ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-9–
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
திருப்பேர் நகரான் இன்று என்னை ஸ்வ விஷய திவ்ய ஞானவான் ஆக்கித் தன்னை என்னுள்ளே வைக்கைக்கு ஹேது என் –
இதற்கு முன்பு இப்படிச் செய்யாது ஒழிகைக்கு ஹேது என் என்று அவனை நான் கேட்க்கிறேன் –
இதற்க்கு ஓர் உத்தரம் வல்லனாகில் சொல்லுவான் என்கிறார் –
ஒரு க்ஷணம் பிரியில் தரிக்க மாட்டாதே மத் ஏக தாரகனாய் இருக்கிற இவன் இதுக்கு முன்பு
அநாதி காலம் எல்லாம் என்னை விட்டு எங்கனே தரித்து இருந்தான் என்று கிடக்கிறார் என்றுமாம் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-9
இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
குன்று போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் ஓன்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று உணர்த்த வேண்டி இருந்தேன் –
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-9–
இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
நிதான பாசுரம் -இன்று நிர்ஹேதுகமாக உபகரித்தவன் -முன்பு உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் -என்று கேட்க வேண்டி இருந்தேன்
-பதில் சொல்லாமல் பதில் கிடைக்கப் பெற்றேன் -சிரிக்க -புரிந்து கொண்டார் -மயர்வற மதி நலம் அருள பெற்றார் அன்றோ –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்
-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்
-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய் என்றால்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்-முன்பு உபேக்ஷித்து- தான் இட்ட வழக்காக பராதீனனான என்னை –
எப்பொழுதும் அடிமைப் பட்டவன் தானே ஜீவாத்மா -ருசி எதிர் பார்த்து இருந்தேன் சொல்லலாமே –
இன்று எதனால் கொடுக்கிறாய் கேட்க்கிற நான் முன்பு கேட்க வில்லையே –
பராதீனப் பட்டதாக சொல்ல வில்லையே -சோற்றை உண்ண பசி வேண்டுமே -ருசி வேண்டுமே
தன் பக்கல் விமுகனாய் விஷயாந்தரங்களில் கை கழிந்து போம் படி சங்கல்பித்தது எதனால்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே-இன்று அருளியவற்றுக்கு ஹேதுவோ அன்று உபேக்ஷித்தத்துக்கு ஹேதுவோ
ஒன்றை உணர்த்தி அருள வேணும் -நித்ய தத்வம் காருண்யம் நித்யம் சாதன பாவம் என்னிடம் அன்றும் இன்றும் இல்லையே
இத்தை கேட்க நினைத்து இருக்கிறேன் -உணர்த்தல் உற்றேன் -உத்தியோகித்து இருந்தேன்
ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-9–

இன்று என்னைப் பொருள் ஆக்கி -அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –
தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை
என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்–பர தந்த்ரனான என்னை புறம்போகப் பண்ணிற்று என் செயகைக்காக -பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை -புறம் போக விட்டானும் அவனே என்று இருக்கிறார் -ஸ்வ சத்தை பர அதீனமாய் இருக்கை -இவ் வஸ்துவுக்கு போக்கு வரவு ஆவது என் -இரண்டுக்கும் காரணம் சொல்ல வேணும் –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மலைகள் போன்று விளங்கா நின்றுள்ள மாடங்களாலே சூழப் பட்ட திருப் பேர் நகரான் –
ஓன்று எனக்கு அருள் செய்ய -இன்று விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்ல வேணும் –முன்பு உபாசித்தத்துக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே–அறிவிக்க வேண்டி இரா நின்றேன் -இதுக்கு ஈஸ்வரன் இவருக்கு சொன்ன உத்தரம் ஏது என்று சீயர் பட்டரைக் கேட்க -இவர் தலையிலே ஒரு பழி ஏறிட்டு நெடு நாள் இழந்த நாம் சொல்லுவது என் -என்று லஜ்ஜா விஷ்டனாய் நின்றான் -என்று அருளிச் செய்தார் –
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-9–
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
நிதான பாசுரம் -இன்று நிர்ஹேதுகமாக உபகரித்தவன் -முன்பு உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் -என்று கேட்க வேண்டி இருந்தேன்
-பதில் சொல்லாமல் பதில் கிடைக்கப் பெற்றேன் -சிரிக்க -புரிந்து கொண்டார் -மயர்வற மதி நலம் அருள பெற்றார் அன்றோ –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்
-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்
-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய் என்றால்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்-முன்பு உபேக்ஷித்து- தான் இட்ட வழக்காக பராதீனனான என்னை –
எப்பொழுதும் அடிமைப் பட்டவன் தானே ஜீவாத்மா -ருசி எதிர் பார்த்து இருந்தேன் சொல்லலாமே –
இன்று எதனால் கொடுக்கிறாய் கேட்க்கிற நான் முன்பு கேட்க வில்லையே –
பராதீனப் பட்டதாக சொல்ல வில்லையே -சோற்றை உண்ண பசி வேண்டுமே -ருசி வேண்டுமே
தன் பக்கல் விமுகனாய் விஷயாந்தரங்களில் கை கழிந்து போம் படி சங்கல்பித்தது எதனால்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே-இன்று அருளியவற்றுக்கு ஹேதுவோ அன்று உபேக்ஷித்தத்துக்கு ஹேதுவோ
ஒன்றை உணர்த்தி அருள வேணும் -நித்ய தத்வம் காருண்யம் நித்யம் சாதன பாவம் என்னிடம் அன்றும் இன்றும் இல்லையே
இத்தை கேட்க நினைத்து இருக்கிறேன் -உணர்த்தல் உற்றேன் -உத்தியோகித்து இருந்தேன்
ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –
இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு-என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் –இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்-விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்-இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்
இன்று என்னைப் பொருள் ஆக்கி –
அசேதனத்தைப் போலே இருந்த என்னை-ஒரு பொருளாம் படி செய்து-
பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை-
தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –
என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை-முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –
அன்று –
என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு-முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும்சொல்கிறார் –
இன்று -என்கிறது-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`-
என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் –
பரதந்த்ரனான என்னை-புறம்பு போகப் பண்ணிற்று என் செய்கைக்காக-
புறம்போகப் பண்ணுகையாவது-பராமுகம் செய்தல் –
இழந்த நாள் இழந்ததும் அவனாலே –
பெற்ற இன்ற பெற்றதும் அவனாலே -என்று இருக்கிறார் –
ஸ்வதந்த்ரம் இல்லாத பொருள் செல்ல நிற்க வற்றோ –வர நிற்க வற்றோ –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இப்படி மதிப்பனானவன்-மலைகளை சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள-
மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் –
ஓன்று எனக்கு அருள் செய்ய –
முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –
இன்று என்னை அங்கீகரித்ததற்கு காரணம் சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே –
இதற்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்-என்று திரு உள்ளத்தில் படும் படி-
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன்-
உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பனி செய்து -என்று சமாதானம் அடைகிறார்-
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்-அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்-
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே-
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே-பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –
இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று
நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி-வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்-
மாமியர் குழுவில் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப -கம்பர் -தாரை முன்னால் இளைய பெருமாள் நிலை –
தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.
அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்-
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்-
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்-படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்-வைஷம்யம் நைர்கருண்யம் வருமே –
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ என்னில் -அது செய்யாது-சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
அடியிலே வெறுப்பின்மையும்-இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி-அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –அதிகாரி விசேஷணம் -ருசி –
கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே-
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்-
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து-விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்-
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்-
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே-
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று-
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது-என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9-
என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட-அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் எனபது எனக்கு-மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிறபாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ-
இவர் தாம் -லஜ்ஜித்த அவனை -எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை-
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே-
சைத்தன்ய பிரயுக்தமான ருசி -ஸ்வரூபத்துடன் சேர்ந்தது -உபாயம் ஸ்வரூபம் உடன் சேராதே -பற்ற வேண்டுமே –
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன-அதுவே அமையும் -என்கிறார்-
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ-விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-வரவாறு ஒன்றி இல்லை -வாழ்வு இனிதானதே என்றாரே –
பசியும் ருசியும் உபாயம் ஆகாதே -அனுபவத்துக்கு வேண்டிய அதிகாரி விசேஷணம் தானே
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply