ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-9-
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
அவன் உம்முடைய திறத்தில் விசேஷமாகச் செய்தது உண்டோ –
தன்னோடு பரிமாறுவாரை எல்லாரையும் அப்படியே அன்றோ படுத்துவது -என்னில் –
அவனால் நான் பட்ட பாடு திரு நாட்டில் உள்ளார் தான் பட்டாரோ –
தனக்கு என்ன குறையுண்டாய் இப்படிச் செய்து அருளினான் -என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-6-9-
தன்னோடு பரிமாறுவாரை எல்லாரையும் இப்படியே யன்றோ அவன் படுத்துவது என்னில் -அவனுடைய குணத்துக்கு தலை நீர்ப்பாடான திரு நாட்டில் உள்ளார் தான் நான் பட்டது பட்டாரோ -என்கிறார் –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
பெரிய இதழை யுடைய தாமரைப் பூ போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் யுடைத்தாய் -கறுத்த எழிலையும் உடையது ஒரு மேகம் போலே யாயத் திருக் காட்கரை யைக் கோயிலாகவும் கொள்வதும் செய்து அழகிய எழிலோடும் கூடின நாலு பெரிய தோளையும் யுடைய தெய்வ வாரிக்கு –தெய்வ வாரியாவது -தெய்வங்கள் படும் ஆகரம்
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-6-9-
அநந்தரம் அனவதிக ஸுந்தர்ய யுக்தனான சர்வேஸ்வரனுக்கு என்னுயிர் பட்ட பாடு ஆருயிர் பட்டது -என்கிறார்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்–பெரிய இதழை யுடைத்தான தாமரை போலே இருக்கிற கண்ணையும்
கனி போலே சிவந்த வாயையும் யுடைத்தாய் இருப்பது ஒரு
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்–கறுத்த எழிலை யுடைத்தான மேகம் போலே அழகிய
திருக் காட்கரையை வாஸஸ் ஸ்தானமாகக் கொண்டு
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–வீர ஸ்ரீயையும் எழிலையும் யுடைத்தாய் நாலு வகைப்பட்ட
பெரிய திருத் தோளையும் யுடையவனாய்
தெய்வங்களுக்கு உத்பத்தி ஸ்தானமான கடலாய் இருக்கிறவனுக்கு
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது-என் ஆத்மா போக்யமாகக் கொண்டு பட்டது நித்ய அனுபவம் பண்ணுகிற
ஸூ ரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ –
ப்ரவ்ட விஷய போகத்தில் காட்டில் அபிநவ விஷயம் ஈடுபாடு கனத்து இருக்கும் என்று கருத்து –
—————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-6-9-
நீரேயோ இப்பாடு பட்டீர் -குண அனுபவமே யாத்ரையான நித்ய ஸூ ரிகளும் படும்பாடு இது அன்றோ -என்ன -அவர்கள் தான் நான் பட்டது பட்டார்களோ -என்கிறார் –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது--நான் பட்ட பாட்டை நித்ய ஸூ ரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இ றே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்--தம்மை நோவு படுத்தின வற்றை சொல்லுகிறார் -பெரிய இதழை யுடைய தாமரை போலே இருந்துள்ள கண்ணையையும் சிவந்த வாயையும் யுடையனாய் –
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்--கறுத்த எழிலை யுடைத்தான மேகம் போலே வடிவை யுடையனாய் -திருக் காட்கரையை கோயிலாக யுடையனாய்
சீர் எழில் நால் தடம் தோள் –வீர ஸ்ரீ யையும் யுடைத்தாய் எழிலையும் யுடையதாய் கற்பக தரு பணைத்தால் போலே நாலாய் சுற்று யுடைத்தான தோள்களையும் யுடைய –
தெய்வ வாரிக்கே–தெய்வங்கள் படும் கடலுக்கு -தெய்வங்களுக்கு உத்பாதகனானவனுக்கு -ஸ்வ தந்திரர்க்கு உத்பாதகனானவன் கிடீர் பர தந்த்ரனான என்னை அழிக்கிறான் -வடிவு அழகையும் அவ்வூரில் இருப்பையும் காட்டி யாய்த்து இவரை அழித்தது –
—————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-6-9-
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-
அனவதிக ஸுந்தர்ய உக்தன் —
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது-நித்ய ஸூரிகளும் இப்படி பட வில்லையே -போக்யமாக -அபி நவ விஷய ஈடுபாடு
அன்றோ ஆழ்வாரது -மூத்தவர் நித்ய ஸூரிகள் -யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா –
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்-கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்–
மேகம் -தாமரை கண்கள் வாய் ஒட்டி -அழகிய திவ்ய தேசம்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே-வீர ஸ்ரீ அழகு -வாரி கடல் -உத்பாத ஸ்தானம் –
நீரேயோ இப்படிப் பட்டீர்-குண அனுபவத்தையே பொழுது போக்காக உடைய
நித்ய ஸூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன-அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ –என்கிறார் –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது –
எனது உயிர் பட்டது –ஆர் உயிர் பட்டது-
நான் பட்ட பாட்டினை நித்ய ஸூரிகளிலே தாம் பட்டார் உளரோ –பகவான் உடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாய் இருக்கிற
இவ் உலகத்திலே நான் பட்ட பாட்டினை-நித்ய விபூதியில் உள்ளவர்கள் தான் பட்டார்களோ -என்கிறார் –
இங்கு எனது உயிர் பட்டது-அங்கு ஆர் உயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்
எல்லார் செய்வதும் குண அனுபவம் தானே –
அங்கனம் இருக்க இவர்க்கு இவ்வாசி கூறினபடி என் -என்று நான் -நம்பிள்ளை -கேட்க
திருமணம் ஆன புதுப் பெண்ணுக்கு கணவனுடைய கைகள்-அவள் மேலே பட்டவாறே வேர்ப்பது விடுவது ஆமாறு போலே
இவர் அனுபவத்தில் புதியர் ஆகையாலே வருகிறது காணும் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
உயிரை அழித்த காரணங்களை சொல்லுகிறபடி மேல் –
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது –
பெரிய இதழை உடைய தாமரை போல் இருந்துள்ள கண்ணையும்-சிவந்த வாயையும் உடையவனாய் –
ஓர் கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்-
கறுத்த எழிலை உடைத்தான மேகம் போன்ற வடிவை உடையனாய்-திருக் காட் கரையைக் கோயிலாக உடையவனாய் –
சீர் எழில் நால் தடம் தோள் –
வீர ஸ்ரீயையும் எழிலையும் உடைத்தாய்-கற்பகத் தரு பணைத்தால் போலே-நாலாய் சுற்று உடைத்தான தோள்களை உடைய –
தெய்வ வாரிக்கே –
தெய்வங்களைப் படும் கடலுக்கு-வாரி -கடல் –
தெய்வங்களை எல்லாம் படைத்தவனுக்கு -என்றபடி –தம்மைத் தாமே மதித்து இருக்கிற தெய்வங்களைப்-படைத்தவன் கண்டீர்
யான் எனது என்ற செருக்கை அற்ற என்னை அழித்தான் –
வடிவு அழகையும்-அவ் ஊரில் இருப்பையும் காட்டி-ஆயிற்று இவரை அழித்தது –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply