ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-6-10-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-10-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

நீர் தான் அவனை புஜியாதே புஜிக்கக் கொடுத்துக் கொண்டு இருப்பான் என் என்னில்-
உன்னைக் காணில் வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் என்று நான் மநோ ரதித்திக் கொண்டு இருக்க
எனக்குத் தன்னை புஜிக்க ஒண்ணாதபடி என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை மாள புஜித்து அருளினான் –
தன்னாலே விளையக் கடவ வியசனத்தின் அளவு பாராதே
சலில கர்ப்பமான மேகம் தன்னளவில் வர்ஷித்தால் போலே என்னுடைய சிறுமை பாராதே
என்னளவில் இங்கனே அதிமாத்ரமாகச் செய்து அருள வேணுமோ என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-6-10-

தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார் –

வாரிக்  கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

உன்னைக் காணில் அசேஷ சேஷ விருத்தியையும் பண்ணி புஜிக்க வேணும் என்று அபி நிவேசித்த என்னை ஒழிய எனக்கு முன்னே கோலி -தன்னுடைய குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி நிச்சேஷமாக்கிப் பருகினான் -/ கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே-பரம உதாரனான காட் கரை அப்பன் ப்ரணயத்தில் மிகவும் முற்பாடானாய் இருக்கும் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-6-10-

அநந்தரம் -அபிநிவேசத்திலும் வந்தால் என்னிலும் முற்பாடானாய்க் கொண்டு சீக்ர காரியாய் இரா நின்றான் -என்கிறார்

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று–உன்னைக் காணப் பெறில்
ஸ்வரூப ரூப குண விபூதியில் ஒன்றும் சேஷியாதபடி கபளீ கரித்து புஜிப்பன் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்–ஆதரித்த என் அளவன்றியே எனக்கு முன்னே -நான் உள்ளவன்றே தொடங்கி –
அபரிச்சின்ன ஸ்வ பாவனான தான் அத்யல்பனான என்னை
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்–பாரித்து பசித்தவன் சோறு கண்டால் போலே இருக்கிற என் அளவு அன்றியே
தாஹித்தவன் தண்ணீர் குடித்தால் போலே பேறு விடாய்ப் பட்டு தான் பூர்ணமாம் படி பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–கடலைப்பருக்கும் காளமேகம் போலே திருக் காட்கரையிலே நிற்கிற உபகாரகன்
அனுபவத்தில் ஒருவருக்கும் முற்பாடு கொடாதபடி சீக்ர காரியாய் இருந்தான் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-6-10-

தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார் –

வாரிக்  கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

வாரிக் கொண்டு -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று நித்ய ஸூ ரிகளுக்கும் அவகாசம் கொடேன் என்று ஆய்த்து-இவர் பாரித்தது -வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றார் இ றே –
உன்னை –சர்வ சேஷியாய் விபுவான உன்னை /விழுங்குவன் -சேஷ பூதனுக்கு கைங்கர்யம் இ றே தாரகம் -/காணில் –உன்னைக் காணப் பெறில் /
என்று-ஆர்வுற்ற -இப்படி அபி நிவேசித்த ஆர்வத்தை யுற்ற / என்னை ஒழிய–என்னளவு பாராதே / என்னில் முன்னம்-பாரித்துத்--நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இ றே இவருடைய பாரிப்பு -/ சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இ றே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் -வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இ றே இவர் பாரித்தது
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–பரம உதாரனாய் சந்நிஹிதன் ஆனவன் –கடியனே-போக தசையில் விரைந்து இருக்கும் -எதிர்த்தலைக்கு ஒன்றும் விட்டுக் கொடான் -என்கை –

————————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-6-10-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

ஆச்சார்ய சம்பந்தம் ஹேது எனக்கு வேணுமே -அவனுக்கு அது தேவை இல்லை -அநாதி காலமாக அன்றோ -சொத்தை அடைய ஸ்வாமி –
அபி நிவேசத்தில் என்னிலும் முற்பாடானாய்க் கொண்டு சீக்ர காரியாகி –
காற்றில் கடியனாகி ஓடி அகம் புக்கு போலே கடியேன்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று-ஸ்வரூப ரூப குணங்கள் விபூதிகள் ஒன்றும் சேஷியாமல்-அனுபவிக்க பாரித்து
காண வேண்டுமே -கண்ட பின்பே -கபளீ கரித்து புஜிக்க
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்-அபி நிவேசம் பாரிப்புடன் இருந்தேன் -சத் என்று இருந்த முதல் நாளே தொடங்கி
என்றுமே சத் தானே ஜீவாத்மா -நித்யம் அன்றோ -பாரிப்பும் அநாதி
நமக்கு ஆச்சார்ய சம்பந்தம் ஆதியாகக் கொண்டதே –
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்-விழுங்கி முடித்து தண்ணீர் குடிப்பது போலே முடித்தே விட்டான் –
அத்யந்த அல்பன் -அவன் அபரிச்சின்ன ஸ்வ பாவன்-கோனாரை அடியேன் -அஹம் த்வா-தான் என்னை
சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அஞ்ஞான அசக்தன் -என்னை
பசித்தவன் சோறு கண்டால் போல என்னை போல் அன்றிக்கே தாஹித்தவன் தண்ணீர் கண்டால் போலே-அன்றோ அவன் -பூர்ணமாக பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே-வேகமாக வியாபாரிக்குமவன்
கடலை பருகிய ஸ்யாமளன் -ஆழ்வார் திரு மேனி உட்க்கொண்ட -கரு வளர் -ஸ்வாமி பெற்ற புகராலே திவ்ய தேசமும் சோலைகளும்
சோலை திருவளர் சோலை ஆயிற்றே -தானே முதல் -சீக்ரகாரியாகா நின்றானே
அனுபவத்தில் ஒருவருக்கும்-முற்பட மாட்டாத படி –

தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு-தம்மிலும் அபி நிவேசம்-காதல் மிக்கு இருந்த படியை-சொல்லுகிறார்-

வாரிக் கொண்டு –
இந்தப் பொருளில் சிறிதும் பிறர்க்கு இல்லாதவாறு-உண்ணக் கடவோம் -என்று இருந்தார் ஆயிற்று -என்றது
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்ததனை –
இதனால் திரு வநந்த வாழ்வான் திருவடி முதலிய நித்ய ஸூரிகட்கும்-அடிமை செய்ய இடம் கொடேன் -என்று இருந்தார் ஆயிற்று
என்பதனை தெரிவித்த படி
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபத சச தே-அயோத்யா -31-25
எல்லா அடிமைகளையும் நான் செய்வேன் -என்கிறபடியே –உன்னை –எல்லார்க்கும் தலைவனான உன்னை –

விழுங்குவன் –
அடியவனுக்கு கைங்கர்யம் அன்றோ தாரகம்-

காணில்-
உன்னைக் காணப் பெறில்-

என்று ஆர்வுற்ற –
இப்படி ஆசையை அடைந்த –

என்னை ஒழிய –
என் அளவு பாராதே –

என்னில் முன்னம் பாரித்துத் –
நான் பாரித்த அளவும் அன்றிக்கே-நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –
ஆசார்யன் உடைய அங்கீ காரத்துக்கு பின்பே அன்றோ இவருடைய பாரிப்பு-சம்பந்தத்தை மறைப்பதற்கு காரணம் இல்லாமையாலே
அவனுடைய பாரிப்பு உயிர் உடன் கூடியே உள்ளது அன்றோ –
சம்பந்தம் நித்யம் சம்பந்த ஞானம் இழந்து -அன்றோ இருந்தோம் –

தான்-
எங்கும் பரந்து இருப்பவனாய்-தனக்குத் தானே உரியவனான-தான் –

என்னை –
அணு அளவினனாய்-பர தந்த்ரனான-என்னை –

முற்றப் பருகினான் –
தன் குணங்களையும்-செயல்களையும்-காட்டி-என்னை நீராக்கி-குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்-வசஸா சாந்த்வயித்வா ஏனம் லோசநாப்யம் பிபந்நிவ-யுத்தம் -16-65-
ஸ்ரீ ராமர் -அந்த விபீஷணன் உடைய அந்த வார்த்தையைக் கேட்டு
அவனை வார்த்தையால் சமாதானம் பண்ணி-கண்களால் பருகுவார் போலே
நின்று வார்த்தையைச் சொன்னார் -என்கிறபடியே
இத் தலையை அழித்துச் செயல் புரிந்தான் -என்றபடி
இருந்த குலக்குமரர் தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி
அருந்தவனை அடி வணங்கி யாரை இவர் உரைதிடுமின் அடிகள் என்ன -கம்பர் -மிதிலைக் காட்சி படலம் –

உண்டபடி சொன்னார் மேல்
உண்டவனுக்கு தண்ணீரும் வேண்டும் அன்றோ –
ஆகையால் தண்ணீர் குடித்த படி சொல்கிறார் மேல் -பருகினான் -என்று
அவனுடைய உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை இருக்கிறபடி அன்றோ இது –

கார் ஒக்கும் காட் கரை அப்பன் –
பரம உதாரனாய்-அண்மையில் இருப்பவன் –

கடியனே –
இன்ப நிலையிலே விரைந்து இருக்கும்-
இருவராய் செயல் புகப் புக்கால்-எதிர் தலைக்கு இடம் வையான் –

இராப் பத்து உத்சவம் -பூச் சாத்து மண்டபம் -ஆழ்வார் முன்னோக்கி வர -நம்பெருமாள் புலிப் பாய்ச்சலில் வர
முன் வைத்த காலை பின்னே வைத்து -இன்றும் சேவிக்கிறோம் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading