ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -250-252/263-265/271/274-277/279/280/289-்295–இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்
–வன்பெருவானக முதலுய்ய இனிதாகத் திருக்கண்கள்வளர்கின்ற திரு வாளன் திருப்பதி, வடிவுடை கடலிடம் கட்கிலீ யென்னுமவற்றில் இவள் திறத்தென்கொலோ வென்பிக்கிற வ்யூஹஸௌஹார்த்தப்ரதானம்.– திருவரங்கம் பெரியகோயிலில் விளங்கும் திருக்குணம் முக்கியமாக ஸௌஹார்தம்- என்கிறது இதில். திருவாளன் திருப்பதி என்பது எழுவாய். திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே என்கிற பெரியாழ்வார் பாசுரமறிக. இதுதான் அர்ச்சாவதார மாயிருக்கச்செய்தேயும் பர வ்யூஹ விபவாந்தர்யாமி என்கிற மற்றை நான்கு நிலைமைகளின் அநுபவமும் ஆழ்வார்க்கு இங்கே உள்ளதென்பது திருவாய்மொழியில் கங்குலும் பகலுமென்கிற பதிகத்திலுள்ள பாசுரங்களினால் தெரியவருகின்றது. எங்ஙனே யென்னில்; வடிவுடை வானோர் தலைவனே!” என்பதிலே பரவாஸுதேவனுடைய அநுபவம் இங்கு ஆயிற்று.கடலிடங் கொண்டகடல் வண்ணா !என்பதிலே வ்யூஹாநுபவமாயிற்று * கட்கிலீ! உன்னைக் காணுமாறருளாய் என்றதிலே அந்தர்யாமி யனுபவமாயிற்று.காகுத்தா கண்ணனே! * என்றதிலே விபவாவதாரா நுபவமாயிற்று. ஆக இங்ஙனோ அனுபவிக்கப்படுகிற பரத்வாதிகளில் வைத்துக்கொண்டு, வ்யூஹத்தின் குணமான ஸௌஹார்த்தத்தின் அநுபவம் ஆழ்வார்க்கு இங்கு உறைத்திருக்கும். அதாவது-ஸௌஹார்த்த குணத்தையே இங்கு ஆழ்வார் ப்ரதானமாக வைத்து அனுபவிக்கிறார் என்றபடி. அதற்கு என்ன கமக மென்னில்; [இவள்திறத்தென்கொலோ] * திருவரங்கத்தாய்! இவள் திறத்து என்சிந்தித்தாயே! என்றும்,என்கொலோ முடிகின்றதிவட்கே என்றும் இங்ஙனே கேள்வியாகவுள்ள பாசுரங்கள் பலவற்றையும் நோக்குமிடத்து இது நன்கு தெரிய வருகின்றது. ‘ பாற்கடல் யோகநித்திரை சிந்தைசெய்த வெந்தாய் ! * என்பது நம்மாழ்வார்பாசுரம். வ்யூஹ ஸ்தானமான திருப்பாற்கடலிலே எம்பெருமான் ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுவதாக ப்ரஸித்தம். “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானிறே. அப்படி அவன் ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுவதற்கு எது மூலமென்னில்; ஸௌஹார்தமென்கிற குணமே மூலம் . நம் நிகமாந்த மஹா குருவும் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் உபோத்காதாதிகார முடிவில் ஈச்வரஸ்யச ஸெளஹார்தம்” இத்யாதி ப்ரமாணத்தைக் காட்டி யருளுகிறார் ; அவர்தாமே சரணாகதி தீபிகையிலும் ஸ்வப்ராப்தயே தநுப்ருதாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்த்வமிதம் க்ருணந்தி என்றும் பணிக்கிறார். ஆக இந்த மஹா குணத்தைப் பற்ரசாகக்கொண்டு * கங்குலும் பகலும் பதிகம் நடைபெறுகின்றது.பட்டரும் * விச்வத்ராண விமர்சநஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா ‘ என்றருளிச் செய்தார். ஸ்ரீரங்கநாதன் பக்கலிலே ஸௌஹார்த குணாநுபவம் பண்ணவேணுமென்றதாயிற்று. இந்த குணத்தின் உண்மை ஸ்வரூபத்தை யுணர்ந்தால் சேதனர்களுக்கு விளையும் நன்மைகளுக்கெல்லாம் மூலம் ஸுஹ்ருத்தான ஸர்வேச்வரனுடைய சித்தனையே யென்பது எளிதாகத்தேறி நிற்கும். இந்த குணத்தை நெஞ்சுருகி யனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் பரமபாக்யசாலிகள். இதை எத்தனை காலமு மெத்தனை யூழியும் அநுபவிக்கலாம்.
மண்ணோர்விண்ணோர்வைப்பில்- போகின்ற ஏழுலக்குக்குயிர் பாசம்வைத்த நிகரில் வாத்ஸல்யமுஜ்ஜ்வலம்.-திருவேங்கடமுடையான் பக்கலில் விளங்கும் திருக்குணம் வாத்ஸல்யமென்கிறது இதில் வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு* என்கிற திருமழிசைப்பிரான் பாசுரத்தின்படி உபய விபூதியிலுள்ளார்க்கும் சேமித்துவைத்த நிதிபோன்றது திருமலை. நிதி ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்திருப்பதாதலால், நிதியாகச் சொல்லப்பட்ட திருவேங்கடமுடையானை அந்தர்யாமியாகக் கொள்ள வடுக்கும். அந்தர்யாமியிடத்தில் காணும் குணம் எதுவென்றால், கடவல்லியில் *அங்குஷ்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி,ஈசாநோ பூதபவ்யஸ்ய ந ததோ விஜ குப்ஸதே என்று ஓதினபடியாலும், அவ்விடத்து (ரங்கராமாநுஐ) பாஷ்யத்தில்” த வெ ரேவர்ஷெவ வா ஷாதி யாசு ஷெஹமதா வி ஜெஷா ஹொத ரயாவ றதீத ய. ” என்ற தனாலும் தோஷ போக்யத்வமாகிற வாத்ஸல்யமே யென்பது தெரியவரும். திருவேங்கடமுடையானிடத்தில் நம்மாழ்வார் இந்த வாத்ஸல்யmகுணத்தையே யநுபவித்தமை அவருடைய மூன்று பாசுரங்களினால் விளங்குகின்றது. அந்த மூன்றுபாசுரங்களில் *நிகரில் புகழாய் திருவேங்கடத்தானே!என்கிற ஒரு பாசுரத்தைமட்டுங் கொள்வோம்.-நிகரில்புகழென்று வாத்சல்யத்திற்குத் திருநாமம் . மற்றைத் திருக்குணங்களுக்கு நிகருண்டு; வாத்ஸல்யத்திற்கு நிகரேகிடையாது. தோஷத்தை தோஷமாகவும், குணத்தைக் குணமாகவும் கிரஹிப்பர்கள் சிலர்; குணத்தையும் தோஷமாக க்ரஹித்துப் பறைசாற்றுவர். பலர். தோஷத்தையும் குணமாக க்ரஹிப்பதென்கிற வாத்ஸல்யத்திற்கு நிகரில்லையே. ஆனதுபற்றியே ஸ்வாமியெம்பெருமானார் கத்யத்தில் அகிலேத்யாதி மஹாசூர்ணையில் “அபாரகாருண்ய ஸௌ சீல்யவாத்ஸல்யௌ தார்ய – ஐச்வர்ய ஸெளந்தர்ய மஹோததே!” என்று வாத்ஸல்யத்தையிட்டு அருளிச்செய்தபின்னையும் மீண்டும் “ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதே!”என்று தனிப்படவும் இட்டருளினார். ஸ்வாமி நிகமாந்தகுருவும் அந்தர்யாமியை அநுபவிக்கிற ஒளதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே * என்னும் ச்லோகத்தில்
அந்த:கலேபரமிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம் ஜாதம் கரீச ! கதம் ஆதரணாஸ்பதம் தே * என்றார்; இங்கு “ஜாதம் கரீச! கயாவிய மதவாஹொ என்னலாமாயிருக்க. அதைவிட்டு * ஆதரணாஸ்பதம் தே என்றதற்குச் சேர அழகாக வியாக்கியானம் செய்துள்ளார்கள். (அதாவது) இங்கு வாத்ஸல்யம் விளங்குகின்ற தென்றார்கள். மானார் கத்யத்தில் அகிலேத்யாதி மஹாசூர்ணையில் “அபாரகாருண்ய ஸௌ சீல்ய
வாத்ஸல்யௌ தார்ய – ஐச்வர்ய ஸெளந்தர்ய மஹோததே!” என்று வாத்ஸல்
யத்தையிட்டு அருளிச்செய்தபின்னையும் மீண்டும் “ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதே!”
என்று தனிப்படவும் இட்டருளினார். ஸ்வாமி நிகமாந்தகுருவும் அந்தர்யாமியை
அநுபவிக்கிற ஒளதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே * என்னும் ச்லோகத்தில்-அந்த:கலேபரமிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம் ஜாதம் கரீச ! கதம் ஆதரணாஸ்
பதம் தே * என்றார்; இங்கு “ஜாதம் கரீச! கயாவிய மதவாஹொ என்னலாமா
யிருக்க. அதைவிட்டு * ஆதரணாஸ்பதம் தே என்றதற்குச் சேர அழகாக வியாக்
கியானம் செய்துள்ளார்கள். (அதாவது) இங்கு வாத்ஸல்யம் விளங்குகின்ற தென்றார்கள். ஆக விப்படி அந்தர்யாமியின் குணமாகக் கடவல்லீஸித்தமான வாத்ஸல்ய மஹாகுணத்தை ஆழ்வார் திருவேங்கடமுடையான் பக்கலிலே அநுப்வித்தாராயிற்று.
உபயப்ரதா நப்ரணவமான உறைகோயிலில் எத்தேவுமென்னும் பரேசத்வம்
பொலியும்.-ஆழ்வார்திருநகரி தன்னில் ஆதிப்பிரான் பக்கலில்விளங்கும் திருக்குணம் பரத்வமென்கிறார் இதில். இத்திருப்பதிக்குப் பாடலான”ஒன்றுந்தேவுபதிகத்தில் எல்லாப் பாசுரங்களிலுமே பரத்வம் விளங்க நின்றாலும்*உறுவதாவதெத் தேவுமென்கிற பத்தாம். பாட்டில்,ஸமஸ்தவஸ்துக்களும் தன்னுடைய அஸாதாரண விக்ரஹம்போலே தனக்கு ப்ரகாரமாம்படியிருக்கிற ஐச்வர்யத்தோடேகூடத் திருக்குருகூரிலே ஸுலபனாய் வந்து நின்றானென்று கூறியதைச் சிறப்பாகத் திருவுள்ளம் பற்றி ஆசார்யஹ்ருதயகாரர் அப்பாசுரத்தைக்கொண்டபடி.
வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீலமேனியின் ருசி ஜநகவிபவ லாவண்
யம் பூர்ணம்.-இதனால் திருக்குறுங்குடியில் விளங்கும் திருக்குணம் திவ்யாவயவ சோபையாகிற லாவண்ய மென்கிறது. இத்திருப் பதிக்குப்பாடலான *எங்ஙனேயோ பதிகத்தில்பாசுரந்தோறும் நம்பியின் வடிவழகுபற்றியபேச்சே நிரம்பியுள்ளது அவற்றினுள்ளும் நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்ட பொன்மேனியொடும் நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அங்கையுளதே ‘ நீலமேனியும் நான்கு தோளுமென்னெஞ்சம் நிறைந்தனவே என்னும் பாசுரங்களில் ஆழ்வார் திருவுள்ளத்திலே வேறொன்றுக்கு இடமறும்படி காளமேகநிபச்யாமமான விக்ரஹத்தினுடைய அழகே குடிகொண்டுவிட்டதென்றது இங்கெடுத்துக் காட்டப்பட்டது.
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கு மௌதார்யம் வானமாமலையிலே
கொழுந்து விடும்.-இதனால் வானமாமலையிலே விளங்குங் குணம் ஒளதார்யமென்கிறது. இத்திருப்பதிக்குப் பாடலான* நோற்ற நோன்பில் ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என்றாராழ்வார்;-பாதமே சரணாக்கினாயென்னாதே சரணாகத் தந்தொழிந்தாயென்கையாலே எம்பெருமான் தனது ஒளதார்ய குணத்திற்குத் தக்கபடி வேறுபலவற்றையுங் கொடுத்து விடாமல் தன்னையே கொடுக்கிறாப் போலே தன் திருவடிகளையே தந்தருளினது நிகரற்ற ஒளதார்யமென்று திருவுள்ளம் பற்றினபடி.மூன்றுவது பாட்டில் எங்கார்முகில்வண்ணா! + என்றதைக் கொண்டும் இங்கு ஒள தார்ய குணமநுபவிக்கப்படுவது உசிதம் . *மாரியனைய கை என்று ஒளதார்யத்திற்கு மேகம் உவமையாம்.
களை கணற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும்.-இதனால் திருக்குடந்தையில் அனுபவிக்கத்தக்க 3திருக்குணம் மாதுர்யமென்கிறது. ஆளவந்தார் வசீ வதாந்ய: இத்யா தி-ச்லோகத்தில் * மதுரஸ் ஸ்திரஸ் ஸம: * என்று மாதுர்யத்தையும் பகவத் குணங்களிலொன்றாக வருளிச்செய்தது காண்க. இத்தலத்தில் எம்பெருமான் ஆராவமுது என்று திருநாமம் பூண்டிருப்பதொன்றேபோதும். பத்தாம்பாட்டில்ஆராவமுதாய் அடியேனாவியகமேதித்திப்பாய் * என்றது விலக்ஷணாநுபவம்.
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்.
திருவல்லவாழென்கிற மலைநாட்டுத் திருப்பதி யிலே விளங்கும் திருக்குணம் க்ருபை என்கிறது இதில். எந்த விஷயத்தில் க்ருபையென்னில்; கீழே நடந்த ஆராவமுதன னுபவத்தில் *உனக்காட்பட்டும் அடியேன் இன்னமுழல்வேனோ? என்று அலமாப்போடே தலைக்கட்டுகையாலே-வைகலும் வினையேன் மெலிய * என்று மிக மிக மெலியாநிற்கச் செய்தேயும்-அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் ” என்னும்படி அவனையே ரக்ஷகனாக உறுதிகொண்டிருக்கும்படியான க்ருபை. இதை ஆழ்வார் இத்திருப்பதியின் பதிகத்திலே * சுழலில்மலிப்பதற்க சக்கரப் பெருமானது தொல்லருளே என்று சொல்லி அனுபவித்தராயிற்று.
வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்த்தம்.
திருவண்வண்டுரிலே விளங்கும் திருக்குணம் ரக்ஷணஸ்தைர்யம் என்கிறது இதில். ஆளவந்தார் வசீ வதாந்ய: *என்னும் சுலோகத்திலே ஸ்திர: என்று ஸாதித்த ஸ்தைர்ய குணம் ரக்ஷணவிஷயத்திலன்றே மாறில் போரரக்கன் மதிள் நீறெழச்செற்றுகந்த ஏறு சேவக
னார்க்கு* என்கிறபடியே இத்திருப்பதியிலுள்ளவன் சக்ரவர்த்தி திருமகனாகை
யாலே புணர்த்த பூந்தண்டுழாய்முடி நம்பெருமானென்னும்படி ரக்ஷணத்திற்குத்
தனிமாலையிட்டிருக்கும்படி சொல்லும் முகத்தால் ரக்ஷணஸ்தைர்யம் அனுபவிக்கப்
பட்டதாயிற்று.
விளம்ப விரோதமழிக்கும் விருத்தகடநாஸாமர்த்தியம் நன்ன கரிலே
விஸ்தீர்ணம்-ஒப்பிலியப்பன் ஸன்னிதியென் கிற திருவிண்ணகரிலே-அகடிதகடநா ஸாமர்த்த்ய மென்கிற திருக்குணம் விளங்கு மென்கிறது இதில். இது * நல்குரவும் செல்வுமென்கிற இத் திருப்பதியின் பதிகத்திலே பாசுரந்தோறும் விசதம்.
கடிதகடகவிகடநா பாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்.–துலைவில்லி மங்கலமென்கிற இரட்டைத்திருப்பதியில் ஸகலவித பந்துத்வமென்கிற திருக்குணம் விளங்குமென் கிறது இதில். மாதா பிதாப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண . என்று உபநிஷத்து ஓதின ஸர்வேவரனுடைய ஸகலவித பந்துத்வமானது இத் திருப்பதிப்பதிகத்திலே சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ
பிரானையே தந்தைதாயென்றடைந்த வண்குருகூரவர்சடகோபன் * என்ற பாசுரத்தினால் மட்டுமன்றிக்கே உமக்காசையில்லை விடுமினோ *உமக்காசையின்றி அகற்றினீர் என்பது முதலான பாசுரங்களினாலும் விளக்கப்பட்டதாயிற்று
கைம்முதலிழந்தாருண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம் புகுமூரிலே ஸம்ருத்தம்–ஆபத்ஸகத்வமென்கிற திருக்குணம் திருக்கோளூரில் விளங்குமென்கிறது இதில். திருக்கோளூர்பதிகத்திற்குக் கீழ்ப்பதிகமான மாலுக்குவையத்திலே எல்லாமிழந்ததாகச் சொல்லிற்று-எல்லாமிழந்தவர்களுக்கு நிதிகிடைத்துவிட்டால் குறை யொன்று மில்லையே.திருக்கோளூரில் ஸேவைஸாதிப்பவர் வைத்தமாநிதிப் பெருமாளாகையாலே, கீழேஎல்லாமிழந்த ஆழ்வார்க்கு நிதி கிடைத்து விட்டது. அவ்விடம் * செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூராகையாலே ஆபத்துக்கு உதவக்குறையில்லையாயிற்று. நிதிதாவே ஆபத்தனமன்றே?
சென்று சேர்வார்க்கு உசாத்துணையருக்கும் ஸௌந்தர்யம் மாநகரிலே
கோஷிக்கும்.–தென்திருப்பேரெயில்மாநகரில் விளங்கும் திருக்குணம் ஸெளந்தர்யமென்கிறது இதில். இத்திருப்பதியின் பதிகள்மான * வெள்ளைச்சுரிசங்கில் செங்கனிவாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீண் முடித்தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டுகந்தும் தாமரைக் கண்களுக்கற்றுத் தீர்ந்தும் என்றதில் நோக்காக இது அறுதியிட்டபடி திருக்குறுங்குடியில் அநுபவித்த குணம் லாவண்யம், இங்கு ஸெளந்தர்யம் என்று வாசிகாண்க. இந்தஸெளந்தர்யம் எப்படிப்பட்டதென்ன [சென்று சேர்வார்க்கு உசாத்துணையறுக்கும்]
நெஞ்சைக் கவர்வது என்பது பரமதாற்பரியம். என்னெஞ்சினாருமங்கேயொழிந்
தார், உழந்தினியாரைக்கொண்டு என்னுசாகோ? என்று சொல்லியிருக்கையாலே உசாத்துணையானநெஞ்சு அபஹரிக்கப்பட்டமை விளங்கிற்று. யாருடையநெஞ்சு அபஹரிக்கப்பட்டதென்றால் [சென்று சேர்வார்க்கு] *தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே * என்ற பாசுரத்தின்படியே சென்று அத்தலத்தில் சேர்ந்தவரான தம்முடைய நெஞ்சைக் கொள்ளை கொள்ளுமது அந்த ஸெளந்தர்யம் என்றவாறு.
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே.–திருவாறன்விளைத் திருப்பதியில் விளங்கும் திருக்குணம் ஆனந்தப்பெருக்கமென்கிறது இதில். இத்திருப்பதியின் பதிகமானது * இன்பம் பயக்க எழில் மல மாதரும்தானுமிவ்வேழுலகை, இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற எங்கள்பிரான் * என்று தொடங்கப் படுமதாகை யாலே. அந்த ஆனந்தப்பெருக்கம் எப்படிப்பட்டதென்றால், அத்தலத்தில் ப்ராவண்யம் கொண்டவர்களுடைய சித்தத்தை * சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை என்று பரமபதத்தின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாம்படி பரத்வத்தில் விமுகமாக்குமது.
ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டிதாச்சர்யம் குளத்தே கொடிவிடும்.–பெருங்குளமென்கிற திருக்குளந்தைத் திருப்பதியில் விளங்கும் திருக்குணம் சேஷ்டிதாச்சர்யமென்கிறது இதில் இத்தலத்தெம்பெருமானுடைய திருநாமம் மாயக்கூத்தனென்பது; ஆச்சரியமான சேஷ்டிதங்களைச்செய்பவனென்றபடி-அவற்றின் விவரணம் நமதுதிருவாய்மொழி திவ்யார்த்த தீபிகையில் காணத்தக்கது.
ச்ரமமனம் சூழும் ஸௌகுமார்ய ரகாசம் ஆய்ச் சேரியிலே.–திருவண்பரிசாரத்திலே ஸௌகுமார்யம் ப்ரகாசிக்குமென்கிறது இதில். இத்தலத்திற்கான பதிகம் * அங்குமிங்கும் என்பது. இதில் மூன்றாம் பாட்டில் ஆளுமாளார் ஆழியுஞ்சங்கும் சுமப்பார்தாம், வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார்மற்றில்ளை* என்றுள்ளது; பூவேந்தினாற் போலேயிருப்பது திருவாழி திருச்சங்கை யேந்துவது; அது தானும் மலை சுமந்தாற் போலே வன்பாரமாகத் தோற்றினது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படித்தோற்றுவது ஸெள குமார்யா நுஸந்தானத்தின் காரியமே யாதலால் இங்கு ஸௌகுமார்ய குண ப்ரகாச மென்றறியக்கடவது.
மஹாமதிகள் அச்சம்கெட்டு அமரும் செளர்யாதிகள் சிற்றற்றிலே
கொழிக்கும்.–திருச்சிற்றாற்றிலே விளங்கும் திருக்குணம் செளர்யவீர்யபராக்ரமமென்கிறது இதில். இத்திருப்பதிக்கான பதிகத்தின் முதற்பாசுரம் * வார்கடாவருவியானைமாமலையின் மருப்பிணைக்குவடிறுத்துருட்டி* இத்யாதி. குவலயாபீட மதயானை,சாணூர முஷ்டிக மல்லர்கள், கம்ஸன் முதலியவர்களை முடித்த வீரம் கனமிடுக்காகப் பேசப்படுகிறது பாசுரத்தில். கீழே திருவண்பரிசாரப் பதிகத்தில் எம்பெருமானுக்குப் பரிவர் யாருமில்லையே!’ என்று ஆழ்வார் அஞ்சின அச்சம்தீர எம்பெருமான் தம்முடைய பெருவீரத்தைக்காட்டினது மட்டுமன்றிக்கே மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி * என்று மூவாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரிகைக்குப் பாங்காக வுள்ளார்கள் என்றுங்காட்டி ஆழ்வாருடைய அச்சத்தைத் தீர்த்தமை இத்தலத்து அநுபவத்திற்கு விசேஷம்.
ஸாத்யஹ்ருதிஸ்த்தனாயும் ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதாகந்தம்
தாயப்பதியிலே.-திருக்கடித்தானமென்னும் திருப்பதியில் விளங்கும் திருக்குணம் க்ருதஜ் த்வமென்கிறது இதில். க்ருதஜ்த்வமென்பது மனிசர்க்கு உரிய குணமேயல்லது எம்பெருமானுக்கு உரியதோ ! என்று சங்கிக்கவேண்டா; ஆளவந்தார். வசீ வதாந்ய: * என்கிற ச்லோகத்தில் * க்ருதீ க்ருதஜ்ஞ: என்று இதனையும் சேர்த்தருளியிருப்பது காண்க. கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி* என்று ஸ்ரீராமாயணமும் ஓதிற்று. எம்பெருமானுக்கு ஆழ்வார் திருவுள்ளத்தில் வாஸமே ப்ராப்யம்; இது பெறுதற்காகவே அவ்வோ திருப்பதிகளில் உறைவது. இது மிகச் சிறந்த அர்த்தம். மலைமேல் தான்னின்று என் மனத்துளிருந்தானை என்பது முதலான பாசுரங்களினால் அறியத்தக்க பொருள் இது. ப்ரக்ருதம் திருக்கடித்தானத்தை யநுபவிக்கின்ற ஆழ்வார் திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான் கண்டீர் என்றார். எம்பெருமான் தனக்கு ப்ராப்யமான ஆழ்வார் திருவுள்ளத்தை வாஸஸ்தானமாகப் பெற்ற பின்பும் திருக்கடித்தான நகரையும் விடாமலிருப்பதானது அத்தலத்தின் பக்கல் தனக்குள்ள கருதஜ்ஞ்த அநுஸந்தானத்தாலே யென்பது ஸ்ரீ வசனபூஷணத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.ஆகவே இத்தலத்தில் க்ருதஜ்தா குணம் பரிமளிக்கு மென்னக் குறையில்லை.
அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயகலக்ஷணம் வளம்புகழுமூரிலே குட்டமிடும்.–குட்டநாட்டுத் திருப்புலியூரில் நாயக லக்ஷணம் விளங்குமென்கிறது இதில் அவயவசோபை ஆபரணசோபை முதலான வற்றால் குறையற்று, அவற்றாலே தன்னிடத்திலீடுபட்டாரை வேறொரு விஷயத் திற்கு ஆளாகாதபடி பண்ணுகை உத்தம நாயக லக்ஷணம். இது திருப்புலியூரெம்பெருமான் பக்கலிலே விளங்குமென்பதை இத்திருப்பதியின் பதிகமான கருமாணிக்க மலையில் பாசுரந்தோறும் காணலாம். *கருமாணிக்க மலைமேல் மணித்தடந் தாமரைக் காடுகள்போல், திருமார்பு வாய் கண்கை உந்தி காலுடை யாடைகள் செய்யபிரான்” *மின்னு நீண்முடியாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்புகழும் பொருபடையேந்தி” என்றிவை முதலான பாசுரங்களிற் கூறிய அவயவ ஆபரண- ஆயுத சோபைகளினால் இத்தலத் தெம்பெருமான் ஆழ்வாரைத் தன் பக்கலில் ஈடுபடுத்தி, * குட்டநாட்டுத் திருப்புலியூரருமாயன் பேரன்றிப் பேச்சிலன்*என்பது முதலான பாசுரங்களினால் அநந்யார் த்வத்தையும் விளைவித்தமையறிக.
போக்யபாக வரை தெளிந்தசந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்–திருப்புளிங்குடி வரகுணமங்கை ஸ்ரீவைகுண்டம் என்ற மூன்று திருப்பதிகளிலும் ஆச்ரிதா நுபவப்பதற்றம்’ என்கிற திருக்குணம் விளங்குமென்கிறது இதில் இது வெகு சமத்காரம் பொருந்திய உல்லேகம். புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று
என்பது திருவாய்மொழிப் பாசுரம்; இதை ‘வைகுந்தத்துள் நின்று வரகுணமங்கை யிருந்து புளிங்குடிக் கிடந்து” என்று அடைவுபடுத்திக் கொள்ளவேணும்.-ஆழ்வாருடைய ஸமீபத்திலே எம்பெருமான் நிற்பதும் இருப்பதும் கிடப்பதுமாக ஸேவை ஸாதிக்கிறபடியை நோக்குங்கால், பெரும் பசியன் சமையல் நடக்குமிடத்திலே தாமதத்தைப் பொறாமல் நின்று கொண்டே ஆச்சா ஆச்சா? என்பதும், பிறகு உட்கார்ந்தும் படுத்துக் கொண்டும் தன் பதற்றத்தைக் காட்டுமா போல் ஆழ்வாரை யநுபவிப்பதில் பெரும் பசியனான பெருமான் அவர்க்கு அணித்தான விடத்திலே இப்படி நின்றுமிருந்தும் கிடந்தும் தன்னுடைய பதற்றத்தைக் காட்டுகிறபடி.
போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்.-கீழ்ச் சொன்னபடி ஆழ்வாருடனே கலந்து பரிமாறுமிடத்தில் * வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணிலென்று, ஆர்வுற்ற என்னை யொழிய என்னில் முன்னம் பாரித்துத்,தானென்னை முற்றப்பருகினான், காரொக்கும் காட்கரையப்பன் கடியனே * என்னும்படி மாறாடிப் பரிமாறும் சீல குணம் ”திருக்காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே உருகுமால்நெஞ்சம்” என்று உருகிப்பேசின திருக்காட்கரையிலே விஞ்சி யிருக்கும்.
மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தேகூடு
பூரிக்கும்.–திருமூழிக்களத்தில் விளங்குங் குணம் மார்த்தவ மென்கிறதிதில். திருவண் பரிசாரத்திலே விளங்கின குணம் ஸெளகுமார்யம்; அது திருமேனி யிலுறையுமது மார்த்தவமென்பது திருவுள்ளத்தி லுறையுமது- என்று வாசி காண்க. திருமூழிக்களப் பாசுரத்தில் தமரோடு அங்குறைவார்க்குத் தக்கிலமே கேளீரே” என்ற பாசுரத்தில் நோக்காக இஃது அருளிச் செய்தது. ஸ்தோத்ரரத்னத்தில் “ஸக்ருத் த்வதாகார விலோகநாசயா த்ருணீக்ருதா நுத்தம புக்தி முக்திபி: மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபிதேயத் விரஹ அதி துஸ் ஸஹ என்றதை இங்கே கூட்டி யநுபவிப்பது.
பிரிந்த துன்பக்கடல்கடத்தும் விஷ்ணுபோதாந்ருசம்ஸ்யம் நாவாயிலே
நிழலெழும்.-திருநாவாயில் விளங்கும் திருக்குணம் ஆந்ருசம்ஸ்யம் என்கிறதிதில் நாவாய்என்று தோணிக்குப் பெயர், ”ஸம்ஸாரார்ணவமக்நா நாம் விஷயாக்ராந்த சேதஸாம், விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்” என்கிற வசனமும்,” துன்பக்கடல்புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன் என்கிற ஆண்டாள் பாசுரமும்-எம்பெருமானைத் தோணியாகத் தெரிவித்தன. (நாவாய் என்பதுமிதுவே.) வானமாமலை போலே எம்பெருமானுடைய திருநாமமே தலத்திற்குமாயிற்று.திரு நாவாய்ப் பதிகமாகிய அறுக்கும் வினைப் பதிகத்திற்குக் கிழே ஆழ்வார் விச்லேஷமாகிற துன்பக்கடலில் துவண்டிருந்தாரென்பது வ்யக்தம். அதைக் கடத்துவதற்குத் தோணியாயிருந்தனன் திருநாவாய்ப் பெருமான். அவனுடைய இரக்கம் இங்கே விளங்கும்.
சரண்யமுகுந்தத்வம் உத்பலாவதகத்திலே ப்ரஸித்தம்.–திருக்கண்ணபுரத்தில் விளங்குங்குணம் மோக்ஷ பிரதத்வ மென்கிறதிதில். * சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்: மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான் என்கிற பாசுரப்படியே சரண்யனான செளரிராஜனுடைய மோக்ஷப்ரதத்வம் இங்கே விளங்குமாயிற்று.
மார்க்கபந்து சைத்யம் மோஹநத்தேமடுவிடும்.–திருமோகூரில் விளங்கும் திருக் குணம் சைத்ய மென்கிறதிதில். அர்ச்சிராதி மார்க்கத்திற்குத் துணைவனாகக் கொள்ளப்பட்டு வழித் துணையான காளமேகப் பெருமாளுடைய ஸாம்ஸாரிக ஸகலதாபஹரத்வம் திருமோகூரிலே நிறைந்திருக்கும். காளமேகப் பெருமாளாகையாலே தாப ஹரத்வம் ஸ்வதஸ்ஸித்தமிறே.
ஸஸைந்ய புத்ரசிஷ்ய ஸாத்த்யஸித்த பூஸுரார்ச்சநத்துக்கு முகநாபி பாதங்
களை த்துவாரத்ரயத்தாலேகாட்டும் ஸாம்யம் அநந்தசயநத்திலே வ்யக்தம்.–அனந்தசயனத்திலே விளங்கும் திருக்குணம் + ஸமோஹம் ஸர்வபூ தே ‘ என்று கீதையில் செர்ல்லப்பட்ட ஸாம்யமென்கிறது.அனந்தபுரத்து –அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணிசெய்வர். என்ற பாட்டிலே அமரர்கோன்’ என்று ஸேனை முதலியாராகிற நித்ய
ஸூரித் தலைவர்வந்து அர்ச்சிக்கின்றமை சொல்லுகையாலே தம்முடைய பரி ஜனங்களோடு கூடின அவருடைய அர்ச்சனைக்காகத் திருமுகமண்டலத்தை ஒருவாசலாலே காட்டுவர்; * அமரராய்த்திரிகின்றார்கட்கு ஆதிசேரனந்தபுரத்து என்று. பிரமன் தன்னுடைய புத்திரர்களான ‘அமரர்களோடு வந்து சேர்வதாகச் சொல்லுகையாலே ஸபுத்ரனான அந்தப் பிரமனுடைய அர்ச்சனைக்குத் திருநாபியை ஒருவாசலாலே காட்டுவர்;* படமுடையரவில் பள்ளிபயின்றவன்பாதங்காண, நடமினே நமர்களுள்ளீர் என்று ஆழ்வாருபதேசங்கேட்ட சிஷ்யர்களோடே கூடின நிலத்தேவர்களின் அர்ச்சனைக்காகத் திருவடியை ஒருவாசலாலே காட்டுவர். ஆக. முகநாபி பாதங்களைத் திருவாசல்கள் மூன்றாலும் காட்டுகையாகிற ஸாம்யகுணம் அனந்தசயனத்திலே வ்யக்தமாயிற்று.
மோக்ஷதாநத்தில் ப்ரணத பாரதந்த்ர்யம் வளம்மிக்க நதியிலே கரைபுரளும்.–திருவாட்டாற்றுப்பதியில் ஆச்ரிதபாரதந்த்ர்யமாகிற திருக்குணம் விளங்குமென்கிறதிதில், இத்திருப்பதிக்கான பதிகத்தில் ஆழியானருள்தருவானமைகின்றான் அது நமது விதிவகையே என்றும். இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே * என்றும் சொல்லுகிறபடி எம்பெருமான் ஆழ்வார்க்கு மோக்ஷமளிக்குமளவில் ஆழ்வாருடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கும்படி சொல்லுகையாலே இங்கு ஆச்ரித பாரதந்த்ரியம் விளங்கு மென்றது மிகப் பொருத்தம்.
த்யாஜ்யதேஹவ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே
தழைக்கும்–திருமாலிருஞ்சோலையில் எம்பெருமானுடைய வ்யாமோஹ குணம் விளங்குமென்கிறதிதில். ஆழ்வார்அழுக்குடம்பு “ என்று த்யாஜ்யமாக நினைக்கிற தமது திருமேனியில் எம்பெருமானுக்குண்டான வியாமோஹம் -இத்திருமலைக்கான பதிகத்திலே மங்கவொட்டு உன்மாமா ை என்று கால்கட்டி விடுவித்துக் கொள்ள வேண்டும்படி தெரிவிக்கப்படா நின்றத்திறே திருவாய்மொழி நூற்றந்தாதியில் செஞ்சொற்பரன் தனது
சீராரும் மேனிதனில், வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின்- விஞ்தலைக் கண்டவனைக் கால் கட்டிக் கை விடுவித்துக் கொண்ட- மாறன். என்றருளியது காண்க.
அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருநகரிலே பேர் பெற்றது.–அப்பக்குடத்தான் ஸன்னிதியென்கிற திருப்பேர்நகரில் ஸ்வாமித்வமென்னுங் குணம் விளங்குமென்கிறதிதில் ஸ்வாமித்வமானது-தன்னுடைமையை இழந்து போகாமல் எவ்வகையினாலாவது பெறுதற்கு முயலச் செய்யுமது. ஸர்வேச்வரன் விமுகரா னவர்களையும் மடிமாங்காயிட்டு ஸ்வீகரிக்க அவகாரம் பார்க்கும் வழிகளிலே என்னூரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய் ‘ என்றாற்போன்ற அஜ்ஞாத ஸுக்ருதாந்வேஷணம் தலைநிற்குமதாகையாலே திருப்பேர்நகருக்கான திருப்பதிகத்தில் * திரு மாலிருஞ்சோலை மலை யென்றேன், என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தான் * என்றதனால் அக்குணம் காட்டப்பட்டதாயிற்று.
நூற்றெட்டுத் திருப்பதிகளில் பதிகம் பாடல் பெற்ற திருப்பதிகள் 72-மட்டுமே. மற்ற (36) திருப்பதிகளுக்குத் துணுக்கைப் பாசுரங்களே யுள்ளன.-அவற்றில் சோழ நாட்டில்- 8. தொண்டை நாட்டில் 15. பாண்டி நாட்டில்-7. [மலை நாட்டில் திருவண்பரிசார மொன்றுக்கு மட்டும் துண்டுப் பாடலென்னலாம்.-ஆயினும் அதற்கும் பதிகம் பாடலே யென்பது பூருவாசாரியர்களின் திருவுள்ளம்.) வட நாட்டில் 6. ஆக 36. இவற்றின் பெருமைகளை யநுபவிக்கும் விதம் நுட்பமாக
சோழ நாட்டில் (உறையூர்) ஸ்ரீ குணரத்ன கோசத்தைக் கொண்டு நாச்சியார் பெருமையை ய நுபவிப்பது. (தஞ்சை) அனைவர்க்கும் தஞ்சமாம் பெருமாளென்று கொண்டு அசரண்ய சரண்யத்வ குணத்தை யநுபவிப்பது. (அன்பில்) அன்பு தோற்ற எழுந்தருளி யிருக்கு மிடமென்று கொண்டு ஸௌஹார்த்த குணத்தை யநுபவிப்பது (கரம்பனுனூர் ) உத்தமனாகையாலே புருஷ ஸூக்தத்தைக் கொண்டு புருஷோத்தமத்வத்தை யனுபவிப்பது. (ஆதனூர்) ஆ- பசு; காமதேனு; எம்பெருமானுடைய ஸகல புருஷார்த்த ப்ரதத்வத்தை ய நுபவிப்பது. (தலைச்சங்கநாண்மதியம்) இத்தலத் தெம்பெருமான் மதியமென்று சந்திரனுடைய திரு நாமத்தை வஹிப்பதால் “‘சந்த்ரமா மநஸோ ஜாத ” என்றச்ருதியைக் கொண்டு தண்ணளியை யனுபவிப்பது.(கண்டியூர்) அரன் சாபந்தீர்த்த பெருமாளாகை
யாலே ரு த்ரசாப விமோசன கதையை விவரித்தநுபவிப்பது. (கவித்தலம்)
“ஆற்றங் கரை கிடக்குங் கண்ணனாகையாலே ஆற்றிலிருந்து பதிகத்தைய நுபவிக்க
தொண்டை நாட்டில் (தென்னத்தியூர்) யஸ்ய ப்ரஸாத கலயா” என்கிற
ஆளவந்தார் ஸ்ரீ ஸ க்தியைக் கொண்டநுபவிப்பது (திருவெஃகா) வேகாஸேது
ஸ்தோத்ரங்கொண்டநுபவிப்பது. (வேளுக்கை) காமாஸிகாஷ்டகத்தைக்
கொண்டநுபவிப்பது. (திருத்தண்கா) சரணாகதிதீபிகையைக்கொண்ட நுபவிப்பது.
(திருப்பாடகம் ) தூது சென்ற பெருங்குணத்தையும் பிலவறையில் பெரியமாமேனிகொண்டதையும் அனுபவிப்பது.(ஊரகம் நீரகம் காரகம் கார்வானம்) அடியேனுடைய திருநெடுந்தாண்டக திவ்யார்த்த தீபிகையைக் கொண்டநுபவிப்பது.
(கள்வனூர்) ஸகலஜனமநோஹரத்வ குணத்தையனுபவிப்பது. (பவளவண்ணம்)
எம்பெருமான் யுகபேதேந வர்ணபேதம் கொள்வதைப் பரக்கச் சொல்லிய நுபவிப்
பது (நிலாத்திங்கள் துண்டம்) எம்பெருமானுடைய திருமுகச்சோதியை *முடிச்சோதியாய் பாசுரங்கொண்ட நுபவிப்பது. (திருப்புட்குழி) ப-ரமார்த்த ஸ்துதிகொண்டநுபவிப்பது.(திருநின்றவூர்) பத்தராவியின் வாத்ஸல்யாதிசயத்தை யநுபவிப்பது. (திருக்கடிகை) அக்காரக்கனின் அதிமாத்ர போக்யதையை ய நுபவிப்பது. நா ம்ஹாவதாரப் பெருமையும நுபவிக்கலாம்
பாண்டி நாட்டில், (திருமெய்யம்): பொய்யேகைம்மை சொல்லி மெய்யே பெற்றெழிந்ததை விளக்கி யநுபவிப்பது.(திருத்தண்கால்) தண்காலென்பது குளிர்ந்த காற்றகையினாலே ஓர் தண்டென்றல் வந்து அயலிடை யாருமறிந் திலர்- தடவிற்றென்புலன்கலனே என்கிற திருவிருத்தப் பாசுரத்தை விரித்தநுபவிப்பது. (திருக்கூடல்) இது மதுரையாகையாலே திருப்பல்லாண்டவதரித்தசரிதையை யநுபவிப்பது. (ஸ்ரீவில்லிபுத்தூர்) பெரியாழ்வாராண்டாள் பெருமைகளைப்பரக்கப் பேசுவது. (ஸ்ரீ வைகுண்டம், வரகுணமங்கை, திருக்குளந்தை) கீழேஆசார்யஹ்ருதய சூர்ணைகளைக் கொண்டு அநுபவித்தாயிற்று.
வட நாட்டில் (அயோத்தி) ஸ்ரீராம குணாநுபவம் கொள்ளை கொள்ளையாக
ஆகலாம். (வடமதுரை, த்வாரகை, திருவாய்ப்பாடி, விருந்தாவனம்) ஸ்ரீ க்ருஷ்ண
குணாநுபவம் ஆழிமோழையாய்ச் செல்லலாம். (திருப்பாற்கடல்) * ஆமோதே
புவநே இத்யாத்தி நடாதூரம்மாள் ஸ்ரீஸக்தியைக் கொண்டநுபவிப்பது.
(திருநாடு) * யத்தூரே மநஸோ யதேவ தமஸ: பாரே* இத்யாதி பட்டர்
ஸ்ரீஸூக்தியைப் பரக்கவுபந்யளிப்பது. பதிகப்பாடல் பெற்ற எழுபத்திரண்டு
தலங்களில் ஆசார்யஹ்ருதய சூர்ணிகைகளைக் கொண்டு அநுபவித்த 28 திருப்ப தி
கள் போக, சேஷித்த 44 திருப்பதிகளை அந்தந்த திருமொழிகளைக்கொண்டு
அனுபவிக்கவும் அநுபவிப்பிக்கவும் வல்லவர்கள் *விண்ணுளாரிலும் சீரியரே
இரண்டு கண்டங்களினுடையவும் தொடக்கத்தில் ஸ்ரீசப்த விக்யாஸமுள்ளது; அதற்குச் சேர
அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறை மார்பா* என்றருளிச் செய்தா
ராழ்வார். அதற்கிணங்கத் திருவாய்மொழி நூற்றந்தாதிப் பாசுரத்திலும் ” அலர்மகளை
முன்னிட்டு” என்றருளிச் செய்தார் மணவாளமாமுனிகள்.உலகமுண்ட பதிகத்தின் உயர்த்தி. திருவாய்மொழி யாயிரத்தில் நூறு பதிகங்களன்றோ வுள்ளன. அவற்றுள் ஒரு பதிகத்திற்கும் அமையாத அதிசயமொன்று * உலகமுண்ட பெருவாயா * என்னும் பதிகத் திற்கு அமைந்துள்ளது. அஃதாவது என்னென்னில் ; ஒவ்வொரு பாட்டிலும் விடாமல் திருவடியைப்பற்றின சொல் அமைந்திருப்பது நோக்கத்தக்கது . முதற்பாட்டில * குலதொ லடியே னுனபாதம் கூடுமாறு கூறாயே. 2. * ஆறாவன்பி னடியேன் உன்னடி சேர் வண்ண மருளாயே. 3. * அண்ணலே உன்னடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே. 4 *பூவார் கழல்க ருவினையேன் பொருந்துமாறு புணராயே 5. * திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியே னெந்நாளே . 6.*மெய்ந்நா னெய்தி யெந்நா ளுன்னடிக்க ளடியேன் மேவுவதே. 7. “கொடியார் பொழுது முனபாதங் காண கோல தாற்றேனே. 8. நோலா தாற்றே னுனபாதங் காண. 9. * அந்தோ! அடியே னுனபாதம் அகல கில்லே னிறையுமே. 10. புகலொன்றில்லா வடியே னுன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே. 11. *அடி கீ ழமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் ஆக இப்பதிகம முழுவதும் திருவடி ஸம்பந்தம் இடையறாது வரப்பெற்றதென்னு மதிசயம் குறிக்கொள்ளத்தக்கது. இதற்கொரு முக்கியமான கமகமுண்டு; அதாவது, ‘ முமுக்ஷ வுக்கறியவேண்டும் ரஹஸ்யம் மூன்று’ என்னப்பட்ட திருமநத்ரம் த்வயம் சரம ச்லோகமாகிற மூன்று ரஹஸ்யங்களில், திருமந்த்ரத் திலும் மநத்தரத்னமென்கிற சரம ச்லோகத்திலும் திருவடியைப்பற்றின ப்ரஸ்தாவமே கிடையாது: அஃதுள்ளது த்வயத்தில் மட்டுமேபாம். அந்த த்வத்தின் அர்த்தா நுஸந்தான பரமான *இவ்வுலகமுண்ட பதிகத்தில் திருவடியின் ப்ராதாந்யத்தை ஆழ்வார் இங்ஙனே காட்டியருளினது சாலச் சிறக்கும். அன்றியும், மற்ற இரண்டு ரஹஸ்யங்களிலும் பிராட்டியின் ஸம்பந்தமும் ஸ்பஷ்டமாகத் தோற்றிற்றில்லை. அக்குறையும் தீர த்வயத்தில் இரண்டு கண்டங்களினுடையவும் தொடக்கத்தில் ஸ்ரீசப்த விக்யாஸமுள்ளது; அதற்குச் சேர
* அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறை மார்பா* என்றருளிச் செய்தா
ராழ்வார். அதற்கிணங்கத் திருவாய்மொழி நூற்றந்தாதிப் பாசுரத்திலும் ” அலர்மகளை
முன்னிட்டு” என்றருளிச் செய்தார் மணவாளமாமுனிகள்.
யந்முஹு த்தம் க்ஷணம்வாபி வாஸுதேவோ ந சிந்த்யதே, ஸாஹாநிஸ் தந்மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸாச விக்ரியா” என்கிற ச்லோகத்தையும் ஏகஸ்மிந்நப்ய திக்ராந்தேமுஹூர்த்தே த்யா நவர்ஜிதே, தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணாம் எனகிற ச்லோகத்தையும் பல பெரியார்களிடம் பலகால கேட்டுத் தரிதது
அடிசுகடி அவற்றையே சிந்திப்பதும் பிறர்க்குரைப்பதுமான இயல்புகொண்டிருக்கவேணும்.
இதில் ஆத்மானந்தமும் அதிகமாகும்.
“முன்னவராம் நம் குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம் முழுது நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம் “ என்று மணவாளமாமுனிகள் பணித்தபடியே பெரியோர்களுடைய ஸ்ரீஸூக்திகளால் போதுபோக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப் பயன். இதுதான் காலக்ஷேபம்.–தரித்திருந்தே னாகவே தெரித்தெழுதி வாசித்துங்கேட்டும் வணங்கி
வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்றருளிய பாசுரம் ஒவ்வொருவரும்
நிச்சலும் நினைக்கத்தக்கது-கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான். பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்-சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையினாழ்துயரை, என்னினைந்து போக்குவரிப்போது—பன்னிரு திங்களநுபவம்.-மாதவாரியாக அனுஸந்திப்பதற்குப் பாங்கான நன்மொழி கேளீர். ஐப்பசி மாதத்திலிருந்து புரட்டாசி மாதம்வரை வரிசையாக அநுபவிக்கவேண்டிய விஷயங்கள். ஐப்பசியில்
பொய்கை பூதம் பேயாழ்வார்களெனும் முதலாழ்வார்கள் பிள்ளை லோகாசார்யர் மணவாள
மாமுனிகள். (2) கார்த்திகையில் திருமங்கையாழ்வார் திருப்பாணாழ்வார் அருளாளப்
பெருமாளெம்பெருமானார்,நம்பிள்ளை. (3) மார்கழியில்-தொண்டரடிப்பொடியாழ்வார், திரு
வத்யயநோத்ஸவப் பெருமை. (4) தையில் திருமழிசையாழ்வார், எம்பார்-கூரத்தாழ்வான்.
(5) மாசியில்- குலசேகராழ்வார் திருக்கச்சிநம்பிகள். (6) பங்குனிபில்-பெரியபிராட்டியார்;
நஞ்சீயர். (7) சித்திரையில்-மதுரகவியாழ்வார், எம்பெருமானார் முதலியாண்டான் அனந்
தாழ்வான். (நீ) வைகாசியில்-நம்மாழ்வார், பட்டர். (9) ஆனியில்-பெரியாழ்வார், ஸ்ரீமந்
நாதமுனிகள், வடக்குத் திருவீதிப்பிள்ளை. (10) ஆடி பில்-ஆண்டாள், ஆளவந்தார்.
அண்ணா.(11) ஆவணி பில் கீதாசார்யன், பெரியவாச்சான்பிள்ளை. (12)புரட்டாசியில்-
வேதாந்தவாசிரியர்… ஆக இவர்களைப்பற்றி விசேஷமாகச் சிந்தனை செய்வது.
நூபுர கங்கை யென்னும் சிலம்பாற்றை இவ்விருவருமே பாடினர் ; ‘சிலம்பாறு பாயுந் தென்திருமாலிருஞ்சோலையே” என்றார் பெரியாழ்வார். * சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது. வந்திழியுஞ் சிலம்பாறுடை மாலிருஞ் சோலை * என்றாள் கோதை. (” சிலம்பியலா றுடைய ” என்று பிறகு கலியனும் பாடினர்.) இந்திரகோபம் என்னும் (வட சொல்லின் திரிபான] சொல்லை இவ்விருவருமே பிரயோகத்தில் கொண்டனர். “இந்திரகோபங்கள் எம்பெருமான் கனிவாயொப்பான் சிந்தும் புறவில் தென்திருமாலிருஞ் சோலை” என்றார் பெரியாழ்வார். “சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலை யெங்கும் இந்திரகோபங்களே யெழுந்தும் பரந்திட்டனவால்’‘ என்றாள் ஆண்டாள். இந்திர கோபமாவது பட்டுப்பூச்சி அதனை எம்பெருமானுடைய திருவதரத்தில் பழுப்புக்கு உவமை யாகவே பெரியாழ்வாரும் ஆண்டாளும் அநுஸந்தித்தார்கள்..
தமிழில், பாணித்தல் என்று அபூர்வமாக ஒரு சொல் உண்டு; காலதாமதம் என்பது அதன் பொருள். இச்சொல்லை இவ்விருவருமே பிரயோகத்திற் கொண்டனர். “பாணிக்கவேண்டா நடமின் பண்டன்று பட்டினங்காப்பே”‘ என்பது பெரி யாழ்வார் பிரயோகம். “பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க வுறுதிராகில்” என்பது ஆண்டாள் பிரயோகம், ஓட்டரா என்பது ஒரு சொல் (ஓட்டம், தரா) என்கிற இரண்டு சொற்கள் ஒன்று சேர்ந்து ஒட்டரா என மருவிற்று. ஓடிவந்து என்பது இதன் |பொருள். (செய்யா வென்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். இச்சொல்லை இவ் விருவருமே பிரயோகத்திற்கொண்டனர். “என்னிடைக்கு ஒட்டரா அச்சோ வச்சோ” என்பது பெரியாழ்வார் திருமொழி. “ஒட்டரா வந்து என்கைப்பற்றி” என்பது நாச்சியார் திருமொழி. தமிழில் குப்பாயம் என்பது ஒரு அபூர்வமான சொல். சட்டையென்பது இதன் பொருள். பெரியாழ்வார்திருமொழியில் “குப்பாயமென நின்று காட்சிதருங்கோவர்த்தன மென்னுங் கொற்றக்குடையே “ என்று பிரயோகம். நாச்சியார் திருமொழியில் “போர்த்த முத்தின் குபபாயப்புகர்மால் யானைக்கன்றேபோல்” என்று ஆண்டாளுடையவும் பிரயோகம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தினுள் இவ்விரண்டிடங்கள் தவிர வேறெங்கும் இச்சொல் காணக்கிடைக்காது. ஒருவரே இருவராக வடிவெடுத்துப் பாசுரம் பேசும் திறன் இவ்விருவர் பக்கலிற் காண்பதாம் ; ஆழ்வார், என்னாதன் தேவிக்கு * என்னும் திருமொழியில் இரண்டு கன்னிகைகளின் வடிவைத் தாமொருவர் பூண்டு. கண்ணபிரானைப்பற்றி ஒரு கன்னிகை புகழ்ந்து பேசுவதாகவும் இராமபிரானைப் பற்றி மற்றொரு கன்னிகை புகழ்ந்து பேசுவதாகவும்வைத்துப் பாடினர். * கதிராயிரமிரவி யென்னும் திருமொழியில் ‘எம்பெருமானைக் கண்ட வர்களுண்டோ?” என்று கேட்கிற வொருவருடைய பாசுரமாக முன்னடிகளும், ‘இன்ன இடத்திலே கண்டதுண்டு’ என்று விடை கூறுவார் பாசுரமாகப் பின்னடிகளும் அமைய வைத்தார். ஆண்டாளும் * பட்டி மேய்ந்தோர் காரேறு* என்கிற திருமொழியில் * இங்கே போதக் கண்டீரே * என்று கேட்பார் பாசுரமாக முன்னடிகளையும். * விருந்தாவனத்தே கண்டோமே என்று விடை கூறுவார் பாசுரமாகப் பின்னடிகளையும் அமைத்திருப்பது)காண்க. பிறகு திருமங்கையாழ்வாரும் இங்ஙனே தோழிமார் இருவரின் ஸம்வாதமாக மானமரு மென்னோக்கி * பதிகம் பாடினர்.
நெறிவாசல் தானேயாய் நினறான்-பொய்கையார்-அவனைப் பெறுதற்கு அவனே உபாயம்.
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ” என்ற பட்டருடைய ஸ்ரீ ஸூக்தி அற்புதமாய் அமைந்தது;-அஸாதாரண லக்ஷணம் என்றபடி. எம்பெருமானுக்கு என்ன லக்ஷணம்? என்று ஒருவர் கேட்டால், தானே உபாய மாயும் தானே உபேயமாயுமிருக்கை லக்ஷணம் என்று சொல்லிவிடலாம்.
(16) வனத்திடரை ஏரியாம் வண்ண மியற்றுமிது வல்லால், மாரி யார்பெய்கிற்பார் மற்று–ஒருகால் பகவான் நம் மீது அருள் வெள்ளத்தைப் பெருக்கத் திருவுள்ளம் பற்ற நேர்ந்தால் அந்த விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகுமத்தனை- என்பதாம். திருத்தமுருத சேதனரை மேட்டு நிலத்தின் ஸ்தானத்திலே கொள்க.அத்வேஷாதிகளாலே தம் நெஞ்சைத் திருத்திக் கொள்வதை ஏரியாம் வண்ண மியற்றுவதாகக் கொள்க. நிர்ஹேதுக பகவத் ப்ராப்திகைபுகுதலை மாரி பெய்கையாகக்கொள்க
(17.) *சென்றநாள் செல்லாத செங்கண்மாலெங்கண்மால், என்ற நாள் எந்நாளும் நாளாகும் *-ஒருவனுக்கு நிகழ்காலமொன்று நல்லதாகச் செல்லுமானால் அவன் இறந்த காலத்தைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டா
(தந்தாம் ஸ்வம் தாந்தாம் விநியோகம் கொண்டாப்போலே யிருக்கத் தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி] தங்கள் தங்கள் உடமையைத் தாங்கள் தாங்கள் எடுத்து விநியோகம் கொள்ளுமாபோலே கொள்ளலாம்படி ஆத்மாத்மீ யங்களைக் கொடுத்தருள்வன். இது ஒளதார்ய குணத்தின் காரியம்.-அவர்கள் காரியம்தலைக்கட்டினால் தான் கருதக்ருத்யனாய்] அடியார்களின் காரியம் நிறைவேறினால் அவர்கள் க்ருத க்ருத்யராகை யன்றிக்கே தான் க்ருதகருத்யனானதாக அபிமானிப்பன்; இது ‘க்ருதீ’ என்னும் குணத்தின் காரியம்,-தான் செய்த நன்மைகளில் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த
ஸு க்குதலவத்தையே நினைத்து] தன் பக்கலிலே ‘சரணம் என்கிற உக்தி மாத்ரமாகிற ஸக்ருதலேனத்தைப்பண்ணினால் அவர்களுக்குத்தான் எல்லா நன்மைகளும் செய்தாலுங்கூட அவற்றை ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்தஸுக்ருத லவத்தையே நினைத்திருப்பன். இது க்ருத ஞதா கார்யம்.-[அநாதிகாலம் வாஸிதங்களான ரஸங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய்] நெடுங்காலமே பிடித்துக் கொளுந்திக் கிடக்கிற ராக்ருத விஷயரஸங்களை அறவே மறக்கும்படி ஸர்வாவஸ்தையிலும் இனியனா யிருப்பன். இது மாதுர்ய மென்னும் குணத்தின் காரியம்.-பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக்கண்ணிட்டிருக்கும் புருஷனைப்போலே அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தால் நினையாதே] மக்கள் மனைவியருடனே கூடிவர்த்திப்பானொரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டிருக்கச்செய்தேயும் காணாதாரைப் போலேயிருக்குமாபோலே அடியார்கள் செய்த குற்றங்களைக் கண்டிருக்கச்செய்தேயும் திருவுள்ளத்தால் நினையாதிருப்பன். இது சாதுர்ய காரியம். அடியார்களின் குற்றங்களைத் தெரியாதபடி மறைக்க வல்லவனாகையேசாதுர்யம்.-(குற்றங்களைப் பெரிய பிராட்டியார்காட்டினாலும் அவளோடே மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து] சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய் சேதநர் குற்றங்களைப் பொறுப்பித்துச் சேர விடுமவளான பெரிய பிராட்டி தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும் *என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்று அவளோடே மறுதலைத்து நிலைகுலையாதே நின்று ரக்ஷிப்பன். இது ஸ்தைர்ய
மென்னும் குணத்தின் கார்யம்.-[அவர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் செவ்வியனாய்] மனமொழி மெய்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராயிருக்குமவர்கள் திறத்தில்,நீர் ஏறாத மேடு நிலங் களிலே விரகாலே நீரேற்றுவாரைப்போலே தன்னை அமைத்து த்ரிகரணங்ககளாலும் செவ்வியனாய்ப்போருவன். இது ஆர்ஜவமென்னும் குணத்தின் காரியம்.-(பிரிந்தால் அவர்கள் வ்யஸ நம் குளப்படி யென்னும்படி தான்டுப்பட்டு ஊர்த்வம் மாஸாந் ஜீவியே* என்றால் நஜீவேயம் க்ஷணமபி* என்கிறபடியே,தன்னைப் பிரிந்தால் அடியார்படும் வயஸனமானது, கடல்போன்ற தன் வயஸனத்துக்கு ஒரு குளப்படி மாத்திரமென்னும்படி தான் கிலேசப்படுவன். இது மார்தவமென்னும் குணத்தின் காரியம்–[அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழ விட்டு] பிறவி அறிவு முதலானவற்றால் தண்ணியராயிருக்குமவர்களுக்கு அனுகூலமாக ஸர்வோத்ருஷ்டனான தன்னைத் தாழ விடுவன்.இது ஸெளசில்ய குணத்தின் காரியம்-அவர்களுக்குக் கட்டவுமடிக்கவுமாம்படி எளியனாய்] அவதார தசையிலே நவநீத செளர்ய வ்யாஜத்தாலே ஓர் நெடுங்கயிற் ால் ஊரார்களெல்லாருங் காண வுரலோடே தீராவெகுளியளாய்ச் சிக்கன ஆர்த்து அடிப்ப என்கிறபடியே யசோதாதிகளுக்குக் கட்டவுமடிக்கவுமாம்படி எளியனாயிருப்பன். இது ஸெளலப்ய கார்யம் .-(அன்றீன்ற கன்றுக்குத் தாயிரங்கி முன்னணைக் கன்றையும் புல்லிடவந்த்வர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே பெரிய பிராட்டியாரையும்ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக்கொண்டு போரும்.] அன்று தான் பெற்றகன்றுக்குத் தாயான பசுவிரங்கி, முன்பு தான் ஸ்நேஹித்துக்கொண்டு போந்த
முன்னணைக் கன்றையும், தனக்கு போக்யமான புல்லை யிடவந்தவர்களையுங்கூட
மூசிக்கொம்பிலே கோத்தெடுப்பது குளம்பாலே மிதிப்பதாமாபோலே வல்லபையான பெரியபிராட்டியாரையும், முன்பு ஸ்நேஹ விஷயமாய்ப் போந்த நித்ய வரிகளையும் தள்ளிவிட்டு இன்று ஆச்ரயித்தவர்களை ஸ்நேஹித்துக்கொண்டு போருவன். இது வாத்ஸல்ய கார்யம்.
ஹேகோபாலக ஹேக்பாஜல தே!ஹே ந்துகந்யாபதே!
ஹேகம்ஸாந்தக! ஹேகஜேந்த்ர கருணாபாரீண ஹேமாதவ?
ஹேராமாநுஜ ஹேஜகத்த்ரயகுரோ ஹேபுண்டரீகாக்ஷ ! மாம்
ஹேகோபீஜநநாத ! பாலய பரம் ஜாநாமி ந் த்வாம் விநா.
ஹேகோபாலக!=” ஸர்வஸ்ய ஜகதா பாலௌ வத்ஸபாலௌ பபூவது:“என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்திற் கூறியபடியே எம்பெருமான் * கோவலனாய் ஆநிரைகள் மேய்த்தது ப்ரஸித்தம். எம்பெருமானாருடைய கோபாலனதைக் கேளீர். ஆளவந்தார் ந்ருபசு:’ என்றும், மணவாள மாமுனிகள் வருத்த்யா பசுர் நரவபு ” என்றும் அருளிச் செய்தபடியே * ஜ்ஞாநேந ஹீந பசுபிஸ்ஸமாந: *என்னும்படி பசுப்ராயர்களான நம்மையெல்லாம் ரக்ஷித்தருளினவர். அநேகார்த்தகமான கோசப்தத்திற்கு வாக்கு என்கிற பொருளும் * யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் * இத்யாதிகளிலே ப்ரஸித்தமாகையாலே * தஸ்மை ராமாநுஜார்யாய நம . பரமயோகிநே,ய; ச்ருதிஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர்ஜ்வரம் அசீசமத் என்கிறபடியே ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரவாக்குக்களுக்குப் பிறர்கூறும் அபார்த்தங்களை நிரஸித்து ஸமஞ்ஜஸார்த்தங்களை நிலை நிறுத்தும் முகத்தாலே (கோ)ரக்ஷணம் செய்தருளினவர் எம்பெருமானார்.
ஹேக்ருபாஜலநிதே!= கண்ணன் என்பதற்குக் கருணையுடையவன் என்பதும் பொருள். அவதரித்தபோதே தன் கருணையை உலகமறியக் காட்டியருளினான்.எங்ஙனே யென்னில் ; தன்னைப் பெறுதற்கு ஸாதநா நுஷ்டானம் பண்ணின வதேவர்க்கு முகத்தைக் காட்டிவிட்டு, அறிவொன்றுமில்லாத ஆயர் தலைவனாய–எடுத்த பேராளன் நந்தகோபன்தன் என்று நிதியெடுத்தவனென்று ஆழ்வார் சொல்ல நின்ற நந்தகோபர்க்கு ஸகல போகங்களையும் நிர்ஹேதுகமாகக் கொடுத்தது க்ருபாஜலநிதித்வத்தை நன்கு காட்டினபடியிறே. இனி எம்பெருமானாருடைய க்ருபா ஜலநிதித்வம் ஜகத்ப்ரஸித்தம். பூருவர்களை அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர்களென்றும் ஸ்வாமியை க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யரென்றும் வழங்குவர்.இதன் காரணத்தை மணவாளமாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் * ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர், ஏராரெதிராச ரின்னருளால்-பாருலகிலாசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின் என்கிற பாசுரத்தினா லருளிச் செய்துவைத்தார். ஆழ்வான் ஸ்வாமிக்கு இட்ட தனியனில் ” அஸ்மத் குரோ பகவதோஸ்ய தயைகளிந்தோ “ என்றருளிச் செய்ததுங் காண்க. ஸகல சாஸ்த்ர ஸிந்துவானவர்க்கு இதுவே தன்னேற்றம்.
ஹேளிந்துகத்யாபதே! = பிராட்டி ‘ரஸாகரஸம்பவா” என்னப்படுமவளாகையாலே எம்பெருமான் ஸிந்துகந்யாபதி யாயினன்; லக்ஷமீபதே!என்னாமல் கந்யாபதே ! என்பதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; க்ருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை, ருக்மிணிபோன்ற பல கன்னிகைகளுக்குப் பதியானமையுண்டே.அன்றியும், ஸிந்துபோன்ற [கடல்போன்ற] என்று கொண்டு, ” பதினாறு பல்லாயிரமெண்ணிறந்தார்‘ என்று ஆசார்ய ஹ்ருதயத்திலருளிச் செய்த கணக்கிலேஎண்ணிறந்த கன்னிகைகளுக்குப் பதியானமையும் கொள்க. இந்த விளியை எம்பெருமானார்க் நிர்வஹிக்கும் போது லக்ஷிதலக்ஷணாகரமம் கொள்ளக் கடவது.-அதாவது, ஸிந்துகந்யாபதி – ச்ரிய: பதி:, சரிய பதி – ஸ்ரீமாந். என்று கொள்வது.-ஸ து நாகவர ஸ்ரீமாந் லஷ்மணோ லஷ்மிஸம்பந்த அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந் இத்யாதி ஸ்தலங்களிற் காணும் ஸ்ரீமத்த்வம் ஸ்வாமி பக்கலிலே உப்பாதிக்க எளிது.
ஹேகம்ஸாந்தக!= கண்ணன் கம்ஸனுக்கு அந்தகனானது போல, ஸ்வாமிகலி புருஷனுக்கு அந்தகராயினர். கம்ஸனுடைய மரணம் ஆகாச வாணியினால் முன்னாடியே தெரிவிக்கப்பட்டதுபோல, கலியின் கெடுதலும் * பொலிக பொலிகவில்
” கலியுங் கெடுங்கண்டு கொண்மின் என்கிற ஆகாசவாணியினால் நெடு நாளைக்கு முன்னமே ஸசிதம். ஆகாசவாணி யென்பதன் பொருள் தவறாமல் பலிப்பது என்பதேயாம். இதனால் கம்ஸனுக்கும் கலிக்கும் ஒற்றுமை. இத்தகைய ஆகாசவாணியை நிறைவேற்றின தன்மையால் கண்ணனுக்கும் ஸ்வாமிக்கும் ஸாம்யம்.
ஹே கஜேந்த்ர கருணாபாரீண != கண்ணன் கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தது ப்ரஸித்தம், ஸ்வாமி திறத்தில், கஜேந்த்ர!, கருணாபாரீண! என்று இரண்டு
விளியாகப் பிரித்துக்கொள்வது. நூற்றந்தாதியில் * பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் * என்று ஸ்வாமி மதயானையாகப் பேசப்பட்டிருப்பது காண்க. அன்றியும், * பெருகுமத வேழம் * என்கிற பூதத்தார்பாசுரத்தை அனந்தாழ்வான் எம்பெருமானார் பரமாக நிர்வஹித்த கட்டளை நமது ஸதுபற்யாஸ மாலையில் விரிவாகக் கண்டுகொள்ளத் தக்கது. கருணாபாரீண! என்றது ‘க்ருபாஜலநிதே!’ என்றத்தோடு புநருதமாகிறதே யென்று சங்கிக்க வேண்டா. ஸ்வாமி கத்யத்தில் வாத்ஸல்ய குணத்தை இருமுறை கூறின தற்குப் பூருவர்கள் செய்தருளின நிர்வாஹம் இங்கு மொக்கும். ப்ராதாந்யத்தை யிட்டு த்விருக்தி.
ஹே மாதவ = கண்ணனுடைய மாதவத்வத்தில் விவரணாபேக்ஷையில்லை. ஸ்வாமி திறத்தில் கேளீர். “மதுச் ச மாதவச் ச வாஸந்திகா ருதூ “ என்று தைத்திரீய ஸம்ஹிதையில் [நாலாவது காண்டம், நாலாவது ப்ரச்நத்தில்] ஓதினபடி-மது வென்று சித்திரை மாதத்திற்குப்பெயர். மெதௌ ஜாத – மாதவ; சித்திரைத் திங்களில்-திருவவதரித்தவரென்றபடி.
ஹே ஜகத்த்ரயகுரோ!. கீதாசார்யனுடைய ஆசார்யத்வம் நிரூபண நிரபேக்ஷம். எம்பெருமானாருடைய ஆசார்யத்வமும் அப்படியே. “தஸ்மிந்ராமாநு
ஜாயே குருரிதி ச பதம்பாதி.நாந்யத்ர” என்று கல்வெட்டுச்செய்துவைத்தார்கள்.
ஹே புண்டரீகாக்ஷ !=”க: புண்டரீக நய :, புருஷோத்தமா க ” என்னும்
படி எம்பெருமானுடைய புண்டரீகாக்ஷத்வம் ப்ரஸித்தம். ஸ்வாமி திறத்திலோ
வென்னில்; “கம்பீராம்பஸ் ஸமுத்பூத-ஸும்ருஷ்ட நாள-ரவிகரவிகஸித-புண்டரீக
தாளாமலாயதேக்ஷண?” என்கிற ஸ்ரீஸூக்தி விசேஷத்தாலே புண்டரீகாக்ஷத்
வத்தை நிர்வஹித்தருளினவரென்கை. “தத் கரோதி ததாசஷ்டே” என்கிற
வ்யாகரணாநுசாஸனம் ஒருவாறு இங்குப் பொருந்தும்.
ஹே கோபீஜநநாத! = ஆயர்மட மக்களுக்குநாதன் கண்ணன். ரத்நா
கரஸ் தவ க்ருஹம் க்ரு ச லzமீ கிம் தேயமஸ்தி பவதே புருஷோத்தமாய,
ஆபீர வாமநயநா ஹ்ருதமாநஸய துப்யம் ப்ரதத்த மிதமஸ்து மநோ மதீயம்*
என்கிற பரமரஸிகருடைய ஸுபாஷிதத்தின்படியே கண்ணனுடைய உள்ளத்தைக்
கொள்ளை கொண்டவர்கள் ஆய்ச்சிகள்; ஸ்வாமியின் திருவுள்ளத்தைக் கவர்ந்தவர்
களான ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வார் கோபீஜந
ஸ்தாநீயர்களாவர். அன்னவர்களுக்கு நாதர் ஸ்வாமியென்கை மிகப் பொருத்தம்.
ஹே ராமாநுஜ !=பலராமனுக்கு அநுஜன் என்கிற ஒரு காரணத்தினால்
கண்ணன் ராமாநுஜனாவன். ஸ்வாமி யெம்பெருமானார் பலவ்யுத்பத்திகளினால்
ராமாநுஜராயினர். ராமஸ்ய அநுஜ , ராம: அநுஜ: யஸ்ய ஸ , ராமாஅனுஜா
யஸ்ய ஸ…… இங்கனே பல வ்யுத்பத்திகளை ஸ்ரீராமாநுஜநாமவைபவம் என்கிற
ஸம்ஸ்க்ருத வ்யாஸத்திலே பரக்க வுபபாதித்தோம். [ராமஸ்ய அநுஜ:) இளைய
பெருமாள்போலே கைங்கர்ய ஸாம்ராஜ்ய துரந்தரர். [ராம அநுஜா யஸ் ] பரபக்ஷ
ப்ரதிக்ஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவனாக்குபவர். [ராமா அநுஜா யஸ்ய]
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே * என வாழ்த்தநின்ற ஆண்டா
ளைத் தங்கையாக வுடையவர். இங்ஙனே பலவுங் காண்க.
பெரியாழ்வாரையும் திருமங்கை யாழ்வாரையும் சேர்த்து ரஸா நுபவங்கள்-“ஸ்ரீபட்டநாத பரகால முகாப் மித்ரம்”-ுள்ள சேர்த்தி யினால் தோற்றும் சொற்பொரு ளின்பங்களை யநுபவிக்கின்றோம். “நன்றுந் திரு வுடையோம்” என்று தொடங்கி ஸேவிக்கும் இயற்சாத்தில் “வாழியரோ தென் புதுவை வாழியரோ தென்குறையல் மாநகரம்” என்று பெரியாழ்வாருடையவும், திருமங்கை மன்னனுடையவும் திருவவதாரஸ்தலங்களுக்கு ஒருசேர்த்தி காணப்படா நின்றது. இராமாநுச நூற்றந்தாதியில் சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும் பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்திராமானுசன் என்று எம்பெருமானார்க்குப் பெரியாழ்வார் திருவடிகளிலே ப்ராவண்யமுடைமையைப் பேசினவுடனே தண்டமிழ்செய்த நீலன்தனக்கு உலகிலினியானை எங்களிராமானுசனை என்று (நீலனென்னுந் திரு நாமமுடைய திருமங்கையாழ்வார் பக்கலிலே ப்ரேமமுடைமை பேசப்பட்டதுங் காண்க.இடையில் தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்தென்கிற பாசுரத்தில் ஆண்டாள் திறத்திலீடுபாடு பேசப் பட்டிருந்தாலும் அது பெரியாழ்வாரிலே அந்தர்ப் பூதமேயாகும்.
பெரியாழ்வார் திருமொழியின் முடிவில் (5-4- 2)* பறவையேறு பரம் புருடா! நீ யென்னைக் கைக்கொண்டபின் * என்று பாசுரமிருக்கையாலே எம்பெரு மான் கருடாரூடனாய்வந்து ஸேவை ஸாதித்த விஷய ஸ்ரீ ஸூக்தி–பெரியதிரு மாழியில் (9- 2-5)-கோழியுங்கூடலுங் கோயில் கொண்ட * என்கிற பாசுரத்தினாலும். அதற்கு-மேலேயுள்ள (பாசுரம்8) * அஞ்சிறைப்புள் மொன்றேறி வந்தார் *என்கிற ஸ்ரீ ஸுக்தி-கோழியுங் கூடலுங் கோயில்கொண்ட” என்றவிடத்து கூடல் என்றதுதென் மதுரைக்கு மங்களாசாஸனமான பாசுரம். (கோழியென்றது உறையூர்.) குன்றமன்ன பாழியந்தோளுமோர் நான்குடையர்’ என்றதனால் பெரியாழ்வாரீடுபட்ட மல்லாண்ட திண்டோள் ப்ரஸ்தாவிக்கப்பட்டது. ‘வாழியரோ’ என்றதனால் பல்லாண்டு பாடினமை யக்தம். “இவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர்” என்றதனால் “மணிவண்ா!” என்று பெரியாழ்வாரீடுபட்ட திருநிறம் சித்தமாயிற்ற-“கையில் வெய்ய ஆழியொன்றேந்தியோர் சங்கு பற்றி” என்பதனால் “சுடராழியும்பல்லாண்டு” ”அப்பாஞ்சசன்னியமும் ல்லாண்டே” என்றதுஸ்மரிப்பிக்கப்பட்டது.
அல்வழக்கொன்று மில்லா வணி கோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்*-திருக்கோட்டியூரில் ப்ராவண்யாதிசாயத்தினாலே .-பதிகம்பாடி திவ்யதேசங்களை யநுபவித்து வருகையில் திருக்கோட்டியூரைப் பாடின
பிறகு மற்றொரு திவ்யதேசத்தைப் பாடலாகாதென்று தம்முடைய மங்களாசாஸனத்தை அந்தத் திருப்பதியோடே நிறுத்தினார். திருக்குறுங்குடி முதலான சில.திவ்யதேசங்கள் திருக்கோட்டியூர்க்கு அப்பால் விளங்கச் செய்தேயும் அத்திருப்பதி.களின் அநுபவத்தைத் திருப்புல்லாணியோடே சேர்த்து முடித்துக்கொண்டு *எங்களெம்மிறை யெம்பிரான் என்கிற திருக்கோட்டியூர்ப் பதிகத்தையே மங்களாசாஸனத்தில் முடிவாக வைத்திட்டது
வடநாட்டுத்திருப்பதிகளை மங்களாசாஸனம் செய்தவர் பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாருமாக இருவருமேயாவர். இதற்கு முதலில் பெரியாழ்வாரே வழிகாட்டினவர்:* வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதிரி யிடவகை யுடைய எம் புருடோத்தமனிருக்கை- கண்டமென்னுங்
கடி நகரே என்றிவை முதலான பாசுரங்களினால் பெரியாழ்வார் காட்டிக் கொடுத்த
வடநாட்டுத் திருப்பதிகளைத் திருமங்கையாழ்வார் விசேஷித்து அநுபவித்தார்.
திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தின் பெருமையை பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் பல பாசுரங்களினால் காட்டியும், பெரியாழ்வார் திருமொழியிலும் பலபல பாசுரங்களினால் விஸ்தரித்தும் போந்தார்; அதை யநுஸரித்தே திருமங்கையாழ்வார் * வாடினேன் வாடி * கிடத்தநம்பி குடந்தைமேவி * முதலான பதிகங்களினால் திருவஷ்டாக்ஷரத்தின் பெருமையைப் பரக்கப் பேசினார்.
கண்ணனை யசோதைப்பிராட்டி பாவனையால் இடுப்பில் வைத்துக் கொண்டு அம்புலியழைத்தல், செங்கீரையாடுகவென்று வேண்டுதல்,சப்பாணிகொட்டாயென்னுதல் அம்மமுண்ணவாராயென்று ஸ்தந்யபானத் திற்கழைத்தல், நீராட்டுதல், பூச்சூட்டுதல், கண்ணன் தீம்புகளைக் கொள்ளை கொள்ளையாகச் சொல்லி யநுபவித்தல் ஆகிய இதெல்லாம் பெரியாழ்வாரிடமே காண்பது-இங்ஙனமே இவை திருமங்கை யாழ்வாரிடத்திலும் காண்பதுண்டு. * செக்கரினம் பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன் * என்ற பாசுரத்தினால் அம்புலிப் பருவத்தை யநுபவித்தார். பூங்கோதையாய்ச்சி பதிகத்தினால் சப்பாணி கொட்டாயென்றார். சந்தமலர்க்குழல் பதிகத்தினால் அம்மமுண்ண வாராயென்றழைத்தார். *அன்பினால் ஞானநீர் கொண்டு ஆட்டுவனடியனேனே * என்று நீராட்டினார்; தூய மாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே* என்று பூச்சூட்டினார் * மானமுடைத் துங்களாயர்குலம் காதில் கடிப்பிட்டு* முதலிய பதிகங்களினால் கண்ணன் தீம்புகளைக் கொள்னை கொள்ளையாகச் சொல்லி யனுபவித்தார்.
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச் சேற்றாலெறிந்து வளை துகில் கைக் கொண்டு *எங்கள் பூம்பட்டுக்கொண்ட அரட்டன்” என்றிவை முதலான பாசுரங்களினால் பெரியாழ்வாருடைய கோபீவஸ்த்ராபஹரண அநுபவம் காண்கிறோம்;--துளையார்கரு மென் குழலாய்ச்சியர் தம் துகில் வாரியும் அங்ஙனுந் தீமைகள் செய்வர்களோ நம்பீ! ஆயர்மடமக்களை, பங்கயநீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்றொளித் திருந்து, அங்கவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*என்றிவை முதலான பாசுரங் களினால் திரூமங்கையாழ்வார் பக்கலிலே அவ்வநுபவம் அறியத்தக்கது.
இந்திரனுக்கிட்ட சோற்றைத் தானே வாரியமுதுசெய்து மாரிப்பகை புணர்த்த கதையைப் பெரியாழ்வாரொருவரே பரக்கப் பேசினார்; குன்றெடுத்தார் னென்று பல ஆழ்வார்களும் பேசியிருந்தாலும் பூர்வகதாஸந்தர்ப்பத்தைப் பெரி யாழ்வார் தாம் *-கேட்டறியாதன கேட்கின்றேன் * அட்டுக்குவி சோ றுப் பருப் பதமும் முதலான பாசுரங்களினால் பரக்கப் பேசினார். திருமங்கையாழ்வாரும்ஆயிரங்கண்ணுடை யிந்திரனாருக்கென்று ஆயர் விழவெடுப்ப, பாசன நல்லன பண்டிகளால் புகப்பெய்தவதனையெல்லாம். போயிருந்தங் கொரு யூதவடிவு கொண்டு * அன்னதோர் பூதமாய் ஆயர்விழலின்கண், துன்னுசகடத்தால் புக்க பெருஞ் சோற்றை,முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்*என்றிவை முதலான பாசுரங்களினால் விரிவாக அநுபவித்தார்.
பெரியாழ்வார் *நல்லதோர் தாமரைப் பொய்கையிலே ” இல்லம் வெறியோடிற்றாலோ என்மகளை யெங்குங்காணேன், மல்லரையட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள் கொலோ” என்று,தாய்ப்பேச்சில் மகள் கணவனோடுடன் சென்றதாகச் சொல்லி யநுபவித்தார். “ஒரு மகள் தன்னையுடையே உலகம் நிறைந்த புகழால், திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்ற பாசுரத்தினாலும் எம்பெருமான் தானே ஸ்வீகரித்துப் போனமையை நன்கு வெளியிட்டார். திருமங்கையாழ்வார்க்கும் இவ்வநுபவமே * கள்வன்கொல் யான்றியேன்*என்கிற திருமொழியில் செல்லாநின்றது.கரியானொரு காளை வந்து வெள்ளிவளைக் கைப்பற்றி யழைத்துக் கொண்டு போனதாகவாயிற்று சொல்லப்படுகிறது. *மல்லரையட்டவன் பின் போய் மதுரைப்புறம் புக்காள் கொலோ என்கிறார் பெரியாழ்வார்; அவன் பின் நடந்து வயலாலிபுகுவர் கொலோ *என்கிறார் திருமங்கையாழ்வார்.*உண்ணுஞ்சோறு பருகு நீர்த் திருவாய்மொழியில் நம்மாழ்வாருடைய அநுபவம் இப்படிப்பட்டதன்று.அது தலைமகளின் தனிப் போக்கான அநுபவம்; பெரியாழ்வார் திருமங்கையாழ்வார்களின் அநுபவம் உடன்போக்கு என்று வாசியறியத்தக்கது
ஒருவர் பேசச் செய்தேயும் இருவர் பேச்சுப் போலப் பாசுரம் பாடுவது
பெரியாழ்வார்க்கும் திருமங்கையாழ்வார்க்கும் ஒக்கும். பெரியாழ்வார் திருமொழியில் *என்னாதன் தேவிக்கு * கதிராயிரமிரவி இப்பதிகங்களிரண்டும் இருவர் பாசுரம் போலைமைந்தவை.திருமங்கையாழ்வாருடைய பெரிய திருமொழியிலும்
*மானமருமென்னோக்கி *என்கிற பதிகம் இத்தகைத்ததே.
திருமலைகளைப்பற்றிப் பாசுரம் பேசும்போது அவ்விடத்து நிகழ்ச்சிகளைக்
கூறுமிடத்து இழிபிறப்பாளருங்கூட தங்களுடைய உணவுகளை எம்பெருமானுக்கு
நிவேதனம் செய்தே புஜிப்பதாகக் கூறுகின்றமை பெரியாழ்வாரிடத்திலும் திரு
மங்கையாழ்வாரிடத்திலுமே கண்டது. திருமாலிருஞ்சோலைக்குப் பதிகம் பாடுகின்ற
பெரியாழ்வார் * சிந்தப்புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் . அந்திப் பலி
கொடுத்து ஆவத்தனஞ்செய் அப்பன் மலை என்றும் * புனத்தினைக் கிள்ளிப் புது
வவிக் காட்டி உன் பொன்னடி வாழ்கவென்று, இனக்குறவர் புதியதுண்ணுமெழில்
மாலிருஞ்சோலை யெந்தாய் என்றும் அருளிச்செய்ததை யடியொற்றின திருமங்
கையாழ்வார் சிங்கவேள் குன்றப்பதிகத்தில் * பைங்கணானைக் கொம்பு கொண்டு
பத்திமையால், அடிக்கீழ்ச்செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே என்றருளிச்செய்தார்.
திவ்யதேசங்களிலீடுபடுகின்ற அரசர்களைப் புகழ்ந்துபாடுவதென்கிற பத்
ததியைப் பெரியாழ்வார் * கொன்னவில் கூர்வேல்கோன் நெடுமாறன் தென்கூடல்
கோன் தென்னன் கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே* பருப்பதத்துக்கயல்
பொறித்தபாண்டியர் குலபதி போல் என்கிற பாசுரங்களினால் காட்டியருளினர்.
இதைப் பின்பற்றியே திருமங்கையாழ்வார் திருவல்லிக்கேணி. அட்டபுயகரம், பர
மேச்சுர விண்ணகரம், திருநறையூர் முதலான திருப்பதிகளுக்கிட்டருளின பதிகங்
களில்அவ்வவ்விடங்களிலே ப்ரவணர்களான ப்ரபுக்களைப் புகழ்ந்து பேசியுள்ளார்,
“சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலைமலையுறையுமாயா! எனக்குரையாயிது மறைநான்கினுளாயோ? தீயோம்பு கைமறையோர் சிறு புலியூர்ச்சலசயனத்தாயோ? உனதடியார் மனத்தாயோ வறியேனே .-7-9-7–திருமாலிருஞ் சோலைமலையுறையும் மாயா!‘ என விளித்தது – சிறு புலியூரிலுறையும் பெருமானும் திருமலையிலுறையும் பெருமானும் ஒருவரே யென்கிற உண்மையைக் காட்டுதற்கேயாம். இதை வடநூலார் ‘தர்மி ஐக்யம்’ என்பர்கள் ஸ்தானத்தில் பேதமே யொழிய தர்மியில் (எம்பெருமானில் ] பேதமில்லை யென்கிற பரமார்த்தம் இத்தகைய விளியினால் விளங்கும்.-எவ்விடத்திருப்பதில் உனக்கு உகப்பு அதிகம்?’ என்று கேட்பதாகக்கொள்ளலாம். இக்கேள்வி போலவே கூரத்தாழ்வான் வரதராஜஸ்தவத்தில் பேரருளாளப் பெருமாளை நோக்கி ” பக்தாநாம் யத் வபுஷி தஹரம்
என்கிற ச்லோகத்தில் கேள்வி கேட்கிறார். பக்தர்களின் ஹ்ருதய புண்டரீகம், ஆஸனபத்மம், வேதாந்தம்.நம்மாழ்வாருடைய திருமுடி, ஹஸ்திகிரியின் சிகரம் ஆகிய இந்த ஸ்தான விசேஷங்களுக்குள், “தே பாதாப்ஜயோ: கிம் அதி ஸுகதம்?’ உன்னுடைய திருவடித் தாமரைகளுக்கு மிகவும் ஸுகாவஹமான இடம் எது? என்று வினவியிருக்கின்றார். அத்தகைய வினாவே இங்கும் விவக்ஷிதம் என்னலாம்.
———
ஸ்ரீ ராமாநுஜன் 274.-1971 ஜூலைமீ” வெளியீடு-விரோதிகிருத் ஆனிமீ |
பகவானைச் சொல்லவேண்டுமானால் அவனுக்கு இணையாகச் சில பொருள்களைச் சொல்லலாம்; அவன் அடியார்கட்கு இணையாக ஒன்றையும் சொல்லமுடியாது என்று சுவாமி தேசிகன் அருளியுள்ளார், அப்பாசுரம்:
‘அலையற்றஆரமுதக்கடல், அக்கடலுண்டமுகில்,
விலையற்ற நன்மணிவெற்பு. வெயில்நில வோங்குபகல்
துலையுற்றன என்பர் தாமரை சூடுந்துழாய் முடியாற்(கு)
இலை ஒத்தன அவன் பாதம்பணிந்தவர்க் கெண்ணுதற்கே.‘-இதனால் அடியார்கட்கு நிகராக ஒன்றையும் ஒருவரையும் சொல்ல இயலாது
ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களில் ராதையைப்பற்றின பேச்சே கிடையாது. ருக்மிணிப் பிராட்டியைப்பற்றி நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஓரிடத்திலும், பெரியாழ்வார் தமது திருமொழியில் இரண்டிடத்திலும், ஆண்டாள் தமதுதிருமொழியில் ஓரிடத்திலும் கூறியிருப்பதுதவிர வேறிடங்கிடையாது. நப்பின்னைப் பிராட்டியைப்பற்றிக் கூறியுள்ள இடங்களோ அபரிமிதம். தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகிய இருவர்தவிர மற்றுள்ளவாழ்வார்களனை வரும் நப்பின்னைப் பிராட்டியைப் பலகால் கூறியுள்ளார்கள். திருப்பாவையில் மட்டும் நப்பின்னையென்றுள்ளது; மற்ற திவ்யப்பிரபந்தங்களில் பின்னையென்றுள்ளது. இவளுக்கு வடமொழிப்பெயர் நீலா என்பதாகக் கூரத்தாழ்வான் பட்டர் நிகமாந்தகுரு (யாதவாப்யுதயே) இவ்வாசிரியர்களின் ஸ்ரீஸக்திகளினால் அறிகிறோம்.-வடமதுரையின் பிராந்தங்களில் வ்ர பூமிகளில் நாம் ஸஞ்சாரம் செய்த போது நந்தகாம், பர்ஷாணா என்கிற இரண்டு ஊர்களுக்குப் போயிருந்தோம்.-நந்தகாம் என்கிறவிடம் நந்தகோபருடைய ஜன்மஸ்தானமென்றும், பர்ஷாணா என்கிறவிடம் ராதையின் ஜன்மஸ் தானமென்றும் சொல்லுகிறார்கள். ராதை
என்கிற வ்யக்தியை இல்லை செய்யமுடியாது. மதுராப்ருந்தாவனப்ராந்தங்களில்
பக்தர்களின் வாக்கில் ராதேச்யாம்! என்று பன்முறையும் கேட்கலாகும். கண்ணனுக்கு ச்யாமஸுந்தரனென்று ஒரு பெயர். அதில் ஏகதேசமாக ச்யாமனென்பதையும் ராதையையும் சேர்த்து ராதேச்யாம் என்று கூறிவருகிறார்கள் வழி நடந்துகொண்டு போம்போது ஒரு பக்தர் மற்றொரு பக்தரைக் கண்டால் ராதேச்யாம்! என்று சொல்லாமலிரார். வடநாட்டில் ராதையைத் தவிர ருக்மிணி ஸத்யபாமாதிகளையும் அறியாதவர்கள் பல்லாயிரவருளர்.
‘ஒன்றேயென்னி னொன்றேயாம் பலவென்றுரைக்கிற் பலவேயாம்
அன்றேயென்னி னன்றேயாம் மென்றுரைக்கி னாமேயாம்
இன்றேயென்னினீன்றேயாம் உளதென்றுரைக்கி னுளதேயாம்
நன்றேநம்பி டிவாழ்க்கை நமக்கிங்கென்னோ பிழைப்பம்மா.–கம்பர்பெருமான் காப்புச்செய்யுள்
(ஒன்றேயென்னின் ஒன்றேயாம்] அத்வைதமேயென்றால் அப்படியே யாகலாம்,-ஈச்வரன் ஒருவளேயுளன் என்பது அத்வைதம், இதை நாம் மறுக்கவேண்டிய அவசியமில்லை யென்றபடி . நாம் அத்வைதிகளன்றே; அத்வைதமதத்தைக் கண்டிப்பவர்களல்லவா? ஸ்ரீபாஷ்யம் முதலிய மஹாக்ரந்தங்கள் அத்வைதத்தைக்கண்டிக்கவன்றோ தோன்றியவை; அப்படியிருக்க இங்ஙனம் சொல்வதை ஏற்கத்தகுமோ? என்று மருளவேண்டா? விசிஷ்டாத்வைதமென்பதிலும் அத்வைதந்தானே யுள்ளது. வீடு ஒன்று. அதில் நூற்றுக்கணக்கான பண்டங்கள் இருக்கின்றன; ஆனாலும் வீடென்பது ஒன்றுதானே, இனி, மேல்வாக்கியத்தைக்காண்மின். [பலவென்றுரைக்கிற் பலவேயாம்.) த்வைதமென்றால் த்வைதமேயாகும் என்றபடி. நாம் த்வைதிகளோவென்று கேட்கவேண்டா; விசிஷ்டாத்வைதமென்பதில் (விசிஷ்ட) என்பதற்கு “விசேஷண விசிஷ்ட’ என்றுதானே பொருள். பரமபுருஷனிடத்தில் விசேஷணமாகியுள்ள பொருள்கள் பலபலவே யாதலால்
அவற்றை நோக்குமளவில், பரமபுருஷன் எல்லாப் பொருள்களிலும் எள்ளினுள் எண்ணெய் போலக் கரந்திருப்பதனால் பலவென்று கொள்ளவுங் குறையில்லை.
அன்றேயென்னின் அன்றேயாம்] உலகில் காணப்படும் சந்திரன் ஸூரியன் முதலிய சுடர்ப்பொருள்களைக் காட்டி ‘பகவான் அதுபோன்றிருப்பானோ?இதுபோன்றிருப்பனோ? என்றால், எதைப்போன்றவனுமல்லன் என்னவேண்டி யிருப்பன்.
‘ப்ரஹ்மாசிவச் சதமக: பரமஸ் ஸ்வராடிதி ஏதேபி யஸ்ய மஹிமார்ணவ விப்ரு
ஷஸ்தே “ என்று ஆளவந்தாரருளிச் செய்தபடி தன்பெருமைக்கடலில் ஒரு திவலையளவான தேவர்களில் ஒருவரையும் தனக்கு உபமானமாகச் சொல்லத்தக்கவனல்லன், [ஆமென்றுரைக்கின்ஆமேயாம்] * ஸமுத்ர இவ காம்பீர்யே என்றும்,-ஸோமவத் ப்ரியதர்சநர் . என்றும் . சந்த்ரைக்காந்தாநநம் ராமம் என்றும் * கை வண்ணம் தாமரை வாய்கமலம்போலும் கண்ணிணையு மரவிந்தம் அடியுமஃதே என்றும் உபமானங்களிட்டுச் சொல்லக்கூடிய நிலைமையையும் தாங்கி நிற்பன்.-(இன்றேயென்னீன்இன்றேயாம்] கடவுள் இல்லை யென்பார்க்கு இல்லையாகவே யிருப்பன். உலகில் ஒரு வஸ்துவை மெடுத்து இஃது இல்லை என்னும்போதைக்கு இங்கில்லை. இப்போதில்லை என்றதாகுமேயெழிய அடியோடில்லை என்றதாகாதாதலால் இல்லையென்பதும் உண்மையையே ஸாதத்துத் தருமென்கிற மருமமறியாதார் ஈச்வரனில்லையென்று சொன்னால் இல்லையென்கற சொல்லுக்கு இலக்காயிருந்து கொண்டுஉளனேயாவன்.[ உளதென்றுரைதின் உளதேயாம்] ‘ஈச்வர: அஸ்தி என்றால் எப்படி அவனுடைய உண்மை தேறுகின்றதோ அப்படியே ‘+ச்வர நாஸ்தி என்றாலும் அஸ்தித்வமேதேறிநிற்கும் என்று இதனால்காட்டினபடி. *உளனெனிலுளன் அவனுருவமிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவமில்ருவுகள் என்கிற திருவாய்மொழிப்பாசுரத்தின் பொருளை வியாக்கியானங்கள் கொண்டு உணர்க.
இப்படி மூன்றடிகளையிட்ட கம்பர் நான்காமடியை (நன்றேநம்பி குடிவாழ்க்கை நமக்கிங்கென்னோ பிழைப்பம்மா] என்றீட்டார். * கோணைபெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே என்ற திருவாய்மொழியின் படி நிலையிடவொண்ணத்தான பகவானுடைய தன்மையை மாஞனிகளறிந்து உய்யலாமேயன்றிப் புல்லறிவாளர்களான நாமறிந்து பிழைக்கவழ் ஏது? என்பதாக ஒருபொருள். பிழைப்பு என்பதற்கு பிழைபடுதல் என்பதும் பொருளாதலால் எப்படிச் சொன்னாலும் பிழையாகாது என்பதும் கருத்தாகும் இத்தால் “பூம பாதா வந்த்யா” (என்தாய் மலடி) என்றாற்போன்ற வார்த்தைகளையும் சொல்லி விடலாமென்றதாக ஆகாது. ஸப்தபங்கீ போன்ற வ்யவஹாரங்களையும் செய்துவிடலா மென்றதாக ஆகாது. சாஸ்த்ரார்த்த தத்துவத்தை உள்ளபடி யறிந்தவர்கள் எப்படிச் சொன்னாலும் பொருந்த வைக்க முடியும் என்பது கருத்து. சித்தும் அசித்தும் ஈச்வரனுமாகிய மூன்று தத்துவங்கள் யதார்த்தமாக வுணடென்கிற உணர்ச்சியில் கோளாறு இல்லா தவாகள் ‘ஒன்றே தத்துவம்’ என்றாலும் பிரமாதமொன்றுமில்லை; ஆனால் பல தத்துவங்களுண்டென்கிற உண்மையை மறுக்கப் புகுந்தால் பங்கமடைநந்த தீருவர்கள். *ஒட்டுரைத்திவ்வுலகுன்னைப் புழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றேகாட்டுமால் பரஞ்சோதி! என்ற திருவாய்மா யின்படி ‘எம்பெருமான் ஒத்தாரும்மிக்காருமில்லாதவன் என்கிற திடமான ஞானமுடையார் அவனுக்குச் சில உபமானங்களையிட்டுப் பேசினாலும் ரமாதமொன்றுமில்லை. எம்பெருமான் குணவிக்ரஹ விபூதியுக்தனாய் எஞ்ஞான்று மெங்கு மொழிவற நறைந்து நிற்கும் புருஷோத்தமன் என்ற திடமான பிரத்யய முள்ளவர்கள் ஆணல்லன் பெண்ணல்லனித்யாதிசொல்லிவிட்டாலும் ப்ரமாதமில்லை- என்பது பரமதாற்பரியம்.
பத்தியுழவன் என்று திருமழிசைப்பிரானும், * தம் த்வாம் ேமக்ரு வலம் ஹலதரம் ராங்கேச ! பக்தா ஸ்மஹே என்று பட்டரும், + ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வே நிர்ப்பரம், ஸ்வதத்தஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந்ந்யஸ்யதி மாம் ஸ்வயம்-என்று நிகமாந்த மஹா தேசிகனும் ஒரு மிடறாக அருளிச் செய்தவற்றை குருமுகமாகக் கேட்டுணர்ந்தவர்கள் ‘அவனை நாமே பற்றுகிறோமா?- கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்த்வாத் . என்சிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் ப்ராமாணிகமே யாகிலும் இது பராதீனமுமாய் அல்பவிஷயமுமாய் ப்ரதிஹதி யோக்யமுமாயிருக்கும். ஆகையால் இவன்தான் உபாயாநுஷ்டானம் பண்ணிற்றும் • வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாஷமடியாக வருகையால் அவனாலே ப்ரேரிதனாய், அவன் ஸஹகரியாத போது நீட்ட முடக்க மாட்டாதே அவன் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு அவன் காட்டின வுபாயத்தை அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்கு சாதகம்போலே அண்ணாந்திருக்கிற விவனை ஸ்வாதீத ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வ முடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸ்த்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுஷுவுக்கு உசிதமன்று… என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே வென்றும் இசைவித்தென்னையுன் தாளிணைக் கீழிருத்து யம்மானே யென்றுஞ் சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜமாத்ரத்கை அவனோடொக்க உபாயமாகவெண்ணுகை உசிதமன்றென்று ஏசுசப்தத்துக்கு தாத்பர்யம்” என்றுள்ள திவ்யஸுக்தி ஸ தாசீகரங்களை நிதியாகக் கொண்டு அனுபவிப்பார்க்கு ஸ்வீகாரத்தில் காலுஷ்ய லேசமும்கிடக்க விரகில்லையென்று தலைக்கட்டி நிற்போம்.
ஸ்ரீ ராமாநுஜன் 275.-1971 ஆகஸ்டும்” வெளியீடு-விரோதிகிருத்வ ஆடிமீ
(எண்ணருஞ் சீர்ப்பேராயிரமும் பிதற்றி] குணகதநம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ ஸஹஸ்ரநாம் முண்டிறே; அப்படி குணஹா நிக்கும் ஒரு ஸ்ரீஸஹஸ்ர நாமம் பண்ணுகிறேனென்கிறாள்.”இதுவாயிற்று வியாக்கியான ஸ்ரீஸக்தி.-“என்னிலைமை யெல்லாம் அறிவித்தாலெம்பெருமான், தன்னருளுமாகமும் தாரானேல், தன்னைநான் மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும், தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும், கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன்னிலைமை யெல்லாமறிவிப்பன்” என்று பீடிகையிட்டு அவனுடைய குணக்கேடுகளை ஒவ்வொன்றாகப் பேசத்தொடங்கி, நவநீத சோரன் ஆய்ச்சியர் தம்பினால்கட்டுண்டு அழுது கிடந்தவன்,ஆநிரைமேய்த்தவன் தூதுசென்றவன் குடக்கூத்தாடினவன் ஸ்த்ரீவதம் செய்தவன் இத்யாதிகளைப் பேசி முடித்தார். ஆண்டாள்”கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்.பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக்கொலோ! “ என்றாள். கூரத்தாழ்வான் கோபாலநாதி யதிதம் பவதீயகர்மேதி ஆர்த்ரீகரோதி விதுஷாம் ஹ்ருதயம் ததேதத் ‘ என்றும், தூர்த்தாயிதம் தவ ஹி யத் சில ராஸ கோஷ்ட்யாம் தத்கீர்த்தநம் பரமபாவநம் ஆமதந்தி* என்றுமருளிச் செய்தார். குணவித்தர்கள் நினைந்து நைந்து உகந்துருகும்படியான சேஷ்டிதங்களைக் கூறும் திருநாமங்களே அவனுடைய குணக் கேடுகளைத் தெரிவிக்கவல்ல திருநாமங்க ளென்றதாயிற்று. ஆகவே எம்பெருமானைக்குறித்து * கடியன் கொடியன் நெடியமால்” என்றாப்போலே எது சொன்னாலும் துதியிலேதான் பர்யவஸித்து நிற்குமென்றதாயிற்று. நம்மாழ்வார் திருவாய்மொழியில் ‘ மின்ளிடை மடவார் பதிகத்தில் ப்ரணய ரோஷ பரீவாணமாக ஒரு நான்று தடி பிணக்கே” இத்யாதியான திரஸ்கார மொழிகளை அபரிமிதமாகச் சொலலிவிட்டு நிகமனப் பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை” என்று இவையும் தோத்திரமாகவே தலைக் கட்டும் படியைத் தெரிவித் தருளினாராயிற்று. அன்புடையார் அவனை நோக்கிச் சொல்லுவதெல்லாம் தோத்திரமே யென்னத் தட்டில்லை.
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும், வினைகொள் சீர்பாடிலும்
வேம் எனதாருயிர் ” என்பது. எம்பெருமானுடைய திருக்குணங்களை நினைக்கப்
புக்காலும் சொல்லப்புக்காலும் தமக்கு விலக்ஷணமான விக்ருதி விளைகின்றதென்
பதை விலணமாகவருளிச்செய்கிறார். இந்த திவ்யஸுக்தியைச் சுக்கான் பரல்
போன்றநெஞ்சுடைய நாம் எத்தனை தடவை சொன்னாலும் நமக்கு ஒருவிதமான
விக்குதியும் விளைகின்றதில்லை.
கீதையில் – ஜந்ம கர்ம ச மே திவ்யம்-[மே திவ்யம்] -க்ருஷ்ணத்ருஷ்ணாதத்வமென்று பேர்படைத்த நம்மாழ்வாரும் “அதுவிதுவுது என்ன லாவனவல்லஎன்னையுன் செய்கை நைவிக்கும்” என்கிறார். கூரத்தாழ்வானும் இங்கிதம் நிமி தஞ்ச தாவகம் ரம்யமத்புதம் அதிப்ரியங்கரம் * என்கிறார்.
ஸ்ரீ ராமாநுஜன் 276-1971 ஸெப்டம்பர்மீ” வெளியீடு-விரோதிகிருத் ஆவணிமீ|
நம் ஆசாரியர்கள் உண்மையாகவே கடுகிலே மலையை அடைத்து வைப்பது போலவும் திவலை யொன்றிலே கடலை யடைத்து வைப்பது போலவும் ப்ரணவத்துக்குள்ளே மலை போலும் கடல்போலுமுள்ள அர்த்த விசேஷங்களை அடைத்து வைத்திருக்கையாலே அவற்றுள் ஒன்றைச் சொல்ல விரும்பி “‘பிந்தௌ ஸிந்து: ” என மகுடமிட்டேன்.-திவலையில் கடலைக் கேளுங்கள் என்றபடி.- அகார உகார மகாரங்களின் கூட்டரவாகவன்றோ ப்ரணவமிருப்பது. அதில் அகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன்; அதற்கு ப்ரக்ருதி சக்தியென்றும் தாது சக்தி யென்றும் இரண்டுண்டே;ப்ரக்ருதி சக்தியினால் பரம புருஷனுடைய ஸகல ஜகத் காரணத்வமும்,தாது சக்தியினால் அவனுடைய ஸகல ஜகத் ரக்ஷகத்வமும் சொல்லப்படுவதாக ஆசாரியர்களின் நிரூபணமாகையாலே ‘ஜந்மாத்யஸ்ய யத:”“ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞாத்ருஷ்டாந்தாநுபரோதாத்” என்கிற ப்ரஹ்ம ஸூத்ரங்களிரண்டையுங் கொண்டு காரணத்வ விவரணமும். லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ரு கேசோ தேவ்யா காருண்ய ரூபயா, ரக்ஷகஸ் ஸர்வஸித்தாந்தே வேதாந் தேபி ச கீயதே .”” ந ஹிபால நஸா ர்த்த்யம் ருதே ஸர்வேவரம் ஹரிம்” என்னுமிரண்டு சுலோகங்களைக் கொண்டு ரக்ஷகத்வ விவரணமும் இரண்டு மணி காலம் செய்தேன் . ஸர்வமி தமஸ்மாகம் ஆபூர்வச்ரவணம்” என்று சொல்லி அபிநந்தித்தார்கள்.-கண்ணுக்குத்தெரியாத வதனை ஆகாசமாகவைத்து அதன் பொருளைக் கடலாகவைத்து ‘யஸ்யாஸ்மிநன் தமந்தரேமி” ” யோஹமஸ்மி ஸ ஸந்யஜே “ என்கிற வேத வாக்யங்களைக்கொண்டு சேஷத்வத்தைக் கடல் வெள்ளமாகவே விவரித்தேன்
வணங்கலிலரக்கனை நோக்கித் திருவடிசொன்னவார்த்தைகளுள் இரண்டு
வார்த்தைகள் பொன்னுலகையும் புவனி முழுவதையும் விலையாகக்கொள்ளுமவை.
“தேவாச்ச தைத்யாச்ச நிசாசரேந்த்ர ! கந்தாவ வித்யாதரநாகயக்ஷா:,
ராமஸ்ய லோகத்ாயநாயகஸ்ய ஸ்தாதும் ந சக்தாஸ் ஸமரேஷு ஸர்வே.”-என்று முன்னம் சொல்லி, பின்னை
“ப்ரஹ்மாஸ்வயம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோவா,
இந்த்ரோமஹேந்த்ரஸ் ஸுரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம்”
என்றார். முந்தின ச்லோகத்தில் ‘ஸ்தாதும் ந சக்தாஸ் ஸமரேஷு ஸர்வே”-என்றும், பிந்தின ச்லோகத்தில் “த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்” என்றும் சொன்னதின் இன்சுவைப் பொருளை நமது ஸ்ரீராமாயண ரவசனங் கேட்டார் வாய்க் கேட்டுணர்வது.
”ஸ்ரியம் ப்ரபத்ய தத்ஸந்நிதௌ மூலமந்த்ரேண ஸ்வரூபாநுரூப-புருஷார்த்த ப்ரார்த்தநம் ததுபாயப்ரார்த்தநாபர்யந்தம் கருத்வா“-பெரிய பிராட்டியாரைப் பணிந்து அவள் பக்கலிலே பகவத் கைங்கர்யமாகிற ஸ்வரூபாநுரூப புருஷார்த்தத்தையும், அதற்கு உபாயமான தச் சரணாகதி நிஷ்பத்தியையும் ப்ரார்த்தித்து-உபாயப்ரார்த்தநா‘ என்றிருக்கிறதே யொழிய உபாயத்வ ப்ரார்த்தநா ‘ என்றில்லை.
நம்மாழ்வார் (பெரியதிருவந்தாதியில் சோம்பாது இப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா !என்கிறார். அதை மொழிபெயர்த்தருளும் பட்டர் * நிஸ்தந்த்ராளோஸ் தவ நியமத:
இத்யாதி யருளிச் செய்கிறார்.-
பத்மே த்வநயநே ஸ்மராமி ஸததம் பாவே பவத்குந்தலே நீலே முஹ்யதி கிம்
கரோமி மஹிதை. கரீதோஸ்மி தேவிப்ரமை ..” இத்யாதியான அந்த ச்லோகம் கவியின்
சமத்காராதி சயம் விளங்க ன்றது. கண்ணன் ரரதையோடு கூட சயனித்துக் கொண்டிருக்
கையில்ஸ்ரீபூ லாதேவிகளை நினைத்து வாய்வெருவுகிறான் ; பத்மே!- ஸ்தேவியே! தவ நயநேஸ்மராமி— உனது கண்ணழகையே நினைந்துநைகின்றேன். நீலே – நீளாதேவியே!, மம பாவ.ஸததம் பவத் குந்தலே முஹ்யதி, கிம் கரோமி – என் சிந்தனையெல்லாம் எப்பொதும் உன் கூந்ததலழகில் மூண்டு கிடக்கிறது, என் செய்வேன்? ஹே மஹி– அம்மா பூதேவியே!-தை:தே விப்ரமை: க்ரீதோஸ்மி- விலக்ஷணமான உனது விலாஸ சேஷ்டிதங்களுக்குத்தோற்றிருக்கிறேன்- என்றானாம் கண்ணன். இதுகேட்ட ராதை ப்ரணயரோஷம் மேலிட்டுஎன்பக்கத்திலிருந்துகொண்டே இப்படி அ யவதூகதாப்ரஸங்கம் பண்ணுகிறாயே! உன்னைஎன்னசெய்கிறேன்பார்- என்று வெருட்டினாளாம். உடனே கண்ணன்,ராதே! ஏன்வீணாக ப்ரமிக்கிறாய்? அந்யவதூப்ரஸங்க கந்தமுங்கிடையாது; உன்னைப் பற்றியேதான் வாய்வெருவுகின்றேனென்று சொல்லி அந்த வாக்யங்களைத் தான்யாக்கியானித்தானாம்.(எங்ஙனேயென்னில் 😉 ஹேராதே! த்வ நயநே பத்மே ஸ்மராமி – உன்கண்களைத் தாமரையாகவே நினைக்கிறேன் ; ஹேராதே! ஸததம் மேபாவ: நீலே பவ குந்தலே முஹ்ய – எப்போதும் எனது சிந்தனை உனது கரிய கூந்தலிலேயே மோஹங்கொண்டிருக்கிறது. ஹேராதே!, மஹிதை: தே விப்ரமை: க்ரீதோஸ்மி- மிகச்சிறந்த உனது விப்ரமங்களுக்குத் தோற்றிருக்கின்றேன். என்று இங்ஙனே யோஜித்து உரைசெய்து அவளுடைய ரோஷத்தைஆற்றிவிட்டான். இப்போது, பத்மே நீலே மஹி என்பவை விளிச்சொற்களல்ல. ராதையின் கருத்துப்படி விப்ரமங்கள் பூதேவியினுடையவையேயன்றி நீலாதேவியினுடையவையல்ல . கண்ணன் யோஜித்தபடி ராதையினுடையவையாயின.
“சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்யகவி:” என்ற எறும்பியப் பாவின் ஸ்ரீஸக்கிப்படியும், “தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்,பாவிற் சிறந்த திருவாய்மொழி பகர்பண்டிதனே” என்ற கம்பர் வாக்குப்படியும், மற்றும் ஸ்ரீமதுர கவிகள் ஸ்ரீமந்நாத முனிகள் போல்வாருடைய ஸித்தாந்தப்படியும் நம்மாழ்வார்க்கு மேற் பட்ட பகவத் பக்தரில்லாமையாலே அவருடைய திருநாமத்தை எம்பெருமானுடைய திருவடி
நிலைக்கு மருமமறிந்து மஹாசாரியர்கள்நாமறியாத காலத்தில் இட்டிருக்கிறார்கள்.-‘இருத்தும் வியந்தென்னைத் தன் பொன்னடிக் கீழென்று, அருத்தித்தெளைத்தோர் பல நாளழைத்தேற்கு என்றன் கருத்தையுற வீற்றி ருந்தான்” என்ற பாசுரம் பவிஷ்யத்ஸு சகமென்பர்பெரியோர். ஆழ்வார் எம்பெருமானை நோக்கி “பிரானே! என்னை உன் திருவடிக்கீழ் (பிரியா நிலையாக) வைத்துக்கொள்ளவேணு”மென்று நெடுநாள் பிரார்த்தித்ததாகவும் எம்பெருமான் அப்படியே தலைக்காட்டி வைத்ததாகவும் இதில் முத்திரையிட்டு வைக்கப்பட்டது.
நம்முடைய பூர்வாசார்யார்களின் கோஷ்டியில் திவ்யப்ரபந்தங்களைப் பற்றி மூவகை
யான நிர்வாஹங்களைக் காண்கிறோம் 1. வேதஸாம்யம்’ 2. வேதோபப்ரீம்ஹணஸாம்யம்.-3-வேதப்ராதுர்ப்பாவ விசேஷாத்மகத்வம் – என்பனவாம் அந்த நிர்வாணங்கள். ஆசார்ய ஹ்ருதய திவ்யசாஸ்த்ரத்தில் (89) எவ்வுலகத் தெவ்வெ வையுமென்கையாலே வேதம் பஹு விதம்” என்கிற சூரணைக்கு அவதாரிகையிட்டருளுகிற மணவாளமாமுனிகள்- இனிமேல் சந்தங்களாயிரமென்று திருவாய்மொழிக்குச் சொன்ன வேதத்வத்தை ஸாதிக்கக் கோலி ப்ரதமம் ஏவம்விதமா யிருப்பதொரு வேதமுண்டோ வென்கிற சங்கைக்குப் பரிஹாரம் பண்ணுகிறார்” என்றருளிச் செய்ததையும்; மேலே (54.)” அன்றிக்கே ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூ போக்தி தெரியச் சொன்ன வேதோப ர்ம் ஹணமென்பர்கள்” என்ற சூர்ணையின் அவதாரிகை-“ஆக விப்படி இப் ப்ரபந்த சதுஷ்டயத்துக்கும் வேத ஸாம்யத்தை ஸாதித்தார் கீழ்; இங்ஙனன்றிக்கே இதுதனக்கு வேதோப ப்ர்ம்ஹண ஸாம்யமும் சொல்லுவர்களென்கிறார் மேல்” என்றருளிச் செய்ததையும் ; மேலே(70) ” அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம் இத்யாதி சூரணையின் அவதாரிகையில்- ஆக இதுக்குக் கீழ் திவ்யப்ரபந்தத்துக்கு வேத ஸாம்யமும் ததுபப்ம்ஹணஸாம்பமும் உண்டேன்னுமிடத்தை யருளிச்செய்தார்; இங்ஙனன்றிக்கே வேதாவிர்ப்பாவ விசேஷமாய் இவ்வாழ்வாராலே நிர்மிதமாக ப்ரஸித்தமாயிருப்பதொன்றென்று இதுக்கு இன்னமூம் ஒரு யோஜநை பண்ணுகிறார்” என்றருளிச் செய்ததையும் ப்ரமாண சரணர்கள் குறிக் கொள்ள வேணும்.
இவற்றினிடையில் உபப்ர்ம் ஹண ஸாம்ய மருளிச்செய்தபோது தோன்றினவொரு சங்கைக்குப் பரிஹாரமாக (68) “பாரத கீதைகளின் வேதோப நிஷத்த்வம் போலே
இதுவும் வ்யாக்க்யை யானாலும் வேதரஹஸ்யமாம்” என்றருளிச் செய்தசூர்ணையும் நோக்கத் தக்கது. இதற்கு மாமுனிகளிட்டருளின வியாக்கியானம்- “ஆனால் இத்தை உபப்ம்ஹண ஸமமாகச் சொன்ன பக்ஷத்தில் வேதவ்யாக்ை யாமதொழிய வேத ரூபமிகம் க்ருதம் த்ராவிட வேத க்தை:என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம் இதுக்குக் கூடுமோவென்ன அருளிச் செய்கிறார் (பாரத கீதைகளின்) இத்யாதியில். அதாவது வேதோப ப்ர்ம்ஹணமான மஹாபாரதமும் அதில் ஸாரமான ஸ்ரீகீதையும் வதார்அத்யாப யாமாஸ மஹாபாரத பஞ்ச மாந் என்றும் பகவத் கீதாஸுபநிஷத்ஸ என்றும் சொல்லுகிறபடியே வேதமும் உப நிஷத்துமாகிறாப்போலே இது வேதவ்யாக்கியையான உபதர்ம் ணமானாலும் வேதரஹஸ்யமுமாம் வேதரஹஸ்யமாவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத்து; கீழச் சாந்தோக்ய ஸமமாக விறேசொல்லிற்று; ஆகையால் இந்த பக்ஷத்திலும் இதின் த்ராவிட வேதத்வஹாநி வாராதென்று கருத்து” என்பதாம்.
த்ரமிடோப நிஷத் தென்றே வ்யபதேசித்தருளியிருக்கிறபடியை நோக்குமின். “த்ரமிடோபநிஷத் த்ரஷ்டு ரஸ்ய மாணாதம்யமத்புதம்” என்பதும் நிகமாந்த குரு க்தி ரத்னம். த்ரமிடோபநிஷத்கரத்து: என்றே தரமிடோபநிஷத் ஸ்ரஷ்டு: என்றோ சொல்லிற்றிலர் த்ரஷ்டு,’ என் று சிறப்பாகஸாதித்தது -பட்டர் தருஷிம் ஜூஷாமஸே, என்கிற லோகத்தில் “ஸஹஸ்ரசாகாம். ய : அகார் த்” என்றோ அஸ்ரா த்’ என்றோ அருளிசெய்யாமல் “ஸஹஸ்ர சாகாம் தராவி ம் ப்ரஹ்மஸம் தாம் அத்ரா த்” என்றருளிச் செய்திருக்கை யாலே அதளை அடியொற்றியே ” ரமிடோப நிஷத்த்ரஷ்டு என்று நிகமாந்த மஹா குருதாமும் பணித்தபடி.
————-
ஸ்ரீராமாநுஜன் 279-விரோதி ருத மார்கழிம்1-1-1972-
நீராட என்னும் ஸ்ரீஸூக்தியாலே * கரசரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹரிஸரஸி விகா ஹனம் தெரிவிக்கப்படுவதுபோலே,(திருவிருத்தத்தில்) காலை நன்ஞானத்துறை படிந்தாடிக் கண்போது செய்து* என்று ஆழ்வாரருளிச்செய்தபடியே ஞானத் துறையான ஸதாசார்யத்துறையில் படிந்து குடைந்தாடுவதும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கும் அநுகுணமாகவேயன்றோ பதப்ரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.
வடிவழகிய நம்பிதாஸரென்கிற புராதன பக்தமகாகவி தாம் செய்யுள் மாலையாகப்பாடிய எம்பெருமானார் வைபவத்தில்,சுலோகரூபமாக நாம்அநுஸந்தித்து வரும் ஆறுவார்த்தைகளைச் செய்யுளாக்கியுள்ளார். (இரண்டுசெய்யுள் வருமாறு-)
“செப்புகின்ற பரதத்வம்யானேயென்னச் செப்புதி,வே
றொப்பிலதாய்! தரிசனமும் பேதமென்றே யுரைத்திடுக
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
தப்பிலாத வுபாயமதும் ப்ரபத்தியென்றே சாற்றிடுக.
இந்தச்சரீர அவசானந்தன்னிலிசையும் மோக்கமது
அந்தமில்லாக் குணத்தினனுக் காசாரியனும் பெரியநம்பி
சிந்தைதன்னு ளிவையெல்லாம் சிந்தித்திருந்தா னிளையாழ்வான்
முந்தி யிவை நீ மொழியென்று மொழிந்துநின்றா னருளாளன்.”
நம்மாழ்வார் ஆசார்யனை தஞ்சமாகிய தந்தை* [திருவாய்மொழி3-6-9] என்கிற சொல்லால் குறிப்பிட்டனர். 1. தந்தை 2. ஆகிய தந்தை, 3, தஞ்சமாகிய தந்தை என்று மூவகைப் படுவர்கள் பிதாக்கள். 1. சரீரோத்பத்திக்கு மாத்திரம் ஹேதுவாயிருந்து *ஸ பித்ராச
பரித்யக்க: * (ஸ்ரீ ராமா-ஸுந்] இத்யாதிப்படியே ஆபத் காலங்களிலே கைவிடுகின்ற பிதா வெறும்தந்தை. 2.உலகுக்கெல்லாம் தந்தை யென்று பேர்படைத்து ஆபத்துக்களிலும் ரக்ஷிக்கு வனானஸர்வேச்வரன் ‘ஆகிய தந்தை ‘ எனத்தகுவன். 3. அவனுங்கூட *ஸம்ஸாரபந்தஸ்திதிமோ ஹேது3என்கிறபடியே ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருப்பன் ; அப்படியன்றியே ஸ்வரூபத்தையுண்டாக்குமவனாய் ஒரு தசையிலும் கைவிடாதே. ஹிதை யாய் உஜ்ஜீவனத்திலேயே ஊன்றிப் போருமவனா யிருந்துகொண்டு மோசைகஹேதுவாய் ஸர்வாத்மநா சரண்யனாபிருக்கு மாசார்யன் தஞ்சமாகிய தந்தை ‘ எனத்த வன். ஆக. ஜீவாத்மாவாகிற பெண்குழந்தைக்கு வித்யை தாயென்றும், ஆசார்யன் தந்தை யென்றும் தேறிற்று.–எனக்கென்றும் தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம் (பெரிய திருமொழி 6-10-6)என்றும், “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே* என்றும் சொல்லுகிறபடியே தேனும் பாலுமமுதும் போல பரம போக்யமான பகவந்நாமங்களையும் பகவத் விஷயத் தையுமிட்டு ஆசார்ய பிதாவால் இக்குழந்தை வளர்க்கப்படுகிறது. ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்.
[பெரியாழ்வார் திருமொழி. 38-4] என்கிற பாசுரத்தையும் சேர்த்து நோக்கினால் இக்குழந்தையானது அநந்யார்ஹ சேஷத்வாதிகளாலே ஸ்ரீ மஹாலக்ஷ்மியோ டொக்க வளர்க்கப்படுகிற தென்னுமிடமும் திரு மாலாகிற நாயகனால் கைக்கொள்ளப்படுகிற தென்னுமிடமும் தெரியவரும்,
*கந்யா வரயதே ரூபம் மாதா வித்தம் ச்ருதம் பிதா, பாந்தவா: குலமிச்சந்தி மருஷ்டாந்நமிதரே ஜநா * என்று சொல்லு கிறபடியே, பெண்ணானவள் அழகைப்பார்ப்பள் ; பெண்ணைப்பெற்றவள் ஐச்வர்யத்தை விரும்புவள் ; பிதாவானவர் ஜ்ஞாநஸம்பத்தியை நோக்குவர் ; உற்றாருறவினர் தாங்கள் கலந்து பரிமாறுகைக்குரிய குலத்தை யபேக்ஷிப்பர்கள் ; மற்றைப்படி வழிப்போக்கர்களா யிருப்பவர்கள் வயிறார நல்லுணவு கிடைப்பதை நோக்கியிருப்பர்கள். அழகும் செல்வமும் அறிவும் குலமுமுணவுமெல்லாம் ஒருங்கே ஒன்று சோப்பெற்ற வான் உலகில் வாய்ப்பது அரிதே. ஏதோ ஒன்றிரண்டு நலம் ஒன்று சேரும். இவை யெல்லாம் பரிபூர்த்தியாக ஒன்றுசேர்ந்த விடம் எம்பெருமானேயாம். அழகைப்பற்றிச் சொல்லில், *எழிலுடையவம்மனைமீர்! என்னரங்கத்தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழிலெழுகமலப்பூவழகர் * [நாச்சியார் திருமொழி 11-2] என்னும்படி யிருப்பன். செல்வத்தைப்பற்றிச் சொல்லில் பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும். அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான், செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் [ 10-3.] என்னும்படியே உபயவிபூதிநாயகத்வமாகிற செல்வம் அநங்யஸாமாந்யமானது. கல்விச் செல்வத்தைப் பற்றிச் சொல்லில் கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள்தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தவராய், இவர் வாயில் நல்வேத மோதும் வேதியர் வானவராவர் தோழீ (பெரிய திருமொழி 9.2-1]என்னும்படி யிருப்பவராகை யாலே அதிலும் உயர்வறவுயர்ந்தவர். இனி குலத்தைப்பற்றிச் சொல்லிலோ. குலந்தரும் … நாராயணாவென்னும் நாமம்* (பெரிய திருமொழி 1-1-9) என்று தன் பெயரைச் சொன்னவர்களுக்கெல்லாம் மாசில் குடிப்பிறப்பைத் தருமவன் ஸ்வயம் ஸத்குலப் ஸூத னென்பது சொல்லவேணுமோ ? இனிருஷ்டான்னத்தில்தான குறையுண்டோ? ணைநாணிலோவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே! ஓவாத வூணாக வுண்* [பெரிய திருவந்தாதி] உண்டு களித் தேற்கு உம்பரென்குறை (திருவாய்மொழி 10-8- ) என்னும்படியாக கல்யாணகுண ம்ருஷ்டான்னம் அபரிமிதம். ஆகவிப்படி ஒன்றிலும் குறையில்லாத வரன் ஸர்வேச்சனேயாகையாலே அந்த வரனுக்கு வாழ்க்கைப்படுவதற்காகவே இந்த ஜீவாத்மக் குழந்தை வளர்க்கப்பட்டுவருகிறது. ஆன பற்றியே இக் குழந்தையை நோக்கிச் சொல்லுமிடத்து பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல் பிறந்திட்டாள் !* [திருவாய்மொழி 6-5-10] என்றும், காவியங்கண்ணி யெண்ணில் கடிமாமலர்ப் பாவை யொப்பாள்* (பெரிய திருமொழி 3-7-9) என்றும் சொல்லப்படுகிறது.
வானிடை வாழு மவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தவவி, கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, ஊனிடையாழி சங்குத்தமற்கென்று உன்னித்தெழுந்த வென்தட முலைகள், மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் (நாச்சியார் திருமொழி 1-5.) என்றும்,
*அங்கைத்தலத்திடை யாழிகொண்டானவன் முகத்தன்றி விழியேனென்று, செங்கச்சுக்கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடவரைக் காணில் நாணுங் கொங்கைத்தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா ( ை12-4) என்றும், “அன்றிப்பின் மற்றொருவற்கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற்கல்லால், கொற்றவனுக்கிவளா மென்றெண்ணிக் கொடு
மின்கள் கொடீராகில் கோழம்பமே. (பெரியாழ்வார் திருமொழி 3.4-5)-*பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் (நாராயணாநுவாகே) என்றும், *கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸு வே யம் மநஸ்வி * (ஸ்ரீ ராமா. ஸூர்.38-58) என்றும், பணவாளரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர் (நாச்சியார் திரு மொழி 10-6.) என்றும் அந்தப் பரமபுருஷரை விச்வபதியென்றும் லோகபர்த்தா வென்றும் மணவாளப் பிள்ளை யென்றும் தெரிவித்திருக்கவில்லையா ?-“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து? (பெரியாழ்வார் 4-2-3) என்கிற படியே ஆசாரியர் பரமாத்மாவினுடைய பிரதிநிதியாகையாலே “எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கல த்ரம் போலே திருமந்திரம் (முமுக்ஷப்படி-113) என்று திருமங்கலியமாகிய திருமந்த்ரத் தை (அல்லது) திருமந்த்ரமாகிற திருமங்கலியத்தைக் குழந்தைக்குக் கண்டஸ்தமாக்கினார். பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா என்று பாணிக்ரஹண ப்ரகரணம் வந்தவாறே பறவை யேறு பரம்புருடா !! நீயென்னைக் கைக்கொண்டபின் (பெரியாழ்வார் 5-4-2) என்னும்படியாகப் பெரியதிருவடியை மேற்கொண்டு பரம புருஷன் வந்து கைக்கொண்டு பாணிக்ரஹண மங்கலத்தை நிறைவேற்றினானாயிற்று.-கணவனைக் கிட்டிப் பரிமாறப் பெருமைக்கு வருந்தியிருக்கும் குலமகள் போல, இவளும்-கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தையமுதை நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருட ம் பிலிட்டு (திருவாய் 5-1-5) என்று, சேர்ந்து பரிமாற வொண்ணாதபடி அனுபவவிரோதியான சரீரம் இடைச் சுவராயிருக்கிறபடிக்கு வருந்தித் துடித்துக் கிடப்பள்.-இவளும் மறந்தும் புறந்தொழா மாந்தர்* (நான்முகன் திருவந்தாதி) என்னும்படிக்கு ப்ரதமோதாஹாணமாயிருந்துகொண்டு மற்றோர் தெய்வம் தேறேனுன்னையல்லால் திருவிண்ணகரானே!(பெரிய திரு. 6-3-7) என்றும்,கல்லாதவரிலங்கை கட்டழித்த காகுத்தனல்லா லொரு தெய்வம் யானி
லேன் (நான்முகன்-53) என்றும் தயரதற்கு மகன் தன்னையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே (திருவாய் 3.6-8) என்றும் உன்னித்து மற்றொரு தெய்வந் தொழாளவனை யல்லால் ( ை4-6-10)என்றும், சிலையினாலிங்கை செற்றதேவனே தேவனாவான். (திருமாலை-7 ) என்றும் அண்டர் கோனணியரங்கனென் னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. (அமல-10) என்றும்,விழிக்குங் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோ டென்மனம் பற்றாது (பெரியாழ்5-1-2) என்றுமிப்படிப்பட்ட பாசுரங்களினால் தேவதாந்தரங்களினிடத்தில் வைராக்யங் காட்டிநிற்பள்.
தனது கணவனுடைய பெருமைகளையே சிந்தித்தும் பேசியும் போதுபோக்கும் குலமகள் போல இவளும் குரவையாய்ச்சியரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியது முட்பட மற்றும் பலவும். கேயத் தீங்குழலூதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை யொண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்)கள் மணந்ததும் மற்றும் பலவும், பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்டது முதலியனவும் இரவு நன்பகலும் தவிர்கிலாது சிந்தித்தும் பேசியும் போக்குவள். கணவனிடத்து அன்பு மிக்கஉறவினரிடத்தே அன்பு பூண்டொழுகும் குலமகள்போல இவளும் *மெய்யடியார்கள் ஈட்டங்கண்டிடக்
கூடுமேல் அதுகாணுங் கண்பயனாவதே (பெருமாள் திரு. 2-1) என்றும், நம்பனை நரசிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால், எம்பிரான் தன சின்னங்கள் இவரிவரென்னாசைகள் தீர்வனேன் (பெரியாழ். 4-4-9) என்றும் பாகவத ப்ராவண்யாதிசயத்தைப் பேசியலற்றிக் கொண்டிருப்பள்,
குலமகளானவள் அடிக்கடி கணவன் தன்னிடம் வந்து காதலைப் பெருக்கப் பெறுவதுபோல
இவளும் தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆவாவென்றருள் செய்து அடியேனொடுமானானே (திருவாய் 5-1-9) என்றும், *அந்தாமததன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு(மை2-5-1.) என்றும், வைகுந்தா மணிவண்ணனே என்பொல்லாத் திருக்குறளாவென்னுள் மன்னிவைகும் வைகல்தோறு மமுதாயவானேரே (ஷை 2-6-1.) என்றும்சொல்லும்படி அடிக்கடி எம்பெருமான் வந்து கலக்கப் பெறுவள் ; *ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து ஈரநெல்வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செயுள், பேரமர் காதல் கடல் ரைய புவிளைவித்தகாரமர் மேனி( த 5-3-4) என்னும்படி அவன் வரும்போதெல்லாம் வடிவழகைக்காட்டிக் காதலை வளர்க்கவும்பெறுவள். சில விசேஷ காலங்களில் இவள் புக்ககத்திற்குஞ் சென்று வருவது போல இவளும் *ஒண்
டொடியாள் திருமகளும் நீயுமேநிலாநிற்பக் கண்டசதிர் கண்டு (திருவாய். 4-9-10) என்னும்படி திருநாட்டுச் சதிரையும் காண்பள். கணவனோடு நித்யஸம்ச்லேஷம் வாய்ப்பது என்றைக்கோ வென்று அவள் பாரித்திருப்பதுபோல இவளும் *கூவிக்கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ? x ( ை6-9-9)என்றும் என்றேயென்னை உன்னேரார் கோலத் திருந்தடிக்கீழ் நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்* ( ை8-3-8) என்றும் பாரித்துக்கொண்டே யிருப்பள்.
குலமகள் கணவனோடு நிரந்தரமாகக் கூடப் பெறும் நாள் குறுகக் குறுகக் குதூஹலம் விஞ்சியிருக்குமாபோல, இவளும் *நாமுமக்கறியச் சொன்ன நாள்களும் நணியவான என்னும்படி அந்நாள்ஸமீபித்தவாறே *நானேறப் பெறுகின்றேன் நாகத்தை நகு நெஞ்சே! என்றும் உற்றேனுகந்துபணிசெய்து உனபாதம் பெற்றேன் என்றும் சொல்லிக் குதூஹலம் விஞ்சியிருப்பள். மணமகள்புக்ககத்திற்குப் புறப்படும் போது சிரபரிசயமுள்ளவர்களிடம் சென்று சொல்லிக் கொள்ளுமா போலேஇவளும் [பெரிய திருமொழியில் 10–1. ஒருநல் சுற்றமென்னும் பதிகத்திலே நெருநல் கண்டதுநீர்மலை, இன்று-கண்ண மங்கையுட்காண்டுமே* வேங்கடத்ுச்சியில் கண்டுபோய்-சென்று காண்டும்
தண்காவிலே ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்-காண்டும் நாங்கூரிலே பேரில் வணங்கிப்போய்சென்று வெள்ளறைக்காண்டுமே* நறையூர்க் கண்டு-சென்று காண்டும் மெய்யத்துள்ளே சேறையில் கண்டு போய்-யாம் குடந்தைச் சென்று காண்டுமே அழுந்தையில் கண்டு போய் -சென்று காண்டும் வெஃகாவுளே ன்மாலிருஞ்சோலைத் தொழுது போய் விண்ணகர்க் காண்டுமே* கோட்டியூர்க்கண்டு போய்–சென்று காண்டும் நாவாயுளே என்று சொன்ன கணக்கில பல திருப்பதியெம்பெருமான்கள் பக்கலிலே அநுஜ்ஞை பெற்றுக்கொள்வள். பிறகு புக்ககம் செல்லப் புறப்படுகிறாள்
குலமகள் பிறந்தகத்தில் வாழ்கிறபோது யார் யாருடன் அன்பு பூண்டொ கிக் கலந்து பரி
மாறினாளோ அவர்களையெல்லாம் விட்டு அகலுகிாள் புக்ககம் போகும் போது. முற்றிலும் பைங்கிளியும் பந்து மூசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழுங்கோதை ( பெரிய திருமொழி 3-7.8) என்கிறபடியே அவளும் லீலா விபூதியிலுள்ள லீலாபரிகரங்களை யெல்லாம் விட்டுப் புறப்படுகிறாள். மணமகள் புறப்படும்போது மங்கள வாத்யகோஷம் மங்களாசாஸனம் முதலியன நடைபெறுமாபோலே இவளுக்கும் சூழ் விசும்பணிமுகில் தூரியம் முழக்கின (திருவாய் 10-9.) என்கிறபதிகத்திற்படியே ஸமுத்ர பேரீகீத காஹள சங்க ஆசீஸ் ஸ்துதி கோலாஹலங்கள் விளைகின்றன. வழியில் ஆங்காங்கு பந்துக்களிருந்தால் அவர்கள் சிறப்புகள் செய்யப் பெற்றுச் செல்லுவள் மணமகள்; அப்படியே இவளும் முக்தோர்ச்சிர்திந பூர்வபக்ஷ ஷடுதங் மாஸாப்த வாதாம்சுமத்க்லௌ வித்யுத்வரு ணேந்த்ர தாத்ரு மஹித: என்கிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்திலுள்ளாரால் சிறப்பிக்கப் படுகிறாள்.-மணமகள் கணவனுடைய ஊரெல்லையிலே சென்று சேர்ந்தவாறே ஓரிடத்தில் தங்கி அழுக்கறும்படிநீராடப் பெறுவள் ; அப்படியே இவளும் ஸ்மாந்த ஸிந்த்வாப்லுத : என்கிறபடியே விரஜாநதியிலே குடைந்து நீராடி அழுக்கு அறப்பெறுவள். பிறகு பர்த்தாவின் க்ருஹத்திலிருந்து மணமகளுக்குப் புஷ்ப மாலைகள் கந்த சூர்ணங்கள் பட்டுப் புடவைகள் சிறந்த பூஷணங்கள் கொண்டுவந்து அலங்காரம் செய்யுமா போலே இவளுக்கும் * தம் பஞ்சசதாரி அப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி, சதம் மாலா ஹஸ்தா?-சதமஞ்ஜநஹஸ்தா சதம் சூர்ணஹஸ்தார்; சதம் சதம் வாஸோஹஸ்தா : சதம் பூஷணஹஸ்தா……..தம் ப்ரஹமாலங்காரேண அலங்குர்வந்தி (சாந்தோக்யம்) என்கிறபடியே ஐந்நூறு அப்ஸாஸ் ஸுக்கள் நூறு நூறு பேராய் ஐந்து வகுப்பாகப் புஷ்பமாலாதிகளான ஐவகைச் சிறப்புகளைக் கொணர்ந்து ப்ரஹ்மாலங்காரங்கள் செய்வர்களாயிற்று. பிறகு பர்த்தாவின் க்ருஹத்தில் நுழையுமளவில் லக்ஷ்மீ கல்யாணம் பாடி மங்களாசாஸனம் செய்வதும் மங்கள தீபாதிகளை ஏந்திக்கொண்டு எதிரே வருவதுமாக நிகழும் ;இவளுக்கும் மிக்க வோராயிரத்துள் இவை பத்தும் வல்லாரவரைத் தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வரேழையரே (திருவாய் 7.6-11) என்கிறபடியே அங்குள்ளார் திரள நின்று மங்களை சாஸனம் பணணி சாமரம் பணிதாறுவர்கள். *நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும். மதி முக மடந்தைய ரேந்தினர் வந்தே ( ை10-9-10) என்கிறபடியே மங்களாவஹமான பூர்ணகும்ப தீபாதிகளைத் தரித்துக்கொண்டு எதிர்கொண்டழைப்பு நேரும். இத்தகைய வைபவங்களுடனே மணமகள் பர்த்தாவின் மாளிகையிலே புகுந்து பர்த்தாவோடேயிருக்குமா போலே இவளுக்கும் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே (நாச்சியார். 3-10) என்கிறபடியே வைகுந்தம் புக்கிருந்து முழுவேழுலகுக்கும் நாயகனோடே கூடியிருப்பள்.
ஜீவாத்ம பரமாத்மாக்கள் பரஸ்பரம் கூடின பின்பு இவர்களுடைய பரிமாற்றம் சாஸ்த்ர வேத்யமாயிராநின்றது. பெண் பிள்ளை கணவனுடைய கட்டிலிலே ஏறுமாபோலே ஜீவாத்ம மாதர்க்கும் அங்கு பகவதநுபவத்திற்காகப் பர்யங்காரோஹண முண்டு ; அங்கு ஸர்வாச்சர்யமயமான திவ்ய பர்யங்கத்திலே தமேவம்வித் பாதேந அத்யாரோஹதி என்று பாதபீடத்நிலே அடியிட்டேறுவதாக உபநிஷத்து ஓதுகிறது. மேல் நிகழுமநுபவத்தைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிவிக்க வேண்டியவையுண்டு. பரமாத்மாவை யநுபவிக்க ஜீவாத்மா சொல்லுவதாகவும் ப்ரமாத்மாவை ஜீவாத்மா அநுபவிப்பதாகவும் ஆபாதப்ரதீதியிலே உலகம் நினைக்கிறது. அது தவறு. ஜீவாத்மாவைப் பெறுதற்காகப், பரமாத்மா செய்து போரும் க்ருஷிவிசேஷங்களை நன்கு உணர்ந்தவர்கள் ஜீவாத்மா லாபமே பரமாத்மாவுக்குக் கனத்த பேறு என்பதைத் திடமாகக் கொள்வார்கள். *ஸ மஹாத்மா ஸுதுர்ல ? என்று கீதாசார்யன் நிர்வேதத்தோடு சொல்லுவதை உற்று நோக்கினால் மஹாத்மாவான ஜீவாத்மாவைப் பெறுதற்கு அவன் பலபாடுகள் படுகிறானென்பது நன்கு விளங்கும். ந ச பரம புருஷஸ் ஸத்யஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா கதாசிதாவர்த்த யிஷ்யதி என்று ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவிலுள்ள ஸ்ரீ ஸூக்தியும் இவ்விஷயத்தை வற்புறுத்துகின்றது.
திருமந்த்ரத்திலுள்ள நம: பதமானது அசித்வத் பாரதந்த்ரியத்தைச் சொல்லுகிறதென்று
முமுக்ஷ ப்படியில் அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியர் ( அங்கு. 92.) ‘அதாவது போகதசையில் ஈச்வரன ழிக்கும்போது நோக்கவேணுமென்று அழியா தொழிகை ” என்றொரு சூர்ணையருளிச் செய்கிறார். இதனால் நம: பதார்த்தம் பரமபதத்தில் மிகவும் ஞாபகத்திலிருக்க வேணுமென்று காட்டுகிறார். திரு நாட்டில் போக்தாவான எம்பெருமான் ஜீவாத்மாவோட கலந்து பரிமாறு மளவில் தன் வ்யாமோஹாதி சயத்தாலே தான் தாழ நின்று பரிம்ாறுவனென்றும், அந்கிலையில் ஜீவாத்மாவின் சேஷத்வம் அழிந்து போய்விடுமென்றும், அது அழிந்துபோகாதபடி அதைக் காப்பாற்றிக்கொள்ள வேணுமென்று ஜீவாத்மா நினைத்து அவனுடைய தலைதடுமாறான போகத்திற்கு இடையூறு செய்தானாகில் அது பாரதந்த்ரியத்திற்கு விருத்தமாகுமென்றும், அப்படியாகாமே பாரதந்த்ரியமே ஜீவிக்கும்படி பரமாத்மாவின் யதேஷ்ட போகங் களுக்கு இசைந்திருப்பதுதான் ஸ்வரூபமென்றும் அருளிச் செய்கிற விதனால், திருநாட்டில் எம்பெருமான் இத் தலையை யநுபவிக்கு மநுபவம் வாசாமகோசரமென்று விளங்காநின்றது. இவ் வநுபவத்தினாலுண்டாகு மாநந்தமும் அவனுக்கேயாம். ‘இத்தலையால் அவனுக்கு இவ்வளவு ஆனந்த முண்டாகிறதே! என்று அதை யநுஸந்திப்பதனாலுண்டாகு மானந்தம் இதலையைச் சேர்ந்ததாகும். இது தானும் சைதர்ய ப்யுக்தமாக வந்ததத்தனை.)-ஆக. ஜீவாதமக் குழந்தையின் உத்பத்தி தொடங்கி விவாஹம் நடுவாகப் பரமபோக பர்யந்தமாக நிரூபித்த விதனால் ‘ க்ருதக்ருத்யா ப்ரதீக்ஷந்தே மருத்யும் ப்ரியமிவாதிதிம்” என்றதன் கருத்து விசதீகரிக்கப்பட்டது தவிர, உகாரார்த்தமான அநந்யார்ஹத்வமும் முதலிக்கப்பட்டதாயிற்று.
பெருமாள் திருமொழியில் ஏழாம் பாட்டில் ” இரு முப்பொழுதேத்தி யெல்லையில்லாத் தொன் னெறிக்கண் நிலைநின்ற தொண்டர்” என்று குலசேகராழ்வாரருளிச் செய்திருப்பது பஞ்சகால பராயணர்களான பரமைகாந்திகளை, இப் பாட்டில் ” இரு முப்பொழுது” என்றது பஞ்சகால மென்றபடி; இரண்டும் முன்றுங் கூடினால் ஐந்து; ஆகவே இருமுப்பொழு தேத்துமவர்கள் பஞ்சகால பராயணர்கள்.-ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத காலம், ஸங்கவகாலம் . மத்யாஹ்க காலம் அபராஹ்ககாலம், ஸாயாஹ் காலம் என்று ஐந்தாகப் பகுதது, ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற் நிற்கு முறையே உரியவையென்று வரையறுத்து, அபிகமநம், உபதாகம், இஜ்யா, ஸ்வாத்யாயம்,யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே ( ப்ராத காலம் முதலிய) அந்த ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும்.இரவில் ஆசரிக்க வேண்டு
வதும் யோகா நுஷ்டாநமே.-ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்பட்ட அனுஷ்டானங்கள் ஆறு நாழிகை யவகாசத்தையும் ஆக்ரமிக்கக் கூடியவையல்ல. இடையிடையே ஞான விகாஸத்தைச் செய்து கொண்டுபோக இடையூறொன்று மிராது.
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மது தன:, ஸத்விகஸ் ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக: -என்கிறபடியே நாம் பிறப்பதற்கு முன்னே கருக்குழியிலேயே நம்மைத் திருவுடையராக்குகின்றதன்னோ திருக்கண்ணோக்கம்.-நம்மாழ்வார் திருவாய்மொழி தொடங்கும்போதே துயாறு சுடரடி தொழுதெழு என்மனனே என்று தம்முடைய திருவுள்ளததிற்குத் தேவாதி தேவனது திருவடியையே தஞ்சமாகக் காட்டிக் கொடுத்திருந்தாலும், தமது முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் *பெருங்கேழலார் தம் பெருங்கண்மலர்ப் புண்டரீகம், நம்மேலொருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம், ஒருவர் நம்போல் வருங்கேழ்பவருளரே என்று அப்பெருமானுடைய திருக்கண்ணோக்கமே தமக்கு முந்துற முன்னம் ப்ராப்தமாயிற்றென்றும்,அதுவே தம்முடைய சேமங்களுக்கெல்லாம் மூலகந்த மென்றும் அருளிச் செய்திருக்கக் காண்கிறோம்.ஆண்டாளும் திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல், அங்கணிரண்டுங் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல், எங்கண்மேற்சாபமிழிந்து-என்றருளிச் செய்கிறாள்.
:சபரீம்* என்கிறபடியே பெருமாள் தாமே சென்று விஷயீகரித்த வேடுவிச்சியான வள் (சபரி). சக்ஷஷா தவ ஸௌம்யோ பூதாஸ்மி ரகு ந்தன என்று, தேவரீருடைய அழகிய திருக்கண் பார்வையாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்க ளெல்லாம் போய்ப் பரிசுத்தையானேனென்று திருக்கண்ணோக்கின் பெருமையைத் தெரிவித்தாள்.-பீஷ்மத்ரோணாவதிகாம்ய மாஞ்சைவ மது தன,கிமர்த்தம் புண்டரீகாக்ஷ ! புக்தம் வருஷலபோஜனம்-என்கிறான். இது துரியோதனன் கண்ணனை அதிஷேபிக்கிற ப்ரகாமன்பதில் ஸந்தேஹமில்லை.-அப்படி அதிஷேபிக்கும்போது மூர்க்க!, மூட! ‘ என்றாப்போலே நிந்தோக்திகளை யிட்டுச் சொல்ல வேண்டியிருக்க, ‘புண்டரீகாக்ஷ!’ என்று ஸம்போதித்தி க்கிறான் துர்யோதநன்.-த்விஷதன்னம் ந போக்த பம் த்விஷ தம் நைவ போஜயேத், பாண்டவாங் த்விஷ்ஸேராஜந்மம ட்ராணாஹி பாண்டவா
ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டிக்கும் இராவணனுக்கும் (பஞ்சவடியில் முதன் முதலாக்) ஸம்வாதம் நடக்கு மிடத்து, பிராட்டி தன் வரலாறுகளைக் கூறிவரும்போது மிதிலையில் திருக்கல்யாணமான பிறகு திருவயோத்யையில் பன்னிரண்டாண்டுகள் பேரின்பமாக வஸித்துக்கொண்டிருந்ததைக் கூறும் ஸ்லோகம்*ஸமா த்வாதச தத்ராஸம் ராகவஸ்ய நிவேசநே என்கிற ஆனுபூர்வியாக நம் பூர்வாசார்யர்களால் பல விடங்களில் உதாஹரிக்கப்பட்டிருக்கிறது, இதை பகவத் விஷயாதிகளிற் காணலாம். ஸ்ரீராமாயணப்
பதிப்புகளிலோ வென்னில், இந்த ஆநுபூர்வியில்லாமல் *உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூ.ணாம் நிவேசநே என்றிவ்விதமாகக் காணகிறது. பூர்வாசாரியர்களின் காலத்திற்கு ஸக்கிஹிதரான ஸ்ரீ கோவிந்தராஜரும் பூருவர்கள் கொண்ட பாடத்தையிட்டு வியாக்கியானம் செய்யவில்லை. உஷித்வா இத்யாதியாக மேலே காட்டிய பாடமே அவருடைய வியாக்கியானத்திலு மேறியிருக்கிறது, –ராகவஸ்ய நிவேசநே-என்ற ஸ்தாநத்தில் இஸ்வாகூணாம் நிவேசநே’ என்று வைத்து ”வரீடயா பர்த்ருநாம
அக்ர ணம்” -வெட்கத்தினால் பர்த்தாவின் பெயரைக் கூறவில்லை” என்று மெழுதியுள்ளார் கோவிந்தராஜர். இதற்கடுத்த முன் ஸ்லோகத்தில் “-ஸ்தா நாம்நாஸ்மி பத்ரம்தே ராமபார்யா தவிஜோத்தம்!-என்று ஸ்பஷ்டமாக பர்த்தாவின் நாமக்ாஹணம் செய்யப்பட்டேயிருக்கிறது; கோவிந்தராஜர் அதைக்குறிக்கொள்ளாதவரல்லர், “கஸ்யேத்யஸ்ய உத்தரமாண – ரரமேதி.” என்றும் வியாக்கியமான மெழுதியுள்ளார். பர்த்தாவின் நாமத்தை அடிக்கடி சொல்ல வேண்டிய அவச்யமுமில்லை. பூர்வாசாரியர் களின் பாடப்படி [ ராகவஸ்ய நிவேசநே-என்கிற பாடப்படி] பர்த்ரு நாம க்ரஹணமுமிருககிறது. வேறுவிதமான பாடம் கோவிந்தராஜர்க்கு எங்ஙனே ப்ராப்தமாயிற்றென்று தெரியவில்லை.
பெருமாள் மதங்காச்சமத்திற்கு எழுந்தருளின வளவில் சபரியின் வார்த்தையாக ரக்ஷ ஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந, பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்ய
சாரிஷம் (ஆரண்-7413 ) என்கிற ச்லோகத்தைப் பூர்வாசாரியர்கள் பல விடங்களில் உதாஹரித்துள்ளார்கள். இதில் உத்தரார்த்தத்தில் இன் சுவைமிக்க பொருளொன்று நிரம்பிபுள்ளது. பரமபதம் சென்றவர்களை ஆசாரியன் திருவடி சேர்ந்ததாக வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம். அதற்கு அந்த சபரியின் வாக்கே மூலமென்று ஆசாரியர்கள் திருவுள்ளம் பற்றுகிறார்கள். பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்ய சாரிஷம் என்று பாடமிருந்தால் தான் இவ் விசேஷார்த்தம் இடம் பெறும். இவ்வாச்ரமத்தில் எந்த பெரியோர்களுக்கு நான் பணிவிடை செய்து கொண்டிருந்தேனோ, அவர்கள் திருநாடு சேர்ந்திருக்கிறார்கள்
அவர்களது திருவடிவாரம் சென்று சோப்போகிறேன் என்பதாக இதற்குப் பொருள், ஸ்ரீராமாயண கோசங்களில் இப்பாடம் காணவேயில்லை . கமிஷ்யாம்ய யாந் லோகாந் த்வத்ப்ரஸாதாத் அரிந்தம. என்றே பாடம் காண்கிறது. பூர்வார்த்தமும் *தவாஹம் சக்ஷஷா ஸௌம்ய பூதா ஸெளம்யோமாநத என்றும் மற்றும் பலவிதமாகவும் மாறுபட்டுக் காண்கிறது. அது கிடக்கட்டும். உத்தரார்த்தம் பூர்த்தியாகவே உருமாழிக் கிடக்கிறது. இங்கு கோவிந்தராஜருங்கூட பூர்வாசார்ய ஸம்மதமான பாத மூலம் கமிஷ்யாமி யாநஹம் பாயசாரிஷம் என்கிறபாடத்தைக் கொண்டு வியாக்யானம் செய்யவில்லை.
*கமிஷ்யாம்யக்ஷயாந் லோகாந்த்வத்ப்ரஸாதாத் அரிந்தம என்கிற பாடத்தையே கொண்டு வியாக்கியான மிட்டிருக்கி ர். இந்த ப்ரகரணத்தில் ஸ்ரீராமாயணத்தின் முன்பின் ஸந்தர்ப்பங்களை நன்கு வி ர்சித்தால் நம் ஆசாரியர்கள் கொண்ட பாடமே பொருந்து மென்று எண்ணத்தகும். பெருமாள் சபரியைக் கண்டபோதே கச்சித் தே குருசுச்ரூஷா ஸபலா சாருபாஷிணி* [ஆசார்ய ஸேவைபண்ணிப்பழுத்தவளென்று தெரியும்படி அழகாகப் பேசுகின்ற சபரியே! நீ செய்த ஆசார்ய சுச் ஷை யெல்லாம்ஸபலமாயிற்ற ] என்று கேட்கிறார். சபரியும் அதை அடியொற்றியே விடை கூறுகின்றள். அதற்குஆசாரியர்கள் ஆதரித்த பாடமே பொருந்தும்.
“துர்யோதநன் பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது தந, கிமர்த்தம் புண்டரீகா
புக்கம் வருஷலபோஜநம் ? என்று கேட்க, த்விஷ த நம் கபோக்தவ்யம் த்விலுந்தம் மைவ போஜயேத், பாண்டவார் தவிஷஸே ராஜந்மம ப்ராணா ஹி பாண்டவா : என்று உத்தரமருளிச் செய்கையாலே ! என்கிற பங்கதி ப்ரபாவவ்யாவஸ்தாதிகாரத்திலுள்ளது. நமக்குக் கிடைக்கிற மஹாபாரத ஸ்ரீகோசமெதிலும் இது பொருந்தும்படியான ஸ நிவேசமில்லை. துர்யோதந ஸபையில் நின்றும் மீண்டெழுந்தருளின பிறகே விதுரர் திருமாளிகையில் அமுது செய்ததாக சரித்திரமுள்ளது. துர்யோதனன் கேள்வி
கேட்டதாகத் தெரிவித்கப்படுகிற பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய – இத்யாதி ச்லோகம் மஹாபாரதத்தில் இந்த ப்ரகரணத்தில் காணப்படுவது மில்லை, ஆசார்ய ஹ்ருதயத்தில் (95) ச்ரமணீ விதுரேத்யாதி சூர்ணையின் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகளும் இவ்விதமாக அருளிச் செய்திருக்கக் காண்கிறோம்.-நாம் எதை அப்ராமாணிகமென்பது? இக்த ப்ரகரணத்தில் *ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் சௌசேர் விதுரஸ்ஸ மஹாமதி: என்கிற ச்லோகத்தை யெடுத்து நம் ஆசார்யர்கள் பணித்தருளும் அர்த்த விசேஷமும் இப் போது காணும் மஹாபாரத ப்ரக்ரியைக்கு ஒவ்வாததா யிருக்கின்றது. பாடப்பிறழ்வு இல்லாத பழைய இதிஹாஸ புராண ச்லோகங்களை ஸம்பாதிக்க முயலவேணும்.
திருப்பல்லாண்டில், *வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் என்கிற பாசுரத்தினால் ஞானிகனை யழைத்தும், * ஏடு நிலத்திலிடுவதன் முன்னமென்கிற பாசுரத்தினால் ) கைவல்யார்த்திகளையும், அண்டக்குலத் துக்க திப தியாகி யென்கிற பாசுரத்தினால் ஆபூர்வைச்வர்ய காமர்களையும், ப்ரஷ்டைச்வர்ய காமர்களை பு மழைத்தும் உபதேசம் தந்தருளியிருப்பது ஸுஸ்பஷ்டம்.-இதுவன்றியும் திருவாய் மொழியில் ஒருநாயகமாய் என்கிற பதிகத்தில் இக்நால்வகையதிகாரிகளும் தெரிவிக்கப் பட்டிருப்பதும் ப்ரஸித்தம். கீதையிலுள்ள சதுர்விதா பஜந்தே மாம்* என்னுமிந்த ச்லோகத்தை யடி யொற்றியே அந்தப் பாசுரங்கள் திருவவதரித்தனவாக ஸம்ப்ரதாய மாகையாலே மாறனுரைசெய்ததமிழ்மறை வளர்த்தவரான ஸ்வாமி யெம்பெருமானார் திவ்ய ப்ரபந்தச் சாயையிலேயே அருளிச் செய்தாரென்பது இங்குக் குறிக்கொள்ள வேண்டிய பரமார்த்தம்.
ஸ்ரீவசந பூஷணத்தில் (73) அஹமர்த்தத்துக்கு ஜஞாநாநந்தங்கள் தடஸ்தமென்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம்‘என்ற சூர்ணையின் வியாக்கியானத்தில்”திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆழ்வான் ஆறுமாஸம் ஸேவித்து நின்று மஹாநிதியாகப்பெற்ற அர்த்த மிறேயிது” என்று மணவாளமாழு கள் அருளிச் செய்கிறார்.-ஜ்ஞாநி என்பதற்கு அர்த்தம் செய்தருளுமிடத்து ….. பகவச் சேஷதைகரஸ- ஆத்மஸ்வ ரூபவித்-என்றருளி யுள்ளார்.ப்ரஹ்மஸூத்ரக்காரர் ஜ்ேஞாதஏவ என்கிற ஸூத்ரத்தினால் ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வத்தை ஸ்தாயிக்கிறார். ஜ்ஞாதா என்பதற்கு ‘அறியுமவன்‘ என்று பொருள். எதை அறியுமவன் என்று கேள்விவரில், தான் பகவச்சேஷ்பூதன் என்பதை யறியுமவன் என்று பொருள் சொல்லவேண்டு மென்பது எம்பெருமானார் திருவுள்ளம். பகவச் சேஷதைகரஸ- ஆத்மஸ்வ ரூபவித்-என்னும் சொல் தொடர் இதரர்களின் க்ரந்தங்களொன்றிலும் வர்ஷ சதம் தேடினாலும் கிடைக்கமாட்டாது. இப்படி விலக்ஷணமான ஸ்ரீ ஸூக்தியை அஸக்ருத் அருளிச் செய்திருக்கிற நம் ஸ்வாமி, திருகோட்டியூர் நம்பி பக்கலில் நின்றும் ஆழ்வான் கொணர்ந்த நிதிபைப் பெற்றவரென்பதில் ஸந்தேஹமுண்டோ ?
த (7-17) தேஷாம் ஜஞாநீ நித்யயுக்த :* என்னும் ச்லோகத்தின் உத்தரார்த்தம்
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:” என்றுள்ளது. அங்கு நம் ஸ்வாமி ஜ்ஞா ந, அஹம் அத்யர்த்தம் ப்ரிய.” என்று க்ரமாந்வயத்தையே திருவுள்ளம்பற்றி பாஷ்யமிட்டருளினார். இவ்வந்வய க்ரமத்தில்- ஞானிக்குத் தன்னிடத்தில் ப்ரீதி அதிகம் என்றதாக விளங்குகிறது. உண்மையில், பகவானிடத்தில் ஞானி வைந்திருக்கிற ட்ரீது அதிகமா? ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்குமளவிம் ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதிதான் அதிகமென்னத் தகும். ஆகவே இந்த ச்லோகத்தில் [ அத்யர்த்தம்] என்பதை ‘அஹம்பரிய.’ என்ப திலே கூட்டுவதை விட “மம ப்ரிய:’ என்பதிலே கூட்டுவதுதான் ரஸவத்தரமென்று திருவுள்ளம் பற்றின ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் சரம ஸூத்ரமான அநாவ்ருத்தி ஸூத்ரத்தின் பாஷ்யத்தில், அத்யர்த்த ப்ரியம்! ஜ்ஞா நிதம் தப்த்வா”என்கிற அகர்க்கமான வாக்கியத்தினால் அந்த அந்வய க்ரமத்தையும் காட்டியருளினார். அந்த ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியின்படி ப்ரக்ருத கீதா ச்லோகாவயம் எப்படி கொள்ளவேணு மென்னில் ; “ஜ்ஞா க,அஹம் ப்ரிய: ஸ ச மம அத்பர்த்தம் ப்ரிய ” என்றிங்ஙனே கொள்ளவேணும்.
ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளியற்றிய-் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளியற்றிய பாஷ்யத்தின் ப்ரக்ரியை இதற்குமாறாகவுள்ளது. அவர் தம்முடைய பாஷ்ய அவதாரிய
கையில் [பகவார்…ஸ்வமாயயா தேஹவாநிவ ஜாத இவச லோகாநுக்ரஹம் குர்வம் லக்ஷ்யதே] என்றெழுதி வைத்திருக்கக் காண்கிறோம். இதனால், பகவான் உண்மையில் தேஹபரிக்ரஹம் செய்தருளவில்லை யென்றும், உண்மையாக அவதாரம் செய்தருள வில்லை யென்றும், மாயையினால் ஏதோ ஜனங்களை மயக்கிக் காட்டினதாகவும் சங்கராசாரியர் அபிப்ராயப் படுவதாக விளங்குகின்றது. இப்படி இவர் அபிப்பிராயப் படுவதற்கு ஒரு காரணாபாஸமுண்டு; அதாவதென்னெனில்; மேலே நான்காமத்யாயத்திலே பகவான் தானே தன்னுடைய அவதாரத்தைப்பற்றிப் பேசிவருகையில் ( -6) ஆத்மமாயயா ஸம்பவாமி என்றுள்ளது. இதற்கு உண்மையான பொருள் எதுவோ அது பகவத்ராமாநுஜ பாஷ்யத்தில் ப்ரமாண ப்ரதர்ச புரஸ்ஸரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஆத்மமாயயா – ஆத்மீயே ஜ்ஞாநேந-என்பது கீதாபாஷ்யத்தில் அங்கு ஸ்வாமி யருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்தி. வைதிக நிகண்டுவையும் அதையநுஸரித்த அபியுக்க பிரயோகத்தையும் காட்டி ஸங்கல்ப ரூபஜ்ஞானமே இங்கு மாயா சப்தார்த்த மென்று ஸ்வாமி நிர்ணயித்திருக்கிார். இதுதான் மஹர்ஷ்களின் அபிப்ராயத்திற்கு மிகவு மிணங்கிய ப்ராமாணிகமான பொருள். ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் (6-5,84) இச்சாக்ருஹீ தாபிமதேரரு தேஹ: *என்று, மாயா சப்த ஸ்தானத்தில் இச்சா சப்தத்தை நிஸ்ஸந்தேஹமாக இட்டு, பகவான் தன்னுடைய இச்சையினாலே தனக்கு அபிமதமான பல திவ்யமங்கல விக்ரஹங்களைப் பிரிக்ரஹித்துக்கொண்டு அவதரிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.-இங்கு சங்கராசார்யர் “ஸம்பவாமி- தேஹவாநிவ பவாமி; ஜாத இவ ஆத்மமாயயா-ஆத்மநோ மாயயா ; ந பரமார்த்தத; லோகவத்.‘ என்று எழுதியுள்ளார். கானலானது தன்னிடத்தில் தண்ணீர் இல்லாமலிருக்கச் செய்தேயும் அது இருப்பதுபோல் காட்டுகிறதல்லவா ? அப்படியே பகவானும் தான் உண்மையில் தேஹ பரிக்ரஹம் பண்ணாதவனாகையாலே தன்னிடத்தில் தேஹமில்லாதிருக்கச் செய்தேயும் இருப்பதுபோல் மாயையினால் காட்டிக்கொண்டு நிற்கிறான் என்பது சங்கராசார்யருடைய அபிப்ராயம். மாயா என்னுஞ் சொல்லுக்கு பொய்யென்பதே இவர் கொண்ட பொருளாகும். அந்த நாலாவது அத்யாயத்திலேயே மேல் ஒன்பதாவது லோகத்தில் * [ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத : த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூ.] என்பதில் பகவான் தானே தன்னுடைய அவதாரத்தையும் அவதார சேஷ்டிதத்தையும் ஸத்யமாக எவன் அறிகிறானோ அவன் வர்த்தமான தேஹத்தை விட்டொழித்து மறுபிறவி யடையாமல் தன்னையே யடைவதாகச் சொல்லியிருக்கின்றான். மே ஐந்ம கர்ம சய தத்த்வதவேத்தி : என்றிருப்பதை ஸ்வமத ப்ரதிகூலமாக நினைத்த சங்கராசார்யர் வெகு சாதுர்யமாய் வேறுவிதமாக அந்வயம் காட்டியுள்ளார். தத்த்வத. என்பதை ‘யோவேத்தி’ என்பதில் கூட்டாமல் ‘தத்த்வத : தேஹம் த்யக்த்வா’ என்று உத்தரார்த்தத்திலே அந்வயித்துப் பொருளுரைத்தார். அவர் இவ்வளவு ச்ரமம் எதற்காகப் படுகிறரென்றால், ஸம்பவாமி ஆத்மமாயயா ‘என்றுள்ள விடத்தில் மாயா சப்தத்திற்குத் தாம் கொண்ட பொருளே பொருளென்கிற வொரு அபிரிவேசத்தினால்தான்.
தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணத்தில் காடகமென்னும் பகுதியில் மூன்றாம் ப்ரச்நத்தில் “யாவந்த பாக்ம்ஸவோ பூமே . ஸங்க்யாதா தேவமாயயா” என்று ஓதப்பட்டிருக்கின்றது. பூமியிலுள்ள மண் துகள்களெல்லாம்தேவர் களின் மாயையினால் கணக்கிடப் பெற்றவையாக இதில் சொல்லப்படுகிறது. இங்கு மாயையென்பதற்குப் பிறர் கூறும் பொருள் பொருந்தமாட்டாதென்பது வெளிப்படை. பூமியிலுள்ள மண்துகள்கள் மனிதர்களின் ஞானத்தினால் கணக்கிட முடியாதவையாயினும் தேவர்களின் ஞானத்தினால் கணக்கிடக்கூடியவையே யாதலால் இங்கு தேவமாயயா’ என்றதற்கு தேவர்களின் ஞானத்தினாலே என்பதுதான் பொருளென்று யாவரும் ராஷேபமாக இசையத்தக்கதாகும். வித்யாரண்யர் முதலான வேதபாஷ்யகாரர்களும் இப்படித்
தான் இங்குப் பொருள் வரைந்துள்ளார்கள். ஆகவே (மாயா) என்பதற்கு ‘மித்த்யா’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதென்று தெளியக்கடவது.-பிள்ளை லோகாசார்யர் தத்வத்ரயத்தில் அசித் ப்ரகரணத்தீல் (10) “மாயையென்கிறது விசித்ரஸ்ருஷ்டி
யைப் பண்ணுகையாலே” என்றருளிச் செய்த விடத்து வியாக்கியானத்தில் ம ணவாள மாமுனிகள்”அஸுரராக்ஷஸாதி க்ரியைகளை ஆச்சர்யகரத்வத்தைப் பற்ற மாயாசப்தத்தாலே சொல்லுகிறாப்போல இத்தையும் [ப்ரக்ருதியையும்] மாயை யென்கிறது விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே. அதாவது. ஒன்றுபோலொன்றன்றிக்கே விஸ்டீய யங்களான கார்யங்களை ஜனிப்பிக்கை” என்றருளிச் செய்ததும் இங்கே அநுஸந்தேயம்.
ஸ்ரீ ராமா ஜன்-280.-1-2-1972 தை மாதம் வெளியிடப்பட்டது.–விரோதிஸ்ருத்தைமீ
திருமழிசைப்பிரானுக்கு அடுத்தவரான நம்மாழ்வார் திருவாய்மொழியில்பாட்டில் “ஆராவமுதே”அசைவில்அடியேனுடலம்” என்கிற திருக்குடந்தைப் பதிகத்தில் ஒன்பதாம்
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்!” என்பதனால் இதனை விளங்கவைத்தருளி யிருக்கிறாரென்பதை நுண்மதியோருணர்வர், அசைவில்-திரு மழிசைப் பிரானுக்காக
அசைந்து கொடுத்ததில் என்றபடி. அப்பாசுரத்தில் மூன்றாமடியில் –“செழுமாமணிகள்சேருந்திருக்குடந்தை” திருமழிசைப் என்றவிடத்து ஈடு-முப்பத்தாறாயிரப்படியில் திரு மழிசைப் பிரானையெடுத்துக் காட்டியிருப்பதும் நோக்கத்தக்கது.
முதற்பாட்டில் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் பதினாறாம் பாட்டில் நாயகனாய் நின்ற நந்தக்கோபன் பதினேழாம் பாட்டில் எம்பெருமான் நந்தகோபாலா பதினெட்டாம் பாட்டில் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் இருபத்தோராம் பாட்டில் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப்படைத்தான் – ஆக ஐந்திடங்களில் நந்தகோபனுடைய பிரசம்ஸை நிகழ்ந்துள்ளது.-ஸாக்ஷாத்கண்ணபிரானைப் பெற்ற பாக்கியசாலியான வஸு தேவரைப் பற்றித் திருப்பாவையில் ஓரிடத்திலாவது ப்ரஸ்தாவமுண்டோவென்னில்; இல்லை ஒருத்தி மகனாய் பிறந்து என்ற பாட்டில் தேவகிப் பிராட்டி கோபியாகத் தலை காட்டுகிறாள்; அந்தரீதியுமில்லை வஸுதேவர்க்கு.-வஸு தேவர் அந்நவாந்பவதிக்கு இலக்கு. நந்தகோபர் அந்நாதோபவதிக்கு இலக்கு. வஸுதேவனென்பதற்குப் பணத்தினால் விளங்குபவன் என்பதுபொருள். நந்தகோபனென்பதற்கு ஆனந்தப் படுபவனென்று பொருள். பணம்
ஓரிடத்திலும் ஆனந்தம் மற்றோரிடத்திலுமாயிற்று.”வஸு தேவோ வஹந்க்ருஷ்ணம்
ஜானுமாத்ரோதகோ யயெள ” என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் கூறினபடி அருந்
தெய்வத்தைப்பெற்ற தகப்பனே “நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன்
வசுதேவன் பெற்றிலனே” என்று தெய்வத் தேவகி புலம்பும்படியாகச் சீர்மல்குமாய்ப்பாடியிலே கொண்டுவிடவேண்டியதாயிற்று. அந்நாதோ பவதிக்
ஈஷத்தும் இலக்காகவில்லை.-“நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந ப நா ச்ருதேந;
யமேவைஷ வருணுதே தேந லப்ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்”
எள்பதாம். (ஏஷ ஏவ யம் வருணுதே தே ந லப்ய:) பரமபுருஷன் தானே எவனை ஸ்வீகரிக்கிறானோ, அவன்தான் பரமாத்மாவைப் பெறுபவனாவள். பெறுவதென்றால்.
என்னவென்னில்; (ஏஷ ஆத்மா தஸ்யஸ்வாம் தநூம் விவருணுதே) இந்த பரமாத்மா, தன்னால் ஸ்வீகரிக்கப்பட்ட அந்த அதிகாரிக்குத் தனது திருமேனியை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்கிறானென்கை. இழக்கைக்கு ஒரு தம்பதிகளும், எல்லாம்
பெறுகைக்கு ஒரு தம்பதிகளுமாயிற்றந்தோ!
பேசுவார் எவ்வளவு பேசுவர். அவ்வளவே
வாசமலர்த்துழாய்மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான், பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.”-21-
[பேசுவார்எவ்வளவு பேசுவர் அவ்வளவே] பேசுகிறவர்கள் எவ்வெவ்வளவு பேசுகிறார்களோ
அவ்வவ்வளவில் அடங்கி நிற்குமது).எம்பெருமானைப் பற்றிப்பேசுகிறவர்கள் கலைகளெல்லாம் அறக் கற்றவர்களாயிருக்கவேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை.இராமாநுச நூற்றந்தாதியில் “பெரியவர் பேசினும் பேதையர் பேசினும் தங்குணங்கட்கு உரியசொல் என்றுமுடையவன் இராமாநுசன்’ என்கிறார்–அமுதனார். எம்பெருமானாருடைய திருக்குணங்களை ஆழ்வான் ஆண்டான் எம்பார் போல்வாரே பேசவேணுமென்பதில்லை; அற்பஞானிகள் பேசச் தொடங்கினாலும் மிக அழகிதாகச் சொன்னார், இவ்வளவு யாராலும் சொல்லமுடியாது’ என்று புகழும்படியாகவே யிருக்குமாம். அதேபோல, எம்பெருமானது திருக்குணங்களையும் இன்னாரினையா ரென்கிற வாசியற யார் பேசினாலும் “சொல்ல வேண்டிய பெருமைகளையெல்லாம் அழகாகச் சொல்லிவிட்டாரே; இன்னும் சொல்லவேண்டியது ஒன்றும் சேஷித்திருக்க வில்லையே” என்றுதான் சொல்லும்படியாயிருக்கும் என்பது பேயாழ்வார் அருளிச் செயலின் கருத்து -இதை அடியொற்றியே ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்னத்தில் “யத் வாச்ரமாவதி ” என்கிற சுலோகத்தில் “ஏவமேவ கலு தேபி ஸதா ஸ்துவந்த: வேதாச்சதுர்முகமுகாச் ச, மஹா ணவாந்த: கோ மஜ்ஜதோ: அணுகுலாசலயோர் விசேஷ:”என்றருளிச்செய்தார். ஆயிரவாய் படைத்த அனந்தன் பேசினாலும் எல்லைகாணமுடியாத எம்பெருமானது பெருமைகளைப் பேசுமவர்கள் பெரியவராகி லென்? சிறியவராகிலென்ன? தங்களன்பார தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப”என்று நம்மாழ்வார் ஸாதிக்கிறபடி நெஞ்சு கனிந்து யார் பேசினாலும் நன்றேயாகும்.-யதி புநரபிதேயமத்விதீயம்” என்று வரவரமு நிசதகத்தில் எறும்பியப்பா ஸாதிக்கிறபடி பேசுவதற்குக்கொள்ளும் விஷயம் நன்றாயிருந்துவிட்டால் வதாக்களைப்பற்றியும் வாக்குக்களைப் பற்றியும் விமர்சிக்க வேண்டிய ஆவச்யகதையில்லை
ஸ்ரீ ராமாநு ஜ ன் – 2 8 9-பரிதாவி ஐப்பசி “-15-11-72ல் வெளியிடப்பட்டது
ஆளவந்தார்.எம்பெருமானார், கூரத்தாழ்வான், அமுதனார்,பட்டர், எங்களாழ்வான், நஞ்சீயர், நம்பிள்ளை, நடா தூரம்மாள், ச்ருதப்ரகாசிகாபட்டர், வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெரிய வாச்சான்பிள்ளை, ஆச்சான்பிள்ளை)நடுவில் திருவீதிப்பிள்ளை, அழகியமணவாளப்பெருமாள், வேதாந்தவாசிரியர்.வாதிகேஸரி ஜீயர் – என்னுமிவ்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகள் (123) நூற்றிருபத்துமூன்றுஸ்தலங்களில் கையாளப்பட்டுள்ளன. ஒன்பது இடங்களில் ஸ்ரீஸக்த்யுதாஹரணமின்றிக்கே திருநாம ப்ரஸ்தாவமாத்ரம். மூன்றிடங்களிலே திருநாமமும்எடாமல், ஆகரமும்காட்டாமல் ஸ்ரீஸூக்திமாத்ரோதாஹரணம்.ஸ்ரீவசனபூஷணம் 457ல் “நல்லபுதல்வர் இத்யாதியாலே அருளாளப்பெருமாளெம்பெருமானாருமருளிச்செய்தார்’. அதிலேயே (449ல்) அம்புதத்தைப்
பார்த்திருப்பானற்று என்றும் சொல்லக்கடவதிறே” என்றுஞானஸாரப்பாசுரத்தை
யுதாஹரித்தவளவே; ஆசிரியர் திருநாமமுமில்லை. நூலின் திருநாமமுமில்லை.
நான்கு ரஹஸ்ய வயாக்கியானங்களிலும் ஸம்ஸ்க்ருத ப்ரமாண வசனங்கள் 1778 என்று ஏற்றத்தாழ்வின்றி யெடுத்துக்காட்டியதுபோல் திவ்யப்ரபந்தமேற்கோள்களைப் பற்றியும் கணக்கு காண்மின்.-முமுக்ஷப்படி வியாக்கியானத்தில்–108- தத்வத்ரய வியாக்கியானத்தில்-42-ஸ்ரீவசனபூஷணவியாக்கியானத்தில் 276-ஆசார்யஹ்ருதய வியாக்கியானத்தில் 1903-ஆக (2329) இரண்டாயிரத்துமுன்னூற்றிருபத்தொன்பது அருளிச்செயற்சந்தைகள் நான்கு ரஹஸ்ய வ்யாக்கியானங்களிலும் கையாளப் பட்டிருக்கின்றனவென்று தேறிற்று.- மூலகாரர்களான பிள்ளைலோகாசார்யரும் திருத்தம்பியாரும் தாங்கள் (மூலத்தில்) உதாஹரித்தருளுகிற பாசுரங்களுக்குப் பூர்வாசார்ய வயாக்கியானங்களில் காணாத பொருளையும் பாடத்தையும் திருவுள்ளம் பற்றியிருப்பதுண்டு; அவ்விடங்களில் “இங்கு பூர்வாசார்ய யாக்கியானம் இங்ஙனன்றிக்கே யிருந்தாலும் பரமாப்தரானவிவர் இப்படியருளிச்செய்கையாலே…….” என்று ஸாதிப்பதுண்டு-இப்படி ஒன்பது இடங்களில் காண்கிறோம். இரண்டிடங்களைமட்டும் காட்டுவோமிங்கு. தத்வத்ரயத்தில் (180)ல் எம்பெருமான் ஸவிக்ரஹனாய்க்கொண்டு ஸ்ருஷ்டிக்கு மென்றருளிச் செய்ய விரும்பி அதற்கு ”முன்னீர் ஞாலம் படைத்த என்முகில் வண்ணனே” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை ப்ரமாணமாகக் காட்டினர்)பிள்ளை லோகாசார்யர். அங்கு மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் “முகில்வண்ணனென்கிறவிது ஔதார்ய குணபரமாக வயர்க்யாதாக்கள் பலரும் வ்யாக்யாநம் பண்ணினார்களேயாகிலும், விக்ரஹ பரமாக விவர் அருளிச்செய்கையாலே இங்கநுனுமொரு யோஜநையுண்டென்று கொள்ளவேணும்; ஒன்றுக்குப்பல யோஜநையுமுண்டாயிறேயிருப்பது ” என்றருளிச்செய்தார். மற்றோரிடம் -ஸ்ரீவசநபூஷணத்தில் 399. “எதிர்சூழல்புக்கு” இதுவும் திருவாய்மொழிப்பாசுரம். இதை வ்யாப்தி பரமாகக் கொண்டு உதாஹரித்தருளினர் பிள்ளைலோகாசார்யர். இங்கு வியாக்கியானத்தில் மாமுனிகள் “எதிர்சூழல் புக்கென்கிறது அவதார பரமாக மற்றுமுள்ளாராலே வ்யாக்யாதமாயிற்றாகிலும் இப்போதிவர் இவ்விடத்தில் வியாப்தி பரமாக வருளிச்செய்கிறார். அநேக யோஜநைகளுண்டாயிறே யிருப்பது” என்றருளிச் செய்துள்ளார்.
“பண்ணார் பாடல் பண்புரையிசை கொள் வேதம் போலே” என்றவிடத்து வியாக்கியானத்தில் வியாக்கியானங்களில் ‘பண்புடைவேதம்’ என்றொழிய ‘பண்புரை வேதம்’ என்ற பாடமும் இசைகொள்வேதம்’ என்கிறதுக்கு ஸாமவேத பரத்வமும் கண்டதில்லையேயாகிலும் ஆப்த்தமரானவிவர் இப்பிரபந்தத்திலே இப்படி யருளிச்செய்கை
யாலே இப்படியும் கொள்ளவேணும்.” என்றுள்ளது. இவற்றால் ஆர்த்திப்பிரபந்தத்தில் “முன்னவராம் நம்குரவர் மொழிகள் உள்ளப்பெற்றோம் முழுது நமக்கவை
பொழுதுபோக்காகப் பெற்றோம்”. என்று மாமுனிகள் தாமே யருளிச்செய்தது
ஸத்யாபிதமாகிறது.
ஸ்ரீபாஷ்யத்தில் (ஸூ 171) “லோகவத்து லீலாகைவல்யம்.” என்ற ஸூத்ர பாஷ்யத்தில் ஜகத்ஸர்கே லீலைவ கேவலா ப்ரயோ ஜநம்,” என்றும் “பரஸ்ய ப்ரஹ்மணோ லீலைவ ப்ரயோஜநம்” என்றும் ஸ்ரீ க்திவிந்யாஸமுள்ளது. இதையனுஸரித்துப் பிள்ளைலோகாசார்யரும் தத்வத்ரயத்தில்(162) “ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம் கேவலலீலை” என்றருளிச்செய்தார். இதில் எந்தவித்வானுக்கும் எவ்விதமான விசிகித்ஸையும் எளிதாகத்தோன்றமாட்டாது. ஆனால்,இங்கு மாமுளிகளின் ப்ரஜ்ஞா விசேஷம் ஆராய்ச்சி செய்யப்புகுந்தவிதம் நிரூபணநிபுணர்களால் உற்று நோக்கத்தக்கது. ஸ்ருஷ்டிதான் லீலா ரூபமேயொழிய ஸருஷ்டிக்கு ப்ரயோஜனம் லீலையென்று சொல்லுவது ஸமந்விதமாகாதென்றுநிரூபித்தருளி ஸமந்வயம் செய்தருளியிருப்பதை “ஸாரந்து ஸாரஸ்வதம் ஜானீதே நிதராம்.” என்னப்பிறந்தவர்கள் பரிசீலிக்கவேணும்.
ஸ்ரீ வசனபூஷணத்தின் பெருமை அப்ரமேயமென்று மணவாளமாமுனிகள்
உபதேச ரத்தினமாலையில் ஏழு பாசுரங்களினால் மிக மிகக் கொண்டாடியருளுகிறார். ஸர்வஜ்ஞ லோக குருநிர்மிதமார்யபோக்யம் வந்தே ஸதா வசன பூஷண திவ்யசாஸ்த்ரம் என்று இந்த திவ்யகரந்தத்தை ஒரு திவ்யசாஸ்த்ரமென்றேவழங்குவர் பெரியார்.“ஸம்ஸாரி சேதநரிழவு ஸஹிக்கமாட்டாத பரமக்ருபையாலேதது ஜீவநார்த்தமாகத் தாமும் பல ப்ரபந்தங்களருளிச்செய்த பிள்ளை லோகாசார்யர், ஆசார்ய பரம்பராப்ராப்தங்களான அர்த்தங்களில், அவர்கள் தாங்கள் கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக உபதேசித்துப் போத்து வையாய், அருமை பெருமைகளைப்பற்ற இதுக்கு முன்பு தாமும் ப்ரகாசிப்பியாமல் அடக்கிக்கொண்டு போந்தவையான அர்த்த விசேஷங்க ளெல்லாவற்றையும் பின்புள்ளாருமிழக்க வொண்ணாதென்கிற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேலே பெருமாளும் ஸ்வப்நத்திலே திருவுள்ளமாயருளுகையாலே ஸ்ரீவசனபூஷணமாகிய இப்ப்ரபந்த முகே வெளியிட்டருளுகிறார். முன்பே பேரரு ளாளப் பெருமாள் தம்முடைய நிர்ஹேதுகக்ருபையாலே மணல்பாக்கத்திலே யிருப்பாரொரு நம்பியாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி தஞ்சமாயிருப்பன சிலஅர்த்த விசேஷங்களைத் தாமே அவர்க்கு ஸ்வப்நமுகேந அருளிச்செய்து ‘நீர்போய் இரண்டாற்றுக்கு நடுவே வர்த்தியும்; இன்னமுமக்கு இவ்வர்த்தங்களை யெல்லாம் விசதமாக நாம் அங்கே சொல்லுகிறோம்’ என்று திருவுள்ளமாயருளுகையாலே அவரிங்கே வந்து (பெரிய) பெருமாளை ஸேவித்துக் கொண்டு, தமக்குமுன்பு அங்கரு.
ளிச்செய்த அர்த்தங்களையும் அசலறியாதபடி அநுஸந்தித்துக்கொண்டு ஏகாந்த
மானதொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்செய்தே, தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு
அந்தரங்கரான முதலிகளும் தாமுமாகப் பிள்ளை ஒருநாள் அந்தக்கோயிலிலே யாத்
ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம் ஏகாந்தமாயிருக்கையாலே ரஹஸ்யார்த்தங்
களை அவர்களுக்கருளிச் செய்துகொண்டு எழுந்தருளியிராநிற்க, அவை தமக்குப்
பேரருளாளப் பெருமாளருளிச்செய்த அர்த்தவிசேஷங்களாயிருக்கையாலே அவர்
போர வித்தராய் உள்ளில் நின்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்திலே
விழுந்து ‘அவரோ நீர்?’ என்ன, ‘ஆவதேது?’ என்று பிள்ளை கேட்டருள, பேரரு
ளாளப் பெருமாள் தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்தருளின படியையும் இத்
தேசத்திலே போகவிட்டருளின் படியையும் இன்னும் உமக்கங்கே விசதமாகச்
சொல்லுகிறோ மென்றருளிச் செய்தபடியையும் விண்ணப்பஞ் செய்யக் கேட்டு மிக
வும் ஹ்ருஷ்டராய் அவரையும் அபிமானித்தருள, அவரும் அங்குத்தைக்கு அந்தரங்
கராய் வர்த்திக்கிற நாளிலே,பெருமாள் அவர்க்கு ஸ்வநத்திலே ‘இவ்வர்த்தங்கள்
மறைந்து போகாதபடி இவற்றை யொருப்ரபந்தஸ்தமாக்கச் சொன்னோமென்று
நீர் பிள்ளைக்குச் சொல்லும், என்று திருவுள்ளமாக, அவர் ‘இப்படி பெருமாள் திரு
வுள்ள மாயருளினார்’ என்று விண்ணப்பஞ்செய்ய, ‘ஆனால் அப்படிச் செய்வோம்’
என்று திருவுள்ளம்பற்றி அனந்தரம் இப்ப்ரபந்தமிட்டருளினா ரென்று ப்ரஸித்த
மிறே” என்பவை மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸூக்திகள்.
ஸ்ரீ ரா மா நு ஜ ன் – 2 9 0-பரிதாவிகளு கார்த்திகைமீ-5-12-72ல் வெளியிடப்பட்டது
தமிழர்களில் நக்கீரர்’ என்றொருவர் மிக்க புகழ் பெற்றவர். அவர்க்குக் கீரரென்பதே இயற்பெயரென்றும், உயர்வு குறிப்பதோர் உபஸர்க்கமாகிய ‘ந’ என்னுமெழுத்தைச் சேர்த்து உபசாரமாக நக்கீரரென வழங்குகிறார்களென்றும் கூறுகின்றனர் பெரியோர் ; பின்னை – நப்பின்னை என்னுமிவ்விடத்திலும் அவ்வண்ணமாகவே கொள்ளத்தகும். ஸ்ரீ தேவிக்கும் பூதேவிக்கும் பிற்பட்டவளென்னுங் காரணத்தினால் பின்னையென்று ஆழ்வார்களால் வழங்கப்பட்டனள்.எம்பெருமான் திருநாட்டில்ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி யென்று மூன்று திவ்யமUSகளோடு கூடியிருப்பதாக பகவச்சாஸ்த்ரங்களினால் தெரியவருகின்றது. ஸ்ரீ ராமாயணத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்திலுள்ளதான புஜை : பரமநாரீணாம் அபிம்ருஷ்டமநேகதா என்ற ச்லோகத்தின் கோவிந்த ராஜீய வியாக்யானத்திலும் இது காணலாகிறது. கூரத்தாழ்வானும் ஸ்ரீ வைகுண்டஸ்தவத்தில் (ச்லோ
78 முதல்) ஐந்து ச்லோகங்களினால் அம்மூன்று திவ்ய மஹிஷிகளையும் ப்ரசம்ஸிக்கிறார், ஆழ்வார்களும் அந்த திவ்ய மஹிஷிகள் மூவரையும் சேர்த்துப் பேசுமிடங்களில் * உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்* என்றும் * கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை என்றும் குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் என்றும் இவ்வண்ணமாகவே பேசியிருக்கக் காண்கிறோம். பகவச் சாஸ்த்ரங்களில் ப்ரஸித் தையான நீளா தேவியை ஆழ்வார்கள் ஆயர்மட மாளென்றும் குலவாயர் கொழுந்தென்று * குழற் கோவலர் மடப்பாவை யென்றுமே கூறியிருத்தலால் ஆழ்வார்களின் திருவுள்ளத்தாலே ஆயர்மங்கையருள் ஒருத்தியான நப்பின்னைப் பிராட்டியே நீளாதேவியின் ஸதானத்தில் கொள்ளப்பட்டாளென்பது நிஸ்ஸந் தேஹமாகத் தேறி நின்றது. இல்லையாகில், திருநாட்டிலுள்ள திவ்ய மஹிஷிகளைப் பரிகணநை பண்ணு மிடங்களில் ‘ ஆயர் மடமகள்’ என்னுஞ்சொல்லைப் பிரயோகித்தது பொருந்தாதன்றோ
நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒன்றுந் தேவு முலகு முயிருமென்று தொடங்கும் பதிகத்தில்(4-10-6) போற்றி மற்றோர் தெய்வமென்னும் பாசுரத்தில் *எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லையென்றே என்றருளிச் செய்துள்ளார். இப்பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்துவத்தை உபபாதித்து வந்த ஆழ்வாரை நோக்கி ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்சவிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்து வைத்தது ஏன்?என்று சிலர் கேட்பதாகக்கொண்டு அவர்களுக்கு விடை கூறுவதாக இப் பாசுரமமைக்கப்பட்டுள்ளது.இப்பாசுரத்தில் ” எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே” என்பதுதான் உயிராக வுள்ளது-எல்லாரும் ஸ்ரீமநாராயணனையே தொழப்பெற்றால் எல்லாருமே வீடு பெறுவார்கள் ; அப்படி எல்லாரும் வீடு பெற்று வீட்டால் உலகு இல்லையாய் விடும்; (அதாவது லீலாவிபூதி அடியற்றுப் போய்விடும்) அங்ஙனம் ஆகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதா பஜனம் பண்ணி ஸம்ஸாரிகளாய்த் தொலைந்து போம்படி செய்து வைத்தான்- என்பதாக இப் பாசுரத்திற்கு ஆபாத ப்ரத்தியில் பொருள் தோன்றக் கூடும். தசோபதிஷத் பாஷ்யகாரரான ரங்கராமாநுஜஸ்வாமி வடமொழியில் (திருவாய்மொழிக்குத்) தாம் பணித்த ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தில் இவ்விதமான பொருளையே எழுதியுள்ளார். ” பவாத்ருசாநாம். ஸர்வேஷாம் மோக்ஷலாபே லீலா விபூத்யந்தர்ப் பூத லோகாநாம் உச்சேத.ஏவ ஸ்யாதிதி மத்வை ….” என்பவை அந்த ஸ்வாமியினுடைய வியாக்கியான பங்திகள்.
ஆனால், திருக்குருகைப்பிரான் பிள்ளான், நம்பிள்ளை முதலான பூருவாசாரியர்கள் தம் வியாக்கியானங்களில் வெளியிட்டருளின. பொருள் இங்ஙனே யல்ல. எங்ஙன மென்னில்; கேண்மின்;” உலகில்லைவென்றே” என்றவிடத்தில், உலகு என்பதற்கு சாஸ்த்ர மென்று பொருள்; ப்ரபல பாபம் செய்துவைத்த நீங்களும் ப்பல க்ருதிகளுக்கே பெறக்கூடியதான மோக்ஷத்தைப் பெற்று விட்டீர்களாகில்சாஸ்த்ர மர்யாதையே அழிந்துவிடுமென்று நினைத்தே எம்பெருமான் உங்களை தேவதாந்தர ப்ரவணர்களாக ஆக்கி வைத்திருக்கிறான்; அவரவர்கள் பண்ணின புண்ய பாப ரூப கருமங்களுக்குத் தக்கபடியே பலன்கொடுப்பதென்று ஒரு சாஸ்த்ர மர்யாதை ஏற்பட்டிருக்கிறது; நீங்கள் முற் பிறவிகளில் பிரபலமான தீவினைகளைச் செய்திருக்கிறபடியால் அவற்றின் பலனாக இப்பிறப்பில் க்ஷத்ரதேவதா பஜநம் பண்ணும்படியாக உங்களை உபேக்ஷித்திடலாயிற்று. கொடிய பாவங்கள் செய்த உங்களையும் புண்யாத்மாக்களைப்போலே ஸ்ரீமந்நாராயண ஸமாசரயணமே செய்யும்படி பண்ணி விடுவாரானால் அப்போது முன்சொன்னசாஸ்த்ர மரியாதை அழிந்துவிடுமன்றே ;அங்ஙனம் அழியாமைக்காகவே உங்களை இங்ஙனமே நிறுத்திவைத்தது- என்பதாகவே ஆழ்வார் திருவுள்ளம்பற்றிய பொருள் என்று பூருவாசாரியர்கள் உபபாதித்தருளுகிறார்கள். வேதாந்ததேசிகனும் த்ரமி ேடாபகிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் ன் தத்தத் கர்மாநுரூபம்பலவிதாணதான் என்று இவ்வர்த்தத்தையே வெளியிட்டருளினர். ஆகவே ஆழ்வார் திருவுள்ளத்தால் உலகு என்பதற்கு சாஸ்த்ர மென்னும் பொருள் தேறிவிட்டபடியால் இதை யடியொற்றியே ஸ்வாமி பாஷ்யகாரர் [ அதோஸ்மிலோகே வேதே த என்ற கீதாச்லோகத்தின் பாஷ்யத்தில் லோக சப்தத்தை சாஸ்த்ர பரமாக நயிப்பித்தருளினரென்று அறியக் கிடக்கிறது. இந்த கீதா ச்லோகத்தை அப்பாசுரத்தின் வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளையும் வடக்குத் திருவீதிப்பிள்ளைபும் எடுத்துக் காட்டியுமிருக்கிறார்கள்.-எம்பெருமானார்க்குமுன்னே ஆளவந்தாரும் லோக சப்தத்தை சாஸ்த்ரமென்னும் பொருளில் ப்ரயோகம் செய்தருளினார். ஸ்தோத்ரரத்நத்தில் (23) ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே என்ற விடத்திற்கு வியாக்கியானஞ் செய்தருளா கின்ற பெரியவாச்சான்பிள்ளை “ஆயிரமடங்கு என்னால் பண்ணப் படாதது யாதொரு கிந்திதகருமமுண்டு அதிபாதக மஹாபாதகாதிகள். அது சாஸ்த்ரத்திலுமில்லை!அநுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்தில் காணலாமிறே” என்று அருளிச் செய்திருக்கிறார். தேசிகனும், ஸ்தோத்ர பாஷ்யத்தில் அவ்விடத்தில், “லோக்யதே அநேநேதி லோக ப்ரமாணம்….அத்ர சாஸ் ரரூபப்ரமாண விசேஷவிவக்ஷா.” என்றருளிச் செய்தார். இவற்றால் ஆளவந்தாரும் லோக சப்தத்தை சாஸ்த்ர பரமாகவே கொண்டாரென்று விளங்காகின்றது. இப்படி ஆளவந்தாரும் எம்பெருமானாரும் கொண்டது ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியே யென்பது நிஸ்ஸங்தேஹம். இவற்றை நோக்காமலெழுதினார் ரங்கராமாநுஜஸ்வாமி.
திருமங்கையாழ்வாருடைய பிரபந்தங்கள் நம்மாழ்வாருடைய பிரபந்தங்களுக்கு உபகாரகங்கள் என்று கொள்ளக் குறையில்லை. ஆயிரத்திற்குமேற்பட்ட பாசுரங்களையருளிச் செய்தவரேன்கிற பெருமை நம்மாழ்வார்க்கும் திருமங்கை
யாழ்வாருக்குமொக்கும். எம்பெருமானை நம்மாழ்வார நுபவிக்கிற வகைகளும்,
திருமங்கையாழ்வார நுபவிக்கிற வகைகளும் பெரும்பாலுமொத்திருக்கின்றன.1-ப்ரக்ருதி ஸம்பந்தத்தினுடைய ேயத்தன்மையைப் பேசிக்கொண்டேபிரபந்தம் தொடங்குகை; 2. எம்பெருமான் பக்கலில் அளவு கடந்த ப்ராவண்யத்தைப் பாசுரந்தோறும் வெளியிடுகை; 3. அதில் அர்ச்சாவதாரத்தில் மிக்க அபி நிவேசத்தைக் காட்டுகை; 4. எம்பெருமானோடு கலவியும் பிரிவும் மாறிமாறி வருகை;-5.தம் வாக்காலே பேசுமளவோடு நில்லாமல் பெண்மையெய்தியும் பேசுகைதூது விடுதல்; 7. இரவில் படும் துயரம் பொறுக்கமுடியாமைகூறல்; 8. எம்பெருமானாகத் தம்மை யனுகரித்துப் பேசுதல்; 9. மடலெடுக்கை; 10. இந்திரியங்களுக்கு ஆற்றவொண்ணாது கதறுகை; 11. எம்பெருமானுடைய சுதந்திரத்தை நினைத்து அஞ்சுகை; 12. அடிக்கடி ப்ரபத்தி செய்கை; 13. ஆர்த்தியினுடைய கரை புரட்சி; 14. பிறர் துன்பம் பொறாமல் பலகாலும் ஹிதம் சொல்லுகை……முதலான பலவும் இவ்வாழ்வார்களிருவர்க்கும் ஒத்திருக்கும்.
திருவாய்மொழி மூன்றும்பத்தில் ஐந்தாவது பதிகத்தில் ஐந்தாவது பாசுரம் சாதுசனத்தை நலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு, ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த இத்யாதி. இதில் ” ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த” என்கிற இரண்டாமடிக்கு உண்மையான பொருளைப் பலர் க்ரஹிப்பதில்லை. ‘தனக்கு அஸாதாரணமான திவ்ய ரூபத்தைப் பரம பதத்திலே வைத்து விட்டு வேறொரு ரூபத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டு இங்கே வந்து பிறந்த’ என்றே பலர் பொருள் கொள்ள நினைப்பர்கள். மூலத்தின் ஸந்நிவேசம் இப்படி ப்ரமிக்கச் செய்கிறது. திருக் குருகைப்பிரான் பிள்ளானருளிச்செய்த ஆறாயிரப்படி முதலான வியாக்கியானங்களில் உண்மையான பொருள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது, “ஆச்ரித ஜநவிரோதி கம்ஸாத்யஸுர நிரஸகார்த்தமாக ஸ்வாஸாதாரண திவ்ய ரூப விசிஷ்டனாய்க்கொண்டு இந்த லோகத்திலே மநுஷ்யனாய் வந்து பிறந்த” என்று ஆறாயிரப்படி யருளிச் செயலுள்ளது. இதை யநுஸரித்தே மற்ற வியாக்கியானங்களுமுள்ளன. “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவா “ என்கிற பகவத் கீதைக்கு இதுதான் சேர்ந்த பொருள். இப்படி யிருக்க, இங்கு ரங்கராமாநுஜஸ்வாமி தமது ஒன்பதினாயிரப்படியில் இவ்விடத்திற்கு வியாக்கியானமாக எழுதியிருப்பதாவது- ” ஜகத்காரணம் ஸுந்தரம் யோதிர்மய விக்ரஹம் பரமபதே ஸ்தாபயித்வா அஸ்மிந்லோகே அவதீர்ணம்.” என்று “அங்குவைத்து”என்பதற்கு பரமபதத்திலே வைத்து’ என்று இவர் அர்த்தம் செய்துகொண்டார். இது தவறு-அங்குவைத்து என்கிற முழுச் சொல்லுக்கு “அங்கிருக்கிறபடியே கொண்டு ” என்று பொருள்.
ஸ்ரீராமாநுஜன்-291-பரிதாவி மார்கழி-10-1-73ல் வெளியிடப்பட்டது-
எம்பெருமானார் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் முடிவில் ” அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸுகமா த ” என்றருளிச்செய்கிறார்.-நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் கங்குலும் பகலும் பதிகத்திற்குப் பயனுரைக்கும் பாசுரத்தில் “ முகில்வண்ண வானத்து இமையவர் சூழவிருப்பர் பேரின்பவெள்ளத்தே” என்றருளிச் செய்தார்.
தென்கலை ஸம்ரதாயார்த்தங்கள்–வடகலை ஸம்ப்ரதாயார்த்தங்கள்
1-பகவத்க்ருபை நிர்ஹேதுகம்.-பகவத்க்ருபை ஸஹேதுகம்-
2-சேதநனைப்பெறுவது ஈச்வரனுக்குப்பேறு.-ஈச்வரனைப்பெறுவது சேதநனுக்குப் பேறு
3-பரகத ஸ்வீகாரமேநன்று-ஸ்வகத ஸ்வீகாரமே தான் உள்ளது
4-ப்ரபத்தி அநுபாயம்—்ப்ரபத்தி உபாயம்
5-பிராட்டிக்குப் புருஷகாரத்வ மாத்ரமே யுள்ளது ; உபாயத்வமில்லை–பிராட்டிக்கு புருஷகாரத்வத்தோடு மோக்ஷ பிரதாத்ருத்வமுமுண்டு.
6-பிராட்டிக்கு அணுத்வமேயுள்ளது.–பிராட்டிக்கு விபுத்வமே யுள்ளது
7-பிராட்டிக்கு ஜகத்காரணத்வமில்லை-பிராட்டிக்கு ஜகத்காரணத்வமுண்டு
8-.தயை என்பது பரதுக்கதுக்கித்வம்–தயைபரதுக்க நிராசிகீர்ஷாரூபம்
9-வாத்ஸல்யம் தோஷபோக்யதாரூபம்–வாத்ஸல்யம் தோஷாதர்சித்வரூபம்
10-ப்ரபந்நனுக்கு விஹிதவிஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-.விஹித விஷய ப்ரவ்ருத்தி அவர்ஐநீய மாகையாலே தத்வர்ஜநம் அசாஸ்த்ரீயம்
11-.எம்பெருமானுடைய வ்யாப்தி பரிஸமாப்ய வர்தனம்–எம்பெருமானுக்கு பரிஸமாப்ய வர்தநம் கிடையாது
12-ஜாதி நசிக்கும்–ஜாதி நசிக்கமாட்டாது
13-உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம்–உபாயாந்தரங்கள் ஸ்வரூபானுரூபமே
14-கைவல்ய மோக்ஷத்தில் புநராவ்ருத்தி கிடையாது-கைவல்யமோக்ஷத்திற்குப் புநரா வருத்தியுண்டு
15-நமஸ்காரத்தில் ஸக்ருதாவ்ருத்தி போதும்-அஸக்ருந் நமஸ்காரம் வேண்டும்
16-அத்ருஷ்டார்த்தாநுஷ்டானமென்று தனியே யில்லை.-அத்ருஷ்டார்த்தாநுஷ்டானம் தனிப்பட ஆவச்யகம்
பரமபத ஸோபாநத்தில் “அஜ்ஞாதயாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமான்ய புத்திமூல ஸுக்ருத விசேஷங்களை வியாஜமாகக்கொண்டு விசேஷ கடா க்ஷம் பண்ணி என்றருளிச்செய்தார், இதில் ‘வ்யாஜமாகக் கொண்டு” என்றதை யும் ஸஹியாமல் அவ்யாஜ க்ருபையையும் அருளிச்செய்து போந்தார். அது எங்கே யென்னில் ;திருவாய்மொழியில் முதற்பத்தில் * பொருமா நீள்படையென்கிற பத்தாவது பதிகத்திற்கு ஆறாயிரப்படி யிலில்லாத விஷயம் அவ்வாறாயிரப்படிக்குப் பிற்பட்ட வியாக்கியானங்களிலுள்ளது. அதாவது, இப்பதிகத்தினால் ஆழ்வார் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவத்தை யநுபவிக்கிறாரென்று பட்டர் நிர்வஹித்தருளினதாகக் காட்டப்பட்டது. அந்த நிர்வாஹத்தையே தேசிகன் ஆதரித்து த்ரமிடோபநிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் “ஆதாவித்தம் பரத்வாத்” என்கிற ச்லோகத்தில் “அவ்யாஜோதாரபாவாத்” என்றருளிச் செய்தார். நிர்ஹேதுக க்ரூபா விசிஷ்டனாகையாலே என்றபடி.-ஸ்ரீவசந பூஷணம் நான்
காவது பரகரணம் ஆரம்பத்திலுள்ளதான
”த்ரிபாத்விபூதியிலே பரி பூர்ணானுபவம் நடவாநிற்க… என்னூரைச்சொன்னாய்
என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத்
தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்னுமாபோலே சில
வற்றை ஏறிட்டு மடிமாங்காயிட்டு ஐந்ம பரம்பரைகள் தோறும் யாத்ருச்
சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவி சேஷங்களைக் கற்பித்துக்
கொண்டுதானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக்கொண்டுபோரும்”-என்கிற ஆச்சரியமான சூர்ணையை தேசிகன் அநவரதம் சிந்தனை செய்து போந்தவரென்பதைப் பேதையருமறியும்படி அமைந்துள்ளது.
தயாசதகத்தில் “நிஷாதாநாம் நேதா க குலபதி: காபி சபரீ குசேல: குப்
ஜாஸா வரஜயுவதயோ மால்யக்ரு திதி, அமீஷாம் நிம்நத்வம் வருஷகிரிபதேருந்
நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி ப்ரஸபமநுகம்பே ஸமயஸி என்கிற ச்லோகரத்நத்தின் பொருளை உபந்யஸிக்கப் புக்கால் குஹப்பெருமாள் ஸக்ரீவ மஹாராஜர் சபரி குசேலர் கூனி ஆய்ச்சியர் மாலாகாரர் என்னுமவர்கள் இராமபிரானுடையவும் கண்ணபிரானுடையவும் நிர்ஹேதுக கருணைக்கு இலக்கானவர்கள்
என்றல்லது வேறொன்று சொல்லிப் பிழைக்கவொண்ணாதாயிற்று.
முநி வாஹ போகமென்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாகப் பணித்த அமலனாதிபிரான் வியாநகியானத்தின் உபசுரம ஸ்ரீஸூக்தி அது காணீர் -“காரணவிசேஷம் இன்னதென்று
அறுதியிட அரிதாயிருப்பதொரு பகவத் கடாக்ஷத்தாலே . …….” என்று.இவ்விஷயத்தில் இவ்வளவே போதும்.-தேசிகன் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்“த்ராணே! ஸ்வாமித்வ மௌசித்யம்! ந்யாஸா த்யாஸ் ஸஹகாரிண : பரதாந ஹேதுஸ் ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா கருணா விபோ;.” என்று ஸாதித்திருக்கிற காரிகை-பட்டத்துக்குரிய ஆனையும் அரசும்செய்யுமவை ஆராயாது ” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியைப் பின்பற்றினாராயிற்று. “ந்யாஸாத்யாஸ் ஸஹ காரிண:” என்றாரிங்கு.-நியாய ஸித்தாஞ்ஜனத்தில்.–“இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வப்ரத் யயாத்மிகா, ஸ்வஹேதுத்வதியம் ருந்தே கிம்புநஸ் ஸஹகாரிணாம்”
த்ராணே ஸ்வாமித்வ மௌசித்யம் ந்யாஸாத்யாஸ் ஸஹகாரிண:, ப்ரதா ஹேது ஸ்வாதந்தர்யவிசிஷ்டா கருணாவிபோ ” (ரஹஸ்யத்ரயஸாரே.)
“உபாயஸ் ஸ்வப்ராப்தே ருபநிஷததீதஸ் ஸ பகவான் ப்ரஸத்த்யை தஸ்
யோக்தே ப்ரபத நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா
நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண:”
” ஸ்வப்ராப்தௌ ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண ச்ருதௌ.”
கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்ாத் என்கிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் ப்ராமாணிகமேயாகிலும் இது பராதீனமுமாய் அல்பவிஷயமுமாய் ப்ரதிஹதி யோக்யமுமாயிருக்கும். ஆகையால் இவன்தான் உபாயாநுஷ்டானம் பண்ணிற்றும் வரத? தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாக்ஷமடியாக வருகையால்அவனாலே ப்ரேரிதனாய், அவன் ஸஹகரியாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன் காட்டின வுபாயத்தை, அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்கு சாதகம்போலே அண்ணாந்திருக்கிற விவனை ஸ்வாதீந ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வமுடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸித்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுக்ஷவுக்கு உசிதமன்று…-என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே யென்றும் + இசைவித்தென்னை யுன் தாளிணைக் கீழிருத்துமம்மானே யென்றுஞ் சொல்லுகிறபடியே உபாயம் அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜ மாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக வெண்ணுகை உசிதமன்றென்று ஏக சப்தத்துக்கு தாத்பர்யம் ” என்கிற ஸ்ரீஸூக்திகள் உள்ளன.
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் பரிபூர்ண ப்ரஹமாநுபவாதிகாரத்தில்
“ஈச்வரனுக்குச் சத்ரசாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன ஐகத்காரணத்வமோ ப்ரதத்வ ஸர்வாதாரத்வ -ஸர்வநியந்த்ருத்வ-ஸர்வசேஷித்வ-ஸர்வசரீரித்வஸர்வசப்தவாச்யத்வ-ஸர்வவேத வேத்யத்வ ஸர்வலோக சரண்யத்வ-ஸர்வபலப்ர தத்வ-லக்ஷ்மீஸஹாயத்வாதிகள் ப்ரதிநியதங்கள் “ என்றருளிச்செய்யப்பட்டது.(இந்த மஹாவாக்யத்தில் ஜகத்காரணத்வத்தை முந்துறச் சொல்லி முடிவில் லக்ஷ்மீஸஹாயத்வத்தைச் சொல்லியிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதமோ அப்படியே ஜகத்காரணத்வாதிகளும் அவளுக்கு அஸம்பாவிதமென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்துமென்றும் காட்டப்பட்டதாயிற்று.
ரஹஸ்ய ரத்னாவளியில் “ஸ்ரீமானான நாராயணனொருவனுமே ஸர்வஜீவர்
களுக்கும் தஞ்சம்… ஸர்வஸ்வாமிநியாய் ஸர்வேச்வரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரியபிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இ ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்’
ஆளவந்தாரருளிய கீதார்த்த ஸங்க்ரஹத்திற்கு தேசிகனிட்டருளின ரக்ஷையில் “உபாயத்வ புத்திரபிநோசிதா ” -நிஜகர்மாதி பக்த்யந்தம்… உபாயதாம் பரித்யஜ்ய+-என்றுள்ள ஸ்ரீஸூக்தி
நியாஸதிலகத்தில் * ஆர்த்தேஷ்வாசு பலா + என்ற சுலோகம்–ஹேதுர்வைதே விமர்சே என்கிற சுலோகம், * த்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத்ஸாதநத்வம் என்கிற சுலோகம் + புங்க்தேபோகார் அவிதித ருபஸ் ஸேவகஸ்யார்ப்பகாதி ருத்வா வரம் தத பந்த மதாவலிப்தே என்கிற சுலோகம்
ஸ்தோத்ரரத்னத்தில் * க்ஷணேபி தே யத்விர : அதிதுஸ்ஸஹா என்றவிடத்து(ஸ்தோத்ர ) பாஷ்யத்தில் துஸ்ஸஹ சப்தே கேதோ ந விவ த ” என்றெழுதினார். ஆனந்தமயனான எம்பெருமானுக்கு துக்கமுண்டாவதாகச் சொல்லுவதுதவறு என்கிற திருவுள்ளத்தினால். இப்படி யெழுதினவர்தாமே தயாசதகத்தில் “அசிதவிசிஷ்டாந் ப்ரலயே ஐந்தூநவலோக்ய ஜாதநிர்வேதா “‘ என்றார். தயாளுவின் தன்மையை தயையிலேறிட்டுச் சொன்னபடி. பட்டர் அருளிச்செய்த அசிதவிசேஷிதாந்ப்ரலயஸீமநி ஸம்ஸரத கரணகலேபரைர்க் கடயிதும் தயமாநமநா ” என்றருளிய ஸ்ரீஸூக்தியை அநுவதித்த தேசிகன் -தயமாந மநஸ்கத்வமாவது ஜாதநிர்வேதத்வமென்று-விளக்கினாராயிற்று.
அந்த தயாசதகந்தன்னிலேயே “அபராதசதைரபூர்ணகுக்ஷி கமலாகாந்த
தயே! கதம் பவித்ரீ ” என்றும், “ ப்ரபல வருஜிந ப்ராப்ருதப்ருதாம் ” என்றும் அருளிச்
செய்கிறார். “அங்கீகாரத்திற்கு அபராதங்களையே பச்சையாகக் கொள்ளுகையென்கிற
ஸ்ரீவசனபூஷண திவ்யார்த்தம் இந்த ஸ்ரீஸக்திகளில் கமழுகின்றதாயிற்று.
முநிவாஹனபோகம“வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்தவாரிய னென்றியம்பநின்றோம், நாண் பெரியோமல்லோம் நாம் நன்றுந் தீதும் நமக்குரைப்பா ருளரென்று நாடுவோமே” என்று தலைக்கட்டினார். இவ்வளவு விநயபேசலமான திருவாக்கு வேறு எங்கேனுங் கண்டதுண்டோ?
சில்லரை ரஹஸ்யமொன்றின் முடிவில் ‘விசுத்த தேசிகவதா ரங்கதாம்நி வ்யலிக்க்யதா ” -‘ ரங்காஸ்தாநே ரஸிகமஹிதே ரஞ்ஜிதா சேஷ சித்தே வித்வத் ஸேவாவிமலமாஸா வேங்கடேசேந-என்கிறார் ஸ்வாமி.
அபயரதாந ஸாரோபக்ரமத்திலென்று ஞாபகம்.(ச்லோகம்) “நமஸ் தஸ்மை கஸ்மைசந பவது நிஷ்கிஞ்சநஜந ஸ்வயம் ரக்ஷாதீக்ஷா ஸமதிக ஸமிந்தாநயசஸே, ஸூராதீச ஸ்வைர ணகு பிதசாபாயுதவதூ த்ருஷத்தா துர்ஜாத ப்ரசமந பதாம்போஜ ரஜஸே “
“திரு ரபியானாலும் கோத்வம் கழியாதிறே” என்றார் ரஹஸ்யத்ரய ஸாரத்திலே. பெண்ணுக்குப் பெண்ணுத்வம் கழிந்து கல்லுத்வம் வந்ததாம். கல்லுக்கு கல்லுத்வம் கழிந்து பெண்ணுத்வம் வந்ததாம். ர ஸ்யத்ரய ஸாரத்திலேயே “சிலாதே: ஸ்த்ரீத்வாதி: ” என்று ஆதி சப்தகடிதமாக வருளிச்செய்கிறார். பாதுகா ஸஹஸ்ரத்தில் (பதயோ க்ருத்யாநி பேசுமிடத்து ‘யோஷித்பூத த்ருஷந்தி ” என்கிறார் ஸ்வாமி. இவற்றால் ஜாதி கழியுமென்கிறாரா? கழியாதென்கிறாரா?
ஸ்ரீ ராமாநு ஜ ன் – 292, 293-பரிதவி தை, மாசிமீ-10-2-73ல் வெளியிடப்பட்டது
*வேதோகிலோ தர்மமூலம் (வேதமே தர்மத்திற்கு மூலம்) எ ன்றனர் மஹர்ஷிகள். ஆதெள வேதா : பிரமாணம்’ (வேதங்களே பிரமாணங்களுள் முதன்மை பெற்றவை என்று ஆசாரியர்களும் அருளிச்செய்தனர். சிக்காலான வேதங் களின் பொருள்களை விளக்குவதற்கென்றே தர்மசாஸ்த்ர புராணேதிஹாஸங்கள் தோன்றின. பிபேத்யல்பச்ருதாத் வேத : மாமயம் ப்ரதரிஷ்யதி, இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்யேத் * (அல்பச்ருதர்கள் வேதார்த்தத்தைகலக்கி விடுவர்களென்று வேதமே நடுங்குகிறபடியால் இதிஹாஸபுராணங்களைக் கொண்டேவேதார்த்த மறுதியிடவேண்டும்) என்றும் பெரியோர் பணித்தார்கள்.-வேதோபப்ருஹ்மணார்த்தாய தாவக்ராஹ
யத ப்ரபு: (வால்மீகிமுனிவர் வேதார்த்தத்தை வியாக்ியானம் செய்வதற் கென்றே
குசலவர்களுக்கு ஸ்ரீராமாயணத்தைக் கற்பித்தனர்)வேதார்த்தங்களை விளக்கும் விஷயத்தில் ஸ்ரீவிஷ்ணுபுராணம் மிகவும் சிறந்ததென்பது யாவருமிசைந்ததாகும். வேதேஷு. பௌருஷம் ஸூக்தம் தர்மசாஸ்த்ரேஷு மாநவம், பாரதே பகவத்கீதா புராணேஷு ச வைஷ்ணவம் . (வேதங்களில்புருஷஸூக்தமும், தர்மசாஸ்திரங்களில் மனு ஸ்ம்ருதியும்,மஹாபாரத்த்தில் பகவத்கீதையும், புராணங்களில் ஸ்ரீ விஷ்ணுபுராணமும் மிகச்சிறந்தவை)ஸ்தோத்ரரத்னத்தில், தத்வேந ய: சிதசிதீச்வரதத்ஸ்வபாவ போகாபவர்கத் துபாய தீ தார , ஸந்தர் சயந் நிரமிமீத ான ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பர சராய (சித்,அசித், ஈச்வரன் இவர்களின் ஸ்வரூபம், ஸ்வபாவம், போகங்கள், மோக்ஷம், இவற்றையடைவிக்கும் உபாயம் செல்லும் வழிகள் ஆகிய இவைகளையெல்லாம் உள்ளபடியே விளக்கி புராண ரத்னத்தை நிருமித்த வள்ளல் பராசர மஹர்ஷியை வணங்குகின்றேன்.)என்று இம்மஹர்ஷிக்கு ஒரு தனியன் ஸாதித்தருளினர். இப்படி ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற்கு புராணரத்னமென்று முதன்முதலாக பெயர் சூட்டினவர் ஆளவதி தாரே யாவர்.-மந்த்ரரத்ன மென்கிற த்வயமந்திரமும், புராணரத்னமும், ஆள தார் ஸ்தோத்ரரத்னமும் ஆகிய இம்முன்றை அந்த சிறந்த ரத்னங்களாம்.
“அதிபரிசயாதவஜ்ஞா ஸந்ததகமநாத் அநாதரோ பவதி, மலயே பில்லபுரந்த்ரீ சந்தநதருகாஷ்டமிந்தநம் குருதே.” என்று ஒரு ஸுபாஷி தமுண்டே. மலயபர்வதத்தில் வாழும் குறத்திகள் சந்தனக் கட்டை களை விறகாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்களாம். எதனாலே? அவ்விடத்தில் சந்தனகாஷ்டங்கள் மலிந்துகிடக்கின்றன. அவற்றோடே அவர்களுக்குப் பரிசயம் அதிகம், அதிக பரிசயமுள்ளவிடத்தில் அவஞை தோன்றுவது இயல்வு. ஆகவே அவர்கள் சந்தனக்கட்டைகளின் பெருமையை யுணராமல் அவற்றை யிட்டுச் சமையல் செய்வதும் குளிர்காய்வதுமாயிருக்கிறார்கள்.
“பரீ ய லோகாந் கர்மசித்தாந் ப்ராஹ்மனோ நிர்வேதமாயாத்….த தவிஞாநார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்…”‘ இத்யாதியுபநிஷத்தின்படி நிர் வேதமுண்டானாலல்லது சிஷ்ய த்வ முண்டாக மாட்டா-ஸ்வாமி எம்பெருமானார் தம்முடைய கீதாபாஷ்ய அவதாரி
கையின் முடிவில் பாண்டுதநய யுத்தப்ரோத்ஸாஹநவ்யாஜேந பரமபுருஷார்த்த
லக்ஷணமோக்ஷஸா தந்தயா வேதாந்தோதிதம் ஸ்வவிஷயம் ஞாநகர்மா நுக்ருஹீதம்
பக்தியோகமவதாரயாமாஸ ” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீ ஸூக்திகளை இங்கே அநு
ஸந்திப்பது.-அர் நனை யுத்தத்தில் உத்ஸாஹப்படுத்துவது என்பது வயாஜமாத்ர
மென்றும், பரமபுருஷார்த்தமான மோக்ஷத்திற்கு ஸாதனமாக வேதாந்தங்களில்-ஓதப்பட்டதாய் ஜ்ஞான கர்மங்களை அங்கமாக வுடைத்தாயிருந்துள்ள பக்தியோகத்தை அவதரிப்பிப்பதுதான் இந்த கீதாசாஸ்த்ரத்திற்கு ப்ரதாந லக்ஷ்யமென்றும் தெரிவித்தருளினாராயிற்று. ஆகவே முமுக்ஷக்களுக்கு ஜ்ஞாதவயங்களான ஸகலார்த்தஸாரங்களும் இந்த கீதாசாஸ்த்ரத்தில் தெள்ளமுதாக அமைந்துள்ளன வென்றதாயிற்று.
“ஆத்மமாயயா -ஆத்மீயயா மாயயா . மாயா வயு நம் ஜ்ஞானம்’ இதி ஜ்ஞா நபர்யாயோத்ர மாயா சப்த: ததா சாபியுக்தப்ரயோக:–மாயயா ஸததம் வேத்தி ப்ராணிநாஞ்ச சுபாசுபம்’ இதி. ஆத்மீயேந ஜ்ஞாநேந ஆத்மஸங்கல்பேநேத்யர்த்த:” என்பன கீதாபாஷ்யத்தில் அங்கு ஸ்வாமியருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்.-இங்கு மாயாசப்தார்த்த
மென்று ஸ்வாமி நிர்ணயித்திருக்கிறார். இதுதான் மஹர்ஷிகளின் அபிப்ராயத்திற்கு
மிகவுமிணங்கிய ப்ராமணிகமான பொருள். ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் (6-5-84)
இச்சக்ருஹீதாபிமதோரு தேஹ:* என்று, மாயாசப்தஸ்தானத்தில் இச்சாசப்தத்தை நிஸ்ஸந்தேஹமாக இட்டு, பகவான் தன்னுடைய இச்சையினாலே தனக்கு அபிமதமான பல திவ்யமங்கள விக்ர ஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு அவதரிப்ப தாகச் சொல்லப்பட்டுள்ளது.-வேங்கடாத்வரி இயற்றிய விச்வகுணாதர்சத்தில் வேதாந்தி வர்ணனத்தில் “த்ருச்யம் மித்த்யா த்ருஷ்டிகர்த்தா சமித்த்யாதோஷோ மித்த்யேத்
யேவ யா தீரமீஷாம், ஸாதிஷ்ட்டாநாம் சேபி கிம் நேதி சிந்தா ஸாதிஷ்ட்டாநாம்
பண்டிதாநாமுதேதி.” என்றொரு ச்லோகம் வெகு அற்புதமாகக் காண்கிறது.
‘பார்க்கப்படுகிற பொருள்களெல்லாம் பொய், பார்க்கிறவனும் பொய், அவித்யயாகிற தோஷமும் பொய் என்று கொள்ளுகிற இந்த மாயாவாதிகள், இவற்றுக்குஆச்ரய பூதமான ப்ரஹ்மமும் பொய்யென்று முடித்திருக்கலாமே; ஏன் அதைமாத்திரம் ஸத்யமென்று கொண்டார்களோ தெரியவில்லை’- என்பதே இந்த ச்லோகத்தின் கருத்து. பொய்யன் சொல்லுகிற வார்த்தைகளும் பொய்யாகுமாகையாலே தம்மைப் பொய்யரென்று நிலைநாட்டிக் கொள்ளுகின்ற இந்த மாயாவாதிகள் சொல்லுமதெல்லாம் பொய்யே என்பது இவர்கள் தம்மாலேயே ஸ்தாபிக்கப்பட்டுத் தீருவதனால் இவர்களைக் கண்டிக்க நாம் சிறிதும் ப்ரயாஸம் கொள்ளவேண்டியதில்லை யென்றும் ஒரு ரஸிக பண்டிதர் எழுதிவைத்திருக்கக் காண்கிறோம்.
*ந த்வேவா ஹம் ஜாது நாஸம் என்கிற ச்லோகத்திலே ஜீவாத்ம பரமாத்ம பேதமும் ஜீவர்களுக்குப் பரஸ்பரபேதமு மாகிற விவை காட்டப்பட்டது போல் அதற்கடுத்த (13) ச்லோகத்தில் “தேஹி) நோஸ்மின் யதா தேஹே கௌமாரம் யெளவநம் ரா,ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்தத்ர ந முஹ்யதி.’ என்பதில் ப்ரக்ருத்யாத்ம விவேகமும் காட்டப்பட்டது.அசேதநம் வேறு, சேதனன் வேறு என்கிற பகுத்துணர்வே ப்ரக்ருத்யாத்ம விவேகமெனப்படும். நிர்விசேஷ சிந்மாத்ரமான ப்ரஹ்மமொன்று தவிர வேறு சேதநா
சேதநங்கள் உண்மையில் கிடையா என்கிற வாதம் இங்கு நிராகரிக்கப்பட்டதாகி
றது. “அந்தவந்த இமே தேஹா?” “நஜாயதே மரியதே வா கதாசித், ””வாஸா ஸி
ஜீர்ணாநி யதா விஹாய.” இத்யாதிகளான ச்லோகங்களினால் ஆத்மா நித்யனென்
றும், தேஹம் அநித்யமென்றும் பரக்கச் சொல்லுகிற முகத்தாலும் சேதநாசேதநங்களின் ஸத்பாவம் பாரமார்த்திகமாகவே மூதலிக்கப்பட்டதாகிறது. ஆக, கீதாசாஸ்த்ரம் விசிஷ்டாத்வைதிகளுக்கே நிதியானதென்றும் மற்றையோர்க்கு இதுகொண்டு பணியில்லை யென்றும் சொல்லிற்றாயிற்று.
” அத்ரோச்யதே, ஜா நாத்யேவாயம் பகவந்தம் வஸுதேவ ஸுநும்பார்த்த , ஜாந்தோபி அஜாந்த இவ ப்ருச்சத: அயமாச :; நிகிலஹேய ப்ரத்யநீககல் யாணைகதா நஸ்ய ஸர்வேச்வரஸ்ய ஸர்வஜ்ஸ்ய ஸத்யஸங்கல்பஸ்ய அவாப்தஸமஸ்த காமஸ்ய கர்மபரவசதேவமநுஷ்யாதி ஜா தீயம் ஜந்ம கிமிந்த்ரஜாலாதிவத்மித்யா?
உத ஸத்யம்? ஸத்யத்வே ச கதம் ஜந்மப்ரகார? கிமாத்மகோயம் தேஹ:?
கச்ச ஜந்மஹேது:? கதா ச ஐந்ம? கிமர்த்தம் ச ஜந்ம? இதி பரிஹார ப்ரகாரேண ப்ரச்நார்த்தோ விஜ்ஞாயதே.” என்பது கீதாபாஷ்ய பங்க்திகள். இவற்றின் ஸாரமான கருத்து என்னவென்றால் அர்ஜுநன் கண்ணபிரானை ஸாக்ஷாத் பரமபுருஷனாகவே தான் உறுதி கொண்டிருக்கிறான். அப்படியிருந்தும் அவனது பெருமையை அறியாதவன்போல் கேள்விகேட்டிருப்பது ஏனென்னில், மேலே கண்ணபிரான்இவனுக்கு விடை கூறுகின்ற ப்ரகாரங்களை நோக்குமிடத்து, அர்ஜுநன் என்ன அபிப்ராயங்கொண்டு இக்கேள்வி கேட்டிருக்கிறானென்பதை எளிதாக நிர்ணயிக்க லாம். மேலே பகவான் நாலைந்து ச்லோகங்களாலே விடை கூறுவதில், தன்னுடைய அவதாரம் இந்திரஜாலாதிகள் போலே அஸத்யமன்று, ஸத்யமே யென்பதையும், தன்னுடைய அவதாரப்ரகாரத்தையும், திவ்யமங்கள விக்ரஹத்தின் தன்மையையும், அவதார ஹேதுவையும், அவதார காலத்தையும், அவதார ப்ரயோஜநத்தையும்அருளிச் செய்திருக்கிறான்.
ஸ்ரீ ராமாநு ஜ ன் – 29 4-பரிதாவிளு பங்குனி |-10-3-73 ல் வெளியிடப்பட்டது
எண்பத் திரண்டு பிராயத் திறுதிதனில்
நண்பர்கள் நன்குகந்து நாக்கொள்ளப் பண்புடனே
இந்நூ லெழுத வெழுகின்றேன், என்னுடைய
எந்நூலு மீதொவ்வாதே.-அடியேனுக்கு எண்பத்திரண்டாம் பிராயம் நிரம்புமித்தருணத்தில்
அபூர்வார்த்த ரத்னநிதி-யென்னுமிந்நூலை யெழுதத் தொடங்குகின்றேன்.
பலநூற்றுக் கணக்கான எனது நூல்களில் இந்நூலுக்கு நிகரான நூல் வேறில்லை யென்பது எனது அபிமானம். வேதாந்த தேசிகன் தமதுதயாசதகத்தின் முடிவில் அருளிய “காமம் ஸந்து” என்கிற சுலோகரத்னத்தின் சாயையிலே இது வி ஞாபித்தபடி இதனைச் செருக்குமொழியாகக் கொள்ளலாகாது.]
அகராதி யாம்முறையில் அர்த்தங்க ளெல்லாம்
நிகராது மின்றி நிறைத்துப் பகர்கின்றேன்
என்னுடைய வாழ்நாள் மூழுவதிலு மித்தகைய
தொன்னெறியில் செல்வேன் துணிந்து.-இந்நூலில், வெளியிடக் கருதிய அர்த்தங்களின் மகுடங்களை அகராதி முறையில் அமைத்து விவரிக்கின்றேன். இந்நூல்என்னுடைய
வாழ்நாளில் பலகாலம் நீடித்துச் செல்லவேண்டும் என்பது என் அவா.-அதாவது-ஆயுச்சேஷமுள்ளவரையில் இவ்வகையாக எழுதிக்கொண்டு போவேன் என்றபடி.
நூறுபொருள் கொண்ட நூற்கள் பலபலவும்
தேறுமெனக் கொண்மின்கள் தெள்ளியீர் வேறுபல
நூல்களையும் நுண்மதியோர் வேட்பநுவல் வேனெனினும்
நூலிதுவே நீண்டுவரு நூல்-இங்ஙனே நூறு நூறான அர்த்தங்களைக்கொண்ட நூல்கள் அகராதி முறையிலமைந்த மகுடங்களுடன் அபூர்வார்த்த ரத்னநிதி என்கிற பெயரிலேயே அடுத்தடுத்து வெளிவருமெனினும் இடையிடையே ஸமயோசிதமாக வேறு நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கும்.இந்த அபூர்வார்த்த ரத்னநிதி என்கிற நூல் நீண்டகாலம் தொடர்ச்சியாக வரும்.
அவ்வில் தொடக்கமாய் வையில் முடிவுபெற் றெவ்வொருநூ லோங்கி யொளிருமால்—இவ்வகையால்
எத்தனை நூ லிங்குதிக்கு மென்பதனை யெம்பெருமான்
சித்த மறியும் சிறந்து.-(அ) என்னும் எழுத்து முதலாக (வை ) என்னுமெழுத்தீறாக மகுடங்களை யிட்டுச் சேகரிக்கும் நூல் இத்தனை என்கிற கணக்கியே நில்லாது
அடைவே சென்று கொண்டிருக்கும். இப்படி எத்தனை நூல் தொடர்ந்து செல்லுமென்பதை எம்பெருமான் திருவுள்ளமே யறியும்.
ஆழ்வார்க ளாரியர்கள் ஆதரிக்கத் தக்கவர்கள் ஏழ்பாரு மூய்ய வினிதுரைத்த வாழ்வான
பன்னூல் களிலுறையும் பாங்கான பல்பொருளை
இந்நூ லெடுத்துரைக்கு மீண்டு.–ஸ்ரீபராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்களும் ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி மணவாளமாமுனிகளீறான ஆசார்யர்களும், கம்பர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலான மகாகவிகளும் உலகம் வாழ உரைத்த நூல்களிலுள்ள அரும்பெரும் பொருள்கள் இந்நூலில் வெளிவருமென்க.
இந்நூலி லில்லாத இன்ப மிகுபொருள்கள்
எந்நூ லிலுமில்லை யென்றுரைக்க—இந்நூலில்
எல்லாப் பொருள்களையு மேற்றுகின்றே னெஞ்ஞான்றும் வல்லார் மகிழ்ந்துணர்வர் வாய்ந்து.
யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்வசித், இத்யுக்தியோக்யா ஸைஷா மே க்ருதிச் சிரமுதேஷ்யதி.-வடமொழியில் ஒரு பெரிய நூலைப்பற்றி “யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்லசித்” என்றொரு பழமொழியுண்டு. அதேபோல அபூர்வார்த்த ரத்னநிதி யென்னுமிந்நூலில் இல்லாத பொருள்வேறு எதிலுமில்லை யென்னும்படியாக இதனை அமைக்கின்றேனென்க.
வரவர முனியடி வணங்கும் வைதிகர்
திருவடி யிணைகளென் சிரமேற் சேர்கவே.-காப்பு
1-அக்காரக்கனியை யடைந்துய்ந்து போனேனே.–திருவாய்மொழியில் (2-9) எம்மாவீட்டுப் பதிகத்தில் எக்காலத்தெந்தையாய் என்கிற பாட்டில் “மிக்கார் வேதவிமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே! என்ற விடம் எம்பெருமானுக்குப் பொதுப் பெயராகவுள்ளது. திருமங்கையாழ்வாருடைய பெரிய திருமொழியில் (8-9) கைம்மான மதயானைப் பதிகத்தில்(4) “தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே’என்றவிடத்து அக்காரக்கனி என்பது ஒரு திவ்யதேசத் தெம்பெருமானுக்குச் சிறப்புப் பெயராகவுள்ளது. அதாவது கடிகைத்தடங்குன்றென்பதனால் கடிகாசலமென்று ப்ரஸித்தமான சோளஸிம்ஹபுரத்தைச் சொன்னபடி. அவ்விடத்தெம்பெருமானுக்கு அக்காரக் கனி என்பது சிறப்பான திருநாமம். “தூங்கு தண் பலவின் கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி’ என்னுமாபோலே அக்காரக்கனி என்றொரு கனியுள்ளதா என்று பலர் கேட்பதுண்டு. உண்மையான பொருள் யாதெனில்; அக்காரம் என்று கருப்பஞ் சாற்றுக்குப் பெயர். அதனைச் செடியின் ஸ்தானத்திலே வைத்து அதில் நின்றும் ஒருகனி தோன்றினால் அது எவ்வளவு மதுரமாயிருக்குமோ அவ்வளவு மதுரமானவன் எம்பெருமான் என்று எம்பெருமானுடைய மாதுர்யாதிசயத்தை ஆழ்வார்கள் ரஸித்துச் சொன்னபடி. வேதமானது “‘யதா ஸைந்தவகன:’‘ என்று எம்பெருமானுக்கு உப்புக் கட்டியை உவமையாக ஓதிற்று-ஆழ்வார்கள் “எனக்குத் தேனே பாலே கன்னலேயமுதே” என்று அநுபவிக்கும் பரம ரஸிகர்களாதலால் “கடன்மல்லைக்கிடந்த கரும்பே” என்றும் “திருமாலிருஞ் சோலையங் கட்டியை” என்றும், “கரும்பீன்ற இன்சாற்றை” என்றும் சொல்லுமாபோலே அக்காரக்கனி என்றே எம்பெருமானுக்குத் திருநாமமிட்டார்கள். நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-8-2) கடிசேர் நாற்றத்துள்ளாலை இன்பத்துன்பக் கழி நேர்மை ஒடியாவின்பப் பெருமையோன்” என்றருளிச் செய்ததை இங்கு இணக்கிக் கொண்டநுபவிப்பது.
2-அஞ்சுகுடிக்கொருசந்ததியாய்-அஞ்சுகுடி என்பதில் அஞ்சுஎன்பது ‘ஐந்து’ என்பதன் போலியாகவும், (பயப்படுகை என்ற பொருளில் வந்த) ஒரு வினைப்பகுதியாகவும் கொள்ளத்தக்கது.-அதாவது, (1) பொய்கையார், பூதத்தார், பேயார் என்கிறமூவரும் ஒரு குடி. அதாவது அயோநிஐக்குடி. (2) திருமழிசைப்பிரான் பிரம்பன்குடி. (3) நம்மாழ்வார் காரியார்குடி (4) குலசேகராழ்வார் சேரன்குடி. (5) பெரி யாழ்வார் வேயர்குடி, ஆக இந்த ஐந்து குடிகட்கும் ஒரு சந்ததியாகத் தோன்றின்வள் ஆண்டாள் என்பது விவக்ஷிதம். இந்த ஐந்து குடிகள் மட்டுமன்றிக்கேஆழ்வார்கள் பதின்மர்க்கும் இவள்தானே ஒரு சந்ததியாதலால் அந்தப் பொருளும்இதில் காணக் கிடைக்கும். எங்ஙனே யென்னில்; அஞ்சுகுடி என்பதற்கு அஞ்சுகின்ற குடி என்று பொருள். எம்பெருமானுக்கு என் வருமோ என்று அஞ்சுதல்
மங்களாசாஸன பரதை) பெரியாழ்வார்க்கு விசேஷித்திருந்தாலும், ஆழ்வார்கள் பதின்மர்க்கும் இது ஸாதாரண தர்மமாகையாலே ஆழ்வார்கள் பதின்மருடையகுடியும் அஞ்சுகுடியாகும். அஞ்சுகின்றகுடி என்றவாறு.
3-அத்தூதனப்பூச்சி காட்டுகின்றான் -“‘அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனேயப்பூச்சி காட்டுகின்றான்’–“சொல்லார்ந்தவப்பூச்சிப் பாடலிவைபத்தும் “-இப்பாசுர த்தை நம்பெருமாள் ஸன்னிதியில் உடையவர் கோஷ்டியிலே உய்ந்த பிள்ளை என்பாரொரு அரையர் அபிநயிக்குமளவில் ‘அத்தூதன்’ என்னும்போது ஸ்ரீக்ருஷ்ணனை யும், ‘அப்பூச்சி’ என்னும்போது கண் இமையை மடக்கிக்கொண்டு வருவதையும் காட்டி அபிநயிக்க, உடையவர் பின்னே எழுந்தருளியிருந்த எம்பார், தம் திருக் கைகளைத் திருத்தோள்களோடு சேர்த்துக்காட்ட, அரையரும் தாம் முன்அபிநயித்ததை விட்டு எம்பார் காட்டியது போலவே எம்பெருமான் திருத்தோள்களில் சங்குசக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதை அபிநயிக்க, உடையவர் மிகவுமுகந்து, ‘கோவிந்தப் பெருமாள்!, [எம்பார்] இருந்தீரோ ‘ என்றாராம். இதனால் ஏற்படுவ தாவது- தூதனாய்த் தன் ஸௌலப்யத்தை வெளியிட்டு ‘நம்மிலே ஒருவன்’ என்று இவ்வுலகத்தவர் கொள்ளும்படி யிருப்பவன் அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் ஈச்வரத்வ சின்னங்களைக் காட்டுகிறானென்பது.
4-அல்லிக் கமலக் கண்ணனை-காதில்கடிப்பிட்டென்னும் பதிகத்தில் ஓர் ஆய்ச்சியின் ஊடலை அநுகரித்துப் பேசுகையில்,கண்ணனை அவள் உள்ளே புகவொட்டாமல் தள்ளுவதாக வைத்து, நிகமனப் பாசுரத்தில் “அல்லிக் கமலக் கண்ணனை அங்கோராய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல்திறத்தை” என்றருளிச் செய்துள்ளார். இதனால் கோபிகள் கண்ணபிரானைக் கதவடைத்துத் தள்ளும்போது அவன் முக விகாஸம் அடைந்தானே யல்லது மனோ விகாரம் சிறிதும் அடைந்திலன் என்பது தெரியவரும். [அடுத்த விஷயம்) எம்பெருமானை நோக்கி, “நீ வேண்டா;உன் அடியார்களே யமையும்” என்றருளிச் செய்த பதிகம் திருவாய்மொழியில் (8-10) நெடுமாற்கடிமை யென்பது. அதிலும் நிகமனப் பாசுரத்தில் “நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை” என்றுள்ளது. இதனால் எம்பெருமான் தன் அடியார்களிடத்து ஈடுபடுமவர்களைத் தன்னிடத்து ஈடுபடுமவர்களிற்காட்டிலும் மேம்பட்டவர்களாகக் கொண்டு முகவிகாஸம் அடைந்தான் என்புது தெரியவரும். (மற்றொரு கேள்வி.)கோபிகள் யசோதைப் பிராட்டியிடம் வந்து கண்ணன் செய்த தீம்புகளை முறையிட்டபோது கண்ணனுடைய திருக்கண்கள் எப்படியிருந்தன என்றும் ஒரு கேள்வி கேட்டார் பட்டர். அதற்கும் நஞ்சீயர் அப்போது “அங்கமலக் கண்ணனாய் இருந்தான்” என்று விடையிறுத்தார். பெரியாழ்வார் திருமொழியில் இரண்டாம் பத்தின் முடிவில் ஆற்றிலீருந்து பதிகத்தில் கோபிகள் யசோதைப் பிராட்டியிடம் கண்ணன் செய்த தீம்புகளைச் சொல்லி முறையிட்டு முடிக்கையில் “அங்கமலக் கண்ணன் தன்னை அசோதைக்கு மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட” என்றுள்ள பாசுரத்தை உட்கொண்டு பணித்த விடை இது. நஞ்சீயர் நெடுநாள் அருளிச் செயல் வாஸனையே யில்லாதவராயிருந்து நெடுநாள் பழகினவர்கட்கும் நிலமல்லாத விஷயத்தில் தேர்ச்சி பெற்றது ஆசார்ய கடாக்ஷ விசேஷமத்தனை.
5-அஞ்சனவண்ணனை ஆயர்கோலக் கொழுந்தினை-இவனை வயிற்றில் கொண்டு பெற்றபாக்யவதியான தேவகிப் பிராட்டி, பெற்றவுடனே கண்ணனை இழந்தவளா தலால்
ஒன்றுங் கண்டிடப்பெற்றிலேன்” “எல்லாம்தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்றும் “நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்றும் நெடுநாள் புலம்பிக்கொண்டே யிருந்தாள் என்பது ஏற்கும்.-குலசேகராழ்வார் தமது திருமொழியில் “எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் ” என்று ஒரு பதிகமிட்டதும் பொருந்தும்.எல்லாம் பெற்றவளான யசோதைப் பிராட்டியும் நாடோறும் புலம்பினாளென்பதைப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பதிகத்தினாலறிகிறோம். அப்பதிகந்தான்” அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை, மஞ்சனமாட்டி மனைகடோறுந் திரியாமே, கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின், என் செயப்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே” என்கிற பாட்டை முற்கொண்டது-என்று மெனக்கினியானை என் மணி வண்ணனைக் கன்றின்பின் போக்கினேனென்றசோதை கழறிய பதிகமிது. இப்பதிகத்தினால் ஒரு விசேஷம் அறியக் கிடக்கின்றது-அதாவதென்னென்னில்; கண்ணன் மனைகள்தோறும் புகுந்து தீம்புகள் செய்ய,ஆய்ச்சிகள் அனைவரும் யசோதையிடம் வந்து முறைப்பட, அப்போது யசோதை“அசலகத்தார் பரிபவம் பேசத்தரிக்ககில்லேன் பாவியேனுக்கிங்கே போதராயே“என்று சொல்லிக் கண்ணனை சிக்ஷித்ததாகக் கீழே இரண்டாம்பத்தில் “வெண்ணெய் விழுங்கி” பதிகத்தாலறிகிறோம். இவ்வஞ்சன வண்ணன் பதிகத்தில் மனைகடோறும் தீம்புகள் செய்து திரியாமே காட்டுக்குப் போகவிட்டேனே என்று புலம்பும் முகத்தால் அவன் செய்த தீம்புகள் எல்லாம் தனக்குப் பரமபோக்கியமென்பதைக் காட்டினாளாயிற்று. இதுகொண்டே ஆண்டாள் தனது திருமொழியில் “அஞ்சவுரப்பாளசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்” என்றனள்,
6-அஞ்சலோதியைக் கொண்டு நடமின்-பெரிய திருமொழியில் (10-2) எஞ்சலிலிங்கைக் கிறை”என்கிற பாட்டில் “அஞ்சலோ தியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்
கத்தம்பொங்கோ “ என்றுரைத்தார்.-அஞ்சு அல் ஓதியை ஓதி-என்று கூந்தலுக்குப் பெயர். “ஐந்து” என்பது ‘அஞ்சு’ என மருவிக்கிடக்கிறது. மிருதுவாயிருத்தல், குளிர்ந்திருத்தல், நறுமணம் மிக்கிருத்தல், கறுத்திருத்தல் நீண்டிருத்தல் என உத்தமகேசலக்ஷணம் ஐவகைப்பட்டதாகும். அல் என்பது இரவுக்குப் பெயராகி இருளைக் குறிக்கின்றது. இருண்ட கூந்தல் என்றபடி.-ஐவகை லக்ஷணங்களில் கறுத்திருத்தல் என்பது சேர்ந்தே யிருத்தலால் அல்’-என்பது புநருக்தியாகுமேயென்னில் ஐவகையில் கறுத்திருத்தல் என்பதை நீக்கி
அடர்ந்திருத்தல் என்பதைக் கூட்டிக்கொள்க. அல்லது கருமை விசேஷித்தலக்ஷணமாதலால் அதைத் தனிப்படவும் சொன்னதுபொருந்தும். “மெத்தன்னபஞ்ச சயனம்” என்ற திருப்பாவைப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது. ‘அஞ்சலோதி’ என்றது அன்மொழித்தொகை.-இராமநாதபுரத்தில் பிறந்து பலவாண்டுகள் சென்னையில் வாழ்ந்தவரும் தமிழ்ப் பண்டிதருமான மு. ராகவையங்கார் என்பவர் அஞ்சலோதி’ என்பதை அவர் ‘அஞ்சிலோதி’ என்று திருத்தினார். அம் சில் ஓதி என்று பதம் பிரித்து, ‘இதுதான் தமிழர் வழக்கு’ என்று ஏதேதோ எழுதினார். இஃது ஆழ்வார்கட்கு உடன்பாடன்று. திருவெழுகூற்றிருக்கையில் “ஐம்பாலோதியை ஆகத்திருத்தினை” என்றும், பெரிய திருமொழியில் (7-5-3). தேரழுந்தூர்ப்பதிகத்தில் “செம்பொன்மதிள் சூழ்” என்னும் மூன்றாம் பாட்டில் “கொம்பிலார்ந்த மாதவிமேற்கோதி மேய்ந்த வண்டினங்கள்அம்பராவுங்கண் மடவார் ஐம்பாலணையும் அழுந்தூரே” என்றும் உள்ளது. இவ்விடங்களில் ‘ஐம்பால்’ என்றது ஐவகைக் குணங்களையுடைய கேசபாசம் என்றபடி. இதை யெல்லாம் நாம் எடுத்துக்காட்டி விளக்கின பிறகு அவ் வையங்கார் ‘தெளிந்தேன், மருளொழிந்தேன்’ என்றார்.
7-அழகியமணவாளச்சீயர்-‘அழகியமணவாளச்சீயர்….தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருளுரைத்தது” என்று ஸாதித்திருப்பதில் ஒரு விசேஷ முண்டு. அவர் பூர்வாசார்யர்களிடம் காலக்ஷேபம் கேட்டவராயினும் சிற்சில விடங்களில் அவர்கள் வழியைப் பேணாமல் தாம் சுதந்திரமாகச் சில பொருள்களைக் கூறிவைத்திருப்பதுண்டு. அதை அவருடைய பன்னீராயிரப்படி உரை யிலும் திருவிருத்த ஸ்வாபதேச வுரையிலும் காணலாம். நாமும் நம்முடைய திவ்யார்த்த தீபிகை யுரையில் பல விடங்களில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். இவரைப்பற்றி மணவாளமாமுனிகள், “தம் பெரிய போதமுடன்” என்றுஸாதித்தது இந்தச் சீயர் ஆசார்யாதீனமான ஞானத்தாலன்றிக்கே தம்முடைய சுதந்திர
மான ஞானத்தினால் உரைத்தது என்று காட்டவென்று பெரியோர் அருளிச்செய்வர்.
அப்பொழுதைக்கப்பொழுதென்னூராவமுதமே-“கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலு மைங்கருவி கண்ட வின்பம் – ஒழிந்தேன்” என்றிருக்குமாழ்வார்க்கு பகவத்விஷயா நுபவம் நித்யாபூர்வமாயிருக்கும். நாள் கணக்கிலும் மாதக்கணக்கிலும் வருஷக்கணக்கிலும் எம் பெருமானை யனுபவித்தாலுங்கூடக்ஷணேணே நவம் நவமாய்த் தோற்றியிருக்கு மாழ்வார்களுக்கு. திருமங்கையாழ்வாருடைய திருக்கண்ணபுரப் பதிகத்தில் “பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற பாசுரத்தையும் இங்கே இணக்கிக் கொள்க. (இங்கு ஓர் இதிஹாஸம் கேண்மின்) சென்னைத் தொண்டமண்டலக் கலாசாலையில் பகவத் கதாப்ரஸங்க ஸபா மூலமாக நமது பகவத்விஷய ப்ரவசனம் நடைபெற்று வருகையில் பெரும்பாலும் விஜயஞ்செய்து கொண்டிருந்த கீர்த்தி மூர்த்தியான மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர வர்கள் “எப்பொழுதும் நாள் திங்களென்கிற இந்தப்பாசுரத்தைக் கேட்டவாறே உள் குழைந்து உருகி எழுந்து பேசினார்- சபையோர்களே! நான் எத்தனையோ செய்யுள்கள் பார்த்திருக்கிறேன், பாடம் செய்துமிருக்கிறேன். இப்படியொரு பாடல் என்னே! என்னே !எப்பொழுதும் நாள் திங்கள் ஆண் … உழிதொறும். அப்பொழுதைக்கப் பொழுது . என்னாராவமுதமே” என்று பதம் பதமாகப் பிரித்துப் பிரித்து வாய்வெருவி அன்று சபையை அதிரச் செய்தார்.
அருளிச்செயல்களில் ஆழ்வார்கள் திவ்யதேசங்களை அநுபவிக்கும் வகைகள்பலபடிப் பட்டவை. பிரிதி சென்றடை நெஞ்சே’ ‘சாளக்கிராமமடை நெஞ்சே’ திருவேங்கடமடை நெஞ்சமே’ ‘வதரிவணங்குதுமே ‘நைமிசாரணியத்துளெந்தாய்”எவ்வுள் கிடந்தானே’, ‘திருவல்லிக்கேணிக்கண்டேனே‘ என்று-பெரிய திருமொழி (2-8) திரிபுர மூன்றெரித்தானும் என்கிற பதிகம் பாசுரந்தோறும் “அட்டபுயகரத்தேன் என்றாரே” என்கிறமுடிபைக் கொண்டது.ஆழ்வாரும் (கீழ்த் திருமொழியின் அநுபந்தமாகவே) பரகால நாயகியான நிலைமையிலேயே நின்று அப்பெருமானை ஸேவித்தார்; என்றைக்கும் எங்குங் கண்டறிய முடியாத திருக்கோலமா யிருந்தது; “ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியன்” என்றாற்போலே அப்பெருமானை இன்னானென்று அறிய மாட்டிற்றிலர். அறிந்துகொள்ளாமலிருக்க மனமில்லை; ஸ்வபுத்தியாலே அறிந்து கொள்ளவும் முடியவில்லை. என்னசெய்வது? ‘நீர் ஆர்?’ என்று கேட்கலாம் என்று பார்த்தாலோ வாய் எழும்பவில்லை. முகத்தை நேரே பார்த்து வார்த்தை சொல்ல முடியாதபடி சோதி |வெள்ளம் அலையெறிந்து தள்ளுகின்றது ; அதனால், முகம் நோக்கி நீர் ஆர் ? என்று கேட்கமாட்டிற்றிலர் . இவர் நம்முடைய பர்த்தாவாகவே இருக்கக்கூடும் என்று நெஞ்சிலே ஒரு தோற்றமும் தோன்றினமையால் வெட்கத்தாலும் ‘நீர் யார் ?’ என்று கேட்கமாட்டிற்றிலர்; கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமோ அதிகரித்து விட்டது; அவர் தம்மையே நேரே முகம் பார்த்துக் கேளாமல் அருகிருந்தாரை நோக்கி, இப்பெரியவர் யார் கொல்?’ என்று கேட்க, அதற்கு எம்பெருமான் றானே ‘நான் அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி கூற,படுக்கைத் தலையில் இப்படிச் சில வார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதைப் பரகால நாயகியின் தாய்மார் தோழிமார் முதலானார் செவியுற்று, “நங்காய்! ஏதேனும் ப்ரமித்தாயோ?இவை யென்ன வார்த்தைகள்?” என்று கேட்க, “‘ப்ரமித்தேனல்லேன். ஒரு மஹா புருஷரை ஸேவிக்கப் பெற்றேன். அவரார் கொல்?’ என்று கேட்டேன். திருவட்ட புயகரத்து நாயனார், ‘நான்தான் அட்டபுயகரத்தேன்’ என்று உத்தர மருளிச் செய்கிறார் காண்மின்”-என்று பரகாலநாயகி தன் தாய்மார்க்கும் தோழிமார்க் கும் நடந்த வரலாறு சொல்லுவதாயிருக்கிறது இத்திருமொழி. இங்கு முக்கிய மாகக்குறிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் கேளீர். ‘அட்டபுயகரத்தேன் -அட்ட புயகரத்திலுள்ளவன் நான் என்று பொருள். ‘அஷ்டபுஜன்’ என்பது எம்பெருமா னுடைய திருநாமம்; எட்டுத் திருக்கைகளை யுடையவன் என்று பொருள். ருஹ மென்ற வடசொல் கரமெனத் திரியும்; ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் அட்டபுயகரம்; (திவ்ய தேசத்தைச் சொன்னபடி.) அவ்விடத்திலுள்ளவன் நான் என்றதாயிற்று. நான் அட்டபுயன்’ என்றே எம்பெருமான மறுமொழி கூறி யிருக்கலாமே; தலையைச்சுற்றி மூக்கைப் பிடிப்பதுபோல இங்ஙனே ஏதுக்குச் சொன்னான் ! என்று கேள்வி பிறக்கும்; கேண்மின்; ‘நான் அட்டபுயன்’ என்று சொல்லிக்கொண்டால் தன்னை எம்பெருமானாகத் தானே வெளியிட்டுக்கொண்டதாக விளங்கிவிடும். அப்படி ஸ்பஷ்டமாகச் சொல்லிக்கொள்ள எம்பெருமானுக்குத் திருவுள்ளமில்லை. வேற்றுமனிதனாகப் பொய் சொல்லிக்கொள்ளவும் விருப்பமில்லை ஆகவே,வெகு சாதுர்யமாகச் சொல்லிக்கொள்ளுகிறான் ‘அட்டபுயகரத்தேன ‘ என்று. ‘அஷ்டபுஜ க்ஷேத்ரத்திற்கு நான் அதிபதி’ என்றதாகவுமாம். ‘அஷ்டபுஜ க்ஷேத்ரத்திலே கிடப்பானொருவன் நான்’ என்று ஸாமா யமாகச்சொல்லிக்கொண்டதாகவுமாம்.-துஷ்யந்த மஹாராஜன் வேட்டையாடிக்கொண்டே சகுந்தலையின் இருப் பிடத்தை அடைந்தபோது அவனின்னானென்று தெரிந்துகொள்ள விரும்பி நீயார்?’ என்று கேட்டார்க்கு அரசன் விடை கூறும்போது ”பவதி ய: பெளரவேண ராஜ்ஞா தர்மாதிகாரே நியுக்த: ஸோஹம்” (புருவம்சத்து அரசனாலே தரும காரியங்களைச் செய்யுமாறு நியமிக்கப்பட்டவன் நான்) என்று சாதுர்யமாக விடைகூறினது இங்கு நினைக்கத்தக்கது. புருவம்சத்து அரசனாகிய தன் தந்தையினால் நியமிக்கப்பட்ட அரசன்தான் என்றும்,புருவம்சத்து ராஜாவுக்கு வேலைக்காரன் தான் என்றும் இருவகையாகப் பொருள்படுமாறு உரைத்தது காண்க. அட்டபுயவகரம்’ என்பது அட்டபுய கரம் என மருவிற்றென்றலும் பொருந்தும்; அகரமாவது அக்ரஹாரம்.
குகன் கூறியதாக வைத்த பாட்டுக்களில் இஃது ஒன்று. (அதாவது) “அஞ்சனவண்ணனென்னாருயிர் நாயகனாளாமே வஞ்சனையாலரசெய்திய மைந்தரும் வந்தாரே,செஞ்சர மென்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனையோதாரோ”. இதன் பொருளாவது, “எனது அருமைப் பிராணநாதனாகிய கரியகோலக் காகுத்தன் அரசாட்சி செய்யமுடியாதபடி வஞ்சனை வழியினால் ராஜ்யத்தையடைந்த பிரபுவும் இங்கு வந்துவிட்டாரோ ? நெருப்பைக் கக்கவல்லவையான எனது சிவந்த அம்பெனப்படுபவை இப்பரதன் மேற் செலலமாட்டாவோ? இவர் எனது அம்புக் குத் தப்பிப் பிழைத்துப்போய்விட்டால் நீசனிவனென்று உலகத்தார் என்னை இகழாரோ?” என்பதாம். உலகில் நாய்கள் நன்றியறிவிற் சிறந்தவை யென்று பேர்பெற்றிருக்கவும், சில நாய்கள் எதிரிகளிடும் தின்பண்டங்களைத் தின்று கொண்டு வாளாவிருத்தலுமுண்டு; அதைக் கருதி “நாய்க் குகன் என்று எனையோ தாரோ?”என்றதாகக் கொள்ளுதல் சிறக்கும்.
“அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாச்ரம வித்யா வருத்தங்களை கர்த்தப ஐந்மம் ச்வபசாதமம் சில்பநைபுணம் பஸ்மாஹுதி சவவிதவாலங்கார மென்று கழிப்பர்கள்”. இதன் கருத்துச் சுருக்கமாவது :எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தலே ஆத்மாவுக்கு நிரூபகமென்று நிஷ்கர்ஷித்து அதற்குத் தகுதியாக த்யாஜ்ய உபாதேயங்களைப் பகுத்துணரத்தக்க ஞானமில்லாதவர்கள், எம்பெருமானது ஸம்பந்த மின்மையாலே நிக்ருஷ்டங்களா யிருக்கிற வர்ண, ஆச்ரம, வித்யாவ்ருத்தங்களை உத்தமவர்ணமென்றும், உத்தமாச்ரமமென்றும், ஸத்வித்யை யென்றும், ஸத்வருத்தமென்றும் உத்ருஷ்டமாக ப்ரமித்திருப்பர்கள்; ஆனால் அவற்றை ஞானிகள் இகழ்வர்கள்; எங்ஙனே என்னில்; -*சதுர்வேததரோ விப்ரோ வாஸுதேவம் நவிந்ததி, வேதபாரபராக்ராந்தஸ் ஸவைப்ராஹ்மண கர்த்தப: என்று நான்கு வேதங்களையும் அதிகரித்துவைத்தே வேதவிழுப்பொருளாகிய எம்பெருமானை அறியாதவன் குங்குமஞ்சுமந்த கழுதை போலே தான் சுமந்துகொண்டு திரிகிற வேதத்தின் பரிமள மறியாத பிராமணக் கழுதை யென்றும், ச்வபசோபி மஹீபால் ! விஷ்ணு பக்தோ த்விஜாதிக , விஷ்ணு பக்திவிஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம: என்று உத்தமாச்ரமியானாலும் எம்பெருமானிடத்தில் பக்தியில்லா தவன் சண்டாளனிற்காட்டிலும் கீழ்ப்பட்டவனென்றும்,தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே, ஆயாஸாய அபரம் கர்ம வித்யாந்யா சில்பநைபுணம் என்று மோக்ஷார்த்தமாக உபயோகப்படும் வித்யை எதுவோ அதுவே வித்யையாகும், அப்படியல்லாதது செருப்புக் குத்தக்கற்ற கல்வி போன்றதேயாகும் என்றும், ஆம்நாயாப்யஸநாநி அரண்யருதிதம் வேதவரதா நி அந்வஹம் மேதச்சேத பலாநி பூர்த்தவிதயஸ் ஸர்வே ஹதம் பஸ்மநி, தீர்த்தாநா வகாஹநாநி ச க ஸ்நானம் விநா யத்பதத்வந்த்வாம்போருஹஸம்ஸ்ம்ருதீர் விஜயதே. தேவஸ் ஸ நாராயண: (முகுந்தமாலை) என்று எம்பெருமானுடைய சிந்தனை யில்லா தவர்கள் செய்கின்ற க மா நுஷ்டானம் சாம்பலிலிட்ட ஆஹுதி போலே ப்ரயோஜனமற்றது என்றும், பஸ்யாகிலாமீவஹபிஸ்ஸுமங்கலை: வாசோ விமிச்ரா குணகர்மஜ மபி , ப்ராணந்தி சும்பந்தி புநந்திவை ஜகத்யாஸ் தத்வியுக்தாச் சவசோபநா மதா:-விஷ்ணு பக்திவிஹீநஸ்ய வேதச் சாஸ்த்ரம் ஜபஸ் தப:அப்ராணஸ்யேவ தேஹஸ்ய மண்டநம் லோகரஞ்ஜநம் என்று பகவத் விஷயத்தில் அந்வயம் பெறாத உக்திகளும் பகவத்பக்தியில்லா தவனுடைய அறிவு நடத்தையும் பிணக்கோலம் செய்வாதொக்குமென்றும், * ப்ராதுர்ப்பாவைஸ் ஸுர நஸமாதேவ தேவஸ் ததீயா ஜாத்யா வருத்தைரபி ச குணதஸ் தாத்ரூசோ நாத்ர கர்ஹா, கிந்து ஸ்ரீமத், புவநபவநத்ராணத : அந்யேஷு வித்யாவருத்தப்ராயோ பவதி விதவாகல்ப கல்ப: ப்ரகர்ஷ என்று பகவத் விஷயத்தில் அந்வயமற்றவர்களுடைய கல்வி யொழுக்கச் சிறப்புகள் பகவத் ஸம்பந்த ஜ்ஞாநமாகிற ஸுமங்கலி லணமில்லாமை பற்றி விதவாலங்கார துல்யமென்றும் ஞானிகள் இகழ்வர்கள் ஆக இப்படி பகவத்விஷய ஸம்பந்தமற்ற வர்ணாச்ரமங்களும் ஞானவொழுக்கங்களும் ஹேய மென்கையாலே கீழே தாழ்ந்தஐந்மமாகக் கருதப்பட்ட ஐன்மம் இன்னதென்று நிரூபிக்கப்பட்டதாயிற்று.
திருவாய்மொழியில் (9-3-2) “அவனே யகல்ஞாலம்” என்கிற பாசுரத்தில்’அவனே’ என்கிற சொல் ஏழு விசை வந்திருக்கிறது. முன்னடிகளில் இருவிசை மட்டுமே. பின்னடிகளில் ஐந்துவிசை அச்சொல் வந்துள்ளது. ‘வேதந்தமிழ்செய்த மாறன்’ என்பதை மூதலிக்குமிவ்விடம். வேதமோதாதவர்கள் இவ்விடத்திற்குப் பொருளுணரவியலாது.-அவனே அவனுமித்யாதி- பிரமன், சிவன், இந்திரன் முதலானாருடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளும் அவனிட்ட வழக்கென்கிறது. பிரமன், சிவன், இந்திரன் முதலானாருடைய பெயர்கள் ஒன்றும்பாசுரத்தில் இல்லையே என்று சங்கிக்கவேண்டா ; அவனும் அவனும் அவனும் என்று சுட்டு ப் பெயர்களாகவே இங்கெடுத்திருப்பது உபநிஷச்சாயை;
நாராயணாநுவாகத்தில் ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர: பரமஸ்ஸ்வ
ராட்* என்று ஸ:, ஸ;, ஸ : என்று நிர்தேசித்திருப்பவற்றையே -“அவனுமவனுமவனும்” என்றருளிச் செய்தபடி. “மற்றெல்லாமும் அவனே அறிந்தனமே — பிரமன் சிவனிந்திரனென்று பிரித்துச் சொல்ல வேணுமோ? ப்ரதாநர் அப்ரதா நர் என்கிற வாசி யின்றிக்கே ஸகல சேதநாசேதநர்களும் அவனிட்டவழக்கே என்னுமிவ்விஷயத்தை எம்பெருமானே உணர்த்த உணர்ந்தேனென்றபடி. மயர்வறமதிநலமருளப்பெற்றவரிறே இவர்தாம்.
பெரியாழ்வார் திருமொழி (2-7-8) சீமாலிகனவன் பாசுரத்தின் மூன்றாமடி இது. இங்கு ஆமாறறியும் பிரானே! என்று எம்பெருபானை விளித்தது வெறும்னன்று; எதுகைக்காகவன்று. இப்பாட்டின் முன்னடிகளிற் குறித்த கதையாவது மாலிகன் என்பவனோடு தோழமை கொண்டு பிறகு அவனையே சக்கரப்படையினால்
கண்ணபிரான் தொலைத்தருளினான் என்பது. தோழமை கொண்டவிடத்தில் இத்தகைய தீய செயல் செய்வது தகுமா என்று விவேகிகளுக்குக் கலக்கமுண்டாகும்.அதற்குப் பரிகாரமாகவே ‘ஆமாறறியும்பிரானே! என்ற விளி அவதரித்தது.ஸமய விசேஷங்களில் செய்யவேண்டியவற்றைச் செவ்வனே உணர்ந்து செய்ய வல்லவன் எம்பெருமான் ஆதலால் அவனுடைய செயலில் ஏதும் சங்கிக்கலாகாது என்று தெளிவித்தபடி.
“அமரர்க்கறியலாகுமோ? நாமே அறிவோம்” என்று கம்பீரமாக ஸாதிக்கிறார்-பொய்கையாழ்வார். அக்கதையை “பூமேய மாதவத்தோன்தாள்பணிந்த வாளரக்கன் நீண் முடியைப் பாதமத்தாலெண்ணினான் பண்பு” என்ற-இக்கதையை இதிஹாஸ புராணங்களில் இவ்வரலாறு உள்ளவிடம் தெரியவில்லை. மூன்றாம் திருவந்தாதியில் (77) ஆய்ந்தவருமறையோன் என்று தொடங்கும் பாசுரத்தில் பேயாழ்வாரும், நான்முகன் திருவந்தாதியில் (44) கொண்டுகுடங்கால் என்னும் பாசுரத்தில் திருமழிசையாழ்வாரும் இக்கதையை அநுஸந்தித்துள்ளனர்.
ஆயிரந்தோள் பரப்பி முடியாயிரம்-எம்பெருமானைப்பற்றி ஆயிரமாயிரமாகப் பேசுவதில் ஒரு விநோதரஸம் விஜ்ஞாபிக்ிறேன். வேதபுருஷன் மூன்று ஆயிரம் காட்டினான். திருமங்கை யாழ்வார் நான்கு ஆயிரம் காட்டினார். நம்மாழ்வார் ஐந்து ஆயிரம் காட்டினார் பெரியாழ்வார் ஆறு ஆயிரம் காட்டினார். [ இதை அடைவே விவரிக்கின்றேன்.](1) வேதபுருஷன் ‘ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்‘ என்று மூன்று ஸஹஸ்ரபதங்களாலே மூவாயிரம் காட்டினான். (2) திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 5-7-6 ‘ஆயிரங் குன்றம் சென்று தொக்கனைய அடல்புரை யெழில் திகழ்திரடோள் ஆயிரந்துணியவடல் மழுப்பற்றி மற்றவனகல் விசும்பணைய, ஆயிரம் பெயராலமரர் சென்றிறைஞ்ச அறிதுயிலலைகடல் நடுவே ஆயிரஞ்சுடர் வாயரவணைத் துயின்றானரங்க மாநகர் அமர்ந்தானே” என்ற பாசுரத்தில் நாலாயிரம் காட்டினார். (3) நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-1-10) தாள்களை எனக்கே என்கிற பாட்டில் ‘தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” என்று ஐந்து ஆயிரம் காட்டினார். (4) பெரியாழ்வார் தமது திருமொழியில் (4-3-10) “ஆயிரந்தோள்பரப்பி முடியாயிரமின்னிலக, ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை, ஆயிரமாறுகளும் சுனைகள் பலவாயிரமும் ஆயிரம் பூம்பொழிலுமுடை மலிருஞ்சோலையதே” என்கிற பாசுரத்தில் ஆறு ஆயிரங்கள் காட்டினார்.-இவற்றை எடுத்துரைத்தல் அநுபவ ரஸிகர்களுக்குப் பரம போக்யமாயிருக்கும் .
ஆங்காரவார மதுகேட்டு, அழலுமிழும் பூங்காரரவணையான் பொன்மேனி,-யாங்காண வல்லமேயல்லமே மாமலரான் வார்சடையான், வல்லார யல்லரே வாழ்த்து” இதன் கருத்தாவது. ‘ஆங்கு’ என்றது பரமபத்த்திலே என்றபடி. அவ் விடத்தில் ஆரவாரமாவது நித்ய முக்தர்கள் பெருமிடறுசெய்து ஸாமகாநம் பண்ணுவர்களே அந்த ஆரவாரம். அது திருவனந்தாழ்வானுடைய செவியிற்பட்டவாறே ‘இது ஸாம கோஷம்’ என்பதை மறந்து அஸுரராக்ஷஸர்கள் தீங்கிழைக்க இவ்விபூதியிலும் வந்து கூச்சலிடுகின்றார்கள் போலும்’ என்று ப்ரேமமடியாகக்கலங்கி, அவர்கள் எம்பெருமானருகிற் கிட்டமுடியாதபடிவிஷாக்நியை
வாந்தி செய்துகொண்டேயிருக்கிறானாம்.-அஸ்தாநே பயசங்கை திருநாட்டிலு முண்டென்பதை பட்டரும் ஸ்ரீ குணரத்த கோசத்தில் “ஸ்நேஹாத் அஸ்தாநரக்ஷா வ்ய நிபிரபயம் சார்ங்கசக்ராஸி முக்க்யை:” என்கிற ச்லோகத்தினால் அருளிச் செய்தார்.
“ஆழநெடுந்திரையாறு கடந்திவர்போவாரோ? வேழநெடும்படை கண்டு விலங்கிடு வில்லா ேளா? தோழமையென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ? ஏழைமை வேடனிறந்திலனென்றெனையேசாரோ?” என்பது. இதன் கருத்தாவது, “இப்பரதன் ஆழத்தையும் நீட்சியையும் அலைகளையு முடைய இக்கங்கையாற்றை என்னுதவியில்லாமல் தாண்டிப்போக வல்லவரோ? நான் இவனுடைய யானைச்சேனைகளைக் கண்டு அஞ்சிநடுங்கி விலங்கிப்போகும் வில் வீரனே?
அவ்விராமன் என்னைத் தோழனாகக் கொண்டு சொல்லியவார்த்தை எப்படிப்பட்டது! அந்நட்புக்கு ஏற்ப நான் நடவாவிட்டால் எளியனான இவ்வேடன் இங்ஙனம்மானங்கெட்டு வாழ்வதைவிட இறந்திருக்கலாகாதா என்று என்னை உலகத்தார்பழிக்க மாட்டாரா?” என்றாம்.”தாமேவ இக்ஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு” என்று இளையபெருமாளை நோக்கிச் சொல்லுகிற இராமபிரான் பரதாழ்வானுடைய நற்குணங்களைக் குகனோடு பேசியிருப்பர் என்பதில் ஐயமில்லை. அதனால் குகன் பரதனுடைய உண்மைத் தன்மையை அறிந்தேயிருக்கக்கடவன். அப்படியிருந்தும், அந்தப் பரதன்திறத்தில் இப்போது இவ்வளவு தீவிரமாகப் பேசுவது பொருந்துமா என்று சங்கிக்கவே நேரும். இதுதான் பரிவின் மிகுதி
யாலுண்டாகும் அஸ்த்தாநே பயசங்கை என்பது. இது பரமப்ரேமசாலிகளின் உள்ளத்திற்கே நிலமாகும்-
”ஆசாரியர்களனைவரு முன்னாசரித்த வாசாரந்தன்னை யறியாதார், பேசு
சேர்’ கேட்டுமருளாதே பூருவர்கள் சீர்த்த நிலைதன்னை நெஞ்சே இப்பாசுரத்தின் கருத்தாவது,”பூருவாசாரியர்களெல்லாரும் அனுஷ்டித் துப் போந்த அனுட்டானத்தை அறியப்பெறாதவர்கள் கண்டபடி சொல்லுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மனம் திரியாமல் முன்னோருடைய சீரிய நிஷ்டையையே மனமே சிலர் புதிதுபுதிதாகச்! அனுவர்த்திக்கப் பார்” என்பது. புதுவைஷ்ணவங் கொ ண்டா டு ஞ் சில நடத்தைகளைக் கைப்பற்றி, இதைச் செய்ய வேணும் இதை அனுட்டிக்கவேணும்’ என்றிப்படிப் பேசவும் திருத்தவும் புறப்படுவர்கள்; நம்முடைய பூருவாசாரியர்களின் அனுஷ்டான முறைமைகளைத் தெரிந்து அந்தப் பேச்சுக்களினால் மனம் திரியாமல் செய்யாதன செய்யோம்” என்றும் *மேலையார் செய்வனகள் * என்றும் ஆண்டாள் அருளிச் செய்தபடியே பூர்வாநுஷ்டான ஸரணியிலேயே வர்த்தித்தல் வேண்டுமென்று நியமித்தாராயிற்று. திருப்பாவையில் “செய்யாதன செய்யோம்” என்றவிடத் திற்கு பூர்வர்கள் அருளிய வ்யாக்யானமாவது ‘ “சாஸ்த்ரம் விதித்ததே யாகிலும் தர்மஜ் ஸமயப்ரமாணமாகையாலே மேலையார் செய்யாதவற்றைச் செய்யக் கடவோமல்லோம்” என்பதாம்…
இராமானுச நூற்றந்தாதியில் (33) “ அடையார் கமலத்தலர்மகள் கேள் வன் கையாழி யென்னும் படையோடு நாந்தகமும் படர்தண்டும் ஒண்சார்ங்கவில் லும் புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங்காப்பதற்கென்றிடையே இராமாநுச முனியாயின இந்நிலத்தே‘ என்கிற பாசுரத்தினால் எம்பெருமானார் பஞ்சாயுதாழ் வார்களின் திருவவதாரபூதர் என்பது தெரிய வருகிறது. இதை அடியொற்றி வேதாந்தவாசிரியர் யதிராஜஸப்ததியில் ‘அப்ருதக் ப்ரதிபந்நயந்மயத்தை: வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே:‘ என்று பணித்தார். அவர்தாமே அந்த ஸப்ததியிலேயே விஷ்வக்ஸேநோ யதிபதி ரபூத்வேத்ரஸாரஸ்த்ரிதண்ட:’ என்று விஷ்வக்ஸேநாவ தாரமாகவும்றில் பணித்தார். எம்பெருமானாரைப் பற்றின சரித்திர நூல்கள் பலவற்உண்மையானதென்று திருவனந்தாழ்வானவதார மென்று பேசப்பட்டுள்ளது.
தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருமாலையில் மூன்றாவது பாசுரமிது வென்பது ப்ரஸித்தம். பிறவியில் நேரக்கூடிய வருத்தங்கள் பலவற்றையும் விரியக்கூறி, ‘ஆதலால் பிறவி வேண்டேன்’ என்கிறார். இப்படிப் பிறவியை வெறுப்பவர்சுள்பெரும்பாலும் ஆழ்வார்களனைவருமாவர். நம்மாழ்வார் இருள்தருமா ஞாலத்துளினிப்பிறவியான் வேண்டேன்’ என்றார். பெரியாழ்வார் மறுபிறவி தவிரத்திருத்தி உன் கோயில் கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலை யெந்தாய்‘ என்றார்.திருமழிசைப்பிரான் இயக்கறாத பல்பிறப்பிலென்னைமாற்றி‘ என்றார். இங்னேபல பாசுரங்கள் காண்கிறோம். ஆண்டாளொருத்தியே ‘எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும்’ என்பதனால் மேன்மேலும் பிறந்து கொண்டேயிருக்க வேண்டுமென்னும்அவாவை ஆவிஷ்கரித்தாள்
திருவாய்மொழியில் (6-7-5) மேவிநைந்துநைந்து விளையாடலுறாள்‘ என்கிறபாசுரத்தின் ஈற்றடி ஆவியுள்குளிர எங்ஙனே உகக்குங்கொலின்றே-. நம்மாழ்வார் திருக்கோளூரில் அவகாஹித்த படியைத் தாய் பாசுரத்தாலே சொல்லுகிறார். ‘ஆவியுள்குளிர’ என்றவிடத்து ஈட்டிலே சுவைமிக்க ஓர் ஐதி யமுள்ளது. அதாவது; இவ்விடத்தை பட்டர் அருளிச்செய்யா நிற்கச் செய்தே மேலெழ அருளிச் செய்தாராய், சீராமப்பிள்ளை இருந்தவர்’ஜீயா! எம்பார் அருளிச்செய்யும்போது ஆவியு(3)ள் குளிர என்று முகந்துகொண்டருளிச் செய்யும்படி கேட்டறிகை யில்லையோ என்றருளிச்செய்தார்.’ ( இதனைச்சிறிது விளக்குவோம்.) நாம் எல்லாரும் ஸந்தை சொல்லும்போதும் ஸன்னிதியில்ஸேவிக்கும் போதும் ஆவியுள் குளிர’ என்று ஸாதாரணமாகச் சொல்லிப் போருகிறோம். ஒருகால் பட்டரும் இங்ஙனே அநுஸந்தித்தருள, அதுகேட்ட அவருடையதிருத்தம்பியாரான சீராமப்பிள்ளை இவ்விடத்தை எம்பார் அநுஸந்திக்கும்படியைநினைவூட்டினார். ஆழ்வார் ‘ஆராவமுதாய் அடியேனாவியகமே தித்திப்பாய்’ என்றருளிச் செய்தவராகையாலே ‘உள்குளிர’ என்பதை ஸாமாந்யமாகச் சொல்லிப்போய்விடாமல் ஆழ அழுத்திச் சொல்லவேணுமென்று காட்டினபடி, இதில் ‘ஜீயா!’ என்றது ‘ஸ்வாமிந்’ என்றபடி. முற்காலத்தில் பெரியோர்களைச் சீயரென்று வழங்கிவந்தார்கள். சீரியர் என்பதுதான் சீயர் என்பது. அன்றி, சீயம் போன்றவர் சீயர் என்று கொண்டு புருஷஸிம்ஹமானவர் என்றும் கொள்வர்-
திருவாய்மொழியில் (7-9-3) ‘ஆமுதல்வனிவன் என்றுதொடங்கும் பாசுரத்தின் விசேஷ விவரணம் கேண்மின்.ஆமுதல்வனிவன்’ என்பதற்கு இரண்டுவகையான நிர்வாஹம். முதல்வன் என்கிறவிது எம்பெருமானிடத்திலே அந்வயிப்பதாகஒரு நிர்வாஹம். அது ஆழ்வாரிடத்திலே அந்வயிப்பதாக மற்றொரு நிர்வாஹம்.-இந்த எம்பெருமானே ஜகத்கார பூதனென்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு பிறக்கும்படியாகப்பண்ணி’ என்பது முதல் நிர்வாஹத்தின் பொருள். குருகூர்ச்சடகோபனாகிறவிவன் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளும் விஷயத்திலே முதல்வனாகக் கடவன்- தலைவனாகக் கடவன் என்று திருவுள்ளம்பற்றி என் பக்கலிலேதன் ஸ்வரூபாதிகளைத் தெளியப்பண்ணி’ என்பது இரண்டாம் நிர்வாஹத்தின் பொருள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்: ‘காரணவாக்யங்களில் உபாஸ்யனாகச்சொல் லப்படுகிறான் தானேயென்று தன் பக்கலிலே தெளியும்படி பண்ணியென்னுதல்; அன்றிக்கே, பரமபதத்தோபாதி ஸம்ஸாரத்தையும் திருத்த நினைத்தோம்; அதுக்கு இவன் முதலாம்-அடியாமிவனென்று என் பக்கலிலே தன் ஸ்வரூபாதிகளைத் தெளியப் பண்ணி யென்னுதல். இங்கே யருளிச்செய்யும் வார்த்தை- திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் ஸோ பானத்தில் ஆளவந்தார் எழுந் தருளியிருக்க, உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளிநிற்கக்கண்டு–ஆமுதல்வனிவன். என்றருளிச் செய்தாராம் என்று.(ஸ்ரீ காஞ்சீ ஹஸ்தி கிரியில் திருமடைப்பள்ளி ப்ரதக்ஷிணவீதியிலே ஆளவந்தார் யாதவப்ரகாசனோடே யிருந்த எம்பெருமானாரைத் திருக்கச்சிநம்பிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு ஆம் முதல்வனிவன்’ என்று குளிரக் கடாக்ஷித்தருளின ஐதி யத்தையருளிச் செய்தபடி. இதனால், இரண்டாவது நிர்வாஹம் ஆளவந்தார் திருவுள்ளத்திற்கு மிகவுமிணங்கினதென்று காட்டினபடி. ஸ்ரீமத்ப்யாம் ஸ்யாதஸாவிதி’ என்கிற அதிகரணஸாராவளி ச்லோகத்தில் ஸ்யாத் அஸௌ என்றதும் இப்பொருளதே.]
ஆஹாயம் வை ப்ரஜாபதேர் விபாந் நாம லோக:-இது வேதவாக்கியம். க்ருஷ்ண யஸ்ஸம்ஹிதையில் முதற்காண்டம் ஏழா வது ப்ரச்நத்தில் இது ஒரு பஞ்சாதியடி. [விநோதமான ஒரு இதிஹாஸம்] நான் வேத மோதி முடித்தபோது ஒரு ஸமயம் குளித்தலைக்குச் சென்றிருந்தேன்.அங்கே அப் போது ஒரு வேத பாடசாலை மஹா விபவமாக நடந்துகொண்டிருந்தது. அதில் உபாத்யாயராக இருந்த ஒரு கனபாடியோடு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதெனக்கு.-நான் அங்குச் சென்றபோது அவர் வித்யார்த்திகளை பரீக்ஷைசெய்துகொண்டிருந்தார்-அது ஸாதாரண பரீக்ஷை; அவரிடம் நான் சொன்னேன், ‘என்னை எவ்விதமாகவும் பரீக்ஷிக்கலாம் நீங்கள். வேண்டியமட்டும் பரீக்ஷியுங்கள்’ என்று. அவர் பல கேள்விகள் கேட்டுவந்தார். அவற்றில் இது ஒரு கேள்வி. ‘மூன்றெழுத்தில் ஒரு பஞ்சாதி யடி. அது தமிழ்ப்பதமாகவும் இருக்கும். அதைச் சொல்லுவீர்களா என்றார்.-உடனே ‘ஆகா‘ என்றேன். அதற்கு ஆகட்டும் என்று பொருள் என்று சிலர் நினைக்கக்கூடும். கேள்வி கேட்டவர் உண்மை தெரிந்துகொண்டார். ‘ஆஹாயம் வை ப்ரஜாபதே:’ என்கிற பஞ்சாதியைத்தான் அவர் கேட்டார். அதையே நான் சொல்லிவிட்டேன்.(அங்கு ஆஹா அயம் என்று பதம்) ஆகாயம் என்பது தமிழ்ப் பதம். அதன் பக்கத்தில் வை என்பதும் தமிழாகவுள்ளது. இப்படி மற்றொரு பஞ்சாதி சொல்லுவீரோ’ என்றார். “ஆவாயோ ” என்றேன். முதல்காண்டம் நாலாவது ப்ரச்நத்தில் ” ஆ வாயோ பூஷ ஸுசிபா!” என்று அநுவாகத் தொடக்கம்.ஸம்ஸ்க்ருதத்தில் ஆ வாயோ என்று இரண்டு பதம். தமிழில் ஆவாய் ஓ என்று இரண்டு பதம்.
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் கைகேசி சூழ்வினைப் பட லத்தில் 108-ஆம் பாட்டு “இப்பொழு தெம்மனோரா லியம்புதற்கெளிதோ யாருஞ் செப்பருங்குணத்திராமன் திருமுகச்செவ்விநோக்கின் ஒப்பதே முன்பு, பின்புவாசகமுரைக்கக்கேட்ட-அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா’என்பது.- உண்மையில் சிறிதும் வருத்தமுண்டாகாததோடு பரம ஸந்தோஷமே உண்டாயிற்றென்பதை வான்மீகி முனிவர் “வநவாஸோ மஹோதய” என்று இளையபெருமாளை நோக்கிச் சொன்ன சொல்லால் தெரிவித்தார்.-பெரியாழ்வாரும் தமது திருமொழியில் (3-9-4) “கூற்றுத்தாய் சொல்லக் கொடியவனம் போன சீற்றமிலாதானைப் பாடிப்பற” என்றார். இதில் ” சீற்றமிலாதான்“
என்றது உயிரானது. இவற்றிற்காட்டிலும் மிகமேம்பாடாகக் கம்பர் தெரிவிக்கிறார். வநவாஸ ப்ரஸ்தாவம் வந்தகாலத்தில் இராமபிரானுடைய திருமுகமண்டலம் இருந்தவிதத்தை அக்காலத்தில் நேரில் கண்டவர்கள் எடுத்துரைக்க வேணுமேயல்லது, எத்தனையோ ஆயிரக்கணக்காண ஆண்டுகட்கு அப்பால் இன்று பிறந்துள்ள நானா அதைச் சொல்லுவது!’ எ ன்று கையொழிந்து ஏடுகளைக்கட்டிஉள்ளே வைத்திட்டுச் சயனித்தாராம் கம்பர் ; இராமபிரான் கனவிலே தோன்றி வனவாஸக் கட்டளைக்கு முன்பிருந்த முக ஸந்நிவேசத்தையும் பின்பிருந்த முக ஸந்நிவேசத்தையும் காட்டிக்கொடுக்க, உடனே துயிலெழுந்து செய்யுளைப் பூர்த்திசெய் தாரென்று ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுவதுண்டு. ”சந்த்ரைகாந்தா நநம் ராமம்“(வா. ஸ்ரீராமாயணம். அயோத்தி. 3-28) என்கிற ச்லோகத்திற்கு “சந்த்ரவத்காந்தம் ஆநநம் யஸ்ய ‘ என்றொரு விக்ரஹமும்,”‘சந்த்ராத் காந்தம் ஆநநம் யஸ்ய” என்று மற்றொரு விக்ரஹமும் சொல்லுவதுண்டு. சந்திரன்போல்அழகிய முகமுடையவன் என்பது முந்தின விக்ரஹ வாக்யத்தின் பொருள்; சந்திர னிற்காட்டிலும் மிகவழகிய முகமுடையவன் என்பது பிந்தின விக்ரஹ வாக்யத்தின் பொருள். வநவாஸ ப்ரஸ்தாவ மில்லா திருந்த காலத்தில் முந்தின விக்ரஹப் பொருள் அவகாசம் பெற்றிருந்தது; வனவாஸக் கட்டளை விளைந்தவுடனே பிந்தின விக்ரஹப் பொருள் அவகாசம் பெற்றது என்று கொள்க.
பெரிய திருமொழியில் வாடினேன் வாடி’ பதிகத்தின் ஈற்றுப் பாசுரத்தில் “மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்” என்றுள்ளது. வண்டுகள் பூங்கொத்துக்களில் மொய்க்குமே யல்லது நீரிலே மொய்க்குமா என்றொரு சங்கை தோன்றக்கூடு மென்று நினைத்த பெரியவாச்சான்பிள்ளை அப்பாசுரத்தின் தமது வியாக்கியானத் தில், “ஜலத்தினுடைய ரஸ்யதையாலே ஈக்கள் வண்டொடு மொய்ப்ப’ வென்று ஆற்று வரவுகளிலே சொல்லுவர்களாய்த்து தமிழர்” என்று அருளிச்செய்துள்ளார். இங்குத் தமிழர் என்றது கம்பரை. அவருடைய பாட்டு “ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிசுந்து ஊக்கமே மிக உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலின் தீம்புனல் வாக்குந் தேனுகர் மாக்களைமானுமே “ என்பதாம்.
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்-திருவாய்மொழியில் (4-3-8) *என்னதாவி மேலையாய் என்கிற பாட்டின் மூன்றாமடி யிது.- ‘என்னதாவி உன்னது’ என்பது முதலிலுள்ளது. ஜீவாத்ம ஸ்வரூபம் பரமாத்மாவுக்கு அதீனம் என்பது இத னால் விளங்கிற்று. உடனே ‘உன்னதாவி என்னது’ என்றுள்ளது. இதனால் பரமாத்ம ஸ்வரூபம் ஜீவாத்மாவுக்கு அதீனம் என்று தெரிவிக்கப்பட்டதாகிறது. ஆராயுமள வில் முதலிற் சொன்னது பொருந்துமேயன்றி இரண்டாவதாகச் சொன்னது பொருந்த வழியில்லை. ஏனென்றால் ஜீ ாத்மஸ்வரூபம் பரமாத்மாதீனம் என்பது நிர்விவாதம். பரமாத்மஸ்வரூபம் ஜீவாத்மாதீனம் என்பது இசையக்கூடிய விஷய மன்றே. ஆகவே இது பொருந்தாதென்று சந்தேகிக்க இடமுண்டாகிறது. ஆள வந்தார் கோஷ்டியில் திருவாய்மொழி சேட்டுவந்த சிஷ்யர்கள் ஆளவந்தார் திரு வடிகளிலே இந்த ஆக்ஷேபத்தைவிண்ணப்பஞ் செய்தார்கள். அதற்கு ஆளவந்தார்அருளிச்செய்தது மிகமிகச் சுவைமிக்கது. ஜீவாத்மஸ்வரூபம் பரமாத்மாதீனம் என் பது உண்மையே. ஆனால் அவன் ‘த்வும் மே’ என்றால் இவன் அஹம் மே’ என்பவன் ஆகையாலே அதற்குத் தடையேற்பட்டு விடுகிறது. அது கருமத்தினாலானது. பரமாத்மா தன்னுடைய ஸ்வாதந்த்ர்யத்தாலும் கருணையினாலும் ஜீவாத்மாவுக்கு அதீன்னாகிறபோது தடை செய்வாரில்லையே. சிஷ்யர்களே! நீங்கள் ‘உன்னதென்ன தாவியும் என்பதிலே ஆக்ஷேபம் காட்டவேணுமேயொழிய ‘என்ன துன்னதாவியும் என்பதிலே ஆக்ஷேபம் காட்ட இடமில்லையே‘ என்று அருளிச்செய்தார். ‘அநந்யாதீனத்வம் தவ கில ஜகுர் வைதிககிர: பராதீனம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே” என்ற ஆழ்வான் ஸ்ரீஸூக்தியை இங்கே இணக்கிக்கொள்வது.
ஸ்ரீ ராமாநு ஜன் – 29 5-ப்ரமதீச சித்திரை |-1973 ஏப்ரல்மீவெளியிடப்பட்டது
நாரத மஹர்ஷியின் அறுபது புத்திரர்களுக்கு ப்ரபவாதி நாமங்கள் இடப்பட்டிருந்தன வென்றும் அவையே முறையே ஸம்வத்ஸர நாமங்களாயின வென்றும் பிரமாணபலத்தினால் அறிகிறோம். இந்த நாமதேயங்கள் அறுபதும் அநுஷ்டுப் சுலோகங்களில் பொறிக் கப்பட்டிருக்கின்றன. ” ப்ரபவோ விபவச்சுக்ல: ப்ரமோதோத ப்ரஜாபதி”. என்று தொடக்கமாக பத்தெட்டு சுலோகங்கள் சாந்திரத்னாகர மென்கிற க்ரந்தத்தில் காணப்பட்டன. ‘ப்ரமோதூத’ என்று நான்காவது வருஷத்தின் பெயரை நாம்
வழங்கிவருகிறோம். ‘ப்ரமோத’ என்பதே ஸம்வத்ஸர நாமதேயமென்றும், ‘அத’ என்கிற அவ்யயம் பாதபூரணத்திற்காக இடையில் இடப்பட்டதென்றும்அறிகிறோம்.
அதற்கடுத்த ஸம்வத்ஸரத்தின் நாமத்தைப்ரஜோத்பத்தி என்று நாம் சொல்லிவரு கிறோம். மேலே எடுத்துக் காட்டிய சுலோகத்தில் ‘ப்ரஜாபதி: என்றே உள்ளது.-இத் தேசத்துப் பஞ்சாங்கங்களில் ப்ரஜாபதி நாம ஸம்வத்ஸர மென்று அச்சிடப் பட்டிருந்ததையும் அப்போது கண்டிருந்தோம். இதே ரீதியில் வர்த்தமான ஸம் வத்ஸரத்தில் ஒரு பேதம் நேர்ந்திருக்கிறது. இது ‘பரமாதீ’ வருஷமென்றும், சகாரம் பாதபூரணார்த்தமாக இடப்பட்டதென்றும்சொல்லுத ற்கு இடமுள்ளது.-பஹுதாந்யவருஷத்துக்கு அடுத்ததான வருஷம் ”ப்ரமாதி’ என்றுள்ளது. அதில் கடைசி எழுத்து தவர்க விதீய மென்றும் இப்போதைய வருஷத்தில் தவர்கத்ரூதீய
மென்றும் ப்ரமாணத்தினால் அறிகிறோம். ஸங்கேதநாமங்களாக வழங்கி வருமிவற்றை மாற்றிக்கொள்வதென்பது மிகவும் சிரமம் தான். சென்ற ப்ரமாதீச வருஷத்தில்தான் நாம் வேதவேதாந்த வைஜயந்தீ பாடசாலை ஸ்தாபித்தோம். அப்போது ” ப்ரமாதீச வர்ஷே சுபே ஸிம்ஹமாஸே.…..” என்று சலோகமியற்றி சிலாசாஸனமும் செய்திருக்கிறோம். ஆனாலும் வஸ்துஸ்திதியை தெரிவித்தபடி.நடந்தபரிதாவி ஸம்வத்ஸரத்திலும் அக்ஷர பேதங்கள் ப்ரமாண ஸித்தமாயிருப்பதை தெரிவித்திருக்கிறோம்.
அங்கேஷ த்ரிஷு ஸப்தஸப்த்யயுதபா: நித்யம் நவஸ்ப்பூர்த்தித:
நித்யைர்முக்தகணைஸ்ஸதா ஸஹ யுதோபி எகாகி வாக்கோசர:;
சாதுர்வித்யமுபேயுஷாமிஹ ந்ருணாம் ஸேவ்யஸ்ஸ நாராயண:
ஸ்யாத்துர்யாச்ரமஸே விநா முனிவரேணாநேந தந்ய : க்ருதீ.
[த்ரிஷு’ அங்கேஷ திருமுடி திருமார்பு திருவடிகளாகிற மூன்று திவ்யாவயவங்களில் [ஸப்தஸப்த்யயுதபா 🙂 “கதிராயிரமிராவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்* என்கிற பெரியாழ்வார் பாசுரப்படிக்கும் ‘நறைப்படலைத்துழாய் மார்பில்நாயிறுபோல் மணி விளங்க” [திருவரங்கக்கலம்பகம்] என்கிற பிள்ளைப் பெருமாளையங்கார் பாசுரப்படிக்கும் “சொல்லமாட்டேனடியேன் உன்துளங்கு சோதித்திருப்பாதம் எல்லையில் சீரி நாயிறிரண்டு போலென்னுள்ளவா” (திருவாய்மொழி8-5-5) என்கிற நம்மாழ்வார்பாசுரப்படிக்கும் பலவாயிரம் ஸூரியர்கள் ஏக காலத்தில் ஜ்வலிப்பது போன்ற மிக்க வொளியுடையவன் என்றபடி. ஸப்தஸப்தியென்று ஸர்யனுக்குப்பெயர். அயுதமென்றது பதினாயிரமென்றபடி.-(நித்யம் நவஸ்பூர்த்தித: நித்யா நுபவம் பண்ணாநிற்கச் செய்தேயும்,“அப்பொழுதுக்கப் பொழுதென்னாரவமுதமே” என்கிறபடியே புதுமை மாறாதிருக்குமவன். இதில் நவசப்தம் சப்தசக்தியால் ஒன்பதைக் காட்டும். ஸ் தர்சன சதகத்தில், ஸப்தார்ச்சிச் சோஷிதாஷ்டாபத நவகிரண” என்றவிடம் காண்க.–(நித்யை: முக்தகணை: ஸதா ஸஹயுதோபி இத்யா தி) ப்ரளய காலத்தில் நளிர் மதிச்சடையனும் நான்முகக்கடவுளும் முதலானோர் முடிந்தாலும், நித்யவிபூதியில் நித்ய முக்தர்களின் ஸத்பாவத்துக்குக் குறையில்லையே. அப்படியிருந்தும்
“ஏகோஹவை நாராயண ஆஸ்த்” இத்யாதி மஹோபநிஷத்தில், “ஸ ஏகாகிநரமேத ” என்று எம்பெருமானை ஏகாகியாகவும் துன்புற்றிருப்பவனாகவும் ச்ருதி ஓதிற்று. இவ்விடத்தில் ஒன்று என்கிற லக்கத்திற்கு ஏகாகி என்கிற இவ்வளவே விவக்ஷிதம். “ஏகா நரமேத “ என்று ச்ருதி ஓதினதின் கருத்தை பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ வசனபூஷணத்தில், “த்ரிபாத்விபூதியிலே பரிபூர்ணானுபவம் நடவாநிற்கச் செய்தேயும், அது உண்டதுரு காட்டாதே, தேசாந்தரகதனானபுத்ரன் பக்கலிலே பித்ருஹ்ருதயம் கிடக்குமா போலே ஸம்ஸாரிகளைப் பிரிந்து ஆற்றமாட்டாதே.” என்கிற சூர்ணையினால் தெளிவித்தருளினார்.
(சாதுர்வித்த்ய முபேயுஷாமித்யா ) “சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ்ஸுக்ருதிநோர்ந; ஆர்த்தோஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப.” என்று கீதாசார்யன் பணித்தபடியே நான்குவகைப்பட்ட அதிகாரிகளால் ஸேவிக்கப்படுபவன் என்று இவ்வளவும் எம்பெருமானுக்கிட்ட விசேஷணங்கள். இதில் மாதத்தின் லக்கமாகிய நான்கு ஸசிதமாயிற்று.-(ஸ்யாத்துர்யாச்ரம ஸேவிநா முநிவரேணாநேந தந்ய: க்ருதீ) கீழ்மூன்றுபாதங்களால் விசேஷிக்கப் பட்ட எம்பெருமான் நமது ஜீயர் ஸவாமியினால் க்ருத
க்ருத்யனாகியிருப்பன் என்றால்மிகையாகாது. எம்பெருமான்ஸ்வத : கருதக்ருத்யனா
யிருக்கச் செய்தேயும், “‘ அபிஷிச்ய சலங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விவீஷணம்,
க்ருதக்ருத்யஸ்ததா ராம …” என்ற ஸ்ரீராமாயணச்லோகத்தை இங்கு அநுஸந்திப்பது. இங்கு ‘துர்யாச்ரம்’ என்பதனால் தேதி லக்கமாகிய நான்கு ஸூசிதமாயிற்று.
த்ரிலோக்யாமதோ ஸப்தலோக்யாம் தரித்ர்யாம்
நவத்வீபவத்யாம் அஸாவேக ஏவ,
சதுர்த்தாச்ரமீ ஸ்வாமிவர்யோ மஹாத்மா
சதுர்திக்விபாகேஷு நாந்யோஸ்தி தீர்:-மூவுலகங்களினுள்ளும், ஏழுலகங்களினுள்ளும், நவத்வீபங்களை யுடைய இப்பூமண்டலத்தினுள்ளும் நாற்றிசைகளினுள்ளும் நம் ஜீயர் ஸ்வாமி யொருவரே நற்காரியங்களைத் துணிந்து செய்ய வல்ல மஹாபுருஷராவர்
என்றபடி.
வைதிக கருமங்களுக்கு ஸங்கல்பம் செய்து கொள்ளும் போது ஸம்வத்ஸரம் அயனம் ருது மாஸம் பக்ஷம் திதி வாரம் நக்ஷத்ரம் ஆகிய எட்டையும் சொல்லுகி ே மல்லவா?-அவ் வண்ணமாக ப்ரக்ருத கரதுவைத் தொடங்கும்போது ; பரிதாவி நாமஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதெள, மீ நமாஸே,-சுக்லபக்ஷே ப்ரதமாயாம்திதெள ஸெளம்யவாஸரே, ரேவதீ நக்ஷத்ரேஎன்று ஸங்கல்பம் செய்தாகியிருக்கிறது.இவ்வெட்டையும் அமைத்து முத்ராலங்காரரீதியிலேயே அமைக்கப்பட்ட சித்ரகவித்வம் கேளீர்-
தூர்த்தாஸ் ஸ்யு: பரிதாவிநோ யதிவரஸ்யாக்ரே, க்ரதுஸ் தூத்தர:
தத்ஸ்வாந்தம் சிசிரம் கதாபி ந பவேத் தந்மீநகேதோ: பதம்,
சுக்லாந்த: கரணைஸ் ஸஹைவ வஸதி:, க்க்யாதிர் திசாஸு அக்ரிமா
நித்யம் ஸேளம்ய முகஸ்திதி:, சுபதநோர் தீப்த்யைவ பூஷா ஜித: “
விச்வாமித்ர முனிவர் சிறியதொரு வேள்வி செய்யத்தொடங்கினர். பல அரக்கர்கள் வந்து அதற்கு இடையூறு செய்தனர்.அதனால் அவர் தயரத மன்னவரிடம் ஓடவேண்டிற்று. நம் ஜீயர்ஸ்வாமி செய்யும் வேள்வியோ ஸாமான்யமானதன்று, நபூதோ ந பவிஷ்யதி என்னும்படியானது. இதற்கு எத்தனையோ இடையூறுகள் நேரவேண்டும். இடையூறு செய்ய நினைப்பவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் பாறிப்பறந்தோடுகின்றனர்-என்கிறது இதில் முதல் பாதம்.-இங்கு பரிதாவி ஸம்வத்ஸரமும் உத்தராயணமும் ஸசிதம். [தத்ஸ்வாந்தம் – சிசிரம்) ஸ்வாமியின் திருவுள்ளம் மிகக்குளிர்ந்தது. குற்றம் செய்பவர் பக்கலிலும் சீற்றமுறுவது கிடையாது. புருஷஸ க்தத்தில் “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்று
எம்பெருமானுடைய இதயத்திலிருந்து சந்திரன் தோன்றினன் என்பது போல
நம் ஸ்வாமியின் திருவுள்ளத்திலும் சந்திரன்தோன்றியிருக்க வேண்டும். இதில்
சிசிர ருது சிதம். [கதாபி ந பவேத் தன்மீனகேதோ: பதம்] ஜீயர்ஸ் வாமியின் திரு
வுள்ளம் ஒரு போ தும் காமபரவசமாகாதென்கை. இங்கு(மீன) என்பதனால் பங்குனி
மாதம் ஸூசிதம்.–[சுக்லாந்த : கரணைஸ் ஸஹைவ வஸதி:] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் “ த
மனஸம் தமவேஹி விஷ்ணுபக்தம் “ என்றும், திருப்பல்லாண்டில் “என்னை வள்ளுயி
ராக்கவல்ல” என்றும் கூறினபடியே சுத்தமான ஹ்ருதயத்தை உடையவர்களோடுகூடவே ஸஹவாஸம் செய்பவர் நம் ஜீயர் ஸ்வாமி என்கை. தம்மையடுத்தவர்களையும் தம்மைப் போல் ஆக்குபவர் என்றபடி. இதில் சுக்லபக்ஷம்ஸூ சிதம். [க்க்யாதி: திசாஸு அக்ரிமா] நம்ஜீயர் ஸ்வாமியின் புகழானது மற்றெல்லாருடைய புகழையும் விஞ்சித்திசைகள் தோறும் முந்நிற்பது. இதில்அக்ரிமா] என்பதனால் பிரதமாதிதி ஸூசிதம். [நித்யம் ஸௌம்யமுகஸ்த்திதி:]திருமுகமண்டலத்தில் ஒரு போதும் கடுகடுப்பில்லாமே தர்சநீயமாய் இருக்கும்படியைச் சொல்லுகிறது. இதில் ஸௌம்ய என்பதனால் புதவாஸரம் ஸூசிதம்—[சுபதநோர்தீப்த்யைவா பூஷா ஜி ) திருமேனியின் ஒளியானது ஸூர்யனை வென்று
விளங்குமது. இங்கு பூஷா என்னும் சொல்லால் ரேவதீ நஷத்திரம் ஸூசிதம்.
ரேவதீ நக்ஷத்ரம் பூஷா தேவதா ” என்று வேதமோதிற்று. ஆக இந்த சுலோகத்
தில் பரிதாவிவருஷம், உத்தராயணம்,சிசிரருது, மீனமாஸம், சுக்லபக்ஷம், ரதமா
திதி, புதவாஸரம், ரேவதீ நக்ஷத்திரம் ஆகிய இவை அடைவே சிப்பிக்கப்பட்டனவாயின.
(ஸமா திதினத்தில் உபந்யஸிக்கும் சுலோகம்) (12-4-1973ல் ஸமாப்தியாதலால் அந்தலக்கங்களை அடைவே கொண்டசித்ரகவித்வம்)
யதித்ரயஸத்தர்மணா ஸுஸத்ருசா ச ஸப்தர்ஷிபி:
நவஸ்துதவருஷாத்ரிராட் சரணபங்கஜைகாந்திநா,
சதுர்ஜலதிஸம்ப்ருதே ஜகதி ஸூர்யவத் தீவ்யதா
யதீச்வரமஹாத்மநா ஸ பகவான் க்ருதார்த்தீக்ருத:.– (யதித்ரயஸதர்மணா) – ஆளவந்தார், எம்பெருமானார், மணவாளமாமுனிகள் ஆகிய மூவரோடும் ஒப்புச் சொல்லலாயிருக்குமவர் என்றபடி. இது ஜீயர் ஸ்வாமிக்கு விசேஷணம்.1973 என்பதில் (மூன்று) என்கிற லக்கம் இதில்
குறிக்கப்பட்டது. அடுத்த விசேஷணத்தில் (ஏழு) என்கிற லக்கம் குறிக்கப்படுகிறது. (ஸஸத்ருசா ச ஸப்தர் பி:)- ஸப்தரிஷிகளென்று ப்ரஸித்தர்களான ஏழுமுனிவர்களையும் ஒத்திருப்பவர் நம் ஜீயர் ஸ்வாமி என்றபடி.-இனி (ஒன்பது )என்கிற லக்கம் குறிக்கப்படுகிறது. [நவஸ்துதவ்ருஷா த்ரிராட் சரணபங்கஜைகாந்திநா] ஸ்ரீரங்கநாதன் ஆழ்வார்கள் பதின்மராலும் பாடப்பெற்றவர் ஆகையாலே பதின்மர் பாடும் பெருமாள் என்று போற்றப் படுபவர்.திருவேங்கட முடையான் தொண்டரடிப் பொடியாழ்வாரால் பாடப்பெறமையாலே ஒன்பதின்மர்பாடும் பெருமாள் ஆயினர். ஆனதுபற்றி இங்கு [ நவஸ்துதவ்ருஷாத்ரிராட்] எனப்பட்டது. ஒன்பதின்மர்பாடிய திருவேங்கட முடையான் என்றபடி. அப்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஒன்றி நிற்பவர் நம் ஜீயர் ஸ்வாமி
என்றபடி. எல்லா திவ்ய தேசத்தெம்பெருமான்கள் பக்கலிலும் ப்ராவண்ய
மிருக்கச் செய்தேயும், திருவேங்கட முடையான் திருவடிகளில் ப்ராவண்யாதிசயம்
கொண்டிருக்கிறார் என்பது ஏற்கும். இந்த விசேஷணத்தில் ஒன்பது, ஒன்று,
என்ற இரண்டு லக்கங்கள் வந்து விட்டன. ஆக முன்னடிகளில் 1973 என்கிற
வருஷ லக்கம் அமைந்ததாயிற்று. இனி உத்தரார்த்தம் [சதுர்ஜலதிஸம்ப்ருதே
ஜகதி ஸூர்யவத் தீவ்யதா] நான்கு கடல்களால் சூழப்பட்ட இந்நிலவுலகில் ஸூர்யன் போல் வினங்குபவர் நம் ஜீயர் ஸ்வாமி என்றபடி. இதில் மாத லக்கமும் தேதி லக்கமும் வந்து விட்டது. ஆரம்பமாதம் போலவே க்ரதுவின் அவஸான மாஸமும் நான்காவதே யாதலால்,நான்கு கடல் சூழ்ந்தஇந்நிலவுலகில் என்று நான்கு என்கிற லக்கம் வந்துவிட்டது. ஸமாப்தி தினத்தில் தேதி 12 ஆகையால், மூன் ாவது பாதமுடிவிலுள்ள ஸூர்யசப்தம்” த்வாதசாதித்யா:” என்கிற ச்ருதிச் சாயையில் 12 என்கிற லக்கத்தைக்காட்டி நிற்கும். ஸுதர்சன சதகஸமாப்தியில்,பத்யாநாம் தத்வவித்யா யுமணி….” என்கிற ச்லோகத்தில் த்யுமணி சப்தத்தால்-12 என்கிற லக்கத்தைக் காட்டினது போலுமிது.-(யதீச்வரேத்யாதி) ஆக இப்படிப்பட்ட ஜீயர் ஸ்வாமியால் எம்பெருமான் மனோரதங்கள் நிறைவேற்றப்பட்டன வென்கை.
அதச ஸ்ரீமந்நாராயண ராமா நுஜயதீசிதுஸ்ஸவிதே;
அநுபவ ர்ஷசிகீர்ஷிதமத்த்வரமதிக்ருத்ய சாத்ய ருச்சாம?.-நம் ஜீயர் ஸ்வாமியினது சிந்தனைகளும் ஸங்கல்பங்களும் ஒரு நாளும் ஓய்வு பெற மாட்டாதவைகளாகையாலே, இதினினும் சீறிய ஒரு மஹாக்ரதுவை அனுஷ்டிக்கத் திருவுள்ளம் பற்றியே யிருப்பர். அது எவ்வி தமானது, எப்போது, எவ்விடத்தில் என்பதை பக்தவர்கங்கள் ஸ்வாமியையே கேட்டுணரவேணும். ஓம்சாந்தி: சாத்: சாந்தி
“ஸ்ரீமதே நாராயணாய நம:–ஸ்ரீ- ஸ்ரீரித்யேவச நாம தேபகவதி ! ரூம:கதம் த்வாம் வயம்.(ஆளவந்தார்)-ஸ்ரீ- ஸ்ரீரித்யேவச நாம தேபகவதி ! ரூம:கதம் த்வாம் வயம்.(ஆளவந்தார்)
ம – ம : புத்ரேப்யோ தாயம் யபஜத் (மூன்றாவது காண்டம்)-தே – தேஷாமஸுராணாம் திஸ்ர: புர ஆஸந் ஆருவது காண்டம்.-நா – நாந்ருக்வேத விநீதஸ்ய நாய ர்வே தாரிண:-(ஸ்ரீ ராமாயணம்)ரா- ராமோ நாம ப வ ஹும். (கர்ணாம்ருதம்)-ய – யஜ்ஞேந யஜ்ஞமயஐந்ததேவா : (மூன்றாவது காண்டம் )-ணா- ணத்வம் யாதி நகார: யாதிசஸகார இதி பஹு லம்.-ய – * யச்சராமம் ந பச்யேத் துயஞ்சராமோ ந பச்யதி*–நம :- நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாநவைராக்யாரசயே
” யத் மநீஷிபதாம்போஜரஜ:கணபவித்ரிதம், ததேவ பவநம்,நோ சேத் பகாரஸ் தத்ர லுப்யதே” (= எந்தவீடு ப்ரஹ்மவித்துக்களான தொண்டர்களின் திருவடித்தமரைகளிலுள்ள சிறு தூளியினால் புனிதமாக்கப்பட்டதோ அதுவேபவநமெனப்படும். இல்லையேல் அச்சொல்லைவிட்டு பகாரம் நீங்கும்=அது வனமாகுமேயன்றி பவனமாகாது)
உண்ணுஞ்சோறு பருகுநீர் … எல்லாம் கண்ணன்-ஆசார்யஹ்ருதயத்தில் வயாஸ பராசராதி மஹர்ஷிகளுக்கும் ஆழ்வார்க்குமுள்ள வாசியை விரிவாக அருளிச்செய்து வருமிடத்து
“அவர்களுக்குக் காயோடென்னு மிவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே”-உண்ணாத சோறுமுண்டோ? பருகாத நீ ருமுண்டோ? தின்னாத வெற்றிலையு முண்டோ?
எதற்காக இந்த அடைமொழிகள் கொடுப்பது? பாத பூரணத்திற்காகவா ?-சோறு எப்போதும் உண்ணுஞ்சோறாகவிராது. வயிறு நிறைய உண்டவனுக்கு தேவாமிருதம் கிடைத்தாலும் அது உபேக்ஷணீயமாகவே யிருக்கும். கங்கைக் கரையிலுள்ளவனுக்குக் குளத்துநீர் அநபேக்ஷிதமா யிருக்கும். வாய்நிறைய வெற்றிலையைக் குதப்பியுள்ளவனுக்கு வேறு வெற்றிலை தின்னும் வெற்றிலையாக இராது. ஆகவே “உண்ணுஞ்சோறு” என்றது பசித்தவன் விரும்பியுண்ணுஞ்சோறு என்றபடி.--பருகும் நீர் ‘ என்றது பாலைவனத்தில் திரிந்து நாக்கு ஒட்டிப்போனவன் விரும்பிப் பருகும் நீர் என்றபடி. தின்னும் வெற்றிலை’ என்றது நாவில் பசையற்று வறண்டுகிடப்பவன் விரும்பித்தின்னும் வெற்றிலை என்றபடி. ஆழ்வார் எம்பெருமானை அனுபவிப்பது இவ்வகையிலேயாம்.-கீதையில் ஏழாமத்யாயத்தில் ‘வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா-ஸுதுர்லப :–ு சங்கரப்பாஷ்யத்தையும் நம் ஸ்வாமி பாஷ்யத்தையும் உற்று நோக்கவேணும். வா தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப :* என்பதற்கு சங்கரர் பணித்த பொருள்-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்தலங்களில் போலவே அத்வைத மாகவுள்ளது; ‘வாஸுதேவ ஏவ மம ஸர்வம்‘ என்பதாகக் கொள்ளப்
படவேயில்லை. பரப்ரஹ்மத்திற் காட்டில் வேறுபட்ட பொருள் எதுவுமேயில்லை யாகையாலே, எல்லாம் ப்ரஹ்மமேயென்று கொண்டு என்னைப் பணிகின்ற மஹாத்மா துர்லபன்-என்று கீதாசார்யன் சொல்லுவதாக சங்கர பாஷ்யப்ரக்ரியை. இதை நமது பாஷ்யகாரர் கண்டித்திருக்கிறாரென்பது “வாஸுதேவஸ்ஸர்வமித்யஸ்ய அயமேவார்த்த ‘ என்கிற ததீயபாஷ்ய ஸூக்தியாலும், ‘வாஸுதேவஸ்ஸர்வமிதி ஸாமாநாதிகரண்யஸ்ய பராபிமதமர்த்தம் ப்ரதிக்ஷிபந் ஸ்வோக்தம் த்ரடயதி-வாஸுதேவ இதி” என்கிற தாத்பர்ய சந்தரிகா ஸூக்தியாலும் அறிய வெளிது. இங்குசங்கரர் பணித்த பொருளானது அவசியம் கண்டிக்கத்தகுந்தது தானேவென்று பார்க்கவேணும். ஸர்வவஸ்து ஸாமாநாதிகரண்யார்ஹத்வரூபவஸ்து பரிச்சே தராஹித்யத்தை ப்ரஹ்மத்தினிடத்தில் விசிஷ்டாத்வைதிகளான நாமும் இசைந்தே யிருக்கிறோம். தாத்பர்யநிர்வாஹத்தில் வாசியேயொழிய சப்தஸந்தர்ப்பத்தில் ஒரு வாசியுமில்லை நமக்கும். இங்கே சங்கரர் எழுதிவைத்த பொருள் அஸம்பாவிதமன்று. ஸ ப்ரஹ்மா சிவஸ்ஸேந்த்ரஸ் ஸோக்ஷர: பரமஸ் ஸ்வராட்* என்கிற வடமொழி வேதத்தையும்,அவனே யவனுமவனுமவனும், அவனே
மற்றெல்லாமுமறிந்தனமே என்கிற தமிழ் வேதத்தையும் நிர்வஹிக்கிற ரீதியிலே
*வாஸுதேவஸ் ஸர்வமென்கிற விதையும் எளிதாக நிர்வஹிக்கலாமாயிருக்க இங்கே
கண்டனம் அவச்யமன்றேயென்று ப்ரத்யவஸ்தானம் ப்ராப்தமாகும்.-வாஸஸுதேவஸ்ஸர்வ’ மென்பதற்குஸ்வாமியருளிய பொருள் இதுவே–வாஸ தேவ ஏவ மம பரமப்ராப்யம்
ப்ராபகஞ்ச, அந்யதபி யந்மநோரதவர்த்தி ஸ ஏவ மமதத் ஸர்வம்” என்பது கீதா
பாஷ்யஸூக்தி. இதை தாத்பர்ய சந்த்ரிகையில் விவரிக்கும்போது தாரகபோஷக
போக்யங்களும் எம்பெருமானே யென்று கொள்ளுகிற மஹாத்மாவை விவப்பது
தான் இவ்விடத்திற்குச்சேரும் – என்று ஸ்பஷ்டமாக எழுதியுள்ளார். திருவாய்மொழியில் உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்*-என்று ஆழ்வாரருளிச்செய்தது வாஸுதேவஸ்ஸர்வமென்கிற இத்தைய ஸரித்தேயென்று ஆளவந்தார் முதலானார் நிர்வஹித்து வந்தார்கள். திருவாய் மொழியின் வ்யாக்யாதாக்களான பூர்வாசார்யர்களும் அங்கு இந்த கீதாவசனத்தை யுதாஹரித்தே வியாக்கியானம் செய்தருளியுள்ளார்கள். சங்கரருக்குத் திருவாய் மொழியில் ப்ரவேசமில்லாமையாலே அவர்தாம் வேறு வகையாக பாஷ்யமிட்டாலும் திருவாய்மொழியமுதக் கடலிலே ஆழ்ந்தவரான ஸ்வாமி அவ்வர்த்தத்தை எங்ஙனே இசையக்கூடும்? * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்ல :*என்று சொல்லுகிற கீதாசார்யனும் நம்மாழ்வாரை நெஞ்சில் கொண்டே அது சொல்லியிருக்க, அதற்கு இணங்காத பொருள் ஸ்வாமி பாஷ்யத்தில் எப்படி இடம் பெறும் ? அப்பொருளை ஸ்வாமி எப்படி ஸஹிப்பர்? தமக்கு எல்லாங் கண்ணனென்று சொல்லுகிற மஹாத்மாவாகிய நம்மாழ்வார். அந்தோ! என் கண்ணுக்குக் கிடைக்கவில்லையே யென்று அழுதுகொண்டேயன்றே கீதாசார்யன் இந்த ச்லோகம் பணித்தான். கண்ணன் தன்னடிச்சோதிக்குஎழுந்தருளின பின் சிலநாளிலே ஆழ்வாருடைய திருவவதாரம். கண்ணபிரான் ஆழ்வாரை ஸேவித்துவிட்டுத் தன் அவதார ஸமாப்தியைச் செய்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டிருந்தான்; அந்த பாக்யம் அவனுக்கு துர்லபமாயிற்று; அது இந்த ச்லோகத்தில் ஸ மஹாத்மா ஸுதுர்ல :*என்பதனாலே ஸூசிதமாகிறது- என்று ஆரார்யர்கள் நிர்வஹித்துப் போருவது ஸோபபத்திகமென்று கீதாபாஷ்ய ஸூக்திகளாலறிகிறோம். ஆக, ஜகத் ஸர்வம் வாஸு தேவ ‘என்பதாக சங்கரர் கொண்டார், அங்ஙனன்றிக்கே ‘மம ஸர்வம் வாஸுதேவ: என்பதாக நம் ஸ்வாமி கொண்டார். இதுதான் திருவாய்மொழிக்குச் சேர்ந்ததும், திருவாய்மொழியிலிருந்து தெரிந்து அருளிச் செய்யப்பட்ட மிகச் சிறந்த பொருள் என்று தெளிவிக்கப்பட்டதாயிற்று.
“உப்பானாலுமவன் கொடுப்பனிதி நான் நப்பாசையால் கிட்டினேன், துப்பாமல் ஸ து மாம் த்ருணாய கலயந் அப்பால் வரஜேத்யப்ரவீத், இப்பாலெங்கு திரிந்துமில்லை யெனவே தப்பாத சொல் பெற்றனன், அப்பா! வாம னனே மஹாபலிமகே எப்பாடு நீ பட்டையோ?”
பெரிய திருமொழி (5-6-2) கரம்பனூருத்தமனை’-‘உத்தம : புருஷஸ்வந்ய: பரமாத்மேதி உதாஹ்ருத ‘ என்பதுகீதை.-பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தில் அருளிச் செய்யும்
ஸ்ரீஸூக்தியாவது வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்துகிடக்கிற
வனை’ என்பது. இதன் தாற்பரியமென்ன வென்றால், அக்காலத்தில் அந்த ஸன்னிதிக்கு உபபத்தியின் குறைவினால் கோபுர வாசலுக்குக் கதவு திருப்பணி ஏற்படாமல்
எப்போதும் திறந்தபடியாகவேயிருந்தது. யாரும் உள்ளே எளிதாக நுழையலாமன்றோ? இதை அர்ச்சாவதார ஸௌலப்யத்தின் எல்லையாகத் திருவுள்ளம் பற்றிய
பெரியவாச்சான் பிள்ளை ரஸோக்தியாகத் திருவாசலுக்குக் கதவிடாதேயிருக்கிற
ௌலப்யத்தினால் உத்தமன்’ என்று ஸாதித்தபடி.-
‘வெள்ளஞ்சிலம்பும் பாற்கடலின் விரும்புந் துயிலை வெறுத்
தளியுங் கள்ளுஞ் சிலம்பும் பூங்கோதை காதற் கடலிற் படிவாற்குப் புள்ளுஞ்
சிலம்பும் பொழில் சிலம்பும் புனலுஞ் சிலம்பும் புனைகோதை உள்ளுஞ்
சிலம்பும் சிலம்பாவால் உயிருண்டாகும் வகையுண்டோ?‘ இங்குச் சிறிதுகேண்மின், வான்மீகிக்கும் கம்பர்க்கும் ஒரு வாசியுள்ளது. வான்மீகி இராமபிரானை ஒரு மனிதனாகவே வைத்துத் தமது நூலை முடித்துள்ளார். ஆனாலும்ஸமுத்ரசரணாகதிப்ரகரணத்தில் பு ஜை : பரம நாரீணாம் அபிம்ருஷ்டம்அநேகதா’ என்பது போன்ற சிற்சிலவிடங்களில் மட்டும் இராமன்ஸாக்ஷாத்நாராயணமூர்த்தி என்பதை வ்யங்க்யமாகக் காட்டியுள்ளார். கம்பர்பெருமான் அங்நுனன்றிக்கே ராமன்நாராயணமூர்த்தி என்பதை வ்யக்தமாகவே அடிக்கடிகாட்டியருள்ள்வார். இச்செய்யுளில் முதலடியையும் இரண்டாமடியையும் உற்று
நோக்க வேணும். பாற்கடலில் அமர்ந்திருந்த வர் பிராட்டி’யுடைய காதற்கடலிலே அமர்ந்தார் என்று சொல்லியிருக்குமழகு ரஸிக்கத்தக்கது. ரார்ணவ நிகேதநரான நாராயணனே இராமனாகத் திருவவதரித்து ஸ்தாபதியானான் என்பதை விளங்கக் காட்டினாராயிற்று.
‘உருமாறிப்பலபிறப்பும் பிறந்தும் செத்தும் ஊசலாடுவதடியேன் ஒழியும் வண்ணம் கருமாயத் தென்னெஞ்சைப் பலகையாக்கிக் கருணை யெனும் பாசத்தைக் கயிறாப்பூட்டி மருமாலைத் துளவசைய வாடி ரூசல் மணிமகரக் குழையசைய ஆடி ருசல் திருமாது புவிமா
தோடாடிரூசல் திருவ,ரங்கராசரே யாடி ருசல்‘ என்பது. இதிலுள்ள சமத்காரம் மிக வியக்கத் தக்கது. ஸ்ரீரங்கநாதா ! ஊசலுத்ஸவம் உனக்குக் கதாசித். எனக்கோ-அது நிச்சலும் நடந்துகொண்டிருக்கிறது. ஊசலாவது அப்படியும் இப்படியும் அசைவது தானே! நான் அநுபவிக்கும் ஊசலாவது உருமாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும் போருகை; “ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ரூபா காப்யுபஜாயதே” என்கிற ப்ரமாண வசனத்தை நினைப்பூட்டினாராயிற்று.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply