கற்பக காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – 1-9-9-நாலாயி:116/1,2
தேவ லோகத்தில் இந்திரனுடைய காவினில் நிற்கிற கற்பகக் காவை –
சசி பண்ணின அவமதியடியாக -பிடிங்கிக் கொண்டு போய் பூ லோகத்தில் என்னுடைய
நிலா முற்றத்தில் நாட்டுத் தர வேணும் -என்று ஆசைப் பட்ட அபிமதையான
சத்ய பாமை பிராட்டிக்கு –நாளை என்னுதல் -பின்னை என்னுதல்-செய்யாதே –
இப்போதே தரக் கடவன் என்று பிடுங்கிக் கொண்டு போரா நிற்க்கச் செய்தே –-அவள் திரு உள்ளம் பிசகும் என்று நாளை என்ன மாட்டான்-தன்னுடைய த்வரையாலே பின்னை என்ன மாட்டான்-பிரதி நியத சங்கல்பம் பாராதே -நீர் ஏவின கார்யம் இப்போதே செய்து தரக் கடவேன் -என்று தன்னிலத்த்லே இந்த்ரன் மதர்தமாக ரஷிக்கக் கடவேன் என்று
பஹூ மானம் பண்ணி ரஷிக்கிற கற்பகக் காவை கொடு போரா நிற்கச் செய்தே
————
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி -4-9-6– நாலாயி:417/1
மைத்துனமாரான பாண்டவர்களுக்கு அபிமதையான திரௌபதியை குழல் முடிப்பித்து –
சாஹம் கேச க்ரஹம் ப்ராப்தா பரிக்லிஷ்டா சபாகதா -என்கிறபடியே-துச்சாதனன் வந்து மயிரைப் பிடித்து இழுக்க –அன்று முதலா –என்னை இது செய்தவனையும் – இதுக்கு ப்ரவர்த்தகர் ஆனவர்களையும் கொண்டு களப்படுத்தினால் ஒழிய குழல் முடியேன் -என்று இறே இவள் இருந்தது-பதினாலு சம்வத்சரம் காட்டிலே திரிந்த காலத்தோடு மீண்டு –
நாட்டிலே வந்த காலத்தோடு வாசி அற – இவள் விரித்த தலையும் தானுமாய் திரிகிற படியைக் கண்டு – இவள் சங்கல்பத்தின் படியே கார்யம் செய்து கொடுத்து –
இவள் குழல் முடித்த அன்றே -நாம் சரணாகத ரஷகன் என்று பேர் படைப்பது -என்று இறே
ஸ்ரீ கிருஷ்ணன் திரு உள்ளம் இருந்தது-தூது போனதும் சாரத்தியம் பண்ணிற்றும்
பரம ரகஸ்யமான ப்ரபத்தியை உபதேசித்ததும் -எல்லாம் இதுக்காகாவே இறே-இவை எல்லாம் இவள் குழலை முடிப்பிக்கைகாக செய்தவை-முந்துற அர்த்தம் அருளிச் செய்து வைத்து – பின்னை இத்தை அருளிச் செய்வான் என்-என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரை கேட்க-திரௌபதி குழல் விரித்து கிடக்கையாலே செய்வது அறியாமல் மூலையில் கிடந்தாரை முற்றத்தில் இடுவாரைப் போலே பரம ரகஸ்யமான அத்தை வெளி இட்டுக் கொண்டு நின்றான்-பின்னை அர்த்தத்தின் சீர்மையை அனுசந்தியா – கைப்பட்ட மாணிக்கத்தை கடலிலே பொகட்டோம் -என்று பதண் பதண் என்றான் காணும் –என்று இறே அருளிச் செய்தது
—————-
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் –5-3- நாலாயி:547/4
மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –-தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே-உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே
———
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – -2-6-நாலாயி:663/4
என்னை அனந்யார்ஹம் ஆக்கின ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே பக்தி உண்டாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு-அநேக ஜன்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆசைப் படா நின்றது என் நெஞ்சு –
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி –1-9-
தூராக் குழி தூற்று எனை நாள் அகன்று இருப்பன் -என்று சம்சாரிகள் சப்தாதி விஷயங்களிலே அனுபவித்தாலும் இந்த்ரியங்களைத் திருப்தி யாக்கப் போகாதாப் போலே
பகவத் அனுபவம் ஒருக்காலும் ஆராது இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாத்திலே
என்னையும் கூடிக் கலசி –
———–
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்–1-11-நாலாயி:657/2,3-
ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை-கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்னும் ஆசைப் பாட்டோடு-
————
கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் –5-2- நாலாயி:689/1
தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்
பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-காதலன் –பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல- இவ் வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-
————-
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – -5-4-நாலாயி:-691/2
அஹிதங்களை மேல் மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும்-பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு தனது சர்வஸ்தையும் கொடுத்து அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே
————-
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/3
என் தூத வாக்கியம் கொண்டு வந்தவளோடே நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்-உன்னை ஆசைப் பட்டு வை வர்ண்யத்தை உடைய நான் இருக்க –மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ-என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே நல்ல போக ரஸங்களை நன்றாக அனுபவித்தாய்-
—————-
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
வாலிக்கு அஞ்சி காட்டிலே மறைந்து கிடக்கிற குரங்குகளுக்கு ராஜாவான ஸ்ரீ ஸூக்ரீவனை
சிநேக பூர்வகமாகக் கட்சி கொண்டு –அதற்காக அதிபல பராக்ரமான வாலியை நிரசித்து
———————
புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – 19-நாலாயி:770/4
சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ-சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ-அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைக ரசரான நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –
————
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் – 67-நாலாயி:818/2
பரம பதத்தை லபித்து-மேல் -வீடிலாத காதல் இன்பம் -கண்டு நாளும் எய்துவீர் –
ப்ராப்ய பலமாய் -யாவதாத்மபாவி விச்சேத சங்கை யன்றியே -ஸ்வரூப அநுபந்தியாய்-
பகவத் அனுபவ ஜனித பக்தி காரித கைங்கர்ய சுகத்தை சாஷாத் கரித்து -யாவதாத்மபாவி லபிக்க வேண்டி இருப்பீர் –
————–
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – 78-நாலாயி:829/1
சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர்
ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை -பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் –ஸ்ம்ரதிலம்பே சர்வ கரந்தீநாம் விபர மோஷ –என்கிற அளவைச் சொல்லுகிறது–
————
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே —83- நாலாயி:834/4
திருஅஷ்டாஷரம் -த்வயம் – எட்டும் இரண்டும் கூட்டு –பத்தாய் -அத்தை பக்தி -என்கிறது
பகவத் பக்தியிலே தமக்கு உள்ள கௌரவாதி அதிசயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார் –கயிறு -என்று பந்தகம் என்றபடி –மனம் தனைக் கட்டி –சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரதானமான மனசை விஷயாந்தரங்களில் போகாதபடி பந்தித்து –வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே- விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம் சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே தானே சுகமாய் இருக்கும் –
——–
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து – நாலாயி:853/1
பிரயோஜனாந்தரன்களைப் பற்றி நெகிழாத –-அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு -திருவடிகளில் பண்ணின பிரேமத்தாலே – விள்கை விள்ளாமை விரும்பி -என்னக் கடவது இறே-அந்த பிரேமத்தால் உஜ்வலமான திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரிதர் உடைய சந்நிதியிலே அலரும் அது இறே திருவடித்-தாமரைகள் –இத்தால் – நான் பிரயோஜனாந்த பரனாய் -அசித் சம்பந்தம் அனுவர்த்திக்கிறதோ – தேவரீர் ஆஸ்ரித வத்ஸலர் அல்லாமே அனுவர்த்திக்கிறதோ -என்கை –
———–
கள்ளமே காதல்செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே – திரு மாலை-24–-நாலாயி:895/4
உனக்கு ப்ரக்ருதி விஷயத்தில் பண்ணிப் போந்த வாசனை இங்கும் அனுவர்த்தித்து போந்த இத்தனை ஒழிய இவ் விஷயத்துக்கு ச்த்ருசமாய் ஸ்நேஹித்தாய் அல்லையே – விஷயாந்தரங்களில் பண்ணிப் போந்ததும் பலபக்தி யாகையாலே இங்கும் பலபக்தி பண்ணிற்று-விஷயாந்தரகளோபாதியாக இது தன்னையும் நினைத்தாய் இத்தனை போக்கி
இவ் விஷயத்துக்கு அனுரூபம் அன்று இறே உன்னுடைய பிரேமம் -என்கிறார் –
————–
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே – நாலாயி:897/3
காதல் அடியாக வரும் அன்பு இதற்கு முன்பு நெஞ்சில் ஸ்பர்சித்தது இல்லை –-அதாகிறது –
சங்காத் சஜ்ஞாயதே காம -என்கிற ப்ரேமம் – புறம்பே ஒரு விஷயத்தில் உண்டாகில் இறே அத்தை அங்கு நின்றும் மீட்டுப் போந்து தேவரீர் பக்கலிலே ஆக்க வேண்டுவது –முன்பு ஸ்திரீ பதார்த்தங்களிலே பண்ணிப் போந்த ப்ரேமம் அவர்கள் பக்கல் அர்த்தாதிகளை அபஹரிக்கைக்காக வாய்த்தது அல்லது – அவர்களே உத்தேச்யம் என்னும் பிரேமம் இல்லை –ஸ்மாபாவசோ வஞ்சன பர -என்னக் கடவது இறே – பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததனய ப்த்ர் மாத்ர் பர்த்ய வர்க்கே சடமதி ரூப யாதியோர்த்த த்ர்ஷ்ணாம் தம தமசேஷ்ட மவேஹி நாச்ய பக்தி -என்னக் கடவது இறே –
————-
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-
எல்லா மேன்மையும் சொன்னாலும் தகுதியான ஆழ்வார் எல்லாம் சொன்னாலும் அங்குத்தை பிரபாவத்தை-எல்லை காண ஒண்ணாத படி இறே ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –இவர் திருவடிகளில் உண்டான பக்தி யன்றோ இவருக்கு அடியேன் ஆனதில் உண்டான பிரயோஜகம் –(நான் -அடிமை யானதால் பலன் பக்தி -அடியேன் ஆனதால் ருசி ஏற்பட்டது –ருசி வந்தால் தானே அடிமை ஆவோம் )-அடிமையாக வேணும் என்று எனக்குப் பிறந்த ருசி – அடிமையாகிற பிரயோஜனத்தொடே வ்யாப்தமாய் இருக்கும்
பகவத் விஷயத்தில் ருசி இவர்க்கு சரீர விச்லேஷம் பிறந்தால் அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே-சென்றால் பெறக் கடவதே இறே இருப்பது
ஆழ்வார் விஷயத்தில் பிறந்த ருசி அங்கன் அன்றிக்கே இச் சரீரத்தோடு ஆழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமைகளும்-செய்யலாம் படி பண்ணும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகே இ றே பேறு ஆய்த்து
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பம் இல்லை என்கிறது
அன்றே -என்றது ஆமே என்றபடி -அன்று எனக் கிளவியாம் எனத் தகுமே –
அவருக்கு அடிமை புக்கத்தால் உண்டான ஆதரம்–அடிமையே பிரயோஜனமாக யுடையதன்றோ–முற்பட அடிமை புக்கு –அநந்தரம் ஆதரம் நடந்து– பின்பு அடிமை செய்யுமதுவே அவருக்கு பிரத்யுபகாரம்-
முற்பட சேஷ பூதனாய் -பின்பு ப்ரேமம் நடந்து -ப்ரேம அனுரூபமான கிஞ்சித் காரமும் நடக்க வேணும்-
ஆசார்யபவ்யதையும் -ஆசார்ய ப்ரேமமும்– ஆசார்ய கிஞ்சித் காரமும் -இம்மூன்றும் அபேஷிதம் இ றே சிஷ்யனுக்கு
அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து-
அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து-அடிமை பிரயோஜனம் என்னும் இடம் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே கற்றார்-அந்த வழுவிலா வடிமை செய்கிறதில் காட்டில் இது ஆட்புக்க காதல் அடிமைப் பயன் -வன்றோ உறுவது –
—————–
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் –1-6-3– நாலாயி:1000/2
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து–இப்படி த்ரவ்யார்ஜனம் பண்ணினால் அது கொண்டு கொள்ளும் கார்யத்தை சொல்லுகிறது –விரி குழலாரில் பட்டு (திருமாலை) -என்கிறபடியே மயிர் பேணாதே இருக்கில் அதிலே ஈடுபடுபவர்-மயிர் சுழன்று முடித்து இருக்கில் அதிலே ஈடுபடுபவர் ( சுரி குழல்–விரி குழல் )-ஏதேனுமாக அவர்கள் இருந்த படியே அமையும் ஆயிற்று இவர் ஈடுபடுகைக்கு-என்னையும் உன் செய்கை நைவிக்கும் -என்னுமா போலே –( இங்கிதம் –தாவகம் -கூரத்தாழ்வான் )ந்ரு பசு -என்னுமா போலே –கண்ணுக்கு தோற்றின விஷயங்களில்-இவை சாஸ்திரங்கள் நிஷேதித்த விடம் என்று மீண்டு அறிவது இல்லை-தோற்றின படி மூலை யடியே திரிந்த இத்தனை –
——–
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை தான் கற்று வல்லார்கள் – நாலாயி:1007/3
திரு நைமிசாரணியத்துள் வந்து சந்நிஹிதன் ஆன ஸ்வாமியை ஹிருதயத்தில் வைத்து –-பகவத் விஷயத்தில் ஆசை மிகுந்து வருகிற ஆழ்வார் அருளிச் செய்த சப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் – இருந்தவனுக்கு ஒதுங்க நிழல் பண்ணிக் கொடுத்தபடி ஆயிற்று –சிந்தையுள் வைத்து -இருந்தவர் -நைமிசாரண்ய எந்தை -ஒதுங்க இடம் -வெப்பம் தவிர்த்து காதலே நிழல் அவனுக்கு-வா ஸூ தேவாய தருச் சாயா
கோவர்த்தனம் எடுத்து நிழல் கொடுத்தவன்-நம்மிடம் நிழல் தேட கொடுக்க வேண்டாமோ–
———–
காசை ஆடை மூடி ஓடி காதல்செய் தானவன் ஊர் – 2-2-1–நாலாயி:1058/1
காஷாய வஸ்த்ரத்தை இட்டு-உடம்பு எங்கும் மறையும்படி மூடி ராம பயத்தாலே பயந்து நடந்து போய் ஜநநீ என்று பாராதே – வீத ராக வேஷத்தைத் தரித்து வைத்து ராகத்தைப் பண்ணின –பையலுடைய ஊரானது –
——–
தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் -2-2-2- நாலாயி:1059/1
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் பக்கலில்-ஜநநீ என்று பாராதே அப்ராப்தமான சங்கத்தைப் பண்ணினான் ஆயிற்று –அதுக்கடி ஆசூர பிரக்ருதியாகைலே -யாயிற்று
———
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் -3-7-7 நாலாயி:1214/2
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்-போக நினைத்தால் பழி இட்டுப் போக வேணுமோ –-அடியோமான எங்களை தாயும் தமப்பனும் என்று பேரிட்டு இரங்கிற்றிலள் – நியாம்யரை நியாமகர் என்று பேரிட்டுப் போக வேணுமோ –பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – இங்கே இருவரைக் கை விட்டால் அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே நம்மை விடுகைக்கு அடி அங்கு அனுபாவ்ய விஷயத்தின் உடைய பெருமை யாகாதே-
————-
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் –3-8-8– நாலாயி:1225/2
விளையாட்டுக்கு அவ்வருகு கார்யம் கொள்ள ஒண்ணாதபடி பருவத்தை உடையவர்கள்
யௌவனம் ஊசாடாத பருவம் அவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட அவர்களுக்கு பிரேம சாகரத்தை விளைத்த சர்வேஸ்வரன் உடைய வாசஸ் ஸ்தானம்-
———
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – நாலாயி:1278/1
த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று அருளிச் செய்த படி-தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும் மிடுக்கும் திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்-சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப- என்னும்படி அவர்கள் ஸ்திரீகள் உடைய மங்கள ஸூத்ரமும்
———–
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் – 4-8-9-நாலாயி:1326/1
கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன்
——————-
பெருகு காதல் அடியேன் உள்ளம் – -5-2-9-நாலாயி:1366/1
நாள் செல்ல நாள் செல்ல ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது கூடலூரே––( உருக்கவே புகுந்தார் )
————-
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு – 5-3-4–நாலாயி:1371/2
மூங்கில் மிக்கு இருந்துள்ள திருவேங்கடம் ஆகிய மலையை உடையவனே –தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –
———–
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக – —5-4-5–நாலாயி:1382/1
பிராட்டியோடு சக்கரவர்த்தி திருமகன் அனுபவிக்க தானும் மண்டோதரி கூட அனுபவிக்கை அன்றிக்கே-வழி கெட அனுபவிப்பதாகப் பாரித்த ராவணன் ஆனவன் சித்ர வதத்தாலே வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க-
——–
உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – 5-8-2–நாலாயி:1419/2
உகந்து– அதாவது சேஷ பூதனுக்கு கைங்கர்யத்தை உண்டாக்குக்கையும்-அவனுக்கு பிராப்தம் என்று நினைத்து இருக்கையும் அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கையும்
பிரத்யுபகாரம் தேடித் தடுமாற வேண்டாமையும் உகப்பை உபபாதிக்கிறது மேல் –காதலாதரம் – இது புனர் உக்தம் அன்றோ என்னில் – அவ்யாப்தி அதிவ்யாப்தி ரஹீதமான லஷண வாக்யத்தில் புனருக்தி தோஷமாவது-ஆற்றாமையும் ஆதரமும் சொல்லுவிக்கச் சொல்லுகிறது ஆகையாலே தட்டில்லை – கிஞ்ச அபிசந்தி பேதத்தாலே புனர் உக்தமும் அன்று –பல காலும் சொல்லுகிறதுக்கு-காதலின் உடைய கார்யம் இறே ஆதரம் ஆகிறது-சங்காத் சஞ்ஜாயதே காம -என்கிறபடியே கர்ம நிபந்தனமாக சிலவர்க்கு வருமத்தை இறே
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சொல்லுகிறது-பிராட்டிக்கு பெருமாளைக் கண்ட போதே வில்லை முறித்துக் கைப் பிடிக்க வல்லவரே -என்று சங்கம் பிறந்தது பின்பு அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத தசை -காமம்-அவருக்கு பித்ரு க்ருத தாரம் -என்று பிறந்தது சங்கம்-குணேண ரூபேண விலாஸ சேஷ்டிதை-என்கிறபடியே குண ரூப சேஷ்டிதங்களை பற்றப் பிறந்தது காமம்-கடலினும் பெருக கடல் குளப்படியுமாம் படி பெருகுகிற சமயத்திலே
இரண்டு ஆஸ்ரயமும் கடல் போலே காணும்-பெருகுகை யாவது – மர்யாதா பங்கம் பிறக்கை இறே அதாவது தத் தஸ்ய -என்கிற நிலை குலைந்து வேண் யுத் க்ரத நத்திலே ஒருப்படுகையும் – அவாக்ய அநாதர-என்னும் நிலை கழிந்து அவகாஹ்ய அர்ணவம் ஸ்வப்ஸ்யே-என்னும்படி யாகையும்-
—————
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – –5-8-7-நாலாயி:1424/2-
காதல் தான் வடிவு கொண்டது என்னும் படியான புத்திரன்-நரகத்திலேயோ -கர்ப்பஸ்தனோ-எங்கே புக்கான் -என்று அறிகிறிலேன் –சர்வ சக்தியான நீ ஆராய்ந்து தர வேணும்-வித்யா க்ரஹண தாரணத்திலே கண்டான் இறே சக்தி மத்தையை-காதல் என் மகன் என்ற இவனை இறே-கோதில் வாய்மையினான் -என்கிறது-அதுக்கு கருத்து என் என்னில் -குரு வசன மலங்க நீயம்-என்கிற கிருஷ்ண அபிப்ராயத்தாலே – இருவரும் பிரிந்து இருக்கிற அளவில் -த்ருஷ்டா சீதா -என்கிற திருவடி அளவில் சொல்லும் வார்த்தையை இறே இவன் அளவில் சொல்லுகிறது –(பிரயோஜனந்த பரராயும் அத்தையே கண்ணன் இடம் கேட்டதால் கோதில் வாய்மையினான் என்றுமாம் )
————–
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப – –5-8-8-நாலாயி:1425/2
பிள்ளைகள் பக்கலில் ஸ்நிக்த்தையாய் போரும்-செய்வது எல்லாம் செய்து பத்து மாசம் வயிற்றிலே தரித்துப் பெற்ற அளவிலே காணப் பெறுகிறிலள்-இப்படி இருப்பதொரு தேவதையை இதுக்கு முன்பு நான் கண்டு அறியேன் -யமனும் உடல் கிடக்க இறே கொண்டு போவது(இங்கு சரீரத்தோடு -பஸ்யதோ ஹரத்வம் )
பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்னே-பார்த்துக் கொண்டு நின்று கொண்டு போவாரைப் போலே வடிவோடே கொண்டு போய் ஒளியா நின்றது
கிருஷ்ணன் உடைய வடிவு அழகைக் காண வேணும் என்று நாச்சிமார் செய்தது இறே –
(சூட்டு நன் மாலைகள் -இத்யாதிப்படி –திரு அவதரிக்க -காண ஆசைப்பட்ட பிராட்டிமார் கார்யம் அன்றோ -)
———–
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் – நாலாயி:1443/1
பிராட்டியோடு கூடப் போகை-நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து –
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடி யால்–பெரிய திருமடலில்
பெருமாளைப் பற்றாசாகக் கொண்டு பிராட்டி என்று அவள் தனக்கு இருக்குமா போலே
——–
காதல்செய்து இளையவர் கலவி தரும் –6-1-8- நாலாயி:1455/1
இளையவர் காதலைப் பண்ணிக் கொண்டு ஸ்திரீகள் ஆனவர்கள் சங்கத்தை உடையராய்க் கொண்டு தருகிற துக்காத்மகமான ஸம்ஸ்லேஷத்துக்கு ஹேதுவாய் இருக்கிற கர்மத்தை அனுசந்திக்க அநுசந்திக்க எனக்கு பயமாகா நின்றது –
———-
காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் -6-1-9– நாலாயி:1456/2
மரண சமயத்தில் படும் வியசனம் பின்பு நரகானுபவம் பண்ணப்படும் வியசனம்
பஞ்சாக்னி வித்யையில் சொல்லுகிறபடியே கர்ப்ப ரூபத்தாலே படக் கடவ வியசனம்
இவற்றை அனுசந்தித்து ஜன்மாதிகளில் ஆசை பண்ணாதே இவற்றைத் தவிர்த்து அருளும் தேவரீர் திருவடிகளை வந்து கிட்டினேன்
——–
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய –7-3-6- நாலாயி:1573/3
கை தொட்டு நெருக்குகையால் வரும் செவ்விக் கேடு இன்றிக்கே அக் கரும்பின் உடைய ரசமாய் யுள்ளவனை –இதுக்கு முன்பு ஒதப் போகாதவன்-அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே
சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –
————
கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே – 7-3-8-நாலாயி:1575/4
சம்சாரத்தில் முமுஷூக்கள் உண்டு -தம் பக்கல் ருசி உடையராய் இருப்பார் அவர்களுக்கு கண்ட போதே அனுபவிக்கலாம் படியாய் பக்வ பலமாய் உள்ளவனை –அவை ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –
————-
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும் —–7-5-4- நாலாயி:1591/3
குட்டிக்கு இரை தேடித் போகிற புள்ளானது தனியே போகாதே காதலை இட்டு நிரூபிக்க வேண்டும் பெடையோடே போய்-அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே – சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை- அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து பிரளயம் என்று பாராதே ஜகத் ரஷணத்துக்காக மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து –
———-
கண்ண மங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த – 7-10-10-
ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை சம்சாரத்திலே திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –
நல் விரை மலர் கோதிய மது கரம் குலவிய மலர் மகள் காதல் செய் கண புர மடிகள் தமிடமே –8-7-4-
மிக்க பரிமளத்தை உடைத்தான பூவிலே மது பானம் பண்ணின வண்டுகளானவை
தம்தாம் செருக்காலே அவற்றைக் கோதி – அது -ஆத்த சாரமான வாறே -அத்தைவிட்டுப் போந்து கொண்டாடி சூழ பரவா நின்றுள்ள பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார்
விரும்பி வர்த்திக்கிற தேசம் – புனிதரான அடிகளுக்கு ஸ்தானம் –
————-
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து – நாலாயி:1863/2
ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும்
அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –
————
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – 10-9-1-நாலாயி:1932/3
இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டு நீர் காதலிக்கக் கடவ இத்தை அன்றோ
இவள் காதலிக்கிறது –(இவை எல்லாம் உமக்காக அன்றோ – உன்னைப் பிரிந்து -சருகாய் உலர இருக்கிறாளே ) பிராப்த விஷயத்தில் காதல் அன்றோ -என்று இராதே இத்தைப் பழியாக சொல்லுகிற ஊரில் ஸ்திரீகள் உடைய துணிவையும் புத்தி பண்ணாதே –
————-
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
என் காதல்–தம்முடைய காதல் போல் அன்று என்று சொல்லுங்கோள்- மின்னிலங்கு திருவுருவு என்று -உடம்பு குறி அழியாத படி அன்றோ நீர் காதல் பண்ணிற்று – பொங்கார் மென்னிளம் கொங்கை பொன்னே பூக்கும்படி அன்றோ அவள் காதல் பண்ணிற்று(17-பாசுரம்) என்னுங்கோள் –யா ப்ரீதிர் அவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயினி (ஸ்ரீ விஷ்ணு புராணம் )- என்கிறபடியே நாட்டார் காதல் போல் அன்று – முக்தர் காதல் போல் அன்று காணும் இவளுடைய காதல்-ஞானம் பிறந்தவாறே த்யாஜ்யமான காதல் இறே சம்சாரிகளது –ஸூக ஹேதுவான காதல் இறே முக்தரது –(‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.)(மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என் காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை, நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.)
————
காண கழி காதல் கை மிக்கு காட்டினால் – 56-நாலாயி:2237/1
சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால் நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ – கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் –
ஸாபராதன் என்று மீளவும் போகாது
—————
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப் பெண் அகலம் காதல் பெரிது – நாலாயி:2335/4
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை உடைத்தான பூமியைக் கொண்டு ஏறினான் ஆய்த்து –பெரிய பிராட்டியார் விரும்பும்படியான மார்வை உடையவன் –ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம் சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம் -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே பிச்சேறி இருக்கும் படி –-தன்னை யாசைப் படுவார் விடாயிலும்-மிக்கு இருப்பதே தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய்-அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-அவள் பக்கல் காதலாலே இறே அவள் அபிமானித்த பூமியை எடுத்தது –
——–
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை – நாலாயி:-2373/2
அவன் மகன் தன் காதல் மகனை சிறை செய்தான் ஆய்த்து-புத்ரனில் காட்டில் பௌத்ரன் பக்கலிலே ச்நேஹம் உண்டு இறே ஸ்நிக்தனுமாய்- பௌத்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே கொண்டு புக்கு வைத்த வாணன் உடைய –
—————
அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழ காதல் பூண்டேன் தொழில் -84- நாலாயி:2465/4
ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் – ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
———
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து -13– நாலாயி:2490/3
துக்கத்தை வளர்ப்பதான காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற குளிர்ந்த வாடையைத் துணித்து-துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி-
————-
உள பெரும் காதலின் நீளியவாய் உள ஓங்கு முந்நீர் –59 நாலாயி:2536/2
தோளில் இட்ட மாலை – அதுக்கு என் உள்ளத்திலே உண்டாய் – சர்வாதிகத்வத்தையும் விளாக்குலை கொண்ட-காதலினும் பெருத்து இருப்பனவாய் உள்ளது –அழகிய குளிர்ந்த திருத்துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே நீளிய வாயுள்ளன-காதலுக்கு முடிவு காணாதவோ பாதி கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை (கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)
———-
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – 63– நாலாயி:2540/3,4
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு-தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து-தனக்கே சேஷமான என்னோடே கூட-க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன
———
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – நாலாயி:2574/4
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்–காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு-அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ-பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்–
——————
உருகி உக்க நேரிய காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத-2- – நாலாயி:2579/3,4
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால் அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்-அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய் ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்-அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது-த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது
————-
வேகவதி என்றுரைக்கும் –கன்னி-தன் இன் உயிராம் காதலனை காணாது – நாலாயி:2742/3
பிராட்டியைப் பேசின வாயாலே பின்னையும் பேசலாவாள் ஒருத்தி-பிராட்டியைப் போலே
சமா த்வாதச தத் ராஹம் ராகவச்ய நிவேசனே புஞ்ஞ்ஜா நாமா நுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ –சுந்தர 33-17-என்றால் – போலே அனுபவித்தவள் அல்லள் –
——–
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய் – நாலாயி:2749/2
எம்பெருமான் உடைய ச்நேஹத்தை ஒரு வடிவாக வகுத்தது -என்னும்படி இருக்கும்
பேரனான அநிருத்த ஆழ்வான்-பெண்கள் களவு காண்பார்கள் -என்று காவலோடு கண் வளர்ந்து அருளுகிறவனைப் பீட்கன்று போலே படுக்கையோடு கொடு போந்த படி –உஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி இவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –
————-
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யா திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே -12- நாலாயி:2802/3,4
நசம்சயச்து தத் பக்த பரிசர்ய ரதாத்மனாம் -என்றும் – குருரேவ பரப்ரம்ம -என்றும் –
நீக்கமில்லா யடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்களுக்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – என்றும் சொல்லுகிறபடியே -பிராப்யம் என்று அத்யவசித்து ஆஸ்ரயிக்கும் –கடம் -பிராப்யம்-கொள்கை -அத்யவசிக்கை –இப்படிப் பட்ட நிரவதிக சம்பத்தை உடையராய் கொண்டு -அதில் உபகார ச்ம்ருதியால் – அத்தையே மனனம் கொண்டு இருக்கிற ஞானாதிகர் –த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரன்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலின –என்னும்படியானவர்களுக்கு ஒழிய-ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திருவடிகளுக்கு உறைவிடமான திரு உள்ளத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றும் திருவாளரை ஒழிய மற்றவரை விரும்பாத உறுதிப்பாடு வாய்ந்த ஞாநியரையே தாம் விரும்புவதாக கூறுகிறார் –
——–
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் – நாலாயி:2805/1
வாடாதே -சங்குசிதமாகாதே இருக்கிற பக்தி -பரி பூர்ண பக்தி-என்றபடி -புநர் விஸ்லேஷ பீருத்வா பரமாபக்தி ருச்யதே -என்னும்படியான பக்தி-அவ்யபிசாரினியான பக்தி-அவர் பட்ட-சுழி தான் சங்குசிதம் அன்று காணும்-பரி பூரணையான பக்தி கரை புரண்டவோ பாதி
அதினுடைய மகா பிரவாகத்தின் நடுவே பிறந்தது ஆகையாலே -மகா வேக கர்த்தத்தோடு கூடி – அதி விஸ்தாரமாய் இருக்கிற சுழியிலே அகப்பட்டு -ஆழம் கால் படுகையாலே –காதலின் பெரும் சுழிப்புஎன்னவே பெருக்கு எடுத்தோடும் பெரு வெள்ளமாகக் காதல் உருவகம்-செய்யப் பட்டமை தெரிகிறது –வெள்ளத்தில் பெரும் சுழிப்பில் அகப்பட்டவர் -ஒன்றும் தோன்றாது தப்ப வழி இன்றி -தத்தளிப்பது போல் –பெரியாழ்வாரும் -காதல் வெள்ளப் பெரும் சுழியில் அகப்பட்டு ஒன்றும் பாராது தப்ப வழி இன்றி தத்தளிக்கிறார் -அங்கனம் தத்தளித்தல் ஆவது -திரு மாலின் மீது அளவு கடந்த ப்ரேமம் மீதூர்ந்து அதி ஸ்நேக பாபசங்கீ-அளவு கடந்த ச்நேஹம் தீங்கு நேருமா என்னும் சங்கையை உண்டு பண்ணும் என்றபடி தமக்கு புலனாய் -இவ் உலகில் தோன்றிக் காட்சி தரும் அவனுடைய திரு மேனி அழகு -மென்மை –என்னும் இவற்றில் ஈடுபாடாகிய சுழியில் ஆழ்ந்து -யாராலே இவற்றுக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று தீங்கை சங்கித்து-எவராலும் தீங்கு இழைக்க ஒண்ணாத சூரத் தன்மை முதலிய வற்றைப் பாராது சங்கையில் இருந்து தப்ப வழி இன்றி அலமருதலே யாம் –அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் என்க-
————-
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா – நாலாயி:2818/2
பஞ்சிய மெல்லடி பின்னைப் பின்னை -பெரிய திரு மொழி – 3-4 4- –என்கிறபடியே -பஞ்சு போலே சுகுமாரமான திருவடிகளை உடையாளான -அன்றிக்கே-அத்யந்த-புஷ்பகாச சுகுமாரி ஆகையாலே -கடினமான பூமியிலே -திருவடிகளை வைத்தால் வாடும் என்று நினைத்து –பஞ்சு மேல் அடியை இட்டு திரியும்படியான திருவடிகளை உடையாள்-இப்படிப்-பட்ட சௌகுமார்யத்தை உடையளான நப்பின்னை பிராட்டிக்கு-என் போல்வார் எல்லார்-உடையவும் ஈஸ்வர நிக்ரஹா ஹேதுவான அபராதங்களை -அவனாலே பொறுப்பித்து நம்மை ஆஸ்ரயிப்பைக்காக அவனோடு அநேக அவதாரங்களை பண்ணினாள் -நப்பின்னை பிராட்டியைப் பார்த்து – அவள் திறத்திலே அதி வ்யாமுக்தனாய் கொண்டு -அவளோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தங்களான
சப்த வ்ர்ஷபங்களையும் -ஒருக்காலே ஊட்டியாக தழுவி -சம்ஹரித்தான் என்று புராணங்களிலே பிரதிபாதிகமான இந்த அபதாநத்தைக் கொண்டு -காதலன் -என்று அருளிச் செய்கிறார் – தள வெழ் முறுவல் பின்னைக்காய்-வல்லானாயர் தலைவனாய் – இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் – என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம்-பெரிய திரு மொழி – 3-7 7- – என்றும்
திரு மங்கை மன்னன் அருளிய திரு மொழியை அடி ஒற்றிய படி –தன் வடிவு அழகாலே கண்ணனை துவக்கி -நம் குற்றம் அவன் கண்ணில் படாதவாறு செய்து –குற்றவாளராகிய நாம் சற்றும் கூசாது -கண்ணனைப் பற்றும் படி செய்து தன் அபிமானத்தை நம் மீது-காட்டலின் –நங்கள் பின்னை-என்கிறார்-விண்ணோர்கள் தூபம் தரா நிற்க ஓர் மாயையினால் அடலாயர் தம்கொம்பினைக் காதலித்து வல்லானாயர் தலைவனாய் வந்ததும் -முறையே இதுகாறும் பேசப்பட்டன –
————-
ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி – நாலாயி:-2832/1
அதி ஹேயமாய் இருக்கிற தேஹத்தின் உடைய ஹேயதை தெரியாதபடி -ஸ்ரக் வஸ்த்ர ஆபரண- ஆதிகளாலே அலங்கரித்துக் கொண்டு – ஆபா தரமனியைகளான தருணீ ஜனங்கள் உடைய –ஆய்தல்-நெரிதல் – இழை-ஆபரணம்-இழையார் -ஸ்திரீகள் -அகவாயில் தோஷம் ஒன்றும் தோற்றாதபடி -கைப் பாணி இட்டால் போலே –காணும் இவர்கள் அலங்கரித்து கொண்டு இருப்பது –மாம்சா சர்ன்மயமான ஸ்தனங்களிலே சக்தனாய் -அவற்றின் தோஷத்தை தெரிய மாட்டாதே –போக்யதா புத்தியைப் பண்ணி -அவற்றுக்கு அவ்வருகே போக அசக்தனாய் -த்ர்ஷ்டார்த்தனானவன் – தண்ணீர் பந்தலிலே விழுந்து கிடக்குமா போலே அவற்றிலே தான் நித்ய வாசம் பண்ணும்படியான –அந்த விஷயம் போலே அதி ஹேயமான வ்யாமோஹம் என்கிற அள்ளல் தரையிலே மக்நனாய்-வாக்குக்கு நிலம் ஆகாதபடி -கை கழிந்த காதல் -நசித்துப் போந்த -என் ஆவியை -கீழே லவ்கிகர் எல்லாரையும் உத்தரித்தபடி அருளிச் செய்தீர்
————
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் ––1-9-4– நாலாயி:-2990/1
உடனே அமர வேண்டும்படியான காதலையுடைய ஸ்ரீ பிராட்டிமார் –
அகலகில்லேன் இறையும் என்று ஆயிற்று இவர்கள் இருப்பது -அவர்கள் யார் என்னில்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் – ந கச்சின் ந அபராத்யதி –என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய் பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி-அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே
குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி-திருமகள் அவன் ஐஸ்வர்யம்
மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-
————-
நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த –2-1-9- நாலாயி:-3017/1
‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல் இருக்கிற ப்ரேம -காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்து வற்றாக -முதல் வற்றும் படி -உலர்த்த,
————
ஆராத காதல் குருகூர் சடகோபன் – நாலாயி:–2-1-11-3019-/2
இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.-காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார். ‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. -(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே – இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)
———–
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே –3-1-9- நாலாயி:-3129/2
சதுர் தந்தி என்னுமா போலே காதலே இதுக்கு நிரூபகமாய் இருக்கை-சேஷ பூதனுக்கு காதல் அடையாளம் -சேஷிக்கு அடையாளம் நல் சக்கர வலத்தை புள்ளூர்வது
மெய்யானை -மெய்ய மலையானை சங்கு ஏந்தும் கையானை -ஆர்த்தமாக சக்கரம் அங்கு கொள்ள வேண்டும் —அஞ்சலிக்கும் கை -ஆழ்வார்கள் ஆச்சார்யர்களை இப்படியே சேவிக்கிறோமே இன்றும் –அளிப்பான் -இதன் கையிலே பூ செவ்வி அழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுகைகாக-
———-
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே –3-9-8- நாலாயி:3216/3,4
பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி -இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு.-அவன் தாள் இணைக் கீழ்ப் புகும் காதலன்
இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணியிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்.
——————
கண்ணி எனது உயிர் காதல் கனக சோதி முடி முதலா –4-3-5- நாலாயி:-3257/1
எனது உயிர் கண்ணி –‘நான் ‘என்னது’ என்று இருக்கிறதை அன்றோ அவன் தனக்கு மாலையாகக் கொண்டது?’ என்பார்,‘எனது உயிர் கண்ணி’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மார்வத்து மாலை’ என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை தக்கது;
அஃது ஒழிய என் உயிரை அன்றோ தனக்கு மாலையாகக் கொண்டான்?’ என்பார்,
‘கண்ணி எனது உயிர்’ என்கிறார் என்னலுமாம்.
கனகம் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் காதல் – விரும்பத் தக்கதாய் ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி முதலான எண் இறந்து பல வகைப்பட்ட திரு ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாம்.
‘இவருடைய காதல் அவனுக்கு ஆபரணமாவது என்?’ என்னில், இவருடைய அன்பிற்குத் தான் விஷயமாகப் பெற்ற இதனையே,-தனக்குப் பல ஆபரணங்கள் சாத்தினால் பிறக்கும் புகர் உண்டாக அவன் நினைத்திருக்கையாலே, அதனை நோக்கிச் சொல்லுகிறார்.
குணம் த்ரவ்யம் ஆகுமா -இவற்றைக் கொண்டு பெரும் உகப்பு இவர் அபி நிவேசம் கண்டு அடைகிறார் -என்றபடி-அத்ருஷ்ட ரூபமான மானஸ அனுபவம் காதல் ப்ரேமமே வேண்டுவது – பூவை –பூம் புட்டில் யாவையும் திருமால் திரு நாமங்களை போலே –அதே பிரியம் இவள் திருநாமத்தால் அடைகிறாள் -என்றபடி போலே-
——
கரை கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன் —4-3-9- நாலாயி:3261/2
அனுபவிக்கப்படும் பொருள் பேசத் தட்டு என்?’ என்ன, ‘உன் கரை இல்லாத காதல் என்னுடைய பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.-உரைக்க வல்லன் அல்லேன் –
உன் காதல் குணத்தை அனுபவித்துக் குமிழிநீர் உண்டு போமித்தனை போக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகின்றிலேன்.-‘எல்லாம் பேச ஒண்ணாதாகில், பேசக்கூடிய கூற்றினைப் பேசினாலோ?’ என்னில், உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் நான் என்று செல்வன் – உன்னுடைய முடிவில்லாத காதல் குணத்தால் வந்த கீர்த்திக் கடலினுடைய கரையிலே தான் என்னாலே செல்லப் போமோ?’‘இப்படிக் கரை அருகும் செல்ல அரிய விஷயத்தில் நீர் பேசுவதாக முயற்சி செய்வான் என்?’ என்னில்,-காதல் மையல் ஏறினேன் –
‘என்னுடைய ஆசையாலே மிக்க கலகத்தை உடையவன் ஆனேன்; பிச்சு ஏறினாரை ‘நீர் இப்படிச் செய்வான் என்?’ என்னக் கடவதோ?-இவ் விஷயத்தில் மயங்குவான் என்? மயங்குவார்க்கு ஒரு பற்றுக்கோடு வேண்டாவோ?’ என்ன,
‘நித்தியசூரிகள் பித்து ஏறி ஏத்தக் கண்டேன்; அத்தாலே செய்தேன்,’ என்கிறார் மேல் :
நித்தியசூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வேற்றுமை இன்றி அன்றோ இவ்விஷயம் இருப்பது? முற்றறிவினனாய் எல்லாவற்றையும் முடிக்கவல்ல ஆற்றலையுடையனான தான் அறியப் புக்காலும் தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் அன்றோ இருப்பது? தன்னை அறியப் புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும்.
————
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே —4-4-10- நாலாயி:-3273/4
மயக்கத்தைச் செய்யக் கூடியதான பெரிய காதலை யுடைய என்னுடைய இளம் பெண்ணுக்கு,-என் செய்கேன் – இவள் மயங்காதபடி செய்யவோ? நான் இதனைப் பொறுத்திருக்கவோ?-வல் வினையேனே – இவளை இப்படிக் காணும்படி மஹா பாவத்தைப் பண்ணினேன்! ஆழ்வான் திருக்கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவு பட்டாற்போலே காணும் திருத் தாயார் திரு வுள்ளமும் படுகிறது-
————
மட வல் நெஞ்சம் காதல் கூர வல் வினையேன் அயர்ப்பாய் -–4-7-9– நாலாயி:-3305/3
மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்து கொண்டு நிற்கை.-வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்கு நின்றும் மீட்க அரிதாய் இருக்கை.-இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் –அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்;-இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்;-என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.
————
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை – –4-7-11–நாலாயி:3307/1
‘நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே.-தாமரைக் கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்திர பூதரைச் சொல்லுகிறார்.-அந்தரங்கர் -என்றுமாம் –
————-
நெஞ்சப் பெருஞ் செய்யுள் –பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -–5-3-4– நாலாயி:-3366-/3-
நெஞ்சப் பெருஞ் செய்யுள் – நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.
ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி, ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.-பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி ஆத்மாவோடு கட்டுப் பட்டிருக்கின்ற காதல் என்றபடி.
இங்கே ‘கடல் புரைய’ என்றது, கடலின் மிகப் பெரிதால்” -7. 3 : 6.என்னா நின்றது;
அதனில் பெரிய என்னவா” -10. 10 : 10 என்று, ஈச்வரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது;
ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட காரியம் இதுவாயிற்று.-கைங்கர்யத்திற்கு முன் ஷணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது.-அது உண்டாக வேணுமே அன்றோ அவ் வருகு போம் போது; அங்கே போன பின்னர் அங்குள்ளாரது ஒரு படியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே.
முதலிலே மயர்வற மதி நலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று.
அன்றிக்கே,-பெரிய போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது,
ஊர்ப் பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,-காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல்.
நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில்,
“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே ஸங்காத் ஸம்ஜாயதே காம:
காமாத் குரோத: அபிஜாயதே”- என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.
“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது, அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே, அதிலே ஓர் அவஸ்தா விசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம் வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.
—————
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் – -–5-4-6-நாலாயி:3379/1
புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது. இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.-நெஞ்சினை மிகவும் நோவு படுத்தா நின்றது.
நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;
அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று-காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக் கொண்டு வந்தாற் போலே இரா நின்றது.
நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்து கொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.
எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று இத் தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட் கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட் கண்ணை இரவு மறைத்தது.
————
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்-–5-5-10- – நாலாயி:3394/1
எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்; -இதர விசஜாதீய காதல்-
அன்றிக்கே, நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல்.
“ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி
மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4.
நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.-அன்னை காணக் கொடாள்-‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.
ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில்,
தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,
சரீரம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது – அநுசந்தித்தல்.
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
கட் கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட் கண்ணேல் காணும் உணர்ந்து.-என்றது, பெரிய திருவந். 28.
“நெஞ்சு என்னும் உட் கண்” என்னக் கடவதன்றோ. நெஞ்சையுங் கூட வாய் கட்டா நின்றாள்.
————
காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் –6-1-2- நாலாயி:3452/1
“நான் ஒரு மாதத்திற்கு மேல் ஜீவித்திருக்க மாட்டேன்” என்றால்,
“கண நேரத்திற்கு மேல் நான் ஜீவித்திருக்க மாட்டேன்” என்பாரும் உண்டு ஆகாதே.
கடக்க நின்று சொல்லளவேயாய்ப் போகாமல்,
(100 யோஜனை தாண்டி கடலுக்கு அக்கரையில் இருந்து சொன்ன வார்த்தை )
அது தன்னை அநுஷ்டான பர்யந்தமாக்கித் தலைக் கட்டுவாரையும் கிடைப்பதே.நிரூபித்துப் பார்த்தால் காதலுக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே யிருத்தலின் ‘காதல் பெடை’ என்கிறாள். என்றது,-காதலை வடிவாக வுடைத்தா யிருக்கை
மென் பெடை-கலக்கவும் கூடப் பொறாத மிருதுத் தன்மையை யுடைத்தா யிருத்தலின் ‘மென் பெடை’ என்கிறாள்-காதல் உடைய மென் பெடை இல்லை –காதல் மென் பெடை அன்றோ -காதலே ஸ்வரூப நிரூபக தர்மம் காதல் என்றவாறு –
“புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக் கொள் வற்றே பசப்பு”-என்ற திருக் குறள் நினைவு கூர்தல் தகும்.
———–
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே ––6-8-2- நாலாயி:3529/4
அவன் திருமேனியிலே நான் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்;
என்னுடம்போடே அவன் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்.‘தம்மைப் போலே பொய்யுமாய் நிலை நில்லாததுமான காதல் அன்று எங்களது என்று
சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.-சத்தியமான காதல் என்றபடி.
அன்றிக்கே,
ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
“மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.
—————
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்_வண்ணா கடியை காண் என்னும் – 7-2-4–நாலாயி:3575/2
சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடாதன்றோ?
பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே ப்ரேமம் – அன்பு- தண்ணிது என்கிறாள்.
———-
காலம்பெற என்னை காட்டு-மின்கள் காதல் கடலின் மிக பெரிதால் – –7-3-6-நாலாயி:-3588/1
இந்தக் காதல் அளவு பட்டோ இருக்கிறது? முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.
‘கடல் புரைய’ திருவாய், 5. 3:4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
‘ஆனாலும், காதலை அளவுபடுத்தி, நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுக வேண்டாவோ?’ என்ன,
கார்யார்த்தமாக விளைந்த சாதன பக்தி-கடல் போன்ற முன்னம் -இங்கே வளர்ந்த –
ஜகத்தை வைத்து திருத்த -கார்ய அர்த்தமாக முன்பு -ஈர நெல் வித்து -அன்னை நீர் -ஊரவர் கவ்வை-ராக பிராப்தமான காதல் -ஸ்வயம் வை லக்ஷண்யம் பார்த்து வளர்ந்த காதல் –
———-
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ —7-3-8- நாலாயி:3590/2
இவர்கள் பேசாமலே இருந்தார்களாகில் நானும் சுகமே இரேனோ?
நான் பழிக்கு அஞ்சி மீளுவேன் என்று காணும் இவர்கள் பழி சொல்லப் புக்கது.
அலர் தூற்றிற்று – அலர் தூற்றினார்கள்.-அது முதலாக் கொண்ட என் காதல் -அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.-தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
‘எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும் இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி.‘யதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது, தைத்தீரியம்.
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?-‘சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,‘அதனிற்பெரிய என்னவா’ என்றார் அன்றோ?(ஆர்த்தி ஹரத்வம் பத்தாம் பத்தின் குணம் )
————-
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே -8-3-9– நாலாயி:3701/4
வடிவு அழகாலே என்னை சேர்த்துக் கொண்ட இது அன்றோ என்னை கலங்கப் பண்ணிற்று-என் காதல் கலக்கவே –என்னுடைய காதலானது நான் அஞ்சும்படி கலங்கப் பண்ண-
உன் வடிவு அழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்ன அத்தனை போக்கி உன் சௌகுமார்யத்தை எல்லை கண்டு சொன்னேன் –அன்றே – இவ்வளவே என்னளவும் என்றது -உன் ஸூகுமார்யத்துக்கு தக்க படி சொல்ல வல்லேன் அல்லேன் — என்றபடி –வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களான பிரமன் சிவன் முதலானோர்கள் பரிவும் உனக்கு ஒத்தது அன்று –காதலால் கண் இல்லாதவனான என் பரிவும் உனக்கு ஒத்தது அன்று என்றதாயிற்று-ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரேமாந்தகனான அடியேனாலும் உனக்கு சத்ருசமாக பரிய ஒண்ணாதே-
———-
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை –9-1-1- நாலாயி:3781/2
இவனைக் கண்ட போது சிநேகிக்கும் அது ஒழிய -என்னுதல் –
கையிலே பொருள் கண்ட போது அதனை நோக்கி ச்நேகிக்குமது ஒழிய -என்னுதல் –பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்-மற்று -எனபது
காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –
————
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் – 9-7-2-நாலாயி:3848/2
ஒன்றுக்கு ஓன்று பொருந்தின காதலை உடைய குருகு இனங்களே -என்றது
ஆசையிலே பிரிவினை உண்டாக்காத ஆசை உண்டே -அன்றோ
ஆசையிலும் குறைவு அற்று பிரிவு இன்றிக்கே கருத்து அறிந்து கலக்கவும் கூடியவர்களாய்
இருப்பதே-நீங்கள் என் முன்னம் – என்கிறாள் –
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply