நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே
ஜெய கோவிந்த ஹரே
நாராயண நாராயண ஜெய கோபால ஹரே
ஜெய கோபால ஹரே(1)
கோவிந்தன் எனப்படும் நம்மைக் காக்கும் கடவுளான ஹரி நாராயணனுக்கு வெற்றி கூறுவோம். கோபாலனாய் பசு’க்களாகிய நம்மைக் காத்து ரக்ஷிக்கும் ஹரி நாராயணனுக்கு வெற்றி
கருணாபாரவார வருணாலயகம்பீர
நாராயணா (2)
கநநீரதஸங்காச’ க்ருதகலிகல்மஷநாச’ந
நாராயணா (3)
கருணைக் கடலானவரும், நிறைந்த மேகக் கூட்டம் போன்றவரும், கலியின் தோஷங்களை நீக்குபவரும், நாராயணனே!
யமுநாதீரவிஹார த்ருதகௌஸ்துபமணி
ஹார நாராயணா (4)
யமுனா தீரத்தில் விளையாடி மகிழ்ந்தவரும்,
கௌஸ்துபமணியினை ஹாரமாய்த் தரித்தவரும் நாராயணனே!
பீதாம்பரபரிதாந ஸுரகல்யாண நிதான
நாராயணா (5)
பொன்னிற பட்டாலான பீதாம்பரம் அணிந்து, தேவர்களுக்கு அளப்பரிய நன்மைகளை அருள்பவர் நாராயணனே!
மஞ்ஜுலகுஞ்ஜாபூஷ மாயாமானுஷ வேஷ
நாராயணா (6)
குஞ்ஜ மணிகளாலான மாலையை அணிந்து, மானுட வேடம் தரித்து மாயையால் நம்மை ஆட்கொள்பவரும் நாராயணனே!
ராதாதரமதுரஸிக ரஜநீகரகுலதிலக
நாராயணா (7)
ராதையின் அருகாமையில் இதழினின்று தேனைச் சுவைத்து மகிழ்ந்திருப்பவரும், சந்திர வம்சத்தின் மணிமகுடமாய்த் திகழ்பவரும் நாராயணனே!
முரளீகானவிநோத வேதஸ்துதபூபாத
நாராயணா
பர்ஹிநிபர்ஹாபீடநடநாடக ஃபணிக்ரீட
நாராயணா (9)
குழலூதி மகிழ்ந்திருப்பவரும், நாராயணனே!
இவரின் திருவடிகளையே வேதங்கள் போற்றுகின்றன.
வாரிஜபூஷாபரண ராஜீவருக்மிணீரமண
நாராயணா (10)
பாரிஜாத மலர் மாலை அணிந்து, ருக்மிணியிடம் ரமித்திருப்பவரும் நாராயணனே!
ஜலருஹதளநிபநேத்ர ஜகதாரம்பகஸூத்ர
நாராயணா (11)
மயிற்பீலி அணிந்து, காளிங்கன் தலைமீது நர்த்தனம் ஆடியவரும் நாராயணனே!
பாதகரஜநீஸம்ஹார கருணாலய மாமுத்தர
நாராயணா (12)
தாமரை மலர்களால் ஆன மாலையை ஆபரணமாய் அணிந்து, தாமரை மலரில் உதித்த திருமகளுடன் மகிழ்ந்துறைபவரும் நாராயணனே!
பாப இருளை நீக்கி, கரைத்தேற்றுபவரும் நாராயணனே!
தாமரை மலர் போன்ற அழகிய விழிகளுடன், இவ்வுலகம் உருவாகக் காரணமாய் விளங்குபவரும் நாராயணனே!
அகபகஹயகம்ஸாரே கேச’வக்ருஷ்ண
முராரே நாராயணா (13)
அகன், பகன், மற்றும் கம்சனை, முரனை வதைத்த கேசவனும் நாராயணனே!
ஹாடகநிப பீதாம்பர அபயம் குரு மே மா
வர நாராயணா (14)
மஞ்சள் பட்டாலான பீதாம்பரமணிந்த லக்ஷ்மீ தேவியின் பர்த்தாவான நாராயணனே எம்மைக் காப்பாற்றும்!
தச’ரதராஜகுமார தானவமதஸம்ஹார
நாராயணா (15)
தசரதனின் மைந்தனும், அசுரர்களின் அஹங்காரத்தை அழித்தவரும் நாராயணனே!
கோவர்தனகிரி ரமண கோபீமானஸஹரண
நாராயணா (16)
கோவர்த்தனமலையைத் தாங்கி அருளியவரும், கோபிகைகளின் மனம் கவர்ந்தவரும் நாராயணனே!
ஸரயூதீரவிஹார ஸஜ்ஜநருஷிமந்தார
நாராயணா (17)
சரயூ நதி தீரத்தில் விளையாடி, கற்பக மரம் போல் வேண்டும் வரங்களை அருள்பவரும் நாராயணனே!
விச்’வாமித்ரமகத்ர விவிதவராநுசரித்ர
நாராயணா (18)
விச்வாமித்திரரின் யாகங்களைக் காத்து, பலவித அவதார வரலாற்றை உடையவரும் நாராயணனே!
த்வஜவஜ்ராங்குச’பாத தரணீஸுதஸஹ
மோத நாராயணா (19)
த்வஜ, வஜ்ர அங்குச பாச ரேகைகளைப் பாதங்களில் உடையவரும், பூமகளால் மகிழ்ந்திருப்பவரும் நாராயணனே!
ஜநகஸுதாப்ரதிபால ஜய ஜய ஸம்ஸ்ம்ருதி
லீல நாராயணா (20)
ஜனகரின் மகளை அடைய காத்திருந்தவரும், வாழ்க்கை நாடகங்களை ரசித்து மகிழ்பவரும் நாராயணனே! இவருக்கு வெற்றி கூறுவோம்!
தச’ரதவாக்த்ருதிபார தண்டகவனஸஞ்சார
நாராயணா (21)
தசரதனின் சொல்லுக்குப் பணிந்தவரும், தண்டகாரண்யத்தில் சஞ்சரித்தவரும் நாராயணனே!
முஷ்டிகசாணூரஸம்ஹார முனிமானஸ
விஹார நாராயணா (22)
முஷ்டிக, சாணூரர்களை வதைத்து, முனிவர்களின் மனத்தில் உறைந்திருப்பவரும் நாராயணனே!
வாலிவிநிக்ரஹசௌ’ர்ய வரஸுக்ரீவ –
ஹிதார்ய நாராயணா (23)
வாலியை வதைத்து, நல் சுக்ரீவனுக்கு அருளியவரும் நாராயணனே!
மாம்முரளீதர தீவர பாலய பாலய ஸ்ரீதர
நாராயணா (24)
வலிமை மிக்கவராய் குழலூதி மகிழும் லக்ஷ்மீ தேவியின் பதியே, நாராயணா! எம்மைக் காப்பாற்றும்!
ஜலநிதிபந்தந தீர ராவணகண்டவிதார
நாராயணா (25)
நதியின் மீது அழகிய பாலம் அமைத்து, ராவணனை ஸம்ஹரித்தவரும் நாராயணனே!
தாடீ மத தலநாட்ய நடகுணவிவித நாட்ய
நாராயணா (26)
தாடகையின் கர்வம் அழித்து, தேவர்களால் போற்றி பாடப்படுபவரும் நாராயணனே!
கௌதமபத்நீபூஜந கருணாகநாவலோகந
நாராயணா(27)
கௌதமரின் மனைவியான அகலிகையினால் பூஜிக்கப்படுபவரும், காருண்யமூர்த்தியும் நாராயணனே!
ஸம்ப்ரமஸீதாஹார ஸாகேதபுரவிஹார
நாராயணா (28)
சீதா தேவியின் மனம் கவர்ந்தவரும், அயோத்தியில் ஆட்சி புரிந்தவரும் நாராயணனே!
அசலோத்ருதசஞ்சத்கர பக்தாநுக்ரஹ
நாராயணா (29)
மலையையும் விரலால் தாங்கும் வலிமை கொண்டவரும், பக்தர்களுக்கு அருள்வதில் எப்பொழுதும் நாட்டம் கொண்டவரும் நாராயணனே!
நைகமகானவிநோத ரக்ஷ: ஸுதப்ரஹ்லாத
நாராயணா (30)
ஸாம கானத்தில் மகிழ்பவரும், அரக்கனின் மகனான ப்ரஹ்லாதனை காத்தவரும் நாராயணனே
பாரதீயதிவரச’ங்கர நாமாம்ருதமகிலாந்தர
நாராயணா
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply