8-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-ப்ரவேஸம்-
முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் -அந்த களை அறுக்கப் பட்ட கைங்கர்யம் ஆனது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தல் விரோதிகளைப் போக்குமவனான சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புகுந்தார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவு பட்டார் –
இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தகத பட நியாயம் போலே நம்மை விடாமலே தொடருகிறது –
நமது ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அறாத படியாலே என்று பார்த்து
அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார் இந்த எட்டாம் பத்தில்
சர்வ சக்தன் -ஏழாம் பத்தில்
சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்
ஆபத் சஹத்வம் ஆர்த்தி ஹரத்வங்கள் -9/10-பத்தும் பத்தாக்கி –
ஞப்தி பல முக்தி பல வ்ருத்தி -முதல் மூன்றும்
விரக்தி -நாலாம் பத்தில்
பக்தி ராகம் கழிய மிக்கு -பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல்
பிரபத்தி ஆறாம் பத்தில்
சக்தி வெளியிட்டு ஏழாம் பத்தில்
பிராப்தி -எட்டாம் பத்தில்
பூர்த்தி -ஒன்பதாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தில்
கிருதஞ்ஞாதா பலம் பிரதி க்ருதமானம் உணர்ந்து – -நின்ற உன்னை உணர்ந்தேன் –
தோள்களை ஆரத் தழுவி தாள்களை –பேர் உதவிக்கு கைம்மாறா –
கண்கள் சிவந்து –நின்ற உன்னை உணர்ந்தேன்-8-8- -அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் உள்ளான்-சேஷம் பிரதானம்
பிராட்டிமாரோடே நித்ய பரிகரம் சேவிக்க
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வனந்த ஆழ்வான் மேலே சர்வேஸ்வரன் நாம் பாடின திருவாய்மொழி
கேட்க்கைக்காக திரு வாறன் விளையிலே எழுந்து அருளி இருந்தான்
நாம் அங்கே சென்று திருவாய்மொழி கேட்ப்பித்து அனுகூலமான கைங்கர்யங்களையும்
செய்து அனுபவிப்போம் என்று பாரித்தார் –
அது எண்ணம் மாத்ரமேயாய் நினைத்தபடி தலைக்கட்ட பெற்றது இல்லை –
1-பிராட்டிமார் -எழில் மலர் மாதரும் -அருகே எழுந்து அருளி இருக்க-தேவிமார் ஆவார் திருமகள் பூமி
2-நித்ய ஸூரிகள் -யாவரும் வந்து வணங்கும் -உளராய் இருக்க-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
3-நினைத்த படி கார்யம் செய்து தலைக் கட்டுக்கைக்கு தகுதியான ஐஸ்வர்யம் குறைவற்று இருக்க-மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
4-அடியார்கள் உகந்தனவற்றை தனக்கு திரு மேனியாக கொண்டு உதவும் தன்மையனாய் இருக்க-வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-
5-நான் ருசியில் குறைவற்றவனாய் இருக்க -காணுமாறு அருளாய் –
நினைத்த கார்யம் பெறாமல் ஒழிவோமே என்று வெறுத்தார் –
இவர் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தமக்கு தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டு ஸ்வ பாவங்களை -தன்மைகளை –
அவை –
1-அடியார்களுக்கு பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பும் –உமர் உகந்து உகந்த உருவம் –
2-தனக்கு வேறு பட்ட எல்லா பொருள்களும் தனக்கு பிரகாரமாய்–தான் பிரகாரியாய் –
இவற்றுக்கு வந்த வ்யசனம் தனக்கு வந்ததாக நினைக்கும் சம்பந்தமும்
(இறந்ததும் நீயே -இத்யாதி -பூத பவ்ய பவிஷ்ய பிரபு)
வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா 2-40-
அவை இரண்டும் தனக்கு கார்யகரமாக கண்டிலர்
நான் ஒருவன் தோன்றி சர்வேஸ்வரனுக்கு இவையும் பொய்யாக புகுகின்றனவோ -என்று ஐயம் கொண்டார்
குண ஞானத்தாலே ஜீவிக்குமவர் குணங்களில் –அதி சங்கை -ஐயம் கொண்டால் ஜீவிக்க மாட்டாரே
இவர் தம்மை நாம் இழக்க ஒண்ணாது
இவரை சமாதானம் செய்யும் விரகு ஏதோ -என்று பார்த்து
வாரீர் -நீர் கண்டது எல்லாவற்றிலும் –அதி சங்கை -ஐயம் கொள்கிறது என்
நாம் உமக்கு ஒன்றும் செய்திலமோ
இவ்வளவாக உதவிய நாம் மேலே உள்ளனவற்றையும் செய்வோம் காண்
நீர் இங்கனே ஐயம் கொள்ள வேண்டா என்று
நம்பத் தக்கவனாக இருக்கை முதலான தன்னுடைய கல்யாண குணங்களையும் -பெரிய அப்பனை -பாசுரம்
தான் இவ்வளவாக செய்த உபகாரங்களையும் காட்டி -தாள்களே எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவி –
இவருடைய ஐயத்தை தீர்த்து சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்தவராய்
அதனை அனுசந்தித்து – இனிதர் ஆகிறார்
ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13-
ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ
அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –
இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது-
எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –
இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
———
8-2-நங்கள் வரி வளை யாயங்களோ-ப்ரவேஸம்-
நங்கள் வரி வளை–பிரவேசம்
மேல் திருவாய்மொழி பிராபகத்தில் நோக்கு -இத் திருவாய்மொழி பிராப்யத்திலே நோக்காய் இருக்கிறது –
மேலே அவன் குணங்களிலும் ஸ்வரூபத்திலும் ஐயம் கொண்டு தெளிந்து
வணங்குமாறு அறியேன் -என்று தம் தலையிலே ஒரு சாதனத்தை செய்வதற்கு உரிய தகுதி இல்லாமையை தெரிவித்து
யானும் நீ தானே யாவதோ மெய்யே -என்று தம் பாரத்தை அவன் பக்கலிலே வைத்தமையைச் சொல்லி
இப்படி பிராசங்கிகமாக-அவனே பிராபகன் என்னும் இடத்தை அறுதி இட்டார் –
அவனே பிராபகனாம் இடத்தில் பேற்றுக்கு கால தாமதத்துக்கு–காரணம் இல்லையாய் இருக்க –
அவன் வந்து முகம் காட்டாது ஒழிதற்கு காரணம் உண்டாக வேண்டும் என்று பார்த்தார் –
அதில் அவன் பக்கல் பார்க்கலாவது ஒன்றும் இல்லை-இதுக்கடி நம் பக்கலிலே ஆக வேண்டும் என்று பார்த்தார்
என்னுடைய பாபமே சொல்ல முடியாதபடி மிகுதியும் இருக்கிறது -இதில் சந்தேகம் இல்லை -என்றாளே அன்றோ பிராட்டி –
மமைவ துஷ் க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந சம்சய-சமர்தாவபி தௌ யன்மாம் நாவே ஷேதே பரந்தபௌ-சுந்தர -38-48
இவரும் அப்படியே பல நாள் அலைந்து திரிந்து–கண்டவை எல்லாவற்றிலும் ருசி பண்ணிப் போந்தோம்-
நம்முடைய முன்னைய செயல்களையும் நமக்கு இப்போது உள்ள அளவையும்
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரன்-அறியாமை அல்லை –
பூர்வ ஸூஹ்ருதம் -நாமும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாதே கிடப்பது ஈஸ்வரன் அபிப்ராயத்தால்
மடி மாங்காய் இட்டு யாதிருச்சிகம்-போலே –
நாம் அறியாது இருக்க–அவன் அறிய — அவன் பக்கல் ருசியிலே நமக்கு குறை உண்டாக வேண்டும்-என்று பார்த்து
அது உண்டாகவுமம் இல்லையாகவுமாம் –
புறம்பு உண்டானவற்றில் ருசி இல்லை என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தில் படுத்துவோம் -என்று பார்த்து –
பிராப்யத்துக்கு தடையாக உள்ளவற்றிலும் -கிளி முதலானவை —
பிராபகத்துக்கு தடையாக உள்ளவர்கள் இடத்திலும் -தாயார் முதலானோர்–
பிராப்ய பிரதானம் தானே இது —
பிராபக விரோதித்வம் -தத் சிசுரூஷைகளால் பலன் கிட்டும் -அதனால் தாயார் பிராபக விரோதி என்றவாறு
தமக்கு ருசி இல்லாமையை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
சர்வேஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி–அவன் தானே வரக் கண்டு இருக்கை அன்றிக்கே-
அபி சாரிகையாய் –அபி நிவேசத்துடன் -அவன் இருந்த தேசத்துக்கு ஏறப் போவதாக ஒருப்பட-
இதனை நினைத்த தோழிமார் தொடக்கமானார்–உனக்கு இது ஆகாது காண் -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க-
அவர்களைக் குறித்து
தோழிமார் தொடக்க மானவர்களிலும்–மற்றும் உள்ளவர்களிலும்–நசை இல்லாமையை அவர்களுக்கு அறிவிக்க பாசுரத்தாலே-
தமக்கு நசை இல்லாமையை அவன் திரு உள்ளத்திலே படுத்துகிறார் –
இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
8-3-அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-ப்ரவேஸம்-
அங்கும் இங்கும் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே பத்தாம் பாசுரத்தில்
ஒரு கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று வடிவு அழகை அனுசந்தித்தவாறே-
தாம் பட்ட கிலேசத்தை மறந்து -சிலர் விரும்பியதுவே காரணமாக-இவ் வடிவோடே சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து உலாவா நிற்பன் –
பகைவர்களும் -நடுநிலையரும்-பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களாயும்-
இவனுக்கு பரிவுடையார் ஒருவரும் இன்றக்கே இருக்கிற சம்சாரத்திலே-
அடியார்கள் விரும்பினவற்றைத் தருவதற்காக சம்சாரிகள் இனத்தனனாய்-
சிலருக்கு பரதந்தரனாயும்-
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்கு கோயில்களிலும் வீடுகளிலும் அண்மையினில் இருப்பவனாயும்-
இருந்து கொண்டு இருக்கிற இவனுடைய சௌகுமார்யம் அறிந்து பரியக் கூடியவர் ஒருவரும் இலர்-
நானும் உதவப் பெறுகின்றிலேன் என்று அவன் தனிமைக்கு–வெறுத்து அஞ்சினாராக
நமக்கு பரிவர் இலர் -என்று அஞ்ச வேண்டா
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் -கலக்க மில்லா நல் தவத்தர்-கரை கண்டோர் -ஆகிய இவர்கள்
நம் மேல் பரிகையே யாத்ரையாக இருக்குமவர்கள் அல்லரோ –
அன்றியும் நமக்குத் தான் வேறே சிலர் பரிய வேண்டி இருந்ததோ என்று சர்வேஸ்வரன்-
தன் வரம்பில் ஆற்றல் உடைமையைக் காட்டி-மா கடல் தன்னை கடைந்ததைக் -காட்டி அருள சமாதானம் செய்ய-
சமாதானம் அடைந்தவராய் உவகையர் ஆகிறார் – –
அதுக்கு மேலே பரியாமல் போனால் சேஷத்வம் போகுமே என்ற கவலை பட்டார் –
அன்றிக்கே –
சர்வேஸ்வரன் மேல் பரிகைக்கு தமக்கு கூட்டு ஆவார் இல்லை என்று தம் தனிமைக்கு-வெறுக்கிறார் என்றும் சொல்வார்கள்
நித்ய ஸூரிகள் பகவத் விஷய அனுபவத்தில் நோக்கு உள்ளவர்கள்-
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவர்கள் –
பிரமன் சிவன் முதலானவர்கள் தங்களுக்காக–
நீள் நகர் நீள் எரித்து அருளாய் -திரு விருத்தம் -92–என்று அவனை அம்புக்கு இலக்காக்குதல் –
ஏவிக் கார்யம் செய்து கொள்ளுதல் செய்பவர்கள் –
ஆகையால் பரிகைக்கு தமக்கு ஒரு துணை இல்லை என்று தன் தனிமைக்கு வெறுக்கிறார் -என்றபடி
சேஷமாக உள்ள இவ் வாத்ம வஸ்துவுக்கு-சேஷியே ரட்ஷகன்-என்னும் வெளிச் சிறப்பு –அறிவுக்கு முதல் அடி –
சேஷ வஸ்து ஆகில் சேஷிக்கு அதிசயத்தை விளைத்து தன் ஸ்வரூபம் பெறுமது ஆகையாலே
அவன் காப்பாற்றப்படுமவன் நாம் காப்பாற்றுமவர் என்னும் அளவும் செல்ல அறிகை -ஸ்வரூபத்தை உள்ளபடி உணருகையாவது-
அர்த்திக்கும் அளவும் ஒழிய பரியத் தேடுவது என் –பிரார்த்தனைக்கு மட்டும் இல்லையே அவன் -மங்களா சாசனமே ஸ்வரூபம் —
இத் திருவாய்மொழி நம் ஆழ்வார் உடைய திருப் பல்லாண்டு என்று அருளிச் செய்வர்-
வீற்று இருந்த போற்றி -சப்தத்தால் அங்கு திருப் பல்லாண்டு –
மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –
————
8-4-வார்கடா வருவி யானை மா மலையின்மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-ப்ரவேஸம்-
வார் கடா அருவி -பிரவேசம்
சர்வேஸ்வரன் சம்சாரிகள் உடைய விருப்பையே பற்றுக் கோடாகக் கொண்டு
சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தாங்கள் தாங்கள் விரும்பினவற்றை பெறுமதற்கு கிட்டுமது ஒழிய
இவன் வாசி அறிந்து பரியக் கூடிய சம்சாரிகள் இலர் –
என் புகுகிறதோ -என்று அஞ்சின இவர்க்கு அச்சம் தீரும்படி நமக்கு பரிவர் உளர் –
ஒருவர் பரிய வேண்டாதபடியான மிடுக்கும் நமக்கு உண்டு –
என்று தன் படிகளைக் காட்டி சமாதானம் செய்ய-சமாதானத்தை அடைந்தவராய் நின்றார் மேல் –
இத் திருவாய்மொழியில் –
இவர் ஆகிறார் காதலையே இயல்பாக உடையவராய் இருப்பர்-
காதல் மையல் ஏறி கலங்கி-முத்தரும் நித்தியரும் இங்கு இலரே-
சனகன் முதலான முமுஷுக்கள் -நல்ல தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விட மாட்டார்கள்-
கடல் கடைந்தது தெய்வப் பிறப்பில் அன்றோ -என்று கலங்குவர்-
இன்னம் இவருக்கு இது மறுவல் இடக்கூடும் என்று பார்த்து–மறுவல் இடாதபடி தன்னுடைய சூரத்தன்மை-
வீரத் தன்மை முதலான குணங்களையும் -சீர்கொள் சிற்றாயன்-பாசுரத்தில் –
படைத்தல் முதலான ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் -படைத்து அளித்து அழிக்கும் –
எதிரிட்ட பகைவர்களை கூட்டத்தோடு வேரோடே வாங்கிப் பொகட வல்ல ஆற்றலையும் காட்டிக் கொடுத்து -கஞ்சனைத் தகர்த்த –
அதுக்கு மேலே
மேம்பட்ட ஞானத்தையும் சக்தியும் உடையவர்களாய்-தனக்கு பரிவராய் இருப்பர் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் -மனக்கொள் சீர் மூவாயிரவர் –
மூவாயிரம் பிராமணர் உளர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு கிருதார்த்தராய்
அவன் வடிவு அழகிலும்-திருச் செய்ய கமலக் கண்ணனும் –நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இராகவனைச் சரணம் அடைந்தவன் ஆகிறேன் -என்று விழுந்த போது
சோஹம் பருஷித தேன தாசவச்ச அவமானித-த்யக்த்வா புத்ராம்ச ஸதாராம்ச ராகவம் சரணம் கத -யுத்த -17-14
மகா ராஜர் பெருமாள் பக்கலில் பிரேமத்தால் கலங்கி துணுக்கு என்று
இவன் கூறிய சொல் பெருமாள் திருச் செவியில் படுமாகில் சாலத் தப்பாம் -என்று
நாயந்தே
ராவணனுடைய தம்பி-ராஷச சாதி–அவன் புகுரக் கடவன் அல்லன் -என்ன
இவர் நம் பக்கல் பரிவாலே சொல்லுகிற வார்த்தை நம் மிடுக்கைக் காட்டவே தெளிவர் என்று பார்த்து –
பிசாசான் தானாவான் யஷான் ப்ருதிவ்யாம் ஸ ஏவ ராஷசான்
அங்குள் அக்ரேன தான் ஹன்யம் இச்சன் ஹரி கணேஸ்வர -யுத்த -18-23
வானரக் கூட்டத்துக்கு அரசனான சுக்ரீவர்
பிசாசர்களாயும் அசுரர்களையும் யஷர்களாயும் பூமியில் இருக்கிற இராக்கதர்களை
விரல் நுனியாலே விரும்பினவனாய்க் கொல்லுவேன் -என்பன போன்ற வார்த்தைகளால்
தன மிடுக்கைக் காட்டக் கண்டு அவர் அச்சம் தீர்ந்து
கிம் அத்ரசித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹா-யத் த்வம் ஆர்யம் பிரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித -18-36-
தேவரீர் கூறிய வார்த்தையில் என்ன ஆச்சர்யம் -என்று இனியர் ஆனால் போலேயும்
மல் போரில்
பூமிஸ் தஸ்ய ஸ ராமஸ்ய ரதஸ் தஸ்ய ஸ ராஷச-ந சமம் யுத்தம் இத்யாஹூ தேவ கந்தர்வ தானவ -யுத்த 103-5-
தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும் தரையில் இருக்கிற பெருமாளுக்கும்
தேரின் மீதே இருக்கும் அரக்கனுக்கும் நடக்கும் இந்த போரானது ஒத்தது அன்று-என்று கூறினார்கள் -என்றபடியே –
கூறிய பக்கத்தில் உள்ளவர்கள் உடைய அச்சத்தை அவர்கள் முன்னிலையிலே-
மல்லர்களை அழியச் செய்து தீர்த்து அருளினாப் போலேயும்
தம்முடைய அச்சத்தை போக்கி அருள–அதனால் கிருத்தாரத்தராய்-
நம்முடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்-எல்லாம் இவன் அல்லது இல்லை -என்று ப்ரீதராய்
முன்பு அழகினைக் கண்டு பரிவாலே அஞ்சினவர்
அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து கிருத்தார்தராய்த் தலைக் கட்டுகிறார்-
செங்கணாஞ்சேரி -ஆரம் உளா -ஆறு திவ்ய தேசங்கள் சேர்ந்த இடம் -நவ திருப்பதிகள் சேர்ந்த திரு நகரி போல் -ஸப்த ரிஷிகளுக்கு சேவை திருவாழ் மார்பன்
இமையவர் அப்பன் -தர்ம புத்ரன் –புனர் நிர்வாணம் செய்த திவ்யதேசம் சிற்றாறு –
மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -விது ரஸ்ய மஹா மதி —
ஸுர்ய வீர்ய பராக்ரமங்கள் -குணவான் -வீர்யவான் -அடுத்து -பெருமாள் குணங்கள்
எதிரிகள் சேனை கண்டு கலங்காமல் வீரன் –
உள்ளே புகுந்து கலக்குபவன் – ஸூரன்-
தனக்கு விகாரம் இல்லாமல் கலக்குபவன் பராக்ரமன் –
நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-
—————
8-5-மாயக் கூத்தா வாமனா-ப்ரவேஸம்-
மாயக் கூத்தா பிரவேசம் –
மேல் இரண்டு திருவாய் மொழிகளிலுமாக
பகவான் ஆகிய பரம்பொருள் -பகவத் தத்வம் -பிறராலே அழியப் புகுகிறது -என்று வெறுத்தார் –
இங்கு ஓர் பரிவர் இல்லையே என்று அஞ்சி -8-3-கம்சாதிகளுக்கு அஞ்சி -8-4- –
இதில் தம்முடைய-ஆர்த்த நாதம்- துயர ஒலியாலே அவனை அழிக்கப் பார்க்கிறார் –
மேல் திருவாய் மொழியில் அவனுக்கு பரிவர் உளர் என்று பயமும் தீர்ந்து-வடிவு அழகினை அனுபவித்தாராய் நின்றார் –
அவ் வழகு நெஞ்சிலே -திகழ என் சிந்தையுள் இருந்தான் -8-4-3-என்றபடி ஊற்றிருந்து–
பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை -புறக் காட்சியிலே விருப்பம் பிறந்து –அது பெறாமையாலே
மேலே பட்ட கிலேசங்கள் எல்லாம் ஒன்றும் அல்ல-வாளேறு காண தேளேறு கழியுமா போலே அவை அஸத் சமம் என்னும் படி –
இதற்கு அது ஒரு கலை மாத்ரம் -என்னும்படி நொந்து-
காட்டுத் தீ கதுவினாரைப் போலே தாபத்தை உடையராய்
தம்மில் காட்டிலும்-கண்ணும் வாயும் துவர்ந்து – விடாய்த்த உறுப்புகளை உடையராய் –
என் விடாய் எல்லாம் தீரும்படி திவ்ய உறுப்புகளோடு வர வேண்டும் -பவள வாயும் நாலு தோளும்
அழகிய திரு முடியோடு வர வேண்டும் -முடி சேர் சென்னி –
மேகம் போலே வர வேண்டும் -தூ நீர் முகில் –
அழகிய வடிவோடு வர வேண்டும் -கொண்டல் வண்ணா-
உதய காலத்தில் சூர்யனைப் போலே பெரிய புகரோடே வர வேண்டும் -கரு நாயிறு உதிக்கும்
இள நாயிறு இரண்டு போல் –அபூத் இல் பொருள் உவமை
என்றாப் போலே கூப்பிட்டு–
பின்னையும் அவன் வந்து முகம் காட்டாமையாலே –
எங்கே காண்கேனே –
நாம் இந்த கிலேசத்தோடே முடிந்து போம் இத்தனை ஆகாதே -என்று இழவோடே தலைக் கட்டுகிறது-
அஞ்சாம் திருவாய் மொழியிலே -கீழ்
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையிலே -திருச் செய்ய கமலக் கண்ணும் -என்று தொடங்கி
திவ்ய அவயவ சோபை தொடக்கமானவற்றை ப்ரத்யக்ஷ சாமானாகாரமாம் படி அந்தரங்கமாக அனுபவித்து ஹ்ருஷ்டரானவர்
அவ்வடிவு அழகோடு பாஹ்ய சம்ஸ்லேஷம் பண்ண வேணும் என்று அபி சந்தி பண்ணிக் கிட்டாமையாலே ஆர்த்தராய் அவனுடைய
அநு பாவ்யமான ஆபி ரூப்யாதிசயத்தையும்
ஆர்த்தி ஹராமான மயிர் முடியையும்
உதார குண வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித உபகாரார்த்தமான அர்ணவ ஸாயித்த்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
ஆகர்ஷக ஸ்வபாவ யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஏக ஆஸ்ரிதனையே அநேக வித கிஞ்சித்காரம் கொள்ளும்படியையும்
ஆஸ்ரித ஸூலபனாய் வைத்து அறிய வரியனான நிலையையும்
அனுசந்தித்து ஏவம் வித ஸ்வ பாவனானவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே அத்யந்தம் ஆர்த்தராய்
கிலேசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
இப்படி பிராவண்யத்தை ஈஸ்வரன் தன் பக்கலிலே களிப்பித்தது அனுபவ பிரதிபந்தகத்தைக் கழிக்கையில் யுண்டான கணிசம் என்று கருத்து –
——
8-6–எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ-ப்ரவேஸம்-
எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-
மாயக் கூத்தா என்கிற திருவாய் மொழியிலே-இவருக்கு ஓடின விடாய்க்கு உதவப் பெற்றிலோம்-
என்னுமதனாலே தபிக்கக் பட்டவனாய் -ஆகுலத்தை உடையவனாய் -பிற்பாட்டுக்கு
உங்களுக்கு வருகையினாலே நான் மிக்க நாணத்தை அடைந்தேன் -என்றபடி நாணி
ப்ரசீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷோ ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்த்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
இனி நாம் கடுக முகம் காட்டில் பிரீதியாலே உடைகுலைப் படுவர்-ப்ரீதியைப் பொறுப்பித்து உளர் ஆக்கி-
பரிமாற-வேண்டும் -என்று நாளை வதுவை -நாச்சியார் திருமொழி –சாத்மிப்பித்து-
பதினான்கு ஆண்டு பிரிவாலே நொந்த ஸ்ரீ பரத ஆழ்வானைத் தரிப்பித்து-
முகம் காட்டுகைக்காக திருவடியைப் போக விட்டு ஸ்ரீ பரத்வாஜ பகவான் ஆஸ்ரமத்தில் இருந்தாப் போலேயும் –
பாண்டவர்களுக்காக தூது போகிற போது அன்பினால் பரவசப் பட்டிருக்கிற ஸ்ரீ விதுர ஆழ்வான்-
முதலாயினோர்கள் பிரீதியைக் குறைத்து முகம் காட்டுகைக்காக
குசத் ஸ்தலத்திலே தங்கி உள்ளான் -அவன் காலையிலே இங்கு வருவான் -என்கிறபடியே-
உபப்லாவ்யாத் இஹ சத்த உபயாதோ ஜனார்த்தன-குசஸ் ச்தலே நிவசதி ச பிராதா இஹ ஏஷ்யதி -உத்தியோக பர்வம் -86-1-
குசஸ் ஸ்தலத்தில் விட்டுக் கொண்டு இருந்து பிற்றை நாள் அஸ்தினாபுரத்துக்கு-எழுந்தருளினாப் போலேயும்-
தூது போனதே ஸ்ரீ விதுர ஆழ்வானுக்காக ஆனால் போலே -அன்றோ
எண்ணாயிரத்து எச்சான் -வீட்டுக்கு போகாமல் பருத்திக்கு கொல்லை அம்மையார் திரு மாளிகைக்கு போனார் ஸ்வாமி –
தம்மோடு கலவியிலே நோக்குள்ளவனான சர்வேஸ்வரன்-
தம்முடைய ப்ரீதியைப் பொறுப்பித்து தம்மோடு கலக்கைக்காக-
திருக் கடித்தானத்திலே எழுந்தருளி இருந்து தம் பக்கல் செய்கிற வ்யாமோகத்தை இனியராய்-
அதனைப் பேசி அனுபவிக்கிறார் –
மேல் திருவாய்மொழியில் துக்கத்து காரணமான நினைவு தானே இப்போது-உஜ்ஜீவனம் ஆம்படி செய்தான்-
செறுவாரும் நட்பாகுவார் அன்றோ செங்கோன் அருள் பெற்றவாறே-திருவிருத்தம் -27-
38 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் நம்மாழ்வார் –
12 -மலையாள திவ்ய தேசங்கள் -திரு வித்துவக் கூடு -குலசேகர பெருமாள் -மட்டும் மங்களா சாசனம் –
சாத்ய ஹ்ருதி ஸ்த்தானாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்தா கந்தம் தாயப் பதியிலே –
ஸ்ரீ அற்புத நாராயணன் – ஸ்ரீ கற்பக வல்லி தாயார் –
திருக் கொடித்தானம் -சிதைவு
பரிமளம் கொண்ட ஸ்தானம் -ஆழ்வார் திரு உள்ளம் ஆத்ம குண பூர்த்தியால் பரிமளம் –
இங்கே தவம் புரிந்தது ஆழ்வார் திரு உள்ளம் பெற்றான் –
தாயப்பதி விசேஷ விசேஷண அசாதாரண க்ஷேத்ரம் இது –
அற்புதன் நாராயணன் -ஆழ்வார் திரு உள்ளம் புக தபஸ் -இதுவே அத்புதம் தானே –
ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி அனுபவ அபி நிவேசத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்ட இவ் வாழ்வாருடைய
ஆர்த்தி தீருகைக்காக இவருடைய சகல விரோதிகளை போக்கி ஸம்ஸ்லேஷிப்போம் என்று ஈஸ்வரன்
திருக் கடித்தானத்திலே ஆசன்னமாக வந்து ஸந்நிஹிதனான படியை பிரகாசிப்பிக்க அவனுடைய
ஆஸக்தி நிதானமான சேஷித்வத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தகமான சாமர்த்யத்தையும்
பராக்ரம ஸைக்ர்யத்தால் வந்த வீர ஸ்ரீ யோகத்தையும்
ஆந்த்ர விரோதி நிவர்த்தகமான அந்த ப்ரவேசத்தையும்
ப்ரத்யாசக்திக்கு அடியான ப்ராப்ய தேச வர்த்தித்தையும்
அவனிலும் அவன் தேசம் விரோதி நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
தேச ஸ்ம்ருதி மாத்திரமே துக்க நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேசத்தினுடைய அசாதாரண்யத்தையும்
அர்ச்சாந்தர ஸ்த் தலத்திலும் ஸந்நிஹிதன் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேச ஸ்த்திதி அந்த ப்ரவேச அர்த்தம் என்னும் இடத்தையும்
அனுசந்தித்து -நெஞ்சிலே வந்து புகுந்து தம்முடைய விரோதியைப் போக்கி அனுபவிப்பதாக அத்யா சன்னனான
அவனுடைய அபி நிவேசத்தைக் கண்டு தமக்குப் பிறந்த ஹர்ஷத்தை அருளிச் செய்கிறார் –
———
8-7-இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் -ப்ரவேஸம் –
கீழ் அடைய இத் திருவாய் மொழியில் பேற்றுக்கு கிருஷி செய்தபடி –மேல் இப் பேற்றுக்கு வேலியாய் இருக்கிறது-மேம் பொருள் போல் ரத்னம்
இத் திருவாய்மொழியில் செய்கிறது என் என்னில் –
தாம் அனாதிகாலம் புத்தி பூர்வகமாக செய்து போந்த பாவங்கள் முழுதுதினையும் மறந்து-
தம்மாட்டு பத்தி பிறந்த பின்பு-
அறியாமலே செய்து போந்த பாவங்களை காணா கண்ணிட்டு-
இவர் தம்முடைய பேற்றுக்கு அவன் தானே முயற்சி செய்து-இவருக்கு பிறந்த விடாய் தீரும்படி கலந்து
இது தான் இவருக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கிறபடியை -நினைத்து
தானே அர்த்தியாய் விரும்பினவனாய்-தன் பேறாக வந்து கலந்தவனை-
நாம் இரப்பாளராகக் கூப்பிட்ட இடம்-என் செய்தோம் ஆனோம் என்று நாணம் கொண்டு-
ஒரு சம்சாரி சேதனன் பக்கல் சர்வேஸ்வரன் செய்யும் அங்கீகாரம் இருக்கும்படியே இது -என்று வியப்பு அடைந்தவர் ஆயினார்-
அங்கனம் வியப்பு அடைந்தவராய்-பகவத் அங்கீ காரத்தால் பெற்ற பேற்றுக்கு த்ருஷ்டாந்தம் –
இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்) ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலேயும்-
இராம குணங்கள் நடையாடாத அசோக வனத்திலே திருவடி சென்று சேர்ந்து கேட்ட போதே-
இனிமையான வார்த்தையை வைதேகிக்கு சொன்னார் -என்றபடியே-
ஏவம் பஹூவிதம் சிந்தாம் சிந்தயித்வா மகாகபி சம்சரவே மதுர வாக்கியம் வைதேஹ்யா வ்யாஜகாரா ஹா -சுந்தர -31-1-
பிராட்டி உள்ளாம்படி இராம நாம சங்கீர்தனத்தை செய்ய –இந்நிலத்தில் இது நடப்பது ஓன்று அன்று –
இது மனத்தின் விகாரத்தால் வந்த மயக்கமோ அன்று
காற்றின் செயலால் வந்த மயக்கமோ – அன்று
இது பிரிந்தாருக்கு வந்த மயக்கமோ – அன்று
அனைவருக்கும் வரும் கானல் நீர் போன்ற மயக்கமோ என்று பல படிகளால் ஐயம் கொண்டு
முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்-
இது கேட்டு நாம் வேறுபடுகிற தன்மையும் உண்டு – ஆன பின்பு இது மெய்யாம் இத்தனை -என்று-
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-தெளிந்து ஹ்ருஷ்டை யானால் ஆனால் போலேயும் –
கிம் து ஸ்யாத் சித்த மோஹ அயம் பவேத் வாத்கதி து இயம் உன்மாதஜ விகாரோவா ஸ்யாத் இயம் ம்ருகத்ருஷ்ணினா -சுந்தர -34-25-
ஆழ்வார் சங்கித்து (மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-)அங்கன் அல்ல மெய் தான் ப்ரீதராய்(தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-)
அத்வேஷம் பிறப்பித்து -த்வேஷம் இல்லாமை முதல் படி வெறுப்பு இல்லாமை
ஆவி முக்கியம் உண்டாக்கி –
தன்னால் அல்லாது செல்லாமையை பிறப்பித்து
மேன்மை பாராமல் தாழ நின்று கலந்து
தாழ நின்று பரிமாறும் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -ஹ்ருஷ்டர் ஆக பேசுகிறார்
உயர்ந்த திருவாய்மொழி -இது என்பர்–இதுக்கு ஒத்த திருவாய்மொழி இல்லை என்பர்-
நமக்கு ஆசை அதிகம் நினைத்தோம்
எம்பெருமான் தமக்கு செய்யும் உபகாரம் துடிப்பை – சந்தோஷமாக அருளிச் செய்த திருவாய்மொழி-
ரத்னம் போலே இது -மேம் பொருள் போக விட்டு -த்வயார்த்த பிரதி பாதித்த படியால் -மேலே மூடி -கீழே பொட்டி போலே-
ஏழாம் திருவாய் மொழியில் –
திருக் கடித்தானத்திலே எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரன் தம்முடைய திரு உள்ளத்திலே ஸமஸ்த விரோதிகளும்
கழியும்படி புகுந்து பரிபூர்ணமாக எழுந்து அருளக் கண்டு
அவன் தானே அர்த்தியாய்ப் புகுந்த படியையும்
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அஞ்ஞான தமோ நிரசனத்தையும்
அதுக்கு அடியான அத்யுஜ்ஜ்வல விக்ரஹ யோகத்தையும்
ஸூஸ்த்திர ஸ்த்திதியையும்
அத்தாலே பிறந்த திவ்ய அவயவ சோபையையும்
அவ் வழகினுடைய அநு பாவ்ய அதிசயத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
அதிசயித உபகாரகத்தினுடைய அனுசந்தேயத்வத்தையும்
நித்ய அநு பாவ்ய பரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் தன திரு உள்ளத்தில் புகுந்து இருக்கிற அதிசயித
வ்யாமோஹத்திலே விஸ்மிதராய் இது பிரமமோ மாயாதி விகாரமோ என்று சங்கித்து
நம் அளவில் விப்ரலம்பியான் என்று தெளிந்து இது ஒரு உபகார அதிசயமே
என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –
———
8-8-கண்கள் சிவந்து பெரியவாய்வாயும் சிவந்து கனிந்து-ப்ரவேஸம்-
கண்கள் சிவந்து -பிரவேசம்
மாயக் கூத்தா என்னும் திருவாய் மொழியிலே–இவருக்கு ஓடின விடாய் எல்லாம் ஆறும்படி
இருத்தும் வியந்து -என்கிற திருவாய்மொழி யிலே வந்து கலந்து
இவர் விடாயும் தீர -தன் விடாயும் தீர்ந்து–இவரைப் பெற்ற பேற்றினால் ப்ரீதனாய்-
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே இங்கனே சேர விழுந்தது-யாங்கனம் விழுந்தது எனின் –
(ப்ரவ்ருத்தமான ஸம்ஸ்லேஷம் சிதிலமாக ஒண்ணாது )இனி உண்டான கலவி குலைய ஒண்ணாது –
இவர் ஆகிறார்
வளவேழ் உலகின் -என்ற திருவாய் மொழியைப் பாடின ஆழ்வார் ஆயிற்று –
நாம் கிட்டக் கொள்ள -சிறியேனுடைச் சிந்தையுள் -என்று-(கீழ் சொன்னது ஸுசீல்யம் அனுபவித்து -அத்தையே இப்பொழுது )தம் தாழ்வினை நினைத்தவர்-
இன்னும் அது பின் நாட்டி அகலப் பார்ப்பர்-
அங்கனம் அகலப் பார்ப்பதற்க்கு முன்னே அதனை நீக்க வேண்டும் -என்று பார்த்து
இனி இவர் தாம் அகலப் பார்ப்பதும்-அநாதி காலம் சம்சாரத்தில் உழன்று போந்த ஆத்ம வஸ்து
அங்குத்தைக்கு யோக்யதை இனியது அன்று என்று ஆயிற்று-
இது அங்கன் அன்று-வந்தேறியான இதனைப் பாராமல்-அடியைப் பாரீர் என்று-
இந்த ஆத்ம வஸ்து வினுடைய சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்த வேண்டும் என்று பார்த்தான்
(வைலக்ஷண்யம் -ராகவனுக்கு வைதேஹி போல் -நித்யம் -ஞான ஆனந்த மயம் -அத்யந்த சேஷம்)
அங்கனம் பார்த்து–
என்றும் உள்ளதாய்-ஞான ஆனந்த லஷணமாய்–நமக்கே உரிய அடிமையாய் காணும் இருப்பது
நீர் கிட்டுமது நமக்கு தாழ்வு அன்று
கௌஸ்துவத்தை போன்றும் பிராட்டிமாரைப் போன்றும் -நமக்கு நிறமாம் இத்தனை -என்று
இவருடைய ஸ்வரூபத்தின் சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்துகிறான்-
அங்கனம் படுத்தும் இடத்து
உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி காட்டுவதற்கு வாரீர் -என்றால்-
மின் மினி போலே இருக்கிற இதில் சரக்கு என் -என்று இசைவார் ஒருவர் அல்லர் இவர்
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்றருள் -(8-7-7)-என்று-நம் வடிவிலே துவக்குண்டு இருப்பது ஓன்று உண்டு
ஆதலால் நம் வடிவினைக் காட்டி அதன் மூலமாக நமக்கு
பிரகாரமாக இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுப்போம் -என்று பார்த்து –
வாரீர் நம்முடைய வடிவு அழகு இருக்கிறபடி கண்டீரே
நம்மைக் காணும் காட்சியிலே உம்மையும் காணலாய் காணும் இருப்பது -என்று
தம்முடைய வடிவு அழகினை முற்பட அனுபவிப்பித்து
தனக்கு நூபுரம் முதலானவைகளைப் போன்று மிக இனிய பொருளுமாய்
தனக்கே அடிமையுமாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்க
அதனை-அனுபவித்து இனியர் ஆகிறார்-
ஸ்ரீ கௌஸ்துபம் முன் அருளிச் செய்தது எம்பெருமான் திரு உள்ளம் -பிரணயித்தவ ஸ்வ அபிப்ராயத்தால்
நூபுரம் என்றது ஆழ்வார் திரு உள்ளம் -இது தத்வ ஸ்திதி –
தாஸ்ய பாவனையில் இருப்பாரே -பிரேம பாவனை விட -பர்த்ரு பார்யை -ஸ்வாமி தாஸ்ய பாவமே -மிகுத்து இருப்பாரே –
அத்யந்த போக்யமுமாய் அத்யந்த சேஷத்வமுமாய் இருக்கும்-அமுதனார் -இத்தை கொண்டே ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
சீலம் கொள் நாதமுனியை -யதிகட்க்கு இறைவன் யமனைத் துறைவன் -திருவடி -அப்ருதக் சித்தம் என்று காட்டி அருளினால் போலே –
இத் திருவாய்மொழி யில் முதல் இரண்டரை பாசுரங்களால்-பாட்டையும் பிரிக்காமல் -அவ்வளவு நெருக்கம் என்று காட்ட –
தன்னை அனுபவிப்பித்து-பின்னர் ஆத்ம ஸ்வரூபத்தை காட்டிக் கொடுத்தானாய் இருக்கும்-அதற்கு அடி என் என்னில்
ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி
பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர்
அன்றிக்கே
ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று
தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே –
இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறிய
கலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –
பிராணவார்த்தம் -8-8-என்பர் -8-8-/-8- 9/8-10 -மூன்றும் சேர்ந்து திருமந்த்ரார்த்தம் –
பகவத் ஸ்வரூபம் ஆரம்பித்து ஆத்ம ஸ்வரூபத்தில் -முடியும் -கீதை விட ஏற்றம்
சந்தோஷம் உடன் ஆரம்பித்து வருத்தம் உடன் கீதை முடிய
ஏ பாவம் பரமே -உற்றேன் உன பாதம் பெற்றேன் -ஆனந்தம் முடித்து
ஐவரை வாழ வைக்க அது
ஒருவரை வாழ்வித்து 25 பேரை அழிக்க திருவாய் மொழி –
இருத்தும் வியந்து -உபாயம் இரக்கம்
அருத்தித்து -தகுதி -இச்சை
அவர் பொன்னடிக்கீழ் -இனிமை புருஷார்த்தம் –
இச்சை இரக்கம் இனிமை –
பாலோடு அமுது அன்ன ஆயிரம் -த்ருஷ்ட்டி விஷம் இந்த திருவாய் மொழி
வானோர் மனச் சுடரை தூண்டுவிக்கும் வினைச் சுடரை அழிக்கும் திருமலை போலே –
மாசி மகம் -மணக்கால் நம்பி -ராம மிஸ்ரர் -கலியுக ராமர் -மூவர் இடம் இல்லா பெருமை
அனுஜித ஷமா யோகம் -பரசுராமர் போல் ரோஷ ராமர் இல்லை
அபுண்ய ஜன பாதகம் -பெருமாள் போலே இல்லையே –
மது -கள் குடிக்காத -பல ராமர் போலே இல்லையே —
எட்டாம் திருவாய் மொழியில் -கீழ் தம்முடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து இந்திரியாதி விரோதிகளை நசிப்பித்துத்
தன் பேறாகக் கலந்து ப்ரீதனான ஈஸ்வரன் -இவருக்கு நிகர்ஷ ஆபாதகமான விரோதி வந்தேறி என்னும் இடம்
இவர் அறியும் படி இவருடைய ஸ்வரூபமானது நமக்கு பிரகாரமாய் இருக்கிறபடியையும்
விலக்ஷணமாய் இருக்கிறபடியையும் காட்டி நைர் தோஷயத்தை பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி
இவருடைய ஆத்ம ஸ்வரூபம் தன்னை ஆஸ்ரயித்து இருக்கும் என்கைக்கு உறுப்பாகத்
தான் இவருடைய ஹ்ருதயத்தில் இருக்கிற இருப்பையும்
சர்வாந்தராத்ம பூதனான தன்னுடைய நிரதிசய ஞானானந்த யோகத்தையும்
அஹமர்த்த பூதனான ஆத்மாவும் தனக்கு பிரகார பூதன் என்னும் இடத்தையும்
சர்வ காரண பூதனான தான் விலக்ஷண சாரஸ்யத்தை யுடையனான சேதனனுக்கு அப்ருதக் பூதனான நிலையையும்
ஸ்வ பிரகார பூதனான ஆத்மாவினுடைய ஸூரவதமத்வத்தையும்
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ப்ராப்ய பாவத்தையும்
ஏவம் வித ஆத்ம ஞானம் இல்லாதாருடைய சம்சார சம்பந்தத்தையும்
ஆத்மாபிராப்தி காமனுடைய அந்திம ஸ்ம்ருத்யபேஷையையும்
ஸ்வரூப ஐக்கிய ரூபமான மோக்ஷம் அசம்பாவிதம் என்னும் இடத்தையும்
ஏவம் விதனான ஆத்மாவுக்குத் தன் பக்கல் ப்ரத்யாசத்தியே உஜ்ஜீவன ஹேது என்னும் இடத்தையும்
பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து இப்படி விலக்ஷணமான ஆத்மாவினுடைய நைர் தோஷயத்தை பிரகாசிப்பித்துத்
தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டான் என்று ப்ரீதராகிறார் –
———
8-9-கருமாணிக்க மலை மேல்-ப்ரவேஸம்-
கரு மாணிக்க மலை பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களாலே-அவனுடைய அழகு சீலம் முதலானவைகளை அருளிச் செய்து –
அவற்றைப் போன்று சிறந்ததாய் –அனன்யார்ஹமுமாய்-இருக்கிற ஆத்தும ஸ்வரூபத்தை மற்றைப் பாசுரங்களாலே-
அருளிச் செய்து இனியர் ஆனார் –
அந்த அடிமை இன்பத்தாலே ப்ரீதராய்-ப்ரீதியின் பரவசத்தாலே -அப்பன் திருவருள் மூழ்கினளே-
தாமான தன்மை அழிந்து-ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய்-
அநந்யார்ஹ சேஷத்வம் -யானும் தானுமாய் ஒழிந்தேன் -என்ற ஸ்வ ஸ்வரூபம் -தம்முடைய நிலையை –
அன்யாபதேசத்தாலே பேசி இனியர் ஆகிறார் -இத் திருவாய் மொழியிலே –
ப்ரீதியில் அன்யாபதேசம் உள்ளது இத் திருவாய்மொழி ஒன்றுமே -என்று ஆழ்வான் நிர்வஹிப்பர்-
திருப் புலியூரிலே எம்பெருமானோடு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தால் ஒரு பிராட்டி –
அவனாலே கொள்ளப் பட்ட மனத்தினை உடையவளாய் இருக்கிறபடியை-உயிர் தோழி யானவள் கண்டு
இவள் வடிவில் வேறுபாட்டாலும் -புனை இழைகள் அணிவும் –
சொற்களின் வேறுபாட்டாலும் -அரு மாயன் பேர் அன்றி பேச்சிலள்-புணர்ச்சி உண்டானமையை அறிந்தாள் –
இவற்றில் ஒன்றையும் அறியாதே-
என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்-கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து –என்கிறபடியே –
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா-சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-
தகுந்த யௌவனப் பருவம் உடையவள் என்னும் இவ்வளவே கொண்டு-
தந்தை முதலியோர் சுயம் வரத்துக்கு ராஜ புத்ரர்கள் வருவது என்று நகரத்திலே-மண முரசு அறைவிக்க-
அதனைக் கேட்ட தோழி யானவள் -பரதன் இராஜா -என்று அறைவித்த முரசொலி செவிப்பட்ட போது-
ஸ்ரீ பரத ஆழ்வான் பட்டது எல்லாம் பட்டு-இம்முரசொலி பெண் பிள்ளை செவிப்படுமாகில்-
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்-நாச்சியார் திருமொழி -1-5-வாழாத தன்மையளாய்-இருக்கிற இவள் உயிர் தரியாள்-
ஏற்கவே தடுக்க வேண்டும்-அது செய்யும் இடத்தில் திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி-
உண்டானமையை அறிவிப்போம் ஆகில்-நம் காவற் சோர்வால் வந்ததாம் என்றாம்-
அறிவியாது ஒழியில் இவள் வாழாள்-இனி இவ்வளவில் செய்வது என் என்று பார்த்தாள் –
அங்கனம் பார்த்தவள்-இவர்கள் தாமும் -இவளுக்கு வடிவிலே வேறுபாடு உண்டு
இதற்க்கு காரணம் யாதோ -என்று-விசாரியா நின்றார்கள்
நாமும் இவர்கள் தம்மோடு ஆராய்வதிலே இழிந்து-
அவ்வழியாலே அறிந்தோமாய் இதனை விலக்க வேண்டும்-என்று அறுதி இட்டுக் கொண்டு
இவள் வடிவு இருந்தபடியால் இவளுக்கு-
திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி உண்டாயிற்று போலே இருந்தது –
அவனுடைய குணங்களையும் செயல்களையுமே வாய் புலற்றா நின்றாள்-
நீங்கள் செய்கிறவற்றைத் தவிருங்கோள் -என்று
அறத்தோடு நிற்க எண்ணினாளாய்–கிளவுத்துறையில் ஒரு பகுதி -அறம் -தர்மம் படி -இது தர்மம் அன்று -என்ன –
ஆனால் நீ சொல்லுகிற திருப் புலியூர் நாயனாருக்கு இவளுக்கு தகுதியான சிறப்பு உண்டாக வேண்டும்-
ஒப்பனையும் ஆண்மையும் குணமும் செல்வமும் கொடையும் காதலும் உண்டாக வேண்டும் –
நல் ஒழுக்கம் உடையனாக வேண்டும்-வேதார்த்த தத்வ ஞானம் உடையனாக வேண்டும் –இவை எல்லாம் உளவோ -என்ன
கூறுகிறாள் மேல் –
நீங்கள் கேட்கிற அளவு அன்று –இவை எல்லாம் குறைவு அற்றவன்-
இவை ஒன்றும் இல்லையாகிலும் இவள் தான்-திருப் புலியூர் நாயனாருக்கே உரியவள் ஆனாள்-
நீங்கள் செய்கிற இவற்றைத் தவிருமின் -என்று அதனை விலக்குகிறாள்-இது மணவிலக்கு -எனபது ஒரு கிளவித் துறை ஆகும் –
முதல் பாசுரத்தால் அவயவ சோபை -இரண்டாம் பாசுரத்தாலே –ஆபரண சோபை -மூன்றாம் பாசுரத்தாலே -ஆண் பிள்ளைத் தனம் – வீரம்
-நான்காம் பாசுரத்தால் –ஆபத் ஸகாத்வமும் –ஐந்தாம் பாசுரத்தால் – ஐஸ்வர்யம் ஆறாம் பாசுரத்தால் – உதாரத்வம் –
ஏழாம் பாசுரத்தால் -பிரணயித்தவம் -எட்டாம் பாசுரத்தால் -சமாச்சாரமும் –ஆச்சார்ய அனுஷ்டானம் –
-ஒன்பதாம் பாசுரத்தால் –வித்யா பூர்த்தியையும் –சொல்லி
பத்தாம் பாசுரத்தால் -இல்ல யாகிலும் -இவள் நேர் பட்டதே -அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லி தலைக் காட்டுகிறாள் –
திரு மந்த்ரத்திலே-தனக்கும் பிறர்க்குமாய் இருக்கும் இருப்பைக் கழித்து-அவனுக்கே அடிமை யாதல்
என்னும் தன்மையை சொல்லக் கடவது அன்றோ –அதனை இங்குச் சொல்லுகிறது-
மேல் திருவாய் மொழியில் அவனுக்கே அடிமையாக இருத்தல் என்னும் தன்மையைச் சொல்லிற்று-
இத் திருவாய் மொழியிலே-பிறர்க்கு உரியனாய் இருத்தலும்-தனக்குத் தானே உரியனாய் இருத்தலும்-
ஆகிய இரண்டும் பேறு அன்று -என்கிறது –ஒரு கன்னி யாகில் ஒருவனுக்கே யாய் இருக்கையும்-
ஒருவனுக்கே ஆனால் பிறர்க்கு உரியள் அல்லளாய் இருக்கையும்-அன்றோ ஸ்வரூபம்-
உகாரார்த்தம் நமஸ் அர்த்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் –கீழில் சொல்லி -அந்நிய சேஷத்வமும் ஸூஸ்வாதந்தர்யமும் கழிக்கும் இடம் சொல்கிறது
அதிக ப்ரீதியாலே உருகி பெண் பாவனை யால் அருளிச் செய்கிறார் -ஆண் பாவனையில் ஊடல் திரு இந்தளூர் போலே
சிபி சக்கரவர்த்தி -பீமன் -பிரதிஷ்டை -செங்கணாஞ்சேரி -ஆறு-திவ்ய தேசங்களில் ஒன்று -18 படி ஏறி சேவை –
சிபி சக்கரவர்த்தி அரசாண்ட பொழுது பஞ்சம் வர -ரிஷிகள் தானம் பெறாமல் -மறுக்க -வாழைப் பலம் உள்ளே தங்கம் வைத்து கொடுக்க
மறுக்க -ரிஷிகளை அழிக்க கிருத்ரியை -தேவேந்திரன் வஜ்ராயுதம் புலி வேஷம் கொண்டு ரக்ஷித்தான்
குட்ட நாடு பிரதேச பெயர் -மாயப்பிரான் –
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும் –176–
ஒன்பதாம் திருவாய் மொழியில் கீழே -ஸுந்தர்ய சீலாதி விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு பரி ஸூத்தாத்ம ஸ்வரூபமானது
பிரகார தயா சேஷம் என்று தெளிந்தவர்
அந்த சேஷ பூதனான ஆத்மாவினுடைய ததேக ரஷ்யத்வ ததேக போக்யத்வங்களை ப்ரதிபாதிப்பதாக
சேஷியினுடைய திவ்ய அவயவ சோபையையும்
திவ்ய ஆபரண சோபையையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
குணவத்தாதிசயத்தையும்
அபரிச்சின்ன விபூதி யோகத்தையும்
உதார குண உத்கர்ஷத்தையும்
பிரணயித்தவாதிசயத்தையும்
சர்வ கர்ம சமாராத்யதையும்
சர்வ வேத ப்ரதிபாத்யதையையும்
ஆச்சர்ய அவஹாவத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பிரகார விசிஷ்டனாயத் திருப் புலியூரில் எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய அனுபவத்தில்
அவகாஹித்து ஹ்ருஷ்டரான இவருடைய ரூபாதி வைலக்ஷண்யத்தைக் கண்ட பரிவர் தொடக்கமான பார்ஸ்வஸ்த்தர்
இந்த வைலக்ஷண்யத்திலே ஜிஜ்ஞாஸூர்களாக –
ஸூஹ்ருத்த பூதரானவர் அவர்களுக்கு அறிவித்த பாசுரத்தைத்
திருப் புலியூரில் நாயனாருடனே இயற்கையிலே புணர்ந்த நாயகியினுடைய வேறுபாடு சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம் என்று அறிந்த
தோழியானவள் -இது அறியாதே இவளுடைய பதி சம்யோக ஸூசகமான பருவத்தைக் கண்டு
பந்துக்கள் வேறே மணமுரசு அறைவிக்க –
நாயகிக்கு இது அஸஹ்யம் என்று அறிந்து விலக்குவதாக உத்யோகித்து-
யுக்தி பிரகாரத்தாலும் வடிவில் வேறுபட்டாலும் நிரூபித்து அறிந்தாளாக பந்துக்களைக் குறித்து
இவள் திருப் புலியூர் நாயனாருடைய குண நாமங்களையே பலகாலும் பேசா நின்றாள் –
இவளுக்கு அங்கே பாவ பந்தம் உண்டாகக் கூடும் –
அவனாகிறான் இவளுக்குத் தகுதியாம் படி
அபி ரூபனாய் அலங்கார விசிஷ்டனாய்-ஆண் பிள்ளையாய் –ஆசாரஸ்த்தனாய் -வேதவித் அக்ரேசனாய் –
ஆச்சர்ய பூதனாய் இருப்பான் ஒருவன் -ஆதலால்
இவள் வடிவில் அந்யதா ஸித்தமான சம்ச்லேஷ ஸூ சகமாக சிஹ்னங்கள் உண்டாகையாலும்
அவனுக்கே இவளாம் என்று அறத்தொடு நின்று உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
—————
8-10-நெடுமாற்கு அடிமை செய்வன் போல்-ப்ரவேஸம்-
நெடுமாற்கு அடிமை -பிரவேசம்
மேலிரண்டு திருவாய் மொழியிலுமாக–ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
அதனால் அது பிறர்க்கும் உரித்து அன்று -உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி -என்று
தனக்கும் உரித்து அன்று -அருமாயன் பேரன்றி பேச்சு இலள்-என்று ஆயிற்று சொல்லிற்று –
பிரணவத்தில் நடுப் பதத்தாலும்-நமஸ் சப்தத்தாலும் சொன்ன அர்த்தமாயிற்று சொல்லி நின்றது –
அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை-அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் அன்றோ-
அதனைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –
அவன் அடியாருக்கு கிரய விக்ரயங்கட்கு தகுதியான-அன்று தான்-அவனுக்கு அடிமைப் பட்ட நிலை நின்றதாவது –
எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-10-என்று இறே-அன்றோ இருப்பது-
தத் பக்தி நிக்ன மனஸாம் க்ரய விக்ர யார்ஹா -பிரமாணம்
இறைவன் மாட்டு அன்புடைய மனஸ் உடையவர்களுக்கு-விற்றற்கு உரியவன் -என்னக் கடவது இறே –
அம்முணி ஆழ்வான் போசல ராஜ்யத்தின் நின்று வந்த நாளிலே
பட்டர் கண்டருளி
நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போர அடிமை செய்து போந்தாய் –என்று கேட்டோம் .
உன் தன்மைக்கு சேர -நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய் மொழியைக் கேள் -என்று-அருளிச் செய்தாராம் –
ஈஸ்வரனுக்கு அடிமை என்று அறிந்த அன்று மயங்கி மீளவுமாம் –
அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் உணர்ந்தால் மீள வேண்டா அன்றோ –
செல்வமே புருஷார்த்தம் -என்று இருப்பார் –செல்வமே -என்றும் -வியன் மூ உலகு –
ஆத்ம லாபம் புருஷார்த்தம் என்று இருப்பார் -தானே தானே யானாலும் –
பகவானுக்கு அடிமைப் பட்டு இருத்தல் புருஷார்த்தம் -உறுமோ பாவியேனுக்கு –
ஈஸ்வரனாய் ஆனந்த மய என்று இருக்கும் இருப்பு புருஷார்த்தம் -மூ உலகின் வீடு பேறு –என்று இருப்பராய் அன்றோ இருக்கிறார்கள் –
இப்படிப் பட்ட புருஷார்த்தங்கள்
தனித் தனியும் -திரளவும் நான் பற்றின பாகவதர்களுக்கு-அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற புருஷார்ததோடு ஒவ்வாது
என்று எடுத்துக் கழிக்கவும் போராது –
இப்படி இருக்கிற இதுவே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும்
எனக்கும் என்னோடு சம்பந்தம் உடையாருக்கும் வாய்க்க வேண்டும்-என்று வேண்டிக் கொண்டு தலைக் கட்டுகிறார் –
பயிலும் சுடர் ஒளி-என்னும் திருவாய் மொழியைக் காட்டிலும்-இத் திருவாய் மொழிக்கு வாசி என்-என்னில்
பாகவதர்கள் இறையவர்கள் -என்றது அங்கு -எம்மை ஆளும் பரமர்களே –
பாகவதர்கள் இனியர் -என்கிறது இங்கு -வீடுமாறு எனபது என் வியன் மூ உலகு பெறினுமே –
கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக-சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்-இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –
நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்-
பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்-என்று கூறப் பட்டது அன்றோ –
கேசவ பக்தி -பக்த சமாகம் இரண்டும் – பழங்கள் -சம்சார காட்டில் -இதுவே சிறந்தது -ராமானுஜர்
ஸ்ரீ வைஷ்ணவர் பிரதானம் -ஆச்சார்யர் இடம் சேர்த்து வைக்கும் உபகாரகர் -அனுபவம் வளர்த்து -சம்சாரம் கொதிப்பால் தடுமாறி
இருக்கும் பொழுதும் -திருத்தி -அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி அருளி –
இந்த உபகாரத்வத்துக்கு ஒப்பு இல்லையே —
புறம்பு உள்ள பற்று அறுத்தும் ஐந்தை சொல்லி ஆறாவதாக –இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் -துர்லபம்
சஜாதீயர் -என்பதால் -மத் பக்த ஜன வாத்சல்யம் –பூஜா அனுமோத்தனம் -ஸ்வயம் -பூஜ டம்ப வர்ஜனம் மத கதா ஸ்ரவணீ ப்ரீத்யம் –
அரங்கன் சேறு செய் முற்றம் -தொண்டர் சேவடி சேறு சென்னிக்கு அணிந்து -சமமாக நினைத்து பூஜிக்க கருட புராணம் –
மேம் பொருளில் மேல் உள்ள பாட்டுக்கள் -எல்லாம் இந்த கருத்தை வலி உறுத்தி –
கைங்கர்ய பிரதி சம்பந்திகள் சேஷிகள் -பாகவத அபசாரம் கொடியது –
சாரமான திருவாய்மொழி -பயிலும் சுடர் ஒளியும் நெடுமாற்கு அடிமை -திரு உள்ளம் பின் சென்றே கண்ணி நுண் சிறுத் தாம்பு –
பிள்ளாய் —மாமான் மகள் –போதரிக் கண்ணினாய் -கிளியே பாகவதர்களை முன்னிட்டு ஆண்டாள் -வேதம் வல்லார்களைக் கொண்டே
விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து க்ரமமாக –
குரு பரம்பரை முன்னிட்டே த்வயம் பல பர்யந்தம் ஆகுமா பாகவதர்களை முன்னிட்டே பெருமாள்
ஆட்க்கொண்ட வில்லி ஜீயர் -வார்த்தை -ஸ்மரிப்பது-எம்பெருமானார் -மதுரகவி ஆழ்வார் -ஆண்டாள் -சேர்த்து மா முனிகள்
உபதேச ரத்ன மாலை -பாகவத நிஷ்டை -விஷ்ணு சித்தர் –வல்ல பரிசு தருவிப்பரேல் -தேவு மாற்று அறியேன் –
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் –
பத்தாம் திருவாய் மொழியில் -கீழில் திருவாய் மொழியிலே பகவத் சேஷத்வத்தினுடைய நிரதிசய போக்யதையை ப்ரதிபாதித்து
அந்த போக்யதாதிசயத்தாலே -மேற்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -என்று ப்ரஸ்துதமான
ததீய சேஷத்வ பராம்யத்தில் இனிமையானது பிரகாசித்து
அந்த ததீயருடைய போக்யதைக்கு ஹேதுவான தத் சம்பந்த்யத்துக்கு மூலமாய் இருக்கிற ஈஸ்வரனுடைய
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
உதார ரூபத்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
ஆச்சர்ய ஸ்வ பாவத்தையும்
ஆஸ்ரித விரோதி நிரசனத்தவத்தையும்
அகில காரணத்வத்தையும்
அர்ணவ ஸாயித்வத்தையும்
ஆஸ்ரித விரோதி நிராசகமான திவ்ய ஆயுத பூர்த்தியையும்
அனுபாவ்ய ஆகார யோகத்தையும்
அனுசந்தித்து பகவத் – அபிமதரான பாகவதருடைய அத்யந்த சேஷத்வ காஷ்டா விசேஷமே-அதிசயித போக்யமாய் –
ஐஸ்வர்ய கைவல்ய பகவத் ப்ராப்த்தியாதிகள் அதுக்கு சத்ருசம் அல்லாதபடியான பரம புருஷார்த்தத்வம் பிரகாசிக்கும்படி
பிரதிபந்தகத்தை நிஸ் சேஷமாக நிவர்த்திப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –
ததீயா சேஷத்வ பரமான பயிலும் சுடர் ஒளியில் தத் சம்பந்த நிபந்தயமான
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் உண்டாகையாலே
முதலிட்டு நாலு பாட்டாலே சேஷித்வத்தையும்
அநந்தரம் மூன்று பாட்டாலே சரண்யத்வத்தையும் ப்ரதிபாதித்து
எம் தொழு குலம் தாங்கள் என்று சங்க்ரஹேண ப்ரதிபாதித்த ப்ராப்யத்வத்தை
இங்கே விஸ்தரேண-பிரதிபாதித்து அருளுகிறார் –
—————
ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
யதேஷ்ட சித்திம் அப்ராப்ய கின்ன மதி
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஸர்வேச்வரத்வம் அபி
சங்கிதவான் சடாரி
ஈஸ்வரத்வ புனரேவ விபோதி தஸ்ய –
——–
விபு ஸம்ப்ராபகன் நிஜ வாஞ்சி தார்த்தம்
பிராப்தி விகாதே இதரேஷூ ஸ பாச லேச
சங்கித மன ஸூவஸ்ய ஸ்வஸ்மின் அபி ஸ்வ
கீதேபி வர்க்கே ப்ராணாவதாம் முமுஷே
———
பிரேம அதிகேந விவசய ஸூ குமார மூர்த்தயே க்ஷேமாயா
கின்ன ஹ்ருதய புருஷோத்த மஸ்ய
தத் தர்சித ஆத்மபர நித்ய முமுஷு முக்தைகி
கிஞ்சித் ஸமாஹிதா மன சடஜித் த்ருதீயே
———
க்ஷேமம் நிர்பீ அகாரீ ஸூ ஸுர்யம் அதிகம்
க்ராமஞ்ச காஞ்சன நிஜ வாசஸ் ஸ்தானம்
விமத்தை அத்ருஷ்யம் கிராமம்
தத்ர சமான்-ஹரிஹித ப்ரதஸ்ய
————
ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார
அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட
அதி தப்த ஏஹ்யேஹ் ஹி –
ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம் கூப்பிட்டார்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட அதி தப்த காட்டுத் தீ கதுவினால் போலே
ஏஹ்யேஹ் ஹி -ஏஹி ஏஹி வா வா என்று
———
சத்யக ஸூ சங்கம் அக்ருதவ் ப்ரீதி சமிதி
திவா ராத்ரி ஹரி மாம் ஆப்து ஸநைக்கி மன
வைகுண்டதோ அதிகதவாம் பஹுமதிம் கொசித்
ஸ்தானே மதி மித்யாம் அவன்யாம்
———
மத் விப்ர யோகம் அசகன் ஸ்வயம்சேவ அர்த்தி
முதம் அபாஷத ஸவ்ரி இதி மதி விப்ரமம் கிம்
மாம் அல்ப கைக நிலையம்
பஹு மன்யமாகா நிர்ஹேதுக விஷயீகாரத்வம்
நிர்ஹேதுக விஷயீகாரத்வம் -வெறிதே உகந்து அருள் செய்வார் செய்வார்கட்க்கு
———
அஷ்டமி அவதன் ஸூவஸ்ய ஸ்வரூபம்
ஆத்மகை சேஷம் ஈஸ்வரணே அவ போதிதம்
ஸ்வ அயோக்யதா மதி நிவர்த்தக லோலுபேண
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம்
ஆ த்ம ஸ்வரூபம் பகவத் பிரகாரம் –அவனுக்கே சேஷம்
ஸ்வ அயோக்யதா மதி -நிழல் ஆடுகிறதே
நிவர்த்தக லோலுபேண -நப்பாசை பெருமாளுக்கு –
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம் –
ஸூ பிரகார பூத ஆத்ம ஸ்வரூப வைபவம் –பிரகாசத்வம் -பரம போக்யம்
——–
அந்யார்ஹதா சேஷத்வத்வம் ஸ்ரவணம் அபி
நாசோடும் ஸஹ்யத இதை ஸூ தசா விசேஷம்
அந்யாபதேசம் அவலம்பிய ததோபா யுக்தம்
நாராயண பரதீ நவமே ஜகாதே
———-
திகிறதா ஆத்ம ரூசி தாம்
சேஷதாம் அபி ததீய ததீய ஸீமா
ஆவிஷ கர்த்த பக்த பக்த ப்ரீதி
அந்நிய பூமர்த்தம் –
திகிறதா ஆத்மரூசி தாம் சேஷதாம் அபி -அநந்யார்ஹ சேஷத்வம் -நேர் பட்டது
ததீய ததீய ஸீமா, பர்யவசிக்கும் தாம் புருஷார்த்த சீமான்
ஆவிஷகர்த்த பக்த பக்த ப்ரீதி அந்நிய பூமர்த்தம் –வேறே புருஷார்த்தம் தள்ளி –
—-
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத் ரகு யது குலையாத உத்பவாத்
ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத்
சகல சித் அசித் அந்தராத்மா ஸ்வாமித்த்வாத் ஸ்வாதுத்வாத்
ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண தயா ஞானி அபி ஹரீர் பதம் தரிசன சுதிர் –
1-ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத்–தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
2-ரகு யது குலையாத உத்பவாத்–காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !பேணுவாரமுதே !
3–4–ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத் –அடுத்த தோர் உருவாய்
இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?-என்றும்
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான இவர் உகந்து அமர்ந்த செய்கை
யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்–என்றும்
5–சகல சித்அசித் அந்தராத்மா–பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த சீருயிரேயோ !
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ ! ஒருயிரேயோ !
6-7-ஸ்வாமித்த்வாத் -ஸ்வாதுத்வாத் -இனிமை –மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே-என்றும்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற் பிறந்த இன் சுவையே !
சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–என்றும்
8–ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண-தயா –மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !—
9-10–ஞானி அபி –ஸ்தானே அச்சாத்—-யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–என்றும்
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-என்றும் –
ஹரீர் பதம் தரிசன சுதிர் –பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க் குரியவப்பனை
யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த ஸூலபனா
—–
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-
சகல த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் –
தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துக் கொள்கிறான்
——
தார் ஷோத்யுத் வாஹநத்வாத் ஸூப நயன தயா நீல மேகா ஆக்ருத்வாத்
ஆச்சரியோ சேஷ்டிதத்வாத் துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்
ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத் பிரதிஹதி வ்ரஹாத்
துர்ஜன அத்ருச பாவாத் நிஸ் சங்கானாம் இதி பிராஹா
1-தார் ஷோத்யுத் வாஹநத்வாத்–வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே
2-ஸூ ப நயன தயா–காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்
3–நீல மேகா ஆக்ருத்வாத்–நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன்
4–ஆச்சர்யோ சேஷ்டிதத்வாத் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை-வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
5–துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்–ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா-
6–ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத்–இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்-அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
7–பிரதிஹதி வ்ரஹாத்–மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன்
8-9-துர்ஜன அத்ருச பாவாத் -கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-என்றும்
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு-என்றும்
10-நிஸ் சங்கானாம் –யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-
இதி பிராஹா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்
——
ஸ்ரீ பூமி நாயகத்வாத் அரி சுகரத்தயா ஏகாகி கல்ப சிந்து சிசுவத்வாத்
ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் சுரஹித காரணாத் ஸ்ரீ பதோ ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்
விக்ராந்த் விஷ்ட பாதாம் விதி துரதி கமநாத்
ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–
1–ஸ்ரீ பூமி நாயகத்வாத் –அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே
2–அரி சுகரத்தயா –கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–
3–ஏகாகி-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
4-கல்ப சிந்து சிசுவத்வாத்-ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
5–ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் —கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்–திவ்ய தேசங்களில் –பின்னானார் வணங்கும் ஜோதி
6–சுரஹித காரணாத்–பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
7–ஸ்ரீ பதோ-ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்–வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்
8–விக்ராந்த் விஷ்ட பாதாம்–குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே
9–விதி துரதி கமநாத்–திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
10–ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா–மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே
ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் உரையேய் சொல்–
8-3-ஸூ குமார மூர்த்திமத்வம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த சுலபனா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்
——-
துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத் ஸூ ப நிலயத்தையா
சாம்யாதாகா க்ஷேத்ரம் ஸம்பதா சத் சங்கை ஸூர ஜனகதையா
பாணாத் தேவ த்வத் த்வேஷி ஜகத் உதயாதி க்ருதே
தேவதாத்மா முக்யைதி ஸ்ரீ மான் வைகுண்ட நாதா
1–துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத்–மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர்கொள் சிற்றாயன்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
2–ஸூ ப நிலயத்தையா–இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
3–சாம்யாதாகா க்ஷேத்ரம்–முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
4–ஸம்பதா–குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
5–சத் சங்கை–நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-
6–ஸூர ஜனகதையா–எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை
7-பாணாத்-அத்திருவடி என்றும் திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே
8–தேவ த்வத் த்வேஷி–புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை
9–ஜகத் உதயாதி க்ருதே–படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே
10-தேவதாத்மா முக்யைதி–அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே
ஸ்ரீ மான் வைகுண்ட நாதா–இப்பத்தும் வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே
——
ஜீவா அபேஷா -பிரதேஷா தீக்ஷிதன் அனுக்ரகம் எதிர்பார்த்து இருப்பான்
பேற்றுக்கு தரிக்க வேண்டுமே -இதுவே இத் திருவாயமொழிக்கு தாத்பர்யம் –
சுப மகுட தயா ஸ்வாம்யதா அபியைசத்வாத்
ஜீவாமோத ஸ்யாமளத்தவாத ஆஸ்ரித ஸூ லபன்
பத்ம ஸூர்ய அங்கத்வாத் பாண்டு ஸூநோ சாரத்வாத்
அவணி பர க்ருதேகே அந்தராத்மத்வ யோகாதி –
1–ஆச்சர்ய சேஷ்டிதங்கள்–மாயக் கூத்தா வாமனா
2–சுப மகுட தயா–நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே
3–ஸ்வாம்யதா–முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே
4–அபியைசத்வாத்–தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா
5–ஜீவாமோத ஸ்யாமளத்தவாத–ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே
6–ஆஸ்ரித ஸூ லபன்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே
7–பத்ம ஸூ ர்ய அங்கத்வாத்-செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே
8–பாண்டு ஸூ நோ சாரத்வாத்–தக்க வைவர் தமக்காயன்று ஈரைம்பதின்மர் தாள் சாய புக்க நல் தேர்ப் தனிப் பாகா
9–அவணி பர க்ருதேகே–இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
10-அந்தராத்மத்வ யோகாதி –கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா
——–
பாதத்வாத் ஸ்ரீ துளசியா ஆஸ்ரித ஹ்ருத சயநாத் ஸ்ரீ வத்சத பாவாத்
ஆச்சர்ய உபக்ரமத்வாத் ஸூர கண பஜானாத் வைரி நிரசன
கோவிந்தத்வாத் அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட
சச்சித்தகத்வாத் சார்வாகாரத்வாத் கிருஷ்ணம்
1–பாதத்வாத் ஸ்ரீ துளசியா–அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே
2-ஆஸ்ரித ஹ்ருத சயநாத்–திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்-ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
3-ஸ்ரீ வத்சத பாவாத்–திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே
4-ஆச்சர்ய உபக்ரமத்வாத்–தேசத்தமர் திருக் கடித் தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே
5-ஸூர கண பஜானாத்–கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே
6-வைரி நிரசன–கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மது சூத வம்மான்
7-கோவிந்தத்வாத்–கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
8–9-அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட சச்சித்தகத்வாத் -முற்றும் எம் மாயற்கே–ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–-என்றும் தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே
10-சார்வாகாரத்வாத்–அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
கிருஷ்ணம் -ஆயர்கள் அதிபதி –
——-
பவ்யத்வாத் ரக்ஷகத்வாத் த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத்
கோப பாவாத் நீல அஸ்மா அத்திரி பாவாத் ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம
பிரதநா பிரபுத்வத்த மூல மந்த்ரத்தை மந்தஸ் ஸ்மிதம்
ஹ்ருதி ஸூ ஹ்ருதி ஸ்வா நாம் சித்தம் அநபாயாத ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ-
1–பவ்யத்வாத் –பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே
2–ரக்ஷகத்வாத்–பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
3-த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத் -அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான்–அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
4–கோப பாவாத்–ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-
5–நீல அஸ்மா அத்திரி பாவாத் –என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
6–ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம பிரதநா பிரபுத்வத்த — தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–தன்னையே தரும் கற்பகம் –
மூல மந்த்ரத்தை -தம்மையே நல்கும் தனிப் பெரும் பதம் -கம்பர் –
7–மந்தஸ் ஸ்மிதம்–செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே
8–ஹ்ருதி ஸூ ஹ்ருதி–அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார் வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
9-ஸ்வா நாம் சித்தம் அநபாயாத –மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-
10-ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ–மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்-பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே
———
ஹரி பிரகடயிந்தி பும்ஸே தாஸ்யம் ப்ராசிஸ்தேன பாணாத் விபூதியா
அலம் ஹிருதிச விபூதியா மஹிம்னா பரத்வாத் மாதுர்யாத்தேவ தேஹ்ய
ஸூ ஸ்வரூப பிரகாசாத் அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத ஸூ பிரம
புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத் ஞானாஞ்ஞானம் நிரசன பிரசாதாயாத் –
1–ஹரி பிரகடயிந்தி–கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
2-பும்ஸே தாஸ்யம்—ப்ராசிஸ்தேன – — பாணாத்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
3–விபூதியா அலம் ஹிருதிச–உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
4-விபூதியா மஹிம்னா பரத்வாத் –யாதும் யவர்க்கும் முன்னோனை தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
மாதுர்யாத்-தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே
5-6-7-தேவ தேஹ்ய ஸூ ஸ்வரூப பிரகாசாத் –சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–என்றும்
நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து-என்றும்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில் அதுவே வீடு என்றும்
8–அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத-மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன் மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே
9–ஸூ பிரம புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத்–கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே வீடைப் பண்ணி யொரு பரிசே
10-ஞானாஞ்ஞானம் நிராசன பிரசாதாயாத் –உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்-
——–
வைலக்ஷண்யாத் ஸூ மூர்த்தே மகுட முக மகா பூஷணாதவாத்
ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத் பிரளய ஸகாத் வாத்
உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத் பவ்யத்வாத் சம்பத் நிரவாதிக்கத்தய
நிஷ்டாம் தாஸ்யே ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–100 ஸ்லோகம் –
1-வைலக்ஷண்யாத் ஸூ மூர்த்தே–கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான்
2–மகுட முக மகா பூஷணாத்வாத்–துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்
3–ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத்–திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி
4–பிரளய ஸகாத் வாத்–மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான்
5-உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத்–தண் திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
6–பவ்யத்வாத்–திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே
7-8-9-சம்பத் நிரவாதிக்கத்தய ஆச்சர்ய -திருப் புலியூர் மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–என்றும்
திருப் புலியூர் படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே-என்றும்
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்–என்றும் –
10-நிஷ்டாம் தாஸ்யே –குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே-
ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–
——
ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத் அமல தன வாமனத்வேஷத
ஆபத் பந்து த்வாத் ஆச்சர்ய பாவாத் அஹித நிரஸனாத்
லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே ஆதவ் ஸயினித்வ யோகாத்
ஸ்ரீத துரித ஹ்ருதே அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —101–
1–ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத்–நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
2–அமல தன–புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது
3-வாமனத்வேஷத–எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
4-ஆபத் பந்து த்வாத்–இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
5–ஆச்சர்ய பாவாத்–இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
6—அஹித நிரஸனாத்–நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
7–லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே–முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடி
8–ஆதவ் ஸயினித்வ யோகாத்–நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான்
9-ஆஸ்ரித துரித ஹ்ருதே–தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
10-அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே
——
சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ஸ்ப்ருஹ ஏவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் – –102-
தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் போலே
பக்த ஸுலபன்
பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன்
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர்
——
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்—ஸ்ரீ தேசிகன்-
த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-
பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல்
——
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-
அவதாரிகை –
இதில்
அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கித்த அதி சங்கியைப் போக்கின படியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் –
அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட
யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற
தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -என்கை –
தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-
வியாக்யானம்–
தேவனுறை பதியில் -சேரப் பெறாமையால்-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன்
ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே
புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்து –
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
அதாவது –
க்யாத ப்ராஜ்ஞ சங்கே மத்பாக்ய சங்ஷ்யாத் -என்னும்படி
உமருகந்த உருவம் நின்னுருவமாகி -என்று தொடங்கி-அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இறந்ததும் நீயே -என்று தொடங்கி -அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இப்படி-ஸ்வரூபத்திலும்-குணத்திலும்-அதிசங்கை பண்ணின படியை அடி ஒற்றின படி -என்கை –
தெளிந்த
இப்படி-ஆஸ்ரித பாரதந்த்ர்யத்திலும்-சர்வ நிர்வாஹகத்வத்திலும் பிறந்த இஸ் சங்கை நிவ்ருத்த மாம்படி
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி –
மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசி ப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து -என்கை-
தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் –
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —
———
அவதாரிகை –
இதில் -ஸ்ரீ ஆழ்வார் ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற-நங்கள் வரிவளையை-அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி
அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க
நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை —
நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-
வியாக்யானம்–
நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய –
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து போரும் மால் அறிய -என்னுதல்
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்னுதல் –
உள்ளத்தே உறையும் மால் -இறே –
இவர் கருத்தையும் வீற்று இருந்தாலும் – இப்படி சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் அறியும் படி
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால் –
இந்த விபூதியிலே – பாசங்கள் நீக்கி -என்னும்படி-பண்டே
ஏறாளிலும்-
மாலுக்கு வையத்திலும் கை கழன்ற இவற்றில் ஆசை –
அவற்றை உபேஷித்து இருக்கிற நமக்கு-நாம் அறியாமல்-தான் அறிந்ததாக
சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் அத்தசையிலே —
அதாவது –
ஹன்யாமஹா மிமாம் பாபாம் –என்று-தாயோடு உறவு அறுத்து
ராஹ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்றும்
நைச்சத் ராஜ்ஜியம் -என்றும்-நசை அற்று
சித்ரகூடத்திலே சென்று-சிரஸா யாசித்து பாதுகைகளைப் பெற்றால் போலே
இவரும்-
வேங்கட வாணனை வேண்டிச் சென்று சங்கம் சரிந்தன சாயிழந்தேன் -என்றும்
கோல்வளையோடு மாமை கொள்வான் –என்றும்
கோல்வளை நெஞ்சத் துடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய விழந்து
வைகல் பல்வளையார் முன் பரிசு அழிந்தேன் -என்றும்
கோலம் பலன் என்றும் காண்பதர்னை யுங்களோடு எங்கள் இடை இல்லையே -என்றும்
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி யவனவை காண் கொடானே -என்றும்
நான் கொடுத்தேன் இனி என் கொடுக்கிறேன் -என்றும்
நின்னடையேன் அல்லேன் என்று நீங்கி -என்றும்
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு என்றும் –இப்படி யாயிற்று
அந் நிலையை ஆராய்ந்து உரைத்த படி-
—————
அவதாரிகை –
இதில்-பரிவர் இல்லை என்று கலங்க-பரிவர் உளர் என்று தேற்றின பாசுரர்த்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே
அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே
பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக
பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்
எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட
நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-
நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே
நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய
அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை
அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-
வியாக்யானம்–
அங்கு அமரர் பேண –
ஆங்கு ஆராவாரம் அது -என்னுமா போலே
தேசம் -அது–தேசிகர்கள் -அவர்கள-பரிவின் மிகுதி -அது
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அப்படி -ஸ்ரீ பரமாத்துமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க
அவர் நடுவே வாழ் திரு மாற்கு-இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச
ஒருவரும் இல்லை என்று பயப்பட –
அதாவது –
அங்கும் இங்கும் -என்று தொடங்கி –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய்மகள் –சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே -என்றும்
கனலாழி யரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே —
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் -என்றும்
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே
பரிவர் இல்லை என்று அஞ்ச
ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -என்கிறது –
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச –
அதாவது –
உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கு -என்றும் –
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -என்றும்
கருமா மேனி அன்பன் என் காதல் கலக்கவே -என்றும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -என்றும்
தநுராதாய சகுணம்க நித்ரபிட காதர -என்றும்-ப்ருஷ்ட தஸ்துத நுஷ்பாணிர் லஷ்மணோ நுஜகாமாக -என்னும்படி
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும் உம்மோடு ஒரு பாடு உழல்வான் அடியானும் உளன் என்றே -என்றும்
என் திறம் சொல்லார் செய்வது என் -என்றும்
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -என்றும்
மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
நினைப்பிட்டு அருளுவது என்று அவனைக் கேட்டும்-இப்படி கலக்கத்தாலே அஞ்ச-
எங்கும் பரிவர் உளர் என்னப் –
இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் என –
அதாவது –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்று தொடங்கி -என் செய்வது உரையீரே என்று இப்படி
நம்மை பரிகைக்கு-முமுஷூக்களும்-நித்தியரும் -முக்தரும் உண்டு –
நாம் தாம் தரத்தைக் கொண்டு ஷீர சிந்துவை ஷூபிதமாம் படி
கடைந்த மகா பாஹூகம் என்று தன் மிடுக்கைக் காட்ட –
பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்
நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —
ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –
—————
அவதாரிகை –
இதில் பயம் மறுவல் இடாதபடி தன் சௌர்ய வீர்யாதிகளையும்
சாபா நுக்ரஹ சமர்த்தர் சஹவாசத்தையும் காட்டக் கண்ட படி-பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து
ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே
ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான
மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க
அவர்களும் குழைச் சரக்காம் படி
பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று
சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை
ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து
அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று
தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-
வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-
வியாக்யானம்–
வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் –
வார்கடா வருவி -என்று தொடங்கி —
கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் –
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் –
அத்தாலே
அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
நல்ல நான்மறையோர் -என்றும்
மனக் கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தான் ஒப்பார் வாழ -என்றும்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதியவனி தேவர் வாழ்வமர்ந்த மாயோனை என்றும்
ஜ்ஞானாதி குண பரிபூர்ணராய் இருக்கிற மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிய இருக்கிற இருப்பையும் தர்சியும் என -தர்சித்து –
தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும் –
நல்ல நீண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கூரிய இச்சையோடு ஒழுக்கம் நடைப் பலி இயற்கைத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே என்றும்
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து
நிர்ப்பயராய்
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -அதனுள் கண்டவத் திருவடி -என்று தொடங்கி
திகழ என் சிந்தை உளானே -என்னும்படி வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்று அவன் ரச்யதையும் அனுபவித்து
தானுகந்த மாறன் –
நின் கோலம் கார் எழில் காணல் உற்று ஆழும் -என்று அழகிலே கலங்கினவர்
இப்போது அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –
தாள் சார் நெஞ்சே –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –
சாராயேல் –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் –
மானிடவரைச் சார்ந்து மாய் –
பிரகிருதி வச்யரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து நசித்துப் போ –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது
தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –
————
அவதாரிகை –
இதில் அவனுடைய வடிவு அழகை அனுபவியாமல் அழுத ஸ்ரீ ஆழ்வார்
ஆர்த்தி அதிசய ஸூசக ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மிகவும் நோவு பட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே-பரிதப்த சித்த காத்ரராய்
அவயவ சோபை-ஆபரண சோபை-ஒப்பனை அழகு இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம்
இவற்றின் உடைய வைலஷண்யத்தை பல படியாக வர்ணித்துக் கொண்டு
பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை
மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-
வியாக்யானம்–
மாயன் வடிவு அழகைக்-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை –
கர்மாபிதப்தா பர்ஜந்யம் ஹ்லாதயந்த மிவப்ரஜா -என்னும்படி அனுபவிக்க —
காணாத வல் விடாய்-
கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்றும்
மெய்க் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே -என்றும்
இப்படி பாரிப்பை யுடைய கண்களின் விடாய் தீரப் பருகப் பெறாமையாலே –
பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-மிக்க விடாயை யுடையராய் –
யது அற விஞ்சி –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி
கடல் போலே அது அபி விருத்தமாய் –
அத்தாலே
அழுதலுற்றும் –
அழுது
அலற்றும் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே
பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –
அதாவது –
வாசத் தடம் போல் வருவானை ஒரு நாள் காண வாராய் -என்றும்
கரு மா மாணிக்க நாள் நல் மலை போலே சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
இரங்கி ஒரு நாள் நீ அந்தோ காண வாராய் -என்றும்
முடி சேர் சென்னி யம்மா -என்று தொடங்கி பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால்-
படி சேர் மகரக் குழைகளும் -என்று தொடங்கி -தூ நீர் முகில் போல் தோன்றாயே-என்றும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும்
நல் தேர் தனிப் பாகா வாராய் இதுவோ பொருத்தம் -என்றும்
இருஞ்சிறைப் புள்ளதுவே கொடியா உயரத்தானே –உன்னை எங்கே காண்கேனே -என்றும்
இப்படி-கதா த்ரஷ்யாமி ராமஸ்ய வதனம் புஷ்கரேஷணம் -என்னும்படி
அழுது அலற்றி -தூய புகழ் உற்ற –
சௌந்தர்யாதிகளை-அனுபவிக்கப் பெறாமையாலே
அழுது-அலற்றும் புகழை யுடையராய் –
இதர விஷய அலாபத்தாலே கிலேசிக்கை அயசஸ்சாய்-பகவத் அலாபத்தால் கிலேசிக்கை
ஸ்லாக்கியமான யசஸாய் இறே இருப்பது –
தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் –
இப்படியான யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை
நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே
அற்ற பொழுதானது எல்லியாம்-
அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –
———————
அவதாரிகை –
இதில் இவர் விடாய் தீர் அடுத்து அணித்தாய் வந்திருந்து பின்பு தம்முடனே கலந்தபடி பேசின
ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இவருடைய பெரு விடாய் கெடும்படி இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி
அடுத்து அணித்தாக ஸ்ரீ திருக் கடித் தானத்திலே வந்திருந்து
தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற எல்லியும் காலையில் -அர்த்தத்தை
எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-
வியாக்யானம்–
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என –
ராத்ரிந்திவம் அனுவர்த்தித்த-ஆர்த்தி சமிக்கைக்கு
மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
முந்துற-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா -என்னுமா போலே –
நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு –
நற்புகழ் வேதியர் நான் மறை நின்று எதிர்-கற்பகச் சோலை திருக் கடித் தானம் -என்றும்
செல்வர்கள் வாளும் திருக் கடித் தானம் -என்றும்
தேசத் தமரர் திருக் கடித்தானம் -என்றும்
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –
இந்நிலையைச் சொன்னான் இருந்து –
அதாவது –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றும்
உள்ளம் தோறும் தித்திப்பான் திருவமர் மார்வன்-திருக் கடித்தானைத்தை மருவி உறைகின்ற மாயப் பிரான் -என்றும்
தேசத் தமரர் வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே -என்றும்
நேசத்தினால் நெஞ்சு நாடு குடி கொண்டான் -என்றும்
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -என்றும்
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தனதாயப்பதியே -என்றும்
அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது-கற்பகச் சோலை திருக் கடித் தானம்-மேவி இருப்பது என் நெஞ்சகம் -என்றும்
இப்படி
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை
———
அவதாரிகை –
இதில்-இவர் கருத்தைத் தான் கைக் கொண்டு இவருடனே கலந்த படியைப் பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில் –
இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித் தானத்தே இருப்பைக் காட்டி
சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –
அநந்தரம்-
ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான்
இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி
அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும்
நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து
ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை
இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –
இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-
வியாக்யானம்–
இருந்தவன் தான் வந்து –
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து –
இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து —
இவர் எண்ணம் ஆவது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் -என்கை –
திருந்த விவர் தம் திறத்தே செய்து —
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே
நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து
பொருந்தக் கலந்து –
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் –
இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற வாசி வையாமல்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்றும்
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் -என்றும்
என்னும்படி ஒரு நீராகக் கலந்து –
இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
திகழு மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் -என்றும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்-திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே -என்றும்
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேனே -என்றும்
இப்படி ஆயிற்று-பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் இருந்தபடி -என்கை
கண்ட சடகோபர் –
இப்படி அவன் இனியனாய் இருந்த படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்-இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –
கலந்த நெறி கட்டுரைக்கை யாவது –
அந்யோந்யம் அபி வீஷந்தௌ-என்னும்படி
கண்டு கொண்டு –இருந்தான் -என்றும்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்
கிந்துஸ் யாச்சித்த மோஹயம்-என்னும்படி-மருள் தான் ஏதோ -என்றும்
மாய மயக்கு மயக்கான் -என்றும்
திகழும் தன் திருவருள் செய்தே -என்றும் –
வெறிதே அருள் செய்வர் -என்றும் அருளிச் செய்தவை என்கை-
———
அவதாரிகை –
இதில்-ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை எம்பெருமான் காட்டக் கண்டு பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்
அதுக்கு இடம் அறும்படி
ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ்வாத்மஸ்வரூபம் இருப்பது -என்று
ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற
கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-
கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78-
வியாக்யானம்–
கண் நிறைய வந்து கலந்த மால்-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இக் கலவி –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் –
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து —
திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி –
தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட –
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற
ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –
ஆய்ந்து உரைத்தான் –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -உரைக்காமல்– ஆராய்ந்து உரைத்து –
பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –
அதாவது –
தாசஸ்து-என்றும்
தாசோஹம் -என்னும் படியும்
கண்கள் சிவந்து -என்று தொடங்கி -அடியேன் உள்ளான் -என்றும்
அடியேன் உள்ளான் -என்று தொடங்கி -உணர்வில் உம்பர் ஒருவனே -என்றும்
உணர்வில் உம்பர் ஒருவனே -என்று தொடங்கி -என் உணர்வினுள் இருத்தினேன் -என்று
இரண்டரைப் பாட்டாலும் தனக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே சேஷமாய் இருக்கிற படியையும்
உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து என் உயிரினில் உணர்வினில் நின்ற
ஒன்றை யுனர்ந்தேனே -என்றும்
நன்றாய் ஞானம் கடந்தே -என்றும்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்றும்
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வமும்
ஜ்ஞாத்ருத்வாதிகளும்
போக்யதையும்
ஜ்ஞானானந் தத்வமும்-முதலாக அருளிச் செய்தவை -என்கை –
அது காட்ட -வாய்ந்து உரைத்தான் -காரி மாறன் தன கருத்து –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –
அப்போது -ஆய்ந்து உரைத்த காரிமாறன் தன் கருத்து -என்றாகக் கடவது –
———
அவதாரிகை –
இதில்
ஆத்மாவின் உடைய அந்ய சேஷத்வ நிவ்ருத்தியை ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த படியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி விலஷணமான ஆத்ம ஸ்வரூபம் தான் தனக்கும் உரித்தது அன்றிக்கே
அவனுக்கே -அனந்யார்ஹ -சேஷமாய் இருக்கும் படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
கரு மாணிக்க மலையில் அர்த்தத்தை கருமால் திறத்தில் -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை –
கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்
இந்நிலையை யோரு நெடிதா –79-
வியாக்யானம்–
கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் –
நீல நிறத்தை யுடையவனாய்-ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்
அந்ய சேஷத்வம் இல்லாத கன்யா அவஸ்தையை பஜித்த ஆழ்வார் –
கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –
ஒரு மா கலவி யுரைப்பால் –
அத்விதீயமான விலஷணமான சம்ஸ்லேஷ லஷணங்களை தோழி பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே –
அதாவது –
திருப் புலியூர் அருமாயன் பேர் அன்றி பேச்சிலள் -என்றும்
திருப் புலியூர் வளமே –புகழும் -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினள்–புனை இழைகள் அணிவும் ஆடையும் யுடையும்
புதுக் கணிப்பும் நினையும் நீர்மை யதன்று -என்றும்
திருவருள் கமுகு ஒண் பழத்து மெல்லியில செவ்விதழே
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள -என்றும்
இவற்றாலே
கண்ணன் தாள் அடைந்தாள் இம்மடவரல் -என்றும்
பட வரவணையான் தன நாமம் அல்லால் பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே –
அன்றி மற்று ஒரு உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் என்றும்
இப்படி கலவிக் குறிகளை கூறப் புகுகையாலே -என்கை-
திறமாக அன்னியருக்காகாதவன் தனக்கே யாகும் உயிர் இந் நிலையை –
கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யச்ய கச்யசித் -என்கிறபடியே
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது –
பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை
யோரு நெடிதா –
ஆராய்ந்து போருங்கோள் –
தீர்க்கமாக -என்னுதல் –
தீர்க்கமாக விசாரி என்று தன் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-
——————
அவதாரிகை –
இதில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும்
என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
கீழே-ஆத்மாவுக்குச் சொன்ன ஸ்ரீ பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் தான் நிலை நிற்பது
ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆனால் என்னும் இடத்தை அனுசந்தித்து
அவனுடைய சௌந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களிலே தோற்று அடிமை புக்கு இருக்கும்
ஸ்ரீ பாகவதர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பே எனக்கு புருஷார்த்தம் –
ஐஸ்வர்ய-கைவல்ய-ஸ்ரீ பகவல் லாபங்கள் ஆகிற புருஷார்த்தங்கள்
நான் பற்றின ஸ்ரீ பாகவத சேஷத்வம் ஆகிற பரம புருஷார்த்ததுக்கு
தனித் தனியாகவும் திரளாகவும் ஒப்பாக மாட்டாது –
ஆன பின்பு எனக்கும் என்னுடையார்க்கும் இப் புருஷார்த்தம்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய சித்தமாகச் செல்ல வேணும் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிற நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை
நெடுமால் அழகு தனில் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –
நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு –80-
வியாக்யானம்–
நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு படுமா நிலை யுடைய பத்தர் –
அதாவது –
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் -என்றும்
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ -என்றும்
தனி மா புகழே எஞ்ஞான்றும் –என்று தொடங்கி –
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
கோளுமுடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
தமர்கள் கூட்ட வல் வினையே -என்று தொடங்கி-
கோதில் அடியார் தமர்கள் தமர்கள் தமர்கள் தமர்களாம்-சதிரே வாய்க்க தமியேற்கு -என்றும்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே
குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு வாய்க்க தமியேற்கே -என்றும்
இப்படி உத்துங்கத்வமான வடிவு அழகிலும்
தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –
பத்தர் அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே
அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –
அது கொல்லை நிலமான நிலை கொண்டு –
அந்த பாகவத சேஷத்வம்-சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்
சத்ருனோ நித்ய சத்ருகன -என்கிறபடியே
வியன் மூ வுலகு பெறினும் -என்கிற ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
தானே தானே யானாலும் -என்கிற ஆத்மா பிராப்தி-
செந்தாமரைக் கண் திருக் குறளன் அறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -என்கிற
பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –
————
————–
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூர்ணிகை –226–
க்ருதஞ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து -அங்கும் இங்கும் இல்லை என்று ஆறி இருக்காமல் –
செய் நன்றி பண்ண உந்தி-பிரதி க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்து -தோள்களை ஆரத் தழுவி –
நியத பிரகாரம் -சரீரம் -நாமே நீர் -தன்மையை அவன் காட்ட உணர்ந்து -பிரகாரம் -அப்ருத்தக் சித்தம் –
சீதாப் பிராட்டியை ஜனகர் சமர்ப்பித்தது போலே அஹந்தா அவளே – -அனைத்தும் அவனது சரீரம் என்று உணர்ந்து –
சமர்ப்பிக்க ஒன்றும் இல்லை என்று ஸமாஹிதரானார் –
ப்ராப்ய ப்ராபக ஆபாசகங்கள் ஒழிந்து முதல் படி
ப்ராப்யம் -திருவேங்கடம் நடுவில்
ப்ராப்யம் அவதி -திருவாறன் விளை -கீழே பார்த்தோம்
ப்ராப்யம் ஏக பரர் ஆக்குகிறார்
பயிலும் சேஷிகள் -நெடுமாற்கு அடிமை-அவர்களே போக்யம் -ததீய சேஷத்வம் -பாகவதர்கள் சேஷிகள் –
அவனுக்கே சேஷபூதன் -8-8-/-8–9-உகாரம் நமஸ் அர்த்தம்
ஆந்திர அபிப்ராயம் –பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் -8-10-கொடு மா வினையேன்
அடியார் உடன் கூடும் இது அல்லாமல் பழுதே பலகாலம் போயின என்று அழுகிறார்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
செல்வச் சிறுமீர்காள் -முதலிலே ஆண்டாள்
சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்
பதிகங்கள் சங்கதி –
திருவாறன் விளை–ஆனந்தமாக பாட -தன்னைப் பார்த்து -பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லாமல் வியசனப்பட்டார் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தில் சங்கை -அசேஷ பிரகாரத்வம் -ஸ்வரூபத்திலும் சங்கை–இரண்டும் தஞ்சமாக நினைத்து இருந்தாரே –
அதி சங்கை பண்ணக் கூடாது ஆழ்வீர்-உபகார பரம்பரைகளை காட்ட – ப்ராபக பிரதான பதிகம் –8-1-ஸமாஹிதரானார் –
தனது பாக்ய குறைவு –சீதாப் பிராட்டி போலே -முகம் காட்ட வில்லை –
தமக்கு அந்ய ருசி தவிர்ந்ததை அறிவித்து -அத்தனையும் விட்டேன் -8-2-ப்ராப்ய விரோதிகளும் ப்ராபக விரோதிகளும் இல்லை
8-2-4-பெருங்குளத்துக்கு ஒரு பாசுரம் -குடபால் நின்ற மாயக் கூத்தன்–மங்களா சாசனம் –
கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -8-2-10–பாசுரம் வந்ததும்
பரிவர் இல்லையே கலங்கி -8-3-இதில் வருவார் செல்வார் திரு வாழ் மார்பன் –
அமர்ந்த திருக்கோலம் -ஒரே திவ்ய தேசம் மலையாள திவ்ய தேசங்களில் இது –
நீர் இருக்க சர்வரும் இருந்தது போலே என்று காட்டி அருள –
சுக்ரீவன் கலங்க வீர ஸுர்ய பராக்கிரமம் காட்டியது போலே -மஹா மதிகள் அச்சம் கெட -திருச் சிற்றாறு பதிகம் -8-4-
திகழ என் சிந்தையுள் இருந்தான் -பாசுரம் -அணைக்க முடியாமல் -மாயக்கூத்தா -ஒரு நாள் காண வாராய் -வாசத் தடாகம் போல் -8-5-
இது வரை ஆழ்வார் விடாய்–
மேலே-8-6- பெருமாளுக்கு ஆழ்வார் மேல் உள்ள விடாய் -இப்படி ஆழ்வாரை உருவாக்க எத்தனை ஜென்மங்கள் –
தண்டகாரண்ய ரிஷிகளைக் கண்டு வெட்கி பெருமாள் –
வந்து திருக் கடித்தானாம் நின்றார் -தங்குவீடாக –நாளை வதுவை மனம் -பரதனை ஆசுவாசப்படுத்தி பெருமாள் –
பாண்டவ தூதன் -விதுரர் போல்வார் ஆசுவாசப்படுத்த -குசஸ்தலம் தங்கி -வந்தது போலே
எல்லியும் காலையும் –8-6-திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –
பேற்றுக்கு கிருஷி பண்ணினது இது வரை -பக்தி உழவன்
கிருஷி பலித்தது வேலி போட்டு பாதுகாக்க -8-7–இருத்தும் வியந்து –மூன்று தத்துக்கு பிழைத்து வந்த குழந்தையை
தாய் பார்த்துக் கொண்டே இருப்பது போலே வியந்து இருத்தும் –
கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சை ஆளும் –
பிராதி கூல்யம் போக்கி –அனைத்தையும் அவனே பண்ணி -ஆழ்வார் கிடைப்பாரா தவித்தார் –
சுக்ரீவன் நாதம் இச்சதி -விபீஷணன் கிடைப்பானா -போலே –
கண்களால் பருகுமா போலே பார்த்தார் –
மெய்யே ஆஸ்ரித பாரதந்தர்யம் உடையவர் என்று தெளிந்தார் இத்தால்
இவர் அகலப் பார்க்கும் பிரகிருதி -ஆத்மாவின் வை லக்ஷண்யம் புரிய வைக்க -8-8–கண்கள் சிவந்து –
கரிய வாய் வாயும் சிவந்து -ஆழ்வாரைப் பெற்ற பின்பே சோகம் தீர்ந்து -தலை அசைய குண்டலங்கள் ஒளி வீச
அடியேன் உள்ளான் -இயத்தா ராஹித்யம்-படியே இது என்று குறைக்கலாம் படி அல்லன்-பராத்பரன் –
உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே- பரமாத்மா ஸ்வரூபம் உணர்ந்தீரே ஆழ்வீர்
நியத பிரகாரம்–ஸ்ரீ கௌஸ்துபம் போலே அன்றோ பகவத் சரீரம் -நீர் பிரிந்து போக முடியாதே –
யானும் தானாய் ஒழிந்தானே–
இவ்வளவு நெருக்கம் இருக்க -சேஷ ரசம் அறிந்து -அடியேன் உள்ளான் -அடிமை தன்னை அனுபவிக்க
அநந்யார்ஹ சேஷத்வம் -பர்யந்தம் –வளர -தோழி பதிகம் -மண விலக்கு -குட்ட நாட்டுத் திருப்புலியூர் –இவர் நேர் பட்டாள்-
உகாரம் நமஸ் சப்தார்த்தம் -அநந்யார்ஹத்வம் சம்பந்தம் -அவனுக்கே -நான் எனக்கு உரியன் அல்லேன் -பாரதந்தர்யம் –
அதன் யாதாத்ம்யம் -ஆழ்ந்த பொருள் -ததீய சேஷத்வம் பர்யந்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
பிரியா அடிமை -சயமே அடிமை தலை நின்றார் -கோதிலா அடிமை –
அம்மணி ஆழ்வான் கோசல சாம்ராஜ்யம் வந்தவருக்கு இந்த பதிகம் கால ஷேபம் பட்டர் சாதித்த ஐதிக்யம்
எட்டாம் பத்தால்-
கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்மரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..
(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப் யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )
——————————————-
1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..
(சத்யகாமன் -ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-
வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )
————————————–
1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -8-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்—8-1-4-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்–8-1-7-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக
( கலக்கம் -குண சங்கை -ஸ்வரூப சங்கை -அச்சம் -நான்கும் தீரும் படி )
————————————-
2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
(மலர் அடிப் போதுகளை பிரார்த்திக்க தாள்களை எனக்கே தலை சிறப்பத் தந்தானே )
அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-
வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –
வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –
இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –
தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே –பால-77-30-என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே –
அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-
————————————
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –
ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –
அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே-8-4-10 -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து –
விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வ்யசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகி ஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –
ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே
இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —
————————————————–
4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –
கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-
——————————————
5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-3–என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -8-7-6–என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -8-7-3-என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –
மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-
2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –
3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –
இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –
அது மறுவல் இடாதபடியாக –சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -8-8-4–என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க
(பிரகலாதன் -திரௌபதி -கஜேந்திரன்–மூன்று தப்புதல் பகவானுக்கு
விந்த்யாவாடம் -ஸ்ரீ ரெங்க விஷ விபத்து- கிருமி கண்ட சோழ ஆபத்து -மூன்றும் எம்பெருமானுக்கு )
——————————————————-
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
அதாவது –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5–என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –
நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -8-9-5-என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -8-9-1–என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -8-9-10–என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –
அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –8-10-10-
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே ச பரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-
(தேகாதி இந்திரியங்கள் -காட்டில் விலக்ஷணமான ஞான ஆனந்த மயம்-8-8 -திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே அநந்யார்ஹ சேஷத்வம் ஸ்வரூபம்
ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யம் –நினையும் நீர்மை யது அன்று –
இந்த அளவு என்ற தன்மை நினைக்கவும் முடியாதே -8-9-திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே -அத்யந்த பாரதந்தர்யம் –
அவருக்கே குடிகளாம்–ததீய சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூபம் -8-10-நெடுமாற்கு அடிமை திருவாய் மொழி அர்த்தம்
இனிப் பிறவி யான் வேண்டேன் என்று உபக்ரமித்தவர் ஊழி ஊழி தோறும் பிறந்து
அவர்களுக்கே குடிகளாக செல்ல பிரார்த்தனை -இதுவே நல்ல கோட்ப்பாடு )
—————————————–
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இரு கரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ –
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —
(நமஸ் சப்தம் -அவனுக்கே -ஆர்த்த -அடியாருக்கு அடியார் –திவ்ய தேசமே ப்ராப்யம் –
அடியாருக்கு அடியார் சரம காஷ்டை-இதில் அந்தர் கதம்-
கிம் புந நியாயம் -திவ்ய தேசமே என்பதால் அடியார் அடியார் எல்லை வரை வருமே
உபாதானமே நிமித்தம்-ஏக மேவ அத்விதீயம் சாந்தோக்யம் -உபபத்தேச்ச–ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம்
பிராப்யமும் பிராபகமும் ஒன்றே -இங்கு
ததீய விஷயம் -திவ்ய தேசம் -8-6-திருக்கடித்தானம் -ஏத்த இடர் நில்லா என்பதால் ப்ராபகம்-மண்ணவரும் விண்ணவரும் அடையும் இடம் –
திருவாறன் விளை கீழே -ஆகவே திவ்ய தேசங்கள் எல்லாம் என்றதாயிற்று –
அதன் காஷ்டை-எல்லை நிலம் -8-10- )
( அகாராரத்தம் -8-8-பிரணவம்
நமஸ் சப்தம் -8-9-
நமஸ் அர்த்தம் -8-10-
நாராயண ஆய அர்த்தம் -9-1-/9-2-/9-3-இப்படி ஆறுக்கும் சங்கதி ஈட்டில் உண்டே )
————————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply