ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-6-11-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

ஆஸ்ரிதற்காக ஏதேனும் செயல் செய்யினும் இங்கனே யதிமாத்ரமாகச் செய்து அருளும் ஸ்வ பாவனாய்
இருந்தவனைச் சொன்ன இப்பத்து பகவத் அனுபவ விரோதியான
நம்முடைய சம்சாரத்தை ச காரணமாகப் போக்கும் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-6-11-

நிகமத்தில் ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வல்லார்க்கு ஜென்மம் முடித்து அதுக்கு அடியான சம்சாரமும் நசிக்கும் -என்கிறார் –

கடியனாய்க்  கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்-கண் பாராதே கம்சனைக் கொன்ற மஹா உபகாரகனை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் -சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல்லான நல்ல படியை யுடைய ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி கற்றதே ஹேதுவாக –
சன்மம் முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–துக்க ரூபமான சம்சார காந்தாரம் நசிக்கும் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-6-11-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக ஜென்ம விநாசத்தை அருளிச் செய்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்-அவன் நினைவுக்கும் தான் முற்பாடானாய்க் கொண்டு
கம்சனைக் கொன்ற மஹா உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்–கோடியை யுடைத்தான மதிளை யுடைய திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்-பகவத் குணங்களை வடிவுபட ப்ரதிபாதிக்கையிலே சம்ருத்தமான
ஆயிரத்திலும் இப்பத்தினாலே ஜென்ம பரம்பரையும்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–அவசானத்தைப் பெற்று சம்சாரம் ஆகிற ம்ருத் த்ருஷ்ணிகையும் நசிக்கும் கிடிகோள்
இது கலி விருத்தம் –

——————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-6-11-

நிகமத்தில் ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வல்லார்க்கு ஜென்மம் முடித்து அதுக்கு அடியான சம்சாரமும் நசிக்கும் -என்கிறார் –

கடியனாய்க்  கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற-கம்சன் தான் நினைத்த நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணினான் / கடியனாய்க் -தன் பக்கலில் இன்றிக்கே வந்தேறி -என்கை –
பிரான் தன்னைக்-முன்பு உபகாரகன் ஆனவன் கிடீர் நம்மை அழித்தான் -உகந்தாரை அழிக்கை இ றே பாதகம் ஆவது -விரோதிகளை அழிக்குமது உபகாரம் இ றே
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-கம்ச விஜயத்துக்கு கொடி கட்டிற்று திரு நகரி யாய்த்து -ஸ்வாமி விஜயத்துக்கு உரிய அடியார் இருந்த இடத்தே இ றே கொடி கட்டுவது –
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் -சமுதாய சோபையை யுடைத்தாய் இருக்கை -கட்டடங்க அழகியதாய் இருக்கை -விஜயம் யுண்டானவாறே பிரசஸ்தி மாலைகளும் செல்லா நிற்கும் இ றே
சன்மம்-முடிவு எய்தி –ஜென்ம பரம்பரைகளுக்கு வசனத்தை லபித்து / நாசம் கண்டீர்கள் எம் கானலே–ஜன்மத்துக்கு அடியான சம்சாரமும் நசிக்கும் /கானல் -ம்ருகத்ருஷ்ணிகை-இன்னம் பிறக்க இராதே பகவத் குண அனுபவம் சாத்மிக்கும் தேசத்திலே புகுவர்கள் –

————————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

ஜென்ம விநாச பலன்
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்-அவன் நினைவுக்கும் தான் முற்பாடானாய்க் கொண்டு
கம்சனைக் கொன்ற -ஜராசந்தன் பெண்கள் கம்சன் மனைவிகள் நிஜமாகவே கண்ணை நீர் மல்கும் படி அன்றோ
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-கொடியை உடைத்தான் மதிள்-கம்சனைக் கொன்றதும் இங்கே கொடி கட்டி –
தொண்டர் தலைவர் ஜெயத்தை கொண்டாடுவார்கள்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்-பகவத் குணங்களை வடிவு பட பிரதிபாதிக்கப் பட்ட -கட்டு அடங்க –
ஞானம் வர மட்டும் -இல்லாமல் -அனுபவத்துக்காக அன்றோ -இங்கே –
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே-கானல் நீர் போன்ற சம்சாரம் நசிக்கும்-ஜன்ம பரம்பரை முடிவு அடைந்து
மிருக த்ருஷ்டிகையும் நாசம் அடையும் –
அத்வைத பாஷாணம் -கானல் நீர் போலே மாயையா -இல்லை -சம்சாரம் நித்யம் -உண்மையான இது இவர்களுக்கு
தொலைந்து போகும் என்று பலம் சொல்லி அருளுகிறார் –

நிகமத்தில்-
இத் திருவாய் மொழியைக் கற்பார்க்கு-பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் –
கம்சன் தான் நினைத்த நினைவினை-அவன் தன்னோடு போம்படி செய்தான்-
தன் பக்கல் இல்லாதது-வந்தேறி-ஆதலால் கடியன் ஆய் -என்கிறார்-
கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ –
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –

பிரான் தன்னை –
முன்பு உபகாரகன் ஆனவன் கண்டீர் நம்மை அழித்தான் –

உகந்தாரை அழித்தல் அன்றோ தீமை யாவது
விரோதிகளை அழிக்குமது உபகாரகம் அன்றோ –

கொடி மதிள் தென் குருகூர்ச் –
கம்சனை வென்ற வெற்றிக்கு கொடி கட்டிற்று-திரு நகரியிலே ஆயிற்று-
ஸ்வாமியின் வெற்றிக்கு உரிய அடியார் இருந்த இடத்தே-அன்றோ கொடி கட்டுவது –

சடகோபன் சொல்-
வடிவு அமை ஆயிரத்து –முழுவதும் அழகினை உடைத்தாய் இருக்கை-என்றது-
கட்டடங்க அழகியதாய் இருக்கையைத் தெரிவித்த படி-
வெற்றி உண்டாகையாலே வெற்றி மாலைகளும் செல்லா நிற்கும் அன்றோ –

இப் பத்தினால் சன்மம் முடிவு எய்தி-
பிறவிகளின் தொடர்ச்சிக்கு முடிவினைப் பெற்று –ஜாதி ஏக வசனம் -ஜென்மம் —

நாசம் கண்டீர்கள் எம் கானலே –
பிறவிகட்கு அடியான சம்சாரமும் நசிக்கும்-எம் -ஸ்வ சம்பந்திகளை சேர்த்து –
கானல் -பேய்த்தேர்
இங்கும் இங்கே பிறக்க இருக்காமல்-பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்-
அனுசந்தானம் பொறுக்கக் கூடிய தேசத்திலே-புகுவார்கள் -என்றபடி –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading