ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ப்ரவேஸம்-

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி நிர்ஹேதுகமாக எம்பெருமானோடே ஸம்ஸ்லிஷ்டரான ஆழ்வார்
தாம் திரு நாடு ஏற எழுந்து அருளும்படியையும்
தாம் எழுந்த அருளும் போது சர்வ லோகங்களும் தம்மைக் கொண்டாடும்படியையும்
திரு உள்ளத்தால் ப்ரத்யஷீ கரித்து அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

பரம யோகிகளுக்கு சம்பவிப்பதான -பகவத் ஞான -வைராக்ய பக்தி பிரகாரங்களை -இத் திருவாய் மொழி அளவும் அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது ஒன்றும் இல்லாமையால் -திரு நாடு ஏறப் போக வேணும் -என்று மநோ ரதிக்கிற ஆழ்வாரை
ஈண்டென கொடு போக வேணும் என்று விரைகிற எம்பெருமான் இவருக்கு அங்குத்தைக்கு ஈடாகும் படி மிகவும் விடாய் பிறக்கைக்காக
திரு நாட்டுக்கு போகைக்கு ஈடாக வேதாந்தங்களில் பிரசித்தமான -அர்ச்சிராதி மார்க்கத்தையும் -அங்கு உள்ளார் பண்ணும் –
ஸத்காரங்களையும் -அவ்வழியே போய்ப் புக்க கடவிய திரு நாட்டையும் -அங்கே எம்பெருமான் அயர்வறும் அமரர்கள் சேவிக்க –
பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளும் படியையும் -பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும்
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

ஒன்பதாம் திருவாய் மொழியில் -கீழில்-திருவாய் மொழி இறுதியாக பகவத் விஷயமாகத் தமக்கு
அனுபவ ப்ராவண்ய ரூபமான பரபக்தி நடந்தபடியே அருளிச் செய்து
அனுபவத்தில் அன்விதாரான இவர்க்குப் பரிபூர்ண அனுபவத்தில் ப்ராவண்ய அதிசயம் பிறக்கைக்கு உறுப்பாக
இவரைக் கொண்டு போய் அனுபவிப்பிப்பதாக நினைத்து
அர்ச்சிராதி மார்க்கம் முதலாக பிராப்தி பர்யந்தமான ப்ரயோஜன அம்சத்தைப்
பரஞ்ஞான விஷயமாம்படி பிரகாசிப்பிக்க நினைத்த சர்வேஸ்வரனுடைய
போக்ய குண பூர்த்தியையும்
நிருபாதிக சேஷித்வத்தையும்
அநந்யார்ஹத அபாதகத்வத்தையும்
போக்யத்வ பூர்த்தியையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
சேஷித்வ சிஹ்னத்தையும்
சமுத்திர ஸாயித்வாதிகளால் வந்த சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஸத்காரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் முக்தராய்ப் போகிற பாகவதருக்கு பந்தவ்யமான அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உண்டான ஆதி வாஹிக சதிகார பிரகாரங்களையும்
தேச விசேஷ ப்ராப்தியையும்
நித்ய ஸூரி பரிஷத் அந்தர்பவாத்தையும்
அபரோஷித்த க்ரமத்திலே முக்தராய்ப் போகிற பாகவருடைய ஸத்கார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

பரம யோகிகளுக்குப் பிறக்கக் கடவதான பர பக்தி இவர்க்குப் பிறந்து தத் பிரகாரங்களை இத் திருவாய் மொழி யளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது -ஒன்றும் இல்லாமையால் -பரம பதத்திலே போக வேணும் -என்று மநோ ரதிக்கிற இவரை
-தம்மில் காட்டில் -சடக்கெனக் கொடு போக வேணும் என்று விரைகிற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –
அதாகிறது -வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம்
எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்
நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –
நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே
தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
-தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது-
அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

சூழ் விசும்பு -பிரவேசம் –

மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே-
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக-
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-பிரத்யக்ஷ சமானஹார சாஷாத்காரம் —
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –
பரஞானம் -தர்சன -தசை –தர்சன -சமா நாகாரமான தசை -இடைப்பட்ட நிலை —

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்-
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்-
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்-
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்-
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்-
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்-
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்-பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது-
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-

தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் —சுக்ல கிருஷ்னே –தேவயான மார்க்கம் -முக்தி அபிலாஷை -ஹார்த்தா அனுக்ரஹ தானே வந்து முகம் காட்டி –
7 பாசுரம் வரை பிரகிருதி ஸத்காரம் 8-11- மேலே –
மாதவன் வைகுந்தம் புகவே -அந்த மார்க்கம்
முடி உடை வானவர் எதிர் கொள்ள -நித்ய ஸூ ரிகள்-ஸத்காரம்
பிராட்டிமாரும் -தானுமாக – வந்தவர் –மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை –
மாதவன் தமர் -என்பதால் அந்யாபதேசம் –
ஸோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -சக ஸ்ருதி
பரமம் சாம்யம் உபைதி -சாம்ய ஸ்ருதி
மம சமதர்மம் -சமதர்ம ஸ்ருதி –
சூர்ய கிரணம் பிடித்தே –தேக சம்பந்தம் நீங்கிய பின்பு உடனே -மோக்ஷம் -பகலோ இரவோ -தஷிணாயனமோ உத்தரணமோ –
அர்ச்சிஸ் /பகல்/சுக்ல /உத்தர அயனம் /-சம்வத்சரம் / வாயு லோகம் -முதல் ஆறு –
சூர்ய லோகம் / சந்த்ர லோகம் /வித்யுத் -அமானவான்-/வருண லோகம் /-சுவர்க்கம் /சத்ய லோகம் -ஆகிய 12 -தாண்டி
இவ்வளவையும் காட்டி -மேலும் ருசியை வளர்க்க -நமக்கு அருளிச் செய்ய –
அர்ச்சிராதி மார்க்க பிரதர்சனம் -மார்க்கம் காட்டிக் கொடுத்த குணம் –

28 சூர்ணிகைகள் -கல்யாண குணங்கள் -காட்டி -30 திவ்ய தேசங்கள் -நவ திருப்பதி கணக்கில் 8 திவ்ய தேசம் –
தெளிந்த என் சிந்தை -ஒரே சூர்ணிகை மூன்று திவ்ய தேசங்கள் –
வன் பெரு வானக முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளர் திருப்பதி வடிவுடை கடலிடம் கட்கிலீ என்னுமவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ ஸுஹார்த்த பிரதானம் -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்குக் உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் -160
உபய பிரதான ப்ரணவமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-161 –
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -162-
ருசி விவசரக்குப் பாதமே சரணாக்கும் உதாரயம் வானமா மலையிலே கொழுந்து விடும் -163-
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் கூட மூக்கிலே ப்ரவஹிக்கும் -164
மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் -165
வ்யவசா யஜ்ஞர் ரக்ஷண ஸ்தைரியம் பம்பா உத்தர தேசஸ்த்தம் -166-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கட நா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் -167-
கடி தகட கவி கடநா பாந்தவம் அவ்வூரிலே த்வி குணம் -168-
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -169
சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -170
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே -171-
சாதராரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் -172-
ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்யா பிரகாசம் ஆய்ச்சேரியிலே -173
மஹா மத்தியில் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -174-
சாத்ய ஹ்ருதி ஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே -175-
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழமூரிலே கூட்டமிடும் -176-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் பிறக்கட்டும் -177
போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -178
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -179
பிரிந்த துன்பக் கடல் கடத்துக் விஷ்ணு போது ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -180
சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதாகத்திலே பிரசித்தம் -181-
மார்க்க பந்து சைத்யம் மோஹ நத்தே மடுவிடும் -182-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூரார்ச்சிநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் -183-
மோக்ஷ தானத்தில் ப்ரண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -184-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும் -185
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -186-
12 மலை நாட்டு திவ்ய தேசங்கள் / 5 சோழ நாட்டு திவ்ய தேசங்கள் / 1 வட நாட்டு திவ்ய தேசம் / 12 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் /-ஆக 30 –
38 திவ்ய தேசங்கள் –ஊரகம் / பாடகம்/ வெக்கா/ அயோத்யா/ த்வாரகா / வட மதுரை / பாற்கடல் / பரம பதம் -சேர்த்து -38-

அது வரை தான் கால தாமதம் -பிராரப்த கர்மம் தொலையும் வரை -ஞானம் ஆதித்யவது -கர்மங்களால் மூடப்படாமல் -விளங்கி –
சூஷ்ம சரீரம் -நுண்ணிய மேனி உடன் சென்று -ஸத்காரம் -பெரிய கல்யாணம் போலே
-பரன் போலே சஜாதீயம் தானே ஞாத்ருத்வம் -ஆனந்தமயத்வம் -சேஷத்வம் -பாரதந்தர்யம் –
சக சாம்யா சமதர்ம சுருதிகள்
இடத்தால் கூடி இருந்து -சாமியாபுத்தி பெற்று -சமதர்மம் பெற்று -ஞானா ஆனந்தங்களில் சாம்யம் -போக மாத்ர சாம்ய லிங்காசா -ஸூ த்ரம்-
ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஏக போக உரிமை அவனுக்கு -யுக பத்தாக அனுக்கிரக கார்யம் –
சேஷி மற்ற சேஷ பூதர்களையும் இப்படி ஆக்க பரம காருண்யத்தால் செய்யும் கிரியைகள் –
ஆனந்தம் இங்கே -அங்கு எதிர்பார்ப்பு -மகிழ்ச்சி -ஆழ்வார் திரு அடி சேவை -கைகளில் எழுந்து அருளி -பெருமாள் திருவடிகளில் –
பிரத்யக்ஷ மாக பிரமாணம் காட்டி -நம்பிக்கை கொடுத்து நமக்கும் இந்த பேறு-சூழ் விசும்பு -பாசுரம் அனுசந்தித்து
நம்பெருமாள் அனைத்தையும் களைந்து ஆழ்வாருக்கு சம்பாவனையாக கொடுத்து அருளி
செம்மா பாத பற்பு தலை மேல்சேர்த்து -இளையவர்க்கு கவித்த மௌலி – சர்வ ஸ்வதானம்-பண்ணி – பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிரபத்தி ஏற்றம் காட்டி அருளி -திருத் துழாய் வைத்து மறைத்து -அவா அற ச் சூழ் -சாத்து முறை பாசுரம் சாதித்து பிரசாதம் சாதிப்பார்கள் –
பிரகிருதி உள்ளார் ஆர்ப்பாராம் முதல் இரண்டு பாசுரங்கள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading