ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-11-
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு அல்லல் நில்லாதே -இது நிச்சிதம் -என்று கொண்டு
இத்தையே பின்னையும் அநு பாஷித்து திருப்பேரை ப்ரதிபாதித்த இத்திருவாய் மொழி வல்லார்
இட்ட வழக்காம் திரு நாடு என்கிறார்
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-11-
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் இட்ட வழக்காம் -விலக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப் பேர் மேலே விலக்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து க்ருதார்த்தரான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல் சேர்ந்த-
தமிழனா ஆயிரம் திரு வாய் மொழியிலும் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-11-
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக ஸ்வா ராஜ்ய ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-துக்கத்துக்கு வாஸஸ் ஸ்தானம் அல்லாத தேசமாய்
பெரிய பரப்பை யுடைத்தான வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-விலக்ஷண புருஷரானார் பலரும் திருவாய் மொழி கேட்டு வாழ்கிற
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல்லாய்ச் சேர்ந்து இருக்கிற தமிழனா ஆயிரத்தில் இவை பத்தையும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–அப்யஸிக்க வல்லரான பாகவதரானவர்கள் தங்கள் நிர்வாஹகராய்
நடத்துமது அபரிச்சின்னமாய்க் கொண்டு வ்யாப்தமாய்
தேஜோ மாயமாய் பரம வ்யோம சப்த வாஸ்யமான பரமபதம் –
இது கலித்துறை –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-11-
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் இட்ட வழக்காம் -வி லக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்—நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்--துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல் சேர்ந்த தமிழான ஆயிரம் என்னுதல் -பாட்ட்யேகேயேச மதுரம் என்கிறபடியே இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் என்னுதல்
வல்லார் தொண்டர்-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் -செஞ்சொற்கவிகள் என்கிறபடியே வாசிகமான அடிமை செய்யும் வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே–நிரதிசய தேஜோ ரூபமான பரம பதத்தை யாய்த்து ஆளுவது -இத் திருவாய் மொழிஅப்யசித்தவர்கள் சென்றால் ஆண்மின்கள் வானகம்-என்றாய்த்து -அங்குள்ளார் சொல்லுவது –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-11-
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்து – சக்தி பிராப்தி பூர்த்தி -முன் மூன்று பதிகங்களில்
-சக்தத்வம் சத்ய காம்தவம் ஆபத் ஸகாத்வம் அன்றோ இவற்றுக்கு –
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று காலாசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றை
பிறர் அறிய பத்துத் தோறும் வெளியிடுகிறார் -அன்றோ
அர்ச்சிராதி மார்க்கம் வழி போவார்கள் நச புன பார்த்ததே -லேசான மோக்ஷம் அடைவோம் –
ஆனால் நச புன பார்த்ததே என்று அங்கு சென்றவர்கள் எல்லாம் அர்ச்சிராதி கதி வழியே போக வேண்டாம்
-சத்ய லோகம் -12 வைத்து லோகம் -அங்கே இருந்தே அவன் போகலாமே -அர்ச்சிஸ் முதலில் உள்ள மார்க்கம் போக வேண்டாமே -அவனுக்கு –
சரீரமாக இருப்பவை -எல்லாம் -பிரகாரமாக இருப்பவை -தான்
பிரகாரமாக இருக்கும் எல்லாம் சரீரம் ஆக வேண்டாம் புஷபம் மணம் போலே -மணம் குணம் தானே த்ரவ்யம் இல்லை –
யஸ்ய சேதனஸ்ய ய த்ரவ்யம் -சேதனத்வமும் த்ரவ்யமும் வேணும் -சரீராத்மா பாவம் சொல்ல –
சுவீக்ருத சித்த சாதனர்-இத்தை சாத்தியமாக இரக்க-பிராப்திக்கு முன்னே சித்திக்கும்
-பர பக்தி பர ஞானம் பரம பக்தி -என்பதை இத்தை என்கிறார் நாயனார் –
பகவத் இச்சா ஆதீனமாக ஆவிர்பவித்த ஆழ்வார் அர்ச்சிராதிகதி அறிந்து -அவன் காட்டக் கண்டு அருளிச் செய்கிறார்
-கடோ உபநிஷத் சாந்தோக்யம் -சொல்லும்
பிடித்தார் பிடித்தாரை பற்றி அல்லல் தீர பெறலாம் என்றார் முன்னம் -உகந்து பணி செய்வதையும் உனபாதம் பிடிப்பதையும் பெற்றேன் —
ஸூ ராஜ்ய பலம் -எல்லாரும் இந்நாட்டு மன்னர் -பரம ஸ்வராட் -ச ப்ரஹ்ம ச சிவ ச இந்திரா –அங்கு தான் -கர்மாதீனம் இல்லையே -பகவத் அதீனம்-
திருப் பேர் -பேரில் மணாளனை ஒரு நாள் சுற்றம் கடைசியில் அங்கும் -திவ்ய தேச பதிகங்கள் முற்றும் இத்துடன் –
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-துக்கம் வாஸ் ஸ்தானம் இல்லா தேசம் நீண்ட வயல்களால் சூழப்பட்ட
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் வி லக்ஷணர் வாழும் -திருவாய் மொழி கேட்டு வாழும் -தொழுவதும் எழுவதும் ஒன்றே போலே
திருவாயமொழி கேட்டு பாடுவதே வாழ்வே
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல்லாய் செறிந்த தமிழ் -செந்தமிழ் -இலக்கிய தமிழ்
-27 சொல் பொருள் எழுத்து -இலக்கணம் -தொல்காப்பியம் -அகஸ்தியர் சிஷ்யர் -எழுத்து
சொல் வாக்கியம் பொருள் பாடல் -யாப்பு இலக்கணம் பொருந்தி
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே-பொன் சூழ் விசும்பு ஹிரண்மயமான விஷ்ணோ பரமம் பதம் -ஆளுவார்கள்
பாகவதர்கள் தாங்களே நிர்வாகராக நடத்துவது பரமபதம் -அபரிச்சின்னமான -வியாப்தமாய் நித்ய விபூதிக்கு மேல் எல்லை இல்லை
லீலா விபூதிக்கு கீழ் எல்லை என்பர் எங்கும் சூழ்ந்து –
சப்தாவரணங்கள் -மூலப் பிரகிருதி பாழ்- தாண்டி விரஜா நதி – ஸ்வயம் பிரகாசம் -அங்கு எல்லாம் -கோடி சூர்ய பிரகாசத்தை இருளாக்கும் படி
-சுத்த சத்வம் பொன் சூழ்ந்த -தேஜோ மயம்-பரம வ்யோமம் மா க வைகுந்தம் -ஆள்வார்கள்
நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்-இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
இவர்களும் உடையவர் போலே ஆவார்கள் என்றவாறு —
நில்லா அல்லல் –
துக்கங்கள் ஆனவை-இது நமக்கு இடம் அன்று என்று தாமே விட்டுப் போம் –அநிஷ்ட நிவ்ருத்தி
நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-
பெருத்த வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பேர் மேல்-ஆயிற்றுச் சொல்லிற்று-
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
பெரியார் பலரும் தம்மை அனுபவித்து-இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்-இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்-
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –
திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே-இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –
இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே-
எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி –
இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply