ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்
திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –
ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –
வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்
——-
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||-திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், எம்பெருமானார் திருவடிகளில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்–நஞ்சீயர் (பங்குனி உத்தரம்)
வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்–ஸ்ரீ நம்பிள்ளை தனியன்
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை((ஆனி ஸ்வாதி)) தனியன்
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||--பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||-வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.
————————————————————
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை -ஆறாயிரப்படி -திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை -நஞ்சீயர் ஒன்பதினாயிரப்படி
ஸ்ரீ ராமாயணம் பிரக்ரியை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -இருபத்து நாலாயிரப்படி
சுதபிரகாச –பிரக்ரியை -முப்பத்தாயிரப் படி -நஞ்சீயர் -வடக்குத் திரு வீதிப் பிள்ளை ஏடு படுத்த
பன்னீராயிரப்படி -ஸ்ரீமத் பாகவத பிரக்ரியை -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
————-
முதல் பத்து பரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ் வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப் பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –
அதில் சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாஸ்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –
அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்
அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –
—————————–
வீடுமின் முற்றவும் -அவதாரிகை –
இரண்டாம் திருவாய் மொழியில் –இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே 1-ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான
தத் இதர சகல தியாகத்தையும் -2-பஜன பிரகாரத்தையும் 3-அஸ்தைர்யத்தையும் 4-தியாக பிரகாரத்தையும் -5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும் -7-சர்வ ஸமத்வத்தையும் -8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும் -9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –
——
1-3-பத்துடை யடியவர்கு எளியவன்
மூன்றாம் திருவாய் மொழியிலே –முதல் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டிலே நீர் தொறும் பரந்துளன் -என்று நாராயண சப்தார்த்தை ஸூசிப்பிக்கையாலும் –
கீழில் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டில் -வண் புகழ் நாரணன் -என்று நாராயண சப்த வாச்யதையைச் சொல்லுகையாலும் –
தத்வம் நாராயண பர -என்றும் த்யேயோ நாராயணஸ் சதா -என்றும் சகல சாஸ்த்ர நிஷ்க்ருஷ்டமான க்ரமத்திலே-தத்வ ஹிதங்கள் நாராயணனே என்றதாயிற்று –
இப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான ஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
1-தத் உப பாதகமான நவநீத சவ்ர்ய அபதாநத்தையும் -2-அவதார க்ருத சவ்லப் யத்தினுடைய உஜ்ஜ்வல்ய கரத்வத்தையும்
3-அவதார ஆச்சர்யத்தினுடைய துரவபோதத்தையும்-
4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –
5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –
6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –
7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –
8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்
9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்
10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்
உபதேசித்து –
ஏவம் விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –
——-
1-4-அஞ்சிறைய மட நாராய்
நாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் –
அவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -1-போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் -2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் -3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்
4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் -5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –
6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் அநவதிக கிருபையையும்
8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் 9-அதுக்கு அடியான நிருபாதிக பந்தத்தையும் -10-அதூர வர்த்தித்தவத்தையும் உடையனாகையாலே
நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு கடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
இவருடைய ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷமாயும் -அநந்ய ரஷ்யமாயும் -அநந்ய போக்யமாயும் -சேஷிக்கு சர்வ பிரகாரத்தாலும் பார்யாவத் பர தந்திரமாகையாலும்
ஈசுவரனுடைய ஸ்வாமித்வத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாதிகள் ஆகிற ஸ்வ பாவங்களை அனுசந்தித்து சேதனனுக்கு தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வாதி
ஸ்வ பாவங்கள் அவர்ஜ நீயமாய் வருகையாலும் புருஷோத்தம விஷயத்தில் இவருடைய பிரணயம் நாயகன் பக்கல் நாயகி பிரணயத்தோடு
ச ரூபம் ஆகையால் நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்யக் குறையில்லை –
இது பிரிந்த தலைமகள் தூது ஆகையால் கைக் கிளையாய் -ஒரு தலைக் காமமாய் -இருக்கிறது –
—————
1-5-வள வேழ் உலகி
அஞ்சாம் திருவாய் மொழியிலே -இப்படி கடக முகத்தால் இவ் வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான -1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–2-சர்வ
காரணத்வத்தையும் –3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் -4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் -7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் -8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவத்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும் அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –
———
1-6–பரிவதில் ஈசனைப் பாடி
ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில்
தத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக
அங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –2–ஆராதகனுடைய அதிகார
ஸுகர்யத்தையும் —3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்
4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய
ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்
–8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி– ஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –
————–
1-7-பிறவித் துயர் -ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில் அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து
ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –3-பர தசையிலும் அவதாரம்
அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும் 5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் -7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
-8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல
பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆஸ்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –
————
1-8-ஓடும் புள் -இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய லீலா விபூதி சம்பந்தம் அடியான
செவ்வைக் கேட்டைச் செவ்வையாம் படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக -அதுக்கு
1-பிரதமபாவியான நித்ய புருஷ சம்ஸ்லேஷ பிரகாரத்தையும் –
2-நிகில ஆஸ்ரித சம்ஸ்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும் –
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும் -4-ஆஸ்ரித சம்ஸ்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும் –
-5-அந்த சம்ஸ்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ஸ்லேஷத்தையும் –
6-இது சகல சம்ஸ்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும் –
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம் படி கலக்கும் என்னும் இடத்தையும் —
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும் —
9–அவதாரங்கள் ஆஸ்ரித அனுபாவ்யமான அசாதாரண சிஹ்னங்கள் என்னும் இடத்தையும் –
10-ஏவம் வித ஸ்வ பாவன் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான அவனுடைய ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –
———
1-9-இவையும் அவையும் -ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் -பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என் என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க
புஜிப்பிப்பானாக -1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –2-இவருக்கு அந்திகஸ்தனாவது -3-கூட நிற்பது –4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
-5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது -7-தோள்களில் சேர்வது -8-நாவிலே நிற்பது -9-கண்ணுக்குள்ளே யாவது -10-நெற்றியிலே யாவது -11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –
———————————————
1-10-பொரு மா நீள் படை-பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ் வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்
———-
2-1-வாயும் திரையுகளும்-இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———–
2-2-திண்ணன் வீடு-இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாஸ்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –
———
2-3-ஊனில் வாழ் உயிர் -இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –
———–
2-4-ஆடியாடி-நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
2-5-அந்தாமத்து அன்பு-அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –
—————
2-6-வைகுந்தா–ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்
———
2-7-கேசவன் தமர் -ஸ்வ சம்பந்தி பரம்பரா பர்யந்தமாக -ஈஸ்வரன் பண்ணின பக்ஷ பாதத்தாலே-தம்மளவில் அவனுடைய அபி நிவேச அதிசயத்தைக் கண்டு உகந்து-
-1-ஸ்வ சந்தாநிக விஷயத்தில் அவனுடைய பிரசாத விசேஷத்தையும் -2-அதுக்கு அடியான தம்மளவில் பக்ஷ பாதத்தையும் -3–தத் கார்யமான உபகாரத்தையும் –
-4-அவ் உபகாரம் தம் குலத்தில் உல்லார்க்கும் பிராப்தி பர்யந்தமான படியையும் -5-இது அடியாக ஈஸ்வரனுக்குப் பிறந்த உஜ்ஜ்வல்யத்தையும் –
-6-இதுக்கடைய ஹேதுவான க்ருபா பாரவஸ்யத்தையும் –7-அனுபவிக்கைக்கு உறுப்பாக ஸத்வோத்தரமான சித்த பிரதானத்தையும் –
-8-பொல்லா நெஞ்சைப் போக்கினை படியையும் –9-ப்ரேம யுக்தமான நல்ல நெஞ்சிலே புகுந்த படியையும் –
-10-அந்த நெஞ்சு அவனை விடாது ஒழிய வேணும் என்கிற அபேக்ஷையையும் –11-இன்னின்ன படியாக அவன் தன்னை முழுக்க கொடுத்த உதார குணத்தையும் –
-12-இவ் உதார அதிசயம் அதிசயித்த ஞானர்க்கும் அபரிச்சேதயம் –என்னும் இடத்தையும் அருளிச் செய்து –
ஸ்வ விஷயத்தில் ஆதாரம் ஈஸ்வரனுக்கு சம்பந்தி த்ரய சந்தான சம்ரக்ஷண பர்யந்தம் ஆனபடியை
அவனுடைய ஆஸ்ரித ரக்ஷண அர்த்த குண சேஷ்டித பிரகாசகங்களான திருத் துவாதச நாமங்களோடே கூட அருளிச் செய்கிறார் –
————
2-8-அணைவது அரவணை மேல் –
மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –
இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –
————
2-9-எம்மா வீடு -ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –
————
2-10-கிளரொளி -கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –
——————
3-1-முடிச் சோதி-கீழ் இரண்டு பத்தாலும் –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தினுடைய சேஷித்வ ஸித்தமான-ரக்ஷகத்வ போக்யத்வங்கள் சொல்லிற்றாய்
அநந்தரம்-முன்றாம் பத்தாலும் நாலாம் பத்தாலும்
ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தினுடைய பகவத் ஏக சேஷத்வ ஸித்தமான தத் ஏக அநு பவத்வமும்-
தத் ஏக ப்ரியத்வமும்-சொல்லுகிறது –
அதில் தத் ஏக அனுபவத்வ பரமான இம்மூன்றாம் பத்தில் –
1-பகவச் சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்ம சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும்
2-அதுக்கு விரோதியான தேஹ சம்பந்தாதி நிவர்த்த நீயம் என்னும் இடத்தையும்
3-நிவ்ருத்த விரோதிகனுக்கு சேஷ வ்ருத்தி பிரகாரம் பரார்த்த நீயம் என்னும் இடத்தையும்
4-சேஷியினுடைய சர்வாத்ம பாவ ப்ரயுக்தமான சேதனனுடைய அப்ருதக் சித்த பிரகாரத்வம் -சேஷத்வ வேஷம் என்னும் இடத்தையும்
5-ஏவம் வித சேஷத்வ ரசத்தால் வந்த ப்ரேம விகாரத்தையும்
6-சேஷத்வ பிரதிசம்பந்தி அர்ச்சாவதார பர்யந்தம் என்னும் இடத்தையும்
7-தச் சேஷத்வாபி வ்ருத்தி ரூபமான ததீய சேஷத்வ காஷ்டயையும்
8-ததீயா பாரதந்தர்ய நிதானமான தத் அனுபவ அபி நிவேசத்தையும்
9-அனுபவ விசேஷமான வாசிக்க அனுபவ வை லக்ஷண்யத்தையும்
10-சர்வ பிரகார அனுபவ ஸித்தமான ஸமஸ்த விருத்தி நிவ்ருத்தியையும்
அருளிச் செய்து -இச் சேதனனுடைய பகவத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதிக்கிறார் –
இதில் முதல் திருவாய் மொழியில்
சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்துக்கு மூலமான சேஷியினுடைய சர்வ பிரகார பாரம்யத்தை ப்ரதிபாதிப்பதாக
தெற்குத் திருமலையில் கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா சந்நிஹிதரான அழகருடைய திவ்ய சவ்ந் த்ர்யத்தை அபரோக்ஷித்து
1-ஆபரண அவயவ சோபையினுடைய ஸூ கடிதத்வத்தையும் –
2-உஜ்ஜ்வலமான சவ்ந்தர்யத்தினுடைய உபமான ராஹித்யத்தையும்
3-சர்வ பிரகார உஜ்வல்யத்தால் உண்டான ஸர்வேஸ்வரத்வத்தையும்
4-அந்த பாரம்யத்தினுடைய போக்யதாதிசயத்தையும்
5-இந்த வை லக்ஷண்யத்தினுடைய வாசா மகோசர மாஹாத்ம்யத்தையும்
6-ஸமஸ்த வேதங்களாலும் சாகல்ய யுக்தி பண்ண ஒண்ணாமையும்
7-அதிசயித ஞானரான ப்ரஹ்ம ருத்ராதி தேவதா வர்க்கமும் சொல்ல நினைத்தாலும் அவ் உஜ்வல்யத்துக்கு மாலிந்யாவஹம் என்னும் இடத்தையும்
8-அபூர்வனாய் அதிசயித ஞானனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா தலைப் படிலும் அதேஜஸ் கரம் என்னும் இடத்தையும்
9-ஆச்ரித வாத்சல்ய அதிசயத்துக்கு சங்கல்ப முகத்தாலே பண்ணும் ஸம்ஸ்ரித ரக்ஷண பாராம்யமும் திரஸ்கார கரம் என்னும் இடத்தையும்
10ஏவம் விதமான பாரம்யத்தை அறிந்து ஈஸ்வர அபிமானிகளும் ஆஸ்ரயிக்கை ஏற்றம் அல்ல என்னும் இடத்தையும்
அருளிச் செய்து பரம சேஷியான ஈஸ்வரன் சந்நிதியில் தச் சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்தையும் உபபாதித்து அருளுகிறார் –
—————
3-2-முந்நீர் ஞாலம்-இப்படி ஸ்வா பாவிகமான சேஷத்வத்துக்கு பிரதிசம்பந்தியான சேஷியினுடைய திவ்ய சவ்ந்தர்யாதிகளை அனுபவிக்கப் ப்ராப்தமாய் இருக்க
அது ஸித்தியாது ஒழிகிறது தத் விரோதியான சரீர சம்பந்தாதிகள் அடியாக என்று அனுசந்தித்து -தந் நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே
1–அது அவன் தனக்கு விதேயமாம் படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2–ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கின அபதானத்தையும்
3–ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
4—ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான வ்யாப்தியையும்
5–அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
6— ஸமஸ்த சேதனரும் ஸ்வ அதீனராம் படியான பாரம்யத்தையும்
7– வ்யாப்தியிலும் கார்ய காரமான சவ்லப்யத்தையும்
8—அந்த சவ்லப்யம் அடியாக வந்த குண விக்ரஹ உஜ்வல்யத்தையும்
9–ஞான அஞ்ஞான விபாகம் இல்லாத படியான ௭உபகாரகத்வத்தையும்
10—அதுக்கு பிரகாசகமான சகல வேத வேத்யத்வத்தையும் —
அனுசந்தித்துச் சொல்லிக் கூப்பிட்டு -ஸ்வ சந்நிதியாலே ஆர்த்தி சமிப்பித்த ஈஸ்வரனை அபரோக்ஷித்து ப்ரதிஷ்டிதராகிறார்-
————
3-3-ஒழிவு இல் காலம் எல்லாம்-இவர் சேஷத்வ விரோதியான தேஹ சம்பந்தாதிகளை நிவர்த்திப்பிக்க வேணும் என்று அபேக்ஷிக்க -நிவ்ருத்த விரோதிகரைக் கொள்ளும்
சேஷ வ்ருத்தியைக் கொள்ளுகைக்கு அன்றோ நாம் சந்நிஹிதராயிற்று என்று பெரிய திருமலையில் நிற்கிற நிலையை பிரகாசிப்பித்த ஈஸ்வரனுக்கு
சர்வ பிரகார சேஷ விருத்தியும் பண்ணுகையே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் என்று அறுதியிட்டு அதிலே உத்யோகத்தைப் பண்ணுவதாக –
1–கைங்கர்ய பிரதிசம்பந்தியினுடைய சர்வாதிக சேஷித்வத்தையும்
2–சேஷியினுடைய குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும்
3–சர்வ பிரகார விலஷணனுடைய ஸூரி சேவ்யத்வத்தையும்
4-இப்படி சர்வாதிகனுடைய சீலாதிசயத்தையும்
5–ஸீலவானுடைய போக்யதையையும்
6–போகார்த்தமான ஆஸ்ரயண சவ்கர்யத்தையும்
7–அவன் நிற்கிற திருமலை தானே பரம சாம்யப்ரதம் என்னும் இடத்தையும்
8–அது தன்னை அனுபவிக்கவே பிரதிபந்தகம் ஸ்வயமேவ நிவ்ருத்தமாம் என்னுமத்தையும்
9–அந்த தேச ஸம்பந்தத்தாலே தேசிகனான ஈஸ்வரனும் அநிஷ்ட நிவர்த்தகனானான் என்னுமத்தையும்
10–அவன் தேசமான திருமலை தானே பரம ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து -ஏவம் வித தேச வர்த்தியான ஈஸ்வரன் பக்கல் கைங்கர்யமே ஸ்வரூப அனுரூப புருஷார்த்தம் என்று உத்யுக்தராகிறார் –
————
3-4-புகழும் நல் ஒருவன் என்கோ!-நாலாம் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி சகல சேதன அசேதன விசிஷ்டனான நாராயணன் ஆகையாலே-
அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே
அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே
தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –
————
3-5-மொய்ம் மாம் பூம் பொழில் -அஞ்சாம் திருவாய் மொழியில் –கீழ்ச் சொன்ன பகவத் பிரகார தயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரசாதிசயத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டராய்
1-பிரதிசம்பந்தியான சேஷியினுடைய ஆபந் நிவாரகத்வத்தையும் –
2-அஸூர நிரசன சாமர்த்யத்தையும்
3-ஆர்த்த சம்ரக்ஷணத்தையும்
4-அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அவதார ப்ரயோஜனத்தையும்
6-அதிசயித போக்யதையையும்
7-ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
8-அர்ச்சாவதார சவ்லப் யத்தையும்
9-உபய விபூதி நாதத்வத்தையும்
10-விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் —
அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகரஷத்தாலே சம்ப்ராந்த ராகாதாரை நிந்தித்தும்– உகந்து ஆடுவது பாடுவதாவாரை உகந்தும்–
இந்த சேஷத்வ சாரஸ்யத்தை உபபாதிக்கிறார்
—————
3-6-செய்ய தாமரைக் கண்ணன்-ஆறாம் திருவாய் மொழியில் -கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதி விகாரம் உத்தேச்யம் என்று அருளிச் செய்தவர்
அந்த இனிமை இல்லாமையால் அவிகிருதரான சம்சாரிகளுக்கும் பகவச் சேஷத்வத்தை உபதேசிப்பதாக
சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான சவ்லப் யத்தை உப பாதிப்பதாக நினைத்து
1-அந்த சவ்லப்யத்துக்கு ஊற்றான ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமான அவதார கந்தத்வத்தையும்
3-அவதீர்ணனுடைய அதிசயித சேஷ்டிதத்வத்தையும்
4-ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயணீயனான ஸீலாதிசயத்தையும்
5-அவதார திசையிலும் அகில விபூதித்வம் தோற்றும் படியான ஆதிக்யத்தையும்
6-ஆஸ்ரித விஷயத்தில் அதிசயித வாத்சல்யத்தையும்
7-நிரவதிக போக்யதையும்
8-பற்றினாரை நழுவ விடாத பக்ஷபாதத்தையும்
9-சர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஆஸ்ரிதர் இட்ட வழக்கான அர்ச்சாவதார பாரதந்த்ரியத்தையும்
10-ஆஸ்ரித பரதந்த்ரனான அவன் பக்கல் தமக்குப் பிறந்த அபி நிவேசத்தையும்
அருளிச் செய்து பகவச் சேஷத்வத்தை பிரதிபாதித்து அருளுகிறார் –
———
3-7-பயிலும் சுடர் ஒளி-ஏழாம் திருவாய் மொழியிலே –
கீழ் சேஷத்வ பிரதிசம்பந்தியினுடைய சேஷித்வம் அர்ச்சாவதார பர்யந்தம் என்று அருளிச் செய்தாராய் –
அந்த சேஷத்வ ப்ரீதி அபி வ்ருத்தியாலே சேஷத்வம் தத் விஷய மாத்திரத்திலே நில்லாதே ததீயா பர்யந்தமாக அபி வ்ருத்தமாக-
அவர்களுடைய ஜென்ம வ்ருத்தாதி நிரபேஷமான பகவத் சம்பந்த உதகர்ஷத்தையே பற்றி அந்த உதகர்ஷத்துக்கு அடியான
1-சர்வேஸ்வரனுடைய ஷீரார்ணவ ஸாயித்வத்தால் வந்த பாரம்யத்தையும்
2-அவதார விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
3-அந்நிலையில் விபூதி த்வயத்துக்கும் அனுபாவ்யமான போக்யதையையும்
4-போக்யதா வர்க்கமான ஆபரண சோபையையும்
5-ஆஸ்ரித அபேக்ஷித அர்த்த பிரதத்வத்தையும்
6-அநந்ய பிரயோஜனர்க்குத் தன்னைக் கொடுக்கும் உபகாரகத்வத்தையும்
7-கொடுக்கும் இடத்தில் ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து அடிமை கொள்ளும் படியையும்
8-அடிமைக்கு விஷயமான ஸ்ரீ யபதித்வத்தையும்
9-ஆஸ்ரித தோஷ நிவர்த்தகமான பாவநத்வத்தையும்
10-ஆபத் ஸகத்வத்தையும்
அனுசந்தித்து -இந்த குணங்களில் ஈடுபட்ட பாகவதருடைய சம்பந்தி பரம்பரா பர்யந்த சேஷத்வத்தை அனுபவிக்கிறார் –
3-8-முடியானே –
எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் அனுபவித்த பாகவத சேஷத்வத்துக்கு அடியான பகவத் குண வைலக்ஷண்யமானது இவர் திரு உள்ளத்திலே அனுபவ அபி நிவேசத்தை ஜநிப்பிக்க
அத்தாலே ப்ரஸ்துதமான பாகவத சம்ச்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக-நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற
அனுபவ அலாபத்தாலே ஆர்த்தி பிறந்து
1-அனுபாவ்யனுடைய சேஷித்தவாதி ஆகாரத்தையும்
2-அநிஷ்டத்தைப் போக்கி அநந்யார்ஹம் ஆக்கும் படியையும்
3-ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
4-அவதார மூலமான அநந்த ஸாயித்வத்தையும்
5-ஆஸ்ரிதற்கு முகம் காட்டுகைக்கு ஈடான வாஹனத்வதையையும்
6-அவர்களுக்கு அனுபாவ்யமாம் படி கையும் திருவாழியுமான அழகையும்
7-இவ் வாஹன ஆயுத விசிஷ்ட வஸ்துவே தாரகாதிகளான படியையும்
8-அனுபவிப்பிக்கும் சவ்ந்தர்ய ஸ்வ பாவத்தையும்
9-அனுபவ பிரதிபந்தக நிவ்ருத்தி பிரகாரத்தையும்
10-நிவர்த்தனத்தில் அனாயாசத்தையும்
அனுசந்தித்து -அனுபவம் கிட்டாத ஆர்த்தியாலே அதிசயிதமாகக் கூப்பிடுகிறார் –
——
3-9-சொன்னால் விரோதம்-ஒன்பதாம் திருவாய் மொழியிலே –
இப்படி தாமும் கரண க்ராமமும் கூப்பிட்ட படியைக் கண்ட ஈஸ்வரன் -லோகம் அடங்க இதர ஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படா நிற்க –
நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணினோமே -என்று இவருடைய பேற்றை பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய்
1-அவனுடைய ஸ்துத்யத்துவக்கு ஏகாந்தமான சவ்லப்ய அதிசயத்தையும் ‘
2-ஸூ லாபனுடைய சம்பந்த உத்கர்ஷத்தையும்
3-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
4-ஸ்துத்யதைக்கு அனுரூபமான -ஏகாந்தமான -சேஷித்வத்தையும்
5-அபேக்ஷித பல ப்ரதத்வமான உதார குண அதிசயத்தையும்
6-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
7-ஸ்துதி விஷயமான குண நாம பூர்த்தியையும்
8-அவனுடைய ப்ராப்ய பாவத்தையும்
9-புருஷார்த்த ப்ரதத்வத்தையும்
10-ஜகத் ஸ்ரஷ்ட்ருதவத்தையும்
அனுசந்தித்து -எவம்ப்தா விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணாதே -நிஷ்பிரயோஜனமான இதர ஸ்தோத்திரங்களைப் பண்ணி அநர்த்தப் படுகிறிகோளே–என்று
லௌகிகரைக் குறித்து ஸ்வ நிஷ்டையை உபதேசித்து அருளுகிறார் –
——
3-10-சன்மம்-பல பல -பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் -இதர ஸ்தோத்ரத்தினுடைய ஹேயத் வாதிகளையும் பகவத் ஸ்தோத்ரத்தினுடைய வை லக்ஷண்யத்தையும் உபதேசித்து
இப்படி விலக்ஷணமான பகவத் விஷயத்தை நாம் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கப் பெற்றதே என்று அதி ப்ரீதராய்
1-அனுபாவ்யனான சர்வேஸ்வரனுடைய அவதார பலமான விரோதி நிரசனத்தையும்
2-அவதாரத்துக்கு மூலமான ஷீரார்ணவ ஸாயித்வத்தையும்
3-அனவதிக அதிசயையான சர்வவித போக்யதையும்
4-போக பிரதி சம்பந்தி ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அர்த்திகளுக்கு அர்த்திதார்த்த காரித்வத்தையும்
6-அவதார திசையிலும் அதிமானுஷ சேஷ்டிதத்தையும்
7-அவதார நிர்வாஹ்யமான லீலா விபூதி யோகத்தையும்
8-இந்த நிலையிலும் பரதவ ஸூ சகமான ஸ்ரீ லஷ்மீ பதித்தவத்தையும்
9-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும்
10-சர்வாந்தராத்மத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரனை சர்வ பிரகார அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு
ஒரு வைகல்யம் -விச்சேதம் -மன பீடை -மிறுக்கு–கிலேசம் -அப்ரீதி -அலமாப்பு -துக்கம் -அவசாதம் -விநாசம் -என்று சொல்லப் பட்ட
ஸமஸ்த துரிதங்களும் இல்லை என்று அதி ப்ரீதராய் -இப்பத்துக்கு தாத்பர்யமான
ஸ்வரூபத்தினுடைய தத் ஏக அனுபவத்தையும் உபபாதித்து முடிக்கிறார் –
——
4-1-ஒரு நாயகமாய்-மூன்றாம் பத்தில் –
இப்படி பகவச் சேஷ பூதனான தத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதித்த அநந்தரம் -தத் ஏக பிரியத்வத்தை நாலாம் பத்திலே ப்ரதிபாதிப்பதாக –
அஸ்திரமாய் -அல்பமான-ஐஸ்வர்ய -கைவல்யங்களில் காட்டில் பகவத் ப்ராப்தியினுடைய உத்கர்ஷ உபதேசத்தாலே சேதனனுடைய அநந்ய போக்யத்வத்தையும் –
அவனுடைய பஹு வித போக்யத்வத்தாலே இவனுக்குப் பிறந்த போக இச்சையையும்
இவனுடைய ஆத்மாத்மீயங்கள் தனக்குப் போக்யமாம் படி ஈஸ்வரன் தான் இவனோடு கலந்த ப்ரணயத்தையும்
அனுபவ அலாபத்தில் துல்ய சம்பந்தி வஸ்து தர்சனத்திலும் ஸ்மாரகத்வேந ஆர்த்தி பிறக்கும் படியையும்
ஆர்த்தி சமிக்கும் படி ஸம்ஸ்லேஷித்த போக்ய விஷயத்தில் ஸ்தோத்ரத்தாலே போத்தாவுக்கு யுண்டான ஹர்ஷ உத்கர்ஷத்தையும்
அவசன்ன தசையிலும் அந்நிய ஸ்பர்சம் பொறாத படியான தத் அனுபந்தமே ஆச்வாஸ கரம் என்னும் இடத்தையும்
போக்ய பூதனுடைய குண அனுபவ இச்சையாலே தீவிர ஸைதில்யம் பிறக்கும் படியையும்
அவன் ஆதரியாத ஆத்மாத்மீயங்கள் அஸஹ்யங்கள் ஆகையாலே அநாதரணீயங்கள் என்னும் இடத்தையும்
அதி துஸ் ஸஹ சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்ரீ யபதி சரணங்கள் அதிசயித புருஷார்த்தம் என்னும் இடத்தையும்
சர்வாதிக சேஷியானவனுடைய கைங்கர்யமே உத்கர்ஷமாய் உசிதமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து சேஷபூதனுடைய தத் ஏக பிரியத்வத்தை உபபாதிக்கிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில்
சேதனனுடைய அனன்யா போக்யத்வத்தை ப்ரதிபாதிப்பதாக போக்ய பூதனுடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சர்வாதிகாத்தவ ஸூ சகமான ஸ்ரீ யபதித்வத்தையும்
போக்யத்வ விசிஷ்டமான ஸுலப்யத்தையும்
போக பிரதிபந்தக விரோதி நிவர்த்தநகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹாதி யோகத்தையும்
அவதார போக்யதைக்கு மூலமான அர்ணவ ஸாயித்வத்தையும்
அதுக்கும் அடியான பரத்வ உத்கர்ஷத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
பல பிரதத்வ ஸூ சகமான கருட த்வஜனத்வத்தையும்
நிரவதிக நியந்த்ருத்வத்தையும் அருளிச் செய்து -இப்படி ப்ராப்ய பூதனான ஈஸ்வரனை –
அஸ்திரமாயும் அல்பமாயும் உள்ள ஐஸ்வர்ய கைவல்யங்களில் அகப்படாதே ஆஸ்ரயிங்கோள் என்கிற
உபதேச முகத்தால் ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அருளிச் செய்கிறார் –
———
4-2-பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு-இரண்டாம் திருவாய் மொழியிலே
கீழ் -இதர புருஷார்த்தங்களுடைய அபகர்ஷ உபதேச பூர்வகமாக ஈஸ்வரனுடைய பரம ப்ராப்யத்வத்தை உபதேசிக்கையாலே
ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அனுசந்தித்து அவ்வழியாலே பஹு வித சஹஜ போக்ய ஆகார யுக்தனான
சர்வேஸ்வரனுடைய விப்ரக்ருஷ்ட அபதானங்களில் போக அபி நிவேச யுக்தராய்
அவனுடைய வடதள ஸாயித்தவத்தையும்
கோபிகா லீலா சங்கித்வத்தையும்
த்ரை விக்ரம பிரகாரத்தையும்
பரத்வ வைபவத்தையும்
சப்த ருஷப நிரசனத்தையும்
ஸ்ரீ வராஹ ப்ராதுர் பாவத்தையும்
அம்ருத மதன வ்ருத்தாந்தத்தையும்
லங்கா நிரசனத்தையும்
அசாதாரண சிஹ்னங்களையும்
ஆபரண சோபையையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே போக்யதா ஸூ சகமான திருத் துழாய் விஷயமாகத்
தமக்குப் பிறந்த ஆதர விசேஷத்தைப் பரிவார் பார்ஸ்வஸ்தர்க்குச் சொல்லுகிற பாசுரத்தை விஸ்லிஸ்டையான நாயகியினுடைய
ஆர்த்தி அதிசயம் கண்டா நாள் தாயாரானவள் வினவினார்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
4-3-கோவை வாயாள் பொருட்டு -மூன்றாம் திருவாய் மொழியிலே
இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி ஸம்ஸ்லேஷித்த சர்வேஸ்வரன் இவருடைய அபி நிவேச ஹேதுவான அநு ராக விசேஷத்தைக் கண்டு
அவனும் இவர் பக்கலிலே அத்யந்த அபி நிவிஷ்டனாம் படி அநு ரக்தனாம் படியை அநு சந்தித்த இவர்
அவனுடைய பிராப்தி பிரதிபந்தக ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ரக்ஷகத்வ ப்ரயுக்த சம்பந்தத்தையும்
சர்வாத்ம பாவாதியால் வந்த நாராயணத்வத்தையும்
அநு கூல சத்ரு நிராசன சாமர்த்யத்தையும்
ஸுசீல்யாதி குண யோகத்தையும்
ரக்ஷண உபகரண வத்தையையும்
அநந்யார்ஹம் ஆக்கி அடிமை கொள்ளும் ஸ்வ பாவத்தையும்
சர்வ வ்யாபகத்வத்தையும்
பாரமார்த்திக பரத்வ உஜ்ஜ்வல்யத்தையும்
அபரிச்சேத்ய மஹாத்ம்யத்தையும்
அநுபவித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஸ்ரக் வஸ்திர ஆபரணங்கராகாதிகளோ பாதி
தனக்கு அதிசயித போக்யமாம் படி விரும்பின பிரணயித்தவத்தை அருளிச் செய்து ஸந்துஷ்டாராகிறார்
———
4-4-மண்ணை இருந்து துழாவி,-நாலாம் திருவாய் மொழியிலே இப்படி மானஸ ஸம்ஸ்லேஷத்தாலே அனுபவிப்பித்து கற்பித்த ஈஸ்வரனுடைய
பிரணயித்வ குணத்தை அனுசந்தித்த ஆதார அநு ரூபமான பாஹ்ய அனுபவ அபி நிவேசத்தைப் பண்ணி
அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர் தம்முடைய ஆர்த்தி சாந்தி ஹேதுவான ஸ்வ பாவங்களை யுடையனான ஈஸ்வரனுடைய
விபூதி திவ்ய யோகத்தையும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்தையும்
பிரதாப அநுக்ரஹ வத்தையும்
உஜ்ஜவலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்திகளையும்
அநு பாவ்ய சேஷ்டிதங்களையும்
பரத்வ சிஹ்னங்களையும்
ஐஸ்வர்ய அபி ரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும்
ஆச்ரித விஷயத்தில் உபகாரகத்வத்தையும்
ஸுலப்ய பாரம்யத்தையும்
அநு சந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு சம்பந்திகளாயும் சத்ருசங்களாயும் உள்ள பதார்த்த தர்சனத்தாலே
ஈடுபட்ட பிரகாரத்தை பார்ஸ்வஸ்தரான பரிவர் சொன்ன பாசுரத்தை நாயகனைப் பிரிந்த தலையுடைய
ஆற்றாமை கண்ட நல் தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
———
4-5-வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, -அஞ்சாம் திருவாய் மொழியில் –
கீழ் சத்ருசமாயும் சம்பந்தியாயும் உள்ள வஸ்துக்களுடைய தர்சனத்தாலே பிரமிக்கும் படி இவர்க்கு உண்டான
ஆர்த்தி அதிசயம் தீருகைக்காக சர்வேஸ்வரன் தன்னுடைய நிரதிசய விபூதி வைலக்ஷண்யத்தையும்
மஹா உதார சேஷ்டிதங்களையும் அனுபவிக்க அனுபவித்து ப்ரீதராய் –
அவனுடைய அகில லோக நிர்வாஹகத்வத்தையும்
அதுக்கு அடியான லஷ்மீ பதித்தவத்தையும்
உபய ஸித்தமான ஆனந்தாதி குண யோகத்தையும்
இக்குணாதி போக்தாக்களை காத்தூட்டும் வாஹன ஆயுதவாஹத்தையும்
போக அனுகுணமான ஞான ப்ரேமாதி பிரதத்வத்தையும்
அஸ் கலித ஞானர்க்கு அநு பாவ் யமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
இந்த போக்யதைக்கு சர்வ அவஸ்தையிலும் ஓத்தாரும் மிக்காரும் இல்லாத மேன்மையையும்
அதுக்கு உபபாதகமான விபூதி திவ்ய யோகத்தையும்
தத் விஷயமான வ்யாப்த்யாதிகளையும்
வ்யாப்ய ரக்ஷண அர்த்தமான தர்சனீய வியாபாரங்களையும்
அனுசந்தித்து -இப்படி பரி பூர்ணனான சர்வேஸ்வரனை அனுபவித்துப் பிறந்த ஹர்ஷ அதிசயத்தாலே ஸூரிகளைப் போலே
வாய் விட்டுப் புகழ்ந்து இந்தளத்திலே தாமரை போலே இங்கே இந்த அனுபவம் கிடைக்கையாலே
எனக்கு சத்ருசம் உண்டோ என்று தமக்குப் பிறந்த செருக்கை அருளிச் செய்கிறார் –
———
4-6-தீர்ப்பாரை யாம் இனி-ஆறாம் திருவாய் மொழியில்
கீழில் திருவாய் மொழியில் இவருக்குப் பிறந்த ஹர்ஷ ப்ரகர்ஷம் மானஸ அனுபவ ஜெனிதமாகையாலே தத் அனுரூபமாக
அவனுடைய ஆலோகநா லாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாத அவசாதம் அதிசயிக்க
அநு பாவ்யனான அவனுடைய ஆஸ்ரித விஷய பக்ஷ பாதத்தையும்
ஆதிக்ய ஸூ சகமான அசாதாரண சிஹ்னங்களையும் அதிசயித போக்யத்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
அத்யாச்ரயமான உபகாரகத்வத்தையும்
நித்ய ஸூரி சேவ்யத்வத்தையும்
நிரதிசய ஸுலப்யத்வத்தையும்
நித்ய பிராமண கம்யத்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதமானவன் நம்மை அனுபவிப்பியாது ஒழிவதே என்று அப்ரக்ருதிங்கதராய் மோஹிக்க
பார்ஸ்வஸ்தரான பரிவார் இவரை ஆஸ்வசிப்பிக்கத் தேடி பரிவின் கனத்தாலே அமார்க்கங்களாலே யாகிலும் பரிஹரிக்கப் போமோ
என்று உத்யோகிக்க இவர் பிரகிருதி அறிந்த பிரபல ஸூ ஹ்ருத்துக்களான ஸ்ரீ மதுரகவி போல்வார் அத்தை விலக்கி
பகவத் திரு நாம சங்கீர்த்தன ததீய பாத பராஸ் ஸ்பர்சாதிகளாலே பரிஹரணீயம் என்று ப்ரதிபாதித்த பாசுரத்தை
நாயகனைப் பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வேறுபாடு கண்டு ப்திரா பன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி வார்த்தை கேட்டு
வெறியாட்டாலே பரிஹரிக்கத் தொடங்கின செவிலி தொடக்கமானாரைப் பார்த்து இவள் ப்ரக்ருதி அறிந்த பிரபல்ப்பையான தோழி
அவர்கள் உத்யோகத்தை விலக்கித் தான் இப்போது நிரூபித்து நோயின் நிதானம் அறிந்தாளாக பாவித்து
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனை அநு சந்தித்துப் பிழைக்குமது ஒழிய இது பரிஹாரம் அல்ல -என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
4-7-சீலம் இல்லாச் சிறியே னேலும்-ஏழாம் திருவாய் மொழியிலே
கீழ் ஏத்துதலும் தொழுதாடும் -என்று பகவத் நாம ஸ்ரவணத்தால்பிறந்த ஆச்வாஸம் அவனைக் கிட்டி அனுபவிக்கைக்கு உடல் அன்றியே
அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேச அதிசயத்தை யுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநு பாவ்யமான சர்வேஸ்வரனுடைய
அகில வஸ்து சத்தையும் அழியாமல் நோக்கும் அசாதாரண சம்பந்தத்தையும்
அநந்யார்ஹமாக்கி அனுபவிப்பிக்கும் உதார குணத்தையும்
அநந்யார்ஹமான ஆஸ்ரிதர் பக்கல் அத்யந்த பவ்யதையையும்
அவர்களுக்கு ஆஸா ஜநகமான ஆபி ரூப்யாதி அதிசயத்தையும்
அரும் தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதம் கொடுக்கும் படியையும்
ஆசைக்கு தீபகமான ஆந்திர ஸ்திதியையும்
அந்த அவஸ்தா நத்தினுடைய அதிசயித போக்யதையையும்
போக்யதா நிபந்தமான அபிநிவேச ஜனகத்வத்தையும்
அபி நிஷ்டர்க்கு அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னவத்தையும்
அகில வேத வேத்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான போக்ய பூதன் பக்கல் அனுபவ அபி நிவேசத்தால் பிறந்த ஆர்த்யதிசயத்தை அருளிச் செய்கிறார்
———
4-8-ஏறு ஆளும் இறையோனும்,-எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் ஆசைப்பட்டுக் கூப்பிட்ட படியில் வந்து முகம் காட்டக் காணாமையாலே -அவன் அநாதரித்தானாக நினைத்து
ஆஸ்ரித அநாஸ்ரித விஷயங்களில் அபீஹம்யத்வ அப்ரதிருஷ்யத் வத்தாலுண்டான உபாய பாவத்தையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவத்தால் வந்த உபேயத்வ பூர்த்தியையும்
உபாய கார்யமான அனுகூல சத்ரு நிரசனத்தையும்
அபிமத விரோதி நிரசனத்தையும்
அஸஹ்ய விரோதி நிரசனத்தையும்
அர்த்த உபதேசத்தால் அநந்யார்ஹம் ஆக்கும் அறிவுடைமையையும்
ஊத்துங்க விரோதி விதாரணத்தையும்
விரோதி சதா விநாஸகத்வத்தையும்
விரோதி சரீர விஹஸ்த தாகரணத்தையும்
அசேஷ விரோதி கண்டநத்தையும்
அனுசந்தித்து -இப்படி ஆஸ்ரித உபகாரகன் அநாதரித்த ஆத்மாத்மீயங்களாலே எனக்கு ஒரு கார்யம் இல்லை என்று
தமக்குப் பிறந்த அநாதர விசேஷத்தை நாயகனான ஈஸ்வரன் ஆதரியாத ஆத்மாத்மீயங்களை
அநாதரிக்கிற நாயகி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –
—————
4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ஒன்பதாம் திருவாய்மொழியிலே-இப்படி அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம் பிறந்த அளவிலும்
அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உஸாத் துணையாகைக்கு யோக்யர் அல்லாதபடி சம்சாரத்தில் உள்ளாறும் அதிசயித துக்க மக்நராய்க் கொண்டு
கிலேசிக்கிற படியைக் கண்டு -சகல கிலேச நிவர்த்தகனாய் நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுடைய
அர்த்தி தார்த்த கரணத்தையும்
சாதாரண பந்தத்தையும்
அபரிச்சின்ன ஸுந்தர்யத்தையும்
அவ்வழகை அனுபவிக்கும் உதார குணத்தையும்
அனுபவிப்பார்க்கு கைக்கு அடங்கும் படியான ஸுலப்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
சர்வாத்ம பாவத்தையும்
சகல ஜகத் காரணத்வத்தையும்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஸ்ரீ லஷ்மீ ஷஹாதவத்தால் வந்த பரம ப்ராப்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான நீ அத்யந்த அஸஹ்யமாம்படி கிலேச உத்தரமான சம்சாரத்திலே இருத்தி என்னை
கிலேசிப்பிக்காதே உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ள வேணும் என்று கூப்பிட்டு
இவர் அபேஷா அநு ரூபமாக அவனும் பரமபதத்திலே இருக்கிற இருப்பைக் காட்ட மானஸ ஞானத்தால் கண்டு
ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய ஹேயதா பிரதிபத்தி பூர்வகமாக அவன் திருவடிகளையே
பரம ப்ராப்யமாகப் பற்றின படியை அருளிச் செய்கிறார் –
—————
4-10-ஒன்றும் தேவும்-பத்தாம் திருவாய் மொழியில் –
கீழ் -சம்சார தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் பிராப்தியை பிரார்த்தித்தவர் ப்ராப்யமான பர தசையை
அவன் ஆவிஸ்கரிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்-இப்பரத்வம் அறியாமல் சம்சாரிகள் இழக்க ஒண்ணாது என்று பார்த்து
ப்ராப்யத்வ பர்யந்தமான அவனுடைய பரத்வத்தை உபதேசிப்பதாக உத்தியோகித்து
அதுக்கு உபகாரகமான சர்வ காரணத்வத்தையும்
காரணத்வ அநு குணமான நித்ய கல்யாண குண யோகத்தையும்
கார்ய ரூபமான ஜகத் விஷய ரக்ஷண வியாபாரம் பரத்வாவஹமான படியையும்
சோபா பாதகமான சர்வேஸ்வரத்வத்தையும்
அந்த ஈச்வரத்வ பிரகாசகமான ஸுலப்ய அதிசயத்தையும்
சம்சார நிர்வஹண சாமர்த்யத்தையும்
பரதவ பிரகாசகமான கருட த்வஜத்வத்தையும்
அல்லாத தேவதைகள் பல பிரதத்வத்துக்கும் சக்த்யாதாயகன் அவனே என்னும் இடத்தையும்
அந்நியதுரவ போதனான அவன் வர்த்திக்கிற தேசமே உஜ்ஜீவன அர்த்திகளுக்கு ஞாதவ்யமாம் படியையும்
சர்வ சரீரியான அவன் திருவடிகளில் கைங்கர்யமே உத்தேசியமான படியையும்
உபதேசித்து -இப்படி பரம ப்ராப்ய பூதனான ஈசுவரனுடைய போக்யதா அதிசயத்தாலே
இவ்வாத்மாவினுடைய ததேக பிரியத்வத்தை உபபாதித்துத் தலைக் கட்டுகிறார் –
——
5-1-கையார் சக்கரத்து-முதல் இரண்டு பத்தாலே ப்ராப்ய பூதனுடைய சேஷியினுடைய ரக்ஷகத்வ போக்யத்வங்களைச் சொல்லி
அநந்தரம் மூன்றாம் பாத்தாலும் நாலாம் பாத்தாலும் ப்ராப்தாவான பகவச் சேஷ பூதனுடைய
தத் ஏக அனுபவத்தையும் தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லி
ஆக நாலு பாத்தாலும் சித்த ரூபமான பராவராத்ம யாதாத்ம்யத்தை அருளிச் செய்தாராய்
அநந்தரம் அஞ்சாம் பாத்தாலும் ஆறாம் பாத்தாலும் சித்த உபாய பூதனான ஈஸ்வர விஷயத்தில்
சேதனனுக்கு சாத்தியமான உபாய ஸ்வீ காரத்தை அருளிச் செய்கிறார்
அதில் இந்த அஞ்சாம் பத்தில் ஸித்தமான உபாய ஸ்வரூபத்தினுடைய யாதாம்யத்தை நிரூபிக்கிறது -எங்கனே என்னில்
கீழ்ச் சொன்ன தத் ஏக பிரியத்வத்தாலே -பகவத் கைங்கர்யமே உத்தேச்யம் -என்று பிறருக்கு உபதேசிக்கும்படி
தமக்கு இவ்விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தை அனுசந்தித்து -இதுக்கடி அவனுடைய உபாய பாவம் -என்று நிஷ்கர்ஷித்து
உபாய பூதனுடைய கிருபா பாரவஸ்யத்தையும்
அதடியாக ஆஸ்ரிதரை பாகத்தை இட்டுத் திருத்திக் கொள்ளும் ஆகாரத்தையும்
திருந்தினார்க்கு நிரதிசய ப்ரேமத்தை உண்டாக்கி ப்ராப்ய த்வரையை ஜெநிப்பிக்கும் படியையும்
ப்ராப்ய அ லாப்ய தசையில் ஆர்த்தி பிறந்தார் பக்கல் அவனுடைய ரக்ஷகத்வ சாமர்த்யத்தையும்
அப்ராப்ய வ்யசனத்தோடே ஹார்த்தமான அனுபவம் நடைக்கையாலே ப்ரீதி அப்ரீதிகளை சமமாக உண்டாக்கும் படியையும்
ஆர்த்தி அதிசயத்தாலே அநு கரிக்கும் படி அவன் இவனுக்கு அஹம் பாவ விஷயமாம் படியையும்
இப்படி ஆர்த்தி பிறந்தால் அகிஞ்சனனார்க்கு தன் உபாய பாவத்தை பிரகாசிக்கும் படியையும்
போக ஆகாங்ஷை யுடையார்க்கு அவ்வுபாயத்தில் பிரதிபத்தி விசேஷ கரத்வத்தையும்
பரிபூர்ண அனுபவ ப்ராவண்யம் பிறந்தால் பிரதி பன்னமான உபாயத்தில் விசுவாச ஜனகத்வத்தையும்
அதிசயித சக்தியான உபாய விஷயத்தில் அபி நிவிஷ்டரானார்க்கு அந்த விசுவாசத்தை யாவது பிராப்தி அனுவர்த்திக்கும் படியையும்
அருளிச் செய்து நிர் உபாய பூதனுடைய யாதாம்யத்தை நிஷ்கார்ஷித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில்
உபாய பூதனான ஈஸ்வரனுடைய கிருபா பாரவஸ்யத்தை ப்ரதிபாதிப்பதாக
க்ருத்ரிம அநு கூல்யவான்கள் பக்கலிலும் சர்வ ஸூலபனான ஈஸ்வரனுடைய கிருபை அவ்யபிசரிதை என்னும் இடத்தையும்
அந்த கிருபா பாரவஸ்யத்தாலே அஹ்ருதய யுக்தியே பற்றாசாக அவன் அபி நிவிஷ்டனாய் மேல் விழும்படியையும்
ஆஸ்ரிதருடைய கின்னதாயையும் போக்கித் தன்னை அனுபவிக்கும் படியையும்
அனுபவ பிரதிபந்தக தோஷ நிவர்த்தகத்வத்தையும்
தோஷ ரூப சரீராதிகள் நிவர்த்தகனுக்கு விதேயம் என்னும் இடத்தையும்
தோஷ ரூப ப்ரக்ருதியோடே இருக்கச் செய்தேயும் அந்த தோஷம் நெஞ்சில் படாதபடி விலக்ஷண விக்ரஹத்தை அனுபவிப்பிக்கும் படியையும்
போக்தாவின் நிகர்ஷம் பாராதே ப்ரேமத்தை ஜெநிப்பித்து தானும் மேல் விழுந்து அனுபவிக்கும் என்னும் இடத்தையும்
அனுபவிக்கும் அளவில் சர்வவித்த பந்துவாய் புஜிப்பிக்கும் படியையும்
இப்பந்தத்தோடு அசாதாரண ஆகார சிஹ்ன விசிஷ்டனாய் அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
அந்த ஆகாரத்தை அழிய மாறியும் ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணும் படியையும்
அனுசந்தித்து -இப்படி உபாய பூதனான ஈஸ்வரனுடைய கிருபா பாரவஸ்யத்தை அனுபவிக்கிறார் –
———
5-2-பொலிக பொலிக பொலிக-இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -பகவத் கிருபா பாரவஸ்யத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டாரான ஆழ்வாருடைய
ப்ரீதியை அனுபவிக்கைக்கு -பகவத் குண அனுபவ வித்தராய் ஸூரி சமரான பாகவதர்கள் சம்சாரத்தில் துரிதம் எல்லாம் நீங்கும்படி
ப்ரேம பரவசராய்த் திரண்டு வந்தபடியைக் கண்டு –
ஈஸ்வரன் இவர்களை இட்டு ஜகத்தைத் திருத்த நினைத்தானாகக் கூடும் என்று திரு உள்ளம் பற்றி
அவனுடைய நிரதிசய மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வாதி சிஹ்னத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான திவ்ய விக்ரஹாதி யோகத்தையும்
உபகார அர்த்தமான சமுத்திர ஸாயித்தவத்தையும்
அதுக்கும் அடியான ஸ்ரீ வைகுண்ட வாஸத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுதவத்தையும்
திரு அவதார தசையில் யுண்டான அதிசயித ஆதிக்யத்தையும்
ஆதிக்ய லக்ஷணமான ஸ்ரீ வத்ஸ சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அப்ரச்யுத ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலவத்தையும்
அனுசந்தித்து -இவ்வோ ஸ்வ பாவங்களில் வித்தரான பாகவதர் இங்கே ஸந்நிஹிதராகப் பெறுவதே என்று ஹ்ருஷ்டராய்
மங்களா சாசனம் பண்ணி இவர்களை அநு வர்த்தித்து ஸூத்த ஸ்வ பாவராய் இவர்களோடு ஓக்க நீங்களும்
பகவத் விஷயத்தை அனுபவிக்கப் பாருங்கோள் என்று லௌகிகரைக் குறித்து உபதேசித்து அருளுகிறார் –
——————
5-3-மாசறு சோதி-மூன்றாம் திருவாய் மொழியிலே கீழ் அநு சந்தித்த பாகவத உத்கர்ஷ ஹேதுவான
பகவத் உத்கர்ஷத்தையும் குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும் அநு சந்தித்து
அவனுடைய ஆலோகாலாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அநு பவிக்கைக்கு ஆசைப்பட்டு அது கிடையாமையாலே
ஆசா ஜனகமான ஆபி ரூபியாதி அதிசயத்தையும்
அவயவ விசேஷ வை லக்ஷண்யத்தையும்
பிரதிபந்தக நிவர்த்தகமான பால சேஷ்டிதத்தையும்
அபி நிவேச வர்த்தகத்வத்தையும்
அநந்யார்ஹத ஆபாகத்வத்தையும்
ஆகர்ஷகத்வ ஸ்வ பாவ யோகத்தையும்
ஆசத்தி ஹேதுவான அர்ணவ ஸாயித்வாதிகளையும்
அகில விரோதி நிவர்த்தனத்தில் அநாயா சத்தையும்
உத்துங்க தேச வாஸித்வத்தையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நிவேச அதிசயத்தாலே
இரண்டு தலைக்கும் அநநு ரூபமான ஸ்வ ப்ரவ்ருத்தி விசேஷத்தாலேயாகிலும் பிராபிக்கக் கடவோம் என்கிற த்வர அதிசயத்தாலே
தமக்குப் பிறந்த விவசாய விசேஷத்தை அந்யாபதேச முகத்தாலே
நாயகனான ஈஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி தத் ப்ராப்த்ய அபி நிவேச த்வரையாலே
தன் குடிப் பிறப்புக்கும் பெண்மைக்கும் அநநு ரூபமாம் படி அவனுடைய மெய்ப்பாட்டை அழித்து மடலூர்ந்தும் பெறக் கடவோம் என்கிற
அறுதிப் பாட்டை பாங்கிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
5-4-ஊரெல்லாம் துஞ்சி -நாலாம் திருவாய் மொழியில் -கீழ் -தம்முடைய அனுபவ அபி நிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு ஸ்வரூப அநநு ரூபமான
ஸ்வ பிரவ்ருத்தியாலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த இவர்
அனுபவ யோக்கியமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அசன்னிஹிதனாய் இருக்கையாலே அத்யந்த ஆர்த்தராய் ஒரு ப்ரவ்ருத்தி ஷமர் அல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப ஷமர் அல்லாமையாலே இவ்வவஸ்தையிலே அவன் முகம் காட்டி ரஷிக்கைக்கு உடலான
அகில ஜகத் ரக்ஷண அர்த்த பிரவ்ருத்தியையும்
ஆபி ரூப்ய ப்ரகாசகமான பவ்யதையையும்
அநிஷ்ட நிராசகத்வத்தையும்
அபீஷ்ட லாபத்தாலே புதுக் கணித்த அவயவ சோபாதியால் யுண்டான அத்யந்த தீப்தியையும்
உபகாரக விக்ரஹ யோகத்தையும்
ஸ்த்திரை பரிகரகண குணவத்தையும்
ஆகாங்க்ஷா ஜனகமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித அர்த்தமாக ஆயுதம் எடுத்துக் கார்யம் கொள்ளும் ஆகாரத்தையும்
அதிசயித ஐஸ்வர்யத்தையும்
அநந்யார்ஹம் ஆக்கும் அபதான விசேஷத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான ஈஸ்வரன் இவ்வஸ்தையில் வந்து ஸம்ஸ்லேஷித்து ரஷிக்கிறலன் –
முடிகைக்கும் யோக்யதை இல்லாதபடி பராதீனமான இவ்வாத்மாவை ரஷிக்கும் விரகு என் என்று கால விளம்பம் பொறாமல்
ஆர்த்தராய்க் கூப்பிட்ட பிரகாரத்தை அபிமத நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
——————
5-5-எங்ஙனேயோ அன்னை மீர்காள்! அஞ்சாம் திருவாய் மொழியில் -கீழ் -உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் என்று
அவனுடைய ஆஸ்ரித சம் ரக்ஷண சிந்தா யோகத்தை அனுசந்தித்து ஆஸ்வஸ்தராய் பூர்வ அநு பூதமான –
நல்கி என்னை விடான் -என்கிறபடியே தம்மை ஒரு காலும்
கைவிடாத நம்பியுடைய வடிவழகு ஸ்ம்ருதி விஷயமாய் ஆந்தர ப்ரீதியை ஜெநிப்பிக்க
அசாதாரண சிஹ்ன அவயவ வை லக்ஷண்யத்தையும் –
அலங்கார சோபையையும்
ஆஸ்ரிதரைக் காத்தூட்டும் திவ்ய ஆயுத பூர்த்தியையும்
பரத்வ ப்ரகாசகமான பரிஷ்க்கார பிரகாரத்தையும்
அதிசயித போக்யமான திரு முக திவ்ய அவயவ சோபையையும்
திரு முக திவ்ய அவயவத்தோடு சேர்ந்த திவ்ய ரூப புஜ வை லக்ஷண்யத்தையும்
தேஜோ மாயமாய் உத்துங்கமான திவ்ய விக்ரஹ யோகத்தையும்
சர்வ அவயவ ஸுந்தர்யத்தையும்
அசங்க்யேய ஆபரண சோபா விசிஷ்டமான அதிசயித போக்யதையையும்
அநந்ய கோசாரமாம் படி ஆந்தரமாகப் பிரகாசிக்கிற அதிசயித தேஜோ விசிஷ்டமான ப்ராப்ய விஷத்தையும்
அனுசந்தித்து -இந்த ஆந்தர அனுபவ ப்ரீதியோடே அலாப நிபந்தமான அப்ரீதியும் ஓக்க நடக்கையாலே
இவரை ஆஸ்வசிப்பிப்பதாக உத்யோகித்த ஸூஹ்ருத்துக்களையும் பரிவரையும் குறித்து ஸ்வ தசையை ஆவிஷ்கரித்து பிரகாரத்தை
நாயகனைப் பிரிந்த காமிநி யானவள் தத் ஸுந்தர்யாதி ஸ்மரணத்தாலும் தத் அலாப அர்த்தியாலும் ப்ரீதி அப்ரீதிகள் சமமாய் நடக்க
இவள் ஆர்த்தியை மீட்க்கைக்காக நியமித்த தோழிமாரையும் தாய்மாரையும் குறித்து
தான் இவ்விஷயத்தில் அகப்பட்ட படியைச் சொல்லி அவர்களுக்கு மறுத்து உரைத்த படியாய் இருக்கையாலே
கழற்று எதிர்மறை என்கிற துறையாலே அருளிச் செய்கிறார்
—————
5-6-கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-ஆறாம் திருவாய் மொழியிலே -கீழ் -ஆந்திர அனுபவ ப்ரீதி நடக்கச் செய்தி பாஹ்ய சம்ச்லேஷ அலாபத்தாலே அப்ரீதியும் கலந்து நடந்த இது
பாவநா ப்ரகரஷத்தாலே அலாப நிபந்தமான ஆர்த்தியே விஞ்சும்படி அதிசயித அபி நிவேசம் பிறந்து பக்வத்தாதாம்ய பிரதிபத்தி பிறக்கும்படி பாவனை முதிர-
ஸர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களும்
தத் ப்ரதிபாதகமான வித்யா ஸ்த்தலங்களும்
ஜகத்துக்கு பிரதான காரண பூதமான மஹா பூதங்களும்
சகல கிரியைகளும்
ஜகத் விஷய ரக்ஷண வியாபாரங்களும்
அவதார சேஷ்டிதங்களும்
ஜகத்தில் யுண்டான ஸமஸ்த பந்து வர்க்கமும்
ப்ரஹ்மாதிகளான தேவ ரிஷி வர்க்கமும்
புண்ய பாப ரூப கர்மங்களும்
ஸ்வர்க்க நரகாதி ரூப பலங்களும்
நான் இட்ட வழக்கு என்று அநுகார ரூப உக்தியைப் பண்ணும்படி இவருக்கு அநந்ய பாவனை பிறந்தபடி கண்ட பரிவரானவர்கள்
ஜிஜ்ஞாஸூ க்களான பார்ஸ்வஸ்தர்க்கு இவர் படியை அறிவித்த பிரகாரத்தை
பிரிவாற்றாமையால் வந்த பாவனையால் ஸ்ரீ கிருஷ்ண அநு காரம் பண்ணின கோபிமாரைப் போலே
நாயகனான சர்வேஸ்வரனுடைய பாசுரங்களை அநு கரிக்கிற நாயகியுடைய ப்ரவ்ருத்தி விசேஷங்களை
நல் தாயானவள் வினவினார்க்கு யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
5-7-நோற்ற நோன்பிலேன்-ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –
————
5-8-ஆரா அமுதே!-எட்டாம் திருவாய் மொழியில் கீழ் -ஸ்ரீ வானமா மலை திருவடிகளில் அனுபவத்தை அபேக்ஷித்து அவன் தம் திருவடிகளில்
உபாய பாவத்தையும் பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய் பின்பும் அனுபவம் சித்திக்கக் காணாமையாலே அவசன்னரான இவருக்கு
ஆராவமுத ஆழ்வார் தம் வடிவு அழகை பிரகாசிப்பிக்க -அங்கே தம் அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து
ஆராவமுதாழ்வாருடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சம்பந்த கார்யமான அவதார உஜ்ஜ்வல்யத்தையம்
அவரை ஒழியத் தம்மை அந்நிய நிரபேஷராக்கின படியையும்
அவருடைய அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான நிரதிசய போக்யத்தையும்
போக்யதா பிரகாசகமான விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
விபரீதமே பலிக்கிலும் விடாதபடியான தம்முடைய அநந்ய கதித்வத்தை பிரகாசிப்பித்த படியையும்
அனுமதியையும் பிறப்பித்து அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
ஆந்திர அனுபவ விஷயமான அதிசயித சாரஸ்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டரானவர் ஆலோக அலாபாதிகளாலே நம்மை அனுபவித்திலரே என்று
ஸூத்தி சாஷாத்கார ஸந்நிஹிதரான அவர் தம்மையே நோக்கி அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்டு
எல்லா அவஸ்தையிலும் முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளே யல்லது உபாயம் இல்லை என்று பிரதிபத்தி பண்ணித் தலைக் கட்டுகிறார் –
———
5-9-மானேய் நோக்கு நல்லீர்!-ஒன்பதாம் திருவாய் மொழியிலே -கீழ் -திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்கத் தேடித் தாம் நினைத்தபடி
பரிமாறப் பெறாமையாலே இன்னமும் உழல்வேனோ -என்று ஆர்த்தரான அளவிலும்
அவனை ஒழிய ரக்ஷகர் இல்லாமையாலும் உக்காந்து அருளின திவ்ய தேசம் ஒழிய ப்ராப்யம் இல்லாமையாலும் –
நிரதிசய போக்யமாய் -சம்ருத்தமான திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன்
தம்முடைய திரு உள்ளத்திலே முகம் காட்ட -அவனுடைய ஸ்வ பாவ விசேஷங்களில் வித்தராய்
நிருபாதிக சேஷித்வத்தையும்
தத் ஸித்தமான உபகாரகத்வத்தையும்
அந்த உபகாரகத்வத்தினுடைய நை ரந்தர்யத்தையும்
உபகார ரூபமான நித்ய ஆஸ்ரித சம்ச்லேஷத்தையும்
நித்ய நிரதிசய போக்யதையையும்
ஆஸ்ரித உபகாரகமான அர்த்தித்தவத்தையும்
ஆபத் ஸகாத்வத்தையும்
வரையாமல் அங்கீ கரிக்கும் ஸீலாதிசயத்தையும்
ஆபிக்யா ஸூ சகமான ஆயுதவத்தையும்
அசாதாரண சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய அநு பாவத்தில் அத்யந்தம் அபி நிவிஷ்டராய்
அவ்வனுபவ சித்திக்கு அவன் திருவடியே உபாயம் என்கிற விசுவாசத்தை யுடையராய்க் கொண்டு
அவன் எழுந்து அருளி இருக்கிற நிரதிசய ஸர்வ பிரகார போக்யதையை யுடைத்தான திரு வல்ல வாழிலே சென்று
அனுபவிக்கக் கூடுமோ என்று ஸூ ஹ் ருத்துக்களைக் குறித்து அருளிச் செய்த பாசுரத்தை
அந்த நாயகனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி அவன் வர்த்திக்கிற தேசத்திலே புகப் பெறுவோமோ என்று
தோழிமாரைக் குறித்து தன் ஆற்றாமை கூறின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-பத்தாம் திருவாய் மொழியில் இப்படி திரு வல்ல வாழிலே யநுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாமையாலே ஆர்த்தராய்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்கிறபடியே
அவனுடைய ஸர்வ அவதார ஸித்தமான குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து தரிக்கப் பார்த்து –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாராதி வ்ருத்தாந்தத்தையும்
அபிமத விஷய வியாபாராத்தையும்
பால சேஷ்டிதங்களையும்
திரிபுர வாசிகளான அஸூர வர்க்கத்தினுடைய அந்தர் பேதத்தையும்
அதி மானுஷ சேஷ்டிதங்களையும்
ஸ்த்தித் யாஸன சயநாதி வியாபாரத்தையும்
ஆந்தரமாகவும் பாஹ்யமாகவும் பிரகாச அப்பிரகாச கரத்வத்தையும்
சர்வாதிகத்வ ஸூ சகமான ஸ்ருஷ்ட்டி வ்யாபாரங்களையும்
அர்த்தியாயும் தன் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் யரும் தொழில் செய்து அபகரிக்கும் படியையும்
அனுசந்தித்து அவை தானே அபிராப்தி தசையில் சையில்யாவஹம் ஆகையால் ஆர்த்தராய்
உன்னுடைய சேஷதீதாதிகளை நான் நிலை நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்று அபேக்ஷித்து
அவன் திருவடிகளில் பிறந்த உபாய விசுவாசம் யாவத் பிராப்தி அனுவர்த்திக்கும் படியை அருளிச் செய்து
இப்படி உபாய பூதனுடைய ஸ்வரூப யாதாம்யத்தை நிரூபித்துத் தலைக் கட்டுகிறார் –
———
6-1-வைகல் பூங்கழிவாய் -ஆறாம் பத்தில் –கீழ் பத்திலே -ஈஸ்வரனுடைய யுபாய பாவத்தை ஸப்ரகாரமாக நிரூபித்து -அநந்தரம் –
இவ்வுபாய ஸ்வரூபத்தினுடைய ஸ்வீகார பிரகாரத்தை அருளிச் செய்வதாக
உபாய ஸ்வீ காரம் கடகரான ஆச்சார்யர்கள் முகமாக சித்திக்கும் பிரகாரத்தையும்
ஸ்வீ கர்த்தாவான அதிகாரியினுடைய பகவத் அபிமுக்யம் ஸ்வீ காரத்துக்கு அபேக்ஷிதம் என்னும் இடத்தையும்
அகடிதகட நா சமர்த்தனான ஈஸ்வர விஷயத்தில் பல பிரதத்வ சக்தியில் சம்சயம் இல்லை என்னும் இடத்தையும்
ஆகர்ஷக சேஷ்டிதானாகையாலே ஆஸ்ரயணம் ஸூ கரம் என்னும் இடத்தையும்
தத் ப்ராப்தியை ஆசைப்பட்டார்க்கு அந்நிய பரர் பக்கல் வைராக்யம் அபேக்ஷிதம் என்னும் இடத்தையும்
ஆத்மாத்மீய பதார்த்தம் எல்லாம் அவன்கிட்ட வழக்காம்படியான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தியையும்
தாரகாதிகள் எல்லாம் தானே யான ப்ராப்ய விஷயத்தில் த்வரா யோகத்தையும்
த்வரிதனுடைய பராசக்தியிலே கடகரானார் விஷயத்தில் அத்யந்த ஆதாரத்தையும்
பரிபூர்ணமான ப்ராப்ய ப்ராவண்யம் அதிகாரிக்கு விசேஷணம் என்னும் இடத்தையும்
சர்வ ரக்ஷகனான சரண்யன் பக்கல் ச பிரகார சரணாகதியையும்
அருளிச் செய்து ஸ்வதஸ் ஸித்தமான உபாய விஷயத்தில் ஸ்வீ காரத்தை ஸ்வ அனுஷ்டானமாக அருளிச் செய்கிறார் –
——————
6-2-மின்னிடை மடவார்கள்-இரண்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக உபஜ்ஞமாக ஆச்ரயிக்க யுத்யோகித்தவர் -அநாதி காலம் பகவ த்வேஷத்தாலே
விமுகரான தம்மை ஈஸ்வரன் ஸ்வ யத்னத்தாலே அபிமுகராக்கிக் கொண்ட படியை ஆராய்ந்து இந்த அபி முகீகரணத்துக்கு அடியான
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவ சோபையையும்
அஷோப்ய ஷோபகத்வத்தையும்
அகடிதகடநா சாமர்த்யத்தையும்
ஆஸ்ரித கார்யர்த்தமான பரிகரவத்தையும்
ஸர்வ லோக நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷணத்தில் அத்யந்த அபி நிவேசத்தையும்
அதிசயித ஜ்ஞாநத்தையையும்
அபிமத தமமான முக சோபையையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -இந்த ஸ்வ பாவ விசேஷங்களாலே ஸ்வரூப அன்விதம் இன்றியே தமக்கு வந்தேறியான
வைமுக்யத்தைக் களித்து அபிமுகீகரித்துக் கொண்ட ஆகாரத்தை ப்ராணாய ரோஷத்தாலே விழுகையாய்
அவன் வந்தாலும் முகம் கொடேன் என்று தோழிமாரோடு கூட லீலா பிரசாங்கத்தாலே அந்நிய பரத பாவனை பண்ணி இருக்கிற
கோபிகையை அநு நயித்து ஊடல் தீர்த்த ஆபீமுக்யம் பண்ணுவித்துக் கொண்டு
ஸம்ஸ்லேஷித்த ஆகாரம் ஆகிற அந்யாப தேசத்தாலே அருளிச் செய்கிறார் –
——
6-3-நல்குரவும் செல்வும் -மூன்றாம் திருவாய்மொழியில்-இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே
பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு
நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்து
அதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-
———
6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –
———
6-5-துவளில்மா மணி மாடமோங்கு-அஞ்சாம் திருவாய் மொழியில் -கீழே -இப்படி ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களிலே அவகாஹித்து அத்யந்தம் ஹ்ருஷ்டரான
இவ்வாழ்வாருடைய மானஸ அனுபவம் முதிர்ந்து -பாஹ்ய சம்ச்லேஷம் அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அபி நிவேச அநு ரூப அநு பாவ அலாபத்தாலே -அவசன்னராய்
பூர்வ அநு பூதமான சர்வேஸ்வரனுடைய அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
விலக்ஷண அநு பாவ்யத்தையும்
ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்திகளையும்
தர்ச நீய விக்ரஹ யோகத்தையும்
திவ்ய ஆபரண உஜ்வல்யாதிகளையும்
ஸூக்ரஹா ஸுந்தர்யத்தையும்
உதார ஸ்வ பாவத்தையும்
ஆதிக்ய ஸூ சகமான அரவிந்தாக்ஷத்வத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
வ்யாமோஹாதிசயத்தையும்
அநு சந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனானவன் விஷயத்தில் அத்யந்த ப்ரவணரான இவருடைய நினைவை
பூர்வ அநுபாவ ப்ரவர்த்தகரான பரிவர் தாங்களே அவ்சாத்தை பரிகார அர்த்தமாக நிஷேதிக்கத் தேட –
இவருடைய ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத் பூதரானவர்கள்
அடியில் ப்ரவர்த்தகரான நீங்களே நிவர்த்தகரானால் இவருக்கு அஹ்ருத்யக்கரராவதே பலம் என்று சொல்லி
அதுக்கு அடியான இவருடைய பகவத் ப்ராவண்யாதிசய விகாரங்களை அறிவித்த பிரகாரத்தை
திருத் தொலை வில்லி மங்கலத்திலே தேவ பிரானை அனுபவித்து ஈடுபட்டாள் ஒரு நாயகியினுடைய ஈடுபாட்டைக் கண்டு
அடியில் கூடக் கொண்டு போய்த் திருவடி தொழுவித்த தாய் மார் இவள் ஈடுபாடு சமிக்கைக்காக இவள் நினைவை நிஷேதிக்கத் தேட
இவள் நெஞ்சு அறிந்த தோழியானவள் -அடியிலே இவளை மூட்டின போதே ஆசையற்று மூட்டினிகோள் அன்றோ
இனி இவள் பக்கல் சங்கத்தை விடுங்கோள் என்று சொல்லி
இவளுடைய ப்ராவண்ய விகார பிரகாரங்களை அறிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
6-6-மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-ஆறாம் திருவாய் மொழியில் இப்படி கரண த்ரயத்தாலும் பகவத் விஷயத்திலே ப்ரவணரான இவர் ப்ராவண்ய ஜனகனான
அவனுடைய ஆஸ்ரித வ்யாமோஹ பிரகாசகமான ஆகார விசேஷங்களையும்
அவர்களுக்கு போக்யமான ஆயுயாதி பூர்த்தியையும்
ரக்ஷண பிரகாரத்தையும்
ஸர்வ பிரகார ரஷக உபகாரத்வ அதிசயத்தையும்
பிரமாண பிரசாநாதி ரக்ஷண பிரகாரத்தையும்
ஆ கர்ஷகமான அவயவ சோபையையும்
அவயவ சோபையோடே கூடின ஆபரண சோபையையும்
விரோதி நிரசன ஸ்வ பாவத்தையும்
அபேக்ஷித சித்தியால் வந்த அத்யந்த உச்சாயத்தையும்
சேஷத்வ போக்யத்வாதி யுக்தமான சர்வாத்ம பாவத்தையும்
அநு சந்தித்து -ஏவம் பூத ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த நிரவாதிக ப்ராவண்ய க்ருதமான
பாரவஸ்ய அதிசயத்தாலே ஆத்மீய பதார்த்தங்கள் எல்லாம் அவன்கிட்ட வழக்காம்படி அவற்றில் ஸ்வாம்ய நிவ்ருத்தி
தமக்குப் பிறந்தபடியைக் கண்ட பரிவார் வித்தராய்ச் சொன்ன பாசுரத்தை
நாயகன் பிரிவாற்றாத நாயகியினுடைய ஆபரண சோபையோடு ஆபி ரூப்பியத்தோடு ஆத்ம குணத்தோடு வாசியற
அழிந்து வருகிற படியைக் கண்ட செவிலி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
——
6-7-உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்-ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் ஆத்மாத்மீய ஸ்வ பாவங்கள் எல்லாம் தத் அதீனமாம்படி அவற்றில் தமக்கு
ஸ்வாம்யநிவ்ருத்தி பிறந்த படியை அனுசந்தித்து அருளினவர்
அத்தலையில் தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தால் அதி த்வரித சித்தராய் –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் விஷயமாகத் தமக்கு த்வரை பிறக்கைக்கு அடியான
அவனுடைய தாரக போஷக போக்யத்வாதி ஆகாரத்தையும்
ஸர்வ லோக பிரசித்தமான நாமாதி யோகத்தையும்
அத்திரு நாமத்தினுடைய ஸர்வ உபயோக யோக்யதையையும்
ஐஸ்வர்ய அதிசயத்தையும்
அத்யந்த விலக்ஷணமான போக ஸ்த்தானவத்தையும்
ஆகர்ஷகமான அவயவ சோபையையும்
அனவதிக வ்யாமோஹத்தையும்
அதிசயித போக்யயான ஸ்ரீ லஷ்மீ விஷயத்தில் அபிமத தமத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
அகில ஜகத் ஸ்வாமித்வத்தையும்
அனுசந்தித்து -தமக்குப் பிறந்த த்வரா அதிசயத்தாலே அவனை பிராபிக்கையிலே உத்யோகித்து நடந்த இவருடைய அவஸ்தையை
அனுசந்தித்துப் பரிவரானவர்கள் ஈடுபட்ட பிரகாரத்தை நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
அத்யந்த த்வரா விஷ்டையாய்க் கொண்டு அவன் இருந்த திருக் கோளூரை நோக்கி
அபி சாரிகா விருத்தியைப் பண்ணிக் கை கழிந்த தலைவியைப் பற்ற
நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
——
6-8-பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?-எட்டாம் திருவாய் மொழியில் -கீழே ப்ராப்ய விஷயத்தில் அதி த்வரிதரான இவர்க்கு த்வர அனுரூபமான ப்ரவ்ருத்தியில்
யோக்யதை இல்லாமையால் கடக முகத்தால் பிராபிக்கையில் அபேக்ஷை பிறந்து -கடக அனுரூபமான அவனுடைய
ஸ்ருஷ்ட்ருத்வாதி ஆகாரத்தையும்
அநு பாவ்யமான அசாதாரண சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்த்தனத்தையும்
அதிசயித புருஷ அநு பாவ்யமான போக்யதா வை லக்ஷண்யத்தையும்
உதார ஸ்வ பாவத்தையும்
அத்யந்த பவ்யத்தையும்
அபி ரூபனாய் அகிலாத்ம பூதனானவனுடைய அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
சர்வாதிகாத்வத்தையும்
அந்த பரத்வத்தோடே கூடின ஸுலப்யாதி அதிசயத்தையும்
உபய ப்ரயுக்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை வடிப்பித்த மஹா உபகாரத்தை ப்ரீதி அதிசயத்தாலே
ஐஹிக ஆமுஷ்மிக சகல பதார்த்தங்களையும் கடக்கருக்கு சமர்ப்பணீயம் என்கிற அதிசயித ஆதாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால் தூது விடத் தேடின நாயகி தூது போகிற பக்ஷிகளைக் குறித்து
பிரதியுபகார ப்ரதர்சனம் பண்ணின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
6-9-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி கடக்க முகத்தால் ஸம்ஸ்லேஷிக்கப் பாரித்த இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்டு
ஈஸ்வரன் தன்னுடைய சர்வாத்ம பாவத்தால் சமாதானம் பண்ணப் பார்க்க –
அது இவர்க்கு த்ருஷ்ட்டி விஷயம் அல்லாமையாலே -அசாதாரணமான விக்ரஹத்தோடே காண வேணும் என்று
விஸ்வ ரூபம் கண்ட அர்ஜுனனைப் போலே ஆசைப்பட்டு அதுக்கு ஹேதுவான
அநு பாவ்ய சிஹ்ன யோகத்தையும்
அழகைக் காட்டி அநந்யார்ஹம் ஆக்கும் அதிசயித சக்தியையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அதி பிரபல விரோதி நிவ்ருத்தியையும்
பரத்வாதி அவஸ்தா பஞ்சக யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அகில வாஸ்து வ்யாபகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
விரோதி நியமன யோக்யதையையும்
அதி ஸயிதா வை லக்ஷண்யத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன் வடிவை என்னுடைய கண்ணுக்கு இலக்காம்படி காட்டி அருள வேணும் என்று
அபி நிவேச அதிசயத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்
இந்த ப்ராப்ய விஷயத்தில் அபி நிவேச க்ருதையான ஆர்த்தி இறே
ஆஸ்ரயண உன்முகனான அதிகாரிக்கு விசேஷணம்
——————
6-10-உலகம் உண்ட பெருவாயா!-பத்தாம் திருவாய் மொழியில் -கீழ் -தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே புருஷார்த்த வைலக்ஷண்ய நிபந்தமான ஆர்த்தி
பிறந்து கூப்பிட்டவர் -பல சித்திக்கு சரணையானவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை -என்று அறுதி இட்டு
சரண்யத்வ பிரகாசகமான அகில ஜகத் ரக்ஷண ஆகாரத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தனத்தில் அத்யுஜ்ஜ்வல பரிகர யோகத்தையும்
ரூப குண சாரஸ்யத்தால் யுண்டான ஊத்துங்க அநு பாவ்யதையையும்
ஜகத் விரோதிகளுக்கு தீங்கு விலைக்கும் ஸ்ரீ மத்தையையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான அ நாயாச வியாபாரத்தையும்
அதிசயித ஞானர்க்கும் ஆராத்யனாம்படியையும்
சர்வ சாதாரண சாரஸ்ய அதிசயத்தையும்
சர்வ ரோதரான ஈஸ்வர அபிமானிகளுக்கும் சதா ஆஸ்ரயணீயனாம் படியையும்
அதிசயித போக்யமான அவயவ சோபையையும்
ஆஸ்ரயணீயத்வ ஆகாரத்தையும்
அனுசந்தித்து -இப்படி சரண்யனான திருவேங்கடமுடையான் விஷயமாக
ச க்ரம சமக்ர சரணாகதியைப் பண்ணித் தலைக் கட்டுகிறார்-
—————
7-1-உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி-ஏழாம் பத்தில் — கீழ் இரண்டு பத்தாலே உபாய ஸ்வரூப சோநத்தையும் -தத் ஸ்வீ காரத்தையும் அருளிச் செய்து –
மேலே ஏழாம் பத்தாலும் எட்டாம் பத்தாலும்-உபாய நிவர்த்யமான விரோதி ஸ்வரூபத்தையும் –
தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்கிறார் -அதில் விரோதி ஸ்வரூப பரமான இப்பத்தாலே –
நிவர்த்யமான விரோதியாயுள்ள சரீர இந்திரியாதிகள் நிவர்த்தகனான ஈஸ்வரன் இட்ட வழக்கு என்னுமத்தையும்
விரோதி நிவ்ருத்தி பிறவாத போது ப்ராப்ய கத ப்ராவண்யம் ஆர்த்தி ஜனகம் என்னுமத்தையும்
ஆர்த்தி சமிப்பது அபி நிவிஷ்டனான ஈஸ்வரனுடைய தேச ப்ராப்தியாலே என்னுமத்தையும்
ஆர்த்தி ஹேதுவான விரோதியானது ஜகத் ரக்ஷண ஹேதுவான விஜய அபதானங்களை யுடைய சர்வ சக்திக்கே நிவர்த்த நீயம் என்னுமத்தையும்
ரக்ஷகனான அவனை ஒழிய வேறு நிவர்த்தகர் இல்லை என்னும் இடம் சம்மதம் என்னும்படியையும்
சர்வ ஸ்ரஷ்டாவான அவனுடைய காலைக் கட்டிக் கூப்பிட்டு விரோதியைக் கழித்துக் கொள்ள வேணும் என்னுமத்தையும்
உரு வெளிப்பாடான அனுபவம் நடக்கச் செய்தேயும் அலாப ஜெனிதையான ஆர்த்தி விரோதி கார்யம் என்னுமத்தையும்
விசித்ர விரோதி நிவர்த்தனத்தில் விசித்ர விபூதி விசிஷ்டனான விசித்ர சக்தி யுக்தனே வேணும் என்னுமத்தையும்
விரோதி விஸிஷ்ட வேஷத்தில் வாசிக்க கைங்கர்யம் கொண்ட ப்ரீதி அதிசயத்தாலே விரோதியை விஹஸ்தமாக்கின ஹர்ஷத்தையும்
ப்ராப்ய விஷயத்தில் ப்ராவண்யம் அதிசயித்தால் பிரதிபந்தகம் உபாய பூதன் போக்கும் என்னுமத்தையும் –
அருளிச் செய்து
விரோதியினுடைய ஸ்வரூபத்தை சோதித்து அருளினார் –
இதில் முதல் திருவாய் மொழியில் -கீழே -ப்ராப்த்யர்த்தமாக -சரணாகதியை யனுஷ்டித்த இவர்க்கு
பிராப்தி விரோதி நிவ்ருத்யர்த்தமாக பிரதிபந்தக ப்ராபல்யத்தைப் பிரகாசிப்பிக்க –
காட்டிப் படுப்பாயோ –இன்னம் கெடுப்பாயோ -என்று பாண்டே அஞ்சி இருக்கிற இவர் பிரதிபந்தகமான தேஹ இந்திரியாதிகளுடைய
அதி ப்ரவ்ருத்தியை அபரோக்ஷித்து-அதிசயித ஆர்த்தியை யுடையராய் -விரோதி நிவர்த்தகனான ஈஸ்வரனுடைய
சம்பந்தாதி குண பவ்ஷ் கல்யத்தையும்
போக்யதா அதிசயத்தையும்
ரக்ஷணார்த்த வியாபாரத்தையும்
அகடிதகடநா சாமர்த்த்யத்தையும்
விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
சர்வ பிரகார சந்நிதியையும்
யரும் தொழில் செய்தும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும்
அசாதாரண சிஹ்நாதி யோகத்தையும்
சகல ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வாதிகளையும்
சாரா ஸங்க்ரஹண சாமர்த்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான நீ உனக்கு விதேயமான சரீர இந்திரியாதிகள் என்னை நலியக் கண்டு
நிவர்த்திப்பியாதிருந்தாய் -என்று அந்நிய விசேஷம் அடியாகப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிடுகிறார் –
——
7-2-கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-இரண்டாம் திருவாய்மொழியில்-கீழே -விஷய இந்திரியாதிகளுடைய அதி பிரவ்ருத்தியை அனுசந்தித்து -ஆர்த்தராய்க் கூப்பிட்டவர் –
கன்னலே யமுதே -என்று கீழே அனுசந்தித்த போக்யத்தையாலே இந்த ஆர்த்தியோடே கூட அதி ப்ராவண்யமும் நடந்து –
ப்ராவண்ய அனுரூபமான அனுகூலம் பலியாமையாலே அது பிரதிபந்தக கார்யம் இ றே என்று அனுசந்தித்து
பிரதிபந்தகங்களைப் போக்கி அனுபவிப்பிக்க வேண்டும் யோக்யதைக்கு ஈடான ப்ராப்ய பூதனுடைய
அநு பாவ்ய சிஹன யோகத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்தி விசேஷத்தையும்
ரக்ஷண பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
ஆஸ்ரித அபேக்ஷித கரத்வத்தையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுத பூர்த்தியையும்
சம் ரக்ஷண உபயுக்தமான சமுத்திர ஸாயித்வத்தையும்
திரு அவதார தசையில் அதி மானுஷ சேஷ்டிதத்தையும்
பிரணயித்வ அதிசயத்தையும்
ஈஸ்வர அபிமானிகளுக்கும் அந்தராத்மாவான ஈச்வரத்வ அதிசயத்தையும்
அனுசந்தித்து இப்படி ரக்ஷகனுமாய் போக்யனுமான அவன் பிரதிபந்தகத்தைப் போக்கி அனுபவிக்கிறீலன்-என்கிற ஆர்த்தி அதிசயத்தாலே
அரதிக்ருதமான அநேக வியாபாரங்களை பண்ணி அவசன்னராய் அர்ச்சாவதார ஸூலபமான பெரிய பெருமாளை நோக்கிப் பிறந்த
அபி நிவேச அதிசயத்தாலே அப்ரக்ரு திங்கரான பிரகாரத்தை அனுசந்தித்துப் பரிவரானவர்கள்
இவருடைய தசையை அவர்க்கு விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
நாயகரான பெரிய பெருமாளோடு விஸ்லிஷ்டையான நாயகியினுடைய ஆர்த்தி அதிசயத்தை அனுசந்தித்து ஆற்றாளாய்
நல் தாயானவள் தன் ஆற்றாமையின் மிகுதியால் அவரை புத்தியால் அபரோக்ஷித்து இரங்கி
யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
7-3-வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி-மூன்றாம் திருவாய் மொழியில் -கீழ் -பெரிய பெருமாளுடைய உதார குண அனுசந்தானத்தாலே ஆஸ்வஸ்தரான இவர்க்கு –
பாஹ்ய அனுபவ அபி நிவேசம் அநு வர்த்திகையாலே அத்யந்தம் ஆர்த்தராய் -அந்த ஆர்த்தி சமிக்கைக்கு
அவன் ஆசன்னமாகத் திருப் பேரையிலே எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்து –
ஆந்திர அனுபாவ்யமான அவனுடைய திவ்ய ஆயுயாதி வை லக்ஷண்யத்தையும்
அதிசயிதமான பரத்வ ஸுலப்யங்களையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவாதி சோபையையும்
அனுபாவ்யமான ஆச்சர்ய குணாதி யோகத்தையும்
அநிஷ்ட வர்க்க நிரசனத்தையும்
உதார குண அதிசயத்தையும்
பிரபல பிரதிபந்தக பங்கத்தையும்
ப்ரக்ருஷ்ட பக்தி வர்த்தகத்தையும்
பிரளய ஆபத் ஸகத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்ஹணத்தையும்
சிந்தித்து -ஏவம் பூதனானவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே செல்லுகையில் யுண்டான த்வரா விசேஷத்தைக் கண்ட
பார்ஸ்வஸ்த்தரான ஸூஹ் ருத்துக்களுக்கும் பரிவாக்கும் பிராப்தி ஜெனித வியவசாயத்தை அறிவித்த பிரகாரத்தை
நாயகனான மகர நெடும் குழைக் காத்தான் எழுந்து அருளி இருக்கிற தென் திருப் பேரையிலே செல்லுகையில் த்வரையை யுடைய
நாயகியானவள் -இது அநு ரூபம் அன்று -என்று விலக்கத் தேடுகிற தோழிமார் தாய்மார் முதலானவரைக் குறித்து
நான் அத்தேசத்தில் செல்லல் தவிரேன் -நீங்கள் கொடு போய் விடுங்கோள் -இல்லையாகில் நானே போவேன் -என்று
தன் துணிவை வெளியிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
———
7-4-ஆழி எழச் சங்கும் வில்லும் எழ-நாலாம் திருவாய் மொழியில் –
விஸ்லேஷ ஜெனிதமான ஆர்த்தியாலே பிராப்தி த்வரையை யுடைய இவர் -தம்முடைய
ஆர்த்தி ஹேதுவான பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குகைக்கு -சர்வ சக்தியான சர்வேஸ்வரனை ஒழிய சமர்த்தர் இல்லை என்று அறுதியிட்டு
அவனுடைய த்ரைவிக்ரம வியாபாரத்தையும்
அம்ருத மதனத்தையும்
பூமி உத்தரணத்தையும்
ஜெகன் நிகரணத்தையும்
பாரத சமர ப்ரவர்த்தகத்வத்தையும்
ஹிரண்ய வாதத்தையும்
லங்கா பங்கத்தையும்
பாண யுத்தத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித விஜய ஆபத்தான விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய விரோதி நிரசன சாமர்த்தியத்தை
அனுசந்தித்து அருளுகிறார் –
——————
7-5-கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?-அஞ்சாம் திருவாய்மொழியில்-கீழ் -அநேக வித விஜய அபதானங்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய
அதிசயித சக்தி யோகத்தை அனுசந்தித்து விரோதி நிரசன சமர்த்தன் அவனே என்று அறுதி இட்டவர் –
அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை வெளியிடுகைக்காக -ஸ்வ அபிமான அந்த பாவ மாத்ரத்தாலே
அவனுடைய அதிசயித புருஷார்த்த பிரதத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி யுக்தமான ரேஷன் பிரகாரத்தையும்
சிசுபால மோக்ஷத்தையும்
ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
ஸ்ரீ வராஹ வ்ருத்தாந்தத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான ஆர்த்தித்தவ சாமர்த்யத்தையும்
மார்க்கண்டேய ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான ஹிரண்ய நிரசனத்தையும்
பாண்டவ விரோதி பஞ்சனத்தையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனாய் அதிசயித சீல ப்ரகாசகமான அவதார வைலக்ஷண்யத்தை யுடைய சர்வேஸ்வரனை ஒழிய
அநிஷ்ட நிவ்ருத்தி அர்த்தமாகவும் இஷ்ட பிராப்தி அர்த்தமாகவும் ஆஸ்ரயணீயர் வேறொருவர் இல்லை என்னும் இடம்
சர்வ ஸம்ப்ரதிபன்னம் என்று அருளிச் செய்கிறார் –
—————
7-6-பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!-ஆறாம் திருவாய் மொழியில்
இப்படி ஆஸ்ரித பவ்யனாய் விரோதி நிவாரகனான சர்வேஸ்வரனுடைய குணாதிக்யத்தைக் கீழே அனுசந்தித்து
அவனை ஒழிய வேறு விரோதி நிவர்த்தகர் இல்லாமையால்
அவனுடைய காரணத்வாதி ப்ரயுக்தமான சம்பந்த்ய விசேஷத்தையும்
தத் கார்யமான சர்வாத்ம பாவத்தையும்
ரக்ஷணைகாந்தமான பரதவ ஸுலப்யங்களையும்
அவற்றோடு கூடின போக்யதா அதிசயத்தையும்
அந்த போக்யதா ப்ரயுக்தமாய் அத்யுஜ்ஜ்வலமாய் யுள்ள ப்ராப்யதையையும்
அந்த ப்ராப்யதா ப்ரகாசகமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஸ்வேந ரூபேணவும் காரண புருஷ ரூபேணவும் உண்டான ரக்ஷண பிரகாரத்தையும்
தத் உபயுக்தமான மாலி ப்ரப்ருதி நிரசனத்தையும்
விபீஷண பஷ பாதத்தையும்
ஸ்வ ஜன ரக்ஷணத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய ப்ராப்தியாலும் பஷ பாதத்தாலும் அவனைக் கொண்டு
விரோதியைக் கழித்துக் கொண்டு அவனை பிராபிப்பதாக அத்யார்த்தராய்க் கூப்பிடுகிறார் –
———
7-7-ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்-ஏழாம் திருவாய் மொழியில் –
இப்படி ஆர்த்தியோடே கூப்பிட்டவர் -அடி யுந்தி கை மார்பு கண் வாய் -என்று பிரஸ்த்துதமான விக்ரஹ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து –
விலக்ஷணமான உத்தம அங்க அவயவங்கள் தனித் தனியேயும் சமுதாயமாகவும் ப்ரத்யக்ஷவத் விசதமாம் படி பிரகாசிக்க
அபரிச்சின்ன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருக் கண்களையும்
ஆஸ்ரித விஷய அபி நிவிஷ்டனான அவனுடைய நாஸா தண்டத்தையும்
ஸ்யாமள விக்ரஹத்துக்கு பரபாகமான திவ்ய அதர சோபையையும்
காமனுக்கும் உத்பாதகனாம்பாடி கம நீயதையை யுடையவனுடைய பாரூ யுகளத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின அனாயாசத்தை யுடையவனுடைய மந்த ஸ்மித்தையும்
அனந்தசாயியான அவனுடைய கர்ணிகா அலங்க்ருதமான கர்ண பாசத்தையும்
மஹா புஜனான அவனுடைய லலாட சோபையையும்
ஏவம்வித அவயவ விசிஷ்டமான ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாமான்ய திரு முக சோபையையும்
ஆச்சர்ய பூதனான அவனுடைய மயிர்முடி அழகையும்
சர்வாதிகத்வ ஸூசகமான அபிஷேக சோபையையும்
அனுசந்தித்து -அது சம்ச்லேஷ பர்யந்தம் அல்லாமையாலே அத்யந்தம் ஆர்த்தரான இவருடைய ஆர்த்தி கண்டு
நிர்விண்ணரான ஸூஹ்ருத்துக்களுக்கும் பரிவர்க்கும் தமக்கு ஓடுகிற தசையை ஆவிஷ்கரித்த பிரகாரத்தை
நாயகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய விஸ்லேஷ தசையில் அவனுடைய திவ்ய அவயவங்கள் உரு வெளிப்பாடாய்த் தோன்றக் கிட்டி
அனுபவிக்கப் பெறாமையாலே க்லிஷ்டையான நாயகியானவள் தனக்கு ஹிதம் சொல்லி நியமிக்கிற
தோழிமார்க்கும் தாய்மார்க்கும் தன்னுடைய ஈடுபாட்டை அறிவித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
—————
7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-எட்டாம் திருவாய்மொழியில் –
கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த
வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற
ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –
———
7-9-என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய-ஒன்பதாம் திருவாய் மொழியில்
கீழ் -தம்முடைய விரோதி நிவ்ருத்திக்கு அனுரூபமான ஈஸ்வரனுடைய ஆச்சர்ய சக்தி யோகத்துக்கு ப்ரகாசகமாயுள்ள
விசித்திர விபூதிமத்தையை அனுபவித்து ஸந்துஷ்டரான இவர் –
இவன் விரோதி நிவர்த்தகத்தில் விளம்பிக்கைக்கு அடி என் என்று நிரூபித்து அவன் தம்மை வாசிக கைங்கர்யம் கொள்ளுகைக்காக
வைத்த பிரகாரத்தைக் காட்டக் கண்டு ப்ரீதராய் –
தம் விரோதி கிடக்கச் செய்தே அத்தை மதியாமல் அசித் கல்பமாக்கி அடிமை கொள்ளுகைக்கு அடியான
நிருபாதிக சம்பந்தத்தையும்
பிரதம பிரவர்த்தனத்தையும்
பக்தார்த்த ப்ரவ்ருத்தியையும்
விரோதியை மதியாமல் விரும்பின படியையும்
விருப்பத்தால் வந்த மேன்மையையும்
மேன்மைக்கு எல்லை நிலத்தையும்
அப்பரத்வ அனுபவத்துக்கு விலக்கான பாபத்தினுடைய நிவர்த்தனத்தையும்
அதிசயித அனுபாவ்ய குண யோகத்தையும்
அதனுடைய நித்ய அநுபாவ்யத்தையையும்
நிஷ் ப்ரத்யுபகாரமான நிரவதிக உபகாரகத்வத்தையும்
அனுபவித்து ஏவம்வித ஸ்வ பாவனானவன் என் விரோதியைக் கழித்து என்னை வாசிக கைங்கர்யம் கொண்ட படிக்கு
எத்தைச் செய்வேன் என்று உபகார ஸ்ம்ருதியாலே அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –
————
7-10-இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும்-பத்தாம் திருவாய் மொழியில்
கீழ் இப்படி தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரத்தால் தம்முடைய விரோதி அஸத் சமமாம்படி
ஹ்ருஷ்டரானவர் -அவன் உபகாரத்துக்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே
சேஷியானவனுக்கு அதிசய ஜனகமான சேஷ வ்ருத்தி ஒழிய இல்லை என்று அறுதி இட்டு -பிரதி சம்பந்தியான அவனுடைய
அசேஷ சேஷித்வ ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்தவ பூர்த்தியையும்
அநந்யார்ஹ சேஷத்வ அபதானத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண ஆகாரத்தையும்
அனுபாவ்யமான விக்ரஹ யோகத்தையும்
அனுபவ அர்த்தமான அவதாரத்துக்கு மூலமாயுள்ள அனந்த சயனத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி விசிஷ்டமான அபிமத சயாகத்வத்தையும்
பிரபல விரோதி பஞ்சநத்வத்தையும்
ஆந்திர துக்க நிவர்த்தகதத்தையும்
பாபம் நிவ்ருத்தமாய் ப்ராப்ய தேசம் சித்திக்கிலும் உத்தேசியமான ஆஸன்ன தேச யோகத்தையும்
நிரதிசய வ்யவசாய ஜனகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனான அவன் நம்மை விரோதியைக் கழித்து அடிமை கொள்ளுகைக்காக ஆசன்னமான
திரு வாறன் விளையிலே ஸந்நிஹிதனான அவன் திருவடிகளிலே அடிமை செய்யக் கடவோம் என்று மநோ ரதித்து
இப்படி நிவர்த்திய விரோதி பல நிரூபண பூர்வகமாக அதனுடைய சரண்ய நிவர்த்யத்வத்தை நிஷ்கர்ஷித்து நிகமிக்கிறார் –
————
8-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –
இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
————
8-2-நங்கள் வரி வளை யாயங்களோ-இரண்டாம் திருவாய் மொழியில் -தம்முடைய ஆகாங்ஷானு ரூபமாக அகவாயிலே அவன் வந்து முகம் காட்டினப்பாடியை அனுசந்தித்தவர் –
அவனுடைய பூர்த்தியைக் கண்டு பாஹ்ய சம்ச்லேஷம் பண்ண அபி நிவேசித்து அதித்வரித சித்தராய் ப்ராப்ய பூதனான ஈஸ்வரனுடைய
அபிகம்யத்வ ஸூ சகமான ஸுலப்யாதி குணாவத்தையையும்
அனுபாவ்ய ஆகாரத்தையும்
ஆகர்ஷகமான ஆபி ரூப்யத்தையும்
அநிஷ்ட நிராசகமான பரிகரவத்தையும்
அபரிச்சேதயமான உஜ்ஜ்வல்ய அதிசயத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அவபந்தும் அசக்தையையும்
அபி நிவேச ஜனகமான ஆகார விசேஷங்களையும்
அந்நிய சக்த விஷயத்தில் அஸூல பதையையும்
அநந்யார்ஹத்வ ஆபாதகத்வத்தையும்
சித்த அபஹாரியான திவ்ய விக்ரஹ உச்ச் ராயத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை அனுபவிக்கும் இடத்தில் இவ்வருகு யுண்டான அனுபவத்தில் சங்கம் அற்றால் அல்லது
சித்தியாது என்று அறுதி இட்டு த்வரையாலே ஆர்த்தரான தம்முடைய ஆர்த்தியை ஆற்றுகைக்காக
உன்முகரான ஸூ ஹ் ருத பிரக்ருதிகளைக் குறித்து தம்முடைய நிஸ் சங்கதையை வெளியிட்ட பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் தன்னுடைய அபிசரண உத்யோகத்தாலே தோழிமார் தாய்மாராடு
தான் வளர்த்த கிளி பூவை மயில் குயில்களோடு வாசியற சர்வர் பக்கலிலும் சங்கம் அற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வாதி குணங்களையும் அநா தரித்து அவன் வடிவு அழகிலே அபஹ்ருத சித்தையான
ஆகாரத்தைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
8-3-அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்-மூன்றாம் திருவாய் மொழியில் -அவனுடைய நிஸ் சங்க ஸூலபதையை அனுசந்தித்து இதர சங்க நிவ்ருத்தி பூர்வகமாகத்
தாம் தத் விஷயத்திலே சக்தரான படியை அனுசந்தித்தவர் –
அவன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக இந்த விபூதியில் தன் போக்யதையையும் ஸுகுமார்யத்தையும் பாராதே
ஆஸூர ப்ரப்ருதிகளும் அந்நிய பரருமான திரள்களுக்கு நடுவே அஸஹாயனாய் வந்து வர்த்திக்கிற இதுக்கு அஞ்சி
அவனுடைய அதிசயித போக்யதையையும்
விரோதி நிரசன உத்தியுக்தமான ஆயுதவத்தையும்
சஹாயாந்தர ராஹித்யத்தையும்
க்ஷண காலம் காணாது ஒழியிலும் கல்பமாம்படி அச்சத்தை விலைக்கும் படி ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஆயாச சஹம் அல்லாத ஸுகுமார்யத்தையும்
ரமணீய விக்ரஹணாய் வைத்து விரோதி நிரசன அர்த்தமாக வியாபாரிக்கும் படியையும்
கிஞ்சித்க்கார அனுகுணமாக ஸ்ரீ யபதித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அறியவரிய ஆகாரத்தையும்
அத்யந்த விலக்ஷண புருஷரும் சேவிக்கும் படியான அதிசயித சக்தி யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனானவன் தண் அழகையும் மார்த்வத்தையும் பாராதே ப்ரதிகூல பூயிஷ்டமான சம்சாரத்திலே
அஸஹாயனாய் வர்த்திக்கிற அளவிலே அடிமை செய்யப் பெற்றிலோம் என்று தளர்ந்தவர் –
அவன் தன்னுடைய ஆஸ்ரித ஸாமக்ர்யத்தையும் அதிசயித சக்தியையும் காட்டக் கண்டு
ஸமாஹிதராய் யுகந்து தலைக் கட்டுகிறார் –
——————
8-4-வார்கடா வருவி யானை மா மலையின்மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-நாலாம் திருவாய் மொழியில் -கீழ் –
அவனுடைய ஸுகுமார்யத்தாலே தனிமைக்கு அஞ்சின இவருடைய பயம் தீரும்படி பரிவரையும் சக்தியையும் காட்டி
ஆஸ்வசிப்பித்த சர்வேஸ்வரன் இவர் இப்படி அஞ்சிற்று விரோதி பூயிஷ்ட தேசம் என்றாய் இருக்கும் –
நம்முடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சக்தியையும் காட்டுவோம் என்று இவர் திரு உள்ளத்திலே பிரகாசிப்பிக்க
அவனுடைய அகில விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அசேஷ ஜகத் விஷயமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரத்தையும்
ஆஸ்ரித ஆபத்சகத்வத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான அதிசயித வியாபாரத்தையும்
ஆஸ்ரயணீய ஸ்தலாந்தர விலக்ஷணமான தேச விசேஷ ஸ்ததிதியையும்
ஆசிரயணீயதா வை லக்ஷண்யத்துக்கு அடியான சர்வ பிரகார உபகாரகத்வத்தையும்
அநு பாவ்யமான ஆபி ரூப்ய அதிசயத்தையும்
ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்துவத்தையும்
ஸ்ரஷ்ட ருஸ் ருஜ்யாதி விபாகம் இல்லாத சர்வாத்ம பாவத்தையும்
சத்தா விபூதி ஹேதுவான நிருபாதிக சேஷித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் பரிவரான வைதிக அக்ரேஸருடைய சம்பத்தே தனக்கு சம்பத்தாம் படி
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நின்ற அதிசயத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராகிறார்-
———————
8-5-மாயக் கூத்தா வாமனா-அஞ்சாம் திருவாய் மொழியிலே -கீழ்
திருச் செங்குன்றூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையிலே -திருச் செய்ய கமலக் கண்ணும் -என்று தொடங்கி
திவ்ய அவயவ சோபை தொடக்கமானவற்றை ப்ரத்யக்ஷ சாமானாகாரமாம் படி அந்தரங்கமாக அனுபவித்து ஹ்ருஷ்டரானவர்
அவ்வடிவு அழகோடு பாஹ்ய சம்ஸ்லேஷம் பண்ண வேணும் என்று அபி சந்தி பண்ணிக் கிட்டாமையாலே ஆர்த்தராய் அவனுடைய
அநு பாவ்யமான ஆபி ரூப்யாதிசயத்தையும்
ஆர்த்தி ஹராமான மயிர் முடியையும்
உதார குண வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித உபகாரார்த்தமான அர்ணவ ஸாயித்த்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
ஆகர்ஷக ஸ்வபாவ யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஏக ஆஸ்ரிதனையே அநேக வித கிஞ்சித்காரம் கொள்ளும்படியையும்
ஆஸ்ரித ஸூலபனாய் வைத்து அறிய வரியனான நிலையையும்
அனுசந்தித்து ஏவம் வித ஸ்வ பாவனானவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே அத்யந்தம் ஆர்த்தராய்
கிலேசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
இப்படி பிராவண்யத்தை ஈஸ்வரன் தன் பக்கலிலே களிப்பித்தது அனுபவ பிரதிபந்தகத்தைக் கழிக்கையில் யுண்டான கணிசம் என்று கருத்து –
————
8-6–எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ-ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி அனுபவ அபி நிவேசத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்ட இவ் வாழ்வாருடைய
ஆர்த்தி தீருகைக்காக இவருடைய சகல விரோதிகளை போக்கி ஸம்ஸ்லேஷிப்போம் என்று ஈஸ்வரன்
திருக் கடித்தானத்திலே ஆசன்னமாக வந்து ஸந்நிஹிதனான படியை பிரகாசிப்பிக்க அவனுடைய
ஆஸக்தி நிதானமான சேஷித்வத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தகமான சாமர்த்யத்தையும்
பராக்ரம ஸைக்ர்யத்தால் வந்த வீர ஸ்ரீ யோகத்தையும்
ஆந்த்ர விரோதி நிவர்த்தகமான அந்த ப்ரவேசத்தையும்
ப்ரத்யாசக்திக்கு அடியான ப்ராப்ய தேச வர்த்தித்தையும்
அவனிலும் அவன் தேசம் விரோதி நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
தேச ஸ்ம்ருதி மாத்திரமே துக்க நிவர்த்தகம் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேசத்தினுடைய அசாதாரண்யத்தையும்
அர்ச்சாந்தர ஸ்த் தலத்திலும் ஸந்நிஹிதன் என்னும் இடத்தையும்
ஆஸன்ன தேச ஸ்த்திதி அந்த ப்ரவேச அர்த்தம் என்னும் இடத்தையும்
அனுசந்தித்து -நெஞ்சிலே வந்து புகுந்து தம்முடைய விரோதியைப் போக்கி அனுபவிப்பதாக அத்யா சன்னனான
அவனுடைய அபி நிவேசத்தைக் கண்டு தமக்குப் பிறந்த ஹர்ஷத்தை அருளிச் செய்கிறார் –
———
8-7-இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ்-ஏழாம் திருவாய் மொழியில் –
திருக் கடித்தானத்திலே எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரன் தம்முடைய திரு உள்ளத்திலே ஸமஸ்த விரோதிகளும்
கழியும்படி புகுந்து பரிபூர்ணமாக எழுந்து அருளக் கண்டு
அவன் தானே அர்த்தியாய்ப் புகுந்த படியையும்
அவனுடைய விரோதி நிவர்த்தகத்வத்தையும்
அஞ்ஞான தமோ நிரசனத்தையும்
அதுக்கு அடியான அத்யுஜ்ஜ்வல விக்ரஹ யோகத்தையும்
ஸூஸ்த்திர ஸ்த்திதியையும்
அத்தாலே பிறந்த திவ்ய அவயவ சோபையையும்
அவ் வழகினுடைய அநு பாவ்ய அதிசயத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
அதிசயித உபகாரகத்தினுடைய அனுசந்தேயத்வத்தையும்
நித்ய அநு பாவ்ய பரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் தன திரு உள்ளத்தில் புகுந்து இருக்கிற அதிசயித
வ்யாமோஹத்திலே விஸ்மிதராய் இது பிரமமோ மாயாதி விகாரமோ என்று சங்கித்து
நம் அளவில் விப்ரலம்பியான் என்று தெளிந்து இது ஒரு உபகார அதிசயமே
என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராகிறார் –
———
8-8-கண்கள் சிவந்து பெரியவாய்வாயும் சிவந்து கனிந்து-எட்டாம் திருவாய் மொழியில் -கீழ் தம்முடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து இந்திரியாதி விரோதிகளை நசிப்பித்துத்
தன் பேறாகக் கலந்து ப்ரீதனான ஈஸ்வரன் -இவருக்கு நிகர்ஷ ஆபாதகமான விரோதி வந்தேறி என்னும் இடம்
இவர் அறியும் படி இவருடைய ஸ்வரூபமானது நமக்கு பிரகாரமாய் இருக்கிறபடியையும்
விலக்ஷணமாய் இருக்கிறபடியையும் காட்டி நைர் தோஷயத்தை பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி
இவருடைய ஆத்ம ஸ்வரூபம் தன்னை ஆஸ்ரயித்து இருக்கும் என்கைக்கு உறுப்பாகத்
தான் இவருடைய ஹ்ருதயத்தில் இருக்கிற இருப்பையும்
சர்வாந்தராத்ம பூதனான தன்னுடைய நிரதிசய ஞானானந்த யோகத்தையும்
அஹமர்த்த பூதனான ஆத்மாவும் தனக்கு பிரகார பூதன் என்னும் இடத்தையும்
சர்வ காரண பூதனான தான் விலக்ஷண சாரஸ்யத்தை யுடையனான சேதனனுக்கு அப்ருதக் பூதனான நிலையையும்
ஸ்வ பிரகார பூதனான ஆத்மாவினுடைய ஸூரவதமத்வத்தையும்
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ப்ராப்ய பாவத்தையும்
ஏவம் வித ஆத்ம ஞானம் இல்லாதாருடைய சம்சார சம்பந்தத்தையும்
ஆத்மாபிராப்தி காமனுடைய அந்திம ஸ்ம்ருத்யபேஷையையும்
ஸ்வரூப ஐக்கிய ரூபமான மோக்ஷம் அசம்பாவிதம் என்னும் இடத்தையும்
ஏவம் விதனான ஆத்மாவுக்குத் தன் பக்கல் ப்ரத்யாசத்தியே உஜ்ஜீவன ஹேது என்னும் இடத்தையும்
பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து இப்படி விலக்ஷணமான ஆத்மாவினுடைய நைர் தோஷயத்தை பிரகாசிப்பித்துத்
தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டான் என்று ப்ரீதராகிறார் –
————
8-9-கருமாணிக்க மலை மேல்-ஒன்பதாம் திருவாய் மொழியில் கீழே -ஸுந்தர்ய சீலாதி விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு பரி ஸூத்தாத்ம ஸ்வரூபமானது
பிரகார தயா சேஷம் என்று தெளிந்தவர்
அந்த சேஷ பூதனான ஆத்மாவினுடைய ததேக ரஷ்யத்வ ததேக போக்யத்வங்களை ப்ரதிபாதிப்பதாக
சேஷியினுடைய திவ்ய அவயவ சோபையையும்
திவ்ய ஆபரண சோபையையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
குணவத்தாதிசயத்தையும்
அபரிச்சின்ன விபூதி யோகத்தையும்
உதார குண உத்கர்ஷத்தையும்
பிரணயித்தவாதிசயத்தையும்
சர்வ கர்ம சமாராத்யதையும்
சர்வ வேத ப்ரதிபாத்யதையையும்
ஆச்சர்ய அவஹாவத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பிரகார விசிஷ்டனாயத் திருப் புலியூரில் எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய அனுபவத்தில்
அவகாஹித்து ஹ்ருஷ்டரான இவருடைய ரூபாதி வைலக்ஷண்யத்தைக் கண்ட பரிவர் தொடக்கமான பார்ஸ்வஸ்த்தர்
இந்த வைலக்ஷண்யத்திலே ஜிஜ்ஞாஸூர்களாக –
ஸூஹ்ருத்த பூதரானவர் அவர்களுக்கு அறிவித்த பாசுரத்தைத்
திருப் புலியூரில் நாயனாருடனே இயற்கையிலே புணர்ந்த நாயகியினுடைய வேறுபாடு சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம் என்று அறிந்த
தோழியானவள் -இது அறியாதே இவளுடைய பதி சம்யோக ஸூசகமான பருவத்தைக் கண்டு
பந்துக்கள் வேறே மணமுரசு அறைவிக்க –
நாயகிக்கு இது அஸஹ்யம் என்று அறிந்து விலக்குவதாக உத்யோகித்து-
யுக்தி பிரகாரத்தாலும் வடிவில் வேறுபட்டாலும் நிரூபித்து அறிந்தாளாக பந்துக்களைக் குறித்து
இவள் திருப் புலியூர் நாயனாருடைய குண நாமங்களையே பலகாலும் பேசா நின்றாள் –
இவளுக்கு அங்கே பாவ பந்தம் உண்டாகக் கூடும் –
அவனாகிறான் இவளுக்குத் தகுதியாம் படி
அபி ரூபனாய் அலங்கார விசிஷ்டனாய்-ஆண் பிள்ளையாய் –ஆசாரஸ்த்தனாய் -வேதவித் அக்ரேசனாய் –
ஆச்சர்ய பூதனாய் இருப்பான் ஒருவன் -ஆதலால்
இவள் வடிவில் அந்யதா ஸித்தமான சம்ச்லேஷ ஸூ சகமாக சிஹ்னங்கள் உண்டாகையாலும்
அவனுக்கே இவளாம் என்று அறத்தொடு நின்று உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
—————
8-10-நெடுமாற்கு அடிமை செய்வன் போல்-பத்தாம் திருவாய் மொழியில் -கீழில் திருவாய் மொழியிலே பகவத் சேஷத்வத்தினுடைய நிரதிசய போக்யதையை ப்ரதிபாதித்து
அந்த போக்யதாதிசயத்தாலே -மேற்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -என்று ப்ரஸ்துதமான
ததீய சேஷத்வ பராம்யத்தில் இனிமையானது பிரகாசித்து
அந்த ததீயருடைய போக்யதைக்கு ஹேதுவான தத் சம்பந்த்யத்துக்கு மூலமாய் இருக்கிற ஈஸ்வரனுடைய
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
உதார ரூபத்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
ஆச்சர்ய ஸ்வ பாவத்தையும்
ஆஸ்ரித விரோதி நிரசனத்தவத்தையும்
அகில காரணத்வத்தையும்
அர்ணவ ஸாயித்வத்தையும்
ஆஸ்ரித விரோதி நிராசகமான திவ்ய ஆயுத பூர்த்தியையும்
அனுபாவ்ய ஆகார யோகத்தையும்
அனுசந்தித்து பகவத் – அபிமதரான பாகவதருடைய அத்யந்த சேஷத்வ காஷ்டா விசேஷமே-அதிசயித போக்யமாய் –
ஐஸ்வர்ய கைவல்ய பகவத் ப்ராப்த்தியாதிகள் அதுக்கு சத்ருசம் அல்லாதபடியான பரம புருஷார்த்தத்வம் பிரகாசிக்கும்படி
பிரதிபந்தகத்தை நிஸ் சேஷமாக நிவர்த்திப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –
ததீயா சேஷத்வ பரமான பயிலும் சுடர் ஒளியில் தத் சம்பந்த நிபந்தயமான
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் உண்டாகையாலே
முதலிட்டு நாலு பாட்டாலே சேஷித்வத்தையும்
அநந்தரம் மூன்று பாட்டாலே சரண்யத்வத்தையும் ப்ரதிபாதித்து
எம் தொழு குலம் தாங்கள் என்று சங்க்ரஹேண ப்ரதிபாதித்த ப்ராப்யத்வத்தை
இங்கே விஸ்தரேண-பிரதிபாதித்து அருளுகிறார் –
————
9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-ஒன்பதாம் பத்தில்
கீழ் ஏழாம் பத்திலும் எட்டாம் பத்திலும் விரோதி ஸ்வரூபத்தையும் -தந் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்து –
மேல் இரண்டு பாத்தாலும் பிராப்தி பலாவாப்தியை அருளிச் செய்வதாக –
இப்பத்திலே பல ஸ்வரூபத்தை நிரூபிப்பதாகக் கொண்டு
பல பூதனான ஈஸ்வரனுடைய நிருபாதிகதையையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா நித்ய பிரார்த்யத்வத்தையும்
நிரதிசய போக்ய சீலாதி குண யோகத்தையும்
நித்ய அபூர்வ யோக்யதையையும்
ஸ்மரண தசையில் சைத்தில்ய ஜனகமான போக்கிய குணவத்தையும்
ஸ்ம்ருதிஸைதில்யம் யுடையாரை புஜிம்பிக்கையில் உண்டான பிரதம உத்யோத்தையும்
அத்தயதரணீய கடக கமயத்வத்தையும்
பத்னீ பரிஜன பூர்த்தியையும்
அல்ப கால விளம்பத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும்
பத்தி காரிதமான கைங்கர்ய பிரதி சம்பந்தத்வத்தையும்
அருளிச் செய்து அவனுடைய பல ரூபத்தை அருளிச் செய்து அருளுகிறார்
முதல் இரண்டு பத்தாலே நிரூபித்த ப்ராப்ய ஸ்வரூபத்தினுடைய ப்ரயோஜன ரூபத்வம் இங்கே நிரூபிக்கப் படுகிறது –
முதல் திருவாய் மொழியிலே ததீய சேஷத்வ போக்யதா பிரதிபத்தி பிறக்கும் படி ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்த பின்பு –
அந்த ததீய சேஷத்வ போக்யதா மூலமான தத் போக்யதையை அனுசந்தித்து –
அவனுடைய சர்வ பிரகார பலத்தவத்துக்கு உபபாதகமான சர்வவித அந்வயத்துக்கு ப்ரகாசகமான
ஆபத் ஸகத்வத்தையும்
அவிஸ்வாச நிராசகத்வத்தையும்
அநிஷ்ட நிரசன கிருபா யோகத்தையும்
அவதார ப்ரயுக்த குணோத்தரத்தையையும்
அநிஷ்டயத்வம்சகத்வம் அடியான அபிமத நீயதையையும்
கீர்த்த நீய குணவத்ததையும்
சிந்தா மாத்திரை ஸூலபத்வத்தையும்
உஜ்ஜீவன ஹேதுத்துவத்தையும்
போக்கிய விக்ரஹ விசிஷ்டதையையும்
பூ பார நிராசகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பந்துவானவன் -அல்லாதார் உபாதி நிபந்தனபந்துக்கள் –
ஆதலால் அவர்களை விட்டு நிருபாதிக பந்துவானவான இவனை நோக்கி உஜ்ஜீவியுங்கோள் -என்று
தாம் அறுதியிட்டு அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுகிறார் –
————
9-2-பண்டை நாளாலே நின் திரு வருளும்பங்கயத்தாள் திருவருளும்கொண்டு -இரண்டாம் திருவாய் மொழியில் கீழே நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரனுடைய பல ரூபதயா ப்ராப்யத்தையை அருளிச் செய்து –
அவன் கண் வளர்ந்து அருளில் கைங்கர்யம் பண்ணுகையை மநோ ரதித்து-கைங்கர்ய பிரதிசம்பந்தியானவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அனுரூப சம்பந்தத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயத்வத்தையும்
தர்ச நீய ஆகாரதையையும்
மந்த ஸ்மித சோபையையும்
ஆஸ்ரித அர்த்தமான திவ்ய வாஹந திவ்ய ஆயுதவத்தையும்
அசாதாரண திவ்ய பரிகர யோகத்தையும்
அகில லோக வந்த்யத்வத்தையும்
அதிசயித ஸுகுமார்யத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மி சேவ்யத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டனான நீ உனக்கு அசாதாரண சேஷ பூதராயப் போந்த எங்களுக்கு
கிருபை பண்ணி பூர்ண கடாக்ஷம் பண்ணவும் –
திருவடிகளை எடுத்துத் தலையிலே வைக்கவும் அங்கீ கரிக்கும் பொழுது பிராட்டியோடே கூட எழுந்து அருளி இருந்து அங்கீ கரிக்கவும்
ஆசா அநு ரூபமாக நடந்து எழுந்து அருளி வரவும்
முகமும் முறுவலுமாய்க் கொண்டு என் முன்னே நிற்கவும்
நிற்கும் போது பெரிய திருவடியை மேற்கொண்டு திவ்ய ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு வரவும்
அசாதாரண பரிகாரத்தோடே வந்து என் முன்னே எழுந்து அருளி வந்து இருக்கவும்
சர்வ லோகங்களும் கண்டு வாழும்படி எழுந்து அருளி இருக்கவும்
இந்த ஸூ குமாரமான வடிவை நான் அனுபவிக்கும்படி பண்ணவும்
நாய்ச்சிமாரை அடிமை கொண்டு அருளுகிறாப் போலே உன் திருவடிகளில் அடிமை கொண்டு அருளவும் வேணும்
என்று தம்முடைய மநோ ரத பரம்பரையை திருப் புளிங்குடியிலே கிடந்தது அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –
————
9-3-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்-மூன்றாம் திருவாய் மொழியிலே
கீழே கைங்கர்ய பிரார்த்தனையைப் பண்ணி கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்று அபேக்ஷிக்க –
அவனும் தன் நிருபாதிக பந்யத்தாலே-நீர் அபேக்ஷிக்க வேணுமோ நம்முடைய கார்யம் செய்கைக்கு என்று
தன்னுடைய பிரகார பிரகாரி சம்பந்த தயோதகமான நாராயணத்வத்தை பிரகாசிப்பிக்கக் கண்டு –
கார்யமான சர்வ லோக ரக்ஷண ரசமர்த்தமாயுள்ள
திவ்ய நாம சம்பத்தையும்
ரக்ஷணாதி வியாபாரத்தையும்
அகில வேத வேத்யதா பிரகாரத்தையும்
நித்ய ஸூரி போக்யதையையும்
அதனுடைய நிருபம வைலக்ஷண்யத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுவான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தையும்
பிரபல அநிஷ்ட பஞ்சநத்வத்தையும்
அபீஷ்ட தேச வர்த்தித்தவத்தையும்
ஆஸ்ரயண மிகையான அதிசயித்த சீலத்வத்தையும்
அதனுடைய வாசா மகோசர மஹத்தையையும்
அனுசந்தித்து எவம்வித ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு அவனுடைய சீலத்திலே வித்தராய்
அனுபவம் தன்னிலும் அஷமரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
————
9-4-மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்செய்யாள்-நாலாம் திருவாய் மொழியில் கீழே அவன் ஸீலாதிசயத்தை அனுபவித்து சிதிலரானவர் –
ஸீலவானாய் ஸ்ரீ யபதியானவனை அனுபவிக்க வேணும் என்று அபி நிவேசித்து அந்த அபி நிவேச அனுரூபமான
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டத்வத்தையும்
அத்ய அபி நிவேச விஷயத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
அசேஷ பிரதி சம்பந்தித்வத்தையும்
காரணத்தவாதி குண யோகத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஹ்ருஷ்ட யதிசயத்தையும்
சர்வ அந்தராத்மாதிகளையும்
கிஞ்சித்க்கார விஷயத்வத்தையும்
நிருபாதிக சம்பந்தத்தையும்
அனுசந்தித்து ஏவம் வித பூதனானவனை அனுபவிக்க வேணும் என்கிற ஆகாங்ஷையாலே தம்மோடு கரணங்களோடு வாசியற
ஈடுபட்ட இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி முகம் காட்ட அனுபவித்து ஸந்துஷ்டராய்
ஆஸ்ரித அனுபாவ்யமான திருவாய் மொழியை அவன் திருவடிகளில் பாடி உஜ்ஜீவிக்கப் பெற்றேன் என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார் –
————
9-5-இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு-ஐஞ்சாம் திருவாய் மொழியில் கீழே மாசமாக அபரோஷித்து அனுபவித்து ப்ரீதரானவர் –
அவ்வனுபவ அனுரூபமாக பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபி நிவேசம் பிறந்து -அனுபாவ்யமான சர்வேஸ்வரனுடைய
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
ஸுசீல்யத்தையும்
தன் நிபந்தநமான ஆகர்ஷகத்வத்தையும்
ஆச்சர்ய குணாதி யோகத்தையும்
அநந்யார்ஹத்வ அபாதனத்தையும்
அனுபாவ்யமான திவ்ய அவயவ சோபையையும்
சைதில்ய ஜனகமான ரூப வை லக்ஷண்யத்தையும்
அவ்சாத்தை காரமான நாமாவத்தையையும்
போக்யமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனானவனோடு யதா மநோ ரதம் கலந்து பரிமாறப் பெறாத ஆர்த்திக்கு மேலே –
ஸ்வ சந்த வர்த்திகளான லௌகிக பதார்த்தங்களும் தத் குண விக்ரஹாதிகளுக்கு ஸ்மாரகமாக –
அத்தாலே சிதிலராய் கத்யந்தர ஸூன்யதையாலே அவனுடைய குண அனுசந்தானத்தாலே தரித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி தன் ஆற்றாமையால்
லௌகிகமான பஷ்யாதி பதார்த்தங்களைக் கண்டாகிலும் போது போக்குவோம் என்று அபி சந்தி பண்ணி –
பரஸ்பர ஸம்ஸ்லிஷ்டங்களாய் -ரசித்துத் திரிகிற அவை
அவனுடைய சம்ச்லேஷத்துக்கும் வடிவுக்கும் பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு நலிய
அத்தாலே ஈடுபட்டுப் போலி கண்டு இரங்கினவள்-
பின்னும் போக்கில்லாமையாலே அவனுடைய குணங்களை ஸ்மரித்து தரித்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
9-6-உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி-ஆறாம் திருவாய்மொழியில் கீழ் இவர் ஸ்மாரக தர்சனத்தாலே அத்யந்தம் அவசன்னரான அளவிலே
ஆஸ்வாச கரமாம்படி ஈஸ்வரன் தன் குணங்களை பிரகாசிப்பிக்க -அவனுடைய
ஆச்சர்ய பிரகாரத்தையும்
அனுபஹித பந்யத்தையும்
உதார குண ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலத்தையும்
ஆஸ்ரித பவ்யதையையும்
அத்யந்த வ்யாமோஹத்தையும்
வ்யாமோஹ பர்யவசானத்தையும்
அபேஷா நிரபேஷமான நித்யாதரத்தையும்
அனுபாவ்ய ஸுந்தர்யத்தையும்
அபி நிவேச ஸைக்ர்யத்தையும்
அனுசந்தித்து இந்த குணங்களினுடைய வைலக்ஷண்ய அனுபவத்தால் பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே
மிகவும் சிதிலராகிறார் –
————
9-7-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்-ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் -குண ஸ்மரணத்தாலே சிதிலரானவர் அந்த ஸைதில்யம்
பாஹ்ய அனுபவ பர்யந்தமான அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அனுபவ யோக்யமாம் படி திரு மூழிக் காலத்திலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய
அதிசயித போக்யதாகாரத்தையும்
அசாதாரண ஜன அனுபாவ்யத்தையும்
சேஷித்வ பிரகாச ரூப வைலக்ஷண்யத்தையும்
நித்ய அனுபாவ்ய சேஷித்வத்தையும்
நிரதிசய விபூதிமத்வத்தையும்
நித்ய அநபாயினீ சம்பந்தத்தையும்
அத்யுஜ்ஜ்வல திவ்ய அவயவத்தையும்
ஆபி ரூப்ய அதிசயத்தையும்
அசாதாரண சேஷித்வ சிஹ்னத்தையும்
அநுபஹித கிருபா யோகத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலே
கடக முகத்தால் லபிக்கப் பாரித்த பிரகாரத்தை
நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்த நாயகியானவள் வ்யதிரேகத்தில் தரிக்க அரிதான அவனுடைய அழகை
அனுபவிக்கைக்காகச் சில பஷிகளை இரந்து தூது போக விடுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அஞ்சிறைய மட நாரையிலே அபராத சஹத்வம் பற்றாசாகவும்
வைகல் பூம் கழிவாயில் சேஷித்வ சம்பந்தம் பற்றாசாகவும்
பொன்னுலுகு ஆளீரிலே ஏக ரஸத்வம் பற்றாசாகவும்
இத்திருவாய் மொழியிலே ஸுந்தர்யம் பற்றாசாகவும் தூது விடுகிறாள் –
————
9-8-அறுக்கும் வினையாயின ஆகத்து அவனைநிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-எட்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக முகத்தால் பிராபிக்க அபி நிவேசித்தவர் -ப்ராப்ய த்வர அதிசயத்தாலே –
அவன் பரிபூர்ணனாய்க் கொண்டு திரு நாவாயிலே எழுந்து அருளி இருக்கிற படியை பிரகாசிப்பித்துக் கொண்டு அவனுடைய
அனுபவ விரோதி நிராசக தேச வர்த்தித்வத்தையும்
அனுபாவ்யத்வ வைபவத்தையும்
அசாதாரண ஸம்பந்தத்தையும்
நித்ய கைங்கர்ய விஷயத்வத்தையும்
பத்னீ பரிஜன ஸ்தாந அநு பூர்த்தியையும்
ஆஸ்ரித பவ்யதையும்
சேஷித்வ ரக்ஷகத்வ ஆகார பூர்ணதையையும்
அனுபவ ஞான பிரதத்வத்தையும்
ஸூ ர வஸ்ம ஸர்வேஸ்வரத்வத்தையும்
அதி ரமணீய விக்ரஹ யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகாரனான சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தைக்கிட்டி அனுபவிப்பது
ஒரு நாளே என்று பஹு முகமாக மநோ ரதிக்கிறார்-
———
9-9-மல்லிகை கமழ் தென்றல் -ஒன்பதாம் திருவாய் மொழியிலே கீழ் ப்ராப்ய விஷயமான அபி நிவேசத்தாலே ஈடுபட்டவர்
அனுபவ யோக்ய அவஸ்த்தை சந்நிஹிதையாய் இருக்கச் செய்தேயும் அநு பாவ்யானான ஈஸ்வரன்
அஸந்நிஹிதன் ஆகையால் விளம்ப அஷமதாய் படியாக போக்ய பூதனானவனுடைய
ரஞ்ச நீய திவ்ய ஸ்வபாவதையையும்
ரக்ஷண திவ்ய பிரகாரத்தையும்
ரமணீய திவ்ய அவயவத்தையும்
அபிரூப திவ்ய வாஹனத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலபயத்தையும்
அனவதிக ஸுசீல்யத்தையும்
அத்ய யுதார ரூபதையையும்
அதிசயித சம்ச்லேஷத்தையும்
சாபிப்ராய நிரீக்ஷணாதிகளையும்
விஸ்லேஷ அஸக்யமான ஆச்சர்ய ரூபத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான போக்கிய பூதனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாத ஆர்த்தியாலும்
ஸ்மாரகமாயும் ஆஸக்தி ஸூ சகமாயும் இருக்கிற பதார்த்த தரிசனத்தால் வந்த ஸைதில்யத்தாலும்
அல்ப கால விளம்பமும் பொறுக்க மாட்டாமல் கூப்பிட்ட பிரகாரத்தை
பசு மேக்கப் போந்த ஸ்ரீ கிருஷ்ணன் ஸந்த்யை வந்து இருக்கச் செய்தேயும் வாராத விளம்பம் பொறுக்க மாட்டாமல்
கோபீ ஜனங்கள் தத் கால சித்த போக்யங்களாலே ஈடுபட்டு பொழுது கண்டு இரங்கிக்
கூப்பிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் —
———
9-10-மாலை நண்ணித் தொழுது எழுமினோ-பத்தாம் திருவாய் மொழியில் கீழே ப்ராப்ய ஆர்த்தராய்க் கூப்பிட்டவர்க்கு ஈஸ்வரன் அர்ச்சாவதார ஸூலபனாய்க் கொண்டு
திருக் கண்ணபுரத்திலே நிற்கிற நிலையைக் காட்டி இவருடைய ஆர்த்தியை சாமிப்பித்த இவ்வாபத் ஸகத்வத்திலே ஸந்துஷ்டாராய்
வடதள ஸாயித்தவ மஹா உபகாரத்வத்தையும்
வஸ்த்வய தேச வைலக்ஷண்யத்தையும்
விலக்ஷண விபூதி யோகத்தையும்
அதிசயித்த போக்யத்வத்தையும்
பரமபத பிரதத்வத்தையும்
அனுகூல விரோதி நிராசைக்காதவத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூலபதையையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
காரணத்வத்தையும்
ஸ்ரீ யாபதித்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டானாய்க் கொண்டு ஆஸ்ரயண ஸ்தலத்தில் அடிமை கொள்வதாக நிற்கிற
கைங்கர்ய பிரதி சம்பந்திவத்தையும் அனுசந்தித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் –
பக்தி பரராயும் பிரபத்தி பரராயும் யுக்தி பரராயும் அவனை
ஆஸ்ரயித்தும் அனுபவித்தும் அவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணியும்
நிவ்ருத்த சாம்சாரிக சகல கிலேசராய்க் கொண்டு வர்த்தியுங்கோள்-என்று
அவனுடைய கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தவத்தால் வந்த பல ரூபத்தை ப்ரதிபாதித்து நிகமிக்கிறார் –
————
10-1-தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்-பத்தாம் பத்தில் -கீழ்ப் பத்திலே சர்வேஸ்வரனுடைய பல ரூபத்வத்தை நிரூபித்து அருளி –
தத் அனுபவ ரூபமான பலத்தினுடைய அவாப்தி பிரகாரத்தை இப்பத்திலே நிரூபித்து அருளுவதாகக் கொண்டு –
ஆப்தனான அவனுடைய அதி சாஹாய்யத்தையும்
முன்பு யுண்டான நிரவதிக கிலேச சாந்தியைப் பண்ணும் போக்ய நாமாதி யோகத்தையும்
சம்ஸ் லிஷ்டனாய் இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ சங்கை பண்ணி கிலேசிக்கும் படியான சாரஸ்ய அதிசயத்தையும்
அநந்ய ஸாதனரோ பாதி உபாசகர்களுக்கும் ப்ராப்யனாம் ஆகாரத்தையும்
ச பிரகார உபாஸன பரர்க்கும் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளுக்குத் தானே நிர்வாஹகன் என்னும் இடத்தையும்
ததீய சேஷத்வ பர்யந்தமாக தன்னை ஆஸ்ரயித்தாருடைய சித்த அநுவிதானம் பண்ணிக் கொண்டு பல பிரதானத்திலே அபி யுக்தனாம் படியும்
தன் பக்கல் ப்ரவணரானாருடைய சரீராதிகளையும் தான் விரும்பா நின்று கொண்டு அவர்கள் அபேக்ஷைக்காக அவற்றை விடுவிக்கும் படியையும்
யாத்ருச்சிகமான ஆனுகூல்யமே பற்றாசாக யதாவத் போக ப்ரதானாகையும்
போக ஸித்திக்கு உறுப்பான அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிந ஸத்கார பிரதர்சனகத்தையும்
அதிசயிதையான பயபக்தி ரூபமான அபி நிவேசத்தை யுடைய தமக்கு
ஸ்ரீ யபதியான தன்னோடு உண்டான ஸ்த்திர சாயுஜ்ய ப்ரகாசத்தைப் பண்ணின படியையும்
அபரோக்ஷித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் அவாப்த பலராய் முடித்து அருளுகிறார் –
முதல் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்ய பிரதி சம்பதித்வம் ஒரு தேச விசேஷத்திலே பூரணமாய் இருக்கையாலே –
இந்த தேசத்தில் நின்றும் அங்கு ஏறப் போகைக்கு பாதகமான நம்முடைய விரோதியைக் கழித்து உகப்போடே
வழி நடத்திக் கொண்டு போவான் ஒரு ஸஹாய பூதன் வேணும் என்று அறுதியிட்டு திருமோகூரிலே ஸந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய
நிரவதிக போக்யமான யுதார ரூபதையையும்
நித்ய அனுபாவ்யத்வ யுக்தமான திரு நாம பூர்த்தியையும்
நிகில ஜகத் ரக்ஷகத்வத்தையும்
ரக்ஷண அர்த்தமான அநந்த ஸாயித்வத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அனுபவ ப்ரீதி கரமான ஆப்தத்வத்தையும்
அகில லோக ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
அவதார ப்ரயுக்த சீல சீதலத்வத்தையும்
திவ்ய அவயவ வைலக்ஷண்யத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அபீஷ்ட திவ்ய விக்ரஹ பரிக்ரஹத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான ஸர்வேஸ்வரனே நமக்கு வழித் துணையாவான் என்று
ஸ்ரீ காளமேகத்தின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி அருளுகிறார் –
———
10-2-கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன-இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -வழித் துணையாகக் காளமேகத்தை ஆஸ்ரயித்து ப்ராப்ய தேசத்து
ஏறக் கொண்டு போக உத்யோகித்த சர்வேஸ்வரன் –
தேசத்தினுடைய ப்ராப்யத்வத்தையும் தன்னுடைய கைங்கர்ய பிரதி சம்பந்தித்தையும் இந்த விபூதியில் பிரகாசிப்பித்து
இவர் உகப்பை விளைவித்துக் கொண்டு போவோம் என்று திரு உள்ளம் பற்றி –
நிரதிசய போக்யமான திரு வனந்த புறத்திலே கண் வளர்ந்து அருளுகிறபடியைக் காட்டாக கண்டு ஸந்துஷ்டாராய் -அவனுடைய
ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
ஆச்சர்ய அவஹமான அன்வயத்தையும்
அசேஷ ஜகத் ரக்ஷகத்வத்தையும்
அனவதிக வாத்சல்யத்தையும்
அனுபஹித சேஷித்வத்தையும்
சர்வ தேவ நிர்வாஹகத்வத்தையும்
சகல ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யோகத்தையும்
பரம ப்ராப்யத்வத்தையும்
கைங்கர்ய பிரதிசம்பந்தித்யித்வத்தையும்
ஆராதன வைலக்ஷண்ய அபாதகத்வத்தையும்
அநு சந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் வர்த்திக்கிற திரு வனந்த புரம் தன்னையே ப்ராப்யமாக அறுதியிட்டு
இங்கே தம்முடைய சகல கிலேசமும் தீரும்படி
அவனுடைய போக்யமான திரு நாமங்களைக் கீர்த்தித்தும்
பஹு முகமான கைங்கர்யங்களைப் பண்ணியும் அனுகூல ஜனங்களோடே அனுபவிக்கப் பார்க்கிறார் –
——————
10-3-வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ-மூன்றாம் திருவாய் மொழியில் -கீழே -திருவனந்த புரத்திலே அடிமை செய்யப் பாரித்தவர்
அவிம்பலேன -கிட்டப் பெறாமையாலே -அவனுடைய
போக்யத்தையும்
ப்ராப்ய பாவமும்
அடிமை கொள்ளப் பாரித்து இருக்கிற படியும்
புத்திஸ்த்தமாம் படி ஹ்ருதய ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தேயும்
சீக்ர ப்ராப்தியில் இச்சையால் த்வரிக்கும் படியான ஸுபாக்ய அதிசயத்தை யுடையானாகையாலே -அவனுடைய
புண்டரீகாக்ஷத்வத்தையும்
அர்ஜனீய சம்ச்லேஷத்வத்தையும்
அசகாய ஸ்வ பாவத்தையும்
ரமணீய ஸுலப்யத்வத்தையும்
ஆகர்ஷக திவ்ய அவயவத்தையும்
அசாதாரண நாயகத்வத்தையும்
ஆச்ரித ஜன போக்யத்வத்தையும்
அனுசந்தித்து விளம்பம் பொறாமையால் விஸ்லேஷத்தை அதி சங்கித்து
ஏவம் பூதனான நீ என்னை அகலாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து தமக்குப் பிறந்த ஆர்த்தியை
அவன் சந்நிதியில் விண்ணப்பம் செய்த பிரகாரத்தை
ஸ்ரீ கிருஷ்ணனோடு ஸம்ஸ்லேஷித்து ப்ரபாத சமயத்திலே அவனுடைய பிரிவை சங்கித்து அஞ்சினாள் ஒரு கோபிகை –
சந்தியில் பாதகங்கள் நலிவு செய்யா நிற்கும் என்னை நீ ஆஸ்வசிப்பித்துக் கொண்டு இருக்கவும் வேணும் –
போன இடத்தில் ஆஸூரா ப்ரக்ருதிகள் வரில் என் ஆமோ என்று அஞ்சா நின்றேன் -என்று
திருவாய்ப்பாடியில் பெண்கள் எல்லார்க்குமாகச் சமைந்தவனுடைய போக்கை விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
————
10-4-சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்-நாலாம் திருவாய் மொழியிலே -கூட இருக்கச் செய்தே ஈஸ்வரனுடைய பிரிவை அதி சங்கை பண்ணும்
தமக்குப் பிறந்த ப்ரேம அதிசயத்தாலே அவனும் விஸ்லேஷ பிரசங்கம் இல்லாதபடி சம்ச்லேஷ பிரகாரத்தைத் தெளிவிக்க –
அத்தாலே ஸந்துஷ்டாராய் -தன் பக்கல் பக்தி யுக்தராய் இருப்பார்க்கு
ஸூலபனாய் இருக்கும் என்று அறுதியிட்டு அந்த பக்தி லப்யத்வ உப பாதகமாக அவனுடைய
பரத்வ போக்யத்வ விஸிஷ்ட பாவ்யத்வத்தையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
அனுபாவகத்வ பூர்த்தியையும்
ஆஸ்ரித ரக்ஷண ஸ்தைர்யத்தையும்
அநந்ய கதி ஸூல பத்வத்தையும்
அதிசயித்த ஸுசீல்யத்வத்தையும்
போக்ய திவ்ய மங்கள விக்ரஹத்வத்தையும்
நித்ய அனுபாவ்யமான ரக்ஷகத்வத்தையும்
தத்வ யாதாத்ம்ய ப்ரகாஸகத்வத்தையும்
அசாதாரண ஜன ப்ராப்யத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த பக்தியானது
போக உபகரணமாய்க் கொண்டு ப்ராப்ய அந்தர்க்கதமான பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
————
10-5-கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்-அஞ்சாம் திருவாய் மொழியில் கீழ் போக உபகரண போதையான பக்தியினுடைய ஸ்வரூபத்தை ப்ரதிபாதித்து
அதனுடைய பிரகார ப்ரதிபாதன அர்த்தமாக பஜநீயனான சர்வேஸ்வரனுடைய
மந்த்ர லிங்கமான அசாதாரண நாமத்வத்தையும்
நாமார்த்த பூத குணாதி யோகத்தையும்
ஸ்ருஷ்ட்யாதி கர்த்ருத்வத்தையும்
ஆஸ்ரயண அர்த்தமான அருணாவை ஸாயித்வத்தையும்
மோக்ஷ பிரதத்வத்தையும்
ரக்ஷணார்த்த ஸுலப்யத்தையும்
உபாய உபேயத்வத்தையும்
அதிசயித்த புருஷ போக்யத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூல பத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அதிசயித மஹத்த்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை யுக்தார்த்த ப்ரதிபாதகமான மந்த்ர அனுசந்தான பூர்வகமாகப்
புஷ்பாதி யுபகரணங்களைக் கொண்டு கரண த்ரயங்களாலும் அனுபவிக்க ஸமஸ்த விரோதிகளும் தானே போம் –
நிரதிசய புருஷார்த்தமும் கைப்படும் -என்று பல வ்யாப்தமான
பக்தி யோக பிரகாரத்தை ஸூ க்ரஹமாம் படி சங்க்ரஹேண யுபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –
——
முதல் பாட்டில் தன் விஷயத்தில் சேஷத்வ காஷ்ட்டையை யுடைய நமக்கு நிரவதிக உபகாரத்தைப் பண்ணுவதாக உத்யோகியா நின்றான் –
அது தானும் நாம் நியமித்த படியே செய்வானாய் இரா நின்றான் என்று நெஞ்சைக் குறித்து அருளிச் செய்கிறார் –
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்–தன்னுடைய நிரவதிக ப்ரஸாதத்தைப் பெறுகையை நிரூபகமாக யுடையராய்
அதுக்கு அடியான சேஷத்வ ஞானத்தை யுடையாருக்கு அசாதாரண சேஷ பூதனாய் இருக்கிற எனக்கு –
திருவாழி ஆழ்வானைக் கை விடாதே போலே
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–ஸ்வ விஷயமான பூர்வ அனுபவ ரூப மஹா உபகாரத்தை
பண்ணுவானாக உத்யுக்தனாய் இரா நின்றான் –
அதுவும் ஸ்வ தந்த்ரனான தான் நினைத்தபடியே செய்கை அன்றிக்கே
புருஷார்த்தம் ஆகையால் நாம் விதித்த பிரகாரத்தில் ஆகா நின்றது -ஆனபின்பு
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்-அஞ்ஞான பாதகமாய் இருக்கிற பெரிய ஜகத்தில் –
அவனுடைய விஷயீ காரம் பெற்ற பின்பு-
இழி பட்டோடும் உடலினுள் பிறந்து தன் சீர் யான் கற்று -என்கிறபடியே -பகவத் பாகவத அனுபவ ப்ரீதி யர்த்தமாகவும்
பிறக்கையை அவன் நினைவு அறிந்த நான் இச்சிக்கிறிலேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–பற்றிற்று விடமாட்டாத சபலமான நெஞ்சே -அவன் நினைவு ஒழிய
நாம் நினைத்தபடி அர்ச்சாவதாராதி அனுபவம் பண்ண வேணும் என்கிற
ஸ்வ தந்த்ர அபிசந்தி ரூபமான அறிவு கேட்டை நீ தவிரப் பார்
தவிர்ந்தமை தோற்ற திரு வாட்டாற்றிலே நமக்கு பல பிரதனாயக் கொண்டு வந்து நிற்கிறவன்
திருவடிகளை உன் ஐக மத்யத்தாலே வணங்கப் பார் –
————
10-7-செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –
——————
10-8-திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-எட்டாம் திருவாய் மொழியில் -கீழே -தாம் அபேக்ஷித்தபடியிலே ஈஸ்வரன் கார்யம் செய்வதாக அறுதியிட்டு படியைக் கண்டு
இப்படி நம் பக்கல் வ்யாமோஹம் பண்ணுகைக்கும் –
நாம் அபேக்ஷித்த கார்யம் செய்யும்படி பரதந்த்ரன் ஆகைக்கும்-
நம் பக்கல் ஒரு ஹேதுவில்லை -நிர்ஹேதுகமாக நம்மை விஷயீ கரித்து
அருளினானாம் அத்தனை என்று அறுதியிட்டு -அதுக்கு அடியான அவனுடைய
யாதிருச்சிக அனுகூல்ய நிபந்தனமான பூர்ண அங்கீ காரத்தையும்
அங்கீகார ஸ்த்தைர்யத்தையும்
ஸூகமத்வ அதிசயத்தையும்
புருஷார்த்த பிரதத்வத்தையும்
பிராப்தி பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
போக ரஸ பிரதத்வத்தையும்
நித்ய அனுபாவ்யத்வத்தையும்
நிரவாதிக சர்வ பிரகார போக்யத்வத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
நித்ய கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பூர்ண விஷயீ காரத்தைப் பண்ணி
ஸமஸ்த விரோதியும் நிரஸ்தமாம்படி திருப்பேரிலே ஸந்நிஹிதனாய்
நிரதிசய ஆஹ்லாத காரமான அனுபவத்தைப் பிறப்பித்தான் –
இது ஒரு சீல அதிசயமே என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார்-
————
10-9-சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஒன்பதாம் திருவாய் மொழியில் -கீழில்-திருவாய் மொழி இறுதியாக பகவத் விஷயமாகத் தமக்கு
அனுபவ ப்ராவண்ய ரூபமான பரபக்தி நடந்தபடியே அருளிச் செய்து
அனுபவத்தில் அன்விதாரான இவர்க்குப் பரிபூர்ண அனுபவத்தில் ப்ராவண்ய அதிசயம் பிறக்கைக்கு உறுப்பாக
இவரைக் கொண்டு போய் அனுபவிப்பிப்பதாக நினைத்து
அர்ச்சிராதி மார்க்கம் முதலாக பிராப்தி பர்யந்தமான ப்ரயோஜன அம்சத்தைப்
பரஞ்ஞான விஷயமாம்படி பிரகாசிப்பிக்க நினைத்த சர்வேஸ்வரனுடைய
போக்ய குண பூர்த்தியையும்
நிருபாதிக சேஷித்வத்தையும்
அநந்யார்ஹத அபாதகத்வத்தையும்
போக்யத்வ பூர்த்தியையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
சேஷித்வ சிஹ்னத்தையும்
சமுத்திர ஸாயித்வாதிகளால் வந்த சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஸத்காரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் முக்தராய்ப் போகிற பாகவதருக்கு பந்தவ்யமான அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உண்டான ஆதி வாஹிக சதிகார பிரகாரங்களையும்
தேச விசேஷ ப்ராப்தியையும்
நித்ய ஸூரி பரிஷத் அந்தர்பவாத்தையும்
அபரோஷித்த க்ரமத்திலே முக்தராய்ப் போகிற பாகவருடைய ஸத்கார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
———
10-10-முனியே நான்முகனே முக்கண் அப்பா -பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply