ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்—தனியன்
யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –
அவதாரிகை –
நம் தர்சனத்துக்கு பிரதானம்
ரஹஸ்ய த்ரயம் -என்றும்
ஸ்லோக த்வயம் -என்றும்
சதுஸ் ஸ்லோகீ –என்றும்
நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்து போருவர்கள் –
இதில் திரு மந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் பிரதிபாதிக்கப் படுகையாலே-
அந்த புருஷார்த்தத்துகு உபாய சிந்தை பண்ணுகிறது சதுஸ் ஸலோகியாலும் -ஸ்லோக த்வயத்தாலும் –
(ஸ்லோக த்வயம் என்றது ஸ்திதே மனசீ-என்று தொடங்கும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
உபாயத்தை விளக்குவது இந்த ஸ்லோக த்வயமும் சதுஸ் ஸ்லோகியும் என்றவாறு )
இவ் விடத்தில் சதுஸ் ஸ்லோகியால் செய்கிறது என் என்றால் –
ஸ்ரீ நம்பெருமாளுக்கு தேவதாந்தரங்களில் காட்டில் வாசி
மோஷ ப்ரதத்வமும் ஜகத் காரணத்வம் -என்கிற இவை –
இவை தான் எத்தாலே வந்தது என்றால்
ஸ்ரீயபதித்தவ -ஸ்ரீ நாராயணத்வங்களாலே வந்த
பரத்வாதி குணங்களாலே -என்கை-
வேதார்த்தமாய் இருந்துள்ள அர்த்த பஞ்சகத்துக்கு விவரணமான ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு
பர்யாலோசனம் பண்ணி இருந்துள்ள
ஸ்ரீ ஆளவந்தார் ஸதோத்ரீ கரித்து
ஸ்ரீ யபதித்தவ நிபந்தனமான சௌலப்யாதி குணங்களை
அனுபவிக்கிறார் -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியாலே-
இதில் முதல் ஸ்லோகத்தால் –
ஸ்ரீ பிராட்டியினுடைய –ஸ்ரீ நாராயண சம்பந்த நிபந்தனமான பரத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –
இரண்டாம் ஸ்லோகத்தாலே-
அந்த பரத்வத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீ பிராட்டி யுடைய புருஷகாரத்வம் சொல்லப் படுகிறது
மூன்றாம் ஸ்லோகத்தாலே
இப்படிக் கொத்த சௌலப்யாதி குணங்களை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
ஜகத் காரணத்வத்திலும் அந்தர் பாவம் உண்டு –என்னும் இடத்தைச் சொல்லி உபாய கீர்த்தனம் பண்ணப் படுகிறது –
நாலாம் ஸ்லோகத்தாலே
கீழ் சொன்ன உபாய பல ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது –
———————————————
காந்தஸ் தே புருஷோத்தம
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ்
சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி
ப்ரூம கதம் த்வாம் வயம்–1-
——–
பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்
————
காந்தஸ் தே புருஷோத்தம –
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போது ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்பந்த நிபந்தன நிரூபணம் பண்ண வேணும் –
இவனையும் இவளுடைய சம்பந்தத்தாலே என்றும் நிரூபிக்க வேண்டும்
அது எங்கனே -என்னில்
க ஸ்ரீ ஸ்ரீய–ஸ்தோத்ர ரத்னம் -12-என்றும்
ஸ்ரீ ய ஸ்ரீ யம் பக்த ஜனைக ஜீவிதம் -ஸ்தோத்ர ரத்னம் -45-என்றும் –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -செய்ய கண்ணா —உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா–பெரிய திருமொழி -7-7-1- -என்றும்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் -திருவாய் மொழி -7-2-9-என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போதும் காந்தஸ் தே புருஷோத்தம -என்னும் படியாய் இறே இருப்பது –
கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஸ்தோத்ர ரத்னம் -12
ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?
அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||–ஶ்லோகம் 45 –
எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –
திருவுக்கும் திருவாகிய செல்வா –ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –திரு மார்பா-உன்னைத் தளர்ந்தார் தாவளமாக்குமவளை திரு மார்விலே யுடையவனே(தளர்ந்தார் தாவளமாக்குமவளைஇவன் ரக்ஷகன் ஆக்குபவளே இவள் –இதில் புருஷகார பூதை என்கிறார் –கீழே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று )என் திருமகள் சேர் மார்பனே என்னும் –
‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.
‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.-அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.
பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,
நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது
செய்யா நிற்கச் செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.
இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.
பர்த்தா தே புருஷோத்தம -என்னாதே-
காந்தஸ் தே புருஷோத்தம -என்பான் என் என்னில் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –சுந்தர -16-5-என்றும்
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாத்ய அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் -சரணாகதி கத்யம் -1- என்றும்
ஸ்ரீ வல்லப -சரணாகதி கத்யம் -6- என்றும் –
யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸதி ரச ரரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசி யத் பாத சிஹ்னைச் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ருப்ய அநுபாவா
ஸா ந ஸ்ரீ ராஸ் த்ருணீ தாமம்ருத லஹரிதீ லங்கா நீ யைர பாங்கை -ஸ்ரீ குணரத்ன கோசம் -4-என்றும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-என்றும்
பிரயோகம் பண்ணுகிறார்கள் இறே –
காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் –அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது
புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பாலா -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்
ஹரி என்னுதல் -விஷ்ணு -என்னுதல் -செய்யாதே புருஷோத்தம -என்பான் என் என்றால் –
தவாவி மௌ புருஷௌலோகே ஷரஸ் சாஷர ஏவ ச
ஷரஸ் சர்வாணி பூதாநி கூடஸ்தோ அஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத்யு தாஹ்ருத
யோ லோகத்ரயமா விஸய பிபர்த்யவ்யய ஈஸ்வர
யஸ்மாத் ஷரமதீ தோ அஹ்ம ஷராதபி சோத்தம
அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதின புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15/16/17/18 –
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷
லோகே -சாஸ்த்ரங்களில்(எந்த ஒன்றால் லோகத்தை அறிகிறோமே அதுவே இங்கு லோகே )
க்ஷர: ச அக்ஷர: ஏவ ச த்வாவிமௌ-த்வௌ இமௌ- புருஷௌ ஏவ -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி யிருக்கையால்) க்ஷர புருக்ஷன் எனப்படும் ப₃த்₃த₄ ஜீவனும், அழியும் இயல்வில்லாமையால் (அக்ஷரன்) எனப்படும் முக்த ஜீவனும் ஆகிய இரண்டு(வகையான ) இப் புருக்ஷர்களே (பிரஸித்தி பெற்றவர்கள்)
க்ஷர: – க்ஷர புருக்ஷன்
ஸர்வாணி பூ₄தாநி – எல்லா ப ₃த்₃த₄ ஜீவனுமாவான்
அக்ஷர: – அக்ஷர புருக்ஷன்
கூடஸ்த:₂ உச்யதே – (அசித் ஸம் ₃பந்த₄மற்ற ) முக்தாத்மா எனப் படுகிறான்.
உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷
ய: து – எவன் ஓருவன்
லோக த்ரயம் – அசித், ப₃த்₃த₄ ஜீவன், முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும்(லோக்யதே -இதி லோகம் -அவலோகநம் -பார்க்கப்படும் பொருள்கள் -இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டவை -)
ஆவிஶ்ய – வியாபித்து(ப்ரவேஸம் ஆவேசம் உள்ளே புகுந்து வியாபித்து )
பி₃ப₄ர்த்தி – (அவற்தைத்) தாங்குகிறானோ
(அவன்)
அவ்யய: – அழிவற்றவனாய்
ஈஶ்வர: – (அனைத்தையும்) நியமிப்பவனாய்
பரமாத்மா இதி உதா₃ஹ்ருத:- பரமாத்மா என்று(ஆத்மா நாராயண பர இத்யாதி ஸ்ருதிகள்) ஶாஸ்த்ரங்களில் சொல்லப்படுபவனாய்
உத்தம: புருஷ: – (இக் காரணங்களால்) மிக மிக மேலான புருஷனாயிருப்பவன்-விலக்ஷண -அத்விதீயன்
அந்ய: – (முற்கூறிய க்ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும்)வேறு பட்டவன்
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷
அஹம் – நான்
யஸ்மாத் – யாதொரு காரணத்தினால்
க்ஷரம் – க்ஷர புருஷனை-பத்த ஜீவாத்மாவைக் கூட்டிலும்
அதீத: – கடந்து நிற்கிறேனோ
அக்ஷராத் அபி – அக்ஷர புருஷனை -முக்தனைக் காட்டிலும்-கூட
உத்தம: ச – மேலானவனாய் இருக்கிறேனோ
அத: – அக் காரணத்தினாலேயே
வேதே ₃லோகே – ஶ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும்(அபி நிஷ்பத்ய ச உத்தம புருஷ சாந்தோக்யம்-லோகம் -பார்க்கும் கருவி இங்கு -ஸ்ம்ருதி )
புருஷோத்தம: – புருஷோத்தமன் என்று
ப்ரதி₂த: அஸ்மி –புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்
அசித்தானது -ஸ்வரூப அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும்
சித்தானது -ஸ்வ பாவ அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும் –
ஆக உபய அந்யதா பாவ ரஹிதன் ஈஸ்வரன் -என்று கொண்டு
தனக்கு விபூதி பூதமான சேதன அசேதன விலஷணன் என்று இட்டு – புருஷோத்தம -என்கிறது அன்றோ -என்கிறார் –
பணி பதிஸ் சய்யா –
ஒரு ராஜாவுக்கு அபிமதையாய் இருப்பாள் ஒருத்தி கண்ட போது ரசிப்பது இத்தனை ஒழிய
ஒரு படுக்கையிலே ஏறப் பெறாதே யாய்த்து இருப்பது
அங்கன் அன்றிக்கே
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப -என்றும்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -என்றும்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்றும்
இப்படி பிரமாணம் உண்டாகையாலே கேவலம் அபிமதையான மாத்ரம் அன்றிக்கே
அனுரூபையுமாய் இருக்கையாலே அவனுக்கான படுக்கை இவளுக்கும் பிராப்தம் -என்கிறார்
பணி பதி -என்கையாலே –
அகாரேணோச்யதே விஷ்ணுச் சர்வ லோக ஈஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ ருகாரேணோசயதே சதா
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே -அயோத்யா -31-25–என்றும்
சொல்லுகிற படியே ஆத்ம வஸ்துவுக்கு ஒரு மிதுன சேஷத்வம் பரம புருஷார்த்தம் ஆகையாலே
இங்கும் வாசூகி தஷக ப்ரப்ருதிகளான அஷ்ட மகா நாகங்களுக்கு- பர்ப்ருடனாய் -தலைவனாய் –
சேஷ பூதருக்கும் தலையாய் இருந்துள்ள திரு வநந்த ஆழ்வான்
இருக்கும் போது உன் திருப் படுக்கை -என்கிறார் –
ஆசனம் வாஹனம் -வேதாத்மா விஹகேஸ்வரோ-
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரிவ்ருத் தே சிரோ காயத்ரம் சஷூ ஸ்தோம ஆத்மா
சாம தே தநூர் வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்தரே
ப ஷௌ யஜ்ஞா யஜஞியம் புச்சம் சந்தாம் ச்யங்கா நி
திஷ்ணியா சபா யஜூம்ஷிநாம – என்கிறபடியே
நாக ஜாதிகளுக்கு நாயகனான அனந்தன் திருப் படுக்கை ஆனால் போலே
இங்கும் வேத மயனாய் பறவைகளுக்கு ஆதாரனாய் இருந்துள்ள பெரிய திருவடி
இவளுக்கு ஆசன வாகனங்கள் -என்கிறார்
அபிமதை யானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமாய் இருக்கும்
ஏக ஆசனத்தில் கொண்டு இருக்க யோக்யதை அன்றிக்கே ஆய்த்து இருப்பது
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்திர் பாகவதைச் சஹ -என்கிறபடியே
இவள் அனுகூல ரூபாயாய் இருக்கையாலே இவனுக்கான ஆசனமும் வாகனமும் இவளுக்கும் பிராப்தம்
என்று அருளிச் செய்கிறார் –
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால்
நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷ பூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறு மணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி
கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்ய விஷ அநல ஸிக உஜ்ஜ்வல –சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்கர்ம்ய அத்தி ஜகத் த்ரயம் –
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷ அசேஷ ஸூரார்ஜித-தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபம் ஏவ ச –
ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசை அபி -ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-
பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில்
சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க –
இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி
தயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநீ -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-
ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை
தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே
வேதாத்மா விஹகேச்வரோ-வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி
இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –
அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்
விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு
பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
ஆக -இப்படி கீழ்ச் சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு நித்ய விபூதி சம்பந்தம் சொல்லப் பட்டது –
இனி மேல் ஸ்லோக சேஷத்தாலே லீலா விபூதி யோகம் என்ன
தத் அந்தர் வர்த்திகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதி தேவ கணங்கள் உடைய
சேஷத்வம் என்ன இவை சொல்லப் படுகிறது
அது எங்கனே என்றால் –
யவநிகா மாயா ஜகன் மோஹி நீ –
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மகேஸ்வரம்–ஸ்வேதர -4-10– -என்றும் –
பிரகிருதி மாயை -அத்தை தூண்டுபவன் மகேஸ்வரன் –
இந்த்ரோ மாயாபி புரூரூப ஈயதே -ப்ருஹத் 4-5-19– இந்த்ரன் பிரகிருதி ஆகிற மாயையினால்
பல உருவங்களுடன் சஞ்சரிக்கிறான் -என்றும்
தைவி ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-என்றும்
இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிற பகவன் மாயை அன்றோ உனக்கு யவநிகை –
ஒரு திரையின் உள்ளிருக்கும் பேரைப் புறம்பில் அவர் காணாத படியாய்
புறம் இருக்கும் பேரை உள்ளிருக்கும் அவர்கள் காணாத படியாய் யாயிற்று இருப்பது
அங்கன் அன்றிக்கே –ஜகன் மோஹிநீ -என்று எம்பெருமானுக்குத் திரோதாயிகையாய் இருக்கை அன்றிக்கே
ஜகத்துக்குத் திரோதாயிகையாய் இருக்கும் -என்கிறார் –
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை -பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பத்தை அருளிச் செய்தபடி-
மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு
ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சப்த்தாதிகளால் விசித்திரமாக
போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே
கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று
ப்ரஹ்மேஸாதி ஸூரா வ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
பூலோகம் தொடங்கி சத்ய லோகம் பர்யந்தமாக மேல் உள்ள லோகங்கள் என்ன
அதல விதல ஸூதல பாதாளோத்தால ரஸாதல போகவதீ பர்யந்தமான கீழ் ஏழு லோகங்கள் என்ன
இவற்றில் காணப் பட்டு உடையராய் இருந்துள்ள தேவ கணங்கள் என்ன
இவர்களுக்கு கொத்து முதலிகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதிகள்-என்ன
சரஸ்வதி ருத்ராணீ புலோ மஜாப் ப்ரப்ருதிகளாய் இருந்துள்ள தேவ ஸ்திரீகள் என்ன
அப்ஸரோ கணங்கள் என்ன
இவர்கள் எல்லாரும் ஆண் அடிமையும் பெண் அடிமையுமாய் இருக்கும் -என்கிறார்
ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ் –சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்-இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜ –கண -போன்ற பதங்கள் பிரயோகம்–சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்- தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –
இவை எல்லாம் யதார்த்தம் யன்றோ –
ஸ்தோத்ரம் யன்றோ
இது எங்கனே கூடும்படி -என்றால்
ஸ்ரீரித் யேவ ச நாம தே –
ஸ்ரீ என்று அன்றோ உனக்குத் திரு நாமம் –
இத்தாலே இவளுக்கு சர்வ சேஷணீத்வமும் தெரிவிக்கப் பட்டதோ -என்றால்
ஸ்ரீங் சேவாயாம் -என்கிற தாதுவாலே தன்னை ஒழிந்த சேதன அசேதனங்களாலே
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி களுக்காக ஆஸ்ரயிக்கப் படுகிறாள் என்று கொண்டு -ஸ்ரீ -என்கிறது –
அதுக்கு பிரமாணம் –
கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணிம் ஈஸ்வரீம் சர்வ பூதானாம்-ஸ்ரீ ஸூக்தம் -9- -என்றும்
அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீம் -ஸ்ரீ நீளா ஸூக்தம் -என்றும் -உண்டாகையாலே-
ஸ்ருணோதி ஸ்ராவயதி –கேட்டு கேட்விப்பிக்கிறாள்
ஸ்ருனாதி -குற்றம் நீக்கி சேர்க்கிறாள்
ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று
ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம் பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால்
அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்
ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ்ரீணாதி ச குணை ஜகத் ஸ்ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம் –அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-
நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்
அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு
இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்
யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால்-நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே –ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது
பகவதி –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ஸ்ரீ ஸூந்தர –16-5- -என்கிறபடியே
எம்பெருமானொடு ஒக்க ஹேய பிரதி படமாய் இருந்துள்ள கல்யாண குணைகதாநத்வம் சொல்லப் படுகிறது –
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரனே
சம்பர்த்தேதி ததா பார்த்தா பகாரோ அர்த்தத் வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யச்ய யசசச் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத் மன்ய கிலாத்மனி
ச ச பூ தேஷ்வ சேஷ ஷூ வகாரார்த் தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாசுதேவச்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரி பாஷா சமன்வித
சப்தோஸ்யம் நோபா சாரேண த்வன்யத்ர ஹ்யுபசாரத – ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-72–78-
மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே
சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் –
முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம்
சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும்
பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது –
பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன –
அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் –
கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும்
எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன –
மைத்ரேயரே இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹா சப்தம் பர ப்ரஹ்மமான வாஸூ தேவனுக்கே உரித்தானது –
வேறு ஒருவரையும் குறிக்காது –பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது என்னும் பரி பாஷையுடன் கூடிய இந்த சப்தம்
அவன் விஷயத்தில் உபசாரிகமாகச் சொல்லப்படுவது இல்லை –
மற்ற விஷயங்களில் அமுக்யமாக சொல்லப்படுகிறது -என்று சொல்லப்பட்டது அன்றோ-என்று கொண்டு பிரமாணம் உண்டு ஆகையாலே-ஸ்ரீய பதியை நிர்தேசிக்கும் போது
இதி விவித மஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பாராத்ம மயம் சனாத நஸ்ய
பிரதி சது பகவாந சேஷ பும்ஸாம் ஹரிர பஜன் மஜராதி காம் ச சித்திம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-8-64-
பிறப்பற்றவனும் பழமையான எந்த விஷ்ணுவுக்கு பலவிதமான ப்ரக்ருதி என்ன -அத்தைக்கு காட்டிலும் மேலான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என்ன இவை இம்மாதிரியாக சரீரங்களாக இருக்கின்றனவோ அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு முதலியவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ சித்தியை அருளுவானாக
மஹத்யா பதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகபான் ஹரி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-64-என்றும்-பேர் ஆபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத் தக்கவன்
அநி யோஜ்யோ அப்ரமேயச்ச யஸ்து காம சரீரத் ருத்
மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ -சபா பர்வம் 40-78–என்றும்
ஏவப்படாதவனும் அறிய முடியாதவனும் இஷ்டப்பட்ட உருவங்களைத் தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி சந்தோஷிக்கிறான்
பகவன் நாராயண -என்றும் –
இப்படி வ்யவஹரிக்க வடுப்பதாய் இறே இருப்பது
அவளை நிர்தேசிக்கும் போது -பகவதீம் ஸ்ரீயம் தேவீம் -என்றும்
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி -என்னும் படியாய் இருக்கும்
ப்ரூம கதம் த்வாம் வயம்-
கதம் ப்ரூம எப்படி சொல்வோம் –
வயம் -அறிவிலிகளான நாங்கள் -த்வாம் -இப்படிப் பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை
ஈஸ்வர குணஸ்த்வம் பண்ணும் போது
அநந்தா வை வேதா -என்கிற வேதங்களும் அகப்பட
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் பிபேதி குதஸ்நேதி
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று கொண்டு
அளவுகோல் முறிந்து மடங்கும் படியாய் இறே இருப்பது –
அவன் தன்னையும் அகப்பட
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யையாய் -( ஸ்ரீ குணரத்ன கோசம் )
பகவானுடைய விஸ்வரூப அனுபவத்தையும் தன்னுடைய போகாரம்பமாகிற விளையாட்டாலே கை அளவாக ஆக்குபவளான அந்த ஸ்ரீ தேவி –யாய் இருந்துள்ள உன்னை மந்த மதிகளுக்கு அக்ரேசரராய் இருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது -என்று கொண்டு பிராட்டியினுடைய பரத்வத்தை பிரதிபாதிக்கிறார் -ஸ்ரீ ஆளவந்தார் -இதில்
பகவதி
எந்தவித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை உணர்த்தவே –பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –
ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –
த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை
வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்
கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்
தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே
ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும்
அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்
ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன
ஸ்ரீ மஹா லஷ்மீ சேதன வஸ்துவே என்று காட்டவே
தே -உனக்கு என்றும்
த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன
தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் –
தே -யவனிகா -உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை
வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்
ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று
பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-
ஆகவே -ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே–ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை –
இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே
இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும்
தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும்
ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை
ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம்
வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது -என்று கூறப்படுகிறது –
இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால்
ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-
ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில்
அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்
இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும்
அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன
உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள -காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –
ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக
தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் –
இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –
இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்
ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் -நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்
ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் -ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள
வஸ்துவை ப்ரகாசமயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்
இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –
இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள
ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது
என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –
மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது
ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –
ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் –
அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது
அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில்
உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது
முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –
ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது –
ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –
இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்
ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து குறைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள
இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்
இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து
விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்மவசப்பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல
ஆதித்யாநாம் அஹம்—ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ -10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்
அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே
அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –
உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே
தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –
அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது
ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை
ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்
ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்
மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை
அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்
மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான
விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே
லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே
தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும்
மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –
ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே
மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —
என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –
கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –
இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட
நியாயம் மூலமே கொள்ள வேண்டும்
தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை
சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் –
என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்
காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே
பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை
ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து
த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று
இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –
இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே
இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே
——————————————————-
ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை; தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?
————–
ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –
ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் –
சர்வ பல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் –
அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை –
க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையை புருஷார்த்தம் –
அடியார் -பிராப்தம் -ஆச்சார்யரால் -அவர் மூலம் பிராட்டி -அவள் மூலம் அவன் –
ஸ்தோத்ர ரத்னம் நான்கு பேரையும் அருளி -இதில் -பிராட்டி பற்றி விவரணம் –
பகவானுக்கு பத்னி -என்பதால் அகில லோக ஸ்வாமினீ -நாயனார் ஆச்சான் பிள்ளை –
புருஷோத்தமா தே காந்த -உனக்கு நாயகன் அதனால் இவை உனக்கும் சொத்து -ஆச்சான் பிள்ளை
சேஷம் சொத்து -அவனுக்கு போலவே இவளுக்கும் -விநியோகம் கொள்ள தக்கவர் -தேசிகன் –
நிரவதிக நிரதிசய மஹிமா -அவனது -உபாசிப்பார்க்கு கிருபை -அவனே பலம் -நான்கு அத்யாய சுருக்கம் –
அவனுக்கு சமம் பிராட்டி -ஸமஸ்த பதார்த்தங்களும் சேஷம் -பக்தி பிரபத்தி செய்தால் இவளும் பலம் -இவளும் பல ரூபம் –
நான்கு வகை சிறப்புக்களும் இவளுக்கும் உண்டு –
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் -பிராட்டிக்கு ஆதிக்யமும் சாம்யமும் கீழேயும்
கிருபாதிசயம் -கிருபையை கிளப்ப இவள் -இத்தை பார்த்தால் ஆதிக்யம்
கைங்கர்யம் பெற்று அவன் உகப்பது போலே இவளும் -பிரதி சம்பந்தி -இருவரும் – அத்தால் சாம்யம்
அடுத்த படி -ஜகத் காரணத்வாதிகள் அவனுக்கு மட்டுமே
அபிமதையாயும் அனுரூப மாயும் -பிராட்டி -பரிமளம் புஷ்பம் போலே –
ஸ்ரீயதே– ஸ்ரேயதே –இரண்டும் உண்டே -பர்த்தா -தாய் முறை இரண்டும் என்றபடி
அவனுக்கு சேஷம் அனைத்தும் -முதல் அத்யாயம் -அதே போலே இவளுக்கும் –
காந்தஸ் தே புருஷோத்தம–
தே காந்த புருஷோத்தம –
புருஷோத்தம தே காந்த –
இப்படி இரண்டு யோஜனை –
ராமம் தசரதன் வித்தி –தசரதன் ராமம் வித்தி -இரண்டும் வியாக்யானம் தனி ஸ்லோகத்தில் –ராமன் இடம் பேர் அன்பு லஷ்மணா உனக்கு -சக்ரவர்த்தி இடம் பிதா போன்ற ப்ரீதி இல்லை -இங்கேயே இல்லை –
அங்கு நினைப்பாயோ -ராமனுக்கு பிரியம் என்பதாலாகிலும் எண்ணி நினைக்க வேண்டும்
கிழவன் காமி -என்று அன்றோ லஷ்மணன் கோபம் இங்கு -சுமந்திரன் வந்து சொன்ன வார்த்தை –
பிராதா பர்த்தா -சகலமும் -மம ராகவா -இப்படிச் சொன்னவன் தாய் தந்தை ஜென்ம பூமி விட்டு வந்த துக்கம் இருக்காதே
புருஷோத்தம தே காந்த -முதலில் சொல்லி -சப்த்தார்த்தம் அறிந்தால் -மறு பிறவி இல்லை
மூன்று வித சமாசம் –
ஷரம் -அக்ஷரம் -முக்தாத்மா -பிரவேசித்து தரித்து பணி உகந்து நியமித்து –ஸமஸ்த இதர வியாவ்ருத்தி
புருஷ — உத் புருஷ — உத்தர புருஷ –புருஷோத்தம —
அறிவுடையவன் புருஷன் -அசித்தை விட வேறுபட்டு -உத் புருஷ -சரீர சம்பந்த பத்தாத்மா -சம்சாரியில் வேறு பட்டு
உத்தர -முக்தாத்மாவில் வேறுபாட்டு -புருஷோத்தமன் நித்யரில் வேறுபட்டு-சிறப்புடைமை
அவன் தே காந்தா -பதி-
புரு சனாதி புருஷா -அனைத்தையும் தருபவன் -தர்மம் அர்த்தம் காமம் -மோக்ஷம் –
மண்டோதரி பிரலாபம் -வியக்தம் -பரமாத்வாக அறிந்தேன் -பஹுவாக கொடுப்பவன் என்பதால் –
ரிஷிகளுக்கு தர்மம் -விபீஷணனுக்கு லங்கை ஐஸ்வர்யம் சுக்ரீவனுக்கு காமம் -ஜடாயு மோக்ஷம் – தனக்கு கைவல்யம் –
ஐஸ்வர்யம் -அக்ஷரம் -மோக்ஷம் —லஜ்ஜை உதார பாவ -யதுகிரி நாயகி தாயார் -நித்யம் அனுசந்தானம் தீர்த்தம் சாதிக்கும் பொழுது
அஞ்சலிக்கு ஈடாக தர முடியவில்லையே மோக்ஷம் கொடுத்த பின்பும் -ராகவன் –அஸீ தேக்ஷிணா-தே காந்த புருஷோத்தம –
யஸ்ய ஜநகாத்மஜ அப்ரமேயம் -மாரீசன் -தே காந்தா புருஷோத்தம -உனக்கு காந்தன் இல்லையோ அதனால் புருஷோத்தமன்
ஸ்ரத்தா-லஷ்மி சம்பந்தம் பெற்றால் தானே –க ஸ்ரீ ஸ்ரீய-முதலில் சொல்லி புருஷோத்தம க அப்புறம் சொன்னது போலே —
காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது
புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பால -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்-வேதாத்மா விஹகேச்வரோ-நித்ய விபூதி சேஷ பூதர்கள்
பதி பத்னி நியாயத்தாலே -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
புருஷோத்தமனுக்கு போன்று உமக்கும் -தேசிகன் சம்ப்ரதாயம் –
நான்கு விதத்திலும் சமம் ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையாலே வியாக்யானம் –
பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ் வாயன் என்கோ -முதலில் திருக் கண்கள் -பின்பு திரு அதரம்
சம்சாரி போல உண்டியே உடையே -ருசியை மாற்றி -கண்களாலே குளிரக் கடாக்ஷித்து –
அந்த வலையிலே சிக்காமல் விலக–மந்த ஸ்மிதம் பண்ண -அதுக்கு விலக்க முடியாமல் சிக்கிக் கொண்டேன் –
என் முன்னே நின்றார் -கை வண்ணம் தாமரை -வசப்படாதவள் போலே இருக்க -மந்த ஸ்மிதம் பண்ண-அதுக்கும் மேலே –
தந்த பந்தி வாய் திறந்து-பரபாக வர்ணம் -வாய் கமலம் போலும் -கண் அரவிந்தம் -வலையிலே சிக்கிக் கொண்டேன் –
அடியும் அஃதே -திருவடிகளில் விழுந்தேன்
நிர்தேசம் -சப்த பிரயோகம் வைத்து -பாஞ்ச ராத்ர வசனங்கள் -ஜீவனைச் சொல்லி பரமாத்மாவைச் சொல்லும் -மாறியும் உண்டே
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வர –
கடகத்வம்- புருஷகாரத்வம் -இரண்டு ஸம்ப்ரதாயத்திலும் உண்டே –
காந்தஸ் தே -முதலில் -சொல்லி -இந்த பகவத் சம்பந்தம் பிரதானம் என்பதைக் காட்டி
பணி பதஸ் இத்யாதி -சேதன சம்பந்தம் அப்புறம் —
தாய் -பிரியம் நோக்கு -தகப்பன் ஹிதம் -நோக்கு -லோகத்தில் -வத்ஸலையான மாதா —
மண் தின்ன விட்டு ப்ரத்ய ஒளஷதம் விடுவாள் -இசைந்து போலே காட்டி பரிகாரம் –
உசித உபாயம் -கொண்டு சேர்ப்பிப்பாள்-உத்தம ஸ்த்ரீ -இடம் வசப்பட்டவன் அவன் -எனவே பகவத் சம்பந்தம் பிரதானம்
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -இருவருக்கும் சேஷ பூதர்
பணி பதஸ் –நித்யர் பலராய் இருக்க -இங்கு முதலில் -13-காரணங்கள் நாயனார் ஆச்சான் பிள்ளை –
அனுபவம் -போக்யத்தைச் சொல்லிச் சொல்லி அனுபவிக்க வேண்டுமே –
அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அனுபவித்து –
வாயோர் ஈரைஞ்சூறு–ஆயிரம் வாயாலே -அனுபவித்து புகழ்ந்து பேசும் ரசிகர் –
நித்ய ஸூரிகளுக்கும் சரீரம் உண்டா – அத்வைதி -சரீரம் இல்லை
வியாசர் இரண்டும் -சுத்த சத்வமயம் –
பாரிப்புடன் கைங்கர்யம் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் –
ச ஏகதா பவதி -இத்யாதி -பல சரீரம் பரிக்ரஹம் –சென்றால் குடையாம்-இத்யாதி-
சக்கரவர்த்தி -கைகேயி இடம் கெஞ்சி -சரண் -பல வகையாக -கௌசல்யை இடம் செய்யாமல் கைகேயிடம் செய்தேன் -என் பாபம்
பத்னி- தாய் -உடன் பிறந்தவள் -சக்ரவர்த்தி உடன் கூட வரும் பெண்டிர்க்கு ஆலத்தி எடுத்து -பலவிதமாக கௌசல்யை –
இவனுக்கு ஞானம் சக்தி பாரிப்பு மிக்கு இருந்து கைங்கர்யம் செய்தமை சொல்ல வேண்டுமோ –
தாய் குழந்தை -பசு கன்று -போலே பகவானை அனுபவிக்க வேண்டுமே ப்ரீதியுடன் -பொங்கும் பரிவுடன் –
பெரியாழ்வாரும் நித்தியமாக செல்லுமே மங்களா சாசனம் –அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் -அஸ்தானே பயசங்கை
பிராட்டி சம்பந்தம் திரு அநந்த ஆழ்வான் சம்பந்தம் ஓக்க -அருளிச் செய்தது -கடகத்வம் துல்யம் இருவருக்கும் –
ஆஜகாம -யஸ்ய சக லஷ்மணா -முன்னிட்டே ஆஸ்ரயம் -ஸ்ரீ விபீஷணன்
ஸ்வரூப நிரூபகம் இரண்டும்
சேர்த்தியில் -சொல்லி -கைங்கர்யம் செய்வதை அருளிச் சொல்லி -மிதுனம் கைங்கர்ய பிரதிசம்பந்தி –
ஸ்ரீ மதே நாராயண நம-அர்த்தம் -ஆனந்தம் நமக்கும் மிதுனத்துக்கும் சேர்த்தியிலே செய்தாலே தானே -முறை –
பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-
கைங்கர்யம் சேர்த்தியில் -திருவாராதானமும் மனைவியும் புருஷனும் சேர்த்தியிலே -ஸ்ரத்தையுடன்
பத்னிமார்கள் கூட இருந்தே கைங்கர்யம் -பணி பத விஹகேஸ்வர -உப லக்ஷணை-யால் அர்த்தாத் சித்தம்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாஸ்மத்யே
லலிதை -பெண் எலி -சரித்திரம் -திரி நொந்திய புண்ணிய பலன் –
ஐகரஸ்யம் -ஸ்ரீ பூமி நீளா தேவிமார்கள் -அவயவ பாவம் –
ஆசனம் -திரு அநந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கு –
அனந்தன் பாலும் கருடன் பாலும் -இந்த வகையிலே இங்கும் –
வேதாத்மா -வேதமயன் –
யவநிகா மாயா ஜகன் மோஹிநீ–மோகம் உண்டு பண்ணும் மாயா பிரகிருதி திரை
தேவரீருக்கு -ஜகத் சப்தம் பத்த ஜீவாத்மாக்களைச் சொன்னபடி
ஜீவ ஸ்வரூபம் பர ஸ்வரூபம் இரண்டையும் மறைக்கும்
மோகம் -அஞ்ஞானம் -ஞான சூன்யம் – -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் – -சரீரம் பிரகிருதி காரிய காரண சம்பந்தம் –
ஹேயப்ரத்ய நீகன்-ஹேயம் -போக்குபவன் -ஞான ஏக கல்யாண குணன்–நாராயணன் பரமாத்மா -உபய லிங்கம் –
யாதவ பிரகாசர் மதம் -இவர் திருப்புட் குழியில் இருந்த அவர் இல்லை -ப்ரஹ்மம் -மூல காரணம் –
பரிணாமம் அடைந்து -ப்ரஹ்மத்துக்கு விகாரம் உண்டு -ப்ரமாதி ஈஸ்வரர்கள்- ஜீவாத்மா அசித்துக்கள் -இதனால் –
நிர்விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் பரமாத்மா -அத்வைதம் –
சரீரமே தேகம் -ஸ்வ தந்த்ர மோகம் -அன்யா சேஷத்வ மோகம் -ஜீவ ஸ்வரூப மோகம்
பிரகிருதி இன்பமாக இல்லா விட்டாலும் தோற்றும் மோகம் -ஆக மூன்றுக்கும் திரை
திரைக்கு உள்ளே இருப்பார்க்கும் வெளியில் இருப்பவரையும் மறைக்கும் –
பெரிய பிராட்டியாரை போலவே நாமும் என்பர் – பூர்வ பக்ஷம்
ஸ்ரீ பாகவதம் -மாயா சப்தம் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொல்லும் ஸ்லோகங்கள் உண்டே
ஜீவன் மாயா வஸ்யம் -என்று சொல்லும் -மாயையை அடக்கி ஆள்பவன் பரமாத்மா –
அத்வைதம் ப்ரஹ்மத்துக்கும் மாயா வஸ்யம் சொல்லும்
மாயைக்கு ஸ்வாமிநீ -நியாந்தா பெரிய பிராட்டியார் -மறைக்கும் சக்தி இல்லையே அவளுக்கு –
சிறைக்குள் உள்ள கைதியும் அரையனும் இருந்தாலும் -கட்டுப்படுத்துவது கைதியைத் தானே –
கர்ம சம்பந்தம் துக்க ஹேது -என்றவாறு-
ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
லீலா விபூதி சேஷ பூதர்கள் -தேவ கூட்டங்கள் என்ன அவர்கள் பத்னிகள் என்ன –
பிரகிருதி -ப்ரமாதிகளும் அறிய முடியாத படி அன்றோ -மாயா வஸ்யர்கள் இவர்களும் –
கிருஷ்ணன் ருக்மிணி தாயார் பிரளய கலக ரசம் ஸ்ரீ லஷ்மிக்கும் கிட்டாத ரசம் அல்லையோ –
உனக்கு உள்ள மஹிமை எனக்கு இல்லையே என்று சொல்லி உகந்த ருக்மிணி தாயார் -பாகவதம் கோஷிக்கும்
சரஸ்வதி ஸ்ருஷ்டித்து -பத்தினியாக -மரீஸாதி புத்திரர்கள் -இந்த விவாகம் கூடாது –
தனக்கு பிறந்த பெண்ணை -கல்யாணம் பண்ணக் கூடாதே -சரணாகதி பகவான் இடம் பண்ண
சிவன் பார்வதி -ஸ்தானம் -அரையில் வஸ்திரம் இல்லையே -யார் வந்தாலும் பெண்ணாக போவதாக சாபம் –
மோகினி ரூபம் காட்ட சிவன் பிரார்த்திக்க – அப்ராக்ருத திவ்ய ரூபம் –
சிரிக்க -பிராகிருத மோகினி -ஸ்ருஷ்டித்து அதுக்கு சிவன் வசப்படட சரித்திரம் பாகவதம் உண்டே –
அவர்களே வசப்பட்டு மோகிக்க நம் போல்வாரைச் சொல்லவும் வேண்டுமோ-
ஆகாசம் -பஞ்ச பூதங்களில் ஓன்று -இமானி தேவாநி ஜாயந்தே இத்யாதி -என்ற போது –
பர ப்ரஹ்மத்தைக் குறிக்கும் -ஆகாச தல் லிங்காத்-எங்கும் பிரகாசிக்கும் பொருள் என்ற அர்த்தத்தில் –
ருத்ர ஹிரண்ய கர்ப்ப திரு நாமங்கள் விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் உண்டே –
வாஸுதேவா பராயணா -சனகாதிகள் -ஸ்ருஷ்டிக்க உதவி செய்ய இசைய வில்லையே –
அப்புறம் ருத்ர ஸ்ருஷ்ட்டி -ரோதனம் -அழுவது -பிரளயத்தில் அழியும்படி செய்வதாலும் –
ஆஹ்லாத சீதா நேத்ரா -ஆனந்த பாஷ்யம் பண்ணும்படி ஆளும்படி விஷ்ணு ருத்ரன் அர்த்தம் -பாஷ்யத்தில் பட்டர் –
ஹிரண்ய கர்ப்பம்-ஸூந்தரமான பரமபதம் -பகவானைத் தாங்கும் பரமபதம் -என்றவாறு –
ஆதி -சப்தத்தால் இந்திரன் -இவன் தரமே அவர்களும் என்றவாறு –
கைமுத நியாய சித்தம்-அனைவரும் – இவர்களைச் சொன்ன போதே
இவர்கள் பத்னிமார்கள் -பெரிய பிராட்டியாருக்கு தாசீ -சித்தித்த அர்த்தம் –
பார்யை புத்ரன் தாசன் -இவர்கள் -ஸ்ரீ தனமாக உத்யோகம் மூலம் கார்யம் செய்து தனம் கொண்டு வந்தாலும் –
இவர்கள் சம்பாதிக்கவும் அவர்கள் ஸ்வாமிக்குத் தான் சொத்து
மாதா -பிதா- மாதவா -சேஷி தம்பதிகள் -பித்ருத்வம் -ஜகத் காரணத்தவம்
மாத்ருத்வம் பெரிய பிராட்டியாருக்கு –
பெரிய பிராட்டியாருக்கும் பொதுவானது தேசிக சம்ப்ரதாயம் –
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ குண ரத்ன கோசம்- ஸ்பஷ்டமாக இவற்றை அருளிக் செய்துள்ளார்கள்
அசேஷ ஜெகதாம் சர்கோ–ப்ரூவம் -இங்கீத பராதீன -ஜகம்
——–
ஸ்ரீ சதுஸ்ஸ்லோகி -ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
அவதாரிகை –
மாத்ரு தேவோ பவ-பெரிய பிராட்டியாரை மாதாவாகவும் -எம்பெருமானை பிதாவாகவும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணின ஆச்சர்யரையும்-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -பாகவத உத்தமர்களையும் – அதிதியாகவும் –ஆத்ம க்ஷேமம் அடைய நால்வரும் உபகாரங்கள் செய்து அருளுகிறார்கள் அன்றோ –
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை -ஸ்ரீ -பெரியவாச்சான் பிள்ளை என்றும் சொல்வர் –
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த இரண்டு வியாக்கியானங்கள் உண்டு
சாஸ்வதம் –நிலை நின்ற புருஷார்த்தம் –பரம பதத்தில் சென்று சேர்ந்து இருப்பது மட்டும் புருஷார்த்தம் இல்லை –
அடியார் குழாங்களை உடன் கூடி அவர்கள் முக விலாசம் பண்ணும் படி கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்
அடியவர்களுக்கும்- பாகவத சேஷத்வமே -சரம பர்வ நிலை -உடன் கூடுவது என்று கொலோ என்று பாரிப்பதே முக்கியம் –
பாகவத சம்பந்தம் ஆச்சார்யராலே —
ஆச்சார்ய சம்பந்தம் எம்பெருமானாலே –
அவனை பெறுவது பிராட்டியாலே -ஆகையால் நால்வரையும் சொல்லிற்று
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியும் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னமும் -மூல ஸ்தோத்திரங்கள் -.
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் காட்டி அருளிய படியே பின்பு வந்த ஸ்தோத்திரங்கள் –
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில்–ஆச்சார்யர் -பிராட்டி -எம்பெருமான் -பாகவத உத்தமர்கள் நால்வரையும் ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியில் தனியாக பிராட்டி பற்றி நாம் அறிய அருளிச் செய்கிறார் -அனைவரும் கிரஹிக்கும் படி
ஸ்ரீ -போன்று சுருங்கியும் இல்லாமல்
ஸ்ரீ ராமாயணம் போன்று விரிவாகவும் இல்லாமல்
நான்கு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
புருஷோத்தம
தான் மஹநீய விஷயம் -தன் இடம் ப்ரீதி பக்தி செய்ய வேண்டும் -எல்லாம் தன் சொத்து –
தான் ஸ்வாமி -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் அவனது அன்றோ –
தன்னை ஒழிந்த அனைத்துக்கும் தானே ஸ்வாமி –
அசையும் பொருள்களும் அசையாத பொருள்களும் எல்லாம் அவன் இட்ட வழக்கு
காந்தஸ்ய
பிராட்டியின் பெருமையை சொல்லி –
நித்ய ஸூரிகள் -திரு அநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
இவர்கள் அனைவரும் மிதுனத்துக்கு சேஷம் .
ஸ்ரீ
திரு நாமம்
ஸ்ரீ யதே —
அனைவராலும் ஆஸ்ரயிக்க படுபவள் –
அவளும் அவனை ஆஸ்ரயித்து இருப்பவள் -பத்னி என்ற முறையால் –
அனைவரும் அனைத்தும் சொத்து இவளுக்கு பத்னி என்பதால் -உபய விபூதிகளுக்கும் ஸ்வாமிநி-அவன் ஸ்வாமி –
புருஷோத்தமன் நாயகன் என்பதால் -உபய விபூதியும் இவள் சொத்து என்றபடி
அனைவருக்கும் அவனுக்கு சொத்து -விவசாயி போலே ஸமஸ்த பதார்த்தங்களையும் உண்டாக்கி -அளித்து -அழிக்கிறான்-
எல்லாம் அவன் விருப்பத்துக்கு விநியோகம் -எல்லை அற்ற பெருமை -விரோதிகள் ஒன்றும் இல்லை –
அதே போலே பிராட்டிக்கும்
பக்தி பிரபத்தி போது -பல பிராப்தி இருவரும் அருளுகிறார்கள் -இதில் சாம்யம் –
தென் ஆச்சார்ய சம்பிரதாயத்தில்
ஆதிக்யமும் –
சாம்யமும் –
சேஷமும் உண்டு –
அவள் கிருபை போல் அவன் இடம் இல்லை என்பதால் ஆதிக்யமும் -ஏற்றமும் —
கிருபை கடலாக அவன் இருந்தாலும் கிளப்பி தருபவள் இவள் அன்றோ
கிட்டி கைங்கர்யம் செய்யும் பொழுது உகக்கிறார்கள் இருவரும் -இதில் சாம்யம் –
ஜகத் காரணம் போன்றவை அவனுக்கே தான் -இதில் அடுத்த படி தானே அவள்
தேசிகன் -நான்கு அத்தியாயத்தில் உள்ளது போலே சாம்யம் அனைத்திலும் என்பார் –
எல்லா வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மம் இடம் சேரும் என்பது முதல் அத்தியாயத்தில் –
ப்ரஹ்மமே பலம் என்று சொல்லும் நான்காவது அத்யாயம்
அபிமதமாயும் அநு ரூபமாயும் இருப்பவள் பெரிய பிராட்டி –
பரிமளத்தால் புஷ்பத்துக்கு பெருமை போல இவளால் அவனுக்கு பெருமை –
உபய விபூதியும் சொத்து என்பதை முதல் ஸ்லோகத்தால் அருளுகிறார்-
தாய் முறையால் அனைவராலும் ஆஸ்ரயிக்கப் பட்டும் —
பத்னி என்பதால் தானே அவனை ஆஸ்ரயித்தும் இருக்கிறாள் -என்பதால் -ஸ்ரீ சப்தம் முதலில் –
சரிர மீமாம்சையில் ஸ்ரீ வேத வியாசர் முதல் அத்தியாயத்தில் அனைத்தும் அவனது சேஷ பொருள்கள் – அவன் விநியோகத்துக்குத் தான் –
ஸ்ரீ காந்தஸ்தே புருஷோத்தம –பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –மாயா -ஜெகன் மோஹிநீ-
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்-சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி-ப்ரூம கதம் த்வாம் வயம்
ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகம் -சுமத்ரா தேவி வாக்கியம் –
இளைய பெருமாள் இடம் பெருமாள் கூட —தசரதன் ராமம் வித்தி –
தே காந்த புருஷோத்தம -என்றும் –
காந்தஸ்தே புருஷோத்தம -என்றும் இரண்டு நிர்வாகங்கள் –
எங்கும் பெருமாள் இடம் தான் அன்பு உனக்கு –
சக்கரவர்த்தி இடம் அன்பு அவர்களுக்கு இல்லை -ப்ரீதி பிதா இடம் எங்கு இல்லை -பெருமாள் தான் சர்வம் –
காட்டுக்குப் போகும் போது சக்கரவர்த்தியை நினைக்கா விடிலும் -உனக்காக சக்கரவர்த்தி இடம் பிரியம் இல்லா விடிலும் –
பெருமாள் விரும்பும் சக்கரவர்த்தியை விரும்பு -என்று ஒரு கருத்து –
பிறந்த இடமான திரு அயோத்தியை -தாய் -தந்தை -மூவகை விருப்பம்
காட்டில் போகும் பொழுது ஜென்ம பூமியை பற்றியோ -தாய் தந்தையை பற்றியோ நினைத்து வருத்தம் ஏற்பாடாகி கூடும் –
அவனே எல்லாம் என்று கருத்து
ராமோ தசரதன் வித்தி -என்று ஸ்லோக க்ரமம் படி அர்த்தம் கொண்டு பெருமாளே சக்கரவர்த்தி என்று கொள் என்றுமாம் –
பெருமாளை காட்டுக்கு போக சொல்லும் போது இளைய பெருமாள் கோபம் கொண்டார் –
சுமந்திரன் தந்தைக்கு என்ன செய்து என்று கேட்டதும் –
மம ராகவ-சகல வித பந்து -எனக்கு ஜென்ம பூமி தாய் தந்தை -அனைத்தும் பெருமாளே –
இருக்கும் போதே தகப்பனாக நினைக்காதவன் -இப்போது சொல்வதில் வியப்பு இல்லையே
திராட்ச்சை தேனில் ஊறினது போலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தில் ஆழ்ந்து வியாக்யானம் செய்து அருளுகிறார்
அதே போலே இங்கும் -புருஷோத்தம தே காந்த –
புருஷோத்தம வித்யை அறிந்தோம் ஆனால் புனர் ஜென்மம் பக்தி யோகனுக்கும் இல்லை என்கிறான் ஸ்ரீ கீதையில்
அக்ஷரம் –முக்தர் –ஷரம்–இவற்றோடு வேறுபட்டு
பிரவேசித்து -தரித்து -கைங்கர்யம் கொண்டு உகந்து
வேறுபட்டு -சிறந்த புருஷார்த்தம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே
புருஷன் –உத் புருஷன் –உத்தர புருஷன் -உத்தம புருஷன்
அறிவுடையவன் -அசித்தை விட வாஸி புருஷன்
உத் புருஷன் -சரிர சம்பந்தம் விட்ட முக்தர்
உத்தர புருஷன் -சரிர சம்பந்தம் இல்லாத நித்யர்
இவர்கள் அனைவரிலும் வேறுபட்ட ஸ்ரேஷ்டன் புருஷோத்தமன் –
அவன் தே காந்த : உனக்கு அன்பனான பதி என்கிறார் -ரூட் அர்த்தமாக –
புரு -தர்ம அர்த்த காமம் மோட்ஷம் -அனைத்தையும் வாரி வழங்குபவன்
மண்டோதரி வார்த்தை -பல பிரதானம் பண்ணி அருளும் புருஷோத்தமன் -பெருமாள் என்கிறாள்
ரிஷிகளை ரக்ஷணம் பண்ணி தர்மம்
ஸ்ரீ விபீஷணன் -சுக்ரீவ மஹாராஜர் இருவருக்கும் அரசு அருளி -அர்த்தம்
வாலி ஜடாயு -மோட்ஷம் அருளி
கைவல்யம் தன்னை தானே அனுபவிக்கும் படி எனக்கு அருளினார் என்கிறாள் மண்டோதரி
அந்த புருஷோத்தமன் உனக்கு காந்தன் –
ஸ்ரீ பட்டர் யதுகிரி நாச்சியார் பிரசாதத்துடன் வேதாந்தி யாய் இருந்த நஞ்சீயரை ஸம்ப்ராயத்துக்கு கொண்டு வந்தார் –
திரு முகத்தில் பிராட்டிக்கு லஜ்ஜையாம் -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று
ஐஸ்வர்யம் அஞ்சலி பரம் அஸ்மின் லஜ்ஜியதி -ஸ்லோகம் -தினம் சொல்லி தீர்த்தம் பிரசாதம் வாங்கிக் கொள்கிறோம்
தே காந்த புருஷோத்தமன் -உனக்கு அன்பனான பதி என்பதால் தான் புருஷோத்தமன் ஆனான் என்று அர்த்தம்
மாரிசன் -இராவணன் சம்வாதம் ..தேஜஸ் அனுபவித்தவன் மாரிசன் ..
ப்ரஹ்மச்சாரி ராமனை முன்பு பார்த்தவன் ..சீதா பதி இப்போது ..அப்ரமேயம் -அளவுக்கு அப்பாற்பட்டது ..
பிராட்டி சம்பந்தத்தால் ..லட்சுமி சம்பந்தத்தால் தேவன் ..வரனுக்கு வது சம்பந்தம் ..
தேஜஸ் பார்க்கலாம் இப்போ கூட ..அரை ஒன்றாகும் கல்யாணத்துக்கு பின்பு ..
அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற திரு நாமமும் இவருக்கு ..
ஸ்தோத்திரங்கள் பல சேர்த்து தொடுத்து வ்யாக்யானம் ..
புருஷோத்தமன் கஹா போன்ற ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தையும் எடுத்து காட்டுகிறார் .
பட்டர் உயர்ந்த தத்வம் கண்டு பிடிக்க சிரமம் பட்டாலும் முடியவில்லை ..
திரு மார்பில் பட்டு -லட்சுமி பத சம்பந்தத்தால் இவனே புருஷோத்தமன் என்று அறிந்ததாம் .
பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –ஆசனம் இருவருக்கும் சேர்த்து —
விருப்பத்திற்கு ஏற்ப சேஷ பூதர் நித்யர்கள்
மிதுனத்துக்கே சேஷம் வாஹனம் -அவனுக்கு போலவே இவளுக்கும் –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -கத்யத்திலும் -பட்ட மஹிஷி -திரு அநந்த ஆழ்வானும் மிதுனத்தில் பாதுகை .-
பகவத் சம்பந்தம் சொல்லி ஜீவாத்ம சம்பந்தம் சொல்லுவார் ..
வேறு சில இடத்தில் ஜீவாத்ம சம்பந்தம் சொல்லி அவன் சம்பந்தம் ..
பங்கய கண்ணன் என்கோ பவள செவ்வாயன் என்கோ ..கண்ணை பதி சொல்லி அதரம் சொல்லுகிறார் . .
ஈட்டில் நம் பிள்ளை -சம்சாரிகளை போல இருக்கும் என்னை -ருசியை மாத்தி தன் இடம் ருசியை மாத்த-
விஷய ப்ராவண்யம் விட்டு விட்டு தன் மேல் பெறுக கடாஷித்தான்
முதலில் ..அதிகாரியாக ஆக்கினான் .. அந்த வலையில் சிக்கி கொள்ள வில்லை ..
ஆலோசித்து மந்த ஸ்மிதம் பண்ணி வலை படுத்துகிறான் ..
திரு மங்கை மன்னனும் -போக பிச்சை விரும்பி கை வண்ணம் தாமரை . கைகளை காட்டி
வேண்டி கொண்ட போது வச படாதவள் போல இருந்தார் .. மந்த ஸ்மிதம் பண்ணினான் –
வாய் திறந்து பூர்ணமாக சொல்லாமல் வாய் கமலம் போலும் .. அந்த வலையிலும் சிக்கி கொள்ளவில்லை ..
கண் இணையும் அரவிந்தம் -சிக்கி கொண்டேன் ..அங்கு கண்களைச் சொல்லி வாயை சொல்ல
இவர் உதடு துடிக்க வாய் சொல்லி கடாக்ஷித்து வச பட்டேன்-. அடியும் அஃதே அடையாளம் என்கிறார் .
பிராட்டி ஜீவாத்மவை பரமாத்மவிடம் சேர்த்து வைக்கிற -கடகத்தவம் ..இரண்டு இடத்திலும் சம்பந்தம் ..
ஈஸ்வரன் சம்பந்தம் சொல்லி சேதன சம்பந்தம் சொல்லுவார் சில இடத்தில் ..
இரண்டில் பிரதானம் பரமாத்ம சம்பந்தம் -காந்தஸ்தே புருஷோத்தம :-என்பதில் தெரிகிறது ..
ஹிதம் -தகப்பனின் நோக்கு .. பிரியம் -தாய் போல ..
வத்சலையான மாதா பிள்ளையை பேஹணியாமல் மண்ணை திண்ண விட்டு பின்பு ஒளஷதம் இடுவாள் தாய் ..
அவனின் நிக்ரஹம்க மாத்தி அனுக்கிரஹம் செய்பவள் அவள் ..தோஷம் இல்லாதவன் யார் என்பாள் தாயார் ..
தயை -வத்சல்யம் -க்ஷமை குணங்களுக்கு பிரயோஜனம் வேணுமே -..உபய விபூதியும் பிராட்டிக்கும் சேஷம் -தேசிகன் ..
திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் –திரு -பெரிய பிராட்டிக்கும் என்றும் சொல்வதால்
ஜீவாத்மா பலர் இருக்க -நித்யரும் பலரும் இருக்க திரு அநந்த ஆழ்வானை
முதலில் அருளியது 14 காரணம் காட்டுகிறார் ஆச்சான் பிள்ளை .
நித்யரில் தலைவர் .. அனுபவிக்கிறார் ..ப்ரீதி தருகிறார் ..
ஸ்வரூப -ரூப -குண -விபூதி-சேஷ்டிதங்கள் – அனுபவிக்கும் போது தித்திக்கிறது
அந்த அனுபவம் ..வாய் ஓர் ஈர் ஐநூறு ..அவையும் போராது அனுபவங்களின் புகழை சொல்ல ..
அதனால் -பணிபதி முதலில் ..
சரீரம் உண்டா ? நித்யர்களுக்கு ..வியாசர் ஹேய சரீரம் இல்லை சுத்த சத்வ மய சரீரம் உண்டு என்கிறார் ..
பல சரீரங்கள் கொண்டு பல வித கைங்கர்யம் செய்கிறார்கள் .பாரிப்பு மிக உண்டு ..
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறார் லக்ஷ்மணன் ..
ஸ்ரீ குலசேகர பெருமாள் அனுபவம் -மன்னு புகழ் திரு மொழி -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே -என்கிறார் ..
பொய் இல்லாத பாடல் -அனைவரின் கைங்கர்யமும் பண்ணினதால் -சுற்றம் எல்லாம் இவன் தான் ..
அது போல சென்றால் குடையாம் -பல ரூபத்தால் கைங்கர்யம் என்பதால் முதலில் ..
கௌசல்யை -தாய் -தமக்கை பாரியை மட்டும் இல்லை ..தசரதன் வருத்த பட நம் பிள்ளை
இந்த சுலோகத்துக்கு அர்த்தம் -ஆலத்தி எடுப்பாளாம் உடன் பிறந்தவள்- போல –
போன இடத்தில் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி கொண்டு வந்தால் கூட என்பார் ..அவள் இடம் ப்ரீதி காட்டாமல் கைகேசி இடம் ப்ரீதி செய்தான் என்கிறார் ..
ஞானம் -பலம் ப்ரீதி வுடன் திரு அநந்த ஆழ்வான் கைங்கர்யம் செய்பவர் ..பணிபதி செய்யாஸ் ஆசனம் -அதனால் முதலில் .
தாய் -குழந்தை போல பசு -கன்று போல நாமும் அவன் இடம் ப்ரீதி காட்டணும் என்கிறார் ..
பொங்கும் பரிவால் பட்டர் பிரான் பெற்றார் பெரிய ஆழ்வார் ..சுத்தமான பரிவு -தாய் ஸ்தானத்தில் இருந்து ..
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் -திரு மழிசை ஆழ்வார் ..சாம கானம் கேட்டு –
அயோத்தியை -ஸ்ரீ வைகுண்டம் -சற்றுக்கள் பிரவேசிக்க முடியாத இடத்திலும் .
பரம பத நாதனுக்கு சாம ஞானம் ஆரவாரம் என்று நினைந்து அழல் உமிழ்கிறார் -இவ்வளவு பரிவு -அதி சங்கை பண்ணி
விட்டு பிரியாத தர்மம் மிக முக்கியம் பிராட்டிக்கு ..இத்தாலே அவனை தெரிந்து கொள்ள கூடிய ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்ரீ யபத்வம் –
இவனுக்கே அசாதாரணம் -திரு இல்லா தேவர் –
ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகத்திலும் ஸ்ரீ நிவாஸே தீப்தே –
திருவரங்கம் என்றாலே மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜர் -..
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
திருவனந்த ஆழ்வான்-சம்பந்தமும் ஸ்வரூப நிரூபிதா சம்பந்தம் -பாதுகை ஆசனம் -இத்யாதி –
உடையவன் எம்பெருமானே
அதனால் சேர்த்து அருளுகிறார் -ஸ்ரீ யப்பதி சம்பந்தத்தையும் பணிபதி சம்பந்தத்தையும்-கடகத்வம் இருவருக்கும் உண்டே –
நாகணை மீசை எம்பிரான் சரணே சரண் -என்பதால் இளைய பெருமாளை முன்னிட்டு சரணாகதி அடைந்தது போலே –
சேர்த்தி சொல்லி -சேர்த்தியில் பண்ணும் கைங்கர்யத்தையும் அருளிச் செய்கிறார்
இத்தாலே -த்வயம் போலே
திரு அனந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கும் பத்னிமார்களும் உண்டே -சேர்ந்தே மிதுனத்துக்கு கைங்கர்யம் செய்கிறார்கள் –
ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டுமே -பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்தே பெரிய பெருமாள் திருவாராதனம் செய்து அருளினால் போலே
பிராட்டியின் அந்தபுரத்துக்குள் போக இவர்களின் பத்னிமார்களுக்கு தான் அதிகாரம்
பூமி நீளா தேவமார்களுக்கும் -இவர்கள் கூட சேந்து சேர்த்தியில் கைங்கர்யம் –
லலிதை சரித்திரம் -முன் ஜென்மத்தில் பெண் எலி பூனை சப்தத்தால் த்ரீ நொந்தப் பட்டு பிரகாசித்ததாம்
புஷ்பம் சந்தனம் போலே –தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே-கைங்கர்யத்தில் களை அறுகை
அனந்தன் பாலும் கருடன் பாலும் –சேர்ந்து இங்கும் அருளுகிறார் -..
யவனிகா மாயா ஜெகன் மோஹினி ..மூன்று வஹை மோகம் -மாய -பிரக்ருதிக்கு ..
தன்னை பற்றியும் -சித் பற்றியும் -ஈஸ்வரனையும் பற்றிய மோகம் ..அறிய ஒட்டாமல் மறைத்து விடும் –
அஞ்ஞானம் பல வகைகள் உண்டு -ஞானம் உதயமே இல்லாமல் -சம்சய விபரீத –
முத்து சிப்பியை வெள்ளி என்பது போலே -அந்யதா ஞானம் -….
அதனால் ஜெகன் மோஹினி என்று பிரக்ருத்யை சொல்கிறார் –
அகில ஹேய ப்ரத்ய நீகம்
தன் சம்பந்தத்தால் அனைவரின் ஹேயங்களை அழிக்கிறவன் ..உண்மையாக தெரிந்து கொள்வது தான் ஆத்மாவுக்கு க்ஷேமம் —
ஸ்ரீ யபதித்தவம்–அகில ஹேய ப்ரத்ய நீகம் -கல்யாண குணை ஏக -நாராயண பரமாத்மா நிச்சயமாக நான்கையும் தெரிந்து கொள்ள வேண்டுமே ..
யாதவ பிரகாச மதம் நிரசிக்கிறார் – ஸ்ரீ பாஷ்யத்தில் ..மூல பிரக்ருதியால் வந்தவை மூன்று தத்துவங்கள் என்பார் இவர் மதம் ..
அத்வைதி -பரமாத்ம ஒன்றே உண்டு –திருமேனி குணங்கள் இல்லை என்பர் -இவை போன்ற மோஹங்கள் பல
மாய வஸ்யம் -ஜீவாத்ம ..பகவானை சொல்லும் போது மாயை சக -அடக்கி ஆளுபவன் என்பார் -அத்வைதத்தில் ..
ப்ரஹ்மதுக்கும் மாய வஸ்யம் என்று சொல்லுவார் ..ஸ்ரீ ராம நவமி உத்சவம்
ஸ்வாமி ..காலஷேபம் ஆன பின்பு -சங்கர ஜெயந்தி ..மாயை ப்ரஹ்மத்தை சூழ்ந்து கொண்டது என்பார் ..
மாயைக்கு ஸ்வாமினி நியாமினி -பிராட்டி ..சிறைச்சாலையில் குற்றம் செய்தவரும் ராஜாவும் இருந்தாலும் துக்கம் யாருக்கு ..
அது போல மாயையில் அகப்பட்டவன் ஆவான் ..சரீரம் -சிறை சாலை .. இருவரும் இருக்கிறோம் .
அவனுக்கு உகப்பு ஜீவனுக்கு துக்கம் கர்மத்தால் ..பிராட்டிக்கும் கர்ம சம்பந்தம் இல்லை ..
பத்தினி என்பதால் அனைவரும் அவளுக்கு சொத்து ..
ப்ரஹமாதி -தேவர் கூட்டம் அவர்களின் பத்னிமார்களும் தாச -தாசி கணா- .
திரை பிரம்மா போன்றோரையும் மறைத்ததாம் ..மாய வத்சர் அனைவரும் ..
பிரகிருதி மோகம் இவர்களையும் விடாதாம் ..
வ்யாஸர் அருளிய ஸ்ரீ பாகவதம் ..சுகர் .பிரணய கலகம்-ருக்மிணி -கண்ணன் அழகாக வெளி ஏற்று கிறார் ..
பிரம்மா சரஸ்வதியை சிருஷ்டித்தார் —தான் ஸ்ருஷ்டித்த பெண்ணை திருமணம் பல இடங்களில்
சிவன் ப்ரஹ்மாதிகள் மோகம் உண்டே பாகவதத்தில் -யாருக்கும் யார்க்கும் வசப்படாதவர் விஷ்ணு ஒருவருமே —-
மாயை யால் ப்ரஹ்மாதிகளே மோகம் அடைய நம்மைப் பற்றிக் கேட்க வேண்டாமே
ஆகாசம் -பஞ்ச பூதங்களில் ஓன்று ..ஆகாசம் -பரமாத்மாவையும் சொல்லுமா ?..
அனைத்துக்கும் காரணம் என்ற ப்ரமாணங்களால் ஆகாசம் -ப்ரஹ்மம் ..அர்த்தம் பிரசித்தம் .. பிரசித்த அர்த்தம் ..
லோக அனுபவத்தை வைத்து கொண்ட அர்த்தம் பொருத்தம் இல்லாத போது .. ப்ரஹ்ம சூத்திரத்தில் விஸ்தாரம் ..
எங்கும் பிரகாசிக்கும் பொருள் என்ற விற்பதியை சொல்லி பரமாத்மவைச் சொல்லுகிறார் ..
அது போல ஹிரண்ய கர்ப -ஜம்பு -ருத்ர போன்ற வை ஜகத் காரணம் என்று சொல்வதால் எம்பெருமானையே குறிக்கும் ..
ப்ரம்மனையும் சிவனையும் குறிக்காது ..இதை பட்டர் விஷ்ணு ஸஹஸ்ரநாம வியாக்யானத்தில் அருளி செயகிறார் ..
அஞ்ஞானம் 5 வகை ப்ரஹ்மா சிருஷ்டித்தார் ..ஜனகன் ஜனகாதிகளை உதவிக்கு கூப்பிட வரவில்லை ..
கோபம் . அடைந்தான் ப்ரஹ்மா … அப்பொழுது தான் ருத்ர ஸ்ருஷ்டி பண்ணுகிறான் ..
ஆனந்த கண் களால் அனுபவிக்க பண்ணும் விஷ்ணு -ருத்திரன் ..
தன் கல்யாண குணங்களால் ஈடு பட்டதால் ..ருத்ர அர்த்தம் இப்படி பட்டர் பண்ணுகிறார் .. ஹிரண்ய -ஸ்வர்ணம் -தங்கம் சுந்தரமான பரம பாதத்தைச் சொல்லி
தன் கர்பத்தில் அவனை தங்குவதால் விஷ்ணுவே ஹிரண்ய கர்ப என்கிறார் ..ப்ரஹ்மா ஆதி -சப்தத்தால் …
சிவன் இந்திரன் போன்றாரையும் சொல்லி ..இவர்களின் பத்னிமார்களிலும் அடிமை செய்பவர்கள் ..
பார்யை புத்ரன் -தாசன் ..தனம் தேடி கொடுப்பவர்கள் ..கைங்கர்யம் பெற்று கொள்பவர்கள் சேர்த்தியில் ..
மாதவ ..மாத -பிதாவாக இருக்கும் பெரிய பிராட்டியாரும் எம்பெருமானும் ..பித்ருத்வம் -ஜகத் காரணத்வம்..
சேர்த்தியில் பதி -பத்தினி சேர்ந்து கைங்கர்யம் பண்ண வேணும் ..
ஜகத் காரணத்வம் பிராட்டிக்கு இல்லை -தென் கலை சம்ப்ரதாயம் .
இருவருக்கும் உண்டு -தேசிகர் ஸம்ப்ர தாயம் ..
மாத்ருத்வம் பெரிய பிராட்டிக்கு -தென் கலை ..ஸ்ரீ ஸ்தவத்தில் ஆழ்வான் –
பட்டரும் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில் ..பிராட்டிக்கு ஜகத் காரணத்வம் இல்லை என்று
ஸ்பஷ்டமாக அருளி செய்து இருக்கிறார்கள் -..
———————————————————————–—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply