ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-5-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
அவளுக்கு அருளீர் என்ன அமையுமோ -இன்னாருக்கு அருளீர் என்ன வேண்டாவோ என்னில்
யாவள் ஒருத்தியுடைய நெஞ்சை யுமக்குத் திரு நாடாகக் கொண்டு நீர் உறைகிறீர்-
அவளுக்கு அருளீர் என்று சொல்லி கோள் என்கிறாள்
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-7-5-
நாங்கள் உன் வார்த்தையை விண்ணப்பம் செய்தால் -அவன் அங்கீ கரிக்குமோ என்று கேட்பி கோள் ஆகில் -பரமபதத்தில் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணினவன் அங்கீ கரிக்கும் –ஆனபின்பு அவனுக்கு எனக்காக ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேணும் -என்கிறாள்-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
நிர்மலமான ஆகாசத்தில் கடிதாக ஓடிக் கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகிற அழகிய முகில்காள் –கண்ணால் காண ஒண்ணாத படி பாபத்தைப் பண்ணின என்னுடைய ஹிருதயத்திலே பரம பதத்தில் பண்ணும் வியாமோஹத்தை பண்ணி வர்த்திப்பதும் செய்து -துளி ஒழுகும் மதுவை யுடைத்தான திருக் குழலையும் விலக்ஷணமான ஒளியையும் யுடையனாய்க் கொண்டு திரு மூழிக் களத்திலே வர்த்தித்து அருளினவனுக்கு என்னுடைய தூத வாக்கியத்தை சொல்லுங்கோள்–
————-
ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-7-5-
அநந்தரம் -பரம வ்யோம சப்த வாஸ்யமான நிரதிசய விபூதியில் இருக்குமா போலே என் நெஞ்சிலே இருக்கிறவனுக்கு
என் தூதாய்ச் சென்று வார்த்தை சொல்லக் குறையில்லை என்று அம்மேகம் தன்னையே பார்த்துச் சொல்லுகிறாள் –
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்–நிர்மலமான ஆகாசத்தில் -நிலத்திலே நடப்பாரைப் போலே
என் காரியத்துக்கு த்வரிக்கிறிகோள் என்னலாம் படி கடிதாக ஓடி
அலாத சக்ரம் போலே அழகிய மின் விளங்கா நிற்க
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்- அத்தாலே வடிவிலே அழகு வளர்ந்து தோற்றும்படியான முகில்காள் —
திரு மூழிக் களத்தில் நித்ய வாசத்தாலே ஸுசீல்ய ஸுலப்யாதி விலக்ஷண குண உஜ்ஜ்வல்யத்தை யுடையராய்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்–விமலமான திவ்ய ஆகாசத்தை நிரதிசய விபூதியாக யுடையராய் வைத்து –
சம்ச்லேஷ முகத்தால் பரிதாப ஹேதுவான பாபத்தை யுடைய என் நெஞ்சிலே முகம் தோன்றாமல் இரா நின்று கொண்டு
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–துளித்து ஒழுகுகிற மதுவை யுடைத்தான
மயிர் முடி அழகை பிரகாசிப்பித்துக் கொண்டு இருக்கிற அவருக்கு –
கேசவனான இது கிலேச நாசகனாகைக்காக அன்றோ என்கிற தூத வாக்கியத்தை சொல்லுங்கோள்–
திருக் குழல் மதுவாருகிறது -அகவிதாக வைத்த பூவில் செவ்வியாலே –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-7-5-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
தெளி விசும்பு கடித்து ஓடித் –நிர்மலமாய் -நிராலம்பமான ஆகாசத்தில் பூமியிலே சஞ்சரிப்பாரைப் போலே கடு நடையிலே சஞ்சரித்து -இவற்றின் த்வரை எல்லாம் தன் காரியத்துக்கு உடல் என்று இருக்கிறாள் –
தீ வளைத்து மின் இலகும்-கொள்ளி வட்டம் போலே மின் விளங்கா நிற்கிற -தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்குக் கொண்டு திரிவாரைப் போலே யாய்த்து மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –
ஒளி முகில்காள்-பர பாகத்தால் அழகிதான வடிவை யுடைய முகில் காள்
திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்—திரு மூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகையாலே புகர் மிக்கு இருந்தவர்க்கு-அவன் வடிவுக்கு போலியாய் இ றே உங்கள் வடிவு இருப்பது –
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும் -பரமபதம் தேசமாய் இருக்க அத்தை காற்கடைக் கொண்டு என் நெஞ்சிலே நித்ய வாஸம் பண்ணுகிறவன் -என்று சிற்றாட் கொண்டான் பணிக்கும் –பரம பதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை என் நெஞ்சிலே பண்ணி வர்த்தியா நின்றான் -என்று எம்பெருமானார் / தீ வினையேன் -நெஞ்சிலே பிரகாசியா நிற்க காண ஒண்ணாத படி பாபத்தைப் பண்ணினேன்
துளிவார்கள் குழலார்க்கு–துளி ஒழுகும் மதுவை யுடைத்தான திருக் குழலை யுடையவர்க்கு -வல்லார் பூ முடித்தால் பூ தோற்றக் கடவது அன்றிக்கே மது ஒழுகக் காணும் அத்தனை இ றே
என் தூதுரைத்தல் செப்புமினே–-தலையில் பூ சருகா இருக்கிற என்னுடைய தூத வாக்கியத்தை அவர்க்குச் சொல்லுங்கோள் -அபி நிவிஷ்டராய் தாமே வரக் கடவராகச் சொல்லி வைத்து -தூது விட இருக்கிற படியை அறிவியுங்கோள் –
————–
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-7-5-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
பர வ்யோம சப்த வாஸ்யமான நிரதிசய விபூதியில் இருக்குமா போலே -அவன் என் உள்ளத்தில் -வந்து நித்ய வாசம் செய்து –
என் தூதாதாக சென்று சொல்லக் குறை இல்லை -மேகம் தன்னையே சொல்கிறாள்
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்-ஸ்ரீ வைகுந்தம் -நிர்மலமான ஆகாசம் – த்வரித்து-நிலத்தில் ஓடுவது போலே –
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்-
அலாக சக்ரம் போலே -அழகிய மின் தோன்றா நிற்கிற -ஸாரூப்யம் உபக்ரம தசையில்
பக்தி ஆரம்ப தசையில் பாகமாய் இருப்பது போலே –
நித்ய வாசத்தால் வி லக்ஷண குணங்கள் உடைய -தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்-
பரிதாப ஹேதுவான என் நெஞ்சில் முகம் தொற்றாமல் இருந்து கொண்டு
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே-துளி -வார்-கள் –தேன் துளி துளியாகக் கொட்டும்
மயிர் முடி அழகை பிரகாசிப்பித்து -கேசவ பெருமாள் –
கிலேச நாசன் ஆக வேண்டாமோ -வாசக சப்தத்துக்கு தக்க நடக்க வேண்டாமோ -தூத வாக்கியத்தை செப்புமின்
எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று-இருந்தனவாக
பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை-என் பக்கலிலே செய்தவன்-அங்கீ காரியாது ஒழியான் –
ஆன பின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம்-செய்ய வேண்டும் –என்கிறாள் –
தெளி விசும்பு கடித்து ஓடித் –
குற்றம் இல்லாததாய்-பற்றுக் கோடு இல்லாததான ஆகாசத்திலே-
பூமியிலே சஞ்சரிப்பது போன்று கடு நடையிலே சஞ்சரித்து-
இவற்றின் விரைவு எல்லாம் தன் கார்யத்துக்கு-காரணம் என்று இருக்கிறாள் –
தீ வளைத்து மின் இலகும் –
கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகின்ற-தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கினை கொண்டு-
திரிவாரைப் போலே ஆயிற்று –மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –
ஒளி முகில்காள் –
பரபாகத்தாலே அழகிதான வடிவை உடைய மேகங்காள் –
திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்-
திரு மூழிக் களத்தில் நித்ய வாசம் செய்கையாலே-புகர் மிக்கு இருக்கிறவனுக்கு –
அவன் வடிவிற்கு போலியாக அன்றோ உங்கள் வடிவு இருப்பது –
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
பரம பதத்தில் செய்யும் ஆசையை-என் நெஞ்சில் செய்து வசிக்கின்றான் –
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ –
தீ வினையேன் –
மனத்தில் பிரகாசித்துக் கொண்டு இருக்க-காண ஒண்ணாத படி பாவத்தை செய்தவன் நான் -என்பாள்
தன்னை தீ வினையேன் -என்கிறாள் –
இதற்கு
கொம்பது பருத்தியாக அங்காடி பாரித்து -பாரித்தால் போலே –தனக்கு பரம பதம் கலவிருக்கையாக இருக்க
அதனைக் காற் கடைக் கொண்டு-அண்மையில் இருப்பாரைப் போல் இருக்க-
என் நெஞ்சில் பிரகாசியா நின்றான் -என்று-சிற்றான் கொண்டான் பணிப்பர் –
இது தான் -பருத்து கொம்பிலே இருக்கச் செய்தெ -கடை விரித்து புடவைக்கு விலை பேசுமா போலே
தூத பிரகரணத்தில் வெறுப்பாக சொல்லுவது பொருத்தமோ -கண்ணால் பார்க்க ஆசை கொண்டே சொல்கிறார் என்றபடி –
இத் திரு வாய் மொழிக்குச் சொன்ன வாக்ய அர்த்தத்தோடு சேராது-
ஒவ்வொரு சமயங்களில் சொல்லிப் போம் வார்த்தை அன்றோ-
எம்பெருமானார் -நிர்வாஹம்
அங்கு உள்ள ஈடுபாடு என் நெஞ்சில் உண்டு-நெஞ்சில் வசிக்கிறான் -சிற்றாற்று கொண்டான் -சொன்னதில் கொஞ்சம் மாற்றி
இதுக்கு சேர-உடனே பெற பாரித்து தூது விடுகிறார் –
மது உடைய திருக் குழல் உடையார்க்கு
துளி வாருகின்ற மது -தேன் சொட்டும் திருத் துழாய் -புஷ்பமாக சொல்வார்கள் -அணிந்த திருக் குழல்
வல்லார் பூ முடித்தால் பூ தோற்ற காணாமல் மது வாசனை மட்டுமே தெரியுமே –அதனால் பூ சொல்ல வில்லை
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply