ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-4-
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்-திரு மேனி அவட்கு அருளீர் -என்று இத்தனையும் சொன்னாலும்
உங்களுக்குத் பரம அயனமான திருமேனி ஒளியை யுங்களை இழப்பித்து அவ்வூரில் நின்றும் போக விடுக்குமோ –
சொன்னால் என் செய்யும் என்கிறாள் –
——————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-7-4-
சில மேகங்களை நோக்கி -என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் -உங்களைத் தண்டிக்குமோ -என்கிறாள் –
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
தன் வடிவு அழகாலே ஜகத்தை அடைய அடிமை கொண்டு இருக்கிறவர்க்கு -அவ் வழகை இழந்து நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய தூதாய் -திரு மூழிக் களம் என்று பிரசித்தமாய் இருக்கிற திரு நகரியிலே -அழகிய முகில்காள்–அவளுக்கு உம்முடைய திருமேனியை அருளீர் என்று சொன்னக்கால் -உங்களைத் தன் திருமேனியில் ஒளியை மாற்றி -உங்கள் அழகு எல்லாம் தெரியும் படி நீங்கள் நிற்கும் -நிர்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களை போக்குமோ–திரு மூழிக் களம் என்னும் செழு நகரில் -திருமேனி யடிகளுக்கு -என்றுமாம் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-7-4-
அநந்தரம் -அழகால் அடிமை கொள்ளுமவருக்கு என் தூதாய்ச் சென்று உம்முடைய திருமேனியை அவளுக்கு உபகரியீர் என்று
ஒரு வார்த்தை சொன்னால் உங்கள் ஸாரூப்யத்தையும் தேச வாசத்தையும் தவிர்க்குமோ என்று
சில மேகங்களைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள்
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்–தர்ச நீயமான வடிவையுடைய முகில்காள் –
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் என்னும்படி பிரசித்தமான விலக்ஷண நகரத்திலே வர்த்திக்கிறவராய்
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்–திரு வடிவு தானே வரவாதிகத்வ ப்ரகாசகமான சேஷித்வத்தை யுடையவர்க்கு –
அவரோடே உறவு யுண்டாய் இருக்க அனுபவிக்கப் பெறாத குரூரமான பாபத்தை யுடைய நான் விடுகிற தூதராய்ச் சென்று
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்–அவளுக்கு உம்முடைய நிரதிசய போக்யமான திரு வடிவை உபகரித்து அருளீர்
என்று ஒரு யுக்தி நேர்ந்தக்கால் -பரார்த்தமாக வார்த்தை சொன்ன உங்களை
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–தான் அடியிலே உங்களுக்குத் தந்த தன் திருமேனியில் ஒளியை தவிர்த்து
விலக்ஷணமான ஆகாசத்திலே வர்த்தியாதபடி பண்ணுமோ
ஸ்வார்த் தமாக அபேக்ஷித்தார்க்கு கொடுக்குமவன் எனக்காக அபேக்ஷித்தத்துக்காக
சா ரூப்யத்தையும் விஷ்ணு பார்ஸரயத்வத்தையும் தவிர்க்கை அசம்பாவிதம் என்கிறாள் –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-7-4-
சில மேகங்களை நோக்கி -என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் -உங்களைத் தண்டிக்குமோ -என்கிறாள் –
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
திருமேனி அடிகளுக்குத் -ஸ்வரூப குண விபூதிகளை ஒழிய -வடிவு அழகாலே -சர்வ ஸ்வாமி என்று தோற்றும் படி இருக்கிறவர்க்கு –வடிவு அழகாலே ஜகத்தை அடைய தோற்பித்து அடிமை கொண்டு இருக்கிறவர்க்கு என்றுமாம் -அவசர பிரதிபேதிரே –என்கிறபடியே ப்ரதி கூலர்க்கும் ஆகர்ஷகமாய் இ றே வடிவு இருப்பது –
தீ வினையேன் விடு தூதாய்-சர்வ சாதாரணமான வடிவை இழந்து உங்கள் காலிலே விழ வேண்டும்படியான என்னுடைய தூத க்ருத்யத்திலே அதிகரித்து –
திரு மூழிக் களம் என்னும்-ஆர்த்த ரக்ஷணத்துக்கு வந்து நிற்கிற இடம் என்று பிரசித்தமான தேசம் –
செழு நகர் வாய் அணி முகில்காள்-பரம பதத்தில் காட்டில் உண்டான ஏற்றம் -செழு நகர் வாய் வர்த்திக்கிற அழகிய முகில்காள் -என்னுதல் -செழு நீர் வாய் யடிகளுக்கு செப்புங்கோள் என்னுதல் -செழு நீர் வாய்ச் சென்று செப்புங்கோள் என்னுதல்
திரு மேனி அவட்கு அருளீர் -பரார்த்தமான திரு உடம்பை ஆசைப்பட்டவர்களுக்கு கொடுத்தால் ஆகாதோ -இவ் உடம்பு உமக்கு கண்டது என்று இருக்கிறாரோ -என்று சொல்லுங்கோள் -பக்தாநாம் என்கிற படியே இவ்விடம்பு ஆசைப்பட்டாரதன்றோ என்று சொல்லுங்கோள் –காமினிக்கு ஸ்வரூபாதிகளில் காட்டில் வடிவிலே இ றே அபேக்ஷை –அருளீர் -பிரணயித்தவம் குடி போனால் கிருபையும் மறுத்தது –
என்றக்கால் -வாசா தர்ம நவாப்நுஹி -என்று உங்களுக்கு ஒரு வார்த்தை யன்றோ நேரே வேண்டுவது –
உம்மை-இப்படி உபகாரராய் இருக்கிற உங்களை –
தன்-திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–-உங்கள் வடிவில் யுண்டான புகரையும் போக்கி நிர்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களையும் ஒட்டுமோ -உங்களுக்கு இல்லாதவற்றை உண்டாக்குமது ஒழிய பண்டு உள்ளவற்றையும் தவிர்த்து உங்களைத் தண்டிக்குமோ -அல்ப சாத்ருஸ்யத்தை தவிர்த்து -பரமம் சாம்யம் உபைதி -என்கிறபடியே ஸர்வதா சாத்ருஸ்யத்தையும் தந்து ஆகாச மாத்ர ஸ்திதி அளவன்றிக்கே -பரம ஆகாசத்தையும் தாரானோ–உங்களுடைய யுக்தி மாத்திரத்திலே எனக்கும் உங்களுக்கும் பிரயோஜனம் கனத்து இருக்க ஆறி இருக்கக் கடவி கோளோ-
நீயே பய சங்கையை பிறப்பித்தாய் -திரு மேனி ஒளி அகற்றி -என்று -ஆன பின்பு –
நாங்கள் உன் வார்த்தையை விண்ணப்பம் செய்தால் -அவன் அங்கீ கரிக்குமோ என்று கேட்பி கோள் ஆகில் -பரமபதத்தில் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணினவன் அங்கீ கரிக்கும் –ஆனபின்பு அவனுக்கு எனக்காக ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேணும் -என்கிறாள்-
———-
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-7-4-
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
அழகால் அடிமை கொண்ட ஸூந்தர மூர்த்திக்கு -தூதாக சென்று -வார்த்தை சொன்னால் -உங்கள் ஸாரூப்யம் தேச வாசம் தவிர்க்குமோ
சாமீப்யம் சாம்யாபத்தி சாலோக்யம் சாயுஜ்யம் தவிரான் –
மேக வண்ணம் -வெளுப்பு ஆக்குவானோ என்றுமாம் –
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்–தர்ச நீயமான மேகங்கள் – -பிரசித்தமான வி லக்ஷண திவ்ய தேசம்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்–திரு மேனி அழகால் -கண்டவாற்றால் தனதே உலகு என்று இருப்பானே-சொல்வது சுலபம் இல்லை -என்றக்கால் –
நிரதிசய போக்யமான திருமேனியை பராங்குச நாயகிக்கு அருள -என்ற யுக்தி மாத்ரத்தால்
பரார்த்தமாக வார்த்தை சொல்லிய உங்களுக்கு –
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே-செய்ய மாட்டார் -கடகர்கள் அன்றோ நீர் -அடியிலே -நீல தோயத மத்யஸ்தா
ஒளியை அகற்றி -அந்தமில் பேரின்பம் -இந்த லோகத்தில் ஆகாசம் போக விடாமல் பண்ணுவாரோ -என்றுமாம் –
ஸ்வார்த்தமாக அபேக்ஷித்தார்க்கு கொடுப்பவன் -விஷ்ணு பதம் -தவிர்ப்பானோ -ஆகாசம் ஸ்ரீ வைகுண்டம் இரண்டுமே-விஷ்ணு பதம் ஆஸ்ரயமும் சாரூப்யம் தவிர்க்கை அசம்பாவிதம் –
சில மேகங்களை நோக்கி
என் வார்த்தையை அவனுக்கு சொன்னால்-உங்களைத் தண்டிக்குமோ –என்கிறாள் –
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ -1-4- அங்கு அப்படி அனுபவம் -இங்கு இப்படி அனுபவம் –
திருமேனி அடிகளுக்குத்-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி என்னும் இவைகளால் அன்றி-வடிவு அழகாலே எல்லாருக்கும் ஸ்வாமி-என்று-தோற்றும்படி இருக்கிறவருக்கு-
அன்றிக்கே
வடிவு அழகாலே உலகம் முழுவதையும்-தோற்பித்து அடிமை கொண்டவர்க்கு – என்றுமாம் –
த்ருஷ்ட்வா கிருஷ்ணம் ததாயாந்தம் பிரதபந்தம் இவ ஒஜசா-யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா பிரதிபேதரே-பாரதம் சபா பர்வம்
கண்ண பிரானைக் கண்டதும் பரவசப் பட்டு -வந்தனை முதலிய-கார்யங்களைச் செய்தார்கள் -என்கிறபடியே
பகைவர்களுக்கும் மனக் கவர்ச்சியாக அன்றோ வடிவு அழகு இருப்பது –
போயினித் தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீ எனக் கொடிய வீர சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் -கம்பர் -கும்ப கர்ண வதை படலம் -30-
ரூபஸ்ரியா பரமயா பரமேண தாம் நா
சித்ரைச் ச கைச்சித் உசிதைர் பவதச் சரித்ரை
சிஹ்நைர் அநிஹ்நவபரைர் அபரைச் ச கைச்சித்
நிச்சின்வதே த்வயி விபச்சித ஈஸித்ருத்வம்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –28-
எம்பெருமானே மஹா விவேகியாய் உள்ளவர்கள் தேவரீருடைய மிகச் சிறந்த திரு மேனி விளக்கத்தினாலும் –
சிறந்த ஸ்தான விசேஷத்தினாலும் -அற்புதமாகும் தகுந்த மிக்கு இருக்கிற சில சரிதைகளினாலும்
பரத்வத்தை ஒளிக்காமல் நிர்ணயிக்கக் கூடிய சில அடையாளங்களாலும்
தேவரீர் இடத்திலேயே பாரம்யத்தை நிர்ணயிக்கிறார்கள்
தீ வினையேன் விடு தூதாய் –
எல்லார்க்கும் பொதுவான உடம்பை இழந்து-உங்கள் காலிலே விழ வேண்டும்படியான பாபத்தை
தீ வினையேன் விடு தூதாய் –
எல்லார்க்கும் பொதுவான உடம்பை இழந்து
உங்கள் காலிலே விழ வேண்டும்படியான பாபத்தை செய்த நான்-அனுப்புகிற தூதாகச் சென்று –
திரு மூழிக் களம் என்னும் –
துயர் உற்றவர்களை பாது காப்பதற்காக-வந்து நிற்கிற இடம் என்ற-பிரசித்தமான தேசம் –
செழு நகர் –
பரம பதத்தைக் காட்டிலும் உண்டான ஏற்றம் –
வாய் அணி முகில்காள்-
வளப்பம் பொருந்திய நகரத்திலே செல்லுகிற-அழகிய முகில்காள்
அன்றிக்கே
செழு நகரிலே எழுந்து அருளி இருக்கின்ற அடிகள் -என்று-
செழுநகர் வாய் -என்பதனை-அடிகளுக்கு அடை மொழி ஆக்கலுமாம்-
திரு மேனி அவட்கு அருளீர் –
பிறர் பொருட்டே இருக்கிற உடம்பை-ஆசைப் பட்டார்க்கு கொடுக்க லாகாதோ -என்றது
பக்தாநாம் -என்கிறபடியே-மேகம் பேசுமோ -ஆண்டாள் ஆழ்வார் -இவற்றை தூதாக விட –
இவ் உடம்பு ஆசைப் பட்டார்க்கு உரியது அன்றோ என்று சொல்லுங்கோள் -என்றபடி
காதலிகட்கு ஸ்வரூபம் முதலான வற்றைக் காட்டிலும்-வடிவிலோ அன்றோ விருப்பம் –அருளீர் –
அருளீர் காதலே அன்றோ குடி போயிற்று-திரு அருளும் மறுத்ததோ –
என்றக்கால்-
வாசா தர்மம் அவாப்நுஹி சுதரம் -39-10 –
வாக்கால் தருமத்தை அடைவாய் -என்றபடி-உங்களுக்கு ஒரு வார்த்தை அன்றோ நேர வேண்டுவது –
உம்மை-
இப்படி உதவி செய்தவரான உங்களை-
தன் திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே-
உங்கள் வடிவில் புகரையும் போக்கிக்-களங்கம் இல்லாத ஆகாசத்தின் நின்றும்-உங்களை ஒட்டுவானோ
உங்களுக்கு இதற்கு முன்பு இல்லாதவற்றையும்-உண்டாக்கும் அது ஒழிய
பண்டு உள்ளவற்றதை தவிர்த்து உங்களைத் தண்டிக்குமோ -என்றது –சிறிது ஒப்புமையைத் தவிர்த்து
மேலான ஒப்புமையை அடைகிறான் -பரமம் சாம்யம் உபைதி –என்கிறபடியே
எல்லா வகையிலும் ஒத்து இருக்கும் தன்மையையும் தந்து-ஆகாசத்தில் மாத்ரம் இருத்தலோடு அன்றி பரம ஆகாசத்தையும் தாரானோ -என்றபடி
உங்களுடைய வார்த்தை மாத்ரத்திலே-எனக்கும் உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்க –ஆறி இருக்கக் கடவீர்களோ –
பூண்ட நாள் -சீர்க் கடலை உட்க் கொண்டு திருமேனி நன் நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஞான ஹ்ரதரத்தைப் பூரித்துத் தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து
ஒளித்துக் கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூறும் அடியவர் உறையில் இடாதவர் புயல் கை
அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும் –சூர்ணிகை -155-
குணக் கடலில் புகுந்து -ஆழ்வார்களும் திருமேனி கறுப்பாகத் தான் -மா முனிகள் -அயோனிஜர்கள் ஆனாலும் –
காரார் திருமேனி காணும் அளவும் போய் -தீர்த்தங்கரார் -மகா வீர சரித்திரம் -உபன்யாசம் வடக்கே ஸ்வாமி அருளி –
———————————————————-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply