ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-7-3-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-3-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

தன்னைக் காண்கைக்கு நான் அர்ஹை அன்றியே அவ்வழகையும் காணப் பெறாதே இழந்து போம் இத்தனையோ என்று கேளீர் என்கிறாள் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-7-3-

சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள் –

தக்கிலமே  கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

 தடம் புனல் வாய் இரை தேரும்–பொய்கை களுடைய நீரிலே இரை தேடுகிற  / செக்கமலம் -செந்தாமரை / அடிகள் -ஸ்வாமி –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-7-3-

அநந்தரம் திவ்ய அவயவங்களோடே சமுதாயத்தோடு வாசியற அதிசயித போக்யமான வடிவை யுடையவர்க்கு
நாங்கள் அயோக்யரோ-கேளுங்கோள் என்று
சில கொக்கினங்களையும் குருகினங்களையும் கூட அபேக்ஷிக்கிறாள்

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

தடம் புனல் வாய் இரை தேரும் கொக்கினங்காள் குருகினங்காள் –பெரிய தடாகத்தில் ஆமிஷார்த்திகளாய்க் கொண்டு –
என் அபி நிவேச அனுகுணமாகத் தனித்தனியே திரள் திரளாய் இருக்கிற கொக்கினங்காள் குருகினங்காள்
குளிர் மூழிக் களத்து உறையும் செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்–ஸ்ரமஹரமான திரு மூழிக் களத்திலே
நித்ய வாசம் பண்ணுமவராய்
சிவந்த கமலத்தின் அலர் போலே இருக்கிற ஜிதந்தே என்னப் பண்ணும் திருக்கண்ணையும்
பிரார்த்திக்கும்படியே அணைக்கும் திருக்கையையும் ஆஸ்ரயிக்கும் திருவடிகளையையும்
மாஸூச என்று சாந்த்வவாதம் பண்ணும் சிவந்த கனி நிறைத்து திருப் பவளத்தையும்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–அந்தக் கமலத்துக்கு பரபாகமான இலைச் செறிவு போலே இருக்கிற
ஸ்யாமளமான திருமேனியையும் யுடையராய்
அவ்வடிவு அழகைக் காட்டி எனக்கு ஸ்வாமி யானவர்க்கு
தக்கிலமே கேளீர்கள் -இவ்வழகை அனுபவிக்கைக்கு யோக்யர் அல்லோமோ என்று கேளுங்கோள் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-7-3-

சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள் –

தக்கிலமே  கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

தக்கிலமே கேளீர்கள்-என்கிறாள் -தக்கிலமே கேளீர்கள்-ஓர் அறுதி பெறக் கேட்டுப் போருங்கோள் -அவர் வேணும் என்னில் -நாமும் நம் பிராணனை நோக்கவும் -அவர் வேண்டா -என்றாகில் -நாமும் ஒன்றிலே துணியும்படியும் நிச்சிதமாகக் கேட்டுப் போருங்கோள்
தடம் புனல் வாய் இரை தேரும்-பொய்கையின் நீரிலே இரை தேருகிற–உபவாச க்ருசையான என்னைப் போல் அன்றியே இரை மிடற்றுக்கு கீழே இழியும் படி இ றே உங்கள் புஷ்கல்யம்
கொக்கினங்காள் குருகினங்காள்--யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே கண்ணால் கண்ட வற்றை அடைய ஏவுகிறாள் -சிலவற்றைப் போக விட்டோம் -அத்தாலே நம் கார்யம் தலை க் கட்டும் -என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –
குளிர் மூழிக் களத்து உறையும்–விரஹ தாப தப்த்தையாய் இருக்கிற எனக்கு அந்த ஸ்ரமஹரமான தேசத்தில் பிராப்தி அரிதாவதே –
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்-–இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலைபோலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக்கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்ட ப் பாருங்கோள் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-7-3-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

அழகன் -அவயவ சமுதாய அதிசயித போக்யதை-வடிவு கொண்டவனுக்கு நாங்கள் அயோக்கியரோ –
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்-பெரிய தடாகத்தில் -மீனைத் தேடும் –
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்-அபி நிவேசத்துக்கு அனுரூபமாக தனித்த தனியே திரள் திரளாக கொக்குகள் குருகுகள்-
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்-தாமரை மலர் அலர் போலே -ஜிதேந்த்தே என்னப் பண்ணும் திரு கண்கள்
ஹஸ்த பத்மம் அபேஷ்ய -சரண த்வந்தம் ஆஸ்ரயிக்கும் -மா ஸூ ச சாந்தனவாம் பண்ணும் திருப்பி பவளம்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே-இளம் சிவப்பாய் திரு மேனி ஸ்யாமளம் -அழகைக் காட்டி ஸ்வாமி யானவன்

சில கொக்கு இனங்களையும்-குருகு இனங்களையும் நோக்கி
-திரு மேனி அடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள் –
தன் அழகு காண்கைக்கு -நாங்கள் தகுதியேம் அல்லோமோ –என்று கேளீர் –என்கிறாள் –

தக்கிலமே கேளீர்கள் –
நாம் ஒன்றிலே துணியும் படி அறுதி இட்டு கேட்டு போருங்கோள் -என்றது
அவன் -இன்னம் இவள் வேண்டும் -என்று இருந்தானாகில்-உயிரை வருந்தி யாகிலும் நோக்கிக் கொண்டு கிடக்கவும் –
வேண்டா -என்று இருந்தானாகில் நாமும் ஒன்றிலே துணியும்படியும்-அறுதியாக கேட்டு விடுங்கோள் -என்றபடி –

தடம் புனல் வாய் இரை தேரும்-
மிகுதியாக தண்ணீர் நிறைந்து இருக்கின்ற-பொய்கையிலே நீரில் இரை தேடுகிற அளவாய் இருந்தது உங்களுக்கு -என்றது
தத மலின சம்வீதாம் ராஷ ஸீபி சமாவ்ருதாம்-உபவாச க்ருசாம் தீநாம் நிஸ்வசந்தீம் புன புன -சுந்தர -15-19-
உபவாசத்தாலே இளைத்தவள் -என்கிறபடியே
உபவாசத்தால் இளைத்தவலாய் இருக்கிற என்னைப் போல் அன்றியே-
இரை மிடற்றுக்கு கீழ் இழியும்படி அன்றோ நீங்கள் கூடி குறைவு அற்று இருக்கும் தன்மை –என்கிறாள் -என்றபடி –

கொக்கினங்காள் குருகினங்காள் –
யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹுநி அயுதானி ச-திஷூ சர்வாசூ மார்க்கந்தே ஸா இயம் ஆஸாதிதா மயா-சுந்தர -30-3-
எந்தப் பிராட்டியை ஆயிரக் கணக்கான குரங்குகள் தேடுகின்றனவோ -என்கிறபடியே –
கண்ணால் கண்டவற்றை அடைய ஏவுகிறாள் –
சிலவற்றைப் போக விட்டோம்-அவை நம் கார்யம் தலைக் கட்டும்-என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –
கொக்கு -கொய்யடி நாரை –

குளிர் மூழிக் களத்து உறையும் –
விரகத்தால் தபிக்கப் பட்டு இருக்கின்ற எனக்கு-சிரமத்தை போக்க கூடியதான அந்த தேசத்தை அடைதல்-அரிது ஆவதே –

செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய் –
அந்த குளிர்த்திக்கு அடியான உள்ளில்-வாசத்தடம் -8-5-1- இருக்கிறபடி –
நயந புரஸ்தே புண்டரீக -பொற்றாமரைத் தடாகம் அவனே -தயரதன் பெற்ற மரகத மணித்தடாகம் –
சிவந்து அலர்ந்த தாமரை போல் இருக்கிற-கண் முதலிய திவ்ய அவயவங்களை உடையவன் –
முதல் உறவு செய்யும் கண் –அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை –
ஊற்று இன்பத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் –திருவடிகளில் விழுந்தாரை நல் வார்த்தை சொல்லித் தரிப்பிக்கும் முறுவல் –

அக்கமலத்து இலைபோலும் திரு மேனி –
அவயவங்களுக்கு பரபாகமான-செந்தாமரை இலை போலே ஆயிற்று-திரு மேனி இருப்பது –
வெண் தாமரை என்னில் வேறு பட்ட இனமாகும் என்று கருதி-அக்கமலம் -என்கிறது –
இதனால் அனுபவிப்பவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவைக் கூறிய படி –

அடிகளுக்கு –
அந்த அவயவங்களின் அழகையும் வடிவு அழகையும் காட்டி-அடிமை கொண்டவர்க்கு –
இவ் வடிவு அழகுக்கு தோற்று பசலையைத் தரித்து இருப்பார்-அங்குத்தைக்கு தகாதவரோ –
என்று கேட்டுப் போருங்கோள்
அவன் புருடோத்தமன் ஆனால்-இவள் பெண்களுக்குள் உயர்ந்தவள் ஆகும் போது-இப்படியே இருக்க வேண்டும் அன்றோ-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading