ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-10-
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
எம்பெருமான் ஒரு உத்தரம் காணாமை உம்முடைய திறத்தில் நான் செய்த செயல் எல்லாம்
சொன்னபடியே நிர்ஹேதுகமாகவே செய்தேன் -அது நிற்க —
இனி நான் செய்ய வேண்டுவது என் என்ன –
உன் திருவடிகளைப் பெற்றேன் -பெறுகிறேன் -உகந்து பணி செய்து கொண்டு உன் திருவடிகளை பெற்றேன் –
இன்னம் உன் திருவடிகளில் அடிமை செய்யும் இதுவே எனக்கு வேண்டுவது எந்தாய் என்று ஆழ்வார் சொல்ல
எம்பெருமானும் அப்படியே செய்கிறோம் -என்று அருளிச் செய்ய –
ஆழ்வாரும் திருப்பேர் நகரான் திருவடிகளை பற்றினார்க்கு ஒரு கர்மம் -பந்தம் -பாவம் – இல்லை யாகாதே என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-10-
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய -அவனும் அப்படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் -திருப் பேர் நகரான் -திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு ஒரு துக்கம் ஆகாதே என்கிறார் -அற்றாரான அடியார் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-10-
அநந்தரம் கைங்கர்ய பிரதிசம்பந்தியான அவன் திருவடிகளை அடிமை செய்து பெற்றேன் –
யாவதாத்ம பாவி எனக்கு இதுவே அமையும் என்கிறார் –
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்—நிர்ஹேதுகமாக
உன் திருவடிகளைக் கிட்டினேன் -அத்தாலே -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு
வாசிகமான அடிமை செய்து பரம ப்ராப்ய பூதனான உன் திருவடிகளைப் பெற்றேன் –
நிருபாதிக பந்துவானவனே -இவ்வடிமையே இவ்வாத்மாவுக்கு உள்ளதனையும் அபேக்ஷிதம் -இது உண்டாகவே
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–ஆச்சார்ய முகத்தால்
ஞாதவ்யங்களை அப்யசித்தவர்களாய் ஸ்ருதமான வேதார்த்தங்களை நிர்வஹிக்க சமர்த்தரானவர்கள்
பகவத் அனுபவத்தோடு வாழுகிற திருப்பேரிலே வர்த்திக்கிற உனக்கு –
அடியார் தமக்கு அனுபவ பிரதிபந்தக பாவங்கள் தன்னடையே நில்லாது இறே
அற்றாருக்கு அடியார் என்றுமாம் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-10-
இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார் -அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும் பிரசங்கியாதோ -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இ றே உபாயம் ஆவது -இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம் சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது -இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்னஅவனுக்கு உண்டு என்னவுமாம் –
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
உற்றேன்–உகந்து பணி செய்ய உன பாதம்-பெற்றேன்-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –
ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இ றே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –
எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இ றே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
கற்றார்-ஒரு ஆசனத்தின் கீழே இருந்து போக்கினவர்கள் –
மறை வாணர்கள் வாழ் -வியாச பதம் செலுத்த ஷமர் ஆனவர்கள் அனுபவித்து வர்த்திக்கிற தேசம் –
திருப் பேராற்கு–ப்ரீதி பிரகரஷத்தாலே முகத்தை ஸ்வகதமாகச் சொல்லுகிறார் -என்னுதல் -திருப் பேரனான உனக்கு என்னுதல் –
அற்றார் அடியார் -திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல் -அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் -என்னுதல் –
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-10-
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
கைங்கர்ய பிரதி சம்பந்தியான அவன் திருவடிகளில் அடிமை செய்வதும் -கைங்கர்யம் செய்வதும் பிராப்தம் –
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்-நிர்ஹேதுகமாக -அத்தால் ஆனந்தம் உந்த வாசிக்க திருவாய் மொழி பாடி –
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்-குடல் துவக்கு உள்ள ஸ்வாமி -இது ஒன்றுமே ஆத்மாவுக்கு வேண்டியது –
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு-இந்த எண்ணம் வரவே உகந்து அருளினை தேசங்கள் -இத்தையே வேதம் சொல்லும்
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–அநந்யார்ஹ சேஷ பூதர்களுக்கு அனுபவ பிரதி பந்தகங்கள் நிற்காதே –
சேஷமாக இருப்பிற்கு சேஷ பூதர் அற்றார்க்கு அடியார் –
இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-விடை அளித்தால் அற்றவனாய்-உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன-
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்-
அவன்தானே செய்தான் -என்னும் அன்று-அவனுக்கு உயர்வு தாழ்வு காண்டலும்-
அருள் பெற்ற தன்மையும்-எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்-
இத்தலையில் ருசியை விரும்பிச் செய்கையாலே-அவனுக்கு அவை உண்டாக மாட்டா-
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்-அது உபாயம் ஆக மாட்டாது
பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது-
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே-அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை-
உபாயம் வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்-இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது-
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்-
சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –
உற்றேன் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல்-கிட்டிக் கொடு நின்றேன் –
உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –
ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு-திரு வாய் மொழி பாடி-
உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்-
உகந்து பணி செய்கை சாதனமாக-மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று-
இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே-
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –
இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது-
மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் –
இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்-
இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
கற்றார் –
ஒரு ஆசனத்தின் கீழே இருந்து கற்றவர்கள்-
மறை வாணர்கள் வாழ் –
வேதத்திற்கு -வியாச பதம் -வியபதேசம் செலுத்த வல்லவர்கள்-அனுபவித்து வசிக்கிற நகரம்-
திருப் பேராற்கு –
ப்ரீதியின் மிகுதியாலே முகத்தை மாற்றி-தனக்குத் தானே சொல்லுகிறார் -என்னுதல்-
அன்றிக்கே –திருப் பேரரான உனக்கு -என்கிறார் -என்னுதல் –எந்தாய் -சம்போதனம் என்றவாறு –
அற்றார் அடியார் தமக்கு-
திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல்
அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் என்னுதல்-
அல்லால் நில்லாவே –
ஒரு துக்கமும் இவர்கள் பக்கல் நில்லாது-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply