ஸ்ரீ நம்பி மூத்த பிரான் திரு அவதாரம் 6 பாசுரங்கள்
பெரியாழ்வார்-1-7-5-
ஆண்டாள்-திருப்பாவை -17-நாச்சியார் திருமொழி-12-7/14-1-
திருமங்கை ஆழ்வார்-8-8-8-/10-7-4
அவதாரம் சகாயம்
புருஷகாரம்
அபிநயா பாவம் விட்டுப் பிரியாமல்
கண்ணன் இவருக்குப் பணிந்தே இருப்பான்
தீம்பு அற்றவன்
பரதந்த்ரன் -அவன் கொன்றாலும் கண்ணனே செய்ததாகச் சொல்லமாமே -ராமஸ்ய தக்ஷிண பாஹு-கொல்லை அரக்கியை மூக்கரிந்தவன் சொல்லும் பொய்யானால்
ஆதி சேஷன் அவதாரம்-அநந்தன் -லஷ்மணன் –பலராமன் – -ராமானுஜர் மா முனிகள் -அண்ணாவாகவும் ஆச்சார்யராகவும்
ராமன் ரம்யாதி மகிழச் செய்பவர் பலம் மிக்கவர் -பலபத்ரன் -ஸங்கர்ஷணன் -கர்க்காச்சார்யார் சூட்டிய இயற் பெயர்-தேவகி ஏழாவது கர்ப்பத்தில் முதல் இருந்தவர் – -ரோகிணி கர்ப்பத்துக்கு இழுத்து வைக்கப் பட்டவர்-
கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்
இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–81-
பொய்ந் நம்பி -பெயர் சூட்டுகிறார் திருமங்கை ஆழ்வார் -/
மெய் போலும் பொய் வல்லன் –திருவாய் -10–4–5-/ ஏலாப் பொய்கள் உரைப்பான் –நாச்சியார் -14–3-/பொருத்தம் அன்றோ –
கும் கும் இதி கிம் ப்ரமதி அம்ப ததி மத்யே
டிம்ப ந நு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப நவநீதம் இதி சம்வததி கிருஷ்னே
மந்த ஹசிதம் ச மாதுரதி ரம்யம் -இப்படி மழலைச் சொற்களால் மயக்கி யன்றோ வெண்ணெய் உண்டான் –
மாத கிம் யதுநாத தேஹி சஷகம் கிம் தேன பாதும் பய
தன் நாஸ்தி யத்ய கதா அஸ்தி வா நிசி நிஸா கா வா அந்தகார உதயே
ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா தேஹீதி மாதுர் முஹு
வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –க்ருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகம்
மாத-அம்மா / கிம் யதுநாத-என்ன கிருஷ்ணா / தேஹி சஷகம்–ஒரு கிண்ணம் தா / கிம் தேன-எதற்கு /பாதும் பய -பால் குடிக்க /
தன் நாஸ்தி யத்ய -அது இப்போது இல்லை / கதா அஸ்தி வா-பின் எப்போது / நிசி-இரவில் தான் / நிஸா கா வா -இரவு எப்போது வரும் /
அந்தகார உதயே -இருட்ட ஆரம்பிக்கும் பொழுது /ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா-இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு இருட்டும் வந்து விட்டதே – தேஹீதி-பாலக் கொடு –
மாதுர் முஹு வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –கள்வனுடைய சாமர்த்திய பேச்சு கேட்க என்ன பாக்யம் செய்தாளோ-
வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –
———-
முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ –1 7-5 –
பதவுரை
முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளி மலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடு மொடு–திடு திடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக் கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக் கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர் நடை நடவானோ -.
உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –
முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே
கரு மலைக் குட்டனுக்கு முன்னே நன்றாய்
அத்விதீயமாய்
பெரிதான வெள்ளி மலைக் குட்டன்
மலை ஈன்ற குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோட
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )
பின்னை இத்யாதி –
அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )
அக் குட்டியின் பின்னே
அஞ்சன கிரி ஈன்ற குட்டி தன் செருக்காலே அத்தை தொடர்ந்து ஓடுவது போலே-
பன்னி இத்யாதி –
லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –
அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –
(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் )
லோகத்தில் உள்ளார் சாஸ்திரங்களையும் ஸ்தோத்ரங்களையும் ஆச்சார்ய முகத்தாலே ஆராய்ந்து இடைவிடாதே ஸ்துதித்திப் போரும் படியான புகழை யுடையனாய் –தனக்கு அக்ரஜனான நம்பி மூத்த பிரான் வெள்ளி மலைக் குட்டி போலே செருக்காலே முன்னே ஓட
பின்னே அவனைப் பிடிக்க வேணும் என்று ஓடிச் செல்வான்
தளர் நடை நடவானோ-
பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலை யீன்ற குட்டியோடுவதையும்,
கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார்.
காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க.
நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர். இங்கு, தமையனென்ற பொருளைக் காட்டிற்று.
அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால்,
அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம்.
மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்புமாம்
கண்ணனால் விரும்பப்பட்ட புகழ்-ஆதிசேஷனைப் பிரியாதவன்-புல்கும் அணையாம் -படுக்கை இல்லாமல் ராமனால் தூங்க முடியாதே-
————-
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-17-
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா –
பிள்ளை பெருகைக்கு பொற் கால் பொலியப் பிறந்த சீமானே –
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –
இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் –
அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ –
பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்
கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –
சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ
பல தேவா
பல தேவர் என்று திரு நாமம் -பலைகதாமநி
———–
உம்பியும் நீயும் –
உனக்கு பவ்யமான தம்பியும்-அவனுக்கு பவ்யமான நீயும் –
உறங்கேலோ ரெம்பாவாய்
உறங்காது ஒழிய வேணும்-
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –
அவனும் பிறப்பால் பாரதந்தர்யம் கொண்டாட –
நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ –
திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி
உம்பியும் நீயும்
உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –
அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –
அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –
இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –
புல்கும் அணையாம்-என்று
நாய்ச்சிமாரைப் பிரிந்தால் ஆற்றலாய் இறே இருப்பது –
பிராட்டியைப் பிரிந்து நெடு நாள் இருந்தார் –
இளைய பெருமாளை பிரிந்த பின்பு அமுது செய்திலர்
லஷ்மனேந கதாம் கதிம்-என்று
என் தம்பி போன வழியே நானும் போம் அத்தனை என்று எழுந்து அருளினார்
உம்பியும் நீயும் உறங்கேல்
படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ
அவன் படுக்கையான நீ உணர்ந்து
எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )
உம்பியும் நீயும் உறங்கேல்
இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே
நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே
பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது
(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்
அம்பரீஷன் துர்வாசர் )
இழவிலே-
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தி-என்பார்கள்
ஊடின போது –
தீ முகத்து நாகணை -என்பார்கள்
உகந்த போது –
நாகணை மிசை நம்பிரான்
ஸ்ரீ குஹப் பெருமாள் -மஹா ராஜர் -திருவடி -விபீஷண ஆழ்வான்-எல்லார்க்கும்
இளைய பெருமாள் இறே புருஷகாரம்
ஆன பின்பு அவனையும் எழுப்பி நீயும் எழுந்திராய் என்கிறார்கள் –
செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து
ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்
வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்
செல்வா பலதேவா –
இப்படி சம்பன்னனான பல தேவனே
உம்பியும் நீயும் உறங்கேல்
உனக்கு பவ்யனான கிருஷ்ணனும்
கிருஷ்ணனுக்கு பவ்யனான நீயும்
உறங்காது ஒழிய வேணும்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் –
பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )
சந்தேசை சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ
திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்
சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –
(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)
——–
உனக்கு இஸ் ஸ்வபாவ அந்யதாபாவம் எத்தாலே தீரக் கடவது என்ன –
அது இன்னது என்கிறாள்
அவன் வெற்றி மாலையிட்டு நிற்கிற இடத்திலே
என்னைக் கொடு பொய் பொகடுங்கோள் என்கிறாள்-
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-
பதவுரை
வண்ணம் திரிவும்–(என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும்–மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும்–ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும்–அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன்–கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட–குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும்–நீங்கும்,
(அத் திருத் துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும்–மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும்–வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன்–பலராமன்
பிலம்பன் தன்னை–ப்ரலம்பாஸுரனை
பண் அழிய–ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி,
வென்ற–கொன்று முடித்த இடமாகிய பாண்டி வடத்து
பாண்டீரமென்னும் –ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்.
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
வண்ணம் திரிவும்-நிறத்தினுடைய அந்யதா பாவமும்
மனம் குழைவும்-லாப அலாபங்களுக்கு இடையக் கடவதல்லாத நெஞ்சினுடைய நெகிழ்ச்சியும்
மானமிலாமையும்-எல்லா அளவிலும் உண்டான ஸ்த்ரீத்வ அபிமானம் வாசனையோடு குடிபோகையும்
வாய் வெளுப்பும்-போக்யத் த்ரவ்யங்களைக் குறைக்கையினாலே வாயிலே உண்டான வெளுப்பும் –
வாய்ப்புறம் வெளுத்து -நாச் திரு -1-8-
உண்ணல் உறாமையும் உள் மெலிவும் –
வேறு ஒன்றும் தாரகமாய் இருப்பது இல்லாமையினாலே சரீரத்தில் பிறந்த பல ஹானியும்
இவை எல்லா வற்றுக்கும் அடியான ஜ்ஞான சங்கடமும் –
உள் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது -ஜ்ஞான சங்கோசம் –
ஓத வண்ணன் என்பான் ஒருவன்-
இவை எல்லாம் இப்படிப் பண்ணி வேறு படுத்தின வடிவு அழகு இருக்கிறபடி –
ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையான் ஒருவன்
ஒருவன் -இதர சஜாதீயன் –என்றுமாம் –
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும்
அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே –
அம்மாலையின் படியும்
அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –
பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்-
கன்றுகள் மேய்க்கும் பிரதேசத்தில் -ஆல மரத்தின் அடியிலே –
ப்ரலம்பா ஸூரன் கட்டழிந்து -சந்தி பந்தங்கள் குலைந்து
சிதிலனாம் படியாக நம்பி மூத்த பிரான் வென்ற பாண்டீர வடத்திலே கொடு பொய் பொகடப் பாருங்கோள் –
இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண -அந்த வெற்றி பெருமாளானதாப் போலே யாய்த்து இங்கும்
நம்பி மூத்த பிரானுடைய வெற்றியும் கிருஷ்ணனதாய் இருந்தது இறே –
அவன் வீர அபிஷேகமும் விஜய அபிஷேகமும் பண்ணி மாலையிடும் போது–(வெற்றி வாகை சூடும் பொழுது )அவன் தனியே நில்லாமே
நானும் ஒக்க நின்று மாலையிடும்படியாக என்னை அங்கே கொடு பொய் பொகடுங்கோள்-
பாண்டீர வனம் -அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது.-வைகாசி விசாக பௌர்ணமி நாளில்தான் பிருந்தாவனத்தில்- பாண்டீர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா- கிருஷ்ண திருமணம் நடந்ததாம்.உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் ‘பிரம்மஸரண்‘ என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய ஊர்தான் ராதை பிறந்த இடம். ராதையை இங்கு ‘ராதாராணி’ என்றே கூபிடுகிரார்கள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675 -ம் ஆண்டு, செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டது. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது. ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி இந்த ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.
சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.
பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.
————————
விண்ணாட்டவர் மூதுவர்-திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-
தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி-
அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-
பதவுரை
ஓர் கார் ஏறு–(கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து–காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு–பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய்–ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு–ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி–விளையாடிக் கொண்டு
இங்கே போத–இப்படி வர
கண்டீரே–பார்த்தீர்களோ?
இட்டம் ஆன–(தனக்கு) இஷ்டமான
பசுக்களை–பசுக்களை
இனிது–த்ருப்தியாக
மறித்து–மடக்கி மேயத்து
நீர் ஊட்டி–தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு–(இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட–(அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே–ப்ருந்தாவனத்திலே
கண்டோம்–ஸேவித்தோம்.
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதியாய் –
கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து-
வானிளவரசு– என்கிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் –
பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத் தத்வம் வளருவது என்றாய்த்து பட்டர் அருளிச் செய்வது – –
ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து– பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி
ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது
பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி
பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே
கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆஸ்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –
இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் –
ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இறே-
இவன் தான் ஓரடி பிற்பட விறே பாம்பின் வாயிலே விழுந்தது –
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று
சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து
இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு-என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி
அவாக்ய அநாதர-தத்வம்
இட்டீறிட்டு-என்னும் படி இருப்பதே என்று சிறியாத்தான்
போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்
விளையாடி –
அச் செருக்குக்கு போக்கு விட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது –
இது தானே இறே பிரயோஜனம்
இங்கே போத –
அங்கே போனாலும் பெற வரிய பரிமாற்றத்தை
அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –
கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாக்களானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே
இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது
ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால்
பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-
இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர்தேவே -திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ்விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும்
கனாக் காண்பதுவும் இப்பசுக்களை வாய்த்து –
இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-
எதிர்த் தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால் அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும்
எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-
நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து
பின்னே கையைக் கட்டிக் குனிந்து நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து —
இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்
தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–
இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—
காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே –
திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இறே லீலையில் அந்வயம் உள்ளது –
இந்த லீலை தானே இறே பிரயோஜனம் –
விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இறே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து
அபிமத விஷயங்களும் தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே
ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –
(ராம் காட் -வடகிழக்கு பகுதியில் இன்றும் காண்கிறோம் -நம்பி மூத்த பிரான் கோபிகள் உடன் ஜலக்ரீடை பண்ணிய இடம் -ஆஸ்வாஸம் -இனிமையாக ப்ரேம கர்ப்பத்துடன் பேசி –)
—————————
அக்ரூர ஆழ்வான் பலராமன் ஆழ்வான் லஷ்மணன் ஆழ்வான் சொல்வது இல்லை -கைங்கர்ய பிரதானர்கள்
பரசுராம ஆழ்வான் சொல்கிறோம்
பலராம ஆழ்வான் -கௌண அவதாரம் இவரும்
பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் பிரஹலாத ஆழ்வான் விதுர ஆழ்வான் சொல்வோம்
ஆதி சேஷன் அவதாரம் -லஷ்மணனும் பலராமனும் -ஆனால் தனது சக்தியையும் ஆவேசமாகக் கொண்டதால்
இவர் தசாவதாரத்தில் -கண்ணனுக்கு நம்பி மூத்த பிரானாகக் கொண்டார் –
ராஜா -இடுப்பில் சாவிக் கொத்தும் -ஒற்றைக் குழையும் -குண்டலம் உண்டே -ஒரு காதில் நீல மணியும் இருக்கும்
சவ்ரி ராஜர் -நாகை அழகியார் -ராஜ மன்னார் -காட்டு மன்னார் -சேவிக்கிறோமே
குழை -காது ஆபரணம்
கலப்பை மூடி இருப்பதால் ஒரு காது மட்டுமே பலராமன் இடம் சேவிக்கிறார் –
கையும் கலப்பையுமாகப் பிறந்த நம்பி மூத்த பிரான் விஜயத்தில்
தாம் தோற்று ஜிதந்தே என்னப் பண்ணிய அவதாரம் என்று மங்களா சாசனம் –
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-
ஒரு பால் ஒற்றைக் குழையும் ஒரு பால் நாஞ்சிலும் தோன்ற-என்றபடி –
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி –
ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால்
தோன்ற தான் வந்து –
( கரூர் அருகில் தான் தோன்றி மலையில் தான் தோன்றி பெருமாள் சேவை சாதிக்கிறார் )
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து -செற்ற கொற்றத் தொழிலானைச்-
வெற்றியே தொழிலாக உடைய
வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை
தொழிலாக உடையவனை –(ருக்மியைக் கொன்றவனும் நம்பி மூத்தபிரானும்
விவிதனையும் அழித்தவன்)
செந்தீ மூன்றும் இல்லிருப்ப கற்ற மறையோர்-
த்ரேதாக்னிகள் தங்கள் கிருஹங்களிலே இருக்கை –
த்ரேதாக்னி முகத்தாலே பகவத் சமாராதானம் பண்ணுகையாலே
ஹவிஸ்ஸைக் கொள்ள தங்கள் கிருஹங்களுக்கு உள்ளே
சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கும் படி கற்ற பிராமணர் –
(குளித்து மூன்று அனலை ஓம்பும் -கற்ற மறையோர் -அனுஷ்டான பர்யந்தம் –
கற்றபடியே ஆராதனையும் செய்கிறார்கள் )
கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-
—————————————
சங்கர்ஷணன் -ஆறு மாதம் ஒரு கர்ப்பம்
கீழ் யசோதை பிராட்டி எல்லாரையும் பார்த்து புகார் செய்தமை
அத்தைக் கேட்டு கீழை அகத்து நங்கைக்கு மறு மாற்றம் கிட்டாமையாலே
அவள் தன் வாய் வந்தபடி
இவனைப் பழி சொல்லி
நம்பி மூத்தபிரானைக் கொண்டாடி
இனி ஒருவருக்கும் இங்கு இருந்து பிழைக்க விரகு இல்லை
என்று வெறுத்துக் கொண்டமையை அனுபவிக்கிறார் )
மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-
(நல்லாள்–தேவகி- ரோஹிணி -யசோதை
நம்பி நம்பி -நம்பிக்கு மூத்த பிரான்
நம்பி நம்பியா–நிறபேஷனான கண்ணன் தீம்பால் பூர்ணனாகைக்காக )
மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற –
அஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று
கண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –
(மை தீட்டிய வேல் -கருமையும் கூர்மையும் பெருமையும் )
அவ்வளவு அல்லாத
ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –
(தேக குணம் அளவு அல்லாத -அடை மொழி உடன் தேக குணம் –
ஆத்ம குணம் அடை மொழி இல்லாமல் நல்லாள் ஸ்வயம் -உத்க்ருஷ்டம் )
வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் –
சங்கு வர்ணனாய் இறே நம்பி மூத்த பிரான் இருப்பது –
தன் தமையன் தீம்பாலே குறையற்றான் ஒருவன் இறே –
அவன் முற் காலத்திலே இங்கே விளையாடித் திரியும் போது
நாங்கள் இப்பாடு பட்டு அறியோம் –
பொய்ந் நம்பி –
பொய்யால் குறைவற்று இருக்கிறவன் –
புள்ளுவன் –
கண்ணி வைப்பாரைப் போலே
கடைகிற போதே துடங்கி
இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ராம கிருஷ்ணர்கள்
அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –
கள்வம் பொதியறை –
களவிட்டு வைக்கைக்கு ஒரு கொள் கலம் –
போகின்றவா தவழ்ந்திட்டு –
இக் களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே
தவழா நிற்கும் –
இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை –
நிரபேஷனான இவன்
இவனாக
இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
என் செய்கேன் என் செய்கேனோ –
இவர்கள் கீழே எங்கனே நான்
இவ் வூரில் குடி இருக்கும் படி –
கள்வம் பொதி அறை -கள்ளத் தனத்துக்கு கொள்கலமாய் இருப்பவனான இக்கண்ணபிரான்
முன்னலோர் வெள்ளிப் பருமலைக் குட்டன் -சூது வஞ்சனை கள்வம் ஒன்றும் அறியானவன் –
மை நம்பு வேற்கண் நல்லாள் -தேவகி ஆகவுமாம் –ரோகிணி -ஆகவுமாம் -மையை விரும்புகின்ற கண்களை யுடையவள்
நம்பும் மேவும் நசையாகுமே
வளை வண்ண நன் மா மேனி -வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -என்பார் கீழும் –
வெள்ளிப் பருமலைக் குட்டன் -என்பர் பெரியாழ்வார்
நம்பி நம்பியும் -நம்பி மூத்தபிரான் -தன் நம்பி நம்பியும் -என்றதை நம்பி தன் நம்பியும் -என்று அந்வயம்
இந் நம்பி நம்பியா நம்பியால் -என்ற பாடம் மறுக்கத் தக்கது -நம்பியா -என்றது நம்பியாக -என்றபடி
நிரபேஷனான இவன்–இவனாக–இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவன் இவனாக என்றது -இவன் இப்படி தீம்பில் குறையற்றவனாக இருக்கையாலே -என்றபடி –
————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பி மூத்த பிரான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply