ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் சார அமுதம் —

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்று பிரபன்ன பவித்ராணாம் -பிரபந்தத்தில் சொன்னோம் –

கீழ் அனுகூலமாகக் கொண்ட -இங்கு எல்லாமாகக் கொண்ட பெண்டிர்-ஆச்சார்யனும் பரம் பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்-இவளே ஆக கொண்ட –பத்னியே ஸர்வம் என்று கொண்ட -தான் மட்டும் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி-பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி-தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம்-

காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்

மற்று -எனபது-காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை-வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது-அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே

பிரான் –
உபகார சீலன் ஆனவன் –

தொண்டரோமாய் உய்யல் அல்லால் –இல்லை கண்டீர் துணையே–விதி முகத்தால் அன்றிக்கே-மறை முகத்தாலும் இவ் வர்த்தத்தை அறுதி இடுகிறார்-ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க-இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்-அவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் இல்லை யாகில் இல்லையாம் இத்தனை –அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –

————

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே-தலைக் கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய-
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்-விஸ்வாச ஜனகனுமாய்-யுபகரிக்குமவனை-ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –என்கிறார் –

துணையும் சார்வும் –துணையாகை யாவது –துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல் 

புணை என்று உய்யப் போகல் அல்லால் – இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –ஒரு வார்த்தை மாத்ரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –

இல்லை கண்டீர் பொருளே –புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை-பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –

—–

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –ஆன பின்பு-அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்–அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –என்கிறார் –தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் –இவன் இடம் -கை நீட்டி பெற்றால் அவனே வள்ளல் ஆகிறான்-கொடுக்கத் தொடங்கும் பொழுதே சாம்யா பத்தி அருளுகிறானே –

—————-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

சிலரை ஆபத்துக்கு துணை ஆவார் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்து பல நாள் அடைந்தாலும்-
ஆபத்து வந்தவாறே கண்ணற்று பாராமுகம் செய்வார்கள்-
ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் வந்து அவதரித்து-ஆபத்துக்கு துணை ஆனவனே பற்றத் தக்கவன் -என்கிறார்-வடமதுரைப் பிறந்தவன் -நாம் ஆஸ்ரயியாது இருக்க நமக்கு உதவுகையே தன் பேறாக வந்து பிறந்தவன் –சௌசீல்யம் சௌலப்யம் முதலான கல்யாண குணங்களே நமக்கு புகலிடம் என்று பிழைத்து போகல் ஒழிய-இல்லை கண்டீர் சதிரே

இல்லை கண்டீர் சதிரே –நெற்றி பெருத்து-பிரயாசை செய்து – பயன் ஒன்றும் இன்றிக்கே-இருக்கும் என்னுமது இளிம்பு அன்றோ-சதிராவது -அநாயாசேன பலம் பெறலாம் பிரவிருத்தி-அல்ப யத்னத்தாலே பஹு பலம் பெறுமது -சதிர் -பஹு யத்னத்தை பண்ணி பல வேளையில் ஒன்றும் இன்றிக்கே ஒழிகை -இளிம்பு —
நெற்றி சிறியதாய் பயன் கனக்கப் பெறுமது அன்றோ சதிராவது- இங்கு நெற்றி –நம -என்றல்-பயன் –சமன் கொள் வீடு -அன்றோ

———

சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர் கொள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி-மற்று ஒன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்த உபாயம் -சூர்ணிகை –227-

தன்னைப் பெறா விடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான-பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப் படுவர்
ஆன பின்பு-ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய-சுகம் வேறு இல்லை -என்கிறார்

எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் – எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய-அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது-உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும்

———

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

எல்லை இல்லாத பேரின்பம் ஆகிற பேற்றினை உணராமல்-முன்புள்ளார் பலர் முடிந்து போனார்கள் –
ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல்-அடியார்கட்காக அவதரித்து பாதுகாக்கும் அவனையே பற்று-உய்யுங்கோள்-
அதனை ஒழிய ஆத்மாவுக்கு நன்மை இல்லை -என்கிறார்-
பிராப்தம் -நித்யம் -பேரின்பம் -சோபாதிகம்-உண்மை இது அன்றோ –

உள்ளது நினையாதே – உண்டான பேற்றினை நினையாமல் -என்றது
இன்ப மயமாய்-என்றும் உள்ளதாய்-இருப்பது பகவத் விஷயம் என்று நினையாமல் -என்றபடி –
அன்றிக்கே
உண்டான இல்லாமையை நினையாமல் -என்று மேலே கூட்டலுமாம் –இல்லாமை தானே உள்ளது உலகத்தில் -இது அன்றோ பிரத்யக்ஷம் –

மல்லை மூதூர் வடமதுரைப் – நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-முன்பே துருவன் தவம் செய்த மதுவனமாகவும்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்-ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் -மூதூர் -என்கிறார் –
அயோத்யா மதுரா -ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –
அயோத்யா -மதுரா – மாயா -அவந்திகா (-உஜ்ஜைனி- ) காசி -காஞ்சி — -த்வாராகா –முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள் –

———-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது-இனிமை வாய்ந்தது-என்று அருளிச் செய்கிறார்

மற்று ஓன்று இல்லை – இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்-என்று இருக்க வேண்டா -என்னுதல்-
ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரதி பத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –

சிற்ற வேண்டா –வருந்த வேண்டா-சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை-வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –

சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-வார்த்தைகள் வேண்டா-நினைப்பே அமையும்-கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்

எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –வந்து பிறப்பதற்கு முன்பே-பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி-
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –

சர்வ உபாய -அதிகமத்வ-பிரதிபத்தி விஷயத்துவ –விச்வாஸ நீயமான– ஸூ லபத்வ -சர்வாதிகாரத்தவ
அநாயாஸத்வ -யுக்தி நிரபேஷ ரூபமாக -இருப்பது அன்றோ

வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்-பின்பு வாழ்ச்சி நித்தியமாய்-இருக்கும் ஆயிற்று-இதுவே பிராப்தம் –
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்-இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –

———–

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-

அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி-பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை-என்கிறார் –

மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்-இருந்துள்ள இறைவனுடைய-குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி-அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக-
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்-போது போக்குமவர்கள் –நான் முகன் திருவந்தாதி -63-என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று-காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று-பட்டர் அருளிச் செய்வர் –போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி

——

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-

இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்-பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்-
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –

மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை-கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு-உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –

——-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

சேஷத்வம் முதல் நிலை -அடுத்து அநந்யார்ஹத்வம் -நமஸ் உகாரார்த்தம்-சொல்லி -பாகவத சேஷத்வம் -மூன்றாவது நிலை –
சர்வவித பந்து நாராயணன் -என்பதை இதில் சொல்லி -பந்து கிருத்யம் கைங்கர்யம் -ஆய -அர்த்தம் –
8-8 பகவத் சேஷத்வம் யானும் தானாய் ஒழிந்தானே
8-9-அநந்யார்ஹத்வம் -குட்ட நாட்டுத் திருப்புலியூர் – மாயப்பிரானுக்கு வாழ்க்கை பட்டு
8-10- நெடுமாற்கு அடியார் -பாகவத சேஷத்வ பர்யந்தம் –
9-1-சோபாதிக பந்துக்களை விட்டு -அசாதாரண பந்து வடமதுரை பிறந்தவனே -நாராயண சப்தா ர்த்தம்
எண்ணிடையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொடங்கி -ஆபத் சஹத்வம் -ஒன்பதாம் பத்து தாத்பர்யம் –
கணை ஒன்றினால் ஏழு மரங்கள் எய்தவன் –
வட மதுரை பிறந்தான் -8 தடவை சொல்லி -அஷ்டாக்ஷர மந்த்ரார்த்தம் சொல்லி –
9-2- கைங்கர்யம் அடுத்த பத்தில் -குடி குடி ஆட் செய்ய -ஆய -பிரார்த்தனையாயாம் சதுர்த்தி –
ஐம்பது பாசுரங்களால் ஐந்து அர்த்தங்களும் -திருமந்த்ரார்த்தம் சாதித்தார் –

தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்

தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக –
நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் -பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க –
மண்ணின் பாரம் நீக்குதற்கே-வடமதுரைப் பிறந்தான்-தத்விரோதிகளை – பூ பாரத்தை நீக்கி -நாக பர்யங்கம் விட்டு -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி

—————

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

8-10 வாசனை மாறாமல் -பலன் -பாகவத உத்தமர்களுக்கு சேஷ பூதர்-இந்த திருவாயமொழி கற்றவர்களுக்கு சேஷ பூதர் தாம் என்கிறார் –

இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –தாது சேர் தோள் கண்ணனை-அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ –

————–

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திரு வருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

வேறு கதி இல்லாத-அடியோங்களைக் குறித்து-ஒரு வார்த்தை அருளிச் செய்து
விடாய் கெடும்படி குளிர நோக்கி அருள வேண்டும் -என்கிறார்-

குடி குடி வழி வந்து ஆள் செய்யும்–மூன்று பாட்டிலும் -கைங்கர்யம் செய்ய கொடுத்து வைத்து இருக்கிறோம்
யோக்யதை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார் அல்லர் -உரிமை -கேட்க வில்லை -உனக்கே -என்று அநந்யார்ஹை
போக்கிடம் இல்லை கத்யந்த சூன்யத்தை ஆவிஷ்கரிக்கிறார்

பண்டை நாளாலே நின் திரு வருளும் –எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று –

————–

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

ஆஸ்ரய விஷய அனுரூபமாக -எல்லார்க்கும் சுலபமான உன் திருவடிகளை-என் தசென்னிக்கு சூட வேணும்

ஸ்ரீ பரத ஆழ்வான்-ஆக்கம் செய்து –குடியில் -பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கியது போல் –இவரும் பிராப்ய த்வரையால் -அழுவது தொழுவது கண்ண நீர் கைகளால் இறைக்கும் -பிரபன்ன குடியில் இல்லாத -அநந்ய கத்தி ஆகிஞ்சன்யம் மட்டும் இல்லாமல் -மண்ணை இருந்து வாமனன் மண் இது மின்னிடை மடவார் -அநுகரித்துதூது விட்டு -த்வரையில் விஞ்சி -ஆக்கம் செய்தார் இறே

நின் பாத பங்கயம் –ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது-பூமிக்கு அளவாக்கின திருவடிகளை-என் தலைக்கு அளவாக்க லாகாதோ –கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ

———–

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

திரு உடம்பு வருந்த ஒரு படியே திருக் கண் வளர்ந்து அருளாதே-அடியோமுக்காக பிராட்டியும் நீயும் எழுந்தருள வேண்டும்-என்கிறார் –

தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி–இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –
கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் -மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –

உன் தாமரை மங்கையும் நீயும்
பகவத் விஷயத்தில் முதலடி இடுவார் பிராட்டி புருஷகாரமாக பற்ற வேணும் -என்னுமதனாலே-பங்கயத்தாள் திருவருளும் -என்றார் மேல்
அடிமை செய்யும் இடத்திலும் இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வதாக-சொல்லி போரும் அதனைப் பற்ற சொல்லுகிறார் இங்கு –

திருப் புளிங்குடி கிடந்தானே –இருந்தருளாய்-
சாய்ந்து அருளின அழகு காட்டினாய்-இருந்து அருளின போதை அழகையும் காட்டி அருளாய்-
நின்ற வாறும் இருந்த வாறும் கிடந்தவாறும் -குழந்தை கிருஷ்ணன் -பெரிய கிருஷ்ணன் -பெருமாள் நிலை சேவித்தது போராதே –
அர்ச்சையிலும் ஒவ் ஒரு பெருமாளையும் இப்படியே சேவிக்க அபேக்ஷை கொண்டோம் -காட்டி அருளுவாய் –

——————–

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

மங்களா சாசனப் பாசுரம் -ஆஸ்ரித அர்த்தமாக -நின்று இருந்து கிடந்து

திருப்பதிகளிலே எழுந்து அருளி இருப்பவனாய்-என்னை இவ்வளவு ஆக்கினாப் போலே-
மேலும் எனது விருப்பத்தை செய்தருள வேண்டும் –என்கிறார்

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே–திருப் புளிங்குடியிலே –கிடந்ததோர் கிடக்கை திருமாலை -என்னும் அழகினைக் காட்டியும்-வர குண மங்கையிலே – பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்மொழி -என்னும் இருப்பின் அழகினைக் காட்டியும்-ஸ்ரீ வைகுண்டத்தில் –நிலையார நின்றான் -திருவாய்மொழி -என்னும் நின்ற நிலையின் அழகினைக் காட்டியும் –அன்றோ என்னை புகுர நிறுத்தியது

பேற்றுக்கு அடி கிருபை -இழவுக்கு அடி கர்மம் -என்கிற மகா விச்வாஸம் இருக்கும் படி –தெளிந்த என் சிந்தை –என்றபடி-

அன்றிக்கே
தண்ணியன் -என்று அகலாதபடி–கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே என் மனத்தினைத் தெளிவித்தும்-
அதனைக் கைவிடாதே எப்பொழுதும் எழுந்தருளி இருந்து -என்னுதல் –

என்னை ஆள்வாய் –
என்னை -தண்ணியன் -என்று அகலவும் ஒட்டாதே-பிரிவாற்றாமையால் -முடியவும் ஒட்டாதே-
குண ஞானத்தினாலே தரிப்பித்து கொண்டு போனதாய் –

நீ காண வாராயே –
என் எதிரே உன் அழகு காண வர வேண்டும் –அவன் கூத்து இருக்கிறபடி-
அவன்மாறி மாறி இடும் அடி வல்லார் ஆடினால் போலே காணும் இருப்பது –

——————-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே-வந்து தோன்றி அருள வேணும்-என்கிறார் –

அனுகூலர்களைக் கண்ட காட்சியாலே-அகவாயில் அன்பு தோற்ற-தன்மைகள் வேறுபட்டவனாய்-
புன்முறுவல் செய்து நிற்கும்படியை காண வர வேண்டும் –

நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் –திருக் கண்கள் உடைய ஸ்மிதம் புன் முறுவல் இருக்கிறபடி –
தயங்குகையாவது-அப்போது பிறந்த ஒளி ஆதல்-கடல் சலித்தால் போலே அசைந்து வருகிற படியைச் சொல்லிற்று ஆதல் –

தயங்க நின்று அருளாய்-முந்துற நாலடி வந்து -பின்னை அதுவும் மாட்டாதே-ஸ்தப்த்தனாய் செயல் அற்றவனாய் நிற்கும் நிலையைக் காண வேண்டும் –புது நடை அழகை ஸேவிக்கப் பிரார்திக்கிறார்

————

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிவானே–பெருமாள் திரு நாமம் -உத்சவர் –பூமி பாலன் காய்ச்சின வேந்து -மூலவருக்கும் உத்சவர்களுக்கும் பாசுரம்
தேவ பிரான் -அரவிந்த லோசன் -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -கரும் தடம் கண்ணி தாயாருக்கும் மங்களா சாசனம் உண்டே

நீர் விரும்பினவற்றை செய்ய ஒண்ணாதபடி-தடைகள் பிரபலமாக அன்றோ இருக்கின்றன -என்ன
மாலி சுமாலி மால்யவான் என்னும் இவர்களைக் காட்டிலும்-வலியவோ என் விரோதிகள் -என்கிறார் –

கதிர் முடியானே –விளங்குகின்ற திருமுடியை உடையவனே -என்றது-
நீ பாது காப்பதற்கு முடி சூடி இருக்க -நான் இழக்கவோ -என்கிறார் என்றபடி-

எம் இடர் கடிவானே -அனுபவ விரோதிகள் -தேவர் சேவை சாதிக்கப் போகுமே –அனுபவ அலாப ரூப துக்கம்-திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் –என்று மேல் பாசுரத்தோடு கூட்டி வினை முடிக்க –

————–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

வலி அற்றவர்களோடு–வலி மிக்கவர்களோடு–வாசி அறக் காப்பவனான நீ-
நாங்கள் வாழும்படி கண் எதிரே ஒரு நாள் இருக்க வேண்டும் -என்கிறார் –

நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே
எங்கள் கண் வட்டத்திலே ஒரு நாள் இருந்து அருள வேண்டும் -என்றது –
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமான நீ-
ஒரு நாள் எங்கள் கண்ணுக்கும் விஷயமாய் இருந்தால் ஆகாதோ -என்கிறார் என்றபடி-
உன்னுடைய காட்சி அதிகாரத்தை உடைய ஒரு சிலர்க்கேயாய் இருக்க வேண்டுமோ -என்பார்-எங்கள் கண் முகப்பே -என்கிறார் –

————–

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

பரம பதத்தில் அன்றோ-வீற்று இருத்தலின் அழகு-காட்டலாவது-என்ன –
அவ்விருப்பின் அழகினை நாங்கள் காணத்-திருப் புளிங்குடியில் ஒரு நாள் இருந்து அருள வேண்டும் –என்கிறார் –

தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்-இடையர் கோஷ்டியில் புகுந்து -அங்கும் இருந்து -அவர்கள் சொன்ன வார்த்தையும் -இவர் சொன்ன வார்த்தையும் –
நூறு பிராயம் புகுவீர் –பொன்னாலே பூணூல் இடுவர்-பழம் உண்பீர்-பால் உண்பீர் –அழுத்த இரட்டை உடுப்பீர் –
என்பன போன்று சொல்லுகை —
வங்கி புரத்து நம்பி -விஜயஸ்வ -வெற்றி உண்டாக -என்ன-ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது –
அங்கு சென்றாலும் முரட்டு சம்ஸ்க்ருதம் விட்டீர் இல்லீரே-எங்கே இருந்தாலும் நாம் நாமே காணும் இங்கே எழுந்து அருளீர் –

———-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடுகளும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

இவ்விருப்பில் வாசி அறியாத-இவ் உலகத்தாருக்கு
நடுவில் இருக்கிறது என் -என்னில் -ருசி உடைய நாங்கள்-அதுவே ஜீவனமாக இருக்கிற நாங்கள் -கண்டு அனுபவிக்க –என்கிறார்

நமக்கு இவை எல்லாம் இங்கே காணலாம் அன்றோ –
சாய்ந்து அருளின அழகு பெரிய பெருமாள் பக்கலிலே காணலாம்-
நின்று அருளின அழகு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்-
இருப்பில் உண்டான அழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே காணலாம் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

——

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

எல்லை இல்லாத இனிமையை உடையதான-உன் திருவடிகளில் நானும் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்-அல்லது நீ இங்கே வருதல் செய்ய வேண்டும்-என்கிறார் —

கொடு வினையேனும் பிடிக்க –
கண்கள் சிவந்து –என்ற திருவாய் மொழிக்கு பின்பு-இவர்க்கு தாம் தாழ்ந்தவர் என்னும் நினைவு -நிஹித அநுஸந்தானம் -இல்லை அன்றோ –
அவர்களும் ஸந்நிஹிதராய் -அண்மையில் இருப்பாராய்-ப்ராப்யம்-சம்பந்தமும் உண்டாய் இருக்க-
நான் இழந்து இருப்பதே -என்று-பாவியேன் -என்பாரைப் போன்று -கொடு வினையேன் -என்கிறார் –

நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே –
எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-
ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-
முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-
விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –
அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

———-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

நிகமத்தில் –-இத் திருவாய்மொழி கற்றார்-எப்பொழுதும் நினைக்கப் பெறுவார்-என்கிறார்-

குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று–இந்த விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்-கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது-

உடைமை இருந்த இடம் உடையவர் வந்து கைப்பிடித்தல் தானே முறைமை -கூவுதல் -உடைமையே வருவது -முறை இல்லாமை
வருதல் -முறையாக ஆக்கவுமாம் -என்றபடி -பார்யை ஆள் இட்டு அழைக்கை முறை இல்லையே -அதுபோல் கூவுதலும் முறை இல்லை –

திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்–என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே–இவற்றைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று–இதனைக் கற்றவர்களுக்கும் இந்த எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-மநோ ரதம் தானே புருஷார்த்தம் -என்ற படி

——————

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

அவன் நாராயணன் அன்றோ-நம் விருப்பத்தை முடித்தல் நிச்சயம்-என்று தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் —

ஓர் ஆயிரமாய் அளிக்கும் –ஒவ்வொரு திருப் பெயரே ஆயிரம் முகத்தாலே எண்ணிறந்த வகைகளில் –காக்க வல்லதாய் இருக்கும் –

அவன் தூரஸ்தான் ஆனாலும் இது கிட்டி நின்று ரக்ஷிக்கும் –
இது தானே யோக்யதை பண்ணிக் கொடுக்கும் -வேறே யோக்யதை சம்பாதிக்க வேண்டாமே

உலகு ஏழ் அளிக்கும் –ஷிபாமி -அசுர யோனிக்யில் தள்ளினாலும் தள்ளுவார் -இவை அளிப்பது மட்டுமே செய்யும் -ஓர் உலகம் மாத்ரம் அன்றிக்கே-எல்லா உலகங்களையும் பாதுகாக்கும் –

புத்திரன் இறக்க அதனாலே வருந்திய –கோயிலாய்த்தான்-பட்டர் திருவடிகளிலே வந்து தன்-
சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க-அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது-
நீ நம்முடைய திருப் பெயர் சாற்றின பிள்ளை இறந்தான் என்று அன்றோ துக்கப் படுகிறாய் -அதற்கு துக்கப் பட வேண்டா-
அந்த பெயரை உடைய நாம் இருந்தோமே -என்று
தம்மைப் போலே ஒரு விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி-அவர்க்கு கொடுத்து அருளினார் -என்பது சரித்ரம் –

நங்கள் பிரான் அவனே –-நம்மை காப்பாற்று கின்றவனான உபகாரகன் அவனே-
கூவுதல் வருதல் செய்திடாய் -என்று நம் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க- நமக்கு உரிமை இல்லை என்கிறது –அவனே -என்கிற ஏகாரத்தாலே
நம்மோட்டை குடல் துவக்கு -அயன சம்பந்தம் அறியீரோ–அயனம் ஆஸ்ரயம் பற்றி இருப்பதால் நாராயணன்-நாரங்களை அவன் ஆஸ்ரயித்து இருக்கிறான்
எவ் உயிர்க்கும் தாயாக –அத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

அசிஷ்ட பரிக்ரகமும் அபூர்த்தியும் உண்டே -விஷ்ணு வாஸூதேவ மந்திரங்களுக்கு –

————–

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அனைத்தும் பொதுச் சொல் -இதில் -கீழே -நாராயணன் நங்கள் பிரான் அவனே-மேலே சொல்லப் பட்ட நாராயணன்-என்னும் திருப் பெயரின்-பொருளை -அருளிச் செய்கிறார்-

அவனே -என்ற ஏ காரத்தால்-படைத்தல் முதலான கார்யங்களில் வேறு-ஸஹகாரி துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –

ஸ ப்ரஹ்மா ஸ சிவ ஸ இந்த்ரா —ஸ அஷர பரம ஸ்வராட் –-என்கிற பிரசித்தியைப் பற்றிச் சொல்லுகிறார்

ஆக-இரண்டு பாசுரங்களாலும்-திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார்

———–

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

உபாயமாக ஆபத்து போக்க வல்ல என்று தானே -அனுபவிக்கும் விருந்து என்று அடியேன் தானே அறிந்தேன் –
போக்யத்தை சீலாதிகளை அவன் கட்டக் கண்டு அறிந்தோம் -அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-என்று கீழே சொல்லிய படி –

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி-தைத்ரியம் -என்றும்
யஸ்யாமதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி- -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் -அறிவதற்கு அரியன் என்றே அறிந்த வேத வைதிக புருஷர்கள்

அஹம் வேதிமி மஹாத்மநாம் – ராமம் சத்ய பராக்ரமம் -வசிஷ்டர் அபி -வைதிகர்அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே

சா பேஷ உபாயம் -வணங்கினால் செய்வான் -நிரபேஷ உபாயன் என்று கூட அறியவில்லையே

பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள்-அவனுடைய இனிமையில் இழிந்திலர்கள்

வேதங்களும்-வேதார்த்தங்களை அறிந்த முனிவர்களும்-அறிந்த அளவு அன்றிக்கே
நான் அவனை முழுதும் அறியும் படி-எனக்குத் திருவருள் புரிந்தான் –என்று இனியர் ஆகிறார்-

————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

1-நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் வைத்து–2-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-
3-நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை-விடாதே காண் -என்று-மூன்று ஆகாரங்கள் –
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

திவ்ய விக்ரகம் -காட்டி என்னை அடிமை சாசனம் எழுதிக் கொண்ட ஸுலப்யன் –
அந்நிய பரத்தையாதல் -அயோக்கியன் நைச்சிய அனுசந்தானம் பண்ணி போகாமல்
போகத்தை மட்டுப் படுத்தி -பரிகரம் -பொறுக்க பொறுக்க -கோபிகளுக்கு தன்னை மறைத்தால் போலே

சோரேல் கண்டாய் மனமே –அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே-இவன் விடுகையாவது-அவனுக்கு இழவு போலே காணும்-

————–

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

மனமே அவனை விடாதே காண் -என்றார் மேல்-
அவ்வார்த்தையை ஒலக்க வார்த்தையாக-நினைத்திராதே காண்-என்கிறார் இப்பாசுரத்தில்

வல்வினையேன்-பகவானை அடைவதை முறையாலே அடைவோம் என்று-இராதபடி பாவத்தைச் செய்தேன் –-விளம்பம் சஹியாத பாவம்-

கனம் -பொன் -சீரிய பொருளைச் சொன்னேன் -என்றபடி –-திடமாகவே சொன்னேன்-என்றுமாம் -உனக்கு மிக மேலான பொருளைச் சொன்னேன் என்க –

எதனை தான் நீர் இப்படி சோரேல் என்று சொல்லுகிறது -என்ன-
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் –எல்லை இல்லாத இனியனாவனை பற்றுதலை சோரேல் என்கிறேன் -என்கிறார் –
புனத்தில் மேவி இருப்பதான அழகை உடைய திருத் துழாய் மாலையை-உடையவன் ஆகையாலே ஒப்பு இன்றிக்கே இருக்கிறவனை
அத் தோள் மாலையை உடையனாகை அன்றோ அறப் பெரியன் ஆகையாவது-
ஒரு திரு முளைத் திரு நாளிலே -ப்ரஹ்மோஸ்தவம் – இப்பாட்டை அருளிச் செய்தது-
முன்னாள் -கையார் சக்கரத்துக்கு -ஆழ்வார் திருநாள் -–புறப்பட்டு அருளினபடி திரு உள்ளத்தில் கிடக்க
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இல்லான் ஆகையாவது-நேற்றுப் புறப்பட்டு அருளின படி அன்றோ -என்று அருளிச் செய்தார் –
சேனை முதலியார் புறப்பாட்டை பெருமாள் புறப்பாடாக அருளிச் செய்தார் -நஞ்சீயர் என்ற படி -திருத் துழாய் மாலை சூடி இருப்பதால் –
ஐப்பசி கார்த்திகை ப்ரஹ்மோத்சவம் இருந்து இருக்க வேண்டும் -ஆழ்வார் திருநாள் -மார்கழி மாசம் என்பதால் –

———–

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே—9-3-6-

திரு மார்புக்கு எல்லாம் தானே ஆபரணமாய் போரும்படி இருப்பாளாய்–லஷ்மீ விசிஷ்டன் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ஆகாரத்ரயம்

இவர் திரு உள்ளம் உடைகுலைப் படுகைக்கு காரணங்கள் இவை –அடைந்த படியால் மிடைந்த படியால் கடைந்த படியால் ஒரு மடைப் பட உடைந்ததே

அவன் பனிக் கடலை கடைய-இவர் மனக்கடல் உடையப் புக்கது

அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஹேதுவான –ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் -அவளுக்கு வல்லபன் –அறிந்து மனம் இழந்தேன்

தம்முடைய உபதேசம் பலித்து-இவ்விஷயத்தில் திரு உள்ளம் உருக் குலையா நின்றது –என்று இனியர் ஆகிறார்-

——

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

பிரபல அநிஷ்ட -பஞ்சகன் -வார்த்தைக்கும் பிராப்ய பூமி-நித்ய வாஸம் செய்கிற-பரம பதத்தை சென்று காண வேண்டும்-என்னா நின்றது -என் நெஞ்சு-என்கிறது

ஆகம் சேர் நரசிங்கமதாகி –-நர வடிவும் சிங்க வடிவும்-சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே பொருந்திய-நரசிங்கமாய்
அன்றிக்கே-நரசிங்கத்தின் உடைய இவர் நெஞ்சிலே சேர்ந்த படி -என்னுதல் -என்றது –
ப்ரஹ்ம தண்ட பிரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம்-ஸ்மான் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேச்வர-யுத்தம் -60-3-
இராகவன் உடைய பாணங்களை நினைத்துக் கொண்டு -என்கிறபடியே- மறக்க ஒண்ணாதபடி திரு உள்ளத்திலே சேர்ந்த படியை சொன்னவாறு
அன்றிக்கே-இரண்டு வடிவு களையும் சேர்த்துக் கொடு வந்து தோன்றின போது-ஸ்தம்பே சபாயாம் -தோன்றின போது –
இவர் மனத்துக்கு இனியதாய் சேர்ந்து இருந்த படியைச் சொன்னவாறுமாம் –

மாகவைகுந்தம் காண்பதற்கு –அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-

————–

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே--9-3-8-

ஆசன்னமாக அவன் வர்த்திக்கும் –ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அவன் வர்த்திக்கும் அபீஷ்ட திவ்ய தேசம் –

இச் சரீர சம்பந்தம் அற்றால் சென்று அனுபவிக்கைக்கு -பரம பதம் வேண்டுமோ-அது மாக வைகுந்தம் இது நீள் நிலம் –
இச் சரீரத்தோடு இருந்து கொண்டே அனுபவிக்கத் தகுந்த-திருமலை இம் மண் உலகிலே உள்ளது அன்றோ –திருமலையை உடைத்தது ஆகையாலே உளதாய-பெருமையை நோக்கி -நீள் நிலம் -என்கிறார் –
சென்று கை தொழுவார்கள் தேவர்கள் – அவ்வளவு தூரம் கால் நடை தந்து போக வல்லார்-புண்யம் மிக்கவர் அன்றோ–அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்-இவர் சக்ரவர்த்தி போல் பிரியாமல் சேர்ந்து இருந்தே துன்பம் -ஸுசீல்யம் படுத்தும் பாடு ஆழ்வாருக்கு –
அன்பினாலே மூடப் பட்டார்க்கு-அவ் உலகத்தோடு இவ் உலகத்தோடு-வாசி அற்றதே அன்றோ -எட்டாமைக்கு –திருப் புளிங்குடியும் திருமலையும் பரம பதமும் இவருக்கு ஒரே மாதிரி தானே இதனால் –

——–

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

ஆச்ரயண உத்தியோகமும் அதிகம் -ஸூ பிரயத்தனம் கூடாதே-முயன்றால் க்ஷமிக்க மாட்டான் அவன் -பிராப்தி இல்லையே –

முயற்சி செய்ய ஷமர் அல்லர் ஆழ்வார் -சக்தி இல்லையே -கால் ஆளும் கண் சுழலும் அன்றோ

அவன் திரு முன்னர் முறையாக அடிமை செய்ய-ஒண்ணாத படி அழிக்கும் அவனுடைய
சீல குணத்தைச் சொல்லுகிறது -என்று-நம் உடையவர்கள் அருளிச் செய்வார்கள் –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே–உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிலேன் –
வலி இல்லாமையாலே முதலிலே கிட்டுதல் அரிது-கிட்டினாலும்-சீலத்தின் மேன்மையை நினைத்தால்-ஓர் அடிமை செய்ய இயலாதவனாக இருக்கிறேன் –

———-

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

தாஸ்ய சுவடே அறியாத -அடிமையின் இனிமையை அறியாத-பிரமன் முதலாயினோர்கட்கும்
பற்றப் படுமவனாய்-இருக்கிற உன்னுடைய சீலம்-என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது -என்கிறார்

அநந்ய சரண்யத்வ லக்ஷணமான (வேறு ஒருவரையும் அடைகலமாகப் பற்றாமையை-தெரிவிக்கிற)-
தொடை ஒத்த துளவமும் கூடையுமாக -புகுந்து இருக்கிறான் அல்லனே

——-

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றார்-பரம பதத்தே செல்லுதல்-ஆச்சர்யம் அன்று –பிராப்தம் -தக்கதே –என்கிறார் –

ஸ்வ பாவம் -இயற்க்கை -ஜகத் ரக்ஷணம் -ஸ்ரீ யபதித்தவம்-இவை எல்லாம் ஸ்வ பாவம் – வாத்சல்யாதிகள் பிரபாவம் என்றவாறு –

இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது –அமர்யாத-சாஸ்திரத்துக்கு மீறிய எல்லை இல்லா -சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று- அதனை முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –இப்பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-
இப்பாசுரங்களை ஒருகால் சொல்லுதல்-
இவற்றைப் பாடம் செய்தல்-
இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –-என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –

வைகுந்தம் ஏறுதல் பான்மையே –-பரம பதத்தில் செல்லுதல் இயல்பாகவே இருக்கும் –-யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர்
இப்பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு- பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும்- பிராப்தம் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பாகமாக அடைய வேண்டியதாகவே-இருக்கும் அன்றோ

———–

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

விஷய த்ரயம் -விசிஷ்ட த்ரயம் -பிராட்டி -திவ்ய ஆயுதங்கள் -திவ்ய விக்ரக விசிஷ்டன்

மையார் கருங்கண்ணி – வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி-இயல்பான அழகினை உடையதாய்-ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்-
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே –மையார் -என்னும் போது-மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –

திரு மார்வினில் சேர் திருமாலே – தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்- உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி-மார்வு படைத்தவனே-
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்-
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே-அவ்வருகு போக வேண்டாவே– அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-

திருமாலே-இவள் -மார்பில் படும் பாட்டினை – இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –- அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே- இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து-அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –

இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை-அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது-

காணக் கருதும் என் கண்ணே-அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று-காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ —காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோசதா பஸ்யந்தி ஸூரைய-நித்ய ஸூரிகளும் இத்தனை -அன்றோ

என் கண்ணே–நமக்கு நேத்ர பூதரான இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு-முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவர் நேத்ரத்துக்கு

——-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

ஆழ்வார் என்னைப் பார்க்கட்டும் என்று நீ தானே சங்கல்பம் கொள்ள வேண்டும் -கரணியும் நீயே -கரணங்களும் நீயே -உபாய மும் உபேயமும் நீயே -என்றபடி –

தமக்கும்-தம்முடைய மனதுக்கும் உண்டான-சாபல்யத்தை-காதல் பெருக்கை-அருளிச் செய்கிறார்-

கண்ணே உன்னைக் காணக் கருதி-அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்-கண்ணே –எனக்கு கண் ஆனவனே–பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய-வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –

கண்ணே -என்கையாலே – வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று-
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு-இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று- இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –
ஆத்மா யோசித்து -மனஸ் சிந்தித்து -கையால் செய்வதை -மூன்றும் மனஸ் செய்யும் ஆழ்வாருக்கு –
உபாயமும் அவனே உபேயமும் அவனே –இத்தை உணர்ந்து – ப்ரீத்தி காரித கைங்கர்யம் அவன் கொடுக்க -விருப்பம் ஆசை ஒன்றே நமக்கு க்ருத்யம் -அதிகாரி ஸ்வரூபம் இதுவே

எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்–பஹு சங்க்யாதம் -மநோ ரதம் -கொண்டு -ஐந்து வேலைக்கு காரர்கள் உண்டே
ஐந்து விருப்பங்களும் மனஸ் கொள்ளலாமே -காண்கையிலும் பிரதி பந்தம் போகையிலும் -அடிமை செய்வதிலும் -அபி நிவேசம்

நண்ணாது ஒழியேன் -என்பதற்கு-
1-அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
அங்கன் அன்றிக்கே-
2-நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது-
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்-
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது-
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –எடுக்க வேண்டும் என்று இருந்தேன்-
எடுப்பான் தானாய் இருந்தான்-எடுத்தால் பெறுவது தன்னையாய் இருந்தது–ஆன பின்பு-எனக்கு என்ன கண் அழிவு உண்டு –

—————-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

ஆர்த்தியே பற்றாசாக -ஆஸ்ரித ரக்ஷகனான உன்னுடைய -கிருபை பொழிவது பகவான் ஆனபடியால் -நிர்ஹேதுக -காரணம் –
ஆர்த்தி இருந்தால் தான் பொழிவார் -ஆர்த்திக்காக பொழிய வில்லை -ஆர்த்தி -அதிகாரி ஸ்வரூபம் -உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –என்கிறார்-

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று- பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு
நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

————–

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்-சேஷத்வமே ஏற்புடைத்து -பிரதி சம்பந்தி -உனக்கு தாஸ்ய அனுமதியைப் பண்ணி
இசைந்து –இசைவித்து உன் தாழ் இணைக்க கீழ் இருத்தும் அம்மானே

நின் கண் பெறுவது எது கொல் என்று –ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்-கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்-
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து-சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ-
அன்றி-என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –
கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ

மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்—அறிவது அரிய அரியாய அம்மானே-அசாதாரண சம்பந்தம் உண்டே -அனைவருக்கும்
சாமான்யம் அதி தைவதம் -யாராலும் அறிய முடியாத போது நின்ற பொன் அம் கழல்-ஆஸ்ரித சுலபன் சர்வேஸ்வரன் இரண்டு ஆகாரங்களை
எவராலும் அறிய முடியாமல் – -வாசாம் அகோசரம் –அரியாய அம்மானே —ஸ்வாமி -நரசிம்மம் –

பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது-எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்-
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்-உமக்கு இனி-நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி-
நரசிம்கனாய் வந்ததால் எளியவன் -பிரகலாதன் போலே எளியவனாய் இருக்க கை புகுந்தோம் என்று அன்றோ இருக்கக் கடவது –

——-

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

கழல் காணக் கருதும் கருத்தே-என் மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது-கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள இரண்டு பாசுரங்கள்
படுக்கைக்கு பரபாகமான வடிவும்-அதற்கு பரபாகமான திருவடிகளும்-ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது

எளியோமான கோஷ்டி பேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன-நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்

———

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

காண ஆசைப் பட்ட அளவிலே-அவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள தம்முடைய மனம் உகந்து-அனுபவிக்கிறபடியை-அருளிச் செய்கிறார் —

கருத்தே உன்னைக் காண கருதி-எனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே-முகம் காட்டினாய் –
இவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –
கண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்-கருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே
இதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி

என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –மறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை
பரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்-இவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்
இத்தனை இசைவு பெற்றால்-பின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –

———-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

ஆர்த்தி சாந்தி அடைந்து அனுபவிக்கப் பெற்றதை இது முதல் நான்கு பாசுரங்களால் -அருளிச் செய்கிறார்

தூணிலே தோற்றி-பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து-ஏத்துகிறார்

அடியார்கள் ஸூளுறவு செய்த காலத்தில் வந்து-தோற்றுமவன் ஆகையால்-
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி-மனத்தின் இடம் எல்லாம் புகுந்து-
கமர் பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே-நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –என்கிறார் என்பது –

நரசிம்ம ராகவா யாதவ ரெங்கேந்திர ஸிம்ஹம் உபாஸ்ம ஹே -ஆத்மா தானே பக்தர்கள் -பிரகலாதன் -விபீஷணன் -அர்ஜுனன்
திருப் பாண் ஆழ்வார் -நலிவுப்பட கிளர்ந்த சிங்கங்கள்

———-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

சர்வ அந்தராத்மா -சர்வ காரணன் -சர்வ சுலபனான -உன்னைக் காணப் பெற்றேன் -கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க-கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருத்து என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்-எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு-எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து-அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்-காணப் பெற்றேன் -என்கிறார்

———–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

நிதான பாசுரம் -பக்தாம்ருதம் -ஒரே பாசுரத்தில் திருமந்த்ரரார்த்தம் அனைத்தும் அருளிச் செய்து-வாயால் கைங்கர்யம் -வாசிக கிஞ்சித் காரம்

பிரதம பதம் -அநந்யார்ஹ சேஷ பூதன் -நம-விரோதி போக்கி -பிரதி சம்பந்தித்தவம் -நாராயணா-அடியேன்-மந்த்ர தாத்பர்யம் ததீய சேஷத்வம் சொல்லிற்று ஆயிற்று

என் கண்ணினை–பக்தி ரூபாபன்ன ஞானம் -இரண்டு கண்கள்

சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்–அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –

————

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

நிருபாதிக சம்பந்தம் உடையவனைக் கிட்டி -சேஷத்வத்துக்கு குடல் துவக்கே உபாதி-கிருதார்த்தன் ஆனேன்-என்கிறார் –

எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே-தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –

குன்றாமல் உலகம் அளந்த அடியானை –குணத்தையும் குணம் இல்லாமையையும்-நிரூபணம் செய்யாதே -உலகம் அளந்த பொன்னடி –திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹேதுகமாக —அம் சிறைப் புள்ளின் கொடியானை-பெரிய திருவடியை அங்கீ கரித்தால் போலே என்னை அங்கீ கரித்தான்

———-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

ஏறே தரும்-ஏற்றினைத் தரும்–இத் திருவாய்மொழி-தன் இனிமையினால்-நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -ஏறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-என்கிறார்

———

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

மாதுகரத்தில் விஷம் வைக்க உடையவர் திருவரங்கத்தில் இருக்க ஒட்டாமல் திரு வெள்ளறையில் எழுந்து அருளி இருக்க
அரையர் -இந்த பத்து பாசுரங்களையும் -ஸாதித்து மயக்கி திருவரங்கம் கூட்டி வந்தார்

என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர்–இவளுக்கு உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
எம்பெருமான் என்றே தளரும் -6-7-1-
பிறர் நலத்துக்காக தன்னை ஓக்கி வைப்பவன் ஆதலால் -பிரான் -என்கிறார் –

நீங்கள் சேர இருக்கையும் -கலக்கையும் -ஒன்றை ஓன்று அழைத்தலும்-
காதலை புலப்படுத்துகிற மழலை ஒலியும் –இவை எல்லாம் வேண்டுமோ -என்றபடி-
நொந்தாரை பிழைப்பிப்பது அன்றோ அரிது –முடிக்கையில் பணி உண்டோ –

அழிக்க வல்லவை சேர்க்கவும் வல்லவை -என்று இருக்கிறாள் -என்றது –இவற்றின் வாயது வாணாள் என்று இருக்கிறாள் -என்றபடி –

———

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

இராமாவதாரத்தில் மெய்யும்-கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –

வித்தகன்-ஆச்சர்யப் படத் தக்கவன்-இப்போது அனுகூலருக்கு அரிய வித்தகன்

கோவிந்தன்-எல்லாப் பொருள்களையும் காப்பவன் –இதனால்-எல்லாப் பொருள்களையும் காப்பவன் போலே இருந்து
தீங்கு இழைப்பவன் -என்ற படி-பாதுகாப்பவன் -என்று பற்றப் போகாது-தீங்கு இழைப்பவன் -என்று விடப் போகாது –

அத்தனை ஆம் -இனி என் உயிர் அவன் கையதே -என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –

————

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

ஸுசீல்ய அதிசயத்தாலே -ஆக்ருஷட பிராணை -உடையவள் -மனத்தை பறி கொடுத்த பின்பு எத்தை சொல்லி தரிப்பேன்

அவன் கையதே என் ஆர் உயிர் –-என் உயிர் அவன் கையதே –(நிராசையாலே கீழே -இங்கு பிரணயித்வத்தால் )
நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ-

தவம் செய்தில்லா வினையாட்டியேன்-
உயிரை இங்கே வைத்து உங்களுக்கு உதவி செய்ய புண்ணியம் செய்யப் பற்றிலேன்-
அன்றிக்கே -அவனைப் போலே பிரிவுக்கு சிளையாதபடி புண்ணியம் செய்யப் பற்றிலேன் -என்று பிள்ளான் பணிக்கும்-

உயிர் இங்கு உண்டோ –
வல்லடிக்காரர்க்கு விளக்கு ஏற்றிக் காட்டுமாறு போலே காணும்-இங்கு உண்டோ -என்று என்று காட்டுகிறபடி –

—–

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

வெளிப்படான்–ஆவீர பூத்-மறைந்தவன் வெளிப்பட்டான் என்றார் ருஷி -இவர் வெளிப்படான் என்கிறார் -கோபிகா கீதா சமனந்தரம்
சமீபஸ்தனாய் தோற்றா நின்றான் -என்றால் போலே இவரும் சந்நிஹிதனாய் இருந்தும் வெளிப்படான் என்கிறார் –

ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –துக்கத்தின் வாசனையாலே-ஆக்கையும் ஆவியும் நடுவே நின்று கிலேசப் படுகின்றன -இத்தனை
பிடித்து விட்ட கொம்பு போலே வாசனையே உள்ளது-நோவு பட வேண்டுவதற்கு உண்டு-நலியப் படுவதற்கு பொருள் இல்லை-

———–

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

யானுடைப் பூவைகாள்–நான் என் உடைமை என்று நினைக்க அமையுமே அன்றோ துன்புறுத்துகைக்கு -நம் திரு மார்பன் –
அவனும் என் உடையவன் ஆதலால் அன்றோ நலிந்தான் –இது அன்றோ ஆழ்வார் -நான் கண்ட நல்லது —

நம் திரு மார்வன் – காதலை உடையவன் என்பதால்-வந்த ஒரு பிரசித்தியை எனக்குக் காட்டி -என்பார் –நம் -என்கிறார் –
பிராட்டியோடு பழகிற்றும் காதலை உடையவனாய் அன்று-அதனைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக என்பார் –திரு மார்வன் -என்கிறார் –

நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் –-சில பொய்களைப் பேசி பூமியைக் கொண்டால் போலே-நம்மோடு கலவியைச் செய்கிறான் என்று தோற்றும்படி
சில பொய்யான கார்யங்களை செய்து-பிரிதல் இவளை முடிக்கைக்கு உபாயம் என்று நம்மை முடித்தற்கு நல் விரகு பார்த்தான் -என்னுதல் –
அன்றிக்கே –
உங்களுக்கு இங்கு இடம் இல்லை-நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான் என்று தன்னிலே நொந்து கொள்ளுகிறாள் -என்னுதல்
சர்வ சக்தி செய்வதாக ஒருப்பட்ட கார்யத்தில்-குறை கிடப்பதாய்-அதிலே நீங்களும் துணை புரிகின்றீர்களோ-

———-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

தனது நிலையை அறியாதே-திருப் பெயரைச் சொல்லுகிற-கிளிப் பிள்ளையை குறித்து
என்னால் பொறுக்கக் கூடாத நிலையில் சொல்லவோ-உன்னை வளர்த்தது -என்று திருப் பெயரை இப்பொழுது சொல்ல வேண்டா –என்கிறாள் –

நன்கு எண்ணி – திருப் பெயரைச் சொன்னால் பொறுக்கும் நிலை அறிந்து சொல்வதற்கும்
பொறுக்க முடியாத நிலையில் திருப் பெயரைச் சொல்லாது-இருத்தற்கும் அன்றோ உன்னை வளர்த்தது —
முளைக் கதிரை –அரங்கமேய அந்தணனை -திரும்பி சொல்ல வாய் துடிக்க —வருக என்று மடக் கிளியை–
கை நுனியில் இருக்காமல் அருகில் வர – கை கூப்பி வணங்கி -மிருத சஞ்சீவினி -வயர்த்ததனால் பயன் பெற்றேன்-அங்கே வேறே திசை

———–

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

என் உயிர்க்கு அது காலனே-விரஹம் தின்று பண்டே-தற்பு -வலி -அற்ற என் உயிர்க்கு அது கூற்றுவனாக இருக்கின்றது –
குழாங்கள்காள் நும் உரு -என்று முன்னிலை ஆக்கினவள்-பின் அது என்று படர்க்கையிலே கூறுவது என் என்னில்–காண மாட்டாமையாலே-முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்-

———

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

சில குயில்களைக் குறித்து-திருப் பெயர்களைச் சொல்ல வேண்டா -என்று நான் இரக்க-அதனையே சொல்லி நலிந்தீர் கோள்-
உங்களை வளர்த்த தனால் வந்த பயன் பெற்றேன் –சொல் பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே  என்கிறாள் –
வளர்த்த தனால் பயன் பெற்றேன் -பரகாலனும் பராங்குசனும் தொனியில் தானே வாசி

சம்பந்தமும் அடக்கமும் கிடக்க-சால நீர்மை உடையீராய் இருந்தீர் கோள்–காப்பாற்றுவார்கள் விஷயத்தில்-அருள் இல்லாதவர்களாய் இருந்தீர் கோள்-

உயிர்க்கு அது காலன் என்று–தோல் புரையே போமது அன்று -அது -என்கிறாள் –தன் வாயாலே சொல்ல மாட்டாமையாலே –

மிருத சஞ்சீவனமான இராம குணங்களையும் ஒரு கால்-சொன்னால் ஆகாதோ என்பாள் -கண்ணன் நாமமே -என்கிறாள் –

—————–

பண் புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண் புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-(பண் புரை பாட பேதம்)

நம் ஆவி உண்டு எழ நண்ணினான் – அவ்வடிவு அழகைக் காட்டி-என்னை முடித்து-பிரிந்து போனான் –
நிரதிசய போக்யமான -கண் அழகன் -பிராண அபகாரம் பண்ணிப் போனான் -பிரஹரித்து –அடித்து -ஆவியை அடிக்க முடியாதே -அபஹரித்து என்றவாறு-

——–

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-(ஒன்பது பாசுரம் துக்கம் -இதில் மகா துக்கம் -)

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்-ஒன்றி -திருப்தி தோன்றும் -எண்ணத்துடன் ஒத்துப் போனோம்
அவன் திரு உள்ளம் இவரை அழிக்கவே-அடித்து அபகரித்து –போக்கிலே ஒருப்பட்டு ஏக ஹ்ருதயராய் ஒத்துப் போனோம்

நாமும் முடிகையிலே துணிந்தோம்-நித்ய ஸூரிகளும் அவன் நினைவினையே பின் பற்றுமவர்கள் ஆகையால்-அவன் கருத்தே தங்கட்குமாக இருப்பார்கள் அன்றோ

வான நாடன் -நாரைக் குழாங்கள் காள் -என்கையாலே-உபய விபூதியும் வேண்டுமோ -ஓர் அபலையை முடிக்கைக்கு-என்பது தோற்றுகிறது-

தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே – ஈஸ்வர விபூதி நிறை வுற்று இருக்க வேண்டும் -என்கிறாள் -இதற்கு
தாம் தாம் முடிய நினைப்பார் -நாடு வாழ்க -என்பாரைப் போலே சொல்லுகிறாள் -என்று-ஆளவந்தார் அருளிச் செய்வர்-வீரம்
நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேண்டும் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்- விவேகம்
நான் முடிய என் துக்கம் கண்டு நோவு படாதே உலகம் அடங்க-பிழைக்கும் அன்றோ -என்று பட்டர் அருளிச் செய்வர்- வெறுப்பு

———

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

நிகமத்தில்-இத் திருவாய்மொழி பாசுரங்கள் நெஞ்சில் படில்-ஆரேனுமாகிலும் தரியார்–மூ வுலகும் உருகும் –பட்டர் நிர்வாகப்படி வெறுப்பில் அருளிச் செய்த படி –

ப்ரவேசத்தில் -இவர் குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது–தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –

———

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

திருக் காட்கரையிலே எம்பெருமானுடைய-ஆச்சர்யமான செயல்களை நினைதொறும் என் மனம் உருகா நின்றது –என்கிறார்-

மனசு ஸைதில்யாம் மாற்றவோ -அபி நிவேசம் அகம் சுரிப்படுத்தவோ -அனுபாவ்ய குணாதிகனை விலக்கவோ-ஆஸ்ரய கரமான சாபல்யத்தை தவிர்க்கவோ –

போகம் -தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -சேஷி சேஷ பாவம் -ஆராவமுத ஆழ்வான் -திரு மழிசைப்பிரான் -ஏதோத்த காரி போலவும் –

நினைதொறே–ஊரை நினையும் தோறும்-அழகினை நினையும் தோறும்-ஒரு ஊரும் வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத் தன்மையை நினையும் தோறும்

———

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்– வினை கொள் சீர் பாடிலும்-எனது ஆர் உயிர்–வேம்-
பாபங்களை விழுங்கும் -அபகரிக்கும் –பாவங்களைப் போக்குகின்ற கல்யாண குணங்கள்-என் ஒருவனையும் அழியா நின்றன –

அன்றியே
சீர் -என்று சீலமாய்-வினை -என்று செயலாய் –அதாவது சீலத்தின் கார்யமாய் தாழ நின்ற செயல்கள் -என்னுதல்

உனக்கு நான் ஆள் செய்யும் நீர்மை -நினைக்க -உருகி விட்டால் முடியாதே -முதல் அர்த்தம்
பகவானுக்கு ஆள் செய்கை நீர்மை இல்லையே -ஸ்வ பாவம் தானே –இங்கே அவன் ஆழ்வாரை மேலே இருத்தி கைங்கர்யம் செய்யும் நீர்மை -என்றவாறு –
நான் எனது -என்பதை நீர் நுமது வேர் முதல் -சொன்னால் போலே வார்த்தைப் பாட்டில் ஆவது இப்படி
நான் உனக்கு ஆள் செய்வது சொல்லி வைப்போம் -பரம பிரமாதா அன்றோ ஆழ்வார்-புரிந்த அந்தரங்கள் ஈடு மூலம் அறிவார்கள் -எம்பார் நிர்வாகம்

நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –நான் உனக்கு அடிமை செய்யும் வகை-நினைக்க மாட்டு கின்றிலேன்
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்று இருந்தமையைத் தெரிவிப்பார் –நான் -என்கிறார்
வகுத்த சேஷி யானவன் இறைவன் ஆதலின் –உனக்கு -என்கிறார் –
அவன் தாழ நின்று புரிந்த செயல்களை விநயத்தாலே-ஆள் செய்யும் நீர்மை -என்கிறார்-
அவன் தமக்கு ஆள் செய்யும் நீர்மையை –தாம் ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன் -என்கிறார் –
இச் சொலவையும் இழக்க ஒண்ணாது என்று-நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மை என்பான் என்-
நீ எனக்கு ஆள் செய்யும் நீர்மை என்னாமல்-என்ன-இச் சொலவையும் இழப்பரோ பாவியார் -என்று பணிப்பர் எம்பார்-
நம் விதி வகையே வாட்டாற்றான் -ஆழ்வார் ஆசைப் பட்டதையே தனது விதி ஆக்கி வைத்தான் அவனும்

———

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

அடிமை கொள்ள என்று புகுந்து-தன் படிகளைக் காட்டி-எல்லா வற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை
நினைக்க முடியாதவனாக இருக்கிறேன் –என்கிறார் –

என் உயிராய் என் உயிர் உண்டான்போக்தாச்ச பிரபுரேவச -எனக்குத் தாரகன் போலே புகுந்து என்னை அழித்தான் –அழிக்குமவனாகப் புகுரில் இவர் இசையாரே –
இருவரும் கூட உண்ணப் புகுந்து உண்பவன் தானே ஆனான் –

அன்றிக்கே
என் உயிராய் என் உயிர் உண்டான் -என்பதற்கு-தன்னால் அல்லது சொல்லலாதபடி என்னைச் செய்து என்னை உண்பதும் செய்தான் -என்றுமாம் –

கார் முகில் வண்ணன்-
என்னுடைய சேர்க்கையாலே–பக்தி பூமா அன்றோ இவர் -கடலை முழுக்கப் பருகின காளமேகம் போலே ஆயிற்று அவன் வடிவில் செவ்வி இருப்பது –
தூ நீர் முகில் போலே தோன்றாயே-8-5-3-என்று இவர் ஆசைப்பட்ட படியே தோற்றி அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு-அத் தலையில் செவ்வி இருந்த படி –

——–

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

முறை தவறாமல் சர்வ ஆதார பூதன் -சர்வாந்தராத்மா -ஆனவன் -அதி ஸூத்ரனான என்னுடன் கலந்து அனுபவித்த
சீல அதிசயத்தை அளவிட்டு சொல்ல அறியேன்–சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தார் -8-7-8- என்றதனைச் சொல்லுகிறார் –

சிறிய என் ஆர் உயிர் உண்ட- சிறியேனுடை நல் உயிரை -என்றது-மிக்க அற்பனான என்னுடைய ஆத்துமாவை -என்றபடி –
அவனுடைய மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாததைப் போன்று- தம்முடைய சிறுமைக்கும் எல்லை இல்லையாக நினைத்து இருக்கிறார் –

ஆர் உயிர் – இவர் தம்மை சிறுக நினைத்திரா நின்றார்-அவன் இவரை நித்ய ஸூரிகட்கும் அவ்வருகாக நினைத்திரா நின்றான்-
இவர் தம்மை சிறுக நினைத்தால் பயன் என் –இவர் தம்மைத் தாம் அறிந்தாரோ -என்று-மேல் விழா நின்றான் – யானே என்னை அறிய கிலாத என்று அன்றோ இவர் இருந்தார்

சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே அறிகிலேன் – இது முன்னம் ஸ்வரூப ஞானத்தால் செய்தது ஓன்று அன்றே –
ஸ்வரூப ஞானத்தால் விரும்பினால் அன்றோ ஸ்வரூபத்து அளவு நிற்பது –கழி பெரும் காதல் –முறையை அழிக்கும் அன்றோ –

———

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-(எம் கண்ணன் கள்வங்களே-பாட பேதம் )

என்னை அடிமை கொள்பவனைப் போல் புகுந்து-என் உடலையும்-உயிரையும் கொண்டான் –எனக்கும் ஹேயமான சரீரமும் –அத்துடன் வியாப்தமான ஆத்மாவையும் –
ஹேய உபாதேய விபாகம் அற – ஒருவனுடைய-கழி பெரும் காதல் -இருந்தபடி என் –என்று ஆச்சர்யப் படுகிறார்-திருவருள் தான் பெற்றானாய் இரா நின்றான்-
ஆதலின் –திருவருள் செய்பவன் போலே -என்கிறார் –

கள்வங்களே– முகப்பில் ஒன்றாய்-முடிவில் ஒன்றாய் -இருக்கும் செயல்கள் –
1-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-தான் ஏவப் படுகிறவனாய் -தாழ நிற்கையும் –
2-விரோதியான சரீரத்தை -கழித்து தர என்று புகுந்து- உடலையும் உயிரையும் வேறு படுத்து உணர்தலை-செய்யாது ஒழிகையும்-
3-இனிய பொருளாக புகுந்து தான் அனுபவிக்கின்றவன் ஆகையும்
4-என் பேறாகப் புகுவானாகப் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும்
5-இவை முழுதும் வடிவில் வேறுபாட்டால் தோற்றி இருக்கையும் ஆம் –க-ருவளர் மேனி
இத்தலையில் ஆத்தும அபகாரத்தை தவிர்த்தது-தன் ஆத்தும அபகாரத்தாலே ஆயிற்று –

————

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அவன் வஞ்சகன் என்று அறிந்தால்-அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்-நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே–அதி வியாமுக்தன் வியாபாரங்கள்-ருஜுவாய் நேர்மையாய் இருக்கும் -அவ் வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –

எனக்குச் செம்மாய் இருக்கும் -என்றதற்கு-எனக்கு சேமமாய் இருக்கும் என்று ஒரு தமிழ் புலவர் பொருள் கூறினார் –

புன் கண்மை – பேகணிப்பு-தீனம் -சிறிய ஞானம் இரண்டு அர்த்தங்கள் –பொல்லா நோக்கை உடைத்தாய் என்கை–புன் கண் -புல்லிய அறிவு-கண் -அறிவு-
பட்டர் -இதற்கு-புன் கண்மை எய்தி--மீளவும் அறிவை அடைந்து-மீள உயிர்ப் பெய்து -என்று ஆயிற்று நிர்வஹித்து போவது
இது தானே சொல்லோடு சேர்ந்து இருக்கிறது இல்லை–கேட்கப்பட்ட இந்த பொருளோடு -சொல்லும் சேரப் பொருந்தி வழக்காறாம் படி எங்கனே-
என்று ஆராயா நிற்கச் செய்தே -நஞ்சீயர் நம்பிள்ளை உடன் ஆராயா நிற்கச் செய்தே –
கோதான இது மீளவும் புன் கண்மை எய்தும் போது (சிறிது ஞானம் பெற்று) மீளவும்-உயிர்ப் பெய்தது ஆக வேண்டும் அன்றோ –
பொருளின் தன்மையாலே தன்னடையே வரும் என்று-நான் -நம்பிள்ளை -சொன்னேன்–சீயர் போர உகந்து அருளினார் -என்று அருளிச் செய்வர் –

————-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7–உயிரான பாசுரங்கள் இது முதல் மூன்றும் –

திவ்ய தேசம் -பிரதானம் -இங்கே நித்ய வாசம் செய்வதால் அவனுக்கும் கும்பீடு -அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என் உயிரை நேராக உண்டு-
என் ஆர் உயிர் கோள் உண்டே -கோட் குறை பட்டது–பின்னையும் உண்ணாதாரைப் போலே-இருக்கும் -என்கிறார் –

ஈஸ்வரன் தனக்கேயாய் இருக்கும் -அசித்துப் பிறக்கேயாய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கும் —
என்ற முற்பட்ட நினைவு -அங்கண் இன்றிக்கே அசித்தைப் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் என்கிறது நமசாலே
அதாவது போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது நோக்க வேணும் என்று அழியாது ஒழிகை –
அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று -மேலும் சொல்லும் -(பிரணவத்திலும் -நாராயணாயா என்றத்திலும்) —சூர்ணிகை -91-93-
அகாரம் இல்லாத பிரணவம் இல்லையே -அவன் விருப்பம் செய்வதே அடிமைத் தன்மை -திரு உள்ளம் படியே வேதம் சொல்லும் –
எதிர் விழி கொடுக்கும் பார தந்தர்யம் -அவனுக்கு பிடித்ததே செய்ய வேண்டும் –
அசித்து போலே பாரதந்தர்யம் -அவனுக்கே என்ற நினைவால் -அவன் அனுபவம் வளர்க்க -இதுவும் வேண்டுமே -அவன் போகம் அழிக்க கூடாதே –

ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து-என்னை வெறுந்தரை ஆக்கின-ஆச்சர்யத்தை உடையவனாலே
மேலே –திருவருள் -என்று மறைத்துக் கூறியதை-வெளியிடுகிறார் – கிட்டின போது தாழ நின்று மின்மினி பறக்க-செயல் புரிந்த ஆச்சர்யத்தை நினைந்து -மாயனால் -என்கிறார் –

——

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

அபேஷா நிரபேஷமாக -இவருக்கு என் ஆத்மா பட்ட பாடே —ஆட் -பட்ட பாடே–ஹர்ஷத்தாலே -இதில் -ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –தரைப் பட்டு முன்பு பேசினார்

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்-பெறாப் பேறு பெற்றால் போலே அனுபவிக்கிற இவனுடைய-குணத்தின் தன்மையை-பொறுக்க ஒண்ணுகிறது இல்லை-என்கிறார்

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்-(இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –)வெறிதே அருள் செய்வர் -8-7-5- எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் –பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும் என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க-தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –

நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் – ஒரு நாள் அனுபவித்து-இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று-கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து – அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –முற்றவும் தானுண்டான்
அணு அளவிதான இவ் உயிரை-எங்கும் பரந்து இருக்கிற தான்- விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது-தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து-இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –

காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு – கறுத்த நீர் கொண்டு எழுந்த-காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே-திருக் காட் கரையிலே வந்து-அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற-நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான்

———–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

நீரேயோ இப்படிப் பட்டீர்-குண அனுபவத்தையே பொழுது போக்காக உடைய
நித்ய ஸூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன-அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ –என்கிறார் –

அபி நவ அபிமத  விஷய ஈடுபாடு-அன்றோ ஆழ்வாரது -மூத்தவர் நித்ய ஸூரிகள் -யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா –

பகவான் உடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாய் இருக்கிற-இவ் உலகத்திலே நான் பட்ட பாட்டினை-நித்ய விபூதியில் உள்ளவர்கள் தான் பட்டார்களோ -என்கிறார் –
இங்கு எனது உயிர் பட்டது-அங்கு ஆர் உயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்-எல்லார் செய்வதும் குண அனுபவம் தானே –
அங்கனம் இருக்க இவர்க்கு இவ்வாசி கூறினபடி என் -என்று நான் -நம்பிள்ளை -கேட்க
திருமணம் ஆன புதுப் பெண்ணுக்கு கணவனுடைய கைகள்-அவள் மேலே பட்டவாறே வேர்ப்பது விடுவது ஆமாறு போலே
இவர் அனுபவத்தில் புதியர் ஆகையாலே வருகிறது காணும் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

———

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

ஆச்சார்ய சம்பந்தம் ஹேது எனக்கு வேணுமே -அவனுக்கு அது தேவை இல்லை -அநாதி காலமாக அன்றோ -சொத்தை அடைய ஸ்வாமி

பசித்தவன் சோறு கண்டால் போல என்னை போல் அன்றிக்கே தாஹித்தவன் தண்ணீர் கண்டால் போலே-அன்றோ அவன் -பூர்ணமாக பருகினான்

முற்றப் பருகினான் –தன் குணங்களையும்-செயல்களையும்-காட்டி-என்னை நீராக்கி-குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்த்வயித்வா ஏனம் லோசநாப்யம் பிபந்நிவ-யுத்தம் -16-65-
ஸ்ரீ ராமர் -அந்த விபீஷணன் உடைய அந்த வார்த்தையைக் கேட்டு-அவனை வார்த்தையால் சமாதானம் பண்ணி-கண்களால் பருகுவார் போலே

அத்யந்த அல்பன் -அவன் அபரிச்சின்ன ஸ்வ பாவன்-கோனாரை அடியேன் -அஹம் த்வா-சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அஞ்ஞான அசக்தன் -தான் என்னை

கார் ஒக்கும் காட் கரை அப்பன்-ஆழ்வார் திரு மேனி உட்க்கொண்ட –கரு வளர் -ஸ்வாமி பெற்ற புகராலே திவ்ய தேசமும் சோலைகளும்-திருவளர் சோலை ஆயிற்றே

ஆழ்வாருடையது திருக்கோளூர் போல் பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி அன்றோ இத் திருவாய் மொழி

———

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

நிகமத்தில்- இத் திருவாய் மொழியைக் கற்பார்க்கு-பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கொடி மதிள் தென் குருகூர்ச் –கம்சனை வென்ற வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று–ஸ்வாமியின் வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே-அன்றோ கொடி கட்டுவது

ஸ்வஸ்தி யாத்மதாம் ஸ்வயம் அர்த்தயித்வா
ஸ்வம் ப்ராப்யா ஹர்ஷ விவஸ்த்யா
ஹரி அதஸ்தாத் எச் சீலம் அன்வயம் ததேவ தேவாதி
அநு ஸ்ம் ஸ்ம்ருத்ய திருத்த மனகா வியஸீனஸே ஷஷ்ட்யே–திராவிட உபநிஷத் சங்கதி

ஹரி அதஸ்தாத் -தாழ விட்டுக் கொண்டு
ஸ்வயம் அர்த்தயித்வா-தானே ஆழ்வார் இடம் தேடி வந்து
ஹர்ஷ விவஸ்த்யா-புத்துக்கணிப்பு அடைந்து
அநு ஸ்ம் ஸ்ம்ருத்ய–8-7 பூர்வ ஸம்ஸ்லேஷம் நினைத்து

கம்ச ஜேதா-சடஜித் ஆச்சர்ய ஏகான் அகில பதிதயா
அந்தராத்மத்வ பூம்னா சக்தத்த்வ பூம்னா ஜலதய தனுதயா
பவ்யதா ஆகர்ஷத்வாத் உதார தேகியே-பாவ ப்ருதாம்
ரக்ஷசனாம் தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி

கம்ச ஜேதா-சடஜித் -கம்சனை வென்றவரை சடத்தை வென்றவர் –
1-ஆச்சர்ய ஏகான்—திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே

2-அகில பதிதயா—நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்

3-அந்தராத்மத்வ பூம்னா–நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்

4-சக்தத்த்வ பூம்னா–அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்

5-ஜலதய தனுதயா–திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்

6-பவ்யதா ஆகர்ஷத்வாத்–எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது

7/8/9/-உதார தேகியே-பாவ ப்ருதாம் ரக்ஷசனாம் –ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்றும்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்குஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–என்றும்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர் கார் எழில் மேகம்-என்றும்

தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே

——

உருகுமால் என் நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 86-(என்னால் -என் நா என்றுமாம்)

மருவுகின்ற இன்னாப்புடன் –கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் ஆளவந்தார் நிர்வாஹம் 

———–

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

சில நாரைகளைக் குறித்து-கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு-ஒப்பனையும் மனத்தை கவர்கின்ற செயல்களும்
ஆகிற இந்த இரண்டினையும்-எனக்கு ஆக்கி வைத்தவர்க்கு–அவன் தன் அழகாலும் குணங்களாலும்-தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து-உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்-என்கிறாள் —

எம் கானல்-பிறருக்கு கொடுப்பதாக வரும் மமகாரம் -எனது என்னும் செருக்கு- உத்தேச்யமாய் இருக்கும் அன்றோ –

நும் கால்கள் என் தலை மேல் – உதவி செய்கின்றவர்களான உங்கள் கால்களை-நீங்கள் உதவி செய்ய -அதனால் உய்வான் இருக்கிற -என் தலை மேலே
மயிர் கழுவிப் பூ சூட இருப்பாரைப் போலே-அவற்றின் காலாகில் -இவள் தலையிலே இருக்கப் படைக்கப் பட்டன –
இவள் தலையாகில் அவற்றின் கால்கள் வைக்கப் படைக்கப் பட்டு இருந்தது-இரண்டும் பிறர் பொருட்டு இருந்தபடி –

நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-ஆச்சார்யர் பத்னி புத்திரர்கள் திருவடிகள் தலையில் தரிக்க –ஆறுகால சிறு வண்டே-
குருவைப் போலே நுமர்கள் -தாரை பிள்ளைகள் -இவர்களையும் நடத்த வேண்டும் –
எனக்காக தூது சென்ற -உத்தம அங்கத்தில் சேர்த்து கிருபை பண்ணி -பாத்ர பூதன்-என்று உபகார ஸ்ம்ருதி தத் சம்பந்தி அளவும் செல்ல வேண்டுமே

——

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

சில குருகு இனங்களைக் குறித்து-தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ –என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –அடியார்களுக்கு -உடன் கூடுவது என்று கொலோ என்று அன்றோ பிரார்த்தனை
அசாதாரண பரிஜனங்கள் உடன் -கூட சேர அர்ஹதை இல்லோமோ-தக்கிலமே கேளீரே

எமராலும் பழிப்புண்டு -அணி மூழிக் களத்து உறையும் -இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு – ஒரு காலத்தில் உண்டான கலவியின் காரணமாக-உறவினர்கள் கை விட்டார்கள் –
ஒரு காலத்திலேயே உண்டான கலவி அளவிலே தாமும் விரும்ப வில்லை -என்றது – உறவினர்கள் கை விட்டதே காரணமாக தாம் கைக் கொள்ள வேண்டும்-
அணி மூழிக் களத்து உறையும்-பிற்பாடர்க்கு காட்சி கொடுக்க வந்து நிற்கிற நிலையில் ஆகிலும் தாம் கைக் கொள்ள வேண்டும் –
இவ் விரண்டும் என் அளவில் விரும்பாமைக்கு காரணம் ஆவதே -என்கிறார் -என்றபடி –இங்கு என்-தம்மைப் பெற்று இருக்கிறேனோ-பந்துக்களைப் பெற்று இருக்கிறேனோ -என்றபடி –
இங்கு உள்ளார் கை விட்டால் பின்பு தம் எல்லைக்குள்-ஆக்கிக் கொள்ள வேண்டாவோ –சர்வேஸ்வரன் இடத்தில் உட்புக உட்புக -அன்று தொடங்கி-கை விடுவார்கள் அன்றோ இவ் உலகத்தார் –

ஸ்ரீ பூமி நீளா நாயகனாய் ஸர்வ மங்கள விக்ரஹாய ஸமஸ்த பரிவாராய ஸ்ரீ மத் ராமாநுஜாய நம –அவனுக்கும் –நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் -ஆச்சார்யருக்கும்

———

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

அழகன் -அவயவ சமுதாய அதிசயித போக்யதை-வடிவு கொண்டவனுக்கு நாங்கள் அயோக்கியரோதக்கிலமே கேளீர்கள்

கொக்கினங்காள் குருகினங்காள்-கண்ணால் கண்டவற்றை அடைய ஏவுகிறாள் – சிலவற்றைப் போக விட்டோம்-அவை நம் கார்யம் தலைக் கட்டும்-என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –

செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்–முதல் உறவு செய்யும் கண் –அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை –
ஊற்று இன்பத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் –திருவடிகளில் விழுந்தாரை நல் வார்த்தை சொல்லித் தரிப்பிக்கும் முறுவல்

———-

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

அழகால் அடிமை கொண்ட ஸூந்தர மூர்த்திக்கு -தூதாக சென்று -வார்த்தை சொன்னால் -உங்கள் ஸாரூப்யம் தேச வாசம் தவிர்க்குமோ-சாமீப்யம் சாம்யாபத்தி சாலோக்யம் சாயுஜ்யம் தவிரான்-
மேக வண்ணம் -வெளுப்பு ஆக்குவானோ என்றுமாம் -வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ -1-4- அங்கு அப்படி அனுபவம் -இங்கு இப்படி அனுபவம் –

பூண்ட நாள் -சீர்க் கடலை உட்க் கொண்டு திரு மேனி நன் நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஞான ஹ்ரதரத்தைப் பூரித்துத் தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து
ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூறும் அடியவர் உறையில் இடாதவர் புயல் கை
அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும் –சூர்ணிகை -155-

————-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று-இருந்தனவாக-பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை-என் பக்கலிலே செய்தவன்-அங்கீ காரியாது ஒழியான் –
ஆன பின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்-செய்ய வேண்டும் –என்கிறாள் –அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ-

கொம்பது பருத்தியாக அங்காடி பாரித்து -பாரித்தால் போலே –தனக்கு பரம பதம் கலவிருக்கையாக இருக்க
அதனைக் காற் கடைக் கொண்டு-அண்மையில் இருப்பாரைப் போல் இருக்க-என் நெஞ்சில் பிரகாசியா நின்றான் -என்று-சிற்றான் கொண்டான் பணிப்பர் –

இது தான் -பருத்து கொம்பிலே இருக்கச் செய்தெ -கடை விரித்து புடவைக்கு விலை பேசுமா போலே
தூத பிரகரணத்தில் வெறுப்பாக சொல்லுவது பொருத்தமோ -கண்ணால் பார்க்க ஆசை கொண்டே சொல்கிறார் என்றபடி –
இத் திரு வாய் மொழிக்குச் சொன்ன வாக்ய அர்த்தத்தோடு சேராது-ஒவ்வொரு சமயங்களில் சொல்லிப் போம் வார்த்தை அன்றோ-எம்பெருமானார் -நிர்வாஹம்
அங்கு உள்ள ஈடுபாடு என் நெஞ்சில் உண்டு-நெஞ்சில் வசிக்கிறான் -சிற்றாற்று கொண்டான் -சொன்னதில் கொஞ்சம் மாற்றி-இதுக்கு சேர-உடனே பெற பாரித்து தூது விடுகிறார் –

துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே-மயிர் முடி அழகை பிரகாசிப்பித்து -கேசவ பெருமாள் –
கிலேச நாசன் ஆக வேண்டாமோ -வாசக சப்தத்துக்கு தக்க நடக்க வேண்டாமோ -தூத வாக்கியத்தை செப்புமின்

—————-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

மாதரைத் தம் மார்பகத்தே-அகலகில்லேன் இறையும் என்று வைத்தார்க்கு-சில வண்டுகளைக் குறித்து –உங்கள் வார்த்தை விலை செல்லும்படி- பிராட்டி சந்நிதியிலே சொல்லுங்கோள்-என் தூது வார்த்தையை -என்கிறாள் –

நித்ய அநபாயினி -பிராட்டியை திரு மார்பில் உடையவருக்கு உங்கள் வார்த்தை -கேட்ப்பிக்கவும் அவள் உண்டே-கேட்கவும் அவன் இருக்க சொன்னால் போதுமே -சேர்த்தியிலே சொல்லுமின் –

என் வாய் மாற்றம் தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே- என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர்கேடு-அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்-அறிவிக்கும் அதுவே குறை-அவன் வரவு தப்பாது

——–

சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

சில குருகு இனங்களைக் குறித்து-சிலரோடு கலந்து-அவர்களைத் துறந்து-அதுவே புகழாக இருக்கப் போருமோ-என்று அறிவியுங்கோள் –என்கிறாள்

ஸ்ரீ ஸூ க்தி நாதன் பெயர் கொண்டவன் ஆழ்வாரை இப்படி பண்ணினான் என்ற பெயரே நிலை நிற்கும் படி பெற்றான்-பிரதம தம விபூஷணம் -வலி த்ரயம் தாமோதரன் -போலே –

எனக்கு ஓன்று பணியீரேஒரே நாள் -ஒரே வார்த்தை ஒரு சொல் -ஒன்றே மருந்து ஒரே தடவை பிரபத்தி-பரப்பு அற்று ஒன்றான வார்த்தை -பணியீரே -கௌரவத்துடன் சொல்கிறாள்-இரண்டாம் நாள் சொல்லுமது பழி என்று இருக்குமவள் அன்றோ –ஒப்பற்றதான நல்ல வார்த்தை-முடிகிறாள் ஒரு பெண் பிழைக்கச் சொல்லுகிற வார்த்தை அன்றோ –

தோள் துறந்த -என்றதனால்-அவன் தான் அந்தக் காதல் எல்லாம் கொண்டும்-தோளுக்கு அவ்வருகு போக மாட்டிலன் போலே காணும் -என்பதனை தெரிவித்த படி –

————-

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும் –அத்தலையில் அழகினை நினைத்தால்-பாதுகாவல் தேட்டமாய் அன்றோ இருப்பது –
அவனோடு கிட்டிக் கலக்க பெறாமையால் வருவதும்-ஓர் ஆற்றாமை உண்டு-அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்றும் ஒரு ஆற்றாமை உண்டு
அவற்றிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம் –ஸ்ரீ பரத ஆழ்வான் சந்தோஷமாக ஸ்ரீ பாதுகை பெற்று மகிழ்ந்து திரும்பினால் போலே

———

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-சேஷித்வம் போக்யத்வம் சீலத்தவம் -மூன்றும் உள்ள தாம்—தாம்  -ஸ்வரூபம் தம்மை ரூபம்--தம்மைக் கண்ணாடி புறத்தில் கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த நிலைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ- தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-
பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்- பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-தகவு -தயா கிருபா -தயைக்கு போராது என்று உரையீர்

தகவன்று என்று உரையீரே—காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே-இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள் பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-

உண்ணும் சோறு -கள்வன் கொல்-பதிகங்களில் இதே போலே -தான் ஜீவனம் தேடித் போனவள் என் ஜீவனம் கொண்டு போக வேண்டுமோ -பரம பாகவதர் முகம் பார்த்து -அழுத முகம் கழற்றி வைத்து போகக் கூடாதோ

ஏந்து பூண் முலை பயந்து –பூண் ஏந்து முலை பயந்து –-ஆபரணங்களைத் தரிக்கக் கூடிய முலைகள் பசலை நிறத்தை தரித்து –ஆபரணங்கள் கலவியின் பொருட்டு கழற்றுமவை- பசலை நிறம் கல்வியால் அல்லாது கழலாதே அன்றோ

இணை மலர்க் கண் நீர் ததும்ப–கண்களுக்கு இலக்கு நீராக இருக்க வேண்டி இருக்க நீருக்கு -சோக அஸ்ருக்கு இலக்காவதே

—————-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

தகவன்று என்று உரையீர்கள்-ஆஸக்தியால் நிரவதிக தயாவான் -தகவு இல்லை என்று அருளிச் செய்த உடனே -இப்படி -சந்நிஹிதன் ஆனபின்பு -பிரயோஜனம் இல்லாமல் போகுமே -அவனுக்கு நிரூபகம் அருள் ஆகையாலும்-ஸ்வரூப நிரூபக தர்மமே தயை தானே-அவனுடைய மர்மத்தை அறிந்தவள் ஆகையாலும்-ஆன்ரு சம்சயம் கிருபை தான் தர்மம் சீதை பெருமாள் இடம் -சொல்லி-அதனால் இவள் அறிந்த மர்மம் -–முன்பு -தகவுடையவனே பரிந்து பேசி -அதனை இல்லை -என்கிறாள் -என் தவள வண்ணர் தகவுகளே -2-4-5-என்று திருத் தாயார் சொல்லிற்று பொறாமல்-தகவுடையவனே -என்று-முன்பு அப்படி பேணினாளே-
அருளாத நீர் அருளி–அவர் ஆவி துவரா முன் –அருளாழி புட் கடவீர்-1-4-போலே இதிலும் -சில அன்னம் களைக் குறித்து நான் முடிவதற்கு முன்னே-அவனுக்கு என் நிலையை-அறிவியுங்கோள்

———

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

நோய் அறுக்குமே-சம்சாரம் நிவர்த்திக்கும் -விஸ்லேஷ ரூபம் வியாதி வராது-பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

கிளி மொழியாள் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை-அலற்றிய சொல்-தன் ஆற்றாமையாலே-முறை பிறழச் சொல்லிய சொல் –

————-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-

அறுக்கும் வினையாயின–வினையாயின -அறுக்கும் – வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது-ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்-பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -ஸ்வயம் போக்யத்வ பேறு போல்வன-நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று- அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –

அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமேநாளேல் அறியேன் என்பார்-மேல் இப்பதிகத்திலே

நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் – உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது-கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியேனே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —அனைத்து உள்ளத்திலும் இருந்தாலும் அவர் இருக்கிறார் என்ற உணர்வே வேண்டுவது

குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –

ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –மனத்திலே அவனை 1-நிறுத்த வேண்டும் என்னும் 2-உறுதியிலே-3-ஒருமைப் பட்ட-4-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-மநோ ரதம் மட்டுமே –தத் அபி சந்தி விரோதமாத்ராத் கூரத்தாழ்வான்-ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –

கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க -இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –

————–

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் –கூரிய வேல் போன்று-ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய் -நோக்காலே அகப்படுத்தி கொள்பவள் –
அனுபவிக்கின்ற்றவன் அளவு அல்லாத இனிமையை உடைய-கண்களை உடையவளாய்-ஆத்தும குணங்கள் நிறைந்தவளுமான
நப்பின்னை பிராட்டி உடைய செவ்வி நுகர்வதற்கு இட்டுப் பிறந்தவன் ஆயிற்று –வடி -மா வடுவாய் பிளவு போலேயும்-என்றுமாம் –

நெடியான்-இப்படிப் பட்ட தேவிமார் முதலிய பரிகரங்களால்-எல்லை காண ஒண்ணாதவன் –

அடியேன்- பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஒருத்தியுமே அன்றோ அங்கு இங்கு அதை விட ஏற்றம் உண்டே –

———

எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய் அவையுள்–நிருபாதிக பந்து-அசாதாரண சம்பந்தம் -நாராயணன் -எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-ஸூலபனானவன்–வர்த்திக்கும் ஓலக்கத்தில் புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று ஆசைப் பட்ட நான்-அத்திரளிலே சென்று கூடப் பெரும் நாள் என்று-என்று அறிகிலேன் –

கவை யில் மனம் இன்றி–ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு-கவை -கார்யம் -வேறு விஷயம் –-பரந்து திரி தரினும் –மறந்தும் பிரித்து ஒன்று அறிய மாட்டா -என் ஒரு நா வாய் -வாழ்த்தாது நாவோ வாயோ பாடாது -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

———–

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் – ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த-சோலைகளை உடைத்தான தேசம் -என்றது
அடிமை செய்கைக்கு பூக்கள் முதலான சாதனங்கள்-குறைவற்ற தேசம் -என்றபடி –
அன்றிக்கே –
நப்பின்னை பிராட்டியும் தானுமாக மலர்களைப் பறித்து குவிக்கலாம் தேசம் -என்பதனைத் தெரிவித்தபடி -என்னுதல்-
பிராட்டியும் கஜேந்திர ஆழ்வான் போலே தாமும் சேர்த்துக் கொள்கிறார் –

மடப்பின்னை மணாளா –அழகே அன்றிக்கே-ஆத்தும குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு-கணவன் ஆனவனே-
வேறு தேசத்துக்கு சென்று இருந்த குழந்தை ஊர்-அணித்தவாறே-தாய்மாரை பலகால் நினைக்குமாறு போன்று-அடையத் தக்க தெளி விசும்பு அணித்தானவாறே-
திரளவும் தனித் தனியும் பிராட்டிமாரை-அனுசந்திக்கிறார் பாட்டு தோறும் –

————

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்–புருஷகாரம் ஆவாரும் பொறைக்கு உவாத்து ஆவாரும்-உபாத்தியாயர் – உளராய் இருக்க இழக்க வேண்டுமோ -என்கிறார் –

கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்–எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவன்-இதனால் அவர்கள் உடைய படுக்கைப் பற்று -சீதனம் –நோக்குகிற படியைத் தெரிவித்த படி

விண்ணாளன் –படுக்கை தான் இருக்கிறபடி -என்றது-பிராட்டிமாரும் தானும் -தனக்குத் தகுதியான பரமபதத்தில்-திவ்யமான கட்டிலிலே இருந்து-நித்ய ஸூரிகளை நிர்வஹிக்கிறவன் -என்கிறபடி –

பத்னி – பரிஜன -ஸ்தாநாதி– பரிபூர்ணன் –விரும்பி உறையும் திருநாவாய் –உபய விபூதி நாதன்-பெறாப் பேறாக விரும்பி வர்த்திக்கிற தேசம்–திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு-அனுபவிப்பது என்று-என்கிறார்-

கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே –காண்பது நிச்சயம் -என்னும் நம்பிக்கையாலே-களிக்கை அன்றியே–ஏவகாரத்தாலே –கண்டே களிப்பது என்றோ

———-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–ஊரை அன்றிக்கே-ஊரில் நின்று அருளின–ஆஸ்ரித ஸூலபன் -உன்னைக் கண்டு களிப்பது என்றோ-என்கிறார்

திருநாவாய் கொண்டே உறைகின்ற–நமக்கும் நம்மை உகந்தாருக்கும் நினைத்த படி செய்து-அனுபவிக்கலாம் தேசம் -என்று
திரு உள்ளத்திலே ஆதரித்துக் கொண்டு வசிக்கிற தேசம் ஆயிற்று -உகந்து அருளினை திவ்ய தேசம் அன்றோ-என் கோ கோவலர் கோ -எம் கோவலர் கோவே –கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-ஆயர்கட்கு சுலபன் ஆனால் போலே-திரு நாவாயிலே வந்து -எனக்கு சுலபன் ஆனவனே

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-கரணங்கள் தனித் தனியே விரும்பும் நிலை அன்றோ ஆழ்வாருக்கு –கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே-கீழ் தமக்கு இங்கு அசேதனமான கண்களுக்கு

———–

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அடியார்களுக்காக திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று
என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –மதீயையா கிருபையா -கேவலம் கிருபையையா –அருளால் -மட்டுமே பெறுவோம் –

சேஷித்வ-கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் ரக்ஷகத்வ-தேவா சுரம் செற்றவனே திருமாலே பிராப்யத்வ –ருமாலேநாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ-திரு மந்த்ரார்த்தம் -திருமாலே திரு -இருந்தும் அடியேன் இழப்பதே -ஆகார பூர்த்தியை உடைய -ஆகார த்ரய சம்பந்தனாம் -அரவிந்த நிவாஸினி கூடி இருப்பதால் -வந்தே வரத வல்லபம் –

நாரண நம்பீ-ஸமஸ்த குண விபூதி விசிஷ்டத்தால் வந்த நாராயணன் – -நாராயணத்தவத்தால் வந்த பூர்ணம் —என் நாரண நம்பீ-அடியார்களை பாதுகாப்பதே நோக்காக-எல்ல பொருள்களிலும் அந்தராமியாய் இருப்பவன்-அதற்கு உறுப்பாக அடியார்கள் இடத்தில்-அன்பு உள்ளவனாய்-அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் என்றதனாலே-பரி பூரணன் ஆனவனே -என்பார் -நம்பீ -என்கிறார் – பஹு வரீஹீ சமாசம் -அந்தர்யாமித்வம் -வாத்சல்யம் ஸுலப்யம் இவற்றால் பூர்ணன்-

ஆவா அடியான் இவன் என்று அருளாயே-ஆஹா ஆஹா என்று ஆராய்ந்து -சேஷ பூதன் என்று -ஆகார த்ரய விசிஷ்ட சம்பந்தம் பார்த்து இரங்கி அருள வேணும்-அவன் அருளுகைக்கும்-இவன் அருள் கொள்கைக்கும்-சம்பந்தம் சொல்லுகிறது-அடியான்

————-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார் அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –-பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே–அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அஞ்ஞான கந்தமே இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்- உன் திரு உள்ளம் ஆன படி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-

———

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

இனி அந்தோ-இப்படி சொன்ன இடத்திலும்-ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே-நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற-யாவர் அணுகப் பெறுவார் –மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்

எனக்கு உள்ள ஆற்றாமை அபி நிவேசம் அவனுக்கு உண்டாக பெறாது ஒழிவதே -என்பார் அந்தோ –என்கிறார் –

மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய் – இப்படி எல்லா பொருட்கட்கும் நிர்வாஹகன் ஆனவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதவன் ஒருவன் குடி இருப்பு பெற்றால் போலே-அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம் என்று மிகவும் விரும்பி வர்த்திக்கிற தேசத்தை –

————

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–பரமபதாதிகளை விட்டு -திருப்  பாற் கடல் -சூர்ய மண்டலம் -விட்டு -நீல ரத்னம் போலே -விட ஒண்ணாத ரமணீய விக்ரகம் கொண்டு-நித்ய வாசம் செய்யும் உன்னைக் காணப் பெறாமையாலே-நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன்-என்கிறார்-அணுக பெருநாள் எவை கொலோ அந்தோ என்று சொல்லப் பலம் இல்லாமல் –அந்தோ

என்று எப்போதும் –ஒருகால் சொல்லப் புக்கு இளைத்தால் விடுகை அன்றிக்கே-எல்லா காலத்திலும் –சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – மனம் கலங்கி-துயர் உற்ற பிள்ளைகள் தாய் தந்தையர் கல் பெயரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே –திருமால் என்று அழைப்பன் –

————-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே--9-8-11-

இத் திருவாய் மொழி கற்றார்—உபய விபூதியில் உண்டான ஆதரணீயத்தையை -பலமாக-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும்-எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர்-என்கிறார்

மண் ஆண்டு–இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –மணம் கமழ்வர் மல்லிகையே–மல்லிகை மணம் கமழ்வர் –-மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்-
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்- இவருடைய எண்ணம்-அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –

மல்லிகை போலே பரிசுத்த -அழுக்கு இல்லாமல் -அனுபவிக்க பரிமளம் -கொண்டு -கமழ்தல்–யசஸ் கீர்த்தி உடையவர் ஆவார்

நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே -ஆழ்வார் மநோ ரதம் திருமங்கை ஆழ்வார் பெற்றார் -தீர்த்தம் சடகோபர் பிரசாதம் பெற்று உஜ்ஜிவ்விப்போம் –

திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்–சர்வேஸ்வரனுக்கு செல்வம் ஆழ்வார் ஆகையாலே- செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –ஆழ்வார் பரியவே அப்பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்-

——————

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மாலைக் காலத்தில் தென்றல் தொடக்கமான-பொருள்கள் –ஈருமாலோ-தவரும் ஆலோ–மயக்கும் ஆலோ–சிதைக்கும் ஆலோ-தனித் தனியே தன்னை வருத்து கிறபடியை சொல்லுகிறாள்-
மல்லிகை -என்றது முதல்-செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ -எனபது முடிய  இவள் யார் கேட்க கூப்பிடுகிறாள் தான் –

வட்ட வாய் நேமி வலம் கையா போலே எங்கும் வாயாக இருக்குமே வாயுவுக்கு –ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு —கிராண இந்த்ரியமான மூக்கிற்கு பாதகமாய்-ஸ்பர்ச இந்த்ரியமான உடம்பையும் அழியா நின்றது -என்பாள்
கமழ் தென்றல் ஈரும் -என்கிறாள் –

அல்லி அம் தாமரைக் கண்ணன் –முதல் உறவு செய்வன கண்களே அன்றோ –கண்ணோடு கண்ணினை கௌவி-ஒன்றை ஓன்று உண்ட பின் அன்றோ-மெய்யுறு புணர்ச்சி உண்டாவது –

எம்மான் –அக் கண் அழகாலே என்னைத் தனக்கே உரியவள் ஆகும்படி செய்தவன் –எம் மாயோன் –அம் மேன்மையை உடையவன்-தாழ்ந்தார் சிலர் உயர்ந்தவர்களோடு கலக்குமா போலே-
கையைக் காலைப் பிடித்து-தாழ நின்று பரிமாறின படி –கலக்கும் போது மின் மினி பறக்கும்படி காணும் கலந்தது –

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
அவனும் வாராது இருக்கிறான்-நானும் வருந்தி ஒருபடி ஜீவித்து கிடக்கிறேன்- அவனுக்காக உண்டான இந்த பிள்ளைகளைக் கொண்டு புகலிடம் அறிகிலேன்-
நான் செய்தபடி செய்ய-இம் முலைகளின் வீக்கம் தீர அனுபவிக்கப் பெறுவது எப்போதோ – பஞ்ச காலத்தில் குழந்தைகள் சோறு சோறு என்னுமா போலே படுத்தா நின்றன –
அவன் தானும் கலக்கும் போது எல்லா அங்கங்களிலும் கலப்பதற்கு-ஆற்றல் இல்லாதவன் போலே காணும்-
அவன் இழிந்த துறையும்-இளைப்பாறின இடமும்-மலராள் தனத்து உள்ளான் -இழிந்த துறை-மெல்லியல் தோள் தோய்ந்தாய் -இளைப்பாறின

ஆக-இங்கும் பொருந்தாதே-அங்குப் புகப் பெறாதே-நடுவே நின்று கிலேசப் படுகிற நிலை-மாலை நேரமாகிறது -என்று-இங்கனே ஒரு கருத்தாக சொல்லக் கடவதாய் இருக்கும் –ஸந்த்யா காலத்துக்கு ஸ்வா பதேசம் முக்தன் படும் நிலை –முன்பு தூசி ஏறின பேர்க்கு உரமாக நின்று-பேரணி உறு பூசல் ஆனவாறே திரள அமுக்குமாறு போலே-தனித்தனியே நலிந்த பொருள்கள்-வலிமை குறைய குறைய-
பல கூடி வந்து நலியா நின்றன –என்கிறாள்– மணி தென்றல் ஆம்பல் மாலை சாந்தம் பஞ்சமம் முல்லை வாடை அனைத்தும்-திரளாக வந்து நலிகிற படியை-பேசுகிறாள்-

————-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

கிரியா பதம் இல்லை -நலியும் பிரகாரங்கள் -சொல்லாமல் பொருள்களை மட்டும் -நெருப்பு நெருப்பு என்று காத்துமா போலே —இங்கு கீழ் உள்ள நிதானம் கூட இல்லை

ஈருமாலோ -தவருமாலோ -மயக்குமாலோ –சிதைக்குமாலோ -என்ன வேண்டா புலி புலி -எனபது போன்று இவற்றின் பெயரைச் சொன்னாலே அச்சம் உண்டாகிறதே

அன்றிக்கே-இவற்றின் உடைய நலிவை-வாயால் சொல்லில் வாய் வக்குரிக்கும்படி யாய் -வேகும்படியாய் -இருக்கையாலே சொல்லாது ஒழிந்தாள்

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்
தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-என்றபடி

வாரான் – இங்கு அம்பு ஏற்கவும் வேண்டா-பகைவர்களும் இலர்-முகம் காட்ட அமையும் –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ-
வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ-
என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ

இப்பொழுது -இனி இருந்து -என்கையாலே இதற்கு முன்பு எல்லாம் அவன் சரக்கு அழிய ஒண்ணாது -என்று-நோக்கிக் கிடந்தமை தோற்றுகிறது-
பிறர் -சர்வேஸ்வரன் -உயிராகத் தான் நோக்கி இருக்கிறேனோ -என்பாள்–அவன் விரும்பா விட்டால் நோக்கப் போமோ –என் உயிர் -என்கிறாள்
இவற்றின் கையில் நோவு பட-எனக்கு பணி யாகவோ என்னுடைய உயிரைப் பாதுகாப்பது -என்றபடி-துஷ்கரம் க்ருதவான் ராம பிரபு -என்று திருவடி –

———-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும்
நீலப் பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

கண்களுக்கு இலக்கான பொருள்கள்-முழுதும் துன்புறுத்த புக்கவாறே-அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-பாஹ்யமான பாதகங்கள் அன்றிக்கே அதி ரமணீயமான -அவன் அவயவங்கள் ஆந்தரங்கமாக நலிய-
அகவாயிலே அவன் அழகு நினைவுக்கு வந்து-நலியா நின்றது -என்கிறாள்-மனத்தே நின்று ஈரும் -என்கையாலே கண்ணை மூடினாள் எனபது தானே போதரும்-செம்பளித்தல் -மூடுதல்

இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து-முலைகள் இளைக்க -இடையை நுடங்கும் படி -தளரும் படியாக
மார்பு -பக்தி -இடை வைராக்யம் -கண் -ஞானம் -அவனுக்கு-கலக்கும் போது எதிர்த் தலையை பேண அறிந்திலன் –தன் காதல் தீர்ந்தான் இத்தனை -என்றபடி –

ஆகம் தோய்ந்து–இக் கலவியாலே நீராகச் செய்து-இவளோடு கலந்தவன் ஆயிற்று –நீராட்டம் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -தோய்தல் –வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் -நீர்ப் பண்டமாகி உருக்கி பின்பு தோய்ந்தான் -இட்டு -அசேதனம் போலே பொகட்டு-அகலுகையே நிரூபகம் கிருஷ்ணனுக்கு –விட்டு அகல் கிருஷ்ணன் -ஸ்வரூப நிரூபக தர்மம்

தனி இளம் சிங்கம்—தனி-இவளுடைய கலவியாலே ஒப்பற்றவனாக இருந்தான்-என்று தோற்றும்படி இருந்தான் –
இளம்–கலக்க கலக்க கீழ் நோக்கிப் பிராயம் புகா நின்றான் ஆதலின்-இளமை -என்கிறது –
சிங்கம்–இவளுடைய கலவியாலே பெறாப் பெறு பெற்றானாய் மேல்-நாணித்து இருந்தான் ஆதலின் -சிங்கம் -என்கிறது –

தாமரைக் கண்ணும் செவ்வாயும் -நீலப்பபனி இரும் குழல்களும் நான்கு தோளும்பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-
அவன் கண்களுக்கு தோன்றாது ஒழிந்தால்–இவை நெஞ்சுக்கு தோன்றாது ஒழிந்தால் ஆகாதோ –தான் போகிறான்-இவற்றை வைத்துப் போக வேண்டுமோ –

தாமரைக் கண்ணும் –கலந்த போது தன் பேறு என்று தோற்றும்படியான-திருக் கண்களை உடையவன் -என்னுதல் –
பிரிவினை நினைத்து வாய் விட மாட்டாதே-ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே தோற்றும்படி நின்ற நிலை -என்னுதல்

செவ் வாயும் –பிரிவினைச் சொல்லப் புக்கு முடியச் சொல்ல மாட்டாதே-போதைச் சிவந்த திரு அதரமும்-
இவனுடைய -நிமியும் வாயும் கண்களும் -6-5-2- இருக்கிறபடி-நிமியும் வாய் -உதடு நெளிக்கிற வாய்-

மனத்தே நின்று ஈருமாலோ- மனத்திலே எப்பொழுதும் நின்று நலியா நின்றது
அணைக்கும் படி கைக்கு எட்டுதல்-நெஞ்சுக்கு எட்டாது ஒழியல்-செய்யப் பெற்றிலன் – அறிவு அழிந்து-மறந்து பிழைக்க-ஒண்ணாதபடி-செய்தான் ஆயிற்று –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-அனைவருக்கும் சாதகம் எனக்கு பாதகம் ஆவதே -பிரிந்து இருந்து -ஈடு படுக்கைக்கு ஈடான பாபங்கள் –

———

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ-அபி ரூபமான கருட வாஹனம் உடையவன் புஜித்த -பெண்மை ஆஸ்ரயமும் ஈடு படும் படி -அகவாயில் நலிகிறது ஒழிய-நேராக வந்து நின்றும் பெண்மை –ஸ்பர்சம் முதலியவற்றால் வந்து நின்றும் -வாடை -போல்வன-நினைப்பூட்டுதலால் வந்து நின்றும் —அம் பூ இது ஆலோ  -அழகிய பூ போன்ற இது-புஷபமாக நான் இருக்க-பெண்மை ஸ்த்ரீத்வம் -என்னுடைய பெண்மை யாகிற பூ –பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே-மென் மலர்ப் பள்ளி-நலிகிற பொருள்களைச்-சொல்லுகிறாள்-

வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ-சம்ச்லேஷ தசையில் பொதுவாக அனைவருக்கும் -குளிர்ந்த வாடை -இப்பொழுது விஸ்லேஷத்தில் எனக்கு மட்டும் வெவ்வாடை ஆனதே -தாய்மார் வார்த்தையைக் கேட்டு தண் வாடை என்கிறாள்-தன் அனுபவத்தால் வெவ்விய வாடை -என்கிறாள்-வாயோர் அக்னி -ஸூக தாதா -வாயுவின் பிள்ளை அன்றோ நெருப்பு –பிள்ளையை இட்டுச் சொல்லுமா போல்  வெவ்விய வாடை-

மேவு தண் மதியம் வெம் மதியமாலோ – உலகத்தார் வெம்மைக்கு அஞ்சி நிலாவிலே ஒதுங்க காண்கையாலே-தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்-அவன் நெருப்பு மயமான சந்தரன் ஆனான்-அவன் நெஞ்சு அறிந்தவன் ஆகையாலே -இச் சந்திரனும் வேறு பட்டான் –-சந்த்ரமா மநசோ ஜாத -புருஷ ஸூக்தம் படி- பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் -என்னக் கடவது அன்றோ-ஆயன் தன் மனம் கல்லானது -9-9-5-அறிந்து மதி கேடாய் இருந்தது

—————

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகுமாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

எல்லா பொருள்களும் தம்தம் தன்மைகளை நீக்கி வேறு பட்டனவாக–நெஞ்சம் துணை அன்று -துணை என்னும் தோழி மாரும் மாய்வர்-
அவ்வளவிலும் அவனுடைய திருவருள் அரிதானால்-அவனுடை யருள் பெறும் போதரிதே-தரித்து இருப்பதற்கு விரகு உண்டோ-என்கிறாள்-

என்னது என்று விரும்ப அமையும் அன்றோ-துணை இன்றிக்கே ஒழிகைக்கு-
யாமுடை நெஞ்சம் – யாமுடை ஆயன் -யாமுடை தோழி மார்-ஆ புகு மாலையும் ஆகின்றாலோ –

யாமுடை யார் உயிர் காக்குமாறு என் –இத் தனிமையில் ஆத்துமாவைத் தரித்துக் கொண்டு இருப்பதற்கு விரகு -என்-பிறர் உயிர் ஆகில் நோக்கவுமாம்–ஆதலால் யாமுடை உயிர் -என்கிறாள்

————-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அகலகில்லேன் இறையும்-என்று-நித்ய வாசம் செய்கிற பிராட்டியோடு வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான பிரமன் சிவன்-முதலானவர்களோடு வாசி அற-உடம்பு கொடுக்குமவனுடைய -சௌசீல்யம்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்-என் உயிரை ஈரா நின்றது–அச் சீலத்தை உடைய திருமேனி நித்தியமான ஆத்துமாவை-முடியா நின்றது–என்கிறாள் –காபாலி கந்தர்க்கு எளிதானது கண்டீர் எனக்கு அரிதாயிற்று-ஆயின் புறம்பே சென்றாகிலும் தரிக்கல் ஆகாதோ என்ன-காபாலி கந்தர் -மூலம் -பிரமன் என்றபடி –

அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் –பகல் அடு மாலையும் -பகலை முடித்துக் கொடு வந்து-மாலையும் தோற்றா நின்றது –நெஞ்சையும் காண்கின்றிலேன்-எம்பெருமானார் நிர்வாகம்
அன்றிக்கே-மாலையும் காண்கின்றிலேன்-நெஞ்சையும் காண்கின்றிலேன் -என்னுதல் -என்றது –ஆளவந்தார் நிர்வாகம் –
மேலே வருகிற காலத்தின் உடைய கொடுமையைப் பார்த்தவாறே-மாலையே தேட்டமாக இருக்கிறது -என்றபடி
வழியில் போகா நிற்க வழி தெரியாமல் மயங்கினால்-கையில் பொருளைக் கொண்டாகிலும் வழி காட்ட வல்லடிக்காரரை யாகிலும் கிடையாதோ -என்னுமாறு போன்றும்
ஒற்றைக் கண்ணள்- ஒற்றைக் காதள் -தொடக்கமான அரக்கியர்கள்-கையில் காட்டிக் கொடுத்து இராவணன் பேர நின்றால் போலே
ஆற்றலாம்படியான பகலை முடித்துக் கொடு வந்த மாலை நேரமானது-தேட்டமாம்படி யாய் வந்து விழுந்தது -என்றபடி –பகல் -ஜடாயு -மாலை -ராவணன் -இரவு ராக்ஷஸிகள் போல்

ஆருக்கு என் சொல்லுகேன்-மீனுக்கு தண்ணீர் வார்த்தால் போன்று நித்ய ஸூரிகளுக்கு சொல்லவோ
ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் பிரமன் முதலானவர்க்கு சொல்லவோ
விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் திரியும் சம்சாரிகட்குச் சொல்லவோ

அன்றிக்கே
ஆச்சார்யனை அடைந்து-ஸ்வரூப ஞானம் பிறந்து-துறும்பு நறுக்கலாகாது -என்று இருக்கிற செங்கோடு குட்டைகளுக்கு சொல்லவோ
செங்கோடு குட்டை -செவ்வையாக கொடுக்கிற நாழி-தாம் கொண்ட கொள்கை விடாதவர்கள்-கிருஹீதக் ராஹிகள்-
உபாய பாவத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லை -கைங்கர்யம் வேண்டாம் என்று சொல்ல வில்லை என்று உணராதவர்கள் —
யாருக்கு எதனைச் சொல்ல-சொல்லுதற்கு வார்த்தை இல்லை-கேட்கைக்கு அதிகாரிகளும் இல்லை

———–

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

மேல் கூறிய துன்புறுத்தும் பொருள்கள் -வரிசையாக எட்டு பொருள்களும்-எல்லாம்-திரண்டு வந்து கண் பாராதே நலியா நின்றன –என்கிறாள்-பரிமளம் கொண்ட அகில் புகை -யாழின் நரம்பு -பஞ்சம பண் -குளிர்ந்த சந்தனம் -அளைந்து -சஹகாரி இல்லாமல் போர் உற்ற வாடை
கவசம் பூண்டு -இவற்றை -மணத்தை கானத்தை ராகத்தை குளிர்ந்த சந்தனம் க்ரஹித்துக் கொண்டு செவ்வியான மல்லிகைப் பூ -நஞ்சு -புது மணம் முகந்து -வந்து -வீசா நிற்கும்

ஆருக்கு என் சொல்லுகேன்–நெஞ்சம் உங்களதாய்-துன்புறுத்தும் பொருள்கள் இனிய பொருள்கள் என்று அவற்றைத் தேடித் திரிகிற-உங்களுக்குச் சொல்லவோ-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்- என்கிறபடியே-அதுவும் மீளா இடத்தே புக்கதே –

காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
மேகம் போன்று சிரமத்தை போக்கும் வடிவு உடையவனாய்-அவ்வடிவைக் காட்டி என்னை தனக்கே உரியவள் ஆக்கி-எனக்கு உரிமைப் பட்டவனான கிருஷ்ணன் உடைய-
கள்வம் உண்டு-கலவிக் காலத்தில் பேசின தாழ்ந்த பேச்சுகளும்-செய்த செயல்களும்
அவற்றாலே கவரப் பட்ட ஒப்பற்றதான என் மனதானது அவன் பக்கலது-பேச்சும் செய்கையும் – நாச்சியார் திருமொழி -2-4–என்னக் கடவது அன்றோ

————

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-இரண்டு ஏவ காரங்கள் –தீம் குழலே -ஆய்ச்சியர்க்காகவே ஊதுவது –

மேலே தனித் தனியாகவும்-திரண்டும் வந்த-பாதகப் பொருள்கள்-ஒன்றுக்கு ஓன்று முற்கோலி-நலியா நின்றன-என்கிறாள்-சாந்தினில் பஞ்சமம் வைத்து-நான் முன்னே என்றவாறு -அக்காலத்தில் காட்சியால் -உண்டான இனிமை -கேட்பதிலும் இனிமை -கோபால சூடாமணி -பிரகாசிப்பிக்கும் -இதற்கே நான் முடிந்தேன் –

புன் செக்கராலோ –செக்கர் வானமும் சென்று மறையும் அளவாயிற்று -என்றது
மேல் வருகிற காலத்தின் தண்மையைப் பார்த்தவாறே-பகலைப் போன்று மாலைப் பொழுதும் தேட்டமாய் வந்து விழுந்தது-ஆளவந்தார் நிர்வாஹம் படி வியாக்யானம் இது –
எம்பெருமானார் நிர்வாஹம் -புன்மை தண்ணியமாய் -கொடிய செக்கர் வானமும் வாரா நின்றது-

அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிதுஅது -பேச்சுக்கு நிலம் இல்லாத படிக்கு ஆயிற்று கலந்தது –அப்படி கலந்து அகன்ற நம் கண்ணபிரானுடைய-கலக்கிற போதை தாழ்ந்த பேச்சுக்களும்-அவன் வருத்துவதைக் காட்டிலும் வருத்தா நின்றன

பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் –பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு-குழல் ஓசை துன்புறுத்துகிறது -என்னுதல்-இவற்றில் பஞ்சமம் என்கிற பண்ணையும் கூட்டிக் கொண்டு -என்னுதல்

குழற்கே உய்யேன் நான் –துன்புறுத்தும் மற்றைப் பொருள்களுக்கு பிழைத்து இருந்தேன் ஆகிலும்-இக் குழல் ஓசைக்கு நான் பிழைக்க மாட்டேன்-அவை எல்லாம் ஒரு படியும்-இது ஒரு படியும் ஆயிற்று நலிகிறபடி

————–

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி–முக்த ஜீவன் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் –அசித் மிஸ்ராத் விஸுக்தாத் -15 அத்யாய ஸங்க்ரஹ ஸ்லோகம் –சங்கல்ப ரூப ஞானம் -கொண்டே பார்த்து கேட்டு -கண் காது மூலம் இல்லை –பண்டே ஆயர் பெண்கள் நடுவே-இவன் குழல் ஊதுகிற போது-நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில வார்த்தைகளை பேசிக் கொண்டும்-சில செயல்களைச் செய்து கொண்டும்-பாடும் பாட்டை நினைத்து-ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –என்கிறாள் –வாக்கின் பேச்சும் கண்களின் நோக்கும்-மாறாடின படி -என்னுதல் –

அது மொழிந்து இடை இடைத் –இடை இடை -அது -மொழிந்து-
பிரிந்தேன்-ஆற்றேன்-என்றாப் போலே சொல்லுகிற இழி சொற்களை இடை இடையே சொல்லி-ஆயிற்றுப் பாடுவது-தாழ்ந்த செயல்களையும் சொற்களையும் தன் வாயாலே-சொல்ல மாட்டாமையாலே –அது -என்கிறாள் –
எம்பார் -இந்த இடம் வந்தவாறே மோர் உள்ளதனையும் சோறேயோ-தேசிகரும் கூட பாசுரம் இட்டு சொல்ல மாட்டாதே -அது-என்னா நிற்க மத்யஸ்தரான நாம் இதற்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது -என்று அருளிச் செய்தாராம் –
அன்றிக்கே –அது ஒழிந்து–என்ற பாடமான போது-அது தவிர்ந்து -என்னுதல் –அதாவது
நடு நடுவே-தாழ்ந்த சொற்களை சொல்லிப் பாடுகிற பாட்டை விட்டு -என்றபடி –
குழகன் என் தன் கோமள பிள்ளாய் –மழலை மென்னகை இடை இடை அருள வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேன் -பெருமாள் திருமொழி -7-7-

பேதுறு முகம் செய்து -நித்ய நிர்விகார தத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம்

மாயன் வாரான் –தன்னைப் பிரிந்தார் நாணம் உறும்படி-தானே இழவாளனாய் வந்து-காலைப் பிடிக்கும் ஆச்சர்யத்தை உடையவன்-வருகின்றிலன் –

————

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

மாலையும் வந்தது மாயன் வாரான்–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–வருவதாக சொன்ன காலம் வந்திருக்க-அவன் வருகின்றிலன்-துன்புறுத்துகின்ற பொருள்களின் நடுவிலே-அவனை ஒழிய தரிப்பது எங்கே –என்கிறாள் –நான் பிழைக்க என்று ஓன்று உண்டோ -முடிந்தேன் -என்றபடி –

கோல நன் நாகுகள் உகளுமாலோ-வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ-திர்யக்குகள் ஆனவை கல்வியால் வந்த உவகைக்கு போக்கு விட்டு களிப்பனவும்-குதித்து ஆடா நின்றனவும் ஆகா நின்றன

கொடியன குழல்களும் குழறுமாலோ-எல்லாரும் ஒரு சேரக் குழல்களை வாங்கி-சாம்யா பத்தி — ஆயர்களுக்கு குழல் உண்டே-வாரணம் ஆயிரம் இத்யாதி –தன்னேராயிரம் பிள்ளைகள் போலே -இங்கேயே அருளுவான் —

————

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

அவன் பக்கல் ஆசை உடையார்-இத் திருவாய் மொழியைச் சொல்லி-அவனைப் பெருங்கோள் என்கிறார்-அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே-திரு மாலை சொன்ன –அப்படிப் பட்ட -கோபிகா ஸ்த்ரீகள் கோகுலத்தில் நின்று –மாலைப் பூசல்-மாநசமாக ஆழ்வார் அங்கே சென்று அருளிச் செய்ய-அவர்கள் எல்லாரும் பட்ட துன்பத்தை இவர் ஒருவரும் பட்டார் -என்கை- -வ்யாமோஹனை அடைந்து -அனுபவிப்பார் –
கோபிமார் தனித்த தனியே -திரளாகவும் கூப்பிட்ட பாசுரங்கள் –மாலையும் இருக்கும் மாயனும் இருப்பான் -கைங்கர்யமும் கிட்டும்

இத்தால் ஆழ்வார் உடன் ஸம்ஸலேஷித்தான் -நான்கு பதிகமாக பட்ட பாடு தீர்ந்து அடுத்த திருவாயமொழி மாலை நண்ணி என்பதால்

அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு–இப்போது இது சொல்லிற்று-விரகப் பிரளயத்தின் நின்றும்-தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக-அகாராம் ஈஸ்வர விசேஷணம் –அம்மாலை -ஆலோ ஆலோ என்று கதற வைத்த வியாமோஹன்-இப்பாசுரத்தை கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –

—————-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது–இறைவனைப் பற்றுமின் -என்பது-அதனை இப் பாசுரத்தில் சுருங்க அருளிச் செய்கிறார்-

மாலை நண்ணி-சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி-சிநேகத்தின் காரியமான அன்பினைப் பொருந்தி–அடைந்து-காலை மாலை –இறைவனைப் பற்றுதற்கு கால வரை யறை இல்லை கமல மலர் இட்டு–எல்லா மலர்கட்கும் உபலஷணம் –ஆயாஸ சாத்தியமான பக்தியை தொழுது எழு என்பது இவர் அபிப்ராயத்தால் –அருளினன் -என்று பிரபத்தியை பற்றி இழிந்தவர் ஆகையாலே-தன் வாசனை தோற்றச் சொல்லுகிறார்

ஆல் -நீரும் இடமும்–தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்-ஆலின் மேலிடத்து என்னுதல்-இரண்டாவது பொருளில் -மேல் ஆல் -என்பதில் உள்ள ஆல் அசை நிலை-ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உகந்து அருளினார் –

—————

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சும் ஆசை உடையார்-காவலோடு கூடிய தேசம் என்று-அச்சம் இல்லாதவர்களாய் நாள் தோறும் தொழுது எழுமின் –என்கிறார்

——–

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே--9-10-3-

விலக்ஷண விபூதி உக்தன் -சுலபன் -ஏக கண்டமாய் —தொண்டர் -என்கையாலே எல்லாரும் ஒரே மிடறு ஆகலாம் அன்றோ -உங்கள் துயர் கெட-அநந்ய பிரயோஜனராய்-வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்-ஆராதிக்க -அருளிச் செய்கிறார்

விண்டு வாடா மலரிட்டு–அலரத் தொடங்கின அளவாய்-கழிய அலர்ந்து வாடாத பூ -என்றது-ஈஷத் விகசிதம்

திருக் கண்ணபுரத்து -அண்ட வாணன் அமரர் பெருமானையே–இங்கே இறைவனைப் பற்றும் விரோதியைப் போக்கிக் கொண்டு-பூர்ண அனுபவம் பண்ண ஒரு தேச விசேடம் தேடித் போக வேண்டா-
நித்ய ஸூரிகளும் இங்கே வந்து சீல குணத்தை அனுபவிக்கும்படி ஏற்றம் உண்டே அன்றோ இங்கு-

பிரதிமாசு அப்ரப்புத்தானாம் -ஞானம் இல்லாதார்க்கு விக்கிரகத்தில் இருக்கிறார் -என்ற இதற்கு அம் மேட்டிலும் ஏறிப் பாயா நின்றால்-தேசிகருக்கு சொல்ல வேண்டுமோ -என்று-ஆளவந்தார் அருளிச் செய்யும்படி
ப்ரதிமாசு அப்ரப்புத்தானாம்-அபி -சேர்த்து -அப்பிரபுத்திகளுக்கும் சேவை -உம்மைத் தொகை சேர்த்து ஆளவந்தார் –விப்ரர் அக்னியில் -யோகிகள் இருதயத்தில் –ஸர்வத்ர சம தர்சனம் -நால்வரையும் சொல்லும் ஸ்லோகம் -அக்நோ த்ருஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி த்ருஷ்டதி யோகிநாம் பிரதிமாசு அப்ரப்புத்தானாம் அபி ஸர்வத்ர சம தர்சனம் 

——–

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை மானானது நோக்கை -கண் அழகை – நைந்த கடைக் குறை-நோக்கி-நோக்கை உடைய—மான் நை நோக்கி-மானானது நையும்படியான நோக்கை உடையவன் -என்றது
மான் தோற்று நாணும்படி ஆயிற்று நோக்கு இருப்பது -என்றபடிஅதிசயித போக்யனான கிருஷ்ணனை நப்பின்னை பிராட்டி உடன் சேர்ந்து -ஆராதிக்க அருளிச் செய்கிறார்

தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-திருவடியாகிய -தேனையும்-செவ்விப் பூவையும்-சேர்க்கை போலே காணும் பற்றுலதல் ஆவது –

தான் நயந்த பெருமான் –அடியார்களோடு கூடி இருந்து குளிர்வதற்கு பாங்கான தேசம்
என்று அதனை விரும்பி வசிக்கிற-சர்வேஸ்வரன் ஆனவன்

—————-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்–இப்படி பக்தி யோகத்தால் அடைவதற்கு-தகுதி இல்லாதவர்களாகி தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து-அவன் செய்து அருளும் படியை-அருளிச் செய்கிறார்-மேலே சொன்ன பாசுரங்களாலும் சொன்ன பக்தி யோகம்-எல்லாருக்கும் செய்யத் தக்கது அன்று-இப்பாசுரத்தில் சொல்லுகிற பிரபத்தி எல்லாராலும் செய்யத் தக்கது(முதல் பாசுரம் மட்டும் பக்தி பிரபத்தி இரண்டுக்கும் -அடுத்த மூன்றும் பக்தி பரம் -இது பிரபத்தி பரம் )

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்-திருவடி பற்றினார்களுக்கு உபாயம் தானே என்றுமாம் –திருவடியே சரணம் ஆகும் என்றுமாம் -திருவடியே உபாயம்-தரணி யாளன்-தரணி பூமியை ரக்ஷிக்க -பூமா தேவிக்கு ஸ்வாமி

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-ஆஸ்ரிதற்கு பரம பதம் -பிரதன் ஆனவன்-தனது அன்பர்க்கு அன்பாகுமே— ஸூ விஷயத்தில் கைங்கர்ய நிஷ்டர்க்கு அபி நிவேசமே வடிவாகக் கொண்டவன்-ஞானி பிரியோ- அத்யந்த மம பிரிய -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேய-அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாதபடி-அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருத்தலின்-அன்பாகும் -என்கிறார் –

நடுவில் இவன் இருக்கும் நான்கு நாள்களும்-அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே –மரணமானால் -என்கிறார் –தனக்கு ஆற்றல் இல்லாமையால் அன்று –
இவன் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து-முடிக்கப் பெறாமையாலும் அன்று –இவனுடைய ருசியைக் கடாஷித்து நிற்கிறான் இத்தனை-என்றபடியைத் தெரிவிக்கிறது

————

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

ஸூ அனுபவ விரோதியை நிரசித்து -பரமார்த்திக உண்மையான அன்பை உடையார்க்கு பரமார்த்த பூதநாம்-நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே – தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு-தானும் அவர்கள் பக்கல் என்றும் ஒக்க-அநந்ய பிரயோஜனனாய் இருக்கும்
அன்றிக்கே-தன் பக்கல் சிநேக பாவம் உடையாரை-விட மாட்டேன் என்று இருக்குமவன் -என்னுதல் –

———–

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

அநந்ய பிரயோஜனருக்கு ஸூலபனாய்-பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான்–புறம்பே பிரயோஜனாந்தரங்களை பெற விரும்பிஅடைகின்றவர்கட்கு-
இவ் உலகில் மேலும் மேலும் ஆசையை உண்டாக்கக் கூடிய-அந்த பேறுகளை விரும்பிக் கொடுத்தவனாய் தன்னைக் கொண்டு அகலுவான் –-என்கிறார்-ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே – அநந்ய பிரயோஜனருக்கு – தன்னை மனத்தில் வைப்பவர்கட்கு-கையாளாய் இருப்பன் –

இமௌ ஸ்ம முனி சார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ-ஆஜ்ஞ்ஞாபய யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் -பால -31-4-முனி புங்கவரே-நாங்கள் உம்மை அடைந்தவர்களாய்-உமக்கு வேலையாளாய் இருக்கிறோம்-என்கிற படியே இருப்பன் –

———-

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

அவனை அடையுங்கோள்-உங்கள் துக்கத்தையும்-துக்கத்துக்கு காரணமான பிறப்பினையும்
போக்கி அருளுவான் –என்கிறார்- —பிறவி கெடுத்து ஆளும் –அந்த துன்பங்களுக்கு காரணமான பிறப்பினைப் போக்கி-அடிமை கொள்ளும் –

பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே – பரமபததில் இருக்கும் படியில் ஒன்றும் குறை இல்லாத படி-ஆயிற்று இங்கு இருப்பது–அவன் திருவடிகளில் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான-கைங்கர்யத்தைச் செய்யுங்கோள் –
அங்கு நித்ய ஸூரிகள் பணிய இருக்குமவன்-இங்கே வந்த பின்பு நீங்களும் அவன் திருவடிகளிலே பணியப் பாருங்கோள் -என்பர்- திருக் கண்ணபுரம் பரமேட்டி பாதம் பணிமின் –என்கிறார்-

————-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

பணிந்து தணிந்தேன் -அடைந்து சகல துக்கங்களையும் தீர பெற்றேன் -தனக்கு ஆனதை பர உபதேசம் செய்து அருளுகிறார்-துன்பம் கடலில் எழுந்து முன் நான்கு -இதில் ஒரு தலை துலுக்கலில் நம்பி விஸ்வஸித்து பாடுகிறார்-ஒருவருடைய உபதேசமும் இல்லாமலே-நான் முன்னம் அவனை அடைந்து- இன்பத்தினை அடைந்தவன் ஆனேன்-என்று ப்ரீதர் ஆகிறார்-

நாளும் பணியத் தணியும் பிணி-நாள் தோறும் அனுபவிக்க – முன்புள்ள பிணிகள் போகுமே பணிந்தால் தணியும் என்றால் நிர்ஹேதுகம் ஆகாதே

தணியும் பிணி-ஏதம் சாரா -பாதம் பணிய- நாளும் பிணி–பலகாலமாக ஈட்டிய வினைகள் எல்லாம்-அநாதி கால ஆர்ஜித பிணி எல்லாம்  தணியும்–பிணி -பூர்வாகம் -ஏதம் -உத்தராகம் என்றுமாம் –போய பிழையும் -புகு தறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –தததிகம உத்தர பூர்வாகயோ அசலேஷ வினாசௌ தத் வ்யபதேசாத்

வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை-காரணம் து த்யேய– காரணமாய் உள்ள பொருள் த்யானிக்கத் தக்கது -என்கிறபடியே-உலக காரணன் அன்றோ த்யானிக்கத் தக்கவன்-

வேதார்த்தம் —வேத சாரம் -சார தாரம் -சார தம காயத்ரி முன்னோதிய- வேதார்த்தம் திருக் கண்ண புரம்-சம்பந்தம் -திருமந்த்ரார்த்தம் -அருளியதால் –
திரு மங்கை ஆழ்வாரைப் போல்வாரை -வேத நாவர் -என்கிறது –விரும்புகையாவது
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியேனோ -பெரிய திருமொழி –6-9-3–என்கை –

ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே –தாய் மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லையே -என்னும் இடம் உறுதி –

—————

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

ப்ரீதியின் மிகுதியாலே-மேல் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி-
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் தகுதி இல்லாதவர்கள்–விச்வாஸம்-வேணுமே -சங்கா த்ரயம்-பல்கு-உயர்ந்த பலன் -பாப குவியல் மூன்றும் -உண்டே –திருக் கண்ணபுரம் என்ற வார்த்தையினைச் சொல்லவே-எல்லா துன்பங்களும் போம்யுக்தி மாத்திரமே அமையும்–என்கிறார் –திரு மார்பினன்--திருக் கண்ண புர நாயகியும் இருக்க -என்ன குறை-அனுபவ அலாப துக்கம் இல்லை -அவிச்சின்ன அனுபவம் கிட்டும்

எனக்கேல் இனி என் குறை –-இனி எனக்கு என்ன குறை உண்டு -என்றது –பகவானை அனுபவிப்பதற்கு விரோதியான துன்பங்கள் எல்லாம் போன பின்பு நான் அனுபவிப்பதற்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்தது இல்லையே -என்றபடி –

———-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

உங்களுடைய துன்பங்கள் எல்லாம்-வாசனையோடு போக வேண்டி இருக்கில்-
இத் திருவாய் மொழியில்-ப்ரீதி முன்னாகச் சொல்லிக் கொண்டு-அவன் திருவடியைப் பற்றுங்கோள்-என்கிறார்- யுக்தி கூட சொல்ல முடியாதவர்கள் -இந்த திருவாய் மொழி சொல்ல அமையும் -இது நான்காவது நிலை —

பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே-மூன்று வினைச் சொற்கள் -ப்ரீதியால் பாடியும் ஆடியும் -சுலபனான அவன் திருவடிகளை வணங்கி அனுபவிக்க -பகவத் அனுபவம் பண்ணவே ஸமஸ்த துரிதங்களும் போகுமே -ஸூசுகம் கர்த்தவ்யம் –

ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே-திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை-பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –ப்ரீதி முன்னாகப் பாடி-இருந்த இடத்தில் இராதே ஆடி-ப்ரீதியினால் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு- அவன் திருவடிகளில் விளுங்கோள்- இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற-வேப்பங்குடி நீர்-
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading