ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-8-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-8-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாக் மனஸ் அகோசர ஸ்வரூபனாய் பரம போக்யனாய் இருந்த திருப்பேரான் கண்ணுள் நின்று அகலான் –
தன்னாலும் விஸ்லேஷிக்க ஒண்ணாத தொருபடி என் நெஞ்சிலே புகுந்து செறிந்தான் –
இன்னம் இவ்வளவன்று இவனுடைய பாரிப்பு என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-8-

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து ஹிருதயத்திலே புகுந்தான்

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-8-

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து ஹிருதயத்திலே புகுந்தான்

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து என் பக்கல் வியாமோஹத்தைப் பண்ணி –ஹிருதயத்திலே புகுந்தான்-என்கிறார்

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

கண்ணுள் நின்று அகலான்-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்
கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இ றே பிரதானம் –
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –தேசத்தில் போக்யத்தையும் -மேன்மையும் இருக்கிற படி -நாநா வர்ணமாய் மஹார்க்கமான ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களாலே சூழப் பட்ட தேசம் –
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –தன்னை ஆதரித்து இருக்கிற என்னுடைய ஹிருதயத்திலே தன் வியாமோஹம் எல்லாம் தோன்றும் படி வந்து புகுந்தான் –
திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-8-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

சர்வ பிரகாரத்தாலும் செறிந்து –நிரதிசய போக்யனாகக் கொண்டு புகுந்தான்
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்-பாஹ்யமான கண்ணுக்கு விஷயமாகி -நித்யம் விஷயமாய் -விபவ வடிவத்திலே –
நினைவைப் பார்த்த இடத்தில் பெரிய பாரிப்புடன் இருந்தான் -பரம பதம் கூட்டிப் போக -வீடு திருத்தி வைத்து
-பெரிய திட்டம் -தேச விசேஷம் கொண்டு போய் அனுபவிக்கைக்கு ஈடாக
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே-தாம் தாம் அறிய எண்ணும் அளவில் அதி ஸூஷ்மமான
நுண்ணிய ஸ்வ பாவன்-சப்த ராகங்களின் சுவையுடன் -சாரஸ்யம் -இவனை அனுபவித்தே ஆழ்வார் பல பண்களால் திருவாய் மொழி அருளி
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்-நாநா வர்ணம் -மாணிக்கங்களால் சமைந்த மாடங்கள்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே-இன்றே புகுந்தான் -செறிந்து புகுந்தான் -திண்ணம் புகுந்தான் –
நிர்ஹேதுகமாக -நிச்சயமாக திரும்பிப் போகாத படி புகுந்தான் –

எல்லை இல்லாத இனியனான-திருப் பேர் நகரான்-என் பக்கலிலே காதலை வைத்து
ஒரு நாளும் போகாதபடி-என் நெஞ்சிலே வந்து புகுந்தான் –என்கிறார் –

கண்ணுள் நின்று அகலான் –
எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –
சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –

கருத்தின் கண் பெரியன் –
உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்-
வீடு திருத்த -தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –
இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –
யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்
இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற -ஸ்வரூபத்தால் -பொது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்
நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்-
என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்

எண்ணில் நுண் பொருள் –
அவன் தானே இப்படி மேல் விழில்-விழும் அத்தனை போக்கி-தம் தாமே அறியப்பார்ப்பார்க்கு-அறியப் போகாது –

பஹூ மநோ ரத்தங்களைப் பண்ணுகிறான் –
பாரிப்பு எண்ண முடியாத அளவு / என் கார்ய விஷயத்தில் பெரியவன் / இயத்தா ரஹிதன் அப்படிப்பட்டவன் என்ற அளவு அல்லன் -/
ஸ்வரூப அபரிச்சின்னன் என்று சொல்ல முடியாதே மனத்தில் செறிந்தான் திண்ணம் என்பதால் பிரகரணத்துக்கு சேராது – என்றவாறு /
விசார அவ்விஷய பூதன்-என்று சொன்னாலோ என்னில்-ஸூ ஷ்ம விஷயம் -எண்ணில் நுண் பொருள் –

அறிய அரியன் என்று கை வாங்கி இருக்கலாம் பொருள் அன்று –
ஏழிசையின் சுவை தானே –
வருந்தியும் மேல் விழ வேண்டும் பொருள் ஆயிற்று-இது இனிமை இருந்தபடி –

வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இது மேன்மை இருந்தபடி –

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –
சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்-
எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே-
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்-
அதற்கு வேறு போக்கடி கண்டிலர்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading