று அருந் தேவைகளை யிட்டு மஹா பரிச்ரம ஸாத்யங்களான ஆராதனைகளை அபேக்ஷித்திருக்கும் தேவதாந்தரங்கள்; எம்பெருமான் படியோ அப்படியன்று; -நாம் இட்டது கொண்டு த்ருப்தி யடைவதே அவனது ஸ்வரூபம், என்பது சாஸ்த்ரங்களில் தேர்ந்த விஷயம். அதுவே இத்திருவாய்மொழிக்கு ப்ரமேயம்.
முதற்பத்தில் ஏழாம் பதிகம்--பிறவித் துயரற -கீழ்த் திருவாய்மொழியில் எம்பெருமான் ஆராதனைக்கு அரியனல்லன், மிகவும் எளியன் என்பதை அருளிச் செய்தார், ஆராதனம் எளிதாயிருந்தாலும் ஆச்ரயணம் இனிதாயிருந்தா லன்றோே நெஞ்சு பொருந்தும்; உலகில் பல பேர்கள் நரம் இட்டது கொண்டு பரம திருப்தி யடையுமவர்களாய் ஆராதனைக்கு எளியரா யிருக்கக் கூடும்; இருந்தாலும் அவர்களுடைய ஆச்ரயணம் நமக்கு இனிமை மிக்கதாயிருந்தா லன்றிப் பயனில்லை யன்றோ : அப்படியே எம்பெருமானும் ஆராதிக்க எளியனானாலும் ஆச்ரயணத்தில் ஸாரஸ்ய முடையனாயிருக்க வேண்டுவதொன்று உண்டாதலால் அஃது அப்படியே உண்டென்பதை இத்திருவாய்மொழியிலருளிச் செய்கிறார். பகவத் ஸமாச்ரயணமாகிறது தான் இதுக்கு இட்டுப் பிறவாத ஸர்வேச்வரனும் ஆசைப்படும்படி போக ரூபமாயிருப்பதொன்றிறே” என்பது நம்பிள்ளை யருளிச் செயல். தன்னுடைய வைலக்ஷண்யத்தை எம்பெருமான் தானும் பார்த்துத் தனக்குத் தானே அடிமை செய்து கொள்ள விரும்பும்படியாயிருக்கு மென்று ஒரு அதிசயோக்தியாக இது அருளிச் செய்தபடி. “இப்படியும் இருக்குமா ? எம்பெருமான் அவ்வளவு உன்மத்தனா?” என்று சிலர் நினைத்துவிடக்கூடும் ; “எம்பெருமானுடைய இனிமை ஒப்புயர் வற்றது' என்று காட்டுவதில் மட்டுமே இந்த ஸ்ரீஸூக்தி நோக்குடையதென்று கொள்க.
முதற்பத்தில் எட்டாம் பதிகம்--ஒடும்புள்ளேறி -ஒவ்வொரு திருவாய்மொழியிலும் எம்பெருமானுடைய ஒவ்வொரு குணத்தை அநுபவித்துப் பேசிவருகின்ற * ஆழ்வார்;
கீழ்த் திருவாய்மொழியில் அவனது இனிமைக்குணமென்கிற பரம போக்யதையை அநுபவித்துப் பேசினார்; இத்திருவாய்மொழியில் அவனது ஆர்ஜவ குணத்தை அநுபவித்துப் பேசுகிறார். ஆர்ஜவமாவது- ௬ுஜுவாயிருக்குந்தன்மை. மனத்தி
லுள்ளது ஒன்றும், வாயாற்சொல்லுவது வேறொன்றும், காரியத்தில் நடத்துவது பிறிதொன்றுமாயிருக்கை யன்றியே மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருத்தல் ஆர்ஜவமெனப்படும். இதற்குத் தமிழில் செம்மை. என்று பெயர், இக்குணம் இத்திருவாய்மொழியில் அநுபவிக்கப்படுகிறது. ஸம்ஸாரிகள், நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிராமல் பல வகைப் பட்டிருத்தலால், அன்னவர்களோடு எம்பெருமான் தான் பரிமாறுமிடத்தில் அவர்கள் போனவழியே தனக்கு வழியாம்படித் தான் அவர்கட்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை இங்குச் செம்மை எனப் படுகின்றது,
முதற்பத்தில் ஒன்பதாம் பதிகம்-இவையுமவையும் -எம்பெருமானிடத்தில் [ஸாத்ம்ய போக ப்ரதத்வம்] என்றொரு குணமுண்டு ; அதாவது, அடியார்களுக்குத் தன்னை அநுபவிப்பிக்குமிடத்தில் ஏககாலத்திலேயே பூர்ணாநுபவங் கொடுத்துவிடுகையன்றியே பொறுக்கப் பொறுக்கச் சிறிது சிறியதாகக் கொடுத்தலாம், அங்ஙனங் கொடாமல் ஒரடியிலேயே பூர்ணாநுபவத்தைத் தற்தருளினால் அது தாங்கமுடியாதே போகும், சிறு குழந்தைகட்கு. முதல்தன்னிலேயே சோறும் சாறும் கறியுமிடுவாரில்லையே ; பால், கஞ்சி, சோறு என்று வரிசைக் கிரமமாக ஊட்டுகை யன்றோ வுள்ளது: அது போலவே மாணாக்கர்களுக்கும் சிறு சிறு பாடங்களாகக் கற்பித்துக் கொண்டு போய்ப் பெரும் பாடங்கள் கற்பிக்கும் முறை காணா நின்றோம். இங்ஙனமே எம்பெருமானும் பொறுக்கப் பொறுக்கப் பரிமாறும் வகை யொன்றுண்டு: அஃது இத்திருவாய் மொழியில் விளங்கும். அதாவது, ஆழ்வாருடைய திருமுடியிலே வந்து வீற்றிருக்க வேணுமென நினைத்த எம்பெருமான் முதலடியிலே அது செய்தால், நிதிகண்ட ஜன்ம தரித்ரன் போலே ஸந்தோஷாதிசயம் தாங்க மாட்டமே தளர்ற்திடுவர் ; ஆதலால், சற்றுப் பக்கத்திலே நின்று, அருகே நின்று, கூட நின்று, ஒக்கலையிலே. வந்திருந்து, ஹ்ருதய ப்ரதேசத்திலே வந்திருந்து, தோளிலே வந்திருந்து, நாவிலே வந்து புகுந்து, கண்ணுள்ளே நின்று, நெற்றியிலே நின்று பிறகு உச்சியிலே நின்றான் ; ஆக விங்ஙனே பொறுக்கச் பொறுக்கக் செய்த செயலை யநுபவித்து ஈடுபடுகிறாராழ்வார் இத் திருவாய்மொழியில்,
முதற்பத்தில் பத்தாம் பதிகம்--பெருமாநீள்படை-எம்பெருமானுடைய அநுக்ரஹம் நிர்ஹேதுகம் என்பது இத் திருவாய்மொழியில் அநுபவித்தருளிச் செய்யப்படுகிறது. கீழ்த் திருவாய்மொழியில் எம்பெருமான் தம்மோடே அவயவங்கள் தோறுங் கலந்த கலவியை அருளிச் செய்த ஆழ்வார் அந்தத் கலவியால் தமக்குப் பிறந்த அளவிலாத ஆனந்தத்தை இத்திருவாய்மொழி முகத்தால் வெளியிடுகிறார் என்று இங்ஙனே சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பதுண்டு. பட்டர் விசேஷித்து நிர்வஹிப்பராம்--எங்ஙனே யென்னில் ; கீழ்த் திருவாய் மொழியில் “வந்து எனதுச்சி யுளானே” என்றும் “உச்சி யுள்ளேறிற்குந் தேவதேவற்கு?! என்றும் தலைக் கொண்ட அநுபவம் தமக்குக் கிடைத்ததாக ஆழ்வாரருளிச் செய்தார். இனி அவ் வநுபவத்திற் காட்டிலும் ஏற்றமாகச் செய்து. கொடுக்கக் ௯டிய வேறு அநுபவம் என்ன இருக்கிறது ? ஒன்றுமில்லை. அவ்வநுபவம் இடையறாது தொடர்ந்து செல்லுமாறு செய்து கொடுக்க வேண்டுமத்தனையே யுள்ளது. அது எம்பெருமான் திருவுள்ளத்தைப் பொறுத்த விஷயம். அது நிற்க. ஆழ்வார் கீழ்த்திருவாய்மொழியில் தமக்குப் பிறந்த பேற்றை ஆராய்ந்து பார்த்து இப்போது நமக்குக் கிடைத்த பேறோமிகவுங் கனத்திருக்கின்றது- இதிற் காட்டிலும் உத்தமமான பேறு வேறொன் றில்லை: இத்தகைய பேறு நமக்கு வந்த வழி என்ன ? என்று விமர்சிக்கத் தொடங்கினார். இப் பேற்றிற்குத் தகுதியா யிருப்பதொரு நன்மை, அதாவது *இதற்குத் தக்க [ஸாதநாநுஷ்டாநம்] தம்மிடத்தில் ஒன்றுமில்லை யென்பதைத் தெரிந்து கொண்டார்; தம் தலையில் ஏதேனுமிருந்தாலும், அத்வேஷமோ ஆபிமுக்யமோ இருக்குமே யன்றி வேறொன்றிருப்பதாகக் காணவிடமில்லை, அவை ஸாதனமாக நினைக்க வொண்ணாதவை। இத் தலையிலே பரமபக்தியளவும் பிறந்தாலும் தம்மிடத்திலே ஸாதனமாக மதிக்கலாவதொன்றில்லையே, ஆகவே இவ் வனுக்ரஹம் றிர்ஹேதுகம் என்று தலைக்கட்டுகிறார்.
இரண்டாம்பத்தில் முதல் பதிகம் வாயுந்திரையுகளும் ஸம்ஸாரிகள் உலகத்திலுள்ளாரெல்லாரையும் தங்களைப் போலவே உண்டியே உடையே உகற்தோடுபவர்களாக நினைத்தல் போலே ஆழ்வாரும் உலகிலுள்ள ஸகல பதார்த்தங்களும் தம்மைப் போலவே எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தினால் நோவு படுகின்்றனவாகக் கொண்டு,-நாரை, அன் றில், கடல், காற்று, சந்திரன் முதலிய பதார்த்தங்களை நோக்கி அவற்றுக்குண்டான சில தன்மைகளை இயற்கையாகக் கருதாது பகவத் விச்லேஷ வ்யஸநத்தினா லுண்டானவையாகக் கொண்டு அவற்றுக்குமாகத் தாம் அனுசோகிக்கிறார். நாரை முதலியவற்றையும் தம்மியல்வினவாக வெண்ணி ஒவ்வொன்றையும் நோக்கி “நீயும் என்னைப் போலே பகவத் விஷயத்தில் ஆசை வைத்து விருப்பத்தின்படி கிடைக்கப் பெறாமையினாலே நோவுபட்டாயோ ? என்று பேசுகிறபடியாய்ச் செல்லுகின்றது. இத்திருவாய்மொழி. அடியவர்களை இங்ஙனம் பிச்சேறப் பண்ணுமவன் எம்பெருமானென்று இதனால் அவனுடைய உன்மாதாவஹத்வமென்கிற குணம் (பித்தேற்றுகை) சொல்லப் பட்டதாகும்
இரண்டாம்பத்தில் இரண்டாம் பதிகம் -திண்ணன்வீடு -கீழ்த் திருவாய்மொழியில் ஆழ்வார்க்கு உண்டான நிலைமை லோக விலக்ஷணமாக விருந்தது. பேச்சுக்கு நிலமல்லாத ஆற்றாமையிலே இருந்தார்; ஆற்றாமை கரை புரண்டதாகுங் காலத்திலே எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆச்வஸிப்பித்தல் முறைமையாதலால் அவன் அங்ஙனமே வந்து முகங்காட்டினன்1 உடனே அந்த ஆற்றாமை போனவிடந் தெரியாமே போயிற்று. உடனே தேறுதலடைந்த ஆழ்வார், எம்பெருமானுடைய பரத்வம் ஸெளலப்யம் என்கிற இரண்டு குணங்களிலே ஸெளலப்யமானது பேசப் பேச உருகப் பண்ணுமாதலால், “இப்போதுதான் சிறிது தேறுதலடைந்த நாம் அந்த ஸெளலப்ய குணத்தைப் பேசி நெஞ்சழிய வொண்ணாது ; *நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெ யூணென்னு மீனச்சொல்லே *என்கிறபடி யல்லாமல் தரித்து நின்று பேசலாம் படியான பரத்வத்தைப் பற்றிப் பேசுவோம்! என்றெண்ணி! அதனைப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில், *உயர்வறவுயர்றலம் என்கிற முதல் திருவாய்மொழியிலும் பரத்வம் பேசப்பட்டிருந்தாலும் இங்குப் பேசுகிறபடியில் வைலக்ஷண்யமுண்டு. அங்கு ஸ்வாநுபவரூபமாகவே சென்றது; இங்கு உபதேச ரூபமாகவுமுள்ளது. அங்கு அந்வய முகத்தால் அருளிச் செய்யப்பட்டது ; இங்கு அந்வய வ்யதிரேகங்களிரண்டினாலும் அருளிச் செய்யப்படுகிறது. [எம்பெருமானே பரத்வமுடையவன் என்று சொல்லுதல் அந்வய முகத்தாலே சொல்லுதல், எம்பெருமானைத் தவிர்த்து மற்றை யோர்க்குப் பரத்வம் அஸம்பாவிதமென்று. நிரூபித்தல் வ்யதிரேக முகத்தாலே சொல்லுதல் அங்குப் பெரும்பாலும் உபஙிஷத்துக்களை அடியொற்றி அருளிச் செய்தார்; இங்கு இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அருளிச் செய்கிறார். அங்குப் பரத்வத்திலே பரத்வமருளிச் செய்தார்; இங்கு அவதாரத்தில் பரத்வமருளிச் செய்கிறார்-என்று இங்ஙனம் பல வாசிகள் காண்க,
இரண்டாம்பத்தில் மூன்றாம் பதிகம்--ஊனில் வாழுயிரே -இந்த மூன்றாம் திருவாய்மொழியானது இரண்டாம் திருவாய் மொழியாக இருந்திருக்க வேண்டும். முதல் திருவாய்மொழியில் [வாயுந்திரையுகளில்] பட்ட ஆர்த்தி தீர எம்பெருமான் வந்து ஸேவை ஸாதித்து ஸம்ச்லேஷ ரஸாநுபவத்தையும் கொடுத்தருள, அந்த ஆனந்தத்தைத் தெரிவிப்பதான இந்தத் திருவாய்மொழி முன்னமே அமைந்திருக்க வேண்டியதாயினும், எம்பெருமானுடைய பரத்வாநுபவம் இடையில் ப்ராஸங்கிகமாக ப்ராப்தமாயிற்று. இப்படிப்பட்ட பராத்பரனன்றோ நம்மோடு இங்ஙனே கலந்தருளினானென்று முந்துறப் பரத்வம் அநுஸந்தான விஷயமானபடியாலே அது சொல்லிற்றாயிற்று கீழ்த்திருவாய்மொழியில். அது பேசியானவாறே *வாயுந்திரையுகளில் ஆர்த்தி தீர வந்து ஸம்ச்லேஷித்ததனா லுண்டான இன்பம் இத்திருவாய்மொழியில் அருளிச் செய்யப் படுகிறது. இந்தப் பேரின்பத்தை யநுபவிப்பதற்கு உசாத் துணை யாவார் இந்நிலத்தில் ஆரேனுமுளரோ? என்று பார்க்கையில் *உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்திலே அப்படிப் பட்டாரொருவருங் கிடையாமையாலே எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளின் திரளிலே போய்ப் புகுந்து அவர்களோடு ஒரு 'கோவையாக அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிற குறையோடே. இத்திருவாய்மொழி தலைகட்டுகின்றது.
இரண்டாம்பத்தில் நான்காம் பதிகம்- ஆடியாடி -கீழ்த் திருவரய்மொழியில் “பரமன் பவித்திரன் சீர் அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே” என்று ஆழ்வார் தாம் பரமானமந்தமடைந்ததாக அருளிச் செய்து, அந்த குணாநுபவம் பாகவதர்களோடே கூடிப் பெரிய கோஷ்டியாக இருந்து செய்ய வேண்டியதாகையாலே அப்படிப்பட்ட அதிகாரிகள் இந் நிலத்தில் விசேஷமாகக் கிடையாமையாலே திருநாட்டிலே நித்ய ஸூரிகளின் திரளிலே சென்று புகுந்து அநுபவிக்க வேணுமென்று பாரித்து அந்தப் பாரிப்பைக்* களிப்புங் கவர்வுமற்று* என்ற பாசுரத்திலே காட்டினார். நினைத்த போதே அந்த நித்ய ஸூரிகளின் திரளிலே போய்ச் சேர்ந்து அநுபவிக்கப் பெறாமையினாலே மிகவும் வருத்தமடைந்தார். அந்த வருத்தத்தைத் தம்முடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற வகையாக இத்திருவாய் மொழியை அருளிச் செய்கிறார். ஆழ்வார் இப்போது தாமான தன்மையை யிழந்து நாயகீ ஸமாதியிலே நிற்கிறார். பராங்குச நாயகியான இவளுடைய நிலைமையைத் தாய்மார் முதலான அன்பர்கள் பேசுகிற பேச்சாக இத்திருவாய்மொழி அமைந்திருக்கின்றது. நாயகீ ஸமாதியாலே அருளிச் செய்த திருவாய்மொழிகள் கீழே இரண்டு சென்றன -- *அஞ்சிறைய மடநாராய் என்பதும் *வாயுந்திரையுகளும் என்பதும், அவை யிரண்டும் நாயகி தானே பேசின பேச்சாக இருக்கின்றன. அஞ்சிறைய மட நாராயில் தானே தூது விட்டாள் ; வாயுந்திரையுகளில்--கண்ணாற் கண்ட பொருள்களெல்லாம் எம்பெருமானைப் பெறாமையினாவே நோவு படுகின்றனவாகக் கொண்டு அவற்றுக்குமாகத் தான் நோவுபட்டாள், இத்திருவாய்மொழியிலோ வென்னில் அங்ஙனம் தன் வாயினால் பேச மாட்டாதபடி வேற்று வாயாலே பேசக் காண்கையாலே ஆற்றாமை கரை புரண்டமை விளங்குகின்றது. “ஸ்ரீராம க்ருஷ்ணாதிஅவதாரங்களைப் பண்ணி எல்லாருடைய ஆர்த்தியையும் (போக்குவதையே இயல்வாக வுடையீராயிருந்த நீர் உம்மிடத்திலே பெரும் பித்துக் கொண்டிருக்கின்ற இப் பெண்பிள்ளை இப்படி நோவுபடுமாறு பார்த்திருத்தல் தகுதியோ? இவள் திறத்திலே நீர் செய்ய நினைத்திருப்பது, என்ன ?” என்று எம்பெருமானை நோக்கித் தாய் கேட்கிற பாசுரமாக இத் திருவாய்மொழியுள்ளது. தாய்ப் பேச்சாக இருந்தாலும் பேசுகிறவர் ஆழ்வாரே யன்றோ ; அவர் ஏன் இப்படிப் பேச வேண்டும்? என்று கேட்கலாகாது. வேணுமென்று ஆழ்வார் இங்ஙனே பேசு கின்றாரல்லர்; அவருடைய அளவுகடந்த ஆற்றாமை உள்ளிருந்து வெளியே பேசும் போது இவ் வகையான பாசுரங்களாக வடிவு கொண்டதத்தனை. காவிரியாறு பெரு வெள்ளமாகப் பெருகி வரும் போது வெள்ளத்தின் மிகுதியினால் இடையிடையே உடைந்து வேறு சில வாய்க்கால் வழியாகவும் பெருகுவதுண்டு : அவையும் திருக் காவேரித் தீர்த்தமாகவே யிருக்கச் செய்தேயும் முடி கொண்டான் முதலான வேறு சில பெயர்களைப் பெற்று வழங்கா நிற்கக் காண்கிறோம். அதுபோலவே எல்லாம் ஆழ்வார் பாசுரமாகவே யிருக்கச் செய்தேயும் தாய் பாசுரம், தோழி பாசுரம் என்னும் வேற்றுமைகள் விளைகின்றன.
இரண்டாம்பத்தில் ஐந்தாம் பதிகம்--அந்தாமத் தன்பு கீழ்த் திருவாய்மொழியில் ஆழ்வார்க்குண்டான துயரம் முதலையின் வாயிலே யகப்பட்டுத் துடித்த கஜேந்திராழ்வானுடைய துயரத்தோடு ஒப்பிடலாயிருந்தது. அந்த கஜேர்திராழ்வான். “ஆதிமூலமே!” என்று கதறினபோது அக் கூக்குரல் கேட்ட வளவிலே **அதந்த்ரித சமூபதிப்ரஹிதஹஸ் தம் அஸ்வீக்ருதப்ரணீ த மணிபாதுகம் கிமிதி சாகுலாந்த:புரம் அவாஹறநபரிஷ்க்ரியம் பதக ராஜ மாரோஹத: கரிப்ரவரப்ர்ம்ணதே பகவதஸ்த்வராயை நம: [ீரங்ராஜஸ்தவம். ] என்னும்படியாகக் கனவேகத்தோடே மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய ஓடி வந்து காட்சி தந்து தானும் மகிழ்ந்து அவனையும் மகிழ்வித்தவாறு போல, ஆழ்வாருடையவும் “வலங்கொள் புள்ளுயர்த்தாய்'? என்ற கூக்குரலைக் கேட்டவுடனே (அந்தோ! நாம் ஜகத்தை நிர்வஹித்தபடி வெகு அழகியதாச்சுது ! நாம் ஆரானோம்!? என்று நொந்து, தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் அலங்காரம் திவ்யாயுதங்கள் சேர்ந்த சேர்த்தி இவை யெல்லாவற்றோடும் வந்து கலவி தந்து அதனாலே அவன் பரம ஸந்துஷ்டனாய் க்ருதக்ருத்யனா யிருக்கிற இருப்பை ஆழ்வார் அநுபவித்து அவ்வநுபவத்தி னாலுண்டான மகிழ்ச்சியின் மிகுதி யினால் இத்திருவாய்மொழியில், தாம் பெற்ற பேற்றைப் பேசி யநுபவிக்கிறார்.
இரண்டாம் பத்தில் ஆறாம் பதிகம்--வைகுந்தா --ஆடியாடி யென்னுந் 'திருவாய்மொழியில் ஆழ்வார் பட்ட ஆர்த்தி யெல்லாம் தீர எம்பெருமான் வந்து ஸம்ச்லேஷித்தமை, கீழ்த் திருவாய்மொழியில் சொல்லிற்று. அந்த ஸம்ச்லேஷத்தினால் எம்பெருமான் அளவு கடந்த த்ருப்தியை யடைந்தவனாய் *இவ்வாழ்வார்க்கு என்னவுதவி செய்வேன் றான் !, இவர்க்கு என்ன கொடுப்பேன் என்று தடுமாறி நிற்பவனாய், இவ்வாழ்வார் நைச்சியாநுஸந்தானம் பண்ணி “இப் பரமபுருஷனையா நாம் அணுகுவது ? நம்மால் இவனுக்கு நிறக் கேடு உண்டாகுமே! அஃது உண்டாகலாமோ? நாம் இவனை விட்டு ஒதுங்கி நிற்பதே நன்று? என்று
நினைத்து, ஒருகால் அகன்று போய்விடுவாராயின், அலப்ய லாபமான இதனை நாம் இழந்து விடுவோமே! இவ்வாழ்வார்க்கும் நமக்கு முண்டான இக் கலவி நித்யமாயிருக்க வேணுமே! என்று அதி சங்கை கொண்டிருக்கையில், அதைத் தெரிந்து கொண்ட ஆழ்வார் பிரானே ! இங்ஙனம் அதிசங்கை கொள்ளவேண்டா ; உன்னை நான் பிடித்த பிடி ஸாமான்யமன்று; இனி ஒரு நாளும்
உன்னை நான் விடமாட்டேனாம்படி திடமாகப் பற்றிக் கொண்டேன் காண்? என்று கூறி எம்பெருமானைத் தேற்றுகிறார் இத்திருவாய் மொழியில்,
இரண்டாம்பத்தில் ஏழாம் பதிகம்--கேசவன் தமர் --கீழ்த் திருவாய்மொழியில், ““எமர் கீழ் மேலெழு பிறப்பும் விடியா வெந்ரரகத்து என்றுஞ் சேர்தல் மாறினர்?” என்று--எம்பெருமான் தம்மிடதது வைத்த காதல் முன்னும் பின்னும் வெள்ளங்கோத்த படியைச் சிறிதளவாக ப்ரஸ்தாபித்தார் ; அந்த மஹோபகாரத்தைப் பெருக்கப் பேச வேணுமென்று ஆழ்வார்க்கு அபிநிவேச முண்டாயிற்று. அஃது இத்திருவாய்மொழிக்கு முக்கியமான ப்ரமேயமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களில், இது வொரு மிகச் சிறந்த குணம்: அதாவது-- ஒருவனை விஷயீகரிக்கத் திருவுள்ளம் பற்றினால், அந்த விஷயிகாரம் அவ்வொருதனளவிலே நில்லாமல், அவனோடு ஸம்பந்த ஸம்பந்தம் பெற்றாரளவிலும் கொந்தளிக்குமது. இவ்விஷயத்திற்குச் சார்பாக நம்பிள்ளே “மரணாந்தாஙி வைராணி நிர்வ்ருத்தம் ௩: ப்ரயோஜறம், க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரோ மமாப்யேஷ யதா தவ!” என்கிற ராமாயண ச்லோகத்தை யெடுத்துப் பரம ரஸமாக வியாக்யானித்து அருளியுள்ளார். அதன் சாரமாவது: விபீஷணாழ்வானிடத்தில் பெருமாளுக்கு உண்டான அன்பு ராவணனிடத்திலும் பெருகிச் சென்று, “இவனுக்கு நீ ஈமக் கடன் செய்தே யாக வேண்டும்' என்று வற்புறுத்தியது. இத்திருவாய்மொழியில் இவ்விஷயம் முக்கியமாகப் பேசப்படுகிறது, அன்றியும் இத்திருவாய்மொழியில் மற்றொரு விசேஷமுண்டு: அதாவது-கேசவன் முதலாகத் தாமோதரனளவாகவுள்ள துவாதச நாமங்களும் பாட் டுத்தோறும் வரிசைக் கிரமமாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன வென்பதாம், ஆனது பற்றியே, இப் பதிகம் மாத்திரம், மற்றைப் பதிகங்கள் போல் பதினொரு பாசுரங்கள் கொண்டதன்றியே பதின்மூன்று பாசுரங்கள் கொண்டதாயிருக்கின்றது.
இரண்டாம்பத்தில் எட்டாம் பதிகம்- அணைவதரவணை மேல் எம்பெருமானுக்குத் தம் பக்கலில் உண்டான வ்யாமோஹம் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளளவிலும் ஏறிப் பாய்ந்து அனைவரையும் விஷயீகரித்த படியைக் கீழ்த்திருவாய்மொழியில் அருளிச் செய்தார். அவ்வளவிலும் எம்பெருமான் பர்யாப்தி பெறாமல், நித்ய முக்தர்களுடையதான ஐச்வர்யத்தையும் தமக்கும் தம்மைச் சேர்ந்தவர்கட்கும் தருவதாக அவன் முயற்சி கொண்டிருக்கு மிருப்பை ஆழ்வார் கண்டு மிகவுமுகந்து, “நம்மோடுண்டான ஸம்பந்தமே ஹேதுவாக எம்பெருமான் இப்படி விஷயீகரிப்பவனா யிருக்கும் போது ஸம்ஸாரிகள் இழக்கலாமோ? அவர்களுக்கும் நம்மோடே ஒரு ஸம்பந்தத்தை யுண்டாக்கி, அவனுடைய விஷமீகாரத்திற்கு இலக்காக்குவோம்' என்று பார்த்து, அந்த ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்தருள 'இழிகிறார், இத்திருவாய்மொழியில்,
எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை இதில் உபதேசிக்கிறதாகச் சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பர்கள், அவனுடைய மோக்ஷ ப்ரதத்வத்தை உபதேசிக்கிறதாக பட்டர் அருளிச் செய்யும் படி, இந்த நிர்வாஹ பேதத்தில் விசேஷமான வ்யத்யாஸம்யாதொன்றுமில்ல; ஸர்வேச்வரனாயிருந்கால்தான் மோஷ ப்ரதனாக முடியும்; மோக்ஷ ப்ரதனுக்கே ஸர்வேச்வரத்வம் கூடும், -ஆதலால் இவை யிரண்டும் ஒன்றையொன்று விட்டிராவாகையால், எங்ஙனே நிர்வஹித்தாலும் குறையில்லை, ஆனாலும் “திண்ணன் வீடு* என்கிற திருவாய்மொழியில் ஸர்வேச்வரத்வம் பிரதிபாதிக்க்ப்பட்டபடியால், இத்திருவாய்மொழியில் பிரதிபாதிக்கப்படுவது,மோக்ஷ ப்ரதத்வமா யிருக்க வடுக்கும்-என்று போலும் பட்டர் திருவுள்ளம், **புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே”” என்றும் *- வீடு முதலாம்?” என்றும் ***நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்”" என்றுமுள்ள ஸ்ரீஸூக்திகளில் அதிக நோக்காக பட்டர் நிர்வஹிக்கும்படி யென்று கொள்க.
இரண்டாம்பத்தில் ஒன்பதாம் பதிகம் எம்மாவீட்டு -புருஷார்த்த நிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய்மொழியாமிது -அதாவது, கீழ்த் திருவாய்மொழியில் **நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” இத்யாதிகளாலே ஆழ்வார் திரு நாட்டைப் பற்றி ப்ரஸ்தாவஞ் செய்தது கண்ட எம்பெருமான், “இவர்க்கு மோக்ஷத்திலே ருசியாகில் அதை இவர்க்குக் கொடுத்து விடுவோமே! என்று திருவுள்ளம் பற்றி, *ஆழ்வீர்! நீர் அபேஷிக்கிற மோக்ஷத்தைக் கொள்ளும்' என்று அருளிச் செய்ய, அதுகண்ட ஆழ்வார், “எம்பெருமான் இங்ஙனே 'சொல்லிக் கொடுக்கிற மோக்ஷம் நமக்கு ஏதுக்கு? நம்முடைய அபேஷிக்கிறத்தை நிறைவேற்ற வேணுமென்கிற திருவுள்ளத்தோடே அவன் தந்தருளும் மோக்ஷம் நமக்குப் புருஷார்த்தமாகுமோ? அவன்றன்னுடைய ருசிக்கீடாகக் கொடுத்தருளினால் அது பாங்கேயல்லது நம்முடைய ருசிக்காகக் கொடுக்குமது நமக்கு நரகத்தோடொக்குமத்தனை? என்று திரு வுள்ளம் பற்றி, “பிரானே! நான் முக்தனாகி எல்லையிலின்பம் அநுபவிக்கவுமாம் ; கைவல்யாநுபவத்தைப் பெறவுமாம்; ஆத்ம விநாசமே யாகவுமாம் ; நரகாநுபவம் பண்ணவுமாம் ; இவற்றில் எனக்கு ஒரு நிர்ப்பந்தமில்லை ; உன்னுடைய ருசிக்கீடாக வருமதாகில் இவை யித்தனையும் வரவுமாம்; எனக்காக வருமதாகில் மோக்ஷமும் வேண்டா ; ஆனபின்பு, தேவரீருடைய ருசிக்கு ஏற்றது எதுவோ, அதுவே எனக்கு ப்ராப்யமாம்படி பண்ணி யருள வேணும்,” என்கிறாராயிற்று. “எம்பார் இத்திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால், இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, குஹ்யமாகவாம் அருளிச் செய்வது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தி யறிக. இத்திருவாய் மொழியின் ப்ரமேயத்திற்கு அதிகாரிகள் துர்லபர் என்று காட்டின படி,
இரண்டாம் பத்தில் பத்தாம் பதிகம்- கிளரொளி -கீழ்த் திருவாய்மொழியில் நிஷ்கர்ஷிக்கப்பட்ட பேற்றைப் பெறுதற்குத் திருமாலிருஞ் சோலை மலையை ஆச்ரயிக்கிறார் என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும்படி,எம்பெருமானார் அதை இன்னமும் இனிமைப்படுத்தி யருளிச்செய்வர். -அதாவது-கீழ்த் திருவாய்மொழியில் “ஒல்லை, ஒல்லை! என்றும் 'காலக்கழிவு செய்யேல்! என்றும், பகவத் கைங்கரியத்திலே தமக்குண்டான பதற்றத்தை ஆழ்வார் வெளியிட, அதுகண்ட எம்பெருமான், ஆழ்வார் இப்படிப் பதறுவது இந்த சரீரத்தோடேயே கைங்கரியம் செய்யவேணு மென்கிற விருப்பத்தாலே போலும்! என்றெண்ணி, இவர்க்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோவென்று இந் நிலவுலகத்தில் கடாக்ஷித்து வருகையில், *வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலையைக் கண்டு, இது சாலவும் பாங்கான இடமாயிரா நின்றது. என்று திருவுள்ளம் பற்றி, அங்கே ஸந்நிதி பண்ணியருளி, “ஆழ்வீர்! நாம் உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம் ; நீர் இங்கே வற்து நினைத்தபடி யெல்லாம் பரிமாறி யநுபவிக்கலாம்! என்று தெற்குத் 'திருமலையிலே தானிருக்கிற படியைக், காட்டிக் கொடுக்க, ஆழ்வாரும் அதை அநுஸந்தித்து எம்பெருமான். நமக்கு உபேயனானால் அவன் எழுந்தருளியிருக்குமிடமும் நமக்கு உபேயந்தானே; ஆகவே, திருமலையோடு அதனோடு சேர்ந்ததொரு மலையோடு, . திருப்பதியோடு, போம் வழியோடு, போவோமென்கிற அத்யவஸாயத்தோடு வாசியற, எல்லாம் நமக்கு ப்ராப்யமே' என்று கொண்டு அநுபவித்து இனியராகிறார்- என்பதாக,
மூன்றாம்பத்தில் முதல் பதிகம்--முடிச்சோதியாய் கீழ்த் திருவாய்மொழியைத் | தலைக் கட்டுமிடத்தில் ஆழ்வார் “பொருளென் றிவ்வுலகம் படைத்தவன். புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன்”' என்று தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டார் | அஃதாவது எம்பெருமான் விஷயத்தில் தமக்கு அஜ்ஞானம் ஒன்றுமில்லை யென்பதாகச் சொல்லிக் கொண்டார்--இப்போது பாசுரம் தொடங்கும் போதே. தமக்கு ஒரு அஜ்ஞானம் உள்ளதென்று காட்டுகிறார். அஜ்ஞானம் நான்கு வகைப்படும் ;ஒரு வஸ்துவைப் பற்றி அடியோடு தெரிந்து கொள்ளாமையும், நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாமல் ஸந்தேஹமாகத்: தெரிந்து கொள்ளுதலும், விபரீதமாகவே நிச்சயித்துத் தெரிந்து கொள்ளுதலும், உள்ளபடி தெரிந்து கொண்டதை மறந்து போதலும்--ஆக நால்வகைப்பட்ட அஜ்ஞானங்களுள் ஸந்தேஹ ரூபமான அஜ்ஞானம் தமக்குளதென்பதை இங்குக் காட்டிக் கொள்கிறாராழ்வார். கீழே தமக்கு மருள் இல்லை யென்று சொல்லி விட்டு இப்போது மருள் உள்ளதாகச் சொல்லுவது பொருந்துமோ எனின் ; நம் போல்வார்க்குக் கருமம் காரணமாக வுண்டாகின்ற மருள் ஆழ்வார் தமக்கு இல்லை என்றார்த்தனை யொழிய, விஷய வைலக்ஷண்யத்தால் வருகிற அஜ்ஞானமும் இல்லை யென்றதன்று, எம்யெருமானுடைய வடிவழகிலே யீடுபட்டு “பிரானே! உனது முகச் சோதியே முடிச் சோதியாய் மலர்ந்ததுவோ? திருவடியின் சோதியே நீ. நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ ?' என்று. கேட்பதற்குறுப்பான ஸந்தேஹம் ஆழ்வார்க்கு விளைந்ததென்றால் இந்த அஜ்ஞானம் புருஷார்த்த கோடியில் சேருவதாகுமன்றோ. ஜ்ஞான . விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்” என்கிற ஸ்ரீவசந பூஷண ஸ்ரீஸூக்தியுங்காண்க, நம்முடைய அஜ்ஞானம் போலன்றிக்கே இப்படி மிகவும் விலக்ஷணமான அஜ்ஞானம் ஆழ்வார்களுக்கு உண்டாவதே. அவர்களுடைய சிறப்புக்குக் காரணமாக நிற்கும், விலக்ஷண விஷயத்திலே கலக்கங்கொள்ளாதே தெளிந்தே நிற்பர்களாகில் அவர்களுக்கொரு ஏற்றமில்லே யாகுமே. கீழ்த்திருவாய்மொழியில் திருமாலிருஞ்சோலைமலையை அனுபவித்த ஆழ்வார் அந்தத் திருமலையில் ஏகதேசமென்னலாம்படியாய், கருபகத்தரு கப்புங்கிளயுமாகப் பணைத்துப் பூத்தாற்போலே நிற்பவரான அழகருடைய வடிவழகை யனுபவித்து, வேதங்களும் வைதிகர்களும் ப்ரஹ்ம ருத்ராதி தேவர்களுங்கூட நிலையிட மாட்டாதபடி யிருக்கிற விருப்பை அநுஸந்தித்து இனியராகிறார் இத் திருவாய் மொழியில்.
மூன்றாம்பத்தில் இரண்டாம்பதிகம்- முந்நீர் ஞாலம் படைத்த --மிக்க தாஹங்கொண்டவன், நல்ல. தீர்த்தம் ஸமீபித்திருக்கச் செய்தே வாய் முடிக் கிடந்தால் . துடிக்குமா போலே, ஆழ்வாரும், தமக்குப் பரம போக்யமான விஷயம் ஸமீபித்ததாய்த் தமக்கு ஆசையும் மிக்கிருக்கச் செய்தே, விஷயத்தின் பெருமையாலே அது தம்மால் அநுபவிக்க அஸாத்யமாகவே, “ப்ரக்ருதி ஸம்பந்தம் காரணமாக நம்முடைய கரணங்கள் ஸங்குசிதங்களா யிருக்கையா லன்றோ பகவத் விஷயத்தை நாம் பரிபூர்ணமாக அநுபவிக்க முடியாமல் துவள்கிறோம்? என்று கொண்டு வருத்த முற்றவராய், “எம்பெருமான் விசாலமான திருவுள்ளங் கொண்டு செய்தருளின கரண களேபர ப்ரதானமும், ஜகத்தில் அப்பெருமான் பண்ணின பலபல திருவவதாரங்களும் என்னளவில் பயன்படவில்லையே! நான் ப்ரக்ருதி ஸம்பந்தம் கழிந்து எம்பெருமானைப் பெற்று முற்றூட்டாக அநுபவித்து ஆனந்திக்க அவகாசமில்லை யாகிறதே!” என்று நினைந்து நைந்து உள் கரைந்துருகி யிருக்க, அவ்வளவிலே எம்பெருமான், அவதாரங்களுக்குப் பிற்பட்டவர்களும் இழக்க வேண்டாதபடி நான் திருவேங்கட மலையில் நின்றருளின படியைக் காட்டி ஆழ்வாரை ஒருவாறு ஸமாதானப்படுத்தத் திருவுள்ளங்.கொண்டு, “ஆழ்வீர்! நீர் ஏன் துவள்கின்றீர்? நம்மைப் பூர்ணமாக அநுபவிக்க முடியாமைக்குக் காரணம் கரண ஸங்கோச மென்று நீர் நினைக்கின்றீர் போலும் ; அங்ஙனம் நினைக்க வேண்டா ; கரண ஸங்கோசமில்லாதவர்களான. அமரர்களும் நம்மை அநுபவிக்குமிடத்து, அவர்களும் உம்மைப் போலவே யன்றோ துவள்வது ; விஷயம் அளவிட முடியாததாகையாலே பரிபூர்ணாநுபவம் செய்ய முடியவில்லையே யென்கிற தளர்ச்சி உம்மோடு அமரர்களோடு வாசியற அனைவர்க்கும் பொதுவானதே காணும்; அது பற்றி நீர் தளரவேண்டா ; நீர் நினைத்தபடி யெல்லாம் நம்மோடு. பரிமாறலாம்படி நாம் வடக்குத் திருமலையிலே நின்ற நிலையில் கிட்டி யநுபவித்து மகிழ்வீர் என்ன ; ஆழ்வாரும் ஒருவாறு ஸமாதானமடைந்தவராய் இனிமையோடே தலைக்கட்டுகிறார். (பத்தாம் பாட்டில் இனிமை காணத் தக்கது.)
மூன்றாம்பத்தில் மூன்றாம் பதிகம்--ஒழிவில்காலம் -“எம்பெருமானே ! உன்னை யநுபவிப்பதற்கு இடையூறான பிரகிருதியைப் போக்கித்தர வேணும்' என்று கீழ்த்திருவாய்மொழியில் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர் !
நம்மோடு பரிமாறுவதற்கு அந்தப் பிரகிருதி உமக்கு இடையூறன்று காணும்; அநுகூலமேயாகும். இந்தப் பிரகிருதியோடே கூட உம்மை அடிமைகொள்ள வேணுமென்று விரும்பியன்றோ நாம் திருமலையிலே நிற்கிறது; நீர் இங்கேறப் போந்து அடிமை செய்து வாழலாமே என்று தான் திருவேங்கடமலையில் நின்றருளுகிற. படியைக் காட்டி யருளக் கண்டு ஸமாதானமடைந்தவராய் அத்திரு மலையப்பன் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட வடிமைகளுஞ் செய்ய வேணுமென்று பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்,
மூன்றாம்பத்தில் நான்காம் பதிகம்--புகழு நல்-கீழ்த்திருவாய்மொழியில் “*ஓழிவில். காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டு நாம்!” என்று எம்பெருமானுக்கு ஸர்வதேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் ஸகலவிதமான கைங்கர்யங்களையும் செய்யப்பெற வேணுமென்று மநோரதங் கொண்ட ஆழ்வாருடைய பாரிப்பைக் கண்ட எம்பெருமான் ஆழ்வார்க்குத். தான் அவர் விருப்பத்தின்படியே செய்வதற்கு அநுகூலமாக எல்லாப் பொருள்களிலும் பிரவேசித்து எங்கும் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுத்தான். அதுகண்ட ஆழ்வார், பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி யெடுத்துக் கொள்ளக் கருதுமவர்கள் “அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை யெடுப்போமா?' என்று அலமந்து கிடப்பதுபோல் அத்தைச் சொல்லுவேனோ? இத்தைச் சொல்லுவேனோ ? என்று அலமந்து, எங்கும் எல்லா வகைப் பொருளாயும் தோன்றுகின்ற. அம்பெருமானுக்கு வாசிகமான கைங்கர்யத்தைச் செய்ய நினைத்து “ஸகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம்பெருமானுடைய தன்மையை யான் என்னவென்று சொல்லுவேன்?" என்று நிர்வேதத்துடனே அவனது ஸர்வாத்மத்வத்தைப் பேசுகிறார்-
இத்திருவாய்மொழியில்
மூன்றாம்பத்தில் ஐந்தாம் பதிகம்--பொய்ம்மாம் பூம்பொழில் -ஆழ்வார் கீழ்த்திருவாய்மொழியில் எம்பெருமானை மிகவும் அற்புதமாக அநுபவித்தார். அந்த அநுபவத்தினால் அபரிமிதமான ஆனந்தத்தை யடைந்தார். திருவுள்ளத்திலுண்டான ஆனந்தம் வடிவிலே தொடை கொண்டது ; அதனால் ஆடுவதும் பாடுவதுமாகத்தாம் ஆயினர்; இந்நிலவுலகத்திலே இங்ஙனே பகவத் குணங்களில் ஈடுபட்டுக் களித்துப் பரவச சரீரர்களாக இருப்பவர்கள் எத்தனை பேருண்டு? என்று ஆராயத் தொடங்கினர் அன்னவர் மிகச் சிறுபான்மையராய், பகவத் குணங்களில் ஈடுபடாத பாவிகளே பெரும்பான்மையராய் இருப்பதைக் கண்டு திருவுள்ளம் மிக நொந்து, ஈடுபாடுடையாரைக் கொண்டாடியும் அஃது இல்லாதாரை நிந்தீத்தும் செல்லுகிறார் இத்திருவாய்மொழியில், எம்பெருமானுடைய குணாதுபவம் விஞ்சினால், நின்றவிடத்தில் நிற்க முடியாமல் ஆடுவதும் பாடுவதுமான நிலைமை பரவசமாக
உண்டாகியே தீரும். முக்தர்களும் திருநாட்டில் களித்துப்பாடுவர்களென்றது. நாரதமுனிவர் முதலானாரும் பகவத் ஸந்நிதியிலே வந்தவாறே ஆடுவது பாடுவதாக நிற்பர்களென்று சொல்லப் பட்டுளது. இதுவன்றோ நம்முடைய கர சரணாதி அவயவங்
களுக்குப் பயன், இப் பயன் பெறாத பாவிகளைப் பழிப்பதும் இது பெற்ற பெரியாரைப் புகழ்வதும் பகவதநுபவத்திலே ஒருவகை யாதலால் அவை இத்திருவாய்மொழியிற் செல்லுகின்றன.
மூன்றாம்பத்தில் ஆறாம் பதிகம்--செய்யதாமரை -கீழ்த்திருவாய்மொழியில், எம்பெருமானுடைய குணசேஷ்டிதங்களை நினைந்து கரைந்துருகி, நின்றவிடத்தில் நிற்கமாட்டாமே நர்த்தனம் முதலியன செய்து இதுவே போதுபோக்காக இருக்கும் மஹான்களைக் கொண்டாடியும், இந்நிலைக்கு மாறாக இருக்கின்றவர்களை நிந்தித்தும் பேசினார். அங்ஙனம் தம்மால் நிந்திக்கப்பட்ட பாபிகளையும் கைவிடமாட்டாத மிக்க கருணை வாய்ந்தவரன்றோ ஆழ்வார். அக்கருணையினாலே அந்தப் பாபிகளையும் வழிப்படுத்துக் கொள்ள வேணுமென்று திருவுள்ளம் பற்றி, அன்னவர்களுடைய கல்றெஞ்சிலும் நன்கு பதியுமாறு எம்பெருமானுடைய சிறந்த திருக்குணங்களை எடுத்துக்கூற விரும்பிய ஆழ்வார். இத்திருவாய் மொழியில் அப்பெருமானது ஸெளலப்ய குணத்தை யெடுத்துரைக்கின்றார். 'முதற்பத்தில் *பத்துடையடியவர்க் கெளியவன் என்ற திருவாய்மொழியிலும் எம்பெருமானுடைய ஸெளலப்ய குணம் பேசப்பட்டிருற்தாலும் இப்போது இங்குப் பேசும் ஸெளலப்ய குணம் அதனிலும் விலக்ஷணமானது.। அங்குச் சொன்னது விபவாவதார ஸெளலப்யம்; இங்குச் சொல்வது அர்ச்சாவதார ஸெளலப்யம் * இந்த வாசியை மணவாளமாமுனிகளும் நூற்றந்தாதியில் விளக்கி யுள்ளார்; “பத்துடையோர்க்கென்றும் பரனெளியனாம் பிறப்பால்” என்றதையும், **செய்ய பரத்துவமாய்... இந்நிலத்தில் அர்ச்சாவதார மெளிதென்றான்'” ' என்றதையும்' நோக்குக... இப்பதிகத்திற்கு உயிரான பாசுரம் - *தஞ்சமாகிய 'தந்தை தாயொடு” என்பதாம், அர்ச்சாவதார வெளிமையை நிரூபிக்கும் பாசுரம் அதுவேயாம்.
மூன்றாம் பத்தில் ஏழாம் பதிகம். பயிலுஞ்சுடரொளி -கீழ்த்திருவாய்மொழியில் - அர்ச்சாவதார ஸெளலப்யத்தை அருளிச் செய்தவிடத்திலும் நெஞ்சில் ' நிகழ்ச்சி யின்றியே விஷய ப்ரவணராயிருக்கின்ற ஸம்ஸாரிகளின் இயல்வைக் கண்டு வெறுத்து -அவ் வெறுப்புக்குப் பரிஹாரமாகத் தாம் ஒரு மஹாநந்தத்தை அநுபவிக்க விரும்பி ஸ்வ ஸ்வரூப காஷ்டையான பாகவத சேஷத்வத்தை 'அநுஸந்தித்து அம்முகத்தாலே தாம் இனியராகிறார்.
ஒருவன் ஒரு. வஸ்துவினிடத்தில் அன்பு வைத்தால் அவ்வன்பு அளவற்றதுமாயிருந்தால் அஃது அவ்வஸ்துவோடே நின்று விடாமல் அதனோடு ஸம்பந்த ஸம்பந்தம்பெற்ற வஸ்துக்களிலும் பெருகிச் செல்லுமென்பதை அனைவரும் தம்தம் அநுபவத் தாலறிவர். அப்படியே பாகவத் பக்தியென்பது பகவத் பக்தியின் எல்லை. நிலமாக உண்டாமது. பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும்: ஸ்வாமியினுடைய பாதுகை களிலே நாம் ஆதரம் வைத்து அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொள்வதும் தலைமீது அணிந்து கொள்வதும் அலம்பித் தீர்த்தம் பருகுவதும். செய்கிறோம் ; இதனால் ௩மக்கு ஸ்வாமியிடத்திலுள்ள பக்தி அபாரமானது என்பதன்றோ வெளியாகின்றது; அதுபோலவே இங்கும். '“அடியாரடியார் தம்மடியாரடியார். தமக்கடியாரடியார்தம் அடியாரடியோங்களே?? . இத்யாதிகளால் பாகவத - சேஷத்வாதிசயத்தைப். பேசுவதெல்லாம் பகவச் சேஷத்வத்தின் உறைப்பையே பேசின படியாகும்-
மூன்றாம்பத்தில் எட்டாம் பதிகம்- முடியானே, -கீழ் ஆறாந்திருவாய்மொழியான *செய்யதாமரைக் கண்ணனில் “அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல். காண்பதென்று கொல் கண்களே” என்று பகவத் விஷயத்திலே தமக்கு உண்டான
விடாயை வெளியிட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான். ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக் கொடுத்து. ஒருவாறு ஸமாதானம் பண்ணினபடி -கீழ்த்திருவாய்மொழியில் சொல்லிற்று, அதில் ஸ்ரீவைஷ்ணவர்களை அநுபவித்துப் போந்த ஆழ்வார் அவர்களுகந்த விஷயமான பகவத் விஷயத்தின் சிர்மையையும். பாசுரந்தோறும் முன்னடிகளால் அநுபவித்து. வந்தாராகையாலே. அவ்வநுபவம் பழைய விடாயை அதிகரிக்கச் செய்தது. . “என்று கொல் கண்கள் காண்பதுவே!!
என்னும்படி கண்களுக்கு, மாத்திரம். உண்டாகியிருந்த விடாய் மற்றை யிந்திரியங்களெல்லா வற்றுக்குமாயிற்று. அதுதானும் ஒரு விலக்ஷணமான படியிலே யாயிற்று. அதாவது. என் னென்னில்; ஒரு. இந்திரியத்தினுடைய வ்ருத்தியை மற்றோர் இந்திரியம் ஆசைப்படும்படியாயும். நேர்ந்து, தம்மிலும் விடாய்த்த கரணங்களும் கரணங்களில். காட்டிலும் விடாய்த்த . தாமுமாய் இப்படியொரு. விலக்ஷணமான நிலைமையைப் பெறும்படியாயிற்று. -பஹுகுடும்பியான .. வொருவன் க்ஷாமகாலத்திலே. . தன்பசிக்கு ஆற்றமாட்டாதே மக்கள். பசிக்கு. ஆற்றமாட்டாதே அவற்றின் வாயில் சோற்றைத்தான் பறித்து உண்பது, தன்.வாயில் சோற்றை அவை பறித்துண்பதாய் என் பசிக்கு, என் செய்வேன்? என் மக்கள். பசிக்கு என் செய்வேன்”... என்னுமாபோலே. தாமும் தம்முடைய. கரணக்ராமமுமாக நோவுபட்டுக். கூப்பிடுகிறபடியை இத்திருவாய்மொழி பேசுகின்றது. இப்பதிகத்தினால் ஆழ்வாருடைய பக்தி பரம விலக்ஷணம் என்பது பெறப்படும்,
மூன்றாமபத்தில் ஒன்பதாம் பதிகம்- சொன்னால் விரோதம் -ஆழ்வார் சில ஸமயங்களில் தம்முடைய இழவுக்கு வருந்துவர் ; சில சமயங்களில் ஸம்ஸாரிகளின் இழவுக்கு வருந்துவர். கீழ்த் திருவாய்மொழியில் தம்முடைய கிலேசங்களுக்குக் கதறினார் ; இத்திருவாய்மொழியில்' ஸம்ஸாரிகளின் கிலேசங்களுக்குக் கதறுகிறார். கவி பாடும்படியான திறமையைப் பெற்று வைத்து அந்தத் திறமையைப் பகவத் விஷயத்திலே செலுத்தாமல் க்ஷுத்ர பலன்களை விரும்பி அற்ப மனிதர் விஷயத்திலே செலுத்தி “நரஸ்துதி செய்பவர்கள்” என்று இழிவான டெயரைப் பெற்று உலாவுவாரைக் கண்டு வருந்தி, அவர்களையும் உபதேசத்தாலே . திருத்தி பகவத் விஷயத்தில் கவி பாடுகின்றவர்களாக ஆக்கி உய்விப்பான் வேண்டி அவர்களை விளித்து இப்படி நிங்கள் உங்களது வாக்கை நிஹிந விஷயங்களில் உபயோகித்து அதோகதி யடைவது தகுதியன்று ; உயர்வற வுயர்நல முடையவனான எம்பெருமான் விஷயத்திலே உங்கள் கவன சாதுரியத்தைச் செலுத்துவதே நன்று என்று உபதேசித்தருளுகிறார் இத்திருவாய்மொழியில். உலகத்தில் ஜஞாதாக்களாக இருப்பது அரிது; அது வாய்த்தாலும் கவிபாடும் படியான ஸாமர்த்தியம் பெறுவது மிகவும் அரிது. அந்த ஸாமர்த்தியம் பெற்றவர்கள் வகுத்த விஷயத்தில் தங்கள் வாக்கை
விநியோகப்படுத்தாமல் க்ஷுத்ர ஈரஸ்துதிகளிலே விநியோகிப்பது மிகவும் அருவருக்கத்தக்கதாகும். வடமொழியில் ப்ரதாப் ருத்ரீயம் என்கிற ஒரு க்ரந்தம் மிகவும் ப்ரஸித்தமானது. இதை இயற்றிய கவியின் பாண்டித்யமும் கவித்திறமும் மிக வியக்கத்தக்கதே. ஆயினும் இந்த க்ரந்தம் எம்பெருமானுடைய குண கீர்த்தனத்தில் அமைந்திருந்தால் அழகிதாயிருக்கும். அங்ஙனன்றியே, அல்ப ப்ரயோஜனத்தைக் கணிசித்து ஒரு க்ஷுத்ர ப்ரபுவை விஷயீகரித்து இந்த நூல் பிறந்ததாதலால் பகவத் பக்தர்கள் ஜுகுப்ஸைப்படும் படியாகவுள்ளது. இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க க்ரந்தங்கள் உலகிற் பலபலவுள்ளன. இத்தகைய நூல்களை இயற்றும் கவிகள் பக்கலில் ஆழ்வாருக்குண்டாகும் சீற்றம் அபாரம். ஆழ்வார், தம்முடைய திருவாக்கு பகவத் விஷயத்திலே உபயோகப்படுகின்ற வளவுக்கு உகந்து, மற்றையோர் எக்கேடு கெட்டாலும் அதைப் பற்றிச் சிந்தியாமல் *ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று பெரிய திருவந்தாதியில் தாமே அருளிச்செய்தபடி ஸம்ஸாரிகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கலாம்; அப்படியிருக்கும் ப்ரக்ருதியன்று ஆம்வாரது, ஆகவே நர ஸ்துதி செய்து கவி பாடும் கவிகளை நோக்கி உபதேசிக்கிறார் இப்பதிகத்தில்.
மூன்றாம்பத்தில் பத்தாம் பதிகம் சன்மம் பலபல -கீழ்த் திருவாய்மொழியில்--துதிப்பதற்கு வாய்த்த ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டி தங்களையுடையனான எம்பெருமானைத் துதிப்பது தவிர்ந்து க்ஷுத்ர நர ஸ்துதிகளிலே வாய் செலுத்தித் திரியுமவர்களை உபதேசத்தாலே திருத்தப் பார்த்தும் அவர்கள் திருந்தக் காணாமையாலே, இவர்களைப் போலே நாமும் நர ஸ்துதியிலே யிழிந்து அநர்த்தப்படாதிருக்கப் பெற்றோமே! என்று தம் உகப்போடே தலைக்கட்டினார். அந்தவுகப்பே விசேஷித்துப் பெருகுகிறது இத்திருவாய்மொழியில். நரஸ்துதிகளிலே செல்லப்பெறாத மாத்திரமே யன்றியே எம்பெருமான் விஷயத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்துத் தாம் அநுபவிக்கப்பெற்ற பரிசைப் பரக்கப்பேசி, குறை முட்டு பரிவு இடர் துயர் துன்பம் அல்லல். துக்கம் தளர்வு கேடு ஒன்றும் தமக்கில்லாமையை 'உள்குழைந்து பேசுகிறார்.
நான்காம்பத்தில் முதல் பதிகம் -ஒருநாயகம் -கீழ் மூன்றாம்பத்தின் முடிந்த திருவாய்மொழி ஆழ்வார்க்கு அளவு கடந்த ஆனந்த மயமாய்ச் சென்றது. தமக்கு. யாதொரு குறையுமில்லை யென்பதைப் பன்னிப் பன்னிப் பகர்ந்தருளினார்.
மற்றுமுள்ள ஸம்ஸாரிகளையும் தம்மைப் போலவே குறையற்ற வர்களாக ஆக்குவதில் மிக்க குதூஹலமுடையரான ஆழ்வார் அவர்களையும் திருத்திப் பணிகொள்ள விரும்பி உபதேசம் செய்யப் புகுகிறார் இத்திருவாய்மொழியில். ஒவ்வொரு பத்திலும் பரோபதேச ரூபமாக ஒவ்வொரு திருவாய்மொழி அவதரிக்கும். முதற் பத்திலே *வீடுமின் முற்றவும்* என்கிற திருவாய்மொழியும், இரண்டாம் பத்தில் *அணைவதரவணைமேல்* என்கிற திருவாய் மொழியும், மூன்றாம்பத்தில் *செய்ய தாமரைக் கண்ணன், *சொன்னால் விரோதமிது* என்கிற திருவாய்மொழிகளும் போலே இந்த நான்காம்பத்தில் இத்திருவாய்மொழி உபதேசபரமாய்ச் செல்லா நின்றது. *சொன்னால் விரோதத்தில் அற்பர்களான மனிதர்களைத் துதிப்பது பெருங்கேடு என்று உபதேசித்தார். உலகில் பலர் நர ஸ்துதி செய்யப் புகுவது சில பிரயோஜனங்களுக்காகவாதலால் அந்த ப்ரயோஜனங்கள் அற்பமாயும் அஸ்திரமாயுமிருக்கும்படியை நன்கு எடுத்துக் காட்டவே அவிவேகிகளும் உணர்ந்து திருந்தக் கூடும் என்று பார்த்து, பகவத் ப்ராப்தி தவிர மற்ற ப்ரயோஜனங்கள் யாவும் அல்பத்வம் அஸ்திரத்வம் முதலிய தோஷங்களினால் துஷ்டங்களா யிருக்குமாற்றை விரித்துரைக்கின்றார் இத் திருவாய்மொழியில்.
நான்காம்பத்தில் இரண்டாம் பதிகம் --பாலனாய் --கீழ் முன்றாம்பத்தில் *முடியானே திருவாய்மொழியில் ஆழ்வார்க்கு உண்டான அவஸ்தை ப்ராஸங்கிகமான மூன்று திருவாய்மொழிகளாலே. ஒருவாறு தலை மடிந்து கிடந்தது. இப்போது அது தலையெடுத்து நிற்கின்றது. ஸ்ரீவிபீஷணாழ்வான் ராவணனுக்குச் சொன்ன ஹிதம் அவனுக்கு. உபயோகப்படாமல் தனக்குப் பெருமாளைப் பற்றுகைக்கு் உறுப்பானாப் போலவும், ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன ஹிதம் அவனது நெஞ்சிற் படாதே தனக்கு பகவத் பக்தி மிகுதற்கு உறுப்பானாப் போலவும் ஆழ்வார் செய்தருளும் பரோபதேசங்கள் பிறர்க்கு. உறுப்பன்றிக்கே தமக்கு எம்பெருமான் பக்கலிலே அபிநிவேசம் மீதூர்ந்து செல்வதற்கே. ஹேதுவாயிற்று. ஆகவே என்றைக்கோ கழிந்துபோன எம்பெருமான் படிகளை அக்காலத்திற் போலவே இன்று அனுபவிக்கப் பெற வேணும் என்கிற விடாய் பிறந்தது ; ஆசைப்பட்டபடியே கிடையாமையாலே, எம்பெருமானோடு கலந்து பிரிந்தாளொரு பிராட்டியின். நிலமையை யடைந்து தான் மோஹித்துக் கிடக்க, அவள் படியை அநுஸந்தித்த திருத்தாயார் பெண் பிள்ளையின் நிலைமையைப் பேசுகிற முகத்தாலே தமது தசையை வெளியிடுவதாய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி, நான்காம்பத்தில் மூன்றாம் பதிகம்- -கோவைவாயாள் -கீழ்த் திருவாய்மொழியில் ஆழ்வார் ஆசைப்பட்டபடியே எல்லாம் பெறும்படி. எம்பெருமான் இவரோடே கலந்து, தன்னுடைய பரம ப்ரணயித்வத்தை வெளியிட்டுக் கொண்டான் ; அது கண்டு மிகவும் உவந்த ஆழ்வார் அந்த பிரணயித்வ குணத்தை இத்திருவாய்மொழியிலே பேசுகிறார். இத்திருவாய்மொழியை நம் பூருவாசாரியர்கள் மூன்றுபடியாக நிர்வஹிப்பர்கள். 1. சந்திரனைப் பிடித்துத் தரவேணுமென்று அழுகின்ற குழந்தைக்குத் தேங்காயைக் கொடுத்து. அழுகையை. மாற்றுவதுண்டே ; அது போல, கீழ்த் திருவாய்மொழியில் தேச கால விப்ரக்ருஷ்டங்களைப் பெறவேணு மென்று ஆசைப்பட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான் ஒரு குணாநுபவத்தைப் பண்ணி வைக்க அத்தாலே, கீழ்ப் பிறந்த இழவை யெல்லாம் மறந்து அந்த. குணத்தையே அனுபவிக்கிறார் என்று எம்பார் அருளிச், செய்யும்படி, 2, காலத்தால் தேசத்தால் கை கழிந்தவற்றை யநுபவிக்க ஆசைப்பட்ட ஆழ்வாருடைய திருமுக மண்டலத்தை நோக்கி எம்பெருமான் *ஆழ்வீர் ! நீர் அபேச்ஷித்த படியே செய்யக் கடவோம்” என்று ஒரு வார்த்தை சொல்ல, அது கேட்டுக் களித்துக் கீழிழவை மறந்து க்ருதார்த்தராகிறார்-என்று திருமலைநம்பி அருளிச் செய்யும்படி, 3- எம்பெருமான், ஆழ்வார் அபேக்ஷித்தபடியே செய்து தலைக்கட்ட வல்லவனாகையாலே, (அதாவது) தானிட்ட வழக்காம்படி' கால நிர்வாஹகனாகையாலே, காலோபாதியைக் கழித்து, அதீதகாலத்திற் போகங்களையும் நிகழ் காலத்திற் போலே ஒரு போகியாக்கிக் கொடுக்க அவற்றை யநுபவித்து மகிழ்கிறார்-என்று பட்டர் அருளிச் செய்யும்படி -அபேக்ஷித்த. போகங்களைத் தாராமல் ஏதோவொரு குணத்தை யநுபவிப்பிக்க அதனாலே களித்துப் பேசுகிறாரென்பது, எம்பாருடைய நிர்வாஹம். அபேக்ஷித்த போகங்களைத் தாரா விட்டாலும் தருவதாக மூகம் நோக்கி வாயினாற் சொல்லி மாகிழ்வித்தானெம்பெருமான் என்பது, திருமலை நம்பியின் நிர்வாஹம். அபேக்ஷித்த படியே அநுபவிப்பித்தருளினனென்பது, பட்டருடைய நிர்வாஹம். -இங்ஙனே மூன்றுபடியாகவும் நிர்வஹிக்க ஒளசித்யமுண்டு என்று. தெரிவித்தவாறு. -----------------------
நான்காம்பத்தில் நான்காம் பதிகம்-- மண்ணையிருந்துதுழாவி ஆழ்வாருடைய பரம வைஷ்ணவத்வத்தை வெளியிடுவதாயிற்று இத்திருவாய்மொழி. எம்பெருமானுடைய ஸம்பந்தம் பெற்ற பொருள்களையும் எம்பெருமானுக்குப் போலியான பொருள்களையுங் கண்டு. அப்பெருமான் றன்னையே கண்டதாகக் கொண்டு களிதக்கையே பரம வைஷ்ணவத்வமாகும்; அந்த நிலைமையே ஆழ்வார்க்கு இத்திருவாய்மொழியில் உண்டாயது. கீழ்த் திருவாய்மொழியில் எம்பெருமானுடைய ப்ரணமித்வ குணத்தைப், பேசிப் பரமானந்தம் பொலிய நின்றாராழ்வார் ;அந்த நிலைமையைக் கண்ட எம்பெருமான் அந்த ரஸத்தை. அரையாறுபடுத்தி ஸாத்மிப்பிக்கைக்காக அந்த ஸம்ச்லேஷத்தைச் சிறிது, குறைத்து நின்றான்- அதனால் ஆழ்வார்க்கு ஆற்றாமை மீதூர்ந்தது. பணமுடிப்பைப் போக்கடித் தானொருவன் அத்தோடு, போலியான முடிப்புகளெல்லாவற்றையும் அவிழ்த்தவிழ்த்துப் பார்க்குமா போலே அவனோடொத்த பதார்த்தங்களையும். அவனோடு ஸம்பந்தமுள்ள. பதார்த்தங்களையுமெல்லாம் அவனாகக் கொண்டு ப்ரமித்துக் கிட்டிப் பார்த்துப் பிச்சேறுகிற படியாய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி. இது தாய்ப் பாசுரமாகச் செல்லும் பதிகம்.
நான்காம்பத்தில் ஐந்தாம் பதிகம்-- வீற்றிருந்தேழுலகும் -கீழ்த்திருவாய்மொழி பெரு விடாயோடே சென்றது. இங்ஙனே ஆழ்வார் விடாய்க்க வேணுமென்பதுதானே எம்பெருமானுடைய திருவுள்ளம்! சோறு உண்பதற்குப் பசி உபகரணமாப்போலே எம்பெருமானை யநுபவிப்பதற்கு அளவு கடந்த ஆசை யன்றோ உப கரணமாவது. அந்த ஆசை யுண்டானாலன்றித் தன்னுடைய பரிபூர்ணாநுபவத்தைத் தந்தருள எம்பெருமான் திருவுள்ளம்! பற்றுவதில்லை. அத்தகைய ஆசை *முனியே நான்முகனில் உண்டாகின்றது. ' “முடிந்த அவா? என்பது அங்குத்தான். அதற்குக் கீழுள்ளதெல்லாம் அந்த அளவுக்குப் பண்ணுகிற க்ருஷியாயிருக்கும், எம்பெருமான் இடையிடையே வந்து காட்சிதாராதொழியில் ஆழ்வாரை இழக்க நேருமே,-தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் ” என்னும்படி பகவத் குண ரஸிகர்களுக்குத் தண்ணீர் பந்தல் வைக்கைக்காகவன்றோ ஆழ்வாரை இங்கு வைத்திருப்பது. ஸம்ச்லேஷ விச்லேஷங்கள் மாறிமாறி நடந்தாலல்லது எம்பெருமானுடைய திருவுள்ளம் நிறைவேற வழி யில்லை; றம் போலியர்களின் பாக்கியமும் பரிபக்குவமாக வழி யில்லை, இத்திருவாய்மொழியில் ஆழ்வார்க்குச் செல்லுகிற. ஆனந்தம் பேச்சுக்கு நிலமன்று. “இனி யென்ன குறை யெழுமையுமே?” என்றும் “இனி யாவர் நிகரகல் வானத்தே” என்றும் மார்பு தட்டிப் பேசலாம்படி யாக்கி யருளினான் எம்பெருமான். இத்திருவாய் மொழியின் அமைப்பை நோக்குமிடத்து இதற்கு மேற்பட்ட பரிபூர்ணாநுபவம் வேறில்லையென்றே சொல்லலாம்படி யிரா நின்றது , ஆனது பற்றியே இத்திருவாய்மொழி *தழ்விசும்பணி முகிலுக்கு அடுத்த திருவாய்மொழியாக இருந்திருக்கலாம் என்று நஞ்சீயர் ரஸோக்தியாக அருளிச் செய்வராம். கீழ்த்திருவாய்மொழியில் போலி கண்டு ப்ரமித்து மயங்கி ஆற்றாமை மீதூர்ந்த ஆழ்வாருக்கு எம்பெருமான் உபயவிபூதி நாதனாயிருக்கிற தன் படிகளில் ஒன்றுங் குறையாதபடி முற்றூட்டாகக் காட்டிக்கொடுத்து “ஆழ்வீர்! நம்முடைய படிகளெல்லாங் கண்டீரே; நமது இந்த ஐச்வர்ய மெல்லாம் நிறம்பெற்றதாவது உம்முடைய திருவாக்காலே ஒழுங்கு படப் பாடினாலாயிற்று, ஆகவே பாடிக் காணீர்” என்று செல்லி ஆழ்வார் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்குப் பல்லாண்டு பாடி மசிழ்கிறாராய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.
நான்காம்பத்தில் ஆறும் பதிகம்-- தீர்ப்பாரையாமினி -கீழில் சென்ற திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக இந்தத் திருவாய்மொழி இருக்கத் தகுதியில்லை யென்று நம்முதலிகள் கூறுவர்களாம், கீழ்த்திருவாய்மொழி எல்லை கடந்த ப்ரிதியோடே சென்றது; அதற்கு எதிர்த்தட்டாய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி, கீழ்ப்பதிகத்திற்கும் இப் பதிகத்திற்கும் ஸங்கதி அருளிச் செய்யவேணுமென்று எம்பாரைச் சிலர் கேட்டார்களாம்; அதற்கு எம்பார் “இதற்கு நான் என்ன சொல்லுவேன் ? அஸங்கதிரேவ ஸங்கதி: என்று கொள்ளுங்கோள் ” என்றாராம்; இது இன்: சுவையே வடிவெடுத்த வார்த்தையாகும். ஸங்கதி சொல்ல முடியாதென்று ஆபாத ப்ரதீதியிலே பொருளாம் ; அஸங்கதி : என்றது அஸம்ச்லேஷ மென்றபடியாய் விச்லேஷத்தைச் சொல்லிற்றாய், விச்லேஷந்தான் இதற்கு ஸங்கதி என்கை பரமார்த்தம், *மண்ணையிருந்து துழாவியில் ஆழ்வார்க்கு உண்டான வியாமோஹத்தைத் தணிப்பதற்காக வந்து கிட்டின வைகுந்தநாதன் மறைய நிற்க, அந்தப் பிரிவை ஆற்றமாட்டாமல் இத்திருவாய்மொழி விஷாதத்திலேயாய்ச் செல்லுகின்றது. வெறி விலக்குத் துறையிலே அவதரித்ததாம் இத்திருவாய்மொழி. ஆழ்வார் தரமான தன்மையை யிழந்து ஒரு தலைமகளாம் நிலைமையை எய்தி, அது தன்னிலும் தம் வாயாலே சொல்ல மாட்டாமல் வேற்று வாயாலே சொல்லவேண்டித் தோழியின் பேச்சாகச் செல்லுகின்றது. பிரிவாற்றாது மிக வருந்திய தலைமகளது வடிவு வேறுபாட்டினைக் கண்ட தாய்மார் “இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னோ ?' என்று கவலைப்பட்டுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க, அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து இவளுக்கு முருகக் கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிதொன்றுமில்லை! என்று கூற, அது கேட்ட தாயர் உடனே வெறியாட்டாளனை அழைப்பித்து அவனைக் கொண்டு ஆவேசமாடு விப்பதும் க்ஷுத்ர தெய்வங்களுக்கு உரிய ஸந்தர்ப்பணைகளை யிடுவிப்பதும் செய்ய, அதற்குத் தலைமகள் மிக வருந்தாரிற்க அச்சமயத்தில் அவளது. துன்பத்தின் உண்மையான காரணமுணர்ந்த தோழி அந்தப் ப்ரவ்ருத்திகளைக் கண்டித்துக் கூறுகிற பாசுரமாய்ச் செல்லுகிறது.
நான்காம்பத்தில் ஏழாம் பதிகம்-- சீலமில்லாச்சிறியன் -உலர்ந்து தரைப்பட்டுக்கிடந்த கொடியானது மழைத்துளி பட்டவாறே செழிப்புறுமாபோலே, கீழே மோஹித்துத் தரைப் பட்டிருந்த ஆழ்வார், தோழிமார் வாக்கில் நின்றும். வெளிவந்த சில திருநாமங்களைக் கேட்கப்பெற்ற ப்ரஸக்தியாலே உணர்த்தி பெற்றார். அத்தனையே யல்லது விரும்பினபடி எம்பெருமானோடே ஸம்ச்ிலேஷிக்கப் பெற்றிலர் மோஹித்திருந்த நிலமை தானே நன்றாய் யிருந்தது ஏனென்னில், அப்போது உணர்த்தி யில்லாமையாலே துயரம் தெரியாது: உறக்கத்தில் பசி பொறுக்கலாம் ; விழித்துக் கொண்டால் உண்டாலல்லது தரிக்கப் போகாதே. அப்படியே ஆழ்வாரும் மோஹித்திருந்த நிலைமையிலே ஒருவாறு ஆறியிருந்து உணர்த்தி யுண்டான விப்போது துடிக்க வேண்டியவராயினார். துடித்துக் கூப்பிடுகிறார் இத்திருவாய்மொழியில். உலகத்திலே. நோயாளிகள் மயக்கமுற்றிருக்கும் போதுகளிலே பாதை தெரியாது யிருற்து, மயக்கம் தெளிந்தவாறே பாடாற்ற வொண்ணாமல் துடிப்பர்களே, அறத நிலைமையே யாயிற்று : ஆழ்வார்க்கு இப்போது--அவனோ ஆபத்துக்கு. உதவுமியல்வினன் ; ஆபத்துக்கு: நிதானமறிந்து பரிஹரிக்கவும் வல்லன்; பிரிந்தால் பொறுத்திருக்க வொண்ணாத படியான அழகு படைத்தவன்) ஆபத்துக்களிலே விரோதியைப் போக்கி உதவுகைக்குப் போதுமான சக்திபடைத்தவன் ; இப்படி யிருந்தும் நம் ஆற்றாமைக்கு. உதவவில்லையே, - என்று கன்த்த ஆர்த்தியோடே, கேட்டாரெல்லாரும் நீராய்க் கரையும்படி கூப்பிடுகிறார்..
நான்காம்பத்தில் எட்டாம் பதிகம் -ஏறாளுமிறையோனும்-கேட்டாரெல்லாரும் நீராம்படியாகக் கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார் கூப்பிடச் செய்தேயும் எம்பெருமான் வந்து முகங் காட்டிற்றிலன். அதனால் எம்பெருமான் தம்மை வேண்டாவென்று வெறுத்திருப்பதாக நிச்சயித்தார். அவனுடைய வெறுப்புக்கு இலக்கான இந்த ஆத்மாவும் ஆத்மீயங்களும் நமக்கு ஏதுக்கு? அவனுக்கு வேண்டாதவை நமக்குத்தான் வேணுமோவென்று ஆத்மாத்மீயங்களையெல்லாம் உபேசுவிக்கிறார் இத்திருவாய்மொழியில், ஆழ்வார் ஜநககுலஸுந்தரியோடே யொத்திருப்பர் என்றாயிற்று நம்முதலிகள் அறுதியிட்டிருக்கும்படி... அப்பிராட்டி அசோக வனத்திலிருந்தபோது *ந ஹி மே ஜீவிதேறார்த்த : நைவார்த்தைர் பூஷணை : வஸந்த்யா ரக்ஷஸீமத்யே விறாராமம் மஹாரதம்ர், என்று ஆத்மாத்மீயங்களை யெல்லாம் வெறுத்தாள். பெருமாள் விரும்பாதே ராக்ஷ்ஸிகள் நடுவே சிறையிருக்கின்ற வெனக்கு உயிர் உடைமை முதலியவற்றால் என்ன பலன்? என்றாள். அந்த நிலைமை தானே இப்போது ஆழ்வார்க்கு முண்டாயது, இந்தத் திருவாய்மொழி ஆழ்வார் தாமான தன்மையிலே நின்று. அருளிச் செய்வத்ன்று; நாயகீ ஸமாதியாலே. அருளிச்செய்த தென்னுமிடம் “மணிமாமை குறைவிலமே” “மேகலையால் குறைவிலமே” “வரி வளையால் குறைவிலமே” என்பவற்றால் விளங்கும். திருமங்கை யாழ்வாரும் பெரிய திருமடலில் “கன்னவிலுங் காட்டகத்தோர் வல்லிக்கடிமலரின் நன்னறு வாசம் மற்றாரானு மெய்தாமே மன்னும் வறுகிலத்து வாளாங்குகுத்ததுபோல், என்னுடைய பெண்மையும் என்னலனு மென்முலையும், மன்னுமலர் மங்கைமைந்தன், கண் புரத்துப் பொன்மலைபோல் நின்றவன் றன் பொன்னகலம் தோயாவேல், என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி, முன்னிரது. முக்கின்று மூவாமைக் காப்பதோர் மன்னுமருந்தறிவீரில்லையே* என்றருளிச் செய்தது காண்க.
நான்காம்பத்தில் ஒன்பதாம் பதிகம்-- நண்ணாதார் முறுவலிப்ப --கீழ்த்திருவாய்மொழியில், உடம்பு வேண்டா, உயிர் வேண்டா, அது வேண்டா, இது வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை யெல்லாம் வெறுத்து உதறித் தள்ளப் பார்த்தார். தள்ளினால் தள்ளுண்டு போமவையோ அவை? பேறு பெறுவதற்கு எப்படி. அவன் கை பார்த்திருக்க வேணுமோ, அப்படியே முடிகைக்கும் அவன் கை பார்த்திருக்க வேண்டுகையாலே “எம்பிரானே ! என்னை நீதானே முடித்திடாய்! என்கிறார். ஆழ்வாருடைய ஆர்த்தி பேச்சுக்கு நிலமல்லாதபடி பெருகினமை இத்திருவாய்மொழியிலே விளங்கா நின்றது. ஆழ்வாருடைய ஆர்த்திக்கு முன்று ஹேதுக்களுண்டு; எம்பெருமானோடு கலவி பெறாமல் பிரிந்து படும் ஆர்த்தி ஒன்று ; ஸம்ஸாரிகளோடு ஸஹவாஸம் பொறுக்க வொண்ணாதாய் அத்தாலே வரும் ஆர்த்தி ஒன்று; இந்திரியங்கள் விஷயங்களிலே கொண்டுபோய் மூட்டி அரர்த்தங்ககா விளைக்கையாலே அத்தாலே வரும் ஆர்த்தி ஒன்று. இவற்றுள் எம்பெருமானுடைய பிரிவினால் வந்த ஆர்த்தி கீழ்த்திருவாய் மொழியிலே கண்டது. இந்திரியங்களால் வரும் ஆர்த்தி மேலே *உண்ணிலாவிய வைவரால்* என்கிற திருவாய்மொழியிலே காணலாகும். ஸம்ஸாரிகளினிடையே ஸஹவாஸம் பொறுக்க வொண்ணாமை யாலாகும் ஆர்த்தி இத்திருவாய்மொழியில் காண்பதாகும்,
நான்காம்பத்தில் பத்தாம் பதிகம் ஒன்றுந்தேவுமுலகும் --கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார் தமக்கு ஸம்ஸாரிகளினிடையே ஸஹவாஸம் பொறுக்கமுடியாமல் பலவாறாகக் கதற, ஒருவிதமாக அவருடைய ஆர்த்தியை மாற்றவேணுமென்று திருவுள்ளம் பற்றின எம்பெருமான், திருநாட்டிலே திருமகளும் தானுமாக இருக்கிற இருப்பை இங்கே இவர்க்குக் காட்டிக் கொடுத்தருள, இவரும் கண்டு ஒருவாறு களிக்கப் பெற்றார். *கண்ணாளா கடல் கடைந்தாய் உனகழற்கே வரும் பரிசு, தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே* என்றும் *ஆமாறொன்றறியேன் நான் அரவணையாயம்மானே !, கூமாறே விரைகண்டாய். அடியேனைக் குறிக்கொண்டே* என்றும் கல்லும் கரையும்படி ஆழ்வார் கூப்பிடா நிற்கச் செய்தேயும் எம்பெருமான் இவரை இந்நிலத்திலேயே வைத்திருப்பதற்குப் பலஹேதுக்கள் உண்டு -ஆழ்வாரைக் கொண்டு உபதேசங்கள் பண்ணுவித்து நாட்டைத், திருத்த வேணுமென்பது ஒரு ஹேதுவாகையாலே, அதனை எம்பெருமான் ஆழ்வார்க்கு ஒருவாறு நினைப்பூட்டினன் போலும் ; ஆழ்வாரும் எம்பெருமானுடைய நியமனத்தை நிறைவேற்றக் கருதி, பிரகிருதத்தில் எவ்விதமான உபதேசத்தைப் பண்ணலாமென்று பார்த்தார். உலகர் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறியப் பெறாதவர்களாயும் தேவதாந்தரங்கள் பக்கலிலே வியாமோஹம் கொண்டவர்களாயும் காணப்படுகையாலே இவர்களுக்கு எம்பெருமானுடைய பரத்வத்தையும் இதர தெய்வங்களின் நிஹீநத்வத்தையும் நன்கு உணர்த்தினோமாகில் இவர்கள் திருந்தி ஸம்ஸாரம் அடியறக் கூடும் என்று திருவுள்ளம் பற்றி அங்ஙனே உபதேசித்தருளுகிறார் இத்திருவாய்மொழியாலே. கீழே *உயர்வற வுயர்நலம் *திண்ணன்வீடு* முதலான திருவாய்மொழிகளிலும் எம்பெருமானுடைய பரத்வத்தை அருளிச்செய்திருந்தாலும், இத் திருவாய்மொழி அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை மூதலிக்கிற தாகையாலே வீறுபெற்றிருக்கும். திருக்குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு ஆதிநாத பெருமாள் என்று திருநாமமாகையாலே, ஸகலஜகத்காரணபூதன் என்கிற. அத்திருநாமத்தை வஹித்திருக்கின்ற இப்பெருமான் பக்கலிலே பரத்வத்தை எடுத்துரைக்கப் பாங்காயிருக்குமென்று திருவுள்ளம் பற்றினாராயிற்று.
ஐந்தாம்பத்தில் முதல்பதிகம்-— கையார் சக்கரத்து --கீழ் நாலாம்பத்தில் *நண்ணாதார் முறுவலிப்பவென்னும் பதிகத்திலே ஸம்ஸாரிகள் படுகிற வருத்தங்களை நினைத்து, அவ் வருத்தங்கள் அவர்களுக்குத் தொலையும்படி எம்பெருமானுடைய பெருமையை உணர்த்துவோ மென்று பார்த்து அதனை யுணர்த்தினார் கீழே *ஒன்றுந்தேவுமென்கிற திருவாய் மொழியிலே. அவ் வுபதேசம் கேட்டுத் திருந்தினவர்கள் இந்நிலத்திலே நிரம்பியிருக்கிற. படியைக் கண்டவாழ்வார் “பொலிக பொலிக?” வென்று அவர்கட்கு மங்களாசாஸக௩ம் பண்ணுவதாக இருக்குமளவிலே தம்மைப் பற்றிச் சிறிது நினைத்துக் கொண்டார்: *நாமும் இவர்களைப் போலே ஸம்ஸாரத்திலே தோள் மாறிக்கிடவாதே இவர்களுக்கு உபதேசம் பண்ணும்படியாகவும், இவர்களைத் திருந்தும்படியாகவும் எம்பெருமான் நமக்கு அருள் புரிந்திருக்கின்றானே. இவ்வருளுக்கு நிதானம் எதேனுமுண்டோ?”? என்று ஆராய்ந்து பார்த்தார்; அவ்வருள் நிர்ஹேதுக மென்பதை நன்கறிந்தார்; உள் குழைந்து அதனைப் பேசி யநுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில், சப்தாதி விஷயங்களிலேயே நான் மண்டிக்கிடக்க, பகவத் விஷயத்தையும் வாயாலே.சொல்லுபவன் போல் பாவனை செய்தவனே யல்லது உள் கனிந்த ப்ரேமம் சிறிதுமுடையேனல்லேன் ; அப்படியிருந்தும் க்ருத்ரிமமான அந்த உக்தி தன்னையே பற்றாசாகக் கொண்டு எம்பெருமான் என்னை விஷயீகரித்தவாறு என்னே ! என்று ஆச்சரியப்படுகிறாராயிற்று.
ஐந்தாம்பத்தில் இரண்டாம்பதிகம்- பொலிக பொலிக பொலிக --இவ்விபூதியிலுண்டான ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்திக்கு மங்களா சாஸநம் பண்ணுகிறது இத்திருவாய்மொழி, இப்போது இந்த மங்களாசாஸனத்திற்கு ப்ரஸக்தி ஏதென்னில்; கீழே நாலாம் பத்தில் *நண்ணாதார் முறுவலிப்ப வென்னும் பதிகத்திலே ஆழ்வார் ஸம்ஸாரிகளின் கிலேசங்களை அனுஸந்தித்து, அதற்குப் பரிஹாரமாக *ஒன்றுந்தேவு மென்கிற பதிகத்திலே எம்பெருமானுடைய பரத்துவத்தைப் பரக்கப் பேசித்திருத்த, அத்தாலே திருந்தி, ஸம்ஸாரம் பரமபதம் என்கிற வேற்றுமையற்று அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி யிருக்குமிருப்பைக் கண்டு மங்களா சாஸனம் பண்ணுகிறாராயிற்று, ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயைக் காண்பதற்காக நித்யஸூரிகள் நித்ய விபூதியில் நின்றும் இந்நிலத்திலே. யெழுந்தருள அவர்களுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார் என்றும் சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பர்களாம்,
ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயாவது ஆழ்வாருடைய உபதேசம் கேட்டுத் திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸம்ருத்தியாகிற ஸ்ரீயாம். இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸாக்ஷாத்தாக இத்திரு வாய்மொழியால் மங்களாசாஸநம் செய்வதாக ஒரு நிர்வாஹம். இந்த ஸ்ரீவைஷ்ணவர்களைக் காண்கைக்காக லோகார்தரத்தில் நின்றும் வந்தவர்கட்த மங்களாசாஸநம் செய்வதாக மற்றொரு நிர்வாஹம். ஆசார்ய ஹ்ருதயத்தில் “அடிமை புக்கரரையும் ஆட்செய்வாரையுங் காண வோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு” என்றருளிச் செய்ததும் இங்கு அநுஸந்தேயம்.
ஐந்தாம்பத்தில் மூன்றாம் பதிகம்-மாசறுசோதி -இத்திருவாய்மொழி மடலூர வொருப்படுவதாயிருக்கும். கீழ் நாலாம்பத்திலே *ஏருளுமிறையோனு மென்கிற திருவாய்மொழியில் உண்டாயிருந்த காதலே மீண்டும் கிளர்ந்து எம்பெருமானோடு ஸம்ச்லேஷிக்க விரும்பி அந்த விருப்பம் நிறைவேறப் பெருமையினாலே மடலூர்வேனென்று அச்சமுறுத்திக் காரியம் கொள்ளப் பார்க்கிறார். சக்ரவர்த்தி திருமகன் ஸமுத்ரராஜனைச் சரணம்-புகுந்து வழிவிட வேண்டின விடத்தும் அக்கடலரையன் இறுமாப்பையே பாராட்டி முகங்காட்டாமல் அலக்ஷியஞ் செய்துகிடக்க, பெருமாள் சீறிச் சிவந்த கண்ணினராய்-ஸாகரம் ஸோஷமிஷ்யாமி, சாபமாநய ஸெளமித்ரே! பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : *' இதோ இக்கடலை வற்றச் செய்துவிடப்போகிறேன்; லக்ஷ்மணா! சார்ங்க வில்லைக் கொண்டு வா; வானர முதலிகள் காலாலே நடந்து! செல்லட்டும்; ஒரு க்ஷணத்திலே இக்கடல் படுகிறபாடு பாராய்” என்றருளிச் செய்து ஸமுத்ர ராஜனை அழிக்க முயன்றாப் போலே இவவாழ்வாரும். நமது அபேஷிதத்தை நிறைவேற்றாத எம்பெருமான் ஏதுக்கு?” என்று பகவத் தத்துவத்தை இல்லை செய்துவிடப் பார்க்கிறார். மடலெடுக்கையென்று தமிழிலே ஒரு முறைமையுண்டு, நாயகன் வேட்டைக்குப் புறப்பட்டானாய், நாயகியும் தோழியும் பூக்கொய்து விளையாடவென்று புறப்பட்டவளவிலே ஒரு வியாஜத்தாலே தோழியும் பிரிந்த ஸமயத்திலே நாயகனும் தெய்வவசமாக அங்கே வந்து சேர, அங்கே அவனோடு கண்கலவியே கூட்டக் கூடி ஊழ்வினை பிரித்தலால் உடனே பிரியவும் சேர்ந்திட, 'அந்தப் பிரிவைப் பொறுக்கமாட்டாத நாயகி அவனோடு கூடுதற்காகச் செய்யும் ஸாஹஸ ப்ரவ்ருத்திதான் மடலூர்தல் எனப்படுவது. நாயகனை ஒரு படத்திலேயெழுதி வைத்தகண்வாங்காமல் அதனைப் பார்த்துக்கொண்டு, புஷ்பம் சந்தனம் முதலிய போக்ய வஸ்துக்களையும் விஷமாக உதறித் தள்ளி, ஊணும் உறக்கமும் உடம்பு குளிப்பதுமின் றியே, பனைமடலைக் கையிலே ஏந்திக்கொண்டு அதனால் உடம்பை மோதிக்கொண்டு, தலைமயிரை விரித்துக்கொண்டு. “இன்னபடுபாவி என்னைக் காக்கமாட்டாதே கைவிட்டான்; அவன் கண்ணற்றவன்; அவனிலும் விஞ்சிய கொடியன் இல்லை! என்று தெருவேறக் கதறிக்கொண்டே கேட்டாரெல்லாரும் நடுங்கும் படியும் இரங்கும்படியும் திரிந்துழல்வதுதான் மடலூருகையாவது: இங்ஙனம். கதறிக்கொண்டு தெருவிலே புறப்படுவதற்கு ப்ரயோஜனம் யாதெனில்; இந்த ஸாஹஸ ப்ரவ்ருத்தியைக் கண்டு ராஜாக்களாயுள்ளவர்கள் இவ்வார்த்தியைப் பொறுக்க மாட்டாத கருணையாலே இருவரையும் கூட்டிவைப்பர்கள்; உறவு முறையாராவது கூட்டி வைப்பர்கள் ; தோழிமாராவது கூட்டி வைப்பர்கள் ; பழிக்கு அஞ்சி நாயகனேயாவது வந்து கூடுவன் ; இவையொன்றுமில்லை யாகில் நாயகிதான் முடிந்து பிழைத்துப்போவள் ; இவையாயிற்று மடலூர்தற்குப் பிரயோஜனங்கள். ஆழ்வார் இப்படி எம்பெருமானைப் பழித்துக் கொண்டு ஸாஹஸம் தோற்றத் தெருவிலே கிளம்பினாரோ? எனில், இல்லை; மடலூர்வன் என்று சொல்லி அச்சமுறுத்தின மாத்திரமேயன்றி அதை முடிய நடத்தினபாடில்லை. “தோழி! உலகு தோறலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாம் மடலூர்துமே” என்றும், “யாம் மடமின்றித் தெருவுதோறயல் தையலார். நாமடங்காப் பழிதூற்றி நாடுமிரைக்கவேயாம் மடலூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணர் துழாய் மலர்கொண்டு சூடுவோம்'! என்றுமுள்ள பாசுரங்கள் காண்க,
ஐந்தாம்பத்தில் நான்காம் பதிகம்--
* ஊரெல்லாந்துஞ்சி --கீழ்த் திருவாய்மொழியிலே மடலூரும் முயற்சி வலிதாய்ச் சென்றது. மடலூரவேண்டுமானால் நாயகனை ஒரு படத்திலே எழுத வேணுமே; அப்படி எழுதுவதற்கு அவகாசமில்லாதபடி கங்குலிருள் வந்து புகுந்தது. *ஆழியாலன்றங்காழியை மறைத்தான்* என்றும் *ஆழிகொண்டன்று இரவிமறைப்ப* என்றும் சொல்லுகிறபடியே பண்டு பாரதப் போரிலே ஜயத்ரதனுடைய வதத்திற்காக ஸூரியனை அஸ்தமிக்கச் செய்ததுபோல இப்போதும் அப்பெருமான் தானே ஸூர்யனை அஸ்தமிக்கும்படி பண்ணினான் போலும். இவள் மடலெடுத்தால் அது தனக்கு அவத்யமாகுமென்று நினைத்து அதற்கு இடையூறு செய்யவொருப்படுவனே யெம்பெருமான். அல்லது தைவயோகத்தாலே அஸ்தமித்ததாகவும் இருக்கலாம், இரவு வந்து புகுர்தது. அதுதான் அந்தியம்போதன்றிக்கே சராசரங்களெல்லாம் ஒடுங்கும்படி ஈடுறிசியாயிருந்தது. -பழி சொல்லுவாரோடு ஹிதஞ் சொல்லுவாரோடு வாசியற எல்லாரும் உறங்கிப்போய் உசாத்துணை யற்றிருந்தது. இவ்வளவிலே ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானுடைய திருக்குணங்களை யநுஸந்தித்தாராழ்வார்.-இவ்வநுஸந்தானம் ஸம்ச்லேஷ திசையிலன்றிக்கே விச்லேஷ தசையிலே யாகையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாயிற்று. அசோக வனத்திலே முடியத் தேடின பிராட்டியைப் போலே இவர்க்கும் முடியவேண்டிய வளவாயிற்று. அந்த அவஸாதமெல்லாம் இத்திருவாய்மொழியாய் வெளிவருகின்றது. கிழ்த்திருவாய்மொழிபோலே இத்திருவாய்மொழியும் நாயகி ஸமாதியாலே
அருளிச் செய்கிறபடி..
ஐந்தாம்பத்தில் ஐந்தாம் பதிகம்-எங்ஙனேயோ-கீழ்த்திருவாய்மொழியில் ஆழ்வார் இருளுக்கும் பனிக்கும் வருந்தினபடி சொல்லிற்று. இது தான் இருள் தருமா ஞாலமாகையாலே தமோ குணம் மேலிட்டு நலிந்தபடியைச் சொன்னதாக ஸ்வாபதேசப் பொருள் கொள்ளலாம். ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நத்தில் *அவிவேககராந்ததிங்முகே பஹுதர ஸந்ததது: க்கவர்ஷிணி, பகவந் பவதுர்தினே* என்றருளிச் செய்ததும் கீழ்த் திருவாய்மொழியின் ஸ்வாபதேசார்த்தரூபம் என்றும் கொள்ளலாம். இருட்போது கழிந்து பகற்போது காண்கிறாப்போலே தமோ குணத்தின் மேலீடுகழிந்து ஸத்வகுணத்தின் தலையெடுப்பு காணத் தொடங்கிற்று, அதனால் நெஞ்சு தரிப்புற்றுத் திருக்குறுங்குடி யெம்பெருமானுடைய வடிவழகையும் திவ்யாயுத திவ்யாபரணச் சேர்த்தியழகையும் வாய்வெருவும் படியாயிற்று, உருவெளிப்பாடு என்பதொன்றுண்டு ; அதாவது மாநஸ ஸாக்ஷரத்காரம். கண்ணுக்கு ப்ரத்யக்ஷமாகத் தோற்றாமே நெஞ்சுக்கு ஸாக்ஷாத்கார விஷயமாகை, அது இத்: திருவாய்மொழியில் செல்லா நின்றது, இது பிராட்டி நிலைமையிலே நின்று பேசுந் திருவாய்மொழி. தாய்மார் தலைமகட்கு அடைவு சொல்லி மீட்கப் பார்க்க, தலைமகள் “எனக்கோ நீங்கள் அடைவு சொல்லுவது? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகிலே நெஞ்சு பறியுண்டு கிடக்குமென்னை நிங்கள் அடக்கப் பார்ப்பது முறையல்ல? என்று சொல்லுகிறபடியைச் சொல்லுகிறது,
ஐந்தாம்பத்தில் ஆறாம் பதிகம்-கடல்ஞாலம் --பிரிற்து வருந்துங்காலத்திலே “அநுகரித்துத் தரித்தல்' என்று முறையுண்டு. அதாவது, எம்பெருமான் தானாகவே தன்னை யநுகரித்துப் பேசி இங்ஙனேயொரு போது போக்காலே தரித்திருக்கையாம். திருவாய்ப்பாடியில் திருக்குரவை கோத்தவன்று ப்ரிதிரஸம் தலைமண்டை கொண்டு செல்ல, அது ஸாத்மிக்கைக்காகக் கண்ணபிரான் பிரிந்து தன்னை மறைத்திட, அப்போது திருவாய்ப்பாடியிற் பெண்களெல்லாரும் அநுகரித்துத் தரித்தார்களென்னுமிடம் ஸ்ரீவிஷ்ணுபுராண ப்ரஸித்தம். அதில் (5-18-99) “க்ருஷ்ணே நிபத்தஹ்ருதயா இதமுசு : பரஸ்பரம் க்ருஷ்ணோஹமேஷ ஸலிதம் வ்ரஜாம்யாலோக்யதாம் கதி; அற்யாப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதிர் நிசம்யதாம் துஷ்ட காளிய திஷ்டாத்ர க்ருஷ்ணோ ஹமிதி சாபரா”? -பாஹுமாஸ்போட்ய க்ருஷ்ஸஸ்ய ஸீலாஸர்வஸ்வமாததே அந்யா ப்ரவீதி ஹே கோபா: நிச்சங்கை: ஸ்தியதாமிஹ அலம் வருஷ்டிபயேகாத்ர த்ருதோ கோவர்த்தநோ டீயா தேநுகோயம் மயா க்ஷிப்தோ விசரந்து யதேச்சயா''என்றிவை முதலான சுலோகங்கள் காண்க. (இந்த சுலோகங்களின் கருத்தாவது-) கண்ணபிரான் பிரிந்து சென்ற காலத்தில் கோபிகள் விருந்தாவனத்தில் திரள்திரளாகக் கூடி ஒருவர்க்கொருவர் இங்ஙனே ' பேசிக் கொண்டார்கள் ; * நான் கண்ணன், இதோ அழகாக நடை டைக்கிறேன் பார்! என்றாள் ஒருத்தி ; *நான் கண்ணன், செவிக்கினிதாகக் குழலூதுகின்றேன் கேள்! என்றாள். மற்றொருத்தி; நான் கண்ணன், கொடிய காளிய நாகமே! நில்” என்றாள் இன்னொருத்தி, தோளைத் தட்டிக் கொண்டு கண்ண பிரான் செய்யும் லீலைகளையெல்லாஞ் செய்தாள் வேறொருத்தி, *கோபாலர்களே! நீங்கள் மழைக்கு அஞ்சாதே நில்லுங்கள், இதோ: நான் கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையைத் தூக்கிவிட்டேன் பாருங்கள்” என்றாள் ஒருத்தி. * தேனுகாசுரனை இதோ நான் மாய்த்து விட்டேனாகையால் இணி மாடுகளெல்லாம் நிர்ப்பயமாக உலாவலாம்” என்றாள் ஒருத்தி என்கை. அங்ஙனே அநுகரித்துத் தரிக்கும் விதம் ஆண்டாள் பக்கலிலுங் கண்டதொன்றாகும். நோன்பு நோற்பதாகக் கொண்டு திருப்பாவை பாடியது ஆய்ச்சியர்களின் அனுட்டானத்தை அநுகரித்த படியத்தனையிறே. இத்தகைய அநுகார ப்ரகாரங்கள் உபநிஷத்துக்களிலும் காண்பனவாகும், ஆழ்வார்க்கு அந்த அநுகார ப்ரகாரமே இத்திருவாய் மொழியில் செல்லா நின்றது. அதுதானும். தாய் பாசுரத்தாலே வெளிவருகின்றது. மகளின் அநுகாரத்தைத் தாய் முறையிடுகின்றாளென்க. பராங்குச நாயகியானவள் ஜ்ஞான முத்திரையும் தானுமாய் கீதாசார்யனைப் போலே யிருந்து கொண்டு. *'கடல்ஞாலஞ்செய்தேனும் யானே, கடல்ஞாலமா வேனும் யானே, மலையெடுத்தேனும் யானே, இனத்தேவர் தலைவனும் யானே” என்றாற்போலே பாசுரங்களைச் சொல்லியிருக்கக் கண்ட திருத்தாயார் “இது என்ன நிலைமை!” என்று ஆராயத் தொடங்கினாள் : எம்பெருமானைப் பிரிகையாலுண்டான ஆற்றாமையினாலே அநுகரித்துத் தரிக்கிறாள்” என்று அறியமாட்டாதவளாய்க் சுலங்கிக் கிடந்தாள் ; அப்போது! சில பந்து வர்க்கங்கள் அங்கே வந்து சேர்ந்து, இது என்னென்று. வினவ, ஸர்வேச்வரன் இவள் பக்கலிலே ஆவேசித்தான் போலே யிருக்கிறது! என்று விடை கூறுகிறபடியாய் இத்திருவாய்மொழி செல்லுகின்றது.
ஐந்தாம்பத்தில் ஏழாம் பதிகம்--நோற்றதோன்பு --கீழ்த்திருவாய்மொழியில் ஆழ்வார் எம்பெருமானாகவே' தம்மை அதுகரித்துப் பேசினது ஒருவாறு தரிக்கைக்காகவன்றோ. அவ்வளவிலும் எம்பெருமான் வந்து முகங் காட்டாமையாலே பழைய ஆர்த்தியே தலையெடுத்தது. “சிறிது ஆர்த்தியுண்டானாலும் கடுக வந்து முகங்காட்டி அருள்செய்வதையே இயற்கையாகவுடைய எம்பெருமான் நம்மளவிலே இப்படி உபேகைஷயாயிருக்க யாது காரணமோ?! என்று பார்த்தார் ஆழ்வார் ; கருமயோகம்; ஞான யோகம் முதலானவற்றிலே நமக்கு அந்வயம் வேணுமென்று இருந்தானோ? அல்லது, அந்த உபாயாந்தரங்களில் நாம் அந்வயித்திருக்கிறாமென்று திருவுள்ளம்பற்றிக் கைவிடப் பார்த்தானோ? அவனது திருவுள்ளம் இன்னதென்று தெரியவில்லையே? என்று தடுமாறின ஆழ்வார் தம்முடைய உண்மையான நிலைமையை எம்பெருமான் திருவடிகளிலே விண்ணப்பஞ் செய்ய வேணுமென்று கருதி வானமாமலைப் பெருமாள் திருவடிகளிலே தம்முடைய அநந்யோபாயத்வம் முதலானவற்றை விண்ணப்பஞ்செய்து வேரற்ற மரம் போலே விழுந்து சரணம் புகுகிறாராயிற்று இத்திருவாய்மொழியில், சிரீவர மங்கை என்றும், சிரீவர மங்கலம் என்றும் வானமாமலை சேஷத்திரத்தின் திருநாமம், இது பாண்டி றாட்டுத் திருப்பதிகள் பதினெட்டினுள் ஒன்று. இத்திருவாய்மொழியில் ஆறாம்பாட்டில் “'வானமாமலையே! அடியேன் தொழவந்தருளே!” என்கிற ஸ்ரீஸூக்தியை நோக்குமிடத்தில் 'வானமாமலை' என்கிற திருநாமம் எம்பெருமானுக்கே உள்ளதென்றும், அந்தத் திரு நாமத்தையிட்டு திவ்யதேசம் வழங்கப்பட்டு வருகிறதென்றும் சொல்லும்படி யிராரின்றது.
ஐந்தாம்பத்தில் எட்டாம் பதிகம்- ஆராவமுதே --கீழ்த் திருவாய்மொழியிலே வானமாமலை யெம்பெருமான் திருவடிகளிலே வேரற்ற மரம்போலே விழுந்து மிகப் பெரிய ஆர்த்தியோடே. சரணம் புகச் செய்தேயும் அப்பெருமான் முகங் காட்டிற்றிலன்; இன்னார்க்கு இன்னவிடத்திலே முகங்காட்டுவது என்றொரு நினைப்பு உண்டே எம்பெருமானுக்கு; அதனாலே இவர்க்குத் திருக்குடந்தையிலே முகங்காட்டுவதாக அவன் நினைப்பிட்டிருக்கவுங் கூடுமே, ஆழ்வார் அப்படியே கருதினார். நமக்குத் திருக்குடந்தையிலே காட்சி தந்தருள்வதாக எம்பெருமான் ஸங்கல்பித்திருக்கக் கூடுமென்று எண்ணினார். எண்ணி “அங்குச் சென்று புகவே நம் அபேஷிதம் தலைக்கட்டும்; குறைகளெல்லரம் தீரும்” என்று கனக்கப் பாரித்துக் கொண்டு திருக்குடந்தையிலே சென்று புகுந்தார். சித்திரகூட மலைச்சாரலிலே வந்து சேர்ந்த பரதாழ்வான் தான் நினைத்தபடியான பரிமாற்றம் ஒன்றும் பெறாதாப்போலே, ஆழ்வாரும் புக்க விடத்தில் திருக்கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல், திருப்பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்தல், அணைத்தல் முதலானவற்றிலே ஒன்றுஞ் செய்யக் கண்டிலர். அக்ரூரன் கண்ணபிரானிடத்து வரச்செய்தே “மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி* என்று கனக்கப் பாரித்துக் கொண்டு வந்து மனோ ரதித்தபடியே பெற்றானென்று கேட்டிருந்தோம் ; அங்ஙனே ஒன்றும் தாம் பெறாமையாலே மிக வருந்தி, ஸ்தந்தய ப்ரஜையானது தாய் பக்கலிலே கிட்டி முகம் பெறாவிட்டால் அலமந்து நோவுபடுமாபோலே அவன் ஸந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு இன்னும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன்! என்னு மார்த்தியோடே தலைக்கட்டுகிறார்.
ஐந்தாம்பத்தில் ஒன்பதாம் பதிகம்-- -மானேய் நோக்கு நல்லீர் -கீழ்த்திருவாய்மொழியில் திருக்குடந்தையிலே தளர்ந்தார். அங்கு நின்றும் திருவல்லவாழென்கிற மலைநாட்டுத் திருப்பதி யேறப் போக வொருப்பட்டு, அங்குப் போகவும் முடியாமே அவ்வூர்க்கு அருகிலிருந்த ஊரில் சோலைகளும், அங்குள்ள பரிமளத்தைக் கொய்து கொண்டு புறப்படுகிற தென்றலும், வண்டுகளின் இனிதான மிடற்றோசைகளும், வைதிகாநுஷ்டான கோலா ஹலங்களும், மற்றுமுண்டான ஸம்ப்ரமங்களுமெல்லாம் தம்மை மிகவும் நலிய, அவற்றாலுண்டான நோவுபாட்டைத் தோழிமாரைக் குறித்துத் தலைவி சொல்லும் பாசுரமாகப் பேசுகிறது இத்திருவாய் மொழி,
ஐந்தாம்பத்தில் பத்தாம் பதிகம்-பிறந்தவாறும் -கீழ்த் திருவாய்மொழியில்--திருவல்லவாழிலே சென்று சேர்ந்து. அங்குறையும் பெருமானோடே பரிமாற வேணுமென்று மநோரதித்துக் கொண்டு சென்று கால்நடை தாராமல் ஈடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார். *கோவிந்தன் குணம்பாடி....ஆவி காத்திருப்பேனே*என்கிறபடியே குணாநுபவம் பண்ணித் தரிப்ப தென்று ஒன்றுண்டே; அப்படியாகிலும் தரிப்போமென்று பார்க்கையில் அது தானும் அரிதாய் சைதில்யத்தை விளைப்பிக்க, “பிரானே ! உன்னைப் பிரிந்து நோவு பட்டாலும் தரித்து நின்று குணாநுபவம் பண்ணவல்லேனாம்படி பண்ணியருள வேணும்" என்று அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார் இத்திருவாய்மொழியில், அர்ச்சாவதாரங்களிலே தம் அபேஷிதம் பெற ஆசைப்பட்டவர் அவ்வாசை நிறைவேறப் பெறாமையாலே விபவாவதாரங்களிலே செல்லுகிறார். இது பொருந்துமோ? விபவாவதாரங்களை மிழந்தார்க்கும் இழவு தீரவன்றோ அர்ச்சாவதாரம் அமைந்திராநின்றது; இங்கே யிழந்து வைத்து அங்கே செல்லுகையாகிறவிது என்னே! என்னில்; கேண்மின்; ; அர்ச்சாவதாரத்தில் குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யலாகாதென்று ஸங்கல்பித்திருக்கையாலே “ஸத்ய ஸங்கல்பனுடைய ஸங்கல்பம் குலையும்படி அதிக நிர்ப்பந்தம் பண்ணக் கடவோமல்லோம்! என்று அர்ச்சாவதாரத்திலே கையொழிந்தார். விபவாவதாரத்தில் அப்படியொரு நிர்ப்பந்த மில்லாமையாலும் *ஸம்ஸ்ப்ருச்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸாகாடம் பரிஷஸ்வஜே* என்னும்படி அக்ரூரன் முதலானார்க்கு ஸர்வஸ்வதானம் பண்ணினபடியை அநுஸந்திக்கையாலும் அது கால விப்ரக்ருஷ்ட மென்பதிலே புத்தி செலுத்தாமல் அங்கே போருகிறார்.
ஆறாம்பத்தில் முதல் பதிகம்-வைகல் பூங்கழிவாய் -கீழ் ஐந்தாம்பத்தில் *நோற்ற நோன்பு என்கிற திருவாய்மொழி தொடங்கி நான்கு திருவாய் மொழிகளிலே ஆழ்வார் அடுத்தடுத்து எம்பெருமான் திருவடிகளிலே சரணாகதி செய்த பலன்
கொடுத்தே தீரக்கடவதான அந்த சரணாகதியும் பலிக்கவில்லை. -அதற்குக் காரணம் என்னவென்றால் நம்முடைய பாக்கியமேயாகும். -ஆழ்வாருடைய திருவாக்கில் நின்றும் இன்னமும்” பாசுரங்களை வெளியிடுவித்து உலகத்தை வாழ்விக்கத் திருவுள்ளம் பற்றின எம்பெருமான், நமக்காகவே ஆழ்வாருடைய சரணாகதியையும் நிஷ்ப்பல மாக்கினான். கீழே *பிறந்தவாறும் என்கிற திருவாய் மொழியிலே *என்னையென்று கொல் சேர்வதுவே* என்றும் *உன்னையென்று தலைப்பெய்வனே* என்றும் *உன்னையென்று கொல்கூடுவதே- என்றும் இங்ஙனே பலவாறு கதறி எம்பெருமான் பக்கலிலே கடுகச் சேரவேணுமென்று பாரித்த ஆழ்வார், அவ்வெம்பெருமான் திருவண்வண்டூர் என்கிற மலைநாட்டுத் திருப்பதியிலே ஸந்நிதி பண்ணியிருக்கும் படியை நோக்கி அங்கே தாம் சென்று சேரமாட்டாதே தம்முடைய தசையை அப்பெருமானுக்குத் தெரிவிக்கும்படி தூது விடுகிறார் இத்திருவாய்மொழியில்.. அதாவது ஆழ்வார் தாமான தன்மையை யிழந்து பெண் பாவனை பெற்றுச் சில பக்ஷிகளை எம்பெருமான் பக்கலிலே போகவிடுகிறார். பகவத் விஷயத்தில் அந்வயிப்பிக்குமவர்களைப் பக்ஷிகளாக ப்ரதிபத்தி பண்ணுகிறதென்று ஸ்வாபதேசார்த்த மறிவது. பறவையானது இரண்டு சிறகுகளாலே எப்படி உயர் கதியை அடைகின்றதோ அப்படியே ஞான அனுட்டானங்களினால் உயர்கதியை அடைகின்றவர்களான மஹான்களே பக்ஷிகளாக மறைத்துப் பேசப்படுகின்றார்கள்.
ஆறாம் பத்தில், இரண்டாம் பதிகம் --மின்னிடை மடவார்கள் ஆழ்வாருடையபடி பலவகைப்பட்டிருக்கும். இத்திருவாய் மொழியின்படி. விலக்ஷணமாயிருக்கும். *என்று மொருகாளொழியாமை யானிரந்தால், ஒன்று மிரங்கார் உருக்காட்டார்* என்றும் *ஒரு நாள் காண வாராயே* என்றும் இங்ஙனே பலகாலும் கூப்பிடாநின்ற ஆழ்வார்க்கு இப்போது உண்டான நிலைமை மிக வேறுபட்டிராநின்றது, , எம்பெருமான் வந்து நிற்க, “இங்கே ஏதுக்கு வந்தாய்? உனது அந்தரங்க விருப்பத்திற்கு இலக்கானவர்கள் பக்கலிலே எழுந்தருளலாம் ; இங்கே என்ன காரியமிருக்கிறது? கடுகச் செல்வாயாக" என்று சொல்லிக் கதவடைத்துத் தள்ளுகிற. படியாயிருக்கிறது இத்திருவாய்மொழி. வடமொழியில் ப்ரணய கலஹமென்றும், தென்மொழியில் ஊட லென்றும் சொல்லப்படுவது! இது. தம்பதிகள் பரிமாறா நின்றால் இங்ஙனே ப்ரணய கலஹம் நிகழ்ந்தே தீரும். எம்பெருமானோடு நமக்குள்ள ஸம்பந்தங்கள் ஒன்பது வகையென்று சொல்லப்படும், *பிதா ச ரக்ஷகச் சேஷி பர்த்தா ஜஜேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா ச ஆத்யமநூதிதர என்கிற ஸ்லோகத்தில் அந்த நவலித ஸம்பந்தங்களும் காணத்தக்கன. அந்த ஸம்பந்தங்களுள் பர்த்ரு பார்யா ஸம்பந்தமும் ஒன்றாகையாலே, எம்பெருமான் பர்த்தா வாகவும் ஆழ்வார் பார்யையாகவும் பரிமாறுகிற முறை ஸ்வரூபாநுரூபமே யாதலால் இநத ப்ரணய கலஹமும் அவர்ஜநீயமாயிற்று. கீழ்த்திருவாய்மொழியில், ஆழ்வார் எம்பெருமானுடைய பிரிவுக்கு ஆற்றமாட்டாது தூதுவிட்டார். அந்த வ்யஸநத்தை யறிந்த எம்பெருமான் ஆனைக்கு உதவ வந்தாப் போல அரை குலையத் தலை குலைய ஓடிவந்து ஆழ்வார்க்குக் காட்சி தரப் பார்த்தான் ; அவ்வளவிலே ஆழ்வார் ப்ரணய ரோஷம் தலை யெடுக்கப் பெற்று “ஸ்வாமிந்! இங்கே உமக்குப் பணியில்லை; பணி போரு மிடத்தேற எழு்தருளிர்”' என்று கதவடைத்துத் தள்ளுகிறார் இத்திருவாய் மொழியில். கருஷ்ணாவதாரத்திலே கண்ணபிரானோடு பரிமாறின' கோபஸ்த்ரிகள் இங்ஙனே ப்ரணய ரோஷத்தாலே ஊடல் செய்தமை யுண்டு, அவர்களுடைய பாவபந்தமே இப்போது ஆழ்வார்க்கும் ஆகி அவ்வநுகாரமே முற்றியிருக்கிறதாயிற்று. பெருமாள் திருமொழியிலே *ஏர் மலர்ப் பூங்குழல்* என்கிற திருமொழியும், பெரிய திருமொழியிலே *காதில் கடிப்பிட்டு* என்கிற திருமொழியும் இந்த நடையிலே அவதரித்தவை யென்றுணர்க,
ஆறாம் பத்தில் மூன்றாம் பதிகம் - நல்குரவுஞ்செல்வும் --*வைகல் பூங்கழிவரயில் தூதுவிட்டும் தாமதித்து வந்த எம்பெருமான் பக்கலிலே பராங்குச நாயகிக்கு ப்ரணய ரோஷம் தலையெடுத்து “எங்கள் கோஷ்டியிலே நீ வந்து புகவேண்டா? என்று தள்ளிக் கதவடைப்பதாய்ச் சென்றது கீழ்; அதுதான் ஊடல் என்பது. ஊடலுக்கு அடுத்த படியாகக் கூடல் நேர்ந்தே தீருமாதலால், அந்தக் கூடல் நேர்ந்தபடியும் ஒருவாறு கீழ் திருவாய் மொழியிலே *நின் நிலங்கு முடியினாய்* என்கிற பாசுரத்தினால் ஸூசிப்பிக்கப்பட்டதாயிற்று. எவ்விதத்திலும் இவனோடு கூடலாகாது! என்று மிக்க வுறுதியுடனிருந்த நம்மைக் கூடும்படி யாக்கிக் கொண்ட இவனுடைய வலிமை என்னே! என்று விஸ்மயப்பட்ட ஆழ்வார்க்கு எம்பெருமான் தன்னுடைய அகடித கடநா ஸாமர்த்தியத்தை நன்கு காட்டிக்கொடுத்து அத்தன்மையனா।ன தான் திருவிண்ணகரிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கிறபடியையும் காட்டிக்கொடுக்க, ஆழ்வார் அது தன்னைப் பேசி இனியராகிறார்
ஆறாம் பத்தில் நான்காம் பதிகம்-- -குரவையாய்ச்சியரோடு -கீழ் ஐந்தரம்பத்தில் *பிறந்தவாறும் என்கிற திருவாய்மொழியில் எம்பெருமானுடைய சேஷ்டித விசேஷங்களைச் சிந்தித்து உருகி உள்குழைந்து அந்தோ! அநுபவிக்க முடிய வில்லையே யென்று தளர்ந்து பேசினார்; அக்குறை தீர்கின்றது இத்திருவாய்மொழியில். எம்பெருமானுடைய பலபல சேஷ்டித் விசேஷங்களை வாயாரச் சொல்லி நன்றாக அநுபவித்து அதனால் தமக்குண்டான பூரிப்பைப் பெரு மிடறு செய்து வெளியிடுகின்றாராழ்வார் இத்திருவாய் மொழியில்- இதில் ஒவ்வொரு பாசுரங்களிலும் முன்னடிகள் பகவானுடைய சேஷ்டித விசேஷங்களைப் பேசுவனவாகவும் பின்னடிகள் அந்த சேஷ்டிதாநுபவத்தில் தமக்குண்டான களிப்பைக் கனக்கக் கூறுவனவாகவும் அமைந்திருக்கின்றன. *நீசனேன் நிறையொன்றுமிலேன்* என்று நைச்சியாநுஸந்தானத்தின் பரம காஷ்டையிலே நிற்கின்ற ஆழ்வார் இங்கு “எனக்கினியார் நிகர் நீணிலத்தே' என்றும், “எனக்கார் பிறர் நாயகரே'! என்றும் “மாறுளதோ விம் மண்ணின் மிசையே” என்றும் இங்ஙனே ஆவலிப்புடைமை தோற்றக் கூறுவது பரம ஸாத்விகத்வத்திற்குக் குறையன்றோ என்று சங்கிக்க வேண்டா, குணாநுபவத்தாலுண்டான ஆனந்தம் தலை மண்டை கொண்டு அதன் பரீவாஹ ரூபமாக இங்ஙனே பேசுவது ஸ்வப்ரயத்ந பூர்வகமன்று, குணாநுபவம் பரவசமாக்கிப் பேசுவிக்கிறபடி. *நாவலிட்டுழிதருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்னாமங்கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளனே” என்பன போன்ற பாசுரங்கள் ஸாத்விகாஹங்கார ரீதியிலே அவதரித்தன வென்று கொள்க. உலகில் மதுபானம் பண்ணினார் தம்மை யறியாமல் சொல்லுகிறபடியும் காணா நின்றோம், *எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே* என்ற பரம விலக்ஷண மதுவைப் பானம் பண்ணினார்க்குச் சொல்ல வேணுமோ?
ஆறாம் பத்தில் ஐந்தாம் பதிகம்-- -துவளில் மா மணி மாடம் -ஆழ்வார்க்கு எம்பெருமானுடைய தன்மைகளை வருணிப்பதில் எவ்வளவு குதூஹலமோ அவ்வளவு குதூஹலம் தம்முடைய தன்மைகளை வருணிப்பதிலுமுண்டு. எம்பெருமானுக்கே மங்களாசாஸநம் பண்ணப் புகுந்த பெரியாழ்வார் *அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு* என்று தமக்கும் தாமே மங்களாசாஸநம் செய்து கொண்டார்; எம்பெருமானுடைய பெருமையைப் பாங்காக ,அநுபவிக்கவல்ல அடியார்கள் இல்லையாயின் எம்பெருமானிருந்து யாது பயன்? நிலா தென்றல் முதலானவை பரம போக்யமேயானாலும் அவை அநுபோக்தாக்களுக்கு உபயோகப்படாதவளவில் *காட்டிலெறித்த நிலாப்போலே” என்னும்படி அவத்யம் பெறுகின்றன வன்றோ. அப்படியே, எம்பெருமானுடைய பெருமையும் அவனை நன்றாக அநுபவிக்க வல்லவர்களுடைய பெருமையிலே சொருகி நிற்கும். பாகவதர்களின் பெருமையைப் பேசுவதும் பகவானுடைய பெருமையைப் பேசுவதேயாகும். ஆனது பற்றியே *திருமாலவன்கவி* என்று பகவத் கீர்த்தனமாகக் கொண்ட இத்திவ்யப் பிரபந்தத்திலே *பயிலுஞ் சுடரொளி *நெடுமாற்கடிமை* முதலான பதிகங்கள் பாகவத ய்ரபாவ கீர்த்தத பரங்களாகவும் அமைந்தன. பாகவதர்களுள் ஆழ்வார் சிறந்தவரன்றோ. ஆத்ம ப்ரசம்ஸை [அதாவது தற் புகழ்ச்சி அவத்யமானாலும் பகவத் விஷயத்திலுண்டான தமது ஈடுபாட்டைத் தாமே பேசிக்கொள்வது தகுதியேயாகும். இது அவத்யமன்று, ஆனால் “எம்பெருமான் விஷயத்தில் நான் இப்படி யிப்படி யீடுபட்டிருக்கிறேன்' என்று வ்யக்தமாகச் சொல்லிக் கொள்வதில் ஆழ்வார்க்குச் சிறிது ஸங்கோசமுண்டாயிற்றுப் போலும், எம்பெருமானும் தன்னுடைய பெருமையைத் தானே ஒரு பெரிய பிரபந்தமாக வெளியிட்டுக்கொள்ள வேணுமென்று ஆசைப்பட்டு, அப்படி நாமே நம்பெருமையைப் பேசிக்கொண்டால் அது சுவை மிக்கதாகாது என்று பார்த்து நம்மாழ்வார்மீது ஆவேசித்து அவர் வாக்காலே தானே தன் பெருமைகளைப் பேசிவிட்டுக் “குருகூர்ச்சடகோபன் சொன்ன” என்று ஆழ்வார் மேலே ஆரோபணம் செய்தான் என்று சொல்லுவதொன்றுண்டு; இவ்விஷயத்தை ஆழ்வார் தாமே மேலே ஏழாம்பத்தில் *என்றைக்குமென்னை* என்கிற திருவாய்மொழியிலே நன்கு. வெளியிடக் காண்கிறோம். அதுவேபோல இப்போது ஆழ்வார் தாமும் தம் பெருமையைத் தாமே வெளியிட்டுக் கொள்ள வேணுமென்று ஆசைப்பட்டு அது சுவையுடைத் தாவதற்காக அதை வேறொருவர் தலையில் ஏற்றப் பார்த்துத் தோழிமார் பாசுரமாக வைத்து இத்திருவாய்மொழியை அமைத்தருளுகின்றார்; ஆழ்வார் பகவத் விஷயத்தி லீடுபட்டிருக்கும் பெருமையை வேறு சில பாகவதர்கள் எடுத்துக் கூறுவதாக உள்ளுறை பொருள் காண்க.
ஆறாம் பத்தில் ஆறாம் பதிகம்-மாலுக்கு வையமளந்த. -கீழ்த் திருவாய்மொழி தோழி பாசுரமாகச் சென்றது; இத்திரு வாய்மொழி தாய் பாசுரமாகச் செல்லா நின்றது. இதில் பாசுரம் தோறும் “இழந்தது' என்று வாரா நின்றது. சங்கை யிழந்தாள்,
மாமைநிறமிழந்தாள், சாயை யிழந்தாள், மாண்பிழந்தாள், கற்பிழங் தாள், கட்டிழந்தாள் என்றிப்படிப் பலவும் இழந்ததாகச் சொல்லப் படுகிறது. இதனால், பகவத் விஷயத்தில் ப்ராவண்யம் அதிகரித்தமையும், அபேக்ஷிதமானபடி ஸம்ச்லேஷம் கிடையாமையாலே மேனி மெலிந்தமையும், கட்டுக்கு அடங்காமையுமாகிற விவை சொல்லப் படுகின்றன வென்றுணர்க. கீழ் நாலாம்பத்தில் *ஏறாளுமிறையோனும்* என்கிற. திருவாய்மொழியில் “மாறாளன் கவராத மணி மாமை குறைவிலமே?”. “மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறை விலமே” என்றிப்படித் தாமே வேண்டாவென்று உபேக்ஷித்த ஆத்மாத்மியங்களெல்லாம் இப்போது தன்னடையே கழிந்து செல்லுகிறபடி. சொல்லுகிறது. எம்பெருமானுடைய ஒரோ அவதார சேஷ்டிதங்களையும் ஒரோ திவ்ய குணங்களையும் நினைக்க நினைக்க, தாம் பரவசராய் மேனிமெலிந்து ஆவி நீராயுருகுகின்றமையை ஆழ்வார் அர்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறாராயிற்று.
ஆறாம் பத்தில் ஏழாம் பதிகம்- உண்ணுஞ்சோறு-கீழ்த்திருவாய்மொழி போலே இத்திருவாய்மொழியும் தாய் பாசுரமாகவே செல்லுகிறது. படுக்கைத் தலையிலே பாரங்குச நாயகியாகிய மகளுடன் கூடவே படுத்துக் கொண்டிருந்து மகளின் விரஹ தாபத்துக்கு. உபசாரங்கள் பண்ணிக் கொண்டிருந்த. திருத் தாயார் படுக்கையைத் தடவிப் பார்த்தாள்; எங்கும் தேடிப்பார்த்தாள்; மகளைக் கண்டிலள் (பேய்கொண்டதோ? பிசாசு கொண்டதோ?” என்று சங்கிக்கலாமாயினும் இவளுக்குத் திருக்கோளூ ரெம்பெருமானிடத் திலிருந்த ஆவலின் மிகுதியை நன்கு அறிந்தவளாகையாலே அத் திருப்பதிக்கே சென்றிருக்க வேணு மென்று அறுதியிட்டு அதை வெளியிட்டுரைக்கும் பாசுரமாகச் செல்லுகிறது இத்திருவாய்மொழி, திருக்கோளூர் சென்று அவ் விடத்து எம்பெருமானோடே நித்ய ஸம்ச்லேஷம் பண்ண வேணுமென்றிருந்த ஆழ்வாருடைய விருப்பம் இத்திருவாய்மொழியாகப் பரிணமித்து விட்டது போலும்,
ஆறாம்பத்தில் எட்டாம் பதிகம் -பொன்னுலகாளீரோ -தூதுவிடும் பதிகம் இது, இதில் *வானவர்கோனைக் கண்டு யாமிதுவோ தக்கவாறென்ன வேண்டும்* என்ற பாசுரத்தையும் *எங்குச் சென்றாகிலுங் கண்டு இதுவோ தக்கவாறென்மின்*'
என்கிற பாசுரத்தையும் உயிராகக் கொண்டு இத்திருவாய்மொழி பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது விட்டயடியாமென்பர்,
ஆறாம் பத்து ஒன்பதாம் பதிகம்--நீராய் நிலனாய் -இப்படி தூத ப்ரேஷணம் பண்ணியும் எம்பெருமான் வரக் காணாமையாலே அவனைத் தம்முடைய பெரிய ஆர்த்தியோடே கூடத் திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைக்கிறார். தூது விடுவதிற்காட்டிலும் தமது ஆர்த்த நாதமே கார்ய கரமாமென்று கொண்டார், இப்பதிகத்தின் ஸாரத்தை கூறுகின்ற மணவாள மாமுனிகள் நூற்றந்தாதியில், “நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம்* என்று அருளிச் செய்கையாலே இப்பதிகத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியின் கனம் மிக்கதாய் இருக்கிறது என்பது விளங்கும்,
ஆறாம்பத்தில் பத்தாம் பதிகம்--உலகமுண்ட பெருவாயா --கீழ்த் திருவாய்மொழியில் அபரிமிதமான ஆர்த்தியோடே பரம பதத்தளவும் கேட்கும்படி கூப்பிட்டார். அங்ஙனே கூப்பிடச் செய்தேயும் எம்பெருமான் வந்து முகங் காட்டாமையாலே மிகவும்.
தளர்ந்து நோவுபட்ட ஆழ்வார், அப்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தி லிருந்து நில வுலகத்தே வந்து ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள் பண்ணி! அக்காலத்திலே யிழந்தார்க்கும் இழக்க வேண்டாமல். திருவேங்கட மலையிலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குக்களோடு வாசியற எல்லாரும் வந்து ஒருமிடறாக ஆச்ரயிக்கலாம்படி நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை யநுஸந்தித்து அத்திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பஞ் செய்து சரணம் புகுகிறார் இத் திருவாய்மொழியில்,
ஏழாம் பத்தில் முதல் பதிகம்--உண்ணிலாவிய -எம்பெருமான் கீதையிலே *தைவீ ஹ்யேஷா குணம௰ீ மம மாயா துரத்யயா* என்று சொல்லி வைத்து, உடனே *மாமேவயே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தேர என்றும் சொல்லி வைத்தான். அதாவது--ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால். விழ்க்க வொண்ணாதாப் போலே தான் பிணைத்த மாயப் பிறவிப் பிணையானது ஒருவராலும் கழற்ற வொண்ணாதது என்று முன்னம் சொல்லி வைத்து, என் திருவடிகளையே தஞ்சமாகம் பற்றுவார் யாவரோ, அவர்கள் அந்தப் பிணையை எளிதாகக் கழற்றிக் கொள்ள வல்லார்கள் என்று பின்னைச் சொன்னான். அந்தத் திருமுகப் பாசுர நம்பிக்கையாலே ஆழ்வார் கீழ்த்திருவாய்மொழியில் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாக முன்னிட்டுத் திருவேங்கட முடையான் திருவடிகளிலே ஆர்த்தராய்ச் சரணம் புகுந்தார் மாயப் பிறவி மயர்வறுத்து நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யம் பெறவேணு மென்று. அந்த சரணாகதி பலித்ததில்லை. பரதாழ்வானுடைய சரணாகதிக்கு முன்னே தேவதைகளின் சரணாகதி கிடந்ததாய் அதற்குப் பலன் அளித்த பின்னரே பரத சரணாகதிக்குப் பலன் தர. வேண்டினாப்போலே - இங்கும் ஆழ்வாருடைய சரணாகதிக்கு முன்னே இவ்வுலகில் சில ஸம்ஸாரிகள் சரணாகதி செய்திருப்பர்கள் போலும்; நாங்கள் வாழலாம்படி. ஸர்வோத்துங்கமானதொரு பிரபந்தத்தை உபகரித்தருள வேணுமென்று சிலர் சரணாகதி செய்திருந்தார்களாக வேணும்) அதுதான் முந்தின சரணாகதி யாகையாலே அதற்குப் பலனளித்த பின்னரே ஆழ்வாருடைய சரணாகதிக்குப் பலனளிக்க வேண்டி எம்பெருமான் தாழ்த்தான். -எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைக் குறையறப் பேசவல்லதொரு பிரபந்தம் திருவவதரிக்கவேணு. மென்று ஏற்கெனவே சிலர் சரணாகதி செய்திருக்க வேண்டுகையாலே முந்துற முன்னம் அதற்குப் பலனளிக்க வேண்டி எம்பெருமான் ஆழ்வாருடைய சரணாகதியைப் பழுதாக்கினனென்னலாம். இவருடைய சரணாகதிக்கு இப்போதே பலன் தந்தால் திருவாய்மொழி அரைகுறையா யன்றோ போயிருக்கும். முந்தின சரணாகதிக்குப் பலன் முற்றிற்றாகாதே. திருவாய்மொழி தலைக்கட்ட வேண்டி ஆழ்வாரை இன்னமும் இவ்விபூதியிலே வைத்தானாயிற்று. -முன்னமே இவர் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ? என்று வயிறெறிந்திருக்கிரரே; அந்த வயிற்றெரிச்சல் தானே மேலும் தலையெடுத்து *அந்தோ வடியேனுன பாத மகலகில்லே னிறையுமே யென்று சொன்ன வடியேனை, அகற்றுமவற்றின் நடுவே யிருத்தித் துடிக்க வைப்பது தருமமோ வென்று கூப்பிடுகிறார் இத்திருவாய்மொழியில்.
ஏழாம்பத்தில் இரண்டாம் பதிகம்-- --கங்குலும் பகலும் --கீழே ஆறாம்பத்தின் ஈற்றுத் திருவாய்மொழியில் -- பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுந்தவிடத்திலும் ஆழ்வார் தாம்
எம்பெருமானுடைய திருவடி வாரத்திலே சென்று நிற்கக் கண்டிலர். -இன்னமும் இந்த ப்ரக்ருதி மண்டலத்திலேயே தம்மைக் கண்டார். -சப்தாதி விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைத்த போதே தன் பக்கலில் நின்றும் நம்மை அகற்றப் பார்த்தானன்றோ வென்று கருதிப் புலியின் வாயிலே அகப்பட்டாற் போலே கூப்பிட்டார் கீழ்த் திருவாய்மொழியிலே. இந்த ஆர்த்தியை எம்பெருமான் அறியாதவனல்லன்; “எப்படியும் இவர்க்கு நாம் பேறு பெறுவிப்பது திண்ணம்; இவர் அங்கே போந்து செய்யும் காரியத்தை இங்கே யிருந்து தான் செய்யட்டுமே என்றிருந்தான்வன். மக்களைப் பட்டினியிட்டு வைத்தும் வந்த விருந்தினரைப் பேணுவாரைப்போலே -இவ்வாழ்வார் தாம் நாலுநாள் நோவுபட்டாராகில் படுகிறார்; இவருடைய திவ்வியப் பிரபந்தத்தைக்
கொண்டு நாட்டை வாழ்விப்போம்' என்றிருந்தான். இவர் ஒரு நொடிப்பொழுது இங்கிருந்தாலும் எம்பெருமான் றன்னாலும் திருத்த வொண்ணாத ஸம்ஸாரம் எவ்வளவோ திருந்தி வாழும்படியாயன்றோ விருப்பது. அதற்காகவே இவரை இங்கு வைத்தான் அவன். அந்தோ! இக்கொடு வுலகத்தில் இருப்புப் பொருந்தாத நம்மைக் கொண்டா இவன் காரியம் நிர்வஹிக்கப் பார்ப்பது! இந்நிலத்தில் இருப்புப் பொருந்துவார் பலருண்டே; அன்னவர்களில் ஆரேனு மொருவரைக்கொண்டு காரியம் பார்க்கலாகாதோ!”! என்று துடிக்கிறார் ஆழ்வார். இங்கு இருப்புப் பொருந்தாதாரைக் கொண்டே காரியம் பார்க்கவேணும் என்பதே எம்பெருமானுடைய பிடிவாத
மாயிற்று. இப்படி எம்பெருமானைப் பிரிந்து துடிக்கவேண்டிய தாயிற்றேயென்று நிலைகலங்கின ஆழ்வார் தாமான தன்மையை யிழந்து தமது பரிதாபத்தைத் தம் வாயாலே சொல்லகில்லா தாராய் தாய் சொல்லவேண்டும்படியான தளர்த்தியுண்டாக, திருத்தாயார் பாசுரமாகச் செல்லுகிறது இத்திருவாய்மொழி. திருத்தாயார் இப்பராங்குச நாயகியைப் பெரிய பெருமாள் [ஸ்ரீரங்கநாதர்] திருவடிகளிலே யிட்டு வைத்துக்கொண்டிருந்து இவள் அழுவது தொழுவது மோஹிப்பது பிரலாபிப்பது அடைவுகெடப் பேசுவது நெடுமுச்செறிவது அதுவும் மாட்டாதொழிவது ஸ்தப்தையாயிருப்பது முதலியவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி, இவள்.
திறத்திலே நீர் என் செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறீர்?” என்று கேட்கிறபடியாய்ச் செல்லுகிறதாயிற்று.
ஏழாம்பத்தில் மூன்றாம் பதிகம் -வெள்ளைச்சுரிசங்கு -கீழ்த் திருவாய்மொழியிலே ஆழ்வாருடைய துயர் பேச்சுக்கு நிலமல்லாமேயிருந்தது, பெரிய பெருமாளூடைய திருக்குணங்களையும் வடிவழகு முதலானவற்றையும் பராங்குசநாயகியான தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லக்கேட்டும் சிறிது தரிக்கும்படி யாயிற்று, மோஹமும் தெளிந்தது. பின்பு அவனைச் சென்று கிட்டியே தீர்வேன் என்னுமாற்றாமை பிறந்து, *தென்திருப்பே ரெயில் வீற்றிருந்த மகரநெடுங்குழைக் காதணிடம் போகவேணு மென்று புறப்பட, பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் சூழ்ந்து கொண்டு உனக்கு இத்தனை ப்ராவண்யமாகாது: நமக்கு இது பழியாய் விளையும்! என்ன, “நீங்கள் தடை சொல்லுகிறவற்றால் ஒரு பயனுமுண்டாகமாட்டாது. நான் மகர நெடுங்குழைக்காதனாலே நெஞ்சு பறியுண்டேன் ; ஆனபின்பு நானே போனதாகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொண்டுபோய்ச் சேர்க்கப் பாருங்கள்?
என்று, பராங்குச நாயகி தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்குச் சொல்லுகிறதாகச் செல்லுகிறது இத்திருவரய்மொழி
ஏழாம்பத்தில் நான்காம் பதிகம்- ஆழியெழ -கீழ்த் திருவாய்மொழியிலே ஆழ்வாருடைய பதற்றம் அளவு கடந்திருந்தது. *மண்ரதிணி ஞாலமுமேழ்கடலும் நீள் விசும்புங் ஊழியப் பெரிதாகத் தாங்கொண்ட காதலை வெளியிட்டு, இப்படி
கரைபுரண்ட, காதலையுடைய நரன் இங்கே யிருக்ககில்லேன், தென் திருப்பேரையில் சென்று சேர்வேனத்தனையென்று சொல்ல, தோழிமார் தாய்மார் முதலானார் இது ஸ்வருபஹானியென்று சொல்லித் தடுத்தவளவிலும் கேட்கமாட்டாதவராய்ப் பதறியே நின்ற ஆழ்வார் புறப்பட்டுச் செல்லப் பார்த்தார். *காலாழும் நெஞ்சழியுங் கண் சுழலும்* என்னும்படியான நிலைமையிலே நின்றிருந்தாராகையாலே புறப்பட்டுச் செல்ல வலிமை யற்றிருந்தார். வாய் கொண்டு பேசவும் முடியாதபடி பலமழிந்து கிடந்த விவர்க்கு ஒரு வழியாலே பலமுண்டாக்க வேணுமென்று பார்த்தான். எம்பெருமான் தன்னுடைய விஜயாபதான பரம்பரைகளைக் காட்டிக் கொடுத்தால் அவற்றைக் கண்டு பலம் மிக்குத் தரித்திருப்பர் என்று கருதி, உலகளந்தது, கடல் கடைந்தது, நிலமிடந்தது, பிரளயத்திலே உலகமுண்டது முதலான அபதானங்களைக் காட்டிக்கொடுத்து, “ஆழ்வீர்! இவற்றை யநுஸந்தித்துத் தரித்து வாழும்' என்ன, ஆழ்வாரும் அவ்வபதானங்களை ஸமகாலத்திற்போலே கண்டு பாசுரந்தோறும் ஒவ்வொரு அபதானமாகப் பேசித் தரிக்கிறார் இத்திருவாய்மொழியில், ்
ஏழாம்பத்தில் ஐந்தாம் பதிகம்-- -கற்பாரிராமபிரானை -கீழ்த்திருவாய்மொழியில் எம்பெருமானுடைய சில விஜய சேஷ்டிதங்களைக் காணப்பெற்று அநுபவித்தவாழ்வார் அப்படிப்பட்ட மற்றுஞ் சில சரிதைகளையும் வாயாரப் பேசி, *அந்தோ! இப்படிப்பட்ட பகவத் குணங்களை யநுபவிக்க இட்டுப் பிறந்தும் ஸம்ஸாரிகள் அந்ய பரராயிருப்பது என்னோ வென்று வியந்தும் திருவுள்ளம் நொந்தும் பேசுகிறதாய்த்து இத்திருவாய்மொழி,
ஏழாம்பத்தில் ஆறாம்பதிகம்--பாமருமுவுலகும் -கீழ்த்திருவாய்மொழியில் பரோபதேசம் ஸ்பஷ்டமாக இல்லை யாயினும் பரோபதேசத்திலேயே முழுநோக்காயிருக்கும், *கற்பாரிராமபிரானையல்லால் மற்றுங் கற்பரோ *நாரணற்காளன் நியாவரோ
*கண்ணற்காளன் றியாவரோ* என்று இங்ஙனே பாட்டுத்தோறும் படர்க்கையாகவே அருளிச் செய்திருந்தாலும் முன்னிலையாக அருளிச்செய்வதிலேயே ஆழ்வாருடைய திருவுள்ளம் ஊன்றி யிருக்கும். பாவிகாள்! இழந்து போகிறீர்களே!” என்று ஸம்ஸாரிகளை நோக்கிப் பரிதபித்துக் கூறுதலும், *அப்படி இழவாதே கொள்ளுங்கள்* என்று உபதேசித்ததுமே கீழ்த்திருவாய்மொழிக்கு ப்ரமேயமாயிருக்கும். அங்ஙனே பிறருடைய இழவுக்கு நொந்து பேசின ஆழ்வார் தம்மை நிரூபித்துப் பார்த்தார். பிறர் இழந்திருப்பது நாஸ்திக்யத்தாலே; அப்படிப்பட்ட இழவு தமக்கு இல்லையானாலும்,
எம்பெருமானைப் பரிபூர்ணமாக அநுபவிக்கவேணுமென்கிற விருப்பம் தமக்குக் குறையற உண்டாயிருக்கச் செய்தேயும். அவ்வநுபவம் பெறாமையினலேயான இழவு பொறுக்க வொண்ணா திருந்ததனால், தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோற்றப் பரமபத நாதனுடைய திருச்செவியளவும் படும்படியாகப் பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார் இத்திருவாய்மொழியில், அம்மங்கியம்மாள் என்னு மாசிரியர் “இத்திருவாய்மொழியின் சப்த ராசிகளை நாம் வாயாற் சொல்லவும் காதாம் கேட்கவும் அதிகாரிகளே தவிர, இதில் ஆழ்வார்க்குச் செல்லுகின்ற ஆர்த்தி இப்படிப்பட்டதென்று எடுத் துரைக்க நாம் அதிகாரிகளல்லோம்”' என்பராம்.
ஏழாம்பத்தில் ஏழாம் பதிகம்--ஏழையராவி --கீழ்த் திருவாய்மொழியிலே ஆழ்வார் கூப்பிட்ட கூப்பீடு பரம பதத்தளவுஞ் சென்று பரவாஸுதேவனுடைய திருச்செவியில் விழுந்திருக்குமே. அது கேட்ட அப்பெருமான் ஆழ்வாரை ஒருவாறு தேற்றுவிக்க உருவெளிப்பாடு தோன்றச் செய்தருளினன். அதாவது அவனுடைய திவ்யாவயங்களை மாநஸ ஸாஷாத்கார விஷயமாகப் பெற்றாராழ்வார். கண்ணுக்கு ப்ரத்யக்ஷமாகத் தோற்றாமே நெஞ்சுக்கு மாத்திரம் ஸாக்ஷாத்கார விஷயமாகை உருவெளிப்பாடாம். அது இத்திருவாய்மொழியில் செல்லா நின்றது. இது பிராட்டி நிலைமையிலே நின்று பேசும் திருவாய்மொழி. தாய்மார்களையும் தோழிமார்களையும் நோக்கி “எம்பெருமானுடைய வடிவழகு எனக்கு ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமாய்த் தோற்றித் தனித்தனியும் திரளவும் ஒரு முகஞ்செய்து நலியா நின்றதே! இந்த நலிவுக்கு ஆற்றுவேனா? உங்கள் பேச்சுக்கு அஞ்சுவேனா?” என்று அலமந்து பேசுகிறாளாயிற்று பராங்குச நாயகி, கீழ் ஐந்தாம்பத்தில் *எங்ஙனேயோ வன்னைமீர்காள்* என்கிற திருக்குறுங்குடிப் பதிகமும் உருவெளிப்பாடாய்ச் சென்றது; அதிற்காட்டில் இத்திருவாய்மொழிக்கு வாசி யென்னென்னில்; அங்கு பரிதியும் அப்ரீதியும் ஒரு நிகராயிருக்கும்; இங்கு அப்ரிதி தலையெடுத்திருக்கும். தொடங்கும்போதே '*இணைக் கூற்றங் கொலோ!” என்கையாலே பாதகத்வத்தினுறைப்பு தெரியவரும்.
ஏழாம்பத்தில் எட்டாம் பதிகம்--மாயா வாமனனே -கீழ்த்திருவாய்மொழியிலே ஆழ்வார் உருவெளிப்பாட்டாலே நோவுபட்டார், அந்த நோவைப் பரிஹரிக்கு எம்பெருமானால்' ஆகாததன்றே. ஆனாலும் சில காரணங்களாலே அவன் திருவுள்ளம் ஒரு ஸமய விசேஷத்தை எதிர்பார்த்திருந்தபடியாலே தாமதிக்கலாயிற்று. அந்தத் திருவுள்ளத்தை ஆழ்வார் தாம் அறியாதவரல்லரே. அறிந்து வைத்தும் ஆறியிருக்கு மியல்வின ரல்லரே. உயிர் துறந்து, முடியவேண்டும்படியான நிலைமை நேர்ந் திருக்கச் செய்தேயும் எம்பெருமான் தம்மை முடியவொட்டாதே கடத்துகிறபடியைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். “இப்படி யொரு ஆச்சரியமிருந்தபடியென்!' என்று எம்பெருமானையே நோக்கிக் கூற, “ஆழ்வீர்! இந்தவொரு ஆச்சரியந்தானோ என்னிடத்தில் நீர் அறிந்தது? என் விசித்திரங்களையெல்லாம் காட்டு
கிறேன் பாரும்' என்று சொல்லி எம்பெருமான் தன்னுடைய விருத்த விபூதித்வத்தைக் காட்டியருள, அது கண்டு ஆழ்வார் விஸ்மிதராய்ப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில்.
ஏழாம்பத்தீல் ஒன்பதாம் பதிகம்--என்றைக்கும். -கீழ்த்திருவாய்மொழி சென்றது. எம்பெருமானுடைய ஒரு ஆச்சர்ய சாதுரியத்தாலேயாயிற்று, ஆழ்வார் ஒன்று கேட்க, எம்பெருமான் ஒன்றைச் சொல்லி அவர் கேட்டதை மறப்பிக்குமியல் வினனாகையாலே ஒவ்வொரு. ஸமயத்திலே ஒவ்வொரு குணாவிஷ்காரத்தைப் பண்ணுவதும் அதை ஆழ்வார். அணுபவிக்குமாறு செய்வதும் அத்தாலே சிறிது போது கழியும்படியாகச் செய்வதும் ஆக இப்படியே நடந்து வாராறின்றது. இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று மடிபிடித்துக் கேட்டு உத்தரம் பெற்றேயாக வேணு மென்கிற தீவிரமான ருசி ஆழ்வார்க்கு உண்டாயிற்று, அதனால் எம்பெருமானை வலியப் பிடித்துக் கொண்டு பிரானே! என்னுடைய ஆற்றாமையில் குறை கண்டாயோ? உன்னுடைய சக்தியில் குறை கண்டாயோ? ஏதுக்கு இப்படி யென்னை நலியுமவற்றின் நடுவே வைத்து நலியா நின்றாய்? *பொய் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்குடம்புமாய் இந்நின்ற நீர்மைமிலே மிக்க அருவருப்புக் கொண்ட வென்னை இக்கொடிய நிலத்திலே வைத்துக் குமைப்பது பரம காருணிகனான உனக்குப் பொருந்துமோ? என்ன திருவுள்ளங்கொண்டு என்னையிங்கு இட்டு வைத்திரா நின்ருய்? இது தன்னை இன்று நீர் சொல்லியே யாக வேணும்' என்றாராழ்வார்-அதுகேட்ட எம்பெருமான் *ஆழ்வீர்! என் கருத்தை நீர் தாம் அறியீரோ? அறிந்து வைத்தும் அறியாதவர் போலக் கேட்கின்றீரே; நமக்கும் நம்முடையவர்கட்கும் போது போக்குக்கு உரித்தான செவிக்கினிய செஞ்சொற்களைப் பாடித் தருகைக்காக வன்றோ நாம் உம்மை இந்நிலத்திலே வைத்திருப்பது; அப்படி யிருக்க ஏன் பதறுகிறீர்? என்ன, அதுகேட்ட ஆழ்வார் 'பிரானே; இதுவோ உன் கருத்து? ஸர்வேச்வரனாய் அவாப்த ஸமஸ்த காமனு யிருந்துள்ள உனக்கும் ஒரு குறை யுண்டாகி அக்குறையை என்னாலே தீர்த்துக் கொள்ளப் பார்ப்பதாகிறவிது நன்றாயிருக்கிறது -உனக்குச் சில ப்ரபந்தங்கள் வேண்டினால் அவையியற்றுவற்கு ஆற்றல் முதலியவை நிரம்பிய வ்யாஸ பராசர வால்மீகி முதலானாரைக் கொண்டும் *இன் கவி பாடும் பரம கவிகளான முதலாழ்வாரைக் கொண்டும் பாடுவித்துக் கொள்ளலாகாதா? நீசனேன் நிறையொன்றுமிலேணைக் கொண்டு பாடுவித்துக் கொள்ளத் திருவுள்ளம் கொண்டபடி என்னே! இது என்ன நீர்மை! இது என்ன வாத்ஸல்யம்! “என்று பெரு நன்றி பாராட்டி, “ இதற்கீடாக நான் செய்வதொரு கைம்மாறு கண்டிலேனே!' எண்று தடுமாறுவதாய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.
ஏழாம்பத்தல் பத்தாம் பதிகம்--இன்பம் பயக்க எம்பெருமான் தம்மைக் கொண்டு திருவாய்மொழி பாடுவிததுக கொண்ட பேருதவிக்குக் கைம்மாறு ஒன்றுங். காணாமே தடுமாறுகிறார் கீழ்த்திருவாய்மொழியில். இப்படிப்பட்ட இவருடைய தடுமாற்றத்தை யாற்றுதற்காக எம்பெருமான், *ஆழ்விர்! நீர் ஏன் தடுமாறுகின்றீர்? நீரும் ஒன்று செய்து நெஞ்சார்ல் திர்ந்தவராம்படி பண்ண நாம். கருதியிருக்கின்றோம்; பண்டு திருவயோத்யையிலே நாம் குசலவர்கள் வாயாலே ஸ்ரீராமாயணம் செவி சாத்தினோமென்று கேள்விப்பட்டிருப்பீரே; அப்படியே திருவாறன்விளையிலே திருவாய் மொழி கேட்பதாகப் பாரித்திருக்கின்றோம். ஆனால் ஸ்ரீராமாயணம் கேட்டபோது நாம் பிராட்டியைப் பிரிந்திருந்தோமாதலால் தனியே யிருந்து கேட்டோமென்று ஒரு குறையுண்டு. இப்போது அப்படி யன்றிக்கே நாமும் நம் பெண்டுகளுமாயிருந்து கேட்க அறுதி யிட்டிருக்கின்றோம்; நீர் அங்கே வந்து திருவாய்மொழி கேட்பித்து ஒருவாறு நெஞ்சாறல் தீரப்பெறலாமே' யென்று பணிக்க, அது கேட்ட ஆழ்வார், “என்னைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட உபகாரத்தளவோடு நில்லாமல் அது கேட்கவும் பாரியா நின்றானே! இது என்ன மஹோபகாரம்!' என்று உவகை தலை மண்டை கொண்டு அந்தத் திருவாறன்விளைத் திருப்பதியிற் சென்று திருவாய்மொழி கேட்பித்தலாகிற கைங்கர்யத்தைச் செய்யப் பாரிக்கிறார் இத்திருவாய்மொழியினாலே.
எட்டாம் பத்தில் முதல் பதிகம் - தேவிமாராவார் -கீழ்ச் சென்ற பதிகத்தில், திருவாறன்விளை யென்னு்ம் திருப்பதியிலே சென்று அங்கு எம்பெருமான் பெரிய பிராட்டியாரும் தானுமாகத் திருவாய்மொழி கேட்கைக்கு விருப்பத்தோடிருக்கிற விருப்பிலே நாம் திருவாய்மொழி கேட்பித்து மற்றுஞ் சில கைங்கரியங்களையும் பண்ணி யநுபவிப்போமென்று பாரித்தார் : அது பாரிப்பளவில் நின்றதத்தனையொழிய நினைத்தபடி நிறைவேறப் பெற்றதில்லை. அதனால் ஆழ்வார்க்கு எம்பெருமானுடைய சில திருக் குணங்களில் அதிசங்கை தோன்ற, அதனை வெளியிடுவது இத்திருவாய்மொழி, பிராட்டிமார் அருகே யெழுந்தருளியிருக்க, நித்யஸூரிகளுமுண்டா யிருக்க, நினைத்தபடி காரியஞ்செய்து தலைக்கட்டவல்ல சக்தியும் அவனுக்குண்டாயிருக்க, அடியார்கள் விரும்பினபடி திருமேனிகளைப் பரிக்ரஹித்து வந்து உதவுமியல்வினனாயுமிருக்க, தமக்கும் அபிறிவேசத்தில் குறையில்லாதிருக்க, நினைத்த பரிமாற்றம் பெறாதொழியவே ஆழ்வார்க்கு வெறுப்பு உண்டாயிற்று : அதனால், எம்பெருமானையே நோக்கி * பிரானே ! நான் நினைத்திருப்பது மருள் கொல் ? அடியார்களுக்கு நீ வசப்பட்டவனென்றும் எல்லாப் பொருள்களும் நீ யிட்ட வழக்கென்றும் இப்படிச் சில குணங்களை நான் உன்னிடத்தில் இருப்பனவாகக் கொண்டிருந்தேன் : அக் கொள்கை உண்மை யன்றோ வென்று இப்போது அதிசங்கிக்க நேர்கின்றது : நானொருவன் தோன்றி உனக்கு இவை பொய்யாய்ப் போகின்றன போலும் ! என்று விண்ணப்பஞ் செய்கிறார். அசோகவனத்திலலே எம்பெருமானுடைய திருக் குணங்களைச் சிந்தனை செய்தே தரித்திருக்க வேண்டியவர்கள் அவற்றில் அதி சங்கை பண்ணினால் பிறகு ஜீவித்திருக்க வழியில்லாமையாலே-பிராட்டி * க்யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராசுவ:, ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோச: சங்கே மத்பாக்ய ஸம்க்ஷயாத் ” என்று பெருமாளுடைய குணங்களிலே. அதிசங்கை பண்ணினாற்போலுமிது. “ கோவிந்தன் குணம்பாடி -- ஆவிகாத்திருப்பேனே ” என்கிறபடி * இங்ஙனே அதிசங்கை கொண்ட ஆழ்வாரை இனி நாம் இழக்க நேருமோ ? என்று எம்பெருமான் அதிசங்கை பண்ணி * ஆழ்வீர் ! இப்படியும் நீர் அதிசங்கை கொள்ளத் தகுமோ ? நாம் உமக்கு ஒன்றும் செய்யவில்லையா ? எவ்வளவு செய்திருக்கிறாமென்பதை நீர் தாமே ஆலோசித்துப் பாரும் : இவ்வளவு செய்த நாம் மேற் செய்ய வேண்டியதையும் அடைவே செய்வோங் காணும் : வீணாக அதிசங்கை கொள்ள வேண்டா என்று சொல்லி ஸமாதானம் பண்ண, ஆழ்வாரும் தேறி நின்று அவற்றை யநுஸந்தித்து இனியராகிறார்.
எட்டாம்பத்தில் இரண்டாம் பதிகம்-நங்கள் வரிவனளை -எம்பெருமான் ஆச்ரித பரதந்திரன், ஸர்வ நிர்வாஹகன் என்றிருந்தோம் ; இவையும் நம்மைத் தோற்றிப் பொய்யாகிறதோவென்று அவன் குணத்திலும், ஸ்வரூபத்திலும் அதிசங்கை பண்ணின ஆழ்வாரை ஒருவாறு தேற்றித் தெளிவித்தானெம்பெருமான் கீழ்த்திருவாய்மொழியில், உண்டான அதிசங்கை தீர்ந்தவளவே யல்லது தமக்கு அபேஷிதமான பாஷ்ய ஸம்ச்லேஷத்தைப் பெற்றாரல்லரே ஆழ்வார், -அதனால் ஆழ்வார்க்கு மற்றோர் அதிசங்கையுண்டாயிற்று ; அதாவது ஸம்ஸாரத்திலே நமக்கு நசையில்லையென்று நாம் எண்ணி யிருக்கின்றோமானாலும் *உள்ளுவாருள்ளிற்றெல்லா முடனிருந்தறியும் ஸர்வவேச்வரனுடைய திருவுள்ளமறிய நமக்கு ஸம்ஸார ருசி யிருக்கின்றது போலும். இல்லையாகில் எம்பெருமான் நம்மை உபேஷிக்க ப்ரஸக்தியிராதே; உபேஷிக்கக் காண்கிறோமாதலால், நமக்கு ஸம்ஸார ருசி இன்னமும் அறவில்லையென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கக்கூடும். ஸர்வஜ்குமன அவன் அங்ஙனே திரு வுள்ளம் பற்றினால் அது பொய்யாக இருக்கமாட்டாதே. நம்மையுமறியாமல் நமக்கு ஸம்ஸாரருசி உள்ளத்தினுள்ளே உறைகின் றதோ என்னவோ ? என்கிற சங்கை உண்டாயிற்று. அதனால் ஆத்மாத்மீயங்களில் தாம் நசையற்றபடியை எம்பெருமான் திருவுள்ளத்திலே படுத்த நினைத்தாராழ்வார் ; அதை நேராக விண்ணப்பஞ் செய்யாதே தோழியோடு ஸம்வாதமாகிற அந்யாபதேச முகத்தாலே அறிவிக்கிற படியாயிற்று இத்திருவாய்மொழி. *காலம் பல சென்றுங் காண்பதாணை உங்களோடெங்க எரிடையில்லையே என்றும் *பாதமடை வதன் பாசத்தாலே மற்ற வன்பாரங்கள் முற்றவிட்டு* என்றுமுள்ள பாசுரங்கள் இத்திருவாய் மொழிக்கு உயிரானவை. இத்திருவாய் மொழியில் அந்யாபதேச ப்ரகாரமிருக்கிறபடி யென்னென்னில்;- ஸர்வேச்வரனோடு கலந்து மிரிந்தாளொரு பிராட்டி, மறுபடியும் அவன் தானே வரக்கண்டிருக்கை தவிர்ந்து தானே புறப்படுவாளாய் அவனிருந்த தேசத்தேறப் போகமுயல், இது கண்ட தோழிமார் முதலானோர் * உனக்குப் படி கடந்து புறப்படுகையாகிறவிது ஆகாது காண் ' என்று ஹிதஞ் சொல்லி மீட்கப் பார்க்க; அவளைக் குறித்து, ப்கவத் விஷயமொன்று தவிர மற்ற எதிலும் தனக்கு நசையில்லாத படியைச் சொல்லி அவர்களது பேச்சுக்கு இணங்க முடியாமை கூறுகிறது.
எட்டாம்பத்தில் முன்றாம்பதிகம் - அங்குமிங்கும் -கீழ்த் திருவாய்மொழியில் பத்தாம் பாட்டில் *ஓர் கோலரில நன்னெடுங்குன்றம். வருவதொப்பான்* என்று எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலக்ஷண்யத்தை யநுஸந்தித்தாரே ; அவ்வநுஸந்தானம் திருவுள்ளத்திலே மிக ஊன்றியிருக்க- இப்படிப்பட்ட ஸெளற்தர்ய ஸெளகுமார்யங்களுக்குக் கொள்கலமான இவ்வடிவுடனே ப்ரயோஜறாந்தர பரரான ப்ரதிகூலர் வர்த்திக்கிற இந்த நிலத்திலே தனியே வந்து உலாவுகின்றானே?” பரிவர் ஒருவருமில்லையே, -என்ன தீங்கு நேரிடுமோ ! என்று ஆழ்வார் வயிறெரிற்து பயப்பட, -அதற்கு எம்பெருமான் “* ஆழ்வீர் ! நமக்குப் பரிகைக்கு முழுஷுக்களும் முக்தரும் நித்யரும் உண்டு ; ஒரு குறையுமில்லை; வீணாக ஏதுக்கு அஞ்சுகின்றீர் - அஞ்சவேண்டா என்றருளிச்செய்ய, ஆழ்வார் தாம் ஒருவாறு அச்சம் திர்ந்தவரான படியை இத்திருவாய்மொழியிலே அருளிச் செய்கிறார். இதில், முதலில் *ஆளுமாளாராழியுஞ் சங்குஞ் சுமப்பார்தாம், வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை* என்ற பாசுரத்தை நோக்குமிடத்து ஆழ்வார் பரிந்து அஞ்சினமை தெரியும் ; மேலே *கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கமில்லா வானவரெல்லாந் தொழுவார்கள்* என்ற பாசுரத்தை நோக்குமிடத்து ஒருவாறு மனம் தேறினமை தெரியவரும்.
எட்டாம்பத்தில் நான்காம்பதிகம் - வார் கடா வருவி --எம்பெருமானோ ஸம்ஸார மண்டலத்திலேவந்து அவதரித்துத் தனியே உலாவா நின்றான் ; ஸம்ஸாரிகள் தங்கள் தங்கள் அபேஷிதம் பெற்று அகன்று போமவர்களே யொழிய இவனுக்கு ரகைஷ தேடிப் பரிகிறவர்களாக இல்லையே!, இவனுக்கு என் வருகிறதோ என்று. அஞ்சின ஆழ்வாருடைய அச்சம் கீழ்த் திருவாய்மொழியில் ஒருவாறு தீர்ந்திருக்கச் செய்தேயும் இன்னமும் இவர்க்கு நம்பக்கல் பரிவின் கனத்தாலே அச்சம் மறுவலிடக் கூடுமென்றெண்ணின எம்பெருமான் * ஆழ்வீர் ! பிரதிகூலர்க்குக் கணிசிக்க வொண்ணாதபடி அரணுடைத்தான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றிலே மஹா சத்திமான்களான மூவாயிரம் வேதியர்கள் பரிந்து கோக்க அவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்கிறபடி பாரீர் ; நமக்கு அஸாதாரணமான வீர்ய பராக்ரமாதி குண ஸம்ருத்தியையும் பாரீர் என்று அவற்றைக் காட்டிக்கொடுக்க, அதனால் அச்சம் நன்றாகக் கெட்டு அவனது வடிவழகிலே நெஞ்சை வைத்து அநுபவித்து உகந்தபடியைத் தெரிவிப்பதாம் இத்திருவாய்மொழி, ஸ்ரீ விபீஷணாழ்வான் பெருமாள் திருவடிகளிலே வந்து சரணம் புக, இவனைச் சேர்த்துக்கொண்டால் பெருமாளுக்கு என்ன அவத்யம் வருமோவென்று கலங்கின ஸுக்ரிவ மஹாராஜாதிகளுக்கு அச்சந்தீருமாறு பெருமாள் *பிசாசாந் தாஈவாந் யக்ஷாந் ப்ருதிவ்யாஞ்சைவ ராக்ஷஸாம், அங்குல்யக்ரேண தாந் ஹர்யாம் இச்சந் ஹரிகணேச்வர* என்று தம்முடைய மிடுக்கைக் காட்டினது போலாமிது. அப்படி மிடுக்கைக் காட்ட. அச்சந்தீர்ந்து *கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞு லோகறாத ஸுகாவஹ* என்று மஹாராஜர் இனியரானாப் போலே ஆழ்வாருமினியராகிறாரிங்கு,
எட்டாம்பத்தில் ஐந்தாம்பதிகம் - மாயக்கூத்தா -கீழே *அங்குமிங்கும், *வார்கடாவருவி என்கிற இரண்டு திரு வாய்மொழிகளாலும் எம்பெருமானுக்கு ரகைஷதேடி ஸமாஹிதராய்ச் நின்றார். *வார்கடாவருவியில், -திருச்செய்ய கமலக்கண்ணும். செவ்வாயும் செவ்வடியும் செய்யகையும் திருச்செய்ய கமலவுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்யவுடையும் திருச்செய்ய முடியுமாரமும் படையும் திகழ என் சிந்தையுளானே ” என்று உள்ளம் பூரித்து உடல் பூரித்து அறுஸந்தித்த வடிவழகு திருவுள்ளத்திலே வேருன்றி யிருந்தபடியாலே அவ்வடிவழகைக் கண்ணாரக் கண்டு பாஹ்யஸம்சலேஷம் பண்ணவேணுமென்று அபேகைஷ. பிறந்து, அது பெறாமையாலே * கீழ்ப் பல திருவாய்மொழிகளிலும் பட்ட கலசங்களும் இதற்கு ஈடல்ல ; ஆழ்வாருடைய கலேசங்களிலே இது நிகரற்ற க்லேசம்' என்னும்படியாக நொந்து காட்டுத்தீ கதுவினாரைப்போலே தப்தராய், தம்மிற்காட்டிலும் ஆகுலங்களான கரணங்களை யுடையராய் “என் விடாயெல்லாம் தீரும்படி திவ்யாவயவங்களோடே வரவேணும், அழகிய திருவபிஷேகத்தோடே வர வேணும், அகிழய வடிவோடே வரவேணும், மேகம் போலே வர வேணும், உதய காலத்து ஆதித்யனைப் போலே பெரிய புகரோடே வரவேணும் ' என்றிப்படி ௯ப்பிட்டு, பின்னையும் அவன் வந்து, முசுங்காட்டக் காணாமையாலே * நாம் இந்த க்லேசத்தோடே முடிந்து போமித்தனை யன்றோ ? என்று இழவோடே தலைக்கட்டுகிறது இத் திருவாய்மொழி,
எட்டாம்பத்தில் ஆறாம்பதிகம் - எல்லியுங்காலையும் -கீழே *மாயக்கூத்தா வென்கிற பதிகத்திலே ஆழ்வார்க்குண்டான விடாய் பேச்சுக்கு நிலமன்று என்று நினைப்போம் நாம் ; உண்மையில், ஆழ்வார் விஷயத்தில் எம்பெருமானுக்குண்டான விடாய் தான்
அபரிமிதமானது. “இப்படி கூப்பிடுகிற ஆழ்வார்க்கு உதவப் பெற்றிலோமே!” என்று மிகவும் தபித்து ஆகுலனாய் லஜ்ஜையுமுடையனாய் இனி நாம் என்ன செய்வதென்று ஆலோசித்தான் ; உடனே சென்று நாம் கடுக முகங்காட்டினோமாகில் ஆழ்வார் ஸந்தோஷாதிசயத்தாலே உடலுமுயிருமுக்கி சிதிலராய்ப்போவர் ; ஆகவே ஸந்தோஷத்தைப் பொறுப்பித்து உளராக்கிப் பரிமாறவேணும்' என்று
துணிந்து, பதினாலாண்டு பிரிவாலே நொந்த பரதாழ்வானைத் தரிப்பித்து முகங்காட்டுகைக்காகத் திருவடியை முன்னே செல்லவிட்டுத் தான் பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே யிருந்தாப் போலவும் பாண்டவர்களுக்காகத் தூது போகிற போது ப்ரேம பரவசர்களான விதுரர் முதலானோருடைய பரிதியை ஸாத்மிப்பிக்கைக்காக *குசஸ் தலே நிவஸதி ஸச ப்ராதரிஹேஷ்யதி* என்றபடியே குசஸ்தலத்திலே தங்கியிருந்து மறுநாள் ஹுஸ்திநாபுரத்திலே யெழுந்தருளினாப் போலவும், ஆழ்வார் தம்மோடே ஸம்ச்லேஷிக்க விரும்பிய ஸர்வேச்வரன் தம்முடைய ப்ரீதியை ஸாத்மிப்பித்துத் தம்மோடே கலக்கைக்காகத் திருக்கடித்தான மென்னும் மலைநாட்டுத் திருப்பதியிலே யெழுந்தருளி யிருந்தான் ; இதனை யறிந்த ஆழ்வார் இப்படியாக எம்பெருமான் தம் பக்கலில் பண்ணுகிற வ்யாமோஹத்தை அநுசந்தித்து இனியராய் அத்தைப் பேசி யநுபவிக்கிறார் இத்திருவாய் மொழியில்.
எட்டரம்பத்தில் ஏழாம்பதிகம் - இருத்தும் வியந்து. -இத்திருவாய்மொழியில் ஆழ்வார் பேறு பெற்றுக் களிக்கும் விதம் பரம விலக்ஷணமாகவுள்ளது. இவ்விஷயத்தில் இப்பதிகத்தோடொத்த பதிகம் இத்திருவாய்மொழி யாயிரத்தினுள் வேறில்லை யென்று சொல்லலாம். எம்பெருமானைப் பெறுவதில் ஆழ்வாருடைய விருப்பம் அதிகமா ? ஆழ்வாரைப் பெறுவதில் எம்பெருமானுடைய விருப்பம் அதிகமா ? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், எம்பெருமானுடைய விருப்பமே அதிகமென்று தேறி நிற்கும். *ஜ்ஞாரீது ஆத்மைவ மே மதம்* என்றும் *வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:* என்றும் சொல்லி வைத்திருக்கிற எம்பெருமான் படியைப்' பார்த்தால், ஒரு சேதநனைப் பெறுகை எம்பெருமானுக்குப் பரம லாபமாகக் காணாரின்றதன்றோ. ஆகவே ஆழ்வாரைப் பெறுகையே எம்பெருமானுக்குப் பரம லாபமாகையாலும், அதற்குரிய கருவி பண்ணுவானும் அவனே யாகையாலும், அவன் தானும் ஆர்த்தியே செப்பேடாக வந்து உதவுமவனாகையாலும் தானே அர்த்தியாய்த் தன் பேறாக வந்து கலந்தான். அதனைக் கண்ட ஆழ்வார் * அந்தோ! நம்மோடு கலப்பதற்கு எம்பெருமான் இரப்பாளனாயிருக்க, நாம் இரப்பாளராய்க் கூப்பிட்டோமே!” என்று வருந்தி ஒரு ஸம்ஸாரி சேதநன் பக்கலிலே ஸர்வேச்வரன் தான் செய்தருளும் விஷயீகாரம் என்னே!” என்று ஈடுபடுகிறாராய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி.
எட்டாம்பத்தில் எட்டாம்பதிகம் - கண்கள் சிவந்து -*மாயக்கூத்தாவென்கிற திருவாய்மொழியில் ஆழ்வாருடைய விடாய் அபரிமிதமாகவன்றோ இருந்தது; அந்த விடாயெல்லாம் ஆறும்படி எம்பெருமான் வந்து கலந்து தன் விடாயுந் தீர்ந்து
இவரைப்பெற்ற பேற்றாலே பரமப்ரீதனாயிருந்தான். கீழ்த்திருவாய் மொழியில் ஆழ்வார் தம்முடைய பரமானந்தத்தைப் பேசும்போது “ சிறியேனுடைச் சிந்தையுள் ” என்றாரே ; அந்தச் சொல்லை எம் பெருமான் மிகவும்! ஆராய்ந்தான். * அந்தோ! இவர் சிறியேனென்று தம்முடைய நைச்சியத்தை யநுஸந்திக்கத் தொடங்கி விட்டார். ஏற்கெனவே *வளவேமுலகு பதிகம் முதலானவற்றில் தலைகாட்டி ஒருவாறு மடிந்த நைச்யாநுஸந்தானம் மறுபடியும் தலைகாட்டத் தொடங்கிற்றுப்போலும் ; இன்னமும் இது முற்றிவிட்டால் பிறகு பரிஹரிப்பது அரிதாகுமே ; ஆதலால் இப்போதே அதனை வேரறக் களைந்திடுதல் நன்று * என்றெண்ணி இவர் நைச்யத்திற்கு ஆஸ்பதமாக நினைத்திருக்கிற ஆத்ம வஸ்துவினுடைய பெருமையை இவர் நெஞ்சிலே படுத்த வேணுமென்று பார்த்து அது செய்தருளுகிறான் ; அது செய்யுமிடத்தில் * உம்முடைய ஆத்ம ஸ்வரூபமிருக்கும்படி காட்டுகிறேன் வாரீர் என்றால் * மின்மினி போலே யிருக்கிறவிதனை நீ காட்டிடவும் நான் காணவும் வேணுமோ ? என்று சொல்லி இசையாதொழிவரிவர் ; மேலும் *அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே* என்று இவர் நம் வடிவழகிலே துவக்குண்டிருக்கிறாராகையாலே -நம்மை முன்னிட்டு அவ்வாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக் காட்டிக் கொடுப்போம் என்று பார்த்து வாரீர் ஆழ்வீர் ! நம்முடைய வடிவழகிருக்கிறபடி. கண்டீரே ; நம்மைக் காணுங் காட்சியிலே உம்மையும் காணலாம் படியிருக்கின்றது காணும் ' என்று சொல்லித் தன்னுடைய வடிவழகை முந்துற முன்னம் அநுபவிப்பித்து, தனக்குத் திருவாபரணங்கள் போலே மிகவும் போக்யமுமாய் அத்யந்த சேஷமுமாயிருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்க, அதனை யநுபவித்துப் பேசுகிற தாயிற்று இத்திருவாய்மொழி,
எட்டாம்பத்தில் ஒன்பதாம் பதிகம்-கருமாணிக்கமலை -இத்திருவாய்மொழி தோழி பாசுரமாய்ச் செல்லுகிறது. திருவாய் மொழியாயிரத்தில் தோழி பாசுரமாக வரும் பதிகங்கள் மூன்று ; தீர்ப்பாரை யாமினியும் * துவளில் மாமணி மாடமும் * இக்கருமாணிக்க மலையும், இம்மூன்று பதிகங்களிலும் ப்ரணவத்தில் உகாரத்தின் பொருளான அநந்யார்ஹத்வம் வெளியிடப்படுகிறது. *தீர்ப்பாரை யாமினியில் வெறியாடலை விலக்கின முகத்தாலே அது வெளியிடப்பட்டது, *துவளில் மாமணிமாடத்தில் * இனியுமக்காசையில்லை விடுமினோ “ என்று பலகாலும் தாய்மாரை நோக்கிச் சொல்லுகிற முகத்தாலே அது வெளியிடப்பட்டது ; இப்போது இத்திருவாய் மொழியில் அது தன்னை வெளியிடுகிறவிதம் கேண்மின் ; பராங்குச நாயகியாகிற தலைமகள் பதிஸம்யோகத்திற்குரிய வயது முதிர்ந்து
நின்ற வளவிலே தாய் தந்தையர் ஸ்வயம்வரம் கோடித்து நகரத்திலே மணமுரசு அறைவிக்க, அஃதறிந்த தோழியானவள் *: மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் " என்றும், “ அன்றிப்பின் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற் கல்லால் * என்றும் திண்ணிய அத்யவஸாயங் கொண்டிருக்கிற இப்பெண்பிள்ளை, இப்படி தாய் தந்தையர் கோடிக்கிறபடியை யறிந்தால் கிலேசப் படுவளே யென்று துடித்து, இப்பெண் பிள்ளைக்குக்
குட்ட நாட்டுத் திருப்புலியூர்ப் பெருமானோடே ஸம்ச்லேஷம் பிரவ்ருத்த மானபடியைத் தோழி தானறிந்திருந்தும் அதை வெட்டவெளிச்சமாகத் தாய்மார்க்குத் தெரிவித்தால் நம்மேல் சீற்ற முண்டாகும்; தெரியாதிருந்தால், தலைவியும் லஜ்ஜையாலே வாளரவிருப்பளாகையாலே விபரிதமான கோடிப்பு நிறைவேறி அனர்த்தமாகும் ; ஆகவே இப்போதொரு ஸதுபாயம் செய்யவேண்டும் ; நமக்கும் ஏற்கெனவே இது தெரியாதுபோலே காட்டிக்கொண்டு அப்போது தான் நிரூபித்து
அறிந்து கொள்வது போல் அபிநயித்து ஒருவாறு உண்மையை வெளியிட்டுவிடுவோம் என்று துணிந்து, 'அம்மனைமீர் ! நம் பெண் பிள்ளையின் நிலைமைகளைக் காணுமிடத்து இவளுக்குத் திருப்புலியூர்ப் பெருமானோடே ஸம்ச்லேஷம் கேர்ந்து விட்டதுபோல் தெரிகிறதே, உங்களுடைய கோடிப்புக்கு ப்ரஸக்தியில்லை போல் காண்கிறதே, என்று மத்யஸ்தோக்தியாகச் சொல்லி நிற்கிறாள் ; இவ்வழியாலே ஆழ்வாருடைய அநந்யார்ஹத்வம் வெளியிடப்படுகிறதாயிற்று. கீழ்த் திருவாய்மொழியில் ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யம் சோதிக்கப்பட்ட தாகையாலே அதை நன்கு வடிக் கட்டுகிறது இத்திருவாய்மொழி
எட்டாம்பத்தில் பத்தாம்பதிகம் - நெடுமாற்கடிமை -கீழ்த் திருவாய்மொழியில் அநர்யார்ஹசேஷத்வம் அறுதியிடப் பட்டதன்றோ ; இந்த ப்ரஸங்கத்திலே பாகவத சேஷத்வம் வடிக்கட்டின வேஷமாகச் செல்லப்படவேண்டியதுண்டே ; அது, சொல்லுகிறது இத்திருவாய்மொழியில், கீழ்ப்பதிகத்தின் முடிவு பாட்டில் தொண்டன் சடகோபன்* *தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் என்றாரே; அது தன்னை விசதமாக்குகிறது இங்கு, ஒருவன் ஒரு வஸ்துவினிடத்தில் அன்பு வைத்தால் அவ்வன்பு அளவற்றதுமாயிருந்தால் அவ்வன்பு அவ்வஸ்துவோடே நின்று விடாமல் அதனோடு ஸம்பந்த ஸம்பந்தம் பெற்ற வஸ்துக்களிலும் பெருகிச் செல்லுமென்பைத அனைவரும் தம் தம் அநுபவத்தாலறிவர், அப்படியே பாகவத பக்தியென்பது பகவத் பக்தியின் எல்லை நிலமாக வுண்டாமது, பகவத் பக்தியின் உறைப் பையே பாகவதபக்தி வெளிப்படுத்தும். ஸ்வாமியினுடைய பாதுகைகளிலே நாம் ஆதரம் வைத்து அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொள்வதும், தலைமீது அணிந்து கொள்வதும், அலம்பித் தீர்த்தம் பருகுவதும் செய்கிறோம் ; இதனால் நமக்கு ஸ்வாமியிடத்துள்ள பக்தி அபாரமானது என்பதன்றோ வெளியாகின்றது. அதுபோலவே இங்கும் * அவனடியாரடியே கூடுமிது வல்லால் ' இத்யாதிகளாலே பாகவத சேஷத்வாதிசயத்தைப் பேசுவதெல்லாம் பகவச் சேஷத்வத்தின் உறைப்பையே பேசினபடியாகும். திருமந்திரத்தில், அஹங்காரமும் மமதாரமும் நீங்கப் பெற்று பகவச் சேஷத்வம், உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவச் சேஷத்வத்தின் எல்லை நிலத்வம் அநுஸந்திக்கப்பட வேணுமென்பது சாஸ்தரார்த்தம், திருமந்திரத்திற்கு முக்யமான பொருள் பாகவத சேஷத்வமே யென்பதை *மாறன் பணித்த தமிழ் மனக்கு ஆறங்கங் கூற அவதரித்த மங்கையர்கோன் தமது திருமொழியில் *மற்றெல்லாம் பேசிலும் நின்திருவெட்டெழுத்துங்கற்று நான் - உற்றது. முன்னடியராக்கடிமை- என்ற பாசுரத்தில் தெளிய வைத்தார். கீழ் மூன்றாம்பத்தில் ஏழாவது பதிகமான *பயிலுஞ்சுடரொளி ஸ்வ ஸ்வரூப ப்ரதிபாத பரமென்றும், *நெடுமாற்கடிமை. புருஷார்த்த ஸ்வரூப ப்ரதிபாதக பரமென்றும் வகையிட்டுக் காட்டப்பட்டது:அங்கு வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள்-“பகவச் சேஷத்வத்திலும் தத்தரஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யமென்று ப்ரதி பாதித்த *பயிலுஞ்சுடரொளியும்....பாகவத் கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த *றெடுமாற்கடிமையும் ”' என்றருளிச்செய்திருப்பது காண்க, இதனால், பாகவத சேஷத்வம் ஆத்ம ஸ்வரூபம் என்பதிலே *பயிலும்சுட்ரொளிக்கு நோக்கு ; பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதிலே நோக்கு இத்திருவாய்மொழிக்கு என்றதாயிற்று, இத்திருவாய்மொழியின்' ஈட்டவதாரிகையில் ஓர் ஐதிஹ்யமுள்ளது ; அதாவது அம்முணி யாழ்வான் போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே பட்டர் கண்டருளி “நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் போர வடிமைசெய்து போந்தா யென்று கேட்டோம் ; உன் ப்ரக்ருதிக்குச் சேர *நெடுமாற்கடிமையைக் கேள்” என்றருளிச் செய்தாராம் ” என்று,
ஒன்பதாம் பத்தில் முதல்பதிகம்-கொண்ட பெண்டிர் -கீழே *நெடுமாற்கடிமை யென்கிற திருவாய்மொழியிலே எம்பெருமானடியார்களையே உபாயோபேயங்களான எல்லாமுமாகப் பற்றி யிருக்கையாகிற தம்முடைய சிழந்த அத்யவஸாயத்தை வெளியிட்ட ஆழ்வார் அவ்வடியார்களின் திருவுள்ள முகக்கும்படியான அர்த்தத்தையே இத்திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். பாகவதர்களே எல்லா வுறவுமென்றது-கீழ்த்திருவாய்மொழி; பகவானே எல்லாவுறவு மென்கிறது இத்திருவாய்மொழி ; இவை ஒன்றோடொன்று முரண் பட்டவை யென்று நினைக்க வேண்டா ; பகவத் பக்தியின் எல்லை நிலமாக பாகவத பத்தியும், பாகவத பக்தியின் எல்லை நிலமாக பகவத் பக்தியும் கொள்ளத்தக்கது, உலகில் ஒரு வ்ய்க்தியினிடத்திலே நாம் வைக்கும் அன்பு அந்த ஒரு வ்யக்தியளவிலே முடிந்து நிற்காமல் தத் ஸம்பந்தி ஸம்பந்திகளிடத்தும் பெருகிச் செல்வது போல, பகவான் பக்கலிலே வைக்குமன்பு அவனளவிலே நில்லாது அவனுடைய ஸம்பந்த ஸம்பந்தம் பெற்ற பாகவதர்களிடத்தும் வளர்ந்து செல்லுமாயிற்று. அப்படியே பாகவதர்களிடத்தே வைக்குமன்பும் அவர்களோடு ஸம்பந்தம் பெற்றவனென்கிற காரணத்தினாலேயே பகவானிடத்திலும் பெருகும், பட்டர் ஸ்ரீகுணரத்ந கோசத்திலே -*ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பகயேம* என்றருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம், பெரிய பிராட்டியாருடைய மணவாளன் என்கிற காரணத்தையிட்டே எம்பெருமானை யுகப்பதாக இங்குச் சொல்லி நின்றது, *அஸ்யேசாகா ஜகதோ விஷ்ணுபத்நி* என்று ஓதின படியே தேவதேவ திவ்யமஹிஷி யென்கிற காரணத்தையிட்டுப் பெரிய பிராட்டியாரை யுகப்பதாகச் சொல்லுவதுமுண்டே, இவை பரஸ்பரம் முரண்பட்ட பொருள்களல்ல ; இரண்டும் பரமார்த்தமே. இது போலவே, பகவத் ஸம்பந்தத்தையிட்டுப் பாகவதர்களை யுகப்பதும், பாகவத ஸம்பந்தத்தை யிட்டுப் பகவானை யுகப்பதம் பொருந்தியதே யாதலால் கீழ்த் திரு வாய்மொழியிற் சொன்ன அர்த்தத்திற்கு அவிருத்தமாகவே இத்திருவாய்மொழி செல்லுகின்றதென்று கொள்க. உலகில் ப்ராக்ருதர்களான ஆபாஸ பந்துக்களையே நம்பியிருப்பாருடைய ப்ரமம் நீங்குமாறு உபபத்திகளுடன் அருளிச்செய்வது இத்திருவாய்மொழி* எந்த நிலைமையிலும் எம்பெருமானொருவனே நிருபாதிக ரக்ஷகனென்றும், நாம் பந்துக்களென்று நினைக்கும்படியுள்ளவர்கள் பக்ஷகர்களே யொழிய ரக்ஷகர்களல்லரென்றும் விரிவாக அருளிச்செய்கிறார். கீழ் ஐந்தாம்பத்தில் *சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரேயினியாவாரேர் என்கிற பாசுரத்திற்சொன்ன பொருளை விவரிக்க வந்ததாயிற்று இத்திருவாய் மொழி, * ஈச்வரனை யொழிந்தவர்கள் ரக்ஷகரல்லரென்னுமிடம் ப்ரபந்ந் பரித்ராணத்திலே சொன்னோம்? என்று முமுக்ஷஃப்படியில் அருளிச்செய்தபடியே ப்ரபந்ந பரித்ராணமென்னும் ரஹஸ்யத்திலே விரிவாகக் காண்கிற விஷயங்களுக்கு இத்திருவாய்மொழியே மூலமமாகும். இத்திருவாய்மொழியில் பல பாசுரங்களில் ** வடமதுரைப் பிறந்த ” என்று வருவதால் வடதிசை மதுரையை மங்களாசாஸனம் செய்கிற பதிகமிது-என்றும் கொள்ளலாம். பரோபதேச ரூபமாகச் சொல்வது இது
ஒன்பதாம்பத்தில் இரண்டாம்பதிகம்- பண்டைநாளாலே, ஸர்வேச்வரனைத் தவிர்ந்தவர்களனைவரும் ஆபாஸ பந்துக்களென்றும் ஸர்வேச்வரனொருவனே நிருபாதிக பந்துவென்று மருளிச் செய்தார் கீழ்த்திருவாய்மொழியில். இவரருளிச்செய்தவளவேயன்றே; உண்மையில் அவன் தான் பரம பந்துவாயிற்றே. *மாதா பிதா ப்ரதா நிவாஸச் சரணம் ஸுஃஹ்ருத் கதிர் நாராயணர் என்று சுருதி சொன்னது உண்மை யல்லதில்லையே, அப்படி பரம் பந்துவானவன் பந்துக்கள் செய்யவேண்டிய செயலைச் செய்யாதிருக்கமாட்டனே. அது செய்கைக் குறுப்பாகத் திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளா நின்றான் : நாமும் அங்கே சென்று கிட்டினால் நமக்கு பந்துக்ருத்யமெல்லாம் பண்ணுவன் என்று அநுஸந்தித்து ஆழ்வார் அங்கே சென்று கிட்டினார். இப்படி பரம பந்துவானவன் ஸன்னிதி பண்ணி யருளுகிற திருப்புளிங்குடியிலே எல்லாவகையான பரிமாற்றங்களை யுமாசைப்பட்டுச் சென்று கிட்டினவிடத்தும், இவரை என்னென்று வினவுதல், குளிர நோக்குதல், ஒரு வார்த்தை சொல்லுதல் ஒன்றுஞ் செய்திலன். ஆனாலும், *இன்றாக நாளையேயாக இனிச் சிறிது நின்றாக நின்னருள் என்பாலதே* என்று திண்ணிய அத்யவஸாயம் கொண்டிருக்குமவர்களிலே ஒருவரான ஆழ்வார் * அவனும் பந்து க்ருத்யம் செய்யத் தவறமாட்டான் ; சிறிது தாமதித்தால் என்ன குறை?” என்று ஒருவாறுதேறுதலடைந்து, வேறொன்றுக்காக மிகவும் ஆர்த்தி யடைந்தார் ; அதாவதென்னென்னில் ; இங்கே என்றைக்குத் திருக்கண்வளர்ந்தருளப் புகுந்தானோ அன்றுமுதல் இன்றளவாக ஏக ரிதியாய் ஆடாதே அசையாதே சயனித்திருக்கின்றானே ! இது என்ன சிரமமோ?' என்று இவ் வாற்றாமை திருவுள்ளக்திலே குடி புகுந்தது. கீழ் எட்டாம்பத்தில் *கொடியார்மாடக் கோளூரகத்தும் புளியங்குடியும் மடியா தின்னே நீ துயில்மேவி மகிழ்ந்தது தான், அடியாரல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே* என்ற பாசுரத்திலுண்டான வயிறுபிடியே மீண்டும் தலையெடுத்தது, அப்பெரிய வாற்றாமையோடே *தேவரிரும் பிராட்டிமாருங்கூட எழுந்தருளி யிருக்குமிருப்பை எனக்குக் காட்டி யருளவேணும் ; என்னைக் கண்ட காட்சியிலே விகாரமடைந்து என்முன்னே நாலடியுலாவி யருள வேணும்; புன்முறுவல் காட்டியருள வேணும்; ஒரு வார்த்தை நீ யருளிச்செய்யவேணும்! என்றிங்ஙனே தாமுமவனுமே யறிந்ததாகத் திருவாசலைத் திருக்காப்பிட்டுக்கொண்டு ஏகாந்தத்திலே தம்முடைய மநோ ரதங்களையெல்லாம். விண்ணப்பஞ் செய்கிற இத்திருவாய் மொழியில். இப்பதிகத்தின் பொருட்சுவை ஒருபுறமிருக்க சொற் சுவை கல் நெஞ்சையும் கரையப் பண்ணும், ஸம்ஸாரத்தில் ஆர்த்தி விசேஷங்களுணடாகி நெஞ்சு தடுமாறிக் கிடக்கும்போது இப்பதிகத்திற் பாசுரங்களை வாய் வெருவினால் நெஞ்சு குளிரும். நாற்பதாண்டு களுக்குக் கீழே திருவரங்கம் பெரிய கோயிலில் பெரிய திருவத்யயநத் திருநாளில் இத்திருவாய்மொழியை அரையர் இசைபாடாறிற்க, அஸ்மதாசார்யரான அழகியமணவாளச் சியர் கண்ணுங் கண்ணீருமா யிருந்த விருப்பு இன்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே.
ஒன்பதாம் பத்தில் முன்றாம் பதிகம் - ஓராயிரமாய் --கீழ்த்திருவாய்மொழியில் 'தொண்டரோர்க்கருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்* என்றும் “இடங் கொள் மூவுலகும் தொழ இருந்தருள்வாய்* என்றும் ; *மெல்லடியைக் கொடுவினையேன் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாய்” என்றும் பலவாறு பிரார்த்தித்தார், இப்படிப் பிரார்த்திக்கக் கேட்ட எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி * ஆழ்வீர் ! நமக்கு நாராயணனென்று திருநாமமிருப்பது அறியீரோ ? நாராயணனென்பதற்கு. -நாரங்களுக்கு அயனமாயிருப்பவன் என்கிற பொருள் தவிர, நாரங்களை அயனமாக வுடையவனென்கிற பொருளுமுண்டென்பதை அறிவீரன்றோ, அப்பொருளில் ஸகல சேதநா சேதங்களும் சரீரமாய் நான் சரீரியாயிருக்கையாகிற அம்சம் தேறுகின்றதென்பறையும் அறிவீரே ; சரீரத்திற்கு ஆகும்பேறு சரீரிக்கேயாதலால் சரீர பூதரான உமக்கென்று ஒரு பேறு உண்டோ? சரீரியான என்னுடையதன்றோ பேறு என் பேற்றுக்கு நீர் பிரார்த்திப்பது பொருந்துமோ? எல்லாம் நானே செய்து போரக்கடவேன் ; உமக்கும் நமக்குமுண்டான குடல் துடக்கை யறிந்துவைக்து! நீர் இப்படி ப்ரார்த்திப்பதும் கிலேசிப்பதும் தகுதியன்று * என்று ஸமாதானம்பண்ண, அது கேட்டு ஆழ்வார் ஒருவாறு தாம் ஸமாஹீதரானபடியை வெளியிட்டுக் கொண்டும் “இது என்ன சீலகுணம்!” என்று ஈடுபட்டுக்கொண்டும். அருளிச் செய்வதாம் இத்திருவாய்மொழி, இப்பதிகத்திற்கு மற்றொருபடியாகவும் ஈட்டில் அவதாரிகை அருளிச் செய்யப்படுகிறது ; அது நடுவில் திரு வீதிப்பிள்ளையின் நிர்வாஹமாகவுங்காண்கிறது. அதன் சாரமாவது, கீழ் எட்டாம்பத்தில் *கண்கள் சிவந்து* என்கிற பதிகம் தொடங்கி முறையே திருமந்திரார்த்தம் அருளிச் செய்யப்பட்டு வந்து, கீழ் *பண்டை நாளாலே* என்கிற பதிகத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனை பண்ணுகிற முகத்தால் வ்யக்த சதுர்த்தியளவாக அர்த்தம் அநுஸந்திக்கப்பட்டுத் தலைக்கட்டிற்று. அர்த்தாநுஸந்தானம் பண்ணினவர், அந்த அர்த்தத்தைக் கொண்ட மந்த்ரம் திரு வஷ்டாக்ஷர மஹா மந்த்ரம் யென்று வெளியிடவேண்டி. இப்பதிகமருளிச் செய்கிராரென்பதாம். இப்பதிகத்தின் முதற்பாட்டில் “ நாராயணன் நங்கள் பிரானவனே ” என்றதில் முழு நோக்காக இந்த நிர்வாஹம் தோன்றியதென்க.
ஒன்பதாம்பத்தில் நான்காம்பதிகம்-- மையார்கருங்கண்ணி --எம்பெருமான், சாஸ்த்ரங்களில் ஒரு பக்கத்திலே ஸ்வதங்த்ரினன் என்று போற்றப்படுவதுபோல, மற்றொரு பக்கத்தில் சீலாதி குண கண பூஷிதனென்றும் கொண்டாடப்படுகிறான். ஸ்வாதந்திரியம் என்பது அவனுக்கு ஸ்வரூபமாயிருக்கும், சீலாதி குணமுடைமையும் அவனுக்கு ஸ்வருபமாயிருக்கச் செய்தேயும் ஸ்வாதந்திரியத்தின் கீழே அத்திருக்குணங்கள் தலையெடுக்கமாட்டாமல் அமுங்கிக் கிடக்கும். அவை எப்போது தலையெடுக்குமென்னில் ; பிராட்டி புருஷகாரம் செய்யும் போதுகளில் தலையெடுக்குமென்று நம் ஆசாரியர்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். முமுக்ஷுப்படியில் த்வய ப்ரகரணத்தில்-புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலை யெடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம்” என்ற திவ்ய ஸுூக்தியை இங்கு அநுஸந்திப்பது, ஆக, கீழ்த்திருவாய்மொழியில் அநுஸந்திக்கப்பட்ட சீலகுணத்திற்கு. ஊற்றுவாயான பிராட்டியின் ஸம்பந்தத்தையும் அநுஸந்தித்தார் ஆழ்வார். *மாக வைகுந்தங் காண்பதற்கு என்மனமேகமெண்ணு மிராப்பகலின்றியே* என்று கீழ்த்திருவாய்மொழியில் வெளியிட்ட ஆசையும் விஞ்சிப் பெருகிற்று. அவன் சீலாதிகனுமாய்த் திருமகள் கொழுநனுமாயிருந்து வைத்து இப்படி நம்மை துடிக்கவிட்டு உபேஷித்து இருக்கிறானே யென்று மிகவருந்தினாராழ்வார். கஜேந்திராழ்வானுக்கு அருள்செய்ய அரைகுலையத் தலைகுலைய மடுவின் கரையிலே ஓடி. வந்தாப்போலவு மன்றிக்கே ப்ரஹ்லாதாழ்வானுக்கருள் செய்யத் தூணிலே வந்து சடக்கெனத் தோன்றினாப் போலே தோன்றி யருள் செய்ய வேண்டும்படியான நிலைமையாயிற்று ஆழ்வாரது, இப்படிப்பட்ட நிலைமையிலும் அவன் வந்து முகங்காட்டிற்றில னென்றால் அவனைக் குறித்துச் சொல்லும் குணங்கள் கடலோசை போலே நிரர்த்தகமாமத்தனையன்றோ. அப்படி தன் திருக்குணங்களைப் பழுதாக்கிக் கொள்ளமாட்டானே அவன் ஆழ்வாருடைய விடாயையறிக்து உதவவந்து முகங்காட்டினான். அதற்கு மிக மகிழ்ந்து “நான் க்ருதக்ருத்யனனேன், அடிமை செய்யப்பெற்றேன், வாழ்ந்தேன், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கெல்லாம் சொல்லமுதளித்து உபகாரம் செய்யப்பெற்றவனானேன் ; இம்பேறுகள் ஒருவன் பெறத் தகுமா?! என்று சொல்லித் தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டுத் தலைக்கட்டுகிறார் இப்பதிகத்தை.
ஒன்பதாம்பத்தில் ஐந்தாம்பதிகம்-- இன்னுயிர்ச் சேவலும் கீழ் பண்டை நாளாலே என்கிற பதிகத்திலே ஆழ்வார்க்கு ஒரு கிலேசம் நிகழ்ந்தது, அதை ஒருவாறு ஸமாதானப்படுத்தப் புகுந்த ஸர்வேச்வரன் * ஆழ்வீர்! நான் நாராயணனன்றோ ; உமக்கு எல்லா வுறவின் காரியமும் குறையறச் செய்து தருவேன்” என்று சொல்ல, அவனுடைய சீலத்தில் கால் தாழ்ந்து ஒரு படியாய்ச் சென்றது மூன்றாம் பதிகம்- *தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள் சொல்லும்படி உம்மையாக்கினேனே, இது உமக்கு ஸமான்யமாகக் கிடைக்கக்கூடியபேறோ? இதனை நினை! என்று எம்பெருமான் அதனால் ஒருவாறு களிப்படைந்து தரித்து நின்றார் கீழ்ப் பதிகத்திலே. அங்கு “தேவர்கட்கெல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே ” என்றருளிச் செய்தவர்க்கு பாஹ்யஸம்ச்லேஷத்திலே அபேகைஷ பிறந்தது. இவர்க்கு இன்னமும் விடாயைப் பிறப்பித்து முகங் காட்டவேணும் ” என்று எம்பெருமானிருக்கையாலே அவன் தாமதிக்கிறான். ஆழ்வார்க்கோ தளர்ச்சி மிகுகிறது. தளர்ந்தவர்கள் தரிப்பதற்குப் பல வழிகளுண்டே ; லெளகிக பதார்த்தங்களிலே நெஞ்சைச் செல்ல விட்டு அந்த அந்ய பரதையாலே ஒருவாறு” தரிப்போம் என்றும், அவனோடு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போமென்றும் நினைத்து லெளகித பதார்த்தங்களிலே கண்வைத்தார். ஒருவாறு தரிப்பதற்குச் செய்த அச்செயல் ஆச்வாஸ ஹேதுவாகாமல் ஸ்மாரகமாய் பாதிக்கத் தொடங்கிற்று, உலகில் எந்தப் பொருளைக் கண்டாலும், அவனாயிருக்கிற படியை நினைத்தோ, அவனோடு ஸம்பந்தம் பெற்றிருக்கிறபடியை நினைத்தோ, அவனுக்குப் போலியாயிருக்கிறபடியை நினைத்தோ தளருமவ ரன்றோ ஆழ்வார். கீழ் நாலாம்பத்தில் மண்ணை யிருந்து துழாவி* என்னும் பதிகத்திலே பட்டபாடு தெரியுமே. ஆக லெளகிக பதார்த்தங்கள், அவனை நினைப்பூட்டி ஈலிய அவற்றால் நோவுபடுகிற படியை அந்யாபதேச்த்தாலே யருளிச் செய்வது இப்பதிகம், எம்பெருமானோடே கலந்து பிரிந்த வொரு பிராட்டி, தன்னாற்றுமையாலே அவனோடு போலியான பதார்த்தங்களைக கண்டாகிலும் தரிப்போமென்று கொண்டு ஒரு பூஞ்சோலைக்குப் புறப்பட, அங்குண்டான குயில் மயில் முதலானவை அவனுடைய பேச்சையும் வடிவையும் நினைப்பூட்டி நலிய, * இவை தாமாக நலிதின்றனவல்ல ; நம்மை முடிக்க வேணு மென்று பார்த்த எம்பெருமானாலே ஏவப்பட்டு நலிகின்றன வித்தனை? என்றெண்ணி, அக்குயில் முதலானவற்றை நோக்கி * உங்களுக்கு என்னை நலிய நினைவாகில் இவ்வளவு பாரிப்பு வேணுமோ? என்னுயிரை நானே கொடுக்கச் சித்தமாயிருக்கின்றேனே' என்று சொல்லியும், அவனுடைய திருக்குணங்களை ஒருவாறு நினைத்துத் தரித்தும் போருகிறது இத்திருவாய்மொழி,
ஒன்பதாம்பத்தில் ஆறாம் பதிகம் -உருகுமால்நெஞ்சம் கீழ்ப்பதிகத்தின் முடிவிலே. *எண்ணி நாமும் நம் வான நாடனோடொன்றிலோம்* என்றருளிச் செய்த பாசுரத்தைக் காணுமிடத்து ஆழ்வார் அந்தப் பாசுரத்தோடு திருவாய்மொழியைத் தலைக்கட்டி விட்ட தாகவும், இனிப் பாசுரங்களருளிச்செய்ய ஆழ்வார் இந்நிலத்தில் இல்லையாகவும் தோன்றா நின்றது. ஆனாலும் ஆழ்வார். இன்னமும் இந் நிலத்திலேயே திருப்புளியாழ்வாரடி யிலேயே யெழுந்தருளியிருந்து மேலே பாசுரங்களருளிச்செய்ய ப்ராப்தமாகிறது. எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆழ்வாரைத் த்ரிக்கச் செய்தானோ? அதனால் தரித்து நின்று பேசுகிறாரோ <வென்னில்; இல்லை; எம்பெருமான் வந்து முகங்காட்டி இவரைப் பெறுவது, இல்லையாகில் இழப்பது என்னும்படியான நிலைமையா யிருக்கச் செய்தேயும் அவன் வந்து முகங்காட்டாமலே ஒருவிரகு செய்தானாயிற்று, அந்த விரகுதான் ஏதென்னில்; கீழ் எட்டாம் பத்தில் *இருத்தும் வியந்தென்னை* என்கிற பதிகத்திலே ஒரு விலக்ஷணமான ஸம்ச்லேஷம் நடந்திருந்ததே- அதை நினைப்பூட்டி. ஒருவாறு தரிக்கச்செய்தானாமிற்று எம்பெருமான்; அதுதான் அவன் செய்த விரகு. அதனால் ஆழ்வார் ஒருவாறு தரித்திருந்து இப்பதிகமருளிச் செய்கிறபடி. இதற்கு மூன்றுவிதமான காரணங்களை யருளிச் செய்கிறார் ஆழ்வார். 1-முதற்பதிகமே தொடங்கி *குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரம்* என்று, எம்பெருமானுக்கு ஒரு ஆயிரம் பாசுரம் அருளிச் செய்து தலைக்கட்டவேணுமென்று ஸங்கல்பித்துக் கொண்டாராகையாலே அப்படி அவர் தாம் அதிகரித்த கைங்கரியத்தை முற்றமுடிய நடத்துகைக்கீடான அத்ருஷ்டராயிருந்தார். (2) ஆழ்வாருடைய ஈரச்சொற்களை இன்னமுங் கேட்கவேணு மென்று பாரித்துக் கொண்டிருக்கிற எம்பெருமானுடைய பாக்கியமுமொன்றுண்டு-(3) *தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்* என்று ஆழ்வார் தாமே பணித்தபடி இப் பாசுரங்கொண்டு போதுபோக்க விருக்கிற ஸம்ஸாரி சேதநர்களின் பாக்கியமொன்றுண்டே--ஆக மூன்று காரணங்களினாலும் ஆழ்வார் இன்னமும் இந் நிலத்தில் தரித்து நிற்க ப்ராப்தமாகி, போனவுயிர் மீளும்படி *இருத்தும்வியந்தென்கிற வொருபதிகத்திலே நடந்த கலவி நினைவுக்கு விஷயமாயிற்று, அசோகவனத்திலே திருவடி சென்று கிட்டின போது முன்பு நெடுநாள்பட்ட கிலேசமெல்லாம் கிடக்கச்செய்தே, பெருமாளும் வந்து முகங்காட்டாதிருக்கச் செய்தேயும், வனவாஸத்திற்கு முன்பு திருவயோத்யையிலே பன்னிரண்டாண்டு பெருமாளும் தானும் ஏகபோகமாகவிருந்து பேரின்பம் நுகர்த்த நுகர்ச்சி நினைவுக்கு விஷயமாகி *ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஜ்ஞாறா அமாநுஷாந் போகாந் ஸர்வகாமஸம்ருக்தி* என்று அதைச்சொல்லிப் போது போக்கினாப்போலே, *இருத்தும்வியந்து பதிகததிலே “மூவுலகும் தன்னெறியாவயிற்றிற் கொண்டு சிறியேனுடைச்சிந்தையுள்-—றின்றொழிந்தான்”' என்னும்படி முறை கெடப் பரிமாறின பரிமாற்றம் நினைவுக்கு விஜயமாகி, அது கேவலம் ஸ்மிருதி மாத்திரமே யல்லாமல் இப்போதைய அநுபவமேயென்றே கொள்ளலாம்படியாகி அந்த சீல குணத்தைப் பேசி சிதிலராகிறார். இப்படி. பழைய கலவியை நினைப்பூட்டி ஒருவாறு தரித்து நிற்கச் செய்து பேசுவிக்கிறவன் திருக்காட்கரை யெம்பெருமான் போலும். ஆகவே திருக்காட்கரைப் பெருமான் விஷயமாக இப்பதிகம், மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாயிற்று திருக்காட்கரை யென்னும் தலம்,
ஒன்பதாம்பத்தில் ஏழாம் பதிகம் -எங்கானலகங்கழிவாய் --கீழ்த்திருவாய்மொழியில், ஒருவாறு தரிக்கும்படி செய்து வைத்தானெம்பெருமான்; குணங்களை ஸ்மரிக்க ஸ்மரிக்க அப் பெருமானை நேரே காணவேண்டும்படியான விடாய் மிக்கது. அதனாலே தூது விடுவதாயிற்று இப்பதிகம். திருவாய் மொழியாயிரத்திலும் தூதுவிடும் பதிகங்கள் நான்கு: (1)* அஞ்சிறைய மடநாராய். (2) *வைகல் பூங்கழிவாய். (3) *பொன்னுலகாளீரோ. (4) இத்திருவாய்மொழி, *அஞ்சிறைய மடநாரையில் அபராதஸஹத்வமாகிற க்ஷமாகுணம் பற்றாசாக வியூஹத்திலே தூது விட்டார் *வைகல்பூங்கழிவாயில் ஆச்ரித ஜந ரக்ஷண தீக்ஷிதத்வம் பற்றாசாக விபவத்திலே தூதுவிட்டார்; *பொன்னுலகாளீரில் ஐகரஸ்யம் பற்றாசாகப் பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது விட்டார். இனி இத்திருவாய்மொழியில், அவனுடைய வடிவழகு பற்றாசாக அர்ச்சையிலே தூது விடுகிறார். மேலிரண்டாம்பாட்டில் “திருமூழிக்களத்து--தமரோடு அங்குறைவார்க்கு! என்கையாலே, *பின்னானார் வணங்குஞ் சோதியான திருமூழிக்களத்தில் தம் பரிஐந பரிவாரங்களோடே கூடிக் குலாவா நின்றாரவர்; அதனாலே நம்மை மறந்தார் போலும்; *செங்கமலத் தலர்போலுங் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலுந் திருமேனி யழகை நினைப்பூட்டி “இப்படிப்பட்ட வடிவழகிலே யீடுபட்ட பராங்குச நாயகி உம்மைப் பிரிந்து தரித்திருக்க வல்லளோ வென்று சொல்லுங்கோள்” என்று சில பறவைகளைக் குறித்துக் கூறித் தூது விடுவதாய்ச் சொல்லுகிறது இத்திருவாய்மொழி,
ஒன்பதாம்பத்தில் எட்டாம் பதிகம்- அறுக்கும் வினையாயின --கீழ்த் திருவாய்மொழியில் திருமூழிக்களத் தெம்பெருமான் பக்கலில் தூதுவிட்டார். தூது சென்றவர்கள் மீண்டு வந்து செய்தி சொல்லுமளவும் ஆறியிருக்கவேணுமே; எங்ஙனே ஆறி யிருப்பர், திரு நாவாயிலே சென்று கிட்டுவோமென்று பார்த்தார்
*காலாழும் நெஞ்சழியும். கண் சுழலும்* என்ன வேண்டும் நிலைமையிலிருக்கு மிவர்தாம் எங்ஙனே திருநாவாய்க்குச் செல்வர்? இருந்த விடத்திலே யிருந்து மநோ ரதிக்கக் குறையில்லையே, அந்த மநோ ரதமே இத்திருவாய்மொழியாகப் பரிணமிக்கிறதாயிற்று. “திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது மீண்டவனந்தரம் பெருமாளைக் கிட்டுவதற்கு முன்பு பிராட்டிக்குப் பிறந்த மநோரதம்
போலே, கீழ்விட்ட தூதர் அத்தலைப்பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு” முன்னே நடுவு இவர்க்குப் பிறந்த மநோரதத்தைச் சொல்லுகிறது,” என்பது ஈடு, திருமூழிக்களம்போலே திருநாவாயும் மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றில் ஒன்று, அங்கே புகவல்லேனோ? புகும் கொல் என்றோ? அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்யவல்லேனோ? என்றிப்படி பல மநோ ரதங்களைப் பண்ணுகிறாராய்ச் சொல்லுகிறது இத் திருவாய்மொழி,
ஒன்பதாம்பத்தில் ஒன்பதாம் பதிகம் --மல்லிகை கமழ்,--நம்முடைய முதலிகள் இத்திருவாய் மொழியை “மாலைப் பூசல்' என்று வழங்குவர். (இப்பதிகத்தின் முடிவு பாசுரங் காண்க.) மேல் பத்தாம் பத்தில் மூன்றாம் பதிகமான *வேய்மருதோளிணை
மெலியுமாலோ* என்கிற திருவாய்மொழிக்குக் காலைப்பூசல்” என்று ஸங்கேதம், கண்ணபிரான். விடியற் காலத்திலே பசு மேய்க்கப் போனானாக அதிசங்கை பண்ணி அவன் முகத்தைப் பார்த்து, நீ பசு மேய்க்கப் போனால் நலியக்கடவ பதார்த்தங்கள் நலியா நின்றனவென்று முறையிடுவது, காலைப்பூசலான அத்திரு வாய்மொழியிலே, மாலைப்பூசலான இப்பதிகத்திலோவென்னில், *காடுகளுடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடல் பூச்சூடி வருகின்ற தாமோதரன் மாலைப்பொழுதிலே திருவாய்ப் பாடி யேறத் திரும்பி வரும்போது சில் நாட்களில் பசுக்களை எல்லாம் பின்னே வரவிட்டுத் தான் முன்னே குழலூதிக்கொண்டு வருவன் ; சில நாட்களில் பசுக்களை யெல்லாம் முன்னே போக விட்டுத் தான் பின்னே வருவதுமுண்டு; அப்படி வருகின்ற நாளில் அப்பெருமானைப் பசுக்களின் முற்கொழுந்தில் காணாமல்
திருவாய்ப்பாடியிற் பெண்கள் பட்ட பாட்டை ஆழ்வார் தாம் ஏறிட்டுக்கொண்டு பேசுகிறதா யிரா நின்றது இத்திருவாய்மொழி,
ஒன்பதாம் பத்தில் பத்தாம் பதிகம்--மாலை நண்ணி -கீழ் *அறுக்கும் வினைப் பதிகத்திலே அவனைப் பெறவேணு' மென்கிற மநோ ரதமாய்ச் சென்றது, அந்த மநோரதம் நிறை வேறாமையாலே மிகவும் கிலேசித்தபடி சொல்லிற்று கீழ்த் திருவாய் மொழியிலே, இப்படி நோவுபடுகிற விவருடைய கிலேசத்தை யறிந்த எம்பெருமான் “ஆழ்வீர்! என்னைப் பெறாமையாலை நீர் நோவுபடுகிறது. கிடக்கட்டும்; உம்மைப் பெறாமை இழவுபட்டுக் கிடப்போம் நாமன்றோ? உமக்கொரு குறையுண்டோ? திரு நாட்டை விட்டுத் -திருக்கண்ணபுரத்திலே நாம் ஸன்னிதி பண்ணியிருப்பது உமக்காகவன்றோ; இந்த சரீரத்தின் முடிவிலே உம்முடைய அபேக்ஷிதம் நிறைவேற்றக் கடவோம்” என்று சொல்லி ஸமாதானம் பண்ண, ஆழ்வாரும் ஸமாதானமடைந்து அதனைச் சொல்லி இத்திருவாய்மொழியில், “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்.-என்கிற பாசுரம் இப்பதிகத்திற்கு உயிராய்க் கொண்டு ஸர்வேச்வரன் ஸர்வ ஸமாச்ரயணியனாய் கோயில் கொண்டிரா நின்றான்; அவனைச் சென்று ஆச்ரயுங்கோள்; ஆச்ரயிக்குமிடத்தில் அவன் திருவடிகளிலே பக்தியைப் பண்ணுங்கோள்; பக்திக்கு உபகரண மில்லாதார் ப்ரபத்தியைப் பண்ணுங்கோள் ; அதற்குரிய அத்யவஸாயமில்லாதார் உக்தி மாத்ரத்தை யாகிலும் சொல்லுங்கோள் ; அவ்வளவே கொண்டு அவன்றான் கைவிடான்; ஆனபின்பு எல்லாருமொக்க அவனை ஆச்ரயியுங்கோள் என்று பரோபதேசரூபமாய் நிகழ்கின்றது இப்பதிகம், “மோஹித்துக் கிடந்தாராகில் கிடக்குமித்தனை போக்கி உணர்ந்தாராகில் பிறர்க்கு ஹிதஞ் சொல்லி
யல்லது நிற்க மாட்டார்”' என்பர் நம்பிள்ளை,
பத்தாம்பத்தில் முதல் பதிகம்--தாளதாமரை-கீழ்த்திருவாய்மொழியில் *மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்* என்றருளிச் செய்ததானது எம்பெருமானுடைய திருவுள்ளக் கருத்தை அநுவாதம் செய்தபடியன்றோ. தேஹாவஸானத்திலே பேறு” என்று எம்பெருமான் ஆழ்வார்க்கு நாளிட்டுக் கொடுத்ததாகத் தேறி நின்றது. தேஹத்தின் முடிவு என்றைக்கு ஆகுமென்று ஆழ்வார் ஆலோசிக்க வேண்டுமோ. *இழை றல்லவாக்கையும் பையவே புயக்கற்றது* என்றும் "என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கு மித்தனை வேண்டுமோ?* என்றும் கீழே யருளிச் செய்தவராகையாலே மிகவும் கட்டுக்குலைந்த தம் திருமேனியின் முடிவு அணித்தென்று தாமே அறுதியிட்டுக் கொண்டார். திருநாட்டுககுப் பயணம் குறித்து ஸற்றாஹம் செய்ய வேணுமென்று கொண்டு முந்துற முன்னம் வழித்துணை யாகத் திருமோகூர்க் காளமேகப் பெருமாளைப் பற்றுகிறதாகச் செல்லுகிறது இததிருவாய்மொழி. பரமபதத்திற்குச் செல்ல வழித் துணை வேணுமோ? “அர்ச்சிர் திரபூர்வபக்ஷஷடு தங்மாஸாப்து வாதாம்சுமத் க்லெளவித்யுத் வருணேந்த்ர தாத்ரு மஹித என்று நடாதூரம்மாள் பணித்தபடியே அர்ச்சிராதிகள் வழிநடத்தவன்றோ போகிறது' வேறு வழித்துணை ஏதுக்கு? என்று ஒரு கேள்வி பிறக்கும், வராஹ சரமச்லோகத்திலே *ததஸ் தம் ம்ரியமாணம் து..அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் குதிம்* என்று எம்பெருமான் தானே வழி நடத்திக்கொண்டு போவதாகச் சொல்லி யிருக்கையாலே திருநாடு செல்வார்க்கெல்லாம் அவனே வழித்துணையாகிறானென்னுமிடம், சாஸ்த்ர ஸித்தமாயிருந்தது. அப்படி வழித்துணையாகும் பெருமான் திருமோகூரிலே வந்து ஸந்நிதி பண்ணியிருக்கிறானாகக் கொண்டு அப்பெருமானையே வழித்துணையாகப் பற்றுகிறார். வழித்துணையாமிடத்து ஞானத்தாலும் சக்தியாலும் குறையற்திருப்பானொருவனே யன்றோ ஆக வேணும்; அவன்தான் விரோதி நிரசன ஸமர்த்தனாகவும். இருக்க வேணுமே; இப்படிப்பட்ட வாய்ப்பெல்லாம் திருமோகூரெம்பெருமான் பக்கலிலே குறையற்திருக்கிறபடியை அநுஸந்தித்துக் கொண்டு அப்பெருமானையே வழித் துணையாகப் பற்றுகிறாராயிற்று
பத்தாம்பத்தில் இரண்டாம் பதிகம்--கெடுமிடர் -கீழ்த்திருவாய்மொழியில் திருமோகூரை யநுபவித்தார்; இத் திருவாய்மொழியில் திருவனந்தபுரத்தை யநுபவிக்கிறார்; மேலே 'திருவாட்டாறு, திருமாலிருஞ்சோலை, திருப்பேர் நகர் என்கிற
-திருப்பதிகளையும் பேசப்போகிறார். கீழே ஒன்பதாம் பத்திலும் பல திருப்பதிகளைப் பேசினார். இப்படி அடுத்த்டுத்துத் திருப்பதிகளிலே யீடுபடுவதற்கு என்ன காரணமென்று ஆராய்ச்சி செய்ய ப்ராப்தம். -திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் (10-1) *ஒரு நற் சுற்றம்* என்னும் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் இரண்டிரண்டு திருப்பதிகளைப் பேசியிருக்கிறார்; அதற்கு என்ன காரண மென்று ஆராய்ச்சி செய்த ஆசாரியர்கள் வெகு ஆச்சரியமாகக் கருத்தறிந்து கூறியுள்ளார்கள்; பிறந்தகத்தில் நின்றும் புக்ககஞ் செல்லப் புறப்படுகின்ற பெண்பிள்ளை தான் நெடுநாள் வஸித்த விடத்திலே தன்னோடு மிகவும் முகம் பழகியிருந்த பரம ப்ரேமா ஸ்பதர்களான சில. 'பெண் பிள்ளைகளைச் சென்று பணிந்து நங்காய்! நான் போய் வருகிறேன்; மாதே! நான் சென்று வருகிறேன்' என்று சொல்லி விடை பெற்றுக்கொள்வதற்காகச் சில குழடுகள் ஏறியிறங்குமாபோலே, இவ்வாழ்வாரும் தம் புக்ககமாகிய பரமபதத்தின் பயணத்திற்குப் பூர்வாங்கமாக, தமது மிக்க. ஈடுபாட்டிற்கிடமான சில திருப்பதி யெம்பெருமான்கள் பக்கலிலே. சொல்லிக் கொள்வதாக நுழைந்து புறப்படுகிறார் *ஒரு நல்சுற்றத்திலே- நம்மாழ்வாருமப்படியே *மாலை நண்ணிக்குப் பிறகு பரமபத ப்ராப்தி அணித்தென்று துணிந்தவராகையாலே பல திவ்ய தேசங்களிலே புகுவதாகிறார். இப்போது திருவனந்தபுரத்தை ப்ராப்யமாகத் துணிந்து அவ்விடத்திலே யீடுபட்டுப் பேசுவதாய்ச் செல்லுகிறது இத்திருவாய்மொழி
பத்தாம்பத்தில் மூன்றாம் பதிகம்-- வேய் மரு தோளிணை -கீழ்த் திருவாய்மொழியில், ஆழ்வார் தாமும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாய்த் திருவனந்தபுரத்தே புக்கு அடிமை செய்யப் பாரித்தவர்' அப்போதே அவ்விடத்தே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே கலங்கினார்; பழையபடியே நமக்கு ஸம்ஸாரத்திலிருப்பே சேஷித்து விடுகிறதோ” என்று அதிசங்கை தோன்றப் பெற்றார்; இவ்வதிசங்கைக்கு நிதான மென்னென்னில்; ப்ரக்ருதி ஸம்பதத்தின் கொடுமையாலும் எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியத்தைப் பற்றவும் இங்ஙனே அதிசங்கையுண்டாகக் குறையில்லையன்றோ, இப்படி தமக்குண்டான அதிசங்கையை நேர் கொடு நேரே விண்ணப்பஞ் செய்யாமல் முகபேதத்தாலே விண்ணப்பஞ் செய்கிறார் இத்திருவாய்மொழியில்; எங்ஙனேயென்னில், இடைப் பெண்களுக்குக் கண்ணபிரான் மீது ஒரு அதிசங்கை யுணடாகி அவர்கள் கதறினபடியை வெளியிடும் முகத்தாலே தம்முடைய அதிசங்கையை வெளியிடுபவராகிறார்; அதாவது - ஒரு படுக்கையிலே கூடவிருக்கச் செய்தே பசுமேய்க்கப்போகிற விடியற் காலம் வந்து, அக்காலத்திற்கேற்ற குயில் மயில் முதலானவற்றினுடைய பாடலாடல் முதலான அடையாளங்களையுங் காண்கையாலே அவற்றையே கொண்டு கண்ணபிரான் பசுமேய்க்கப் போனான்" என்று 'அதிசங்கை பண்ணி நோவுபடுகிற இடைப் பெண்களது பேச்சை அநுவதிக்கும் முகத்தாலே ஆழ்வார் தமக்குண்டான அதிசங்கையை வெளியிடுகிறாரென்றவாறு. இத்திருவாய்மொழிக்கான நூற்றந்தாதிப் பாசுரத்தில் மணவாளமா முனிகள் ஆய்ச்சிகளுக்குண்டான அதிசங்கையைம் பற்றிச் சிறிதும் ப்ரஸ்தாவியாமல் **தன்னை யின்னம் பூமியிலே வைக்கு மெனச் சங்கித்து ” என்று ஆழ்வாருடைய அதிசங்கை யொன்றையே இப்பதிகத்திற்கு ப்ரமேயமாக அருளிச் செய்திருப்பது இங்குக் குறிக்கொள்ள த்தக்கது, அந்யாபதேசத்தை விட்டு ஸ்வாபதேசத்தையே கொண்டருளினபடி, அதற்குமேல் “மால் தெளிவிக்கத் தெளிந்த!” என்றுமருளிச் செய்துள்ளார்; ஆழ்வாருடைய அதிசங்கையைக் கண்ட எம்பெருமான் ஆழ்வாரைத் தெளிவு பெறுத்தியதாக இதன் பொருள் தேறுகின்றது; இப்பதிகத்தில் பத்தாம் பாட்டில் “செங்கனிவாயெங்களாயர்தேவே” என்றதின்' சுவடறிந்து பூருவர்கள் நிர்வஹித்தருளினபடியைத் தழுவி “மால் தெளிவிக்கத் தெளிந்த?” என்றருளிச் செய்யப்பட்டதென்க. இத்திருவாய்மொழிக்குக் காலைப்பூசல் என்று நம் ஆசாரியர்கள் வழங்கும் திருநாமம், (மல்லிகை கமழ் தென்றற்பதிகம்-மாலைப் பூசல்).
பத்தாம்பத்தில் நான்காம் பதிகம்- சார்வே தவ நெறி --ஆழ்வார் தாமான தன்மையை விட்டுப் பெண் தன்மை யெய்திப் பேசும் பரிசு முதற் பத்தில் நான்காம் பதிகமான *அஞ்சிறைய மட நாரையிலே தொடக்கமாயிற்று; அது கீழ்ப் பதிகத்தோடு தலைக் கட்டிற்று. இனி மேலுள்ள பதிகங்களிற் பெண்மை தலைகாட்டா தென்க. கீழ்த் திருவாய்மொழியின் ப்ரமேயததை அநுவதித்துக் கொண்டு இங்கே நம்பிள்ளை யருளிச் செய்யுமது காண்மின் - “தம்மைப் பிரிய நினைவின்றிக்கே யிருக்க அதிசங்கையாலே பிரிந்தார் படும் வ்யஸநத்தைப் பட்டு அத்தாலே அவஸந்நரானவரை “உம்மை யொரு நாளும் பிரியேன்? என்று அவன் ஆச்வஸிப்பிக்க அத்தாலே தரித்து மிகவும் ப்ரிதரானார் கீழ்” என்று, நூற்றந்தாதியிலே மணவாள மாமுனிகள் “தன்னை யின்னம் பூமியிலே வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த மாறன்!” என்றருளிச் செய்தபடியே ஆழ்வார் தம்முடைய அதிசங்கை தொலையப் பெற்று இனி நமக்குப் பரமபத ப்ராப்தியில் ஸந்தேஹ மில்லை யென்று துணிந்து, திருவாய்மொழியாகிற இந்த மஹா சாஸ்திரத்திற்குச் செய்ய வேண்டுவதெல்லாம் செய்து தலைக்கட்டத் தொடங்குகிறார் இனி; '“பிணக்கறவைச் சார்வாக நிகமித்து” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தியின்படியே ஆதியிலே பிறர்க்கு உபதேசித்த பக்தி பலத்தோடே சேர்ந்தபடியைச் சொல்லி நிகமிக்கிறார் இதில், விபிஷணாழ்வான் இராவணனைக் குறித்து உபதேசிக்க, அவ்வுபதேசம் அவனுக்குப் பலியாதொழிந்தாலும் உபதேசித்தவற்குப் பெருமாள் பக்கலிலே ப்ராவண்யம் கனத்துத் "தன் பேற்றுக்கு உறுப்பானாப் போலே இவர்க்கும் பரோபதேசம் தம்முடைய ப்ராவண்யம் கனக்கைக்கு உடலாகி ஸபலமானபடியைச் சொல்லி நிகமிக்கிறாரென்க, பிள்ளானுடைய நிர்வாஹமாக ஒரு ஸங்கதி ஈட்டிலருளிச் செய்யப்படுகிறது; நீ பசு மேய்க்கப் போக வேண்டா வென்றவாறே அதில் தவிர்ந்தேனென்றான் எம்பெருமான்; அந்த பெருங்குணத்திலே யீடுபட்டு இவன் பக்தி ஸுலபனென்பதை நிச்சயித்து அது தன்னை யருளிச் செய்வது இத்திரு வாய்மொழி என்று.
பத்தாம் பத்தில் ஐந்தாம் பதிகம்-- கண்ணன் கழலிணை -முதற்பத்தில் *வீடுமுன் முற்றவுமென்கிற பதிகத்திலே பரோபதேசம் பண்ணத் தொடங்கின வாழ்வார் பத்துத்தோறும் உபதேசபரமான பதிகம் அருளிச்செய்துவந்து, இப்பதிகத்தோடே பரோபதேசத்தைத் தலைகட்டுகிறாராயிற்று, பெரியார்கள் தாங்கள் திருநாட்டுக் கெழுந்தருளும் சரம ஸமயத்திலே அந்தரங்கரானார்க்கு அருமையான சில வுபதேசங்களைச் செய்து போவதுண்டு. அதற்குச் சரம ஸந்தேசமென்று பெயர், இப்பதிகமும் அதுவாயிரா நின்றது. எம்பெருமானோ ஆழ்வாரைத் திருநாட்டுக்குக் கொண்டுபோக விரையா நின்றான் ; ஆழ்வாரும் இனி நமக்கு ப்ராப்தி தப்பாதென்று துணிவு கொண்டார். இவர்தாம் ஸம்ஸாரிகள் பக்கலிலே பரம கருணைய வடிவெடுத்தவராசையாலே, ஸம்ஸாரிகளுக்கு இதுகாறும் வேண்டிய படி உபதேசங்கள் செய்தருளியிருந்தாலும், விபீஷணாழ்வான் ராவண பவனத்தை விட்டுப் பெருமாள் திருவடியேறப் போவதாகக் கிளம்பின பின்பும் ** நறச்யந்தமுபேச்ஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா?” என்று சொல்லிப் பின்னையும் உபதேசிக்க வொருப்பட்டாப்போலே இவரும் சரமோபதேசம் செய்து நிகமித்தருளுகிறார். இவர்தாம் பெரிய திருவந்தாதியில் *ஆரானுமாதானுஞ் செய்க அகலிடத்தை பபஇருவது ஆரானுமாதானு யாராய்ந்து அது திருத்தலாவதே!* என்று “ஸம்ஸாரிகளுக்கு உபதேசிப்பது கஷ்டம் கஷ்டம். இது நம்மாலாகாது”” என்று சொல்லி யிருந்தும் *பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளவே தாம் அவதரித்தபடியைத் திருவுள்ளம் பற்றி *சொன்னால் விரோதமிதுவாகிலுஞ் சொல்லுவன்கேண்மினோ வென்று உபதேசத்தில் ருசி குலயாமே போந்தவர் *மண்ணர்க்குத் தானுபதேசிக்கை தலைக்கட்டினான் மாறன்* என்று நூற்றந்தாதியில் மணவாள மாமுனிகளருளிச் செய்தபடியே அவ்வுபதேசத்தை இப்பதிகத்தோடு தலைக்கட்டுகிறாராயிற்று.
பத்தாம்பத்தில் ஆறாம் பதிதம்-- அருள் பெறுவாரடியார் --இத்திருவாய்மொழிக்கு அவதாரிகையிடத் தொடங்கும் போதே நம்பிள்ளை மருளிச் செய்வது பாரிர்--* *பொய்ந் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர ஈச்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்தபடி சொல்லிற்று; இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்வரன் பின் தொடருகிறபடி சொல்லுகிறது”! என்று, அதாவது, இதுவரையில் ஆழ்வார் எம்பெருமானிடத்தில் யாசகராய் நின்றார் ; இனி- முனியே நான்முகனென்னும் பதிகத்தளவும் எம்பெருமான் ஆழ்வார் பக்கலிலே யாசகனாய் நிற்கிறானென்கை, இத்திருவாய் மொழியில் முன்றாம் பாட்டில் *இன்று விண்ணுலகந் தருவானாய் விரைகின்றான்* என்றருளிச் செய்கையாலே ஆழ்வாரைப் பரமபதத்தேறக் கொண்டு போகையிலே எம்பெருமான் தான் விரைந்து *ஆழ்வாரே! வாரீர், வாரீர் என்று வேண்டுகின்றமை தெரிகின்றது. அவ்வளவேயுமன்றிக்கே சரம சரீரமாகையாலே ஆழ்வாருடைய திருமேனியில் தனக்குண்டான வியாமோஹத்தாலே கொண்டுபோக விரைந்ததையுங்கூட மறந்து இத்திருமேனி யநுபவத்திலே மிகவும் சபலனாய், முன்பு ஆய்ச்சியரோடு குரவை கோத்த போது அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி யநுபவித்தாப் போலவும், நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறாயிரம் தேவிமார்களை' த்வாரகையில் பதினாறாயிரம் விக்ரஹங்கள் கொண்டு அநுபவித்தாப்போலவும் அநேக விக்ரஹங் கொண்டு ஆழ்வாருடைய அவயவங்கள் தோறுமநுபவிக்கவும் விரும்பி அதற்கு அநுமதி பண்ணுமாறு வேண்டிக்கொண்டான். அதை ஆழ்வார் வெகு சிரமப்பட்டு விடுவித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் எம்பெருமானுடைய அநுவர்த்தனத்தில் குறைவில்லையே. இதையெல்லாம் திரு வுள்ளம் பற்றியே நம்பிள்ளை * இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்வரன் பின் தொடருகிறபடி சொல்லுகிறது ”' என்று மருமமறிந்து அருளிச்செய்தார். எம்பெருமானைப் பெறவேணுமென்று ஆழ்வார்க்கு விடாய் அதிகமா ? ஆழ்வாரைப் பெற வேணுமென்று எம்பெருமானுக்கு விடாய் அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்குமளவில் ஆழ்வாருடைய விடாய் சிறிது ; எம்பெருமானுடைய விடாய் தானே பெரிது என்று ஸித்தாந்தம் செய்ய வேண்டியதாகிறது. இவ்விஷயம் கீழேயே (9-6.10)* வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணிலென்று, ஆர்வுற்றவென்னை யொழிய என்னின் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்* என்னும் பாசுரத்தினால் ஆழ்வார் தம்மாலேயே வெளியிடப்பட்டுள்ளது. எம்பெருமான் அப்படி பெரு விடாயனாயிருந்து வைத்தும், ஆழ்வாரைக் கொண்டு இவ்வுலகுக்கு *தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்னும் படியாக உணவளிக்க விரும்பியிருந்ததனால் தன் விடாயையடக்கிக் கொண்டு ஸமய மெதிர்ப்பார்த்திருக்க வேண்டியதாயிற்று, அக் காரியமும் ஒருவாறு தலைக்கட்டுமளவானவாறே இனி யெம்பெருமான் ஆறியிருக்கமாட்டானே, திருவாட்டாற்றிலே தங்கு வேட்டையாக வந்து நிற்கிறவனாகையாலே ஆழ்வாரைக் கொண்டு போகையிலே அவனுக்கு விரைவுமிக்கது, ஏன்? திருநாட்டிலே கொண்டுபோய் அநுபவிக்கவேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? இங்கேதான் அநுபவிக்கலாகாதோ ? என்று சிலர் கேட்கக்கூடும் ; *பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ* என்னும்படியான இருள் தருமா ஞாலத்திலே அவிச்சிந்நமான அநுபவம் வாய்க்கமாட்டாதே ; “* ஒரு விச் சேதமும் வாராதபடி. ஏகாந்தமாயிருப்பதொரு தேச விசேஷத்திலே கொண்டுபோய் வைத்து அநுபவிக்க வேணும்” என்று பாரித்தான். அது தானும் கிடந்தானை கண்டேறுமா போலன்றிக்கே ஆழ்வார் நியமித்தருளுகிறபடியே செய்தோமாகவேணும் என்று பாரதந்திரியத்திலும் ருசி யுண்டாகப் பெற்றான். ஆழ்வாரோ பாரதந்திரியத்தின் எல்லையிலே நிற்பவர். ஸர்வேச்வரனைத் தாம். நியமிக்கமாட்டாரே ! ' அவனோ கையுமஞ்ஜலியுமாய் நின்று “ஆழ்வாரே ! நியமித்தருளிர் ;”' என்கிறான். ஆழ்வார்க்கோ நியமிக்க வாய் எழவிலலை, “பராத்பரனாயிருந்து வைத்து இப்படி நம்பக்கலில் பரதந்திரனாய்த் தாழ நிற்கிறானே ! இதுவென் ?”” என்று அந்த சீல குணத்தை யநுபவிக்க விழிந்தாராழ்வார். அநுபவிக்குமிடத்துக் கைவல்யாநுபவம் போலே தனியநுபவம் ரஸிக்கமாட்டாதாதைகையாலே நால்வரோடே கூடி யநுபவிப்போமென்று நாட்டார் பக்கலிலே கண் வைத்தார். அவர்கள் உண்டியே உடையே உகந்தோடுபவாராய் சப்தாதி விஷயங்களிலே அந்யபரராய் அவற்றோடே பணி போந்திருக்கார்கள். அவர்களை விட்டு, பரம ரஸிகனான ஸர்வேச்வரனோடு தான் கூடி இக்குணத்தை யநுபவிப்போமே யென்று அவன் மேலும் கண் செலுத்தினார். அவனோ ஆழ்வாரைக் கொண்டு போகையிலே விரைந்திருப்பானொருவனாகையாலே அதிலே அந்ய பரனாம் ஆழ்வாருடைய அநுபவத்திற்கு உசாத்துணையாக மாட்டிற்றிலன். இப்படி ஸம்ஸாரிகளும் துணையன் றிக்கே ஸர்வேச்வரனும் துணையன்றிக்கே யானவிடத்து *யானுமென்னெஞ்சு மிசைந் தொழிந்தோம்* என்று முன்னமே சொல்லியிருக்கிறாரே யாழ்வார், “தம்மோடு உடன் கேடான நெஞ்சிருக்க இனி என்ன குறையென்று தேறி அந்த நெஞ்சோடே யநுபவிக்கிறுர்--நெஞ்சே ! அவனுடைய மேன்மையிருந்தபடி கண்டாயே; அப்படி மேன்மையுடையவன் நம்பக்கல் இப்போது தாழநிற்கும்நிலை கண்டாயே; நாம் பெற்ற பேற்றின் கனமிருந்தபடி கண்டாயே ! என்று சொல்லிச் சொல்லி உள்குழைகிறார். ஸர்வேச்வரனாகிறான் ஸர்வ நியாமகனாய் ஸ்வதந்தரனாயிருப்பானொறுவன் என்று இதுவரை நினைத்திருந்தாராழ்வார் ; ஆச்ரித பாரதந்திரியமே அவனுக்கு ஸ்வரூபமென்கிற உண்மையை இப்போதறிந்து “இஃது என்ன சிலம் !!' என்று வியக்கிறாராயிற்று. |
பத்தாம்பத்தில் எட்டாம் பதிகம்--திருமாலிருஞ் சோலைமலை -ஆழ்வாரைத் திருநாட்டுக் கெழுந்தருளப் பண்ணிக்கொண்டு. போக எம்பெருமான் விரைந்தமை சொல்லிற்று *அருள் பெறுவாரடியாரென்னுக் திருவாய் மொழியிலே, அதற்குச் சிறிது
இடையூறு விளைந்தது கீழ்த் திருவாய் மொழியில்--ஆழ்வாருடைய திருமேனியிலே எம்பெருமான் அளவுகடந்த அபிநிவேசம். பண்ணி இத்திருமேனியோடே ஆழ்வாரைத் திருநாட்டுக்குக் கொண்டு போவதாக முயல, ஆழ்வார் தம்முடலின் தண்மையை அப்பெருமானுக்கு அறிவித்துத் தடுக்க இவ்வழியாலே எம்பெருமானுடைய விரைதல் சிறிது தடைபட்ட,தாயிற்று, எம்பெருமானும் ஆழ்வாருடைய நிஷேதத்திற்கு இணங்கி நின்று இவர்க்கு விண்ணுலகம் தர விரைந்தானாகி வானேறும் வழியிலே கொண்டு போவதாக முயன்றவளவிலே ஆழ்வார் அவனை மடிபிடித்து ஒரு கேள்வி கேட்கத் தொடங்கினார்; அதாவது, “இன்று இப்படி பதறுகின்ற நீ அநாதிகாலம் என்னை இவ்விருள் தருமா ஞாலப் படுகுழியிலே தள்ளியிட்டு வைத்து ஆறியிருந்தமை எங்ஙனே? இன்று இப்படி ஆதரிக்க வைக்கும் அநாதிகாலம் அநாதரித்திருந்தமைக்கும் ஹேது சொல்லியருளவேணும்”” என்றார்; அவனும் என்ன ஹேது சொல்லலாமென்று பலவாறு சிந்தித்துப் பார்த்தான். எதற்கும் ஆழ்வார் பிரதிகோடி சொல்ல வல்லலர் என்பதைத் தன்னில் தாணுணர்ந்து, *நிரங்குச ஸ்வாதந்திரியத்தாலே செய்யுமதுக்கு ஹேதுவுண்டோ” வென்று ஆழ்வார் தாமே ஸமாதானமடைந்திடுக வென்றும் கருதி, ஒரு மறுமாற்றமுங் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறி நின்றான். இது ஒரு நிர்ஹேதுக வீஷயீகாரமென்று ஆழ்வாரறிந்து விஸ்மிதராய்க் களித்துப் பேசுகிறதாயிரா நின்றது--இத்திருவாய்மொழி..
பத்தாம்பத்தில் ஒன்பதாம் பதிகம் -சூழ்விசும் பணி முகில் -கீழ்த் திருவாய்மொழியில் *இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான், அன்றென்னைப் புறம்போகப் புணர்த்ததென் செய்வான்?* என்று எம்பெருமானை மடி பிடித்துக் கேள்வி கேட்டாராழ்வார்; அதற்கு ஹேது தன்னுடைய நிரங்குச ஸ்வாதந்திரியமொழிய வேறொன்றில்லையென்று ஆழ்வாரும் நன்கறிந்தவர், எம்பெருமானும் நன்கறிந்தவன்: ஆகவே *ஆழ்வீர்! அன்று உபேசுஷித்திருற்ததற்கும் ஸ்வாதர்திரியமே காரணம், இன்று ஆதரிப்பதற்கும் ஸ்வாதந்தரியமேதான் காரணம்” என்று பதில் சொல்லவேண்டும். தான் பரம காருணிகனாய் இருந்து வைத்து இங்ஙனே பதில் சொல்லத் தகாதாதலால் ஒரு வகையான உத்தரமுஞ் சொல்லாதே தலைகுனிந்து நின்றான். ஆழ்வாரைப் பரம பதத்தேறக் கொண்டுபோக விரைவு கொண்ட தான் இப்படி ஆழ்வாருடைய கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாமல் ,வெள்கி நிற்கிற நிலையை மறைப்பதற்காக ஒருவழி பண்ணினான்; கலியாணங்களில் சடங்கு காட்டும் உயாத்யாயர்கள் சொல்லவேண்டிய மந்த்ரம் தோன்றாவிட்டால், மேள தாளங்களைக் கொட்டச்சொல்லி வாத்ய கோஷத்தாலே அத்தை மறைத்து விடுமாபோலே, இப்போது நிருத்தரனான தானும் மேக ஸமூத்ர பேரி கீத காஹள சங்க ஆசீஸ் ஸ்துதி கோலாஹலங்களைச் செய்தான். அதாவது. *சூழ்விசும்பணி முகில் தூரியம் முழக்கின, ஆழ் கடலலைதிரை கையெடுத்தாடின, என்று ராஜகுமாரர் போம்போது மங்களவாத்ய கோஷம் பண்ணு வாரைப்போலே பரமபதத்துக்குப் போமவர்களைக் கண்ட ப்ரீதியாலே முழங்குவது கோஷிப்பதாகா நிற்கும் மேக ஸமுத்ரங்களாகிற பேரிகளின் கோலாஹலத்தை யுண்டு பண்ணினான். *கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்* என்கிற கீதங்களைச் செவிப்படுத்தினான்; *காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்* என்கிற காஹளசங்கங்களினுடைய முழக்கத்தை முட்டினான்; *வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர்? என்கிற ஆசிஸ்ஸின் ஆரவாரத்கைக் கிளப்பினான்; *தொடர்ந்தெங்கும் தோத்திரஞ் சொல்லினர்* என்கிற ஸ்தோத்ர கோலாஹலங்களைப் பிறப்பித்தான். ஆக இப்படிப்பட்ட கோலாஹலங்களை விளைவித்த மாத்திரமே யன்றிக்கே, அர்ச்சிராதி கதியையும், ஆதிவாஹிக ஸத்காரத்தையும் (பரமபத) திவ்ய தேச ப்ராப்தியையும் அங்குள்ளாருடைய பஹுமானத்தையும் ஆனந்த மயமான ஆஸ்தானத்திலிருப்பையும் ஸ்வ சரண கமல ப்ராப்தியையும் பெற்றாராகப் பேசும்படியும் பண்ணி வைத்தான். அதெல்லாம் பேசப்படுகிறது இத்திருவாய்மொழியில்.
பத்தாம்பத்தில் பத்தாம் பதிகம் முனியே நான்முகனே --கீழே அர்ச்சிராதிமார்க்க கதியைப் பறக்கப்பேசி *அந்த மில் பேரின்பத்து அடியரோடிருந்தமை* என்றார். திருக்கண்களைத் திறந்து பார்த்தவாறே திருப்புளியாழ்வாரடியிலேயே தாம் விற்றிருக்கக்கண்டார். நித்ய முக்தர்களின் திரளிலே யிருந்ததாகச் சொன்ன இருப்பு, ஜ்ஞாநாநுஸந்தான மாத்திரமாயிருந்தது. ப்ரக்ருதி யிலேயே தாம் சிக்குண்டிருக்கிறபடியை கண்டு போர நொந்தார்.தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்யகதித்வத்தையும் நன்குணர்ந்த எம்பெருமான் இன்னமும் தம்மை இப்படி நோவுபட விட்டிருப்பது என்னே! என்று மிகவும் கிலேசித்து மாதா பிதாக்கள் அருகேயிருக்க பசியாலும் தாஹத்தாலும் நோவு படுகிற ஸ்நந்தயப் பிரஜை ஆர்த்தியின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே. ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாதாருடைய ஹ்ருதயங்களுங்கூட இரங்கும்படியாகவும், அவனுக்கு, நம்மை ரஷித்தல்லது. பரம பதத்திலும் இருப்பு அரிதாம்படியாகவும் காட்டுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே ஆர்த்த த்வநியோடே பெருமிடறு செய்து கூப்பிட்டு அவனும் வந்து தோற்றி இவருடைய ப்ரக்ருதிஸம்பந்தத்தை யறுத்து அடியார் தம் திரளிலே கொண்டு சேர்க்க, தாம் க்ருத க்ருத்யராய் அவாவற்று வீடுபெற்ற படியைப் பேசுகிறார் இத் திருவாய்மொழியில், -பரம போக்யமான நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின் :- “இப்ப்ரபந்தத்துக்கு ப்ரமேயமான வஸ்து ஸர்வேச்வரன்; இப் ப்ரபந்தம் - அவாவிலந்தாதி, மயர்வறமதிநலம் மருளப் பெற்றவர் கவி பாடினார்! இனி இவருடைய அவதாரம் தான் ஸர்வேச்வரனுடைய அவதாரத்தோபாதி ஸாதுக்களுடைய ஸுூக்ருத பலம்.”,
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply