ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-7-1-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-1-

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

தன்னைப் பிரிவில் தரிக்க மாட்டாததொரு படி தன் அழகாலும் தன் செயலாலும் என்னைத் தோற்பித்து அடிமை யாக்கி
என்னோடே கலந்து அருளிப் போய்
திரு மூழிக் காலத்திலே இருந்து அருளின எம்பெருமானுக்கு என் திறம் சொல்ல வேணும் –
உங்களுக்கு அடிமையாய் நான் இருக்கிறேன் -என்று நாரைகளை இரக்கிறாள்-

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-7-1-

சில நாரைகளைக் குறித்து எம்பெருமான் தன்னுடைய அழகாலும் குணங்களாலும் தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி -அவனுக்கு என் தசையை அறிவித்து வந்து உங்களுடைய திருவடிகளை என் தலை மேலே வைக்க வேணும் என்கிறாள் –

எம் கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எம் கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய்-எங்கள் உத்யானத்தில் உள்ளிற்கழியிலே இரை தேடி இங்கே இனிதாக வர்த்திக்கிற சிவந்த காலையுடைய பவ்யமான நாராய் -/ எம் குடக் கூத்தர்க்கு-ஆத்மநி பஹு வசனம் –குடகு கூத்தாடின அழகைக் காட்டி என்னை அகப்படுத்திக் கொண்டவனுக்கு / நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே–சபரிகரமாக உங்கள் திருவடிகளை என் தலை மேலே வைக்க வேணும் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-7-1-

முதல் பாட்டில் -அதிசயிதமான போக்யதா பிரகாரத்தை யுடையனாயுள்ள ஸ்ரீ கிருஷ்ணனுக்கு என் தூதாகப் போன
உபகாரத்துக்காக என் தலையிலே உங்கள் கால்களை வைக்க வேணும் என்று
சில நாரைகளை ஆதரித்து அபேக்ஷிக்கிறாள்

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எம் கானல் அகம் கழிவாய் -உங்களுக்கு விநியோக அர்ஹமாம் படி எங்கள் மமதையில் வர்த்திக்கிற கடல் கரையிலே
சோலையில் அகவாயில் கழி இடத்திலே
இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்–உங்கள் பந்தயதிசயம் தோற்றும்படி இங்குத்தை வஸ்துவை போக்யமாக விரும்பி –
சந்நிதியில் ப்ரணய ப்ரீதி யோடே வர்த்திக்கக் கடவையாய்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்–என் தலைக்கு அலங்காரம் என்னலாம் படி சிவந்து இருக்கிற
காலை யுடைத்தாய் நியமித்துக் கார்யம் கொள்ளலாம் படி பவ்யத்தையை யுடைய நாராய் –
திரு மூழிக் காலத்திலே ஆஸ்ரித ஸூலபனாய்க் கொண்டு நித்யவாஸம் பண்ணுமவராய்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்–தேன் விஞ்சி தர்ச நீயமான திருத் துழாயாலே அலங்க்ருதமான
திரு முடியை யுடையராய்
குடக் கூத்தாடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தாலே எங்களுக்கு நிரதிசய போக்ய பூதரானவர்க்கு
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—உன் பந்துக்களான தார புத்ராதிகளோடே கூட எனக்காக
வழி நடந்த யுங்கள் கால்களை அதுக்குப் பாத்ர பூதமாகையாலே
உத்தம அங்கமான என் தலையிலே சேர்க்க வேணும்
உபகாரகன் ஆச்சார்யனே யாகிலும் உபகார ஸ்ம்ருதி தத் சம்பந்தி பரம்பரை அளவும் செல்லும் இறே
நாராய் -என்கிற ஒருமை ஜாதி ஏக வசனம் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-7-1-

சில நாரைகளைக் குறித்து எம்பெருமான் தன்னுடைய அழகாலும் குணங்களாலும் தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி -அவனுக்கு என் தசையை அறிவித்து வந்து உங்களுடைய திருவடிகளை என் தலை மேலே வைக்க வேணும் என்கிறாள் –

எம் கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எம் கானல் -பகவத் விஷயத்தில் உபகாரகரோடு ஐக ரஸ்யம் ப்ராப்தமாய் இருக்க –எம் -என்கிறது -உபகார ஸ்ம்ருதியில் ஒன்றைத் தன்னதாக்கி கொடுத்து அல்லது தரிக்க மாட்டாத படியால் சொல்லுகிறது -பிறருக்கு உபகரிக்கைக்கு உறுப்பாக வரும் மமகாரம் உத்தேச்யமாய் இருக்கும் இ றே -பகவத் விஷயத்துக்கு ஆக்கின வன்றே தன்னது அடங்க கடகர்க்கு சேஷமாய் இருக்க உபகார ஸ்ம்ருதி ஆறி இருக்க ஒட்டாமையாலே வருமது இ றே -ஆத்ம சமர்ப்பணத்திற்கும் அடி இது வி றே –கானல் என்று கடற்கரை சோலை யாதல் -நெய்தல் நிலமாதல் –
அகம் கழிவாய் -உள்ளான கழி இடத்திலே -அந்தர் க்ருஹ ப்ரவேசத்துக்கு அனுமதி வேண்டாத படி இ றே இவை அந்தரங்கமாய் இருக்கிற படி -கதிதா நி ரஹஸ்யா நி -என்கிறபடியே வர்த்தியா நின்றன –
இரை தேர்ந்து -இரை தேடி –க்ருஹே புக்தம சங்கிதம்-என்கிறபடியே -பண்டு தனக்கு உபகரித்த படியைச் சொல்லுகிறாள் —இப்போது உபகரிக்கைக்காக
இங்கு -இத்தலையை அழித்து தூது விட வேண்டும் படி அகல இருந்தவனைப் போல் அன்றியே ஸந்நிஹிதராகப் பெற்றேன் என்கிறாள் –
இனிது அமரும்-இனிதாக நம்மோடே ஸஹவாசம் பண்ணப் பெறுகை -விலக்ஷண போகங்களை புஜித்து வர்த்திக்கும் என்றுமாம் –
செங்கால மட நாராய் –சிவந்த காலை யுடைய -என் மடியிலே இருக்கும் கால் போலே இருந்ததீ -நான் தலையிலே வைத்துக் கொள்ளப் புகுகிற காலும் –மட நாராய் -பவ்யமான நாராய் –
திரு மூழிக் களத்து உறையும்-தூது போவார்க்கு அடுத்து அணித்தாக நிற்கையாலே பரம பதத்தில் காட்டில் ஏற்றம் இருக்கிற படி –
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு –ஒப்பனையையும் மநோ ஹாரி சேஷ்டிதங்களையும் எனக்காக்கி வைத்தவர் —எம் என்கிறது ஒப்பனையிலும் சேஷ்டிதத்திலும் இரண்டிலும் ஆகிறது –எம் என்று ஆத்ம நி பஹு வசனம் –
என் தூதாய்-ஒப்பனையிலும் செயலிலும் தோற்று வெறும் தாரையாய் இருக்கிற என்னுடைய தூத க்ருத்யத்திலே அதிகரித்து
நும் கால்கள் என் தலை மேல் -உபகாரகரான உங்களுடைய காலை உபக்ருதையாய் உஜ்ஜீவிக்க இருக்கிற என் தலையிலே -இவளுடைய தலையிலே வைக்க கண்டதாய்த்து இவற்றின் கால் -இவற்றினுடைய காலை வைக்க கண்டதாய்த்து இவள் தலை -இரண்டும் பரார்த்தமாகக் கண்டதாய்த்து
கெழுமீரோ -அவனுக்கு சேஷமாக்கின போதே கடகர்க்கு சேஷமாகையாலே என் விதி கொண்டு வைக்க வேண்டா வி றே -என் தலை மேலே சேரி கோளே
நுமரோடே—ச புத்ரஸ் பவ்த்ரஸ் ச கண-என்கிறபடியே சபரிகரமாக –ஆச்சார்ய வாதாச்சார்ய புத்தரே வ்ருத்தி -என்னக் கடவது இ றே –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-7-1-

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

வாசா தர்மம் -ஆச்சார்யர் ஸ்தானம் பக்ஷிகள் -மார்த்வம் -ஆழ்வாரை விட்டுப் பிரியாமல் -பாசுரம் தோறும் –
கயா குண்டம் -பிருந்தாவனம் -அருகில் -பால்குனி நதி தீர்த்தம் ஆடி -பிள்ளைகளை கூட்டிப் போக -இங்கேயே பண்ண
அங்குள்ளவற்றை இங்கே கூட்டி வர -குழந்தைகளை பிரிய மாட்டாமல் –
கோப கோபி ஜனங்கள் -ஆஸ்தானம் பண்ணிய கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பிரிந்து விடுவானோ பயத்தால் தூது விடுகிறார் –
செங்கால மட நாராய் திருக் கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார்
கமன சாதனம் பக்ஷம் இறகுகள் தானே -தலையில் தாங்க திருவடிகளை கொண்டாடி –
அதிசயிதமான போக்யதா பிரகர்ஷ பிரகாரம் உடைய கிருஷ்ணனுக்கு நாரைகளை அபேக்ஷிக்கிறாள் -உபகாரத்துக்காக
தலை மேல் உங்கள் திருவடி வைக்க வேண்டும்
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்-உங்களுக்கு விநியோக அர்ஹம் -பந்த அதிசயம் -இங்குத்தை இறை தேடி –
எங்கள் மமதையில் வர்த்திக்கும்-கடல் கரையில் சோலையில் -வாசல் கழியில்-சந்நிதியில் பிரணவ ப்ரீதி உடன்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்-பவ்யத்தை -மடப்பம் -நியமித்து கார்யம் கொள்ளலாம் படி -ஆஸ்ரிதற்கு நித்ய வாசம் -சுலபம்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்-தேன் விஞ்சி தர்ச நீதியமான -திரு முடி -மநோ ஹாரி சேஷ்டிதங்கள்
அழகும் சேஷ்டிதங்களும் -என்னுடைய தூத க்ருத்யத்தில்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-ஆச்சார்யர் பத்னி புத்திரர்கள் திருவடிகள் தலையில் தரிக்க -ஆறுகால சிறு வண்டே-
குருவைப் போலே நுமர்கள் -தாரை பிள்ளைகள் -இவர்களையும் நடத்த வேண்டும் –
எனக்காக தூது சென்ற -உத்தம அங்கத்தில் சேர்த்து கிருபை பண்ணி -பாத்ர பூதன்-என்று
உபகார ஸ்ம்ருதி தத் சம்பந்தி அளவும் செல்ல வேண்டுமே
நாராய் -ஒருமை ஜாதி ஏக வசனம்

சில நாரைகளைக் குறித்து
அவன் தன் அழகாலும் குணங்களாலும்-தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து-உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்-என்கிறாள் —

எம் கானல் –
பகவத் விஷயத்தில் உபகாரம் செய்கின்றவர்களோடு-வேறுபாடு அறக் கலந்து
ஒக்க இன்பத்தினை உடையாராய்ச் செல்லுதல் தக்கதாக இருக்க
எம் கானல் -என்று-செருக்குத் தோன்ற கூறுதல் என் -என்ன –
ஒன்றனைத் தம்மது ஆக்கிக் கொடுத்தல்லது தரிக்க மாட்டாத-உபகாரத்தின் நினைவாலே –
எம் -என்று சொல்லுகிறது –

இந் நிலையில் வந்து முகம் காட்டித் தரிப்பித்த உபகாரகம் –
பிறருக்கு கொடுப்பதாக வரும் எனது என்னும் செருக்கு உத்தேச்யமாய் இருக்கும் அன்றோ –
தன்னை பகவானுக்கு உறுப்பு ஆக்கினவன்றே-தன்னது அடங்கலும் அங்குத்தைக்கு உரிய பொருளாய் இருக்க-
உபகாரத்தின் நினைவு அன்றோ இப்படி சொல்ல வைத்தது
ஆத்துமாவை அவன் திருவடியில் இடுவதற்கும் அடி இதுவே வன்றோ – எனது ஆவி தந்து ஒழிந்தேன் -2-3-4-

கானல் –
கடல் கரை சோலை –
அன்றிக்கே
நெய்தல் நிலம்-என்னுதல் –

அகம் கழிவாய் –
உள்ளான கழி யிடத்து-
ஸ்தலஸ்த்தார்கள் போல அன்றோ இவைகள் அந்தரங்கர்கள் –
உன்னிடத்தில் புகுவதற்கு அனுமதி வேண்டாத படி அன்றோ-இவை அந்தரங்கமாய் இருக்கிறபடி –
இரகசியமான சமாசாரங்கள் சொல்லப் பட்டன –
கதிதானி ரஹச்யானி க்ருஹெ புக்தம் அசங்கிதம்-தர்சிதானி களத்ராணி சௌஹார்த்தம் கிமத பரம்-பாரதம் -உத்தியோக பர்வம் –
என்கிறபடியே -வசிக்கின்றன -என்றபடி –

இரை தேர்ந்து –
இரை தேடி –-க்ருஹெ புக்தம் அசங்கிதம்-கூசுதல் இல்லாமல்-வீட்டில் உணவு உண்ணப் பட்டது -என்கிறபடியே-
பண்டு தனக்கு உதவி செய்த படியைச் சொல்லுகிறாள் இப்போது உதவி செய்வதற்காக –

இங்கு-
இத் தலையை அழித்து தூது விட வேண்டும்படி-அகல இருந்த அவனைப் போலே அன்றியே
அண்மையிலே இருப்பவராகப் பெற்றேன் -என்கிறாள் –

இனிது அமரும் –
இனிதாக தம்மோடு சேர்ந்து வசிக்கின்ற –
அன்றிக்கே –
தர்சிதானி களத்ராணி-சேவலோடு சிறந்த இன்பங்களை அனுபவித்து வசிக்கிற -என்னுதல் –

செங்கால –
சிவந்த கால்களை உடைய -என்றது
என் மடியிலே இருக்கும் -நாயகன் கால் போலே இருந்ததே-நான் தலையில் வைத்துக் கொள்ளப் புகுகிற காலும் -என்றபடி –

மட நாராய் –
அடக்கத்தோடு இருக்கிற நாரையே –

திரு மூழிக் களத்து உறையும் –
தூது செல்வார்க்கு அடுத்து அணித்ததாக-திரு மூழிக் களத்திலே நிற்கையாலே
பரம பதத்தில் காட்டிலும் ஏற்றம் இருக்கிறபடி –

கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு-
ஒப்பனையும்
மனத்தை கவர்கின்ற செயல்களும்
ஆகிற இந்த இரண்டினையும்-எனக்கு ஆக்கி வைத்தவர்க்கு
எம் -என்பதனை -கொங்கார் பூம் துழாய் முடி-என்பதனோடும் கூட்டுக
எம் -எனபது தனித்தன்மை பன்மை –

என் தூதாய் –-
அவ் ஒப்பனையிலும் செயலிலும் தோற்று-அவனைப் பெற்று உய்தல் –
இல்லையாகில் முடிதலாய் இருக்கிற எனக்கு-தூது செல்லுகிற தொழிலை மேற்கொண்டு –

நும் கால்கள் என் தலை மேல் –
உதவி செய்கின்றவர்களான உங்கள் கால்களை
நீங்கள் உதவி செய்ய -அதனால் உய்வான் இருக்கிற -என் தலை மேலே
மயிர் கழுவிப் பூ சூட இருப்பாரைப் போலே-அவற்றின் காலாகில் -இவள் தலையிலே
இருக்கப் படைக்கப் பட்டன –
இவள் தலையாகில் அவற்றின் கால்கள் வைக்கப் படைக்கப் பட்டு இருந்தது-இரண்டும் பிறர் பொருட்டு இருந்தபடி –

கெழு மீரோ –
ஏதத் ஆக்யானம் ஆயுஷ்யம் படன் ராமாயணம் நர-சபுத்ர பௌத்ர சகன ப்ரேத்ய ச்வர்க்கே மஹீயதே -பால – 1-99-
ஒரு விதி கொண்டு செய்ய வேண்டா ஆயிற்று இங்கு
அவனுக்கு ஆக்கினவாறே உங்களதாக இருக்கும் அன்றோ-கொடு வந்து சேர்த்தீரோ –
கண்டு அருளி உங்களுக்கு அன்றோ இந்த அன்னம் புஜிக்க அருளுவான் –

நுமரோடே –
புத்ரர்களோடும் பௌத்ரர்களோடும் எனை உறவினர்களோடும் -என்னுமா போலே-உங்கள் கூட்டத்தோடு
ஆச்சார்யவத் ஆச்சார்ய தாரே வ்ருத்தி ததா சமாதிஷ்டே
அத்யாபயதி வ்ருத்ததரே ச சப்ரமசாரிணி உச்சிஷ்டாசக
வர்ஜம் ஆச்சார்யவத் ஆச்சார்யபுத்ரே வ்ருத்தி -ஆபஸ்தம்ப தர்மம் –
ஆசார்யனைப் போன்று அவனுடைய மகன் இடமும் நடந்து கொள்க -என்னக் கடவது அன்றோ-

முயல்கிறேன் உம் தம் மொய் கழற்கு அன்பையே என்று முயலத் தானே முடியும்
ஆச்சார்யர் செய்த உபகாரத்துக்கு சத்ருசமான -பிரதியுபகாரத்துக்கு

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading